Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 20
 

article_1447990035-z.jpg1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.

1917: உக்ரைன் குடியரசாகியது.

1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.

1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும்   லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.

1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்திரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.

1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.

1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.

1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிலிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.

1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.

1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/159512/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.vXdi8FPp.dpuf

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12241032_944481302267231_336948205524464

சின்னக் குழந்தையாய் திரையில் பேபி ஷாலினியாகத் தோன்றி எங்கள் மனங்களை அள்ளி,
பின்னர் திரைவானின் புது மலராய் காதலுக்கு மரியாதை, அலைபாயுதேவில் அன்புடன் புகழ்கொண்டு அமர்க்களத்தில் ஆசை நாயகன் அஜித்தைக் கரம் கொண்டு திருமதி.ஷாலினி அஜித்குமார் என்ற பெயர்கொண்டு இன்னும் இனிதாய் அன்புக்கு உதாரணமாய் வாழும் ஷாலினிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

12239347_944454005603294_249986061165869


ஐக்கிய நாடுகள் UNICEF சர்வதேச சிறுவர் தினம் இன்று.
சிறுவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம்;
சிறுவர்களை சிறுவர்களாக வாழவிடுவோம்.

  • தொடங்கியவர்

இஸ்ரேல் நடிகரை கவர்ந்த நாகேஷ், கவுண்டமணி!

 

nagesh%202.jpgமதுரை: மதுரையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கு ஒன்றில் பேசிய இஸ்ரேல் நடிகர் கில் ஆலன்,  நாகேஷை தன் குரு என்றும், கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்றும் கூறி கலகலப்பூட்டினார்.

மதுரையில் சினிமா பற்றிய கருந்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு துணைத் தூதர் டவ்செகவ் ஸ்டீபன்பெர்க் மற்றும் அந்நாட்டின் பிரபல திரைப்பட நடிகர் கில் ஆலன் ஆகியோர் வந்தனர். மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் அவர்களை வரவேற்றார்.

பின்னர் துணைத் தூதர் டவ்செகவ் ஸ்டீபன்பெர்க் பேசுகையில், “பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் எனது கட்டுப்பாட்டில் கர்நாடகா, தமிழ்நாடு கேரள மாநிலங்களில் உள்ளன.

இஸ்ரேல் - இந்தியா இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கிறோம்.

வேளாண்மை நீரியியல் உட்பட பல்வேறு துறைகளில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாகவுள்ளது. அடித்தட்டு மக்கள் முதல் பெரும் வசதி வாய்ப்பு மிக்க மக்களையும் சந்தித்தோம். மிகவும் அருமையான புதுவித அனுபவங்கள் கிடைத்தன. தமிழக கலாச்சாரம் மிகவும் வித்தியாசமாக உள்ளது" என்றார்.

gil%20alen%20600%201.jpg

மாலையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய நடிகர் கில் ஆலன், “ இஸ்ரேலில் பிரபல நடிகராக இருந்தாலும் தமிழில் 'மொட்டை பாஸ்' என்று என் நண்பர்கள் தமிழில் பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். இருபது ஆண்டுகளுக்கு மேல் சென்னையில் கலாச்சாரம் தொடர்பான பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

நடிப்பு, இசை, கலாச்சாரம் என சினிமா சம்பத்தப்பட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தமிழில் விஜய் சேதுபதி, விமல் போன்ற பல நடிகர்கள் எனது மாணவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

gil%20alen%20600%202.jpg

மதுரை கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது. மதுரையில் இருந்து வந்த இளைய சமுதாயம் பல வெற்றி கண்டுள்ளது. வட்டார வழக்கு மற்றும் நடை உடை பாவனைகள் மதுரை முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இதை மிகவும் பெரிய வரமாக நினைக்கிறேன். எனக்கு தமிழ் சினிமாவில் நாகேஷை மிகவும் பிடிக்கும். அவரையே என் குருவாக நினைக்கிறேன். மேலும் எனக்கு கவுண்டமணியின் காமெடியும் பிடிக்கும்" என்றார்.

விழாவில் பேசிய இஸ்ரேல் துணைத்தூதர்,  தமிழ் சினிமாவை பார்த்து தமிழ்க் கற்று கொண்டுவருதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=55342

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுஸ்

  • தொடங்கியவர்

12248179_944487068933321_188656829063959

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டியோன் நாஷின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

12247665_1845002229059512_67286720226100

சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் மெரினா கடற்கரை தற்போது குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறி உள்ளது.

  • தொடங்கியவர்

மீண்டும் மேகி..! எப்படி இருக்கிறது சுவையும் தரமும்...?

 

நீதிமன்ற தடை, கலாட்டாக்களுக்குப் பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சீஸன் 2 - மேகி நூடுல்ஸ் எப்படி இருக்கிறது?

மேகி பாக்கெட்டில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே மஞ்சள் நிற பேக்கிங். வழக்கமான செய்முறை, விதிமுறைகள்தான். விலை ரூ.????

உள்ளே இருக்கும் நூடுல்ஸ் வழக்கத்தைவிட சற்றே பளிச்சென இருக்கிறது. பாக்கெட்டின் உள்ளே டேஸ்ட் மேக்கர் பாக்கெட் இருக்கிறது. அதை நூடுல்ஸுடன் கலக்கி தேவைப்படும் நீர் ஊற்றி இரண்டே நிமிடங்கள் சமைத்தால், வழக்கமான நிறம், மணம், குணத்துடன் இருக்கிறது மேகி. 

சாப்பிட்டுப் பார்த்தால் வழக்கமான ஸ்பைஸி சுவை. வழக்கம் போல அப்போதைக்கு பசியைத் தள்ளிப் போடுகிறது. மற்றபடி குறிப்பிடும்படியான மாற்றமும் விசேஷமும் இல்லை.

மேகி பிரியர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும்!

http://www.vikatan.com/news/article.php?aid=55348

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: நதி ஆன கூவம்!

 
 
9_2628021f.jpg
 

 

8_2628022a.jpg

7_2628023a.jpg

6_2628024a.jpg

5_2628025a.jpg

4_2628027a.jpg

3_2628028a.jpg

1_2628030a.jpg

2_2628029a.jpg

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெரினாவில் ஆர்ப்பரித்துக்கொண்டு கடலில் கடக்கும் மழை நீர்!

  • தொடங்கியவர்

12240392_944960165552678_545327372206605

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அண்டி கட்டிக்கின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

யூத் டியூப்: நாங்க சென்னை பேச்சுலர்ஸ்!

 

  • aa_2627982g.jpg
     
  • சின்னா, புஷ்பநாதன், டோனி பிரிட்டோ, திவாகர் (இடமிருந்து வலம்)
    சின்னா, புஷ்பநாதன், டோனி பிரிட்டோ, திவாகர் (இடமிருந்து வலம்)
  • aa1_2627981g.jpg
     

“அட்ரஸ் இல்லாத லெட்டர்ஸ் நாங்க

அள்ளிக் கொடுத்தது மெட்ராஸ் தாங்க

டேலன்ட் இருந்தும் லூசர்ஸ் நாங்க

டேமேஜ் பண்ணுறது இங்கிலீஷ் தாங்க

வயித்துக்காக வாரம் முழுக்க நாயா உழைப்போம்

சொர்க்கம் பார்க்க வீக்எண்ட்ல பேயா பறப்போம்”

என விரிகிறது ‘சென்னை பேச்சுலர்ஸ்’ ஆல்பம். சென்னையில் பேச்சுலர் லைஃபை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை ஜாலியாகப் பதிவுசெய்கிறது இந்த ஆல்பம். ‘ஆகோ ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆல்பத்துக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

சொந்த ஊரைவிட்டு, எதிர்காலத்தைத் தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதை இந்த ஆல்பம் அழகாக விவரிக்கிறது. இந்த ஆல்பத்தை எழுதி இயக்கியவர் புஷ்பநாதன் ஆறுமுகம். சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கும் புஷ்பநாதனுக்கு சொந்த ஊர் திருச்சி. “சென்னையின் பேச்சுலர் வாழ்க்கையை ஒரு ‘மியூசிக் வீடியோ’வாக எடுக்கலாம் என்ற ஐடியா என் நண்பர்களுக்குப் பிடித்திருந்தது. இந்த ஆல்பத்துக்கான பாடல் வரிகளில் ஆரம்பித்து, காட்சிகள் வரை எல்லோமே எங்களுடைய சொந்த அனுபவம்தான். நண்பர்களுடனான உரையாடலில் இருந்ததுதான் இந்த ஆல்பம் உருவானது” என்று சொல்கிறார் புஷ்பநாதன்.

டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தில் சின்னாவும், திவாகரும் பாடியிருக்கின்றனர். வினோத் குமரனின் படத்தொகுப்பும், ஜெபா ரஞ்சித், கார்த்திக் ஆகியோரின் ஒளிப்பதிவும், அசாரின் நடன அமைப்பும் ஆல்பத்துக்கு கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. மதன், செந்தில், கதிர், புஷ்பநாதன், லல்லு, சின்னா, திவ்யா, வெற்றி உள்ளிட்டோர் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கின்றனர்.

“ ஆகோ ஸ்டுடியோஸ் சார்பாக ஏற்கெனவே நாங்கள் ‘முதிர் கன்னி’, ‘கனவுகள் விற்பவன்’ போன்ற குறும்படங்களை எடுத்திருக்கிறோம். இந்தக் குறும்படங்களுக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இதுதான் எங்களுடைய முதல் மியூசிக் வீடியோ. இந்த வீடியோவுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது” என்கிறார் புஷ்பநாதன்.

சென்னையின் அன்றாட வாழ்க்கையில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான ஆங்கிலம், வேலைவாய்ப்பின்மை, காதல், நட்பு, பசி, பொழுதுபோக்கு, நம்பிக்கை என எல்லாவற்றையும் இந்த வீடியோ தொட்டுச்செல்கிறது. அதனால், யூடியூபில் வெளியாகிய சில தினங்களிலேயே இந்த ஆல்பம் பத்தாயிரம் ஹிட்களை அள்ளியிருக்கிறது.

யூடியூபில் வீடியோவைப் பார்ப்பதற்கு:

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7899831.ece

  • தொடங்கியவர்

நடந்தால் காசு: புதிய திட்டம் அறிமுகம்

 

நடந்தால் உடல் எடை குறைவதோடு பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

151121165106_bitwalking_2_512x288_bbc_no
 ஆப்ரிகாவில் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டியத் தேவை பல பகுதிகளில் உள்ளது

வேறு வேலை ஏதும் செய்யாமல் நடந்து மட்டுமே காசு ஈட்டும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது காகிதப் பணமாகவோ அல்லது நாணயமாகவோ கிடைக்காது. டிஜிட்டல் பணமாகவே அது கிடைக்கும்.

பிட் வாக்கிங் டாலர் என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் பணத்தை ஈட்ட செய்ய வேண்டியதெல்லம் ஒன்றுதான்-நடப்பது.

நடந்து நடந்து இந்த இ-பணத்தை ஈட்டுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. அது நமது மொபைல் ஃபோனில் அந்தத் திட்டத்துக்கான செயலியை தரவிறக்கம் செய்வது.

151121164304_bitwalking_1_512x288_bbc_noமுதலில் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்

இந்தச் செயலியானது நாம் நடப்பதை அளக்கும். 10,000 அடிகள் நடந்தால் ஒரு பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்கலாம்.

அதாவது சராசரியாக ஐந்து மைலுக்கு ஒரு பிட் வாக்கிங் டாலர் கிடைக்கும்.

இப்படிச் சம்பாதிக்கும் பணத்தை இதற்கென உள்ள ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.

நிஸான் பஹர், ஃப்ராங்கி இம்பெசி ஆகிய இருவரும் இணைந்து இந்த பணத்த உருவாக்கியுள்ளனர்.

இந்தத் திட்டத்திற்கென சுமார் 10 மில்லியன் டாலர்கள் இதுவரை திரட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்களே இதில் முதலீடு செய்துள்ளனர்.

ஜப்பானின் மின்னணு நிறுவனமான முரடா, இதற்கென கையில் அணிந்துகொள்ளக்கூடிய பட்டை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபோனுக்குப் பதிலாக இந்தப் பட்டையை அணிந்துகொண்டும் நடக்கலாம்.

151121165204_bitwalking_3_512x288_bbc_no  இது போன்று பல புதிய சாதனங்கள் வரும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன

இந்தத் திட்டத்தின் நிறுவனர்கள், வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை ஏற்கனவே உருவாக்கியவர்கள்.

கடந்த ஆண்டு, கென்யாவின் நைரோபியில், கம்ப்யூட்டரைப் போலச் செயல்படக்கூடிய கீபோட் என்று அழைக்கப்படும் சிறிய ஸ்டிக் ஒன்றை 7 டாலர்களுக்கு விற்கக்கூடிய வகையில் உருவாக்கினர்.

பலரும் நடக்கும்போது தாம் நடக்கும் தூரத்தை அளக்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதை பார்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஊழியர்கள் நடப்பதின் மூலம் சம்பாதிக்கும் தொகையை அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை, சராசரியாக ஒரு மனிதர் மாதத்திற்கு 15 பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்க முடியுமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஏழை நாடுகளில் மக்கள் வேலைக்கும் பள்ளிக்கூடத்திற்கும், ஏன் தண்ணீர் சேகரிக்கக்கூட நீண்ட தூரம் நடக்க வேண்டியிருப்பதால், இந்தத் திட்டம் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்பப்படுகிறது.

ஆனால், ஒரே இடத்தில் இருந்தபடியே நடப்பது போலச் செய்து ஏமாற்ற முடியாது. கூகுள் மேப் மூலம் ஒருவர் நடந்துசெல்லும் தூரமும் கணக்கிடப்படும்.

ஒரு நாளைக்கு ஒருவர் அதிகபட்சமாக 3 பிட் வாக்கிங் டாலர் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

தங்கள் ஊழியர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென விரும்பும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என இதன் நிறுவனர்கள் நம்புகின்றனர்.

http://www.bbc.com/tamil/science/2015/11/151121_bitwalking_dollar

  • தொடங்கியவர்


இன்று உலக தொலைக்காட்சி தினம்.
ஐ.நா சபை 1996ஆம் ஆண்டு இதே நவம்பர் 21ம் திகதியில் முதல் தடவை 'உலக தொலைக்காட்சி தினத்தை'ப் பிரகடனம் செய்தது.

சமூகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் தொலைக்காட்சி வகிக்கக்கூடிய பங்கினை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.

12241625_944958065552888_894639558607702

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 22
 
 

article_1448169581-0.jpg1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி, டல்லாஸ் நகரில் காரொன்றில் பயணம் செய்யும்போது துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1986: 20 வயதான மைக் டைசன், ட்ரேவர் பேர்பிக்கை தோற்கடித்து உலகின் மிக இளம் அதிபார குத்துச்சண்டை சம்பியன் எனும் பெருமைக்குரியவரானார்.

1990: பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து மார்கரெட் விலகினார்.

2002: நைஜீரியாவில் உலக அழகுராணிப் போட்டியில் பங்குபற்றுபவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து  இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/159677/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.MkkPcFUH.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12246821_1025874244138032_30671308248770


ஸ்பானீஷ் லீக்கில் பார்சிலோனாவிடம் 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் படுதோல்வியடைந்தது. இது போன்ற கேலி சித்திரங்களை பார்சிலோனா ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

  • தொடங்கியவர்

12274519_1063496200336287_40591679480341

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் அரியதொரு புகைப்படம்

  • தொடங்கியவர்

சந்திரனில் வசிக்கும் முதியவருக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பிய சிறுமி (வீடியோ)

 

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். அதனை மையமாக வைத்து பிரிட்டனை சேர்ந்த ஜான் லீவிஸ் நிறுவனம், ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


        

பூமியில் வசிக்கும் லில்லி என்ற சிறுமி டெலிஸ்கோப் மூலம் சந்திரனை பார்க்கிறார். சந்திரனில் முதியவர் ஒருவர் தனிமையில் சோகத்தில் வசிப்பது அந்த சிறுமியின் கண்களுக்கு தென்படுகிறது. அந்த முதியவரை மகிழ்விக்கும் வகையில் லில்லி, தனது டெலிஸ்கோப்பை அவருக்கு  கிறிஸ்துமஸ் பரிசாக  அனுப்பி வைப்பது போல், அந்த விளம்பரம் முடிவடைகிறது. இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
http://www.vikatan.com/news/article.php?aid=55402

  • தொடங்கியவர்

12265535_945278438854184_411658856733681


இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவரும், உலகின் மிக நுட்பமான நுணுக்கங்கள் தெரிந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மார்வன் அத்தப்பத்துவின் பிறந்தநாள் இன்றாகும்.

6 இரட்டை சதம் அடித்த வீரர்

அண்மைக்காலம் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தவர் மார்வன்.

  • தொடங்கியவர்

சூறையாடப்பட்ட மசூதிக்கு சேமிப்பை நன்கொடையளித்த 7 வயது சிறுவன்!

 

மெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனான ஜேக் ஸ்வான்சன் தன் சேமிப்பு பணத்தை அவனது குடியிருப்புப் பகுதியிலுள்ள சூறையாடப்பட்ட மசூதிக்கு நிவாரன நிதியாக வழங்கியதற்கு அவனுக்கு ‘ஐ-பேட்’ பரிசாக கிடைத்துள்ளது.

 c1.jpg

பாரீஸ் நகரில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலுள்ள ஃபயூகர்வில் மசூதியை முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சூறையாடிவிட்டுச் சென்றுவிட்டனர். தீவிரவாத வன்முறை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மசூதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்தது. பொதுமக்கள், போலீசார் என அனைவரும் வந்து பார்த்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்ற நிலையில், அக்கூட்டத்திலிருந்த சிறுவன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலும் தன் அம்மாவிடம் நிலவரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான்.

c2.jpg

அதன்பின் யாரும் எதிர்பாராத நிலையில், அந்த 7 வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன், தன் உண்டியலில் ஐ-பேட் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த 20 அமெரிக்க டாலர்களை மசூதி நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டான். சிறுவனது செயலைப் பாராட்டி, அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஐ-பேட் சேர்த்து வழங்கி உள்ளது.

இதுகுறித்து அம்மசூதியின் நிர்வாகக் குழு உறிப்பினரான ஃபைசல் நயீம் கூறுகையில், ''20 டாலர்கள் என்பது ஒரு பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீர்குலைந்த மசூதியின் சீரமைப்புப் பணிக்காக தன் சொந்த சேமிப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை தன் ஆசையை விட்டுக்கொடுத்து அளித்துள்ளான் ஜேக் ஸ்வான்சன். அந்தப் சிறுவனின் பெருந்தன்மைக்கான ஒரு சிறிய நன்றியாகவே அவன் விரும்பிய ஆப்பிள் ஐ-பேட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55419

  • தொடங்கியவர்

அப்பா அழாதே!

ஐரோப்பாவின் வீதிகளிலே பயண இலக்கற்று சுற்றித் திரியும் ஒரு சிரிய அகதி மன வேதனையின் உச்சத்தில் தன் குழந்தையின் முன்னே அழும் காட்சி! என்ன மாதிரியான வக்கிர உலகம் ஒரு தந்தையை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது?

12278661_1026127294112727_37506567854624

11986430_1026127290779394_49888392287777

12239657_1026127287446061_59419998316385

  • தொடங்கியவர்

12232679_945280868853941_129123006185614

பிரபல ஹொலிவூட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சனின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்
வரலாற்றின் இன்று: நவம்பர் 23
 
 

article_1448250283-2.jpg1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.

1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் பலியாகினர்.

1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் பலியாகினர்.

1998 - கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டன

- See more at: http://www.tamilmirror.lk/159725/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.I4iTN0DK.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12247203_945592532156108_537135900244239

பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைக்கப்படும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அஹ்மத் ஷெசாட்டின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

 

இங்கிலாந்தில் உள்ள தீவு பகுதி ஒன்றில், ஒரே மாணவனுக்காக ஒரு பள்ளி செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

England%20student%20Aron.jpg 

'ஸ்க்கிரீஸ்' என்ற சமுதாய பள்ளியில் ஆரோன் ஆன்டர்சன் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நாட்களில் சிறுவன் England%20student%20Aron%201%281%29.jpgஆரோன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசிரியர்களின் முழுக் கவனமும் அவன் மீதே இருக்கும்.

பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், ஆரோனுக்கு இருக்கும் ஒரே வருத்தம், அவனுக்கு பிடித்த விளையாட்டானா கால்பந்தை அவனுடன் விளையாட யாரும் இல்லை என்பதே. சிறுவன் ஆரோன் மட்டுமே அந்த பள்ளியில் சென்று படித்து வருவதால், இங்கிலாந்திலேயே அதிக பணச்செலவில் கல்வி பயின்று வரும் சிறுவனாக ஆரோன் மாறியுள்ளான்.

தன்னோடு விளையாட எவரும் இல்லை என்ற வருத்தம் சிறுவன் ஆரோனுக்கு உண்டு என்றாலும், அந்த தீவினை விட்டு வெளியேற அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளான்.

ஒட்டு மொத்தமாக 70 பேர் மட்டுமே குடியிருந்து வரும் இந்த தீவின் மிக அருகில் இருக்கும் நகரம் என்பது செல்ட்லன்ட் தீவின் தலைநகரமான லீர்வீக் நகரே.

சிறுவன் ஆரோனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அருகில் இருக்கும் வேறு தீவுகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருவதால், ஆரோனுக்கு அவர்களை வாரவிடுமுறை நாட்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

வீட்டில் இருந்து சைக்கிளில் 2 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் ஆரோனின் தினசரி வாழ்க்கை சைக்கிள் பயணத்துடனே துவங்குகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=55431

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.