Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலப்பு நீதிமன்ற யோசனையும் அதற்கான எதிர்ப்பும்

Featured Replies

கலப்பு நீதிமன்ற யோசனையும் அதற்கான எதிர்ப்பும்
கலப்பு  நீதிமன்ற யோசனையும் அதற்கான எதிர்ப்பும்

போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய விசாரணைக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை மாநாட்டில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து சிங்கள மற்றும் தமிழ்த் தரப்புக்களின் இனவாதத் தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறித்த விசாரணைக் கட்டமைப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் உள்ளடக்கப்பட்டு அதுவோர் சர்வதேச கலப்பு நீதிமன்றமாக உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர், தாம் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் குறித்துச் சமர்ப்பித்த தமது அறிக்கையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஆனால், பின்னர் ஐ.நா. மனித உரி மைகள் சபை மாநாட்டில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பொன்றே ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், இலங்கையின் அரசமைப்புச் சட்டங்களுக்கு அமையவே அது நிறுவப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழர் தரப்புக்கள் குறித்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், முற்றுமுழுதாக வெளிநாட்டு நீதித்துறை வல்லுநர்களைக் கொண்ட நீதிமன்றமொன்றின் மூலமே விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண் டும் என வலியுறுத்துகின்றன. ஆனால், சிங்கள கடும் கோட்பாட்டாளர்களோ குறித்த நீதிமன்றம் நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு நீதிவான்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த பல விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவியமை மட்டுமன்றி, அவற்றில் சிலவற்றுக்கு வெளிநாட்டு நீதித் துறைப் பிரமுகர்கள் சிலரை உறுப்பினர்களாக நியமித்துமுள்ளார். இவற்றில் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காணாமற்போனோரைக் கண்டறியும் மாக்ஸ்வல் பரணகம விசாரணை ஆணைக்குழு என்பவை மகிந்தவால் ஏற்படுத்தப்பட்டனவே.

குறித்த விசாரணை ஆணைக் குழுக்களுக்கு உதவி வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டதுண்டு. உடலகம ஆணைக்குழுவுக்கு உதவவென இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.என். பகவதியின் தலைமையில் மகிந்தவால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவில், 2010 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. பொதுச் செயலாளர் பான்  கீ - மூன் நியமித்த குழுவின் தலைவரான இந்தோனே´யாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தருஷ்மனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த நிபுணர்கள் குழு, உடலகம விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னரே நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்புக்கு ஒவ்வாத அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துவிட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டது.

உடலகம விசாரணை ஆணைக் குழு தனது விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளையில், அதற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களது கடும் விமர்சனத்துக்கு உட்பட்ட பிரமுகராக விளங்கியவர் அந்த வேளை சட்டமா அதிபரான காலஞ்சென்ற சீ. ஆர்.த. சில்வா ஆவார்.

ஆனால் அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக அமைந்தது. அண்மைய அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் சபை யோசனையிலும் கூட குறித்த ஆணைக் குழுவின் அறிவுறுத்தல்களை நடை முறைப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது.  மகிந்தவால் நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழு சனல்-4 தொலைக்காட்சியில் இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் மறுத்துரைக்கவில்லை.

எழிலன், யோகி போன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் கைதுக்குப் பின்னர் காணாமற் போனமை குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் கூட ஆதாரமற்றவை என அந்த ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அவை குறித்து நீதிமன்றம் மூலம் விசாரணை செய்யப்பட வேண்டுமென்றே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் உள்நாட்டுப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் இடம் பெறுவதொன்றும் புதிதான ஒன்றல்ல. ஆனால் போர்க்குற்றங்கள் தொடர்பான சட்டங்கள், குற்றமிழைத்தோர் மட்டுமன்றி அவற்றுக்கு உத்தரவிட்டோரைக்கூட பொறுப்பாளிகளாக்கும் சட்டங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் இலங்கை நீதிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு உள்நாட்டுப் பொறிமுறையொன்றை  உருவாக்கி குற்றச்சாட் டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆனால் முன்னைய அந்த வேளையில் இத்தகைய விசாரணைக் கட்டமைப்புக்களை ஏற்படுத்தவும், அவற்றில் வெளிநாட்டு நிபுணர்களை நியமிக்கவும் முன்வந்த தரப்பினர்கள் தற்போது அத்தகையதொரு முயற்சி மேற்கொள்ளப்படும்போது அது குறித்து விமர்சிப்பது முற்றுமுழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மகிந்த அரசு தவறியதன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணையொறை மேற்கொள்ள நேர்ந்தது. அதுவோர் குற்ற விசாரணையல்ல. இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்த பொது விசாரணையொன்றே.

இலங்கை அரசு அதனை  ஏற்க மறுத்ததால், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவும் கிட்டிய வாய்ப்பு கை நழுவிப் போக நேர்ந்தது.

இலங்கை அரசு எதிர்த்தபோதிலும் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளரது அலுவலகம் இலங்கை குறித்த தனது செயற்பாட்டைக் கைவிடவில்லை. வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்தும் குறித்த சில தகவல்களைக் கோரிப் பெற்றுக் கொண்டது. குறித்த விசாரணை அறிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுப்பதானால் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகம் கோரிய தகவல்களை இலங்கை அரசு வழங்குவதைத் தவிர்க்க வாய்ப்பிருந்தது.

விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு எதிரான தரப்பினர்கள் அந்த விசாரணையில் சாட்சியமளித்திருந்தனர். குறித்த விசாரணையை அவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்டனர்.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மாநாட்டில் அமெரிக்கா- இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைப்பதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளரது அந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததுடன் அதன்மூலம் உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றமொன்றை நிறுவி உண்மைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட் டிருந்தது.

மகிந்த அரசு பதவியில் இருந்திருக்குமானால் பெரும்பாலும் அது சர்வதேச நீதிமன்றம் ஒன்றுக்கான யோசனையாக அமைய  இடமிருந்தது. மகிந்த தரப்பு ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளருடன் இணக்கமாகச் செயற்படாது என்ற கருத்து உறுதியாக நிலை பெற்றிருந்தமையே அதற்கான காரணமாகும்.

எனவே, இலங்கை அரசு அமெரிக்க அரசின் பிரேரணையைச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக்கொள்வதே பயனுள்ளதாக அமையும்.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் யோசனைகளையும் அறிக்கையையும் அரசு நிராகரிக்குமானால், இது விடயத்தில் மனித உரிமைகள் சபையால் மேற்கொண்டு இலங்கைக்கு  எதிராக எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ள இயலாது என்ற மகிந்த ஆதரவுத் தரப்பினரது வாதம் அர்த்தமற்றது.

மகிந்த தரப்பினரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லத் தற்போதைய ஆட்சியாளர்கள்  முயற்சிப்பதாகவும், இராணுவத்தினரைக் குற்றவாளிகளாக்க முயற்சிப்பதாகவும் அடிக்கடி குற்றம் சுமத்துபவர்களும் இந்த மகிந்த ஆதரவுத் தரப்பினரே.

இதிலிருந்து நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டு மக்களது மனித உரிமைகளைத் தமது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்த முனைகின்றனர் என்பது மட்டும் மிகத் தெளிவாக, உறுதியாகப் புலப்படுகிறது. இதுவே யதார்த்த உண்மையுமாகும்.

http://onlineuthayan.com/article/48

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.