Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடைச் சட்டம்

Featured Replies

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவான

புதிய விதிகளுடன் அமுலுக்கு வந்தது

சமாதானப் பேச்சு முயற்சிகளை

பாதிக்காது என்கிறது அரசு.

பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (Prevention of Terrorism Act) இலங்கைத் தீவு முழுவதும் நேற்று முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் புதிய பல துணை விதிகள் சேர்க்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமுலுக்கு வந்திருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைக்கு வரும்வரை அமுலில் இருந்த இந்தச் சட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பல புதிய துணை விதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புதிய நடவடிக்கையால் சமா தான முயற்சிகள் பாதிக்கப்படாது. அது இன்னும் வலுப் பெறவே செய்யும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்து டன், இந்தச் சட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்பட நேரின் அது குறித்து முறைப்பாடு செய்ய வசதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நடவடிக்கை களைக் கட் டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்கு விதி கள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், அவை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்தத் துணை விதிகள் சேர்க்கப்பட் டுள்ளன என்றும் இந்தப் புதிய நடவடிக்கையால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படாது என்றும் இத்துணை விதிகளின் பிரகாரம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணைபுரிவோருக்கு 10 வருடங்களுக்குக் குறையாத, 20 வருடங்களுக்கு மேற் படாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

""பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி அமைதி முயற் சிகளை முன்னெடுப்பதற்குக் காலத் திற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அதன்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பலப்படுத்தப்படல் வேண்டும்.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவின்றிக் காணப்படுகின்றது. அதை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் சில துணை விதிகளை அதனுடன் இணைக்க அமைச் சரவை அனுமதி வழங்கி இப்போது அந்தத் துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்துணை விதிகள் இன்று முதல் (புதன்கிழமை) வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றது. இத்துணை விதிகளின்படி பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்படுதல், பயங்கரவாதிகளின் சீருடைகளை அணிதல், அவர்களின் இலச்சினையைக் கொண்டிருத்தல், பயங்கரவாதிகளின் சார்பில் நிதி திரட்டுதல், தகவல் கொடுத்தல் மற்றும் வேறு வழிகளில் உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 10 வருடங்களுக்குக் குறையாத, 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அமைதி முயற்சி

பலப்படும்

இப்புதிய ஏற்பாட்டின் மூலம் அமைதி முயற்சி ஒருபோதும் பாதிக் கப்படாது. அமைதி முயற்சியை மேலும் பலப்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவுமே இத்துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன'' என்றார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்

""இந்தப் புதிய ஏற்பாடானது அமைதி முயற்சியை மாத்திரமின்றி வடக்கு கிழக்கின் அபிவிருத்தியையும் பாதிக்காது. புலிகள் எந்நேரமும் பேச்சுக்கு வரலாம். இப்புதிய ஏற்பாடு ஒருபோதும் அமைதிப் பேச்சைப் பாதிக்காது.

""இந்தப் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காலப் பகுதியில் பொது மக் கள் பாதிக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடத்தவும், அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென மேன்முறையீட்டுச் சபை ஒன்று உரு வாக்கப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்தார்.

www.uthayan.com

  • தொடங்கியவர்

பாதுகாப்பிற்காக புதிய நடைமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு.

கொழும்பின் பாதுகாப்பிற்காக புதிய நடைமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பைபெற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமையில் நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அதிநவீன முறையில் பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வது பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களை விரைவாக இலகுவான சோதனையிடுவது மற்றும் வாகன நெரிசல்களை குறைப்பது குறித்தும் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. சர்வதேச பொலிஸாரின் ஆலோசனையுடன் பயிற்சிகளை வழங்கி தற்பாதுகாப்பு கருவிகளை பொலிஸாருக்கு வழங்குவது குறித்து இந்த கலந்துரையாடலில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

www.sankathi.com

  • தொடங்கியவர்

கடும் சட்டங்கள் மூலம் சமாதான முயற்சிகள் பாதிக்கப்படும்-சம்பந்தர் கருத்து.

இலங்கையின் அமைச்சரவையால் புதன்கிழமை அமல் படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்ட நடவடிக்கை காரணமாக, அரசியல் ரீதியாக சமாதான முன்னெடுப்பைக் காணமுடியாது என தான் கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற தீவரமான போக்கு முன்பும் கடைபிடிக்கப்பட்டது எனவும், அதன் மூலமாக எவரும் எநத நன்மையும் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் ரீதியாகவோ, மனிதாபிமான ரீதியாகவோ தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை பொறுத்தவரையில், எந்தவிதமான முன்னேற்றமும் கடந்த நான்கு வருட காலத்தின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு வரவில்லை எனவும் கூறினார்.

விடுதலைப் புலிகள் தவறு செய்யவில்லை என தான் கூறவில்லை எனக் கூறிய அவர், சமாதான முயற்சியை பக்குவமாக முன்னெடுப்பதற்கு அரசு செய்ய வேண்டிய விடயங்களில் அது தவறியுள்ளது எனவும் மேலும் கூறிய அவர், இவ்விதமான சூழலில் வன்முறை நடைபெறுவதை எவரும் தவிர்க்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

www.tamilwin.com

  • தொடங்கியவர்

தமிழர்களை பலியெடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம்.

பேரினவாதச் சிங்களத்தின் ஒரே இலக்கு தமிழர்கள் இந்த நாட்டில் எந்தவித மனநின்மதியுடனும் வாழக்கூடாது என்ற ஒரே எண்ணம்தான் என்பது தற்போது மீண்டும் ஒருமுறை புடம்போடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக சிங்கள பேரினவாதம் இன்றல்ல, 1979 ஆம் ஆண்டுமுதல் இறுதியாக போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்வரையில் போட்டு வைத்திருந்த சட்டமே இந்த பயங்கரவாதச் தடைச்சட்டம். இந்த நாட்டில் உள்ள தமிழர்களில் முழுமையான சுதந்திரங்களையும் பறித்து அவர்களை இந்த நாட்டின் எல்லைக்குள்ளேயே தனிமைப்படுத்தும் குரூர எண்ணம் கொண்ட சிங்களத்தின் சட்டமுறையே இதுவாகும்.

இன்று 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமது சகோதராரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்காக பின்விளைவுகள், பாதிப்புக்கள் எதனையும் யோசிக்காது மகா புத்திசாலியான மகிந்த ராஜபக்ஸ புதிய விதிகளுடன் போட்டிருக்கும் சட்டமே தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம்.

இந்தச்சட்டத்திலும், சட்ட ரீதியான பல ஓட்டைகளும், சிக்கல் நிலைகளும் தோன்றியுள்ளன என சட்ட ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் பேரினவாதத்திற்கு ஒத்து சங்குஊதும் சிறி லங்கா நீதிமன்றங்கள் இருக்கும்வரை சிறந்த வரையறை எதுவும் இல்லாமல் தமிழர்களை அழிப்பதற்கு எந்த சட்டத்தையும் இயற்றக்கூடியவகையிலேயே நடைமுறையும் உள்ளது.

தற்போதும் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ என்ற பெயரில் ஓர் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பினும் இதில் கூட பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்குரிய உரிய சரியானவரையறை எதுவும் கொடுக்கப்படவில்லை. பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்குரிய சரியான அளவைகள், கருதுகோல்கள் இருந்தால் மட்டுமே எதை தடை செய்துள்ளனர் என மக்கள் அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.

சட்டத்தை வெறுமனே போட்டுவிட்டு கைது செய்வதென்றால் அரசின் எல்லா சட்டங்களையும் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு எல்லா மக்களும் சட்டத்தரணிகள் அல்ல.

அத்தோடு சகல சட்ட விதிகளும் எல்லா மக்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இது இவ்வாறிருக்க பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய, உதவிபுரியும், ஊக்கிவிக்கும், ஏதாவது விதத்தில் உதவிபுரிவது குற்றம் என்ற சொற்பதங்கள் கொடுக்கப்பட்டு மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர் சிங்கள அரசியல்வாதிகள்.

பயங்கரவாத தடைச்சட்டம் என்று ஒன்றை அமுல்ப்படுத்தி தடை விதிக்கும்போது, அரசாங்கம் தனது ஒரு சட்டமூலம் ஒன்றில் குறைந்தது யார் யார் பயங்கரவாதிகள், என்று பட்டியலிட்டு அவற்றை அல்லது அந்த அமைப்பினை தடை செய்வதாக சட்டமூலம் கொண்டுவந்து மக்களுக்கு இனங்காட்டினாலே தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலத்தின்மூலம் சிங்கள பேரினவாதம் நினைத்ததைக்கூட செய்யமுடியுமாக அமைந்திருக்கும்.

www.sankathi.com

  • தொடங்கியவர்

பயங்கரவாத தடைச் சட்டத்தால் நாடு பெரும் அல்லலுக்குள்ளாகும்: தயா மாஸ்டர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தால் நாடும் மக்களும் பெரும் அல்லலுக்குள்ளாவர்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கை இந்த அரக்கனை சில காலம் உறங்க வைத்திருந்தது. இப்போது இந்த அரக்கனுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் மீண்டும் துன்புறுத்தலுக்கு உள்ளாகப் போவது இயற்கையானது. மாய வட்டத்தை அரசு மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. இதனால் நாடும் மக்களும் தான் அவதிக்குள்ளாகப் போகிறார்கள் என்றார் அவர்.

www.puthinam.com

பட்டினிச்சாவை நீடிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம். - யாழ் ஆயர்.

- பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 07 னுநஉநஅடிநச 2006 16:41

சிறிலங்கா அரசாங்கம் புதிய புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதே தவிர பட்டினிச் சாவை எதிர்நோக்கி கொண்டிருக்கும் 6 இலட்சம் மக்களுடைய நிலைபற்றி சிந்திக்கவில்லை என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு ஏ-9 பாதையை திறப்பதாக கூறியிருந்தது இது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்;சி தரும் செய்தியாகவே இருந்தது. ஆனால் அரசு மக்களை ஏமாற்றி விட்டு இறுக்கமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

யாழ்குடாநாட்டில் வாழும் 6 இலட்சம் மக்களின் மனிதாபிமான விடயத்தில் சர்வதேச சமுகமும் தமது அக்கறைகளை காட்டவில்லை. சிறிலங்கா அரசு அடிக்கடி தன்னை ஒரு பொறுப்புள்ள அரசாக காட்டிக் கொள்கின்றது. அவ்வாறு காட்டிக் கொள்கின்ற அரசு இந்த 6 இலட்சம் மக்கள் மீதும் கருசனை காட்டுமானால் இந்த ஏ9 பாதையை உடனடியாகத் திறந்து இந்த மனித அவலத்திற்கு தீர்வுகானும் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

நன்றி சங்கதி.கொம்

பயங்கரவாத தடைச்சட்டம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாக அமைந்தபோதும் அது குறித்துபேச அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வோம் கண்காணிப்புக்குழு

[Thursday December 07 2006 06:39:35 AM GMT] [யாழ் வாணன்]

அரசாங்கம் நேற்று முதல் அமுல் படுத்தியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம்,2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை மீறுவதாக தோன்றுகின்ற போதிலும் இந்த சட்டம் குறித்த மேலதிக விபரங்களை பெறும் நோக்கில் அரச தரப்புடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

இந்தச் சட்டத்தின் மீள் அமுலாக்கம் யுத்த நிறுத்த மீறலா இல்லையாவென அறிக்கையிட, அல்லது கருத்துக்கூற இன்னும் சிறிது அவகாசம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குத் தேவை எனக் கூறிய கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஒமர்சன்,சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளோ அல்லது தேடுதல் நடவடிக்கைகளோ நடைபெறக்கூடாது என்பதையும், கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழேயே நடைபெற வேண்டும் என்றும் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து இலக்கம் 2.12 தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அமுலில் இருந்த இந்த பயங்கர வாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தே அவ்வொப் பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர் இந்தச் சட்டம் திருத்தங்களுடன் அமுல் படுத்தப்படுவதாக அரசாங்கம் இன்று(நேற்று) அறிவித்திருக்கின்ற போதிலும் இது குறித்த மேலதிகமான தெளிவான விபரங்களை பெறும் பொருட்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் இந்த தடைச்சட்ட அமுலாக்கம் குறித்து புலிகளின் தலைமைப் பீடத்து டனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

நுண்ணியதாக நோக்கப்பட வேண்டியது

சுமார் ஐந்து வருடங்களாக நீக்கப்பட்டிருந்த பயங்கரவா தத் தடைச் சட்டம் நேற்றுமுன்தினம் தொடக்கம் மீண்டும் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

ஜேர்.ஆர்.ஜெயவர்த்தனா காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து, சிறு சிறு இடைவெளிகளுடன் இந்தச் சட் டத்தினுடைனேயே இலங்கை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காலத்துக்குக் காலம் பதவிக்கு வரும் அரசுகள் இந்தச் சட் டத்துக்கு பல கடும் விதிகளைச் சேர்த்துப் புதுப்பித்து வந்தன. அதேவகையில் மஹிந்த அரசும், கடந்த புதன்கிழமை பல புதிய விதிகளைச் சேர்த்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நாடு முழுவதிலும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

நாட்டின் அமைதிக்கும் அதன் வளர்ச்சிக்கும் வகை செய்வ தற்காகப் புதிய புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதும் காலத்தேவைக்கு ஏற்ப அவ்வப்போது பழையன திருத்தப்படு வதும் எல்லா நாடுகளிலும் நடைபெறுவதுதான். அதனைத் தவறு என்று சொல்வதற்கில்லை; சொல்லமுடியாது.

ஆனால் ஒரு சட்டம் அடிக்கடி திருத்தப்படுகிறது எனின், அது போதிய வீரியத்துடன் தயாரிக்கப்படவில்லை அன்றேல் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்ல

  • தொடங்கியவர்

பயங்கரவாத தடைச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை பாரிய யுத்த நிறுத்த மீறல் - கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அரசாங்கம் அமுல் படுத்தியுள்ளமை தெளிவான ஒரு யுத்த நிறுத்த மீறல் ஆகும். சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளின் படி இந்த பயங்கரவாத தடைச்சட்ட மீள் அமுலாக்கம் ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் என சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முன்தினம் முதல் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் ஊடகங்களின் வாயிலாக மேற்கொண்ட அறிவிப்புக் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து கூறுகையில்

சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளோ அல்லது தேடுதல் நடவடிக்கைகளோ நடைபெறக்கூடாது என்றும் கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் சிறிலங்காவின்; ஏற்கனவே அமுலில் உள்ள சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழேயே நடைபெற வேண்டும் என்றும் 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து இலக்கம் 2.12 தெரிவிக்கின்றது. இதற்கு இரு தரப்பும் இணங்குவாத ஒத்துக் கொண்டே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பொழுது சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் இந்த சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை சர்வதேச அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பிரதானமாக மீறும் செயலாகும். ஆயினும் இந்த சட்டம் நடைமுறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப்போகின

  • தொடங்கியவர்

தமிழர்களை ஒடுக்கவே சிங்கள அரசு பயங்கரவாத சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களை வகைதொகையின்றி கைது செய்யவும் கொன்றொழிக்கவுமே வழிவகுத்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறையிட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை நோர்வேயின் சிறப்புத்தூதுவர் ஜொன் ஹன்சன் பௌயர், நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் மற்றும் இலங்கைக்கான ஜேர்மனியத்தூதுவர் ஆகியோரை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விடுதலைப்புலிகளுக்கு எந்தவொரு பாதிப்பையும் உருவாக்கப் போவதில்லை. மாறாக அப்பாவித் தமிழ் மக்களை மேலும் மேலும் அழித்தொழிப்பதற்கே வழிவகுத்துள்ளது.

அரசாங்கம் முப்படையினருக்கும் விசேடமான கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளதன் மூலம் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதற்கே வழிவகுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக ஏ-9 வீதியை மூடியுள்ளதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக யாழ்.குடாநாட்டில் வாழும் ஆறு இலட்சம் தமிழ் மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு முன்னரே வடக்கு,கிழக்கில் ஆட்கடத்தல் படுகொலைகள் தினமும் இடம் பெற்று வந்துள்ளன. இந்த நிலையில் மேலும் மோசமான அழிவுகளுக்கே அரசின் புதிய நடவடிக்கை வழிவகுக்கப் போகிறது. போர் நிறுத்த உடன் படிக்கை நடைமுறையிலுள்ள நிலையல் விமானக்குண்டு வீச்சு, எறிகணைத்தாக்குதல்கள் போன்ற அரச படையினரின் கண் மூடித்தனமான தாக்குதல்களால் பாடசாலை மாணவர்கள், இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருப்போர் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தில் இடம் பெயர்ந்து வந்து தங்கியிருக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அரசபடையினர் தடைவிதித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தவறான வழிநடத்தலாகவும் அழிவுகளுக்குமே வழிவகுத்துள்ளது.

அது மட்டுமன்றி தடைபட்டுப் போயுள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுப்பதற்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மேலும் நெருக்கடியானதோர் சூழலையே தோற்றுவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலும் யுத்தமொன்றைத் தோற்றுவிப்பதற்காக அமைந்துள்ளதை சர்வதேச சமூகம் உணர்ந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

சமாதான முயற்சிகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் அழிவுகளுக்கும் வழிவகுக்கப் போகும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேசசமூகம் ஒன்று பட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

www.sankathi.com

  • தொடங்கியவர்

பயங்கரவாத தடைச்சட்ட அமுலாக்கத்தில் திருப்தி அடைய முடியாது புலிகளை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்:- ஜே.வி.பி

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் அமுல் படுத்தியமை தொடர்பாக திருப்தியடைய முடியாது. உடனடியாக விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்தும் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பயங்கரவாத தடைசட்டத்தை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் தனிநாட்டை உருவாக்குவதற்காக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அந்தவகையில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தை அமுல்படுத்தியமையை ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் இந்த சட்டத்தின் மூலம் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற சக்திகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதனை எதிர்க்கும் உரிமை எங்களிடம் இருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது புலிகள் தாக்குதல் நடத்தியதும் நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதாவது புலிகளை தடைசெய்ய வேண்டும், மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளையே மக்கள் முன்வைத்தனர். ஆனால் அரசாங்கம் இந்த இரு கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காது முக்கியத்துவமற்ற முறையில் சிறிய அளவிலான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. எனவே அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக எங்களால் திருப்தி அடைய முடியாது. புலிகளை அரசியல் ரீதியில் வீழ்த்துவதற்கு அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையில் இருந்து விலக வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையில் அத்தியாவசியமான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கத் தவறிவிட்டது.

தமது சகோதரரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசினால் உறுதியான முடிவை எடுக்க முடியாமையானது முழுநாட்டையும் பயங்கரவாதத்தின் முன் கொண்டு செல்வதற்கு சமனாகும்.

புலிகளைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் தெளிவான திட்டங்களை வகுக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் நடைமுறைக்கு ஏற்றவாறு செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாது புலிகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும். அத்துடன் புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டும். இதனை விடுத்து அரசாங்கத்தால் புலிகளை தோற்கடிக்க முடியும் என்பது கடினமான விடயமாகும். இதனை அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்காக தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.