Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
 

#Alertday பெண்களை குறிவைக்கும் நோய் இது!

alert_14430.png

இன்று ’World Ostoporosis Day’. 30 வயது கடந்த பெண்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களை அதிகமாக பாதிக்கும் ’எலும்புருக்கி நோய் தடுப்பு தினம்’ தான் இன்று.


ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம், பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் மிகுதியாக பாதிப்படையும். 


பச்சை இலை காய்கறிகளான ப்ரோக்கோலி மற்றும் கீரை, அக்ரூட் பருப்புகள் (Walnuts ), டோஃபூ மற்றும் சோயா, சுண்டல் உள்ளிட்ட உணவுகள் எலும்புகளை வலுப்படுத்தும். 


யோகா, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை மூலமாக எலும்பு அடர்த்தியை தக்க வைத்து, மூட்டு வலி வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14729314_1160971703951522_68428365752036

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் - 'வெள்ளை மின்னல்' என்று அழைக்கப்பட்ட உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அலன் டொனால்டின் பிறந்தநாள்.

Happy Birthday Allan Donald

  • தொடங்கியவர்

பிரித்தானிய இளவரசியாக மாறிய ஆண்

 

 

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் போல் உருமாறிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The-Duke-and-Duchess-of-Cambridge-visit-

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பாலோ என்ற 33 வயதுடைய நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் தன்னுடைய திறமையினால் முக்கிய பிரபலங்களை போல் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டவர். 

இவர் அண்மையில் உலகில் பிரபல நட்சத்திர நடிகைகளான மாறிச் காரே, மடோனா, பேயொன்ஸ், மைலி சைரஸ், ரிஹான்னா மற்றும் ஏஞ்சலினா ஜோலி போன்றும் தன்னை உருமாற்றியுள்ளார்.

PAY-EXCLUSIVE-Watch-as-incredible-make-u

 

பெண்களை போல் மாறுவதில் பாலோ ஒரு தலைசிறந்தவர் தான் என்று கூறவேண்டும். இப்படி பண்முகத்தன்மை கொண்ட இவர் முக்கிய பிரபலங்கள் போல் மாறுவதற்கு அதிகப்படியான செலவுகள் எல்லாம் செய்வதில்லை. சாதரணமாக பெண்கள் பயன்படுத்தும் அழுகு சாதனப் பொருட்களையே பயன்படுத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் போன்று பாலோ மாறியுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். 

PAY-EXCLUSIVE-Watch-as-incredible-make-u

அதுமட்டுமில்லாமல் முதலில் தான் எவ்வாறு இது போன்று செய்கிறேன் என்பதை வெளியில் கூறாமல் இருந்த பாலோ தற்போது கேட் மிடில்டன் போல் மாறியது எப்படி என்பதைப் போன்ற வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து 1993 ஆண்டுகளில் இருந்த இளவரசியான டையானாவைப் போன்றும் மாறியது எப்படி என்பதைப் போன்ற புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

PAY-EXCLUSIVE-Watch-as-incredible-make-u

PAY-EXCLUSIVE-Watch-as-incredible-make-u

 

virakesari.lk

  • தொடங்கியவர்

14753863_1160966880618671_90148827822938

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் துடுப்பாட்ட வீரரும், தற்போதைய கலகலப்பான நேர்முக வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்துவின் பிறந்தநாள்.

Happy Birthday Navjot Singh Sidhu

 
  • தொடங்கியவர்

போதும்டா சாமி... மிடில! உலக தகவல் மழை தினம் #InformationOverloadDay!

InformationOverload_19079.jpg

நம்மில் பலரும் வேலை செய்துகொண்டிருக்கும்போது வாட்ஸ்அப் நோட்டிஃபிகேசன் ஒலி கேட்டால், செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு மொபைலைக் கையில் எடுப்பவர்கள்தான். Information Overload எனப்படும் செய்திச்சுமையால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி இது.

உலகின் பல நாடுகளில் அரசு சார்ந்த துறைகளும், தனியார் நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த வேளையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் இருந்து மொபைலில் வரும் சோசியல் மீடியா நோட்டிஃபிகேசன் வரை பெரும்பாலானவை செய்திச் சுமையாகக் கருதப்படுகிறது. நமக்கு நினைவுபடுத்தும் இவையெல்லாம் நல்லதுதானே என நாம் யோசித்தாலும், மனிதனின் மூளையானது ஒரே நேரத்தில் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே நினைவில் ஏற்றிக்கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. அதையும் மீறி அதிகத் தகவல்களைப் பதியவைக்கும்போது ஞாபகமறதி, செயல்திறன் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நமக்கு உணர்த்தவே உலகம் முழுவதும் வருடந்தோறும் அக்டோபர், 20-ம் தேதியை செய்திச்சுமை தினமாகக் (Information Overload Day) கடைப்பிடிக்கிறார்கள்.

இந்தச் செய்திச்சுமையால் நாம் பாதிக்கப்படுவது நமக்கே தெரியாது என்பதுதான் உண்மை. அலுவலகம் சார்ந்த வேலைகளைப் பெயரளவில் முடிப்பது, புதிய ஐடியாக்களை செயல்படுத்தாமல் வழக்கமான வேலைகளை மட்டும் செய்து ஒப்பேற்றுவது போன்ற பாதிப்புகள் செய்திச்சுமையால் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்காகத்தான், எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்த முடியாத காட்டுக்குள் ஊழியர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்வது, டீம் மீட்டிங் என வெளியே அழைத்துச் செல்வது போன்றவற்றைத் தொடர்ந்து செய்கிறார்கள். இது மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதோடு ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அமைகிறது.

information-overload_19319.jpg

இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது?

பெரும்பாலும் நோட்டிஃபிகேசன்கள் மூலமாகத்தான் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. வெவ்வேறு விதமான செய்திகள் இன்பாக்ஸில் கொட்டும்போது ஒன்றைக் கவனித்துவிட்டு இன்னொன்றில் கவனம் செலுத்தாமல், மறந்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. மிக அவசியமான விஷயம் தவிர்த்து, மற்றவைகளை நோட்டிஃபிகேசனிலோ, இன்பாக்ஸிலோ வராதபடிக்கு ஃபில்டர் செய்வதால் பாதி செய்திச்சுமைகள் குறைகின்றன.

தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிருங்கள். உங்கள் மூளைக்கும் ஓய்வு தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வது, புத்தகம் வாசிப்பது போன்றவற்றில் உங்கள் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.

மாதத்தில் ஒருநாள் சோசியல் மீடியாவிற்கு விடுமுறை அளியுங்கள். வார இறுதியில் நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

இனிமேல் அலுவலகத்தில் தேவை இருந்தால் மட்டும் சிசி போட்டு மெயில் அனுப்புங்கள். அப்புறம் அனுப்பிய மெயில் போய்ச் சேருவதற்குள் 'நான் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். பார்த்து உடனே ரிப்ளை பண்ணு' என்று சீட் முன்னால் போய் நிற்காதீர்கள். 

சொல்லவரும் விஷயத்தை சுருங்கச் சொல்லுங்கள். நன்றி, மகிழ்ச்சி, மாதிரி ஒரு வரியில் ரிப்ளை அனுப்புவதும் வேண்டாம். பக்கம் பக்கமாக சம்பந்தமில்லாமல் எழுதுவதும் வேண்டாம். மேக் இட் சிம்பிள்.

இது பற்றிய தகவல்களைச் சுருக்கமாக இந்த வீடியோவில் காணலாம்...

 

 

vikatan

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட்செட்டர் - ஶ்ரீதரின் நினைவலைகள்!

ar5105Sridhar_16534.jpg

தமிழ்சினிமாவில் டிரெண்ட் செட்டர் படங்களைத் தந்த இயக்குனர்களைப் பட்டியலிட்டால், ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், என்றுதான் பட்டியலிடவேண்டும். இவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஶ்ரீதர். ஶ்ரீதரின் நினைவுநாள் இன்று (அக்டோபர் 20).

தமிழ்சினிமா அதுவரையிலும் அணிந்திருந்த கிரீடங்களையும், போர்வாளையும், பட்டு அங்கவஸ்திரங்களையும், டர்பனையும் தூக்கி எறிந்துவிட்டு ராஜா காலத்து கதைகளில் இருந்து சமூகக் கதைகளுக்கு அழைத்துச்சென்ற படம் 'பராசக்தி' என்றால், அதன் நீட்சியாக நவீன சினிமாவுக்கு புதிய பாதையை அமைத்துத் தந்த படம் 'கல்யாண பரிசு', இயக்கியவர் ஶ்ரீதர்.

கிருஷ்ணன்-பஞ்சு, பீம்சிங், பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகாரஜன் என பல ஜாம்பவன்கள் இருந்தாலும், சினிமாவில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள், நேர்த்தியான எடிட்டிங், காலத்தை வென்ற பாடல்கள், மிகையில்லாத மேற்கத்திய பாணி கதாபாத்திரங்கள், என திரையுலகில் 'மேக்கிங் ஸ்டைல்' என்ற  ஒன்றையே முதன் முதலில் கொண்டுவந்தவர் ஶ்ரீதர்தான்.

ஶ்ரீதர்தான் முதன் முதலில் நவீன பாணி சினிமாவைத் தொடங்கிவைத்தார் (கல்யாணப் பரிசு).

முதன்முதலில் சிம்லாவில் ஷூட்டிங் நடத்தினார் (தேன் நிலவு). முதன் முதலில் 'காதலிக்க நேரமில்லை' படத்தை ஈஸ்ட்மென் கலரில் எடுத்து வெளியிட்டார்.

முதன்முதலில் அதிகமான புதுமுகங்களைக் கொண்டு படம் இயக்கியவரும் இவர்தான் (வெண்ணிற ஆடை). 
முதன் முதலில் 18 நாட்களில் (நெஞ்சில் ஓர் ஆலயம்) ஷூட்டிங்கை முடித்து 27 நாட்களில் வெளியிட்டவர் இவர்தான்.
முதன்முதலில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் ஒரு தமிழ்சினிமாவின் படப்பிடிப்பை நடத்தி பாடல் காட்சியில் இன்றுவரை மைல்கல்லாக அதைத் திகழச்செய்தார் ( சிவந்த மண்).

Sridhar_director_16095.jpg

அப்போதெல்லாம், வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்துகொண்டால், விவித் பாரதியின் 'ரசிகர் தேன்கிண்ணம்'தான் மிகப்பெரிய வரம். டேப்- ரெக்கார்டர், டி.வியெல்லாம் பெரிதாக அறிமுகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் விரும்பிக்கேட்டு கடிதங்களை அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அனுப்பி இருப்பார்கள். ஒவ்வொரு கடிதமும் வாக்குகளாக எண்ணப்பட்டு எந்தப் பாடலுக்கு எத்தனை வாக்குகள் என்பது வரிசையாக அறிவிக்கப்படும். அதில் சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற, 'ஒரு ராஜா ராணியிடம்...' பாடல்தான் முதலிடத்தில் இருக்கும். 

திரைப்படப் பாடல்களின் இசை, பாடல் வரிகள், படமாக்கப்பட்ட லொகேஷன், ஏ.எம்.ராஜா, பி.பிஶ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், என வித்தியாசமான குரல் ஆளுமைகளைப் பயன்படுத்தியதென எவ்வளவோ புதிய முயற்சிகளைச் செய்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றார்.

பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவை, 'கல்யாண பரிசு' மூலமும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள்' மூலமாகவும் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.

கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, தேன் நிலவு, ஊட்டிவரை உறவு, வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, சிவந்த மண், அவளுக்கென்று ஓர் மனம், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, என படத்தலைப்புகளையே நாவல்களுக்கு உரிய நேர்த்தியோடு வைத்து அழகு பார்ப்பார்.

ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என ஏராளமான புதுமுகங்களை அந்த காலத்திலேயே அறிமுகம் செய்து புகழ் பெற்றவர். அவ்வளவு ஏன் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் ஶ்ரீதர்தான்.

75 வயதில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 60 படங்களை இயக்கியுள்ள ஶ்ரீதருக்கு இன்னமும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது 'காதலிக்க நேரமில்லை' படம்தான். எப்போது நாம் பார்த்தாலும், போன வாரம் ரிலீசான படம் போலவே அந்தப் படம் இருப்பதுதான் அதன் சிறப்பு. இத்தனைக்கும் அந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், 'வயது 18 ஜாக்கிரதை'.

சிவந்த மண்ணின் தாக்கம்தான் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். உலகம் சுற்றும் வாலிபன் பட வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஶ்ரீதர் உதவினார். பல ஆண்டுகள் கழித்து தருணம் பார்த்து ஶ்ரீதருக்கு, உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் அளித்தார். இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவை.

1954-ல் திரையுலகில் அறிமுகமான ஶ்ரீதர் மூன்று தலைமுறைகள் கடந்து, இளையராஜாவுடன் இணைந்து, 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'தென்றலே என்னைத் தொடு' ஆகிய மூன்று படங்களையும் மிகப்பெரிய மியூசிக்கல் ஹிட்டாக அமைத்தார். ‘

'I am always want to take a movie and not a talkie'

என்று தனது படங்கள் பற்றி ஶ்ரீதர் சொல்லுவார். படத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், தனக்கு எது சரியென்று படுகிறதோ அதையே படமாக்குவார். இல்லாவிட்டால் தான் இயக்கிய முதல் படமான கல்யாணப் பரிசின் க்ளைமாக்ஸில் 'காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்' என்ற சோகப் பாடலைப் பாடிக்கொண்டு முகத்தைக் காட்டாமல் முதுகைக் காண்பித்தவாறே செல்லும் காட்சியை வைக்கும் துணிச்சல் வேறு எவருக்கு வரும். 'படம் முடிந்ததென எழுந்தவர்கள், பாடல் முடியும்வரை ஜெமினிகணேசன் சிறு புள்ளியாய் மறையும் வரை நின்று கொண்டிருந்துவிட்டு கனத்த இதயதோடு வெளியில் வருவார்கள். அதுதான் தமிழ்த் திரையுலகின் முதல் ஸ்டேண்டிங் ஓவேஷன். 

vikatan

  • தொடங்கியவர்

உலகின் ஒரே ஒரு ப்ரவுண் நிற பாண்டா கரடி இது தான்

600_16592.jpg

உலகின் தற்போது ப்ரவுண் நிறத்தில் ஒரே ஒரு பாண்டா கரடி தான் உள்ளது. மத்திய சீனா பகுதியில் வசித்து வரும் இதன் பெயர் க்விசாய். க்விசாய் என்றால் சீனாவில் 7-வது மகன் என்று அர்த்தம். பிறந்த 2 மாதங்களிலேயே இதன் பெற்றோர், க்விசாயை கைவிட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து அதன் 2 வயது முதல் சின் என்பவர் தான் இதை வளர்த்து வருகிறார். க்விசாய்க்கு 7 வயது ஆகிறது.


தற்போது உலகில் இருக்கும் ஒரே ப்ரவுண் நிற பாண்டா கரடி க்விசாய் தான். உலக அளவில் கண்டறியப்பட்ட ப்ரவுண் நிற பாண்டாவில் க்விசாய் 5-வது பாண்டா. மற்றவைகள் தற்போது உயிருடன் இல்லை. சிறுவயது முதலே க்விசாயை மற்ற கரடிகள் கொடுமைப்படுத்தியுள்ளன.  மற்ற பாண்டா கரடிகளுடன் ஒப்பிடும்போது, க்விசாய் சற்று மந்தமாக தான் இருக்கும். ஆனால், இதன் க்யூட்னஸ்க்கு வேறு எந்த பாண்டாவும் ஈடாகாது என்கிறார் இதை வளர்ப்பவர்.தினசரி 44 பவுண்டு மூங்கில்கள் இதன் உணவு. தற்போது க்விசாய் 220 பவுண்டுடன் ஆரோக்கியமாக உள்ளதாம். 

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலும், தமிழக சட்டசபையும்!

 

 
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப், ஹிலாரி. | படம்: தி கார்டியன்
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப், ஹிலாரி. | படம்: தி கார்டியன்

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி, ட்ரம்ப் பேச்சுகள், விவாதங்களை இந்திய இணைய சமூகமும் கூர்மையாக கவனித்து வருகிறது. அவை குறித்த தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Arunkumar ‏

அமெரிக்க தேர்தல் வேட்பாளர்கள் ஹிலாரி & ட்ரம்ப் நேரடி விவாதம். தமிழ்நாட்டில் விவாதம் செய்ய அழைத்தால்...?

Shan Karuppusamy

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நேரடி விவாதங்களை பல்கலைக்கழகங்களில் நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக பள்ளிகளில் அரசியல் தொடர்பான கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே மாதிரி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதிபர் விவாதங்கள் முடிந்த பிறகு அவற்றின் பல கூறுகள் மாணவர்களிடையே அலசப்படுகின்றன. இதன் மூலம் படிக்கும்போதே அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். படிக்கிற வயசுல எதுக்கு அரசியல் என்று வசனம் பேசி இளைஞர்களை நாட்டு நடப்புகளிலிருந்து மறைத்து வைத்திருந்து பிறகு வெளியே வீசுவதில்லை.

கடைசியாக தமிழக சட்டசபையில் விவாதம் என்ற ஒன்று எப்போது நடந்தது என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

ஜெபா ஜி ‏

ஹிலாரியை அதிபர் தேர்தலில் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது! - ட்ரம்ப் ஆவேசம். தேர்தல்ல ஈசியா ஜெயிக்க வழி கண்டுபிடிச்சிட்டார்.

Vinodh

பேசி பேசியே ட்ரம்ப் தோத்துடுவார் போல...

mahir ‏

ஹிலாரி, டிரம்ப் விவாதம்

* டிரம்ப் பேச ஆரம்பிக்கும் போது கோப ஐகான்களின் கூட்டத்தை காண முடிந்தது.

* ஆட்சிக்கு வந்தால் ஹிலாரி சிறைக்கு போக வேண்டி வரும் என்று எச்சரிக்கை. (அரசியல் பழிவாங்கல்.)

* பள்ளிக்கூட குழந்தை போல், டீச்சர் இரண்டு நிமிடம் முடிந்தும் பேசுறான் என்பது போன்று புகார்.

* தனி நபர் தாக்குதல்.

Dr S RAMADOSS ‏

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி - டிரம்ப் நேரடி விவாதம்: அதேபோன்ற அறிவார்ந்த, ஆரோக்கியமான கலாச்சாரம் தமிழகத்திலும் வர வேண்டும்!

இடும்பாவனம் கார்த்தி ‏

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஒரேமேடையில் விவாதம். #இங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்த கூட்டுறதுக்கே முடியல!

Joes ‏

அமெரிக்கா தேர்தல் பத்தி எதுனா கருத்து சொல்லலன்னா நம்மள மக்குனு நினைச்சிடுவாங்களோ? அதனால் ட்ரம்ப் பேசுறது சரியில்லைனு சொல்லிவைப்போம்.

டல்ஹௌசி பிரபு

ஹிலாரி - டிரம்ப் இடையே நேரடி விவாதம் தொடங்கியது. >> நம்ம நாட்டில் தனித்தனியே உதார் விடுவாங்களே தவிர நேரடி விவாதத்துக்கு வரமாட்டாங்க.

வியன் பிரதீப் ‏

ஹிலாரி கிளிண்டன் , டிரம்ப் பேசும் நேரடி நிகழ்ச்சி பார்க்கலையா?!

என்னைக்காவது உள்ளூர் வார்டு மெம்பர் பேசியதை கேட்டு இருக்கீங்களா?!

பனித்துளி ‏

தட் ஒரு கேள்விக்கு கூட இதுவரைக்கும் ட்ரம்ப் நேரடியா பதில் சொல்லலியா.. இல்ல எனக்குதான் அமெரிக்கன் இங்கிலிஷ் புரியலையோ மொமண்ட்.. #Debates2016

gow_3051242a.jpg

ஷான் ‏@shanmugame

ஹிலாரி, டிரம்ப் இவர்களுக்கிடையே விவாதம்.

பெண்களை தான் எப்படியெல்லாம் மயக்குவேனென்றும் ஒரு ஸ்டாராக இருந்தால் அவர்களை எங்கேயெல்லாம் பிடிக்கலாமென்றும் டிரம்ப் பேசிய ஏடாகூட ஆடியோ ஒன்று வெளியாகி டிரம்பின் சொந்தக் கட்சியினர் சிலரே அவருக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு போயிருக்கிறது. பதிலுக்கு டிரம்ப் பில் கிளிண்டனால் பாதிக்கப்பட்ட அபலைகளை அழைத்துக் கொண்டு விவாதத்துக்கு வந்திருந்தார். உள்ளூர் அரசியல்தான் இப்படி என்றால் அமெரிக்க அரசியல் அதைவிட மோசம்.

Sska Rabeek Rajaa

கை குலுக்கி கொள்ளாத டிரம்ப் ஹிலாரி. பரஸ்பரம் சிரிச்சிக்க கூட இல்லயாம்! அமெரிக்காவுல இருந்து ஜனநாயக பண்புகளை நாம எடுக்கிறது இருக்கட்டும், நம்ம பண்புகள் அங்கே போயிடிச்சு போலயே ?

gold ♥jo ‏

தமிழ்நாட்டுல எந்த எந்த தொகுதிக்கு இடைத்தேர்தல்னு கேளு, தெரியாதும்பாய்ங்க ஆனா பேசுறது அமெரிக்க அதிபர் தேர்தல்.

கோயம்புத்தூரான் ‏

கம்பங்கூழுக்கே வழியில்ல.. நமக்கு எதுக்கு ட்ரம்ப் நியாயம் என்றபடியே கடந்து போனார் அந்த ஏழை விவசாயி..

tamil.thehindu

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 05: விளக்கு எரிய கண்ணாடி தேவை!

 

 
velakku_3049836f.jpg
 

நீங்கள் கோயிலுக்குப் போகும்போது ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கலாம். கோயில்களில் விளக்கேற்றி வைக்கும்போது அகல் விளக்கைச் சுற்றியும் சின்ன சின்னக் கற்களை அடுக்கி வைத்துத் தடுப்புகள் ஏற்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? சில கோயில்களில் விளக்கேற்றுவதற்காகக் கண்ணாடிக் கூடுகளை வைத்திருப்பார்கள். எதற்காக இவை வைக்கப்பட்டிருக்கின்றன?

சரி, இந்தக் கேள்வி அப்படியே இருக்கட்டும். இன்னொரு உதாரணத்தைப் பார்த்துவிடுவோம். சிம்னி விளக்குகள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?! (இதனைச் சில கிராமங்களில் முட்டை விளக்கு என்பார்கள்) கிராமங்களில் சாயங்கால நேரங்களில் வீட்டு வாசலில் இந்த சிம்னி விளக்குகளை ஏற்றி மாட்டி வைப்பார்கள். லாந்தர் விளக்குகளையும்கூடப் பார்த்திருப்பீர்கள்.

இந்த விளக்குகளில் ஏன் கண்ணாடிக் கூடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன?

“இதெல்லாம் ஒரு கேள்வியா…?” விளக்கு தீபம் காற்றில் அணைந்து போகாமல் தடுப்பதற்காகக் கண்ணாடிக் கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் உங்கள் பதில் இருக்கும். எல்லோரும் இப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட முக்கியமான வேலை ஒன்று கண்ணாடிக் கூட்டுக்கு உண்டு. விளக்கை வேகமாக எரியச் செய்வதும், ஒளிச்சுடரை இன்னும் பெரிதாக்கி எரியச் செய்வதும் (அதாவது ஜூவாலையை நீட்டிப் பெரிதாக்கிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்வதும்) இந்தக் கண்ணாடி கூடுதான். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படுத்துவதுதானே அறிவியல்.

காரணம் என்ன?

கண்ணாடிக் கூடு ஒளிச்சுடரை எப்படிப் பெரிதாக்குகிறது ?

கண்ணாடிக் கூடு தீச்சுடரை நோக்கி வருகிற காற்றைத் தடுக்கிறது என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? ஆனால், உண்மையில் தீச்சுடருக்கு அதிகக் காற்றைக் கொண்டு வந்து சேர்ப்பது கண்ணாடிக் கூடுதான்.

கண்ணாடிக் கூட்டுக்குள் இருக்கும் காற்று தீச்சுடரால் சூடாக்கப்படுகிறது. கண்ணாடிக் கூட்டுக்குள் சூடான காற்றின் எடை குறைகிறது. எடை குறைந்த காற்று மேலே எழும்பி வெளியேறுகிறது. கண்ணாடிக் கூட்டுக்கு வெளியிலிருந்து அழுத்தம் அதிகமான புதிய காற்று கண்ணாடிக் கூட்டுக்குள் வருகிறது. புதிய காற்றில் ஆக்சிஜன் அதிகமாக உள்ளதால் அது எரிவதை வேகப்படுத்துகிறது. மேலும் தீச்சுடரின் நீள, அகலங்கள் அதிகரிக்கின்றன.

லாந்தர் விளக்குகள் மற்றும் சிம்னி விளக்குகளின் கண்ணாடிக் குடுவைகள், பொதுவாக இரும்பு ஸ்டாண்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரும்பு ஸ்டாண்டுகளில் துவாரங்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

கண்ணாடிக் குடுவைக்குள் வெப்பமான காற்று மேலெழுப்பிச் சென்ற பின், கீழே உள்ள இந்தத் துவாரங்கள் வழியாகத்தான் புதிய காற்று உள்ளே செல்கிறது. அகல் விளக்குகள் எரியும் செங்கல் தடுப்புகளிலும் இப்படித்தான். சின்னச் சின்ன இடுக்குகள் வழியாகப் புதிய காற்று உள்ளே செல்கிறது.

ஆக, கண்ணாடிக் கூடுகள் காற்றைத் தடுப்பதில்லை. புதிய காற்றை உள்ளே வரவழைத்துத் தீச்சுடரை நன்றாக எரியச் செய்கிறது! மாணவர்களே, இப்போது புரிகிறதா?, நாம் எத்தனைத் தடை என்று நினைக்கிறோமோ அதுதான் நம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வீரேந்தர் சேவாக்

 

 
shewag_3051030f.jpg
 

இந்திய கிரிக்கெட்வீரர்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் (Virender Sehwag) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*தில்லியில், நஜஃப்கட் என்ற இடத்தில் பிறந்தவர் (1978). தந்தை, தானிய வியாபாரி. ஆரம்பக் கல்வி முடித்து, விகாஸ்பூர் மேல் நிலைப்பள்ளியிலும் பின்னர் ஜாமிய மில்லியா இஸ்லாமிய ஆண்கள் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

*படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதில் சச்சின் டெண்டுல்கராக வேண்டும் என்ற லட்சியம் கொண் டிருந்தார். பின்னாளில் ‘நிஜாஃபர்கட் டெண்டுல்கர்’, ‘தி லிட்டில் டெண்டுல்கர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

*1998-ல் ஒருநாள் போட்டிகளிலும், 2001-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார். இவரது டைமிங் அதிசயிக்கத்தக்கது, ஆட்டத்தில் பதற்றமான சூழலாக இருந்தாலும் சரி, வலிமைமிக்க எதிரணியோடு விளையாடும்போது சரி, பதற்றிமின்றி விளையாடுவார்.

*சிறந்த ஆஃப்-ஸ்பின் பவுலரும்கூட. சாதனை புரிய வேண்டும் என்பதற்காகத் தன் அதிரடி ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஒருமுறை 195 ரன்கள் இருக்கும்போது நிதானமாக ஆடி, இரட்டை சதம் அடிக்கலாம் என்று நினைக்காமல் அடுத்த பந்தில் சிக்சருக்கு முயல, அவுட் ஆனார். ஆனால் அதற்காகக் கவலைப்படவில்லை, இந்த அதிரடி மன்னர்.

*‘வீரு’ என்று சக வீரர்களாலும் ரசிகர்களாலும் நேசத்துடன் அழைக்கப்படும் இவர், இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராகப் பாராட்டப்பட்டவர். ஒரு இன்னிங்சில் அதிக ரன்களைப் பெற்ற சாதனையாளர். 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களையும், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ரன்களையும் எடுத்தார்.

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் 300 ரன்கள், இலங்கைக்கு எதிராக 2009-ல் 207 பந்துகளில் 250 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக ரன்கள் எடுத்தது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்தது, சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தது, சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 200 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனைகளோடு, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக மூன்று முறை முச்சதங்கள் அடித்த சாதனையையும் படைத்தவர்.

*ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், 20/20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த ஒரே வீரர். பத்ம விருது, அர்ஜுனா விருது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பலமுறை தொடர் நாயகன் விருது, ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றவர்.

*இரண்டு முறை ‘விஸ்டன் முன்னணி பேட்ஸ்மேன்’ என்ற கவுரவம் (இந்த கவுரவம் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர்) வழங்கப்பட்டது. துணிச்சல், வலிமை, திறன், தெளிவு இவை அனைத்தும் சேர்ந்த இவரது விளையாட்டை ‘சேவாக் பிராண்ட்’ என்று விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள்.

*‘ஒவ்வொருமுறை நான் ஆடும் போதும் இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்பார். சைவ உணவு பழக்கம் உடைய இவர், சைவ உணவகம் ஒன்றின் உரிமையாளர்.

*‘நவாப் ஆஃப் நஜஃப்கட்’, ‘ஜென் மாஸ்டர் ஆஃப் மாடர்ன் கிரிக்கெட்’ என்றெல்லாம் போற்றப்படும் வீரேந்திர சேவாக், இன்று 39வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது இவரது பங்களிப்பு கிரிக்கெட் வர்ணனையாகத் தொடர்கிறது.

tamil.thehindu

 

 

 

 

  • தொடங்கியவர்

 

வாழும் கலை
போன்சாய் மரங்களின் புகைப்படங்களை ஆவணப்படுத்தியுள்ள புகைப்படக் கலைஞர்!
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் - 21

 

1520 : போர்த்­து­கேய மாலுமி, பேர்­டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்­டு­பி­டித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்­பெற்­றது.

 

1805 : ஸ்பெய்னின் டிர­பல்கார் என்ற இடத்தில் பிரித்­தா­னியப் படைகள், பிரெஞ்சு மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படை­களின் கடற்­ப­டையை வென்­றன. இவ்­வெற்றி பிரித்­தா­னியக் கடற்­ப­டையை 20ஆம் நூற்­றாண்டு வரை இப்­பி­ராந்­தி­யத்தின் பெரும் கடற்­படை வல்­ல­ர­சாக ஆக்­கி­யது.

 

833jaffna_hospital.jpg1805 : ஊல்ம் என்ற இடத்தில் நெப்­போ­லி­யனின் பெரும் இரா­ணு­வத்­திடம் ஆஸ்­தி­ரியா சர­ண­டைந்­தது. நெப்­போ­லி­யனால் 30,000 பேர் சிறை­பி­டிக்­கப்­பட்­டனர்.

 

1824 : ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சீமெந்­துக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1833 :  நோபல் பரிசை ஆரம்­பித்த  சுவீடன் நாட்டு கண்­டு­பி­டிப்­பா­ள­ரான அல்­பிரட் நோபல், பிறந்தார்.

 

1837 : அமெ­ரிக்கப் பழங்­குடித் தலைவர் ஒசி­யோலா கைது செய்­யப்­பட்டார்.

 

1854 : புளோரன்ஸ் நைட்­டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரி­மியன் போர் முனைக்கு அனுப்­பப்­பட்­டனர்.

 

1879 : தோமஸ் அல்வா எடிசன் தனது முத­லா­வது தொழில் ரீதி­யான மின்­கு­மிழைப் பரி­சோ­தித்தார். இது 13 மணித்­தி­யா­லங்கள் எரிந்­தது.

 

1892 : உலக கொலம்­பியக் கண்­காட்சி சிக்­கா­கோவில் அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறக்­கப்­பட்­டது. ஆனாலும், கட்­டட வேலைகள் பூர்த்­தி­ய­டை­யாத கார­ணத்தால் இக்­கண்­காட்சி 1893, மே 1 ஆம் நாளி­லேயே பொது­மக்­களின் பார்­வைக்குத் திறக்­கப்­பட்­டது.

 

1895 :  தாய்வான் தீவில் ஸ்தாபிக்­கப்­பட்­டி­ருந்த போர்­மோசா குடி­ய­ரசு ஜப்­பா­னியப் படை­களின் முற்­று­கை­யினால் வீழ்ந்­தது.

 

1944 : கிற­கு­ஜேவாச் படு­கொ­லைகள்: நாஸி ஜேர்­ம­னியப் படைகள் 7,000 சேர்­பி­யர்­களை படு­கொலைச் செய்­தனர்.

 

1944 : ஜப்­பானின் முத­லா­வது கமி­கசே ஜப்­பா­னிய விமானத் தற்­கொலைத் தாக்­குதல், அவுஸ்­தி­ரே­லிய கப்பல் மீது நடத்­தப்­பட்­டது.

 

1945 : பிரான்ஸில் முதற்­த­ட­வை­யாக பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

 

1959 : அமெ­ரிக்கப் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த வார்னர் பிரவுன் உட்­பட ஜேர்­ம­னிய ரொக்கெட் விஞ்­ஞா­னிகள் குழு­வி­னரை அமெ­ரிக்க இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து நாஸா நிறு­வ­னத்­துக்கு மாற்றும் உத்­த­ரவில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஐஸ­னோவர் கையெ­ழுத்­திட்டார்.

 

1966 : பிரிட்­டனின் வேல்ஸில் அபெர்ஃபான் என்னும் கிரா­மத்தில் நிலக்­கரி கழி­வுகள் அடங்­கிய பாறை வீழ்ந்­ததில் 116 பாட­சாலைச் சிறு­வர்கள் உட்­பட 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : சோமா­லி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் சியாட் பார் பத­வியைக் கைப்­பற்­றினார்.

 

1983 : நிறை­க­ளுக்கும் அள­வை­க­ளுக்­கு­மான 17ஆவது அனைத்­து­லகக் கருத்­த­ரங்கில், முழு­மை­யான வெற்­றி­டத்தில், துல்­லி­ய­மாக 1299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளம் ஒரு மீற்றர் என வரை­ய­றுக்­கப்­பட்­டது.

 

1987 :  யாழ். மருத்­து­வ­ம­னையில் இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் மருத்­து­வர்கள், ஊழி­யர்கள், நோயா­ளிகள் உட்­பட 60 இற்கும் அதி­க­மானோர்  கொல்­லப்­பட்­டனர்.

 

1994 : தென்கொரியாவின் சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

 

1994 : வடகொரியா தனது அணுவாயுத திட்டத்தை நிறுத்தவதற்கும் கண்காணிப்பு அனுமதி வழங்கவும் இணக்கம் தெரிவித்து அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

metronews.lk/

  • தொடங்கியவர்

புகைபிடிக்கும் மனிதகுரங்கு: எதிர்ப்பும் ஆதரவும்

வட கொரியாவின் உயிரியில் பூங்காவில் அஸெலியா என்ற பத்தொன்பது வயதுடைய பெண் மனிதக்குரங்கு  தினமும் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்கிறது. தானாகவே சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிக்கிறது இந்த குரங்கு. புகைபிடித்து முடித்தவுடன் அஸெலியா பூங்காவிற்கு வந்திருப்பவர்களை நோக்கி ஹாய் சொல்லி மகிழ்விக்கிறது. இவை அனைத்தையும் அஸெலியா செய்வதற்கு பூங்காவால் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், பலர் இந்த தனித்துவமான குரங்கை காண மீண்டும் மீண்டும் வருகின்றனர். 

 

 


ஆனால், இதே சம்பவத்தை வன உயிர் செயற்பாட்டளர்களும் ஆர்வலர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த வட கொரிய உயிரியல் பூங்காவில் அஸெலியா போன்று சில விலங்குகளுக்கு வித்தைகள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

14681775_1161903703858322_44006669692080

ஹொலிவூடைக் கலக்கும் பிரபல நடிகை, மொடெல் கிம் கர்டாஷியன் பிறந்தநாள்.
இணையத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபலங்களில் ஒருவர் இவர்
Happy Birthday Kim Kardashian West

 
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

340p1.jpg

* ‘நாம் வணங்கும் பெண் தெய்வங்கள் எல்லோரும் நம்மிடையேதான் இருக்கிறார்கள். ஆனால், நாம்தான் அவர்களை அவமானப்படுத்துகிறோம்; பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறோம்; ஒதுக்கித்தள்ளுகிறோம்’ என்பதை விஷூவல் படைப்பாக வெளியிட்டுள்ளார் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் விக்டேரியா க்ரந்திசேவா. இவருடைய புகைப்படங்களில் `இன்றைய வாழ்க்கை முறையில் பெண் கடவுள்கள் எப்படி இருப்பார்கள்?’ என்ற கற்பனை, அழகழகான புகைப்படங்களாக விரிகின்றன. கூடவே, பெண்களுக்கான வரையறைகளில் கடவுள்களுடன் மட்டும் நாம் எப்படி வேறுபடுத்திக்கொள்கிறோம் என்ற முரண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்திய இறைவிகள்!


340p2.jpg

* கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் அடுத்த புத்தகம். இந்தப் புத்தகத்துக்கு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் அருந்ததி ராய். `நிறையப் பிரச்னைகளைக் கடந்துவந்துள்ள அருந்ததி ராய், இந்தப் புத்தகத்தை 20 ஆண்டு களாகச் செதுக்கியிருக்கிறார்’ என்று சிலாகிக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புத்தகம் ரிலீஸ்! ரைட்டர் ஆஃப் பிக் திங்க்ஸ்!


340p3.jpg

* ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்... ஆஸ்டின் வாக். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன்தான் ஆஸ்டின். தற்போது அண்டர் 17 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணிக்காக விளையாடிவரும் ஆஸ்ட்டின்தான் அங்கே கில்லி. ஒற்றை ஆளாக நின்று விளையாடி, சதம் விளாசி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தந்திருக்கிறார் ஆஸ்டின். `மகன் மேல் பிரஷர் போட விரும்பவில்லை. அவன் நிதானமாக, பொறுப்புடன் ஆடும் பேட்ஸ்மேன். அவன் சிறந்த பேட்ஸ்மேனாக வருவான்’ எனப் பெருமை பொங்குகிறார்  தந்தை ஸ்டீவ் வாக்! மூன்றாவது வாக்!


340p4.jpg

* அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹில்லாரி கிளின்டன் - டொனால்ட் ட்ரம்ப் இடையேயான தொலைக்காட்சி விவாதங்களில் அதிக லைக்ஸ் அள்ளியிருப்பவர் ஹில்லாரி. `இமெயில்களை லீக் செய்த தற்காக நீங்கள் அவமானப்பட வேண்டும்’, `உங்களைக் கைதுசெய்வேன்’ என்றெல்லாம் ட்ரம்ப் கொந்தளித்தார். விவாதங் களிலும் ட்ரம்ப் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுக் கொந்த ளிக்க, சைலென்ட் சிரிப்போடு செம கெத்தாகப் பதில் அளித்து, அமெரிக்க மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் ஹில்லாரி. இதுவரையிலான கருத்துக்கணிப்புகளிலும் ஹில்லாரிக்கே முதலிடம். ஹிலாரியஸ் ட்ரம்ப்!


340p5.jpg

* சென்னை ஓப்பனின் சூப்பர் ஸ்டார், உலகின் நம்பர் 3 டென்னிஸ் வீரர் வாவ்ரிங்கா 2017-ம் ஆண்டு சென்னை ஓப்பனுக்கு நோ சொல்லிவிட்டார். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக சென்னை வந்து விளையாடிய வாவ்ரிங்கா நான்கு முறை சாம்பியன் பட்டமும் வென்றவர். ‘சென்னை ஒப்பன் எனக்கு ரொம்ப லக்கி. ஆண்டின் முதல் போட்டியே சென்னை ஓப்பன்தான் என்பதால், அதில் வெற்றிபெற்றால் ஆண்டு முழுக்க ஒரு பெரிய பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது’ என்று சொன்ன வாவ்ரிங்கா, 2017-ம் ஆண்டு சென்னை ஓப்பனுக்கு பதில் பிரிஸ்பேன் ஒப்பனுக்கு டிக் அடித்திருக்கிறார்! மிஸ் யூ!

vikatan

  • தொடங்கியவர்

14718882_1161902630525096_57559173097055

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் டெவோன் ஸ்மித்தின் பிறந்தநாள்
Happy Birthday Devon Smith

 
  • தொடங்கியவர்

சென்னை வெள்ள ஸ்டிக்கரும் அமுல் கார்ட்டூனும்! அமுலின் அரை நூற்றாண்டு போஸ்டர் பயணம்

amul%20taste_12158.jpg

 

முல் பேபி ஸ்கிரீனில் அறிமுகமாகி இதோடு 50 வருஷம் ஆகுது… ஆம். விளம்பரங்களுக்கான புது யுக்தியை முதன்முதலில் கொண்டு வந்தது இந்த அழகு குட்டி அமுல் பேபி தான்…. தங்கள் விளம்பரத்துக்காக பிரபலமானவர்களை அழைப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், அமுல் விளம்பரத்தை பொறுத்தவரையில் அவர்களின் ப்ராண்ட் அம்பாசிடர் எப்பவுமே இந்த அமுல் பேபிதான். அதுவரை குறும்புத்தனத்தை அத்துணை அழகாக யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள். சிறு குழந்தையின் கண்ணங்கள் எப்படி சிவந்து க்யூட்டாக இருக்குமோ அப்படியே அமுல் பேபியை உருவாக்கினார்கள் அமுல் கிரியேட்டர்ஸ்…..

அமுல் நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்திகளை ஆரம்பித்தது சில்வெஸ்டர் டாசவ்ன்சா….. அவருக்கு பக்கபலமாக இருந்து போஸ்டர் விளம்பரங்களில் வரும் குழந்தையை வரைந்து தந்தது ஃபெர்னாண்டஸ் மற்றும் உஷா கட்ராகண்டா. இவர்களது இந்த விளம்பர புயல் இந்தியாவின் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்வுகளை சிறு குழந்தையின் வரைபடத்தின் மட்டுமே கொண்டு கூறிவிட்டது. இதோ இங்கே அப்படி கூறப்பட்ட சில விளம்பரங்களின் தொகுப்பு…..

ஜாக்பாட் குதிரையில் அமுல் பேபி!!!….

1966-ம் ஆண்டு தான் முதன்முதலில் அமுல் நிறுவனத்துக்கான விளம்பரம் வந்தது. அந்த சீசனில் ஹார்ஸ் ரைடிங்க் ரொம்ப ஃபேமஸ். இன்று நம் விளம்பரங்கள் எப்படி சீசனிற்கு ஏற்ப விளம்பரங்களை மாடல் மாடலாக மாற்றி அமைக்கிறதோ அதை 50 வருடங்களுக்கு முன்னர் அமுல் நிறுவனம் ஆரம்பித்தது. குதிரைப் பந்தயம்தான் அப்போதைக்கு டாக் ஆஃப் தி சிட்டி. தங்களது விளம்பரத்தில் அந்த அமுல் சுட்டிப்பெண் குதிரை மேல் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு, ஒரு கையில் ஜாக்கியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் அமுல் பிரட்டைக் கொண்டு அமர்ந்திருப்பாள்.

amul%20horse%20riding_11118.jpg

காலை எழுந்தவுடன் ப்ரே பண்ண கத்துகொடுத்த குழந்தை….

யுஸ்கேட் ஃபெர்னாண்டஸ் அமுல் பேபியின் மூலம் முதன்முதலில் பெட்-டைம் பிரேயர்ஸ்ஸை நம் குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். காலை எழுந்தவுடன் பெட்டில் அமர்ந்தபடி “எல்லா நாளையும் போல இன்றைய பொழுதும் எனக்கு என்னுடைய ரொட்டி கிடைக்கவேண்டும்…. அமுல் பட்டரோடு” என்ற வசனத்தோடு அமர்ந்திருக்கும் போஸ்டர் அது.

amul%20prayer_11275.jpg

 

1976 – தி எமர்ஜென்சி

INTERNAL SECURITY ACT எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் முதன் முதலில் அமலுக்கு வந்தபோது வந்த விளம்பரம் இது…..  இந்த சட்டத்தினைப் பற்றிய விழிப்பு உணர்வு ரொம்பவே முக்கியமாக கூறப்படவேண்டியது என்பதால் அமுல் நிறுவனம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொடுத்த விளம்பரம் இது.

 

amu%20emergency_11018.gif

1980 – கருத்தடை எதிர்ப்பு’ இயக்கத்துக்காக….

இந்திரா காந்தியின் ஆட்சியின் போது STERILISATION DRIVE என்ற தீர்ப்பு வந்தது. அதனை அமுல் நிறுவனம் தனது விளம்பரம் மூலம் தன்னுடைய நிறுவனத்தின் கொள்கையை விளம்பரத்திலேயே கூறியது.

 

1992 - என்ரான் நிறுவனத்தின் ஊழல்

யு.எஸ்.ஸின் இயற்கை எரிவாயுவுக்கான திட்டத்தை மகாராஷ்ட்ராவின் தாபோலில் தொடங்கினார். 1991-ம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பிறகு அந்நிய நாடு ஒன்று நம் நாட்டில் மிகப்பெரிய அளவில் மூதலீடு செய்தது அப்பொழுதுதான். ஆனால், அதன் விளைவு நினைத்தபடி சரிவர வரவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் அதுவே காரணமாய் ஆனது.

1992 –  பைலட்ஸ் ஸ்ட்ரைக்

அதே ஆண்டு, விமான ஓட்டிகள் ஸ்ட்ரைக் செய்தனர். அந்த நிலையில் வந்த அமுல் விளம்பரம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. பைலட் ஒருவர் விமானத்தின் மீதி ஏறி அமர்ந்து அழகாய் ஒய்யாரமாய் பிரட்டில் அமுல் பட்டர் தடவி சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

amul%20pilots_11349.jpg

 

2000 (DEC)- இதுவா B-WOOD?

2000த்தின்போது பாலிவுட் படங்கள் யாவும் அங்கிருக்கும் பாய்(BHAI)களின் ராஜ்யத்தால் தான் நடக்கிறது என்ற பரபரப்பான குற்றச்சாட்டு நடந்தது. நம் பார்த்த பாட்சா பாய், ராஜு பாய் போல ஏதோ ஒரு பாய் என்ற குற்றச்சாட்டுதான் அது. B-WOOD என்ற சொல்லுக்கு BHAI-LLYWOOD என்று கூறுவது போல அந்த விளம்பரம் அமைந்திருந்தது அந்த படம்.

amul%20bollyweopod_11535.jpg

 

ஜக்மோகன் டால்மியா – பி.சி.சி.ஐ.யும்:

அதன்பின்னர், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியா கிரிக்கெட்டில் செய்த கோல்மால்க்காக பிடிபட்டார். அதனை படங்கள் மூலவும் போஸ்டர்ஸ் மூலவும் காண்பிக்க, ‘தீயவை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயவை கேட்காதே’ என்ற அந்த மூன்று வாசகங்களை மூன்று மனித வரைபடம் மூலம் காண்பித்தனர். அச்சமயத்தில் (அந்த போஸ்டருக்கு பின்னர்), தால்மியா, அமுல் நிறுவனத்தின் மீது 500 கோடி ரூபாய்க்கு கேட்டு தொடர்ந்து மிரட்டியதாக அமுல் நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்திருந்தார்.

 

amul%20dalmiyaa_11089.jpg

 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்?!

விநாயகர் சதுர்த்தி, இந்துக் கடவுள் விநாயகப்பெருமான் நேரே வந்து ஆசி வழங்கும் நாளாக கொண்டாடப்படும் திருநாள். அப்படி அந்த வருடம் வந்த விநாயகர் சதுர்த்திக்கு, அமுல் நிறுவனம், ஒரு போஸ்டர் தயாரித்தது. ஒரு சிறுமி, பிள்ளையாருக்கு பிரசாதம் அளித்து, இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது போல அப்படம் இருக்கும்.

 

amul%20ganesh%20festival_11349.JPG

ஏர்வேய்சில் தொலைந்த சச்சின் BAG!!!

ஒருமுறை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சச்சினின் லக்கேஜை மாற்றி வைத்து சிக்கலுக்கு உள்ளானது. அப்பொழுது, அமுல் பேபி BRITISH-ERRWAYS  என்று கூறுவது போன்ற விளம்பரம் வந்தது. இவ்விளம்பரம் வந்த பிறகு போஸ்டரை உருவாக்கியவர்கள் ஏர்லைன்ஸ் சார்பில் அழைத்து விசாரிக்கப்பட்டனர் என்பது கூடுதல் தகவல்.

சத்யம் ஊழல்

2009-ம் ஆண்டு சத்யம் என்ற நிறுவனம் செய்த ஊழலை மையப்படுத்தி தனது விளம்பரத்தை உருவாக்கியது. ரூ.7,136 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது பதிவாகியிருந்த போதும், நிறுவனத்தின் சி.இ.ஓ.வின் தலைவர் ராமலிங்க ராஜுவை குற்றம் சாட்டாத வகையில் அமைந்திருக்கும். இதுகுறித்து அமுல் நிறுவன தலைவர் கூறும்போது, “இந்தச் செய்தி கிடைத்த 20 நிமிடங்களிலேயே எங்கள் க்ரியேட்டிவ் டீம் தென் இந்தியாவை நோக்கி புறப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த விளம்பரக்காரர்களுக்கு கூட இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் இவை தெரியவந்தது” என்கிறார்.

amul%20satyam_11113.jpg

 

இந்திய அரசியலின் புது-சகாப்தம்

2014 (MAY)- மே மாதம் NDA கூட்டனியும் அமுல் நிறுவனமும் தலைநகர் தில்லியில் பலரின் மனதையும் வென்றது. எப்படி தெரியுமா? ஒரு ஸ்லோகன் மூல்யமாக இது நடந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பாப்புலர் ஸ்லோகன் – “Achhe din aayenge”…. ‘அதாவது, நல்ல நாட்கள் வரும்’

 

ஆல் இஸ் ஹெல்லா?

2015 (NOV)– ஹிந்தி நடிகர் அமீர்கான், தனது மனைவி இந்தியாவில் வாழ பயப்படுகிறார் என்று கூறி மீடியாக்களில் சூழப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்கமாட்டோம்!!!! அப்போது வந்தது இந்த அடுத்த விளம்பரம்…. அமீர்கானும் அவர் மனைவி கிரன் தங்களது துணிகளை பெட்டியில் பேக் செய்வது போலவும், அருகில் அமுல் லிட்டில் கேர்ள் அவர்களுக்கு ஆறுதலாக அமுல் பட்டரை கொடுப்பது போலவும், இவற்றின் மேலே “ஆல் இஸ் வெல் ஆர் ஆல் இஸ் ஹெல்” என்ற வாசகம் இருக்கும்.

 

435320-amulkhan740_11497.jpg

இன்டெர்நெட் நடுநிலை

2015 (DEC)- TRAI, இந்தியாவில் இன்டெர்நெட் சேவையில் நடுநிலையை நிலைநாட்ட முனைந்தது. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் செயல்படக் கூடாது என்றும் முடிவெடுத்தது. அதனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் இப்படம்.

amul%20trai_11021.jpg

 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஸ்பெஷல்

2016 (SEP)- சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்…. உரி தாக்குதல் குறித்தும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றியும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த ஸ்ட்ரைக் பற்றிய தகவல்கள் நம்மை வந்தடைந்தவுடன் வெளியானது அடுத்த விளம்பரம். இதோ அது இங்கே…

பாபியின் நோபல்காக…

2016 (OCT) - அமெரிக்கன் ஃபேமஸ் பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் பாபி டேலானுக்கு சமீபத்தில் 2016-க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இசைத் துறையில் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டதற்காக தரப்பட்டது. இவரது முந்திய ஃபேமஸ் பாடல்களான “BLOWIN’ IN THE WIND” “THE TIMES THEY ARE A-CHANGN”  முதலியவை இன்றளவும் அமெரிக்காவின் சிவில் ரைட்ஸ் மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்களுக்கு கீதமாக(ANTHEM) இருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சரி, கடந்த சென்னை, கடலூர் வெள்ள பாதிப்புகள் நினைவு இருக்கிறதா.அதை மறந்தாலும், அப்போது நடந்த ஸ்டிக்கர் அட்ராசிட்டிகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அமுல் அதற்கு அடித்த லூட்டியை பாருங்கள் !

 

 AMU_3_10525.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

14681845_1161902097191816_37609612093554

 
 
கண்டுபிடிப்பாளரும், விஞ்ஞானியும் நோபெல் பரிசினை உருவாக்கியசுவீடன் நாட்டு அறிவியலாளருமான அல்பிரெட் நோபெலின் பிறந்தநாள்.
இவர் தான் டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.
Alfred Nobel
 
  • தொடங்கியவர்

 

புதைக்கப்பட்ட பள்ளி (காணொளி)

50 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் அபெர்ஃபேன் என்ற வெல்ஷ் கிராமத்தில் பேரழிவு சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதன் காணொளி.

BBC

  • தொடங்கியவர்

பிபிசி விருது பெற்ற இந்திய புகைப்படம் சொல்லும் கதை!

parat1_12279.jpg

இந்தியாவைச் சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞர்கள்  நயன் கனோல்கர், கணேஷ் ஹெச். சங்கர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான  கவுரவமிக்க பிபிசி விருது கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிபிசி சார்பில் சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 95 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 'அர்பன் வைல்டு லைஃப்' புகைப்படப் பிரிவில் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் நயன் கனோல்கருக்கு விருது கிடைத்துள்ளது. மும்பை ஆரே காலனி பகுதியில் வீடுகளுக்கு அருகே சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை மின் விளக்கு வெளிச்சத்தில்  நயன் கோல்கருக்கு அற்புமான முறையில் பதிவு செய்திருந்தார்.

photo_12132.jpg

பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு புகைப்படக் கலைஞர் கணேஷ் ஹேச். சங்கர் பறவைகள் பிரிவில் அற்புதமான முறையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். மரத்தில் கிளி வசிக்கும் பொந்துக்குள் பெரிய பல்லி புகுந்து இடம் பிடிக்கப் பார்க்கிறது. தனது உறைவிடத்துக்குள் புக முயற்சிக்கும் பல்லியை விரட்ட கிளி போராடும் தருணத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்தார் கணேஷ். பறவையியல் பிரிவில் இந்த புகைப்படம் விருதை தட்டிச் சென்றுள்ளது. ராஜஸ்தானில் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் இந்த புகைப்படத்தை கணேஷ் ஹெச். சங்கர் எடுத்திருந்தார்.

விருது வென்றது குறித்து கணேஷ் ஹெச். சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''விருது அறிவிப்பு வெளியானதில் இருந்து எனக்கு வாழ்த்துக்களை குவித்து வரும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

 

urang_12454.jpg

 

இந்த ஆண்டுக்கான சிறந்த வனஉயிரின புகைப்படமாக அமெரிக்க புகைப்பட கலைஞர்  டிம் லாமேனின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில்  அருகி வரும் உயிரினமான போர்மேன் உராங்குட்டான்  உயரமான மரத்தில் கஷ்டப்பட்டு ஏறுவதை தொடர்ச்சியாக 7 படங்கள் மூலம் விளக்கியிருந்தார் டிம்.

விருது வென்ற புகைப்படங்கள் லண்டன் நேச்சூரல் ஹிஸ்டரி மியூசியத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படும். பிபிசி இணையதளத்திலும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் மிஸ் பண்ணக்கூடாத புகைப்படங்கள் என்று புகைப்பட ஆர்வலர்களின் லிஸ்டில் இவையும் நிச்சயம் இடம்பெறும்!

vikatan

  • தொடங்கியவர்

14568151_1161901460525213_33787515372180

 
 
ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக 2000ஆம் ஆண்டுகளில் விளங்கிய டேமியன் மார்ட்டின் பிறந்தநாள்.
Happy Birthday Damien Martyn
  • தொடங்கியவர்

தண்ணிமேல ஒரு நாடு!

 

96p1.jpg

ம் ஊரில் வாய்க்கால் தகராறுக்காகப் பல வருஷமா நடக்கிற பஞ்சாயத்தெல்லாம் பார்த்திருப்போம். அதுமாதிரி ஒரு குட்டி நாட்டுக்காக பல வருஷமா நடந்துட்டு வர்ற சுவாரஸ்யமான பஞ்சாயத்தைப் பார்ப்போமா?

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஜெர்மனியோட நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், போர்க் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பறதுக்காகவும் கடலில் பல இடங்களில் இங்கிலாந்து, முறைகேடாக தளவாடங்களை அமைச்சது. அதுல ஒண்ணுதான், ரஃப் டவர். போர் எல்லாம் முடிஞ்சதும் வேலையே இல்லாம ரொம்பப் போர் அடிச்சதாலோ என்னவோ... அங்கிருந்து ராணுவமும் 1956-ம் ஆண்டு கிளம்பிருச்சு. பொறம்போக்கு இடத்துக்கு நாம் பட்டா போட்டுவைப்போமேனு பல வருடங்கள் கழிச்சு, முன்னாள் இங்கிலாந்து ராணுவ மேஜரான பேடி ராய் பேட்ஸ் இந்த இடத்தில் போய் குடியும் குடித்தனமுமா செட்டில் ஆகிட்டார். இங்கிலாந்து அதிகாரிகள் என்னென்னவோ பண்ணிப்பார்த்தும் பேட்ஸ் அசர்ற மாதிரி தெரியல. `ஓனர்னா ஓரமா போக வேண்டியதுதானே'ன்னு அங்கேயே பட்டா போட்டு உட்கார்ந்துட்டார்.

1967-ல் இந்த இடத்தை `ப்ராப்பர்ட்டி ஆஃப் சீலேண்ட்'னு பேர் வெச்சுத் தனிநாடா அறிவிச்சுத் தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டார் பேட்ஸ். பதறிப்போன இங்கிலாந்து அதிகாரிகள் இவருக்கு எதிராக வழக்குப் பதிவு பண்ண, அது நம்ம எல்லையிலேயே இல்லையே எப்படி விசாரிக்கிறதுனு நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. சர்வதேசக் கடல் எல்லையில் இந்த `ரஃப் டவர்' இருந்ததுதான் அதற்குக் காரணம். அதுக்கப்புறமா தன்னோட நாட்டுக்குனு ஒரு கொடி, நாணயம், ஸ்டாம்ப்லாம் வெளியிட்டு அலப்பரை பண்ணியிருக்கார் மனுசன். இத்துடன் நிற்காமல் பல பேருக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் கொடுத்திருக்கார்னா பார்த்துக்கோங்க! `தேவாவுக்கு ஒண்ணும் ஆகாது. யார் சொன்னா? தேவாவே சொன்னான்' மாதிரி... எந்த நாடும் சீலேண்டை ஒரு நாடாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், `உலகத்துலயே குட்டிநாடு நாங்கதான்'னு அந்த நாடே அறிவிச்சிருக்கு.

96p2.jpg

1978-ல் பேட்ஸ் தன் மனைவியுடன் இங்கிலாந்து போன கேப்ல அலெக்ஸாண்டர் அச்சென்பக், பேட்ஸின் மகனான மைக்கேலைச் சிறைப்பிடிச்சு அந்த இடத்தைக் கைப்பற்றிவிட்டார். அதுக்கப்புறமா சண்டைபோட்டு ஜெயிச்ச பேட்ஸ், அங்கிருந்தவர்களை போர்க் கைதிகள் ஆக்கிவிட்டார். அலெக்ஸாண்டருக்கு சீலேண்ட் பாஸ்போர்ட்டும் தந்து... ராஜதுரோகம் பண்ணதுக்காக அவரைக் கைதும் பண்ணி மத்தவங்களை விடுவிச்சிருக்கார். ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகள் இங்கிலாந்துகிட்ட போய் `என்னப்பா இது'னு நிற்க... `எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை'னு கை விரிச்சிருச்சு. அப்புறம் நேரடியா சீலேண்ட் போய் பேட்ஸ்கிட்ட பேச்சு வார்த்தை நடத்திப் பணத்தைக் கொடுத்து, அலெக்ஸாண்டரை மீட்டு வந்திருக்காங்க. கடுப்பாகிப்போன அலெக்ஸாண்டர், நான்தான் நியாயப்படி சீலேண்டை ஆளணும்னு கொடியெல்லாம் பிடிச்சிருக்கார். சீலேண்ட் இன் ஜெர்மனின்ற பேர்ல இன்னும் முடிசூட்டிட்டு வர்ற பழக்கம் இருக்குனா பார்த்துக்கோங்க!

இப்படியெல்லாம் பண்ணதாலயோ என்னவோ... அல்ஸைமரால் பாதிக்கப் பட்டிருந்த பேட்ஸ் 2012-ல் உயிரிழந்திட்டார். அவருக்குப் பின்னாடி மைக்கேல்தான் இந்த நாட்டோட மன்னர். 27 பேருக்கு இந்த நாட்டில் குடியுரிமை இருக்கிறதாகவும், ஓர் ஆண்டில் ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் மொத்த வருமானம் இருக்கிறதாகவும் கணக்குக் காமிச்சிருக்கு இந்த நாடு. இந்த நாட்டின் நாணயம், ஸ்டாம்ப் எல்லாத்தையும் ஆன்லைன்ல விற்றும், இந்த இடத்துக்குத் தங்க வர்ற சுற்றுலாப்பயணிகளாலும்தான் இந்த வருமானமாம்.

தனிநாடா இருந்துக்கிட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டாம இருக்குமா? கால்பந்து மைதானத்தில் பாதி சைஸ்கூட இல்லாத இந்த நாட்டுக்குனு கால்பந்து அணியே இருக்கு. அதாவது இந்த நாடு சார்பா வீரர்கள் விளையாடுவாங்க. அது மட்டுமில்லாம 2015-ல் ட்ரெட்மில்லில் ஓடியே ஒரு பாதி மாரத்தானே இங்கே நடந்திருக்காம். இங்கே எல்லாமே அப்படித்தான்!

vikatan

  • தொடங்கியவர்

 

பாம்புகளை நண்பர்களாக பார்க்கும் மனிதர்
========================================
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் சலீம் கான் என்பவர் கடந்த முப்பது வருடங்களாக பாம்புகளை பிடித்து வருகிறார்.
பிடித்த பாம்புகளை ஒவ்வொரு மாதமும் காட்டிற்கு சென்று விட்டுவிடுவார்.

இந்த வீடியோவில் சாக்கை அவர் அவிழ்த்த விட்ட தருணத்தில் சீறிப்பாய்ந்துக் கொண்டு செல்லும் எலி பாம்புகள், நாக பாம்புகள், மற்றும் கட்டுவிரியன் ஆகிய வகை பாம்புகளை பஞ்சமதி வனத்தில் விடுகிறார் சலீம் கான்.

பாம்புகள் மனிதர்களின் எதிரிகள் இல்லை என்றும், எலிகளைக் கொன்று விவசாயிகளுக்கு அவை நன்மை செய்கின்றன என்றும் சலீம் கான் தெரிவித்துள்ளார்

BBC

  • தொடங்கியவர்

14713761_1161896460525713_54364360424148

பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான அமரர் தேங்காய் சீனிவாசனின் பிறந்தநாள்.

 
  • தொடங்கியவர்

அவமதித்த வார்த்தைகளை ஆடையாக்கிய ஜோஜோ!

jojo%202%20600_12292.jpg

ஜோஜோ ஓல்டாம்...

இங்கிலாந்தை சேர்ந்த 31 வயது பிசினஸ் உமன். இதுவரை யாரும் யோசிக்காத வகையில் புதுமையான உடையை டிசைன் செய்துள்ளார். 

குழந்தையாக இருந்தது முதல் இப்போது வரை தனது உடல் மற்றவர்களால் எப்படியெல்லாம் கேலிக்கும் பரிகாசத்துக்கும் உள்ளானது என்பதைக் குறிக்கிற வகையில், அந்த வார்த்தைகளை வைத்தே உடையை வடிவமைத்திருக்கிறார்.

மோசமான வார்த்தைகளும், மிக அரிதாக பாராட்டு வார்த்தைகளுமாக கலர்ஃபுல்லாக இருக்கிறது அந்த உடை. அதன் மூலம் என் உடல் என் உரிமை என்கிற மெசேஜையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

''ஒரு நல்ல பாராட்டுங்கிறது ஒருத்தரோட நாளையே சந்தோஷமாக்கும். அப்படி இருக்கிறபோது அடுத்தவங்களோட தோற்றத்தைப் பார்த்து எதுக்காக தப்பான, மோசமான கமெண்ட்டுகளை வீசணும்? என் உடல்வாகைப் பத்தி அடுத்தவங்க அடிச்ச அநாகரிகமான கமெண்ட்டுகளை நான் பொருட்படுத்தினதே இல்லை. ஆனா அது என்னைப் பத்தின என்னோட பார்வையை மாத்திக்க உதவியிருக்குனுதான் சொல்லணும்.

jojo%20new_12591.jpg

11 வயசிருக்கும்போது என் ஃப்ரெண்ட்கூட ஒரு பார்ட்டிக்கு போனேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டிருந்தேன். என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்துட்டு, 'உன்னோட கை மாமிச மலை மாதிரி அவ்ளோ குண்டா இருக்கு'னு சொன்னா. உடனடியா ஓடிப் போய் கண்ணாடியில என் கைகளைப் பார்த்தேன். இனிமே இந்த டாப்ஸை போடக்கூடாதுனு முடிவு பண்ணினேன்.

என்னோட மார்பகங்கள் ரொம்பப் பெரிசா இருக்கிறதாகவும் அதை எனக்கான பாராட்டாகவும் சொன்னான் ஒருத்தன். பின்னாளில் அதையே எனக்கான அடையாளமா வச்சு அவன் கூப்பிட்டதை நான் இன்னும் மறக்கலை.

இன்னொரு முறை இன்னொரு இடம்.... அறிமுகமே இல்லாத ஒரு ஆண் என்னோட சிரிப்பைப் பார்த்துட்டு, உன் பல் பயங்கரமா இருக்குனு கமெண்ட் அடிச்சான். அன்னிலேருந்து பல் தெரியற மாதிரி சிரிக்கிறதை நிறுத்தினேன்.

இன்னும் இப்படி நிறைய மோசமான நினைவுகள்.... இதெல்லாம் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கு.

 

jojo3%20600_12193.jpg

நாம எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல சிறந்தவங்கதான். என் தோள்பட்டைகள் அகலமா இருக்குங்கிறதையும், பல் பெரிசா இருக்குங்கிறதையும், கையும் காலும் எலும்பு மாதிரி தெரியுதுங்கிறதையும் தவிர்த்துட்டு, வாழ்க்கையை ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு. அடுத்தவங்க என்ன சொல்வாங்களோங்கிற விமர்சனங்களை ஒதுக்கிட்டு, நம்ம உடம்பை, அது எப்படி இருந்தாலும் கொண்டாடற மனநிலை ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப முக்கியம்.

இப்படியொரு உடையை டிசைன் பண்றதுனு முடிவு பண்ணினதும், சின்ன வயசுலேருந்து நான் சந்திச்ச அத்தனை கிண்டல்களையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். இது சோகம் என்னன்னா, ஒரு விமர்சனம்கூட எனக்கு மறக்கலை. என் உடம்போட ஒவ்வொரு பகுதியைப் பத்தியும் யார், என்ன கிண்டல் பண்ணினாங்கன்றது பசுமையா மனசுல பதிஞ்சிருந்தது. இது யார் மனசையும் புண்படுத்தறதுக்கான முயற்சி இல்லை. யாரும் இதுக்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கணும்ங்கிறதும் என் எண்ணமில்லை. நம்மைப் பத்தியும் அடுத்தவங்களைப் பத்தியும் எப்படியெல்லாம் மோசமா விமர்சனம் பண்ணிட்டிருக்கோம்னு யோசிக்க வைக்கிறதுக்கான முயற்சிதான் இது.

தெருவுல உங்களைக் கடந்து போகற மனுஷங்களைப் பார்த்து, 'இவங்களுக்கென்ன.... கவலைகளே இல்லாத ஜென்மம்னு நினைப்பீங்க.  ஆனா கவலைகளோ பிரச்னைகளோ இல்லாத மனிதர்களே இல்லை. இந்த உடையில நான் எழுதியிருக்கிறது மாதிரி எல்லாரும் அவங்கவங்க பிரச்னைகளை எழுதி ஒட்டிக்கிட்டு நடமாட முடியாது. கூடியவரைக்கும் அடுத்தவங்கக்கிட்ட அன்பா இருக்க முயற்சி செய்வோமே...''  கனிவான கோரிக்கை வைக்கிறார் ஜோஜோ.

இப்படி அவமானம், வேதனைகளைத் தாண்டி சாதித்த பெண்கள் லிஸ்டில் இவரும் இடம்பெறுவாராக!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.