Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பொலிஸ்மா அதிபர் நட்டஈடு

Featured Replies

ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பொலிஸ்மா அதிபர் நட்டஈடு
ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பொலிஸ்மா அதிபர் நட்டஈடு

ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈடு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். பொரளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் சில்வா மற்றும் சந்திரசேன யஹட்டியாரச்சி ஆகிய இரண்டு உறுப்பினர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமெனக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக அவற்றை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் கைது  செய்யப்பட்டார்கள். பொலிஸாரின் இந்தக் கைது சட்டவிரோதமானது எனவும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் உயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், இருவரினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படவேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதியரசர்களான பிரியசாத்டெப், சிசிர ஆப்ரூ மற்றும் அனில் குணரட்ன ஆகியோர் இந்த மனுவைப் பரிசீலனை செய்திருந்தனர். அரசின் சார்பில் பொலிஸ்மா அதிபர் நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

http://onlineuthayan.com/news/1049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.