Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

டுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கடவுளை காணும்போது ...

கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!

கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ... 

+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல் 
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் 
காணேன் தவறல் லவை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 206

 

%%%%%%

 

மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!!

தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!

என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?

+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
 
%%%%%%

என் உள்ளம் நிறைந்தவனே

என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!

இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
 
%%%%%%%

காதல் அழகு புரியும் ....!!!

காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!

காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!

+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
 
%%%%%%

கண்ணால் பேசியவளே....

கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?

அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210
  • தொடங்கியவர்

வாய் பேசுகிறது -ஆனால் அதற்கு பெயர் கைபேசி
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள் 

 

@@@@@@@
 

எவை எல்லாம் மறைந்திருக்கிறதோ
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்

@@@@@@

முதல் ஹைக்கூ

உலகத்தில் முதல் தோன்றிய ஹைக்கூ
திருக்குறள் ....

@@@@@@

ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்

அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன

இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்

அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன

ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை

மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன

இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எழுது எழுது ....
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை 
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!

தமிழை 
வளர்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான்
கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? 
தமிழை பெற்றாய் ?

தமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? 
தழிழுக்கு காவல் துறை ?

தமிழுக்கு உரமிடுங்கள் போதும் 
கவிதை கட்டுரை வெண்பா ...
போன்றவற்றை ஈர்க்கும் 
படி எழுத்து அது போதும் ...

முடிந்தால் ஒரு நாள் முழுவதும் 
பிறமொழி சேராமல்
தமிழை பேசு எழுத்து அதுவே நீ 
செய்யும் காணிக்கை
தமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்

  • தொடங்கியவர்

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

  • தொடங்கியவர்

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

  • தொடங்கியவர்

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என் நினைவுகளை மறந்து ....
நான் உன் நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது - காதல் பிரிவை... 
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02

  • தொடங்கியவர்

என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள்  நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 03

  • தொடங்கியவர்

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....
நீ  அழகாய் இருப்பதால் கவிதை .....
அழகாக இருக்கிறது - நீ என்னை ....
பிரிந்துபார் கவிதை அழுது படி ......
உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 04

என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக காயப்படுத்து -எதையும் ...
தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் ....
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 05

  • தொடங்கியவர்
ண்ணில் காந்த சக்தியுடன் ....
டமையை மூச்சாய் கொண்டு....
திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

ரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
திரவன் போல் மனதில் ஒளிமையும் .........
ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!
 
  • தொடங்கியவர்

நட்பு என்றாலும் ...
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!

நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!

  • தொடங்கியவர்

உன் நினைவுகளை.... 
எனக்குள் விதைத்த..... 
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும் 
காதல் கதிரானேன் .....!!!

காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!

  • தொடங்கியவர்

நீ 
தந்த ரோஜா செடியில் ....
உணர்வேன் உன் நிலை ....
நீ ஆனத்தமாய் இருக்கும் ...
போது  வீட்டு முற்றத்தில் ...
ரோஜா சிரித்த முகத்தோடு ....
பூத்திருக்கும் .....!!!

உனக்கு என்ன நடந்தது ....?
ஒவ்வொரு ரோஜா பூவும் ....
வாடிவருகிறதே.....?
இதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள் 

  • தொடங்கியவர்

உன்னை ....
ஆசை வார்த்தையால் ....
வர்ணிப்பவர்களை நம்பாதே ....
உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!!

நான் ...
உனக்கு முள் போல் இருந்தாலும் ....
உயிர் உள்ளவரை உன்னையே ...
நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...
நீ என்னை திரும்பி பார்க்கும் ...
நான் தனிமையில் இருப்பேன் ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள் 

  • தொடங்கியவர்

பனிபோல் உருகுகிறாய் ,,,,?

மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?

கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 
நீஎமக்கு ஆகா தது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 211

  • தொடங்கியவர்

மனமே உனக்கு தெரிகிறது ...!!!

ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!

மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?

+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 212

என் அனுமதியில்லாமல் ...

என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ 
அடிகடி சென்று வருகிறாய் ...?

இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ 
சென்றாயோ ....?

+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ 
பெட்டாங்கு அவர்பின் செலல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 213

  • தொடங்கியவர்
எனைவனை கண்டவுடன் ....

என் மனசே ....
எனைவனை கண்டவுடன் ....
இன்பம் கொள்ள ஓடுகிறாய் ....
என்னவனின் தவறுகளை ....
புரிந்தால் நீ அவரை ....
அணுகமாட்டாய்......!!!

ஏதோ என் மனமே ....
நீயும் அவரும் பட்டுதெளி ....
என்னால் முடியாது மனசே ....
உன்னை சமாதானபடுத்த....!!!

+
குறள் 1294
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே 
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 214
 

பிரிந்துவிடுவாரோ 

என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!

என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் 
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 215

நினைவுகள் கொல்லும்.....!!!

தனிமை ஒரு கொடுமை 
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!

காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!

+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 216

  • தொடங்கியவர்
கண்டவுடன் என் மனம் ....

என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!

என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் 
மாணா மடநெஞ்சிற் பட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 217
 

என்னவன் பிரிவு வதைக்கிறது 

என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!

மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ 
தலைகுனிவாய் .....!!

+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் 
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 218

  • தொடங்கியவர்

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை 

துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?

ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம் 
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய 
நெஞ்சந் துணையல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 219

என்னுடைய மனமே ....
என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே 
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!

என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய 
நெஞ்சம் தமரல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 220

  • தொடங்கியவர்

உயிருக்கு உயிராய் பழகினாலும் ...

அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!

அறிவற்றவனின் 
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 
ஏதின்மை கோடி உறும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -36

பகை கொண்ட நட்பு மேல் ....!!!

சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!

கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!

+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் 
பத்தடுத்த கோடி உறும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -37

நடிப்போடு பழகும் நட்பைவிடு 

செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!

நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!

+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை 
சொல்லாடார் சோர விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -38

கனவிலும் துன்பம் தரும் ....!!!

சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!

இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 
சொல்வேறு பட்டார் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -39

உன்னை இழிவுபடுத்தும் நட்பு 

உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!

கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!! 
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 
மன்றில் பழிப்பார் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 40

  • தொடங்கியவர்

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் 
இயற்கை கவிதை 

  • தொடங்கியவர்

உன் 
தந்தைக்கு பயந்து...
தாயை சமாளித்து...
அண்ணனிடம் பொய் சொல்லி
தம்பியை வசப்படுத்தி ....
தங்கையிடம் மறைத்து ....
என்னை நீ காதலிக்கும் ....
அழகோ அழகு .....!!!

  • தொடங்கியவர்

மேகத்திடம் 
கருநீலத்தை இரவல் வாங்கி
விழிமண்டலமாய் உருவாக்கி .....!

மழையிடம் 
நீர்துளிகளை இரவல் கேட்டு.....
கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....!

விண்மீன்களை ....
கடனாககேட்டு கண்சிமிட்டும் 
காந்த சக்திகொண்ட கண்களே ....
என்னவளின் கண்கள் ......!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள் 

இப்படித்தான்
இந்தக்
காதல் என்னுள்
வந்தது என்று
சொல்ல முடியாமல்
இருப்பது போலவே

இப்படித்தான்
என் காதல்
கல்யாணத்தில்
முடியும் என்று
சொல்லவும்
முடியவில்லை....

கிரிக்கெட்டில்
கடைசிப்பந்து வரை
சுவாரஷ்யம் இருப்பது
போல.....
எப்போதும் எதுவும்
நடந்து விடலாம்
வாழ்வில்....!

  • தொடங்கியவர்

நண்பா நட்பு ஒன்றுக்குத்தான் .....
நேற்று இன்று நாளை பொருந்தும் ....
காதலில் இதில் ஒன்று நின்றுவிடும் .....
நட்பு காவியங்களை காப்பியங்களை ....
நட்போடு வாசித்துப்பார் கண்ணீர் வரும் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 06

  • தொடங்கியவர்

கிழிந்த 
காட்சட்டையுடன் நப்புகொண்டோம்.....
இன்றுவரை கிழியாமல் இருக்குதடா .....!
அழகான உடையிருந்தால் காதல் வரும் .....
அசிங்கமான உடையிருந்தாலும் நட்புவரும் .....
நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 07

கண் பூத்து கண்பார்வை ......
குறைந்துபோகும்போதும் ......
கண்டவுடன் கட்டித்தழுவும் .....
ஒரே ஒரு உறவு நட்பு ..!!!
உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 08

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.