Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நவராத்திரி நவ தகவல்கள்..!

 maithili04.jpg

 1) நவராத்திரி நாட்களில், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலமாகும்.  நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பெண்கள் ‘கன்யா பூஜை’ செய்வதால், சகல செல்வங்களையும் பெறலாம்.

2) கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்வது நலம்.

3) ‘சர்வமும் சக்தி மயம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளிவிட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

4) நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று பூஜை செய்து வழிபட்டால், ஶ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்றைய நாளில் ஶ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தை  சொல்லி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

5) நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால்,  அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

maithili02.jpg

6) நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை அன்று கடலை, சுண்டல் மற்றும் பழங்கள் கொடுக்கலாம்.  நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

7) அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் பக்திப் பாடலகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். நவராத்திரி  ஒன்பது நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால், முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி  நாட்களும், வாசலில் தினம் தினம் புதிய புதிய மாவிலைத் தோரணங்கள் கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்.

8) விஜய தசமி தினத்தன்று ஶ்ரீஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

9) நவராத்திரி பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்ற பலவிதமான மங்கலப் பொருட்களைப் பரிசளிக்கலாம். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடையை பரிசாக அளிக்கலாம். ஏழைகளுக்கு உடைகள், உணவு வகைகள் முதலியவற்றை தானமாக அளிப்பது சிறப்பான பலன்களைத் தரும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜையை நிறைவுசெய்ய உதவுகின்றன. எல்லோர் மனத்திலும் அன்பை விதைத்து, அகிலம் சிறக்கச்செய்திடுவோம்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14485093_1148766215172071_91464966578292

 
 
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சஹீர் கானின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Zaheer Khan
  • தொடங்கியவர்

14595548_1249002438491877_12709166479116

அக்டோபர் 7: உலக புன்னகை தினம்! #WorldSmileDay!


சிறிய புன்னகை மூலம் எதிரிகளைக் கூட நண்பராக்கிகொள்ளலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த புன்னகையை உறவை வலுப்படுத்தும் ஆயுதமாக்குவோம். சிரித்த முகத்துடன் வலம் வர பழகுவோம்!

  • தொடங்கியவர்
Aceh Fashion Week 2016
 

ஆச்சே பெஷன் வீக் கண்காட்சி (Aceh Fashion week 2016) இந்தோனேஷியா வின் ஆச்சே மாகாணத்தின் தலைநகர் பண்டா ஆச்சே நகரில் செப்டெம்பர் 30 முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெற்றது.

 

1681.jpg

 

1682.jpg

 

1683.jpg

 

168252403-01-02.jpg

 

ஆச்சே பிராந்தியத்தைச் சேர்ந்த மொடல்கள் பலர் இந் நிகழ்வில் பங்குபற்றினர். இந் தோனேஷியாவின் சுமத்ரா தீவை சுனாமி தாக்கிய நேரத்தைக் குறிக்கும் கடிகாரம், இச் சுனாமியினால் அழிவடைந்த கப்பலின் மாதிரி உருவிலான தொப்பி அணிந்த நிலையிலும் மொடல் ஒருவர் இப்பெஷன் ஷோவில் பங்கு பற்றினார்.

 

16814516606_10154109943645805_1471035997

 

16814523196_10154109943260805_3439604026

 

metronews.lk

  • தொடங்கியவர்

14519906_1148765168505509_48844368055051

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பிறந்தநாள்.
பரபரப்புக்கான அரசியல் நாயகனாக எப்போதும் விளங்கிவரும் இரும்பு மனிதர் புட்டின்
Happy Birthday Vladimir Putin

  • தொடங்கியவர்

ஒரு நிமிடக் கதை: ஏ.டி.எம்.

 

 

atm_3035340f.jpg
 

அந்த ஏடிஎம் மெஷினைச் சுமந்து கொண்டு அந்தச் சிறிய லாரி காட்டுப்பாதையில் சென்றது.

“டேய் முத்து... இறக்கினதும் வெல்டிங் பண்ணி மெஷினைத் திறந்து பணத்தை எடுக்கறது, பங்கு போடறது எல்லாம் அரை மணி நேரத்தில் முடிஞ்சிடணும்..”

“கவலைப் படாதே தலைவா.. அவ்வளவு நேரமே ஆகாது.”

“இப்போ எல்லாம் கழிவறையில கூட வெளியே கேமரா வச்சிடறானுங்கடா.”

“நாம கறுப்பு பர்தா போட்டுக்கிட்டு தானே உள்ளே போனோம்.”

புதர் மறைவில் இறக்கியதும் முத்து கேஸ் வெல்டிங் சிலிண்டரைத் திறந்து நாஸிலைப் பற்ற வைத்தான். நீல ஜ்வாலை வந்ததும் மெஷினின் மையப் பகுதியைத் துண்டாடினான்.

“இன்னாடா... டப்பா மெஷினா இருக்கு. இப்படியா பணம் வக்கிற மெஷின் பண்ணுவானுங்க.”

“மச்சான் ... பணம் உள்ளே இல்லேடா... சின்னதா ஒரு ஸ்பீக்கர் மாதிரி இருக்குடா.”

“கனெக் ஷன் தா பார்ப்போம்.”

திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தை அது பேசியது.

“தங்கள் பாஸ் புத்தகத்தில் பதிவுகள் முடிந்து விட்டன.. வெளியே வரும் போது எடுக்கவும்.”

tamil.thehindu

  • தொடங்கியவர்

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

 

p115a.jpg

p115b.jpg

சில நாட்களுக்கு முன்... அயர்லாந்து நாட்டின் கோரி நகரத்தின் நடுவே அமைந்திருக்கும் விளையாட்டுப் பூங்காவில், வித்தியாசமான பெரிய பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுடன் போலீஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள் மக்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்துசென்று பார்த்து, அது பறக்கும்தட்டு எனக் கண்டுபிடித்தனர். `அது எப்படி இங்கே p115.jpgவந்திருக்கும்? வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் வந்துவிட்டார்களா?' என மக்கள் பீதியடைந்து திகிலில் உறைய, உள்ளூர் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

விசாரணைக்குப் பிறகுதான் தெரிந்தது, அது ஏலியன்களின் வாகனமல்ல... லண்டனைச் சேர்ந்த கெமால் அலி என்பவர் தயாரித்த பறக்கும்தட்டு. அதாவது, மனிதர்கள் பறப்பதற்காக உருவாக்கிய ‘பறக்கும் தட்டு’ அது. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் ‘இளைஞர்களின் இசைத் திருவிழா’வின் பப்ளிசிட்டிக்காக, தான் தயாரித்த பறக்கும்தட்டு போன்ற வாகனத்தைப் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இப்படி உலவவிட்டு பீதியாக்கியிருக்கிறார் கெமால் அலி. இவருடைய திறமைக்குப் பாராட்டுகள் தெரிவித்ததோடு, ‘இப்படியெல்லாம் பீதி ஆக்கக்கூடாது. சரியா?’ என எச்சரித்து அனுப்பியிருக்கிறது காவல்துறை.

நம்ம ஊர்ல லாடம் கட்டியிருப்பாங்கல்ல?

vikatan

  • தொடங்கியவர்

தெக்கத்தி சினிமா ரசிகர்களின் திரிலோக நாயகிகள் இவர்கள்!

 

டோலிவுட் மன்னாரா சோப்ரா

p32a.jpg

ந்தப் பாலாடை பியூட்டி பிறந்தது பேரழகி பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தில். அதனாலேயே சில்வர் ஸ்க்ரீன் ஆசையும் இயல்பிலேயே இருந்துவிட்டது. பிரியங்காவோடு சில விளம்பரங்களில் நடித்தவர், `பிரேம கீமா ஜந்தா நை' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அதன் பின் `ஜிட்' படம் வழியாக பாலிவுட் பிரவேசம். தமிழில் `சண்டமாருதம்', `காவல்' படங்களில் வந்து போனார். `ஜக்கன்னா', `திக்கா' ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்தவர் இப்போது அடுத்த ரவுண்டுக்காக ரெடியாகி வருகிறார். சீக்கிரமே `நல்ல’ தமிழ்ப்படத்துல வாங்க அம்மணி!


சாண்டல்வுட் மயூரி க்யாத்தாரி

p32b.jpg

ஹூப்ளியில் பிறந்த குளுகுளு எக்ஸ்பிரஸ். படித்து முடித்ததும் சாஸ்திர சம்பிரதாயப்படி இவரும் சின்னத்திரை தொகுப்பாளரானார். அந்த `வெளீர் பளீர்' சிரிப்புக்கு அடிமையான கன்னட டியூட்கள் சாண்டல்வுட்டுக்கு ரெட் கார்பெட் விரித்து அழைத்து வந்துவிட்டார்கள். `கிருஷ்ண லீலா' என்ற முதல் படத்திலேயே `செமையா நடிக்குதே இந்தப் பொண்ணு!' எனப் பேச வைத்தார். அதன்பின் வரிசையாக `இஷ்டகம்யா', `நடராஜா சர்வீஸ்', `காரியா 2' ஆகிய படங்களில் கமிட்டானார். இந்தப் படங்கள் அனைத்தும் வெளியானதும் பேபிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்கிறது கன்னடத்துப் பட்சி. ஆல் த பெஸ்ட் கோல்கேட் சிரிப்பழகி!


p32.jpg

மல்லுவுட் ஷ்ரிதா சிவதாஸ்

கேரளாவின் ஊழியனூரில் செதுக்கப்பட்ட சிற்பம். மைக்ரோ பயாலஜியில் டிகிரி முடித்த கையோடு, `கைரளி' சேனலில் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதில் அம்மணி காட்டும் குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்கள் பிடித்துப்போய் `ஆர்டினரி' படத்தில் நடிக்க வைத்தார்கள் சேட்டன்கள். `10.30 ஏ.எம் லோக்கல் கால்', `மணி பேக் பாலிசி', `ஒண்ணும் மிண்டாதே', `ஹேங் ஓவர்' என எக்கச்சக்க படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான `தம்' படத்திலும் மேடம் வெரைட்டி காட்ட, அடுத்தடுத்த வாய்ப்புகள் வெயிட்டிங்! வரணும்ல, டிசைன் அப்படி!

vikatan

  • தொடங்கியவர்
வரும் எதிர் விளைவு பற்றி, இயம்ப முடியாது
 
 

article_1475818510-yu.jpgதவளைகளும் பாம்பு இனங்களும் அழிந்து வருவதனால், எலிகளின் தொகை பெருகிவிட்டது. நுளம்பை உண்ணும் சிற்றினப் பூச்சிகள், கிருமிநாசினிப் பாவனை காரணமாக அழிந்து போனமையால், நுளம்பின் பெருக்கம் எல்லை மீறிவிட்டது.

இயற்கையை, அதன் வழி செல்ல அனுமதியளிக்காமல், தங்கள் வழியில் மனிதன் அதனை அழித்தால் வரும் எதிர் விளைவு பற்றி, இயம்ப முடியாது.

யானை, எருமைகள், மரை போன்றவை அருகுவதனால், காடுகளின் பெருக்கம் இல்லாதுவிட்டன. இந்த மிருகங்களின் சாணத்தால், அதனில் இருக்கும் தாவர விதைகள் எங்கும் பரவி, காடுகள் கனத்தமாகி விடுகின்றன.

பின் விளைவை உணராத மனித இனம், தனது நிலைமையை இனியாவது உணருமா?

  • தொடங்கியவர்

எட்டுக்கைகள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு! #World OctopusDay

pakis.jpg

இது கடல்வகை ஸ்பீசிஸ்களை கொண்டாடும் நேரம் மக்களே!!!! ஆக்டோபஸ் நியாபகம் இருக்கிறதா? ஆக்டோபஸ் என்றவுடன், 2010 உலக கோப்பைக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் வரை வெற்றி தோல்வி குறித்து கணித்ததால் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டதே!!!! அதன் பின்னர் தான் நம்மில் பலருக்கு இந்த அரியவகை உயிரினம் கண்ணில்பட்டது. இப்பொழுது எதற்கு ஆக்டோபஸ் என்கிறீர்களா?

கண்கவர் ஆக்டோபஸ்கள்:

இன்றைய தினம் அக்டோபர் 8, உலக ஆக்டோபஸ் தினம் மக்களே!!!! தமிழில் சாக்குக்கணவாய் என்று கூறப்படும் இந்த கடல்வாழ்விலங்கு உலகின் அதிகம் விளக்கமற்ற உயிரினம் என்பது என்னவோ உண்மை தான்……. அதிகம் காணப்படாத (அ) கண்டறியப்படாத உயிரினம் என்ற போதிலும் இந்த 8 கால்களைக் கொண்ட அரிய வகை உயிரினத்தைப் பற்றி புரிந்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். ஆக்டோபஸ்கள் உடலமைப்பு கண்ணைக்கவரும் என்பதில் எவ்வித மாறுபாடும் இல்லை.

ஆக்டோபஸ் –உயிரியல் வகையில்:

எட்டுக்கைகள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு தான் இந்த ஆக்டோபஸ். உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவந்து விடும். இந்த ஆக்டோபஸ், மெல்லுடலிகள் என்னும் தொகுதியிலும், தலைக்காலிகள் என்ற வகுப்பிலும், எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள விலங்கு. தலைக்காலிகள் வகுப்பில் மட்டும் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்கிறார்கள்.

ஃபோக்கஸ் கண்கள் கொண்டவை:

முதுகெலும்பற்ற பிராணிகளிலேயே அதிக வளர்ச்சியடைந்த மூளையையும் கண்களையும் உடையதுதான் ஆக்டோபஸ். நம்மைப் போல அவற்றின் கண்களுக்கும் ஃபோக்கஸ் செய்ய முடியுமாம். வித்தியாசமான வெளிச்சங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முடியுமாம்,  மூளையிலுள்ள ஆப்டிக் லோப் கண்களிலிருந்த பெறும் தகவலை மொழிப்பெயர்க்கவும் செய்கிறதாம். தொடு உணர்வு புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க உதவிசெய்கிறதாம்.

குறைந்த வாழ்நாள்:

உண்மையில் கூறப்போனால், ஆக்டோபஸ்களுக்கு ஆயுள்காலம் ரொம்பவும் குறைவு தான். வட பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆக்டோபஸ் மட்டும் கிட்டத்தட்ட 4-5 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது என்கின்றனர். இனப்பெருக்கத்திற்குப் புணர்ந்த சிலமாதங்களிலேயே ஆண் ஆக்டோபஸ்கள் இறந்துவைடுமாம், முட்டையிட்ட பின்னர் பெண் ஆக்டோபஸ்களும் இறந்துவிடுமாம்.

 

 

புத்திசாலித்தனமான உயிரினத்தை பார்த்துக்கொள்வோம்:

பொதுவாக ஆக்டோபஸ்கள் மிகவும் புத்திசாலிகள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எடுத்துக்காட்டுக்கு கூறவேண்டுமென்றால், முக்குளிப்பவர் தனக்கு எவ்வகை தீங்கும் செய்யமாட்டார்கள் என்பதை அறிந்தவுடன் ஆக்டோபஸின் கூச்சம் சட்டென மறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்கின்றனர். புத்திசாலித்தனமான இந்த கடல்வாழ் உயிரனத்தைப் பாதுகாத்து வாழ்வோம்!!!

vikatan

  • தொடங்கியவர்

யூடியூப் கிட்டார் ஸ்டார்!

 

படம்: பி. வெங்கடேஷ
படம்: பி. வெங்கடேஷ

கிட்டார் காதலர்களும், காதலுக்காக கிட்டார் வசிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய இளைஞர் ஐசாக் தையில். யூடியூபில் இவர் எடுக்கும் ‘தமிழ் கிட்டார் லெசன்ஸ்’–ஐ ஏற்கெனவே 6500-க்கும் மேற்பட்டவர்கள் ‘சப்ஸ்கிரைப்’ செய்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களை யூடியூப்பிலேயே கிட்டாரில் வாசிக்கச் சொல்லித்தந்திருக்கிறார் ஐசாக். ‘மாய நதி’, ‘தள்ளிப்போகாதே’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’, ‘ஹோசானா’ இப்படி நம் மனதைக் கவர்ந்த பல புதிய பாடல்கள் ஐசாக்கின் விரல்கள் மீட்டுவதைப் பார்த்தே கற்றுக்கொள்ளலாம்.

புதிய பாடல்கள் மட்டும்தானா எனக் கேட்பவர்களுக்கு ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’, ‘ஓ பட்டர்ஃபிளை’ உள்ளிட்ட நெஞ்சில் நிலைத்த கானங்கள் பல இருக்கின்றன. “புதுப் பாடல்களைவிடவும் பழைய பாடல்களை வாசிக்கறதுதான் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. ஏனா இப்ப வரும் பாடல்களில் 4 அல்லது 5 கார்ட்ஸ்தான் இருக்கு. ஆனால் பழைய பாடல்களில் நுணுக்கங்கள் எக்கச்சக்கம். கிட்டத்தட்ட 16 கார்ட்ஸ் இருக்கும். அந்த வகை பாடல்களை வாசிக்கறதும் வாசிக்கச் சொல்லித் தரறதும்தான் சவால். அந்தச் சவாலை ஏத்துக்க எனக்குப் பிடிச்சிருக்கு” என்கிறார் ஐசாக்.

இரவு முழுக்க…

சென்னைப் பையனான ஐசாக் தற்போது வசிப்பது ஓசூரில். பகலில் அஷோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை. இரவில் கிட்டாரும் கையுமாக இருப்பதுதான் இவருடைய லைஃப் ஸ்டைல். ஆனால் இவர் யாரிடமும் கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவே இல்லை. “சின்ன வயசுல இருந்தே கிட்டார் வாசிக்கிற ஆசை இருந்தும் ஏனோ கத்துக்கலை. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில பி.பி.ஏ., படிக்கும்போது கல்லூரிக்குள் ஒரு இசைப் போட்டி அறிவிச்சாங்க.

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துக் கல்லூரியின் ‘கிட்டார் கிங்’கும் என்னுடைய நெருங்கிய நண்பனுமான மெல்வின் ஒரே ஒரு நாள் இரவு கிட்டார் வாசிக்கச் சொல்லிக்கொடுத்தான். ‘காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்’ ங்குற அந்தப் பாடலை அன்னைக்கு இரவு முழுக்க வெறித்தனமா வாசிச்சுப் பழகி அடுத்த நாள் மேடை ஏறி எப்படியோ வாசிச்சுட்டேன்” எனச் சிரிக்கிறார் ஐசாக்.

அதற்காக ஒரே இரவில் கிட்டார் கற்றுக்கொண்டுவிடலாம் என நினைத்துவிட வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தினந்தோறும் கிட்டார் வாசித்துப் பழக ஆரம்பித்தார் ஐசாக். சில நாட்கள் நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக்கொண்டு கிட்டார் வாசித்து அப்பாவிடம் திட்டு வாங்கிய நாட்களும் உண்டு எனச் சிரிக்கிறார்.

யூடியூப்தான் ஆசான்

யூடியூப் வழியாகத்தான் இவரும் கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். “பத்து வருஷத்துக்கு முன்னால இங்கிலிஷ் பாடல்களுக்கு மட்டும்தான் நல்ல ஆன்லைன் டுடோரியல் இருந்தது. அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கப் பழகினேன். ஆனால் தமிழ்ப் பாடல்களை வாசிக்கச் சொல்லித்தர அவ்வளவா ஆன்லைன்ல ஆளில்லை. இதனாலேயே நான் கத்துக்கிட்டதை ஆன்லைன் சொல்லித்தரலாம்னு முடிவு பண்ணினேன். அது மட்டுமில்லாம வெறுமனே வேலைக்குப் போய் சம்பாதிக்கறது வாழ்க்கை இல்லை. ஏதாவது செய்யணும்னு தோணுனப்ப யூடியூப்பில கிட்டார் கிளாசஸ் எடுக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் ஐசாக்.

ஸ்கைப் மூலமாகவும் கிட்டார் வாசிக்கச் சொல்லித் தரும் இவரிடம் “என்னுடைய கேர்ள் ஃபிரெண்டுக்கு அடுத்த வாரம் பிரத்டே பாஸ். அப்ப அவங்களை இம்பிரஸ் பண்ணுறதுக்கு ஒரு பாட்டு வாசிக்க டக்குனு சொல்லித் தாங்க” என ஐசாக்கிடம் கேட்கும் பல இளைஞர்கள் இருக்கிறார்களாம்.

இவருடைய கிட்டார் கிளாஸை வீடியோ எடுப்பது இவருடைய ஸ்மார்ட்ஃபோன்தான். அதைச் சரி பார்த்து, யூடியூப்பில் பதிவிட்ட பின்னர் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையெல்லாம் கணக்கிடுபவர்கள் டேவிட், பீட்டர் ஆகிய இவரின் தோழர்கள்.

ஐசாக்கின் ‘மெண்டல் மனதில்’ கவர் சாங், ‘ராஜா –ரஹ்மான் மேஷ் அப்’ வீடியோக்கள் வைரலானதை அடுத்துப் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கன்னட இசையமைப்பாளர் நோபின் பால் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். புதிய தலைமுறை இசைக் கலைஞர்களில் தன்னை மிக்கவும் ஈர்ப்பவர்கள் கிட்டார் இசை கலைஞர் கேபா, பாடகரும் கிட்டார் கலைஞருமான பிரதீப் குமார், இசையமைப்பாளர் ஷான் ரால்டன் என்கிறார் ஐசாக். கூடிய விரைவில் இவர்கள் அனைவரோடும் திரையுலகில் இணைந்து பணியாற்ற கிட்டாரோடு காத்திருக்கிறார் இந்த யூடியூப் கிட்டார் ஸ்டார்!

ஐசக்கின் ‘தமிழ் கிட்டார் லெசன்ஸ்’ - சுட்டி: http://bit.ly/2dMZYa7

tamil.thehindu

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

p46a.jpg

யிர்க் கடிதங்கள்
அணிலொன்று இரைதேடி
குறுகுறு கண்களால்
சுற்றும் முற்றும் பார்த்து
உள்ளிருந்து வெளியேறியது,
சிறு குருவியொன்று
சாம்பல் நிறச் சிறகோடு
கொஞ்சம் மேகம் சுமந்து
வெளியிலிருந்து உள்நுழைந்தது...
உயிர்க் கடிதங்கள் நிரம்பிய
இந்தச் சிவப்புப் பெட்டியை
இன்னமும்
காலிப்பெட்டியெனப் பரிகசிப்பவரும்
அஞ்சல்பெட்டியென உச்சரிப்பவரும்
இரண்டு அற்புதக் கணங்களைத்
தவறவிட்டவர்கள்.

- கார்த்தி

நிழலில் உறைபவன்
எந்நேரமும் ஏதேனும் ஒரு
சிந்தனையில் இருக்கும் அவன்
இடையிடையே
இடது காதில் செருகியிருக்கும்
பறவையின் இறகால்
காது குடைகிறான்
அந்நேரம்
அகக் கண்ணில்
சிறகடிக்கும் பறவைகளை
புன்முறுவலால் வெளியேற்றும்
அவன் அடிமனதில்
ஆயிரம் மரங்களின் நிழல்.

- மகிவனி

ரியான இடத்தில் வைத்தல்
ஒற்றை வெள்ளைப் பூண்டுகளை
உரித்து வைத்திருந்தாள்
அம்மா.
அதை
படத்திலிருந்த பாட்டியின்
பொக்கைவாயில்
பற்களை முளைக்க
வைத்துக்கொண்டிருந்தது
பாப்பா.

- நாகராஜ்


நிழலோவியம்
ஒரு பறவையும்
வந்தமரா நாளொன்றில்
நெடுஞ்சாலையோர
மரக்கிளையொன்று
சூரியனின் துணைகொண்டு
தகிக்கும் தார்ச்சாலை மீது
நொடிக்கொருதரம்
வரைந்து வரைந்து
அழித்துக்கொண்டிருக்கிறது
வெவ்வேறு பறவையின்
விதவிதமான நிழல்களை.

- கே.ஸ்டாலின்

ன்றுமில்லை
கைப் பிடித்து
கண்ணீர் மல்கினார்
அந்தப் பெரியவர்
நான் எந்தப் பேருதவியும்
செய்துவிடவில்லை
அவருக்கு.
சற்று அவர் பேசுவதைக்
கேட்டுக்கொண்டிருந்தேன்.

- ரமணி முருகேஷ்

று தொலைத்த ஆறுகள்
கொண்டுவந்த
லாரித் தண்ணீர் உபயத்தில்
ஆற்றில் இறங்கியும்
மேலுக்குக் குளித்துவிட்டு
கருவறைப் புழுக்கம் போகாது
மேடேறும் தீர்த்தவாரி உற்சவரும்
வேண்டியிருக்கக்கூடும்
மனதுருக
மழைவேட்டல்.

- கார்த்தி

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p38a.jpg

* `கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரே எடையில் இருக்கும் நடிகை!' என ட்ரெண்ட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. அவருடைய உடல் எடை, 55 கிலோவுக்கு மேல் ஒரு கிலோகூட இதுவரை கூடவில்லையாம். தமிழ் சினிமாவின் ஹெவி வெயிட் கதாநாயகிகள் லிஸ்ட்டில், 62 கிலோ எடையுடன் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ஒல்லி கில்லி!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில், கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.`கர்நாடகாவில் நம்ம கட்சிக்கு செல்வாக்கு குறைந்துவருகிறது. நம்ம ஆள் சினிமாவில் நடித்தால்தான் கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்' என்ற ஆலோசனைகளின் பேரில் தேவகவுடாவின் ஆசீர்வாதத்தில் நிகில் ஹீரோவாகி இருக்கிறார். ஃபார்முலா பழசு!

மகன் - தம்பி பாசத்துக்கு இடையே சிக்கித் தவிக்கிறார் முலாயம் சிங். உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தன்னுடைய சித்தப்பா சிவ்பால் யாதவின் ஆட்களை கட்சியில் இருந்து தூக்கியடிக்க, சிவ்பால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கிடையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் பதவியில் இருந்து மகன் அகிலேஷைத் தூக்கிவிட்டு, தம்பி சிவ்பால் யாதவைத் தலைவராக அறிவித்தார் முலாயம். இந்தக் குடும்ப மோதலுக்குக் காரணம் அமர்சிங்தான் எனச் சொல்லப்பட, `தேர்தல் நேரத்தில் இந்த சூப்பர் சண்டை!' என எதிர்க்கட்சிகள் உற்சாகத்தில் இருக்கின்றன. குடும்ப அரசியல்

58,000 கோடி ரூபாய்க்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியிருக்கிறது இந்தியா. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே டீல் பேசப்பட்டு சர்ச்சைக்குள்ளான இந்த ஒப்பந்தத்தை, விலை குறைத்துப் பேசி முடித்திருக்கிறார் மோடி. மணிக்கு 2,000 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்கும் இந்த விமானத்தைக் கண்டறிவதும் தாக்குவதும் சிரமம் என்பதுதான் இதன் சிறப்பு. டீல் இப்போது முடிந்துவிட்டாலும் முதல் விமானத்தின் டெலிவரியே இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்துதான். மோடீல்!

p38b.jpg

பிராஞ்சலீனா ஜோடி பிரிந்துவிட்டது என்பதுதான் கடந்த வார நெஞ்சம் நொறுக்கும் செய்தி. `ஏஞ்சலீனா ஜோலிக்கு, தன்னுடைய அப்பாவைப் பிடிக்காது. அதனால்தான் தனது பெயரில் இருந்தே அப்பாவின் பெயரைத் தூக்கினார். ஆனால் பிராட் பிட், ஏஞ்சலீனாவின் அப்பாவுடன் நட்பானது, குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக்கொள்ளாமல் பிராட் பிட் தொடர்ந்து ஷூட்டிங்குக்காக ஊர்சுற்றுவது என்பதுதான் இருவரின் பிரிவுக்கும் காரணம்' என்கிறது ஹாலிவுட் மீடியா. கண்ணுபட்டுடுச்சோ!

`ஏடிஹெச்டி' எனப்படும் கவனச்சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வீரர்கள், ஊக்க மருந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது ஊக்க மருந்து தடுப்பு நிறுவனமான WADA. ஆனால், இதையே காரணமாக வைத்து நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஏடிஹெச்டி நோயால் பாதிக்கப்பட்டதாக ஊக்க மருந்து உட்கொண்டு பதக்கம் வென்றிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இப்படி சிக்கியவர்களில் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற சிமோன் பைல்ஸும் இருக்கிறார். சிமோன் பைல்ஸ் தோற்றுபோய் இருந்தால் நம்ம ஊர் திபாவுக்கு ஒரு பதக்கம் கிடைத்திருக்கும். ஆனால், சிமோனோ `நான் சின்னக் குழந்தையில் இருந்தே ஏடிஹெச்டி நோய்க்காக மருந்து உட்கொண்டுவருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். போங்காட்டம்!

vikatan

  • தொடங்கியவர்

 

சடலங்களுடன் நடனம்
====================

மடகாஸ்கர் தீவு மக்கள் 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமது இறந்த உறவினர்களின் சடலங்களுடன் இவர்கள் இணைவார்கள். உறவினர்களின் சடலங்களை தோண்டி எடுத்து புதிய துணியைப் போர்த்தி மீண்டும் அடக்கம் செய் மலகாஸியும் பாரம்பரிய வழக்கத்தை ஃபமாடிஹானா என்றழைப்பார்கள். மடகாஸ்கர் தீவுக்கே உரிய சடங்கு இது.

BBC

  • தொடங்கியவர்

மூன்று வார்த்தை சக்சஸ் ஃபார்முலா!

 

family%20-600.jpg


`பிரச்னை இல்லாத மனிதர் ஒருவர் இருக்கிறார்’ என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ‘அட போங்கப்பா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு... இப்போல்லாம் வாழுறதே பெரிய பிரச்னையா இருக்கு’ என்று சலிப்போடு் சொல்வோம். பிரச்னை இல்லாத மனிதர் இருக்கிறார் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் பிரச்னைகளையே முன் வைத்திருக்கிறது.


பணக்காரராக இருந்தாலும் சரி, பரம ஏழையா இருந்தாலும் சரி, இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் நடுவே கிடந்து அல்லாடும் மெஜாரிட்டியான நடுத்தர மக்களானாலும் சரி... எல்லோரும் எதிர்கொள்வது பிரச்னை... பிரச்னை... பிரச்னைகளே!


 `இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று அப்படியே விட்டுவிடவும் முடியாது. காரணம், மனஅழுத்தம், மன இறுக்கம், மனச்சோர்வு தொடங்கி மனச் சிதைவு எனும் மனோவியாதிவரை கொண்டுபோய்விடுவதற்கு இவையே காரணம். குறிப்பாக, இந்தத் தலைமுறையினருக்கு உளவியல் சம்பந்தமான பிரச்னைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக  சொல்கிறார்கள் மன நல மருத்துவர்கள். இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றி இங்கே நாம் ஆராயப் போவதில்லை. ஆனால், அதைக் கடந்து செல்லவும் புதிதாக பிரச்னைகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓர் எளிய வழிமுறை இருக்கிறது. அது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை. மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தினால் போதும், பெரிய சங்கடங்களிலிருந்து சிறிய மனக்கிலேசம் வரை தவிர்த்துவிடலாம். அவை, ‘சாரி...’, ‘தேங்க்யூ...’, ‘ப்ளீஸ்...’ இவை வெறும் வார்த்தைகள் அல்ல. நம் வாழ்க்கைக்கான சக்சஸ் ஃபார்முலா என்றே சொல்லலாம். 

நன்றி - தேங்க்யூ

thank%20-400.jpg


2014-ம் ஆண்டு, அமெரிக்காவின் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோ தத்துவ நிபுணர் சாரா அல்கோ (Sara Algoe) sorry%20400.jpgஎன்பவர் ’தேங்க்யூ’ என்ற வார்த்தை தரும் பலன்களைப் பரிசீலிக்கும்படி ஒரு பரிந்துரையை முன்வைத்தார். அதன்படி, ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு, ஆச்சர்யமான பல முடிவுகளை வெளியிட்டது. ` ‘நன்றி” (Thank you) என்கிற வார்த்தை ஒரு மரியாதையான சொல் மட்டுமல்ல; அதையும் தாண்டி, அது சமூகத்தில் பலருடன் நல்ல உறவை வளர்ப்பதற்கு மூல காரணமாகவும் இருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு. இதுதான், அந்த ஆய்வின் அடிநாதமாக இருக்கும் விஷயம். 


உங்களுக்கு யாரோ ஒரு வேலையை  செய்து கொடுக்கிறார்; உதவுகிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ‘தேங்க்யூ’ சொல்லிப் பாருங்கள். எதிராளி அந்த ஒரு வார்த்தையில் பரம திருப்தி ஆகிவிடுவார். திரும்பவும் உங்களுக்கு உதவத் தயாராகவும் ஆகிவிடுவார்.  

மன்னியுங்கள் - சாரி!

    
வீடு, அலுவலகம் எதுவாகவும் இருக்கட்டும்... ஒரு பெரிய பிரச்னை ஒரு சிறு புள்ளியில்தான் தொடங்கும். அது வெடிப்பதற்கு முன்பாக அதன்முன் சரணாகதி ஆகிவிடுவதே புத்திசாலித்தனம். கணவன்- மனைவிக்கு இடையில், பேருந்தில் பயணம் செய்யும்போது பக்கத்தில் நிற்பவர் காலை மிதிப்பது, பைக்கில் போகும்போது எதிரே வரும் வண்டியை இடிப்பது, என பிரச்னை எதுவாகவும் இருக்கட்டும், ஒரு ‘சாரி’ போதும். நிலைமையை கூலாக்கிவிடும். ’சாரி’ கேட்பது ஒன்றும் கௌரவக் குறைச்சலான விஷயம் அல்ல. ‘அந்த ஆள்கிட்ட போய் நான் மன்னிப்பு கேக்கணுமா? அதுக்கு வேற ஆளப் பாரு’ என்கிற மனோபாவம், பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்குமே தவிர, குறைக்க உதவாது. அதேபோல, ’சாரி’ கேட்பதால், நமக்கொன்றும் நஷ்டம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்டது நாம் இல்லை.

தயவு செய்து... ப்ளீஸ்!

please%20-400.jpg


வங்கிக்கு செல்கிறவர்கள், முக்கியமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ போகிறவர்கள் மறக்கக் கூடாத பொருள் ஒன்று உண்டு. அது பேனா. 100-க்கு 10 பேர் பேனாவை மறந்துவிடுவார்கள் என்பதே யதார்த்தம். நமக்கே அது நடந்திருக்கும். அப்படியான சந்தர்ப்பத்தில், ‘கொஞ்சம் பேனா குடுக்குறீங்களா?’ என்று கேட்கும்போது, அந்த வாக்கியத்தின் முன்னால், ‘தயவு செய்து...’ அல்லது ‘ப்ளீஸ்’ என்று ஒரு வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்களேன். வங்கி வேலை முடிந்து கிளம்புகிறவரே ஆனாலும், அவரால் உங்களுக்கு பேனா இல்லை என்று மறுக்க முடியாது. ‘ப்ளீஸ்...’ என்கிற வார்த்தைக்கு அத்தனை மகத்துவம் உண்டு. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், `ப்ளீஸ்... உங்களால முடியும். தயவுசெஞ்சு கொஞ்சம் இதை பண்ணிக் கொடுங்களேன்’ என்று கேட்டுப் பாருங்கள். எல்லா சந்தர்ப்பத்திலும் அது கை கொடுக்கும். அதேபோல ஒரு க்ளையன்டுக்கு ஒரு வேலையை குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து கொடுப்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், நேரத்துக்கு வேலை முடியவில்லை. அந்தச் சமயத்தில், `ப்ளீஸ்... இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்களேன்’ என்று தன்மையாகக் கேட்டுப் பாருங்கள். க்ளையன்ட் கண்டிப்பாக இறங்கிவருவார். 


அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, ‘தேங்க்யூ’, ‘சாரி’, ‘ப்ளீஸ்’ என்று சொல்வதை ஒரு பழக்கமாக, வாழ்க்கை முறையாகவே வைத்துக்கொள்ளலாம். அது நமக்கு வரும் எத்தனையோ இன்னல்களை தவிர்த்துவிடும்; உறவுகளோடு சுமுகமாக இருக்க உதவும்; நம் வெற்றிக்கு உதவும். திரும்பவும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம். ‘தேங்க்யூ’, ‘சாரி’, ‘ப்ளீஸ்...’ இவை வெறும் வார்த்தைகள் அல்ல; நம் வாழ்க்கைக்கான சக்சஸ் ஃபார்முலா!

vikatan

  • தொடங்கியவர்

 

சுரங்கப்பாதையில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்தில் கிராஸ்ரயில் என்னும் ஒரு புதிய ரயில்பாதையை உருவாக்க லண்டனில் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் இந்த இடங்களில் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 26 மைல் சுரங்கப்பாதை, லண்டனின் தெருக்களுக்கு கீழ் தலைநகரையும் தென் கிழக்கு இங்கிலாந்தையும் இணைக்கிறது

BBC

  • தொடங்கியவர்

p124.jpg

கொஞ்சம் பயந்து வருது

வெளுத்துக்கட்டிய மழையால் சென்னை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களே வெள்ளத்தில் தத்தளித்து ஒருவருடம் முடியப்போகிறது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாததாலோ என்னவோ... இப்பல்லாம் பத்து நிமிசம் தொடர்ந்து மழை பேஞ்சாலே நூடுல்ஸ், பிரெட் பாக்கெட் வாங்க கடைக்குக் கிளம்பிடுறாங்க. சோஷியல் மீடியாவில் மழைக்கவிதை எழுதிட்டிருந்தவங்ககூட பதறுவதால் #chennairains டேக் எப்போதும் பிஸியாகவே உள்ளது. பழசெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?!

p124b.jpg

இரட்டை தனுஷ்

சிங்கிள் மேனாக இதுவரை வில்லன்களைப் புரட்டியெடுத்துக்கொண்டிருந்த தனுஷ், ‘கொடி’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் இசையில் பட்டாசு வெடிக்க தீபாவளியையொட்டி திரையில் களமிறங்குகிறது. இப்படத்தின் ‘மோசன்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் கடந்த வாரம் வெளியிட்டார். ‘தொடரி’யால் நொந்துபோயிருந்த ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது இந்த ‘மோசன்’ போஸ்டர். அதனால்தான் என்னவோ வெளியான சில நாட்களில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்ததோடு ட்விட்டர் ட்ரெண்டிலும் #kodimotionposter சேர் போட்டு உட்கார்ந்தது. அந்த ஹாலிவுட் படம் என்னாச்சுங்க சார்?

p124a.jpg

பாகுபலிடா

ட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்? பாகுபலியோட அடுத்த பார்ட் எப்போ சார் வரும்? இயக்குநர் ராஜமெளலி எங்க போனாலும் இந்தக் கேள்விகள் அவரை விடாமல் துரத்தின. அடுத்த வருசம் ஏப்ரல் 28 படம் ரிலீஸ்னு இப்போ அறிவிச்சிருக்கு படக்குழு. அதுமட்டுமில்லாம இதே படம் அனிமேசன் சீரிஸாகவும் வெளியாகும்னு அறிவிப்பு வந்திருக்கு. இதெல்லாத்தையும்விட பாகுபலி ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாக மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் பாகுபலி சிலை இடம் பெறப்போகுது. இது போதாதா #baahubali ட்ரெண்ட் அடிக்க!

p124c.jpg

நிஜ ஹீரோக்கள்

சினிமாவில் பறந்து பறந்து வேலை செய்றவங்க ஸ்டன்ட் நடிகர்கள். ஸ்டன்ட் யூனியன் இந்த வருஷம் 50-வது வருசத்துல அடியெடுத்து வைக்குது. இவர்களைப் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் ‘சினிமா வீரன்’ ங்கிற பெயரில் ஆவணப்படம் இயக்கப்போறதும், இதற்காக சூப்பர்ஸ்டார் பின்னணிக்குரல் கொடுக்கிறதும் பழைய செய்தி. ஆவணப்படம் இயக்குறதோட நிற்காம, மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்திச்சு சினிமா ஸ்டன்ட் நடிகர்களுக்கும் தேசிய விருது கொடுத்து கெளரவப்படுத்தணும்னு ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை வெச்சிருக்காங்க. இந்தச் செய்தியைத் தன்னோட ட்விட்டர் பக்கத்தில் தெரிவிச்ச உடனே #CinemaVeeran #50YearsOfStuntUnion எல்லாம் ட்ரெண்ட்ல கலக்க ஆரம்பிச்சிருச்சு. நல்ல விஷயமுங்கோ!

p124d.jpg

தங்கத் தருணங்கள்

வியட்நாமில் கடந்த வாரம் நடந்த ஆசிய அளவிலான கடற்கரை கபடிப்போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி ஐந்தாவது முறையும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆடவர் அணியும் தங்கப்பதக்கத்தை வென்றன. யூத் எல்லாம் கையில் ரிமோட்டை எடுத்தால், கிரிக்கெட் மேட்ச்தான் பார்ப்பாங்கங்கிற நினைப்பை மாற்றிக்கொள்ளும் விதமா, இப்போட்டிகள் நடக்கும்போது போட்டி போட்டு ட்வீட் போட்டுத்தள்ளினர். இதனால #AsiaCup #hockey #Kabaddi போன்ற டேக்குகள் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவையாக இடம்பெற்றன. சூப்பர் பாஸ்!

p124e.jpg

காந்தி மஹான்

ன்முறை இல்லாம அஹிம்சை மூலம் அடக்குமுறையை வெற்றிகொண்டவர் மகாத்மா காந்தி. அவரோட பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுக்க அவர் பேச்சுதான். உலக அரசியல் தலைவர்களிலிருந்து உள்ளூர் மக்கள்வரை எல்லாரும் பல லட்சம் ட்வீட்கள் தெறிக்கவிட்டு #gandhijayanti #MahatmaGandhi #Gandhi போன்ற டேக்குகளை உலக ட்ரெண்டில் கொண்டுவந்தனர். இதற்கு மத்தியில் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்க் காந்திக்கு மரியாதை செலுத்த ராஜ்காட் வராமல் கோல்ஃப் ஆடிய புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கு. அரசியல்ல இதெல்லாம்...

p124f.jpg

அடுத்த அதிரடி

கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது பெளலர் வீசும் பந்து, கீப்பரைப் போய்ச் சேர்வதற்குள் சோசியல் மீடியாவில் ஆயிரக்கணக்கில் ட்வீட்கள் வந்து விழும் காலம் இது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில், சேஸிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் குவாண்டின் டி காக் 113 பந்துகளில் 178 ரன்களை விளாசி தனது அணியை வெற்றிபெறச் செய்தார். யாருய்யா இவரு? இப்படி பேட் புடிச்ச சந்திரமுகியா ரொம்ப உக்கிரமா இருக்காருன்னு இவரைப்பற்றிப் பேசியதில் @QuinnyDeKock69 பெயர் உலக அளவில் ட்ரெண்ட் அடித்தது. கிழி கிழி கிழி!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நோர்வே பிரதமர் பாராளுமன்றில் போக்கிமோன் கோ விளையாடியதால் சர்ச்சை

நோர்வே பிரதமர் பாராளுமன்றில் போக்கிமோன் கோ விளையாடியதால் சர்ச்சை

போக்கிமோன் கோ உலகம் முழுவதும் ஒரு வைரஸ் விளையாட்டாக வலம் வருகிறது.

இந்த விளையாட்டிற்கு பலர் அடிமையாகியுள்ளனர், நோர்வே பிரதமர் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போக்கிமோன் கோ விளையாட்டை தற்போது வரை இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற 15 நாடுகளில் தடை செய்துள்ளன.

கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும் இந்த கேம் பலருடைய கற்பனையை வசமாக்கியுள்ளது, இந்நிலையில் நோர்வே பிரதமர் எர்னா சோல் பெர்க் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ மொபைல் விளையாட்டை விளையாடி உள்ளார்.

இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

 

நவீன பிரிட்டிஷ் கலைபடைப்புகள்

நவீன பிரிட்டிஷ் கலைக்கு வழங்கப்படும் டர்னர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கலைபடைப்புகள் இவை. இருபத்தி ஆறாயிரம் டாலர் மதிப்பிலான ஒரு பென்னி நாணயங்களின் அலங்காரம் ஒன்று, லண்டன் போக்குவரத்து துறையை பாராட்டும் படைப்பு ஒன்று மற்றும் செங்கற்களால் மட்டுமே செய்யப்பட்ட உடை ஆகியவை லண்டனின் டேட் பிரிட்டன் கேலரியில் வைக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆரின் நான்காவது கால்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு

kal2.jpg

அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று.

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் இந்த மக்கள் கவிஞர். தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.

 

நிருபரிடம் கூறிய வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

pattukottai%202.jpg

 

இளம்வயதில் பாடல் எழுதியது எப்படி?

‘‘ஒருநாள் எங்கள் ஊரில் உள்ள வயலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரையில் இருந்த வேப்பமரத்துக்குக் கீழ்வந்து அமர்ந்தேன். நல்ல நிழலும், குளிர்ந்த தென்றலும் என்னைத் தழுவியிருந்த அந்த வேளையில், ஏரியைக் கண்டு ரசித்தேன். தண்ணீர் அலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள், ‘எம்மைப் பார்... எம் அழகைப் பார்’ என்று குலுங்கின. அந்தச் சமயத்தில், ஓர் இளங்கெண்டை மீன் பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் இருந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்திவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. இதைப் பார்த்த நான்,

‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!

கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...

தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்

துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதில் கவிதை பாடிய அனுபவத்தை ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார் கல்யாணசுந்தரம்.

 

ஜீவா மூலம் பாடல் எழுதும் வாய்ப்பு!

பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் தலைமையில்தான் அவருடைய திருமணம் நடந்தது. 1954-ம் ஆண்டு ஜீவாவுடன் நெருங்கிய நண்பராக இருந்த காலத்தில் விவசாய சங்க மாநாட்டுக்காக ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் தயாரிக்கப்பட்டது. அதில், பாடல் எழுதும் வாய்ப்பைத் தேடித்தந்தார் ஜீவா.

‘தேனாறு பாயுது...

செங்கதிரும் பாயுது...

ஆனாலும் மக்கள்

வயிறு காயுது!’ என்று அவர் எழுதிய அந்தப் பாடல்தான் பின்னர் திரைப்படத்தில் இடம்பெற்றது.

‘‘கல்யாணசுந்தரம், அவருடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்திருக்கிறார்’’ என ஜீவா சொல்லியிருக்கிறார். ‘‘இதனால்தான் அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது’’ என்று சொல்பவர்கள் பலர்.பல்வேறு தொழில்களைச் செய்த அனுபவமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் நிறைந்திருந்தன. ‘‘கல்யாணசுந்தரத்தின் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார்.ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

 

தாயால் வளர்ந்தேன்...

தமிழால் அறிவு பெற்றேன்...

நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...

நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்தநிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்.

pattukottai3.jpg

சிவப்புக்கொடி!

சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கல்யாணசுந்தரம். அப்போது, வழியில் ஓர் இடத்தில் பள்ளம்தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுது பார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கல்யாணசுந்தரம் தன்அருகிலிருந்தவரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள்நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.

‘நண்டு செய்த தொண்டு!’

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது   கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்குஇப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்கவயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்கு பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில் தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலைச்எழுந்ததும், வயலுக்குச்சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாக தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.இதையே தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்று தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை,  ‘ஜனசக்தி’இதழில் வெளியானது.

மனைவிக்கு சன்மானம்!

ஆடை கட்டி வந்த நிலவோ...

கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ’ என்று 

அவர் எழுதியதுகூட திருமணத்துக்கு முன் அவர் பார்த்தபெண்ணைவைத்து எழுதிய பாட்டுதான். ஒருநாள் அவருடைய அண்ணன்   மனைவிக்கு வளைகாப்பு. அன்று அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப்போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவி கையில் கொடுத்து அழகுபார்த்தவர் கல்யாணசுந்தரம்.

pattukottai_kalyanasundaram_577.jpg

சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதினார். இறக்கும்காலம்வரை தன் புரட்சிகரமான பாடல்களை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தார் கல்யாணசுந்தரம்.

‘இரைபோடும் மனிதருக்கே

இரையாகும் வெள்ளாடே...- என்கிற பாடல் குறித்து,

‘‘எளிய சொற்கள், ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை’’ என்று தன் கருத்தைப் பதிவுசெய்தார் குன்றக்குடிஅடிகளார்.  ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ளநல்லவரின் கூட்டாளி’’ என்றார் பட்டுக்கோட்டை ஜெயகாந்தன். இப்படி  பலரின்புகழுரைகளுக்குக் காரணமாய் இருந்தவர் மக்கள் கவிஞர்.

‘மேலே போனா எவனும் வரமாட்டான்!’

அந்தக் காலத்தில், திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். ஒரு விழாவில் அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கல்யாணசுந்தரம் சந்தித்தபோது (கண்ணதாசனைக் குறிப்பிட்டு), ‘‘கவிஞர்கள்என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக்கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’ என்று கோபத்துடன் கேட்டாராம்.கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத இந்த மக்கள் கவிஞர், 1959- ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன்,

வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே! - என எழுதியிருந்தார்.

 

கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

‘தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கி விடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் - மேலே

போனா எவனும் வரமாட்டான் - இதப்

புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’ - என்று எழுதியிருந்தார்.

 

ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான்!

vikatan

  • தொடங்கியவர்

ஒருவரையொருவர் காப்பாற்றிய குடும்பமும் குண்டுக் கரிச்சானும்

 

Penguin sitting on someone's head

 

இந்த கதை குருவிக்கூட்டை விட்டு கீழே விழுந்ததால், ஒரு குருவிக்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையே மலர்ந்த உறவைப் பற்றி விவரிக்கிறது.

ஒரு நாள் வீசிய பலமான காற்று குண்டுக் கரிச்சான் குருவிக்குஞ்சு ஒன்று கூட்டை விட்டு கீழே விழச் செய்தது. நோவா என்கிற சிறுவன் அதை கண்டெடுக்கும் வரை அது அங்கேயே கிடந்தது.

நோவா புளூமும் பென்குயினும் 

அதனை எடுத்த நோவா, துணியில் சுற்றி தன்னுடைய தாய் சேமிடம் கொடுத்தார். அவர் அதனை தன்னுடைய மடியில் வைத்து கொண்டு காரை நோக்கி சக்கர நாற்காலியை உருட்டி சென்றார்.

Sam Bloom in her wheelchair 

வீட்டில், குருவியை வெப்பமாக இருக்கும் வகையில் துணியில் சுற்றி பாதுகாத்தனர். உறுதியற்ற தலையை கொண்டிருந்த அந்த குண்டுக் கரிச்சானின் குருவியின் ஒரு பக்க இறகு தொங்கி கொண்டிருந்தது, அது குஞ்சிப் பொரித்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தது.

பென்குயினும், குடும்பமும் 

இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அதற்கு உணவு ஊட்ட வேண்டும். இல்லாவிட்டால் அது உயிர் பிழைக்காது என்று கால்நடை மருத்துவர் ஆலோசனை அளித்தார். புளூமின் குடும்பம் அந்த சிறிய குருவியின் உயிரை காப்பாற்ற தீர்மானித்தது.

    பென்குயினும், குடும்பமும்

அதனுடைய கறுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகளும், பெரிய பாதங்களும் பென்குயினை நினைவூட்டியதால், அதனை பென்குயின் என்றே பெயரிட்டு அழைத்தனர்.

பென்குயினும், குடும்பமும் 

பென்குயினை தத்தெடுத்து கொண்ட இந்த குடும்பம் உயிர் பிழைத்து கொள்வதை பற்றிய அனுபவத்தை பெற்றிருந்தனர். சில மாதங்களுக்கு முன்னதாக, சேம் கூரையிலிருந்து விழுந்து முதுகு உடைந்துவிட்டது. அவரால் நடக்க முடியாமல் போராடினார். ஓடவும், நீர் சறுக்கவும் முடியாததால், அவர் கோபமாகவும், மன அழுத்தத்துடனும் காணப்பட்டார்.

பென்குயின் சேமின் தோள்பட்டயில் அமர்ந்திருப்பதை விரும்பியது. 

சேமின் மடியிலும், தோள் பட்டையிலும் உட்கார்ந்து இருப்பதை பென்குயின் விரும்பியது. அந்த துணையை விரும்பிய சேமும் தன்னுடைய மன அழுத்தங்களை அதன் மூலம் தீர்த்து கொண்டார்.

”நான் அதனிடம் பேசுவேன். புகார் தெரிவிப்பேன். நான் எப்படி இருந்தேன் என்று கூறுவேன். பென்குயினுக்கு அனைத்தும் தெரியும்” என்கிறார் சேம்.

பென்குயினும் சேமும் உடற்பயிற்சி செய்கிறார்கள்

 

பென்குயின் வீட்டை சுற்றி சுதந்திரமாக பறந்து பையன்களின் படுக்கைகளில் தூங்கியது. அது பிடித்து விளையாட சிறிய குச்சிகளை அவர்கள் எறிவர். சிலவேளையில் அது குருவி என்பதை விட நாய் போல விளையாடியது.

இந்த குண்டுக் கரிச்சான் குருவியின் செயல்பாடுகளை தந்தை கேமரன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

பென்குயின் ஒருவரின் தலையில் அமர்ந்திருக்கிறது. 

பென்குயின் கழிவறை செல்வதற்கு மட்டும் பழக்கப்படவில்லை. அது வலிமையாக வளர தொடங்கியதும், அதை வெளியே பறந்து சுற்றிவர ஊக்கமூட்டினர். படிப்படியாக அது பறந்து சென்றது. திரும்பி வரவேயில்லை.

பென்குயினும், குடும்பமும் 

புளூமின் குடும்பம் பென்குயின் போய்விட்டதை மிகவும் உணர்கிறார்கள். அவர்கள் ஒருவொருக்கொருவர் இனி யாரும் தேவையும் இல்லை. அது பென்குயினுக்கு சிறகடித்து பறக்க வேண்டிய தருணம்.

சேமுக்கும் புதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவர் படகோட்டுவதற்கு தொடங்கிவிட்டார்.

அந்த குண்டுக் கரி்ச்சான் குருவியை அவர்கள் காப்பாற்றியதை போல அது அவர்களையும் காப்பாற்றி விட்டது என கேமரன் எண்ணுகிறார்.

பென்குயினும், குடும்பமும்

 

BBC

  • தொடங்கியவர்
இயற்கையுடன் ஒன்றித்து வாழ்வர்

 

article_1475645073-iykiguo.jpgநாடோடிகளாக வாழ்பவர்களுக்கு நோய்நொடி என எதுவுமே இல்லை என்பார்கள். அவர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்வார்கள்.

குறவர்கள், காட்டு வாழ்க்கையுடன் சங்கமித்து வாழும் மக்கள் எல்லோருமே, நவீன வைத்திய முறையை நாடுவதில்லை.

குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்காத பெற்றோர்களில் பலர், தங்கள் பிள்ளைகளின் மனஅழுத்தம் பற்றி உணராமலேயே இருக்கின்றார்கள்.

இத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகளில் பலருக்கு, ‘ஒட்டீசியம்’ என்ற நோய் பீடித்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

 அண்மைய இந்திய ஆய்வுகளின் பிரகாரம், குறவர்களின் பிள்ளைகள் எவருக்குமே ‘ஒட்டீசியம்’ எனும் நோய் இல்லவே இல்லை என்கின்றனர். அவர்கள் பெற்றோருடன் களிப்புடன் வாழ்கின்றனர். 

  • தொடங்கியவர்

 

குட்டி நண்பன்
=============
உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவிலான ரோபோவை டொயோட்டா உருவாக்கியுள்ளது. மனிதர்களின் ‘துணையாக’ இருக்கவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை 'செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய’ நண்பன் என டொயோட்டா வர்ணித்துள்ளது.

BBC

  • தொடங்கியவர்

இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகராகவும், மனித நேயமுள்ள ஒரு அரசியல்வாதியாகவும் விளங்கிய, சிறுபான்மையினராலும் மதிக்கப்பட்ட
விஜய குமாரணதுங்க அவர்களின் பிறந்த தினம்.

14568071_1150106738371352_23428263263182

  • தொடங்கியவர்

"சொப்பன சுந்தரி" கார் இப்போது யாரிடம்???

" இந்தியாவிலேயே... ஏன் வேர்ல்ட்டுலேயே கார் வச்சிருக்குற ஒரே கரகாட்ட கோஷ்டினா அது நாம தான்..."... வேர்ல்ட் ஃபேமஸான இந்த கரகாட்டக்காரன் வசனத்தை நினைச்சா கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்ததா நம்ம கண்ணுக்கு முன்னாடி நிக்குறது... அந்த சிகப்பு கலர் நீளமான  கார் தான். ஹாலிவுட்டின் அப்படியான சில படங்கள்... சில கார்கள்... :

 

ஜேம்ஸ் பாண்ட் - ஆஸ்டன் மார்ட்டின் DB 5 :

jb.jpg

"கார்"னா... ஜேம்ஸ் பாண்ட் தான்... 1964யில் வெளியான "கோல்ட் ஃபிங்கர்" படத்தில் தான் முதன்முதலில் ஆஸ்டன் மார்டின் கார் உபயோகப்படுத்தப்பட்டது. ஆஸ்ட்டன் மார்டின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டேவிட் பிரவுனை பெருமைப்படுத்தும் வகையில் DB வரிசையிலான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் வருவது DB5 . 4000 சிசி எஞ்சின் திறன்... 282 பிஎச்பி... 1502 கிலோ... அதிகபட்ச வேகம் 230 கிமீ... என அந்தக் காலத்தின் சூப்பர் ஹீரோ DB5. 

கோல்ட் பிங்கரில் உபயோகப்படுத்தப்பட்ட வண்டியை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் ஏலத்தில் விற்றது. பலரின் கை மாறி... 1997யில் ஃப்ளோரிடாவில் அது திருடு போனது. அதன்பின், இன்று வரை அந்த கார் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை. 

ஹெர்பி - ஃபோக்ஸ் வேகன் "பீட்டல்" :

be.jpg

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரின் உத்தரவின் பேரில்... ஃபோக்ஸ் வேகன் தயாரித்த கார் தான் "பீட்டல்". 2 கதவுகள், 4 இருக்கைகள் என சின்ன வண்டி தான். அனைத்து மக்களும் காரில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் ஹிட்லர் இதை உருவாக்கச் சொல்லியிருக்கிறார். இதை வடிவமைத்தவர் ஃபெர்டினான்ட் பார்ஷே... இவர் தான் பார்ஷே கார் நிறுவனத்தின் நிறுவனர். முதலில் ஃபோக்ஸ் வேகன் 1200, 1300, 1400 என்று எண்களையே பெயராகக் கொண்டு வந்தது. பின்பு, வண்டி பார்ப்பதற்கு "வண்டு" போல் இருக்கவே... மக்களால் "பீட்டல்" என்று செல்லமாக அழைக்கப்பட்டு... பின்பு, அந்தப் பெயரையே நிரந்தரமாகக் கொண்டது. 

1968யில் வெளியான "லவ் பக்" மற்றும் 2005யில் வெளியான "ஹெர்பி: ஃபுல்லி லோடட்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வரும்..."பீட்டல்".

காஷ்மோரா ட்ரெயிலர் பாத்தாச்சா ப்ரோ? பாக்கணும்னா இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க..

ஜுராசிக் பார்க் - ஃபோர்ட் எக்ஸ்ப்ளோரர் XLT :

jp.jpg

மைக்கேல் க்ரீச்டன் எழுதிய "ஜுராசிக் பார்க்" நாவலில் டொயட்டோ வண்டிகள் உபயோகப்படுத்துவது போன்று தான் எழுதியிருந்தார். ஆனால், நாவல் படமாக்கப்படுவது தெரிந்ததும் ஃபோர்ட் நிறுவனம் தானாக முன்வந்து தன்னுடைய புதிய வண்டியான எக்ஸ்ப்ளோரரை கொடுத்தது. இந்தப் படத்திற்காக மொத்தம் 7 வண்டிகள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்தில் இடம் பெற்ற பிறகு எக்ஸ்ப்ளோரரின் விற்பனை அதிகரித்ததாக ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்தது. 

கான் இன் சிக்ஸ்டி செகன்ட்ஸ் - ஷெல்பி ஃபோர்ட் மஸ்தாங் GT - 500:

69.jpg

தம்பி பிணையக்கைதியாக... 72 மணிநேரங்களில்... 50 கார்களை திருட வேண்டும். இப்படி ஒரு கதையில் ஹீரோவுக்கு நிகராக படத்தில் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது மஸ்தாங் GT 500. 5.7 லிட்டர், V8 கோப்ரா ஜெட் எஞ்ஜின் என அசத்தலான இந்த வண்டியை படத்தில் செல்லமாக "எலியனர்" என்றழைப்பார்கள். 

ட்ரான்ஸ்பார்மர்ஸ் - செவர்லே கேமரோ : 

tra.jpg

அந்த நீளமான... மஞ்சள் நிறம்... நடுவில் இரண்டு கருப்பு கோடு... அதே தான். ட்ரான்ஸ்பார்மர்ஸ் படத்தின் "பம்பிள்பீ", செவர்லே கேமரோ. 1970 களில் போர்ட் மஸ்தாங் அமெரிக்காவின் தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக் கொண்டிருந்தது. அதை அடக்க செவர்லேவின் அறிமுகம் தான் கேமரோ. ஆரம்ப காலகட்டத்தில் செவர்லே தன் கார்களின் பெயர் "C" யைக் கொண்டு தொடங்க வேண்டுமென்று மெனெக்கெடும். ஆனால், இந்த வண்டிக்கான சரியான பெயர் அமையவேயில்லை. அப்பொழுது, செவர்லேவின் விற்பனை அதிகாரி ஒருவருக்கு ப்ரெஞ்ச் டிக்‌ஷனரியைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது "கேமரோ" என்ற வார்த்தைக் கண்ணில் பட்டிருக்கிறது. அதற்கு சகா, நண்பன் என்ற பொருள். நன்றாக இருக்கிறதே என்று... செவர்லே தன் காருக்கு அதே பெயரை சூட்டியது. 

 

தி இத்தாலியன் ஜாப் - மினி கூப்பர்:

ij.jpg

  தங்கக் கட்டிகளைக் கொள்ளையடிக்கும் கதை. 1969யில் வெளியான இத்தாலியன் ஜாப் படத்தில் பிரிட்டீஷ் மோட்டார் கார்ப்பரேஷன்(பிம்சி) தயாரித்த மினி கூப்பர் கார்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் படத்திற்குப் பிறகு, பலரும் விரும்பும் காராக மினி மாறியது. 1994யில் அந்த நிறுவனத்தை பி.எம்.டபிள்யூ நிறுவனம் கைப்பற்றியது. 2003யில் பயன்படுத்தப்பட்டது அந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தயரிப்பு தான். 

 

தி ஃபாஸ்ட் அன்ட் தி ஃப்யூரியஸ் - டாட்ஜ் சார்ஜர்:

ff.jpg

ஃபாஸ் அன்ட் தி ஃப்யூரியஸ் வரிசைப் படங்களில் எத்தனையோ கார்கள் வந்தாலும் ஹீரோ டொரிட்டோவின் ஃபேவரைட் 1970 டாட்ஜ் சார்ஜர் தான். அமெரிக்கத் தயாரிப்பான சார்ஜர் 5.17 மீட்டர் நீளம், 1,93 மீட்டர் அகலம் என அசத்தலாய் இருக்கும். இதன் இஞ்சின் உருமும் சத்ததிற்காகவே உலகில் பல கோடி கார் ரசிகர்கள் உண்டு...

 இவ்வளவு விஷயங்களையும் சொல்லிட்டு நம்ம ஊர் வண்டிய பற்றி சொல்லாமல் இருந்தா எப்படி???...

கரகாட்டக்காரன் படத்தில் வருவது  செவர்லே தயாரிப்பான "இம்பாலா", 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு "மான்" வகை தான் "இம்பாலா". அது துள்ளி குதித்து ஓடும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ... அதை அடிப்படையாகக் கொண்டு வண்டி வடிவமைக்கப்பட்டது. இம்பாலா கார் வாங்க விரும்புபவர்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்குப் போய் வாங்கலாம்... இன்னும் "இம்பாலா" அங்கு விற்பனையில் இருக்கிறது. 

imp.jpg

சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்காங்கறது தெரியலைன்னாலும் பரவாயில்ல... இப்ப இந்த கார யாரு வச்சிருக்காங்க???

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.