Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

வேலையை தள்ளிபோடுவது சோம்பேறித்தனம் அல்ல - காரணம் இதுதான்!

ஒரு வேலையை தள்ளிபோடுவதா அல்லது உடனடியாக செய்து முடிப்பதா என்பது உங்களது மூளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

14 நாள்கள்

 
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

 

10p1_1537005990.jpg

மூன்று மில்லியன் டாலர்  விருது பெறும் பெண் விண்வெளி ஆய்வாளர்!

1974-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைத் தன் பிஹெச்.டி வழிகாட்டியான ஆன்டனி ஹீவிஷிடம் தவறவிட்டார் ஜாஸ்லின் பெல் பர்னல். ஹீவிஷின் மேற்பார்வையில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில், `பல்சர்' எனப்படும் நட்சத்திரங்கள் எழுப்பும் ரேடியோ ஒலியை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஜாஸ்லின். பூமியின் ரேடியோ அதிர்வுகள்தாம் அவை என்றும், விண்ணிலிருந்து எந்த சமிக்ஞையும் இல்லை என்றும் ஜாஸ்லினின் கண்டுபிடிப்பை மறுத்த ஹீவிஷ், அதே ஆய்வைத் தனியே தொடர்ந்து, நோபல் பரிசைத் தட்டிச் சென்றார். பிரிட்டிஷ் விண்வெளி ஆய்வாளர் சர் ஃப்ரெட் ஹாய்ல் கடும் கண்டனம் தெரிவித்தும், பரிசு ஹீவிஷ் கைக்கே சென்றது. அன்றைய ஆணாதிக்க அறிவியல் உலகில், இந்தத் துரோகத்தை யாரும் பெரிதாக எண்ணவும் இல்லை. தொடர்ந்து 40 ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜாஸ்லினுக்கு இந்த ஆண்டு உயரிய `ப்ரேக்த்ரூ' விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறது உலகின் தலைசிறந்த அறிவியல் வல்லுநர்களைக் கொண்ட குழு. இக்குழுவில் மார்க் சக்கர்பர்க்கும் இடம்பெற்றிருக்கிறார்.

பரிசுப் பணமான மூன்று மில்லியன் டாலரில், 2.3 மில்லியன் டாலரை இயற்பியல் ஆய்வு செய்ய விரும்பும் பெண் ஆய்வாளர்கள் மற்றும் நலிந்த வகுப்பினருக்கு உதவும் வகையில் ஊக்கத் தொகையாக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ஜாஸ்லின். இன்னமும் இயற்பியல் ஆய்வுக்கூடங்களில் உள்ள பிரிவினை மற்றும் அடக்குமுறையைத் தடுக்க இந்தப் பணம் உதவட்டும் என்கிறார் அவர்.

`பொறுத்தார் பூமியாள்வார்'னு சும்மாவா சொன்னாங்க!


10p2_1537006001.jpg

தோல்வியிலும் நிமிர்ந்து நின்ற செரீனா!

மீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ். ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகாவிடம் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோற்றார் செரீனா. ஆட்டம் முழுக்கப் பதற்றத்துடனே ஆடிய செரீனா, இரண்டாவது கேமில் அவரின் பயிற்சியாளர், கோச்சிங் சைகை செய்ததாக அம்பயர் கார்லோஸ் ராமோஸ் சுட்டிக்காட்ட, ஒரு பாயின்ட் இழந்தார் செரீனா.

கோபத்தில் டென்னிஸ் மட்டையைத் தரையில் ஓங்கி அடிக்க, அது உடைந்ததால் மீண்டும் ஒரு புள்ளியை அவரிடமிருந்து பறித்தார் அம்பயர். உடனே செரீனா அம்பயரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதத்துக்கும் ஒரு புள்ளியைப் பறித்தார் ராமோஸ். இறுதியில் 4-6 என்ற செட் கணக்கில் தோற்றார் செரீனா. அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தாலும், வெற்றி பெற்ற நவோமியை ஏளனம் செய்து கோஷமிட ஆரம்பித்தனர் ரசிகர்கள். கண்ணில் நீர் மல்க செய்வதறியாமல் நின்றார், செரீனாவை தன் ஆதர்ச ஆட்ட நாயகியாக வரித்துக்கொண்ட நவோமி. “நவோமி அருமையாக விளையாடினார். வெற்றி பெற்றவருக்கு உரிய மரியாதையை நாம் தர வேண்டும். அவருக்கெதிராகச் சத்தம் எழுப்ப வேண்டாம்” என்று செரீனா கூற, அரங்கம் அமைதியானது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கோப்பை ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் முதல் ஜப்பானியர் ஆகிறார் நவோமி!

ஹ்ம்ம்ம்…அமெரிக்காவுலயும் இப்படி!


10p4_1537006043.jpg

மனம் போற்றும் மனிதம்!

மும்பை நகரில் இரண்டு மனநல கிளினிக்குகள் தொடங்கி நடத்தி வருகிறார் நீரஜா. “உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் 7.5% இந்தியர் பல்வேறு மன நோய்களால் அவதியுறுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. பெரும்பாலானோர் இதுபோன்ற நோய்கள் குறித்த சரியான மருத்துவ அறிவு இல்லாததாலும், இது குறித்து வெளிப்படையான விவாதங்கள் இல்லாததாலும், பேசத் தயங்கி, நோய் முற்றிய பிறகே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். வெளிப்படையாக மன நோய் குறித்த விவாதங்கள் வேண்டும் என்பதாலும், அது பற்றிய விழிப்பு உணர்வை மக்களுக்குத் தர வேண்டும் என்பதாலும்தான் `எம்பவர்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். சைக்கிள் பயணம், இசை நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் விழிப்பு உணர்வு அளித்துவருகிறோம். சிறந்த கவுன்சலர்கள் மற்றும் மனநல மருத்துவர்களைக் கொண்டு எம்பவர் கிளினிக்குகளில் சிகிச்சை தரப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பிரபல மருத்துவமனைகளில்கூட மன நல வார்டுகள் தனியாக இல்லை. பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் கோவா கேம்பஸில் எம்பவர் செல் ஒன்று தொடங்கியிருக்கிறோம். பிரதம் ஃபவுண்டேஷன் மூலம் மும்பையை அடுத்த தானே நகரின் காவல் நிலையங்களில் தனி செல்கள் தொடங்க உள்ளோம். பிற நகரங்களிலும் கிளைகள் தொடங்கும் எண்ணம் உள்ளது. அதைவிட முக்கியமாகச் சிறு கிராமங்களில் கிளைகள் தொடங்கவே எனக்கு ஆசை” என்று கூறுகிறார், பெரும் தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் மனைவியான நீரஜா.

நல்ல முயற்சிகள் சிறக்கட்டும்!


10p3_1537006012.jpg

சாதனை மேல் சாதனை!

லங்கை கல்லேயில் நடைபெறும் ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு உலகச் சாதனைகள் புரிந்துள்ளது. அணியின் தலைவர் மித்தாலி ராஜ், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைமையேற்று விளையாடியிருக்கிறார். மொத்தம் 118 மேட்சுகள்! அதேபோல ஜுலான் கோஸ்வாமி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஸ்ரீலங்காவின் கல்லே நகரில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மித்தாலி ராஜ் சென்னையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி!

அடிச்சு ஆடுங்க அம்மணிகளே!


10p5_1537006066.jpg

கிட்னியும் தருவாள் தோழி!

டந்த செப்டம்பர் 3 அன்று கொல்கத்தா ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 32 வயதே ஆன மார்ஷ்னில் சின்ஹா என்ற பெண்ணுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மார்ஷ்னில், பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தபோது அவரின் சீனியராக அதே நிறுவனத்தில் பணியாற்றியவர் 40 வயதான தித்தி லஹிரி. திடீர் உடல்நலக் குறைவால் மார்ஷ்னில், சொந்த ஊரான பொகாரோவுக்குத் திரும்ப, அவரது உடல்நலம் குறித்த தகவல்களைக் கண்காணித்து வந்தார் தித்தி. மார்ஷ்னிலுக்குச் சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டதாகவும், தற்காலிகமாக பிளட் டிரான்ஸ்ஃப்யூஷன் செய்யப்படுவதாகவும் தித்திக்குத் தகவல் கிடைத்தது. நிலைமை இன்னும் மோசமாக, மாற்று சிறுநீரகம் பொருத்துவதே ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் குழு அறிவித்தது.

மார்ஷ்னிலின் பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாகவும், மருத்துவச் சிக்கல்களுடனும் இருந்ததால், அவர்களால் தானம் செய்ய முடியவில்லை. திருமணத்துக்குக் காத்திருக்கும் மார்ஷ்னிலின் தங்கை வழங்க முன்வந்ததையும் மார்ஷ்னில் தடுத்துவிட்டார். மனம் சோர்ந்திருந்த குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசினார் தித்தி. தான் சிறுநீரகம் தானம் செய்ய முன்வருவதாகவும் தெரிவித்த கையோடு, கொல்கத்தாவுக்கு பயணமானார். சில அடிப்படை மருத்துவத் தேர்வுகள், சட்டச் சிக்கல்கள் எல்லாவற்றையும் சமாளிக்க ஒன்பது மாதங்கள் பிடித்தன. உறவினர் அல்லாதோர் உறுப்பு தானம் செய்வதை இன்று அனுமதிக்கும் ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் இருப்பது தோழிகளுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. ஒரு வழியாக அறுவை சிகிச்சை முடிந்து, தோழிகள் இருவரும் கொல்கத்தா மருத்துவமனையில் உடல்நலம் தேறிவருகின்றனர்.

சிறிய பொருள்களைக்கூட கொடுத்து உதவத் தயங்கும் காலத்தில் கிட்னி தானம்... பேஷ்!


10p6_1537006095.jpg

மிகவும் மதிப்புள்ள விளையாட்டு வீரர்!

மீபத்தில் இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், `எம்.வி.பி' எனப்படும் மிகவும் மதிப்புள்ள விளையாட்டு வீரர் என்ற சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ரிகாகோ ஐக்கீ. நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் தனிநபர் பிரிவில் ஆறு தங்கப்பதக்கங்களும், ரிலே என்ற குழுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் வென்றிருக்கிறார் ரிகாகோ. இந்த எம்.வி.பி. பரிசைப் பெறும் முதல் பெண் இவரே. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபராக அதிகப் பதக்கங்களை வென்றதும் ரிகாகோதான். பான் பசிஃபிக் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்ற கையோடு ஜகார்த்தாவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார், 18 வயதான ரிகாகோ.

விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளன்று இந்தப் பரிசை அறிவித்தது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில். “எம்.வி.பி விருது இந்த ஆண்டு இல்லை என்று முதலில் தெரியவந்ததும் வருத்தமாக இருந்தது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்ற தகவலை அடுத்து, இந்த அருமையான விருது எனக்குக் கிடைத்தது, மிகுந்த மகிழ்வைத் தருகிறது” என்று தெரிவித்தார் ஐக்கீ. சுழற்கோப்பையும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுப் பணத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது. இன்னும் இரண்டாண்டுகளில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்தாம் தன் அடுத்த இலக்கு என்று அறிவித்திருக்கும் ஐக்கீ, இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு சொந்த மண்ணில் பதக்கங்கள் வெல்லப்போவதாகவும் தெரிவித்தார்.

வாழ்த்துகள் ரிகாகோ!

- நிவேதிதாலூயிஸ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நிறைவாழ்வு வாழ்வது எப்போது?
 

image_2fbdee0493.jpgஎல்லாவற்றையும் இழந்தபின் ஒருவருக்குத் தேறுதல் சொல்லப் பலர் புறப்பட்டு விடுவார்கள். அவன் இழப்பை உடன் நிறுத்த எத்தனை பேர் வந்தார்கள் என்பதே கேள்விக்குரிய விடயம்.

ஒரு மனிதன் அவலப்படும்போது, பலர் மறுபக்கம் திருப்பிப் போவதால், இழப்பின் தாக்கத்தை அவனேதான் அனுபவிக் வேண்டும். பிறர் வாழ்க்கையைத்தான் திரைப்படம்போல் இரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் தாம் பார்க்கும் திரைக்கதைக்குள்ளும் தங்களைப் போன்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஏனோ தெரிந்துகொள்வதில்லை.

கரிசனையை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என அங்கலாய்ப்பவர்கள், கொஞ்சம் திரும்பித் தன்னால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகள் பற்றிக் கருதுவது கிடையாது.

காசுக்காரன் கல்யாணத்துக்குத் தொண்டுவேலைகள் செய்ய, சில பிரமுகர்கள் கூடப் பிரியப்படுகிறார்கள். எதனை, எப்படி, எவ்வண்ணம் வருவது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஏழைகளை இரட்சிக்கக் கடவுளுடன் கூட வருவது, அவர்களைத் தெரிந்த வலிமைமிகு ஏழைகளும்தான்.

ஏனெனில், தேறுதுல் அளிக்க, இவர்களைப் போன்ற ஜீவன்களால்த்தான் முடியும். ஏழைகளுக்கு ஏழ்மைஒரு நிரந்தரப் பதவியாக கஇருக்க வேண்டும் என எண்ணும் குறுநெஞ்சக்காரர்கள் நிறைவாழ்வு வாழ்வது எப்போது?    

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 19
 

image_f385150045.jpg1916 : முதலாம் உலகப் போர் - கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.

1944 : இரண்டாம் உலகப் போர் - ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது.

1944 : பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1952 : ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.

1957 : ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

1970 : கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.

1976 : தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில், 155 பேர் அனைவரும் கொல்லப்பட்டனர்.

1978 : சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது.

1983 : செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1985 : மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.

1989 : நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில், 171 பேர் கொல்லப்பட்டனர்.

1991 : ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.

1997 : அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.

2006 : தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

2017 : மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 370 பேர் உயிரிழந்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

`கொலம்பியாவில் பிறந்த சிலந்தி குரங்கு!’ - கொண்டாடும் உயிரியல் பூங்கா

 

சிலந்தி குரங்கு

Photo : Tweeted by @ZooSantaFe

கொலம்பியா நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் அழிந்துவரும் அரிய விலங்கான சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. சிலந்தி குரங்குக் குட்டியின் பிறப்பை அந்த உயிரியல் பூங்கா கொண்டாடி வருகிறது. 

 

 

கொலம்பியாவின் மேடெல்லின் (Medellin) நகரத்தில் உள்ள சான் ஃபூ விலங்கியல் பூங்காவில் (San Fe zoological park ) கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. உயிரியல் பூங்காவின் ஊழியர் கரோலினா டயஸ் (Carolina Diaz) கூறுகையில், ``அந்தக் குட்டி ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. தாயையும் குட்டியையும் பிரிக்காமல் இருப்பதால் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை" என்றார். கறுப்பு நிற முடியுடன் பிறந்துள்ள சிலந்தி குரங்கு ஏறக்குறைய ஒரு கிலோ எடையும் 20 செ.மீ உயரமும் கொண்டிருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து இதுவரை மூன்றாவது சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. 

 

 

தற்போது சான் ஃபூ உயிரியல் பூங்காவில் 20 சிலந்தி குரங்குகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப மண்டல மலைக்காடுகள்தான் சிலந்தி குரங்குகளின் இயற்கையான வாழ்விடம். உலகிலேயே அதிகமாக அழிந்துவரும் 25 அரிய விலங்கினங்களில் ஒன்றாக உள்ளது சிலந்தி குரங்கு. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமும் இதைக் கூறியுள்ளது. விவசாயத்துக்காகவும் தொழிற்வளர்ச்சிக்காவும் காடுகள் அழிக்கப்படுவதும் வேட்டையாடப்படுவதும் கடத்தலும் சிலந்தி குரங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. அதனால் சிலந்தி குரங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியை சான் ஃபூ உயிரியல் பூங்கா செய்து வருகிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

13,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான ஆலை கண்டுபிடிப்பு

 

இஸ்ரேலில் வரலாற்றுக்கு முந்திய காலக்குகையொன்றிலிருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான ஆலையை கண்டறிந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

esral3.jpg

குறித்த குகைப் பகுதியில் நடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்களின் இறந்த உடல்களை அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருக்கும்போதே இந்த மதுபான ஆலையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக  ஆய்வுக்குழுவை தலைமை தாங்கி வழிநடத்திய ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவிக்கையில்,

உலகிலேயே மனிதர்கள் தயாரித்த மிக பழமையான சாராயத்தை இந்த கண்டுபிடிப்பு பதிவு செய்துள்ளது.

பழைய கற்காலம் முதல் புதிய கற்காலத்திற்கு இடையில் வாழ்ந்த நாத்தூஃபியன் கால மக்கள் எந்த தாவரங்களின் உணவுகளை உண்டு வந்தார்கள் என்பதற்கான தரவுகளை ஆராய்ந்ததாகவும், கோதுமை மற்றும் பார்லியை கொண்டு தாயரிக்கப்பட்ட சாராயத்தின் சுவடுகளை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குகையின் தரையில் 60 சென்றி மீற்றர் ஆழமுடையதாக செய்யப்பட்டிருந்த கல்லால் ஆன கலவைக் குழிகளில் இந்த சுவடுகள் தென்பட்டதடாகவும் ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சணல் போன்ற இழை நார்கள் உள்பட பல்வேறு செடி வகைகளை சேமிக்கவும், தூளாக்கவும் இந்த குழிகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

esral1.jpg

esral.jpg

அத்துடன் கஞ்சி, அல்லது கூழ் போன்று இருக்கும் அக் காலத்து மது நாம் இன்று அறிந்திருக்கும் பியரிலிருந்து வேறுட்டதெனவும் தாங்கள் கண்டறிந்த எச்சத்தோடு ஒப்பிடும் வகையில், முற்கால மது தயாரிக்கும் முறையை உருவாக்கி செய்து காட்டியதில் இந்த ஆய்வுக் குழு வெற்றிபெற்றுள்ளது.

முதலில் தானியத்தை மாவாக்கி, பின்னர் வெந்நீர் மாவு குழையலை ஈஸ்ட் கொண்டு புளிக்க செய்வதன் மூலம் அவர்கள் இதனை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/

 

Link to comment
Share on other sites

 

நீண்ட காலம் வாழ வேண்டுமா?

வயோதிகத்தை வென்று நீண்ட காலம் வாழவும், ஆரோக்கியமாக இருக்கவும் ஒரு புதிய ரகசியத்தை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். ஆம். இளம் வயதினரின் ரத்தம் வயது முதிர்வால் வரும் டிமென்ஷியா, புற்றுநோய் மற்றும் இதய நோயை தடுக்கும் என லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

உலகில் எளிமையாக வாழத்தகுந்த 5 நகரங்கள் இவைதான்

5 நகரங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நம் சொந்த ஊரை விட்டு உலகில் வேறு எந்த நகரத்திற்கு சென்று வாழ வேண்டும் என்றாலும் அது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால், இந்த 5 நகரங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையை எளிமையானதாக்கும்.

எளிமையாக வாழத்தகுந்த நகரங்களை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பொருளாதார நிபுணர் பிரிவு பட்டியலாக வெளியிடும். பாதுகாப்பு, சுகாதாரம், உணவு மற்றும் குடிநீரின் தரம், கல்வி மற்றும் சாலை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஹோனலூலு, அமெரிக்கா

ஹவாயின் தலைநகரமான ஹோனலூலு மிக எளிமையாக மக்கள் வாழக்கூடிய நகரம் என்று இதில் முதலிடம் பிடித்துள்ளது. காரணம் தரமான கல்வி மற்றும் கலாசாரம்.

ஹோனலூலு, அமெரிக்கா

 

ஹோனலூலு, அமெரிக்கா

"நகர்ப்புறங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை அரசாங்கம், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்" என்கிறார் ஹவாயில் வாழும் ஹாவர்ட் ஹூக்ஸ் கார்பரேஷனின் துணைத் தலைவரான டாட் அபோ. "இந்த தனித்தீவில் அனைத்து விஷயங்களும் சரியான இடங்களில் உள்ளன. இந்த நிலைமைக்கு கொண்டுவர மக்கள் நீண்ட காலம் கடுமையாக உழைத்துள்ளனர்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து குடியேறிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். அனைத்து மக்களையும், அனைத்து கலாசாரங்களையும் வரவேற்கும் இடம்தான் ஹோனலூலு.

புடாபெஸ்ட், ஹங்கேரி

கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் அண்டை நாடுகள் அபிவிருத்தி என புடாபெஸ்ட் பெரிதும் வளர்ந்துள்ளது.

புடாபெஸ்ட், ஹங்கேரி

 

புடாபெஸ்ட், ஹங்கேரி

"நான் எட்டு ஆண்டுகளாக புடாபெஸ்டில் இருந்து வருகிறேன். இந்த நகரம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது" என்கிறார் 'தி ஸ்பாயில்டு குயின்' பத்திரிகையின் விக்டோரியா ஸ்கிபா. "நிறைய சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் 24 மணி நேர பேருந்து மற்றும் ட்ராம் வசதி என நகரின் பல்வேறு பகுதிகள் புற்றுணர்ச்சி பெற்ற மாதிரி உள்ளன".

5-ம் நூற்றாண்டில் இருந்து வைன் தயாரிக்கும் இடமாக இருந்த ஹங்கேரியில், தற்போது பீர் தயாரிப்பு, தெருவோர உணவகங்கள், காபி கடைகள் என பல்வேறு காட்சிகளை காண முடிகிறது. பல சர்வதேச நிறுவனங்கள் இங்கு கால் பதிக்க நினைக்கும் நிலையில், அந்நாட்டு மொழி பேசத் தெரியாதவர்களுக்கு கூட வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

"அதிகளவிலான பீர் கடைகள் இருப்பதினால், குறைந்த விலையில் பீர் கிடைக்கிறது. நகரம் முழுவதும் சுற்றுலாவாசிகள் நிறைந்துள்ளனர்" என்று கூறும் ஸ்கிபா இதனால் வாடகை உள்ளிட்ட பிற செலவினங்கள் உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.

குவைத் நகரம், குவைத்

சௌதி அரேபியா, இரான் மற்றும் பாரசீகத்துக்கு இடையே இருக்கும் குவைத் நகரம் சர்வதேச வணிகத்தின் முக்கிய இடமாக திகழ்கிறது. தினசரி வாழ்க்கையில் சர்வதேச நிலவரத்தின் தாக்கம் தெரியும்.

குவைத் நகரம், குவைத்

 

குவைத் நகரம், குவைத்

எளிமையாக வாழ வழி என்ற வகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குவைத் நகரம், கலாசாரத்தை தாராளமாக்கவும் மேலும் பல வழிகளில் முன்னேறவும் முயற்சித்து வருகிறது.

"இங்கு வளர்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பொதுவெளியில் இசை கூடாது, திரையரங்கம், சினிமா போன்றவற்றில் பல்வேறு இறுக்கமான விதிகளை கொண்டிருந்த நகரம், தற்போது மாறி வருகிறது" என்கிறார் அங்கு வளர்ந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மல்டிமீடியா நிறுவனத்தின் நிறுவனரான ஆகிப் உஸ்மான்.

 

 

"நான் குவைத்தில் வளரும்போது இசை விழாக்கள் எல்லாம் கேள்விகூட பட்டதில்லை. என் வாழ்வில் இசை விழாக்களுக்கு சென்றதில்லை. நான் இந்தியாவில்தான் முதலில் அதை பார்த்தேன். ஆனால் இப்போது குவைத்தில் இசைத் திருவிழாக்கள் நடப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது."

ஆனாலும், குவைத் மக்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வெளிநாட்டினர் அங்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவருடன்தான் செய்ய வேண்டும். அதுவும் குவைத் நபருக்கு 51 சதவீதம் பங்குகள் சொந்தமாக அத்தொழிலில் இருக்க வேண்டும். விற்பனை வரி, வருமான வரி என எதுவும் இல்லாமல் பணி செய்ய இது நல்ல இடமாக இருப்பதோடு சேமிப்பும் சாத்தியம் என்கிறார் உஸ்மான்.

ஆக்லான்ட், நியூசிலாந்து

எளிமையாக வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் நியூசிலாந்தின் அக்லான்ட், கலாசாரப்பிரிவில் நல்ல முன்னேற்றம் அடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

"கலாசார செழிமையுடைய ஆக்லான்ட், இதில் மேலும் வளர்ந்து வருகிறது" என்கிறார் அங்கு பிறந்த கிறிஸ்டோஃபர் ஹில். இவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் ஆலோசகராக உள்ளார்.

ஆக்லான்ட், நியூசிலாந்து

 

ஆக்லான்ட், நியூசிலாந்து

பசிஃபிக், ஆசிய மற்றும் மேற்கத்திய கலாசாரங்கள் மட்டும் அல்லாது சமீபத்தில் தென் அமெரிக்க கலாசாரங்களின் தாக்கத்தால் பலதரப்பட்ட உணவகங்கள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சீன புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளும் அங்கு கொண்டாடப்படுகின்றன.

சுகாதாரம் மற்றும் கல்வியிலும் ஆக்லான்ட், முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் அரசு சேவைகளை விட தனியார் பள்ளிகள் மற்றும் சுகாதார சேவை நல்ல முடிவுகளை தருகின்றன என ஹில் தெரிவிக்கிறார்.

ஆனால், உள்கட்டமைப்பு விஷயத்தில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை உள்ளது. "சரியான திட்டமிடுதல் இல்லாமல் அமைக்கப்பட்ட ஆக்லான்டில், பொது போக்குவரத்து சேவை வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது"

எங்கு வாழ வேண்டும் என்ற முடிவை மக்கள் கவனமாக எடுக்க வேண்டும். கடற்கரைகளுக்கு அருகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

எனினும், ஆக்லாந்தில் குறைவான பணத்தில் வாழ முடியாது. வீட்டு வாடகை அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் இது நான்காவது இடத்தை பிடித்திருந்தது. வெளிநாட்டினர் இங்கு சொத்துகள் வாங்குவதை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

தாய்பெய், தைவான்

எளிமையாக வாழத்தகுந்த இடங்களின் பட்டியலில் ஐந்தாவதாக தாய்பெய் உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் நகராட்சிகள் முதலீடு செய்து வருவதால் நல்ல வளர்ச்சியை இந்நகரம் பெற்றுள்ளது. நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் மெட்ரோ ரயில் சேவை இணைக்கிறது.

தாய்பெய், தாய்வான்

 

தாய்பெய், தாய்வான்

குடியேறியவர்களுக்கும் நல்ல சுகாதார சேவை மற்றும் கல்வி கிடைக்கப் பெறுகிறது.

"சுகாதார சேவை மிகவும் நன்றாக உள்ளது. அதுவும் நான் கனடா நாட்டில் இருந்து வந்துள்ளேன்" என்று கூறுகிறார் கார்பரேட் ஆலோசகரான வாட்சன். "குடியேறியான எனக்கு இந்நாட்டு மக்கள் போலவே மருத்துவ அட்டை வழங்கப்படுகிறது. மேற்கத்திய மற்றும் சீன மருத்துவர்களைக் கூட அணுகலாம்" என்கிறார் அவர்.

இங்குள்ள கல்வி வாய்ப்புகளும் அதிகமே. அமெரிக்காவை சேர்ந்த ஜூடி கூறுகையில், தாம் மகளை ஒரு நல்ல மாண்டிசோரி பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், அங்கு குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுவதோடு, மேன்டிரின் மொழியும் கற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

"அதிக அளவிலான கூட்டம் உள்ள ஒரு ரயிலில் சென்றாலும், நீங்கள் ஒரு குழந்தை வைத்துள்ளதை பார்த்தால் அவர்கள் இருக்கையை உங்களுக்கு அளிப்பார்கள்" என்று ஜூட் கூறுகிறார்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

‘வாழ்க்கை வட்டி வழங்குவதல்ல’
 

image_b5c3a79875.jpgபுகழைத் தேட ஆலாய்ப் பறப்பவர்கள், அதற்காக எந்தவிதமான நற்செயல்களைச் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால், முறைகேடான செயல்களில் மாத்திரம் தீவிரமாக இருப்பார்கள்.

இன்று தங்களுக்கான புகழ் தேடல்களைப் பிறர் மூலம் செய்து வருகின்றனர். வாராவாரம் இவர்களது கழுத்தில் மாலை விழாவிட்டால், உறக்கமே வராது. இவர்களால் மாலை கட்டுபவர்கள்தான் நன்மையடைவார்கள். இந்த வெட்டிப் பந்தாவால் முழுமையான சந்தோசம் கிடைத்து விடுமா?

தானாகத் தேடிவராத புகழை, வலிந்து கவர எண்ணுவதே பிறர் இகழ்ச்சிக்குரியது அல்லவா?

வாழ்க்கையில் கிடைக்க வேண்டியன எல்லாமே கிடைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கான கால அவகாசத்தை விரும்புவதில்லை.

எமக்கான பங்கு கிடைக்க, நாம் உலகத்துக்கு என்ன வழங்குகின்றோம் என்பதைப் பொறுத்தது. இதுகூட வங்கி முறைமை போன்றதுதான். வங்கியில் பணத்தை வைப்புச் செய்யாமல், அதன்முலம் வரும் வட்டிப் பணத்தை எப்படி எடுக்க முடியும்?

ஆனால், வாழ்க்கை வட்டி வழங்குவதல்ல; புண்ணியங்களைச் செய்வதாகும். அது வழங்கும் வழங்கல்கள், பணம், புகழை விட மெலானது

Link to comment
Share on other sites

அன்னி பெசண்ட் அம்மையார் மரணம் அடைந்த நாள்: 20-9-1933

 
 
 
 
அன்னி பெசண்ட் அம்மையார் மரணம் அடைந்த நாள்: 20-9-1933
 
ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847-ம் ஆண்டில் பிறந்தார் அன்னி வுட். தந்தை வில்லியம் பைஜ் வுட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும்போது தந்தையை இழந்தார். தாயார் ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19-வது வயதில் 1867-ம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார்.

கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873-ல் பிரிந்து வாழ முடிவெடுத்தார். கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்கு கணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். யூமால் தூசியன் அமைப்பு என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். லிங்க் என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தி சீக்ரெட் டாக்ரைன் என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889-ம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக்கொண்டார். 1891-ல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893-ம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.

1893-ம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது. இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழ்ந்தார்.

அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிகையை 1913-ம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914-ம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

1907-ம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.

அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15-ம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது. டிசம்பர் 1917-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929-ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது.

காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்கவில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929-ல்  'பொதுநலவாய இந்தியா' என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார். தனது என்பத்தியோராவது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார்.

என்பத்தேழாம் வயதில் 1937-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் 'ஹப்பி வலி பாடசாலை'யை அமைத்தார்கள். இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்!

122_thumb.jpg

 

 

முருங்கை குச்சியை நட்டுவைத்தால் வளரும் என்பது அனைவருக்கும் தெரியும்; இதேபோல வேப்பம் குச்சியையும் நட்டு வளர்க்கலாம்.

பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்!
 

நாம் வசிக்கும் வீடாக இருந்தாலும், விவசாயம் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு மரங்கள் இருப்பதைப் பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதைப் பாதுகாத்து வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அந்த சவாலான விஷயங்கள்தாம் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கிவிடுகிறது. தோட்டத்தில் வளர்த்தால் ஆடு, மாடுகள் கடித்துவிடாமல் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். ஆடு, மாடு வராத இடமாக இருந்தால் வளரும்போது காற்றில் ஒடிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மர வகைகளில் முருங்கை என்று சொன்னாலே பலருக்கு அதிலிருந்து ஒரு குச்சியை வெட்டி தனியாக நடுவதுதான் ஒரு ஞாபகம் வரும். அதேபோல வெட்டி தனியாக நட்டால் வளர்கின்ற பல மரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் வேப்ப மரத்தில் இருக்கும் கிளையை வெட்டி தனியாக நடவு செய்து துளிர்க்கச் செய்திருக்கிறார் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த நடராஜன் என்ற இயற்கை விவசாயி. மேலும், வைக்கோல் மூலமாக அவற்றுக்கு பாதுகாப்பளிக்கும் முறையையும் கற்றுத்தருகிறார்.

மரம் - வைக்கோல்

காலை வேளையில் பண்ணை வேலைகளில் ஈடுபட்டிருந்த நடராஜனைச் சந்தித்துப் பேசினோம். "நான் கடந்த 5 வருஷமா இயற்கை விவசாயம் செய்துக்கிட்டு வர்றேன். அதனால இயற்கை சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்ல அதிகமா கலந்துக்குவேன். முக்கியமா பசுமை விகடன்ல வர்ற 60 சதவிகிதம் பேரையாவது நேர்ல பார்த்திருப்பேன். அப்படித்தான் எனக்கு திருநெல்வேலி சோலைவனம் பண்ணை அறிமுகமாச்சு. அங்க முருங்கை தவிர மத்த மரங்களை வெட்டி எப்படி நடணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. பயிற்சி எடுத்துக்கிட்டாலும், மரங்களை வெட்டி நட்டது இல்லை. என் வயல்ல நெல்லுதான் எப்பவுமே பிரதான பயிர். நெல்லுக்கு வயல் தயார் செய்யுறப்போ வயல் ஓரமா இருந்த ரெண்டு வேப்ப மரத்துல கிளைகளைக் கவாத்து செஞ்சு வயல்ல மட்குறதுக்குப் போட்டேன். அப்போ மரக்கிளை குச்சிகள் மட்டும் மிச்சம் இருந்துச்சு. மூணு அடி உயரமா குச்சிகளை வெட்டி வயல் ஓரமா நடலாம்னு தோணிச்சு. 40 சென்ட்ல கத்தரி, தக்காளி, வெண்டைனு பல பயிர் சாகுபடி செய்திருக்கேன். அதனால் அந்த வயல் ஓரமா நடலாம்னு தோணுச்சு. இப்படி நடுற மரங்களுக்கு ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கணும். அதனாலதான் காய்கறி வயல் ஓரமா நடவு செய்ய முடிவு செஞ்சேன். ஒவ்வொரு குச்சியையும் மூணு அடிக்கு அளவு வச்சு வெட்டுனேன். அதில் சில குச்சிகள் நாலு அடி உயரத்துலேயும் நடவு செய்திருக்கேன்.

 

 

நடவு செய்யும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இல்லைனா குச்சிகள் வளராம போயிடும். வயல் ஓரமா ஓர் அடிக்கு குழி எடுக்கணும். அதுல கனஜீவாமிர்தம் ஒரு கைப்பிடியளவு, மாட்டு எரு இரண்டு கைப்பிடியளவு போடணும். அப்புறமா வேப்பங்குச்சியோட மறு முனையில மாட்டுச் சாணத்தை வச்சு மொழுகிடணும். கடைசியா வைக்கோலை கயிறா திரிச்சு குச்சியோட அடிப்பகுதியில இருந்து மேல் பகுதி வரைக்கும் சுற்றிவிடணும். அதேபோல சுற்றும்போது மேல் பகுதியில் கொஞ்சம் இடைவெளி விட்டு சுற்ற வேண்டும். அதிலிருந்துதான் முளைப்பு அதிகமாக வெளிப்படும் என்பதுதான் அதற்குக் காரணம். தினமும் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது வேப்பங்குச்சிகளுக்கும் பாயும். அதேபோல வாய்க்கால்ல இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து வைக்கோல் மேல ஊற்றணும். வைக்கோல் எப்பவுமே ஈரப்பதத்தோட இருக்குற மாதிரி கவனிச்சுக்கணும். வைக்கோலை வாடவிட்டா குச்சி முளைக்காம போயிடும். இப்படியே பராமரிச்சுக்கிட்டே வந்தா சரியா 25 நாள்ள இருந்து 30 நாடள்களுக்குள்ள துளிர்விட ஆரம்பிச்சிடும். 30 நாள்கள்ல நீங்க ஒரு கன்று வாங்கிட்டு வந்து நட்டால்கூட இவ்வளவு உயரம் வளருமாங்குறது தெரியலை. 30 நாள்ள 3, 4 அடிக்கு ஒரு மரத்தையே வளர்த்தெடுக்கலாம். மரம் வளர்க்குறதுக்கு முக்கியமான காரணம், அந்த மண்ணுல உயிர் இருக்கணும். அப்போதான் குச்சிகள் மரமாகும்" என்றார் நடராஜன்.

மரங்கள் - வைக்கோல்

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழைமையான கடம்பம் மரம் ஒன்றை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். திடீரென்று பட்டுப்போன அம்மரம், கடந்த சில நாள்களுக்கு முன்னர் உயிர்ப்பித்துள்ளது. பட்டுப்போன மரத்தின்மீது மாட்டுச்சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றைக் குழைத்துப் பூசியும் வைக்கோலைக் கயிறுபோலத் திரித்து மரத்தைச் சுற்றியும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். 

மரங்களை வளர்ப்பது தவிர, பட்டுப்போன மரங்களை வளர்க்கவும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது. மரங்கள் நாட்டுக்குத் தேவை என்கிற சூழலில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அவசியமான ஒன்றுதானே.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

உடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர்

டேயின் யோன் உடல் ஓவியங்கள், நமது கண்களையே நம்ப முடியாத அளவு மனதை கவரும் மாயத்தோற்றங்களை உருவாக்குகின்றன.

 

என் உடலில் ஓவியம் வரைந்தால், மேலும் நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என நினைக்கும் டேயின் யோன் பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

டக் அவுட்டான தோனி; கொந்தளித்த குட்டி ரசிகர்!- வைரலாகும் வீடியோ


 

 

asia-cup-dhoni-fans-reaction-goes-viral

 

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் தோனி டக் அவுட்டானதால் கொந்தளித்த குட்டி ரசிகரின் வீடியோதான் இணையத்தின் இப்போதைய சென்சேஷன்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் ஹாங்காங்வ்அணியை இந்திய அணி எதிர்கொண்டது. ஹாங்காங் பந்துவீச்சில் 285 ரன்கள் குவித்துவிட்டோம் என்று மிதப்பில் ஆடிய இந்திய அணியை போராடி ஜெயித்துக் கொள்ளுங்கள் என திணற வைத்தது ஹாங்காங்.

அதுவும் தோனி டக் அவுட் ஆக்கப்பட்டதுதான் இந்திய ரசிகர்களுக்கு ஹாங்காங் கொடுத்த பேரதிர்ச்சி.

அன்று போட்டியை இந்தியா வென்றிருந்தாலும் கிரிக்கெட் ஆர்வலர்களின் இதயங்களை ஹாங்காங் வென்றது.

அன்றைய தினம் போட்டியைக் காண பெவிலியனில் இருந்த குட்டி ரசிகர் ஒருவர் தோனி களத்துக்குள் வரும்போது துள்ளிக்குதித்ததும் அதே ரசிகர், தோனி வெளியேறும்போது கொந்தளித்ததும் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் இன்றி வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதைப் பார்த்து ஏமாற்றம் அடைந்த சிறுவன் மைதானத்தில் இருந்த இருக்கை மீது தனது ஆத்திரத்தை காட்ட அவரை அவரது தாயார் ஆசுவாசப்படுத்துவார்.

1537425894.jpg

அந்தக் காட்சியை பார்த்த வர்ணனையாளர்களும்கூட அசந்து போய்.. இந்த சிறுவனின் ரியாக்‌ஷனைப் பாருங்களேன் எனப் பேசிக் கொண்டனர்.

வீடியோவைக் காண: https://twitter.com/TrendsDhoni/status/1042351644275400704

 

 

 

dhoni-p.jpg

 

boy-r-2.jpg

 

 

Link to comment
Share on other sites

 

பிரிட்டன் நாட்டின் அளவுள்ள ஒரு பகுதியை காவல் காக்கும் “தனி ஒருவன்”

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நாட்டின் அளவுள்ள ஒரு பகுதி முழுவதையும் ஒரே ஆளாக ஸ்டீபன் பர்செல் மட்டுமே பாதுகாத்து வருகிறார்.

சிம்ப்சன் பாலைவனத்தை உள்ளடக்கிய இப்பகுதியை ஒரு முறை சுற்றி வர நான்கு நாட்களாகும்.

ஸ்டீபன் பர்செல் எவ்வாறு தனி நபராக போலீஸ் வேலை பார்க்கிறார் என்பதை விளக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

உலக அமைதி நாள் (செப்.21, 2002)

 
 
உலக அமைதி நாள் (செப்.21, 2002)
 
ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

• 1942 - மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.

• 1990 - மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

• 1995 - விநாயகரின் சிலைகள் பால் குடிக்கும் அதிசயம் உலகின் பல இடங்களில் இடம்பெற்றது.
 
 

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது : செப்.21, 2004

 
 
 
துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது : செப்.21, 2004
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p40a_1537366159.jpg

டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் பிளேயர் மாத்தியாஸ் போவைக் காதலிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டாப்ஸி. ‘‘காதல்தான் முக்கியம்; கல்யாணம் அல்ல. நான் எப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனோ, அப்போதுதான் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை, மாத்தியாஸோடு ஒன்றாக வாழ்வேன்’’ என்றும் கூறியிருக்கிறார். முடியாதுன்னு சொல்ல முடியலையே!


டந்த சில ஆண்டுகளாக சூப்பர்மேனாக நடித்துவரும் ஹென்றி கேவில் இனி அந்தப் பாத்திரத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார் எனப் பரபரக்கிறது ஹாலிவுட். டிசி நிறுவனத்துடன் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பத்தால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ இனியொரு முறை ஹென்றியை `மேன் ஆப் ஸ்டீலாகப்’ பார்க்க முடியாது. சூப்பர் மேன் ஹென்றி கேவில் மட்டுமல்ல, பேட்மேனாக நடித்துவரும் பென் அஃப்லெக்கும் ஒப்பந்தங்களை முடித்துக்கொள்ளப்போகிறார் என்கிறார்கள். பைபை சூப்பர்மேன்!


p40b_1537366182.jpg

சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் ‘நியான் ரன்’ ரொம்பவே ஃபேமஸ். இந்த ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி நியான் ரன் நடக்கவிருக்கிறது. இரவு நேர சென்னைச் சாலைகளில் நியான் விளக்கொளியில் ஃப்ளோரசென்ட் டிஷர்ட்டில் மூன்று கிலோமீட்டர் ஓட வேண்டும். ஓடி முடித்ததும் டிஜே நைட்டில் ஜூம்பா டான்ஸ் ஆடி ஆட்டம் பாட்டத்தோடு முடிகிற செம ஜாலியான ஓட்டம் இது. இதில் கலந்துகொள்ள https://www.eventjini.com/mirchineonrun2018 என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  ஓடி ஓடி உழைக்கணும்...


p40c_1537366203.jpg

24 ஆண்டுகளுக்கு முன்பு தேசத்துரோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர் நம்பி நாராயணன். தான் நிரபராதி என இத்தனை ஆண்டுக்காலமாகப் போராடி இப்போதுதான் உச்ச நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது போடப்பட்ட வழக்கு அநாவசியமானது எனக் கேரள அரசைக் கோபமாகச் சாடியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கூடவே கேரள அரசு 50 லட்ச ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது. தாமத நீதி


p40d_1537366262.jpg

ரீம் அசிர் ஆப்கானிஸ்தானின் சார்லி சாப்ளின் என அழைக்கப்படுபவர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளைச் சிரிக்கவைப்பதுதான் கரீமின் ஒரே வேலை. கலை நிகழ்ச்சிகளுக்கு தாலிபான்கள் தடைவிதித்திருந்த காலகட்டத்திலும் அவர் விடாமல் ஸ்டாண்ட் அப் காமெடிகள் செய்துகொண்டிருந்தார். இப்போதும் அவருக்கு தாலிபான்களால் அச்சுறுத்தல் இருந்தாலும், தொடர்ந்து ஆப்கன் மக்களைத் தன் காமெடிகளால் மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார். ‘மக்கள் புன்னகைக்க ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் லட்சியம்’ என்கிறார் கரீம்.  புன்னகை மன்னன்


p40e_1537366288.jpg

ஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட்டே ஆகவேண்டும் என அஜித்குமார் விரும்புகிறாராம். அதனால் அடுத்த முப்பது நாள்களில் சூட்டிங்கை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் இறங்கவிருக்கிறது படக்குழு. படத்தில் அஜித்குமார் மதுரை ஸ்லாங் பேசவிருக்கிறாராம். அதற்காக அதைத் துல்லியமாகப் பேச வேண்டும் எனத் தீவிரப் பயிற்சியும் எடுத்துக்கொண்டாராம். தாரை தப்பட்டை கிழியப்போகுது!


p40f_1537366310.jpg

ஸ்பெயினில் நடந்த உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பாட்டி மன் கவுர் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு வயது 102! பஞ்சாபின் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் இந்தப் பாட்டி. தன் 93வது வயதிலிருந்துதான் விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபட ஆரம்பித்தவர் சென்ற ஆண்டுகூட நியூஸிலாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். ஆசம் ஆசம்


p40g_1537366330.jpg

மீபத்தில் அனுஷ்கா சர்மா மற்றும் வருண் தவான் நடிப்பில் வெளியாகவுள்ள `சுயி தாகா’ படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியானது. அந்த டிரெய்லரில் அனுஷ்கா சர்மா ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி இணையத்தில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. மீம் பாய்ஸ் விதவிதமாக அதைக் கேலி செய்திருந்தனர். ஆனால், அனுஷ்காவோ இந்த வரம்பு மீறிய கேலி, கிண்டல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், `இந்தியன் ஐடல்’ எனும் நிகழ்ச்சியில் அதே ஆனந்தக்கண்ணீர் ரியாக்‌ஷனைச் செய்துகாட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.  அப்படிப் போடு அனுஷ்கா

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்!

3277_thumb.jpg
 

இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான்.

ரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்!
 

`ஜீன்ஸ்னா லீவைஸ், டீ-ஷர்ட்டுனா டாமி ஹில்ஃபிகர், ஷூனா நைகீ' இப்படி நாம் அன்றாட உபயோகிக்கும் உடை, இணை ஆபரணங்கள் பிராண்டுகளின் மீதுள்ள 'லவ்' கண்மூடித்தனமானவை. அதிலும் பெண்கள் உள்ளாடை நிறுவனமான, 'விக்டோரியாஸ் சீக்ரெட்டின்' (Victoria's Secret) மீது உலகளவில் இருக்கும் காதல், வேற லெவல். உள்ளாடைகள்தான், ஆனால், உலகளவில் ஏன் இவ்வளவு க்ரேஸ்? அப்படி அதில் என்ன சீக்ரெட், யார் அந்த விக்டோரியா, 'விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ'வுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு? பார்ப்போம்...

விக்டோரியா சீக்ரெட்

வரலாறு

 

 

உலகின் மாபெரும் உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த ராய் ரேமண்ட். தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கச் சென்றபோது, ராய்க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இப்படியொரு நிறுவனத்தை உருவாக்கத் தூண்டியது. மிகவும் சுமாரான நைட்வேர் (Night Wear), பளீரென ஒளிரும் மின் விளக்குகள், வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் அங்கிருக்கும் விற்பனை பெண், ராயை பார்த்த பார்வை அனைத்தும் ரேமண்டுக்கு அசௌகரியமான அனுபவத்தைத் தந்தது. இந்த அனுபவமே, எட்டு வருடங்களுக்குப் பிறகு 'விக்டோரியாஸ் சீக்ரெட்' எனும் மாபெரும் ஸ்டோரை உருவாக்கியது. இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான். உள்ளாடை அணிபவர்கள் எதுபோன்ற டிசைன்களை விரும்புகிறார்கள், விலை பட்டியல் எப்படியிருக்கலாம் என்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து, தன் மனைவியோடு இணைந்து 1977-ம் ஆண்டு, முதல் விக்டோரியா சீக்ரெட் ஸ்டோரை திறந்தனர்.

யாரு அந்த விக்டோரியா?

வரலாற்றிலேயே கவுன், எம்ப்ராய்டரி ஆடைகள் என விதவிதமான உடைகளை முதல்முதலில் உடுத்தி 'ஆடை புரட்சி' செய்தது, 'விக்டோரியன் சகாப்தம் (Victorian Era)'. 'அவர்களின் ரகசியத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கும்!' என்று எண்ணியே அவரின் பெயரை வைத்துள்ளனர், இல்லை இல்லை பயன்படுத்திக்கொண்டனர் ராய் மற்றும் அவரின் மனைவி கேயி. அதற்கேற்ப, அவர்களின் ஸ்டோரையும் Dark Wood தரை, ஓரியன்டல் விரிப்புகள், வெல்வெட் திரைச்சீலைகள் போன்ற விக்டோரியன் சகாப்த தனியறை செட்-அப்களுடன் வடிவமைத்தனர். என்ன ஒரு வில்லத்தனம்!

Stitching unit

சீக்ரெட்

மற்ற பிறாண்டுகளைப்போல் இல்லாமல், இவர்களின் உள்ளாடைகளைத் தரமான பட்டு மற்றும் இயற்கை ஃபைபர்களை கொண்டு தயாரிக்கிறார்கள். இதுவே, இவர்களின் தனித்தன்மைக்கு காரணம். பிறகு, விதவிதமான நிறங்களில், வெவ்வேறு வடிவங்களில் உள்ளாடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், அனைவராலும் வாங்க முடியாத நிலை உருவானது. அவ்வளவு காஸ்ட்லி! மார்க்கெட்டின் உச்சியில் இருந்த நிறுவனம் மெள்ள மெள்ள சரியவும் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரும் கடனிலும் மூழ்கிப்போனது. 

ஆனால், மனந்தளராத இவர்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை மறுபடியும் தேடிக்கொடுத்தது. ஸ்ட்ராப்லெஸ், ஆஃப் ஷோல்டர் போன்ற வடிவங்களோடு மீண்டும் ஃபேஷன் உலகில் கால்பதித்தனர். அன்றுவரை 'ஆடம்பர பிராண்டு' என்றிருந்த விக்டோரியா சீக்ரெட், விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு சாமான்ய மக்கள் வரை சென்றடைந்தது. இளைஞர்களைக்கூட அதிகமாகவே கவர்ந்தது. இவர்களின் மற்றுமொரு சீக்ரெட், விளம்பரங்கள். பெரும்பாலான விளம்பரங்கள், ஆண்களைக் கவரும் விதமாக இருக்கும். கடைகளில் விற்பனையாளர்களின் கனிவான கவனிப்பு திரும்பத்திரும்ப மக்களை வரச்செய்தது. இப்படி உள்ளாடைகள் வரலாற்றில் புரட்சி செய்தவர்கள் இவர்கள் மட்டுமே!

ஃபேஷன் ஷோவும் தேவதைகளும்

ராயின் பிசினஸ் பார்ட்னரான வெக்ஸ்னர், விக்டோரியா சீக்ரெட்டுக்கென அடையாள முகத்தை உருவாக்க நினைத்தார். அதற்காகக் கற்பனை கதை ஒன்றைத் தயார்செய்து, அதற்கான 'தேவதை' அதாவது மாடல் முகத்தை மக்களிடம் பதிய செய்தார். இதுவே நாளடைவில் மாபெரும் ஃபேஷன் ரன்வேவாக மாறியது. சுமார் இருபது மில்லியன் மக்கள் பார்க்கும் ஒரே ஃபேஷன் ஷோ இதுதான். இதற்கான மேடை, ஒளி விளக்குகள், மாதிரிகளை தேர்ந்தெடுப்பது முதல் ஃபேன்டஸி (Fantasy) உள்ளாடைகள் வடிவமைப்பது வரை, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காலநேரம், ஒரு முழு ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் வைரம் முதலிய ரத்தினக் கற்கள் பதித்த, 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உள்ளாடையை இந்த ஃபேஷன் ஷோவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 'தேவதை' அணிந்து வருவது வழக்கம். இதுவே இந்நிகழ்ச்சியின் ஹைலைட். இதற்காக மாடல்களுள் பெரிய போட்டியே வரும். இந்த விக்டோரியா சீக்ரெட் ரன்வேயில் அதிகமுறை பூனைநடையிட்ட தேவதை, பிரேசிலைச் சேர்ந்த அட்ரியானா லீமா.

அட்ரியானா லீமா

சின்ன நோக்கத்தில் மிகவும் சிறியதாய் தொடங்கிய இந்த ஸ்டோர், தற்போது உலகளவில் சுமார் 1,000 கடைகளைக்

 

கொண்டிருக்கின்றன. அதுவும் எல்லாம் டாப் க்ளாஸ்! இதன் ஸ்டிச்சிங் யூனிட் இந்தியாவிலும் உள்ளது!

https://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...! #HBDGayle #UniversalBoss

 

எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...!  #HBDGayle #UniversalBoss
 

வம்பர் 13, 2012. வங்கதேச - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் பந்து. பொதுவாக டி-20 போட்டியாக இருந்தாலும், முதல் ஓவரை பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவே எதிர்கொள்வார்கள். ஆனால், அந்தப் பந்து 90 மீட்டர்கள் தாண்டிப் போய் விழுந்தது. டெஸ்ட் போட்டியில் இப்படியொரு தொடக்கமா. களத்தில் நிற்பது கிறிஸ் கெய்ல் எனும் அரக்கனாக இருந்தால் இது சாத்தியமே. சேவாக் பத்துப் பந்துகளுக்கு ஒரு முறை காட்டும் அதிரடியை இவர் அனைத்துப் பந்துகளிலும் காட்டத் தொடங்கினார். ஜாம்பவான்கள் விவ் ரிச்ர்ட்ஸ், ப்ரையன் லாரா க்ளாசிக் ஷாட்கள் மூலம் கவனம் ஈர்த்தனர் எனில், தன் மேஸ்ஸிவ் ஷாட்களால் சிலிர்க்க வைத்தார் இந்த யுனிவர்சல் பாஸ். இந்தியா விளையாடும் டெஸ்ட்டையே பார்க்க யோசிக்கும் காலத்தில் வெஸ்ட் இண்டிஸின் டெஸ்ட் போட்டிகளையும் பார்க்க வைத்தவர் கெய்ல். #HBDGayle

Gayle

டெஸ்ட் போட்டிகளிலேயே இந்தக் காட்டு காட்டும் இவர் ஒரு நாள் போட்டிகளில் சும்மா இருப்பாரா. தனது ஆரம்பகாலங்களிலேயே அசால்ட்டாக பேட்டைச் சுழற்றி ஆஸ்திரேலியாவையே கதிகலங்க வைத்தார். 2004 மற்றும் 2006 சாம்பின்ஸ் டிராபியின் போது அசுர ஆட்டத்தினால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த, இவர் கிரிக்கெட்டின் விதிமுறைகள் நுணுக்கங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்.

 

 

ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என்று தனக்குப் பரிட்சயமில்லாததை என்றும் இவர் செயல்படுத்தியதே இல்லை. இவரின் 6.4 அடி உயரத்தைப் போலவே இவரின் ரன்களும் ஆறு நான்குகளிலேயேதான் இருக்கும். இவரின் மொத்த ரன்களில் 55 சதவிகிதத்துக்கு மேல் பௌண்டரிகளால் மட்டுமே எடுத்தவை. சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ஓடி ஓடி ரன் எடுப்பது இவருக்குப் பிடிக்காத செயல்.

வேகமாக வரும் பந்தின் வேகம் குறையாமலும், வேகம் குறைந்து வரும் பந்துகளின் வேகத்தைக் கூட்டியும் அவுட் ஆஃப் ஸ்டேடியம் ஆக்குவதுதான் இவரின் ஆல் டைம் அஜெண்டா. இவர் அடித்த சிக்சர்கள் கேலரியில் இருக்கும் பல ரசிகர்கள் முகத்தைப் பதம் பார்த்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஒரு இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள், டி20ல் அதிக சிக்ஸர்கள், அதிக செஞ்சுரிகள் என எண்ணிலடங்கா சாதனைகளைச் சுமந்து கொண்டே திரிகிறார்.

சர்வதேசப் போட்டிகள் மட்டுமன்றி உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கெய்லின் ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது. 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டியில் 3 வருடங்கள் இருந்த இடம் தெரியாமல் கொல்கத்தா அணியில் இவர் இருக்க, ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு ஆளானார். அடுத்த அத்தியாயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் ஐந்து சதங்களோடு ஐ.பி.எல் தொடரை தனது ராஜாங்கமாக்கிக் கொண்டார். அதிலும், புனே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் இவர் ஆடிய ரணகள ஆட்டம் இன்னும் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் ஓர் உள்ளூர் ஆட்டத்தை உலக ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்காக்கியது இந்த கெய்ல் ஃபேக்டர்.

ஐ.பி.எல் மட்டுமல்லாது வங்கதேச ப்ரீமியர் லீக்கையும் இவர் விட்டுவைக்கவில்லை. BPL-ல் மொத்தமாக 500 பார்வையாளர்கள் இருந்தாலே ஆச்சர்யம். ஆனால், இவரின் வருகைக்குப் பிறகு கிட்டத்தட்ட 5,000 ரசிகர்களைக் கொண்டு அரங்கமே நிரம்பி வழிந்தது. ராங்க்பூர் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்து தன் சாதனையைத் தானே முறியடித்தார். இது, தோல்வியையும் குறைந்தபட்ச ரன்களையும் மட்டுமே கண்ட வங்கதேச உள்ளூர் ரசிகர்களுக்கு, இவரது அதிரடி ஆட்டம் வெகுவாகக் கவர்ந்தது. 

கிறிஸ் கெய்ல்

வெளியூரிலேயே இப்படியென்றால் உள்ளூரில் கேட்க வேண்டுமா. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன் குவித்தவர் கெய்ல்தான். ஜமைக்கா, கிட்ஸ் அண்ட் நேவிஸ் என இவரின் டீம்கள் மாறிக் கொண்டே இருந்தபோதும் இவரின் யுக்தி ஒன்றுதான்... அது அதிரடி. முக்கியமாக, கெய்ல் போன்ற அதிரடி பேட்ஸ்மென்கள், எப்போதும் கிரீஸைவிட்டு இரண்டு அடி இறங்கியே நிற்பார்கள். இது முன்னணி பவுலர்களையே சற்று தடுமாற செய்துவிடும். லைன் பிடிப்பதே சிரம்மான ஒன்றாகிவிடும். புது பவுலர் என்றால் கேட்கவே வேண்டாம். இவ்வகை அதிரடி பேட்ஸ்மேன்கள், மற்ற பேட்ஸ்மேன்கள்போல இல்லாமல் பந்தைத் தேடி போய் விளாசும் குணம் கொண்டவர்கள். இதனால் பவுலர்களுக்கு அவ்வளவு எளிதில் கான்ஃபிடன்ஸும் கிடைக்காது. கிரிக்கெட்டை திருவிழாவாகப் பார்க்கும் கரீபிய மக்களிடையே இவரின் அணுகுமுறை கொண்டாட்டம் கலந்ததாக இருக்கும். ஒவ்வொரு வெற்றியின்போதும் சிக்ஸ் பேக் தெரியக் கொண்டாடுவது, தன் ரசிகர்களைக் களத்துக்கே அழைத்து அவர்களோடு கங்கம் ஸ்டைலில் ஆடுவது எனக் கொண்டாடிக் களிப்பார் இந்தக் கரீபியன் கிங்.

எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். களத்தில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் மக்களின் மனதை வென்றவராகவே இருக்கிறார். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில், தான் அடித்த சிக்ஸர் ஒரு சிறுமியின் மீது பட்டு காயம் ஏற்பட்டது. மேட்ச் முடிந்த உடன் சிறுமியை நலம் விசாரித்து தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதையும் அளித்தார். 

தங்கள் நாட்டு வீரர்களுக்கு நிகராக கிறிஸ் கெய்லைக் கொண்டாடும் ரசிகர்கள்தாம் இவரின் ஆட்டத்துக்கான அங்கீகாரம். 2019 உலகக் கோப்பையோடு தன் ஓய்வை அறிவித்திருக்கும் இந்தச் சூறாவளியின் சாதனைகள், கிரிக்கெட் சரித்திரத்தின் தவிர்க்க முடியாத பக்கங்கள்.

https://www.vikatan.com

 

 

Link to comment
Share on other sites

எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் (செப்.22, 1914)

 
 
 
 
எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் (செப்.22, 1914)
 
எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற ஜெர்மனிய கடற்படையின் விசித்திர போர்க் கப்பல் 1914 ஆகஸ்ட் இறுதியில் சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டு துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.

1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

என்னடா இது நேஷனல் க்ரஷுக்கு வந்த சோதனை! - ஒரு அடார் லவ்' படத்தின் 'Freak பெண்ணே' ராப் பாடல் #FreakPenne

3277_thumb.jpg
 

தினமும் ட்ரெண்டிங் தலைப்புகளுக்குக் குறைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள். அதில் இப்போ லேட்டஸ்ட், அதிக 'டிஸ்லைக்குகளை'ப் பெற்று ட்ரெண்டாகியிருப்பது, 'ஒரு அதார் லவ்' படத்தின் 'Freak பெண்ணே' ராப் பாடல்.

ஒரு அதார் லவ்

'ஒரே ஒரு கண்சிமிட்டல்தான், டோட்டல் இந்தியாவும் க்ளோஸ்'. அவரேதான்! சின்ன கண்சிமிட்டலால் ஒரே நாளில் பலகோடி ரசிகர்களைத் தன்வசமாக்கிய பிரியா பிரகாஷ் வாரியரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஓமர் லூலூ இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தில், 'மாணிக்க மலராயி பூவி' எனும் பாடல், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. அதில் வரும் சின்ன போர்ஷனில் பிரியா வாரியர் நடித்திருக்கும் அந்தக் கண்சிமிட்டல், பலரை ரசிக்க வைத்தது. 'வாவ்! வாட் எ விங்க் (கண்சிமிட்டல்)!' என்று ஒருபக்கம் 'ஆர்மி' பக்கங்கள் பிஸியாகிக்கொண்டிருக்க, 'இதுல என்ன பிரமாதம் இருக்கு? ஏன் இப்படி எல்லாரும் இதை ட்ரெண்டாக்குறீங்க...' என மறுபக்கம் அனல்பறக்கும் விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. FIR பதிவுகளும் உண்டு!.

 

 

ஒரே நாளில் பல லட்சம் 'லைக்ஸை'க் குவித்து ட்ரெண்டான அதே படத்திலிருந்து தற்போது வெளியாகியிருக்கும் 'Freak பெண்ணே' ராப் பாடல், லைக்ஸை விட டிஸ்லைக்ஸை அதிகம் பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 'டிஸ்லைக்ஸ் ஆர்மி' ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்ற விவாதங்களும் போய்க்கொண்டிருக்கின்றன. இதற்குமுன், ஜஸ்ட்டின் பீபரின் 'பேபி' பாடல்தான் அதிக டிஸ்லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவும் தற்போது லைக்ஸ்களால் முறியடிக்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் இணைந்திருக்கிறது. இரண்டு 'thumb' பட்டன்களுக்கு இருக்கும் வித்தியாசம், சுமார் 2 லட்சத்து ஐம்பதாயிரம். அவ்வளவு மோசமாவா இருக்கு? பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பாடல் பிடிக்காததற்கு என்ன காரணமாக இருக்கும்!

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

எறும்பு கடி முதல் பாம்பு கடி வரை சிகிச்சை - லட்சுமிகுட்டி பாட்டியை தெரியுமா?

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் விஷ முறிவு வைத்தியராக நன்கு அறியப்படுபவர் லட்சுமிகுட்டி. பாரம்பரிய மருத்துவ பங்களிப்பிற்காக எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் லட்சுமிகுட்டி. குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 4வது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் இதில் அடக்கம்.

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : பறந்தபடி பறந்து பிடி…

 

 
paravaijpg

ஆங்கிலத்தில் ‘கிரீன் பீ ஈட்டர்’ (Green bee eater) என்று அழைக்கப்படும் இந்தப் பறவையைத் தமிழில், பச்சைப் பஞ்சுருட்டான் என்று  அழைக்கிறார்கள். இதன் உடல் சிறியதாக இருந்தாலும், வால் கம்பியைப் போல நீளமாக இருக்கும். குஞ்சுப் பறவைகளுக்கு வால் இருக்காது.

இந்தியா முழுக்கவும் இந்தப் பறவையைக் காண முடியும். குறிப்பாக நீர்நிலைகளில், அதிக அளவில் தென்படும். வட மாநிலங்களில், அடர் பச்சை நிறத்திலும், தென் மாநிலங்களில் இளம் பச்சை நிறத்திலும் என இந்தப் பறவைகளின் குடும்பத்தைச் சேர்ந்த, அதே நேரம், மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட சில பறவைகள் தென்படுகின்றன.

 
paravai%202jpg

இந்தப் பறவையினத்தை ‘ஏரியல் ஃபீடர்ஸ்’ (aerial feeders) என்கிறார்கள். காரணம், இவை இதர பறவைகளைப் போலத் தனது இரையைத் தேடிக்கொண்டிருக்கவோ, இரைக்காகக் காத்திருக்கவோ செய்யாது. பறந்துகொண்டிருக்கும்போதே சின்னச் சின்ன ஈக்கள், குளவிகள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை இவை.

பெயருக்கேற்றபடி, இவை பெரும்பாலும் தேனீக்களைத்தான் அதிகம் சாப்பிடும். அவற்றின் கொடுக்குகள் தன்னைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மரத்தில் அந்தத் தேனீக்களை அடித்து அடித்துச் சாப்பிடும். இரை கிடைத்தவுடன், அதை உடனே விழுங்கிவிடாமல், அதை மேலே தூக்கிப்போட்டு விழுங்கும்.

இவை வலசை செல்லும் பறவைகள் அல்ல. ஆனால், அதிக வெப்பம், அதிக மழைக்காலங்களில் உணவு தேடி சில நாட்களுக்கு மட்டும் வேறு பகுதிகளுக்குச் சென்றுவரும் தன்மை உடையவை.இதர பறவைகளைப் போன்று மரத்தில் கூடு கட்டாமல், மணற்பாங்கான இடங்களில் பொந்துகள் போன்ற வடிவமைப்பைச் செய்து, அதற்குள்தான் முட்டையிடும்.

டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தில்தான் முதன்முதலாக நான் இந்தப் பறவைகளைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் இரண்டு பஞ்சுருட்டான்கள் தலா ஒரு தும்பியைத் தங்கள் அலகுகளில் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த படம் எனக்கு எப்போதும் பிடித்த படம். அதிக முறை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய படமும் இதுதான்.

இன்னொரு படம், டெல்லியில் உள்ள பஸாய் சதுப்புநிலத்தில் பனி மூடிய இளங்காலைப் பொழுதில், பஞ்சுருட்டான் குஞ்சுப் பறவை ஒன்றை ‘க்ளோஸ் அப்’பில் படம் எடுத்தேன். படத்தைக் கூர்ந்து பார்த்தால், அந்தப் பறவை அமர்ந்திருக்கும் கிளைகளிலும் பனி, பஞ்சு போல் படர்ந்திருப்பதைக் காணலாம். இயற்கைதான் எவ்வளவு அழகு..?

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

 

p112d_1537375132.jpg

twitter.com/RaguC

செங்கிஸ்கான் என்ற பெயர் இப்போது உச்சரிக்கப்பட்டாலும் குலை நடுங்கும் கூட்டமுண்டு. பெரியார் பெயருக்கும் அப்படி ஒரு வரலாறு உண்டு. முன்னது வாள் கொண்டு சமைத்தது, பின்னது தன்மான உணர்வால் அமைந்தது. #HBDPeriyar140

twitter.com/manipmp

போனில் அழைத்தால் invite பண்றாங்க, வாட்ஸ் அப்பில் அனுப்பினால் inform செய்றாங்கன்னு அர்த்தம். #நவீனகால_அழைப்புகள்

twitter.com/mekalapugazh

தங்கள் துறையில் கடைசிவரையில் டொக் ஆகாதவர்கள் என்று... சுஜாதா வையும் கலைஞரையும் சொல்லலாம்.

p112a_1537375156.jpg

twitter.com/kumarfaculty

சாமியானாவிற்கு மகிழ்ச்சியும் துன்பமும் ஒன்றுதான்...!

twitter.com/gips_twitz

வெற்றிய விட பெருசா ஒண்ணு இருக்குனா... அது எதிரிகளுக்கு நாம கொடுக்குற நடுக்கம்..!

facebook.com/Umamahesh varan Panneerselvam

Profile picture மாத்துறோம்னா என்ன அர்த்தம்? ஆபீஸ்ல ஒருத்தன் கூலிங் கிளாஸ் எடுத்துக்கிட்டு வந்திருக்கான்னு அர்த்தம்...

twitter.com/gips_twitz

பேசினதை தைரியமா ஒப்புக்கிறதுக்கும் ஒரு நேர்மை வேணும். அதுதான் சோபியாவுக்கும் எச்.ராஜாவுக்கும் உள்ள வேறுபாடு...

twitter.com/Raittuvidu

இந்த வாரம் டேமேஜ் ஆனவர்கள்

1. சீமராஜா 2. ஹெச்.ராஜா

p112b_1537375183.jpg

twitter.com/Kozhiyaar

அப்பளம் வெச்சிட்டு, பக்கத்திலே மசால் வச்சாங்க. ‘அப்பளத்துக்கு எதுக்கு மசால் வைக்கிறே?’னு கேட்டதுதான் தாமதம் உள்ளேயிருந்து பூரிக் கட்டை வருது. ஓ, அது பூரியா?!

facebook.com/Mano Red

குத்துமதிப்பாகப் பேசுவதை இரட்டை அர்த்தமாக்கி மூன்றாவது அர்த்தத்தில் பதில் சொல்லப் பெண்களால் முடிகிறது. #கில்லேடிகள்

facebook.com/ Rajavel Nagarajan

வாழ்க்கையில ரொம்ப கஷ்டம், சோதனைனு ஃபீல் பண்றவனையெல்லாம், long week end சமயங்களில் ஆம்னி பஸ்ல ஏத்தி கோயம்பேடு டு பெருங்களத்தூர் வரைக்கும் கூட்டிட்டுப் போனாலே போதும். எவ்ளோ பெரிய சோதனையா இருந்தாலும் ஈஸியா கடந்திடுவாங்க!

twitter.com/periyardhasan7

பெரியார் எதை உயர்த்தினார் என்பவர்களுக்கு...இடுப்பில் இருந்த துண்டைத் தோளுக்கு உயர்த்தினார் அல்லவா?

facebook.com/பொம்மையா முருகன்

ஆண்டவர் ‘அகம் டிவி’ வழியா வரும்போது சிலர் கால்மேல கால் போட்டு ஒய்யாரமா ஒக்காந்திருந்தாங்க. அவர் எவ்ளோபெரிய ஆள்தெரியுமான்னு சினேகன் புலம்புறாரு. #நல்லவேளை நான் பெட்டுல படுத்துட்டுப் பாத்ததையெல்லாம் சினேகன் பாக்கலை.

p112c_1537375214.jpg

facebook.com/Saran Ram

நம் எதிரியின் முன் நின்று, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு!’ என பாட்ஷாவை வெளியே கொண்டுவர முற்படும்போதுதான், ‘மாணிக்கம்... இந்த மாசம் வட்டி இன்னும் வரலை!’ என வாசலில் நிற்கிறான் கந்துவட்டிக்காரன்!

twitter.com/Kannan_Twitz

‘ஏன்டா, சன்டே ஆனா இப்படி பேட்டைத் தூக்கிட்டு விளையாடக் கிளம்பிடுறியே, உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா?’னு அம்மா கேட்டுச்சு. ‘இதுமாதிரி சச்சினோட அம்மா...’னு ஆரம்பிச்சேன். உடனே, போய்த் தொலைடான்னிருச்சு!

twitter.com/IrfanIliyas

மூணு வயது மகள்கிட்ட பேசலாம்னு வீடியோ கால் பேசினேன். ‘அப்பா, உன்ன யாரு போனுக்குள்ள வெச்சது? வீட்டுக்கு வா’ன்னு கூப்பிடுகிறாள், நான் வெளிநாட்டில் இருப்பது தெரியாமல்.

twitter.com/vemalism

அப்பாவாவது ஒருதடவ திட்டிட்டு வேலைக்குப் போயிருவாரு. அம்மா அப்பப்ப வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி குத்துவாங்க #வேலையில்லா நாள்கள்!

சைபர் ஸ்பைடர் 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘மனம் கனத்தது’
 

image_50037a4692.jpgகலாபூஷணம் விருது வழங்கும் விழாவைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்தேன். சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர், சின்னப் பையனுடன் நின்றுகொண்டிருந்தார். 

மிகவும் பலவீனமான தோற்றத்துடன், கைகள் நடுங்கியபடி காணப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பதக்கம், கழுத்தில் மினுமினுத்தது. தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக்கூட, நழுவவிடும் நிலையிலேயே பிடித்திருந்தார். அவருடன் பேசியபோது, அவர் சகோதர இனத்தைச் சேர்ந்த கலைஞர் என்பதைப் புரிந்துகொண்டேன். 

அவிசாவளைக்குப் போவதாகச் சொன்னார். “சாப்பிட்டீர்களா”? என்று கேட்க, “ஆமாம், மண்டபத்தில் தந்தார்கள்” என்றார். அங்கு நிற்கும்போது, மணி எட்டு இருக்கும். அவர், இரவு உணவு உண்டாரா என்பது எனக்குத் தெரியாது. எத்தனை இலட்சம் கலா இரசிகர்களைக் கண்டிருப்பார். ஒருவராவது அவருக்குத் துணையாக வரவில்லையே? ஒன்றுமறியாத சிறுவனுடன் வந்திருந்தார். 

ஒருபடியாக பஸ் வந்தது. அவரை ஏற்றிவிட்டேன். இன்றைய, முதிய கலைஞர்கள் அநேகரின் நிலை இதுதான். மனம் கனத்தது.

Link to comment
Share on other sites

தாமரைக் கோயில்: உள்ளக் கிடக்கையின் கட்டிடம்

 

 
CapturePNG

நவீன இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடங்களுள் ஒன்று தாமரைக் கோயில். தலைநகர் டெல்லியில் உள்ள இந்தக் கோயில் பஹாய் சமயத்தின் வழிபாட்டுக் கூடம். தினமும் 10,000-க்கும் அதிகமானோர் இந்த வழிபாட்டுக் கூடத்துக்கு வருகின்றனர். உலக அளவில் அதிக மக்கள் பிரவேசித்த கட்டிடங்களின் பட்டியலில் இந்தக் கட்டிடமும் இடம்பெற்றுள்ளது.

வடிவமைப்பு

 

தியானத்தைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹால் போல் இந்தக் கட்டிடத்திலும் 27 மார்பிள் கற்களைக் கொண்டு தாமரை இதழ்களை வடிவமைத்துள்ளனர். பிரதானக் கூடத்தின் தரைத்தளம் மார்பிளால் ஆனதே. இந்தக் கட்டிடத்துக்கான மார்பிள், கிரேக்கத்தின் பெண்டலி மலையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரதான அறைக்கு 9 வாசல்கள் உண்டு. டெல்லியின் முதல் சூரிய மின்சக்திக் கட்டிடம் என்ற பெருமையும் இந்தக் கட்டிடத்துக்கு உண்டு. இந்தக் கட்டிடம் பயன்படுத்தும் 500 கிலோ வாட் மின் சக்தியில் 120 கிலோ வாட் இந்தக் கட்டிடத்தில் உள்ள சூரிய மின்சக்தித் தகடு மூலம் கிடைக்கப்பெறுகிறது.

இந்தத் தாமரைக் கட்டிடம் 230 அடி விட்டம் கொண்டது. கட்டிடத்தின் உயரம் 112 அடி. தோட்டத்துடன் சேர்த்து 26 ஏக்கரில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் வெளிப்பாட்டியல் (Expressionism) முறையில் கட்டப்பட்டது. ஃபரிபார்ஸ் ஷாபா என்னும் ஈரானியக் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. 1980-ல் தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணி 1986-ல் முடிவடைந்தது.

வெளிப்பாட்டியல் (Expressionism) கட்டிடக் கலை

20-ம் நூற்றாண்டில் கட்டிடக் கலை உள்பட கலைத் துறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு இது. 1910-24 ஆண்டுகளுக்கு இடையே இந்த முன்னெடுப்பு ஐரோப்பியக் கட்டிடக் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் அதுவரை புழக்கத்தில் இருந்த கட்டிட வடிவமைப்பிலிருந்து வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. முதலாம் உலகப் போர் விளைவித்த மாற்றங்களுள் இதுவும் ஒன்று எனக் கட்டிட வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். பாரம்பரிய ரீதியிலான வடிவமைப்பு தவிர்க்கப்பட்டது. சமச்சீரற்ற முறையில் வடிவமைக்கப்பட்டது. அரூபமான ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைப்பது இதன் பிரதான நோக்கம் எனலாம். தீவிரமான உணர்ச்சியில் இந்தக் கட்டிட முறை தோன்றியது. பஹாய் சமயத்தைப் பின்பற்றும் ஃபரிபார்ஸ் ஷாபாவும் இந்த அடிப்படையில்தான் தாமரைக் கோயிலை வடிவமைத்துள்ளார்.

ஃபரிபார்ஸ் ஷாபா

ஈரானைச் சேர்ந்த இவர், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கவின் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது கனடாவில் வசித்துவருகிறார். 1976-ல் இவர் சர்வதேச பஹாய் சமுதாய ஆட்சி மன்றத்தால் கட்டிட வடிவமைப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தாமரைக் கட்டிடம் மட்டுமல்லாது பஹாய் சமயத்தின் பல கட்டிடங்களையும் வடிவமைத்துள்ளார். இந்தத் தாமரைக் கட்டிட வடிவமைப்புக்காக இவர் கட்டுமான உலகின் கவனத்தைப் பெற்றார். அமெரிக்கக் கட்டுமானக் கழகம் உள்ளிட்ட உலகின் பல கட்டிடவியல் அமைப்புகளின் விருதுகளையும் இதன் மூலம் பெற்றுள்ளார்.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.