Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ள்ளம் தூய்மையாக இருப்பின்... 
ள்ளிருக்கும் மனது இறைவன்......!
ள்ளதூய்மை என்பது ....
யிரினங்கள் அனைத்திலும் ....
ள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

றவுகளே எனது இனிமையான ....
ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
ழைப்பை உயிராய் மதிப்போம் ....
ற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

ள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
ண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
ண்மை அன்பை உதறி விடாதே .....
ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
 

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தமிழ்மொழி இனிமை மொழி .....
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட மொழி ....!!!

என் தமிழ் மொழி ....
தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!

தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழிகவிதை

  • தொடங்கியவர்

காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!

வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?

அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!

ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....

அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...?  ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!

போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை விட்டிவிடகூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!

அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!

இப்போதுதான் புரிந்தது .....
மூத்தாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!

இன்றைய நவீன உலகில் வாழும் ....
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை 
( மரங்களை காப்பாற்றுவோம் )  

  • தொடங்கியவர்

முயற்சிக்க கூடாததை ...
முயற்சிக்காதே ....
முயற்சிக்க கூடியதை ....
முயற்சிக்காமல் இருக்காதே ....!!!

முயற்சி 
தெருவில் இருப்பவனையும் ....
திருவினையாக்கும் 
முயற்சி இல்லாதவன் ...
முழுவதையும் இழப்பான் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை

  • தொடங்கியவர்

ஒரு உடலில் இரண்டு ....
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!

வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம் 
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து 
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை

 

@@@@@

 

நாம் ஒவ்வொருவரும் ...
பொய்யர்கள் தான் ...
நம் நிழல் காட்டுகிறது ....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
குறுங்கவிதை

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒன்றில் 
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி 
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஆன்மீக கவிதை 

  • தொடங்கியவர்

சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!

என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40

  • தொடங்கியவர்

எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!

இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41

  • தொடங்கியவர்
நட்பு பிரியாது தோழா ....!!!

நண்பனே ....
நாம் கொண்ட நட்பு .....
எல்லை தாண்டாத நட்பு ....
எல்லையற்ற நட்பு ....!!!

உன்னால் எனக்கு துன்பம் ...
எதற்காக கலங்குகிறாய் ....?
என் உயிர் பிரிந்தாலும் -நம் ....
நட்பு பிரியாது தோழா ....!!!

+
குறள் 806
+
பழைமை
+
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -26
 

கவலை எனக்கேதுமில்லை ....!!!

தெரியும் நண்பா....
நீ செய்வது எனக்கு ....
தீமையில் முடியும் ....
அறிந்திருந்தேன் ....
என்றாலும் கவலை ...
எனக்கேதுமில்லை ....!!!

சிறுவயதிலிருந்து ....
நாம் பேணும் நட்பு ....
தீமைகள் வந்தாலும் ...
பொருத்துகொள்ளும்...
நண்பனே ....!!!

+
குறள் 807
+
பழைமை
+
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் 
வழிவந்த கேண்மை யவர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -27

  • தொடங்கியவர்

அச்சமடைகிறேன் நண்பா ...!!!

கூறினார்கள் நண்பா .....
நீ தப்பாக என் உரிமையை ....
பயன்படுத்தி தப்பு செய்கிறாய் ....
அயலவர் கூறினார்கள்....
என்றாலும் நம்பவில்லை ....!!!

உண்மையில் நண்பா ....
நீ தப்புசெய்திருந்தால் ....
இத்தனை நாள் நாம் கொண்ட ....
நட்பு வீணாகிவிடுமே ...
அச்சமடைகிறேன் நண்பா ...!!!

+
குறள் 808
+
பழைமை
+
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு 
நாளிழுக்கம் நட்டார் செயின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -28

நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!

உன் 
உரிமையை நீயும் ....
என் 
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!

எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!

+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -29

  • தொடங்கியவர்

பகைவன் கூட நட்பை விரும்புவான் ....!!!

நீண்ட கால நட்பு ....
தவறுகள் செய்தாலும் ....
அறிவுடைய நண்பர்கள் ....
பொறுத்துகொள்வர் ....!!!

அறிவுள்ள நட்பை ....
பிரியாதோரை.....
அவர்களின் பகைவன்கூட .....
மனதார விரும்புவர் ....!!!

+
குறள் 810
+
பழைமை
+
விழையார் விழையப் படுப பழையார்கண் 
பண்பின் தலைப்பிரியா தார்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -30

  • தொடங்கியவர்

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
மூன்றுவரி கவிதை 

 

@@@@@@@
 

சுவருக்குள் சண்டை 
பரகசியமாகிறது 
தொலைகாட்சி நிகழ்சி 

$$$

குழந்தையால் முடியாது 
தாத்தாவால் முடியாது 
புஸ்பம் 

$$$

உயிரில்லை 
பேசிகொண்டிருக்கும் 
தொலைக்காட்சி 

$$$

பலதிருமணம் 
சட்டம் தடுக்காது 
திரைப்படம் 

$$$

கடவுளே பாதுகாத்திடு 
கோயிலில் வேண்டுதல் 
வாசலில் புதுச்செருப்பு 

$$$

கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
சென்ரியூக்கள்

@@@@@@@@@@@

 

காதல் நினைவுகளில் வாழ்கிறது 
நிம்மதியை தொலைக்கிறது 

^^^^^

சுபமுகூர்த்தத்தில் திருமணம் 
காதல் கரிநாள் ஆனது 

^^^^^

தொலைபேசி மணி அழைக்கிறது 
கட்டணநிலுவை பூச்சியம் 

^^^^^

நித்திரையில் சிரித்தேன் 
திட்டிஎழுப்பினார் அம்மா

^^^^^

 

கே இனியவன் 

பல்வகை கவிதைகள் 
குறட்கூ கவிதைகள் 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 
------
 
காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 
-----
 
முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 
------
 
அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 
----
 
பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 
  • தொடங்கியவர்

காதலுக்காக 
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது 
காதலை மதிக்காதவர்கள் 
செய்யும் முட்டாள் தனம் ...!!!

காதல் 
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால் 
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

கிடைத்த நேரம் எல்லாம் .....
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!

உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

நீ 
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!

என் 
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

நானும் அனாதைதானே.....
நீ  விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!

இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் வலிகளை வரிகளாக்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள் கவிப்புயல் இனியவன்

தொடருங்கள் (பிரிவை அல்ல கவிதையை).......

Edited by விசுகு

  • தொடங்கியவர்

ரோடு ஒற்றுமையாய் வாழ்...
ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
னம் என்பது உடலில் இல்லை .....
த்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
தியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

  • தொடங்கியவர்

மனதின் வலிகளை வரிகளாக்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள் கவிப்புயல் இனியவன்

தொடருங்கள் (பிரிவை அல்ல கவிதையை).......

நன்றி நன்றி 
தொடரும் 

  • தொடங்கியவர்

என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை 02

  • தொடங்கியவர்

நட்பு ...
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!

இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு 
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை 02

  • தொடங்கியவர்

தாயே உலகம் 
தாயே உணவு 
குழந்தை பருவம் 

@@@

தாயே உலகம் 
கல்வியே உயர்வு 
பள்ளி பருவம் 

@@@

தாயே கடவுள் 
உழைப்பே உலகம் 
இளமைப்பருவம் 

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஹைக்கூ கவிதை 03

உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!

உன்னையும் 
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
கைபேசி கவிதை 02

  • தொடங்கியவர்

தண்ணீரால் என் முகம் 
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என் 
சுவாசம் உன்  நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் தோல்வி கவிதை 

  • தொடங்கியவர்

" அ " அன்புக்கு அம்மா 
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன் 
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழி கவிதை

மனிதனும் 
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!

மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
குறுங்கவிதை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.