Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆன்டனி டி மெல்லோ

 
 
antony_2998563f.jpg
 

உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும், மனநல ஆலோசகருமான ஆன்டனி டி மெல்லோ (Anthony de Mello) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாயில் (1931) பிறந்தவர். சிறு வயது முதலே மதக் கல்வி பெற்றவர், பம்பாயில் உள்ள சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பில் சேர்ந்தார். பாதிரியாருக்கான பயிற்சியில் இணைந்தார். பம்பாய் மாகாண கிறிஸ்தவ தேவாலய உறுப்பினராகவும் செயல்பட்டார்.

* தொடக்கத்தில், பிற மதங்கள் பற்றி அறிந்துகொள்வதில் இவருக்கு விருப்பம் இல்லை. 1970-களில் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, மற்ற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை அறிவதில் ஆர்வம் காட்டினார்.

* ‘விபாஸனா’ என்ற தியானப் பயிற்சி குறித்து அறியும் முனைப்புகளில் ஈடுபட்டார். அது, இவரது ஆன்மிக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. புத்த, இந்து மதக் கோட்பாடுகள் குறித்தும் அறிந்தார். பல ஆன்மிக விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். ‘சாதனா ஏ வே டு காட்’ என்ற இவரது முதல் நூல் 1978-ல் வெளிவந்தது.

* கிழக்கத்திய மத சிந்தனைகள், நவீன உளவியலை ஒருங்கிணைத்து புதிய தியான உத்திகளைக் கற்றுக்கொடுத்தார். மனிதர்கள் தங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், முக்கியமாக தங்கள் மனம் குறித்து நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* துன்பத்தில் வாடியவர்களுக்கு உளவியல்ரீதியாக ஆலோசனைகள் கூறி அவர்களது மனக்குறைகளைப் போக்கினார். வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க வழிகாட்டும் பயிலரங்கு களை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

* மக்கள் இவரை தலைசிறந்த பேச்சாளராகப் போற்றினர். நல்ல எழுத்தாளராகவும் பரிணமித்தார். கிறிஸ்தவம், புத்த மதம், இந்துக்களின் பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) மற்றும் வாழ்க்கை குறித்த உளவியல் சார்ந்த சிந்தனைகள் இவரது எழுத்துகளின் அடிநாதமாக இருந்தன.

* இந்தி, தமிழ், வங்காளம் மட்டுமின்றி உலகின் பல மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஸ்பெயின், ஜப்பான், சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட உலகம் முழுவதும் அவை புகழ்பெற்றன. ஆன்மிகத் தேடலில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

* இவரது ஆன்மிக ஞானமும், மனிதனைப் பற்றிய முழுமையான புரிதலும் இவரது போதனைகள், படைப்புகளிலும் எதிரொலித்தன. பாதிரியாரான இவர், பாரம்பரிய முறையில் அல்லாமல், புதுமையான அணுகுமுறையைக் கையாண்டதால் அதிகம் பிரபலமானார். அதேநேரம், மதவாதிகளின் எதிர்ப்புகள், கண்டனங்களுக்கும் ஆளானார்.

* ஒரு மதத்தை சேர்ந்த ஆன்மிகவாதி தன் சுயத்தையும், தன் மதத்தையும் இழக்காமலே பிற மதத்தின் சிறந்த அம்சங்களை தன் ஆன்மிகத் தேடலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். புனேயில் பாஸ்டோரியல் கவுன்சலிங் அமைப்பை 1972-ல் தொடங்கினார். பின்னர் இது ‘சாதனா இன்ஸ்டிடியூட் ஆஃப் பாஸ்டோரியல் கவுன்சலிங்’ என்று மாறியது.

* ஆன்மிக சேவை, எழுத்து, தியானம், மனநல ஆலோசனை என இறுதிவரை சுறுசுறுப்பாக செயலாற்றிய ஆன்டனி டி மெல்லோ, 1987-ல் நியூயார்க் சென்றிருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது இவருக்கு வயது 56. இவரது ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ஒன் மினிட் விஸ்டம்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
பொலிஸ் படிமான வளர்ச்சி

article_1472978571-0.jpg

article_1472978633-1.1.jpg

article_1472978697-1.jpg

article_1472978726-2.2.jpg

article_1472978761-03.jpg

article_1472978780-04.jpg

article_1472978797-05.jpg

article_1472978812-06.jpg

article_1472978827-07.jpg

article_1472978921-G%20%2811%29.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்
 

துளித்துளியாய்...

 

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்க்ரேட் நகரைச் சேர்ந்தவர் துசான் ஸ்டோஜன்செவிக். உலகம் முழுவதும் வலம் வந்து இவர் எடுக்கும் புகைப்படங்கள் பிரபலமானவை. 15 ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக இவர் எடுத்த புகைப்படம் ஒன்றில், ஜன்னலுக்கு வெளியே உள்ள நகர்ப்புறம் நீர்த்துளியில் பட்டுப் பதிவாகியிருக்கிறது.

p44.jpg

p44a.jpg

p44b.jpg

அட! இந்த ஐடியா நல்லாருக்கே என அன்றிலிருந்து உலகம் முழுவதும் உள்ள பிரபலமான நகரங்களை நீர்த்துளியில் பிரதிபலிக்குமாறு செய்து, அதைப் புகைப்படம் எடுப்பதை தனது வழக்கமாக்கிக்கொண்டார். ஃபிலிம் பயன்படுத்தும் கேமராவில் இருந்து, தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப கேமரா வரை அனைத்திலும், எந்த விதமான போட்டோஷாப் தொழில்நுட்பமும் பயன்படுத்தாமல் நகரங்களை நீர்த்துளிக்குள் அடக்கி புகைப்படம் எடுத்து வருகிறார் துசான்.

vikatan

  • தொடங்கியவர்
 

Artificial intelligence உருவாக்கிய முதல் சினிமா ட்ரெய்லர் #Morgan

ibm.jpg

.பி.எம் நிறுவனம் Artificial intelligence தொழில்நுட்பத்தைக் கொண்டு, முதல்முறையாக ஹாலிவுட் படத்திற்கு ட்ரெய்லர் ஒன்றை உருவாக்கியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான, 20th Century Fox நிறுவனம் தனது 'Morgan' படத்திற்கு ட்ரெய்லரை உருவாக்க ஐ.பி.எம் நிறுவனத்திடம் கேட்டிருந்தது. அதன்படி, இந்நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டரான 'வாட்சன்'தான், இந்த ட்ரெய்லரை கட் செய்திருக்கிறது. 

ஐ.பி.எம் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் வாட்சனின் பெயரை, இந்த சூப்பர் கணினிக்கு வைத்தது அந்நிறுவனம். செஸ் கிராண்ட் மாஸ்டர்களை எப்படி சூப்பர் கணினியுடன் செஸ் விளையாட வைத்து, அதனை பிரபலப்படுத்தினார்களோ, அது போல வாட்சனையும் பிரபல குவிஸ் மாஸ்டர்களுடன் மல்லுக்கட்ட வைத்துள்ளனர். மருத்துவம், தொழில்நுட்பம் என பல இடங்களில் வாட்சனைப் பயன்படுத்த ஐ.பி.எம் நிறுவனம் முயன்று வருகிறது. இந்நிலையில் வாட்சனுக்கு புதிதாகக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்தான் இந்த மோர்கன் பட ட்ரெய்லர்.

ip.jpg

மோர்கன், ஒரு திகில் படம் என்பதால், அதனை வாட்சன் புரிந்து கொள்வதற்காக 100-க்கும் மேற்பட்ட திகில் படங்களை, வாட்சன் மெமரியில் ஏற்றியிருக்கிறார்கள். சீன் பை சீனாக, ஒலி அமைப்பு, காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் என ஒவ்வொரு படத்தையும் ஆய்வு செய்திருக்கிறது வாட்சன். பிறகு Morgan படத்தையும் அதே போல,காட்சி வாரியாக ஆராய்ந்துள்ளது. எல்லாம் முடிந்து, இறுதியில் Morgan படத்திற்காக 6 நிமிடத்திற்கு ட்ரெய்லர் தயாரித்துள்ளது. பல நாட்கள் எடுக்கும் இந்த வேலை, ஒரே நாளில் முடித்துக் கொடுத்துள்ளது

வாட்சன். ஆனால் என்ன? இப்படி இந்தக் கணினி, ட்ரெய்லருக்காக கட் செய்த காட்சிகளை, வரிசைப்படி அமைப்பதற்கும், சுருக்குவதற்கும் மனிதர்களின் உதவியே தேவைப்பட்டுள்ளது. முதல்தடவையாக செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவான இந்த ட்ரெய்லருக்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் குவிந்துள்ளன. 

ஆனாலும் ட்ரெய்லருக்காக இல்லாவிட்டாலும், இது முதல் முயற்சி என்பதாலேயே, Morgan படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி. அதுதானே வேண்டும் அவர்களுக்கும்! 

 

vikatan

  • தொடங்கியவர்

இந்தக் கடல் சுருங்குதே!

 
  • sea1_2993233g.jpg
     
  • sea_2993234g.jpg
     

கடல்களில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், சாக்கடலில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதில்லை. அதற்குக் காரணம் என்ன? சாக்கடல் நீரின் தன்மைதான்.

சாக்கடல் (Dead Sea) என்று சொன்னாலும் இது கடல் அல்ல. மிகப் பெரிய ஏரி. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளின் எல்லையில், ஜோர்டான் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் 67 கி.மீ. நீளம், 15 கி.மீ. அகலம், 300 மீட்டர் ஆழம் கொண்டது சாக்கடல்.

நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தை விட 1,388 அடி கீழே அமைந்திருக்கிறது. பூமியின் மேல் அடுக்கில் ஏற்படும் நகர்வுகளின் காரணமாகச் சாக்கடல் தொடர்ந்து கீழிறங்கிக்கொண்டே இருக்கிறது.

கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் மிக அதிக அளவில் உப்பு இருக்கிறது. ஒரு லிட்டர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், 1 லிட்டர் சாக்கடல் நீரைக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும். அப்படியென்றால் நீரின் தன்மையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடல் நீரில் சோடியம் குளோரைட் உப்பு 97 சதவீதமும், இதர உப்புகள் 3 சதவீதமும் உள்ளன. ஆனால், சாக்கடலில் சோடியம் குளோரைட் 30 சதவீதமும், பொட்டாசியம் குளோரைட், மக்னீசியம் குளோரைட், இதர உப்புகள் 70 சதவீதமும் உள்ளன.

அதிக உப்புக்குக் காரணம்?

சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கனிம உப்புகள் அதிகம் உள்ளன. அவை சாக்கடலில் கலக்கும்போது உப்பின் தன்மை அதிகரித்துவிடுகிறது. சாக்கடல் நீர் வேகமாக ஆவியாகிறது. அதே நேரம் மிகக் குறைவாகவே மழை பெய்கிறது. இதனால், நீரில் உள்ள உப்பின் அடர்த்தி அதிகரித்துவருகிறது.

சாக்கடலில் கலக்கும் ஒரே நதி ஜோர்டான். இதன் பாதையில் இஸ்ரேல், சிரியா நாடுகள் அணைகளைக் கட்டி, பெரும் பகுதி தண்ணீரைப் பாசனத்துக்குத் திருப்பிவிட்டுக்கொண்டன. இதனால், சாக்கடலுக்குத் தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. சாக்கடலின் பரப்பளவும் சுருங்கிவருகிறது.

சாக்கடலில் உயிர்கள் உண்டா?

சாக்கடலில் மீன், ஆமை, நண்டு, நத்தை, கடல் தாவரங்கள் போன்ற எந்த உயிரினங்களும் இல்லை. உயிரினங்கள் வசிக்க முடியாத அளவுக்கு நீரில் உப்பு இருப்பதே இதற்குக் காரணம். அதனால்தான் சாக்கடல் என்று பெயர். ஆனால், மழை அதிகம் பெய்யும் காலங்களில் உப்புத் தன்மை சிறிது குறையும். அப்போது குறுகிய கால உயிரினங்கள் சில வாழ்வதுண்டு. சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பறவை இனங்களும் ஒட்டகம், நரி, முயல் போன்ற விலங்கினங்களும் வாழ்கின்றன.

மருத்துவக் குணம்

சாக்கடலைப் பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சாக்கடல் நீரில் மிதக்கலாம் என்பது முதல் காரணம். இந்த நீர் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் என்பது இன்னொரு காரணம்.

சாதாரண நீரைவிட உப்பு நீரின் அடர்த்தி அதிகம். சாதாரண நீரில் போடும் முட்டை கீழே சென்றுவிடும். சிறிது உப்பைப் போட்டால், முட்டை மேலே மிதக்க ஆரம்பித்துவிடும். இதே தத்துவத்தில்தான் சாக்கடலும் மனிதர்களை மிதக்கவைக்கிறது! நீச்சல் தெரியாதவர்கள்கூடச் சாக்கடலில் மூழ்க முடியாது. மிதந்துகொண்டே புத்தகங்களைப் படிக்க முடியும்!

சாக்கடல் சேற்றை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, நீண்ட நேரம் படுத்திருந்தால் தோல் நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது. தசை வலி, மூட்டு வலிகளைக் குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்தைவிடத் தாழ்வான பகுதி என்பதால் காற்றின் அடர்த்தியும் அதிகம். ஆக்ஸிஜனும் அதிகம். சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள். சாக்கடல் உப்பு, சேற்றில் இருந்து மருந்துகளும் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

tamil.thehindu

On 27/08/2016 at 0:39 AM, நவீனன் said:

வலைபாயுதே

இந்த பச்சை எதுக்குன்னா - நான் ரொம்ப நாளா யாழில் கனக்க வாசிக்கல்லை. இங்கையே இன்னமும் 5 பக்கம் மிச்சமிருக்கெண்டா பாத்துக்குங்களேன்.

  • தொடங்கியவர்

 

அழிந்து போன சில அடையாளங்கள்....
4 minutes ago, நவீனன் said:

அழிந்து போன சில அடையாளங்கள்....

கனம் நிர்வாகத்தினர் அவர்களே இந்த நவீனன் இதை வேணுமெண்டு போட்டிருக்கிறார் - நம்மள கடுப்பேத்த

ஈச்சம்பழத்தையும், தோடம்பள இனிப்பையும், பொரி உருண்டையையும், மாபிளையும் ....  காட்டினா நாங்க மடங்கிடுவமா? :grin::grin::grin:

  • தொடங்கியவர்

அன்னை 'புனிதர்' ஆன கதை! #MotherTeresa

mother.jpg

அன்னை தெரசாவை நேரில் பார்ப்பவர்கள் ' மதர், என் தலையில் கை வைத்து ஆசிர்வதியுங்களேன்... '! என்று ஆசையுடன் கேட்பார்கள். அப்படி கேட்பவர்களிடம், ஒரு பேப்பரில் 'கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்' என எழுதி, அதற்கு கீழே அவர்களை கையொப்பம் இட சொல்வார் மதர். தன்னிடம் ஆசி கேட்பவர்களிடம் 'இந்த பேப்பரை நான் கடவுள் கரங்களில் ஒப்படைந்து விடுகிறேன்' என சொல்வது அன்னையின் வழக்கம். அன்னை மறைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது.

ஒரு வெள்ளிக்கிழமையில்தான் அவர் மறைந்தார். அதனால், கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆப் சாரிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பிரார்த்தனை வெகு பிரசித்தம். இந்த பிரார்த்தனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அன்றைய தினம் , அன்னையின் கல்லறை அருகே வைக்கப்பட்டிருக்கும் 'கண்ணாடிப் பெட்டி ' பேப்பர்களால் நிரம்பி வழியும். பிரார்த்தனைக்காக வருபவர்கள் இப்போதும் அன்னை, 'தங்களுக்காக கடவுளிடம் இறைஞ்சுவதாக நம்புகிறார்கள்'. மக்கள் மனதில் என்றோ புனிதத்தன்மை அடைந்து விட்டவருக்குதான் வாட்டிகன் நாளை 'புனிதர்' பட்டம் வழங்குகிறது.

கடந்த 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியாவில் பிறந்த மதர் தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. சிறு வயதில் இருந்தே ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதுதான் ஆக்னசின் லட்சியம். பிரான்சை சேர்ந்த தெரசா மார்ட்டின், மதரைப் போலவே சேவையில் நாட்டம் கொண்டவர். அன்னை பிறப்பதற்கு முன்பே, ஏழைகளுக்கு சேவை புரிந்து  இளம் வயதில் காசநோயால் மறைந்து விட்டவர்.

teraaaa.jpg

 

சிறுவயது ஆக்னசுக்கு அந்த தெரசாதான் 'இன்ஸ்பிரேசன்' . அவரைப் போலவே தானும் பிற்காலத்தில் மாற உறுதி பூண்டார். 1929ம் ஆண்டு இந்தியா வந்த ஆக்னஸ், டார்ஜிலிங்கில், கன்னியாஸ்திரியாக துறவறம் ஏற்றார். பின்னர், தெரசா மார்ட்டின் நினைவாக, தனது பெயரையும் தெரசா என மாற்றிக் கொண்டார்.  கடந்த 1950ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி  கொல்கத்தா நகரில் 'சாரிட்டி ஆப் மிஷனரிஸ்' அன்னையால் தொடங்கப்பட்டது. அவரது சேவைகளுக்கு விளக்கம் தேவையில்லை.

மதருக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள். ஒன்று ஆசியைப் பணி. மற்றொன்று அறப்பணி. மூச்சு அடங்கும் வரை, இவற்றை அவர் கைவிடவில்லை. அதற்காக மதர் எப்போதுமே சீரியசாக இருப்பார் என்று நினைத்து விடாதீர்கள்.சிரித்த முகத்துடன்தான் காணப்படுவார். அருகில் இருப்பவர்களை 'ஜோக்' அடித்தும் சிரிக்க வைப்பார்.  யாராவது ஜோக் அடித்தால், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு சிரிப்பது மதரின் வழக்கம். தனது பால்ய சினேகிதிகளை கண்டு விட்டால்,மதரை கையிலேயே பிடிக்க முடியாது. பழைய நினைவுகளை ஒன்று விடாமல் அவர்களிடம் அசை போடுவார்.

உலக மக்களை மட்டுமல்ல,தன்னை சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் அக்கறை காட்டுவதில் மதருக்கு நிகர் மதர்தான். தனிப்பட்ட முறையில், யாராவது உதவி கேட்டால், அடுத்த விநாடி கேட்ட உதவி நிறைவேற்றப்படும். ஒருமுறை, கொல்கத்தாவில் பணியாற்றிய அருட் தந்தை டொமினிக் கோமசை, ரோம் சென்று மேற்படிப்பு படிக்க வாட்டிகன் உத்தரவிட்டது. பல முறை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து பார்த்தார் கோமஸ். யார் யாரையெல்லாமோ போய் சந்தித்தார். காரியம் நடக்கவில்லை. சோர்ந்து போய் மதரிடம் வந்து நின்றார். முகத்தை பார்த்தே கண்டுபிடிக்கும் வழக்கம்தான் மதரிடம் உண்டே. 'என்ன பிரச்னை உனக்கு என்றார்?'.டொமினிக் விஷயத்தை சொல்ல, 'எல்லா டாக்குமன்டுகளையும் என்னிடம் கொடுத்து விட்டு நாளை வந்து பார் ' என மதர் கூறினார். அடுத்த நாள், மதரிடம் சென்ற டொமினிக்கிற்கு பாஸ்போர்ட் தயாராக இருந்தது.

அடுத்தவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்திய மதர், தனது உடல்நலனில் அக்கறை கொண்டதே கிடையாது. மதருக்கு இதய நோயின் தாக்கம் இருந்த நேரத்தில், ஃபேஸ்மேக்கர் பொருத்த வேண்டுமென டாக்டர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.  'மாடிப்படி ஏறவே கூடாது’ என்றும்  உத்தரவு போட்டிருந்தார்கள். அந்த சமயத்துல, வங்கதேசத்துல இருந்து, மதருக்கு போனில் அழைப்பு. போனை வைத்த அன்னை, 'வங்க தேசத்துல புயலாம். நான் உடனே அங்கே போய் ஆகனும். ஏற்பாடு பண்ணுங்கனு சொல்ல, அருகில் இருந்தவர்கள், 'டாக்டர் மாடிப்படியே ஏறக் கூடாதுனு சொல்லிருக்காங்க. நீங்க, வங்க தேசம் போறேனு சொல்றீங்கனு கேள்வி எழுப்பினர். 'அதெல்லாம் போய்ட்டு வந்து சொல்லிக்கலாம் ' என அன்னையிடம் இருந்து பதில் வந்துள்ளது யார் சொல்லியும் கேட்கல வங்கதேசம் போய்ட்டு வந்துட்டுதான் மறு வேலை பார்த்திருக்கிறார்.

new_okokk_vc13.jpg

 

அப்பேதெல்லாம், மிஷனரிஸ் ஆப் சாரிட்டியில், கன்னியாஸ்திரிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை. ராகுல்ராய் என்ற போட்டோகிராபர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, மூன்று கன்னியாஸ்திரிகளை படம் எடுத்தா. அப்போது, அன்னையும் ஆலயத்தில் இருந்தார். பிளாஷ் வெளிச்சம் வர,போட்டோகிராபரை பார்த்து  'ஹலோ நீங்க என்ன செய்றீங்கனு கேட்டார்... அதற்கு ராகுல்ராய், 'பிரார்த்தனையில் இருக்கிற மூன்று கன்னியாஸ்திரிகள் என் கண்களுக்கு ஏஞ்சல்களாகவேத் தெரிகின்றனர்'' என சமாளித்தார். மதரை கவரும்விதத்தில் பதில் இருந்ததால் கண்டிப்பில் இருந்து தப்பி விட்டார்.

கடந்த 1964ம் ஆண்டு போப் ஆண்டவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த, லிண்டன் ஜான்சன், போப் ஆண்டவருக்கு பரிசாக காண்டினென்டல் காரை பரிசாக அனுப்பி வைத்தார். அந்த காரை, போப் ஆண்டவர் அன்னைக்கு பரிசாக வழஙக, அதனை ஏலம் விட்டு, அந்த பணத்தை அறக்கட்டளையில் சேர்த்தார். கன்னியாஸ்திரியாக மாறிய பிறகு நீலக் கறையிடப்பட்ட சாதாரண வெண் புடவையைத் தவிர வேறு எதையும் உடுத்த மாட்டார்.

பத்மஸ்ரீ  முதல் நோபல் பரிசு வரை வென்று விட்டார். 'ஏழைகளுக்கு சேவை என்ற பெயரில் மதமாற்றம் செய்தார்’ என்பது இவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. ' மதர் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் கண்டெடுத்த அத்தனை பேருமே கடவுளின் குழந்தைகளாகத்தான் அவர் பார்த்தார்'' என்கிறார் மதர் தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் பி.சாவ்லா.

கடந்த 1997ம் ஆண்டு, தனது 87வது வயதில் மதர் தெரசா மறைந்தார். ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக புனிதர் பட்டத்தை அளிக்க வேண்டுமென்ற கத்தோலிக்க மக்கள் கோரி வந்தனர். அதற்கு இரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்று வாட்டிகன் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2003ம் ஆண்டு மதர் தெரவாசாவுக்கு 'அருளாளர்’ பட்டத்தை வாட்டிகன் வழங்கியது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருந்தது. மதர் தெரசா உருவம் பதித்த சங்கிலி அணிந்து பிரார்த்தனையில் ஈடுபட்டதால், புற்று நோய் குணமடைந்தது. இதனால் முதலில் 'அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.

இரண்டாவதாக, பிரேசில் நாட்டில் மூளைக் காய்ச்சல் காரணமாக கோமா நிலையை அடைந்தவரை மதர் தெரசா குணப்படுத்தியதாகவும், நோயாளியின் குடும்பத்தினர் மதர் தெரசாவை பிரார்த்தித்து குணம் பெற்றதாகவும் கூறினர். இரு அற்புதங்களையும் கணக்கில் கொண்டு, போப் பிரான்சிஸ் மதருக்கு 'புனிதர்' பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.

'ஒவ்வொரு மனிதர்களிலும் நான் கடவுளை பார்க்கிறேன். தொழுநோயாளியைத் தொடும்போது இறைவவனைத் தொடுவதுபோல் உணர்கிறேன்...!' என்ற மதர் தெரசா, மதங்களை கடந்து உலகத்துக்கே பொதுவானவர்!

vikatan

  • தொடங்கியவர்

தித்திக்கும் `த்ரி' தேச அழகிகள் இவர்கள்!

p32.jpg

டோலிவுட் காஷ்மீரா குல்கர்னி

பெயருக்கு ஏற்றார் போல குளுகுளு ஆப்பிள். பிறந்ததே தியேட்டரில்தான் என்பதால் சினிமாவுக்கும் இவருக்குமான பந்தம் கொஞ்சம் ஸ்ட்ராங். மகாராஷ்ட்ரா பூர்வீகம் என்பதால் இந்தியில் அறிமுகமானார். கொழுகொழுவென நெய் பிஸ்கட் போல இருப்பதால் கொத்திக்கொண்டு வந்துவிட்டார்கள் மனவாடுகள். ராம் கார்த்திக் ஜோடியாக ‘த்ருஷ்ய காவியம்’ படத்தில் நடித்தவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக வெயிட்டிங். போனஸ் குறிப்பு: அம்மணி ஒரு தொழிலதிபரும்கூட. எந்தத் தொழிலதிபருக்கோ..?


p32a.jpg

சாண்டல்வுட் ஜான்வி கம்மத்

ங்களூரு மல்கோவா. குழந்தை நட்சத்திரமாக ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்தவரை ஹீரோயின் ஆக்கிய புண்ணியம் கோடம்பாக்கத்துக்கே! ‘ஒத்த வீடு’, ‘புதிய காவியம்’ என இரண்டு படங்களில் நடித்தார். கன்னட இயக்குநர் சைதன்யா இவரைத் திரும்ப சாண்டல்வுட்டுக்கே அழைத்துச் சென்றார். அவரின் ‘பராரி’ படத்தில் நாயகியாய் வெரைட்டி காட்டியவருக்கு உடனே அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. பொறுத்துப் பார்த்த மயிலு மீண்டும் சீரியல் பக்கம் பறந்துவிட்டது. வரணும்... பழைய ஜான்வியா வரணும்!


p32b.jpg

மல்லுவுட் நியதி அஷோக்

கேரள நாட்டு இளம் பைங்கிளி. மாடலாக எக்கச்சக்க கேட்லாக்குகளில் போஸ் கொடுத்தும், விளம்பரங்களில் நடித்தும் வளர்ந்து வந்த இவரை `வா வா' என வரவேற்று உபசரித்தது மலையாளத் திரையுலகம். இந்த ஆண்டு வெளியான 'கட்டுமக்கன்' படத்தில் நடித்தார். இப்போது அடுத்தடுத்த படங்களுக்காக வெயிட்டிங். சீக்கிரமே தமிழில் இவரைப் பார்க்கலாம். அழகு மட்டுமல்ல, அறிவும் கொட்டிக்கிடக்கிறது அம்மணியிடம். என்.ஐ.டி மும்பையில் படித்துப் பட்டம் வாங்கிய மூளைக்கார லாலிபாப்! அடிப்பொலி!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 05
 
 

article_1441368628-vgg.gif1887: இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிபததில் 186 பேர் பலி.

1960: அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி (அப்போது கஸியஸ் கிளே) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாதிகள் குழுவினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

1975:  அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்டை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.

1980: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை போக்குவரத்து சுரங்கம் (16 கிலோமீற்றர்) சுவிட்ஸர்லாந்தில் திறந்துவைக்கப்பட்டது.

1986: மும்பையிலிருந்து நியூயோர்க் சென்ற அமெரிக்க விமானமொன்றை தீவிரவாதிகள் கடத்தியதையடுத்து  கராச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் பலி.

1997: அன்னை திரேஸா தனது 87ஆவது வயதில் காலமானார்.

2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் விமானமொன்று குடியிருப்பு பகுதியில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 104 பேரும் தரையிலிருந்த 39 பேரும் பலி.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14199235_1121618014553558_78393318060849

இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மார்க் ராம்பிரகாஷின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Mark Ramprakash

  • தொடங்கியவர்

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இன்று.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.

vocesep15.jpg




இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்தார்.

vikatan

வ.உ.சிதம்பரம் பிள்ளை

 

 
voc_2999582f.jpg
 

சுதந்திரப் போராட்ட வீரர்

 

‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (V.O.Chidambaram Pillai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத் தில் (1872) பிறந்தவர். தாத்தா, பாட்டியிடம் ராமாயண, சிவபுராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழும், அரசாங்க அலுவலர் கிருஷ் ணனிடம் ஆங்கிலமும் கற்றார்.

# தூத்துக்குடி புனித சேவியர் பள்ளி, கால்டுவெல் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றார். தாலுகா அலுவலகத்தில் பணியாற்றினார். திருச்சியில் சட்டக் கல்வி முடித்து, ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

# குற்றவியல் வழக்குகளில் கைதேர்ந்தவர். வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்து, காவல்துறையினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால், இவரை தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தார் தந்தை.

# தமிழ் இலக்கியங்கள் குறித்து பல செய்யுள்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். சிவஞான போதம் நூலுக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான ராமகிருஷ்ணானந்தரை இவர் சந்தித்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி எண்ணங்கள் குறித்த அவரது கருத்துகள் இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

# தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தொடங்கி னார். திலகரை அரசியல் குருவாக ஏற்று, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பிரிட்டிஷாரின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.

# கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து போக்குவரத்தைத் தொடங்கினார். ஆனாலும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. சொந்தக் கப்பல் வாங்க பங்குதாரர்களைத் திரட்ட வட மாநிலங்களுக்கு சென்றார். எஸ்.எஸ்.காலியோ என்ற கப்பலுடன் திரும்பினார். தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.

# பாரதியாரின் நெருங்கிய நண்பர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடினார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கியதால், தனது சொத்தில் பெரும் பகுதியை இழந்தார். வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.

# இவரது உணர்ச்சிமிக்க உரைகள், மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை கொழுந்துவிட்டு எரியச்செய்தது. 1908-ல் பொய்க் குற்றம்சாட்டி இவரை ஆங்கில அரசு கைது செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.

# பின்னர், தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. கோவை சிறையில் செக்கு இழுக்கவைத்து சித்ரவதைச் செய்தனர். விடுதலையான பிறகு, சென்னையில் குடியேறினார்.

# நாட்டின் விடுதலைக்காக தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை 64-வது வயதில் (1936) மறைந்தார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்
பாரம்பரிய ஆடையுடன் சுப்பர் மார்க்கெட்டுக்கு வந்த பழங்குடியினப் பெண்
 

நமீபியாவிலுள்ள பழங்குடி இனப் பெண்ணொருவர் தனது பாரம்பரிய ஆடையுடன் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

 

19022HW1-800x498.jpgநமீபியாவின் ஒப்புவா நகரில் இப் படம் பிடிக்கப்பட்டதாக சுவீடனைச் சேர்ந்த ஜோன் பியர்சன் எனும் இப் புகைப் படக்கலைஞர் தெரிவித்துள்ளார்.

 

ஹிம்பா பழங்குடி இனத்தவர்கள் தொடர்பான ஆவணப் படமொன்றின் படப்பிடிப்புக்காக ஜோன் பியர்சன் நமீபியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு உள்ளூர் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் இப் பெண்ணை தான் கண்டு வியப் படைந்ததாக பியர்சன் கூறியுள்ளார்.

 

தனது பாரம்பரிய ஆடையலங் காரங்களுடன் காணப்பட்ட இப் பெண், தனது குழந்தையையும் முதுகில் சுமந்து கொண்டிருந்தார். “அப் பெண் முதலில் என்னை அவதானிக்கவில்லை.

 

பின்னர் நான் படம்பிடிப்பதை அவர் புரிந்து கொண்டார். ஹிம்பா இனப் பெண் கள் வழக்கமாகவே இவ்வாறு தான் ஆடை அணிவார்கள். தமது சொந்த கிராமத்தில் இருந்தாலும், வேறு பெரிய கிராமங்களுக்குச் சென்றாலும் அவர்கள் ஆடையணிவது இப்படித் தான்.

 

19022Untitled-22.jpg

 

வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களின் தலையும் உடலும் ஒரு வகை களியினால் மூடப்பட்டிருக்கும்” எனவும் ஜோன் பியர்சன் தெரிவித்துள்ளார்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகமே திரும்பி பார்த்த இரசிகர் ஒருவரின் பிடியெடுப்பு – காணொளி..

 

நேற்று இடம் பெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் ஒரு விசித்திர பரிசு வழங்கும் போட்டி இடம்பெற்றுள்ளது.

அதாவது மைதானத்தில் 6 ஓட்டமாக வரும் பந்தினை பிடி எடுக்கும் ரசிகருக்கு ஆஸ்திரேலியாவிற்கான இலவச சுற்றுபணயம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி ஒரு ரசிகர் தனது கடுமையான முயற்சியால் 6 ஓட்டமாக வந்த பந்தினை பிடி எடுத்து அந்த பரிசினை வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

14142026_1121619761220050_53409295891126

 
 
இந்திய அணியின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Pragyan Ojha
 
  • தொடங்கியவர்

ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்! #HappyTeachersDay

teacher_vc1.jpg

 

நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!

கற்பிப்பதில் ஆர்வம்!

இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.

மாணவர்களிடம் அன்பு!

    ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.


பாடத்துறையின் மீது காதல்!

    தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான்  விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.


பள்ளியின் பொருள்!

    ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான‌ பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.


 விருப்பத்திற்கான மாற்றம்!

    இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாண‌வர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.


தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!

    எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்

    இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.

    மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

vikatan

 

 

 

'ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை என்றைக்கும் மறக்க வேண்டாம்....!' #HappyTeachersDay

teacher%202.jpg

'டீச்சர்...மிஸ்....அய்யா...மேம்’...இந்த வார்த்தைகளை வாழ்வில் கடந்து வந்திருக்காதவர்கள் இங்கே யாருமே இருக்க முடியாது. ஊரே பிள்ளையாரின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த பிள்ளையார் சுழியையே போடக் கற்றுத் தந்த மகத்தான ஆசிரியர்களுக்கும் இன்றுதான் ஒட்டுமொத்தமாக பிறந்தநாள்.

ஆம்...! இன்று செப்டம்பர் 5... ஆசிரியராய் இருந்து, குடியரசுத் தலைவராய் உயர்ந்த  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம். நம் வாழ்வை மாற்றிய கல்வியாளர்களைக் கொண்டாடும் ‘ஆசிரியர் தினம்’.

முதன்முதலில் தமிழின் தொடக்கமான ‘அ’ போடச் சொல்லித் தந்த அப்பா, அம்மாதான் நம்முடைய முதல் ஆசிரியர்கள். பழக்கமே இல்லாத முதல் நாள் பள்ளிக்கூடத்தில், அழும் குழந்தையை அரவணைப்போடு, இனிப்புக் கொடுத்து கல்வி போதிக்க அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர். 

கனிவும், கண்டிப்பும், அரவணைப்பும், புதிது புதிதாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் உற்சாகமும்தான், இன்று அப்துல்கலாம், ரகுராம் ராஜன், மயில்சாமி அண்ணாத்துரை என்று எத்தனையோ அறிஞர்களை நம்மிடையே உருவாக்கித் தந்திருக்கிறது. கைப்பிடித்து எப்படி நடக்க வேண்டும் என்பது தொடங்கி, கையெழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுவரை நம்மை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.

teacher%201.jpg


இங்கே பத்தில் எட்டு பேருக்காவது அடிக்கடி ஆசிரியர் வீட்டுச் சாப்பாடு கிடைத்திருக்கும். இன்றும் முகத்தில் கண்டிப்பையும், உள்ளத்தில் அன்பையும் வைத்துக் கொண்டு, கையில் பிரம்புடன் மாணவர்களை விரட்டி, விரட்டிப் படிக்க வைக்கும் நல்லாசிரியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

22 வருடங்களாக ஆசிரியர் பணி செய்து, தனக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் வறுமையில் வாடும் ஆசிரியருக்கு, தன்னுடைய மாணவன் இன்று கம்பீரமான, கெளரவமான பதவியில் இருக்கின்றான் என்கிற ஒரு தகவல் போதும்....அத்தனை பசியிலும் அவர் முகத்தில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த!

teacher.jpg



நம்முடைய உள்ளார்ந்த அறிவாற்றலைக் கண்டறிந்து ’இதுதான் உனக்கு சரியான பாதை’ என்று வழிகாட்டிய ஆசிரியர்கள்தான் இன்று நம்மில் எத்தனையோ பேர் அவரவருக்கு விருப்பமான துறைகளில், தகுதியான வேலையில் அமரக் காரணம்.

தமிழையும், கணிதத்தையும், அறிவியலையும் ஆணிவேரில் இருந்து ஆசிரியர்கள் கற்றுத் தந்திருக்காவிட்டால், இங்கு விஞ்ஞானிகளும், கணிதவியலாளர்களும், மென்பொருள் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் இல்லாமலேயே போயிருப்பார்கள்.

எத்தனை மாணவர்கள் இருந்தாலும், அத்தனைப் பேரையும் தான் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்டி வளர்த்த எல்லா ஆசிரியர்களுமே கொண்டாடப்பட வேண்டிய ‘நல்லாசிரியர்கள்’தான். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆசிரியர் உந்துதலாய், உத்வேகமாய் இருந்திருப்பார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களை எப்பாடு பட்டாவது தேடிக் கண்டறிந்து, ஒரு வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்நாள் பரிசாய் இருக்கும். ஏற்றிவிட்ட ஏணிப் படிகளுக்கு காணிக்கை செலுத்தும் நாள் இன்று!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தோழா...
 
 

article_1473053587-37E4353B00000578-3773

ஜப்பானினுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் சிங்கக் குட்டியொன்றும் புலிக் குட்டியொன்றும் மிகுந்த நட்புடன் பழகும் புகைப்படங்கள், டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

article_1473053601-37E4361300000578-3773article_1473053608-37E4352A00000578-3773article_1473053653-37E4339E00000578-3773

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆனை முகத்தானின் அபூர்வ தகவல்கள்!

pil1.jpg

பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங் களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்குத் தெரி யும். இவைமட்டுமின்றி, பிள்ளையாரைப் பற்றி நாம் அவசியம் அறியவேண்டிய தகவல்கள் இன்னும் உண்டு.

தெரிந்துகொள்ளலாமா ஆனைமுகன் குறித்த அந்த அபூர்வ தகவல்களை!

பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்?

கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்!

தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார். 

சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயகப் பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தாராம் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார்.

பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன்.

அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது! இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.

இவை பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர,  பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு கணபதிக்கு.

பிள்ளையாருக்கு முதலில் மோதகம் படைத்தது யார்?

பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் ‘செப்பு’ என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத் தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.


இப்படியும் சொல்லலாம்... இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல் களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்!


பிள்ளையாருக்கு எத்தனை தேவியர்?

ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

மண் பிள்ளையாரும் மாவுப் பிள்ளையாரும்!

ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும்.

pil2.jpg

 

புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.
வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார்.
உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.
வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார்.
கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.
மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம்.

பிள்ளையாரைப் போற்றும் புராணங்கள்

முத்கல புராணம், சிவ புராணம், கந்த புராணம், கணேச புராணம், மச்ச புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புரணம் ஆகிய புராணங்களும், ரிக் வேதம், சுக்ர நீதி, சுப்பிர பேதம், அபிதான கோசம் முதலான ஞான நூல்களும் விநாயகரைப் போற்றுகின்றன.

பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்!

விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளை யாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை: முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை.
வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள். இந்த தினங்களில் சிரத்தையுடன் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால், நினைத்ததை அடைந்து நீடூழி வாழலாம்.

பிள்ளையார் சுழி!

வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள்.
வைணவ ஆலயங்களான திருவரங்கம் கோயிலில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகத் திகழ்கிறார் பிள்ளையார்.

சிதறு தேங்காய் எதற்கு?

வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

உச்சிப்பிள்ளையார்

நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.

ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை  அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.

pil3.jpg

 

சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாய கரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.

திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.

பாதாள விநாயகர்!

சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்ப வராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம்.  இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில்  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்...

மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!


ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

தாமரை மலரில் அமர்ந்த நிலையில்... வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.

குழந்தை கணபதி

நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.

வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் பிள்ளையார்!

தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள வேத விநாயகர், வேதங்களை காதுகொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். எனவே இவரை, செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.


மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள முக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமேனி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.
திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.

அம்மையப்பனை பிள்ளையார் வலம்வந்த ஊர்

விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்... வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திருந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.


மயிலாடுதுறைக்கு தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள் புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு, சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார்.

 

 

சாட்சி கணபதி... பாக்கு பிரசாதம்!

ஆந்திர மாநிலம்- சைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை ‘சாட்சி கணபதி’ என்கின்றனர்.

 

கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம். வழிபாடுகள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

vikatan

  • தொடங்கியவர்

14238272_1121620021220024_97953717738470

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்து இங்கிலாந்துக்காக முதலாவது ஒருநாள் கிண்ணத்தை (England's 1st Multi team Onde day tournament trophy) வென்று கொடுத்த முன்னாள் சகலதுறை வீரர் அடம் ஹோலியோக்கின் பிறந்தநாள்.
Happy Birthday Adam Hollioake

  • தொடங்கியவர்
மாடுகள், எருமைகளுக்கான ஓட்டப் போட்டி
 

19024_071163-01-02_5180257.jpgஇந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் மாடுகள் மற்றும் எரு­மை­க­ளுக்­கான ஓட்டப் போட்­டிகள் அண்­மையில் நடை­பெற்­றது.

 

 

அலங்­க­ரிக்­கப்­பட்ட பல மாடு­களும் எரு­மை­களும் இப்­ போட்­டி­களில் பங்­கு­பற்­றின.

 

 

மாகேபுங் எனும் இவ்­ வி­ளை­யாட்டு விழா பாலி தீவி­லுள்ள மேற்கு ஜெம்ப்­ரானா மாவட்­டத்தில் இரு விவ­சாய சமூ­கங்­களால் பாரம் பரியமாக  நடத்தப்படுகிறது.

 

19024_1.jpg

 

19024_2.jpg

 

19024_3.jpg

19024_4.jpg

 

19024_5.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14195449_10153697588805163_5242925467508

2016 ஆம் ஆண்டிற்கான பிரிட்டிஷ் வன உயிரின புகைப்பட விருதுகளுக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிந்து, சிங்கத்தின் பிடரி மயிர் ஜெல்லி மீனின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கட்டணமின்றி வண்டியில் பயணம் செய்வதை குறிக்கும் 'ஹிட்ச்ஹைக்கர்ஸ்' என்ற தலைப்பில் ஜார்ஜ் ஸ்டோயல், ஸ்காட்லாந்தில் உள்ள செயிண்ட் கில்டா கடல் பகுதியில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொலைத்தூர தீவுகளின் அருகே உள்ள கடற்குகைகளின் உயிரியல் நிலை குறித்தான ஆய்வின் போது இதனை பதிவு செய்துள்ளார்.

BBC

  • தொடங்கியவர்

 

அமேசான் செயலி பயன்பாடு, ஜப்பானிய விண்வெளி பந்தய குழு ஹாகுட்டோ நிறுவனத்தின் வாகனம், லெனோவாவின் யோகா புத்தகம், முட்டை வடிவிலான ட்ரோன் ஆகியவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

சூப் பாய்ஸ் ஹோட்டல்!

 

லவ் பிரேக்-அப் ஆகிடுச்சா? கவலை வேண்டாம்! ஆமாம் பாஸ்...! காதல் பிரேக்-அப் ஆன ஆண்களின் மனசை தேத்துறதுக்காகவே அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் உள்ள ஹோட்டல் ஒன்று ஸ்பெஷல் பேக்கேஜ் அறிவித்திருக்கிறது. அங்கு இருக்கும் ஹோட்டல் `ஹார்டு ராக்'தான் இப்படி ஒரு பேக்கேஜ் அறிவித்து அமெரிக்கக் காதலர்கள் மனதில் ஒயின் வார்த்திருக்கிறது. `இந்த பேக்கேஜ்'ல பார்த்தீங்கனா சார்' என அவர்கள் அறிவித்திருக்கும் சலுகைகள் அத்தனையும் `அடங்கொக்கமக்கா' ரகம்!

p76.jpg

"காதல் தோல்வில துவண்டு போய் கிடக்குற பசங்க இங்கே புக் பண்ணி வந்தா போதும். (முதலில் முந்துபவர்களுக்கே முன்னுரிமையாம்!)  அந்த காதல் தோல்வி கட்டிளம் காளைக்கு 3 வேளையும் ஆரோக்கியமான உணவு, அளவில்லாத சரக்கு (இது பாயின்ட்டு!), தோல்வி சோகத்துல இருந்து வெளிவர தத்துவார்த்த தன்னம்பிக்கை பாடல்கள் (அட!) அடங்கிய சி.டி மற்றும் சிலபல கண்கவர் நடனங்கள் என `சிரிச்சி சிரிச்சு வந்தா சீனாதானா' ரேஞ்சுக்கு மகிழ்வித்து மகிழ்கிறார்கள். எல்லா வசதிகளும்  தந்து அப்டியே உங்களை வெந்நீரில் குளிப்பாட்டி பவுடர் போட்டு ஒரு போட்டோ ஷூட் நடத்தி உங்க அடுத்த ஆன்லைன் டேட்டிங் புரொஃபைல் போட்டோவும் அவர்களின் டேட்டிங் இணையதளத்தில்  அம்சமாய் வெச்சி விடுவார்களாம்! (ஆஹா... இதுவல்லவோ சேவை!) இந்த அமர்க்களமான பேக்கேஜ் வெறும் 550 டாலர்தானாம்! அதாவது நம்ம ஊர் மதிப்புக்கு 33 ஆயிரம் மட்டுமே! இதில் முதலில் முந்தும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சலுகைகள் உண்டாம்! (ஹோட்டல்காரர் லவ் ஃபெயிலியர்னால ரொம்பப் பாதிக்கப்பட்டிருப்பார் போல!)

இந்த அட்டகாசமான பேக்கேஜோட பேரு... `நீங்க பொழச்சுக்குவீங்க!' (You Will Survive) (அது முடியாம தானய்யா பிரேக் அப் ஆச்சு... அவ்வ்வ்!)

 2 நாளைக்கு முன்னாடி முன்பதிவு பண்ணிடறது அவசியம். இந்த ஆஃபர் ஜூலை 2016-லேர்ந்து 2017 காதலர் தினம் வரைக்கும் மட்டும்தானாம்!

`நமக்கெல்லாம் எதுக்கு பாஸ் ஹோட்டல்? இருக்கவே இருக்கு இன்னொரு லவ்!'னு நீங்க நினைச்சீங்கன்னா ஹோட்டல் பிசினஸ் லாஸ் ஆகிடுமே! 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...... 

செப்டெம்பர் -06

 

1522 : பேர்­டினண்ட் மக­லனின் விக்­டோ­ரியா கப்பல் உயிர் தப்­பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்­த­டைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்­றது.

 

1620 : வட அமெ­ரிக்­காவில் குடி­யே­று­வ­தற்­காக இங்­கி­லாந்தின் பிளை­மவுத் நக­ரி­லி­ருந்து மேபி­ளவர் எனும் கப்­பலில் மக்கள் புறப்­பட்­டனர்.

 

1776 : கரி­பியன் தீவான குவா­த­லூப்­பேயை சூறா­வளி தாக்­கி­யதில் 6000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

803Hendrik-Verwoerd-1966.jpg1873 : இலங்­கையில் புதி­தாக வட­மத்­திய மாகாணம் அமைக்­கப்­பட்டு, இலங்­கையின் மாகா­ணங்கள் ஏழாக அதி­க­ரிக்­கப்­பட்­டது. 

 

1901 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் மெக்­கின்லே நியூ­யோர்க்கில் லியோன் சியால்கோஸ் என்­ப­வனால் சுடப்­பட்டுப் படு­கா­ய­ம­டைந்தார்.

 

1930 : ஆர்­ஜெண்­டீ­னாவின் ஜனா­தி­பதி ஹிப்­போ­லிட்டோ இரி­கோயென் இரா­ணுவப் புரட்­சியை அடுத்து பத­வியிலிருந்து அகற்­றப்­பட்டார்.

 

1936 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா தீவில் கடைசி தாஸ்­மா­னியப் புலி  ஹோபார்ட் நகரில் இறந்­தது.

 

1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக தென் ஆபி­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1946 : ஐக்­கிய தேசியக் கட்சி டி. எஸ். சேன­நா­யக்­கா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1966 : தென் ஆபி­ரிக்க நிற­வெறி ஆட்­சியின் சிற்பி என வர்­ணிக்­கப்­படும் பிர­தமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் (64), கேப் டவுண் நகரில் நாடா­ளு­மன்ற அமர்வின் போது நாடா­ளு­மன்ற ஊழி­ய­ரான திமித்ரி என்­ப­வனால் கத்­தியால் குத்தி கொலை செய்­யப்­பட்டார்.

 

1968 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுவா­ஸி­லாந்து சுதந்­திரம் பெற்­றது.

 

803varalaru-september-06.jpg1970 : ஐரோப்­பாவிலிருந்து நியூயோர்க் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பய­ணிகள் விமா­னங்கள் கடத்­தப்­பட்டு ஜோர்­தா­னுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டன.

 

1990 : யாழ்ப்­பாணக் கோட்டை மீதான புலி­களின் முற்­று­கையின் போது இலங்­கையின் குண்­டு­வீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.

 

1991 : ரஷ்­யாவின் லெனின்­கிராட் நகரம் மீண்டும் சென் பீட்­டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.

 

1997 : பிரித்­தா­னிய இள­வ­ரசி டயா­னாவின் உடல் அடக்கம் செய்­யப்­பட்­டது. 250 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்வையிட்டனர்.

 

2009 : பிலிப்பைன்ஸில் 971 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. 10 பேரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.

metronews

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.