Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

டெஸ்ட் தொடரே எமது முதல் இலக்கு: மெத்தியூஸ்

நாங்கள் இருபது-20 போட்டி குறித்து முதலில் கவனம் செலுத்த மாட்டோம். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரே ஆரம்பமாகின்றது. எனவே இப்போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே எங்களது முக்கியமாக கவனமாக இருக்கும். இதனையடுத்தே இருபது-20 போட்டி மீதான கவனம் செலுத்தப்படும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.D4W5613x-780x520_0.jpg

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இரு­ப­துக்கு 20 போட்­டிகளில் விளை­யா­டு­கி­றது. டெஸ்ட் தொடர் எதிர்­வரும் 14ஆம் திகதி தொடங்­கு­கி­றது.

இந்நிலையில் இப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே மெத்தியூஸ் இதனைத் தெரிவித்தார்.

மெத்தியூஸ் 
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தோல்லியுற்றாலும் புதிய யுக்திகளுடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளோம். கடந்த தொடர்களில் எமது துடுப்பாட்டம் மந்தமாக காணப்பட்டது. தற்போது துடுப்பாட்ட பயிற்சியாளர் அணிக்கு கூடுதலான பயிற்சிகளை வழங்கியுள்ளார். எனவே துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முக்கிய கவனம் செலுத்துவோம்.D3S8171x-780x519.jpg
சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல்லின் தூஷ்ரா முறையற்றதாக காணப்பட்டாலும் ஓப்- பிரேக் முறையில் பந்து வீச முடியும். எனவே அவரை அணியில் உள்வாங்க நாங்கள் கலந்தாலோசிப்போம். நிச்சயம் அணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கi உள்ளது.
மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களமிறங்க உள்ள இலங்கை அணி இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்படும். 
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இப்போட்டியில் களமிறங்கவில்லை என்பதால் இலங்கைக்கு சாதகம் ஏற்பட போவதில்லை. காரணம் இளம் வீரர்களை கொண்ட திறமையான அணியாக மேற்கிந்திய அணி காணப்படுகின்றது. மேலும் எந்த அணி வெற்றி பெறும் என்பதே போட்டியின் தினத்தன்றே அறிந்து கொள்ளலாம்.
அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இல்லாமல் களமிறங்க உள்ளோம். இது எமக்கு புதிய சவால் என்றாலும் சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளோம். மேலும் தொடர்ந்து ஐந்தாம் இடத்தில் களமிறங்குவதா அல்லது இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஓட்டங்களை பெறுவதே எமது இலக்கு. எந்த வரிசையில் களமிறக்குகின்றோம் என்பது முக்கியமல்ல.

D3S8160x-780x519.jpg
 
ஜேசன் ஹோல்டர் 
மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்த வரையில் இளம் வீரர்களை கொண்டு களமிறங்க உள்ளோம். எமது அணி ஒற்றுமையுடன் செயற்படும். நான் அணித் தலைராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் வீரர் பிரைன் லாரா மற்றும் ஏனைய சிரேஷ்ட வீரர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியுற்று இருந்தாலும் புதிய ஒரு அணியாக களமிறங்கவுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/10/07/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

  • தொடங்கியவர்
சோபர்ஸ்-திசேரா கிண்ணத்திற்கான தொடரில் எழுச்சி பெறத் துடிக்கும் இலங்கை, மேற்கிந்திய அணிகள்
2015-10-08 11:00:50

(நெவில் அன்­தனி)

 

இளம் வீரர்­களைக் கொண்­ட­வையும் புத்­தெ­ழுச்சி பெறு­வ­தற்கு முயற்சித்து வரு­ப­வை­யு­மான இலங்கை - மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்கு இடை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில் எதிர்­வரும் 14ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

12570SMS_4436.jpg


இலங்கை - மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்கு இடை­யி­லான சோபர்ஸ்-­தி­சேரா கிண்ண டெஸ்ட் தொடர் குறித்து நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது எடுக்­கப்­பட்ட  படத்தில் இடமிருந்து வலமாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பிரகாஷ் ஷாவ்டர், ஜே. ஏ. டி. ஹோல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர்
காணப்படுகின்றனர்.                                               

 (படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்)

................................................................................................................................................................

 

புத்­தெ­ழுச்சி பெறத் துடிக்கும் இரண்டு அணி­க­ளுக்கு இடை­யி­லான இத் தொடர் இரண்டு மாபெரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்­க­ளான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்  -  மைக்கல் திசேரா கிண்­ணத்­திற்­காக நடத்­தப்­ப­ட­வுள்­ளமை மிகவும் பொருத்­த­மா­ன­தாகும்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் டெஸ்ட் அணியில்1954 முதல் 20 வரு­டங்கள் விளை­யா­டிய சேர் கார்பீல்ட் சோபர்ஸ் பின்னர் அணித் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டார்.

 

இலங்­கைக்கு டெஸ்ட் அந்­தஸ்து கிடைப்­ப­தற்கு முன்னர் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற டெஸ்ட் அணித் தலை­வ­ராக மைக்கல் திசேரா பதவி வகித்தார்.

 

இந்த இரு­வ­ரி­னது பெயரில் இத் தொடர் நடத்­தப்­ப­டு­வது வர­வேற்கத் தக்­கது என இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூஸும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்­டரும் தாஜ் சமுத்­ராவில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்­தனர்.

 

பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் எதி­ரான டெஸ்ட் தொடர்­களில் அடைந்த தோல்­வி­களைப் புறந்­தள்ளி வைத்­து­விட்டு இந்தத் தொடரில் மீண்டும் வெற்றி அலையைத் தொடர்­வ­தற்கு வீரர்கள் அனை­வரும் நம்­பிக்­கை­யுடன் இருப்­ப­தாக மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

இலங்­கையின் இரண்டு கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான மஹேல ஜய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் இல்­லாத நிலையில் துடுப்­பாட்ட வரி­சையில் எந்த இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வீர்கள் என மெத்­யூ­ஸிடம் கேட்­ட­போது,
‘‘எந்த இடத்தில் அல்­லது எந்த இலக்­கத்தில் நான் துடுப்­பெ­டுத்­தா­டுவேன் என்­பது முக்­கி­ய­மல்ல. எந்த இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டி­னாலும் எனது அதி­கப்­பட்ச திற­மையை வெளிப்­ப­டுத்­துவேன்.

 

மேலும் என்­னிடம் சில யோச­னைகள் உள்­ளன. தெரிவுக் குழு­வி­ன­ருடன் ஆலோ­சனை நடத்தி ஓரிரு தினங்­களில் இறுதிக் குழாம் தெரிவு செய்­யப்­படும்’’ என்றார்.

 

இதே­வேளை, ‘‘இந்தத் தொடர் கடு­மை­யா­ன­தாக இருக்கும் என கரு­து­கின்றோம். அத்­துடன் எமது எதி­ர­ணி­யினர் பற்றி நாங்கள் நன்கு அறிவோம். அவர்­க­ளது பலம், பல­வீனம் ஆகி­ய­வற்றை அண்­மைய தொடர்­க­ளின்­போது நாங்கள் கண்­டு­ணர்ந்­துள்ளோம்.

 

அதற்­கேற்ப நாங்கள் எங்­களைத் தயார்­ப­டுத்தி விளை­யா­ட­வுள்ளோம். எமது பலத்தை அதி­க­ரிப்­ப­தற்கு இந்தத் தொடரைப் பயன்­ப­டுத்­த­வுள்ளோம்’’ என மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் தெரி­வித்தார்.

 

டெஸ்ட் தொட­ருக்கும் அதனைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­க­ளுக்கு ஜே.ஏ.டி. ஹோல்டிங்ஸ் பிறைவேட் லிமிட்டட் அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

 

‘‘இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு பல்­வேறு அனு­ச­ர­ணை­களை எமது நிறு­வனம் வழங்கி வந்­துள்­ள­போ­திலும் கிரிக்கெட் தொடர் ஒன்­றுக்கு அனு­ச­ரணை வழங்­கு­வது இதுவே முதல் தட­வை­யாகும். இத­னை­யிட்டு எமது நிறு­வனம் பெரு­மிதம் அடை­கின்­றது’’ என ஜே.ஏ.டி. ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் ஏலியன் குண­வர்­தன தெரி­வித்தார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12572#sthash.X5PuyT2o.dpuf
  • தொடங்கியவர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணியின் டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jason-Holder.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி இரு டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இரண்டு இருபதுக்கு- 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களின்  விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இக்குழாமில் மிலிந்த சிறிவர்தன மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன் உபுல் தரங்க கழற்றி விடப்பட்டுள்ளார்.

இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரம் வருமாறு,

அஞ்சலோ மெத்தியுஸ் ( அணித் தலைர் ), லகிரு திரிமன்னே ( உதவித் தலைவர் ), கௌஷல் சில்வா, திமுத்து கருணாரத்ன, தினேஷ் சந்திமால், குஷல் ஜனித் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, குஷல் மென்டிஸ், ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, கௌஷல், தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சாமிர ஆகியோர் இக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.virakesari.lk/articles/2015/10/09/மேற்கிந்திய-தீவுகளுக்கு-எதிராக-விளையாடவுள்ள-இலங்கை-டெஸ்ட்-குழாம்-அறிவிப்பு

  • தொடங்கியவர்
மிலிந்த சிறிவர்தன ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்கள்
2015-10-12 10:35:45

126234230264.jpg ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் அணிக்கும் இலங்கை வருகை தந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் எஸ்.எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற மூன்று நாள் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

 

இப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை முதல் இன்னிங்ஸில் 209 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் அணி, ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

டெஸ்ட் குழாமில் பெயரிடப்பட்டுள்ள மிலிந்த சிறிவர்தன அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைக் குவித்து தெரிவாளர்களை சிந்திக்க வைத்துள்ளார்.

 

சகலதுறை ஆட்டக்காரரான இவர் பெரும்பாலும் காலியில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெறுவார் என நம்பப்படுகின்றது.

 

இவரை விட உதார ஜயசுந்தர 142 ஓட்டங்களையும் மினோத் பானுக்க 101 ஓட்டங்களையும் பெற்றனர். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12623#sthash.dUqI8rOp.dpuf
  • தொடங்கியவர்

12109950_1706748019356398_58705042207788

  • தொடங்கியவர்

 
 
நாளை ஆரம்பிக்கிறது இலங்கை - மே. தீவுகள்
 
13-10-2015 10:10 PM
Comments - 0       Views - 3

article_1444747334-INsereiusSL.jpgஇலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையில் காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

அஞ்சலோ மத்தியூஸ் என்ற ஓரளவு அனுபவமிக்க தலைவரின் கீழான இளைய அணியொன்றும் ஜேஸன் ஹோல்டர் என்ற அனுபவம் குறைந்தவரின் கீழான இளைய அணியொன்றும் இப்போட்டியில் மோதுவதால், எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இப்போட்டி அமையவுள்ளது.

இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இலங்கை முழுவதுமாக நிலவுகின்ற மழை வானிலை காரணமாக, இப்போட்டியானது மழையால் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், மிலிந்த சிரிவர்தன, குசால் பெரேரா, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஷால், நுவான் பிரதீப், ரங்கன ஹேரத்.

மேற்கிந்தியத் தீவுகள்: கிறெய்க் பிறெத்வெய்ட், ராஜேந்திர சந்திரிகா, டெரன் பிராவோ, ஷேன் டவ்றிச், ஷாய் ஹோப், ஜேர்மைன் பிளக்வூட், டினேஷ் ராம்டின், ஜேஸன் ஹோல்டர், வீரசம்மி பேர்மாள், கேமர் றோச், ஜெரோம் டெய்லர்.

- See more at: http://www.tamilmirror.lk/156455/ந-ள-ஆரம-ப-க-க-றத-இலங-க-ம-த-வ-கள-#sthash.22lUtsoB.dpuf
  • தொடங்கியவர்
கார்பீல்ட் சோபர்ஸ் - மைக்கல் திசேரா கிண்ணத்துக்கான இலங்கை - மேற்கிந்திய டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
2015-10-14 09:31:54

(நெவில் அன்­தனி)

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இலங்­கைக்கும் இடையில் இரண்டு போட்­டி­களைக் கொண்ட சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் மைக்கல் திசேரா கிண்­ணத்­திற்­கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முத­லா­வது போட்டி காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

12670_Untitled-2.jpg

 

வீழ்ச்­சி­யி­லி­ருந்து எழுச்சி பெறும் குறிக்­கோ­ளுடன் இந்த இரண்டு அணி­களும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை எதிர்­கொள்­கின்­றன.

 

பாகிஸ்தான், இந்­தியா ஆகிய அணி­க­ளுக்கு எதி­ராக இங்கு நடை­பெற்ற இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர்­களைத் தாரை­வார்த்த இலங்கை, இந்தத் தொடரில் வெற்­றி­பெற்று அத்­தோல்­வி­களை நிவர்த்தி செய்ய முயற்­சிக்­க­வுள்­ளது.

 

இந்தத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் மூலம் சக­ல­துறை வீரர் மிலிந்த சிறி­வர்­தன டெஸ்ட் அரங்கில் அறி­மு­க­மா­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­பட்­ச­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்கு எதி­ராக எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் மிலிந்த சிறி­வர்­தன மிகத் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தாடி குவித்த ஆட்­ட­மி­ழக்­காத சதம், இறுதி அணியில் இடம்­ பி­டிப்­ப­தற்­கான வாய்ப்பை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது.

 

துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிப்பார் எனப் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட குசல் மெண்டிஸ், அப் போட்­டியில் ஓட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்­ததால் அவர் அணியில் இடம்­பெ­று­வது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­கி­யுள்­ளது.

 

இதே­வேளை தூஸ்ரா பந்து வீசு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்ள தரிந்து கௌஷால் பெரும்­பாலும் அணியில் இடம்­பெ­றுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

இலங்­கையின் ஆரம்பத் துடுப்­பாட்டம் குறித்து தெரி­வா­ளர்கள் விரி­வாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்­க­வுள்­ளனர்.

 

கௌஷால் சில்வா அண்மைக் கால­மாக பிர­கா­சிக்கத் தவ­றி­வந்­துள்­ளதால் அவ­ரது இடத்­திற்கு வேறு ஒரு­வரைத் தெரிவு செய்­வ­தற்கு தெரி­வா­ளர்கள் முன்­வந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

 

இது இவ்­வா­றி­ருக்க, அண்மைக் கால­மாக டெஸ்ட் கிரிக் கெட் விளை­யாட்டில் பெரு வீழ்ச்சி அடைந்­துள்ள மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, இங்கு வெற்­றி­பெறும் நோக்கில் அதி சிறந்த பதி­னொ­ரு­வரைத் தெரிவு செய்யும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

 

இந்த இரண்டு அணி­களும் 1993 இலி­ருந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தாடி வந்­துள்­ளன. இது­வரை விளை­யா­டப்­பட்­டுள்ள 15 டெஸ்ட் போட்­டி­களில் இலங்கை 6 க்கு 3 என்ற ஆட்டக் கணக்கில் முன்­னி­லையில் இருக்­கின்­றது. 6 போட்­டிகள் வெற்­றி­–தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

 

இலங்கை குழாம்

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரி­மான்ன (உதவி அணித் தலைவர்), துஷ்­மன்த சமீர, தினேஷ் சந்­திமால், நுவன் ப்ரதீப், ரங்­கன ஹேரத், திமுத் கரு­ணா­ரட்ன, தரிந்து கௌஷால், சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தம்­மிக்க ப்ரசாத், குசல் பெரேரா, டில்­ருவன் பெரேரா, கௌஷால் சில்வா, மிலிந்த சிறி­வர்­தன.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் குழாம்

 

ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), க்ரெய்க் ப்ரத் வெய்ட் (உதவி அணித் தலைவர்), தேவேந்த்ரா பிஷு, ஜேர் மெய்ன் ப்ளக்வுட், கார்லோஸ் ப்ரத்வெய்ட்,  டரன் ப்ராவோ, ராஜேந்த்ர சந்த்ரிக்க, ஷேன் டௌரிச், ஷெனன் கேப்றியல், ஷாய் ஹோப், தினேஷ் ராம்டின், கெமர் ரோச், மார்லன் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர், ஜோமெல் வொரிக்கன்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12670#sthash.49c0gHlw.dpuf

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறுகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
 
 
  • தொடங்கியவர்

அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன

அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன

 
 
 
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன சற்று முன்னர் தனது 3வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
 
  • தொடங்கியவர்

முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்ரீலங்கா 250/2

  • தொடங்கியவர்
திமுத் கருணாரட்ன அபார சதம் முதல் டெஸ்டில் பலம்வாய்ந்த நிலையில் இலங்கை
2015-10-14 20:21:55

12688dimuth--karunaratne-400.jpgமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்னவின் அபார சதம், தினேஷ் சந்திமாலின் அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை அணி திடமான நிலையை அடைந்துள்ளது.

 

கார்பீல்ட் சோபர்ஸ் - மைக்கல் திசேரா கிண்ணத்துக்கான இத் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியது.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, போட்டியின் முதலாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


இப் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி வரும் 27 வயதுடைய திமுத் கருணாரட்ன, கொளஷால் சில்வாவுடன் (17 ஓட்டங்கள்) ஆரம்ப விக்கெட்டில் 56 ஓட்டங்களையும் உதவி அணித் தலைவர் லஹிரு திரிமான்னவுடன் (16 ஓட்டங்கள்) இரண்டாவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
தொடர்ந்து தினேஷ் சந்திமாலுடன் மூன்றாவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 149 ஓட்டங்களை திமுத் கருணாரட்ன பகிர்ந்தார்.


மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிவரும் திமுத் கருணாரட்ன தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களையும் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிவரும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும்  இன்றைய ஆட்டநேர முடிவின்போது பெற்றிருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12688#sthash.blLydBIv.dpuf
  • தொடங்கியவர்

சந்திமாலும் சதமடித்தார்

சந்திமாலும் சதமடித்தார்

 
 
 
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது டெஸ்ட் நேற்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

போட்டியின் இரண்டாவது நாளான இன்று அதிரடியாக ஆடி வரும் தினேஷ் சந்திமால் தனது 5வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை மறுமுனையில் 176 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் திமுத் கருணாரத்ன மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை களங்கடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தற்போது இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 321 ஒட்டங்களை விளாசியுள்ளது.
  • தொடங்கியவர்

மே. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் : முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 484 ஓட்டங்கள்

 
 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் திமுத்து கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோரின் சாதனை இணைப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 484 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Devendra-Bishoo.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று புதன்கிழமை காலி சர்வதேச அரங்கில் ஆரம்பமானது.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 484 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்­படி கள­மி­றங்­கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் சில்வா ஆகியோர் நிதா­ன­மாக ஆடிக்­கொண்­டி­ருக்க 17 ஓட்­டங்­க­ளுடன் சில்வா ஆட்­ட­மிழந்தார்.

அதன்­பி­றகு கள­மி­றங்­கிய திரி­மான்­னவும் 16 ஓட்­டங்­க­ளுடன் வெளியே­றினார். மறு­மு­னையில் சிறப்­பாக ஆடிக்­கொண்­டி­ருந்த கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்த சந்­திமால், நிதா­ன­மா­கவும் அதி­ர­டி­யா­கவும் ஆடி, இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

அபா­ர­மாக ஆடிய கரு­ணா­ரத்­ன 186 ஓட்­டங்­களை விளா­சினார்.  மறு­மு­னையில் நின்ற சந்­திமால் 151ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.  அஞ்சலோ மெத்தியுஸ் தன் பங்கிற்கு 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் தேனீர் இடைவேளையின் பின்னர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 484 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பந்துவீச்சில் பிஷூ 4 விக்கெட்டுகளையும் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/10/15/மே-தீவுகளுக்கு-எதிரான-டெஸ்ட்-முதலாவது-இன்னிங்ஸில்-இலங்கை-அணி-484-ஓட்டங்கள்

  • தொடங்கியவர்

சங்கா- மஹேல இணைப்பாட்ட சாதனை திமுத்து - சந்திமலால் முறியடிப்பு

 
 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இலங்கை அணியின் 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை 14 ஆண்டுகளின் பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

Dinesh-Chandimal_0.jpg
இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் கடந்த 2001 ஆம் ஆண்டு 162 ஓட்டங்களைப் பெற்றிரு்ததே இது வரை சாதனையாக இருந்து வந்தது.

இந்த  இணைப்பாட்ட சாதனையை 14 வருடங்களின் பின்னர் திமுத்து கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோரால் 238 ஓட்டங்களைப் பெற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டத்தின் போதே 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.

இதன்போது திமுத்து கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் ஆகக்கூடிய ஓட்டப்பெறுதியை பதிவு செய்தார். அவர்  186 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்ததுடன் சந்திமல் 156 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.

இரு விக்கெட்டுக்கு 250 ஓட்டங்களுடன் இன்றைய 2 ஆம் நாளை ஆரம்பித்த இலங்கை அணி  விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. 

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய மிலிந்த சிறிவர்தன ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/10/15/சங்கா-மஹேல-இணைப்பாட்ட-சாதனை-திமுத்து-சந்திமலால்-முறியடிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கருணாரத்தினே சந்திமால் திறமையான இளம் கூட்டனி உருவாகின்றது...வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மேற்கிந்தியத் தீவுகள்  231/8

  • தொடங்கியவர்

ஹெராத் பந்துவீச்சில் 251 ரன்களுக்குச் சுருண்ட மே.இ.தீவுகள் பாலோ ஆன்

 
 
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹெராத். கால்லே டெஸ்ட் அக்டோபர் 2015, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. | படம்: ஏ.எப்.பி.
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹெராத். கால்லே டெஸ்ட் அக்டோபர் 2015, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. | படம்: ஏ.எப்.பி.

கால்லே மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று மே.இ.தீவுகள் அணி 251 ரன்களுக்குச் சுருண்டதால் பாலோ ஆன் விளையாட பணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் கருணரத்னே (186), தினேஷ் சண்டிமால் (151) ஆகியோரது அபார ஆட்டத்தினால் 484 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 2-ம் நாளான நேற்று 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது, இன்று 251 ரன்களுக்குச் சுருண்டது. ஹெராத் 33 ஓவர்கள் வீசி 9 மெய்டன்களுடன் 68 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப், கவுஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர், 233 ரன்கள் பின் தங்கியுள்ள மே.இ.தீவுகள் தற்போது பாலோ ஆனில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் வரிசை பேட்ஸ்மென்களில் டேரன் பிராவோ மட்டுமே அதிகபட்சமாக 107 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 8-வது விக்கெட்டுக்காக கிமார் ரோச், ஜெரோம் டெய்லர் இடையே 46 ரன்கள் சேர்க்கப்பட்டது.

2-ம் நாளில் மே.இ.தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வெய்ட் (19), ஹோப் (23) ஆகியோரை வீழ்த்திய ஹெராத், சாமுயெல்ஸுக்கு ஒரு அருமையான பந்தை வீச நடுவர் நாட் அவுட் என்றார், அது 3-வது நடுவர் தீர்ப்புக்குச் சென்ற்து அவரும் நாட் அவுட் என்றார். இதனையடுத்து மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்த சாமுயெல்ஸ், கடைசி பந்தை புல் ஆட முயன்று பந்து தொடையில் பட்டு பவுல்டு ஆனார். இவர் 11 ரன்களில் வீழ்ந்தார்.

ரங்கனா ஹெராத் தனது பிளைட், லெந்த் மற்றும் கோணங்களினால் டேரன் பிராவோவுக்கு கடும் சிக்கல்களைத் தோற்றுவிக்க பிராவோ அமைதி காத்தார். ஆனால் ஹெராத்தை, மேத்யூஸ் பந்து வீச்சிலிருந்து அகற்ற, தாரிந்து கவுஷல் வீசிய 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை ஒரு பவுண்டரி, மற்றும் சிக்ஸ் அடித்து இறுக்கத்தை தளர்த்தினார் பிராவோ. கொஞ்சம் சுதந்திரமாக ஆடிய பிராவோ, பிறகு நுவான் பிரதீப்பை பாயிண்டில் 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஜெர்மைன் பிளாக்வுட், தம்மிக பிரசாத் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிராவோ அரைசதம் எடுத்த பிறகு ஹெராத் மீண்டும் வந்தார், இம்முறை அவரையும் மேலேறி வந்து அடிக்க முயன்ற பிராவோ, சண்டிமாலின் அற்புதமான ஒரு கை கேட்சுக்கு 50 ரன்களில் வெளியேறினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேசன் ஹோல்டரை வீழ்த்தினார் தம்மிக பிரசாத். தினேஷ் ராம்தின், நுவான் பிரதீப்பின் பந்தில் வெளியேறினார். அப்போது மே.இ.தீவுகள் 171/7 என்று பாலோ ஆன் அச்சுறுத்தலில் இருந்தது.

பிறகு கிமார் ரோச் 22 ரன்களையும் ஜெரோம் டெய்லர் 31 ரன்களையும், பிஷூ 23 ரன்களையும் எடுக்க 251 ரன்களை எட்டியது மேற்கிந்திய அணி.

http://tamil.thehindu.com/sports/ஹெராத்-பந்துவீச்சில்-251-ரன்களுக்குச்-சுருண்ட-மேஇதீவுகள்-பாலோ-ஆன்/article7770484.ece

  • தொடங்கியவர்
Sri Lanka 484
West Indies 251 & 178/7 (61.1 ov) (f/o)
West Indies trail by 55 runs with 3 wickets remaining
  • தொடங்கியவர்
இலங்கைக்கு இனிங்ஸ் வெற்றி
 
17-10-2015 02:26 PM
Comments - 0       Views - 2


article_1445072276-Ranga%20vs%20WI%201%2

காலியில் இடம்பெற்றுவந்த இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டு, 2 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்று, ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜேர்மைன் பிளக்வூட் 92 ஓட்டங்களையும் கிறெய்க் பிறெத்வெய்ட் 34, டெரன் பிராவோ 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் தம்மிக்க பிரசாத், மிலிந்த சிரிவர்தன இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, திமுத் கருணாரத்னவின் 186, டினேஷ் சந்திமாலின் 151 ஓட்டங்களின் துணையோடு, 484 ஓட்டங்களைப் பெற, பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ரங்கன ஹேரத்தின் 6 விக்கெட் பெறுதியில் சுருண்டு, 251 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக, ரங்கன ஹேரத் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/156794/இலங-க-க-க-இன-ங-ஸ-வ-ற-ற-#sthash.4w6FxQXJ.dpuf
  • தொடங்கியவர்

ஹெராத் அபாரப் பந்துவீச்சு: மே.இ.தீவுகளை இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

 
 
ஹெராத் பந்துவீச்சில் முதல் பந்திலேயே எல்.பி. ஆகி வெளியேறிய மர்லன் சாமுயெல்ஸ். | படம்: ஏ.பி.
ஹெராத் பந்துவீச்சில் முதல் பந்திலேயே எல்.பி. ஆகி வெளியேறிய மர்லன் சாமுயெல்ஸ். | படம்: ஏ.பி.

கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

முதல் இன்னிங்சில் இலங்கை 484 ரன்கள் எடுக்க, மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கும், ஃபாலோ ஆனில் 227 ரன்களுக்கும் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கனா ஹெராத், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

67/2 என்று தொடங்கிய மேற்கிந்திய அணி மேலும் 167 ரன்களையே சேர்க்க முடிந்தது. ஆனால் பிளாக்வுட் ஒரு முனையில் 135 பந்துகளில் 10 பவுண்ட்ரிகள் 3 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தவிர்க்க முடியாத தோல்வியை கொஞ்சம் தாமதப்படுத்தினார்.

ஆனால் இவர் ஆடிய விதம் அற்புதமானது. நிச்சயம் பிளாக்வுட் மே.இ.தீவுகளுக்கான ஒரு எதிர்கால சிறந்த வீர்ர் என்பதற்கான சுவடுகள் அவரது பேட்டிங்கில் தெரிகிறது.

5 முறை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத், அதில் காலே மைதானத்தில் மட்டும் 3 முறை இதனை நிகழ்த்தியுள்ளார். தனது வாழ்நாளில் உலகின் அதிக விக்கெட்டுகளுக்கான சாதனையை வைத்துள்ள முத்தையா முரளிதரனே இந்த மைதானத்தில் 4 முறை மட்டுமே 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதாவது 22 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முரளிதரனால் கால்லேயில் ஹெராத் அளவுக்கு முடியவில்லை என்று தெரிகிறது.

4-,ம் நாளான இன்று தேவேந்திர பிஷூ இலங்கை பந்து வீச்சை வெறுப்பேற்றினார். 10 ரன்களே எடுத்தாலும், அவர் தனது விக்கெட்டை காப்பாற்ற பாடுபட்டார். ஆனால் ஹெராத்தின் ஒரு பந்தில் அவர் கட் ஷாட் அடிக்க முயன்று ஸ்லிப்பில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து அவுட ஆனார்.

அடுத்த பந்தே மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மர்லன் சாமுயெல்ஸ், ஹெராத்தின் ஸ்டம்புக்குள் வந்த பந்தை ஆடாமல் விட முடிவெடுக்க பந்து பின் கால்காப்பைத் தாக்கியது. அவுட் ஆனார். ஆனால் அவர் செய்த மிகப்பெரிய தவறு அதனை மேல்முறையீடு செய்ததே. ஒரு பேட்ஸ்மெனுக்கே இத்தகையபந்து ஸ்டம்பை அடிக்கும் என்று நிச்சயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

நுவான் பிரதீப், டேரன் பிராவோவை சாய்த்தார். அது ஒரு அருமையான பந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஆஃப் ஸ்டம்ப் திசையில் வீசி சற்றே பந்தை வெளியே எடுக்க சரியான நிலையில் இல்லாத டேரன் பந்தை தடுக்க முயல விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. ஆனால் முன்னதாக அவர் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்தார். நல்ல தொடக்கம் கண்டு பிரதீப்பின் அருமையான ஒரு பந்தில் வெளியேறினார். 88/5 என்ற நிலையில், ஜேர்மைன் பிளாக்வுட்,. சிரிவதனா, தாரிந்து கவுஷல் ஆகிய ஸ்பின்னர்களை அடிக்கத் தொடங்கினார்.

6-வது விக்கெட்டுக்காக 48 ரன்கள் சேர்த்தாலும் ராம்தின் அதில் 11 ரன்களை மட்டுமே எடுத்து சிரிவதனாவிடம் ஆட்டமிழந்தார். பிளாகுவுட்டுடன் ஜேசன் ஹோல்டர் இணைந்து இருவரும் சேர்ந்து 36 ரன்களைச் சேர்த்தனர்.

இந்நிலையில் ஒரு அசாதாரணமான ரன் அவுட் சூழல் ஏற்பட்டது. மேலேறி வந்து ஹெராத்தை லெக் திசையில் வெளுக்க முயன்றார் ஹோல்டர் பந்த் அவரது கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் மேத்யூஸிடம் சென்றது, அவர் ஹோல்டர் கிரீசில் இல்லை என்பதை உணர்ந்து நேரடியாக ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனது.

பிறகு கிமார் ரோச்சை ஹெராத் வீழ்த்த டெய்லர், பிரசாத்திடம் எல்.பி.ஆக கடைசியாக 92 ரன்களில் ஜெர்மைன் பிளாக்வுட் பிரசாத்தை ஆஃப் திசையில் பெரிய ஷாட் ஒன்றை அடிக்க முயன்று 'டீப்'-ல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 68.3 ஓவர்களில் இலங்கை 227 ரன்கள் எடுத்து சுருண்டது. இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெராத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/ஹெராத்-அபாரப்-பந்துவீச்சு-மேஇதீவுகளை-இலங்கை-இன்னிங்ஸ்-வெற்றி/article7774313.ece?homepage=true

  • தொடங்கியவர்
கௌஷால், திரிமான்னவுக்கு வெட்டு?
 
18-10-2015 09:12 PM
Comments - 0       Views - 5

article_1445162116-TAmilmirrSL.jpgஇலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுள்ள போதிலும், இரண்டாவது போட்டிக்கான அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள உப தலைவர் லஹிரு திரிமான்ன, இந்தப் போட்டியிலும் ஓட்டங்களைப் பெறத் தவறியதால், அதிக கவனத்தைச் சந்தித்துள்ளார்.

அதேபோல், தூஸ்ரா பந்துவீச்சை வீசுவதற்குத் தடை விதிக்கப்பட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால், இப்போட்டியில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரான டில்ருவான் பெரேரா, டெஸ்ட் குழாமில் காணப்படுவதால், தரிந்து கௌஷால் மீது அதிகமான அழுத்தம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், 'திரிமான்னவினதும் தரிந்து கௌஷாலினதும் பெறுபேறுகள் எமக்குக் கவலையளிக்கின்றன. தேர்வாளர்களுடன் கலந்துரையாடுவேன், அதன் பின்னர் 2ஆவது டெஸ்டில் அவர்களது இடம் பற்றி முடிவெடுக்கப்படும்" என்றார்.

அத்தோடு, 'தரிந்து கௌஷால் மிகவும் ஏமாற்றமளித்தார். அவரது சிறப்பான ப்நதுவீச்சை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த ஆடுகளம், அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமென நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, இப்போட்டியில் அவர் மிகவும் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தினார்" எனத் தெரிவித்தார்.

போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இலங்கைக்கு வெற்றியை வழங்கிய சிரேஷ்ட பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத்தைப் புகழ்ந்த மத்தியூஸ், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவரது உடல் எடை குறைந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, இன்னும் சில வருடங்கள் அவரால் விளையாட முடியுமென எண்ணுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/156880/க-ஷ-ல-த-ர-ம-ன-னவ-க-க-வ-ட-ட-#sthash.Oxsfp4HJ.dpuf
  • தொடங்கியவர்
ரங்கனவின் வயதைவிடுத்து ஆற்றலைப் பாருங்கள் – ஏஞ்சலோ மெத்யூஸ்
2015-10-19 09:47:33

1276739.jpgகாலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் பந்­து­வீச்சில் பிர­கா­சிக்கத் தவ­றிய தரிந்து கௌஷால், ரங்­கன ஹேரத்தின் இடத்தை நிரப்­பு­வாரா என்ற கேள்வியைத் தோற்­று­வித்­துள்ள அதே­வேளை, இன்னும் சில வரு­டங்­க­ளுக்கு ரங்­கன ஹேரத்­தினால் விளை­யா­டக்­ கூ­டி­ய­தாக இருக்கும் என நம்­பு­வ­தாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார்.

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் ரங்­கன ஹேரத்147 ஓட்­டங்­க­ளுக்கு 10 விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யதன் மூலம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங் களால் இலங்கை வெற்­றி­யீட்­டி­யது.

 

‘‘இன்னும் சில வரு­டங்­க­ளுக்கு ரங்­க­னவால் விளை­யாட முடியும் என நம்­பு­கின்றேன்.

 

அவர் பயிற்­சி­யா­ள­ருடன் இணைந்து கடும் பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார். அவ­ரது உடல் மெலிந்­துள்­ள­துடன் எடையும் குறைந்துள்­ளது.

 

அவ­ரது வய­தை­வி­டுத்து அவ­ரது ஆற்­ற­லையே நாம் பார்க்க­ வேண்டும். இதை நான் கூறும் அதே­வேளை மற்­றைய பந்­து­ வீச்­சா­ளர்­களும் திற­மையை வெளிப்­ப­டுத்த­ வேண்டும்.

 

ரங்­கன சாதிப்­பதைப் போன்று மற்­றை­ய­வர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­து­ வ­தற்கு அவர்கள் கடு­மை­யான பயிற்­சியில் ஈடு­ப­ட­வேண்டும்’’ என டெஸ்ட் போட்டி முடிவில் தெரி­வித்தார்.

 

தரிந்­துவைப் பற்றி பேசிய அவர், ‘‘தரிந்து கௌஷா பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்தார்.

 

அவர் முழுத் திற­மை­யுடன் பந்­து­வீ­ச­வில்லை. சுழல்­பந்து­ வீச்சு பயிற்­றுநர் பியல் விஜே­துங்­க­விடம் அவர் கடும் பயிற்­சியைப் பெற்று வரு­கின்றார்.

 

அவர் ஓவ் ஸ்பின் பந்­து­ வீச்சை சரி­யான இலக்கில் பிர­யோ­கித்தால் அவரால் விக்­கெட்­களைக் கைப்­பற்றக் கூடி­ய­தாக இருக்கும்’’ என்றார்.

 

இந்தப் போட்­டியில் முன்­வ­ரிசை துடுப்­பாட்­டக்­கா­ரர்­களின் திறமையை ஏஞ்­சலோ மெத்யூஸ் வெகு­வாக பாராட்­டினார்.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் முதல் நான்கு துடுப்­பாட்ட வீரர்கள் பிர­கா­சிக்­கா­ததால் இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

 

ஆனால், மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் திமுத் கரு­ணா­ரட்ன (186 ஓட்­டங்கள்) தனது அதி­கூ­டிய இன்னிங்ஸ் எண்­ணிக்­கையைப் பெற்றார்.

 

அத்­துடன் தினேஷ் சந்­திமால் 151 ஓட்­டங்­களைப் பெற்றார். இவர்கள் இரு­வரும் 238 ஓட்­டங்­களைப் பகிர்ந்து காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் மூன்­றா­வது விக்­கெட்­டுக்­கான அதி­கூ­டிய இணைப்­பாட்­டத்தைப் பதிவு செய்­தனர்.

 

‘‘இவர்கள் இரு­வரும் மிகத் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்­தனர். அவர்­க­ளது திற­மையால் எமது அணி பல­மான நிலையை அடைந்­தது. அத்­துடன் கடந்த காலங்­களைப் பற்­றியே பேசிக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

 

அதனால் சவால்­களை எதிர்­கொள்ளத் தீர்­மா­னித்தோம். சங்­கக்­கார, மஹே­ல­வுக்குப் பின்னர் அவர்­களைப் போன்று இவர்கள் பொறுப்பை ஏற்பர் என எதிர்­பார்த்தோம்.

 

அவர்கள் சாதித்­த­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன்’’ என மெத்யூஸ் மேலும் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12767#sthash.tMcW4LXv.dpuf
  • தொடங்கியவர்

 
 
நாளை இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட்
 
21-10-2015 03:45 PM
Comments - 0       Views - 3

article_1445423134-TAMIL1jhzly6w.jpgஇலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து (சரா ஓவல்) மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளுடன் களமிறங்குகின்றது.

எனினும், அடிக்கடி மாறிவரும் கொழும்பின் வானிலை, இப்போட்டியில் தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை நேரங்களில் பெய்யும் மழை, ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசுவதை அனேகமாகத் தடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியில், லஹிரு திரிமான்னவும் தரிந்து கௌஷாலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். உப தலைவர் என்ற வகையில் லஹிரு திரிமான்னவுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், தரிந்து கௌஷாலுக்குப் பதிலாக டில்ருவான் பெரேராவுக்கு இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/157159/ந-ள-இலங-க-ம-ற-க-ந-த-யத-த-வ-கள-வத-ட-ஸ-ட-#sthash.MLIw8mrZ.dpuf
  • தொடங்கியவர்

2 வது டெஸ்ட் போட்டியில் சிறிலங்கா முதலில் துடுப்பெடுத்து ஆடுகிறது 33/1

12030493_1710398542324679_64536131503273

12087114_1710398518991348_82334064562086

12094757_1710398548991345_33518935177203

10463841_1710398575658009_81664539283533

12027352_1710398738991326_62926310952928

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஸ்ரீலங்கா 78/4 (24.5 ov)
  • தொடங்கியவர்

Sri Lanka 200 (66.0 ov)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.