Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பறவைகளைத் தேடி...

 

p72.jpg

ஃபேஸ்புக்கில் தினம்தினம் நமக்கு அறிமுகமில்லாத பல பறவைகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி அவற்றைப் பற்றிய தகவல்களையும் தருகிறார் அரவிந்த் அமிர்தராஜ். இந்தப் பறவைகளின் காதலரைத் தொலைபேசியில் பிடித்தேன்.

p72b.jpg

‘‘மன்னார்குடிப் பக்கம் காவிரியாற்றின் கிளைநதி பாயும் வடபாதி தான் என் சொந்த ஊர். இப்போ மனைவியோடு சென்னையில் செட்டில் ஆகியாச்சு. பறவைகள் மீதான காதல் இயற்கையாகவே எனக்குள்ள இருந்துச்சு. பறவைகளுக்கு சாப்பாடு, தண்ணி வைக்கிறதுனு இயற்கை மேல நேசம் இருந்தாலும் முன்பெல்லாம் புகைப்படம் எடுக்கிற மாதிரி ஐடியா இல்லை.

சில ப்ரொஃபஷனல் போட்டோகிராஃபர்கள், பறவைகள், விலங்குகள்னு இயற்கையை அழகழகாப் படம் பிடிச்சு சமூக வலைதளங்கள்ல பதிவேற்றுவாங்க. அவை எல்லாமே பச்சைக்கிளி, சிட்டுக்குருவி மாதிரி நமக்குத் தெரிஞ்சதாகவே இருக்கும். தமிழ்நாட்டுல மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருக்கிறதாம். ஆனா, நமக்குத் தெரிஞ்சது இதில் கொஞ்சம்தான். நமக்குப் பரிச்சயமில்லாத பறவைகளைப் படம்பிடிச்சு இதே சமூக வலைதளத்துல பதிஞ்சு பலருக்குத் தெரியப்படுத்தினா என்னன்னு தோனிச்சு. கடந்த வருசம் அக்டோபரில் ஒரு கேமரா வாங்கினேன். அதிலேர்ந்து பறவைகளுக்கான என் தேடல் தொடருது.

p72a.jpg

எப்படி விதம்விதமான பறவைகளைப் பார்க்கிறதுனு ஆரம்பத்துல தெரியலை. பறவைகளைக் கண்காணிக்கிற கணேஷ்வர் எனும் நண்பர் ‘பு ஆஃப் இண்டியன் பேர்ட்ஸ்’ அப்படிங்கிற ஒரு புத்தகத்தைப் பரிந்துரைச்சார். அதிலே இருந்த தகவல்களை வெச்சுப் பல பறவைகளின் வாழிடங்கள், வசிக்கும் சூழல் போன்றவற்றைக் கண்டறிஞ்சு தேட ஆரம்பிச்சேன். இதுவரை 282 பறவை இனங்களைப் பற்றிய தகவல்களோட புகைப்படம் எடுத்து ebird.org என்னும் சர்வதேசத் தளத்துல பதிவு பண்ணிருக்கேன். பறவைகளைத் தேடுறது ஒண்ணும் சுலபமான விஷயமில்லை. அவைகளின் இருப்பிடம் எந்த மாதிரினு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். தரைமட்டத்துக்கு மேலே 3,000 அடி உயரத்துலதான் சில பறவைகள் வசிக்கும். அப்படியே இருந்தாலும் நாம போற நேரத்துக்கு அவை அங்கே இருக்கணும். இப்படி ஏமாந்துபோன நிகழ்ச்சிகள் நிறைய இருக்கு.

p72c.jpg

பறவைகள் மீதான காதல் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறதாலே எனக்கு எதுவுமே பெருசாத் தெரியலை. எவ்வளவு தேடிக் களைச்சுப்போய் இருக்கும்போதும் புதுசா ஒரு பறவையைப் பார்த்தா, புத்துணர்ச்சி அடைஞ்சுருவேன். சில பறவைகளைப் படம்பிடிக்க ரொம்பநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். சில வித்தியாசமான பறவைகளைப் படம் எடுத்தாலும் அந்தந்த வட்டாரப் பெயர் இருக்கிறதனால பெயர் கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாகத் தவிட்டுக்குருவிக்கே மஞ்சள் சிலம்பன், சருகுண்ணிப்பறவைனு வேற வேற பெயர்கள் இருக்கும். வெறும் புகைப்படம் எடுக்கிறது மட்டும் சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும். என்னை மாதிரி தகவல்களைத் திரட்டிட்டே புகைப்படம் எடுக்கிறவங்க தமிழ்நாட்டுல ரொம்பக் குறைவுதான். அந்த வகையில் பறவைகளைப் பற்றிப் பலர் அறிவதற்கு நாம காரணமா இருக்கோம்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இதற்காகத் தினமும் விடிவதற்கு முன்பாகவே பறவைகளைத் தேடிப் புறப்படுவேன்.

p72d.jpg

சாதாரணமா ஒரு பறவையைப் பார்த்ததும் புகைப்படத்தை எடுத்துட்டுப் போறதுக்கு நிறையப் பேர் இருக்காங்க. அதோட உணவு, நிறமாற்றம், எல்லாம் தெரிஞ்சுக்க பலமணி நேரம் காத்திருக்கேன். ஒரு மீன்கொத்தி, மீனைக் கவ்விப் பிடிக்கிறதையோ, ஒரு அக்காக்குயில் கம்பளிப்பூச்சியைப் பிடிக்கிறதையோ படம் பிடிக்கணும்னா, அதே லாவகத்தை நாமளும் கையாளணும். எதிர்காலத்தில், நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத பறவைகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு ஆசை. அதுவரை அவைகளைத் தேடிக்கொண்டே இருப்பேன்’’ எனப் பறவைகள் மீதான காதலில் கசிந்தபடி முடிக்கிறார்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பறவை தாத்தாவின் அழகான நாட்கள்!

 
 
Desktop_2867703f.jpg
 

நம் ஊரில் சாலிம் அலியைப் ‘பறவை தாத்தா’ என்று அழைப்போமல்லவா! அதுபோல் உலகமெல்லாம் ‘பறவை தாத்தா’ என்று அழைக்கப்படுபவர் டேவிட் அட்டன்பரோ. அவர் ‘பறவை தாத்தா’ மட்டுமல்ல. தவளை தாத்தா, குரங்கு தாத்தா, திமிங்கிலம் தாத்தா என்று எல்லா உயிரினங்கள் பேரையும் சொல்லி அழைக்கலாம். அந்த அளவுக்கு இயற்கை உலகில் திரிந்து இயற்கையின் அதிசயங்களை நமக்குத் தொலைக்காட்சி மூலமாக அறிமுகப்படுத்தியவர் அவர்.

பறவைகளின் வாழ்க்கை, பாலூட்டிகளின் வாழ்க்கை, பூமியில் உயிர்வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அவர் தயாரித்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் மிகவும் பிரபலம். ‘காந்தி’ படம் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் டேவிட் அட்டன்பரோ. அவர் தனது 90-வது பிறந்த நாளைத் தற்போது கொண்டாடியிருக்கிறார். இயற்கை உலகில் அவர் வழியாக நமக்குக் கிடைத்த அற்புத தருணங்களில் சில இங்கே.

1. காடழிப்பும் லயர் பறவையும் (‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)

லயர் பறவையை ஒளிப்படம் எடுத்தபோது கேமராவின் ஷட்டர் சத்தத்தை அது மிமிக்ரி செய்தது. அடுத்து அது செய்தது அட்டன்பரோவை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியது; கூடவே, குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போது, பக்கத்தில் இயந்திர ரம்பத்தைக் கொண்டு மரங்களை யாரோ வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த இயந்திர ரம்பத்தின் சத்தத்தையும் லயர் பறவை மிமிக்ரி செய்தது அட்டன்பரோ படம் பிடித்த மகத்தான தருணங்களுள் ஒன்று.

2. டொக் டொக் யாரது? மரங்கொத்தி! (த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)

பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதில் அட்டன்பரோ பெரும் வித்தகர். தென்னமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு காட்டில் ஒரு மரத்தைத் தட்டுகிறார் அட்டன்பரோ. தனது பிரதேசத்துக்குள் யாரோ அந்நியர் அத்துமீறிவிட்டார் என்று நினைத்துக்கொண்ட ஒரு மேகலனிக் மரங்கொத்தி அதற்கு உடனடியாக பதிலளிக்கிறது.

அவர் தலைக்கு மேலே மரத்தில் தொற்றிக்கொண்டே அலகால் மரத்தைக் கொத்தி அட்டன்பரோ எழுப்பிய சத்தத்தை அதுவும் எழுப்புகிறது. கூடவே, அதன் இணையும் சேர்ந்துகொள்ள இயற்கை ரசிகர்களுக்குப் பெரும் விருந்து.

3. மந்த ராஜா போடும் புதிர்! (த லைஃப் ஆஃப் மேமல்ஸ், 2002)

ஸ்லோத் என்ற விலங்கு மரங்களில் வசித்துக்கொண்டு இலைகளை மட்டும் சாப்பிட்டு வாழக்கூடியது. பெயருக்கு ஏற்றவாறு மிகவும் மந்தமான விலங்கு அது. மரத்தில் மேலே இருக்கும் ஸ்லோத்துக்கு அருகில் சென்று ‘பூ’ என்று அவர் பயமுறுத்தியும் அது ஒன்றும் பெரிதாக அசையவில்லை. அதன் மந்தத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே அது வசிக்கும் என்கிறார் அட்டன்பரோ.

அதன் விசித்திரமான இயல்பொன்றை அவருக்கு உரிய பாணியில் வர்ணிக்கிறார். விட்டை போட மட்டுமே, வாரத்துக்கு ஒருமுறை ஸ்லோத் தரையிறங்கும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் விட்டை போடும். “இரையுண்ணிகளால் வேட்டையாடப்படும் ஆபத்து இருந்தும் விட்டை போட மட்டும் அது ஏன் தரையிறங்குகிறது? யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. எனினும், இந்த ஆபத்துக்கிடையேயும் அது இப்படிச் செய்வதால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தாக வேண்டும்” என்கிறார்.

4. நல்ல வேளை, பசிக்காத வேளை! (ஜூ க்வெஸ்ட், 1950-கள்)

1950-களில் இளைஞராக இருந்த அட்டன்பரோ பப்புவா நியூ கினியின் காடுகளுக்குச் செல்கிறார். அங்கே, மனித மாமிசத்தை உண்ணக்கூடிய வனவாசிக் கும்பலொன்றை எதிர்கொள்கிறார். பளபளக்கும் கத்தி ஒன்றையும் அவர் கவனிக்கிறார். பயத்தை மறைத்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்று ‘குட் ஆஃப்டர்நூன்’ என்று முகமன் கூறுகிறார். அவர்களும் அவரை நட்புணர்வோடு எதிர்கொள்கிறார்கள். நல்லவேளை அவர்களுக்கு அன்று பசியில்லை போலும்.

5. உலகத்துக்கு ஓர் எச்சரிக்கை! (‘ஸ்டேட் ஆஃப் த ப்ளானட், 2000)

2009-ல் ஈஸ்டர் தீவின் பிரம்மாண்ட மான சிற்பங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு அட்டன்பரோ விடுத்த கடுமையான இந்த எச்சரிக்கை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டியது: “இந்த பசிபிக் தீவில் வாழ்ந்து மறைந்த ராப்பா நூயி மக்கள் இங்குள்ள இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டித் தீர்த்ததால் அவர் களின் சமூகம் அழிவுற்றது. அவர்களைப் போல நாமும் செய்வோமானால் நமக்கும் அவர்களின் கதிதான் ஏற்படும்.”

நன்றி: ‘தி கார்டியன்’.

  • தொடங்கியவர்
கங்கையில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

 

14.jpg

 

 

காசியில் இருக்கும் ஐந்து விஷயங்கள், மனித குலத்துக்கு அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதங்களில் ஒன்று. அப்படி கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

 

பல்லி சப்தம் எழுப்பாது

காசியில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக கருதுபவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

பிணம் நாற்றம் எடுக்காது

பிணம் எரியும் போது அருகில் நின்றிருக்கிறீர்களா..? பிணம் எரியும் போது பிணத்தின் கேசம், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடையை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் 'பிண வாடை' என சொல் வழக்கில் கூறுவார்கள். ஆனால், இங்கே... பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

கருடன் வட்டமிடாது

காசியில் அமைந்துள்ள கங்கைக் கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும் இறைக்காக கருடன் (வெண்கழுத்து கழுகு) வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும்.... ஆனால், வட்டமிடாது. காசியில் காக்கையும் கிடையாது.

13.jpg

பூ மணக்காது

இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். தென்னாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது. முக்கியமாக மல்லி, முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்திப் பூ அதிகமாக கிடைக்கும். தென்னாட்டில் சாமந்திப் பூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும். பலருக்கு இந்தப் பூவின் வாசம் பிடிக்காது. அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

ஆனால் காசியில் இந்தப் பூக்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆனாலும் அவை வாசம் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கின்றன. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் 'காசி பூக்கள்' (விளையும்) மணப்பதில்லை.

பால் வற்றாது

இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் எப்போதும் கட்டப்படுவதே இல்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை.

பல வருடங்களாகவும், இன்றும்... இயற்கையாகவே இந்த ஐந்து விஷயங்கள் நடக்கின்றன...! 

kalaikesari.lk

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p58a.jpg

dot13.jpg 34 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சாம்பியன் டிராஃபி ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறது இந்தியா. சமீபத்தில் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி போட்டிக்கு, பெரிய நம்பிக்கை எதுவும் இல்லாமல்தான் போனது இந்தியா. ஆனால் இங்கிலாந்து, தென்கொரியாவுடனான போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் 3-3 என போட்டியை டிராவிலும் முடித்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மோதியது. இறுதிவரை இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் சாம்பியன்ஷிப்பை வென்றது ஆஸ்திரேலியா. `இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பான இந்தப் பதக்கம், எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது’ எனப் பரவசமாகியிருக்கிறார் இந்தியாவின் கேப்டன் சர்தார் சிங். மீண்டு வாங்க வீரர்களே!


dot13.jpg  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறார் இந்தியாவின் மிக முக்கியமான மாற்று சினிமா இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். 2008-ம் ஆண்டில் வெளியான `ஒரு பெண்ணும் ரெண்டானும்' படத்துக்குப் பிறகு ஓய்வில் இருந்தவர், இப்போது `பின்னேயும்' படத்தின் மூலம் வந்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் 12-வது படம் இது. திலீப் - காவ்யா மாதவன் நடித்திருக்கும் இந்தப் பட ஷூட்டிங்கை, 23 நாட்களில் முடித்திருக்கிறார். படத்தின் பட்ஜெட்டும் சில லட்சங்கள்தானாம். சொல்லித்தாங்க சார்!


dot13.jpg  வெளிநாட்டுப் பயணங்கள் தவிர தமிழ்நாடு, கேரளா... என, இந்தியாவின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் இந்தியில் மட்டுமே பேசுவது என்ற கொள்கை முடிவில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும்கூட இந்தியில் பேசுவதைத்தான் மோடி விரும்புகிறாராம். இதனால் மோடியிடம் இந்தியில் பேசிப் பாராட்டு வாங்க, சமீபத்தில் நடந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் மாநாட்டில் கிட்டத்தட்ட எல்லா அதிகாரிகளுமே இந்தியில் பேசியிருக்கிறார்கள். `இங்கே பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தாலும், அருமையாக இந்தி பேசுகிறீர்கள். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' எனப் புகழ்ந்திருக்கிறார் மோடி. இந்தி வித் மோடி!


p58b.jpg

dot13.jpg   இந்தியப் போர் விமானங்களை, பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி என்கிற மூன்று பெண்கள் முதன்முறையாக இயக்கப்போகிறார்கள். `போர் விமானங்களை பெண்களும் இயக்கலாம்’ என, கடந்த அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. உடனே, `விமானிகளாக நாங்க ரெடி' என நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வமாக வந்தனர். மொத்தம் ஆறு பெண்கள் பயிற்சிபெற்றுவந்த நிலையில், இந்த மூன்று பேர்தான் இறுதியாகத் தேர்வாகியிருக்கிறார்கள். அடுத்ததாக நவீன ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. சல்யூட் கேப்டன்ஸ்!


p58c.jpg

dot13.jpg  விராட் கோஹ்லி என்ன சாதனை செய்தாலும், அதை அடுத்த ஆளாக வந்து உடைக்கிறார் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா. `157 இன்னிங்ஸில் 23 சதங்கள் அடித்தவர்' என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார் கோஹ்லி. அதை இப்போது `132 இன்னிங்ஸில் 23 சதம்' என முறியடித்திருக்கிறார் ஆம்லா. இதற்கு முன்னர் மிகக் குறைந்த இன்னிங்ஸில் 6,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் கோஹ்லி. அதையும் உடைத்தவர் ஆம்லாதான். பிரேக்கர் ஆம்லா!


p58d.jpg

dot13.jpg  `லகான்’ படத்தை இயக்கிய அஷுதோஷ் கெளரிகர், அடுத்ததாக சிந்துசமவெளி நாகரிகம் பற்றி `மொஹஞ்சதாரோ' என்னும் படத்தை இயக்கியிருக் கிறார். ஹ்ருத்திக் ரோஷன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. போஸ்டரில் பூஜா ஹெக்டே செம மாடர்னாக இருந்ததுதான் காரணம். `ஹரப்பாவின் பெண்கள், சிவப்பு நிறம் கிடையாது; கறுப்பு நிறம். அதோடு அவர்கள் தலையில் சிறகுகள் வைத்துக் கொள்கிறவர்கள் அல்லர். அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் கால்களுக்கு வாக்ஸிங் செய்துகொண்டதும் இல்லை. நம் குழந்தைகளுக்கு, தவறான வரலாற்றைக் கற்றுக்கொடுத்து விடக் கூடாது' என விமர்சகர்கள் சவுக்கைச் சுழற்ற... `மொஹஞ்சதாரோ’ படக் குழுவோ கப்சிப். வரலாறு முக்கியம் கெளரிகர்!


dot13.jpg  `அவதார்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இப்போது சிசிலி, மால்டா, சான்டோரினி, சார்டினியா... போன்ற ஸ்பெயின் கடல் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய தேடல், அட்லான்டிஸ் தீவைத் தேடி. பிளாட்டோ தன் புராணப் படைப்பில் கிரேக்கத்தில் இருந்ததாக எழுதியிருந்த கற்னைத் தீவு, நிஜமாகவே இருந்ததாக மர்மமான பல தியரிகள் சுற்றிக்கொண்டிருந்தன. அதைத் தேடித்தான் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த முயற்சியை ஆவணப்படமாகவும் எடுத்துவருகிறார் கேமரூன். மர்மத் தீவுகள்!

vikatan

  • தொடங்கியவர்
அதிக நினைவாற்றலும் கற்கும் திறமையும் கொண்ட ரஷ்ய ரோபோ இரு தடவைகள் தப்பிச் சென்றதால் செயலிழக்கச் செய்வதற்குத் திட்டம்
 

நினை­வாற்­றலும் கற்­றுக்­கொள்ளும் திற­மையும் கொண்ட ரோபோ­வொன்றை செய­லி­ழக்கச் செய்­வது குறித்து ரஷ்ய விஞ்­ஞா­னிகள் சிந்­திக்­கின்­றனராம்.

 

1757243.jpg

 

இந்த ரோபோ ஆய்வு கூடத்­தி­லி­ருந்து இரு தட­வைகள் தப்பிச் சென்­றமையே இதற்­கா­ன ­கா­ரணம்.

 

த புரோ­மோபோட் ஐ.ஆர்.77 (The Promobot IR77) என பெய­ரி­டப்­பட்ட இந்த ரோபோ அதிக செயற்கை மதி­நுட்பம் (ஆர்ட்­டி­பிஷல் இன்­ட­லிஜென்ட்) கொண்­டது.

 

தனது அனு­பவம் மற்றும் சுற்­றாடல் நிலை­மை­க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொள்ளும் திற­மை­யையும் அதிக நினை­வாற்­ற­லையும் கொண்ட ரோபோ இது. 

 

1757242.jpg

 

இந்த ரோபோ விஞ்­ஞா­னிகள் எதிர்­பார்த்­த­தை­விட அதிக புத்­தி­சா­லித்­த­ன­மாக அமைந்­து­ விட்­ட­து­ போலும்.

 

அண்­மையில் ஆய்வு கூட­மொன்­றி­லி­ருந்து இந்த ரோபோ தப்பிச் சென்­றது. அதன்பின் அந்த ரோபோவை தேடிக்­கண்­டு­பி­டித்த ரோபோ தயா­ரிப்­பா­ளர்கள், அதன் கணினி மென்­பொ­ருளில் மாற்­றங்­களைச் செய்­தனர். 

 

ஆனால், அண்­மையில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் இந்த புரோ­மோபோட் ஐ.ஆர்.77 ரோபோ தப்பிச் சென்­றமை இதன் தயா­ரிப்­பா­ளர்­களை திடுக்­கிடச் செய்­துள்­ளது. 

 

1757241.jpg

 

ரஷ்­யாவின் பேர்ம் கிராய் பிராந்­தி­யத்­தி­லுள்ள பேர்ம் நகர வீதி­களில் சென்று கொண்­டி­ருந்த ரோபோ அதன் பெற்­றரி வலு தீர்ந்த பின்­னரே ஓய்ந்­தது.

 

சுமார் 45 நிமிட நேரத்தின் பின்­னரே இந்த ரோபோ காணாமல் போன விடயம் அதன் கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்குத் தெரிய வந்­ததாம்.

 

இதனால், இந்த ரோபோவை செய­லி­ழக்கச் செய்­வது தொடர்பில் விஞ்­ஞா­னிகள் ஆராய்ந்து வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 

1757244.jpg

 

ஆனால், இந்த ரோபோவின் அபி­மா­னிகள் அதை செய­லி­ழக்கச் செய்­யக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

 

“இது உயி­ருள்ள ஒரு நபரை கொல்­வ­தற்கு சம­மா­னது எனக் கூறும்  புரோ­மோபோட் ரசி­கர்கள், இந்த ரோபோ சுதந்­தி­ரத்தை நாடு­கி­றது எனக் கூறு­கின்­றனர்.

 

எனினும், இந்த ரோபோ தொடரில் தயா­ரிக்­கப்­பட்ட ஏனைய ரோபோக்கள் தப்பிச் செல்ல முற்­ப­ட­வில்லை எனவும் அவை சிறப்­பாக இயங்­கு­வ­தா­கவும் விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

 

புரோ­மோபோட் ரோபோவை தயா­ரித்த ஆய்­வு­கூ­டத்தின் இணை ஸ்தாப­க­ரான ஒலேக் கிவோ­கு­ரட்சேவ் என்­பவர் கூறு­கையில், “நாம் தற்போது 3 ஆம் தலைமுறை ரோபோக்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

 

எதிர்வரும் இலையுதிர் காலத்தில் இந்த ரோபோக்கள் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

p86a.jpg

கோஸ்ட் கோபால் வர்மா, இது ரத்த பூமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த #kabali திரைப்படத்தின் டீசர் ரிலீசானது முதல், அனைத்து திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் கபாலி ஃபீவர் தான். இத்திரைப்படத்தின் ஆடியோவும் அதிரிபுதிரியாக வந்ததை அடுத்து கொண்டாட்டமடைந்த ரசிகர்கள், சர்ச்சை நாயகனான இயக்குநர் ராம்கோபால் வர்மாவை @RGVzoomin வம்புக்கு இழுத்தனர். இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் ஆர்.ஜே.பாலாஜி போன்றோரும் இணைந்துகொள்ள சோசியல் மீடியா எங்கும் ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்! நெருங்குனா பொசுக்குற கூட்டம்!’ என ரசிகர்கள் வலம் வந்தனர். ‘மகிழ்ச்சி’னு சொல்லிடமுடியுமா?

ஹாக்கியிலும் கலக்கியாச்சு!

p86b.jpg

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய ஹாக்கி அணி முதல்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இறுதிப்போட்டியில் போட்டிநேரம் முழுவதும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வென்றது. ஆனால் இதுவே மிகப்பெரிய சாதனை. ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வீரர்கள் இந்த தோல்வியால் மனம் தளரக்கூடாதென வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் பரிசு அறிவித்தது. தோல்விக்கெல்லாம் பரிசா? என நெட்டிசன்கள் #championstrophy என்ற டேக்கில் ஷோல்டரைத் தூக்க ஆரம்பித்தனர். அவன் மெதுவாத்தான்யா வருவான்!

ரொனால்டோவுக்கே இந்த நிலைமையா?

p87a.jpg

பிரான்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்துத் தொடரில் முதல்முறையாக ஆடத் தகுதிபெற்ற ஐஸ்லாந்து அணியை, பலமான போர்ச்சுக்கல் அணி துவம்சம் செய்யும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் அதிருப்தியடைந்த போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ, போட்டியின் முடிவில், ஐஸ்லாந்து அணியின் கேப்டன் நட்புணர்வில் ஜெர்சியை மாற்றிக்கொள்ள முன்வந்தபோது, யார் நீ? எனக் கேட்டு ஜெர்சியை தரமறுத்ததாய் செய்திகள் பரவின. ஆஸ்திரியாவுக்கு எதிரான அடுத்த மேட்சில் பெனால்டி கிக் உட்பட பல வாய்ப்புகளில் ரொனால்டோ சொதப்பியதால் அந்த மேட்ச் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அப்புறமென்ன? #ShameOnYou என அவருக்கெதிராய் சர்ச்சை ட்வீட்கள் பறக்க ஆரம்பித்தன. அவசரப்பட்டுட்டியே கொமாரு!

ராணுவம்டா!

p88a.jpg

இந்திய ராணுவப் போர் விமானங்களை இயக்க முதல் முறையாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங், பீஹாரைச் சேர்ந்த பாவனா காந்த் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ஆகிய பெண்கள் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவுபெற்றதை அடுத்து கடந்த 18ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முன்னிலையில் ஐதராபாத் அருகேயுள்ள ஹக்கிங்பேட் விமான தளத்தில் நடைபெற்ற விழாவில், அவர்கள் போர் விமானங்களை இயக்கும் பணியைத் தொடங்கினர். #IndianAirForce என்ற டேக்கில் நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்களும், நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததன் மூலம் ட்ரெண்ட் ஆனது. பாரதி கண்ட புதுமைப்பெண்கள்!

அப்பான்னா சும்மாவா?

தாய்ப்பாசத்துல மட்டுமில்ல... தந்தைப் பாசத்துலயும் நம்மாளுங்களை அடிச்சிக்கவே முடியாது. கடந்த 19ம் தேதி உலக தந்தையர்கள் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து, ட்விட்டர் சர்வரே ஹேங்க் ஆகும் அளவிற்கு #mysuperherodad #dadmirationday  என தங்களது பாசத்தைப் பொழிந்துவிட்டார்கள். இதில் திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அடக்கம். டாடீ டாடீ ஓ மை டாடீ!

இது ‘ஐ' ஃபிலிம்ஃபேர்

p88b.jpg

கடந்த வாரம் நடந்து முடிந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளில், ‘ஐ’ திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் ரஹ்மான், சிறந்த பாடகர் சித்ராம் (என்னோடு நீ இருந்தால் ), சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி (பூக்களே சற்று), என முக்கிய விருதுகளைக் கைப்பற்றியது. செம ஸ்லிம்மாக வந்து இருந்த விக்ரமைப் பார்த்த நெட்டிசன்ஸ், இது எந்தப் படத்திற்கான கெட்-அப் என யோசிக்கத்தொடங்கினர். #filmfare என்ற வார்த்தை தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது

மீண்டும் மீண்டும் வா!

ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டுமென்றால், அவரே மீண்டும் பதவியில் உட்கார வேண்டும் என அவருக்கு ஆதரவாக ஆறு லட்சம் பேர் ஆன்லைனில் கையெழுத் திட்டனர். ஆனால் ரகுராம் ராஜனோ மீண்டும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் உள்ள வர்த்தகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றப் போவதாக அறிவித்தார். நெட்டிசன்ஸ் #R3Exit (ரகு - ராம் - ராஜன் பேரில் மூன்று R வருவதால் R3) என்ற டேக்கில் ஃபீலிங்ஸையும், கலாய்களையும் கொட்டித்தீர்த்தனர்.

- ட்ரெண்டிங் பாண்டி


30 ஆண்டுகள்

p89a1.jpg

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சாண்டல்வுட் கிங் சிவராஜ்குமார் நடித்த ‘ஷிவலிங்கா’ திரைப்படம், கர்நாடகாவில் மாஸ் ஹிட். ஹாட் ட்ரிக் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சிவராஜ்குமாரின் ரசிகர்கள், அவரது அடுத்த படத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கிறார்கள். காரணம்... சிவராஜ்குமார் திரையுலக வாழ்வில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. கன்னட சோசியல் மீடியா முழுவதும் #ஷிவலிங்காடா! மயம்தான்.

vikatan

  • தொடங்கியவர்

நீந்தும் சந்தைகள்!

 
  • 55_2848488g.jpg
     
  • 56_2848489g.jpg
     

பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைகளைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும் இல்லையா? ஆனால், உலகின் சில இடங்களில் கடைகள் நம்மைத் தேடி வருகின்றன! இவை தண்ணீரில் மிதக்கக்கூடிய படகுக் கடைகள். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் மிதக்கும் சந்தைகள் அதிக அளவில் உள்ளன.

தண்ணீர் போக்குவரத்து இந்த நாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவுகளாகவோ, ஆற்றுக் கழிமுகங்களாகவோ இந்த இடங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் நீர் நிறைந்த அடர்த்தியான காடுகளைக் கொண்ட இடங்களாக இவை இருந்துள்ளன. காலப் போக்கில் மனிதர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப நீர்நிலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தண்ணீர் போக்குவரத்து மூலமே சுற்றிலும் உள்ள நகரங்களின் சாலைகளை அடைகிறார்கள்.

நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களின் பொருட்களைப் படகுகளில் எடுத்துச் சென்றுதான் விற்கிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு சிறிய துறைமுகங்களில் காத்திருக்கும் மொத்த வியாபாரிகளிடம் விற்கிறார்கள். மொத்த வியாபாரிகள் அந்தப் பொருட்களைப் பிரித்து, சில்லறை வியாபாரிகளிடம்

விற்பனை செய்கிறார்கள். அவர்கள் நகரின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

மிதக்கும் சந்தைகள் உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக எராளமான படகுக் கடைகள் தண்ணீரில் மிதந்தபடியே இருக்கின்றன. சிறிய படகுகளில் அடுப்பை வைத்து சுடச்சுட

உணவுகள், சூப், தேநீர்கூட விற்கிறார்கள். நூற்றுக்கணக்கான படகுகளில் பல வண்ணப் பொருட்களை, கரையில் நின்று பார்த்தால் பிரமாதமாக இருக்கும்.

அதிக அளவில் மிதக்கும் சந்தைகளைக் கொண்ட நாடு தாய்லாந்து. புகழ்பெற்ற மிதக்கும் சந்தைகளில் ஒன்று பாங்காக்கில் இருக்கும் டாம்னோயன் சடுவாக். இங்கே படகுகளின் எண்ணிக்கையும் அதிகம். மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தச் சந்தை அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும். மதியத்துடன் முடிந்துவிடும். பாங்காக்கில் உள்ள அம்பவா மிதக்கும் சந்தை மிகப் பெரிய சந்தை அல்ல.

இது மாலையில் மட்டும் இயங்கும் சந்தை. இப்படி இன்னும் சில சந்தைகள் தாய்லாந்தில் உள்ளன.

வியட்நாமின் மிகப் பெரிய மிதக்கும் சந்தை மெகோங் டெல்டா. தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இதே போல காய் பி மிதக்கும் சந்தையும் புகழ்பெற்றது.

இந்தியாவிலும் மிதக்கும் சந்தை எழில்கொஞ்சும் நகரின் தால் ஏரியில் இயங்கி வருகிறது. ஏரியில் மிதக்கும் படகு வீடுகளை நோக்கி, படகுகளில் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். ஏராளமான

பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஜில்லென்ற குளிரையும் தூரத்தில் பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
1980 : இத்தாலிய விமானமொன்று நடுவானில் மர்மமாக வெடித்தது: 81 பேர் பலி
 

வரலாற்றில் இன்று...

ஜுன் - 27

 

1709 : ரஷ்­யாவின் முதலாம் பியோத்தர் பொல்­டாவா என்ற இடத்தில் சுவீ­டனின் பன்­னி­ரண்டாம் சார்ள்ஸின் படை­களை வென்றான்.

 

1801 : எகிப்தின் கெய்ரோ நகரம் பிரித்­தா­னியப் படை­யி­ன­ரிடம் வீழ்ந்­தது.

 

1806 : ஆர்­ஜென்­டீனா, புவனஸ் அய­ர்ஸை பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.

 

756varlaru2.jpg1896 : ஜப்பான், சன்­ரிக்கு என்­னு­மி­டத்தில் நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 27,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 : கொரியப் போரில் பங்கு பற்­று­வ­தற்கு தனது படை­களை அனுப்ப ஐக்­கிய அமெ­ரிக்கா முடிவு செய்­தது.

 

1954 : உலகின் முத­லா­வது அணு­சக்தி மின் உற்­பத்தி மையம் மொஸ்­கோ­வுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்­கப்­பட்­டது.

 

1957 : அமெ­ரிக்­காவின் லூசி­யானா, மற்றும் டெக்ஸாஸ் மாநி­லத்தில் நிகழ்ந்த சூறா­வ­ளியில் 500 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

 

1967 : உலகின் முத­லா­வது ஏ.டி.எம். லண்டன் என்ஃ­பீல்டில் அமைக்­கப்­பட்­டது.

 

1974 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்ஸன் சோவியத் ஒன்­றி­யத்­துக்கு பயணம் மேற்­கொண்டார்.

 

1976 : இஸ்­ரேலில் இருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்ற விமா­ன­மொன்று கடத்­தப்­பட்டு உகண்­டா­வுக்கு திசை திருப்­பப்­பட்­டது.

 

1979 : குத்­துச்­சண்­டையில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக முஹம்­மது அலி அறி­வித்தார்.

 

1980 : இத்­தா­லியில் விமா­மொன்று நடு­வானில் மர்­ம­மாக வெடித்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 81 பேரும் உயி­ரிந்­தனர்.

 

1988 : பிரான்ஸில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 56 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1991 : ஸ்லோவே­னியா தனது விடு­த­லையை அறி­வித்த இரண்டாம் நாளில் யூகோஸ்­லா­வியா அதன் மீது படை­யெ­டுத்­தது.

 

2007 : டோனி பிளேயர் பிர­தமர் பத­வியைத் துறந்­ததைத் தொடர்ந்து கோர்டன் பிரவுண் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பிர­த­ம­ரானார்.

 

2008 : ஸிம்­பாப்வே ஜனா­தி­ப­தி­யாக ரொபர்ட் முகாபே மீண்டும் தெரிவானார்.

 

2015 : தாய்வானிலுள்ள உல்லாச நீரியல் பூங்காவொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக 510 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ரஷ்யாவில் உலக நாய்களின் கண்காட்சி
 

உலக நாய்கள் கண்காட்சி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

 

1759126.jpg

 

40 நாடுகளைச் சேர்ந்த 27,000 இற்கும் அதிகமான நாய்கள் இக்கண்காட்சியில் பங்குபற்றுகின்றன.

 

1759125.jpg

1759124.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன் 27: இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று. வாழ்த்துகள் மேடம்...

அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960 - களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். விடியற்காலையில் அம்மாவுடன் கொஞ்ச நேரம் வயல் வேலைகள் பார்க்கும் அவள், 25 கிலோமீட்டர் தூரத்தையும் ஓடியே பள்ளிக்குப் போய்விடுவாள். அவளது பெயர், உஷா.

மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இடையே சிறார்களைத் தேர்வுசெய்து, பந்தயங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மைதானம் ஒன்று, உஷா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருந்தது. ஒருநாள், அங்கே ஒரு கூட்டத்தைக் கண்டாள். அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்கள், கால் சராயும் ஷ§வும் அணிந்திருந்தார்கள். கூட்டமாக ஓடி பயிற்சி செய்தார்கள்.

மறுநாள், தனது ஊரில் இருந்து பள்ளிக்கு ஓடும்போது, அவர்களைப் போலவே பாவனை செய்துகொண்டு ஓடினாள். 'நானும் ஒருநாள், அவர்களைப் போல பயிற்சிபெறும் மாணவி ஆவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டபோது, உஷாவின் வயது ஆறு.

நாட்கள் ஓடின. ஒருநாள், அந்த மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடப்பதைக் கண்டாள். பள்ளிக்குப் போக வேண்டும் என்றது கடமை. ஓட்டப்பந்தயம் பார்க்க வேண்டும் என்றது ஆர்வம். இந்த மனப் போராட்டத்தில் ஓட்டப்பந்தயமே ஜெயித்தது. அவள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாள். பிறகு, அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. திடீரென, 'யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’ என்றார்கள். ஏழு வயது சிறுமியான உஷா, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, மற்ற மாணவிகளைவிட வேகமாக ஓடி, முதல் இடம் பிடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள்.

உஷா நினைத்தது நிறைவேறியது. 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்துகொண்டாள். பிறகு, அவளது அப்பா, உஷாவை அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.

காலில் ரப்பர் ஷ§வுடன் தனது கனவு வாழ்க்கையை நோக்கி ஓடத் தொடங்கினாள். வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், விளையாட்டுத் திறன் மிகுந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த, கேரள அரசு 250 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவந்தது. அதைப் பெற்றபோது, உஷாவின் வயது எட்டு.

மாவட்டம், மாநிலம் என, சப் ஜுனியர் பந்தயங்களில் அவளுக்கே முதல் இடம். மாநிலத்தில் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி, கண்ணூர் எனும் நகரில் இருந்தது. அங்கே, பயிற்சியோடு கல்வியும் பெறத் தேர்வு பெற்றாள் உஷா.

அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையில் ஒவ்வொரு வருடமும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸ் நடக்கும். 1979-ல், தனது 13-வது வயதில் அதில் கலந்துகொண்டாள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்ற அவளை, உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார், தனது கனவுகளின் ஆதர்ச மாணவியாகப் பெற்றார்.

ஒரே வருடம்தான். மிகக் கடுமையான பயிற்சியில், மிகச் சிறப்பாக உயர்ந்த அவளது அதிவேக ஓட்டத்தை வியக்காதவரே இல்லை. 1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசிய சாதனை. 1982-ல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் 102 பதக்கங்களை வென்று, இந்தியாவின் தங்கத் தாரகையாக மிளிர்ந்தார் பி.டி. உஷா. 'பையோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

''நான், பையோலியில் இருந்து என் பள்ளிக்கு ரயிலைவிட வேகமாக ஓடி, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்'' என்று சொல்லும் தங்கத் தாரகை பி.டி. உஷா, நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும் சுட்டி நாயகியே.

 
Vikatan EMagazines Foto.

vikatan

  • தொடங்கியவர்

மிஸ் யூ மெஸ்ஸி! டாப் 10 வீடியோக்கள்!

கால்பந்து ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத பெயர் 'மெஸ்ஸி'. கோல் அடிப்பது மட்டும் மெஸ்ஸியின் திறமை அல்ல. மற்றவர்களை கோல் அடிக்க வைப்பதும் மெஸ்ஸியின் திறமைகளில் ஒன்று. கிரிக்கெட்டில் எப்படி தோனியின் தலைமை பெரிதாக பேசப்படுகிறதோ.. அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி. கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதும் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் மெஸ்ஸி. இனி 'பாஸ் கிக்' பார்ப்பது கடினம். கால்பந்து, ஒருவர் சொன்ன பேச்சையெல்லாம் கேட்கும் என்ற அளவுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரை காண்பது அரிது... இனி மைதானத்தில் மெஸ்ஸி! மெஸ்ஸி! என்ற ஹை டெசிபல் ஆர்ப்பரிப்பு இருக்காது...மிஸ் யூ மெஸ்ஸி!

                                                                  மெஸ்ஸியின் டாப் 50 கோல்கள்!

 

ரொனால்டோ / மெஸ்ஸி


மெஸ்ஸி டாப் ஸ்கில்ஸ்

 

மெஸ்ஸி பெனால்டி பாஸ்

 

ஆங்க்ரி பேர்டு மெஸ்ஸி

 

மாஸ்டர் ஆஃப் ''ஃப்ரீ கிக்ஸ்''

 

மெஸ்ஸியின் கால் சொல்வதை பால் கேட்கும்

 

PASS 'BOSS' மெஸ்ஸி

 

மெஸ்ஸி 500

 

எமோஷனல் மெஸ்ஸி

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான 'மல்லிகை' டொமினிக் ஜீவா ஐயாவின் பிறந்தநாள் இன்று.

தனி நபராக நின்று மிக நீண்டகாலமாக இலங்கையில் மல்லிகை என்ற மாத இதழை வெளிக்கொண்டு வருகிறார்.
டொமினிக் ஜீவா சாகித்திய மண்டல பரிசை வென்றிருக்கிறார்.

13508989_1070412546340772_31371758335703

  • தொடங்கியவர்

ஜூன் 27: புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஹெலன் கெல்லர் நினைவு தினம் ஜூன் ஒன்று. வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து துரத்தும் பொழுது நின்று,நிதானித்து அதை வெல்ல முடியும் என்று உடற்குறைபாடுகளை கடந்து சாதித்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை காட்டுகிறது. இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது.  காய்ச்சல் போனதும் எல்லாம் சரியாகி விட்டது என்று பெரியவர்கள் நினைத்தார்கள். பேசும் திறனும்,பார்வையும் பறிபோனது.

இந்த குழந்தை அவ்வளவு தான் என்று எண்ணிய பொழுது மார்த்தா எனும் வேலைக்காரர் ராபின் சார்ல்சின் மகளின் நட்பு வரம் போல வந்து சேர்ந்தது. இடிக்காமல் ஓடவும்,கைகோர்த்து நடக்கும் அவரிடம் பழகினார் இளம்வயது ஹெலன்.

helen1.jpg


ஏழு வயதுக்குள் இந்த தோழிகள் இருவரும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அறுபது வெவ்வேறு குறியீடுகளை உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அக ஒளியருக்கான பள்ளியில் அவரை சேர்க்க முயன்ற பொழுது கடுமையாகமறுத்தார் ஹெலன். அவருக்கான ஆசிரியரை பல்வேறு இடங்களில் தேடி இறுதியில் ஆன் மான்ஸ்பீல்ட் சுல்லிவன் வந்து சேர்ந்தார்.

ட்ரக்கொமா எனும் கொடிய கண் வியாதி ஏற்பட்டு கண் பார்வை பறிபோன ஆனி  அக விழியோர் பள்ளியில் சேர்ந்த  அங்கே முதன்மையான மாணவி ஆனார். இருபது வயதை எட்டிய பொழுது தான் அவருக்கு அந்த முக்கியமான பணி வந்தது. ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்கும் பணி.

ஒவ்வொரு பொருளையும் உணர வைத்து தான் பாடம் நடத்துவார். DOLL என்று ஹெலனின் கையில் எழுதும் பொழுதே அவரை பொம்மையை தொட்டு உணர வைப்பார். வாட்டர் என்று ஒரு கையில் எழுதும் பொழுதே இன்னொரு கையில் நீரை ஓட விட்டு அதை உணர வைக்கிற அற்புதத்தை செய்தார்.

கல்லூரிக்கு ஹெலன் கெல்லர் போன பொழுது கூடவே ஆனியும் போவார். அவரின் கரங்களில் ஆசிரியர் பாடம் நடத்த நடத்த வார்த்தைகளை உடனடியாக ஆனி வரைந்து புரிய வைப்பார் என்றால் நீங்கள் எத்தகைய வேகம் அது என்று புரிந்து கொள்ளலாம். ஹெலன் கெல்லர் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றால் ஆணியோ ஆசிரியையாக சாதித்தார்

ஹெலன் கெல்லர் தன்னுடைய வாழ்க்கை கதையை என் கதை என்று இருபத்தி நான்கு வயதில் எழுதி வெளியிட்ட பொழுது அது பரவலான் கவனம் பெற்றது. நாற்பது வருடகாலம் ஹெலன் கெல்லருக்கு ஆணி ஆசிரியராக இருந்தார். ஹெலன் கெல்லர் பெண்களுக்கு வாக்குரிமை,அக ஒளியருக்கு உரிமைகள் என்று பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஐம்பத்தி நான்கு நூல்கள் எழுதி பரவலாக தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை விதைத்தார். அவர் எண்பத்தி எட்டு வயதில் மறைந்த பொழுது சாதிக்க உடலின் ஆற்றலை விட மனதின் முனைதலே முக்கியம் என்கிற வலுவான பாடத்தை உலகுக்கு தந்திருந்தார்.

vikatan

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: மெஸ்ஸி... நீ ரொம்ப தைரியசாலிப்பா!

 

 
மெஸ்ஸி | கோப்புப் படம்
மெஸ்ஸி | கோப்புப் படம்

கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. மாரடனாவின் வாரிசாகக் கருதப்படும் மெஸ்ஸியின் திடீர் ஓய்வை நெட்டிசன்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

SENTHILNATHAN ‏

அர்ஜெண்டினாவுக்கு அதிர்ஷ்டமில்லையென்றே நினைக்கத்தோன்றுகிறது. இருந்தாலும் மெஸ்ஸி இப்படி தவற விட்டிருக்க வேண்டாம். அதுதான் முதல் கோணலாயிற்று.

இன்ஜினீயர் ‏

மெஸ்ஸி, ரொனோல்டோ இந்த ரெண்டு பெயர தவிர வேற எதுவும் தெரியாதுங்க. ஆனா புட்ஃபாலை பத்தி தெரிஞ்ச மாதிரி கம்பு சுத்துவோம்.

Cl8PrUAUYAAeqHi_2911017a.jpg

நாகசோதி நாகமணி

வாழ்க்கை என்பது மெஸ்ஸி போல் வேகமாக ஓய்வு கொடுத்து செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தால் 90 வயது முதியவர் போல் இழுத்துக்கொண்டு இருக்கின்றது,,,

Castro Rahul

கோபத்தில, சோகத்தில எடுக்கிற எல்லா முடிவுகளுமே தவறானதுதான். #மெஸ்ஸி

ஆல்தோட்டபூபதி ‏

தோல்விகளை விட விமர்சனங்களே கொடூரமானவை. #மெஸ்ஸி

உன்னை போல் ஒருவன் ‏

மெஸ்ஸி, ரொனால்டோ தெரிஞ்ச ரெண்டே ஃபுட்பால் ப்ளேயர்ஸ்... ஒருத்தர் போயிட்டார். இனி நா என்ன செய்ய...

ℳr ரோசாபூ தையல்காரன் ‏

மெஸ்ஸி ரிட்டைர்டாம். ரொம்ப முக்கியம் நாட்டுக்கு

V2.0

நான் +1 படிக்கிறப்ப டீம்ல ஜாய்ன் பண்ணிட்டு பல சாதனைகள படைச்சுட்டு ரிட்டைர்டே ஆகிட்டார் மெஸ்ஸி..

ஆனா நான் இன்னும்..

Cl8LYS4UsAAb8TP_2911020a.jpg

வாலிபன் ‏

கால்பந்தில் ஒரு மணிமகுடம் இன்று அதை விட்டு அப்பால் சென்றது. #லியோனல் மெஸ்ஸி. - வருத்தங்களுடன் ரசிகன்...

குழந்தை அருண்

ரொனால்டோவை கம்பேர் பண்ணினா, மெஸ்ஸி நல்ல ப்ளேயர். ஸ்ட்ரெய்ட்ல செமயா சிக்ஸ் அடிப்பாரு.. மை ஃபுட்பால் ட்வீட்.

நோபிட்டா

விடிவி ஜெஸ்ஸியே ரிட்டையர்ட் ஆகிடுச்சி. . .மெஸ்ஸி ரிட்டையர் ஆனா எனக்கென்னடா என் சிப்ஸூ :-/

வாலீ

கவரிமான் பரம்பரை மெஸ்ஸி

ரெட் சுரேஷ் ‏

இவ்ளோ அர்ஜெண்டா இன்னாத்துக்கு அர்ஜெண்டினா டீம விட்டு மெஸ்ஸி போனார்?

எமி சிஸ்ஸி

மெஸ்ஸி இல்லாம ஐ ஹேட் ஃபுட்பால் :(

Boopathy Murugesh

கோப்பை வென்ற சிலி வீரர்களை விட மெஸ்ஸி அதிகம் சம்பாதிக்கிறார். ஆனாலும் கோப்பையை இழந்ததற்கு அழுகிறார்.. பணத்தை தாண்டி இங்கு நிறைய உண்டு..

RaJee

29 வயசுல ஆனாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா! #மெஸ்ஸி

கேயன்

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் மெஸ்ஸி யானைதான்!!

எட்வின்

சில தோல்விகள் ஏற்படுத்தும் மன அழுத்தங்கள் சொல்லி மாளாதவை. #மெஸ்ஸி

Joe Selva

ஃபுட்பால் ஃபேன்: மெஸ்ஸி ஓய்வு அறிவிச்சது தப்பு. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.

joe_selva_vadi_2911018a.jpg

மீ: மெஸ்ஸி எந்த டீம்னு சொல்லுடா. அடேய் சொல்லிட்டு போடா

செந்தில் குமாரு

38 வயசு வரைக்கும் காத்திருந்ததால் தான் சச்சினுக்கு ஒரு உலக கோப்பை கிடைத்தது! 29 வயசுல மெஸ்ஸி அவசர பட்டுடியே குமாரு

Viknesh

புட்ஃபாலின் கடவுள் மெஸ்ஸி என்றால் அது மிகையாகாது.!!

சரக்கஸம் ❤ ‏

மெஸ்ஸி அழுது நான் பாத்த நாள்

Prabha Karan

ஃபுட்பால் பத்தி பெருசா தெரியாது. ஆனா இந்த மனுஷன் ஜாம்பவான்னு மட்டும் தெரியும். ‪#‎மெஸ்ஸி‬.

tamil.thehindu

  • தொடங்கியவர்
Swim Week Colombo fashion show
 

ஸ்விம் வீக் கலம்போ பெஷன் ஷோ (Swim Week Colombo fashion show), கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகியது.

 

17607191.jpg

 

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட நீச்சலுடைகள் இக் கண்காட்சியில் பல நாடுகளைச் சேர்ந்த மொடல்களினால் காட்சிப் படுத்தப்பட்டன.

 

17607192.jpg

 

கொழும்பு துறைமுகத்தில் முதல் இரு தினங்களில் நடைபெற்ற இந்த பெஷன் ஷோ வில் புதிய ரக நீச்சலுடைகளை மொடல்கள் காட்சிப்படுத்துவதை படங்களில் காணலாம்.                   

 

17607193.jpg

 

17607---------.-----.-.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13559076_1070415236340503_27266323272175

உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர், தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்னின் பிறந்த நாள்.
Happy Birthday Dale Steyn

  • தொடங்கியவர்

p32a.jpg

னசுக்குள் மகுடி ஊதி மயக்க வைக்கும் தென்னிந்திய சினிமா அழகிகள் இவர்கள்...

டோலிவுட் பூஜா ஜாவேரி:

குஜராத்தில் அவதரித்த குல்மொஹர் மலர். மும்பையில் படிப்பும் மாடலிங்குமாய் வளர்ந்தவர். நடனத்தில் ஈடுபாடு காட்டியதால் படிப்படியாக உதவி நடன இயக்குநர் வரை பாலிவுட்டில் உயர்ந்தவரை ‘பாம் போலேநாத்’ படத்துக்காக ஹைதராபாத்துக்குக் அழைத்து வந்தார் டைரக்டர் கார்த்திக் வர்மா. படம் ஃப்ளாப் ஆனாலும் அந்தப் படத்து ஹீரோ நவ்தீப்புடன் கிசுகிசுக்கப்பட்டார். அந்தப் பரபரப்பு அங்கே அடங்குவதற்குள் தமிழில்  ‘தொடரி’ படத்தில் தனுஷுடன் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு வந்து பயன்படுத்தி இருக்கிறார். ‘தொடரிக்குப் பிறகு தமிழில் ஹீரோயினாக நடிப்பேன்’ எனச் சொல்லி இருக்கிறார். பூஜா ஜாங்கிரி!

சாண்டல்வுட் சுபிக்‌ஷா:

p32b.jpg

லாப்பழப் பாலக்காட்டில் பிறந்தாலும் கர்நாடகா வெங்காய பெல்லாரியில் வளர்ந்தவர். பரதநாட்டியம் இவர் ரத்தத்தில் ஊறிப்போய் கிடக்கிறது. சென்னையில் ‘ஆடல் கலைமணி’ விருது வாங்கியவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது நம் இயக்குநர் இமயம் தன் ‘அன்னக்கொடி’க்கு. 2014-ல் ‘மனம் கொத்திப் பறவை’யின் கன்னட ரீமேக் ‘அஞ்சடா கன்டு’வில் சாண்டல்வுட்டில் தகதகத்தவர், விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’வில் ஹீரோயினாக நடித்தார். இப்போது கன்னடத்திலும் மலையாளத்திலும் எக்கச்சக்க படங்களில் நடித்தாலும் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இங்கேயே சுபிக்‌ஷமா இருக்கணும் சுபி!

மல்லுவுட் மீரா நந்தன்:

p32c.jpg

கொச்சின் தேவதைக்கு நடிகை திவ்யா உண்ணி தூரத்து சொந்தம். மோகன்லாலுடன் ‘டேஸ்ட் பட்ஸ்’ விளம்பரத்தில் குட்டிப்பொண்ணாய் நடித்தவருக்கு ஏசியாநெட் சேனலில் காம்பியரிங் வேலை கிடைத்தது. எக்கச்சக்க ஃபேன்ஸ் டி.வி-யால் கிடைக்க, லால் ஜோஸ் இயக்கத்தில் செமையாய் ‘முல்லா’ படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடித்தார். படம் அங்கே செம ஹிட் ஆக தமிழில் ‘வால்மீகி’, ‘அய்யனார்’ என சில பட வாய்ப்புகள் கிடைத்தன. இபோது அரை டஜன் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் மீரா. மீராவோட கேரளத்துக் கூந்தலுக்குப் பெரும் ரசிகர் கூட்டமே உண்டு!

vikatan

  • தொடங்கியவர்

'பாவை விளக்கு' , 'வேங்கையின் மைந்தன்', சித்திரப்பாவை, நெஞ்சின் அலைகள் போன்ற அற்புத நாவல்களைப் படித்துத் தந்த மறைந்த எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள் இன்று.

13494871_1070413336340693_85818986882402

ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.
பல சிறுகதைகளையும் எழுதியுள்ள அகிலனின் பாவை விளக்கு உட்பட சில படைப்புக்கள் திரைப்படங்களாக மாறியுமுள்ளன.

  • தொடங்கியவர்

13495365_1070413663007327_28414411836279

இளம் நடிகை கார்த்திகா நாயரின் பிறந்தநாள் இன்று.
முன்னாள் நடிகை ராதாவின் புதல்வி இவர்.
Happy Birthday Karthika nair

  • தொடங்கியவர்

13558611_1070409243007769_88195233297008

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த துடுப்பாட்ட வீரரும், சர்ச்சைகள் பலவற்றின் நாயகனுமான கெவின் பீட்டர்சன்னின் பிறந்தநாள்
Happy Birthday Kevin Pietersen

  • தொடங்கியவர்

சிறுவர்கள் ஓட்டும் ரயில்!

 
Desktop_2867658f.jpg
 

குழந்தைகளால் இயக்கப்படும் சில ரயில் சேவைகளில் ஒன்று கியர்மெக்வசுட். ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் இயங்கிவருகிறது. இது குழந்தைகளுக்கான பொம்மை ரயில் அல்ல. பொழுதுபோக்குப் பூங்காவில் இயங்கிவரும் ரயிலும் அல்ல.

நிஜமான ரயில். நிஜமான ரயில் நிலையங்கள். டீசலில் இயங்கும் என்ஜின்கள் ரயில் பெட்டிகளை இழுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைகின்றன. இங்கே குழந்தைகள் பயணிகள் அல்ல, ரயில்வே ஊழியர்கள்!

10 முதல் 14 வயதுள்ள குழந்தைகள், பெரியவர்களின் கண்காணிப்பில் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். ரயிலை ஓட்டுவதும் பராமரிப்புப் பணிகளைச் செய்வதும் மட்டுமே பெரியவர்கள். மற்ற வேலைகள் அனைத்தையும் குழந்தைகளே செய்கிறார்கள். சிக்னல் மாற்றுகிறார்கள். கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார்கள். பயணச் சீட்டு கொடுக்கிறார்கள். பயணச் சீட்டைப் பரிசோதிக்கிறார்கள். ரயில் வருவது, கிளம்புவது குறித்த அறிவிப்புகளைச் செய்கிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது குழந்தைகள், ரயில்வே துறையைப் பற்றி அறிந்துகொள்ளவும் வேலைகளைக் கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற சிறிய தூரங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரயில் நிலையங்களும் தொடங்கப்பட்டன.

1932-ம் ஆண்டு மாஸ்கோவில் கார்கி பார்க்கில் முதல் குழந்தைகள் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் 1948-ம் ஆண்டு குழந்தைகள் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, 50 குழந்தைகள் ரயில் நிலையங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. எஞ்சிய சில ரயில் நிலையங்கள் இன்றும் இயங்கி வருகின்றன. இன்று இவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய முக்கிய இடங்களாக மாறிவிட்டன.

புடாபெஸ்ட் ரயில் நிலையம் தொடங்கி 69 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தன் சேவையைப் பிரமாதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது! 11.2 கி.மீ. தூரத்துக்குச் சமவெளி, குன்றுகளைக் கடந்து செல்கிறது இந்த ரயில். நடுவில் 4 நிறுத்தங்களில் நிற்கிறது.

ரயில்வேயில் ஊழியர்களாகப் பணியாற்ற இன்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், வேலை செய்ய வாய்ப்பு சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

அவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, 4 மாதங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. பிறகு ஓராண்டுக்கு ஊழியர் உரிமம், அடையாள அட்டை, சீருடை போன்றவை அளிக்கப்படுகின்றன.

மாதத்துக்கு 2 முறை ரயில்வேயில் பணிபுரியும் வாய்ப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும். அவர்களின் படிப்புக்கு இடைஞ்சல் இல்லாதவாறு இந்த வேலை கொடுக்கப்படுகிறது. இங்கே பணிபுரியும் குழந்தைகள் ரயில்வே அதிகாரிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில்களும் ரயில் நிலையங்களும் குழந்தைகளால் இயக்கப்படுகின்றன. இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இங்கே வேலை செய்திருக்கிறார்கள்! இன்னும் 500 பேர் வேலை செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.

குழந்தைகளால் அதிக காலம் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமை கியர்மெக்வசுடுக்குக் கிடைத்திருக்கிறது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்று விட்டது!

tamil.thehindu

  • தொடங்கியவர்

13521879_655049941312014_520623144205600

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
1997 : குத்துச்சண்டைப் போட்டியில் ஹொலிபீல்ட்டின் காதை மைக் டைசன் கடித்தார்
 

வரலாற்றில் இன்று....

ஜுன் - 28

 

1651 : 17ஆம் நூற்­றண்டின் மிகப் பெரும் போர் போலந்­துக்கும் யுக்­ரை­னுக்கும் இடையில் ஆரம்­ப­மா­னது.

 

1776 : ஜோர்ஜ் வோஷிங்­டனை கடத்தத் திட்­ட­மிட்­ட­தற்­காக அவ­ரது மெய்ப்­பா­து­காப்­பா­ள­ராக இருந்த தோமஸ் ஹின்க்கி தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

757Tyson-and-Holyfield.jpg1838 : பிரிட்­டனில் விக்­டோ­ரியா ராணிக்கு முடி­சூ­டப்­பட்­டது.

 

1881 : ஆஸ்­தி­ரி­யாவும் சேர்­பி­யாவும் இர­க­சிய உடன்­பாட்டை எட்­டின.

 

1894 : தொழி­லாளர் தினத்தை உத்­தி­யோ­கபூர்வ விடு­முறை தின­மாக அமெ­ரிக்கா பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

 

1904 : “நோர்ஜ்" என்ற டென்மார்க் பய­ணிகள் கப்பல் வடக்கு அட்­லாண்டிக் சமுத்­தி­ரத்தில் சிறு திட்டு ஒன்­றுடன் மோதி மூழ்­கி­யதில் 635 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1914 : ஆஸ்­தி­ரி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் பிரான்ஸ் பேர்­டினண்ட், மற்றும் அவ­ரது மனைவி சோஃபி இரு­வரும் சேர்­பி­யாவில் கொல்­லப்­பட்­டனர். இச்­சம்­பவம் முதலாம் உலகப் போர் ஆரம்­பிப்­ப­தற்கு வழி­வ­குத்­தது.

 

1919 : முதலாம் உலகப் போர் பாரிஸில் போர்­நி­றுத்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு போர் முடி­வுக்கு வந்­தது.

 

1922 : ஐரிஷ் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­னது.

 

1940 : பெச­ரா­பி­யாவை (தற்­போ­தைய மோல்­டோவா) ருமே­னி­யா­விடம் இருந்து சோவியத் ஒன்­றியம் கைப்­பற்­றி­யது.

 

1942 : சோவியத் யூனிய­னுக்கு எதி­ராக பாரிய படை நட­வ­டிக்­கையை ஜேர்­மனி ஆரம்­பித்­தது.

 

1950 : தென்­கொ­ரிய தலை­நகர் சியோலை வட கொரியா கைப்­பற்­றி­யது.

 

1967 : கிழக்கு ஜெரு­ச­லேமை இஸ்ரேல் தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.

 

1981 : ஈரா­னிய தலை­நகர் தெஹ்­ரானில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 73 பேர் பலி­யா­கினர்.

 

1994 : ஓம் ஷின்­றிக்­கியோ என்ற மத­வ­ழி­பாட்டுக் குழு­வினர் ஜப்­பானில் மட்­சு­மோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்டு 660 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1997 : அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடை­பெற்ற உலக அதி­பார குத்­துச்­சண்டைப் போட்­டியில் இவான்டர் ஹொலி­பீல்ட்டின் காதைக் கடித்தார்  குற்றச்சாட்டில் மைக் டைசன் அதனால் தகு­தி­நீக்கமும் செய்­யப்­பட்டார்.

 

2004 : ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஈராக்கியர்களிடம் ஐக்கிய அமெரிக்கா ஒப்படைத்தது.

 

2009 : ஹொண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் ஜனாதிபதி மனுவெல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13516338_509764089216200_788263230401742

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.