Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

செப்டம்பர் 24 - சர்வதேச முயல் தினம்!

 

 
International_Rabbit_Day

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  24-ஆம் தேதி சர்வதேச முயல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளானது நாம் வீட்டில் வளர்க்கப்பபடும் மற்றும் காட்டு முயல்களின் பாதுகாப்பபு மற்றும் பராமரித்தல் குறித்த எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

சர்வதேச முயல் தினமானது 1998-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து செய்லபடும் 'முயல் தொண்டு' அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைப்பானது முயல்களின் மீட்டெடுப்பு, பராமரித்தல், அன்பு செலுத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிரான வேட்டை முதலிய கொடூரங்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றை இலக்காய்  கொண்டு செயல்பட்டு வருகிறது.

http://www.dinamani.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

p3a.jpg

நடந்தாலும் நடக்கும்... ஹிலாரிக்கே கிலி பிடிக்கும்ல!

  • தொடங்கியவர்

'என்னைச் சார்ந்தவர்களும் எனக்கேயானவர்கள்'
 

article_1472530117-yruytu.jpgகாதல், உறவைப் பிடுங்கும் கருவி எனப் பெற்றோர்கள் கருதுவதுண்டு. காதலைப் பற்றிப் பெரிதாகப் பேசும் புதுமை விரும்பிகள் பலரும், தங்கள் வீட்டில் பிள்ளைகள் விடயத்தில் பெரிய மனதுடன் பாராட்டி, அவர்கள் காதலை இணைக்கவும் தயங்குவதுண்டு.

உறவில் கூட ஆதிக்கம் உண்டு. நானும், என்னைச் சார்ந்தவர்களும் எனக்கேயானவர்கள்; எனது விருப்புக்கு மட்டும் உரித்தானவர்கள் என எண்ணி விடுகின்றனர்.

சம்பந்தப்பட்டவர் முடிவை எடுப்பதை விடுத்து, தாங்கள் எடுக்கும் முடிவே அவர்களுக்கான சுதந்திரம் என்பதுடன் அதில் பிறருக்கு உரிமையில்லை எனுமாற்போலவே பலரும் கருதுகின்றார்கள். மனம் கூட மயக்கமூட்டும்; உண்மையை மறைத்துக் காட்டும்; காதல் விடயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இவை பொருந்தும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இன்று உலக மருந்தாளர் தினம்
 

19470_world-pharmacist-day-2016.jpgஉலக மருந்­தாளர் தினம் வரு­டந்­தோறும் செப்­டெம்பர் 25 ஆம் திகதி கொண்­டா­டப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச மருந்­தக சம்­மே­ளனம் (FIP) 1912 செப்­டெம்பர் 25 ஆம் திகதி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

இதனை முன்­னிட்டு, உல­கி­லுள்ள மருந்­தா­ளர்­களின் சேவையை குறிக்கும் முக­மாக 2010 ஆம் ஆண்டு முதல் செப்­டெம்பர் 25 ஆம் திக­தியை உலக மருந்­தாளர் தின­மாக  கொண்­டா­டு­கி­றார்கள்.

 

எமது நாட்டின் புதிய தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­கா­ர­சபை  (NMRA –2015)  சட்­ட­மா­னது நோயா­ளி­களை, நுகர்­வோரை பல விதங்­களில் பாது­காத்து நன்­மை­யையும் செய்­கின்­றது. அதே நேரம் மருந்­தா­ளரின் அவ­சி­யத்­தையும் அவரின் பொறுப்­பு­க­ளையும் அறி­வு­றுத்­து­கின்­றது.

 

மருத்­து­வரின் மருந்­துச்­சீட்­டுக்கு மருந்தை கொடுத்தல் மட்டும் மருத்­தா­ளரின் தொழில் அல்ல. மருந்­தாளர் முதலில் மருந்­துச்­சீட்­டி­லுள்ள மருத்­துகள் நோயா­ளரின் வய­துக்கும் (நிறை), நோய்க்கும் ஏற்ற வகையில் சரி­யாக  (Dose) எழு­தப்­பட்­டுள்­ளதா என்­பதை கவ­னிக்க வேண்டும்.

 

பின்னர் அந்­நோ­யாளி வேறு மருந்­துகள் (அது விட்­ட­மின்­கள, ஆயுர்­வேத, சித்த மருந்­துகள்) பயன்­ப­டுத்­து­பவர் எனின் அது பற்றி அறிந்து கொள்ளல் வேண்டும். ஆங்­கில மருந்­துடன் அம்­ம­ருந்­துகள் ஏதும் தாக்­கங்­களை உண்டு பண்­ணு­மாயின் அது பற்றி மருத்­து­வ­ருக்கு தெளி­வு­ப­டுத்தல் வேண்டும்.

 

பின்னர், மருந்­து­களை உட்­கொள்ளும் அளவு, கால இடை­வெளி பற்­றியும் குறிப்­பாக அம்­ம­ருந்தால் ஏற்­படக் கூடிய முக்­கிய பக்க விளை­வுகள் இருப்பின் அது பற்றி தெளி­வு­ப­டுத்­த­லுடன் சில அபா­ய­க­ர­மான பக்­க­வி­ளை­வுகள் ஏற்­படின் உட­ன­டி­யாக மருந்­துகள் எடுப்­பதை நிறுத்தி வைத்­தி­ய­ருக்கு அறி­விக்­கு­மாறும் தெளி­வு­ப­டுத்தல் வேண்டும்.

 

தொற்றா நோய்கள் சம்­பந்­த­மாக நோயாளி விரும்பின் நேர­மி­ருப்பின் அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தல் வேண்டும். உடற்­ப­யிற்சி, உணவுப் பழக்­க­வ­ழக்­கங்கள் மேலும் அந்­நோயை எவ்­வாறு கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கலாம் என்­ப­தையும் கூறலாம். மருந்­தாளர் தான் விநி­யோ­கிக்கும் அட்­ட­வணை ll B அட்­ட­வணை lll (Schedule  II B, Schedule  III)  பிரி­வுக்­குட்­பட்ட மருந்­து­களை Prescription Book இல் பதிவு செய்தல் வேண்டும்.

 

19470_10532513_693150714054875_260719989சட்­ட­ரீ­தி­யான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளவும் மருந்­தா­ள­ருக்கு அது உதவும். உதா­ர­ண­மாக, வெள்­ள­வத்­தையில் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் தங்­கையை கொலை செய்ய பாவித்த மாத்­தி­ரைகள் தகுந்த வைத்­தி­யரின் பற்­றுச்­சீட்­டிற்கு ஏற்ப வழங்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­ததால் அம் மருந்­தகம் எந்த வித­மான சட்டப் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­க­வில்லை.

 

இலங்­கையில் ஒரு சில மருந்­து­களையே மருந்­துச்­சீட்டு இல்­லாமல் மருந்­தா­ளரால் வழங்க முடியும். ஏறத்­தாழ 98 சத­வீத மருந்­துக்­க­ளுக்கு கட்­டாயம் மருத்­து­வரின் புதிய மருந்­துச்­சீட்டு தேவைப்­படும்.

 

நம் நாட்டில் பொரு­ளா­தார, நேர­மின்மை நோய்­களின் அல்­லது மருந்­து­களின் பார­தூ­ர­மான விளை­வு­க­ளையும் அறி­யா­ததால் நோயாளி பழைய மருத்­துவ சீட்டை காண்­பித்து பல­மா­தங்கள், ஏன், பல வரு­டங்கள் கூட மருந்­து­களை வாங்­கு­கின்­றார்கள். இதனால் பல பார­தூ­ர­மான விளை­வுகள் ஏற்­ப­டலாம். மருந்­தாளர் இது­பற்றி நோயா­ளிக்கு விளக்­குதல் அவ­சி­ய­மா­னது.

 

விசேட மருத்­து­வர்­களை சந்­திக்­கா­மைக்கு பொரு­ளா­தா­ர­நிலை, நேர­மின்மை காரணம் என்றால் நோயா­ளிக்கு தெரிந்த குடும்ப நல வைத்­தி­யரை அணுகி விசேட வைத்­திய நிபு­ணரின் மருந்துச் சீட்டை காண்­பித்து பின் தேவை ஏற்­படின் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு புதிய மருந்து சீட்டை பெற்றுக் கொள்­ளலாம்.

 

19470_dr.jpgபழைய மருந்­துச்­சீட்­டுக்கு மருந்­து­களை விநி­யோகம் செய்­வது சட்­டப்­படி குற்­ற­மாகும். நோயா­ளிக்கு அதன் மூலம் ஏதா­வது பிரச்­சினை ஏற்­படின் மருந்­தாளர் மருந்­தக உரி­மை­யாளார் பொறுப்­புக்­கூற வேண்­டி­யி­ருக்கும்.

 

சில மருந்­து­களை கர்ப்­பி­ணிகள், பாலூட்டும் தாய்­மார்கள் வெறுங் கையினால் தொடக்­கூ­டாது. அவ்­வ­கை­யான மருந்­து­களை எடுத்து கொடுக்­கும்­போது கவ­ன­மாக இருத்தல் வேண்டும். இரத்­த­தானம் வழங்கும் போதும் தாங்கள் உட்­கொள்ளும் மருந்­துகள் குறித்து மருத்­து­வ­ரிடம் தெரி­விக்க வேண்டும்.

 

சில மருந்­து­களை உட்­கொள்ளும் காலத்­திலும், சில மருந்­து­களை உட்­கொள்­வதை நிறுத்தி குறு­கிய கால­கட்­டத்­திற்குள் இரத்த தானம் செய்­யக்­கூ­டாது. அத்­துடன், உங்­க­ளுக்­கு­ரிய மருந்­து­களை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்கக் கூடாது.

 

சில மருந்­து­களை, உதா­ர­ண­மாக  அன்­ரி­ப­யோடிக்ஸ் (antibiotics) கட்­டா­ய­மாக மருத்­து­வரால் வழங்­கப்­படும் மருந்தை முழு­வ­து­மாக குறித்த கால இடை­வெ­ளியில் உட்­கொள்ள வேண்டும்.

 

கட்­டா­ய­மாக மருந்தாளரிடம் மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்னரா அல்லது பின்னரா உட்கொள்ள  வேண்டும் என்பதையும், சாப்பிடக் கூடாத உணவு வகைகள் ஏதும் உண்டா என்பதையும் நோயாளர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மருந்தாளர்கள் சுகாதார, மருத்துவ சேவையில் பல துறைகளிலும் பல மட்டங்களில் சேவை புரிகின்றனர்.

 

மருந்தாளர்களை கண்டு பிடித்தலில் தொடங்கி நோயாளியை சென்றடையும் வரை அவர்களின் சேவைகள் பல விதங்களில் மக்களுக்கு உதவிபுரிகின்றது.

 

19470metro-news-health-page-960b.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

ஹாலிவுட் படமானது ஆஃப்ரிக்க சதுரங்க நாயகியின் கதை
----------------------------------------------------------------------------------------------------
ஆஃப்ரிக்க நாடான யுகாண்டாவில் சதுரங்கம் பெரிய அளவில் விளையாடப்படுவது இல்லை.
ஆனால் அங்குள்ள கட்வே எனும் குடிசைப் பகுதியிலிருந்த பெண் ஆஃப்ரிக்க சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து, டிஸ்னி நிறுவனம் அவரது வாழ்க்கையை படமாக்கியுள்ளது.
‘கட்வேயின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதில் ஃபியோனா மட்டேஸி எனும் அந்த ஏழைப் பெண்ணின் பாத்திரத்தில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள நடிகை லுபிட்டா ந்யாங்கோ நடித்துள்ளார்.
பல நெருக்கடிகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற மட்டேஸி தனது வாழ்க்கை மட்டுமன்றி சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையும் மாற்றி அமைத்தார்.

  • தொடங்கியவர்

உங்களுக்கு இரும்புக்கை மாயாவியைத் தெரியுமா? #ComicBookDay

Steel%20claw.jpg

இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினர் பலரின் வாழ்வை சுவாரசியமாக்கியதில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்னே... விடிய விடிய புத்தகத்தைக் கையில் வெச்சு வாசிச்சுக்கிட்டு இருந்தா... அவ்வளவு சுவாரசியமான வாசிப்பனுபவம் தந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொண்டாடும் விதமாக இன்று 'காமிக் புத்தக தினம்' கொண்டாடப்படுகிறது.

காமிக் தினம் கொண்டாடும் பழக்கம் எப்படி, யார் மூலம் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல் அறிய, கூகுளில் வலைவீசித் தேடியதில் 'கடல்லயே இல்லயாம்!' என்றுதான் பதில் வருகிறது.  காமிக்ஸ் வரலாற்றைப் புரட்டினால், 1842-ம் ஆண்டு முதல் காமிக்ஸ் புத்தகத்தின் சுவடுகள் இருந்தாலும் 1933-ம் ஆண்டு வெளியான 'ஃபேமஸ் ஃபன்னீஸ்' புத்தகம்தான் முழுமையான முதல் காமிக்ஸ் புத்தகமாகக் கருதப்படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை வாசிப்புப் பழக்கத்தின் ஆரம்பமாக சித்திரக் கதைகள்தான் இருக்கும். அதில் தொடங்கும் வாசிப்புப் பழக்கமானது படிப்படியாகக் கடந்து நாவல்கள் வரை வந்து நிற்கும். இதுதான் அடிப்படை.  வெளிநாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறார்கள். சொல்லப்போனால் காமிக்ஸ் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுகளாக சினிமா உலகில் கொடிகட்டிப்பறந்து தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் லாபமளித்த சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன், அயர்ன்மேன், அவெஞ்சர்ஸ் அனைவருமே முதன்முதலில் காமிக்ஸ் கதாபாத்திரங்களாகத்தான் மக்களிடம் அறிமுகமானவர்கள். 

தமிழைப் பொறுத்தவரை காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னன் என்றால் அது 'இரும்புக்கை மாயாவி' தான். இந்தக் கதாபாத்திரத்தின் சாகசங்கள் அடங்கிய புத்தகத்தைப் படிக்காத காமிக்ஸ் விரும்பிகளே இல்லை எனலாம். டெக்ஸ் வில்லர் உட்பட உலகம் முழுவதும் உள்ள காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களில் பெரும்பாலானோர் தமிழுக்கு (மொழிபெயர்க்கப்பட்டு) வந்துவிட்டார்கள். இன்றைய தமிழ்ச்சூழலில் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் மட்டும் இன்னும் காமிக்ஸ் புத்தகங்களைப் பதிப்பித்துக்கொண்டிருக்கின்றன.

மக்களிடத்தில் வாசிப்புப் பழக்கமே குறைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வந்துகொண்டிருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை புத்தகக் கண்காட்சியில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுநாள்வரை ஏங்கிக்கிடந்த காமிக்ஸ் ரசிகர்களும், தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதில் அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. இந்த மவுசு காரணமாக அதைத்தொடர்ந்து வருடா வருடம் இப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தும், விற்பனையாகிக்கொண்டும் இருக்கின்றன என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

காமிக்ஸ் படிச்சா குழந்தைங்களோட படிப்பு கெட்டுப்போகுமே என வருத்தப்படும் பெற்றோரா நீங்கள்?  உண்மையில் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் கற்பனைவளத்தை அதிகரிக்கிறதென நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணத்துக்கு, காமிக்ஸ் வாசிக்கும்போது கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தையும், படத்தையும் இணைத்து தங்கள் மனதிற்குள்ளாகவே அந்தக் காட்சியைக் கற்பனையாக உருவாக்குவார்கள். இவ்வாறு அவர்களின் கற்பனைத்திறனும், சிந்தனை ஆற்றலும் தூண்டப்படும். இந்த கற்பனைத்திறனானது அவர்கள் உடன் வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கே தெரியாமல் பயணிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காமிக்ஸ் விரும்பிகள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுவரை அதெல்லாம் வாசிச்சதில்லையே பாஸ் என்போர்கள், அடுத்து எங்காவது காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டால் உடனடியாக வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களையே மறக்கச் செய்துவிடும் சுவாரசியமான தனி உலகம் பாஸ் அது!

vikatan

  • தொடங்கியவர்

மிதக்கும் அற்புதங்கள்

கட்டுமானத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி புதிய புதிய யோசனைகளுக்கு வித்திட்டது. அவற்றில் ஒன்றுதான் மிதக்கும் வீடுகள்.

 

1_3021398f.jpg

ப்ளோட்டிங் பெவிலியன், நெதர்லாந்து

2_3021397f.jpg

மக்கோகோ பள்ளி, நைஜீரியா

3_3021396f.jpg

வாட்டர்வோனிங், நெதர்லாந்து

7_3021395f.jpg

ஹார்ஸ்லே ஹார்பர் பாத், டென்மார்க்

 

 

6_3021393f.jpg

ப்ளோட்டிங் ஐலாண்ட், தென்கொரியா
 
 
 
 

4_3021392f.jpg

அர்டிகா தலைமையகம், பின்லாந்து

5_3021391f.jpg

அர்ச்சிபிலாகோ சினிமா, தாய்லாந்து

8_3021394f.jpg

வெர்னன் சி கரக்ஸனல் சென்டர், அமெரிக்கா

கட்டுமானத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி புதிய புதிய யோசனைகளுக்கு வித்திட்டது. அவற்றில் ஒன்றுதான் மிதக்கும் வீடுகள். துபாயில் கடலுக்கு அடியிலும்கூட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலில் ஏரிக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்காகப் படகு வீடுகள் கட்டப்பட்டன. இம்மாதிரியான மிதக்கும் கட்டிடங்களில் சிறந்தவற்றின் கட்டிடங்கள் இவை.

இந்தியாவில் கேரள மாநிலம் போன்ற பகுதிகளில் இம்மாதிரியான படகு வீடுகள் மிகப் பிரபலம். இவை அல்லாமல் தாய்லாந்தில் குடுனோய் என்னும் சிறிய தீவில் ஜெர்மானியக் கட்டிடக் கலைரான ஒலே ஸ்ரேனால் உருவாக்கப்பட்டது. திறந்த வெளி அரங்கமாக அமைக்கப் பட்டுள்ளது இந்தத் திரையரங்கம். நெதர்லாந்தில் ஒரு குடியிருப்பே நீரில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நைஜிரியாவில் ஒரு பள்ளிக்கூடம் ஏரிக்கு நடுவில் மிதக்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது.

tamil.thehindu

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

பாடசாலை சீருடையில் சென்ற சனத் ஜயசூரிய (படங்கள் இணைப்பு)

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய, தான் கல்விகற்ற  பாடசாலையான மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரிக்கு பாடசாலை சீருடையில் இன்று  சென்றிருந்தார்.

பழைய மாணவர்களுக்கான நிகழ்வு மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில் இன்று இடம்பெறுகின்றமையடுத்தே சனத் ஜயசூரிய பாடசாலை சீருடையில் சென்றுள்ளார்.CtLgW7QUkAAh3NN.jpgCtLgW7XVYAAJ_LX.jpgCtLv1_SUsAAKESB.jpgCtLv46yVUAEAuaz.jpg

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உங்களுக்கு இப்பொழுது மழையில் நனைய ஆசையா? #GIF

இந்த கவிதைகளும் இந்த படங்களும் மழையில் நனைந்த  சிலிர்ப்பையும், மழை நேர தேநீரின் கதகதப்பையும்  நிச்சயம் கொடுக்கும்..., 

 

கொட்டும் மழையும் குட்டிப் பெண்ணும்...

 

குட்டிப் பெண் 

பாட்டியிடம் கேட்டாள் 

'மழை எப்படி வருது பாட்டி?'

'அதுவா... வானத்தில் நின்னு 

கடவுள் குளிக்கிறாரு அதான்'

என்றாள் பதிலுக்குப் பாட்டி.

குட்டிப் பெண் சிரித்தாள் 

'ஒரு ஆளு இவ்ளவு தண்ணியில குளிச்சா

ஊர்ல தண்ணிப் பஞ்சம் வராம 

வேறென்ன செய்யும்?'

- பாஸ்கோ பெர்னாண்டஸ் 

 

ykuMF9o.jpg

 

எல்லோருக்குமாய் மழை 

அந்த நிழற்குடையின் கீழ்

மழையில் நனைந்த அனைவரும் 

நெருக்கிக்கொண்டு நிற்கிறோம் 

மழைவிட்டுக் கலைந்த போதுதான்

கவனித்தேன்,

என் இடப்புறம் நின்றிருந்தவர் கையில் 

மடிக்கணினி இருந்தது 

வலப்புறம் நின்றிருந்தவர் கையில் 

திருவோடு இருந்தது 

என் கையில் 

மழை இருந்தது!

- ஜனா கே.  

 

குடை 

கொடிய மழை நாள் ஒன்றில் 

உள்ளாடைகளின் 

குளிர்ச்சி தாளாமல் 

அதிக நேரம் 

குடை குறித்துப் பேசியிருப்போம் 

 

கைக்கு அடக்கமான குடை 

கை தவறிவிடுகிறது.

 

அளவில் பெரிய குடை 

மறந்துவைத்துவிட்டாலும் 

கிடைத்துவிடுகிறது.

 

பத்துப் பதினைந்து நாட்கள் 

அடித்த சாரல் மழையில் 

குடைகளின் விலை மலிவானது.

 

நகரப் பகுதிகளில் 

மழை நாட்களில்கூட 

சுடிதாருக்குப் பொருத்தமாய் 

குடை பிடித்தபடி போகிறார்கள் 

சில பெண்கள்.

 

குளிரோ,

மழையோ,

வெயிலோ,

வெளியில் கிளம்பினால் 

குடை கொண்டுதான் 

போவார்

கருப்பான எங்கள் 

ஆங்கில ஆசிரியை!

- நலங்கிள்ளி  

 

2617032_orig.gif

 

நனையாத மழை 

 

தொலைக்காட்சிப் படமொன்றில் 

பெய்யத் துவங்கிய மழைக்கு 

குடை விரிக்க துவங்கினாள் 

சிறுமி அதிஸ்யா.

பிறகு சலிப்புற்று 

நனையத் துவங்கினாள்.

வீட்டிற்குள் ஏன் 

ஈரமாகவில்லையென 

நச்சரிக்க தொடங்கினாள்.

உள்ளே பெய்யாத 

அம் மழை 

இறங்கத் துவங்கிற்று

அவள் கண்களின் வழியே!

- க.அம்சப்பிரியா

 

tumblr_myisgaZb0G1s85u2fo1_500.gif

 

கோப்பை முழுதும் மழை 

 

உனக்கு நிறைய 

கேள்விகள் இருந்தன 

நிறைய சமாளிப்புகள் 

நிறைய குற்றச்சாட்டுகள் 

நிறைய கோபங்கள் 

நீ கை அசைத்துப் போகும்போது 

என்னிடம் ஒரு காதல் இருந்தது 

கொஞ்சம் தேநீர் இருந்தது 

நிறைய மழை இருந்தது!

- லதாமகன் 

 

tumblr_nyh7h82wDV1uavhg7o1_500.gif

 

 

 

கடலாகும் மழை 

வாசலில் 

தேங்கிய 

மழை நீரை 

என்ன செய்தும் 

வெளியேற்ற முடியவில்லை.

ஒரே ஒரு 

கப்பல் செய்து 

அதைக் 

கடலாக்கியது 

குழந்தை!

- ந.சிவநேசன் 

 

6377989417_aa1b07dedc_o.gif

 

மழை இரவு 

 

பிடிவாதம் மிகுந்த 

பூனைக் குட்டி 

இடை விடாத மழை இரவில்...

 

எங்கோ பதுங்கியபடி 

குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது 

 

இந்த இரவை...

இந்த மழையை...

இந்த மனிதர்களை!

- இளங்கோ 

 

cats-kittens-cinemagraphs-for-animal-lov

 

vikatan

  • தொடங்கியவர்

 

நொடிக்கு ஒரு பைபிள்

1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

  • தொடங்கியவர்

 

இரண்டு அடியில் உலகத்தை புரியவைத்தால் அது திருவள்ளுவர்
ஒரே அடியில் உலகத்தை புரியவைத்தால் அதுதான் மனைவி...

  • தொடங்கியவர்

 

p4a.jpg

தட் ‘இது மகிழ்ச்சியா?' மொமென்ட்:

``சகோதரர் ரஜினிகாந்த் காவிரிப் பிரச்னையில் தலையிட்டு சுமுகமான நிலையை ஏற்படுத்த p4d.jpgவேண்டும்’’னு பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருக்காங்க. ஆஹா, நமக்குத் தெரியாமலே ரஜினிகாந்த் பிரதமர் ஆயிட்டாரா?


தட் `அண்ணே டக்ளஸ் அண்ணே’ மொமென்ட்:

கஞ்சா கருப்பு அம்மா தி.மு.க-வில் சேர்ந்திருக்கார். அப்போ ‘பருத்திவீரன்’ கஞ்சா கருப்பு காமெடிதான் ஞாபகத்துக்கு வருது. ‘டீக்கடைக்காரரே தான்தான்’னு கருப்பு சொன்னதா கலாய்ச்சு அவரை வேலையை விட்டுத் தூக்குவாங்க கார்த்தியும் சரவணனும். அப்படித் தானுங்கோ நம்ம பழைய டீக்கடைக்காரர் ஓ.பன்னீர்செல்வம் ஓனர் மாதிரி முதல்வர் நாற்காலியில் உட்காரலாமா, வேணாமான்னு யோசிச்சாரு!


p4b.jpg

தட் ‘சோதனை மேல் சோதனை’ மொமென்ட்:

 அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை. சரத்குமாருக்கு மறுபடி மறுபடி பிரச்னைகள். ‘நீதிடா நேர்மைடா பஞ்சாயத்துடா பழைய சொம்புடா’னு மார்ல சந்தனம் தடவின விஜயகுமார் ‘நாட்டாமை’ படத்தில் ‘ஆரும் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது’னு சகட்டுமேனிக்குப் பல குடும்பங்களை விலக்கிவைப்பாரு. இப்போ ‘நாட்டாமை’ சரத்குமாரையே சங்கத்தில் இருந்து விலக்கி வெச்சு, எலிமினேட் பண்ணி எகத்தாளமா சிரிக்கிறாங்க நடிகர் சங்கப் புதுப்பொறுப்பாளர்கள். இப்பதான் சரத்குமார், ``நான் அரசியலில் இருந்தாலும் சினிமாவை விட மாட்டேன். அது என்னோட தொழில்’’னு ஸ்டேட்மென்ட் தட்டினார். ``அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வார்னு பார்த்தா சினிமாவில் நடிக்கப்போறார்’’னு அவர் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம்னு ஒருத்தர் விலகினார். (ஆமா இதுக்கு முன்னால் அரசியலில் அப்படி என்ன சேவை பண்ணினார்? ஒருவேளை அவர் படங்களில் நடிக்காம இருந்ததையே சேவைங்கிறாரோ?). இப்படி தனக்குத்தானே `ரெடி ஆக்‌ஷன்’னு சொல்லிக்கலாம்னு நினைச்ச நேரத்தில் சங்கத்தில் இருந்து கட்டதுரையைக் கட்டம் கட்டியிருக்காங்க. ஆமா, ‘சோதனை மேல் சோதனை’ பாட்டு எந்தப் படம் தெரியும்ல? தங்கப்ப தக்கம்!


p4c.jpg

தட் ‘இதைக் கேட்டா தூக்கி அடிச்சிடுவாரா’ மொமென்ட்:

சேலம் ஆத்தூரில் தே.மு.தி.க. கூட்டம். அதில் பேசிய விஜயகாந்த் ‘‘தே.மு.தி.க. ஆரம்பித்துப் பல வருஷம் ஆச்சு. 12 ஆண்டுகளா, 13 ஆண்டுகளா? எனக்குத் தெரியலையே’’ என்றிருக்கிறார். உடனே கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ``12 ஆண்டுகள்’’னு பதில் சொன்னாங்களாம். ``பார்த்தீங்களா, கட்சி ஆரம்பிச்சு எத்தனை வருஷம் ஆச்சுன்னு தொண்டர்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்போ கட்சி வளர்ந்திருக்குன்னுதானே அர்த்தம்’’னு பேசியிருக்கார். ஆனால் எனக்கு ஒரு டவுட்டு. கட்சி ஆரம்பிச்சு எத்தனை வருஷம் ஆச்சுனு தலைவருக்கே தெரியலையே, அப்புறம் என்ன கட்சி வளர்ந்திருக்கு?

vikatan

  • தொடங்கியவர்

 

p32.jpg

மல்லுவுட் வினுதா லால்

பெரும்பாலான மலையாள தேவதைகளைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த ஜிலேபி. மேஜர் ஆனதும் மாடலாக கலைப்பயணத்தைத் தொடங்கினார். `பிரமுகன்' என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கிடைக்க, அதில் முடிந்த அளவிற்கு ஸ்கோர் செய்து கவனம் ஈர்த்தார். பின்னர் அடித்தது லக்கி பிரைஸ். `பரங்கிமலா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு சிக்ஸர் அடித்தார். நடிப்போடு அம்மணியின் முண்டு காஸ்ட்யூமும் பரவலாய்ப் பேசப்பட்டது. அதன்பின் வரிசையாய் `உல்லாச கமிட்டி', `பையா பையா', `சாரதி' என ஏராள வாய்ப்புகள் கிடைக்க, பெர்ஃபார்மன்ஸில் மிரட்டுகிறார் இந்தப் பூனைக்கண் அழகி. மியாவ்!


p32a.jpg

டோலிவுட் சனம் ஷெட்டி

பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஜில்ஜில் கோன் ஐஸ்! லண்டனில் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படித்த கையோடு சினிமா உலகில் கால் வைத்தார். அறிமுகமானது `அம்புலி' என்ற தமிழ் சினிமாவில். பின் கொஞ்ச நாளைக்கு மலையாள வாசம். அப்புறம் மகேஷ்பாபுவின் `ஸ்ரீமந்துடு' படத்தில் கெஸ்ட் ரோல். அதில் பொண்ணு பளிச்சென இருக்க, கால்ஷீட்டை நிரப்பிவிட்டார்கள் மனவாடுகள். `பிரேமிகுடு', `இந்திதா அன்னமய்யா' என இப்போது இரண்டு படங்களில் மேடம் செம பிஸி. மீண்டும் தமிழுக்கு எப்போ?


p32v.jpg

சாண்டல்வுட் திஷா

இந்தக் கன்னடத்து கப்பக்கிழங்கு அறிமுகமானதே சாண்டல்வுட் சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்தில்தான். `ஹுடுகாரு' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் அடுத்து `போலீஸ் ஸ்டோரி 3' படத்தில் சின்ன ரோலில் நடித்தார். அதன்பின் `ஆசிர்வாதா', `ஸ்லம்', `மல்லி', `தண்டு', `நம் லவ் ஸ்டோரி' என வாய்ப்புகள் குவிய, கன்னட ரசிகர்களுக்கு இவரின் தரிசனம் தொடர்ந்து கிடைத்தது. இந்த அசுரவேகத்தால் ஊர்க்கண் பட்டுவிட்டது போல, இப்போது கால்ஷீட் காலியாகக் கிடக்கிறது. தமிழுக்கு வந்துடுங்க தங்கச்சிலையே!

vikatan

  • தொடங்கியவர்

 

கோஸ்ட் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய படைப்பான மினிடார், கோ ப்ரோவின் ‘கர்மா’ என்ற ட்ரோன், குவாண்டம் தொலைநகர்த்தலில் ஒரு புதிய சாதனை, கூகுள் நிறுவனத்தின் அலோ என்ற செயலி உள்ளிட்ட காணொளி.

  • தொடங்கியவர்

 

முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?

  • தொடங்கியவர்
கடவுளை எங்கு பார்த்தேன்?
 
 

article_1474864583-hjfhgj.jpgகுழந்தையின் மழலையினை அம்மாவினால் மட்டுமே மொழிப்பெயர்க்க முடியும். இது, இவர்களிடையேயான நெஞ்சங்களினூடாகப் புஷ்பிக்கும் புரிதலின் வெளிப்பாடாகும்.

தாயின் வாசனையை, குழந்தை புரிந்துகொள்கின்றது. அதன் ஒவ்வொரு சிணுங்களையும் இவளால் புரிந்துகொள்ள எப்படி முடிகின்றதோ? மழலையின் பசியை, தாகத்தை, எப்படி உணர்கின்றாள்?  

தாயின் மடியில் படுத்து, அறுதுயில் கொண்ட சுகானுபவத்தை, இனி எப்போது அனுபவிக்க முடியும்? அம்மா! இந்த உயிர் என்னுள் இருக்கும் வரை, கடவுளை எங்கு பார்த்தேன்? உன்னைத்தானே பார்த்தபடியே இருக்கின்றேன்...! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று 

செம்டெம்பர் - 26

 

1580 : இங்­கி­லாந்தை சேர்ந்த சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.

 

1687 : ஏதென்ஸ் நக­ரத்தை முற்­று­கை­யிட்ட ஒட்­டோமான் படை­யி­ன­ரிடம் இருந்து நகரைக் கைப்­பற்­று­வ­தற்கு வெனி­சியப் படை­யினர் குண்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யதில் ஏதென்ஸின் பார்த்­தினன் நகரம் பகு­தி­யாக அழிந்­தது.

 

1777 : பிரித்­தா­னியப் படைகள் பில­டெல்­பியா நகரை முற்­று­கை­யிட்டுக் கைப்­பற்­றினர்.

 

1918 : அமெ­ரிக்க வர­லாற்­றி­லேயே அதிக இரத்தம் சிந்­திய போரான மியூஸ்-­ஆர்கன் தாக்­குதல் பிரான்ஸில் ஆரம்­ப­மா­கி­யது.

 

815PrimeMinisterBandaranaike.jpg1934 : பிரிட்­டனின் ஆர்.எம்.எஸ் குயீன் மேரி நீரா­விக்­கப்பல் வெள்­ளோட்டம் விடப்­பட்­டது.

 

1950 : சியோல் நகரை வட கொரி­யா­வி­ட­மி­ருந்து ஐக்­கிய நாடுகள் படைகள் மீண்டும் கைப்­பற்­றின.

 

1950 : ஐ.நா.வில் இந்­தோ­னே­ஷியா  இணைந்­தது.

 

1954 : ஜப்­பானில் ஏற்பட்ட புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 1,172 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1959 : தல்­துவே சோம­ராம தேரர் எனும் பௌத்த பிக்­கு­வினால், செப்­டெம்பர் 25 ஆம் திகதி சுடப்­பட்ட இலங்கைப் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்க செப்­டெம்பர் 26 ஆம் திகதி உயி­ரி­ழந்தார்.

 

1959 : ஜப்­பானில் சூறா­வளி, மண்­சரிவு கார­ண­மாக 4,580 பேர் உயி­ரி­ழந்தனர்.

 

1960 : அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதி பத­விக்­காக போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் முத­லா­வது தொலைக்­காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்­ச­னுக்கும் ஜோன் எஃப். கென்­ன­டிக்கும் இடையில் இடம்­பெற்­றது.

 

1960 : கியூப அதிபர் பிடெல் காஸ்ட்ரோ, சோவியத் ஒன்­றி­யத்­துக்­கான தமது ஒத்­து­ழைப்பை அறி­வித்தார்.

 

1962 : யேமன் அரபுக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

 

1973 : அத்­தி­லாந்திக் மேலான தனது முத­லா­வது இடை­நி­றுத்தல் இல்­லாத பய­ணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்­டி­யது.

 

1983 : அணு­வா­யுதம் ஒன்று ஏவப்­பட்­டது என்ற தகவல் ஒரு கணினித் தவறு என்­பதை சோவியத் இரா­ணுவ அதி­காரி ஸ்டானி­சுலாவ் பெத்ரோவ் கண்­டு­ பிடித்ததன் மூலம், அமெ­ரிக்க, சோவியத்  அணு­வா­யுதப் போரொன்று இடம்­பெ­று­வதைத் தவிர்த்தார்.

 

1984 : ஹொங்­கொங்கை சீனா­விடம் கைய­ளிக்க ஐக்­கிய இராச்­சியம்  ஒப்புக் கொண்­டது.

 

1987 : தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திலீபன் இந்­திய அமைதிப் படை­யிடம் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து உண்­ணா­வி­ர­தமி­ருந்து உயிர்­து­றந்தார்.

 

1997 : இந்­தோ­னே­ஷிய விமா­ன­மொன்று இந்­தோ­னே­ஷி­யாவின் மெடான் அருகே விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 234 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : இத்­தா­லியில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் கார­ண­மாக, 13 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அசி­சியின் பிரான்சிஸ் தேவா­ல­யத்தின் ஒரு பகுதி சேத­ம­டைந்­தது.

 

2002 : செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்­பி­யாவில் மூழ்­கி­யதில் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.

 

2008 : சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த இவெஸ் ரோஸி என்­பவர், ஆங்­கிலக் கால்­வாயை ஜெட் இயந்­திரம் பூட்­டப்­பட்ட இறக்கை மூலம் கடந்த முத­லா­வது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

 

2009 : கெட்சானா சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸ், சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து முதலான நாடுகளில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர்.

 

2014: மெக்ஸிகோ கல்லூரி யொன் றைச் சேர்ந்த 43 மாணவர்கள் கூட்டாக கடத்தப்பட்டு காணாமல் போ யினர். 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஒரே சூலில் பிறந்த ஐவர் ஒரே உணவு விடுதியில் பணியாற்றுகின்றனர்
 

ஒரே சூலில் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகள் அமெரிக்காவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு விடுதியொன்றில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

 

19494brothres-and-sisters---Quintuplets-

 

18 வயதான இச்சகோதர சகோதரிகளில் லோகன், லுகாஸ், லேய்த் ஆகிய இளைஞர்களும் லொரின், லிண்ட்ஸே ஆகிய இரு யுவதிகளும் அடங்குகின்றர். 

 

மிச்சிகன் மாநிலத்தின் பொட்டர்விலே நகரிலுள்ள மெக்டொனால்ட்ஸ் கிளையொன்றின்  இவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

 

இவர்கள் உலகில் ஒரே சூலில் பிறந்த போதிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 

பல நாட்கள் தாம் சகோதர சகோதரிகள் என்பதை எந்தவொரு வாடிக்கையாளரும் உணராமல் இருந்துள்ளதாக இவர்கள் கூறுகின்னர்.

 

லெய்த் லோகன், லூகாஸ்  ஆகியோர் மேற்படி உணவு விடுதியின் சமையலறையிலும் பணியாற்றுகின்றனர்.

 

லொரின், இவ்விடுதியின் முன்புற கவுண்டரில் பணியாற்றுகிறார்.  லிண்ட்ஸே, லொபி பகுதியில் பணியாற்றுகிறார். 

 

லுர்காஸும் லொரினும் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த உணவு விடுதியில் இணைந்தனர். லெய்த் கடந்த மார்ச் மாதமும் லிண்ட்ஸே, லோகன் ஆகியோர் கடந்த மே மாதமும் இவ்விடுதியில் இணைந்தனர். 

 

சகோதர சகோரிகளான இவர்கள் ஐவரும் இந்த உணவு விடுதியில் இணைந்து பணியாற்றுகின்றமை வியாபார நடவடிக்கைக்கு உதவுவதாக இக்கிளையின் முகாமையாளர் ஜெனிபர் வோல்ட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இவர்கள் வேகமாக விடயங்களைக் கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மேற்படி கிளையின் சிறந்த ஊழியராக லூகாஸ் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14468778_1139124609469565_67237721206945

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷோன் வில்லியம்ஸின் பிறந்தநாள்.
Happy Birthday Sean Williams (cricketer)

 
  • தொடங்கியவர்

அது மகளிர்க்கு மட்டுமல்ல... ஆண்களின் கவனத்துக்கு! #world_contraception_day

 contra.jpg

 

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ம் தேதி, சர்வதேச கருத்தடை நாளாகக் கருதப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு கருத்தடைக்கு ஆதரவான பிரசாரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, 'கரு உருவான பின் கலைப்பதைவிட, கரு உருவாகாமல் இருக்கும் முறைகளைக் கையாள்வது  மனதளவிலும் உடலளவிலும் சிறந்தது' என்ற அறிவுரையை முன்வைக்கிறது.

கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றிச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீனாம்பாள்.

"கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன.  தற்காலிக முறைகளில் பல கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காண்டம்

காண்டம் எனப்படும் ஆணுறை மற்றும் பெண்ணுறை,  எளிய தற்காலிக கருத்தடை சாதனம். உடலுறவின்போது ஆணோ , பெண்ணோ இதை அணிந்துகொண்டால், விந்து
-சினைமுட்டை தொடர்பைத் தடுக்கலாம். இதனால் கருத்தரிப்பு தவிர்க்கப்படும். உறைகளுடன் சேர்த்து 'ஸ்பெர்மிசைட்' எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவதுண்டு. உடலில் எந்த வகையிலும் வினைபுரியாமல் உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கவல்ல ஒரே கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணுறையில் 18% மற்றும் பெண்ணுறையில் 21% தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு.

german%20clemen%20bikeone.jpg

 

கருத்தடை மாத்திரை

பெண்கள்,  சினைமுட்டை வெளிவராமல் தடுக்கக்கூடிய 'கான்ட்ராசெப்டிவ் டேப்லட்ஸ்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை மாதவிடாயின் இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.  மியூக்கஸ் சுரப்பை அடர்த்திபடுத்தியும் இது கருத்தடை செய்யும். தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், தினமும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட விதிமுறைகளை, மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தடை மாத்திரை 9% தோல்வியடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது கவனிக்க வேண்டியது.

avl51a.jpg

 

அவசரநிலை மாத்திரை

உடலுறவு முடிந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரை, (Emergency Contraception), கரு உருவாகும் வாய்ப்பை 58% தடுக்கவல்லது.

கருத்தடை பேட்ச்

'கான்ட்ராசெப்டிவ் பேட்ச்(patch)' என்று கூறப்படும் கருத்தடை பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு என்று பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், அது சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்கும்.  மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான
இடைவெளியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேட்ச், இந்தியாவில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லை.

9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள கருத்தடை சாதனம் இது.

கருத்தடை வளைவுகள்

'கான்ட்ராசெப்டிவ் ரிங்' எனப்படும் கருத்தடை வளைவை பெண்கள் மாதவிலக்கின் முதல்நாள் அன்று அணிந்துகொண்டால், அது வெளியிடும் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து கருத்தரித்தலைத் தவிர்க்கும்.

9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள இது, பெண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

கருத்தடை ஊசி

பெண்கள் பொதுவாக மூன்ற மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி, ப்ரொஜெஸ்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு,
பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.

6% தோல்வியடைய வாய்ப்புள்ள கருத்தடை ஊசி முறை, பெண்களுக்குப்
பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

நீண்டகால கருத்தடை

நீண்டகாலத்துக்கான கருத்தடை சாதனம், காப்பர் டி(Copper T). மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால்
உட்செலுத்தப்படும் இது, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. இதில் ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தி ஆக்கி
விந்துக்கள் முட்டையை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின்
இயக்கத்தைத் தடுக்கும். இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம்.

காப்பர் டி 1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ளது என்பதால், இந்தியப் பெண்கள் பரவலாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியாவதைத் தடுப்பதுடன், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து விந்து உட்செல்வதையும் தடுத்து கர்ப்பத்தைத் தவிர்க்கும். இதை ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், குறைந்தது மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள்வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம்.

1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ள இம்ப்ளான்ட் சாதனம், பெண்களின் உடல் செயல்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

நிரந்தர முறைகள்

குழந்தை வேண்டாம் என நிரந்தர முடிவெடுக்கும் பட்சத்தில், பெண்கள் கருமுட்டைக் குழாயை அடைக்கும் அல்லது அகற்றும் ட்யூபக்டமி(Tubectomy) அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். கருக்குழாய் அடைக்கப்படும் ட்யூபெக்டமியில் மீள்முறை உண்டு. அதாவது,  ஒருவேளை மீண்டும் குழந்தை பெற விரும்பினால், குழாயின் அடைப்புகள் நீக்கப்பட்டு கருத்தரிக்க வழி ஏற்படுத்தப்படும். அதுவே, கருக்குழாய் அகற்றப்பட்டிருந்தால், அதற்கு மீள் முறை இல்லை.

dr%20meenambal.jpg

ஆண்கள், விதைப்பையில் இருது விந்து எடுத்துச் செல்லப்படும் பாதையை அடைக்கும் வாசக்டமி(Vasectomy) கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ட்யூபக்டமியைவிட வாசக்டமி எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தடைக்கு இனி மனத்தடை வேண்டாம்!

vikatan

  • தொடங்கியவர்

14445985_1139120379469988_67724970010436

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராக விளங்கிய பாபநாசம் சிவன் அவர்களின் பிறந்த தினம்.
இவர் கர்நாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளைஇயற்றிய இசை அறிஞர் ஆவார்.

 
  • தொடங்கியவர்

இரும்பிலே ஓர் இருதயம்!

மருதன்

 

p24a.jpg

‘ஒரு பேய், கார் ஓட்டியதுபோல் இருந்தது!’ என வியக்கிறார் 25 வயது ஒலிவியா. ‘அதுவே திரும்புகிறது, நிற்கிறது, வேகத்தைக் கூட்டிக்கொள்கிறது, சின்னச் சின்னத் தடைகளைக்கூடக் கண்டுபிடித்து விடுகிறது. ஒரு பறவை குறுக்கே வந்தால், எச்சரிக்கையுடன் நகர்கிறது. நிச்சயம் நம்பிப் போகலாம்!’ சிங்கப்பூர் வீதிகளில் உருண்டோடத் தொடங்கியிருக்கும் தானியங்கி காரைப் பயன்படுத்திப்பார்த்துவிட்டு, பரவசத்தில் ஆழ்ந்திருப்பவர்களில் ஒருவர் ஒலிவியா.

உலகின் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தானியங்கி காரை அறிமுகப்படுத்தியிருப்பது, `நுடோனோமி' என்னும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம். சிங்கப்பூர் வீதிகளில், மொத்தம் ஆறு கார்கள் இப்போது இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. தேர்ந்தெடுத்த வழித்தடங்களில் மட்டுமே இவை இயக்கப்படும். பதிவுசெய்துவிட்டுக் காத்திருப்பவர்கள் மட்டுமே, இப்போதைக்கு சேவையைப் பயன்படுத்த முடியும்.

`கூடியவிரைவில் ஊபர் போல தெருக்குத் தெரு எங்கள் காரையும் பார்க்க முடியும்' என்கிறது மேற்படி நிறுவனம். ஏற்கெனவே கூகுள், வோல்வோ, டெஸ்லா போன்ற பெரும் நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதால், சிங்கப்பூரில் மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் ‘பேய் ஓட்டும் காரை’ இனி நாம் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை அறிவுத்திறனைப் பயன்படுத்தி இந்த அற்புதம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. `இது அற்புதம் அல்ல... சாபம்' என்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். `நம் கண் முன்னால் இயந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைக் காணாமல் ஆக்கிக்கொண்டிருக்கின்றன' என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆதாரம் இல்லாத அச்சம் என இவர்களை ஒதுக்கிவிடவும் முடியாது. என்ன செய்யலாம்?

p24b.jpg

மனிதர்களை ஆளும் இயந்திரங்கள்!

அமெரிக்காவின் முன்னணி சட்ட ஆலோசனை நிறுவனமான பேக்கர் ஹோஸ்டெட்லர், சமீபத்தில்தான் ஒரு ரோபோவை வழக்குரைஞராக நியமித்திருக்கிறது. ரோபோ வழக்குரைஞரின் பெயர் ராஸ். ஐ.பி.எம் உருவாக்கியிருக்கும் வாட்சன் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரோபோ இயங்குகிறது.

சரி, ராஸ் என்ன செய்யும்?

24 மணி நேரமும் விழித்து இருப்பதால் நீதிமன்றத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தீர்ப்பையும் பெற்றுப் படித்து, மனப்பாடம் செய்துவைக்கிறது. வழக்குரைஞர்கள் எப்படி வாதிடுகிறார்கள் என உன்னிப்பாகக் கவனித்து, அவர்களுடைய புத்திசாலித்தனமான வாதங்களை மட்டும் தொகுத்து, தனியே சேமித்துக்கொள்கிறது.

தேநீர் அருந்தியபடியே ராஸ் முன்னால் அமர்ந்து, ‘எனக்கு ஒரு கேஸ் வந்திருக்கிறது. அதை எப்படித் தீர்ப்பது?’ எனக் கேட்டால், உங்களிடம் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வழக்கின் மையம் என்ன, அதை இதற்கு முன்னர் யாரெல்லாம் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்கள், சட்டப் புத்தகத்தில் என்னென்ன பிரிவுகளில் இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன, நீதிமன்றங்கள் இந்த வழக்குக்கு எத்தகைய தீர்ப்புகளை இதுவரை அளித்திருக்கின்றன என எல்லாவற்றையும் நேர்த்தியாக எடுத்துவைக்கும்.

திவாலாகும் கம்பெனிகள் பற்றிய வழக்குகளை மட்டுமே, ராஸ் இப்போதைக்கு கவனித்துக் கொள்கிறது. விரைவில் முழுமையாக சிவில், கிரிமினல் வழக்குகளை அது எடுத்துக் கொள்ளக்கூடும். கோட்-சூட் அணிந்த மனித வழக்குரைஞர்களைக் காட்டிலும் ராஸ் வேகமாக இயங்குகிறது. சோர்வடைவது இல்லை; தவறுகள் செய்வது இல்லை; சம்பளம் வாங்கிக்கொள்வது இல்லை; விடுமுறை எடுத்துக்கொள்வது இல்லை. ‘மனித வழக்குரைஞர்கள், மிக அதிகக் கட்டணம் கேட்கிறார்கள். அதனால் எதிர்காலத்தில் அமெரிக்கர்கள் பலர், ராஸ் போன்ற ரோபோக்களை அதிகம் நாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள் இந்தத் துறையைக் கவனித்துவருபவர்கள்.

`விரிவான, சிக்கலான மற்றும் நுணுக்கமான துறைகளில் மனித மூளையைக் காட்டிலும் செயற்கை அறிவுத்திறனைக்கொண்டு பணியாற்றுவது எளிதாக இருக்கிறது' என்கிறார்கள் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். `வேகமான தீர்வுகளை மட்டும் அல்ல, வெற்றிகரமான தீர்வுகளையும் இயந்திரங்கள் அளிக்கின்றன' என்கிறார்கள் இவர்கள். மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் சர்ஜிக்கல் ரோபோக்களை இவர்கள் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டு கிறார்கள். இவர்களிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, நுட்பமான அறுவைசிகிச்சைகளை மனிதர்களைக் காட்டிலும் சர்ஜிக்கல் ரோபோக்கள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. `கத்தியை சாதுரியமாகவும் குறைவாகவும்  பயன்படுத்தி, அதிக ரத்த சேதம் இல்லாமல் கட்டிகளை அகற்ற, சர்ஜிக்கல் ரோபோவிடம் நோயாளிகளை ஒப்படைத்துவிடலாம்' என்கிறார்கள் இவர்கள்.

 மெஷின் லேர்னிங்!

செயற்கை அறிவுத்திறனை நம் வாழ்வில் மேலும் மேலும் நுழைப்பதற்கு ஏதுவாக, `மெஷின் லேர்னிங்' (Machine Learning) என்னும் துறை சிறுத்தைப் பாய்ச்சலில் முன்னேறிவருகிறது. கணிதம், தொழில்நுட்பம், கற்பனைத்திறன் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் துறை இது. சொல்லிக்கொடுத்ததைச் செய்யாமல் சுயமாக யோசித்து செயல்படுமாறு இயந்திரங்களைத் தூண்டிவிடுவதே இந்தத் துறையின் சவால். `அங்கே போ', `காபி கொண்டுவா', `இதை எடுத்து மேலே வை' என்றெல்லாம் உத்தரவிடாமலேயே, உங்கள் நண்பர் அறைக்குள் நுழையும்போது சமயோசிதமாக நகர்ந்துபோகும் ரோபோவை, `தலை வலிப்பதுபோல் இருக்கே' என நீங்கள் நினைக்கும்போதே கையில் காபியோடு நிற்கும் ரோபோவை (மிதமான சூடு, குறைவான சர்க்கரை என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தயாரிக்கும் திறனுடன்), புதுப் புத்தகங்கள் வாங்கி வந்தால் அவற்றை வரிசையாக அலமாரியில் துறைவாரியாகப் பிரித்து அடுக்கிவைக்கும் ரோபோவை உருவாக்க, இவர்கள் முயன்றுவருகிறார்கள். ஏற்கெனவே இதில் பெரும் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

p24c.jpg

சில உதாரணங்கள். கூகுளின் புதிய தேடல் கருவி, ரேங்க் பிரெயின், நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்று அல்ல, என்ன தேட நினைக்கிறீர்கள் என்பதை யூகித்து விடைகளை அளிக்கவல்லது. சிரி, கூகுள் நவ், கோர்டானா ஆகியவை செயற்கை அறிவுத்திறன் படைத்த மொபைல் தொழில் நுட்பங்கள். அருகில் சீன உணவகம் எங்கே இருக்கிறது, இன்று நான் எங்கெங்கு போகவேண்டும் போன்ற கேள்விகளைக் கேட்டால், உங்கள் குரலைப் புரிந்துகொண்டு மொபைலில் உள்ள மற்ற ஆப்ஸ்களை முடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் தேடித் திரிந்து நீங்கள் கேட்டதைப் பிடித்துவந்து கொடுக்கும். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற ஆடைகளை, புத்தகங்களை, ஆல்பங்களை இணையத்தில் இருந்து அள்ளி எடுத்துவந்து உங்கள் திரையில் அவ்வப்போது காட்சிப்படுத்தும். அமேஸான், டார்கெட் போன்றவை இதில் கொடிகட்டிப் பறக்கின்றன. இப்போது உங்களுக்கு என்ன தேவை, அடுத்த வாரம் என்ன தேவைப்படும், இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து என்ன வாங்குவீர்கள் என்பதை உங்களைவிட இந்த ஆன்லைன் நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன.

செயற்கை அறிவுத்திறன், மெஷின் லேர்னிங், டேட்டா மைனிங் பற்றி எல்லாம் நீங்கள் சிரமப்பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை. அவை அனைத்தும் உங்களையும் உங்கள் தேவைகளையும் ஏற்கெனவே நன்கு தெரிந்துவைத்திருக்கின்றன. அரசாங்கங்கள், வங்கிகள், இணையதளங்கள், மருத்துவத் துறை, விளம்பர நிறுவனங்கள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், போக்குவரத்துத் துறை என உலகம் முழுவதிலும் பல துறைகளில் செய்கை அறிவுத்திறன் சார்ந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

அது பிடித்தால் இதோ இதுவும் பிடிக்கும், அதை வாங்குவதாக இருந்தால் இதையும் வாங்குங்கள். `போன வாரம் வாங்கியது பழசாகி இருக்குமே, இன்னொன்று பார்சல் செய்யவா?' என்று எல்லாம் இணையத்தில் உங்களுக்குத் தூண்டில் போடுவது மேற்படி தொழில் நுட்பம்தான்.

`ஸ்மார்ட் ஹோம் டிவைசஸ்' எனப்படும் புத்திசாலிக் கருவிகள், உங்கள் வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் கவனித்துக்கொள்ளும் திறன் பெற்றவை. நீங்கள் சமையலறையைவிட்டு வெளியே செல்லும்போதே மைக்ரோவேவ் அவனை அது அணைத்துவிடும். நீங்கள் படுக்கை அறைக்குள் நுழையும் போது மட்டுமே குளிர்சாதனத்தை இயக்கும். நீங்கள் டி.வி பார்க்கும்போது விளக்கு மங்கலாகும், படிக்கும்போது பிரகாசமாகும், படுக்கும்போது இருண்டுவிடும். வீட்டு வாசலில் வந்து நின்றால் தானியங்கி கார் பவ்யமாக ஊர்ந்து வந்து நின்று கதவைத் திறந்து வரவேற்கும்.

வரமா... சாபமா?

இயந்திரங்களும் தொழில் நுட்பங்களும் பழகிப்போகலாம். ஆனால், செயற்கை அறிவுத்திறன் என்பது அதற்கும் மேல் அல்லவா? இயற்கை அறிவா... செயற்கை அறிவா என்னும் மோதல், மனிதனின் ஆதார இருப்பையே கேள்விக்கு உட்படுத்துகிறது அல்லவா? நமக்கு ஒத்துழைத்து, நம் வேலைப்பளுவைக் குறைக்கும் இயந்திரங்களை அரவணைத்துக்கொள்வதில் தவறு இல்லை. `நீ ஒதுங்கு, நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றோர் இயந்திரம் சொல்லுமானால், அதை எதற்காக நான் ஏற்க வேண்டும்? செயற்கை அறிவுத்திறனை வளரவிட்டால், நாளை மனித இனமே அழிந்துவிடாதா?
`அழியாது' என்கிறார் மைக்ரோசாஃப்ட் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த கிரிஸ் பிஷப். ‘செயற்கை அறிவுத்திறன் மனிதர்களின் மூளைத்திறனைத் தோற்கடித்துவிடாது. ஒரு கார் ஓட்டுவதால், சில அறுவைசிகிச்சைகள் செய்வதால் நாம் செய்யும் எல்லாவற்றையும் இனி இயந்திரங்களே செய்துவிடும் என  அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது’ என்கிறார் இவர்.

`மிதமிஞ்சிய அச்சம், ஏகோபித்த வரவேற்பு. இரண்டும் உதவப்போவது இல்லை. மாறாக, எச்சரிக்கை உணர்வுடன் சில கேள்விகளை எழுப்புவது பலனளிக்கும்' என்கிறார் பிஷப். ‘செயற்கை அறிவுத்திறன் செயல்படுவதற்கு அடிப்படை தேவை, டேட்டா. இது எங்கு இருந்து வருகிறது? இதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? இது எப்படிப் பயன்படுத்தப்படும்?’ இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், அதை வைத்து குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பம் யாருக்கு பலனளிக்கும், யாரை பாதிக்கும் என்பதைக் கண்டறிய முடியும்.

இயந்திரம் அல்லது ரோபோ அல்லது செயற்கை அறிவுத்திறன் பற்றிய பிரச்னை அல்ல இது. இதை எல்லாம் உருவாக்கும், நிர்வகிக்கும், பயன்படுத்தும் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதுதான் பிரச்னையின் மையம். இதைத் துல்லியமாக உணர்ந்துகொள்ள, ஓர் உதாரணம்.

சென்ற வாரம், யூத் லேபாரட்டரீஸ் என்னும் நிறுவனம், ஆன்லைன் அழகிப் போட்டி ஒன்றை நடத்தியது. லட்சக்கணக்கில் குவிந்த புகைப்படங்களில் இருந்து 44 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் 36 பேர் வெள்ளை நிறத்தவர். இந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தது யார் தெரியுமா? ஒரு ரோபோ! கறுப்பு அல்ல வெள்ளையே அழகு என இந்த ரோபோவுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? சந்தேகமே இல்லாமல் ஒரு மனிதன்தான். டாட்!

vikatan

  • தொடங்கியவர்

நோட் பண்ணிக்கங்கப்பா!

 

p110.jpg

லகப் புகழ்பெற்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், புதிதாக கேல்க்சி நோட்7 என்ற மாடலை வெளியிட்டது. அமெரிக்காவுக்கும் இந்த நிறுவனத்துக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. இந்த மாடல் போன்கள் சார்ஜ் போடும்போது பேட்டரி விரைவில் சூடாவதாகவும், தீப்பிடித்து எரிவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நுகர்வோர் பொருள் பாதுகாப்புக் குழுமம் (Consumer Product Safety Commission) இந்த விவகாரத்தை விசாரித்தது. இதுவரை விற்பனையான பத்து லட்சம் மொபைல்களையும் திரும்பப்பெற அந்நிறுவனம் முன்வந்தது.

p110a.jpg

டெக்கிகள் எல்லாம் இந்த விஷயத்தை வெகு சீரியஸாக விவாதித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், மீம் கிரியேட்டர்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினுசு தினுசாய் மீம்களை இறக்கி இணையத்தில் வைரலாக்கினர். மொத்தத்தில் இணையத்துலயும் இந்த போன் பிரச்னை பற்றி எரிஞ்சுது. சாம்பிளுக்குச் சில...

vikatan

  • தொடங்கியவர்

நிரந்தர வேளாண்மையின் தந்தை பில் மோலிசன் மறைவு! #BillMollison

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%

'பெர்மாகல்ச்சர்' எனப்படும் நிரந்தர வேளாண்மை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் மோலிசன். ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் 1928-ல் பிறந்த இவர், 42 வயதுக்கு பிறகு மேற்கொண்ட பயணத்தில், பழங்குடி மக்களிடமிருந்து ஒருவகையான விவசாய முறையை கண்டறிகிறார். சமவெளி பகுதியில் உள்ள மக்கள், இயந்திரங்களைக் கொண்டு கடுமையாக உழைத்து விளைச்சலை எடுக்கின்றனர். ஆனால், மலைப்பகுதியில் குறைந்த இடத்தில் தேவைக்கேற்ற விளைச்சலை எடுக்கின்றனர். உழைப்பையும் மிச்சப்படுத்துகின்றனர். இரண்டையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் பில் மோலிசன், ஒவ்வொருவரும் தமது தேவைக்கும் மட்டுமே விளைவித்துக் கொள்ளும் 'பெர்மாகல்ச்சர்' என்னும் நிரந்தர வேளாண் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்.

இதோடு பெர்மாகல்ச்சர் குறித்து 'பெர்மாகல்ச்சர் ஏ டிசைனர்ஸ் மேனுயூல்' (Permaculture A Designer's Manual) என்ற விரிவான புத்தகம் ஒன்றையும் தன் நண்பரோடு சேர்ந்து வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளோடு, பெர்மாகல்ச்சர் தொழில்நுட்பம், பண்ணை வடிவமைப்பு, அதன்மூலம் நிரந்தர வேளாண்மைக்கான தீர்வு ஆகியவற்றையும் முன்வைக்கிறார். இதோடு இந்த புத்தகம் மூன்று முக்கியமான கோட்பாடுகளை முன்வைக்கிறது.

88cf30cf10bc372cb76495ebe094f6d5.jpg

 'வாழ்க்கை என்பது போட்டிகளால் ஆனது கிடையாது. அது கூட்டுறவினால் ஆனது', 'நமக்கு கிடைக்கும் பஞ்சபூத சக்தியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றி அமைகிறது','மனிதனின் உழைப்பைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது' ஆகியவையே அந்தக் கோட்பாடுகள். 1981-ல் நோபல் பரிசுக்கு மாற்று என்று சொல்லப்படும் 'வாழ்வாதாரத்துக்கான உரிமை விருதை' பில் மோலிசன் பெற்றுள்ளார்.. பெர்மகல்ச்சர் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றும் ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் இவரைப் பற்றியும், இவரது பெர்மாகல்ச்சர் முறை குறித்தும் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

 

கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 24-ம் தேதி டாஸ்மானியாவில் இயற்கையோடு ஒன்றிணைந்தார், பில் மோலிசன். இவருக்கு வயது 89.

vikatan

  • தொடங்கியவர்

14425569_1139122739469752_33909969594563

இங்கிலாந்தின் தற்போதைய நம்பகமான, அதிரடித் துடுப்பாடும் விக்கெட் காக்கும் வீரர் ஜொனி பெயார்ஸ்டொவின் பிறந்தநாள்.
Happy Birthday Jonny Bairstow

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.