Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நீதிமன்ற தாக்குதல் : இருவருக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்

Featured Replies

யாழ்.நீதிமன்ற தாக்குதல் : இருவருக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்
யாழ்.நீதிமன்ற தாக்குதல் : இருவருக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்

யாழ் நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்து.

இதற்கமைய தலா 5 இலட்சம் பெறுமதியான 5ஆள்பிணையில் இருவருக்கும் பிணை வழங்கி யாழ். நீவான்பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது, கடந்த மே மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே 130 பேர் கைது செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பிணையிலும், குற்றமற்றவர் என்ற ரீதியிலும் விடுதலைச் செய்யப்பட்ட நிலையில், இறுதியாக 18 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 பேரில் இருவருக்கு நீதிமன்றம் இன்று பிணை வழங்கி, எஞ்சிய 16 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதித்த நபர் வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால், குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தும் யாழ். நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/923

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.