Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12299354_769811276456853_827820275371678

இவங்க கூட குடும்பம் நடுத்துர புண்ணிவான் தான் நாட்டிலயே சகிப்பு தன்மை அதிகம் உள்ள மனுசன் :grin:<_<

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
3 hours ago, நவீனன் said:
ஆரம்பக் காலத்தில் வினோதமாக காணப்பட்ட மருத்துவ முறையின் அரிய புகைப்படங்கள்!!!
10-1436503691-16creepyvintagemedicalphot
வால்டர் ரீட் பிசியோதெரபி வால்டர் ரீட் பிசியோதெரபி சிகிச்சை முறையின் ஆரம்பகால கருவியின் புகைப்படம்.
 

இந்த கருவியைப் பாக்க கீழேயுள்ள சீன் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை.

 

  • தொடங்கியவர்

12301645_1851995191693549_17192365649987

ஜெ., ஸ்டிக்கர் விவகாரம்: அமுல் நிறுவனத்தின் தெறி கலாய்!

அமுல் நிறுவனம் சமூக அக்கறையும், சமூக அவலங்களை கிண்டலடித்தும் விளம்பரம் செய்வதில் கில்லாடி. கடந்த மாதம் அமீர்கான் சர்ச்சை குறித்து விளம்பரம் வெளியிட்டது. தற்போது சென்னை மழைக்கு நிவாரணம் வழங்கும்போது ஆளுங்கட்சியினர் 'அம்மா' போஸ்டர் ஒட்டி, மலிவான விளம்பரம் தேடியதை கலாய்த்து இருக்கிறது.

  • தொடங்கியவர்

பியர் க்ரில்ஸ் vs ராதா மணாளன்

 
  • cucle_2645219g.jpg
     
  • cucle1_2645218g.jpg
     

‘இனி உங்க வீட்டுக்கு முன்னாடியே படகையும் பார்க் பண்ணிக்கலாம்' என்று எந்த டி.வி.சேனலிலாவது ரியல் எஸ்டேட் பார்ட்டிகள் கூவி விடுவார்களோ என்று 'ஷாக்' ஆகிற அளவுக்கு சென்னையை அடித்துத் துவைக்கிறது மழை.

இந்த ரணகளத்திலும், ரமணம் மீம்ஸ், ரெய்ன் ஹேஷ்டேக்ஸ் என‌ 'கிச்சு கிச்சு' மூட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் நம்ம ஊர் நெட்டிசன்கள். (அடேய்... செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பக் கூட விஞ்ஞானிகள் உங்க அளவுக்கு யோசிச்சிருக்க மாட்டாங்கடா!)

தமிழகத்தில் பெய்த மழை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கைத் தாண்டி இப்போது யூட்யூப்பையும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் அதிர்ச்சியைக் காட்டும் பின்னணிக் குரல், கலகலப்பான மொழிமாற்றம், அசாத்தியமான பயணங்கள் என்று கலக்கிய டிஸ்கவரி தமிழின் 'மேன் vs வைல்ட்' நிகழ்ச்சியை உல்டா செய்து, பெப்பர் தூவி, 'மேன் vs ரெய்ன்' ஆக்கப்பட்டுள்ளது.

4 நிமிடம் ஓடுகிற அந்த வீடியோ, யூட்யூப்பில் பதிவேற்றப்பட்ட 3 நாட்களில் 45 ஆயிரம் பார்த்துள்ளனர். இப்போது ஒரு லட்சம் லைக்குகளை நோக்கி பயணிக்கிறது 'மேன் vs ரெயின்'.

'சென்னையில இன்னைக்கு நம்ம பயணம், வேளச்சேரியில' என்று சொல்லிக்கொண்டே முழங்கால் அளவுக்கு பேன்ட்டை மடக்கி விட்டுக்கொண்டு சாலையில் தேங்கிய நீருக்குள் ‘தொபுக்'கென்று குதிக்கும் ராதா மனாளன், போகிற போக்கில் பேசுகிற வசனங்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன.

‘சென்னையின் மிக ஆபத்தான நீர்நிலைகள்’, ‘பாம்பு, பூரான் போன்ற ஜீவராசிகள்’, ‘எனக்கு இப்போ சக்தி தேவைப்படுது’ என்று பியர் கிரில்ஸ் பேசிய வசனங்களை அச்சு அசலாகப் பேசி அசலுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் ராதா மணாளன். இதற்கு முன்பு ராண்டி என்ற பெயரில் ரேடியோ ஜாக்கியாக அறியப்பட்ட அவர், இந்த வீடியோவுக்காக டி.ஆர். ஸ்டைலில் எழுத்து, இயக்கம், நடிப்பு என பெரும்பாலான வேலையை தானே செய்திருக்கிறார்.

‘ரமணன் சொன்னா ஸ்கூலுக்குத்தான் லீவு விடுவாங்க. ஆஃபீஸுக்கு விட மாட்டாங்க. ஆஃபீஸ் போனா தான், இஎம்ஐ, கிரெடிட் கார்டு எல்லாம் கட்ட முடியும். வாங்க நாம ஆபீஸ் போகலாம்’ என்று அவர் அழைக்கும் போது சிரித்து மாள முடியவில்லை.

ஒரு டாஸ்மாக் மது பாட்டிலை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ‘இங்கே மனித நடமாட்டம் இருக்குது. எனக்கு உணவு கிடைக்கும்னு நம்பிக்கை வந்துருக்கு’ என்று அவர் சொல்லும் போது பாவி மக்கா ‘எப்புடியா சிரிக்காமலேயே இப்புடிப் பேசுற' என்றே தோன்றும்.

‘நாம் இப்போ நிக்குற ஏரி, வேளச்சேரி’ என்று அங்கங்கே சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டி, ‘ஆங்ரி' ஸ்மைலி போடுகிறார். ‘சென்னை வாசிகள் கார் வாங்குவதற்குப் பதிலாக ஒரு படகு வாங்கி வச்சுக்கங்க' என்று அடுத்த மழையிலிருந்து தப்பிக்க யோசனை கூறும் அவரிடம் பேசினோம்.

மழையின் காரணத்தால் கடந்த வாரம் ஏற்பட்ட ட்ராபிக் ஜாம் ஒன்றின் போது தோன்றிய கன நேர ஐடியா தான் ‘மேன் vs ரெயின்' வீடியோவாக உருவெடுத்திருக்கிறதாம். ‘சமூகத்துக்குச் சிரிக்க சிரிக்க கருத்து சொல்லனும் பாஸ்' என்று புறப்பட்டிருக்கும் ராதா மணாளன் கூறும்போது, "இதுக்கு முன்னாடியே யூட்யூப்ல 2 வீடியோ 'அப்லோட்' செஞ்சோம். ஆனா, யாரும் அத பெருசா சீண்டல. ஆனால், இந்த ‘மேன் vs ரெயினு'க்கு நல்ல வரவேற்பு இருக்கு. இப்போ, கூடுதலா 2 வீடியோ தயாரா இருக்குது. சீக்கிறமே அதயும் யூட்யூப்ல பாருங்க' என்கிறார்.

 

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

டிசம்பர் - 09

 

620varalaru-9-12-2014.jpg1793 : நியூயோர்க் நகரின் முத­லா­வது நாளிதழ் "தி அமெ­ரிக்கன் மினேர்வா" வெளி­யி­டப்­பட்­டது.

 

1856 : ஈரா­னிய நகரம் புஷேஹர் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்புப் படை­க­ளிடம் வீழ்ந்­தது.

 

1905 : பிரான்ஸில் அர­சையும் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும் பிரிக்கும் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

1917 : பலஸ்­தீ­னத்தின் ஜெரு­சலேம் நகரை  பிரித்­தா­னியர்  கைப்­பற்­றினர்.

 

1922 : போலந்தின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக  கப்­ரியேல் நருட்­டோவிச் தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1937 : ஜப்­பா­னியப் படைகள் சீன நக­ரான நான்­ஜிங்கைத் தாக்­கின.

 

1940 : இரண்டாம் உலகப் போரில் பிரித்­தா­னிய, மற்றும் இந்­தியப் படைகள் இத்­தா­லியப் படை­யி­னரை எகிப்தில் தாக்­கின.

 

1941 : சீனக் குடி­ய­ரசு, கியூபா, குவாத்­த­மாலா, பிலிப்பைன்ஸ் ஆகி­யன ஜேர்­மனி மற்றும் ஜப்­பா­னுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தன.

 

1946 : இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சபை ராஜேந்­திர பிரசாத் தலை­மையில் அமைக்­கப்­பட்­டது.

 

1953 : அமெ­ரிக்­காவின் ஜெனரல் எலெக்ட்றிக் நிறு­வனம் தனது நிறு­வ­னத்தில் பணி­யாற்­றிய கம்­யூ­னிஸ்ட்கள் அனை­வ­ரையும் பணி­நீக்கம் செய்­தது.

 

1956 : கன­டாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 62 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1971 : ஐ.நாவில் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் இணைந்­தது.

 

620varalru2.jpg1979 : பெரி­யம்மை நோய் முற்­றாக அழிக்­கப்­பட்டு விட்­ட­தாக உலக சுகா­தார அமைப்பு அறி­வித்­தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்­றாக அழிக்­கப்­பட்­டது இதுவே முத­லா­வ­தாகும்.

 

1986 : தமி­ழ­கத்தில் இந்­தியைத் திணிக்கும் அர­சியல் சட்ட நகலை எரித்­த­தற்­காக தி.மு.க. தலைவர் மு. கரு­ணா­நிதி உள்­ளிட்ட 10 தி.மு.க. சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்கள் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டனர்.

 

1987 :  காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்டிஃபாடா கிளர்ச்சி ஆரம்பம்.

 

1990 : லெக் வலேசா போலந்தின் முத­லா­வது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அதி­ப­ரானார்.

 

1992 : பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் சார்ள்ஸ், இள­வ­ரசி டயானா இரு­வரும் திரு­மண வாழ்­வி­லி­ருந்து பிரிந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

 

2003 : மொஸ்கோ நகர மத்­தியில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 6 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2006 : மொஸ்­கோவின் மருத்­து­வ­மனை ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் சிக்கி 45 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2008 : அமெ­ரிக்­காவின் இலினோய்ஸ்  மாநில ஆளுநர் ரொட் பிளா­கோ­ஜேவிக், செனட் சபை ஆச­னத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

 

2013 : இந்­தோ­னே­ஷி­யாவில் எரி­பொருள் தாங்­கி­யொன்­றுடன் ரயி­லொன்று மோதி­யதால் 7 பேர் பலி­யா­ன­துடன் 63 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=620#sthash.LZdyV69Q.dpuf
  • தொடங்கியவர்

வைரலாகும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மகள் படம்!

 

25 லட்சம் லைக்குகளையும் தாண்டி ஃபேஸ்புக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், புதிதாக பிறந்த தனது மகளுடன் எடுத்து பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று.

max%20600.jpg

அமெரிக்காவின்  சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்களல் போட்டி மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை கருத்தில்கொண்டு அதனை எடுப்பதில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்திலும் இத்தகைய விடுப்புச் சலுகை உள்ளபோதிலும், அதனை யாரும் பயன்படுத்தாத நிலையில் அதன் நிறுவனரான மார்க் சக்கர் பெர்க்கே, கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பதால்,  "நல்ல அப்பாவா நான் இரண்டு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்” என்று ஸ்டேடஸ் போட்டுவிட்டு விடுமுறையில் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் புதிதாய் பிறந்த தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். "மனம் கொள்ளா மகிழ்ச்சியில் லிட்டில் மேக்ஸ் உடன்" என்ற கேப்சனுடன் அவர் பதிவிட்ட அந்த புகைப்படம், லைக்ஸ்களை குவித்து வருகிறது.  இதுவரை 25 லட்சத்திற்கும் மேல் தாண்டி லைக்ஸ் போடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
ஜப்பான் "மிராமா" மற்சுரி விளக்குக்கூடு விழா

 

kesari3110815.jpg

 

 



ஜூலை மாதத்தில் நடைபெறும் மிராமா மற்சுரி அல்லது விளக்குக்கூடு விழாவின் மூலம் பெயர் பெற்றது ஜப்பானின் யசுகுனி ஆலயமாகும்.

இவ்வ ருடம் இவ்விழா ஜூலை 13 இல்  இருந்து ஜூலை 16 வரை  நடைபெற்றது.

இவ்வருடாந்த விழாவில் ஜப்பானியர் போரில் மரமடைந்த தமது போர் வீரர்களி்ன் ஆத்மா சாந்திக்காக, இவ்வாலயத்திற்கான வழிகளில் சுமார் மூன்று இலட்சம் விளக்குக் கூடுகளை  ஏற்றி மரியாதை செய்கிறார்கள்.

kesari01110815.jpg

இவ்விழாவின் போது ஆலயம் மிக அழகாகக் காட்சி தருகிறது.

பெருந்தொகையான மக்கள் இவ்விழாவில் பங்குகொள்கிறார்கள்.

ஆலயத்தின்  உள்ளே ஓவியக் கண்காட்சிகள் மற்றும் கலையரங்குகள்  ஆகியன இடம்பெறுகின்றன.
 

  • தொடங்கியவர்

ஆணுறை சவால்

 

தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்)  என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக  பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது

ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் இந்த ஆணுறை சவால். இந்த கொடுமையான சவால் ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

2pu06dt.jpg

ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வைத்துள்ளனர். 

இந்த சவால் ஏன் நடத்தப்படுகின்றது என இன்னும் அறியப்படவில்லை.

 

 

இருந்தபோதிலும் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனினும் இந்த சவாலை பலர் ஆவர்வமாக செய்து வருகின்றனர்.

உயிரை பரிக்கும் இந்த விபரீத விளையாட்டு தேவை தானா..?

http://www.virakesari.lk/article/875

  • தொடங்கியவர்
"பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்?''

"தெரியுமே... ஏன் கேட்கறீங்க?''

"இல்லை... பார்வை நேரம் மாலை 6 மணி முதல் எட்டு மணி வரைன்னு போர்ட் வச்சிருக்கீங்களே... அதான் கேட்டேன்''

******

(நகைக்கடன் தரும் வங்கியில்)
 
"சார் நகைக்கு லோன் வேணும். கிடைக்குமா சார்?''
"எவ்வளவு வேணும் உங்களுக்கு?''
"பொண்ணு கல்யாணத்துக்கு 10 பவுன் வாங்கணும். அதுக்கு எவ்வளவு தேவையோ அதைக் குடுங்க சார்''

****** 

"நம்ம வீட்டு ரகசியம் வெளியில் தெரிஞ்சிடக் கூடாதுடி''
"அப்புறம் ஏங்க நான் அடிச்சா நாலு தெருவுக்குக் கேக்கிற மாதிரி கத்தி மானத்தை வாங்குறீங்க?''

******

"டேய் நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறேன். கண்டிப்பா நீ வரணும்''
"உனக்கொரு கஷ்டம்னா நான் வராமல் இருப்பேனா? கண்டிப்பா வர்றேன்''

******

அதிகாரி: உங்க கடைசி ஆசை என்ன? சொல்லுங்க... நிறைவேற்றி வைக்கிறோம்.
தூக்குத்தண்டனை கைதி: அதெல்லாம் உங்களால முடியாது சார்... டிவியில ஒரு நல்ல நாடகம் பார்த்துட்டு சாகணும்.

******

"சினிமா தியேட்டர்ல ஏன் இஞ்சி மிட்டாய் தர்றாங்க?''
"கதையை ஜீரணிக்கத்தான் ''

******


"என்னப்பா சர்வர், வடை கறுப்பா இருக்கு?''
"இதுதான் சார் வடை கரி''

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

டிசம்பர் - 10

 

621nobel-peace-prize-medal.jpg1041 : பைசண்டைன் பேர­ரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் கிழக்கு ரோம இராச்­சி­யத்தின் பேர­ர­ச­னாக்­கினாள்.

 

1541 : இங்­கி­லாந்தின் மன்னன் எட்டாம் ஹென்­றியின் மனை­வியும் அர­சி­யு­மான கத்­த­ரீ­னுடன் தகாத உறவு வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தோமஸ் கல்­பெப்பர்ம், பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

1684 : ஐசக் நியூட்டன் தனது புவி­யீர்ப்பு விதி­களின் கொள்­கை­களில் எழு­திய கெப்­லரின் விதி­களின் தீர்­வுகள் ரோயல் சபையில் வாசிக்­கப்­பட்­டன.

 

1868 : உலகின் முத­லா­வது சமிக்ஞை விளக்­குகள் லண்­டனில் நாடா­ளு­மன்­றுக்கு வெளியே நிறு­வப்­பட்­டன.

 

1898 : ஸ்பெயின், அமெ­ரிக்கா போர் நிறுத்த உடன்­பாடு பாரிஸில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

1901 : முதல் தட­வை­யாக நோபல்  பரிசு வழங்­கப்­பட்­டது.

 

1902 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழக்­கப்­பட்­டது.

 

1906 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி தியோடோர் ரூஸ்வெல்ட் சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெ­ரிக்கர் பெற்ற முத­லா­வது நோபல் பரி­சாகும்.

 

1936 : இங்­கி­லாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்­ப­தாக அறி­வித்தார்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் மலா­யா­வுக்குக் அருகில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் இரண்டு கடற்­படைக் கப்­பல்கள் ஜப்­பா­னி­யர்­களால் மூழ்­க­டிக்­கப்­பட்­டன.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் ஜப்­பா­னியப் படைகள் பிலிப்­பைன்ஸை அடைந்­தன.

 

1948 : மனித உரி­மைகள் குறித்த அனைத்­து­லகப் பிர­க­ட­னத்தை ஐ.நா. பொதுச் சபை அறி­வித்­தது. இந்நாள் உலக மனித உரி­மைகள் நாளாக அறி­விக்­கப்­பட்­டது.

 

1963: பிரிட்­ட­னி­ட­மி­ருந்து ஸான்­ஸிபார் சுதந்­திரம் பெற்­றது. 

 

1968: ஜப்­பானின் டோக்­கியோ நகரில் வங்­கி­யொன்றின் வாக­ன­மொன்­றி­லி­ருந்து 30 கோடி யென் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. ஜப்­பானில் இடம்­பெற்ற மிகப்
­பெ­ரிய கொள்ளைச் சம்­பவம் இது­வாகும்.

 

1978: எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத், இஸ்­ரே­லிய பிர­தமர் மெனாசெம் பெகின் ஆகி­யோ­ருக்கு நோபல் சமா­தானப் பரிசு வழங்­கப்­பட்­டது. 

 

1981 : தெற்­கா­சி­யாவை அணு­வா­யு­த­மற்ற பகு­தி­யாக அறி­விக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்­கையை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக் கொண்­டது.

 

1984 : தென் ஆபிரிக்க கறுப்பின பேராயர் டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

 

1989 : மொங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=621#sthash.qDw8egx3.dpuf
  • தொடங்கியவர்

சோக சம்பவத்தில் பதிவான கோமாளித்தனமான சம்பவங்கள்..!

chennai-flood-2.png

இயற்கையின் கோரப்பிடிக்குள் சிக்கிய சிங்கார சென்னை, வெள்ள நீரில் மூழ்கி சிதைந்து போனது. பல இலட்ச உயிர்கள் நீரில் தத்தளித்தன. சுமார் 272 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறு தமிழகத்தையே ஆட்டிப் படைத்த கொடுர மழையில் சிக்கிய மக்களின் சோகச் சுவடுகளை மறைப்பதற்கு இந்திய அரசு முழுவீமூச்சுடன் செயற்பட்டு கொண்டிருகின்றது. பல வழிகளில் நிவாரணங்களும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.

 

இந்த அடை மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. அதில் எப்போதும் இல்லாத அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

 

 

 

 ஆற்றோரங்களிருந்த குடிசைகள் மட்டுமல்ல நகரின் மையப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. 

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 10 இலட்சம் வீடுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசித்த சுமார் 40 இலட்சம் பேர் அரசு ஏற்பாடு செய்த பள்ளி, கல்லூரிகள், மாநகராட்சி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. படுகாயமடைந்த பல்லாயிரம் கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. 

 

இத்தகைய சோக சம்பவத்தில் சில கோமாளித்தனமான சம்பவங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

குடிமகன்கள்

 

அதாவது சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. பல இலட்ச மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உடுத்த உடைகள் இல்லாமல், வீடுகளை இழந்து எங்கே போய் தங்குவது என செய்வதறியாது சோகத்தில் மூழ்கியிருந்தனர்.

 

இவ்வாறு மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவித்த நேரத்திலும் கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் மதுபான சாலையின் உரிமையாளர்கள் மதுபானசாலைகளை திறந்து வைத்திருந்துள்ளனர். சில குடிமகன்கள் மதுபானசாலையை நாடி நீந்திச் குடித்து போதையாகியுள்ளனர்.

 

மக்களை மீட்க வாகனம் வரமுடியாத நிலையில் மதுபானசாலைகளுக்கு மாத்திரம் எவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு வரப்படுகின்றது? இவ்வாறான ஒரு நேரத்தில் இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளே மிஞ்சின. பதில் மனிதாபிமானம் இல்லாத அவர்களிடத்தில்..?

 

ஊடகம்

 

தமிழகத்தை தண்ணீரால் தரைமட்டமாக்கிய அடை மழையின் உண்மைத் தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருந்தன.

 

சில ஊடகவியலாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தன்னுயிரை துச்சமாக நினைத்து அங்கு நடக்கும் களநிலவரங்களை உடனுக்குடன் கொட்டும் மழையில் வெள்ள நீருக்குள் நின்று கொண்டு தந்தனர். 

 

இது இவ்வாறு இருக்கையில், இந்தியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகம் கோமாளித்தனமாக செய்திகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

 

அதாவது, குறித்த ஊடகத்தில் வெளியான செய்தி பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அல்லாது பார்ப்பவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

குறித்த ஊடகத்தில் செய்தி வாசிப்பவர் சம்பவ இடத்திற்கு செல்லாமல் தொழினுட்பத்தை பயன்படுத்தி அவர் வெள்ள நீருக்குள் நிற்பது போன்று காட்சியை ஏற்படுத்தி, 'தான் தற்போது வெள்ளநீரில் நிற்பதாகவும் அதன் நிலைமையை நீங்களே கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கும் எனவும் செய்தியை அறிக்கையிட்டுள்ளார்.

 

இதை பார்க்கும் போதும் உண்மையில் அவர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என்பது தெளிவாக உள்ளது. எனினும் குறித்த ஊடகத்தின் செயற்பாடு ஏனைய ஊடகங்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

 

இந்த தொழினுட்பம் ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தலாம். எனினும் இவ்வாறான சோகச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்பதே அனைவரினதும் கருத்தாகும்.

 

ரவுடிகளின் அராஜகம்

 

சுமார் 40 இலட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலைகளிலும் தங்கியுள்ளனர். இம் மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நல் உள்ளம் படைத்தவர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை சில ரவுடிகள் தடுத்து நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் மணு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

அரசியல் வாதிகளின் சுயலாபம்

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகள் முனம்முரமாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த சோக சம்பவத்தை வைத்து கொண்டு தமது அரசியல் இலாபத்தை தேட முயற்சி செய்கின்றனர். 

http://www.virakesari.lk/article/912

  • தொடங்கியவர்
 

இசை இங்கே இருந்து வருது!

எக்ஸ்கியூஸ்மீ... இசை எங்க இருந்து வருது தெரியுமா? இசை இயற்கையில் இருந்து வருது. கொத்துற கல்லுல இருக்கும்; கத்துற குழந்தைகிட்ட இருக்கும்; குத்துற கொலைகாரன் கிட்டகூட இருக்கும், ஏன் கடல் அலையிலகூட இருக்கும். அப்படிக் கடல் அலையில் இருந்து வர்ற இசையைப் பற்றித்தான் இங்கே பார்க்கப் போறோம். எல்லோரும் இசை மழையில் நனையத் தயாரா?

கிழக்கு ஐரோப்பா நாடான குரோஷியாவில் உள்ளது ஸாதர் கடற்கரை. இங்கேதான் அட்ரியாடிக் கடலின் அலைகள் இசையமைக்கின்றன. நிக்கோலா பேசிக் எனும் கட்டட வடிவமைப்பாளர், கடல் அலைகள் மூலம் இசை ஸ்வரங்களை உருவாக்கத் திட்டமிட்டார். அதன் விளைவாக ஸாதர் கடற்கரையில் மார்பிள் கற்களால் 230 அடி நீளத்துக்குப் படிக்கட்டுகள் அமைத்தனர். அதன் கீழ் போடப்பட்ட காங்க்ரீட் அடுக்கில் 35 பைப்புகளைப் பதித்தனர். அந்த பைப்புகளுக்குள் கடல் காற்றும், கடல் நீரும் இணைந்து நடனமாடி மறுபுறம் இருக்கும் துளைகள் வழியாக இசை எழுப்புகின்றன.

ஒவ்வொரு பைப்பும் ஒவ்வொரு ஸ்வரங்களை எழுப்புவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிக் கடல் அலைகள் இசைக்கும் இசையைக் கேட்டு அங்குவரும் மக்கள் மெய் சிலிர்த்து நிற்கிறார்கள். மேலும், சூரியனின் ஒளியைப் பகல் நேரங்களில் உள்வாங்கி, இரவு நேரத்தில் வண்ணமயமான ஒளிகளாக உமிழும் விரிப்புகளையும் படிகளுக்கு அடுத்து இருக்கும் மேடையில் விரித்திருக்கின்றனர். இந்த இசையும், ஒளியும் சூரியனுக்கு வணக்கம் சொல்வதற்காக என்கின்றனர் குரோஷியா மக்கள். வணக்கம்..!

12341406_1034807386578051_73650796097815

12316241_1034807376578052_29474415836015

 

  • தொடங்கியவர்

பராசக்தி படத்தில் வரும் ஒரு பிரபலமான டயலாக்கை, மழை பேசுவதை போல் மாற்றி, இணையத்தில் உலாவ விட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

21 minutes ago, நவீனன் said:

பராசக்தி படத்தில் வரும் ஒரு பிரபலமான டயலாக்கை, மழை பேசுவதை போல் மாற்றி, இணையத்தில் உலாவ விட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

நல்லாகவுள்ளது. குரலும் அசல் சிவாஜிபோல இருந்திருந்தால் வெளுத்து வாங்கியிருக்கும்.

  • தொடங்கியவர்
ஆரம்பக் காலத்தில் வினோதமாக காணப்பட்ட மருத்துவ முறையின் அரிய புகைப்படங்கள்!!!
 

10-1436503679-14creepyvintagemedicalphot

மனநல பாதிக்கப்பட்டவர் சிகிச்சை
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, தடுக்கவும் கட்டுப்படுத்தவும், ஈரமான போர்வைகளில் சுற்றி படுக்க வைத்துவிடுவார்களாம்.

 
  • தொடங்கியவர்

பேரிடர் சமயங்களில் அலைபேசியை பயன்படுத்துவது எப்படி?

 

த்தாண்டுகளுக்குப் பின்னரும் கட்ரீனா இன்னும் நினைவில் இருக்கிறது. அட்லாண்டிக் கடலில் உருவாகிய இந்தப் புயல்,  கொடும் மழையை கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் கொட்டித்தீர்த்தது. பாதிக்கப்பட்ட கடலை ஒட்டியிருக்கும் பல மாகாணங்களில் மிகப் பேரழிவைச் சந்தித்தது லூசியானாவின் நியூ ஆர்லின்ஸ். முக்கிய காரணம் - அந்நகரை அடுத்து இருக்கும் நீர்பாதுகாப்பு சுவர் (Levee) மழையின் காரணமாக இடிந்து, அந்த நீரும் நகருக்குள் புகுந்தது. கட்ரீனா விளைவித்த சேதம் நூறு பில்லியன் டாலர்களுக்கும் மேல்.

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொதுவாகத் தயாராக இருக்கும் அமெரிக்க அரசு இயந்திரம்,  கட்ரீனா சமயத்தில் நியூ ஆர்லின்ஸ் நகரில் விரைவில் செயல்பட முடியவில்லை. கட்ரீனா கற்றுக்கொடுத்த பாடங்களின் பட்டியலை அப்போதிருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையேற்ற வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில் முக்கிய இடம் - தொலைத் தொடர்பு கட்டமைப்பும், கருவிகளும் பழுதாகிப்போனது.

rain%20with%20cell01.jpg

கட்ரீனாவிற்குப் பின்னர் பல்வேறு வகையான திட்டங்கள் அமெரிக்கா முழுவதும் முடுக்கிவிடப்பட்டன. உதாரணத்திற்கு, நிலநடுக்க சாத்தியம் கொண்ட கலிபோர்னியாவில் பேரிடருக்கு தயாராக இருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் வாக்கி-டாக்கி, ரேடியோ மற்றும் அலைபேசி கருவிகளின் பராமரிப்பு முக்கியமான டாப்பிக்காக இருந்தது எனது தனிப்பட்ட அனுபவம்.

சென்னை நகரை வானிலிருந்து எடுத்திருக்கும் ஏரியல் புகைப்படங்களை பார்க்கும்போது கட்ரீனாவுக்குப் பின்னான நியூ ஆர்லின்ஸை அப்படியே பார்ப்பது போல இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் இன்னபிற சமூக ஊடக தளங்களில் மழை நின்றுபோய், வெள்ளம் வடிய ஆரம்பித்த பின்னர் இடப்படும் பதிவுகளையும், வீடியோக்களையும் பார்க்கும்போது தொலைத்தொடர்பு வசதிகள் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மின்சார வசதியில்லாததால் அலைபேசி சாதனங்களை சார்ஜ் செய்யமுடியாமல் அவை செயலிழந்து போனதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஐபோன், ஆண்ட்ராயிட் அலைபேசி சாதனங்களின் பலன்களை விளக்கத்தேவையில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட் அலைபேசிகளின் எனர்ஜி தேவை அதிகம். நாளொன்றிற்கு ஒருமுறையாவது முழுக்க சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில்தான் இன்றைய பேட்டரி தொழில்நுட்பம் இருக்கிறது. இப்படியான சூழ்நிலைகளில் னர்ஜி நுகர்வைக் குறைக்க சில ஆலோசனைகள்....

 rain%20with%20cell03%281%29.jpg

* மின்சாரம் இல்லாது போகும் என்ற நிலை வருமென தெரிந்தவுடன் திரையின் ஒளிர்வை (brightness) குறைத்து விடுங்கள்.

* தேவைப்படும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றை அணைத்து விடுங்கள்.

* முடிந்தால், Airplane Mode க்கு மாற்றிக் கொள்வது சிறந்தது.

* ஸ்மார்ட் அல்லாத சாதாரண அலைபேசி சாதனம் ஒன்றை முழுக்க பேட்டரி சார்ஜ் ஏற்றி பேக்கப்பாக வைத்துக் கொள்வதும் நன்று.

பவர் பேங்க் எனப்படும் பெரிய அளவு பேட்டரி சாதனத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுக்கான பட்டியல்களில் பார்க்கிறேன். குறிப்பிட்ட அளவேயான எனர்ஜியை இந்த சாதனங்கள் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீண்டும் மின்சாரத்தால் ரீ-சார்ஜ் செய்தாக வேண்டும். மின்சாரம் இல்லையெனில் இந்த சாதனங்களால் பயனில்லை. மாறாக, கீழ்கண்டவற்றை முயற்சிக்கலாம்.

* சூரிய ஒளி:  சோலார் பேனலுடன் பேட்டரி பேங்கை இணைத்துவிட்டால், சூரிய வெளிச்சம் இருக்கும்போதல்லாம் சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.

* சுடுநீர்: கொதிக்கும் நீரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய இயலும். பவர்பாட் என்ற பாத்திரத்தை பவர்ப்ராக்டிக்கல் ( www.powerpractical.com ) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அப்படி தயாரிக்கப்பட்ட சாதனம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது விலை அதிகமாக இருக்கிறது என்று கருதினாலோ, நீங்களே செய்து உபயோகிப்படுத்திக் கொள்ள உதவும் வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன.

* சூரிய ஒளி, தண்ணீரை சூடாக்க வேண்டிய எரிபொருள் என எந்த தேவையும் இல்லாததால், என்னுடைய தனிப்பட்ட பேஃவரிட் - கையால் சுழற்றி சார்ஜ் செய்ய உதவும் சாதனம்.

NOTE : மேற்கண்டவை இன்றைய நாளில் இந்திய நேரடி அல்லது ஆன்லைன் சந்தைகளில் கிடைக்காமலிருந்தால் இவற்றை தயாரித்து விநியோகிக்கும் தொழில்முனைவு  வாய்ப்பு இருக்கிறது.

சென்னை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் பெரிதும் உதவும் வகையில் சில தொழில்நுட்ப வசதி மேம்பாடுகள் தயாராகி வருவது சற்றே ஆறுதல் அளிக்கலாம்.
அதில் குறிப்பிட்டு சொல்லும் ஒன்று -  சன்னமான கண்ணிப் பிணையம் (Mesh Network)

இன்றிருக்கும் அலைபேசி தொழில்நுட்ப வசதி, உங்களது அலைபேசியை உங்களது அலை சேவை நிறுவனத்தின் நெட்வொர்க்குடன் இணைத்து நீங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களுடன் இணைக்கிறது. பேரிடர் தருணங்களில் அலைசேவை நிறுவனங்களின் கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். மழை காரணமாக சில அலைபேசி இணைப்பு டவர்கள் செயல் இழந்திருந்தால், பாதிக்கப்படாத டவர்களின் அதிக இணைப்புகளை செயல்படுத்தும் நிலை வரும். இதனால் அலைபேசி இணைப்புகளின் தரம் மிகவும் குறையும். சென்னை வெள்ளத்தின் போதும் இது நடந்தது.

கண்ணிப் பிணையம் இதை செம ஸ்மார்ட்டாக தீர்க்கிறது. ஒவ்வொரு அலைபேசியும், ப்ளூடூத் இணைப்பு மூலமாக தனக்கு அடுத்திருக்கும் அலைபேசியுடன் நேரடியாக இணைந்து கண்ணிப் பிணையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தொலைதொடர்பை ஏற்படுத்த முடியும். கண்ணிப் பிணையத்தின் வெற்றி, அலைபேசி சாதனங்கள் எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதில் இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் நெருக்கமான மக்கள் தொகை, கண்ணிப் பிணையம் சார்ந்த தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த உதவும் என நம்புகிறேன்!

http://www.vikatan.com/news/miscellaneous/56185-how-to-use-cellphone-during-natural-disaster.art

  • தொடங்கியவர்

12362914_953485461366815_335125879162638

நியூ சீலாந்து வேகப்பந்துவீச்சாளர், உலகின் தற்போதைய முன்னணிப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான டிம் சௌதீயின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

சாதிக்க வயது தடையில்லை... அசத்தும் பெங்களூரு முதியவர்!

 

பெங்களூரை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், தானே தயாரித்த சூரிய ஒளி காரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளார். அதோடு டெல்லியில் நடைபெற்று வரும் கண்காட்சியிலும் அந்த காரை பார்வைக்கு வைத்துள்ளார்.

ban.jpg

கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்தவர் சையது சாஜன் அகமது. 12-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவர். ஆனாலும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்பதுதான் அகமதுவின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

முதலில் பழ வியாபாரத்தில் ஈடுபட்ட அகமது,   பின்னர் எலக்ட்ரானிக் கடையை  தொடங்கியுள்ளார். இதில், டிரான்சிஸ்டர்கள், டேப் ரிக்கார்டுகள் போன்ற சிறிய அளவிலான பொருட்களை அகமது அசெம்பிள் செய்து விற்றுள்ளார். தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை மின்சக்தியில் இயங்க வைத்து வெற்றி கண்டார். பின்னர் மூன்று சக்கர வாகனங்களையும் அதே போல் மாற்றியுள்ளார். தற்போது சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 1-ம் தேதி அந்த வாகனத்திலேயே அகமது டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி ஐ.ஐ.டி வளாகத்தில்  கடந்த 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் தனது சூரிய ஒளி வாகனத்தை கண்காட்சிக்கு வைக்க வேண்டுமென்பது அகமதுவின் ஆசை. அதன்படி, ஒரு மாத கால பயணத்துக்கு பின் டிசம்பர் 1-ம் தேதி டெல்லி வந்து சேர்ந்த அகமது, அந்த கண்காட்சியில் தனது சூரிய ஒளி காரையும் பார்வைக்கு வைத்தார்.

கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடமும் தனது கண்டுபிடிப்பு குறித்து அகமது விளக்கி கூறினார். இந்த கண்காட்சியில் அகமதுவின் கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு இருந்தது. 

தனது கண்டுபிடிப்பு குறித்து அகமது கூறுகையில்,'' எனது காரில் 5 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் மின்சக்தி காரில் பொருத்தப்பட்டுள்ள 6 பேட்டரிகளில் சென்று சேமிக்கப்படுகிறது. இதனை தயாரிக்க ஒரு லட்ச ரூபாய் செலவானது. எனது அடுத்த இலக்கு, அப்துல்கலாம் பிறந்த ராமேஸ்வரத்துக்கு இந்த வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும் என்பது தான்''  என்றார்.

http://www.vikatan.com/news/india/56163-man-travels-3000-km-self-built-solar-car.art

  • தொடங்கியவர்

12356837_953483108033717_413739274240710

கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திரப் பாத்திரங்களிலும்அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கிய, காலஞ்சென்ற நடிகர் ரகுவரன் பிறந்த நாள் இன்றாகும்.

தனது மிகச்சிறந்த நடிப்பினால் ரசிகர் மனதில் இன்றும் நிமிர்ந்து நிற்கிறார் இந்த உயரமான மனிதர்.

 
  • தொடங்கியவர்

கூவத்தின் கதை!

 

ந.பா.சேதுராமன், படம்: பா.ஜான்ஸன்

 

கூவத்தைப் பார்த்தீங்களா... எப்படி சுத்தமாகிடுச்சு. இதைச் சுத்தப்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கப்போறதா சொன்னாங்க. ஆனா ஒரு பைசா செலவு இல்லாம மழையே சுத்தப்படுத்திட்டுப் போயிடுச்சு’ - பாலங்களின் மேல் இருந்து கூவம் நதியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் சென்னைவாசிகள்.

இந்த மழை வெள்ளம், கூவம் கரையோரத்தின் பல்லாயிரம் மக்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது. பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் மறுபக்கமும் இருக்கிறது. கூவம் நதியில் தண்ணீர், அதன் உண்மையான நிறத்துடன் பாய்ந்துசெல்லும் அதிசயத்தை இந்தத் தலைமுறை இப்போதுதான் பார்க்கிறது. கறுப்பு நிறச் சாக்கடை இல்லை; துர்நாற்றம் நிரம்பிய கழிவுகள் இல்லை. ஒரு பாவத்தைப்போல எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, கூவம் மறுபிறப்பு எடுத்திருக்கிறது. அதற்காக தாமிரபரணி தண்ணீர்போலத் தூய்மையாக ஓடுகிறது எனப் பொருள் இல்லை. ஆனால் கூவத்தில் இப்போதுதான் ஒரு நதியின் சாயல் பளிச்சிடுகிறது.

கூவம் மட்டுமல்ல... அடையாறும் அதன் அசல் நிறத்தை மீட்டு எடுத்திருக்கிறது. சென்னை நகருக்குள் பாய்ந்தோடும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய மற்ற நீர்வழித்தடங் களிலும் பாய்ந்து ஓடுகிறது நீர். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதுதான் இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை நீடித்தாலே அதிசயம். அதற்குள் மறுபடியும் சாக்கடையையும் கழிவு நீரையும் திறந்துவிட்டு பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்’ என்பதுதான் பெரும்பாலானோரின் அச்சம்.

கூவம் நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது கடலில் கலக்குமிடம் வரையிலும் முற்றிலுமாகத் தூய்மையாகி இருக்கிறது. எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிட்டது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள சவால்!

p110a.jpg

கூவத்தின் கதை

திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் எனும் சிற்றூரில் ‘கல்லாறு’-வின் கிளை ஆறுதான் கூவம். `திருவூறல்’ என்றும் `தக்கோலம்’ என்றும் வழங்கப் படும் சைவத் திருத்தலத்தின் மடியில் பிறந்து, அங்கிருந்து சென்னையின் பெரும் பகுதிகளின் வழியாகப் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஊரின் ஊடே ஊடுருவிச் செல்லும்  வெண்மை நிறச் சாலையைப் போன்று 50 ஆண்டுகளுக்கு முன் கூவம்  வெண்மை பளிச்சிடும் நதியாக இருந்திருக்கிறது.

கடலில், ஆற்றில், ஏரியில் இன்னபிற நீர்நிலைகளில் கிடைக்காத, கூவத்திலேயே உருவாகி மக்கள் பயன்படுத்தக்கூடியதான 70 வகையான மீன் வகைகள் கூவத்தின் நீராதாரச் சொத்து. ஆனால், கடலின் ஆதரவோடு முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே அதாவது 30 சதவிகிதப் பகுதிகளில் மட்டுமே இப்போது மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. எஞ்சிய 70 சதவிகிதப் பகுதியானது `உயிரினங்கள் வாழத் தகுதியற்றவை’ என அறியப்பட்டுள்ளது மீன்பிடித் தொழிலோடு வளைந்து நெளிந்து பயணிக்கும் கூவத்தின் அழகான நீர்வழிப் பாதையில் படகுப் போட்டிகளும் நடந்திருக்கின்றன. கூவத்தின் மீதான மேம்பாலங்கள் இல்லாத காலங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் மரப்பலகைகளை மீனவர்களே வலுவாக அமைத்து, அதன் மீது அமர்ந்து வலை வீசியும், தூண்டில் போட்டும் மீன்களைப் பிடித்து வாழ்ந்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையானது 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கைத்`தறி' மூலம் துணிகளை நெய்து வாழும் நெசவாளர்களின் வாழ்விடம். இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம் கூவம். `தறி' நெய்யும் வேலைக்குப் பயன்படுகிற அதிகப் படியான நீரை அவர்கள் ஊருக்கு நடுவில் ஓடிய கூவத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். நெசவாளர்கள் வாழ்ந்த இந்த `தறிப்பேட்டை'தான் பின் சிந்தாதிரிப்பேட்டையானது.

சைவத்தலம் (தக்கோலம்) ஒன்றில் இருந்து வட மாவட்டத்தில் உருவான ஒரே நதி கூவம் என்பதால், `கூவாத்தம்மன்’ (பின்னாளில் அதுவே `கூழ் வார்த்தம்மன்’ என்று வசதிக்கு ஏற்ப மாறிப் போனது) என்று கூவம் ஓடுகிற பாதைகளில் எல்லாம் அம்மன் கோயில்கள் உருவாகின. அந்த கோயில்களின் பயன்பாட்டுக்கு கூவம் நதிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கூவத்தின் நீர் வாட்டமும், அதன் வளமான  தன்மையும் இயல்பாய் அதன் கரையோரங்களில் பச்சை வயல்களை வளர்த்துக் கொடுத்தது. லம்பாடி இனத்தவர்கள், நாடோடிகள், குறவர் இன மக்கள் இந்தக் கரைப் பகுதிகளில் (கரைகளை சீரழிக்காமல்) கூடாரம் அமைத்து, போகிற போக்கில் தங்கிச் சென்றனர். கூவம் நதிக்கரையை ரசித்தபடி நடைப்பயிற்சி மேற்கொண்ட செல்வந்தர்கள் கூடாரங்களில் இருந்தவர்களை விரட்டிவிட்டு அங்கே நிரந்தரப் படகு வீடுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

காலப்போக்கில் படகு வீடுகள் கான்கிரீட் பங்களாக்களாக மாறின. செல்வந்தர்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய வறியவர்களும் அங்கே குடிசைகள் அமைக்க, மக்களின் வாழ்விடமாகியது கூவம்.

வீடுகளில் இருந்தவர்கள் பெரிய சைஸ் குப்பைத் தொட்டியாக கூவத்தைப் பயன்படுத்த... கரையோர ஏழை மக்கள் தங்கள் அன்றாட 'உள்ளே-வெளியே' விஷயங்களுக்கு கூவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கும் தன்மை கொஞ்சமும் இராத பிளாஸ்டிக் கழிவுகளும் கூவத்துக்கு வந்து சேர்ந்தன; இப்படித்தான் கூவம் சீரழிய ஆரம்பித்தது. 

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்

`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் 1967-72-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்ட வடிவை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கொண்டுவந்தார். அது கூவத்தில் விழுந்த கல்லாக, குறுகிய காலத்திலேயே அமுங்கிப் போனது.

2001-ம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால், 1,200 கோடி ரூபாயில் மத்திய அரசின் நிதியுதவியோடு, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் கூவம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இது கூவத்தில் போடப்பட்ட இரண்டாவது கல்.

2008-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓடுகின்ற ‘சான்-அன்டோரியோ’ நதியின் பராமரிப்பை, சீர்மிகு பயன்பாட்டை நேரில் கண்டு அதன்படி கூவத்தை மேம்படுத்த ஒருமுறையும், பின்னர் 2009-ம் ஆண்டில்  கூவம் சீரமைப்பு எப்படி சாத்தியம் என ஆய்ந்தறிய சிங்கப்பூருக்கு ஒரு முறையும் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் போய் வந்தார். இது கூவத்தில் போடப்பட்ட மூன்றாவது கல்.

2012-ம் ஆண்டில் ஜெயலலிதா, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ கைவிடப்படுவதாக அறிவித்து, கையில் இருந்த நான்காவது கல்லை கூவத்தில் போடாமல் நிறுத்திக்கொண்டார். ஆனால், அந்த முடிவை 2013-ம் ஆண்டில் அவரே மாற்றிக்கொண்டார்.

`கூவம் ஓடுகிற பாதையில் 105 இடங்கள், பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிற பாதையில் 183 இடங்கள், அடையாற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப் பட்டு தெளிவான நீரோட்டத்துடன் பயணிக்க 300 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். `முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு ஒதுக்கப்படும். பின்னர், 163 கோடி ரூபாய் முதலீட்டில் 158 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு செயல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூவத்தைச் சுத்தப்படுத்துதல், சேத்துப்பட்டு ஏரி புனரமைப்பு பணிகள், கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம், மீள் குடியமர்வு, சாலைகள் உள்ளிட்ட இதர ஏழு பணிகளுக்காக 3,800 கோடி ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கென 2,000 கோடி ரூபாயை கடன் பெறுவது என்றும் முடிவெடுத்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். ` ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும்’ என்றும் தெரிவித்த ஜெயலலிதா, இந்த நிதியாண்டிலேயே அதற்காக 500 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இது மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுகளின் கையில் இருந்த ஐந்தாவது கல்லை மீண்டும் போடவைத்திருக்கிறது.

2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது, பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில் இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான்.  இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.

பக்கிங்ஹாம் கதை என்ன?

உலகின் சொர்க்கபூமியான சிங்கப்பூரைப்போல செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் ‘பக்கிங்ஹாம் கர்நாட்டிக் கால்வாய்.’ 1806-ம் ஆண்டில் சென்னை எண்ணூர் டு பழவேற்காடு (கடல் முகத்துவாரம்) வரையில் கடல் வழி வணிகத்தை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தோண்டப்பட்டதே இந்த பக்கிங்ஹாம் கால்வாய். பழவேற்காட்டில் இருந்து மெள்ள நகர்த்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் பள்ளம், ஆந்திராவின் விஜயவாடா வரை நகர்ந்து, கிருஷ்ணா நதியின் பாதை வரை கொண்டு செல்லப்பட்டு இணைக்கப் பட்டது.

1886-ம் ஆண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது.  ஒருபுறம் வேலையின்மையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மக்களுக்கும் கூலி, வேலைக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் பக்கிங்ஹாம் கால்வாயை இன்னும் நீளப்படுத்தும் வேலை இதன் மூலம் மக்களுக்குக் கொடுக்கப் பட்டது. தமிழ்நாட்டின்  விழுப்புரம் டு விசாகப்பட்டினம் வரையில்  பக்கிங்ஹாம் கால்வாயை மதராஸிகள் தோண்டிக்கொண்டே போனார்கள் (800 கி.மீ்).

கூவம் ஊருக்கு நடுவே உருண்டு திரண்டு வந்தாலும் முடிவில் இயல்பாக கடலை அடைந்தது எப்படியோ, அப்படி இல்லாமல் கடலை ஒட்டியதுபோல இயல்பாக கரையையொட்டி பக்கிங்ஹாமை அமைத்துக் கட்டினர் பிரிட்டிஷார். அதற்கு முதல் காரணம், கடலின் உவர் நீரை கால்வாயில் எளிதில் நிறைத்துக்கொள்ளலாம். இரண்டாவதாக ஊர் நடுவே எளிதில் ஊர்ந்து தரைமுகமாக துறைமுகங்களை நிலை நிறுத்திக்கொள்ளலாம்.

வடக்காக பக்கிங்ஹாம் 17 கி.மீ தூரம், மத்திய சென்னை வாட்டத்தில் 7 கி.மீ தூரம், தெற்கு மார்க்கமாக 24 கி.மீ தூரம் என 48 கி.மீ தூரத்துக்கு சென்னையில் மட்டுமே பக்கிங்ஹாம் கால்வாயின் இயக்கம் இருக்கிறது.

2011-ம் ஆண்டில் சென்னை டு முட்டுக்காடு வரையில் 100 மீட்டர் அகலம், 10 மீட்டர் ஆழத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயைத் தோண்டிச் சீரமைக்க முடிவானது. இதைச் செய்தாலே ஆந்திரா டு தமிழ்நாட்டின் வட மாவட்டம் வரையில் கடல் வழி வர்த்தகம்போல கால்வாய் வழியிலான வர்த்தகம் சாத்தியப்படும். சரக்குக் கப்பல்கள் பயணத்தை எளிதாக்க முடியும். சென்னை முதல் குமரி வரையில் பக்கிங்ஹாம் ரூட்டிலேயே டூரிஸத்தை வளப்படுத்தி, அதன் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதோடு, நீர்வழி வர்த்தகத்தையும் பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் செயல்படுத்தலாம் என்பதே இந்த கால்வாயின் சிறப்பம்சம். அதேபோன்று உள்ளூர் வணிகத்துக்கும் இந்த கால்வாய் வழிப் பயணம் பெருத்த லாபத்தை ஈட்டித் தருவதோடு, தொழில் வணிக முதலீட்டாளர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்து உள்ளே வரவழைக்கும்.

ஆந்திராவின் வாசிராபாத், பொல்லாவரம், காக்கிநாடா, விஜயவாடா, மசூலிப்பட்டினம், ஓங்கோல், நெல்லூர் வழியாக நகர்ந்து பழவேற்காடு ரூட் பிடித்து திருவான்மியூர், திருப்போரூர், மாமல்லபுரம் தொட்டு விழுப்புரத்தின் மரக்காணம் வரையில் சரக்குக் கப்பல்களை சாதாரணமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் மிகப் பெரிய உள்ளூர் வணிகத்தின் உயிரோட்டத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயை விட்டால் வேறு மார்க்கம் உருவாக இன்னும் ஒரு நூற்றாண்டு பிடிக்கலாம்.

கூவத்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையே எதிர்கொள்ள முடியும். பக்கிங்ஹாம் கால்வாயால் வர்த்தகத்தை வளர்த்தெடுத்து, தன்னிறைவு  பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். ஆனால் கூவமும் பக்கிங்ஹாமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், கழிவுகளின் மடியிலும் கிடக்கும் வரை மனிதன் தப்பித்து வாழவோ, வருமான வளம் பெறவோ வாய்ப்புகள் இல்லை.
`மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள்...’ என்று மாறி மாறிச் சொல்லும் ஆட்சியாளர்கள் கூவத்தையும், பக்கிங்ஹாம் கால்வாயையும் மீட்டெடுக்க இதுதான் சரியான நேரம். ஆனால்  அதேதான்...

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113507&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

12339449_953477474700947_246268275021899

இளைய உள்ளங்களைக் கவர்ந்த துடிப்பான இளம் நடிகர், நவீன காதல் கண்ணன் ஆர்யாவின் பிறந்தநாள் இன்று.
 

  • தொடங்கியவர்

வாழ்வாங்கு வாழ்ந்த சுப்பிரமணிய பாரதி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

 

bharathiyar300%281%29.jpg1882 -ல் இதே டிசம்பர் மாதம் 11-ல் பிறந்து 1921-செப்டம்பர் 11-ல் காலமானது இந்த கவிதாக்னி.. தன் உயரத்தை தாண்டி அடுக்கி வைத்திடும் அளவிற்கு எழுதி எழுதி மை தீர்த்தவர்களின் மத்தியில்,  பாரதி   வையம்  புகழ இயற்றியது கையடக்க அளவிற்கே. முப்பத்தியெட்டை முடிப்பதற்குள்  வாழ்ந்தும் எழுதியும் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டு சென்று விட்டான் மாக்கவி..
                             
பாரதி  பிறந்த தேதி 11. இறந்த தேதி 11 "இனி நீ சுப்பையா அல்ல... பாரதி... பாரதி ...!'  என்று நெல்லைச் சீமையின் எட்டயபுரத்து புலவர்கள் சுப்பையாவுக்கு பட்டம் சூட்டிய போது அவனுக்கு  வயது 11.
                                     
பதினைந்து வயதில் செல்லம்மாளை மணமுடித்த பாரதி,  தன்னுடைய இருபதாவது வயதில் (1902) எட்டயபுரத்து ஜமீனிடம் பார்த்து வந்த வேலையை உதறியெறிந்து விட்டு, அதன்பின் தமிழாசிரியர் பணி என்று தன் எண்ணச் சிறகை  விரிக்கத்  தொடங்கினான்.

அந்த  ஜீவ நதியின் ஓட்டம் பல திசைகளாக பிரிந்தோடினாலும் எண்ணமெல்லாம் எழுத்து,  பாடல், சுதந்திர வேட்கை என்றே தகித்துக் கொண்டிருந்தது.

அதன் அடுத்தகட்ட நகர்வாக, சுதந்திர எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகாலாக பத்திரிகைப் பணியை திட்டமிட்டே தெரிவு செய்து கொண்டது அந்த சுதேசிக்குயில் .
 
அன்பு மகள் தங்கம்மாள் பிறத்தலும், சுதேசமித்திரன் ஏட்டில் துணையாசிரியர் பணியில் அமர்தலும், சென்னைக்கு வருகையும் ஒரே ஆண்டில் (1904) நடந்தது. அதற்கடுத்த ஆண்டே , பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் என்ற அறைகூவலுடன் வெளி வந்த "சக்ரவர்த்தினி" பாரதியின் எண்ணவோட்டத்துக்கு ஏதுவாக இருக்க, தேடிவந்த ஆசிரியப் பொறுப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.     

இதைத்  தொடர்ந்து, தேடி வந்தது  "இந்தியா" ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு. இந்த ஏட்டின் மூலமாகவே சுதந்திர எண்ணத்தை வெளிப்படுத்தும் கனல் வரிகளை தீயாய் கொட்டித் தீர்த்தான்  பாரதி. இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய தாதாபாய் நௌரோஜி தலைமையிலான காங்கிரசில் இணைந்து செயலாற்றியதும் இதே கால கட்டத்தில்தான். சுயராஜ்யம் என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டதும் இந்த தருணத்தில்தான்.

பாலபாரத் என்ற ஆங்கில ஏடு துவக்கல்,  சூரத் காங்கிரசில் சேரல், பிரிதல் பின் பாலகங்காதர திலகர் தலைமையில் சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, வ.உ.சி. ஆகியோருடன் கைகோர்த்து சுதந்திரம் வேண்டும் தீவிரவாத குழுவில் ஒருவரானது என  பாரதியின் பொது  வாழ்வில் 1907- என்பது உச்சக்கட்ட உஷ்ணத்தை தக்க வைத்துக் கொண்ட ஆண்டாகவே அமைந்து விட்டது.

இதன் பின்னரே  மிதவாதக்குழு,  தீவிரவாதக்குழு என்று குழுக்கள் பலவாறு கிளை பரப்பின.  சென்னையிலிருந்து பாரதியின் புதுவை பயணமும், அரவிந்தர், வ.வே.சு.அய்யர், பரலி சு.நெல்லையப்பர், ஸ்ரீ நிவாசச்சாரியார், பொன்னு முருகேச பிள்ளை, வ.ரா., பாரதிதாசன், தோத்தாத்ரி, குவளைக் கண்ணன், ஹரிஹரசர்மா, சங்கர கிருஷ்ணன் என்று விடுதலை வேள்வியில் பூத்த ஒருசேர் கருத்தாளர்கள் ஒன்று சேர்ந்த  தருணமும் "புதுவை -   குயில் தோப்பு "ஆனது.

வாஞ்சிநாதனால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆஷ் துரை (1911)யின் மரணத்தால்  பாரதி இயற்றிய 'கனவு' மற்றும்   'ஆறிலொரு பங்கு'  ஆகிய நூல்களை தடை செய்து ஆங்கிலேய அரசு உத்தரவிட, பாரதியின் புதுவை வாழ்க்கை  போர்க்களமானது.

பாரதியின்  பத்திரிகைப் பணிகள் முடங்கத் தொடங்கின.  'வெள்ளை கொக்கொன்று பறக்குதடா'  என்றே, எழுதிவிட்டு பிரெஞ்சு பார்வையில் இருந்து தப்பிக்க பல்வேறு வேடங்களை போட்டு திரிந்தபடி மீண்டும் மீண்டும் கனல் பாடல்களை வடிக்க தொடங்கினான் மாக்கவி பாரதி.

தொடர்ந்து நெருக்கடிகளும் அடக்குமுறைகளும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலும் பாரதியை  அடுத்த கட்டமாக பறவையைப் போல இடங்களை மாற்றி மாற்றி பறக்கச் செய்து விட்டது.

சென்னைக்கு வந்தான்.. திருவல்லிக்கேணி  தோழர்கள் அரவணைத்தனர். அங்கிருந்தபடி மீண்டும் தொடங்கினான் எழுத்துப் புரட்சியை. அதற்கு கை கொடுத்தன பல இதழ்கள். ஆனால் சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிப்பதற்குள்ளாகவே தன்னுடைய முப்பத்தெட்டாவது வயதிலேயே பாரதியின் உயிர் பிரிந்தது.

http://www.vikatan.com/news/miscellaneous/56230-birth-anniversary-of-subramania-bharati.art

6 minutes ago, நவீனன் said:

வாழ்வாங்கு வாழ்ந்த சுப்பிரமணிய பாரதி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

எங்கே மறந்து விட்டீ்ர்களோ என்று நினைத்தேன். திண்ணையில் அர்ஜுன்தான் நினைப்பூட்டினார், அதனால் பாரதி பாடல்கள் கேட்கின்றோம்.  நன்றி 

  • தொடங்கியவர்

12347730_740484159419748_237032180312723

பத்தாயிரம் கோடிக்கு அதிபதியான ஸ்பிக் சேர்மன் ஏ.சி.முத்தையாவும் ஒத்தை லுங்கி கட்டிட்டு தனது அரண்மனையை துறந்து வெளியேறிய படம்.
இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என இறைவன் காட்டிய பாடம்...

  • தொடங்கியவர்
33 minutes ago, ஜீவன் சிவா said:

எங்கே மறந்து விட்டீ்ர்களோ என்று நினைத்தேன். திண்ணையில் அர்ஜுன்தான் நினைப்பூட்டினார், அதனால் பாரதி பாடல்கள் கேட்கின்றோம்.  நன்றி 

ம்ம் நன்றி ஜீவன் சிவா. நீங்கள் எப்போதும் இந்த திரியில் வந்து பார்த்து கருத்து எழுதும் ஒரு உறவு நன்றிகள்.:)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.