Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சுழல் மன்னன்... சோர்விலன்... அஸ்வின்! #HBDAshwin

AshIPL_PTI.jpg

‘ரோட்டுல கல்லு பொறுக்கி போடுற வேலை செஞ்சா கூட, அதுலயும் நான்தான் நம்பர் ஒன்னா இருக்கனும்’ என்பது இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பாலிசி. அதனால்தான் டெஸ்ட் ஆல்ரவுண்டர் ரேங்கிங்கில் அவர் நம்பர் 1. இந்திய அணியின் கேப்டன்கள் தோனி, கோலி இருவரும், விக்கெட் தேவைப்படும் நேரத்தில் தேடும் பவுலர் அஸ்வின். சொல்லி வைத்தாற்போல அந்த ஓவரில் விக்கெட் எடுத்து, கேப்டனின் வயிற்றில் பால் வார்க்கும் இவர், டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 50, 100, 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 

2011ல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 9 விக்கெட் வீழ்த்தி, அறிமுக போட்டியில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமை பெற்றதோடு, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அதன் பின், அவர் டெஸ்ட் பயணத்தில் ஏறுமுகம். ஆனால், 2013ல் இந்திய அணி தென் ஆப்ரிக்க சென்றிருந்தபோது, ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 42 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

இதற்கு தண்டனையாக அடுத்த ஆறு டெஸ்ட்களில் அவர், டிரெஸ்ஸிங் ரூமில் உட்கார வைக்கப்பட்டார். ‘பிளேயிங் லெவன்ல இடம் கிடைக்காம இருந்த டைம்தான், என்னை நானே அனலைஸ் பண்ணிகிட்டேன். அதுக்கு அப்புறம்தான் தீவிரமா டிரெயன் பண்ண ஆரம்பிச்சேன்’ என சொல்லும் அஸ்வினுக்கு, 2015 சீசன் உச்சம். கடந்த ஆண்டு இந்தியா & தென் ஆப்ரிக்க தொடரில் 31 விக்கெட்டுகளை அள்ளிய அவரது விக்கெட் வேட்டை, இலங்கை சுற்றுப் பயணத்திலும் நீண்டது. 

சங்ககராவில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் வரை எதிரணி வீரர்களுக்கு அஸ்வின் சிம்ம சொப்பனம். ‘சங்ககரா ஒரு லெஜெண்ட். அவர் ஒருமுறை ஒரு பவுலரிடம் விக்கெட்டை கொடுத்து விட்டால், அடுத்த முறை அந்த பவுலர் பந்தில் ஆட்டமிழக்க மாட்டார். அவர் விக்கெட்டை எடுப்பது சிரமம்’ என கடந்த ஆண்டு இலங்கை தொடர் தொடங்கும் முன் சொல்லி இருந்தார் அஸ்வின். ஆனால், அந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களிலும் சங்ககரா விக்கெட்டை எடுத்து பிரமிக்க வைத்தார். இது எப்படி சாத்தியமாச்சு என கேட்டபோது ‘சங்ககரா ரிட்டையர்டுமென்ட் டென்ஷன்ல இருந்தார். அதனால நினைச்ச கேமை அவரால் ஆட முடியலை. இதை யூஸ் பண்ணி மாத்தி மாத்தி பவுலிங் போட்டேன். அவ்வளவுதான்’ என சிம்பிளாக பதில் சொன்னார்.

501329-ravichandran-ashwin.jpg

ஏபி டி வில்லியர்ஸ் & எதிரணியை நடுநடுங்க வைக்கும் பேட்ஸ்மேன். டி 20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மாட்டானாலும், எந்த பிட்ச்சானாலும் 360 டிகிரியில் சுற்றிச் சுழலும் சூறாவளி. அப்பேர்பட்டவரே, கடந்த ஆண்டு நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் பந்தை எதிர்கொள்ள திணறினார். இரண்டு முறை லைனை விட்டு இறங்கி வந்து பந்தை பேடில் வாங்கினார். டி வில்லியர்ஸ் அன்கம்ஃபர்ட் ஜோனில் இருப்பதை உணர்ந்த அஸ்வின், அடுத்த பந்திலேயே அவரை பெவிலியின் அனுப்பி வைத்தார். 

சப் கான்டினென்ட் மைதானங்களில் மட்டுமே அஸ்வின் விக்கெட் வீழ்த்துகிறார். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்ரிக்காவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ‘அப்படி எல்லாம் இல்லைங்க. ஸ்ரீலங்காவுலயே கொழும்பு விக்கெட்டுக்கும் காலே விக்கெட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை எந்த பிட்ச்சா இருந்தாலும், என்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்கணும்’ எனச் சொல்லும் அஸ்வின், சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்திருந்தார். சச்சின், சேவாக்குக்கு அடுத்ததாக டெஸ்ட்டில் அதிக முறை (6) மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வாங்கியவர் அஸ்வின் என்பதே அந்த சாதனை. அதுவும் அவரது 36வது டெஸ்ட் போட்டியில் என்பது கூடுதல் கவுரவம். அதோடு, கரீபிய மண்ணில் இரண்டு சதங்கள் அடித்து தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதையும் அழுந்தப் பதிவு செய்துள்ளார்.

டி 20 கிரிக்கெட்டில் அஸ்வின் உச்சம் தொடக் காரணம் ஐபிஎல். 2008ல் சாதாரண ரசிகனாக சேப்பாக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின், 2009ல் களம்புகுந்து, 2010ல் உச்சத்தைத் தொட்டார். டெத் ஓவர்களில் அஸ்வின் கையில் பந்தைக் கொடுத்து கொம்பு சீவி விட்டார் தோனி. இதற்கு பலனாக ஐபிஎல் மட்டுமல்லாது 2010 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வாங்கி, இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களில் அஸ்வினும் ஒருவர். எனவே சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டதும் ‘சொந்த ஸ்டேட்ல ஆடுறுதுதான் சந்தோஷம். ஆனா, டீம் இல்லைன்னா என்ன செய்ய முடியும். ஒரு வீட்டுல இருக்குறோம். அது இடிஞ்சி போனா, வேற வீட்டுக்கு குடிபோறது இல்லையா? அதே மாதிரிதான், சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பதிலா சென்னை சூப்பர் சூப்பர் கிங்ஸ்னு ஒரு டீம் வந்தா அதுலயும் விளையாடத் தயார். எந்த டீமா இருந்தாலும் என்னோட பெஸ்ட்டைக் கொடுக்கணும். தட்ஸ் ஆல்’ என சொன்ன அஸ்வின், இப்போது புனே அணியில் விளையாடி வருகிறார்.

ashwin-s_647_111815102333.jpg

கேரம் பால் வித்தையை கச்சிதமாக நிறைவேற்றும் அஸ்வின், நேரம் கிடைக்கும்போது தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடத் தவறுவதில்லை. தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடும் அஸ்வினுக்கு, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு புதிய மைல்கல் காத்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரும், தங்கள் 38வது டெஸ்டில் 200 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் 193 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அஸ்வின், அடுத்த டெஸ்டில் 7 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில், அதி வேகமாக டெஸ்டில் 200 ரன் விக்கெட் எடுத்த இரண்டாவது பவுலர் என்ற சாதனை படைக்கலாம். இன்று தன் 30வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அஸ்வினுக்கு அந்த சாதனை கைகூட வாழ்த்துகள்! 

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14370288_1132136840168342_32100722491883

SEPTEMBER 17

பகுத்தறிவு சிந்தனையாளரும்,இறை மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகப் பரப்பியவரும் திராவிடர் கழகத்தை உருவாக்கியவருமான தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்களது பிறந்தநாள் இன்று.

ஆச்சரியமாக, அவரது சிஷ்யராகத் தன்னை அறிவித்துக்கொண்ட, தனது மேடை நாடகங்கள் மற்றும் உரைகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பிய நடிகவேள் M.R.ராதா அவர்களின் நினவு தினம் இன்று.

  • தொடங்கியவர்
New York Fashion Week 2016
 

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நடை­பெறும் நியூயோர்க் பெஷன் வீக் கண்­காட்­சியில் வித்­தி­யா­ச­மாக வகையில் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­ய­லங்­கா­ரங்­க­ளுடன் கலந்­து­கொண்ட மொடல்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

1616.jpg

 

1611.jpg

 

1612.jpg

 

1613.jpg

 

1614.jpg

 

1615.jpg

 

1617.jpg

 

1619.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செப்.17: பெரியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. பெரியார் 25

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

periyar_vc_6.jpg



* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

periyar_vc_1.jpg



* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!
 
* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் periyar1.jpgகொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

periyar_vc_5.jpg* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

14291733_1231036296955158_61299592445313

  • தொடங்கியவர்

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

vinayakartree.jpg

புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.


”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.


ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம். இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.

vikatan

  • தொடங்கியவர்

பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்!

p12a%281%29.jpg

 

எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.

தமிழ் நாடகத் துறைக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழகத்தில் நாடகங்களின் பொற்காலத்தில் ‘நாடக உலக சூப்பர் ஸ்டாராக’ வலம் வந்தவர் எம்.ஆர். ராதாவே. அவரது நாடக உலக வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள் இங்கே.

'பதிபக்தி' என்ற நாடகத்தில் எம்.ஆர். ராதாவுக்கு சி.ஐ.டி வேடம். ஒரு மோட்டார் சைக்கிளிலேயே மேடைக்கு வருவார் ராதா. மக்கள் மேல் பாய்ந்துவிடுவதுபோல மேடையின் ஓரம்வரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து, லாகவமாக பிரேக் பிடித்து அரை வட்டமடித்து நிற்பார். கைதட்டல், விசில்கள் பறக்கும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களால் ராதா பிரபலமடையத் தொடங்கினார். ராதா மேடையேறினாலே மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடித்தது.

mr%20radha.jpg

நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டர்ஸ் நடத்திய ‘இழந்த காதல்' நாடகப் போஸ்டர்களில் 'எம்.ஆர். ராதாவின் சவுக்கடி ஸீனைக் காணத் தவறாதீர்கள்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தக் காட்சி அவ்வளவு பிரபலம். காரணம், நாடகம் என்றாலே நடிகர்கள் மேடையிலே நின்றபடி ரசிகர்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். முதுகைக் காட்டியபடி ஒரு வசனம்கூட பேசக்கூடாதென்பதே நாடக இலக்கணம். ஆனால் 'இழந்த காதல்' இறுதிக் காட்சியில் ராதா, கதாநாயகியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுவார். தன் இரண்டு கைகளையும் நாற்காலியில் ஊன்றியபடி கதாநாயகியிடம் பேச ஆரம்பிப்பார். பதினைந்து நிமிட வசனம். பதினைந்து நிமிடங்களும் ரசிகர்கள் அவரது முதுகைத்தான் பார்க்க முடியும். முகபாவனைகளை, கைகளின் அசைவினைக் காண முடியாது. இருந்தாலும் ரசிகர்கள் அதனை ஆரவாரமாக ரசித்தார்கள். சுருண்டு கிடக்கும் அவரது தலைமுடிகூட அங்கே நடித்துக் கொண்டிருந்தது.

நாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான பழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடி தொடங்குவார். ராதா நாடகத்துறைக்குள் நுழைந்த காலத்தில் மைக் எல்லாம் கிடையாது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் வசனம் கேட்கும் வகையில் தொண்டை கிழிய கத்தித்தான் பேச வேண்டியதிருந்தது. எனவே ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்தபிறகும் ராதா, மேக்கப் அறைக்குள் வருவார்.

ஒரு பெரிய குண்டா அவருக்காகக் காத்திருக்கும். வாயை மட்டும் நீரால் துடைத்துவிட்டு உட்காருவார். குண்டாவில் பாதி அளவுக்குப் பழைய சோறு, மீதி அளவுக்குச் சிறு வெங்காயம் நிரம்பியிருக்கும். அவ்வளவையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார். மற்றவர்கள் என்றால் நள்ளிரவில் பழையதும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் ஜன்னி வந்துவிடும். ஆனால் மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடித்துவிட்டு வந்த பின் அந்த உணவு ராதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பதுவும் முக்கியமான வேலையாக இருந்தது.

நாடகத்துக்கான வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதியானது. ‘அறிவு, ஆரம்பிக்கலாமா?' கேட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளுவார் ராதா. அவரது குழுவிலிருந்த அறிவானந்தம் என்ற சிறுவன் வசனங்களை வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து அறிவு நிறுத்துவான்.

‘ம்..' என்று குரல் கொடுப்பார் ராதா. இப்படி வசனங்களை தொடர்ந்து மூன்று நாள்கள் வாசித்தால் போதும். அதற்குப் பின் ராதாவுக்குப் பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

ராதா அரங்கேற்றியதில் அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய நாடகம் ராமாயணம். ராதாவுக்காக நாடகத் தடை மசோதாவை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுமளவு பிரச்னை வலுத்தது. அதை மீறியும் ராமாயணத்தை பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றினார் ராதா. மதுரையில் அன்று மாலை ராமாயணம் நாடகம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடகத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார் அணுகுண்டு அய்யாவு என்பவர்.

நாடகம் ஆரம்பமானது. அரங்கத்தினுள் சில ரவுடிகளுடன் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார் அய்யாவு. ராதா, தன் குழுவிலுள்ள பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் பத்திரமாக வண்டியேற்றி அங்கிருந்து அனுப்பினார். பின்னர் கோதாவில் குதித்தார்.

‘டேய் அந்த ரிவால்வரை எடுடா. குண்டு ஃபுல்லா இருக்கா? ஆறு குண்டு ஆறு பேரு. சுட்டுத் தள்ளிடறேன்' - அரங்கம் அதிரக் கத்தினார். யாருக்கும் ரிவால்வர் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஆனால் அய்யாவு கும்பல் பயந்து சிதறி ஓடியது.

அன்றைய வசூல் தொகை மூவாயிரம் ரூபாய்.

தனது நாடகக் குழுவினருக்கு வாரத்தில் மூன்று நாள்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. நேரம் கிடைக்கும்போதேல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார் ராதா. அவர் சமையலில் எம்டன். தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவதிலும் ஆர்வம் காட்டுவார். அவரது குழுவில் சுத்த சைவ பார்ட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்குத் தனிப்பந்தி நடைபெறும். அப்போது ராதா அடிக்கும் கமெண்ட், ‘அவங்க எல்லாம் தீண்டத்தகாதவங்க. தனியா உட்கார்ந்து சாப்பிடட்டும்.'

தன்னுடைய எம்.ஆர். ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்லும்போது, அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் பழக்கமாக இருந்தது.

காளிமார்க் சோடா கம்பெனி நடத்தி வந்த பரமசிவம், ‘எம்.ஆர். ராதா சோடா' என்று ஒரு தனி பிராண்ட் போட்டு விற்குமளவுக்கு தமிழ்நாடெங்கும் நாடகங்கள் மூலம் ராதாவின் புகழ் பரவியது. குறிப்பாக ரத்தக் கண்ணீர். தன் வாழ்நாளில் மட்டும் ராதா, புதிய புதிய காட்சிகளுடன், புத்தம் புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட ஐயாயிரம் முறைக்கும் மேல் 'ரத்தக் கண்ணீர்' நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடக செட்டுகளுக்காகவே மக்கள் பார்க்க வருவார்கள். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரம்மாண்ட தேவலோகம் என்று அசர வைத்தார்கள் மக்களை. ஆனால் ராதா அதற்கு நேர் எதிர். நீலநிறப் படுதா, அதில் காடு என்றிருக்கும். காட்சி மாறும். சிவப்பு நிற படுதா, அதில் வீடு என்று இருக்கும். அடுத்து பச்சை நிறப் படுதா. அதில் பொது இடம் என்றிருக்கும். மற்றபடி எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவைப் பார்த்து எங்கு காட்சி நடக்கிறது என்று புரிந்துகொண்டு ரசிப்பார்கள்.

‘மக்கள் என் நடிப்பைத்தான் பார்க்க வர்றாங்களே தவிர செட்டிங்கை இல்லே' என்பார் ராதா.

1979, செப்டெம்பர் 17-ல் திராவிடர் கழகத்தினர் பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மஞ்சள் காமாலை முற்றி உயிரை இழந்தார் எம்.ஆர். ராதா.

திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சங்கிலியாண்டபுரம் வீட்டிலிருந்து ராதாவின் இறுதி ஊர்வலம் காவேரிக்கரை ஓயாமாரி இடுகாடு நோக்கிக் கிளம்பியது. வழிநெடுக சுவர்களில் அன்று நடைபெறவிருந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகத்துக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

14292532_1231032333622221_34246487658837

vikatan

  • தொடங்கியவர்

'நடிகை', 'முதல்வர்’ ஜெயலலிதா தெரியும்... பாடகி ஜெயலலிதா..?!

unnamed%20%281%29.jpg

முத்துராமன் ஜெயலலிதா நடிப்பில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சூரியகாந்தி.  1973 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தை மீண்டும் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைத்து வெளியிட்டுள்ளார் முக்தா சீனிவாசன். 

இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், வாலியும் எழுதினர். சோ ராமசாமி, மேஜர் சுந்தர் ராஜன், மனோரமா முதலானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இன்றும் பலரது பேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் பாடலான "பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?" என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதோடு படத்திலேயே மேடையில் தோன்றி பாடவும் செய்திருப்பார்.

இந்த படத்தின் இன்னொரு ஸ்பெஷல் தெரியுமா?  

தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தன் சொந்த குரலில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். "நான் என்றால் அது அவளும் நானும்..." என்ற பாடலை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்தும், 'ஓ மேரி தில்ருபா' என்ற பாடலை டி எம் சௌந்தரராஜன் அவர்களுடனும் சேர்ந்து பாடியுள்ளார். மோகன் என்ற கதாபாத்திரத்தில் முத்துராமனும் ராதா என்ற கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும் நடித்தனர். மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத கணவனின் பொறாமையால் நடக்கும் விளைவுகளே இப்படத்தின் கதை.


நான் என்றால் அது அவளும் நானும் பாடலை பார்க்க :  

 

 

ஓ மேரி தில்ருபா பாடலை பார்க்க  : 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

ஸ்....லோ டி.வி.!

 

 
slow_3012466f.jpg
 

அமெரிக்காவில் உள்ளது ஜாக்சன் நகரம். அந்த நகரத்துக்கு இப்போது இணையத்தில் திடீர் புகழ்! ஏன்? அந்த நகரிலிருந்து ஒளிபரப்பாகும் வீடியோ காட்சி ஒன்றுதான் இந்தத் திடீர் புகழுக்குக் காரணம்.

‘லைவ் ஸ்ட்ரீமிங்' முறையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்தக் காட்சியை ஆயிரக்கணக்கான இணையவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். அது மட்டுமல்ல, அந்த வீடியோவில் பார்க்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இணைய அரட்டையிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காகவென்றே பிரத்யேக ‘ஹாஷ்டேக்' உருவாக்கப்பட்டு டிவிட்டரிலும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுவருகின்றனர்.

இந்த வீடியோவின் திடீர் புகழ் இணையத்தின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. குழப்பத்திற்குக் காரணம் அந்த வீடியோ ஏன் பார்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான். அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவை முதன்முறை பார்க்கும்போது உங்களுக்கும் இந்தக் கேள்வி நிச்சயம் மனதில் எழலாம். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், நீங்களும்கூட அந்த வீடியோவை ரசிக்கலாம் என்பதுதான்! அது மட்டுமல்ல, இந்த வீடியோவை ஏன் ரசிக்கிறோம் என்பது உங்களுக்கும்கூட புரியாத புதிராக இருக்கலாம்.

இப்படி, வைரலாகப் பரவும் வீடியோக்கள் இணையத்திற்குப் புதிதல்ல. ஆனால் பெரும்பாலும் அந்த வீடியோக்கள் வைரலாகப் பரவியதற்கான காரணம் ஒன்று இருக்கும். வீடியோவைப் பார்க்கும்போதே அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இணையத்தைக் கவர்ந்திருக்கும் ஜாக்சன் நகர வீடியோவைப் பொறுத்தவரை இப்படி எந்தக் காரணத்தையும் கூற முடியாது.

அமெரிக்காவின் யோமிங் மாநிலத்தில் இந்த ஜாக்சன் நகரம் அமைந்துள்ளது. ‘ஜாக்சன் ஹோல்' எனக் குறிப்பிடப்படும் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த நகரின் சதுக்கத்தின் சாலை சந்திப்புக் காட்சிதான் வீடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் இயற்கை எழிலான சூழல் அமைந்திருந்தாலும் ஒரு சாலை சந்திப்புக் காட்சியில் சுவாரஸ்யமாக என்ன இருந்துவிட முடியும்?

கார்களும் டிரக்குகளும் என வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். மனிதர்கள் கடந்து செல்வார்கள். மற்ற நேரங்களில் அதிக இயக்கம் இல்லாமல் அமைதியாக இருக்கும். இந்தக் காட்சிதான் ‘வெப்கேமரா' வழியே பதிவாகி யூடியூப்பில் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கப்படுகிறது. இது ஏன் என்றுதான் யாருக்கும் புரியவில்லை.

ஒரு சாலை சந்திப்புக் காட்சியை நேரில் பார்த்தாலே அலுப்பூட்டுகிறது என அலட்சியம் செய்து விடுவோம். அப்படியிருக்க, கேம‌ரா மூலம் பதிவாகும் சாலை சந்திப்புக் காட்சியை அலுப்பில்லாமல் பலரும் பார்த்து ரசிப்பது எப்படி? இத்தனைக்கும் ஜாக்சன் நகரில் இதேபோல பல கேம‌ரா காட்சிகள் பதிவாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாக் காட்சிகளைப் பிரபலமாக்க அமைக்கப்பட்ட ‘ஜாக்சன்ஹோல்' இணையதளத்தில் இவை ஒளிபரப்பாகி வருகின்றன.

இவற்றில் சாலை சந்திப்பு வீடியோ காட்சி மட்டும் இப்போது பிரபலமாகி இருக்கிறது.

ஒரு வீடியோ வைரலாகி ஆயிரக் கணக்கானோரால் ரசிக்கப்படுகிறது, ஆனால் அது ஏன் என்றுதான் புரியவில்லை எனும் கேள்வியையே இதுதொடர்பான செய்திகளில் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் புதிருக்கும் இப்போது மெல்ல விடை கிடைத்துவருகிறது. மெதுவான இணையத்தைப் பலரும் விரும்புவதே இதற்கான காரணம்!

‘அதென்ன மெதுவான இணையம்?' என்று கேட்கலாம். இதற்கான பதில் மெதுவான தொலைக்காட்சியில் இருக்கிறது. இந்த நிகழ்வு ‘ஸ்லோ டிவி' எனக் குறிப்பிடப்படுகிறது. நார்வே நாட்டில்தான் ‘ஸ்லோ டிவி' உருவானது. அந்நாட்டில்தான் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல பரபரப்பு, விறுவிறுப்பு, திடீர்த் திருப்பம் போன்ற அம்சங்கள் எல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியைத்தான் ஸ்லோ டிவி என்கின்றனர். உண்மையில் இது நிகழ்ச்சிகூட கிடையாது. சாதாரண நிகழ்வு ஒன்றின் தொடர் ஒளிபரப்பாகவே இது அமைகிறது. உதாரணத்திற்கு ஒரு நீண்ட ர‌யில் பயணத்தை அப்படியே ஒளிபரப்பு செய்வதை நினைத்துப் பாருங்கள். திரைக்கதையோ, திருப்பங்களோ இல்லாமல் பயண நிகழ்வுகள் அப்படியே பதிவானால் எப்படி இருக்கும்? இப்படித்தான் 2009-ல் நார்வேயில் பெர்ஜன் மற்றும் ஆஸ்லோ நகரங்களுக்கு இடையிலான 7 மணி நேர ரயில் பயணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து இதே பாணியிலான ஸ்லோ டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாயின. பின்னலாடை பின்னும் காட்சி போன்றவை எல்லாம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இந்த ஸ்லோ டிவி இப்போது ‘நெட்ஃப்ளிக்ஸ்' இணையதளம் மூலம் அமெரிக்காவிலும் அறிமுகமாகி இருக்கிறது.

இதை எல்லாம் யார் பார்ப்பார்கள் என நாம் கேட்கலாம். இவற்றில் பார்த்து ரசிக்க என்ன இருக்கிறது என்றும் கேட்லாம். ஆனால், ஒன்றும் இல்லை எனும் காரணத்தினால்தான் இவை பார்த்து ரசிக்கப்படுகின்றன என்பதுதான் விஷயம்.

இந்த வகை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கப் பார்வையாளர்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இஷ்டம் போலப் பார்க்கலாம். நடுவே பல நொடிகள் பார்க்காமல் விட்டாலும் எதுவும் ஆகிவிடாது. அதனால்தான் இவை விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

இதே காரணத்தினால்தான் ஒன்றுமே நிகழாத ஜாக்சன் சாலை சந்திப்பு வீடியோ விரும்பிப் பார்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வீடியோவில் ஒருவித தியானத் தன்மை இருக்கிறது. பரபரப்பும், மன அழுத்தமும் மிக்க நவீன வாழ்க்கைக்கு நடுவே இந்த வீடியோ ஒருவித ஆசுவாசத்தை அளிக்கிறது.

நீங்களும் அந்த அனுபவத்தை நீங்களும் பெற: https://youtu.be/psfFJR3vZ78

tamil.thehindu

 

  • தொடங்கியவர்

p1081.jpg

நிறவெறி, பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை. ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஸெண்டாயா ஒரு கடையில் சென்று கிஃப்ட் கார்டு வாங்கியிருக்கிறார். ஸெண்டாயா கறுப்பினத்தவர் என்பதால் அவரைப் பாரபட்சமாக நடத்தியிருக்கிறார் கடைக்காரர். கொதித்தெழுந்த ஸெண்டாயா, சோஷியல் மீடியாவில் தன் வருத்தத்தைப் பதிவு செய்ய, கடைக்குக் கண்டனங்கள் குவிந்திருக்கின்றன. இதனால் ஜெர்க் ஆன கடை நிர்வாகம் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறது. நெருப்புடா!


p108a.jpg

ந்த மாதம் பிரேக் அப் மாதம் போல. சமீபத்திய முறிவு பாப் பியூட்டியான டெய்லர் ஸ்விஃப்ட். ஹாலிவுட் நடிகரான டாம் ஹிடில்ஸ்டனை மூன்று மாதங்களுக்கு முன்புதான் டேட்டத் தொடங்கினார் டெய்லர் ஸ்விஃப்ட். பப்ளிக்காக முத்தம் கொடுப்பது, ஊர் சுற்றுவது எனக் களேபரம் செய்தவர்கள் இப்போது பிரிந்தேவிட்டார்கள். காரணம், டாம் அநியாய பப்ளிசிட்டி பைத்தியமாக இருப்பதை டெய்லரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம். இதென்னய்யா புதுசா இருக்கு?


p108b.jpg

மெரிக்க நடிகையான எமிலி ரடாஜ்கோவ்ஸ்கி தன்னுடைய பரபர அரசியல் ஸ்டேட்மென்ட்களுக்குப் பெயர் போனவர். இதனாலேயே சோஷியல் மீடியாக்களில் அநியாயத்துக்கு வறுபடுகிறார். ‘பெண்கள் அரசியலே பேசக் கூடாது என நினைக்கிறார்கள். நான் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் இன்னும் பேசுவேன் ஸ்டைலா, கெத்தா’ என கபாலி ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார் இந்த தில்லு லேடி. மகிழ்ச்சி!


p108c1.jpg

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்ஷேசன் ஐஸா கோன்சலஸ். பாப்பரஸிகள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை அம்மணியைத் தொடர்ந்து முற்றுகையிடுகிறார்கள். காரணம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியாம் ஹேம்ஸ்வொர்த் என ஆணழகன்களை அம்மணி தொடர்ந்து டேட்டுவதுதான். லேட்டஸ்ட்டாக கால்வின் ஹாரிஸை டேட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். ‘அடுத்த ஸ்டோரி ரெடி!’ என தம்ஸ்-அப் காட்டுகிறார்கள் பாப்பரஸிகள். எத்தனை!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 18
 
 

 

article_1474175677-dag.jpg1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.

1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.

1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

1943:  பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்ட்டதால் 5620 பேர்பலி.

1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.

1968: இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.

1972:  இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.

1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.

1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.

1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.

1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.

2006:  அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அதிகாலையை அழகாக்குவோம்!

 

 

காலையில் அவசர அவசரமாக எழுந்து, உண்டும் உண்ணாமலும் நான்கு வாய் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரக்கப்பறக்க அலுவலகம் சென்று, மதியச் சோறு மறந்து பாடுபட்டு, சோர்வாக வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தால்... மீண்டும் காலையில் எழுந்து அதே மாரத்தான் ஓட்டம்! தினம் தினம் இப்படி டென்ஷனாகத்தான் ஓட வேண்டுமோ? இல்லை. ஒரு நாளின் காலைப் பொழுதுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆரம்பப்புள்ளி. அந்தக் காலைப் பொழுதை முறையாகத் திட்டமிட்டால், அன்றைய முழு நாளும் உற்சாகம் ததும்பும். அது எப்படி எனுப் பார்ப்போமா?

1 அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தின் அடிப்படை. அதிகாலை எழும் பழக்கத்தைக் கைக்கொள்ள, முதல் நாள் குறித்த நேரத்துக்கு உறங்கவேண்டியது அவசியம். குழந்தைகள் என்றால், 10 மணி நேரம் ஆழ்ந்த உறக்கமும், பெரியவர்கள் என்றால் 6-8 மணி நேர உறக்கமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் அவசியம். வளரிளம் பருவத்தினருக்கு தூங்கும் நேரத்தில்தான் ஹார்மோன்கள் சீராகச் சுரக்கும். அதனால், குறிப் பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கம் மிக மிக அவசியம்.

p33b.jpg

2 எழுந்ததும் மொபைல், டி.வி., சோஷியல்மீடியா பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நம் நேரத்தைச் சுரண்டி, கண்களையும் மனதையும் கெடுக்கிறது. காலையிலேயே நம் மனஅழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இதனால், நாம் புத்துணர்ச்சியை இழந்துவிடுகிறோம்.

3 எழுந்ததும் தண்ணீர் பருகி, காலைக்கடன்களை முடித்துவிட்டு, 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா என எதுவாகவும் இருக்கலாம்.

4 காலையில் வெளியில் நடக்கச் செல்வது அல்லது விளையாடச் செல்வது, உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் நல்லது. காலையில் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் உடலுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

5 அடுத்த ஒரு மணி நேரத்தில் நிதானமாகக் குளித்து, தவறாமல் காலை உணவை உண்ண வேண்டும். ஆவியில் வேகவைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என ஏதாவது ஒன்றுடன், இடியாப்பம், இட்லி போன்ற வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

6 எட்டு மணிக்கு மேல், பரபரப்பான வாழ்க்கையில் சுழலப்போகிறோம். அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தைத் திட்டமிட்டு, குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே சென்றுவிடுங்கள். இது பணியிடத்தில் டென்ஷன் இன்றி, உங்கள் ஒருநாளைத் திட்டமிட உதவும்.

vikatan

  • தொடங்கியவர்
10 வருடங்களின் பின்னர் யதார்த்தமான தோற்றத்துடன் வெளியான சின்டி பொம்மை
 

பிர­சித்திபெற்ற பொம்மை வகை­களில் ஒன்­றான சின்டி (Sindy) பொம்­மை­களின் புதிய பதிப்பு 10 வரு­டங்­களின் பின் வெளி­வந்­துள்­ளது. முன் னர் வெளி­யி­டப்­பட்ட பொம்­மை­களைப் புதிய பொம்மை யதார்த்­த­மான தோற்­றத்தைக் கொண்­டுள்­ளது.

 

1932250.jpg

 

பார்பி பொம்­மை­களைப் போன்று சிட்டி பொம்­மை­களும் மிகப் பிர­சித்தி பெற்­றவை. பிரிட்­டனின் பெடி­கிறீ டோல்ஸ் அன்ட் டொய்ஸ் நிறு­வ­னத்­தினால் 1963 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக சின்டி பொம்மை சந்­தைக்கு விடப்­பட்­டது.

 

கோடிக்­க­ணக்­கான சின்டி பொம்­மைகள் விற்­ப­னை­யானபோதிலும், பார்பி பொம்­மை­களைப் போன்று சின்டி பொம்­மையும் யதார்­த்தத்­துக்கு முர­ணானவகையில் மிகவும் மெலிந்த, அதிக உய­ர­மான சிறு­மி யின் தோற்­றத்தைக் கொண்­டி­ருப்­பது குறித்து விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

1932257.jpg

 

இந்­நி­லையில், 10 வருட கால இடை­வெளியின் பின்னர், புதிய தோற்றம் கொண்ட சின்டி பொம்மை அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டது.

 

முந்­தைய சின்டி பொம்­மை­களை விட புதிய சின்டி பொம்மை யதார்த் தமான சிறுமியின் தோற்றத்தைக் கொண்டுள்ளதை பலர் வர வேற்றுள்ளனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'பொன்னியின் செல்வனை மொழிபெயர்க்கும் 13 வயது நாவலாசிரியை!

unnamed.jpg

ஆர்த்தி சுந்தரம்... அரபு நாட்டில் வாழும் தமிழ்ப் பெண். தன் 13வது வயதில் 'ஆர்ட் ஆஃப் நோயிங் யுவர் பிளண்டர்ஸ் டூ நேச்சர்(Art of Knowing Your Blenders To Nature)' என்ற புத்தகம் எழுதியவர், இப்போது தன் 21வது வயதில் 'தி காட்ஸ் ஆஃப் டைம்(The Gods of Time)' என்ற நாவல் எழுதியுள்ளார்.

''கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்துலதான் பிறந்தேன். அப்பாவுக்கு சௌதி அரேபியால் வேலை கிடைக்க, நான், அம்மா, அப்பானு எங்களோட சின்னக் குடும்பம் அங்கேயே செட்டில் ஆகிட்டோம். எனக்கு அப்போ மூணு வயசு. பள்ளிப் படிப்பு முழுக்க அங்க முடிச்சிட்டு, கல்லூரிப் படிப்புக்கு சென்னை வந்தேன். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் ஐடி  முடிச்சிட்டு, இப்போ 'யங் இண்டியா ஃபெலோஷிப்'ல் பிஜி டிப்ளோமா கோர்ஸ் படிக்க டெல்லி வந்திருக்கேன்!"

''எழுத்தில் ஆர்வம் வந்தது எப்படி?"

''நான் அபுதாபியில் பள்ளிப் படிப்பை தொடங்கினப்போ, ஆங்கிலத்தில் மற்ற மாணவர்களைவிட கொஞ்சம் பின்தங்கி இருந்தேன். அதனால அம்மா எனக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தாங்க. கொஞ்ச நாள்ல பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டினு க்ளாஸ் ஸ்டார் ஆனேன். நான் படிக்கிற சிறுகதை, நாவல்கள்ல முடிவு எனக்குப் பிடித்தமானதா இல்லைன்னா, என் எண்ணத்துக்கு அதை மாத்தி எழுதுவேன். அப்படித்தான் எனக்கு எழுத்து மேல ஆர்வம் வந்தது”

''உங்கள் புத்தகங்கள் பற்றி?"

'''ஆர்ட் ஆஃப்ட் நோயிங் யுவர் பிளண்டர்ஸ் டூ நேச்சர்' புத்தகத்தை என்னுடைய 13வது வயதில் எழுதினேன். அழிந்து வரும் இயற்கை வளங்கள் பற்றியும், அதை மக்கள் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றியும் உரைநடை வடிவில் பேசும் புத்தகம் அது. அப்புறம் சுற்றுச்சூழலை கருவா வெச்சு சில சிறுகதைகள் எழுதினேன்.  ஐக்கிய அரபு நாடுகளில் அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பா, 'லயன்ஸ் மெயில் பாக்ஸ்' என்னும் சிறுகதை, துபாயில் நாடகமாக ஆக்கப்பட்டது. அப்படி நான் எழுதின மற்றொரு சிறுகதையின் கருவையே நாவலா விவரிச்சு எழுதினதுதான், சமீபத்தில் வெளியாகியிருக்கிற  'த காட்ஸ் ஆஃப் டைம்' ''

''தமிழில் எழுதுவீர்களா?"

''தமிழ்ல நல்லா பேசுவேன். ஓரளவுக்கு வாசிக்கவும், எழுதவும் தெரியும். 'பொன்னியின் செல்வன்' நாவலை என் பாணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் ஆசை. மூன்று பாகம் வரை எழுதிட்டேன். ஆனா மொழிபெயர்ப்புக்கு இரு மொழிகளிலும் தெளிவான புரிதல் தேவை. அதனால் தமிழை இன்னும் முழுமையா கத்துக்கிட்டுதான் அந்த வேலையைச் செய்யணும்னு இருக்கேன்.''

''படிப்பு, எழுத்து... எப்படி சமாளிக்கிறீர்கள்?''

''செகண்ட் இயர், தேர்ட் இயர்ல ரொம்ப சிரமமாதான் இருந்தது. ஆனா எந்தக் காரணத்துக்காகவும் எழுத்தை விட்டுத்தரக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அது போலதான் படிப்பையும். இப்போ ரெண்டையும் பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன்.''

''பிடித்த எழுத்தாளர்கள்..?"

''ஜே.கே. ரௌலிங், சார்லஸ் டிக்கன்ஸ், லூயிஸா மே அல்காட்."

''10 வருடங்களுக்குப் பின் ஆர்த்தியின் அடையாளம் என்னவாக இருக்கும்?"

''ஐடி படிச்சிருக்கிறதால கம்ப்யூட்டரை ஹக் பண்ணிட்டுதான் எதிர்காலத்தைக் கடக்கணும். இருந்தாலும், அது வேலை. என் அடையாளமா என் எழுத்துதான் இருக்கும். ஃபிக்‌ஷன், நான் ஃபிக்‌ஷன்னு நிறைய ஐடியாக்கள் இருக்கு. பெண்களின் சுயமுன்னேற்றத்தில் என் எழுத்தும் சிறு துளியா பங்களிக்க விரும்புறேன்.'' 

vikatan

  • தொடங்கியவர்

வாங்களேன் வானத்துல மிதக்கலாம்!

 

ஒரே மனிதர் இருவேறு துறைகளில் வித்தகராக இருப்பது சகஜம். ஆனால் இரு துறைகளையும் ஒரே புள்ளியில் இணைத்து வித்தை காட்டினால், எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிலிப் வான் காலர் மிகச்சிறந்த உதாரணம்.

p126a.jpg

p166.jpg

p126.jpg

அடிப்படையில் வடிவமைப்பாளரான இவர், `ஸ்கை டைவிங்’கில் கில்லி. அவரின் மிக முக்கிய பொழுதுபோக்கே  உலகம் முழுவதும் சுற்றி நண்பர்களுடன் வானில் மிதப்பதுதான்! ‘ஸ்கை டைவிங்கையும், வடிவமைப்பையும் இணைத்தால் என்ன?’ என்று ஒரு யோசனை இவருக்குத் திடீரென எழுந்தது. விளைவு... இன்று இன்ஸ்டாகிராம் பக்கம் மனுசன் செம்ம பாப்புலர்! நண்பர்களோடு வானில் மிதக்கும் புகைப்படங்களில், தானே ஓவியங்களை வரைந்து அதை வேறு கோணத்தில் மாற்றி அசத்துகிறார். சாம்பிளுக்கு நீங்களே இந்த போட்டோஸ் பாருங்களேன்!

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p37a.jpg

* இந்தியாவில் உள்ள டாப்-10 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. நுழைவுக் கட்டணங்களின் வருவாய் மூலம் தாஜ்மஹாலுக்கு முதல் இடம். 2014-15 ஆண்டில் 49 கோடி ரூபாய் வசூலுடன் தாஜ்மஹால் டாப்பில் இருக்க, 20 கோடியே 80 லட்சம் ரூபாயுடன் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், 20 கோடி ரூபாயுடன் குதூப் மினார் மூன்றாவது  இடத்தையும் பிடித்திருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1 டூரிஸ்ட் ஸ்பாட் மாமல்லபுரம். 5 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொடுத்திருக்கிறது. காதலுக்கு மரியாதை.


இளம் கவிஞர்களை உருவாக்க, ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில், 17 வயது  அமெரிக்கவாழ் தமிழ்ப் பெண் மாயா ஈஸ்வரன், மிச்சேல் ஒபாமாவின் முன்னிலையில் தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார். `என் வாழ்வில் நான் முக்கியமான ஒன்றை இழந்துவருகிறேன். என் தலை முடி உதிர்வதைப்போல, என் இன அடையாளமான தமிழை உதிர்த்து இழந்துகொண்டிருக்கிறேன். என் தாய்மொழியை நான் பேசியே மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் தமிழை நான் முழுவதும் மறந்துவிடுவேனோ எனப் பயப்படுகிறேன்' என்ற மாயா ஈஸ்வரனின் கவிதையை மிஸஸ் ஒபாமா மிகவும் ரசித்து, சிறப்புப் பரிசும் அளித்திருக்கிறார். மகிழ்ச்சி!


p37b.jpg

* மீண்டும் ஒரே பாடலில் வைரலாகியிருக்கிறார் கத்ரீனா கைஃப். `மை நேம் இஸ் ஷீலா' மூலம் பரபரப்பைக் கிளப்பிய கத்ரீனாவுக்கு கொஞ்ச வருஷமா மார்க்கெட் டல். ஆனால், சமீபத்தில் `பார் பார் தேகோ’ படத்தில் வெளியான `காலா சஸ்மா...' பாடல் வைரல் ஹிட்டடிக்க கத்ரீனா செம ஹேப்பி. இந்தியாவிலே அதிகமாகப் பார்க்கப்பட்ட பாடல் என ஒரே மாதத்தில் 7.5 கோடி வியூஸ் அள்ளி, `கபாலி' டீஸர் ரெக்கார்டை எல்லாம் காலி செய்திருக்கிறது `காலா சஸ்மா...'. கம்பேக் கத்ரீனா!


p37c.jpg

ட்விட்டரில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். `ஹனிமூன் போக மனைவிக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை’, `காரில் அதிகமாகப் புகை வருகிறது’ என ட்விட்டரில் எழுதப்படும் புகார்களுக்கு, உடனடி ஆக்‌ஷன் எடுக்கும் சுஷ்மா ஸ்வராஜைக் கலாய்க்க நினைத்தது ஆன்லைன் டீம். `உலகப்  பஞ்சாயத்தை எல்லாம் தீர்த்துவைக்கிற உங்க ட்விட்டர்  பக்கத்தை, ஏன் உங்க கணவர் இன்னும் பின்தொடரலை?' என  ஒருவர் கேட்க, இதற்கு சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் தன் ட்விட்டர் பக்கத்தில், `45 வருஷமா பின்தொடர்றேன். ஆனால், எனக்கு இப்ப வரைக்கும் எந்த மாற்றமும் வரலை' எனப் பதில் போட,
`இந்த நகைச்சுவைதான் உங்க மணவாழக்கை மகிழ்ச்சிக்கு காரணம்' என ஃபாலோயர்ஸ் ஹார்ட்டீன் பட்டனைத் தட்டி வாழ்த்தியிருக்கிறார்கள். ட்விட்டர் குடும்பம்!


p37d.jpg

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர ராகுல் காந்தி எடுக்கும் முயற்சிகள் பலவும் சொதப்பலில் முடிய, சோர்ந்துபோய் இருக்கிறது உள்ளூர் காங்கிரஸ். உத்தரப்பிரதேசம் முழுக்க 2,500 கி.மீ தூரம் சுற்றுப்பயணம் செய்து `காட் சபா' என்ற பெயரில் விவசாயிகளைச் சந்திப்பது ராகுலின் திட்டம். அதாவது கட்டிலில் அமர்ந்து விவசாயிகளுடன் ராகுல் கலந்துரையாடுவார். கடந்தவாரம் ராகுலின் முதல் காட் சபா கூட்டம் டியோரியா என்ற இடத்தில் நடந்தது. இதற்காக 2,000 புதிய கட்டில்களை காங்கிரஸ் கட்சியினர் வாங்கியிருந்தனர். அதில், உட்கார்ந்து ராகுலின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் பலரும் கூட்டம் முடிந்ததும் கட்டில்களைத் தூக்கிக்கொண்டு பறக்க, `எல்லாம் போச்சே... போச்சே...' எனப் புலம்பிக்கொண்டிருக்கிறது காட் சபா கமிட்டி. ராகுல் எல்லாமே சீரியஸாத்தான் செய்றார்... ஆனா காமெடியில் முடிஞ்சிடுது என பா.ஜ.க-வும் தன் பங்குக்கு வெறுப்பேற்ற ஆரம்பித்திருக்கிறது. ராகுல்ஜி பாவம்!


p37e.jpg

`விரைவில் நடிகை காவ்யா மாதவனைத் திருமணம் செய்யப்போகிறார் நடிகர் திலீப். திருமணத்துக்கு மகள் மீனாக்‌ஷி ஓ.கே சொல்லிவிட்டார்'என கேரள மீடியாவில் செய்தி பரவ, கொந்தளித்திருக்கிறார் திலீப். `என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். என் மகளை ஏன் இழுக்கிறீர்கள். ஏற்கெனவே மஞ்சு வாரியாரும் நானும் பிரிந்ததில் என் மகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இப்போது இதுபோன்ற செய்திகள் எழுதுவதன் மூலம் அவள் மனம் எப்படிப் பாதிக்கப்படும் என ஏன் யாரும் யோசிக்க மறுக்கிறீர்கள். நான் திருமணம் செய்ய முடிவெடுத்தால் நிச்சயம் எல்லோருக்கும் அறிவித்துவிட்டுத்தான் செய்வேன். என் வாழ்க்கையில் ரகசியங்களுக்கு இடம் இல்லை’ என தனது ஆதங்கத்தை ஃபேஸ்புக்கில் கொட்டியிருக்கிறார் திலீப். ரிலாக்ஸ் சேட்டன்!


p37f.jpg

ஹாலிவுட்டில் இந்த ஆண்டின் பரபரப்பு  நடிகை யார் தெரியுமா? ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் க்ரெய்கின் மனைவி ரேச்சல் வீஸ்தான். `டினையல்', `தி லைட் பிட்வீன் ஓஷன்ஸ்' என ரேச்சல் நடித்து சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் எகிறியடிக்க, `கம்ப்ளீட் அன்நோன்', `மை கஸின் ரேச்சல்' என அடுத்த இரண்டு படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. `காதலி, மனைவி, அம்மா... என எல்லா ரோல்களிலுமே என்னால் நடிக்க முடியும்.
20 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு, நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. க்ரெய்க் ஓய்வெடுத்தாலும் என் நடிப்புக்கு ஓய்வே கிடையாது’ என அறிவித்திருக்கிறார் ரேச்சல். சூப்பரே!

vikatan

  • தொடங்கியவர்

இன்று உங்கள் மனைவியை அவசியம் பாராட்டுங்கள்! #WifeAppreciationDay

jok%201.jpg

இன்னைக்கு மனைவியை பாராட்டும் தினம் பாஸ். அதற்காக, 'சோறு வெந்துருக்கு, குழம்பு நல்லாருக்கு'னு பாராட்டிட்டு விட்றாதீங்க. நீங்க நல்ல கணவன்னு அவங்ககிட்ட பாராட்டு வாங்குறதுதான் அவங்களுக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய பாராட்டு. அதுக்கு நீங்க என்ன பண்ணணும், பண்ணக் கூடாதுன்னா....

காலையில் நீங்கள் லேட்டா எழுந்திருச்சு உங்க மனைவியை அவசரப்'படுத்தாதீங்க'. அஞ்சு அலாரம் வெச்சும் எழுந்திருக்காமல் தூங்கினது நம்ம தப்புதானே...

வேலைக்குக் கிளம்பும்போது உங்க மனைவிகிட்ட 'ரொமாண்டிக்'கா ஏதாவது பேசிட்டு புறப்படுங்க. அது உங்களுக்கும் ஒரு நல்ல உனர்வை கொடுக்கும் கணவர்களே...

ஆஃபிஸ்ல இருக்கும்போது வேலையிலேயே மூழ்கி முங்கு நீச்சல் அடிக்காம, அவ்வப்போது மனைவிக்கும் கால் பண்ணி பேசுங்க.

இல்லனா 'ஐ லவ் யு'னு  ஒரே ஒரு மெசேஜை போட்டுவிடுங்க. அதைப் பார்க்கும்போது அவங்களுக்கு மனசுக்குள்ள லட்சம் பட்டாம்பூச்சி சிறகடிக்கும்.

உங்களுக்கு ஊரையே உளுத்தம்பருப்பாய் ஊறப்போட்டு கலாய்க்கிற அளவு திறமை இருந்தாலும், மத்தவங்க முன்னால உங்க மனைவியை கலாய்க்காதீங்க. ரொம்ப வருத்தப்படுவாங்க.

உப்புமாவில் புளியையே கரைச்சு ஊத்தியிருந்தாலும். ' உப்புமாவில் புளி சேர்க்கிறது ரொம்ப தப்புமா'னு பொறுமையா எடுத்து சொல்லுங்க புது மாப்பிளைஸ்.

முடிந்தளவிற்கு, வேலையை சீக்கிரமாகவே முடித்து வீட்டிற்கு கிளம்பிடுங்க. தாமதமாகும்னு தெரிந்தால் போன் பண்ணி சொல்லிடுங்க. குடி குடியைக்கெடுக்கும்.

உங்கள் சுண்டுவிரலில் சின்ன அடிபட்டாலும் அவங்க எப்படித் துடிச்சுப் போயிடுறாங்க... அவங்களையும் நீங்க கண்ணும் கருத்துமா ஆரோக்கியமா பார்த்துக்கோங்க.

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான தேதிகளை மறந்துடாதீங்க. முக்கியமா, உங்க கல்யாண நாளையும், அவங்க பிறந்தநாளையும் மறந்துடவே மறந்துடாதீங்க.

 

theri.jpg

 

கிச்சன்ல சமைக்கும்போது கூடமாட உதவி செய்யுங்க. மணிரத்னம் படங்களெல்லாம் நீங்க பார்த்திருக்கீங்களா? இல்லையா?

அடிக்கடி 'பூ' வாங்கி கொடுங்க. அதற்காக எருக்கலம் பூ, ஊமத்தம் பூனு குதர்க்கமா யோசிக்காதீங்க. மல்லிப்பூ, பிச்சிப்பூ, அப்பிடி...

குடும்ப விஷயங்கள் பற்றி அவங்ககிட்டேயும் ஒப்பினியன் கேளுங்க . 'நீ பேசி என்ன ஆகப்போகுது?'னு மட்டம் தட்டிடாதீங்க.

அடிக்கடி சர்ப்ரைஸ்ன்ற பெயர்ல கடைக்கு கூட்டிப் போய் சிக்கன் ரைஸாவது வாங்கிக் கொடுங்க.

அவங்களை நிறைய சிரிக்கவைங்க, புதுசா ஜோக் யோசிக்க தோணலைனா வடிவேலு காமெடியை அதே மாடுலேஷனில் பேசி சிரிக்க வைங்க சார்.... அது போதும்!

vikatan

  • தொடங்கியவர்

 

“ஆளில்லா விமானப் பந்தையம்” - காணொளி

உருவாகும் எதிர்கால விளையாட்டு

  • தொடங்கியவர்

p12.jpg

தமிழகத்தின் தங்கமகன்!

பிரேசில் தலைநகர் ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றார். நாடு முழுவதிலும் இருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

p12a.jpg

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், விளையாட்டில் சாதனை படைக்கக் காரணமாக இருந்த இவரது தந்தை தங்கவேலு, தாயார் சரோஜா ஆகியோர் பெயரும் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. #thangavelusarojamariyappan எனக் குடும்பமே ட்ரெண்டிங் ஆனது மகிழ்ச்சியும்கூட. வாழ்த்துகள்!


p12b.jpg

புதிய அவதாரம்!

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் (கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க!) அவதாரங்களைத் தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தனது தந்தை வழியில், முதல் படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு `பவர்பாண்டி' என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. தனுஷ் ரசிகர்களும், தமிழ்த் திரையுலகமும் தெரிவித்த வாழ்த்துகளால் #powerpaandi ட்விட்டரில் புல்லட்டில் வலம் வந்தான். டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

p12c.jpg


p12d.jpg

தீவிரவாதம் தீர்வாகாது!

உலகையே உறையவைத்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று 15 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, பலியானோர்க்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ட்விட்டரில் ஒருபக்கம் #neverforget911 என்ற டேக்கில் தீவிரவாதத்திற்கு எதிராகக் கருத்துகள் பதிவாக, இன்னொரு பக்கம் #afterseptember11 என்ற டேக்கில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குப்பின் தாங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்தனர். 


p12e.jpg

என்று தீரும்?

காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களிலும் பதற்ற நிலை உருவாவது வேதனையான விஷயம். தமிழ் இளைஞரைக் கர்நாடகாவைச் சேர்ந்த சில அமைப்புகள் தாக்கிய வீடியோ, தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயம் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் டாபிக் ஆனது. இரு மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்களும் காவிரியை அரசியலாக்காமல், சமாதானத் தீர்வெடுங்கள் என #KaveriForPeace டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டதால் இந்திய அளவில் ட்ரெண்ட்டில் இடம்பிடித்தது. நீ வேற நான்வேற இல்ல எல்லோருமே இந்தியர்கள்!


p12f.jpg

வாழ வழிவிடு!

விநாயகர் சதுர்த்தி முடிந்தபின், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது ஆரவாரமாகக் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் ஏற்படும் வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டால் வழிவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி #WayToAmbulance என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சீனியர் நடிகரான அமிதாப் பச்சன் தொடங்கிப் பல பிரபலங்கள் ட்விட்டரில் இதை வலியுறுத்தியதில் இந்த டேக் செம்ம ஹிட் அடித்தது. அத்துடன் மும்பையில் ஒரு ஆம்புலன்ஸுக்கு வாகன நெரிசலை விலக்கி வழி ஏற்படுத்தித் தந்த வீடியோவும் வைரல் ஆனது. நல்ல விஷயம்!


p12g.jpg

எங்கும் சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லியை ட்விட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக #12MillionViratians என்ற டேக்கில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில் ட்விட்டர் கதிகலங்கியது. சச்சினுக்கு ட்விட்டரில் தற்போது 12.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சச்சினின் ரன் சாதனைகளை மட்டுமன்றி, ஃபாலோயர் சாதனையையும் தற்போது நெருங்கியிருக்கிறார் விராட் கோஹ்லி. அதிரடிக்காரன்!

vikatan

  • தொடங்கியவர்

386E457D00000578-3792565-image-a-78_1474021189870.jpg

5000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் மோதிய பிணந்தின்னிக் கழுகு : அவசரமாக தரையிறக்கப்பட்டது

386E455400000578-3792565-image-m-76_1474021172819.jpg

  • தொடங்கியவர்
அதிகாலையிலேயே எழுந்திருங்கள்...
 
 

article_1474257352-iuuriuyioyk.jpgஏகாந்தமான சூழ்நிலையில்த்தான் மேதைகள்இ ஞானிகள் பல விடயங்களைக் ஞானத்தினால் கண்டு உணர்ந்தார்கள்.

அதிகாலையில் எழுந்திருப்பது சிலருக்கு சிரமமான காரியமாக இருக்கலாம். சோம்பலை விட்டொழித்து அதிகாலையில் துயில் நீத்தால் சுறுசுறுப்புஇ சந்தோசம்இ மனவுறுதி எல்லாமே எமக்குள் ஒன்று சேர்ந்து வந்து விடுகின்றன.

பிற ஒலிகள்இ சத்தம் சந்தடிகள் எழாத அதிகாலை வேளையில் படித்தால் இலகுவாக  மூளையில் பதிவேற்றம் பெற்றுவிடுவதுடன்இ கல்மேல் எழுத்தாகவும் பதிந்தும் விடுகின்றது.

மாணவர்கள் கல்வியில்  ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் கற்பதற்கான மனநிலையையும்  ஆரோக்கியத்தையும் அதிகாலையில் கற்றல் வழங்கிவிடும்.

அதிகாலையில் கற்பவர்களை காலம் கைகொடுத்துத் தூக்கி விடும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
1893 : பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடாகியது நியூஸிலாந்து
 

வரலாற்றில் இன்று......

செப்டெம்பர் - 19

 

634 : காலித் இபின் அல் வலித் தலைமையிலான அரேபிய படையினர் சிரியாவின் டமஸ்கஸ் நகரை பைஸான்டைன் ராஜ்ஜியத்திடமிருந்து கைப்பற்றினர்.

 

811varalu.jpg1870 : பிரான்ஸுக்கும் ஜேர்மனியின் புரூசியாவுக்குமிடையில் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது.

 

1881 : ஜூலை 2 ஆம் திகதி சுடப்பட்டு படுகாயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.

 

1893 : சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

 

1893 : பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது நியூஸிலாந்து.

 

1942 : மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாஸிகளின் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

 

1944 : பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது.

 

1952 : சார்ளி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டு அமெரிக்கா திரும்புவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

 

1957 : ஐக்கிய அமெரிக்கா தனது மண்ணில் நிலத்துக்கடியிலான  முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

 

1959 : சோவியத் அதிபர் நிகிட்டா குருசேவ் அமெரிக்காவின் டிஸ்னிலாண்டுக்கு செல்வதிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தடுக்கப்பட்டார்.

 

1976 : தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

 

1978 : ஐ.நா.வில் சொலமன் தீவுகள் இணைந்தன.

 

1983 : சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

 

1985 : மெக்ஸிகோவில் இடம்பெற்ற 7.8 ரிச்டர் நிலநடுக்கத்தினால் குறை ந்தது 9,000 பேர் கொல் லப்பட்டனர்.

 

1989 : நைஜர் நாட்டில் பிரெஞ்சு விமானமொன்றில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.

 

1997 : அல்ஜீரியாவில் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.

 

2006 : தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

 

2010 : அத்திலாந்திக் சமுத்திரத்தில் “டீப் வோட்டர் ஹொரைஸன்” எனும் எண்ணெய் அகழ்வு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய கசிவு அடைக்கப்பட்டது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பெரியவர்கள் விளையாடிய குழந்தைகளின் விளையாட்டு
 

குழந்­தைகள் உறிஞ்­சு­வ­தற்­காக வழங்­கப்­படும் டீட்­டரை வாயில் வைத்­துக்­கொண்டு நீண்ட தூரம் துப்பும் போட்­டி­யொன்று  ஜேர்­ம­னியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது.

 

193502016-09-17T183918Z_1918080011_S1BEU

 

பிராங்பர்ட் நக­ருக்கு அரு­கி­லுள்ள நைடெரோ எனும் இடத்தில் நடை­பெற்ற இப்­போட்­டியில் குழந்­தைகள் அல்­லாமல் பெரி­யோர்­களே பங்­கு­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 

193502016-09-17T183924Z_509758583_S1BEUB

 

ஆண்கள் பிரிவில் பிலிப் ஷீபெல்­பினும் பெண்கள் பிரிவில் நட்டேலி புக்லிஸிம் முதலிடம் பெற்றனர்.

 

193502016-09-17T183933Z_2019956372_S1BEU

193502016-09-17T183940Z_1810803238_S1BEU

 

- metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர்.

‘சர்வதேச விண்வெளி நிலையம்’ - பூமியில் இருந்து 320 கி.மீட்டர் உயரத்தில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் கட்டப்படும் பிரமாண்டமான விண்ணுலக வீடு. இந்தச் சாதனையில் இந்தியாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் விண்வெளியில் பயணம் செய்துள்ளனர்.

sunithawilliams2.jpg



ஒருவர் மறைந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா. இன்னொருவர் சுனிதா வில்லியம்ஸ். (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இரண்டாவது பெண்மணி என்ற பெருமை சுனிதாவுக்கு உண்டு.)

குஜராத் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தீபக் பாண்ட்யா. அமெரிக்காவில் குடியேறிய மருத்துவர். இவரது மூன்றாவது மகள்தான் சுனிதா. சுனிதாவின் கணவர் பெயர் மைக்கேல் ஜே. வில்லியம்ஸ்.

1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலத்தில் யூக்ளிட் என்ற இடத்தில் பிறந்தார் சுனிதா. சுட்டியாக இருக்கும்போதே விண்வெளியில் பறக்க வேண்டும் என்ற ஆசை சுனிதாவுக்கு.

கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற சுனிதா அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். சில மாதங்களிலேயே கடற்படை விமானி ஆனார். இதனால் சுனிதா தரையில் இருந்த நேரத்தைவிட வானில் பறந்த நேரம்தான் அதிகம். ஆம்! 8 ஆண்டுகளில் 30 வகை விமானங்களை ஓட்டிய சுனிதா, 2,770 மணி நேரங்கள் வானில் பறந்து சாதனை படைத்தார்.

வேலையில் இருந்து கொண்டே பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார் சுனிதா. இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். கடுமையான பயிற்சிகளையும் விரைவாக முடித்து சிறந்த விண்வெளி வீரர் ஆனார்.

இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று பணியாற்றும் அதிர்ஷ்ட வாய்ப்பை சுனிதாவுக்கு வழங்கி கௌரவித்தது நாசா.

2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி இரவு 8.47 மணிக்கு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கம்பீரத்துடன் சீறிப்பாய்ந்தது டிஸ்கவரி விண்கலம்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், விமானப் பொறியாளர் என்ற அந்தஸ்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் அடைந்தார் சுனிதா. அவருடன் பயணம் செய்த 7 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நீல நிறத்தில் விண்ணில் மிதந்து கொண்டிருந்த நம் பூமி பந்தைப் பார்த்து ரசித்தனர்.

இந்த மகிழ்ச்சியை தன் வீட்டுக்குப் போன் செய்து பெற்றோருடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி நிலைய கட்டுமானப் பணிகளில் சிறப்பாகவும் பணியாற்றினார் சுனிதா. இதற்காக 4 முறை விண்வெளியில் நடந்து சென்று புதிய சாதனையையும் படைத்தார். மொத்தம் 12 மணி நேரம் 55 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார் சுனிதா. இதுவரை யாரும் நிகழ்த்திடாத அரிய சாதனை இது.

sunithawilliams4_s.jpg



இது தவிர விண்வெளியில் இருந்தபடியே அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார் சுனிதா. ஆச்சர்யமாக இருக்கிறதா..?!

விண்வெளி நிலையத்தில் நடைபயிற்சி செய்யும் ‘டிரெட் மில்’ இயந்திரத்தில் இருந்தே மாரத்தான் போட்டியில் பங்கேற்றார் சுனிதா. பூமியில் மாரத்தான் போட்டி தொடங்கியதும், டிரெட் மில்லில் ஓடுவதற்கு ஆரம்பித்தார் சுனிதா.

பாஸ்டன் நகர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் மொத்த தூரம் 42 கி.மீட்டர். இதை 8 மணி நேரத்தில் ஓடிக் கடந்தார் சுனிதா. பூமியில் இருந்து 210 கி.மீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கொண்டே இந்த புதிய சாதனையை செய்தார் சுனிதா. ஓட்டப்பந்தய தூரத்தை சுனிதா ஓடிக் கடப்பதற்குள் இரண்டு முறை பூமியை வலம் வந்துவிட்டது சர்வதேச விண்வெளி நிலையம்.

மே 30-ம் தேதி பெல்ஜியத்தில் உள்ள செயின்ட் மேரி பள்ளி மாணவர்களுடன் விண்வெளியில் இருந்து ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு பேசினார் சுனிதா. விண்வெளியைப் பற்றியும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது அனுபவங்களைப் பற்றியும் சுட்டிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்தது, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது, விண்வெளியில் இருந்து போன் செய்து மற்றவர்களுடன் பேசியது, விண்ணில் அதிக நேரம் நடந்தது என்று அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்து நம் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சுனிதா விரைவில் பூமிக்குத் திரும்பினார். வானையே வீடாக்கி சாதனைகள் பல புரியும் சுனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வோம்.

vikatan

  • தொடங்கியவர்

அந்த 6 பந்துகளை ஸ்டுவர்ட் ப்ராட் மறக்கமாட்டார்! #OnThisDay

 

yuvi.jpg

இந்த நாளை காலிங்வுட் மற்றும் ஃப்ளின்டாப்பால் அவ்வளவு சீக்கிரம் மறந்தவிட முடியாது.  கிங்ஸ்மீட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சேவக் மற்றும் கம்பீர் இங்கிலாந்து வீரர்களை அதிரடியால் சோதித்தனர். முதல் விக்கெட் விழவே 14.4 ஓவர்களை எடுத்துக் கொண்டது இங்கிலாந்து. இதற்கிடையில் சேவக் அடித்த ஒரு இமாலய சிக்ஸர் இங்கிலாந்து ரசிகரை தாக்கியது. 

ஃப்ளின்டாப்பின் 18வது ஓவரில் 4வது மற்றும் 5வது பந்து பவுண்டரிக்கு செல்ல கடுப்பான ஃப்ளின்டாப் களத்தில் இருந்த யுவராஜ் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தான் பிரச்னையின் உச்சகட்டம் இவர் வசைபாடாமல் இருந்திருந்தால் அந்த வரலாற்று நிகழ்வு நடக்காமலே போய் இருக்கும்.

sriramsathiyamoorthy

 

 

19வது ஓவரில் யுவராஜ் எந்த மனநிலையில் எதிர்கொண்டார் என யாராலும் கணிக்க முடியாது. எதிர்முனையில் இருந்த கேப்டன் கூலும் அன்று கூல் மனநிலையை இழந்திருப்பார். ஸ்டுவர்ட் ப்ராட் எனும் இங்கிலாந்தின் முன்னனி பந்துவீச்சாளர் அந்த ஓவரில் ஆறு பந்துகளையும் புதிய உத்தியோடு தான் வீசினார்.

உச்சகட்ட கோபத்தில் இருந்த யுவி, ஆறு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பி விஸ்வரூபம் என்றால் என்ன என்பதை காட்டினார். 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டதும், 12 பந்துகளில் அரைசதம் அடித்ததும் இன்று வரை உடைக்க முடியாத சாதனையாகவே உள்ளது.

 

 

இந்த போட்டியை இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். கட்டாயம் அன்றைய இரவு காலிங்வுட், ஃபிளின்டாப் மற்றும் ப்ராட் மறக்கவேண்டிய இரவாகவே அமைந்திருக்கும். யுவராஜ் சிங் ஒரு அக்ரஸிவான ஆட்டக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அக்ரஸிவ் வீரரின் உச்சம் யுவி தான் என்பதை அன்று நிருபித்தார். 

 

9 வருடங்கள் ஆகியும் உள்ளூர் போட்டிகளில் கூட இந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. ஸ்லெட்ஜிங் செய்வது எளிது, அதற்கு பதிலடி தருவது யுவி போன்ற வீரர்களால் மட்டுமே முடியும். சமீபத்திய பேட்டியில் கூட யுவராஜ் இதனை திரும்ப செய்ய விரும்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இத்தாலிய கோடீஸ்வர கணவரிடமிருந்து தப்பிச்சென்ற யுக்ரைனிய முன்னாள் அழகுராணி
 

19357anna-zaiachkivska-photo-bikini.jpgயுக்ரைனிய முன்னாள் அழகுராணி ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவி த்துள்ளார்.

 

அனா ஸெயாச்கிவ்ஸ்கா எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் யுக்ரைன் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் வேர்ல்ட் யுக்ரைன் 2013 அழகுராணியாக தெரிவானவர்.

 

அவ் வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டியில் யுக்ரைன் சார்பாக இவர் பங்குபற்றியிருந்தார்.

 

பின்னர் இத்தாலிய கோடீஸ் வரரான  ஜியான்லுகா சேர்வேராவை அனா ஸெயாச்கிவ்ஸ்கா திருமணம் செய்தார்.

 

இவர்கள் இத்தாலியில் வசித்து வந்தனர். எனினும், இவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் கணவர் ஜியான்லுகாவிடமிருந்து அனா பிரிந்து சென்றார்.

 

இதையடுத்து தனது மனைவி அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய் விட்டார் என கடந்த ஜூலை மாதம் சேர்வேர ஜியான்லுகா முறைப்பாடு செய்திருந்தார்.

 

193571.jpg

 

அதன்பின், மற்றொரு ஆணுடன் அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதை சேர்வேரா  அறிந்துகொண்டார்.

 

இதையடுத்து, அனாவுக்கு எதிராக ஜியாலுன்கா வழக்குத் தொடுத்தார். தன்னி டமிருந்து பிரிந்து சென்றதன் மூலம், திருமணத்துக்கு முன்னர் தம் இருவருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அனா மீறிவிட்டார் என இவ்வழக்கில் ஜியான்லுன்கா குற்றம் சுமத்தியிருந்தார்.

 

19357Anna-Zaiachkivska2.jpg

அனா - சேர்வேரா ஜியாலுன்கா


 

7000 அமெரிக்க டொலர்களையும் (10 இலட்சம் ரூபா) செல்லிடத் தொலை பேசியையும் அனா திருடிச் சென்றுவிட்டதாகவும் சேர்வேரா முறைப்பாடு செய்துள்ளர்.

 

'புதிய காற்று வாங்குவதற்காக' தான் செல்வதாக தன்னிடம் அனா கூறினார் எனவும் ஆனால், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை எனவும் இத்தாலி அதிகாரிகளிடம் 45 வயதான சேர்வேரா ஜியலுன்கா தெரிவித்துள்ளார்.

 

19357Anna-Zaiachkivska1.jpg

 

இந்நிலையில், தனது கணவர் ஜியாலுன்காவிடமிருந்து தான் தப்பி வந்து ள்ளதாக 24 வயதான அனா  ஸெயாச்கிவ்ஸ்கா கூறியுள்ளார். நியூயோர்க் வீதிகளில் நடக்கும்போது தான் நிம்மதியை உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அனா  ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய்விட்டார் என சேர்வேரா செய்த  முறைப்பாடு குறித்து அனா பரிகாசம் செய்துள்ளார். 'நான் எங்கே இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்' என அனா தெரிவித்துள்ளார்.

 

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.