Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

’இறுதி எச்சரிக்கை...உலகம் அழியப்போகிறது..!’ - அலூனா சொல்லும் செய்தி

KOGI%2001.jpg   

  இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்..."  18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார் மொழிபெயர்ப்பாளர். அவர் கண்களில் அத்தனை பயம். சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார். 

ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின்  டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான "கோகி" (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள். எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது. அப்படியானவர்கள், 1990-ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா ( ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள்.  அந்த செய்தி...

"இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள். இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்... வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்..." 

"உலகின் இதயத்திலிருந்து..." (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன. பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது "அலுனா" (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.  

அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு... அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன. “எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை” என்று நம்புகிறார்கள் கோகிகள். அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை "மாமோ"க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள். ஒரு "கோகி", "மாமோ"வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் "அலுனா"...

KOGI%2003.jpg

இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள்  வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக "பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள். பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.

வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர். பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார். அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள். 

ALAN%20EREIRA%2002.jpg

 

தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்... தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்... கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

“ நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்...சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்...” என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”. மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன... அது “அலுனா” !!!!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

71293_thumb.jpg

 

இருக்கு...இஷாந்துக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இருக்கு! #twineffect

ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களான்னு எல்லாம் தெரியாது. ஆனா குறைந்தபட்சம் ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மம்மி பிராமிஸா நம்புறோம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நம்ம கிரிக்கெட்டர்ஸ் மாதிரியே அச்சு அசலா இருக்குற இன்னொருத்தரை ஸ்வைப் செஞ்சு பாருங்க. நம்புவீங்க!

விராட் கோலி(இந்தியா)-அகமது ஷேசாத்(பாகிஸ்தான்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/205200/205283.1.jpg          http://st3.cricketcountry.com/wp-content/uploads/cricket/20140522030159.jpeg

சுரேஷ் ரெய்னா (இந்தியா)-அகிலேஷ் யாதவ்(உ.பி முதல்வர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/202700/202703.1.jpg             https://pbs.twimg.com/profile_images/378800000739353138/becdf646f38b1ef4140e17d742c0d818_400x400.jpeg

ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ்(இங்கிலாந்து) -ரூபன் பேரிசெல்லோ (எஃப் 1 ரேஸர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/145800/145846.1.jpg               http://cdn-0.motorsport.com/static/img/mgl/1900000/1970000/1979000/1979100/1979190/s9/tusc-daytona-24-2015-rubens-barrichello.jpg

அனிருத்(இந்தியா)-                                   இஷாந்த் சர்மா(இந்தியா)

http://www.apnewscorner.com/images/news/2015/08/4/Anirudh-Ravichander.jpg      http://e2.365dm.com/09/02/800x600/Ishant-Sharma_1874931.jpg?20090217083814

ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலியா) - க்ளைவ் ஸ்டான்டென்(பிரிட்டிஷ் நடிகர்)

http://www.cricket.com.au/-/media/Players/Men/International/Australia/shane-watson-test.ashx    http://vignette3.wikia.nocookie.net/camelot/images/4/4d/Clive_Standen.jpg/revision/latest?cb=20131003071240

டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) -டேனியல் க்ரெய்க்(பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட்)

  http://www.ntcricket.com.au/~/media/cricketaustralia/images/player-profiles/South%20Africa/Dale%20Steyn_HeadShot-402.ashx?mw=320   https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7f/Daniel_Craig_-_Film_Premiere_%22Spectre%22_007_-_on_the_Red_Carpet_in_Berlin_(22387409720)_(cropped).jpg

டேரன் சமி (வெஸ்ட் இண்டீஸ்)-மொட்டை ராஜேந்திரன்

http://p.imgci.com/db/PICTURES/CMS/238300/238335.jpg    http://timesofindia.indiatimes.com/photo/49024286.cms

ஸ்டீபன் ஃபின் (இங்கிலாந்து)-கெளதம் கார்த்திக்

https://65.media.tumblr.com/415a5365b37921d66592a17447d125c0/tumblr_n1nzvmOYjU1r4xbypo1_400.jpg   https://gauthamkarthik.files.wordpress.com/2013/10/caseofopp.png

கிப்ஸ் (தென்னாப்பிரிக்கா)-பிட்புல்(அமெரிக்க பாடகர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/146300/146343.1.jpg   http://media.klatsch-tratsch.de/2013/11/Pitbull.jpg

மிட்செல் ஜான்சன்(ஆஸ்திரேலியா) -ஜிம் கேரி(ஹாலிவுட் காமெடியன்)

http://www.topnews.in/files/Mitchell-Johnson_2.jpg   https://s-media-cache-ak0.pinimg.com/236x/4e/17/ac/4e17aca170e04058d95b55473763cd9e.jpg

மலிங்கா (இலங்கை) -ஓம்கார் தாஸ் மாணிக்பூரி(நாடக நடிகர்)

http://static.dnaindia.com/sites/default/files/1881117.jpg  http://www.bollypedia.in/img/Image_data/Performer_poster/1459_omkardas-1.jpg

நாசர் ஹுசைன்(இங்கிலாந்து) -விளாடிமிர் புதின் (ரஷ்ய அதிபர்)

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Nasser_Hussain.JPG/220px-Nasser_Hussain.JPG  http://specials-images.forbesimg.com/imageserve/5637d810e4b0ffa7afe68fc9/320x486.jpg?fit=scale&background=000000

 

 

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg 

ண்ட்ரியாவுக்கு இது பெர்ஃபாமன்ஸ் சீஸன். மலையாளத்தில் மம்மூட்டியுடன் `தொப்பில் ஜொப்பன்' படத்தில் நடித்த `ஆனி' கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட, இப்போது `வடசென்னை' படத்தில் செம தில் லேடியாக நடிக்கிறார். `நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதாபாத்திரங்கள்தான் முடிவுசெய்கின்றன. `வடசென்னை' படத்தில் குடிசையில் வாழும் பெண்ணாக நடிக்கிறேன். நானும் சென்னைப் பெண்தான் என்றாலும், நார்த் மெட்ராஸ் வாழ்க்கை எனக்கும் புதுசுதான். அதனால் இப்போ `வடசென்னை'க்கு அடிக்கடி விசிட்டடித்து அந்தப் பெண்களின் மேனரிசங்களைக் கற்றுவருகிறேன்' என்கிறார் ஆண்ட்ரியா. நீ கலக்கு கண்ணு!


36p2.jpg

`கவண்', `பவர்பாண்டி', `தானா சேர்ந்தக் கூட்டம்' என பிஸியாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். நடிக்கும் படங்களில் பாடவும் வாய்ப்பு கிடைப்பதால், பொண்ணு பயங்கர ஹேப்பி. `விஜய் சேதுபதி எனக்கு நல்ல ஃப்ரெண்ட். சூர்யா, தனுஷோட ரசிகை நான். அவங்களை எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். இப்ப அவங்ககூட நடிக்கிறேன்கிறதை நம்பவே முடியலை. யெஸ்... ட்ரீம்ஸ் கம் ட்ரூ' எனச் சிலிர்க்கிறார் மடோனா. ஸ்வீட்டி!


36p3.jpg

பெரும்படையுடன் ஷூட்டிங்குக்கு வரும் நடிகைகள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா ஷர்மா. காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், டிரைவர் மட்டும் அல்லாமல், உதவியாளர்கள் 5 பேர் எனக் கிட்டத்தட்ட 10 பேருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதுதான் வழக்கமாம். `ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுஷ்கா அமைதியாக இருந்தாலும், உதவியாளர்களின் தொல்லை தாங்க முடியவில்லை' எனத் தயாரிப்பாளர்கள் புலம்ப, `ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாக நடிக்கவும், படத்தில் அழகாகத் தெரியவும் எனக்கு சிலர் முக்கியம். அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவருவதில் என்ன தவறு? அவர்கள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார்கள்' - இது அனுஷ்காவின் பதில். படை நல்லது!


36p4.jpg

டந்த 35 வருடங்களாக அமிதாப் பச்சனின் ஞாயிறு பொழுதுகளின் மாலை வேளை, ரசிகர்களோடுதான். மும்பை ஜுகு கடற்கரை அருகே வசிக்கும் அமிதாப், மும்பையில் இருந்தால் தவறாமல் வீட்டுக்கு வெளியே ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். `` `கூலி' படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கி, வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த என்னை, ரசிகர்கள் சந்திக்க முதல்முறையாக வீட்டுக்கு வந்தார்கள். அந்த அன்பு என்னைக் கலங்கடித்துவிட்டது. அந்தச் சந்திப்பு, என் மனதை இலகுவாக்கியது. அப்போதில் இருந்து ரசிகர்கள் சந்திப்பை வழக்கமாக வைத்திருக்கிறேன்.கிழவனானப் பிறகும் என்னைக் கண்டு கூட்டம் கூடுவது எனக்கே வியப்பாக இருக்கிறது. அன்புக்கு நன்றி'' என்கிறார் பிக் பி. கிரேட்ஜி!

vikatan

  • தொடங்கியவர்

மனித நூலகத்தின் கதையை கேளுங்கள்

மனித நூலகம் கேள்விப்படிருக்கிறீர்களா?

இலாவிட்டால் "சிங்கப்பூரின் மனித நூலக"த்தின் இந்த கதையை கேளுங்கள்.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அட.. ‘சாண்ட்விச்'க்கு இப்படி ஒரு கதை இருக்கா?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
4 hours ago, நவீனன் said:

71293_thumb.jpg

 

இருக்கு...இஷாந்துக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இருக்கு! #twineffect

ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களான்னு எல்லாம் தெரியாது. ஆனா குறைந்தபட்சம் ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மம்மி பிராமிஸா நம்புறோம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நம்ம கிரிக்கெட்டர்ஸ் மாதிரியே அச்சு அசலா இருக்குற இன்னொருத்தரை ஸ்வைப் செஞ்சு பாருங்க. நம்புவீங்க!

விராட் கோலி(இந்தியா)-அகமது ஷேசாத்(பாகிஸ்தான்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/205200/205283.1.jpg          http://st3.cricketcountry.com/wp-content/uploads/cricket/20140522030159.jpeg

சுரேஷ் ரெய்னா (இந்தியா)-அகிலேஷ் யாதவ்(உ.பி முதல்வர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/202700/202703.1.jpg             https://pbs.twimg.com/profile_images/378800000739353138/becdf646f38b1ef4140e17d742c0d818_400x400.jpeg

ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ்(இங்கிலாந்து) -ரூபன் பேரிசெல்லோ (எஃப் 1 ரேஸர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/145800/145846.1.jpg               http://cdn-0.motorsport.com/static/img/mgl/1900000/1970000/1979000/1979100/1979190/s9/tusc-daytona-24-2015-rubens-barrichello.jpg

அனிருத்(இந்தியா)-                                   இஷாந்த் சர்மா(இந்தியா)

http://www.apnewscorner.com/images/news/2015/08/4/Anirudh-Ravichander.jpg      http://e2.365dm.com/09/02/800x600/Ishant-Sharma_1874931.jpg?20090217083814

ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலியா) - க்ளைவ் ஸ்டான்டென்(பிரிட்டிஷ் நடிகர்)

http://www.cricket.com.au/-/media/Players/Men/International/Australia/shane-watson-test.ashx    http://vignette3.wikia.nocookie.net/camelot/images/4/4d/Clive_Standen.jpg/revision/latest?cb=20131003071240

டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) -டேனியல் க்ரெய்க்(பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட்)

  http://www.ntcricket.com.au/~/media/cricketaustralia/images/player-profiles/South%20Africa/Dale%20Steyn_HeadShot-402.ashx?mw=320   https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7f/Daniel_Craig_-_Film_Premiere_%22Spectre%22_007_-_on_the_Red_Carpet_in_Berlin_(22387409720)_(cropped).jpg

டேரன் சமி (வெஸ்ட் இண்டீஸ்)-மொட்டை ராஜேந்திரன்

http://p.imgci.com/db/PICTURES/CMS/238300/238335.jpg    http://timesofindia.indiatimes.com/photo/49024286.cms

ஸ்டீபன் ஃபின் (இங்கிலாந்து)-கெளதம் கார்த்திக்

https://65.media.tumblr.com/415a5365b37921d66592a17447d125c0/tumblr_n1nzvmOYjU1r4xbypo1_400.jpg   https://gauthamkarthik.files.wordpress.com/2013/10/caseofopp.png

கிப்ஸ் (தென்னாப்பிரிக்கா)-பிட்புல்(அமெரிக்க பாடகர்)

http://p.imgci.com/db/PICTURES/CMS/146300/146343.1.jpg   http://media.klatsch-tratsch.de/2013/11/Pitbull.jpg

மிட்செல் ஜான்சன்(ஆஸ்திரேலியா) -ஜிம் கேரி(ஹாலிவுட் காமெடியன்)

http://www.topnews.in/files/Mitchell-Johnson_2.jpg   https://s-media-cache-ak0.pinimg.com/236x/4e/17/ac/4e17aca170e04058d95b55473763cd9e.jpg

மலிங்கா (இலங்கை) -ஓம்கார் தாஸ் மாணிக்பூரி(நாடக நடிகர்)

http://static.dnaindia.com/sites/default/files/1881117.jpg  http://www.bollypedia.in/img/Image_data/Performer_poster/1459_omkardas-1.jpg

நாசர் ஹுசைன்(இங்கிலாந்து) -விளாடிமிர் புதின் (ரஷ்ய அதிபர்)

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Nasser_Hussain.JPG/220px-Nasser_Hussain.JPG  http://specials-images.forbesimg.com/imageserve/5637d810e4b0ffa7afe68fc9/320x486.jpg?fit=scale&background=000000

 

 

 

vikatan

 

  • தொடங்கியவர்

மூன்று முறை மரணத்தை வென்ற சேவல்

 

ஜப்பானில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் மரணத்திலிருந்து மூன்று முறை தப்பித்து ’அதிர்ஷ்டக்கார பறவை என்று புகழ் பெற்றுள்ள ஒரு சேவல், விலங்கியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் நம்ப முடியாத வகையில் ஒரு ஈர்ப்பாக மாறியுள்ளது.

மசாஹிரோ சேவல்
 மரணத்தை வென்ற மசாஹிரோ

மசாஹிரோ என்ற பெயருடைய இந்த சேவல், ஒசாகாவில் ஒரு உள்ளூர் பிரபலமாக மாறியுள்ளது.

கடந்த மாதம் உள்ளூர் போக்குவரத்து போலீஸ் துறையின் கெளரவ தலைவராக இந்த சேவல் பதவி வகித்ததாக கியோடோ செய்தி ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒசாகா நகரில் உள்ள டென்னோஜி விலங்கியல் பூங்காவில் ரக்கூன் என்ற விலங்குக்கு உணவாக இந்த மசாஹிரோ சேவல் படைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், பெற்றோர் இல்லாத ஒரு வாத்து குஞ்சினை வளர்க்கவும், அதனை பராமரிக்கவும் தற்காலிகமாக மசாஹிரோ சேவல் விட்டு வைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த விலங்கியல் பூங்காவில் பறவைகளை தாக்கி வந்த ஒரு காட்டு மரநாயை ஈர்ப்பதற்கு ஒரு நேரடி தூண்டிலாக மசாஹிரோ பயன்படுத்தப்பட்டது.

ஆனால், அன்று அந்த காட்டு நாய் அங்கு வராத காரணத்தால், சேவலின் தலை தப்பியது.

பின்னர் ,இந்த சேவல் விலங்கியல் பூங்காவில் இருந்த சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு அன்றைய தினத்தின் இரவு உணவாக இனம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மசாஹிரோவின் முறை அன்று வரவேயில்லை என்று கியோடோ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

தனது வாழ்வின் பயங்கரமான முடிவை, மசாஹிரோ சேவல் மூன்று முறை தவிர்த்து விட்டதால், டென்னோஜி விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் அதனிடம் ஏதோ விசேட தன்மை உள்ளது என்று தீர்மானித்து அதனை உணவாக படைக்கப்படும் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.

அதன் பின்னர், டென்னோஜி விலங்கியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை மசாஹிரோ வெகுவாக ஈர்த்துள்ளது. மசாஹிரோவை சில வினாடிகள் பிடித்து இருந்தால், அதனுடைய அதிர்ஷ்டம் தங்களையும் தொற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் பலரும் மசாஹிரோவை கையில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.

மக்களின் கவனத்தை இந்தளவு இந்த சேவல் ஈர்க்கும் என்று தான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று டென்னோஜி விலங்கியல் பூங்காவின் மருத்துவரான ஷின் நிஷிஓகா தெரிவித்தார்.

வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொள்வதற்கு , உயிர் கண்டத்தில் இருந்து தப்பித்த மசாஹிரோவை சந்திப்பது ஒரு நாள் வாய்ப்பினை தரும் என்று அவர் மேலும் கூறினார்.

 

BBC

  • தொடங்கியவர்

எந்த உறவையும் வெறுப்புடன் நோக்குதல் ஆகாது
 
 

article_1478060485-po%5Bi.jpgபாகுபாடான அன்பைக் காட்டுபவர்களிடம் உண்மைத் தன்மை கிடையாது. ஒரு குடும்பத்தில் பெற்றோர்களில் சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளிடம் கூட பாகுபாடாகவே அன்பை வெளிப்படுத்துவது உண்டு. 

மேலும் உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புக்கள் இடையேயும் பாகுபாடாக நடந்து கொள்வது மனச்சாட்சியற்ற செயல் எனப் புரிந்து கொள்வதுமில்லை. 

பணம், புகழ், அந்தஸ்து போன்றவைகளை மையப்படுத்தி உறவுகளுடன் கூட மாறுபாடான கருத்துடன் நடப்பது முறைதானா? எந்த உறவையும் வெறுப்புடன் நோக்குதல் ஆகாது.  இத்தகையவர்கள் இறுதியில் தங்களால் நிராகரிக்கப்பட்டவர்களிடம் வந்து உதவிகளைக் கேட்பதுண்டு.  

எந்த நிலையும் எவருக்கும் வரலாம்; வராமலும் போகலாம். ஆனால் நாம் எல்லோரும் மானுடர் எனும் உணர்வை மறத்தலாகாது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காற்றைச் சுத்தப்படுத்தும்
வீட்டுச் செடிகள்!

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera)

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant)

வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig)

காற்றின் நச்சுகளை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm)

காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant)

நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos)

நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

(Whatsapp)

Bild zeigt Pflanze
  • தொடங்கியவர்

இணையத்தை கலக்கும் சேலை டிரெண்ட்! #100SareeDays

சேலை

தினம் தினம் புதுப்புது விஷயங்கள் வந்து இணையவாசிகளுக்கு தீனி போடுவது வாடிக்கை ஆகிவிட்டது. அமெரிக்க அழகிகள் தொடங்கி அமைந்தகரை அநியாயம் வரை எல்லாவற்றுக்கும் ஹேஷ்டேக் போட்டு கொண்டாடியும், கேள்விகள் கேட்டும் வருகிறார்கள் நெட்டிசன்ஸ். அப்படி சமீபத்தில் வைரல் ஆன விஷயம் #100sareedays. ”நம் அம்மாக்கள் 365 நாட்களும் சேலை அணிகிறார்கள். நாம் ஏன் அணியக்கூடாது” என்ற கேள்வியுடனும், பெண்களிடையே சேலையை பற்றிய ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் #100sareedays. தினம் தினம் ஒரு சேலை அணிந்து அந்த படத்தை இந்த ஹேஷ்டேகில் ஷேர் செய்ய வேண்டும் என்பதுதான் இதன் கலாசாராம்.

இதில் அதிரிபுதிரி ஹிட் அடித்து இணைய பிரபலம் ஆகியிருக்கிறார் ஐஷ்வர்யா. தொலைகாட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஐஷ்வர்யாவை, இன்னும் அதிகமானோர்க்கு தெரிய வைத்தது சேலை டிரெண்ட் தான். 50 நாட்களுக்கும் மேலாக தினம் ஒரு சேலை என படங்களும், அதைப்  பற்றிய தகவல்களையும் ஷேர் செய்து வருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் என தினமும் இவரது புதிய படத்துக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கிறது. அவரது சேலையை பற்றி பெண்கள் பேசி தீர்க்கிறார்கள்.

sareeeee_10577.jpg

முதல் 50 நாட்கள் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த படங்களின் தொகுப்பைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

Pic courtesy: https://twitter.com/Aishwarya12dec

vikatan

  • தொடங்கியவர்

ஹெட்போனையும் காதையும் பிரிக்க முடியாது எனும் பெண்ணா நீங்களா?

ஒலியானது நமக்கே நமக்கு மட்டும் காதில் விழுந்தால் போதும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கருவி தான் ஹெட்செட். காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ...ஹெட்செட் இருப்பது தான் இப்போதைய பெண்களின் லேட்டஸ்ட் டிரெண்ட்!

எங்கேயும், எப்போதும் ஹெட்போன் என இருக்கும் பெண்ணா நீங்கள்?  அப்படி என்றால் இந்த தகவல்கள் உங்களுக்கு தான்.

head1_13443.jpg

செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும், அதனால் ஹெட் போனைப் பயன்படுத்துவது பெஸ்ட் தானே.. என்கிறார்களா? அதுவும் சரிதான்.

ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்னைகளுக்கு நம்மை  கொண்டு சென்றுவிடும். எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைப்பாடு ஏற்படும். அதிகமாக ஹெட்செட் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும்  தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும். சாலை விபத்துகளில் கணிசமான விபத்துக்கள் ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால்தான் நடக்கிறது.

தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி வரும். ஹெட்செட் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே கேட்கும் திறன் குறைப்பாடுகள் ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது கேட்காத மெஷின்களை இளம்வயதிலேயே பயன்படுத்த நேரும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

head2_13044.jpg

அதிகமாக ஹெட்செட் பயன்படுத்தினால் மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறும் மனநல ஆலோசகர் சுஹாசினி, ''ஹெட்செட் மாட்டிக்கொண்டே  பணியில் ஈடுபடும்போது கவனம், நாம் செய்யும் வேலையில் இருக்காது. இதனால் வேலையை சரியாக செய்ய முடியாது. டிரைவிங், வாக்கிங் என எப்போதும் பாட்டுக்கேட்டுக்கொண்டே இருப்பதால், வேலையை மெதுவாகத்தான் செய்ய முடியும் அல்லது தவறாக செய்துவிடுவார்கள். இதனால் நேர விரையமும் சமயங்களில் பிரச்னைகள், விபத்துகளில் போயி முடிந்துவிடும். சிலர் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அப்போது சாப்பாட்டில் அறவே கவனம் இருக்காது.

சுற்றி இருப்பவர்களுடன் விலகி வைக்க முக்கிய காரணம் ஹெட்போன். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டிய நேரங்களில் தவறவிடுவார்கள். சிலர் பிரச்னைகள் இருக்கும்போது, இசையை கேட்பது மன அழுத்ததை குறைக்கும் என நம்புகிறார்கள். உடனே ஹெட்செட்டை மாட்டிக்கொள்வார்கள். மீண்டும் அந்தப் பிரச்னை வெடிக்கும்போது அவர்களால் திடீரென முடிவெடுக்க முடியாமல் பெரிய மன அழுத்ததுக்கு உள்ளாகிறார்கள்.

head3_13388.jpg

சிந்திக்கும் திறன், நியாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு 'ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.

மன அழுத்தத்துக்கு இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர, இதற்கே அடிமையாவது கூடுதல் பிரச்னையே தரும். தனிமையிலிருந்து தப்பிக்க சுற்றி உள்ளவர்களிடம் பழகுங்கள். பிரச்னைகள் மற்றவர்களிடம் சொல்லி புலம்புகள்.. மனபாரம் குறையும்.” என்றார் எச்சரிக்கையுடன்!

டேக் கேர் கேர்ள்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

நிர்வாண தண்டனையை எதிர்த்து வென்ற பாகிஸ்தான் பெண்!

Pakistan%20Gang%20Rape%20Vi_velu_17349.j

வருக்கு நேர்ந்த கொடுமை மற்ற பெண்களுக்கு நேர்ந்திருந்தால் அந்த நொடியிலேயே தன்னை மாய்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தப் பெண், தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு, சட்டப்போராட்டம் மேற்கொண்டு, மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அவர்... பாகிஸ்தானைச் சேர்ந்த  முக்தர் மாய்.

14 வருடங்களுக்கு முன்பு சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர் முக்தர் மாய். மற்ற பெண்களைப்போல கூனிக்குறுகி வீட்டில் முடங்காமல்,  தனக்கு அநீதி இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்ற உறுதியுடன்,  துணிச்சலாக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதுமட்டுமின்றி, தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தன்னுடைய முயற்சி முன்உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக, நவம்பர் 2-ம் தேதி கராச்சியில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு, மேடையில் கம்பீரமாக முக்தர் மாய் நடந்துவந்தபோது, அவரின் தாய்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கை விதைத்தார்.

Pakistan%20Gang%20Rape%20Vi_velu-1_17501

முக்தர் மாய்க்கு ஏன், எப்படி நடந்தது அந்த அநியாயம்?

2002-ஆம் ஆண்டு, தன் சகோதரன் மற்றும் தன் சமூகத்தை தரக்குறைவாகப் பேசியதாக முக்தார் மாய் பற்றி சம்பந்தப்பட்டவர் பஞ்சாயத்தில் முறையிட, உள்ளூர் பெரியவர்கள், முக்தரை பலத்காரம் செய்யச் சொல்லியும், பொதுமக்கள் முன் நிர்வாணமாக நிற்கவைத்தும் தண்டனை விதித்தனர். இது நடந்த பிறகு முக்தர் மனம் தளராமல் தன்னை பலத்காரம் செய்த 14 பேர் மற்றும் தண்டனை வழங்கிய ஊர் பெரியவர்கள் மீது, சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் 6 பேருக்கு மரணதண்டனை பெற்றுத் தந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு வந்த சில நாட்களில், முக்தார் மாய், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டக் களத்துக்கு வந்தார். மேலும், தன் சொந்த ஊரான மீர்வாலாவில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தந்து உதவிவருவதோடு,  குழந்தைகளுக்குக் படிப்பும் சொல்லித்தருகிறார். இவருடைய போராட்ட குணம், சேவை மனப்பான்மையை கவனித்த பாகிஸ்தான் ஃபேஷன் டிசைனர் ரோஜினா முனிப், தன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்தாருக்கு அழைப்புவிடுத்தார்.

தற்போது 44 வயதாகும் முக்தார் மாய், ஃபேஷன் ஷோ மேடையில் கம்பீரமாக நடந்துவந்து நின்று, ''என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள், மன உறுதியோடு இருக்கவேண்டும். பெண்கள் கோழைகள் அல்ல என்பதை வாழ்ந்துகாட்டும் உதாரண மனுஷியாக நான் இருக்க  வேண்டும் என்பதற்காகவே இந்த ஃபேஷன் நிகழ்ச்சியியில் கலந்துகொண்டேன்'' என்றபோது, அந்த அரங்கம் இன்னும் அழகானது.

''பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்துப் போராடினால்தான்  நீதி கிடைக்கும். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மற்ற பெண்களுக்கு நான் கூறவிரும்புவது இதுதான். என் மூலம் அப்படி ஒரு பெண்ணாவது துணிச்சல் பெற்றால், நான் சந்தோஷப்படுவேன்!'' என்ற முக்தார் மாய்க்கு, பலமான கைகுலுக்கல்கள்!

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபர் தேர்தல்:ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்த குரங்கு

Untitled_21301.jpg

சீனாவைச் சேர்ந்த பிரபல லக்கி குரங்கு ஜீடா. எப்படி கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் ஆக்டோபஸ்கள் வெற்றியாளர்களை கணிக்குமோ? அப்படிதான் ஜீடாவும். இந்தாண்டு யூரோப்பியன் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி கோப்பையை தட்டி செல்லும் என்ற கணித்தவர் தான் நம்ம ஜீடோ. அதன்பிறகு, ஜீடா உலக அளவில் செம்ம ரீச் ஆனது.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தும் ஜீடோவிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிலரி, ட்ரம்ப் என இருவரது படங்களையும் வைத்து, இதனிடம் கருத்து கேட்க., ஜீடா கை காட்டியாது ட்ரம்ப்பையாம். 

நன்றி: Hindusthan times

 

Vikatan

  • தொடங்கியவர்

வருகிறது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை படம்

1224806_10_22159.jpg

தோனியின் பயோபிக் படம் இறங்கி அடிக்க, கிரிக்கெட் படங்களை எடுப்பது பாலிவுட்டில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. இதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் பயோபிக்களை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் 1983-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றது படமாக உள்ளது.
கபீர் கான் இந்த படத்தை இயக்குகிறார். சல்மானின் சகோதரி அல்வீரா மற்றும அல்வீரா கணவர் அதுல் அக்னிஹோத்ரி இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vikatan

  • தொடங்கியவர்
மனம், ஆன்மா, செயல் இணையாமல் காரிய சித்தி என்பதேது?
 
 

article_1478060107-images.jpgமிகப்பெரிய அருஞ்செயல்களை அநாயாசமாகச் செய்து முடிப்பவர்கள் கூட, சின்னச் சின்னக் காரியங்களைச் செய்ய முடியாமல் தோல்வியுறுவதுண்டு.

அரும்பணிகளை அவதானமாகச் செய்து கொள்பவர்களும் சின்னக் காரியங்களிலும் அதே அக்கறைகளைக் காட்டியேயாக வேண்டும். நன்மையூட்டும் எந்தக் கருமங்களின் பலாபலன்களை அடையவேண்டுமாயின் உதாசீனமான, அக்கறையற்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். இவை தோல்வியையே ஏற்படுத்தும். 

மனம், ஆன்மா, செயல் இணையாமல் காரிய சித்தி என்பதேது? பெரிய வேலை, சின்ன வேலை என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. 

காரியம் முடியும்வரை கவனமாகப் புலன்களை, அறிவினை ஒருங்கிணைப்பீர்களாக.  

சந்தோசமாகச் செய்யும் காரியங்கள் முழுமைபெறும். 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14917144_1175999442448748_82726354483891

இந்திய அணியின் அசைக்க முடியாத ஆக்ரோச நாயகன்
விராட் கோலி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தியாவின் டெஸ்ட் அணித்தலைவர்
துடுப்பாட்டத்தில் துணைநிற்கும் தூண்!
திறமையும், தனித்துவமும் கொண்ட சாகச சாதனையாளன்

இந்தி அணியின் ஓட்ட இயந்திரம் விராட் கோலிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Virat Kohli

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... இது கோலி பிறந்த நாள் #HBDKohli

கோஹ்லி

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியின் போது நடுவிரலைக் காட்டி ரசிகர்களின் கேலிக்கு பதில் சொன்ன இளைஞனை இந்த உலகம் கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு கோபம் ஆகாது என்று விமர்சித்தனர். இங்கிலாந்தில் காதலியோடு சுற்றியதால் ஃபார்ம் இழந்தவர் என்ற போதும் அவர் கோபத்தையே வெளிப்படுத்தினார். இந்த கோபம் இருந்தால் இந்திய கேப்டன் அல்ல, அணியிலேயே இருக்க முடியாது என்றும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இந்த கோபம் தான் கோலியை ஒரே வருடத்தில் நம்பர் 1 வீரனாக்கியது.

ஆம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் மிஸ்டர் அக்ரஸிவ் என்ற வார்த்தைக்கு சரியான பொருள். 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி ஓய்வை அறிவித்ததும் உடைந்து போனேன் என எமோஷனல் முகம் காட்டிய கோலி, 4-வது டெஸ்ட் போட்டியில் அதிகாரபூர்வ கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அங்கிருந்து தொடங்கிய ஆட்டம் இதுவரை டாப் கியரிலேயே உள்ளது. முழுமையாக கோலி தலைமையில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இதுவரை ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை.

ஆசியக்கோப்பை போட்டிகளில் ஆசிய அணிகளைப் புரட்டி போட்டார். உலகக் கோப்பை தோல்விக்கு அனுஷ்காவை திட்டியவர்களுக்கு ''ஷேம்'' போஸ்ட் மூலம் பதிலடி என தனது அக்ரஸிவ் குணத்தை குறைத்துக் கொள்ளாமல் தெறி காட்டியது கோலி ஸ்டைல்.

தென்னாப்பிரிக்காவுடன் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் தோனி இல்லாத இந்திய‌ அணி சொந்த மண்ணில் டிவில்லியர்ஸ், ஆம்லா என பெரும் தென்னாப்பிரிக்க அணியிடம் மண்ணைக்கவ்வும் என்ற ஆருடத்தை எல்லாம் காலி செய்தார். முடிவு 3-0 என்று தொடர் இந்தியா வசமானதுதான். தொடர்ந்து மே.இ.தீவுகள், நியூஸிலாந்துக்கு வொயிட் வாஷ் என அணியை முதலிடத்திலேயே வைத்திருக்கிறார். 

டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் ஒருநாள், டி20 போட்டிகளில் உலகின் முன்னணி வீரர். ஐபிஎல் போட்டிகளில் ஒரே தொடரில் 900 ரன்களுக்கும் மேல் குவித்து ரன் மிஷினாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார்.

கோபம் தான் பலம்:

கேப்டன் கோலிக்கு அவரது கோபம் தான் பலம் என்பதை உணர்த்தும் சில அக்ரஸிவ் மொமண்ட்ஸ்:

1. ட்ராவை நோக்கி ஆட மாட்டேன்! வெற்றி இல்லை தோல்வி இது தான் முடிவாக இருக்க வேண்டும். தோல்வியை வெறுப்பவன் நான். அதனால் ஆட்டத்தை வெற்றியை நோக்கியே நகர்த்துவேன் என்ற கோலியின் பிரஸ் மீட் பதில்.

2. உள்வட்டத்துக்குள் வீரர்களை கையாளுவது, நீண்ட நேரமாக களத்தில் இருக்கும் வீரரை வீழ்த்த, வீரருக்கு அருகில் பீல்டிங் செட் செய்து தடுமாற செய்வது என களத்தில் ஃபயர் காட்டுவது.

3. ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலுக்கு முறைப்பதில் தவறில்லை என்ற ஆட்டிட்யூட். இஷாந்த் ஷர்மா இலங்கை தொடரில் அக்ரஸிவாக செயல்பட்டதை கோலி கண்டிக்காமல் இருந்தது தான் 22 ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது. 

4. சுழற்பந்து ஆடுகளங்களில் மட்டுமே இந்தியா ஜெயிக்கிறதா என்ற கேள்விக்கு எங்களை டி20 உலகக் கோப்பையில்  தோற்கடித்த நியூஸிலாந்து அணியில்  சாண்டர் போன்ற ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களால் விக்கெட்டை வீழத்த முடியவில்லை என பதிலடி தந்தது. 

5. பங்களாதேஷ், ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வீழ்த்தி வம்பிழுத்ததை எல்லாம் மைதானத்தில் ''ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்'' சைகை மூலம் திருப்பி தந்தது.

இந்திய அணியின் குறும்பு பையன், கோபப்படும் இளைஞன் என்ற பெயரை அக்ரஸிவ் தனத்தால் மாற்றி இந்தியா ஜெயிக்க இந்த 28 வயது இளைஞன் கோபப்பட வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கி இந்தியாவையும், தன்னையும் நம்பர் 1 இடத்தில் வைத்திருக்கும் விராட் கோலி ஒரு மாஸ்டர். ஹாப்பி பர்த்டே மிஸ்டர் அக்ரஸிவ்.

vikatan

  • தொடங்கியவர்

குட்டியா ஒரு தோட்டம்!

 

128p1.jpg

``செடி வளர்க்குற தொட்டிக்கென கூழாங்கல் தனியா வாங்கிட்டு இருந்தோம். இப்போ தொட்டி செய்யும்போது சலிக்கிறப்ப கிடைக்கிற சின்னச்சின்ன கல்லையே கூழாங்கல்லுக்குப் பதிலா பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். எங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் எதுவுமே கழிவு இல்ல. எல்லாத்தையும் முடிஞ்ச அளவுக்கு மறுசுழற்சி செஞ்சு பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்'' எனச் சொல்லும் மனோகரன்,  வீட்டுக்குள்ளே வீடுகளில் வளர்க்கும் செடிகளை பகுதி நேரமாக விற்பனை செய்து வரும் ஐ.டி இளைஞர். சென்னையின் ஐ.டி கம்பெனிகள் தாண்டியும் இவரின் குட்டிச்செடிகள் `டைனி'ஸ் கார்டன்' செம பாப்புலர்! 
128p3.jpg
``என்ன பண்றீங்க ப்ரோ?''

``சொந்த ஊரு மதுரை. இப்போ பெங்களூர். சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்கிறதுல ரொம்ப இஷ்டம். வீட்டுல சும்மா இருக்குற நேரத்துல கண்ணாடி பாட்டில்கள்ல செடி வளார்த்துக்கிட்டு இருந்தேன். போன வருஷம் மாமா போன் பண்ணி, `இன்ஃபோசிஸ்ல ஒரு நிகழ்ச்சி நடத்துறாங்க. அங்க ஸ்டால் போடுறியா'ன்னு கேட்டாரு. Steller saturdayனு ஒரு நிகழ்ச்சி. என்னோட செடிகளை எல்லாம் கொண்டு போயிருந்தேன். அங்கே வந்தவங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சரி எல்லாருக்கும் பிடிச்சிருக்கே, இதையே ஏன் சும்மா இருக்கிற நேரத்துல பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சது தான் tinys garden!''

128p2.jpg

``அதென்ன tinys garden?''

``நான் குட்டையா இருப்பேன். ஸ்கூல்ல எனக்குப் பேரு டைனி. அதுபோக இது வீட்டுக்குள்ள வளர்க்குற செடிகள். இதுவும் நம்மள மாதிரி தானேன்னு டைனி கார்டன்னே பேரு வெச்சுட்டுட்டேன்!''

``வீண்பொருட்கள்ல செய்ற தொட்டிகளுக்கான ஐடியா?''

``ஆரம்பத்துல ஒயின் பாட்டிலை நல்லா சுத்தம் பண்ணி பெயிண்ட் அடிச்சு மூங்கில் செடி வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி இப்போ பீங்கான் கிளாஸ்ல ஆன கலைப்பொருட்களை தொட்டிகளா பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். பெரும்பாலும் பீங்கான் பொருட்களை வெளில வாங்குவேன். சிமெண்ட் தொட்டிகள் நானே செஞ்சுடுவேன்.  இது எல்லாத்துக்குமே ஃபேஸ்புக் தான் காரணம். சின்னதா ஒரு போஸ்ட்ல ஆரம்பிச்ச ஒரு விஷயம். அதைப் பார்த்து நண்பர்கள் அவங்களோட நண்பர்களுக்கு ஷேர் பண்ண ஆரம்பிச்சாங்க. எந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவுல கிடைக்கிற நேரத்துல இதைப் பண்ணுறதுல ஆத்ம திருப்தி! நீங்களும் இதைச் செய்யலாம்!''

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்!

 

p28l.jpg

சந்தேகம்

p28a.jpg

``உனக்கு எப்போ கல்யாணம்?'' எனக் கேட்டான் காதலன், காதலியிடம்!

- கிருஷ்ணகுமார் தர்மலிங்கம்


பதற்றம்

p28b.jpg

இன்டர்வியூ நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, முதன்முதலாக இன்டர்வியூ செய்யவந்த புது ஆபீஸருக்கு!

- அ.ரியாஸ்


மரியாதை

p28c.jpg

ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் ஒரு நிமிடம் எழுந்து நின்றோம். பிரதியாக அவர் ஒரு மணி நேரம் நின்றார்!

- எஸ். சுந்தரராமன்


ஹெல்த்

p28e.jpg

``நோ... நோ... ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை. நீங்க ஒரு தோசை மாவு பாக்கெட்டும் இட்லிப் பொடி பாக்கெட்டும் வாங்கிட்டு வாங்க. வீட்லயே நல்லா சாப்பிடலாம்’’ என்றாள் நித்யா!

-அ.ரியாஸ்


ஆசை

p28d.jpg

ஹீரோயினோடு ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார், வருமான வரி சோதனை நடத்தவந்த அதிகாரி!

- பெ.பாண்டியன்


செயற்கை

p28f.jpg

`இயற்கை விவசாயத்தில் விளைந்தவை’ - காய்கறி, பழங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!

- எம்.விக்னேஷ்


அடையாளம்

p28i.jpg

``என்னை அடையாளம் தெரியலையா? நான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் சார்’’ என்றார், திருமணத்துக்கு வந்தவர்!

- பெ.பாண்டியன்


சந்தோஷம்

p28h1.jpg

``கண்ணாடியில் பார்க்கும்போதுதான் முகம் டல்லா தெரியுது. செல்ஃபியில் பார்த்தா, எப்பவுமே சந்தோஷமாத்தான் தெரியுது’’ என்றாள் மாதவி, தன் அப்பாவிடம்!

- கே.சதீஷ்


ஞாபகம்

p28g1.jpg

மூக்கைப் பொத்திக்கொண்டனர் பயணிகள் அனைவரும், ஆற்றைக் கடந்தபோது!

- பெ.பாண்டியன்


தொடக்க விழா பூஜை

p28j.jpg

பேய் படத்துக்கு பூஜை போடப் போனார் கோயில் பூசாரி!

- கோ.பகவான்

vikatan

  • தொடங்கியவர்

வைரலாகும் டி.ஆரின் டான்ஸ்..!

Untitled_13396.jpg

விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி, தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது.

இந்த ஷோவில் நடனமாடும் ஒவ்வொரு ஜோடியை பற்றியும் விஜய் டிவியினர் தனிதனியாக ப்ரோமோ வீடியோவை ஒளிப்பரப்பி வந்தனர். தற்போது இந்த ஷோவிற்கு நடுவராக டி.ராஜேந்தர் வருகிறார் என ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் தாருமாறாக நடனம் ஆடி கலக்கியிருக்கிறார் டி.ஆர்.  

வீடியோ

 

 

vikatan

  • தொடங்கியவர்

ஜெ,..மோடி..ஜெத்மலானி... எவரையும் விட்டுவைத்ததில்லை கரண் தபார்..! #HBDKaranThapar

14958645_10202345730560114_518612929_n_1

"நான் ஆக்ஸ்போர்டில் தத்துவத்தில் பட்டயப்பயிற்சி முடித்த நிலையில் பத்திரிகைத் துறையில் எனக்குப் பணியாற்ற ஆர்வமிருக்கிறது என ஆறு ஆங்கில நாளேடுகளுக்குக் கடிதம் அனுப்பினேன். நான்கு பத்திரிகைகள் அதற்குப் பதிலளிக்கவில்லை, ஒரு பத்திரிகை என்னை ஏளனம் செய்து கடிதம் அனுப்பியது. ஒருவர் மட்டும்தான் இப்படியொரு கடிதத்தை நான் பார்த்ததே இல்லை என்று பதிலளித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். அவர்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைவர் ஹ்யூம். பத்திரிகைத் துறை பற்றி ஒன்றுமே அறிந்திராத என்னை நைஜீரியாவுக்கு அனுப்பி செய்திகள் சேகரிக்கச் சொன்னார். அவர்தான் பத்திரிக்கை உலகில் எனது குருவும் கூட. அன்று அப்படியொரு கடிதம் எனக்கு வந்திருக்காவிட்டால் நான் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்திருப்பேன்”, 

"நீங்கள் பத்திரிகைத்துறையில் சேர்ந்திருக்காவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்?" என அவுட்லுக் இதழ் கேட்ட கேள்விக்கு கரண் தபார் அளித்த பதில் இது. 

செய்திகளுக்கு என்றே ஐம்பதுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கும் காலகட்டம் இது. இந்தியச் செய்தித் தொலைகாட்சிகள் என்றாலே  தூர்தர்ஷன் மட்டுமே செய்திகளுக்கான ஒரே ஊடகமாக இருந்த 90-களின் தொடக்கத்தில்  அன்றைய நிலையில் பிர்லா குழுமத்தின் 'ஹிந்துஸ்தான் தொலைகாட்சி நிறுவனம்' செய்தி மற்றும் அரசியல் நிகழ்வுகளை தூர்தர்ஷன் வழியாக ஒளிபரப்பத் தொடங்கி இருந்தபோது அதன் தூணாக இருந்து அதனுடன் வளர்ந்தவர் கரண் தபார். செய்திச் சேனல்கள் உருவாக அடித்தளமாக இருந்தது இவர்கள் ஒளிபரப்பிய செய்தி நிகழ்வுகள்தான்.

karan%20thapar_17282.jpg

அரசியல்வாதிகளுடனான நேர்முகப்பேட்டி  என்றாலே ஊடகவியலாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள் என்று இன்றைக்கு உருவாகி இருக்கும் அடையாளத்துக்கு கரண் தபார்  ஒரு முன்னோடி எனலாம். இத்தனைக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு அவர்  பி.பி.சி மற்றும் லண்டன் வீகெண்ட் ஆகிய இரு பெரும் நிறுவனங்களில் பணியாற்றியவர். அவருக்கு அங்கே பத்து வருட காலப் பணி அனுபவமும் இருந்தது. ஆனால் இந்தியா ஊடகங்களின் வழியாக அரசியல்வாதிகளை நேர்காணல் செய்யத் தொடங்கியதில் இருந்துதான் அவரது அடையாளமும் வளர்ந்தது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, மறைந்த ஜனாதிபதி வெங்கடராமன், சிவசேனா தலைவர்  பால் தாக்ரே பேட்டி என அவர் நேர்காணல் காணாத அன்றைய தலைவர்களே இல்லை எனலாம்.

ஆப்கானிஸ்தான் போர் நிலவரங்களை நேரலையில் ஒளிபரப்பியது, தான் பிறந்து வளர்ந்த மாநிலமான காஷ்மீர் பற்றிய பிரச்னைகளின் மீதான ஆழ்ந்த விசாரணை அணுகுமுறைகள் குறித்த செய்தித் தொகுப்புகளை எடுத்து ஒளிபரப்பினார். பின்னாளில் சி.என்.என், சி.என்.பி.சி, பி.பி.சி, இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியபோது மோடி, ஜெயலலிதா, ராம் ஜெத்மலானி உள்ளிட்டவர்களை பேட்டி எடுத்தபோது அவர்கள் பேட்டியிலிருந்து பாதியிலேயே எழுந்து செல்லும் நிலைக்கு ஒரு வித வீச்சுடன் கேள்விகளைத் தொடுத்தவர் கரண் தபார். அவரின் பாணியே பிற்காலத்தில் செய்தி ஊடகத்துறையில் பலர் பின்பற்றிய அடையாளமாகவும் இருந்தது. 

bal_thackrey_karan_thapar_17076.gifகரணும் நிஷாவும்!

அவரது பெரும்பாலான பேட்டிகள் பாதியில் நின்று போனது போலவே, அவரது வாழ்வின் வசந்த காலமும் பாதியிலேயே முடிந்தது. 80-களில் லண்டனில் தங்கி இருந்தபோது, அங்கு வங்கி ஊழியராக வேலைபார்த்த நிஷாவை காதலித்தார் கரண். இரு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள்,  பிறகு கிறிஸ்தவ முறைப்படி அங்கேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை பத்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. 91-ல் ’என்செபாலிடிஸ்’ எனப்படும் மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் இறந்து போனார் நிஷா. கரண் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப நிஷாவின் இறப்பும் ஒருகாரணம். 

பெனாசிர் உடனான நட்பு

கரண் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு படித்து வந்த காலத்தில் கேம்பிரிட்ஜின் ஆசிய கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருந்தவர் பெனாசிர். அப்போது தொடங்கி பெனாசிருடன் கரண் நல்ல நண்பராக இருந்தார். கரணின் மனைவி நிஷா இறக்கும் தருவாயில் கரணுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அழைப்பு விடுத்து நிஷாவின் நிலைமை பற்றி கேட்டுவிட்டு கரணுக்கு மன தைரியம் அளித்துவந்திருக்கிறார். பெனாசிர் கொலை செய்யப்பட்டு இறக்கும் தருவாய் வரை அவர்களது நட்பு நீடித்தது.“பிழைப்பின் அடிப்படையில் நாம் இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்றாலும். தனிப்பட்ட முறையில் நாம் நல்ல நண்பர்கள்” என்று பலமுறை கரணிடம் கூறிவந்திருக்கிறார் பெனாசிர், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான தேசிய அரசியலில் பல முரண்கள் இருந்தாலும் இருநாட்டு மக்களிடையே இழையோடும் மெல்லிய நட்பைப் போன்று இவர்களது இழையோடி இருந்திருக்கிறது.

கரண் மீது எழுந்த விமர்சனங்கள்!

தனி மனித அடையாளங்களைத் தொடர்ந்து எழும் விமர்சனங்கள் என்றுமே தவிர்க்க முடியாதது. அந்த வகையில் கரண்தபார் மீதும் Jayalalitha_karan_thapar_17227.gifவிமர்சனங்கள் எழாமல் இல்லை. தபாரின் தந்தை எல்லையில் ராணுவ வீரராக இருந்தவர். கூடவே காங்கிரஸ் ஆதரவாளரும்கூட அதனால் கரணும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்கிற பிம்பம் எழுந்தது. மேலும் பேட்டிகளின்போதே தலைவர்கள் அவர் மீது தீவிர விமர்சனங்களை முன்வைத்தார்கள்.  பால்தாக்ரே தனது ஒரு பேட்டியில் "நீங்கள் எதிரில் இருப்பவரை வில்லனாகச் சித்தரிக்கத் தெரிந்தவர் என்றார். ராம் ஜெத்மலானி "நீங்கள் என்றுமே திருந்தப் போவதில்லை" என்று காட்டமாக விமர்சனம் செய்துவிட்டு தன் வீடு என்பதுகூட நினைவில் இல்லாமல் பேட்டி அறையை விட்டு வெளியேறினார். "உங்களைச் சந்திப்பது என்றுமே எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று கூறிவிட்டு வேகமாக தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறினார் ஜெயலலிதா. இப்போது, இன்போடைன்மெண்ட் என்னும் தன்னுடைய நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வழியாக தான் வேலைபார்த்த அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறார்.  

வெறுத்தாலும் புகழ்ந்தாலும் அரசியல்வாதிகளால் தவிர்க்க முடியாத,  ஊடகம் தாண்டிய ஒரு தனி நபர்தான் கரண் தபார்.

vikatan

"இது மகிழ்ச்சி தரக்கூடிய பேட்டியாக அமையவில்லை. நமஸ்தே!" - ஜெயலலிதாவை ‘முதல்வன்’ பேட்டி எடுத்த கரண் தப்பார் #HBDKaranThapar

14997188_10202345730600115_1179512092_n_

றத்தாழ ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை மறக்காத பேட்டி இது. முகஸ்துதி இல்லாத கேள்விகள்... பளிச்சென பதில்கள்... என்று ஆழமான நேர்காணல். கேள்வி கேட்ட கரண் தப்பார் மட்டும் அல்ல... பதில் சொன்ன ஜெயலலிதாவும் மழுப்பவில்லை. நேர்காணல் ஒளிப்பரப்பான நேரத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. 

ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன் பி.பி.சிக்கு அளித்த நேர்காணலின்... எழுத்து வடிவம்...

இன்று நம் நிகழ்ச்சியில் நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சரான 'ஜெ.ஜெயலலிதா'. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் 80% பெரும்வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டைக் கூட பெறமுடியாமல், வெற்றியைத் தவற விட்டார். எப்படி இத்தனை வித்தியாசம்? எப்படி அவரது மக்கள் செல்வாக்கு தலைகீழாக மாறியது? இதற்கு அவர் கூற விரும்புவது என்ன?

இதற்குக் யார் காரணம்? மக்கள் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது இவர் உண்மையில் தவறு செய்துள்ளாரா? இந்த இரண்டு கேள்விகள் தான் முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு எடுத்து வைக்க விரும்புகிறேன்.

செல்வி. ஜெயலலிதா, இந்த நம்ப முடியாத தோல்வியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களது கட்சி ஒரு சீட்டைக்கூட பெற முடியாமல் போனதே?

ஜெயலலிதா பதில்: இது நம்ப முடியாத தோல்வி என்று நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிக்கு மட்டும் ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் கிடைத்தது. அது மக்கள் எங்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லையே?

ஆம் ஏனென்றால் நாங்கள் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை.

14962369_10202345730360109_1219788644_n_அப்படியென்றால் வாக்களிக்கும் முறையும் வாக்களிப்பும் உங்களுக்கு எதிராக செயல்பட்டதா?

எங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்காளர்களை நாங்கள் தவற விடவில்லை. ஆனால் எங்களுக்கு எதிராக அமைந்த கூட்டணி வல்லமை மிகுந்ததாக இருந்தது.

அடுத்து, ஊடகங்கள் உங்களைப் பற்றி உருவாக்கிய பிம்பத்தைப் பற்றி பேசலாம். ஏனெனில் மக்களும் அதை நம்பி இந்தமுறை உங்களுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்கள் உங்களைப் பற்றி கூறியது, ஜனநாயகமற்ற ஆட்சியை நடத்துவதாகவும், பொறுப்பற்ற, பகுத்தறிவற்ற, பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து  கொள்வதாகவும் கூறப்படுகின்றன.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் தவறாக நடந்து கொண்டார்களா? இல்லை, உங்கள் தவறை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நான் பொறுப்பற்றவள் அல்ல. அது உண்மையும் அல்ல. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். இதற்குக் காரணம், ஊடகங்கள்தான். இது கடந்த 3 ஆண்டுகள் மட்டுமல்ல, நான் அரசியலில் நுழைந்த காலம் முதல் இப்படித்தான்.

இதற்குக் காரணம். ''உலகமே ஒரு நாடகமேடை, அதில் எல்லோரும் நடிகர்கள். இந்த நாடக மேடையில் எனக்கு நடிக்கத் தெரியவில்லை. நான் ஓரங்கட்டப்பட்டேன். எனக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேச வராது. இந்த நாடகமேடையின் ஒரே விதி நடிக்கத் தெரிய வேண்டும். அதனால்தானோ என்னவோ, நான் சாதாரண அரசியல்வாதியாக இருக்க முடியவில்லை. நான் கேமரா முன்பு மட்டும்தான் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் நடிக்க வரவில்லை.

இதற்குக் காரணம் உங்கள் நேர்மையும், வெளிப்படை பேச்சும் தானா? 

ஆம் நான் நேர்மையானவள் தான். உண்மையைச் சொல்கிறேன். நான் அரசியலில் இருக்க ஆசைப்படுகிறேன். உண்மை மட்டுமே பேச நினைக்கிறேன். இதற்கு நான் தகுதியானவள் இல்லை என்று மற்றவர்கள் நினைத்தால் கவலையில்லை. என்னை பலர் தவறாக நினைப்பதற்கு ஊடகங்கள் ஒரு காரணம்.

நீங்கள் பொறுப்பானவர் என்கிறீர்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி தோல்வியடைந்த 5 நாட்களிலேயே நீங்கள், கடந்த ஆண்டு எடுத்த பல முக்கியமான முடிவுகளில் இருந்து பின்வாங்கி விட்டீர்களே?

நான் எடுத்த முடிவுகளில் மாற்றம் செய்ததற்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் காரணம் என்றும், அதனால் நான் பின்வாங்குகிறேன் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல.

இந்த மாற்றங்களை நான் 2001-ம் ஆண்டிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இதற்குக் காரணம், கடந்த ஆட்சியில் இருந்த தி.மு.க,  மாநில கருவூலத்தில் நிதியை சிறிதும் விட்டு வைக்கவில்லை. பல முக்கியமான ஃபைல்கள், பில்கள் பாஸ் செய்யாமல் விடப்பட்டிருந்தன. நிதிப்  பற்றாக்குறையை ஆய்வு செய்து, சரி செய்வதில் முனைப்பாக இருந்தேன்.

இது ஒரு முதலமைச்சரின் கடமை என்பது எனக்குத் தெரியும். 2003-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படாத தொகை எல்லாம் வசூலிக்கப்பட்டது. 2003-04-ம் ஆண்டில் நிதி நிலை சரிசெய்யப்பட்டது. திவாலாக வேண்டிய நிலையில் இருந்த தமிழகத்த்தின் நிதிநிலையை மீட்டெடுத்தேன். இது எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சீர்செய்யப்பட்டது.

14962480_10202345734840221_1673931247_n_

ஊடகங்களில், நீங்கள் மக்கள் மத்தியில் உங்களின் புகழை உயர்த்திக் கொள்ளவே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே ?

நான் இதை மறுக்கிறேன். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கடும் வறட்சியில் இருந்தது. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் என சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஊதியம் இன்றி மிகவும் சிரமப்பட்டார்கள். வெளியில் எனது நடவடிக்கைகள் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், விவசாயிகளையும் ஏழை மக்களையும் பாதுகாக்க நான் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன். மற்ற மாநிலங்களில் வறட்சியின்போது பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை வர, நான் விடவில்லை.

மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது மக்களிடம் அதீத பிரபலமடைவதற்காகத்தானே ?

அது பொருளாதாரக் கொள்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையே. அதோடு இது ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நிறைய மக்களும் தவறாகவே புரிந்து கொண்டார்கள். அது மத மாற்ற தடைச் சட்டம் கிடையாது; கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் என்பதை, திரித்துச் சொல்லி விட்டார்கள்.

ஆனால், அது இரண்டு வருடங்களுக்குத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. நீங்களேகூட தேர்தல் தோல்விக்குப் பிறகு தானே அதை மாற்றிச் சொன்னீர்கள்?

இல்லை. முழுக்க முழுக்க இது ஊடகங்களின் தவறால் நிகழ்ந்தது தான். ஏன் ஊடகங்கள் எப்போதும் ஒருதலைப்பட்சமாகவே செயல்படுகின்றன?  அதற்கான காரணத்தையும் நான் அறிவேன். நான் சுயமாக உருவானவள். அரசியல் என்பது எப்போதும் ஆண்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. அதை இந்திரா காந்தி மாற்றினார். ஆனால், அவருக்கு அதற்குரிய பின்புலம் எல்லாம், தானாகவே அமையப்பெற்று இருந்தது. அவரது குடும்பம், கட்சி அதற்கான தளத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால், எனக்கு அப்படி இல்லை. இதை நான் ஒரு பெண் என்பதற்காக சொல்லவில்லை. எனக்கு அப்படிப்பட்ட பின்புலம் இல்லை என்பதால் சொல்கிறேன். இந்திரா காந்தியின் தந்தை இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, ஸ்ரீமதி பண்டாரநாயகே இலங்கைப் பிரதமராக இருந்த பண்டாரநாயகேவின் மனைவி,  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ, முசாபிர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா. ஆனால், இந்த மாதிரியான எந்தப் பின்புலமும் எனக்கு இல்லை. எனக்கு எதுவும் தங்கத் தட்டில் கிடைத்து விடவில்லை. அதனால் கூட, ஊடகங்கள் எனது விஷயத்தில் அப்படி நடந்து கொண்டிருக்கின்றனவா என்று நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடுகிறேன். அதில் இருந்து தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு யார் மீதும் பரம்பரைப் பகை கிடையாது.

(பேட்டியாளர் குறுக்கீடு ) பரம்பரைப் பகை கிடையாது என்கிறீர்கள். ஆனால், நீங்கள் தானே முன்னாள் முதல்வர் கருணாநிதியை நடுராத்திரியில் இரண்டு மணிக்குக் கைது செய்தீர்கள் ?

தி.மு.க அரசு, என் மீது பொய்யான வழக்குகள் போட்டது. அதற்காக என்னை ஜெயிலில் 28 நாட்கள் அடைத்தார்கள். அந்த வழக்கில் தேவை இல்லாமல் நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன். அப்போது ஊடகங்கள் இதை ஏதோ மிகப்பெரிய செய்தியாக சித்தரித்தன. தீய சக்திக்கு எதிரான போராட்டம் என்று அவரை பாராட்டின. ஆனால், பிற்காலத்தில் கருணாநிதியின் உண்மை முகம் வெளிவந்தது. மக்களும் அதை உணர்ந்து, 2001-ல் என்னை மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைத்தார்கள். நான் முதல்வராகி கருணாநிதியை ஒரு ஊழல் வழக்கில் கைது செய்தபோது, அவர்களுடைய குடும்ப செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி, இதை மிகவும் தந்திரமாக காட்சிப்படுத்தி .....

 

 

 

(பேட்டியாளர் குறுக்கீடு ) நீங்கள் எழுதி வைத்ததைப் பார்த்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ....

(ஜெயலலிதா கோபமாக)
நான் உங்களை நேருக்கு நேர் பார்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். குறிப்புகள்தான், நான் வைத்திருக்கிறேன். எதையும் எழுதி வைத்துப் படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..

ஒரு முன்னாள் முதல்வர், அதுவும் 77 வயதானவர் அவரை ....

ஊழல் செய்தவருக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் கூட முதல்வராக இருந்தவள் தான், அவர்கள் என்னை அப்படி நடத்தினார்களா ?

ப்போது அது பழிவாங்கும் நடவடிக்கையா?

கிடையாது. அவர் ஊழல் செய்திருக்கிறார். குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டும்.

அதற்காக நீங்கள் வருத்தப்பட்டீர்களா ?

இல்லை. சன் டி.வி வீடியோவில் காட்டப்பட்டது போல, அவர் மோசமாக நடத்தப்படவில்லை. மக்களுக்குக் காட்டப்பட்டது நன்றாக எடிட் செய்யப்பட்ட ஒரு நாடகம். அதை மக்களுக்கு திரும்பத் திரும்ப போட்டுக் காட்டப்பட்டது.

சரி... உங்களின் நிலையற்றத் தன்மையை விமர்சிக்கிறார்களே ? சோனியா காந்தியுடனான உங்கள் நட்புறவு என்பது உள்ளே வெளியே என்பது போல இருக்கிறதே ?

சோனியா காந்தி பற்றி இந்த பேட்டியில் பேச நான் விரும்பவில்லை. இந்த பேட்டியில் நான் என்ன பேச வேண்டும், எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற உரிமை எனக்கு இருக்கிறது. நீங்கள் கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், இதைப் பார்க்கும் மக்கள் இந்த கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பார்கள் தானே ? அவரோடு இருந்து முரண்பட்டு, பி.ஜே.பி கூட்டணிக்கு 2003-ல் போன நீங்கள், தற்போது மீண்டும் காங்கிரஸோடு சேருவதற்கு முயற்சி செய்வது போல தெரிகிறதே?

நான் அப்படி எதுவும் முயற்சி செய்யவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் அவரோடு எந்த விரோதமும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணியே தவிர, தனிநபர் கூட்டணி கிடையாது. இப்போது நீங்கள் எழுதி வைத்ததைப் பார்த்து படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இல்லை. இல்லை. நீங்கள் பயன்படுத்திய வார்த்தை. அப்படியே படிக்கிறேன் கேளுங்கள். 1998-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், 2003-ல் சோனியா காந்தி பிரதமர் ஆவது என்பது நாட்டிற்கே அவமானம் என்று நீங்கள் பேசினீர்களே ?

அந்த விவகாரத்தில் என்னுடைய உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இந்தியாவை வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் ஆள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அன்று பேசிய வார்த்தைகள் எனக்கு நினைவிருக்கிறது. இன்னமும் அந்த நிலைப்பாட்டில்தான் நான் இருக்கிறேன்.

அப்படி என்றால் சோனியா காந்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறீர்களா ?

சோனியா காந்தி என்று இல்லை. வேறு நாட்டைச் சேர்ந்த யாரும் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

14971251_10202345732800170_1109208358_n_

ஊடகங்கள் உங்களை ஜனநாயக முறையற்றவர் என்றும், சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்றும் சொல்கின்றனவே ?

மக்கள் தான் சிறந்த நீதிபதிகள். அவர்களுக்குத் தெரியும். ஊடகங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்வதற்கு வேறு விஷயங்கள் இல்லை போலும். நான் எது பேசினாலும், நீங்கள் குறுக்கிடுவதைப் போல, அவர்களும் செய்கிறார்கள். எனக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம். அதற்காகத்தான் நான் உழைக்கிறேன். அதைத் தவிர எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஆனால், எதற்காக உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களும், மந்திரிகளும், எம்.பி.,க்களும் உங்கள் முன் மண்டியிட்டு காலில் விழுகிறார்கள் ?

மற்ற கட்சிகளிலும், கருணாநிதி அவர்களின் கட்சியிலும் கூட அப்படித்தான்  காலில் விழுகிறார்கள். அங்கு எல்லாம் அது பெரிய விஷயமாக்கப்படுவது இல்லை. ஆனால், நான் என்றால் மட்டும் அது மிகப்பெரிய செய்தி. வயதில் மூத்தவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெறுவது இந்திய மரபு. நீங்களும் இந்தியர் தான். கண்டிப்பாக இந்திய மரபு, பாரம்பர்யம் பற்றி எல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.   எந்த அமைச்சரையும் நான் காலில் விழச் சொல்லவில்லை. முதலில் செய்தார்கள். இப்போது கடந்த மூன்று, நான்கு வருடங்களாக பொதுவில் அவர்கள் அப்படிச் செய்வது இல்லை.

நீங்கள் அடிக்கடி உங்கள் மந்திரி சபையை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே ?

அது என்னுடைய நிர்வாகத் தேவைகளுக்காக செய்ய வேண்டி இருக்கிறது. என் தேவைக்கு ஏற்பவும், இந்த மாநிலத்தின் நலனுக்காகவும் நான் அதைச் செய்ய வேண்டி இருக்கிறது. நான் எது செய்தாலும் குற்றம் சொல்பவர்களுக்காக, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு என்னால் செயல்படாமல் இருக்க முடியாது.

ஆனால், நீங்கள் அவர்களைத் தன்னிச்சையாக செயல்பட விடாமல் உங்களை நம்பியே வைத்திருக்க வேண்டி, அப்படிச் செய்வதாகச் சொல்லப்படுகிறதே ?

அப்படி ஆதாரமற்ற கூற்றுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 

இப்போது கொஞ்சம் உங்களைப் பற்றி பேசலாம். உங்கள் கட்சியான அ.இ.அ.தி.மு.க முன்பு திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்தது. கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த.....
.
மன்னிக்கவும். இப்போதும் திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. முதலில் திராவிட இயக்க வரலாற்றை முழுவதுமாகப் படியுங்கள். அது நாத்திக இயக்கம் கிடையாது. அண்ணாவே சொல்லி இருக்கிறார்  ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று. அப்படி என்றால் கடவுள் என்கிற ஒன்று இருப்பதாகத் தானே அர்த்தம்.

 நியூமராலஜி, ஜாதகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை எல்லாம் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லையா ?

யார் சொன்னது நான் அதை எல்லாம் நம்புகிறேன் என்று? ஊடகங்கள் தானே அதையும் சொல்கின்றன. இதை எல்லாம் வாஜ்பாயிடமோ, அத்வானியிடமோ நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா?

நான் வேண்டுமென்றே சொல்லவில்லை. வசுந்தரா ராஜே சிந்தியா சொல்லி இருக்கிறார். நீங்கள் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று சொல்லி இருக்கிறார்?

கிடையாது. நான் ஒன்றும் மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. இந்த பேட்டியால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைகிறேன். எல்லா கேள்விகளும் ஊடகங்கள் சொல்கிறது, பத்திரிகைகளில் வந்திருக்கிறது என்று தான் இருக்கிறது. அது உண்மை இல்லை. அப்படி இருந்தால் நான் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

அப்படி என்றால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லமுடியுமா? எண் கணிதத்தின் மீது நம்பிக்கை இல்லாத நீங்கள் ஏன் உங்கள் பெயரை மாற்றம் செய்து கொண்டீர்கள் ?

அது என் தனிப்பட்ட விஷயம். அதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வை.கோபால்சாமி ஏன் வைகோ ஆனார் என்று கேட்பீர்களா ? என் மீது ஊடகங்கள் வைக்கும் எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். என்னைத் தவிர, தமிழ்நாட்டில் எந்த முதல்வரும் இதுபோல் கண்டிப்பாக உழைத்திருக்க முடியாது. இந்த தேர்தலில் ஜெயிக்காததைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லையே. என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் நான் சந்தித்து வருகிறேன். எங்கும் ஒளிந்து ஓடவில்லை.

உங்களின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் பற்றி....

அதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

2006 தேர்தலில் வெற்றி பெறுவீர்களா ?

நான் முன் கூட்டியே சொல்லிவிட்டேன். எனக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பாருங்கள்.

நன்றி.. உங்களை சந்தித்து பேட்டி எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்..

இது ஒன்றும் மகிழ்ச்சி தரக்கூடிய பேட்டியாக எனக்கு அமையவில்லை. நமஸ்தே !

 

  • தொடங்கியவர்

 

 

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய சூரசம்ஹாரம் 05.11.2015

  • தொடங்கியவர்

உலகின் பிரம்மாண்டமான விமான நிலையங்கள்

 

விமானம் மனிதனின் மிக அதிசயமான கண்டுபிடிப்பு எனலாம். மந்திரக் கதைகளில் மட்டும் கேட்டறிந்த பறக்கும் வித்தையை மனிதனுக்குக் கைகூடிய அதிசயம் அது.

Desktop_3069997f.jpg
 
1_3070007f.jpg
மரகேஷ் சர்வதேச விமான நிலையம், மொரோக்கோ

2_3070006f.jpg

இன்சியான் சர்வதேச விமான நிலையம், தென் கொரியா
 
3_3070005f.jpg
சாங்கி சர்வதேச விமான நிலையம், சிங்கப்பூர்
 
4_3070003f.jpg
மியூனிக் சர்வதேச விமான நிலையம்  Germany
 
5_3070002f.jpg
வெல்லிங்டன் சர்வதேச விமான நிலையம், நியூசிலாந்து
 
6_3070001f.jpg
கரஸ்கோ சர்வதேச விமான நிலையம், உருகுவே
 
9_3069998f.jpg
டென்வர் சர்வதேச விமான நிலையம், அமெரிக்கா
 
8_3069999f.jpg
கிங் அப்துலஸீஸ் சர்வதேச விமான நிலையம், சவுதி அரேபியா
 
7_3070000f.jpg
மாட்ரிட்-பரஜாஸ் சர்வதேச விமான நிலையம், ஸ்பெயின்
 

விமானம் மனிதனின் மிக அதிசயமான கண்டுபிடிப்பு எனலாம். மந்திரக் கதைகளில் மட்டும் கேட்டறிந்த பறக்கும் வித்தையை மனிதனுக்குக் கைகூடிய அதிசயம் அது. இந்தக் கண்டுபிடிப்பால் பயணங்கள் எளிதாயின. வர்த்தகம் பெருகின. இந்த மாபெரும் கண்டுபிடிப்பு 1903-ம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் சாத்தியமானது. இது நிகழ்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் காலோஜ் பார்க் என்னும் இடத்தில் உலகின் முதல் விமான நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மும்பையில் 1928-ல் முதல் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விமான நிலையங்கள் உள்ளன.

கட்டிடக் கலையின் அதிகபட்ச சாத்தியங்களுடன் இன்று உலகெங்கிலும் விமான நிலையங்கள் கலைநயத்துடனும் வசதியுடனும் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றுள் சிறந்த விமான நிலையங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது. இந்தப் பட்டியலில் ஒரு காட்டைப் போல் பசுமையாகக் காட்சியளிக்கும் சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம் வகிக்கிறது. இது மட்டுமல்லாது பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட தென்கொரிய நாட்டின் தலைநகரின் உள்ள விமான நிலையம், நியூசிலாந்தில் உள்ள விக்டோரியா விமான நிலையம், சவுதிஅரேபியாவில் உள்ள கிங் அப்துலாஸீஸ் விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இந்த வாரம் : வரலாற்றில் இந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட்

 
sir_3069924f.jpg
 

அமெரிக்க தத்துவ மேதை, வரலாற்று அறிஞர்

அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர், படைப்பாளி, மெய்யியல் வல்லுநருமான வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் (William James Durant) பிறந்த தினம் இன்று (நவம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மசாசூசெட் மாநிலத்தின் நார்த் ஆடம்ஸ் என்ற ஊரில் பிறந்தவர் (1885). பள்ளிக் கல்விக்குப் பிறகு நியு ஜெர்சியில் பட்டப்படிப்பை 1907-ல் முடித்தார்.

* 1911-ல் ஃபெரர் மாடர்ன் ஸ்கூல் என்ற பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் அங்குப் பணியாற்றினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1917-ல் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

* எழுத்தாற்றல் படைத்திருந்த இவர், அதே ஆண்டில் ‘ஃபிலாசஃபி அன்ட் தி சோஷியல் பிராப்ளம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். உண்மையான சமூகப் பிரச்சினைகளைத் தவிர்த்து வருவதால்தான் தத்துவத்துறை வளர்ச்சியடையவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

* 1927-ல் ‘தி ஸ்டோரி ஆஃப் பிலாசஃபி’ என்ற நூலை வெளியிட்டார். அடுத்தடுத்து இவரது சுயசரிதை நாவல் ‘டிரான்சிஷன்’, இறையியல், தார்மீகம், அரசியல் கோட்பாடு மற்றும் தத்துவ வரலாறு உள்ளிட்ட விஷயங்கள் அடங்கிய ‘மான்ஷியன்ஸ் ஆஃப் ஃபிலாசபி’ வெளிவந்தது.

* இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கண்டிக்கும் ‘தி கேஸ் ஃபார் இந்தியா’, கல்வி மற்றும் தத்துவம் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட ‘அட்வென்சர்ஸ் இன் ஜீனியஸ்’, ‘தி லெசன்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’, ‘இன்டர்ப்ரடேஷன்ஸ் ஆஃப் லைஃப்’ உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டார். 1935-ல் உலகப் புகழ்பெற்ற ‘தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன்’ நூலைத் தன் மனைவி ஏரியல் டியுரண்ட்டுடன் இணைந்து எழுதி வெளியிட்டார்.

* இந்த நூலின் முதல் தொகுதி ‘ஓரியன்டல் ஹெரிடேஜ்’. பின்னர் ‘தி ஏஜ் ஆஃப் ஃபெயித்’, ‘தி ஏஜ் ஆஃப் வால்ட்டேர்’, ‘தி ஏஜ் ஆஃப் நெப்போலியன்’, ‘ரூசோ அன்ட் ரெவல்யூஷன்’ உள்ளிட்ட 11 தொகுதிகள் எழுதியுள்ளார்.

* ‘ரூசோ ரெவல்யூஷன்’ என்ற நூலுக்காக 1967-ல் இவருக்கும் இவர் மனைவிக்கும் கூட்டாக புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. உலகின் 2,500 ஆண்டு கால மனித இன வரலாற்றைப் படிப்படியாக எடுத்துக் கூறுவதாக அமைந்த ஆய்வு நூல் இது.

* இதன் ஒரு தொகுதி எழுதி முடிக்க இவர்களுக்கு சுமார் நான்காண்டு காலம் பிடித்தன. தனது அனைத்துப் படைப்புகளுக்கும் உறுதுணையான தன் மனைவியுடன் இணைந்து, ‘ஏ ட்யூயல் ஆட்டோபயாகிரஃபி’ என்ற நூலை இவர் எழுதியுள்ளார்.

* மேலும், தொழிலாளர் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு, மோசமான பணிக்கள சூழல், பெண்களின் பிரச்சினைகள், மற்றும் பிற சமூக அநீதிகளை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

* அமெரிக்க பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் பதக்கம் 1977-ல் பெற்றார். ‘ஹீரோஸ் ஆஃப் ஹிஸ்டரி’, ‘தி கிரேட்டஸ்ட் மைன்ட்ஸ் அன்ட் ஐடியாஸ் ஆஃப் ஆல் டைம்’ உள்ளிட்ட பல நூல்கள் இவரது மரணத்துக்குப் பிறகு வெளியாயின. தலைசிறந்த தத்துவ மேதை, சமூகப் போராளி, வரலாற்று ஆசிரியர், மெய்யியலாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் 1981-ம் ஆண்டு 96-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

வரலாற்றில் வரைபடங்கள்

நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், ஓரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்வதற்கும் நம்மில் சிலருக்கு வரைபடங்கள் உதவுகின்றன.


ஆனால் மற்றவர்களுக்கோ அவை கடந்தகாலத்தின் மிச்சங்கள்.


செயற்கைக்கோள் வழிகாட்டியும் இணைய வசதியுடனான செல்பேசிகளும் இல்லாத காலத்தின் நினைவுகள்.


அத்தோடு, சமூகம், அரசியல், இலக்கியம் என பலவற்றை வரைபடங்கள் நமக்கு உணர்த்தவல்லவை.


லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் நடக்கும் வரைபட கண்காட்சி குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.