Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

செல்ஃபியில் எத்தனை ரகங்கள்?

 
selfiee_2870848f.jpg
 

செல்ஃபிக்களும் தெரியும், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரை செல்ஃபி மோகம் பிடித்து ஆட்டிப் படைப்பதும் தெரியும். ஆனால் செல்ஃபியில் எத்தனை ரகங்கள் இருக்கின்றன என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதிலை இன்போகிராபிக் எனப்படும் அழகான வரைபடச் சித்திரமாக அளிக்கிறது மைபிரெஸ்ட் இணையதளம்.

செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயுடன் எடுத்துக்கொள்ளும் டெலிபி, குழந்தை பிறந்து பிறகு எடுத்துக்கொள்ளும் பர்த்தி, நட்சத்திரங்களின் செல்ஃபி மற்றும் முகம் மாற்றி வெளியிடும் செல்ஃபி மற்றும் குழுவாக எடுத்துக்கொள்ளும் குரூப்பி ஆகிய ரகங்களைச் சுட்டிக்காட்டுகிறது, குறிப்பிட்ட செயலின் அடிப்படையிலான செல்ஃபிக்களையும் இந்த வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.

அப்படியே மேக்கப் இல்லாத செல்பி, விவசாயிகளின் செல்ஃபி, பணக்காரர்களின் செல்ஃபி ஆகியவற்றைப் பற்றி விளக்கம் அளித்து, குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பின் எடுக்கப்படும் செல்ஃபிக்களையும் வகைப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் தவிர செல்ஃபி எடுக்க மாற்று வழிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

செல்ஃபிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தக்கூடிய இந்த வரைபடத்தின் முக்கிய அம்சம், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விபரீத செல்ஃபி பழக்கங்களையும் அடையாளம் காட்டி எச்சரித்திருப்பதுதான்.

செல்ஃபி வகைகளை அறிய: http://www.mybreast.org/the-evolution-of-the-selfie /

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறந்து போன தாய் யானையை முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை...! - நெஞ்சை உருக்கும் வீடியோ!

கோவை: கோவையில் தாய் யானை இறந்தது தெரியாமல், அதை குட்டி யானை பல மணி நேரம் எழுப்ப முயன்ற பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
 

கோவையில் அடுத்தடுத்து யானைகள் பலியாகி வரும் நிலையில், இன்று காலை மற்றொரு பெண் யானை இறந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை,  உடல் நலக்குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது.

குட்டி யானையுடன் வந்தபோது, திடீரென பள்ளத்தில் மயங்கி விழுந்த பெண் யானை, அங்கேயே இறந்தது. இந்த சம்பவத்தின் போது உடனிருந்த குட்டி யானை,  தாய் யானை இறந்தது தெரியாமல் அதனை  முட்டி முட்டி எழுப்ப முயன்றது. பல மணி நேரம் யானையை தட்டியும், முட்டியும் எழுப்ப முயன்ற குட்டி யானை, யானை எழுந்திரிக்காததால் ஓலமிட்டது.

 

 


மேலும் யானைக்கு அருகில் யாரும் வர விடாமல், வர முயன்றவர்களை துரத்தியது. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குட்டி யானை அங்கிருந்து சென்ற பின்னர் யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

vikatan

  • தொடங்கியவர்

அழகியே... அரசியே...

 

p42a.jpg

லகம் முழுக்க இருக்கும் அழகான செய்தித் தொகுப்பாளினிகளைப் பட்டியல் இட்டிருக்கிறது ‘வொண்டர்ஸ் லிஸ்ட்’ இணையதளம். சும்மாத் தெரிஞ்சு வெச்சுக்குவோமே பாஸ்...

ஜிகி ஸ்டீன் : ஏபிசி, என்பிசி, சிபிஎஸ், ப்ளூம்பர்க் டி.வி எனப் பல டி.வி-களில் பிசினஸ், வேலைவாய்ப்பு போன்ற செய்திகளைத் தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர். அழகான முக வசீகரமான செய்தியாளராய் அறியப்படும் இவர்தான் பின்லேடன் கொல்லப்பட்டபோது பிரேக்கிங் நியூஸை முதன்முதலில் உலகம் பூரா ‘ஏபிசி நியூஸ்’க்காக வழங்கினார். பென்ஷன், இன்ஷூரன்ஸ் முறைகேடுகளை ரிப்போர்ட்டிங் செய்து அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் இவர். செம!

p42b.jpg

ப்ரூக் பால்ட்வின் : அமெரிக்க சேனல் சி. என். என்-னில் நியூஸ் ரூம் செய்தி வாசிப்பபாளினி. இரண்டு மணியில் இருந்து நான்கு மணிவரை மேடத்துக்காகவே டி.ஆர்.பி ரேட்டிங் பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நேர்த்தியான டயலாக் டெலிவரி. ட்விட்டரில் எக்குத்தப்பான போஸ் கொடுப்பது ப்ரூக் பால்ட்வின் ஹாபி. போல்டான லேடி.

p42c.jpg

கர்ட்னி ஃப்ரையல் : அமெரிக்காவின் நம்பர் ஒன் டி.வி தொகுப்பாளினி. கேடி டி.வி (கே டிவி இல்லை!)யில் துண்டு துக்கடா தொகுப்பாளினியாய் வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு ஃபாக்ஸ் டி.வி-யில் 2007-ல் சேர்ந்து விளையாட்டாய் விளையாட்டுச் செய்தியை வாசிக்க ஆரம்பித்தபோது எக்கச்சக்க விசிறிகள். இப்போது கேடி டி.வி-யில் அரசியலில் ஆரம்பித்து சினிமா வரை பிரபலங்களோடு கதைக்கிறார். கர்ட்னிக்கு கரகோஷம் எழுப்புங்கள்!

p42d.jpg

ஜென்னா லீ : ஃபாக்ஸ் நியூஸின் பரபர செய்தியாளர். பத்திரிகையாளராய் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வேலை பார்த்தவர். பிசினஸ் செய்திகளை ஈஸியாய் மெருகேற்றி வழங்குவதில் கில்லாடி. ‘மணி ஃபார் ஃப்ரேக்ஃபாஸ்ட்’ என்ற நிகழ்ச்சி செம ஹிட். சூப்பர் லீ.

p42e.jpg

டாம்ரான் ஹால் : என்பிசி என்ற அமெரிக்க சேனலின் செய்தி வாசிப்பாளர். ரிப்போர்ட்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் செய்தித் தொகுப்பாளினியாக 2007-க்குப் பிறகு மாறினார். இப்போது டாமுக்கு சினிமா வாய்ப்புகளும் வருகின்றன. ஹால் இனிமே சினிமா ஆள்!

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p99a.jpg

facebook.com/sowmya.ragavan: `டிரெஸ் நல்லா இருக்கா?' என்பது முதல் சுற்று.

`எனக்கு நல்லா இருக்கா?' என்பது அரை இறுதிச் சுற்று.

`இந்த டிரெஸ்ல நான் நல்லா இருக்கேனா?' என்பது இறுதிச்சுற்று.

facebook.com/nelsonxavier08: வழி தவறி (?!) வந்த ஒரு யானையை, பிணமாக காட்டுக்குத் திருப்பி அனுப்புகிறோம் என்றால், உண்மையில் யார் மிருகம்?

twitter.com/i_am_v_jey: சோட்டா பீம்கூட காட்டுலயும் மேட்டுலயும் ஃப்ரெண்ட்ஸோடு விளையாடுறான். பாவம், இந்தப் பிள்ளைங்க அவன் விளையாடுறதை டி.வி-யில் பார்த்துட்டு வீட்டுக்குள்ளேயே கிடக்குதுக!

twitter.com/sundartsp: ஒரே ராக்கெட்ல இருபது சாட்டிலைட்டாம்... ஷேர் ஆட்டோ கண்டுபிடிச்ச ஊருடா!

twitter.com/vandavaalam: துணி ஊறவெச்சுருக்கேன் என்பதுபோல் மரண பயம் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.

twitter.com/itisLekha: உங்க கண்ணுக்கு நாங்க வாஷிங் மெஷினாவும் குக்கராவும் தெரியுற வரைக்கும், எங்க கண்ணுக்கு நீங்க ஏ.டி.எம் டப்பா மாதிரிதான் தெரிவீங்க!

twitter.com/ZhaGoD: ஆமா... அந்த 570 கோடி ரூபாய் என்னதான்யா ஆச்சு? அது பணமே இல்லை, பழைய லாட்டரிச் சீட்டுனாச்சும் கேஸை முடிச்சீங்களா... இல்லையா?!

twitter.com/pshiva475:  முன்னாடி எல்லாம் பவுடர் அடிச்சு நல்லா மேக்கப் போட்டு போட்டோ எடுத்தாங்க! இப்போ, சிம்பிளா போட்டோ எடுத்துட்டு மேக்கப் போடுறாங்க!

twitter.com/kEdi_kRRisH: நீங்க ஆபீஸுக்கு லேட்டா வந்தா, போட்டுக்குடுக்க நூறு பேர் இருப்பாங்க. ஆனா, ஆபீஸைவிட்டு லேட்டா போறதைப் பார்க்க ஒரு பய இருக்க மாட்டான்!

twitter.com/bommaiya: ஓடுற அத்தனை ட்ரெய்ன்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டிவெச்சுட்டு, `திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்கள்'னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ்  பண்றாங்க!

p99b.jpg

twitter.com/David_EXIM: `உங்களை மாதிரி இல்லை. நம்ம பையனை நான் நல்லவனா வளர்க்கிறேன்'கிறா... # எவ்ளோ நுட்பமா எங்க அம்மாவைத் திட்றா பாருங்கய்யா!

twitter.com/aruntwitz: மொபைல் கேமராவுக்கு விதவிதமா போஸ் கொடுக்க தெரியுது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு மட்டும் முகத்தை எப்படி வெச்சிக்கிறதுனுதான் தெரியலை!

twitter.com/dhanalakshmirs: கடல் சங்கைக் கண்டவுடன் காதில் வைத்துக் கேட்கும் அளவுக்கு வாழ்வின் சுவாரஸ்யங்கள் மீதம் இருக்கின்றன!

twitter.com/BoopatyMurugesh:  ஒரே வாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் ஓட்டுக்கு பணம் தர முடிந்த தேசத்தில், ஒன்றரை வருடமாக எல்லோருக்கும் ஆதார் கார்டு தர முடியவில்லை :-)

twitter.com/Shanthhi:  சில தோழிகளின் குடும்பப் பிரச்னைகளைக் கேட்கும்போது ரொம்பப் பாவமா இருக்கு... அவங்க குடும்பத்துல இருக்கிறவங்களை நினைச்சு!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜுலை - 06

 

640 : அமீர் இபின் அல் அஸ் தலை­மை­யி­லான அரே­பிய படைகள், பைஸாண்டைன் ராஜ்­ஜிய படை­களை எகிப்தின் ஹேலியோ பொலிஸ் நக­ருக்கு அருகில் தேற்­க­டித்­தன. 

 

1044 : ஹங்­கேரி மீது ரோமப் பேர­ரசின் மன்னர் மூன்றாம் ஹென்றி,  படை­யெ­டுத்தார்.

 

762canada---Varalaru.jpg1189 : முதலாம் ரிச்சார்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.

 

1483 : மூன்றாம் ரிச்சார்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.

 

1484 : போர்த்­துக்­கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்­ட­றிந்தார்.

 

1535 : சேர் தோமஸ் மோர், தேசத் துரோ­கத்­துக்­காக இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்­றி­யினால் தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1560 : ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் எடின்­பரோ ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1785 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நாணய அல­காக டொலர் தெரி­வு­செய்­யப்­பட்­டது.

 

1854 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் குடி­ய­ரசுக் கட்­சியின் முத­லா­வது மாநாடு மிச்­சிகன் மாநி­லத்தில் நடை­பெற்­றது.

 

1885 : பிரெஞ்சு இர­சா­ய­ன­வி­ய­லாளர் லூயி பாஸ்டர் தான் கண்­டு­பி­டித்த தடுப்­பூசி மருந்தை விசர் நாய் ஒன்­றினால் கடி­பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறு­வனில் வெற்­றி­க­ர­மாகச் சோதனை செய்தார்.

 

1892 : பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தின் முத­லா­வது இந்­தியப் பிர­தி­நி­தி­யாக தாதாபாய் நௌரோஜி  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

 

1893 : அயோ­வாவின் பொமெரோய் நகரில் ஏற்பட்ட சூறா­வ­ளி­யினால் 71 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1908 : ரொபேர்ட் பியரி ஆர்க்­டிக்­குக்­கான தனது பய­ணத்தை ஆரம்­பித்தார். இப்­ப­ய­ணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.

 

1939 : ஜேர்­ம­னியில் யூதர்­களின் கடைசி தொழிற்­சா­லைகள் மூடப்­பட்­டன.

 

762ak-47.jpg1944 : அமெ­ரிக்­காவின்ன் கனெக்­டிகட் மாநி­லைத்தில் கலை அரங்கில் ஏற்­பட்ட பெரும் தீயில் சிக்­கிய 168 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1947 : சோவியத் ஒன்­றியம் ஏகே-47 துப்­பாக்­கி­களை தயா­ரிக்க ஆரம்­பித்­தது.

 

1957 : அல்­தியா கிப்ஸன், விம்­பிள்டன் டென்னிஸ் சுற்­றுப்­போட்­டியில் சம்­பி­ய­னான முதல் கறுப்­பின பெண் ஆனார். 

 

1962 : இலங்கைப் பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்­காவைக் கொலை செய்த குற்­றத்­திற்­காக சோமா­ராம தேரர் என்ற பௌத்த பிக்­கு­வுக்கு தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1964 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக மாலாவி பிர­க­டனம் செய்­தது.

 

1966 : மலாவி குடி­ய­ர­சா­கி­யது.

 

1967 : நைஜீ­ரியப் படை­யினர், தனி நாடு கோரிய பயாஃப்ரா பிராந்­தி­யத்­தினுள் நுழைந்து போரை ஆரம்­பித்­தனர்.

 

1988 : வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 167 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

2005 : லண்டன் நகரம் 2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளை­யாட்­டு­களை நடத்தத் தெரி­வு­ செய்­யப்ட்­டது.

 

 2006 : 44 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்தோ - சீனப் போரின் போது மூடப்­பட்ட இந்­தி­யாவின் சிக்­கி­மையும் திபெத்­தையும் இணைக்கும் 'நது லா பாலம்; மீண்டும் திறக்­கப்­பட்­டது.

 

2013 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­பி­ரான்­சிஸ்கோ விமான நிலை­யத்தில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் அவ்விமானத்திலிருந்த 307 பேரில் மூவர் பலியானதுடன் 181 பேர் காயமடைந்தனர்.

 

2013 : கனடாவின் கியூபெக் மாநிலத்தில் எண்ணெய் ரயில் ஒன்று பாதையைவிட்டு விலகி தீப்பற்றியதால் 47 பேர் உயிரிழந்ததுடன், 30 இற்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையாகின.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13567330_10154755950094578_7943943504749

  • தொடங்கியவர்

13603542_1075803292468364_10747514227167

ஹொலிவூட்டின் புகழ்பெற்ற முன்னணி அதிரடி நட்சத்திரம், இன்றும் ரம்போ, ரொக்கி படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சில்வெஸ்டர் ஸ்டலோன் பிறந்தநாள்
Happy Birthday Sylvester Stallone

 

 

ஜூலை 6: சில்வஸ்டர் ஸ்டால்லோன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

ஹாலிவுட்டின் அற்புதமான ஹீரோக்களில் சில்வஸ்டர் ஸ்டால்லோன்னுக்கு தனி
இடம் உண்டு. எக்கச்சக்க ஹிட்களை தொடர்ந்து கொடுக்கும் அவரின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள்,போராட்டங்கள் எல்லாமும் கேட்பவரை
உத்வேகப்படுத்தும்.

அவரின் முகத்தின் வலது பாகம் செயலிழந்து இருந்தது. அவரின் பேச்சு தெளிவாக
இருக்காது. ஹாலிவுடில் நடிக்கலாம் என்று வாய்ப்புகள் தேடிப்போனால் நிராகரிப்பே அவருக்கு பெரும்பாலும் பரிசாக கிடைத்தது. நியூ ஜெர்ஸி பேருந்து டெர்மினலில் பல மூன்று வாரம் தங்க இடமில்லாமல் தூங்கிக்கொண்டு இருந்தார் அவர். வறுமை வாட்டியெடுக்க தன்னுடைய செல்ல நாயை வெறும் இருபத்தைந்து டாலருக்கு விற்றார் அவர்

முகமது அலியின் குத்துச்சண்டை போட்டியை பார்த்ததும் தான் அவருக்கு ராக்கி படத்துக்கான கதை தோன்றியது. அதோடு பலரின் கதவுகளை தட்டினார். கதைபிடித்திருந்தாலும் நீ நடிக்க கூடாது என்று சொல்லி ஒன்னே கால் லட்ச டாலரில் துவங்கி மூன்று லட்சம் டாலர் வரை சம்பளம் பேசினார்கள். ஆனால்,நான் நடிப்பேன் என்று உறுதியாக அவர் நிற்க வெறும் முப்பத்தைந்து ஆயிரம் டாலர் மட்டுமே அவருக்கு சம்பளம் என்றானது.

அவரின் செல்ல நாயை அதில் பதினைந்தாயிரம் டாலரை செலவு செய்து கண்டுபிடித்து படத்தில் நடிக்க வைத்தார். படம் இருநூறு மில்லியன் டாலர்களை அள்ளியது. தோல்விகளுக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முன்னேறுவது தான் வாழ்க்கையை அழகாக்குகிறது
இல்லையா ?

 

 
Vikatan EMagazines Foto.

vikatan

  • தொடங்கியவர்

விண்வெளிக்கு டூர் போலாமா?

 

p32a.jpg

காசி, ராமேஸ்வரத்திற்கு ‘சீஸன்’ பஸ்ஸைக் கிளப்புற மாதிரி, விண்வெளிச் சுற்றுலா செல்வதற்கும் முன்பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். பணத்தை ‘அள்ளிப்போட்டு’ கொண்டுவரக்கூடிய சிலரை அழைத்துச் செல்வதும், இதுவரை சாத்தியமாகாத சுற்றுலாவுக்குக் கூட்டிச்செல்லும் முயற்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன பல நிறுவனங்கள். அதில் சில!

p32.jpg

ஸ்பேஸ் எக்ஸ்பெடிஷன் கார்ப்பரேஷன்:

நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் விண்கலங்களைச் சுற்றுலாவுக்காகத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிமிடங்கள் மட்டுமே விண்வெளியில் சுற்றி வரவிருக்கும் இந்த டூருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறார்கள். பயணம் செய்யவிருக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும், ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்திருக்கிறார்கள் விண்வெளிச் சுற்றுலா ஆர்வலர்கள். புக்கிங் செய்தவர்களுக்கு தற்போது டிரெயினிங் நடந்துகொண்டிருக்கிறது.

பிகிலோ:

p32b.jpg

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இருக்கும் நிறுவனம். விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு விண்வெளி நிலையம் இது. ஆராய்ச்சிகளுக்கு, மனிதர்கள் வசிப்பதற்கான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு, விண்வெளிச் சுற்றுலாவை சாத்தியமாக்குவதற்கு... எனப் பல்வேறு பயன்பாட்டுக்காக இயங்கிவரும் ‘பிகிலோ’வில் விண்வெளிச் சுற்றுலாவுக்கான கட்டணம் இன்னும் முடிவாகவில்லை. 2020 முதல் இங்கு சுற்றுலாவுக்குச் சென்று வரலாமாம்!

ஸ்பேஸ் அட்வெஞ்சர்:

p32c.jpg

பூமியில் இருந்து பூமிக்கு வெளியே மிதந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வரை... பத்துமணி நேரத்திற்குக் குறையாமல் பயணிக்கும் திட்டம் இது. 2001-ல் ஒரே ஒரு நபரை விண்வெளிக்குக் கூட்டிச்சென்று சுற்றிக்காட்டித் திரும்பிய இவர்களுடைய இலக்கு, ஒரே நேரத்தில் பல பயணிகளை அழைத்துச்சென்று ஆச்சரியப்படுத்துவது. தவிர, நிலாவைச் சுற்றுவது, விண்வெளியில் நடப்பது என இதர சலுகைகளும் உண்டு. மொத்த பேக்கேஜ், 52 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் வியன்னா நகரில் இருக்கிறது இந்த நிறுவனம். வழக்கம்போல இதற்கும் பயணத் தேதி முடிவாகவில்லை என்றாலும், புக்கிங் ஆல்வேஸ் ஓப்பன்!

விர்ஜின் கேலஸ்டிக் ஸ்பேஸ்ஷிப்:

p32d.jpg

விண்வெளிச் சுற்று லாவை மேம்படுத்த பல வருடங்களாகப் போராடிக்கொண் டிருக்கும் ரிச்சர்ட் பிரான்சன் என்ற கோடீஸ்வரரின் நிறுவனம் இது. சில வருடங்களுக்கு முன்பு, சுற்றுலா விண்கலம் சோதனை ஓட்டத்தில் வெடித்துச் சிதறியது. பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள், பரிசோதனைகளுக்குப் பிறகு அடுத்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். ஆறு நபர்கள் அமரக்கூடிய வகையில அமைக்கப்பட்டுள்ள இவர்களது விண்கலத்தின் பயணக் கட்டணம் 2,50,000 அமெரிக்க டாலர்கள்!

எக்ஸ்கார் லிங்க்ஸ்:

p32e.jpg

லிங்க்ஸ் மார்க் 1 மற்றும் 2 என்ற இரு விண்கலங்களைத் தயாரித்திருக்கிறது இந்த நிறுவனம். இந்த ஆண்டின் இறுதியில் சுற்றுலாவுக்குக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விண்கலத்தில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். கட்டணம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள்!

ஏர்-ஜீரோ:

p32f.jpg

‘ஜீரோ-ஜி பாராஃபாலிக் ஃப்ளைட்’ என்ற விமானத்தில், விண்வெளியின் எடையற்ற நிலையை இயல்பாகவே உணரக்கூடிய வகையில் வடிவமைத்திருக்கிறார்களாம். பூமியில் இருந்து பத்தாயிரம் அடி உயரத்திற்கு செங்குத்தாக விமானத்தை எடுத்துச்சென்று, விண்வெளியில் எடை இல்லாத சூழலை உணரவைத்துத் திரும்ப அழைத்து வருவதுதான் இந்தச் சுற்றுலாவின் நோக்கம். அதாவது, பூமிக்குள்ளேயே விண்வெளியில் மிதக்கும் ஃபீலிங் கொடுப்பது. இதற்கு 6,500 அமெரிக்க டாலர்கள் கட்டணம்!

விண்வெளியைச் சுற்றிப்பார்க்கும் முயற்சிகள் மட்டுமல்ல, கிரகம் விட்டு கிரகம் பயணிக்கும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் கவனம், இப்படி ஆகிடப்போகுது.....!

 

  • தொடங்கியவர்

தலாய் லாமா

தலாய் லாமா. | கோப்புப் படம்: ஏ.பி.
தலாய் லாமா. | கோப்புப் படம்: ஏ.பி.

திபெத்திய புத்தமதத் தலைவர்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா (Dalai Lama) பிறந்த தினம் இன்று (ஜூலை 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் (1935) பிறந்தவர். இயற்பெயர் லாமொ தொண்டுப். இவர் பிறந்தபோதே பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சோதனைகள் நடத்தி, இவர் முந்தைய தலாய் லாமாவின் மறுபிறப்பு என்று முடிவு செய்தனர். இவரது பெயர் ‘டென்சின் கியாட்சோ’ என மாற்றப்பட்டது.

l விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கினார். நாள் முழுவதும் படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது. வயது ஏற ஏற விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார்.

l 25-வது வயதில் புத்த சமயத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இறுதி ஆண்டு படிக்கும்போது, தர்க்கம் குறித்த இவரது அறிவை 30 அறிஞர்கள் சோதித்தனர். தேர்வின் இன்னொரு பகுதியாக 15 அறிஞர்களுடன் ஆன்மிக விவாதத்தில் ஈடுபட்டார். இறுதியாக தத்துவம், துறவியர் ஒழுக்கம், விதிமுறைகள் குறித்த இவரது அறிவை 35 அறிஞர்கள் சோதித்தனர். அனைத்திலும் அபாரமாகத் தேர்ச்சியடைந்து முனைவர் பட்டம் பெற்றார்.

l 14-வது தலாய் லாமாவாக 1950-ல் முறைப்படி பொறுப்பேற்றார். திபெத்திய புத்த மதத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிப்பிடும் பெயர்தான் ‘தலாய் லாமா’. தங்களது மரபு வழித் தலைவராக திபெத் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா இதை ஏற்கவில்லை.

l சீனத் தலைவர்களுடன் 1956-ல் பேச்சுவார்த்தை நடத்தினார். திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை. 1959-ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் இந்தியாவில்தான் உள்ளார்.

l திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் கோரி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. மாறாக, இவரை புரட்சிக்காரராக கருதுகிறது.

l அமைதி, நல்லிணக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிலரங்குகள், உரைகள், கூட்டங்கள் நடத்திவருகிறார். நல்ல பேச்சாளரான இவர், வசீகரமான தலைவராகப் போற்றப்படுகிறார். தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு வழங்கியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

l அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ‘ஆன்மிகத்தில் எங்கு பிழை என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் நிரூபிக்கிறதோ அதை ஆன்மிகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார்.

l உலக நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 1989-ல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

l திபெத்துக்கு சுயாட்சி வழங்கும் தனது கோரிக்கையை என்றாவது ஒருநாள் சீனா செவிமடுக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறார். இளைஞராக இந்தியா வந்த தலாய் லாமா தற்போது 81 வயதை எட்டியுள்ளார். இந்த வயதிலும் மிகுந்த உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயலாற்றி வருகிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ரம்ஜான் - பிரியாணியும் பிரியாணி நிமித்தமும்!

 

 
briniani_2921986f.jpg
 

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் நாளுக்கே உரித்தான 'பிரியாணி' குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். ‪

#‎பிரியாணிகிடைக்கல‬ என்ற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. அதைத்தொடர்ந்து பிரியாணி குறித்த நெட்டிசன்களின் பதிவு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

biri_2921998a.jpg

கோழியின் கிறுக்கல்!!

இப்பொழுது வரை பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தோடே கழிகிறது என் தினம்!!!

Raju

முகம் நக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி போடும் அஹமதுவின் நட்பே நட்பு!

briniani11111111_2921991a.jpg

நாயுடு

மட்டன் பிரியானி, சிக்கன் பிரியாணி, அட குஸ்கா கூட வேணாம்பா, தக்காளி, புளி சோறாவது குடுங்கடா , நா பிரியாணின்னு நெனச்சிக்கிறேன். #பிரியாணிகிடைக்கல

biri11_2921990a.jpg

டான் டான் டான் ‏

நீங்க ரம்ஜானுக்கு பிரியாணி தந்தா, நாங்க பொங்கலுக்கு சர்க்கரை பொங்கல் தருவோம்... #சமத்துவம் #சமாதானம்

ரசிகர் ‏

தீபாவளின்னா வெடி வெடிக்கனும், ரம்ஜான்ன்னா பிரியாணி திங்கனும். #பிரியாணிகிடைக்கல

biri2_2921989a.jpg

Sriharilakshmidharan ‏

நாளைக்கு யார் கிட்ட "பிரியாணி வாங்கி சாப்பிடலாம்" என்பதே காலையில் இருந்து மனதில் ஓடிக்கிட்டு இருக்கு...

ராக்கெட் ❤RAJA

இங்க யாரும் பிரியாணிக்காக இஸ்லாமியர்கள் கூட பழகல. நாம ப்ரியமா இருக்குறதுனால தான் பிரியாணி தர்றாங்க.

briniani1111111_2921992a.jpg

ராஜ்மோகன்...!

பிரியாணி கொடுப்பவன் நண்பன். லெக் பீசோடு பிரியாணி கொடுப்பவன் உயிர் நண்பன்.

மைதீன் அக்பர்

நாம் பிறையை தேடி... தோழர்கள் பிரியாணி தேடி... வாழ்த்துக்கள்.

briniani111111111_2921981a.jpg

சார்ப்பு சம்முவம் ‏

தனி ஒரு மனிதனுக்கு பிரியாணி இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!

Jarvis ‏

பிறை தேடும் இரவிலே உயிரே.., பிரியாணி தேடி அலைகிறாய்! குஸ்கா கொடுக்க அழைக்கிறேன் அன்பே நீ வா!!

biri23_2921988a.jpg

அந்தர்ஜனம் ‏@godwinrajjb

சாப்பாடே கிடைக்காத ஏழைகளுக்கு பிரியாணி போடுங்கள். இனிய ரமலான்.

மாஸ்டர் பீஸ் ‏@Kannan_Twitz

இன்னிக்கு ரம்ஜான் இருக்குமா இருக்காதானு டவுட்டு அவங்களுக்கு. பிரியாணி கெடைக்குமா கெடைக்காதாங்கிற டவுட்டு நம்மளுக்கு.

biria_2921987a.jpg

Aberam wijayakumar ‏

பிரியமானவங்க "பிசியா" இருக்குறதகூட தாங்கிக்க முடியும்; பிரியாணி "ருசியா" இல்லேன்னா தாங்கிக்கவே முடியாது...

பிரம்மன் ‏

இதுக்கு முன்னாடி வாழ்க்கைல பிரியாணியை சாப்பிட்டதே இல்லைங்கற மாதிரி பிரியாணி பிரியாணின்னுட்டு.. சைய். #யாரும் பிரியாணி தரமாட்டிங்கறாங்களே

briniani111111_2921993a.jpg

Arun Mech

பிரியாணி செய்தாரை ஒறுத்தல் அவர்நாண பிரியாணி தின்று விடல்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை பிரியாணி தரமறந்த பாய்க்கு.

briniani1111_2921985a.jpg

Miss. சnaa

இன்று போராளிகள் ஸ்டேடஸ் : #Eating பாய் வீட்டு பிரியாணி. ஆனா நிஜத்தில சாப்டதோ பழையயசோறும் பச்சமிளகாயுமா இருக்கும்.

vijaykrishnan

இன்னைக்கு ஒரு மேரேஜ், மதியம் இங்கயும் சாப்டுட்டு ப்ரண்டு வீடல் போய் எப்டி பிரியாணி சாப்டமுடியும்னு யோசிச்சேன். நல்லவேளை நாளைக்குதான் ரம்ஜான்

briniani11111_2921994a.jpg

tamilFacts ‏

பெர்யான் (தாளிக்கப்பட்ட அரிசி அல்லது வறுக்கப்பட்ட அரிசி) என்ற பாரசீக வார்த்தையே 'பிரியாணி' என்றானது!

briniani111_2921983a.jpg

Rajaganesh

ட்விட்டர்ல பிரியாணி போட்டோ போட்டு வெறுப்பேத்தாம கொண்டாடுங்க மக்களே!

bhuvaneswaran ‏

ரம்ஜானு'க்கு பிரண்டு கிட்ட பிரியாணி கேக்க வெக்கப்படுறவன், வாழவே வெக்கப்படனும்ங்க…

briniani1_2921984a.jpg

Jay Kumaar

வாழ்க்கைல கேர்ள்பிரண்டு இல்லாம கூட இருந்துடலாம். ஆனா ரம்ஜான், பக்ரீத் அன்னைக்கி பிரியாணி குடுக்க ஒரு பாய் பிரண்டு இல்லாம இருக்கறதுதான் கொடுமை.

-Яeãl ЯiñôôZ- ‏

பிரியாணி எங்கம்மா தராங்க..ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னா "தேங்க்ஸ்"னு சொல்லி முடிச்சுப்புட்றாங்க.

tharanuga_2921996a.jpg

ஜானுஷா

தாங்கள் அனுப்பிய பிரியாணி கிடைக்கப்பெற்றது..... வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்....

biri1_2921995a.jpg

Madhavan. c ‏

பேஸ் புக்குல உட்கார்ந்துக்கிட்டு பிரியாணி கேட்கறதுக்கு..... ஊர்ல நாலு பாய்ங்க கூட தாயா புள்ளையா பழகுங்கபா வீடு தேடி பிரியாணி வரும்....

briniani11_2921982a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

கதர் துணியில் கல்யாண பத்திரிகை... கருப்பட்டி காபி... சென்னையில் ஒரு பசுமைத் திருமணம்!

NM2.jpg 


ல்யாணம்னா மாப்பிள்ளையோ, பொண்ணோ மட்டும் முக்கியமில்லை...நம்ம ஊரைப் பொறுத்த வரையில் கல்யாணம்னாலே கிராண்டா, பட்டுப்புடவை, தங்க நகை, பளபளப்பான மண்டபம், கோட், சூட், கறி விருந்து, பிரியாணி இதெல்லாம்தான் ரொம்ப முக்கியம் என்பது முக்கால்வாசி இளசுகளுக்கும் சரி, பெருசுகளுக்கும் சரி மனதில் பதிந்து போன பிம்பம். 'நீ தாலி கட்டு கட்டாமப் போ...மோதிரம் மாத்து மாத்தாம போ...எங்களுக்கு விருந்து சாப்பாடும், விண்ணைத்தாண்டி வருவாயா மியூசிக்கும் போட்டே ஆகணும்' என்பது நண்பர்கள், உறவினர்களோட டிமாண்ட்.

இவற்றையெல்லாம் உடைச்சு ஒரு கல்யாணம் இங்க சாத்தியப்படுமா? நிச்சயம் சாத்தியம்தான் என்று நிரூபித்திருக்கின்றார்கள் சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான மோனிகா பாண்டியன் - பிரவீன் ராஜ். முழுக்க, முழுக்க ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த திருமணமாக தங்களது மணநாள் வைபவத்தை மாற்றிக் காட்டியிருக்கின்றார்கள் இவர்கள். அதுவும் இது வெஜிடேரியன் கல்யாணம் அல்ல... வேகன் கல்யாணம்.

அதென்ன வேகன்? 'சைவத்திலும் சுத்த சைவம்தான் வேகன்' என்கிறார்கள் மோனிகா, பிரவீன் இருவரும். சைவ உணவு உண்பவர்கள் கூட பால், தயிர், நெய் போன்ற விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களையும், பட்டு, தோல்பை போன்ற விலங்குகளின் தோல், பட்டுப்பூச்சியில் இருந்து கிடைக்கும் பொருட்களையும் உபயோகிப்பார்கள். ஆனால், வேகன் பட்சிணிகளோ முழுவதுமே இயற்கை விரும்பிகள். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கூட உபயோகப்படுத்தாதவர்களாம். அதனால் இவர்கள் திருமணத்தில் காபிக்கு கூட தடா!

wedding.jpg

 ’இயற்கையோடு இணைந்த’ கல்யாணம் என்று அடைமொழி சூட்டப்படும் இந்தக் கல்யாணத்திற்கான பிளானை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கியிருக்கிறார்கள் இருவரும். வேகன் உணவுப் பழக்கத்தால் இருவருமே நீண்ட கால நண்பர்கள் என்றாலும், 'இது அம்மா-அப்பா பார்த்து வச்ச கல்யாணம் பாஸ்' என்று கண் சிமிட்டுகிறார் மோனிகா.

அடிப்படையில் தேனியைப் பூர்வீகமாகக் கொண்ட மோனிகாவும், சென்னையைச் சேர்ந்த பிரவீனும் இலை, தழை விரும்பிகள். விலங்குகளைத் துன்புறுத்திக் கிடைக்கும் எதையும் உபயோகிக்கக் கூடாது என்கின்ற எண்ணம் கொண்டவர்கள்.  சுற்றுச்சூழலுடன் இணைந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தனியாருன் இணைந்து நடத்தி வருகிறவர் மோனிகா. பிரவீனோ ஒரு டிபிக்கல் சாப்ட்வேர் ஊழியர். ஆனால், இருவருமே இணைந்தது ‘வேகன்’ என்னும் புள்ளியில்தான். இந்த நிலையில் இரண்டு வீட்டாரும் மோனிகா- பிரவீனை வாழ்க்கையிலும் இணைத்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கின்றார்கள்.

ஆனால், இருவருக்குமே லட்சம், லட்சமாய் பணத்தை வாரி இறைத்து மண்டபம், பூக்கள், பட்டு உடைகள், அசைவ உணவு என்று கழுத்தை நெறிக்கும் செலவினைக் கொண்ட நம் கல்யாண முறையில் இஷ்டமில்லை. இருவருமே இயற்கைக் காதலர்கள் என்பதால், 'நாம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில்தான் திருமண விழாவினை நடத்தப் போகின்றோம்' என்று முடிவெடுத்து விட்டார்கள்.

பழமையிலேயே ஊறிப்போன சமுதாயத்தில், பெற்றோரிடம் உடனடியாக அனுமதி கிடைத்துவிடுமா என்ன? அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டனர், இருவரின் பெற்றோரும். ஆனாலும், மோனிகாவும், பிரவீனும் தங்களுடைய முடிவில் உறுதியாக நின்றுள்ளனர். ஒருவழியாக பிள்ளைகளைப் புரிந்து கொண்ட பெற்றோரும், அவர்களுடைய ஆசைக்கு செவிசாய்த்துவிட்டனர்.

உடனடியாக அதற்கான ஐடியாக்களையும், எப்படியெல்லாம் இயற்கை வழிமுறைகளைக் கொண்டு திருமணத்தை நடத்தலாம் என்கின்ற சார்ட்டையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டது மோனிகா - பிரவீன் ஜோடி. கிட்டத்தட்ட ஒரு வருட கால திட்டமிடலுக்குப் பின்பு, கடந்த நான்கு மாதங்களில்தான் பூக்கள், இடம், அலங்காரம் என்று தேடித் தேடி அமைத்திருக்கின்றனர்.

திருமணம் நடத்துவதற்கு முதலில் இயற்கையான மரங்கள், செடிகள் சூழ்ந்த இடம் வேண்டும் என்று நினைத்தபோது சென்னையில் முதலில் அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. பலநாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சென்னைக்குள்ளேயே ஒரு தனியார் சுற்றுலாத்தளத்தில் திருமணத்திற்கான இடவசதி கிடைத்துள்ளது. சரி, கல்யாண வைபோகத்தின் முதல்படி இயற்கையோடு இணைந்ததாய் கிடைத்துவிட்டது.

அடுத்ததாக பத்திரிகைகள்... சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான கெமிக்கல் பேப்பர் உபயோகத்தினைத் தவிர்க்க, மெல்லிய கதர் துணிகளிலும், கையால் உருவாக்கப்பட்ட தாள்களிலும் பத்திரிகைகளை உருவாக்கி  உறவினர்கள், நண்பர்களுக்கு  அளித்திருக்கின்றார்கள். நெருங்கிய தோழமைகளுக்கு ஆன்லைன் மூலமாக ‘இ-இன்வைட்’ அனுப்பி விட்டனராம். உறவினர்களையும் முடிந்த வரையில் சில்க், ஃபர் போன்றவற்றை தவிர்க்க கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

" முதல்ல எல்லா சொந்தக்காரர்களும் எதிர்ப்புதான் தெரிவிச்சாங்க. ஆனாலும், ஒரு புதுமையான விஷயம் நடக்கறப்போ அதற்கான எதிர்ப்புகள் சகஜம். அதையும் தாண்டி நாங்க ஜெயிக்கணும்னு நினைச்சு அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை" என்கிறார் பிரவீன்.

திருமண நாளன்று, முழுவதும் பருத்தி இழைகளால் தயாரிக்கப்பட்ட கோஆப்டெக்ஸ் புடவையில் தைக்கப்பட்ட டிசைனர் கவுனை மோனிகாவும்,  இயற்கையான முறையில் விளைந்த பருத்தியால் தைக்கப்பட்ட உடைகளை பிரவீனும் அணிந்துள்ளனர். மோனிகாவின் நகைகள் முழுவதும் நெல், விதைகள், மணியால் ஆன நெக்லஸ், கொலுசு, தோடு ஆகியவைதான். காலிலும் கூட கைகளால் தயாரான மறுசுழற்சி செய்யப்பட்ட காட்டன் இழைகளால் ஆன செருப்பு என்று அணிந்து வலம் வந்திருக்கின்றனர் இருவருமே.  தாலி மட்டுமே தங்கம் என்றாலும், அதிலும் ஒரு மரவடிவத்தை உருவாக்கி அணிவித்திருக்கிறார் பிரவீன், மோனிகாவிற்கு.

wedding1.jpg 

கல்யாண மாலை ஏலக்காய், பாதாம், காட்டன் நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருந்ததால், இன்று வரை வீட்டில் அவற்றை உபயோகித்து வருவதாய் பூரிக்கிறார் மோனிகா.

திருமணம் நடைபெற்ற இடம் முழுவதையுமே சாமந்திப் பூக்களால் தோரணங்களாலும், வளைவுகளாலும் அலங்கரித்துள்ளனர். அவற்றையும் கூட மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்கின்ற முடிவுக்கு பின்னரே உபயோகப்படுத்தியுள்ளனர்.

நாதஸ்வர ஒலி இல்லாவிட்டால் கல்யாணமே முழுமையுறாது என்ற நிலையில், பொதுவாக திருமணங்களில் உபயோகிக்கப்படும் தோலால் ஆன மேளம் வேண்டாம் என்று, சிந்தெடிக் பைபர் கிளாஸினால் ஆன மிருதங்கமே இசையெழுப்பி மங்கல நாதம் முழங்கியுள்ளது.

வயிற்றுக்கு இதமளிக்கும் உணவும் முழுமையாக சுத்த சைவம்தான். பால், தயிர், மோர், நெய்க்கெல்லாம் தடா. வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்பட்ட பால், தயிர், சோயா பால், நெய்யில்லாத பொங்கல், சோயா மோர், சொட்டு நெய் கூட உபயோகிக்கப்படாத இனிப்புகள், இளநீர், பழக்கலவை என்று எல்லாமே இயற்கை உணவுகள்தான். கூடவே கருப்பட்டி காபி, பிளாக் டீ, கீரின் டீ போன்றவையும் விருந்தினர்களின் வயிற்றைக் குளிர வைத்திருக்கின்றன. கூடவே ஒரு டிவியில் சுற்றுச்சூழல் சார்ந்த வீடியோக்களையும் ஒளிபரப்பியுள்ளனர்.

தாம்பூலப்பையில் கூட,  கையால் தயாராகும் மஞ்சள் பைகளில் இயற்கையை நேசிக்கும் வகையிலான வாசகங்களைப் பதிவிட்டு, சாக்லெட்டுக்கு மாற்றாக கடலைமிட்டாய், வெற்றிலை பாக்குடன் கூடவே, 'ஏன் இயற்கை உணவுகள் அவசியம்' என்கின்ற சின்ன புத்தகத்தையும் அளித்திருக்கின்றனர் இந்த எகோ பிரண்ட்லி தம்பதியினர்.

’மின்சார உபயோகமற்ற இயற்கை முறை கல்யாணம்தான் தேவை என்றே திருமணம் நடக்கவிருந்த இடத்தை தேர்வு செய்தோம். கல்யாணத்திற்கு கிட்டதட்ட 750 உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். எல்லாருக்குமே இயற்கை உணவுகள்தான். இடம் கண்டுபிடிக்கறது மட்டும்தான் கஷ்டமாயிருந்தது. மற்றபடி இந்த முறையில் திருமணம் செய்ய, ஒரு நார்மல் கல்யாணத்தை விடக் குறைவாதான் செலவாச்சு. 6 லட்சத்துக்குள் எல்லா செலவுகளையும் முடிச்சுட்டோம். ஆனால், இன்னைக்கு சுற்றுச்சூழலே சீர்கெட்டு வர நிலையில், ஏதோ ஒரு மாற்றத்தை எங்களோட திருமணம் மூலமா விதைச்சிருக்கோம் அப்டிங்கறதே எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குது.

மரக்கன்று கொடுக்கறது மட்டும் இயற்கையை நேசிக்கறது இல்லை. அதுக்கும் மேல கல்யாணத்தையே இயற்கையோட இணைந்து நடத்தலாம்னு நாங்க முதல்படி எடுத்து வச்சுருக்கோம். இது கண்டிப்பா இன்னும், இன்னும் இளைஞர்கள்கிட்ட மாற்றத்தை ஏற்படுத்தி, மறுபடி  பசுமை நகரமா சென்னை மாறும்னு நாங்க நம்புறோம்.” என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் இந்த சுற்றுச்சூழல் காதல் தம்பதியர்!  

இயற்கை போற்றுதும்!

vikatan

  • தொடங்கியவர்

13603285_1075803655801661_73659610988677

 
 
தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதலாவது கறுப்பின வீரர் மகாயா ந்ட்டினியின் பிறந்தநாள்.

தென் ஆபிரிக்கா சார்பாக விளையாடிய மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் இவர்.
Happy Birthday Makhaya Ntini
 
  • தொடங்கியவர்

உலக மகா ஒலிம்பிக்: வேடிக்கையும் விநோதமும்

 
__________2921813f.jpg
 

லண்டன் 3

ஒலிம்பிக் போட்டிகளை அதிக முறை நடத்திய நகரம் லண்டன். 1908, 1948, 2012 என 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக இங்கு நடந்துள்ளன.

2016 ஒலிம்பிக்கில்… இயற்கை செழிக்கும் ரியோ

__________3_2921815a.jpg

பலரும் நினைப்பதுபோல ரியோ, பிரேசிலின் தலைநகரம் இல்லை; பிரேசிலில் அதிக மக்கள் வாழும் இரண்டாவது மிகப் பெரிய நகரம். முழுப் பெயர் ரியோடி ஜெனிரோ. இங்குதான் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கப் போகிறது.

இயற்கை பாரம்பரியம் செழிக்கும் இந்த நகரம் யுனெஸ்கோவின் உலக மரபு சின்னப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடலுக்கும் இந்த நகரின் மலைப்பகுதிக்கும் இடைப்பட்ட கரியோகா என்ற இயற்கை நிலக்காட்சிதான் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தவக்காலத்துக்கு முன்னதாக நடக்கும் ரியோ கார்னிவல் உலகப் புகழ்பெற்றது. 1992-ல் ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு, உலக அளவில் ரியோ பிரபலமாக முக்கியக் காரணம்.

முதலில் வந்து பதக்கம் இழந்தவர்

_________1_2921816a.jpg

1908-ம் ஆண்டு ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் மைதான எல்லைக்குள் முதலில் நுழைந்தவர் இத்தாலிய வீரர் டிராண்டோ பியட்ரி. ஆனால், அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை. அவர் எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகளே மீதமிருந்தன.

ஆனால், ரொம்ப தூரம் ஓடிவந்ததால் களைப்படைந்த பியட்ரி, தடுமாறி விழுந்தார். எல்லைக் கோட்டைத் தொட, சில ஒலிம்பிக் அலுவலர்கள் அவருக்கு உதவினர். இந்த உதவியின் காரணமாகப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பதக்கம் பெறும் வாய்ப்பும் அவருக்குக் கைநழுவியது. அவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில், ஆறுதல் பரிசு தரப்பட்டது.

ஒலிம்பிக்கில் இப்படி முதலில் உதவிய அலுவலர் யார் தெரியுமா? ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதி புகழ்பெற்ற ஆர்தர் கானன் டாயல்தான்.

பேராசை பெரு நஷ்டம்

__________2_2921814a.jpg

ஒலிம்பிக் 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை (1956, 1960, 1964) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் ஆஸ்திரேலிய வீராங்கனை டான் பிரேசர். ஆனால், அவரது விளையாட்டு வாழ்க்கை மிக சோகமயமாக முடிவுக்கு வந்தது. 1964-ல் டோக்கியோவில் 100 மீட்டர் நீச்சலில் ஒரு நிமிடத்துக்குள் 100 மீட்டர் தொலைவைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.

ஆனால், அத்துடன் அவருடைய ஆசை அடங்கவில்லை. பேரரசர் ஹிரோஹிட்டோவின் ஜப்பானிய அரண்மனையின் முன்பு பறந்துகொண்டிருந்த ஒலிம்பிக் கொடியைத் திருட முயன்றதாக பிரேசர் பிடிபட்டார். பின்னர் ஒரு ஒலிம்பிக் கொடி அவருக்கு நினைவுப்பரிசாகக் தரப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய நீச்சல் அமைப்பு 10 ஆண்டுகள் விளையாட அவருக்குத் தடை விதித்து, பின்னர் 4 ஆண்டு முடிவில் அதை விலக்கிக்கொண்டது.

தங்கம் வெல்லா சாதனை நாயகன்

ஓட்டப்பந்தயத்தில் (800 மீட்டர்) உலக சாதனை படைத்தவர் பிரிட்டனைச் சேர்ந்த செபஸ்டியன் கோ. அதே பிரிவில் கடைசிவரை ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் தங்கப் பதக்கம் வெல்லவே முடியவில்லை.

1980 மாஸ்கோவில் ஸ்டீவ் ஓவெட்டிடம் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சலீஸில் பலம் வாய்ந்த ஜோவாகிம் குரூஸிடம் தங்கத்தை இழந்தார். அந்த இரு முறையும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் மட்டும் அவர் தங்கம் வென்றார்.

1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெறாத நிலையில், எப்படியாவது அவரைப் பங்கேற்க வைக்க ‘ஒயில்டு கார்டு’ எனப்படும் நேரடித் தகுதி வாய்ப்பை வழங்குவதற்காக விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் முயற்சித்தார் என்றால், செபஸ்டியன் கோவின் புகழைப் புரிந்துகொள்ளலாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு

 
______2921832h.jpg
 

உலகெங்கும் வாழும் பல கோடி இஸ்லாமியர்களின் ஒரே வாழ்நாள் ஆசை - ஹஜ் புனித யாத்திரை. ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் திரளும் புனித ஸ்தலம், மெக்காவிலுள்ள ‘மஸ்ஜித்-அல்-ஹராம்'. இறைத் தூதர் முகம்மதுவின் கல்லறை அமைந்த, புனிதம் வாய்ந்த மெதினாவின் ‘மஸ்ஜித்-அன்-நவாபி'யும் இந்த நாட்டில்தான் உள்ளது.

மனித வாழ்வில் நல்லறங்களைப் போதித்து, மனித இனத்தை நல்வழிக்குக் கூட்டிச் செல்லும் இஸ்லாமிய மார்க்கம் பிறந்த இடம் - சவுதி அரேபியா! செங்கடல், அரேபிய வளைகுடாவால் சூழப்பட்ட, அரேபியத் தீபகற்பத்தின் பாலைவனத் தேசம் இது. அகாபா வளைகுடாவின் அந்தப் பக்கம் - எகிப்து; இந்தப் பக்கம் - சவுதி.

நில அளவில், அரேபியப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நாடு. ஆசியாவின் 5-வது பெரிய நாடு. ஆரம்பத்தில், ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்துச் சவுதி அரேபியா உருவாகக் காரணமானவர் - இபின் சௌத். இவரின் தொடர் வெற்றிகள் மூலம் இந்த நாடு உருவானது.

1902-ல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது குடும்ப நகரம். இங்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, விடாமல் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932-ல் சவுதி அரேபியா உருவனது. ரியாத் - தலைநகர் ஆனது.

ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தரும் அட்சயபாத்திரமாக, பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு உலகின் சக்திவாய்ந்த பொருளாதார வசதியான நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா உயர்ந்தது. 1950-ம் ஆண்டிலேயே சவுதிக்கு எனத் தேசியக் கீதம், அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், வரி வடித்தில் இல்லை. இசை வடிவத்தில் மட்டுமே இருந்தது. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1947-ல், ‘அப்துல் ரஹ்மான் அல்-கதீப்' அமைத்த மூல இசைக் கோவையைக் கொண்டு இந்த இசை வடிவம் அமைக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இசை மட்டுமேதான் இருந்தது.

1984-ல்தான், பாடல் இயற்றப்பட்டது. இயற்றியவர் - இப்ராஹிம் காஃபாஜி. இசை விற்பன்னர் செரஜ் ஓமர், மூல இசைக்கு வாத்திய இசை சேர்த்தார். இதுதான் இப்போதைய தேசிய கீதமாக ஒலிக்கிறது. இப்பாடலின் முதல் வரியான, ‘சார்...இ' என்றே இப்பாடல் பரவலாக அறியப்படுகிறது. பாடலை இசைக்க ஆகும் நேரம் - தோராயமாக 70 விநாடிகள். பாடலின் இடையே உள்ள முக்கியமான நான்கு வரிகள், நிறைவின்போது மீண்டும் பாடப்படுகின்றன.

சவுதி அரேபியாவின் தேசிய கீதம் ஏறத்தாழ இவ்வாறு ஒலிக்கும்:

“சார்.. இ..

லி இ மஜ்தி வி அல்யா

மஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் ஸமா

வர்ஃபா இ இகஃபாக்கா அதர்

யஹ்மில் உன்னுராஇ முசட்டர்

ரட்திதி அல்லாஹு அக்பர்

யா.. மவ்தனி

மவ்தனி

க்கட் இஸ்ட ஃபக்ரஇ இ முஸ்லிமின்

ஆஷ் அல் மலிக்

லி இ ஆலம்

வா இ வத்தான்.

(மீண்டும்)

மஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் ஸமா

வர்ஃபா இ இகஃபாக்கா அதர்

யஹ்மில் உன்னுராஇ முசட்டர்

ரட்திதி அல்லாஹு அக்பர்

யா.. மவ்தனி”.

இப்பாடலின், உத்தேசமான பொருள் இது:

“விரைவு

கொள் மகிமைக்கும் தலைமைக்கும்;

சொர்க்கங்களின் கர்த்தாவை மகிமைப்படுத்து.

பச்சைக் கொடியை உயர்த்திப் பிடி.

வழிகாட்டுதலைப் பிரதிபலிக்கும்

எழுதப்பட்ட ஒளியைச் சுமந்தவாறு

திரும்பச் சொல்: 'அல்லாஹு அக்பர்'!

ஓ.. என் தேசமே..

என் தேசமே..

முஸ்லிம்களின் பெருமையாக வாழு!

மன்னர் நீடு வாழ்க -

நம் கொடிக்காக

தாய்நாட்டுக்காக”.

(தேசியக் கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

உலகின் பிரம்மாண்ட ஏரி!

 

____2921843f.jpg
 

உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?, உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?, உலகிலேயே மிகப் பழைய ஏரி எது?, உலகிலேயே அதிக அளவு நன்னீர் கொண்ட ஏரி எது? இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். அது, ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரி. நிலப்பரப்பில் உள்ள நன்னீரில் 20 சதவீதம் பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது! ரஷ்யாவின் நல்ல தண்ணீரில் 90 சதவீதம் இந்த ஏரியிலிருந்தே கிடைக்கிறது. ‘சைபீரியாவின் முத்து’ என்றும் ‘ஏரிகளின் அக்கா’ என்றும் இதை அழைக்கிறார்கள்.

பிறைபோல வளைந்திருக்கும் பைக்கால் ஏரியின் நீளம் 636 கி.மீ. அகலமோ 80 கி.மீ., ஆழமோ 1,620 மீட்டர். சுமார் 300 ஆறுகளிலிருந்து இந்த ஏரிக்குத் தண்ணீர் வந்து சேர்கிறது. ஏரியில் 22 தீவுகளும் இருக்கின்றன.

2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பைக்கால் ஏரி உருவாகிவிட்டது. பழங்கால ஏரி என்பதால் இங்கே வசிக்கும் உயிரினங்களுக்கும் குறைவில்லை. 1,085 நீர்வாழ் செடிகள் இந்த ஏரியில் காணப்படுகின்றன. 1,550 நீர்வாழ் உயிரினங்கள் இங்கே வசிக்கின்றன. முட்டையிடாமல், குட்டி போடும் 5 வகை மீன்கள் இருக்கின்றன. இங்கேயே உருவான 27 வகை கோபி மீன்களும் காணப்படுகின்றன. ‘நெர்பா’ எனப்படும் நன்னீர் வாழ் சீல், பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது. 300 வகை பறவை இனங்கள் உள்ளன. பைக்காலில் வசிக்கும் பாதி உயிரினங்கள் இங்கே மட்டும் வாழ்கின்றன.

ஏரியைச் சுற்றி மலைகளும் காடுகளும் இருப்பதால், ஏரிக்கு அருகில் இருக்கும் நிலத்திலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. கரடிகள், மான்கள், பெரிய கடமான்கள், காட்டு மான்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வோர் ஏரியும் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என்று மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். பைக்கால் ஏரியின் அடிப்பகுதியில் வெப்ப நீரூற்றுகள் இருக்கின்றன. இவை ஏரியின் நீரில் ஆக்ஸினை பரவச் செய்கின்றன. அதனால் உயிரினங்கள் வாழ நல்ல சூழல் நிலவுகிறது.

சைபீரியாவின் தென்பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரிப் பகுதி, ஓராண்டில் 5 மாதங்கள் பனிக்கட்டியாகிவிடும். ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கே வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும். 1 மீட்டர் முதல் 2 மீட்டர் ஆழம்வரை உறைந்திருக்கும் இந்தப் பனிக்கட்டி மீது கார், லாரிகூடப் போக முடியும். பகல் நேரத்தில் பனிக்கட்டி சூடாகும். இரவில் திரும்பவும் உறைந்துவிடும். மோசமான வானிலை நிலவும்போது பனிக்கட்டி விரிசல் விடும். காற்று அதிகம் வீசும்போது பனிக்கட்டிகள் உடைந்து 10, 12 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும். உடைந்த பனிக்கட்டிகள் மீது சூரிய வெளிச்சம் படும்போது மரகதக் கற்களைப்போல ஜொலிக்கும்!

ஏரியின் கரைகளில் மைக்கா, மார்பிள் போன்ற கனிமங்களும் அதிகம் கிடைக்கின்றன. அதனால் சுரங்கம், காகிதத் தொழிற்சாலை, கப்பல் கட்டுமானம், மீன் தொழிற்சாலைகள், மரத் தொழிற்சாலைகள் போன்றவை இயங்கி வருகின்றன. காகிதத் தொழிற்சாலையின் கழிவுகள் ஏரியில் கலந்து, மாசுபடுத்தியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏரியைக் காப்பதற்காக 1971-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. தற்போது மீண்டும் தொழிற்சாலைகளும் அணு ஆலைகளும் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மிகப் பழங்காலத்துக்கு ஏரி என்பதால், உயிரினங்களின் ஆராய்ச்சிக்குரிய இடமாக இருந்து வருகிறது பைக்கால். பளிங்கு போன்று சுத்தமான நீரைக் கொண்டுள்ள இந்த ஏரியைப்போல ஓர் ஏரியை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. இயற்கை கொடுத்த இந்த அற்புதமான ஏரியைக் காப்பது ஒன்றே மனிதர்கள் அந்த ஏரிக்குச் செய்யும் பேருதவி.

___1_2921846a.jpg

___2_2921848a.jpg

 

tamil.thehindu

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p38c.jpg

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்னு டெக்னாலஜியில் எங்கோ போயிட்டோம். ஆனா, புளியமரத்தைச் சுத்துனது, கடலை உருண்டை கடிச்சது, கபடி விளையாடினது, களி தின்னதுனு நமக்குனு இருக்கிற ‘நாஸ்டால்ஜியா’ ஃபீலிங்ஸ் நமக்குத் தெரியாமலேயே வந்துடும். ஏன், இன்னும் ஆறேழு வருடம் கழிச்சுப் பாருங்களேன், ‘அந்தக் காலத்துல...’னு ஆரம்பிக்கிற நாம, இதே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்பை சிலாகிச்சுப் பேசுவோம். என்ன பண்றது, நம்ம டிசைன் அப்படி! அறிவியல் நம்மளை எங்கோ கொண்டுபோனாலும், டைம் டிராவலுக்குக் கிளம்புற நம்ம மனசு, ஒண்ணாங்கிளியும், ஓடிப்பிடிச்சும் விளையாடிட்டு வரத்தான் செய்யும். கவலைப்படாதீங்க. இப்பல்லாம் நாஸ்டால்ஜியா ஃபீலிங்ஸை ஆண்ட்ராய்டிலும் தீர்த்துக்கலாம். இதோ, ஆண்ட்ராய்டில் ‘கோலிக்குண்டு’ விளையாடலாமா?

p38a.jpg

என்னத்தை சொல்லிடப்போறோம். வழக்கம்போல, இன்ஸ்டால் பண்ணுங்க. ஓப்பன் பண்ணுங்க. ஊர்ல இருக்கிற பெருசுகளையெல்லாம் ஒண்ணா உட்கார வெச்சுக்கிட்டாலும் சரிதான், சென்னையில் இருக்கிற அங்காளி, பங்காளிகளோட வட்டத்தைப் போட்டாலும் சரிதான். கிரவுண்டும், கோலிக்குண்டும்தான் ஒரிஜினலா இருக்காதே தவிர, உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கிற ‘கோலிக்குண்டு’ கில்லி மட்டும், அப்படியே ஃபிரெஷ்ஷா எழுந்திரிச்சு வரும். ஆனா, நீங்க டொக்கா, இல்லை கிக்கானு சோதிக்க அப்ளிகேஷனில் இருக்கு பல சவால்கள். ஆனாலும் பரவாயில்லை. ‘கேண்டி கிரஷ்’ஷை ஓப்பன் பண்ணிவெச்சு சீன் போடுற சிட்டி பசங்களுக்குப் போட்டியா, ‘இப்ப வாங்கடா’னு நீங்களும் ஆரம்பிக்கலாம்!

p38b.jpg

காலரைத் தூக்கிவிட்டுக்கிற மொமென்ட் என்னன்னா... அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிற வெள்ளைக்காரங்களே, ‘இட்ஸ் ஆஸம்’, ‘வெரி இன்ட்ரஸ்ட்டிங்’னு சிலாகிச்சு கமென்ட் கொடுத்திருக்கிறதுதான். எனவேதான், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கான்ச்’ என்ற இந்த அப்ளிகேஷனின் இரண்டாம் பாகமும் பிளே ஸ்டோரில் காணக் கிடைக்கிறது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

டவுன்லோடு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.puransoftware.kanche

vikatan

  • தொடங்கியவர்
உண்மைகளுக்கு சவால்
 
 

article_1467775311-hkgk.jpgநல்ல திறமைமிகுப் பேச்சாளர்கள் தங்களது ஆற்றல்களைப் பயன்தரும் விதத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் சிலரோ, இந்த அரிய வித்தையை மக்களைத் திசை திருப்பும் வண்ணம் செயற்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தெரியாத விடயங்களைத் தெரிந்ததுபோல் உண்மையினைக் கூசாமல் திரிபுபடுத்தி வருகின்றனர். மக்கள் இதுபற்றி எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதாகத் தெரியவில்லை.

நாவன்மையை சோரம்போகும் வண்ணம் கையாளுவது உண்மைகளுக்கு விடுக்கப்படும் சவால்போல்த் தெரிகின்றது. உண்மைகள் வெளிவரும்போது இவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவது உறுதி. நாக்குப் புரளுதல் நல்ல கருமத்தை மாற்றிச் சொல்வது மட்டுமல்ல, பாவங்களைப் பலவந்தமாகச் சுவீகாரம் செய்தலுமாகும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13603502_1076363532412340_78409578470774

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் - தற்போதைய ஒருநாள், T20 அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள்.

உலகின் மிகச் சிறந்த ஒருநாள் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர்களில் (குறிப்பாக வெற்றியை பெற்றுக்கொடுக்கும் Finisher) ஒருவராகக் கருதப்படும் தோனிக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவுக்கு உலகக்கிண்ணம் 2011, உலக T20 கிண்ணம் 2007 இன்னும் பல மகுடங்களைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரிய தலைவர்.

Happy Birthday MS Dhoni

கேப்டன் கூல் தோனியின் 7 அசத்தல் அவதார்! #HappyBirthdayCaptainCool

Dhoni-30.jpg

வெற்றி பெறும் ஆட்டங்களில் கடைசி நபராக நிற்பதும், தோல்விக்கு முதல் ஆளாக பொறுப்பேற்று பதிலளிப்பதும் இவரால் மட்டுமே முடியும், தனது குழந்தை பிறந்தும் ''ஐ யம் ஆன் நேஷனல் ட்யூட்டி'' என சொல்லி இரண்டு மாதம் கழித்து வந்து குழந்தையை பார்க்க ஒருவரால் முடியும் என்றால் அவரது பெயர் மஹேந்திரசிங் தோனி என்று இருக்க வேண்டும். இந்த 7ம் நம்பர் டி-ஷர்ட்காரரின் 7 அவதாரங்கள் ஆச்சர்யமளிப்பவை


பேட்ஸ்மேன்:

238041.jpg



உலகமே கண்டு நடுங்கிய முதல் வரிசை ஆட்டக்காரர். மூன்றாவது வீரராக களமிறங்கி பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் அதிரடி ஆட்டக்காரர். அணியின் செயல்பாடு. இளம் வீரர்கள் நடுவரிசையில் திணறுவதால் தனது மூன்றாம் இடத்திலிருந்து கோலி, ரெய்னா, ரஹானே, ஜடேஜா என அனைவருக்கும் வாய்ப்பளித்து தன்னை ஆறு அல்லது ஏழாம் இடத்துக்கு மாற்றிக்கொண்ட பேட்ஸ்மேன். எந்த நிலைக்கு சென்றாலும் தனது சராசரியை 50க்கு மேலாக வைத்திருக்கும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். கடைசியாக சென்ற ஜிம்பாப்வே தொடரில் கூட 82 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை கடப்பார் என்ற போதும், ராகுலையும், ராயுடுவையும் அனுப்பி இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்தவர் தோனி.


விக்கெட் கீப்பர்:

236903.jpg



இந்திய அணியில் நல்ல விக்கெட் கீப்பர்கள் வந்து போயினர். ஆனால் அவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் கில்கிரிஸ்ட், தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர், இலங்கையின் சங்ககாரா போன்ற கீப்பர் பேட்ஸ்மேனை தேடி கொண்டிருந்த இந்திய அணிக்கு தோனி ஒரு வரப்பிரசாதம். கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை சிதற விட்டு, பேட்ஸ்மேனை வெளியேற்றுவது தோனியின் ஸ்டைல். உலகின் மின்னல் வேக ஸ்டெம்பிங் சாதனை தோனியின் கைகளில். உலகின் அதி பயங்கர பேட்ஸ்மேன்களான கெயில், டிவில்லியர்ஸ் கூட தோனி கீப்பிங் செய்தால் கோட்டை தாண்டாமல் ஆடுவது தான் தோனியின் பவர்.


கேப்டன்:

235913.jpg
 

கங்குலிக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன். கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன். ஐசிசி போட்டிகளில் இவர் வெல்லாத கோப்பை என்று ஒன்று கிடையவே கிடையாது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டியிலும் இந்தியாவை ஒரே நேரத்தில் முதலிடத்துக்கு கொண்டு வந்த கேப்டன் தோனி மட்டுமே. களத்தில் அவர் எடுக்கும் முடிவுகளும், கண் காட்டும் திசையில் வீரர்கள் மாறி நிற்பதும் எந்த கேப்டனிடமும் இல்லாத தனி சிறப்பாகும். கோப்பையை பரசளிப்பு விழாவில் வாங்குவது மட்டும் தான் தோனியின் வேலை. பின்னர் அதனை அணியிடம் கொடுத்துவிட்டு கடைசியாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தோனி ஸ்டைல்.


தலைவன்:

தோனியை மேலாண்மை படிப்புகளோடு ஒப்பிடுவது எப்போதும் வழக்கம். அவரது தலைமை பண்பு என்பது களத்தில் அவ்வளவு உதவியாக இருக்கும் என்று சீனியர் வீரர்கள் சச்சின், கங்குலி துவங்கி இளம் வீரர்கள் கோலி,ரெய்னா வரை அனைவருமே கூறியுள்ளனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக் கொள்ளலாம் அந்த அளவுக்கு தலைவன் தி மாஸ்.

ஃப்ரான்சைஸி:

244685.jpg

கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தராமல் தடுக்கிறது என அனைவரும் கூறும் போது,  ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில், சென்னையின் எஃப்சி அணியை வாங்கி, கால்பந்தையும் இந்தியாவில் வளர்க்க தோனி முன்வந்தது அவரை ஒரு ஃப்ரான்சைஸியாகவும் சென்னை மக்கள் மனதில் விசில் போட வைத்தது.

மிஸ்டர் எம்.பி.ஏ

239109.jpg

பல மேலாண்மை தத்துவங்கள் தோனியோடு ஒத்துபோகும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறந்தனர். ஆனால் அதன் மூலம் தோனி  கற்றுத்தந்த பாடங்கள் தற்போது இந்திய டெஸ்ட் அணியை ஒரு திடமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டன், புதிய பயிற்சியாளர் என அனைவரும் மாறினாலும் இனி வெள்ளை உடையில் தோனி இல்லை என்றாலும், இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடு எப்படி இருக்க வேன்டும் என ரோட் மேப் மீட்டிங்கில் தோனியின் ''சத்தர் செகண்ட்'' உரை அவரை மிஸ்டர் எம்.பி.ஏவாக பார்க்க வைக்கிறது.

மிஸ்டர் கூல்:

எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் எந்த மாதிரியான சூழல் இருந்தாலும் சரி, வெற்றியோ, தோல்வியோ அனைத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் தன்மை தோனியிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் அவர் மிஸ்டர் கூலாகவே இருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய போது ஓய்வு பெறுவீர்களா என கேட்ட நிருபரை கலாய்த்த தோனி மிஸ்டர் கூல் பட்டத்துக்கு சரியான நபர். 

டிக்கெட் பரிசோதகர் முதல் இந்திய அணியின் தி பெஸ்ட் கேப்டன் வரை என தோனி எடுத்துள்ள அவதாரங்கள் ஆயிரம் அவரது வாழ்க்கையின் சில சுவாரஸ்யமான தருணங்கள், அவரது உச்சகட்ட ஃபார்ம் என அனைத்தும்  இந்தியாவின் வெற்றியாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கேப்டன் 2019 உலகக் கோப்பையை வாங்கி யாரவது ஒரு புதுமுக வீரரின் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக போய் நின்று போஸ் கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 07
 

article_1467868152-taj-mahal.jpg1543: லக்ஷம்பர்க் மீது பிரான்ஸ் படையெடுத்தது.

 

1807: பிரான்சு, புருசியா, உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.

1834: நியூயோர்க்கில் அடிமைத்தனத்துக்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமாகின.

1846: அமெரிக்கப் படைகள் மான்டரே, யெர்பா புவெனா ஆகியவற்றைக் கைப்பற்றினர். கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.

1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பாக நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

1896: இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1898: அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி அவாயை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

1915: 157 பயணிகளுடன் சென்ற டுரொலி ஒன்ராறியோ குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15பேர் கொல்லப்பட்டனர்.

1915: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பேதிரிசு என்ற இராணுவத்தினர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.

1928: துண்டுகளாக்கப்பட்ட வெதுப்பிகள் முதல்தடவையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தன.

1937: சீனாவின் பெய்ஜிங் நகரம் மீது ஜப்பானிய துருப்புகள் படையெடுத்தன.

1941: ஐஸ்லாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின.

1941: இரண்டாம் உலகப் போர் - பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.

1953: சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.

1959: வெள்ளிக் கோள், ரேகுளுஸ் விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.

1965: கனடாவில் ஆங்கிலத்தக்கு சமமாக பிரெஞ்சு மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது.

1978: பிரிட்டனிடமிருந்து சொலமன் தீவுகள் சுதந்திரம் பெற்றது.

1980: ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறக்கு வந்தது.

1983: பனிப்போர் - சோவியத் தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் மாஸ்கோ சென்றார்.

1985: விம்பிடள்டன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் வீரர் பொரிஸ் பெக்கர் 17 ஆவது வயதில் சம்பியனாகி புதிய சாதனை படைத்தார்.

1991: சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1997: ஈராக்கிய - குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட துருக்கியப் படைகள் வடக்கு ஈராக்கில் இருந்து வெளியேறின.

2005: லண்டனில் பஸ், மற்றும் ரயில்களில் வெடித்த குண்டுகளால் 52 பேர் பலி. சுமார் 700 பேர் காயம்.

2007: புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2012: ரஷ்யாவின் கிராசுனதாரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172பேர் உயிரிழ்ந்தனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கடல் மேலே விமான நிலையம்!

 
 
vimaanam_2921824f.jpg
 

விமான நிலையத்தைக் கடலில் அமைக்க முடியுமா? அதுவும் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடியுமா? ‘முடியும்’ என நிரூபித்துக் காட்டியது ஜப்பான். கடல் நடுவே செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதன் மீது பிரம்மாண்டமான விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான்.

ஜப்பானில் கன்சாய் மாகாணம் உள்ளது. இங்குள்ள ஒசாகா கடல் பகுதியில்தான் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயர் ‘கன்சாய்’. உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். இத்தாலியைச் சேர்ந்த ரென்கோ பியானோ என்ற கட்டடக்கலை நிபுணரின் வடிவமைப்பை அடிப்படையாகக்கொண்டு இந்த விமான நிலையம் கடலில் கட்டப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 4 லட்சத்து 53 ஆயிரத்து 993 சதுர மீட்டர். உயரம் 36.64 மீட்டர். ஒரு அடித்தளம், நான்கு மேல் தளங்களுடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக ஜப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கொட்டப்பட்டன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு கட்டடம் கட்டும் பணிகள் 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. பணிகள் முடிந்து 1994-ல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

கடல் மேலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க எவ்வளவு செலவாகியிருக்கும்? அந்தக் காலகட்டத்தில் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவானதாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
சீனாவில் மிளகாய் உண்ணும் போட்டி 2 நிமிடங்களில் 47 மிளகாய்களை உட்கொண்டவர் முதலிடம்
 

மிளகாய் உண்ணும் போட்டியொன்று சீனாவில் அண்மையில் நடைபெற்றது.  யுனான் மாகாணத்தின் லிஜியாங் நகரில் நடைபெற்ற இப் போட்டியில் சீனாவின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த 10 போட்டியாளர்கள் பங்குபற்றி னர்.

 

17850chille-2.jpg

 

17850chille-3.jpg

 

17850chille-5.jpg

 

மிளகாய்கள் மற்றும் நீரினால் நிரப்பப்பட்ட தொட்டியொன்றுக்குள் இருந்த வாறு மிளகாய்களை உட்கொள்வது தான் இப் போட்டி.

 

17850chille-4.jpg

 

செங்டு பிராந்தியதைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் 2 நிமிடங்களில் 47 மிளகாய்களை உட்கொண்டு முதலிடம் பெற்றார்.

 

17850chille-8.jpg

 

அவருக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட மிளகாய் பரிசாக வழங்கப்பட்டது.


17850chille-6.jpg

 

17850chille-7.jpg

 

17850chilli-1.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பங்களாதேஷ் ரயிலில்....
 

பங்களாதேஷின் டாக்கா நகரில் மக்களால் நிரம்பி வழியும் ரயிலின் மீது ஏறுவதற்கு பலர் முயற்சிப்பதை படங்களில் காணலாம்.

 

17846bangladesh-train-1.jpg

 

17846bangladesh-train-1.jpg-2.jpg

 

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இலட்சக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக டாக்கா ரயில் நிலையங்களில் திரண்டிருந்தனர்.

 

17846bangladesh-train-1.jpg-3.jpg

 

ரயிலின் உள்ளே மாத்திரம் அல்லாமல் ரயிலின் கூரை மீது ஏறியும் ஏராளமானோர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முன்னோடி பெண்கள்
---------------------------------

1905ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் நாள் டோரத்தி லெவிட் லண்டனிலிருந்து லிவர்பூல் நகருக்கு ( சுமார் 287கிமீ தூரம்) ஒரு பெண்ணால், மெக்கானிக் உடன் இல்லாமல், இரண்டு நாட்களில் காரை ஓட்டிச் சென்று திரும்பி வர முடியும் என்பதை நிரூபிக்க முனைந்தார்.
அவருடன் காரில் பயணித்தவர்கள் அவருடைய நாய், டோடோ, டெ டியோன் மோட்டார் காரின் டாஷ்போர்டில் உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஆகிய இரண்டுதான்.

கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த வெகு சில பெண்களில் லெவிட்டும் ஒருவர்.

கார் ரேசில் கலந்து கொண்ட முதல் பெண்ணும் இவர் என்று கூறப்படுகிறது.

‘உலகின் மிக வேகமான பெண்’ என்று அறிவிக்கப்பட்டவர் இவர் , அந்தக் காலத்தில்!

13590447_10153557902795163_7018083957577

BBC

  • தொடங்கியவர்
Miss Intercontinental Sri Lanka 2016 அழகுராணியாக ட்ரேஸி ஆன் டீசில்வா தெரிவு
 

மிஸ் இன்டர்கொன்டினென்டல் ஸ்ரீலங்கா (Miss Intercontinental Sri Lanka 2016) அழகுராணியாக ட்ரேஸி ஆன் டீசில்வா முடிசூட்டப்பட்டுள் ளார்.

 

1784016.jpg

Minoli-2nd Runner up, Tracy – Miss Intercontinental Sri Lanka, Andrea – 1st Runner up                                                                                                    


 

பிரதான அழகுராணிப் போட்டிகளில் ஒன்றான மிஸ் இன்டர் கொன்டினென்டல் ஸ்ரீலங்கா அழகுராணி போட்டிகள் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றன.

 

இப் போட்டிகளில் ட்ரேஸி ஆன் டீசில்வா முதலிடம் பெற்று மிஸ் இன்டர்கொன்டினென்டல் ஸ்ரீலங்கா 2016 அழகுராணியாக முடி சூட்டப்பட்டார். 

 

1784019.jpg

 

இப் போட்டிகளில் அன்ட்ரியா டெகோவே இரண்டாமிடத்தையும் மினோலி தயாரட்ன மூன்றாமிடத்தையும் பெற்றனர். 

 

கொழும்பு மேற்கு றோட்டரிக் கழகத்தின் 56 ஆவது தலைவரான ரொஷான் பெரேரான இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

1784006.jpg

 

மிஸ் இன்டர்கொன்டினென்டல் ஸ்ரீலங்கா 2016 அழகுராணியாகத் தெரிவான ட்ரேஸி ஆன் டீசில்வா மிஸ் பேர்சனாலிட்டி விருதை யும் வென்றார்.

 

தலவத்துகொடவைச் சேர்ந்த ட்ரேஸி ஓர் ஆசிரியை ஆவார். 5 அடி 10 அங்குல உயரமான இவர் நடனம், பாடல், பயணங்கள் ஆகியவற் றில் ஆர்வம் கொண்டவர்.

 

1784018.jpg

 

எதிர்காலத்தில் தனது தந்தையின் மருத்துவத்துறை வர்த்தகத்தை முன்னெடுப்பதுடன் தொழில்வாண்மையாளராக வேண்டும் என்பது அவரின் விருப்பமாகும்.

 

இதனைக் கருத்திற்கொண்டு தற்போது வர்த்தக முகாமைத்துவ பட்டப்படிப்பை ட்ரேஸி ஆன் டீசில்வா மேற்கொண்டு வருகிறார். இவ் வருடம் நடைபெறவுள்ள சர்வதேச ரீதியான மிஸ் இன்டர் கொன்டினென்டல் போட்டியில் இலங்கையின் சார்பில் ட்ரேஸி ஆன் டீசில்வா பங்குபற்றவுள்ளார்.

 

1784022.jpg

 

1st Runner up – Andrea DeKauwe

2nd Runner up – Minoli Dayaratne

Miss Personality – Tracy Ann DeZilva

Miss Photogenic – Yameesha Rasadi

Miss Body Beautifull – Shashi Hewage & Andrea De Kauwe

Miss Catwalk Queen – Shenara Perera

Miss Popular – Anunththara Alishah

Miss Congeniality – Aneetha Nicholas

 

(Photos courtesy : Laska.Asia)

 

17840_Metro-News--page-19a.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.