Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கூகுள் மேப்பை பீட் செய்ய ஆப்பிளின் ப்ளான்!

 

ஆப்பிள் மேப்ஸை டெவலப் செய்ய ட்ரோனை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்டோர் நேவிகேஷன் சேவையை சிறப்பாக வழங்க இந்த முடிவாம். இதன்மூலம் கூகுள் மேப்ஸை ஓவர்டேக் செய்வதுதான், ட்ரோன் திட்டத்தின் முக்கிய இலக்காம். குறிப்பாக இதில் கட்டடங்களை தெளிவாக காணும் வகையில் உருவாக்க உள்ளார்களாம்.

20150317160236-star-wars-drones-drdeam-c

மேலும் சாலைகளை சரியாக கண்டறிவது, புதிதாக கட்டப்படும் கட்டடங்களின் விவரங்களைத் தருவது என வேற லெவலில் களமிறங்குகிறார்களாம். இதற்காக ஒரு ரோபோடிக் டீமை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தரவுகளை வேகமாக சேகரித்து, தகவல்களை வேகமாக வழங்க திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

.vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த பைக்ல இருப்பவர் யாருனு தெரியுதா?

 

wde_19350.jpg

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மெகா பைக் ப்ரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது அவரது மகளையும், அதே பாணியில் வளர்த்து வருகின்றார். அண்மையில் அவரது மகள் ஜிவாவை ஃபோட்டோ ஷூட் எடுத்துள்ளனர் . தோனியின் ஸ்போர்ட்ஸ் பைக்கான Hellcat Z132 பைக்கில் வைத்து இந்த ஃபோட்டோவை எடுத்துள்ளனர். இதை சாக்‌ஷி சிங் இன்ஸ்டாகிராமில் தட்டிவிட, தற்போது செம வைரலாக பரவி வருகிறது இந்த ஃபோட்டோ. இந்த ஃபோட்டோ ஷூட்டை ஷிப்ரா மற்றும் அமித் சாப்ரா எடுத்துள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

15304447_1202850506430308_14092631675525

 
 
80 களின் தமிழ்த் திரைப்படங்களின் முக்கிய அடையாளங்களில் ஒருவர் - சில்க்

தமிழ்த் திரையுலகின் என்றும் மறையாத கவர்ச்சி அடையாளம், ஒரு காலகட்டத்தில் எல்லாப் படங்களும் ஓட இவர் மட்டுமே போதும் என்று கருதப்பட்ட சினிமா போதை -
மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்.

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha

 

 

 

சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது!

*சிலருக்குக் கிளுகிளுப்பு
*சிலருக்கு ஒவ்வாமை
*சிலருக்கு அழகுணர்ச்சி
*சிலருக்கு நடிப்புத் திறமாடல்
*சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை!

சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்!

சிலுக்கு

அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பையன்களும், யூட்யூப் படங்களைப் பார்த்தே, பெரும் சிலுக்கு விசிறிகளாக, கண்ணழகில் கட்டுண்டு கிடக்கிறார்கள்!ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான்!ரேவதி, அமலா, நதியா, ஷாலினி முதலிய பெண்களும்.. சிலுக்கின் ஸ்டைல், உடை அழகு, நடன அசைவு பற்றி இன்றும் வியந்து பேசுகிறார்கள்!

35 வயதிலேயே, உதிர்ந்த விட்ட ஒரு பெண் பூ..சூப்பர் ஸ்டார் ரஜினி, காதல் இளவரசன் கமல், நடிகர் திலகம் சிவாஜி என்று.. பலரும் இவள் ஒரேயொரு நடனக் 'கால்ஷீட்'டுக்காகக் காத்துக் கிடந்த தமிழ்ச் சினிமா மாயங்கள்!அப்படி என்ன கண்டு விட்டார்கள், இந்த மாய மலர் பொம்மல் பூவிடம்?

சில்க்சிலுக்கை, ஐட்டம் டான்சர் என்ற ஒரேயொரு குப்பிக்குள் அடைத்துவிட முடியாது!அப்படி எத்தனையோபேரை தமிழ்ச் சினிமா கண்டுள்ளது; ஆனால் "நீ இல்லா விட்டால் இன்னொருத்தி" என்ற அளவில் தான் அவர்களையெலல்லாம் வைத்தது! Super Starகள் யாரும் காத்துக் கிடப்பதில்லை! இன்றோ, கதாநாயகிகளே அது போல் நடனங்களை ஆடியும் விடுகின்றனர்! அப்பறம் ஏன் இந்தச் சிலுக்கு மாயை?

சிலுக்கு, கிளுகிளு கவர்ச்சிப் பொருள் மட்டுமே அல்ல!

விழி மொழிகள், உடல் மொழிகள், குழை மொழிகள்.. சிலுக்கின் பரிமாணம்!

இன்பம் காட்டும் இன்முகம், பாங்கு காட்டும் சோகமுகம் .. இப்படிப் பன்முக நடிப்பு!

 

சிலுக்கின் "முழு நடிப்புப் பரிமாணம்" காண, இரண்டே இரண்டு தமிழ்ச் சினிமாக்கள் போதும்!

1.அலைகள் ஓய்வதில்லை
2.அன்று பெய்த மழையில்

வண்டிச் சக்கரத்தில், 'வா மச்சான் வா - சிலுக்கோட கையால வாங்கிக் குடி" போன்ற பாடல்கள், குலுக்கும் சிலுக்கையே காட்டின; 

ஆனால், அதையும் தாண்டிய "நடிப்பைக்" காட்டியது, அலைகள் ஓய்வதில்லை!"எஸ்தர்" என்ற கிறித்துவப் பெண்ணாய், கணவனின் ஆணாதிக்கம் எதிர்த்து, காதல் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் சிலுக்கு!ரகசியப் போலீசில் "பாவா பாவா" என்று குழையும் மென்குரல் பெண்ணுக்குள்ளா, இத்துணை ஆணாதிக்க எதிர்ப்புக் குரல்? அது, மூன்றாம் பிறை வரைக்கும் கூடத் தொடர்ந்தது! சமூகக் கட்டமைப்புக்களை மீறும் பெண்மையின் துணிச்சலழகு!

அலைபாயுதே படத்தில், ஷாலினி அழகைக் Camera வடித்தது போலவே, சிலுக்கின் அழகையெல்லாம் திரட்டிக் காட்டிய ஒளிப்பதிவுப் படம், அன்று பெய்த மழையில்! 

அசோக்குமார் என்ற ஒளிப்பதிவு இயக்குநருக்கு நன்றி! சிலுக்கு, வில்லியா? நாயகியா? அன்பா? அழகா? என்று ஒவ்வொரு காட்சியும் நகர்த்தும் ஒளிமிகு படம்!

*பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் ஆகட்டும்..சில்க் ஸ்மிதா
*இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் ஆகட்டும்..
*மோகன்லால் போன்ற பிறமொழி நாயகர்கள் ஆகட்டும்..
அனைவரும், சிலுக்கு எனும் சிற்பத்தைத் தங்கள் பாணியில் செதுக்கியே உள்ளார்கள்!

சொல்லப் போனால், தமிழ்ச் சினிமா தராத நிம்மதியும் தன்மானமும்.. மலையாளச் சினிமா தந்தது சிலுக்குக்கு!அவள் கடித்துப் போட்ட ஆப்பிள்களை ஏலம் எடுப்பதும், ஒரே பாடலில் தோன்றி.. கதாநாயகியை விட அதிகச் சம்பளம் வாங்குவதுமாய், தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அதீதம் காட்ட..

மலையாள உலகமோ, சிலுக்கின் "கவர்ச்சி உள்ளிட்ட நடிப்பைக்" கூராக்கி, அவள் தன்மானம் கெடாமலும் கொண்டாடியது!

சிவாஜி படங்களில் கூட, சிலுக்கின் நிலை சிரிப்பை வரவழைக்கும்:-) . "நடிகர் திலகம்" என்ற நயன் மிகு மதிப்பால், மொத்த படக்குழுவும் எழுந்து நிற்கும் போது, சிலுக்கு மட்டும் எழாமல் அமர்ந்திருக்க..

"திமிர் புடிச்சவ" என்ற சொல்லுக்கிடையே, "நான் எழுந்து நின்னா, குட்டைப் பாவாடை உடையில், சிவாஜி சாருக்குக் கூச்சமா இருக்குமேன்னு தான் எழுந்து நிக்கலை"-ன்னு அப்பாவியாய்ச் சொன்ன சிலுக்கு! சிவாஜியே விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு!:)

CPmKG0cWsAAh2UU.jpg


இப்படி, தன் கூச்சம் கடந்தவள், பிறர் கூச்சம் உணர்ந்த "மென்மை"! 

அதான் சிலுக்கு! இதே மென்மைச் சிலுக்கு தான், நடிக்க வரவில்லையென்றால், நக்சலைட் ஆகியிருப்பேன் என்றும் சொன்னது!

"சீனு, முள்ளு குத்தினா, ஊசி போடணுமா?" என்று கமலிடம் அப்பாவிக் குரலில் கேட்கும் அதே சிலுக்கு தான்,கமலின் வயதான அப்பா கையில் முத்தம் குடுத்துத் திகைக்கவும் செய்தது! 

"உன்னை விட பெரிய கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்து" என்று கமல் அப்பா கேட்க, கமல் அறிமுகம் செய்தது, சிலுக்கு என்ற பெண்ணையே!

உடலுக்குள் அடைபட்ட உள்ளம்! அவள் உடலே அவள் செய்தி!அவள் உள்ளமோ அன்பர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

Unwept, Unhonoured, Unsung என்றோர் ஆங்கிலக் கவிதை!

சிலுக்கின் தனிமையும், வாழ்க்கை முடிவும் அப்படித் தான் ஆகிப் போனது!

அவள் Celluloid இன்பத்தில் பங்கு போட்டுக் கொண்ட திரையுலகம், அவள் துயர இறப்பில் கலந்து கொண்ட சிறுபான்மை மிக மிகச் சிறுமையே!

ஐயன் வள்ளுவன்.. பெண்ணின் "கண்சக்தி" குறித்துப் பேசுவான்! அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, சிலுக்கின் கண்களுக்குக் கச்சிதப் பொருத்தம்!

கொடும்புருவம் கோடா மறைப்பின் - நடுங்கஞர்

செய்யல மன் இவள்கண்!

ஏய் புருவங்களே நீர் வாழ்க! இவள் கண்ணுக்குத் திரைபோட்டு என்னைக் காப்பாற்றுங்களேன்?

ஐயன் வழியில், நாமும் முடிப்போம், நகைச்சுவையாக!

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல - ‘ஆண்’றோர்க்கு
ஸ்மிதா சிலுக்கே சிலுக்கு!

விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதாவுக்கு.. நினைவாலே சிலை செய்து, மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிலுக்கு!

vikatan

  • தொடங்கியவர்

முடிஞ்சா போங்க ப்ரோ!

 

 

p46b.jpg

ந்தியாவில் இப்படியெல்லாம் இடம் இருக்கிறதா? சிலருக்குத் தெரிந்து இருக்கலாம், சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட திகில் நிறைந்த சில மர்ம இடங்கள் இதோ!

The Hanging Pillar :

p46a.jpg

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில்தான் லீபாக்‌ஷி. சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் தலம் இது. 11-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டிய கோயில். கோயிலில் சுமார் 70 தூண்கள் உள்ளன. இதில் ஒரே ஒரு தூண் மட்டும் ஒரு இன்ச் அந்தரத்தில் இருக்குமாம். வழிபட வரும் மக்கள் அதற்கு அடியில் ஏதேனும் பொருளையோ அல்லது துணியையோ ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு வருமாறு நுழைத்துப் பார்த்து விளையாடுகிறார்கள். கோயிலுக்கு அருகிலேயே கிரானைட்டில் கட்டிய நந்தி சிலையும் சிறப்பம்சம். துணியோடு துணிவோடு போகலாம்!

Twin Town :

p46c.jpg

p46d.jpg

கேரளாவில் இருக்கும் மல்லாபுரம் என்னும் ஊரில் இருக்கிறது ‘ட்வின் டவுன்’. உலகின் அதிக இரட்டையர்கள் இங்கேதான் பிறக்கிறார்கள் என்கிறது ஆய்வு. இந்த ஊரில் சுமார் 2000-த்துக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 10-க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்த மாதிரியான இரட்டைப் பிறப்புகள் கடந்த 1949-ல் இருந்து நடக்கிறதாம். பேசாம அந்த ஊர்லகூட பொண்ணு எடுக்கலாமோ?

Door Deprived Houses :

p46e.jpg

p46f.jpg

சனி சிக்னாப்பூர், மகாராஷ்ட்டிராவில் இருக்கும் சிறு கிராமம். இங்கே சனிக்கோயில் மிகவும் ஃபேமஸ். 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. விஷயம் என்னன்னா, இங்கிருக்கும் வீடு, பள்ளி, அலுவலகம், கடை போன்ற எந்த ஒரு கட்டடத்திற்கும் கதவே கிடையாது. திருட்டு சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை. ஏன், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், குடிகாரர்கள் யாரும் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்ததுகூட இல்லை. சுருக்கமா சொன்னா, இங்கே வீடு கட்டினா, கதவு செலவு மிச்சம்!

The Ghost Lights :

p46g.jpg

மேற்கு வங்காளத்தில் இருக்கும் மர்ஷசில் கிராமம்  மர்மப் பிரதேசமாக அறியப்படுகிறது. இருட்டிய பிறகு ஆங்காங்கே லைட் மின்னுவதை, அங்கிருக்கும் மீனவர்கள் பார்த்து மிரண்டுபோய் உள்ளனர். சம்பந்தமே இல்லாமல் கலர் கலராக மின்னுகிறதாம்! இதனால் கடலில் இருந்து வரும் மீனவர்கள் பலர் தங்களது பாதையை இழந்துள்ளனர். இதற்கு ‘ஆலியா லைட்ஸ்’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. இந்த இடத்தை `மீனவர்களின் நைட் மேராக' சில இணையதளங்கள் குறிப்பிடுகின்றன. பீதியில் சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். ஒருவேளை சித்தார்த் அபிமன்யூவால் மட்டும் இங்கே இருக்க முடியுமோ என்னவோ?

The Whispers Of The Dead :

p46h.jpg

குஜராத்தில் இருக்கும் இந்த இடத்தின் பெயர் டுமாஸ் பீச். இந்த இடமானது இரண்டு விஷயத்தில் ஃபேமஸ். ஒன்று கறுப்பு மண், இன்னொன்று பேய்களால் சூழப்பட்ட பகுதி. இந்த இடத்திற்குச் சென்றவர்கள் மாயமாக மறைந்துபோய் விட்டனராம்! இந்த இடம், முந்தைய காலத்தில் இறந்து போனவர்களை அடக்கம் செய்யும் இடமாக இருந்தது என்கிறார்கள். அவர்களின் ஆன்மா இன்னும் அங்கே சுற்றுகின்றது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.சுற்றுலாப் பயணிகள் இங்கே காணாமலும் போயுள்ளனர். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பக்கம் போக மாட்டேனே!

The Place Of Suicidal Birds :

p46i.jpg

p46j.jpg

அஸ்ஸாம் மாநிலம் ஜட்டிங்கா என்னும் இடத்தில் நடக்கும் மர்மம் இது. மான்சூன் சீசனுக்குப் பிறகு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இரவு நேரங்களில், 44 வகையைச் சார்ந்த பறவைகள் மிகச்சரியாக இந்த இடத்தைக் கடக்கும்போது இறந்துபோய் விடுகின்றனவாம். மறுநாள் சாலையில், வீடுகளில் அனைத்துப் பறவைகளும் செத்துக் கிடக்குமாம். மிக உயரத்தில் பறப்பதினாலும், அதிகமாகக் காற்று வீசுவதாலும், மூடுபனியின் காரணமாகவும்தான் பறவைகள் இறக்கின்றன என்கிறார்கள். பறக்க விடுங்க... வாழ்றதா சாகிறதா அதுங்க தீர்மானிக்கட்டும்!

The Shrine Of Bullet Baba :

p46k.jpg

p46l.jpg

ராஜஸ்தானில் மிகவும் ஃபேமஸான கோயில் ‘தி ஷ்ரைன் ஆஃப் புல்லெட் பாபா’. கண்ணாடிப் பெட்டியில் சாமியாக ராயல் என்பீல்ட் வண்டியை வழிபட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த வழியில் செல்லும் பயணிகள் அனைவரும் இந்தக் கோயிலில் நின்று ஒரு நமஸ்காரம் வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்களாம். இதற்குப் பின்னால் ஒரு குட்டிக்கதை இருக்கிறது. 1991-ல் ஓம் சிங் ரத்தோர் என்பவர் அந்த வண்டியில் வந்து மரத்தில் மோதி உயிரை இழந்துவிட்டார். விஷயத்தைக் கேட்ட போலீசார் வண்டியை ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் ஆச்சர்யமாக மறுநாளே வண்டி தானாக விபத்து நடந்த அதே இடத்தில் இருந்ததாம். நீங்க அந்தப் பக்கமா போனா, மறக்காமல் புல்லெட் பாபாவுக்கு வணக்கம் வெச்சுருங்க!

The Visa God :

p46m.jpg

சில்கூர் பாலாஜி கோயிலானது ஹைதராபாத்தில் இருக்கிறது. இதற்கு ‘விசா பாலாஜி டெம்பிள்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அங்கு வழிபடவரும் பக்தர்களிடம் எந்தக் காணிக்கையும் வாங்காகததும், கோயிலில் உண்டியலே இல்லாததும் சிறப்பம்சம். யாருக்கேனும் வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கவில்லை என்றால், இந்த விசா பாலாஜியை வழிபட்டால் கிடைத்துவிடுமாம். ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். போட்றா தம்பி ஹைதராபாத்துக்கு டிக்கெட்ட!

The Village That Slithers :

p46n.jpg

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமையப்பெற்ற ஒரு சிறிய கிராமம் ஷேட்பல். அங்கே கிட்டதட்ட 200-க்கும் அதிகமான பாம்பு வகைகள் நடமாடுகின்றன. சராசரி மக்கள் போல் பாம்பும் அங்கு வாழ்கின்றதாம். அங்கு வசிக்கும் மக்களைப் பாம்புகள் எதுவும் செய்யாதாம்! மாணவர்கள் பள்ளிக்குச் சென்றால். கூடவே பாம்புகளும் விசிட் அடிக்குமாம். அங்கே வசிக்கும் மக்களும் அதனைச் சீண்ட மாட்டார்கள். இதுவரை ஒரு பாம்புக்கடியைக் கூட அவர்கள் சந்தித்த தில்லையாம். ஆத்தா ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா, கோழி வளர்த்தா...ஆனா பாம்பு வளர்க்கலையே!

vikatan

  • தொடங்கியவர்

ஃபெர்டினாண்டோ காலியானி

 

 
54759c01d4842_ferd_3097815f.jpg
 
 
 

இத்தாலி பொருளாதார மேதை

இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஃபெர்டினாண்டோ காலியானி (Ferdinando Galiani) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இத்தாலியின் கியெட்டி நகரில் (1728) பிறந்தார். கற்றறிந்த உறவினரிடம் பாரம்பரியக் கல்வி பயின்றார். ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மதக் கல்வியும் முடித்து தேவாலயப் பணியில் சேர்ந்தார்.

* வர்த்தகவாதக் கொள்கைக்கு (Mercantilism) ஆதரவாக ‘டிராட்டேட்டோ டெல்லா மொனேடா’ என்ற நூலை எழுதினார். இது இவரது மாஸ்டர்பீஸாகப் போற்றப்படுகிறது. பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றும் பணியாளர்கள் குறித்து ஒரு நூல் எழுதினார். இந்த நூல்கள் வாயிலாக நாடு முழுவதும் பிரபலமானார்.

* இவரது அரசியல், சமூகப் பொருளாதார அறிவுக்கூர்மை அந்நாட்டு மன்னரை ஈர்த்தது. பாரீஸில் பணியாற்றி வந்த தூதரின் செயலாளராக 1759-ல் நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேபிள்ஸ் நகரில் அரசு ஊழியராகப் பணியாற்றினார். பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும், நிர்வாகத்திலும் அரசுக்கு உதவினார்.

* இத்தாலி, பிரெஞ்ச் ஆகிய இரு மொழிகளிலும் பல கட்டுரைகள், கடிதங்கள் எழுதினார். பொருளாதார, சமூக, அரசியல் வாழ்க்கை பற்றிய இவரது அபாரமான கருத்துகள் பெரிதும் போற்றப்பட்டன. அரசோ, சட்டமோ அதன் மதிப்பீடுகளை மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது என்றார்.

* பிரான்ஸின் பிரபல பொருளாதார நிபுணர் டென்னிஸ் டைடரோட், பிரபல தத்துவவாதி ஆன் ராபர்ட் ஜாக்குவஸ், வால்டேர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். இவரது எழுத்துகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக அறிவியல் ஆகியவற்றை மையமாக கொண்டிருந்தன.

* அந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூகம், பொருளாதாரம், அரசியல் நிலவரங்கள் குறித்த விரிவான பதிவாக இவை அமைந்தன. பொருளாதார நிபுணர் என்ற முறையில் இவரது கருத்துகள் மிகவும் உண்மையாகவும், எதார்த்தமாகவும் இருந்தன. இவரது சிந்தனைகளில் அரிஸ்டாட்டிலின் தாக்கம் பிரதிபலித்தது.

* 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல தத்துவமேதை விக்கோவின் படைப்புகளை ஏராளமாக வாசித்தவர். அவருடைய தாக்கங்களும் இவரிடம் மிகுந்திருந்தன. பொருளாதாரம் குறித்து பிரபல அறிஞர் மொரெல்லெட்டுடன் அடிக்கடி விவாதித்தார். பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து அறிந்து, தனது தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் குறித்து எழுதியும் பேசியும் வந்தார்.

* இவர் எழுதிய ‘ஆன் மனி’, ‘டயலாக்ஸ் ஆன் தி கிரெய்ன் ட்ரேட்’ ஆகிய பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் நாடு முழுவதும் பிரபலமடைந்து, சிறந்த பொருளியல் நிபுணர் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்தன. முதல் கட்டுரையில் பயன்பாடு, பற்றாக்குறை அடிப்படையில் மதிப்புக் கோட்பாட்டை வகுத்தார். பொருளாதார மதிப்பீடு குறித்த இவ்வளவு ஆழமான சிந்தனை அதுவரை யாரிடமும் காணப்பட்டதில்லை என்று கருதப்படுகிறது.

* வணிகத் துறைக்குக் கட்டுப்பாடு தேவை என்பதை தனது 2-வது கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார். இது ஏற்கெனவே அங்கு பிரபலமாக இருந்த முழுமையான வணிக சுதந்திரக் குரலுக்கு எதிரானதாக இருந்தது. 1769-ல் வெளிவந்த ‘டயலாக்ஸ் ஆன் தி காமர்ஸ் இன் வீட்’ என்ற நூலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

* 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளாதார, சமூக, அரசியல் மேதையாகப் போற்றப்படும் ஃபெர்டினாண்டோ காலியானி 59-வது வயதில் (1787) மறைந்தார்.

tamil.thehindu

 

  • தொடங்கியவர்

தினமும் 800 மில்லியன் பேர் பசியுடன் உறங்குகின்றனர்

 

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய குழு நடத்திய ஆய்வில் உலகில் தினசரி 800 மில்லியின் பேர் இரவு தூங்க செல்லும்போது, பசியுடன் செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், 1.9 பில்லியன் பேருக்கு உடல் பருமன் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றை கண்டுகொள்ளாவிடின் 2035-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதி பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

600_web---close-up-boy_19347.jpg

குறிப்பாக மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் உடல் பயிற்சி இல்லாமையும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்

 

யோகாவிற்கு யுனெஸ்கோ அளித்த கிஃப்ட்!

 

இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா, யுனெஸ்கோவின் பெருமைக்குரிய கலாச்சார பொக்கிஷங்கள் (Intangible world heritage) பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து யுனெஸ்கோ நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 

யோகா கலையை சிறப்பிக்கும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா சபை அறிவித்தது. தற்போது யுனெஸ்கோ, பாதுகாக்கப்படவேண்டிய பாரம்பரிய பொக்கிஷங்கள் பட்டியலில் யோகாவை இணைத்துள்ளது. யுனெஸ்கோ நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், யோகா என்னும் கலை வயது வித்தியாசமின்றி அனைவரும், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் யோகா கலையுடன் க்யூபா மற்றும் பெரு நாட்டின் நடனங்களும் கலாச்சார பொக்கிஷங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

vikatan

  • தொடங்கியவர்

சாய்பல்லவியின் தங்கை நடித்துள்ள ‘காரா’ படத்தின் டீசர்..!

 

14364779_1168130669899675_31151469202981

‘பிரேமம்’ மலர் டீச்சராக பலரது மனதை கவர்ந்த சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் தற்போது நடிக்க வந்துவிட்டார். இவர் நடித்துள்ள ‘காரா’ என்கிற குறும்படத்தை புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கு முன்னதாக படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். பூஜா கண்ணனோடு சேர்ந்து இந்த படத்தில் வயதான கேரக்டரில் தொகுப்பாளர் கதிர் நடித்துள்ளார். 

 

 

 

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: யாருக்கு வீடு?

whatsapp_3097888f.jpg

1_3097896a.jpg

2_3097895a.jpg

 

3_3097894a.jpg

4_3097893a.jpg

5_3097892a.jpg

7_3097891a.jpg

8_3097890a.jpg

9_3097889a.jpg

 

 

  • தொடங்கியவர்

15289259_1202842646431094_90088130286615

பிரபல ஆங்கில பொப் இசைப்பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பிறந்த நாள்.
Happy Birthday Britney Spears

  • தொடங்கியவர்

உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982

 

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை

 
 
 
 
உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1971- இந்திய- பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. * 1973- வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. * 1976- ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். * 1978- வேர்ஜீனியாவில் பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

* 1989- மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர். * 1997- நிலக் கண்ணி வெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

* 1999- செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது. * 2007- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 709 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ரெயின்போ டாவ்..!

 

p106a.jpg

யசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் ரசிக்கிற விஷயங்கள்ல வானவில்லும் ஒண்ணு. நமக்கு விருப்பப்பட்ட இடங்கள்ல வானவில்லைக் கொண்டு வந்தா எப்படி இருக்கும்? இந்த ஆசையை நிஜமாக்கியிருக்கார் அமெரிக்காவைச் சேர்ந்த கேப்ரியல் டாவ்! வாவ்...

வானவில் வண்ணங்களில் இருக்கும் நூல்களைக் கொண்டு, செயற்கை வானவில் உருவாக்குவதில் கேப்ரியல் வித்தை காட்டுகிறார். `கட்டடத்திற்குள் வானவில் நுழைஞ்சிருக்கோ'ன்னு பார்ப்பவர்களை வியக்கவைக்கிறது இவரின் படைப்பு. இவர் இந்த மாதிரி 35 செயற்கை வானவில்களை ஏற்படுத்தி ட்ரெண்ட் அடித்திருக்கிறார்.

p106b.jpg

சமீபத்தில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள தி கிரேட் கேலரி ஆஃப் டொலேடோ மியூசியத்தில் இவர் ஏற்படுத்திய செயற்கை வானவில், இணையத்தில் செம வைரல். மியூசியத்துக்கு கலைப்பொருட்களைப் பார்க்க வர்றவங்க இவரோட இந்த நூல் வானவில்லைப் பார்த்து மெர்சலாகி அங்கேயே அதிக நேரம் சுற்றி வந்திருக்காங்க. இதனால மியூசியத்துக்கு வர்றவங்களோட எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கு.

p106c.jpg

எங்களுக்கும் இந்த மாதிரி செயற்கை வானவில் பண்ணித்தாங்கனு பெரிய பெரிய கட்டடங்களின் உரிமையாளர்களிடமிருந்து கேப்ரியலுக்கு வேண்டுகோள்கள் குவிகிறதாம். சின்ன ஐடியாதான்! ஆனா அது எல்லோரையும் கவரும்படி பண்ணா ஈஸியா ஹிட் அடிக்கலாம்கிறதுக்கு கேப்ரியலோட இந்த செயற்கை வானவில் உதாரணம்!

vikatan

  • தொடங்கியவர்

உலகின் உயரமான தண்ணீர் பாலங்கள்

New_folder_3098066f.jpg

1_3098065f.jpg
அக்யூடெக்ட் செகோவியா, ஸ்பெயின்
 
2_3098064f.jpg
அக்யூடெக்ட் செகோவியா, ஸ்பெயின்
 
3_3098063f.jpg
க்ராட்டன் அக்யூடெக்ட், அமெரிக்கா
 
4_3098062f.jpg
மேக்டிபர்க் நீர் பாலம், ஜெர்மனி
5_3098061f.jpg
பொண்ட்டு கார்டு, பிரான்ஸ்
 
6_3098060f.jpg
அக்வா மர்சியா, இத்தாலி
7_3098059f.jpg
பாண்ட்சிசோல்ட் அக்யூடெக்ட், இங்கிலாந்து
 
8_3098058f.jpg
மாத்தூர் தொட்டிப் பாலம், இந்தியா
9_3098057f.jpg
ஆகஸ் லிவர் அக்யூடெக்ட், போர்ச்சுகல்

நீர் அத்தியாவசியமான ஒன்று. மழையால் நமக்குக் கிடைக்கும் நீரைச் சேமித்துவைக்க குளங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டன. இது நாம் அறிந்த விஷயம்தான். இம்மாதிரி தடுத்து வைக்கப்பட்டும் நீர் பயன்பாடுக்குச் செல்ல வழி வகையும் செய்ய வேண்டும் அல்லவா? சமதளத்தில் செல்ல ஓடை உண்டாக்குவார்கள். இன்று வெகு தூரம் வரை குடிநீர் கொண்டு செல்ல இரும்பு, பிளாஸ்டிக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரி நீர் போகும் வழியில் வேறு வழித் தடங்கள் இருந்தால் அதைக் கடந்து நீரை மறுமுனைக்கு எடுத்துச் செல்வது எப்படி?

இதற்காகத்தான் நீருக்கான பாலங்கள் கட்டப்பட்டன. பண்டைய காலப் பேரரசான ஆசிரீய காலத்தில்தான் முதன்முதலில் இந்த வகைப் பாலங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் தலைநகரான நினிவேக்கு நீர் எடுத்துச் செல்வதற்காக 80 கி.மீட்டர் தூரத்துக்கு பத்து அடி உயரத்துக்கு இந்தப் பாலம் உருவாக்கப்பட்டது. அதுபோல இந்தியாவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் ஹம்பியில் இந்த வகை பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1962-ம் ஆண்டுக் காலட்டத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் ஊரில் இந்த வகை பாலம் கட்டப்பட்டுள்ளது. 1204 அடி நீளத்தில் கடல் மட்டத்திலிருந்து 115 அடி உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பறளியாற்று நீரை எடுத்துச் செல்வதற்காக இந்தப் பாலம் உருவாக்கப்பட்டது. இது ஆசியாவின் மிக உயரமான பாலம். இம்மாதிரி உருவாக்கப்பட்ட தண்ணீர்ப் பாலங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது:

tamil.thehindu

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கரீனா கபூர் மனதளவிலும் அழகு தான்!

kareenna_11587.png

நிறைமாத கர்ப்பிணியான கரீனா கபூர், சற்றும் சோர்வின்றி சுறுசுறுப்பாக தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். 

அண்மையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் கரீனா. அதன் அட்டைப் படத்தில், கரீனா 'தாய்மை' என்ற பேரழகுடன் ஜொலிக்கிறார். கரீனா பிரசவத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், எந்த சோர்வும், தயக்கமும் இன்றி நிகழ்ச்சிகள், படப்பிடிப்பு என அனைத்திலும் பங்குப்பெற்று வருகிறார்.  ’பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது எடை கூடுவது வழக்கம். அது வரமும் கூட. கன்னங்களிலும், கைகளிலும் கர்ப்பமான பெண்களுக்கு சதை போடுவது தனி அழகு. கர்ப்பத்துடன் வெளியே வருவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது’ என்றாராம் கரீனா!

  • தொடங்கியவர்

1.9 லட்சம் பறவைகள்; 36,000 மக்கள்..! கின்னஸ் சாதனைக்காக நடக்கும் திருவிழா

 

birds_1_13151.jpg

உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச பறவை திருவிழா இன்று நடைபெறுகிறது. 452 இடங்களில் பறவைகளைப் பார்க்க இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 36,000 பேர் 1.9 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளை கண்டுகளிக்க உள்ளனர். உலக அளவில் பறவைகள் பார்க்கும் விழாவுக்கு அதிக மக்கள் கலந்து கொள்வது இந்த நிகழ்வில் தான் என கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச அரசு, கின்னஸ் சாதனைக்காக நடக்கும் திருவிழாவில் இந்த நிகழ்வை இடம்பெறச் செய்ய முனைந்துள்ளது.

இந்த சர்வதேச பறவைகள் திருவிழாவில், வனவிலங்குகளை காப்பதற்காக சர்வதேச அமைப்புகள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளது. 

vikatan

  • தொடங்கியவர்

மகள் மேக்ஸின் முதல் பிறந்தநாள்... ஆனந்த யாழை மீட்டும் மார்க் ஸக்கர்பெர்க்!

 

மார்க்

"ஒரு வருடத்திற்கு முன்னால் நானும், என் மனைவியும் எங்கள் மகள் மேக்ஸ் பிறந்த நாள் அன்று இந்த உலகத்தை அவளுக்கு ஒரு கடிம் எழுதினோம். அதன் பின் சான் ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் உலகில் உள்ள குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்தோம்" -இப்படித்தான் தனது மகளின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்தை ஆரம்பித்துள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறியிருப்பது '' இன்று மேக்ஸ் சிரித்தாள், சில வார்த்தைகள் பேசினாள், தன் கால்களால் முதல் அடியை எடுத்து வைத்தாள்.  மேக்ஸை போலவே சான் ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவும் வளர்ந்து வருகிறது. 

கல்வி என்ற விஷயத்தை முக்கியமாக கருதுகிறோம். 100 பள்ளிகளில் 20000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். வழக்கத்தை விட அவர்களது கற்றல் 50% இந்த முயற்சியால் அதிகரிக்கும். பிரிசில்லா குழந்தைகளின் கல்வியையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் பள்ளிகளை திறந்துவைத்துள்ளார். இந்தியாவிலும், நைஜீரியாவிலும் கோடிக்கணக்காணோரை கல்வி மற்றும் தொழில்நுட்பம் மூலம் உலகத்துடன் இணைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

15193580_10103282573847491_6426260844828

நோயற்ற உலகை மேக்ஸுக்காக உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம். இதற்காக நிறைய முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை நோயற்ற உலகை உருவாக்க முதலீடு செய்துள்ளோம். 600 மில்லியன் டாலர் செலவில் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பயோ - ஹப்பை அமைக்கவுள்ளோம். 

தொழில்நுட்பம் உலகின் மிகச்சிறந்த சமூக சேவையாக இதனை பார்க்கிறோம். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப டீமை உருவாக்கி ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்களை மேம்படுத்தவுள்ளோம். எங்களது நிறுவனத்தின் இன்ஜினியர்களை சிறிய நிறுவனங்களில் இருந்தும், ஸ்டார்ட் அப்களில் இருந்தும், மேலும் சில இடங்களில் இருந்து வேலைக்கு அமர்த்தவுள்ளோம்.

மேக்ஸுக்கு எழுதிய கடிதத்தை படித்தோம். அதில் இருந்து இவ்வளவு தூரம் நாங்கள் கூறிய விஷயங்களை ஆரம்பித்துள்ளோம், இன்னும் இலக்கை அடைய எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் யோசித்து வருகிறோம். நிச்சயம் இலக்கை அடைவோம்.

இந்த ஒரு வருட பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நமது குழந்தைகளுக்காக சிறந்த உலகை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார் மார்க் ஸக்கர்பெர்க். இந்த ஒரு வருடத்தில் மார்க் தனது மகளை பற்றி அழகான, கவித்துவமான பல பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

தேனீக்களை வைத்து தாடி வளர்ப்பவர்...

 

mohamad_1_13554.jpg

முஹமது ஹக்ராஸ் என்ற எகிப்தியர், தேனீக்களை வைத்து தாடி வளர்க்கிறார். இறந்த ராணி தேனீயின் ஹார்மோன்களை தன் தாடைக்கு கீழே ஒரு பாக்சில் கட்டிக் கொள்கிறார் ஹக்ராஸ். இதனால், தேனீக்கள் அவர் தாடைக்குக் கீழே தாடி போல் வந்து மொய்க்கின்றன. தேனீக்களின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக இப்படி செய்கிறாராம் ஹக்ராஸ்.

இது பற்றி, 'தேனீக்கள் ஆபத்தானவை அல்ல. அவை உண்மையில், மனிதர்களுக்கும் விவசாயத்துக்கும் பயன்படக்கூடியவை' என்று கூறுகிறார் ஹக்ராஸ். 

vikatan

  • தொடங்கியவர்

கார்த்தி, விஜய் சேதுபதி, ஸ்ருதி, சூரி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?

 

பிரபல நடிகர்களின் முதல் படம் நமக்குத் தெரிஞ்ச படம் இல்லை பாஸ். அவர்களின் நிஜமான முதல் படம் என்னன்னு பார்ப்போமா? 

முதல் படம்

 

கார்த்தி :

kartghi%20%28ayutha%20azhuthu0_11005.jpg

நாம் அனைவருக்கும் 'பருத்திவீரன்' கார்த்தியைத்தான் தெரியும் ஆனால் அதற்கு முன் இவர் நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா? அவருடைய அண்ணன் நடிப்பில் வெளி வந்த 'ஆயுத எழுத்து' திரைப்படம்தான். அதில் ஒரு காட்சியில் சித்தார்த் அருகில் அமர்ந்திருப்பார் கார்த்தி. அது மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் டைரக்டரும்  இவர்தான்.  

 

விஜய் சேதுபதி :

vijay%20sethupathi%20%28naan%20mahaan%20

இவரும் ஹீரோவாக நடிப்பதற்கு முன் நிறையப் படங்களில் சைடு ரோலில்தான் வந்தார். 'M. குமரன் S/O மகாலெட்சுமி', 'டிஷ்யூம்', 'புதுப்பேட்டை'. 'லீ', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடிக் குழு',  'நான் மகான் அல்ல' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.  அதற்குப் பிறகுதான் 'தென்மேற்குப் பருவக்காற்று' வந்து நமக்குப் பிடித்த ஹீரோவாய் மாறினார்.  

சிவா :

mirchi%20shiva%20%2812b%29_11234.png

இவரை 'மிர்ச்சி' சிவாவாகவும் இப்போது ஹீரோ சிவாவாகவும் தெரியும். அதற்கு முன்பு ஷாம் நடித்த '12-B' மற்றும் 'விசில்' படத்தில் வந்து இருக்கிறார். பின்பே 'சென்னை-28' வந்து எல்லாமே மாறிப்போனது. 

அட்டக்கத்தி தினேஷ் :

attakaththi%20dinesh%20%28aadukalam%29_1

இவரும் ஆரம்பக்காலத்தில் 'ஈ' 'எவனோ ஒருவன்' 'ஆடுகளம்' 'மௌனகுரு' போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'அட்டக்கத்தி' படத்தில் ஹீரோவாகி எல்லோருக்கும் பிடித்த அட்டகத்தியானார்.

சதீஷ் :

sathish%20%28tamizh%20padam%29_11493.png

காமெடி நடிகர் சதீஷ் இப்போது சமீபத்தில் 'பைரவா' படத்தில் நடித்துவருகிறார். ஆனால் இவரின் முதல் நடிப்பில் வெளிவந்தப் படம் 'தமிழ்ப் படம்'. படத்தில் 'டெட்லி வில்லன்' டீ(பாட்டி) கூட ஜடை மண்டையுடன் ஒருவர் இருப்பாரே அவர் தான் சதீஷ். அதன்பின் 'எதிர் நீச்சல்' 'கத்தி' 'ரெமோ' போன்று பல படங்களில் நடித்துள்ளார். க்ரேஸி மோகனின் தியேட்டர் ட்ரூப்பில் 8 வருடங்கள் இருந்திருக்கிறார்.

சூரி :

soori%20%28winner%29_12205.jpg

'வெண்ணிலா கபடி குழு' புகழ் 'பரோட்டா சூரி' இதற்கு முன் நடித்த படங்களைச் சொன்னால் ஆச்சிரியமாக இருக்கும். அப்படி என்ன படங்கள்? 'நினைவிருக்கும் வரை' 'சங்கமம்' 'ஜேம்ஸ் பாண்டு' 'காதல்' போன்று பல படங்களில் நடித்துள்ளார் சூரி. சைடு ரோலில் வந்த சூரி இப்போது வேற லெவல். 

விமல் :

vimal%20%28kuruvi%29_11019.png

இவரை நம் எல்லோருக்கும் 'களவாணி' 'பசங்க' 'கலகலப்பு' போன்ற படங்களில் ஹீரோவாகத்தான் தெரியும், ஆனால் அதற்கு முன் 'கில்லி' 'கிரீடம்' 'குருவி' போன்ற படங்களில் சைட் ரோலில் நடித்தது நம்மில் பல பேருக்குத் தெரியாத ஒன்று.

அசோக் செல்வன் :

ashok%20selvan%20%28billa%202%29_11085.p

'சூது கவ்வும்' 'தெகிடி' 'ஆரஞ்ச் மிட்டாய்' போன்ற படங்களில் நடித்த அசோக் செல்வனின் முதல் படம் 'பில்லா-2'. பட டைட்டிலை உற்றுப் பார்த்தால் 'பில்லா-2'விற்கு ஃப்ளாஷ்பேக் போன்று க்ளிப்பிங்ஸ் வரும். அதில் சிறுவயது பில்லாவாக இவர்தான் வருவார். அஜித்தின் சாயல் லைட்டாக இருப்பதால் குட்டி பில்லாவாக இவரின் போட்டோக்கள் சில வரும்.

ஸ்ருதிஹாசன் : 

shruthi%20%28hey%20ram%29_11210.png

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ருதி. நடிப்பது மட்டுமின்றி பாடியும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவரின் முதல் படம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'ஹேராம்' படம்தான். அதில் அவரது அப்பாவுடன் சேர்ந்து பாடல் ஒன்றும் பாடியுள்ளார். அதில் காந்தியின் அருகில் வரும் குட்டிக் குழந்தை இவர்தான். 

ஷாம் :

shyam%20%28kushi%29_11306.png

'12-B' யில் அறிமுகமான ஷாமைத்தான் நமக்குத் தெரியும் ஆனால் அதற்கு முன்னே விஜய் நடிப்பில் வெளி வந்த 'குஷி' படம்தான் ஷாமுக்கு முதல் படம். படத்தை நன்றாகக் கவனித்தால் விஜய்யின் ஃப்ரெண்ட் ரோலில் வந்திருப்பார். மாடலிங் முடித்துவிட்டு நடிப்பில் களம் இறங்கியிருக்கிறார் ஷாம்.

த்ரிஷா :

trisha%20%28jodi%29_11413.png

இவரது முதல் படம் பிரசாந்த், சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்த 'ஜோடி' திரைப்படம்தான். அதில் சிம்ரனின் தோழியாக ஆரம்பித்த அவரின் கலைப்பயணம் இப்போது நாயகி படம் வரை தொடர்கிறது. முழு நேர ஹீரோயின் ஆனது 'மௌனம் பேசியதே' படத்தில்.  

vikatan

  • தொடங்கியவர்

இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்

 

400_09059.jpg

ஐ.நா 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளி ஆண்டாக அறிவித்தது. பின்னர் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதன் நோக்கம் 'சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உரிமைகளையும், இடத்தையும் வழங்குவதில் யாரும் பின் நிற்க கூடாது' என்ற எண்ணக்கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே!

  • தொடங்கியவர்

ஆண்டின் சிறந்த புத்தகமாக சச்சினின் சுயசரிதை தேர்வு

 

maxresdefault_19326.jpg

சச்சினின் சுயசரிதை ‘Playing it my Way’ என்ற பெயரில் 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகம் ஏற்கெனவே விற்பனையில் உலக சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்புத்தகம் மேலும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. 14-வது ரேமண்ட் குறுக்கெழுத்து புத்தக விருதில், சுயசரிதைப் பிரிவில் ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சச்சினின் சுயசரிதை. இதுகுறித்து சச்சின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸிலும், ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். விலை மதிக்க முடியாத அந்த அன்புக்கு நன்றி என்ற ஒரு வரியில் பதில் அளித்து விட முடியாது. இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்

 

கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி
இதில்-
* நோக்கியா நிறுவனம் மீண்டும் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் இறங்கவுள்ள தகவல்
* நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கட்டுப்பாடுகளுடன் தரவிறக்கம் செய்ய அனுமதித்துள்ள விவரம்
* விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வோர்ல்ட் வியூவின் திட்டம்
* போலிப் பொருட்களை தடுக்க அமெசான் எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய செய்தி

  • தொடங்கியவர்

சச்சினை இங்கிலாந்துக்கு கடத்தி... டேவிட் கேமரூன் கல..கல..

 

David-Cameron_20329.jpg

இங்கிலாந்து முன்னாள் பிரதமர், டேவிட் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், 'இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை பார்க்கும் போது, சச்சினை இங்கிலாந்து அழைத்து சென்று, இங்கிலாந்து அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடினாலும், அதை அடுத்த போட்டிகளில் இங்கிலாந்து அணியினரால் தொடர முடியாதது வருத்தமளிக்கிறது. இங்கிலாந்து அணியிலும் குக், ரூட், கேமரூன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என்றார்.  

vikatan

  • தொடங்கியவர்

"இது லவ் தானே மார்த்தா!" - உலகின் உச்சியில் ஒரு ‘தெறி’ புரபோசல்

 

லவ்


இரண்டாம் உலகப்போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று போலந்து. இந்தியா, மலேசியா உள்ளிட்ட தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பணக்காரர்கள் என்று நம்பிக்கை. அந்த நம்பிக்கை தகர்ந்த இடத்தில் ஒரு செம லவ். அதை விட லவ்லி அந்த ப்ரொபோசல்.  

கடந்த மே மாதம் உலகை உலுக்கிய அணு உலை விபத்து நடந்த  ஜப்பானின் 'புகுஷிமா' நகரத்தின் தற்போதையை நிலையை ஒரு போட்டோகிராபர் படம் பிடித்துக்கொண்டிருந்தார். மலேசியாவைச் சேர்ந்த 'கெயோ வே லூங்' என்கிற அவர் மக்கள் ஒருவர் கூட இல்லாமல் போன அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியாக நடந்தே படம் பிடிக்க சென்று இருந்தார். வேலையை முடித்துவிட்டு புல்லட் ரயிலில் டோக்கியோ திரும்பிக்கொண்டிருந்த போதுதான் அவரது பர்ஸ் காணாமல் போயிருந்ததை கவனித்தார். 

இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முன்னரே இறங்கிய லூங் ஒரு மளிகைக்கடையில் அங்குள்ள வைஃபையை பயன்படுத்திக்கொள்ளச் சென்றார். அந்த கடையில் ஒரு ஐரோப்பிய பெண்ணை தவிர யாரும் இல்லை. அந்தப்பெண் எதோ வாடிக்கையாளர் என்று நினைத்து காத்திருந்தார் லூங். சிலநிமிடங்களில் அந்த பெண்ணே வந்து என்ன வேண்டும் என்று கேட்கவும்,  "ஐரோப்பிய பெண் பெட்டிக்கடையில் வேலை செய்கிறாரா?" என்கிற ஆச்சர்யத்துடன் தனது நிலையை சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் கட் செய்து அப்படியே ஜுலை..ஆக்ஸ்ட் என்று வருவோம்.

லூங்கின் ஃபுகுஷிமா படங்கள் வெளியாகி பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த மகிழ்ச்சியை லூங் தாய்லாந்தின் கடற்கரைகளில் தோழி மார்த்தா சைபேலாக் உடன் உற்சாகமாய் கொண்டாடிக்கொண்டிருந்தார். இந்த மார்த்தாதான் அன்று அந்த கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐரோப்பிய பெண். 

"வழக்கமாக தெற்காசியர்கள்தான் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்குப் போவோம். ஆனால் அந்த கடையில் நின்ற வெள்ளைக்காரப்பெண் அங்கு வேலை செய்வார் என நம்பவில்லை. என் நிலைமை புரிந்து கருணையுடன் அணுகினார். அதுதான் என்னை நெகிழச்செய்து விட்டது" என்றார் லூங். 

மலேசியா வந்த பிறகு தினமும் பேஸ்புக்கில் மார்த்தாவுடன் சாட்டிங்கிலேயே இருந்துள்ளார் லூங். மெல்ல டெவலப் ஆகி ஒரு சுபதினத்தில் ப்ரோப்போஸ் செய்து ஒகே ஆனது. கையில் காசு சேர்ந்தவுடன் ஜப்பானுக்கு ஃப்ளைட்டை பிடித்துக்கொண்டிருந்த லூங் அடுத்த கட்டத்துக்கு இந்த உறவை கொண்டு செல்ல முடிவெடுத்தார். 

தெற்காசியாவின் உயரமான கட்டடம் ஒன்றில் ஏறி அதிலிருந்து 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா' என்று திருமண ப்ரோபோசல் செய்யத் திட்டமிட்டார். நம் ஊரைப்போல் எல்லாவற்றுக்கும் ஒரே ப்ரோபோசல் எல்லாம் ஐரோப்பிய ஸ்டைலில் இல்லை என்பதால் இந்த திருமண ப்ரோபாசல் ப்ளான்

unnamed_%284%29_15386.jpg

உலகின் இரண்டாவது உயரமான கட்டடமான கோலாலம்பூரின் 'பெட்ரோனாஸ்' டவரில் ஏறி வெளிப்படுத்தலாம் என்றால் அங்கு அடிக்கடி மேலே ஏறி 'நியுசென்ஸ்' செய்யும் ஆட்களின் தொல்லை அதிகமாகி வருகிறது என சுத்தமாக அடைத்து விட்டார்கள். அடுத்த கட்டமாக உலகின் 16-வது பெரிய கட்டடமான சீனாவின் டியான்ஜின் நகரத்தில் இருக்கும் 'கோல்டின் பைனான்ஸ்" நிறுவன கட்டடத்தை தேர்வு செய்து சென்று இருக்கிறார். அதன் உச்சிக்குச் சென்று அங்கியிருக்கும் ஹெலிபேடை நோக்கி ஏறிக்கொண்டிருக்கும்போது கட்டட காவலர்கள் பிடித்து வெளியே அனுப்பி விட்டார்களாம். 

அதன் பின்னரே உலகின் மிகப்பெரிய பாலமாக கட்டப்பட்டு வரும் பேய்பான் ஜியாங் பாலத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று அட்டை எழுதிக் காட்ட இவரின் நண்பரும் வீடியோ கிராபருமான ஷில்டன் காம்பாலா படம் பிடித்து விட்டார். தரையில் இருந்தே 2467 அடி உயரம் கொண்ட பாலத்தின் உச்சியில் ஏறி தன் கோரிக்கையை ஏந்தி பிடிக்கும் காட்சியை வீடியோ, போட்டோ எடுத்து மலேசியா திரும்பினார்கள். அதன் பின்னர் நடந்ததுதான் இன்னும் சுவாரஸ்யம்.  

கடந்த மாதம் 26-ம் தேதி மலேசியாவுக்குத் தன்னை பார்க்க வந்த மார்த்தாவை சினிமாவுக்கு அழைத்துள்ளார் லூங். சினிமா முடிந்தவுடன் அதே தியேட்டரின் ஸ்கிரீனில் மார்த்தாவுக்கு ஆச்சர்யம் அளிக்கும்படி இவரின் ப்ரோபசல் விடீயோ ஒளிபரப்புவதுதான் ப்ளான். ஆனால் அது சொதப்பிவிட்டது. மார்த்தாவிடம் ஒன்றும் சொல்லாமல் அடுத்தநாள் பாலி தீவுக்கு அழைத்து சென்றார் லூங். அங்கு அவருக்கு பிடித்தமான உணவகத்தில் அமரவைத்து விட்டு வெளியே வந்துவிட்டார். பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் அடுத்த விநாடியே  மார்த்தா பேஸ்புக்கிற்குள் புகுந்துவிடுவார் என்று லூங்கிற்கு தெரியும். 

unnamed_%285%29_15206.jpg

அந்த ஹோட்டலின் வாசலில் இருந்து மார்த்தாவின் முகநூல் பக்கத்தில் தன் திருமண ப்ரோபோசல் படங்களை அப்லோட் செய்து வாசலில் காத்திருந்தார் லூங். சில நிமிடங்களில் வாசலுக்கு கண்ணீர் ததும்ப ஓடிவந்த மார்த்தா சம்மதம் என தெரிவிக்க அவரது விரலில் நீல வைரம் பதிந்த மோதிரத்தை அணிவித்துள்ளார் லூங். 

" பாலத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போதுதான் ஷில்டன் 'இது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பாலம். உங்களை தீவிரவாதி என்று நினைத்து சீன ராணுவம் சுட்டுக்கொல்லும் வாய்ப்பிருக்கிறது' என்று சொன்னார். உச்சியில் ஏறி நின்றபோது பல மைல் வேகத்தில் வீசிய காற்று என்னை தூக்கி வீசப்பார்த்தது. அது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. மார்த்தாவின் சம்மதிக்காவிட்டால்தான் பிணமாக வாழ்ந்திருப்பேன்" என்கிறார் லூங். 

எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி இருப்பதுதான் காதலுக்கு அழகு போல! 

.vikatan

  • தொடங்கியவர்

அனுஷ்காவுடன் கோவா சென்றார் கோலி

 

anushka_17343.png

கோவாவில் இன்று நடைபெறவிருக்கும் யுவராஜ் சிங்கின்  திருமணத்துக்கு, விராட் கோலி தனது தோழியான அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொள்கிறார். 

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 30-ம் தேதி, சீக்கிய முறைப்படி சண்டிகரில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று கோவாவில், இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்வில் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியாக கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யுவராஜ் திருமணத்தில் பங்குபெற வந்த அனுஷ்காவை, மொஹாலி விமான நிலையத்துக்குச் சென்று விராட் அழைத்து வந்துள்ளார்!

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

ரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாறுதான் அமீர் கான் நடிக்கும் `தங்கல்’ படம். இது டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் மஹாவீர் சிங்கின் மகள்களில் ஒருவரான கீதாவுக்கு, மல்யுத்த வீரர் பவன்குமாருடன் கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமண விழாவுக்குச் சாதாரணமாக இல்லை... மஹாவீர் சிங் போகத் கெட்டப்பிலேயே சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் அமீர் கான். கெத்து கான்!

p58a.jpg

பாரீஸ் ஈஃபிள் டவரின் படிகளில் ஒரு பகுதி, ஐந்து லட்சம் யூரோவுக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையைவிட பத்து மடங்கு அதிகமாம். `நேரிலும் போனிலும் நடந்த இந்த ஏலத்தில் கலந்துகொண்ட வர்களைப் பார்க்கையில் ஃபிரெஞ்சு கட்டடக் கலையின் மதிப்பு கூடுகிறது' என்கிறார் ஏலத்தை நடத்திய ஃப்ரான்கோஸ் தஜன். பாரீஸ்னாலே பியூட்டிதானே!


p58b.jpg

100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் கிளப்பில் சேர்ந்த முதல் மலையாள சினிமா மோகன்லாலின் `புலிமுருகன்'.இப்போது அது 125 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கிறது. `என் படங்கள் புதிய தளங்களுக்குச் செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், அந்தத் தளம் ஒவ்வொரு காலத்திலும் மாறுகிறது. `சித்ரம்', `மணிச்சித்திரத்தாழு' போன்ற படங்கள் தியேட்டரில் ஒரு வருடம் ஓடியது பெரிதாகப் பேசப்பட்டது, பின்னர் திருட்டு டி.வி.டி இருக்கும் இந்தச் சமயத்தில் `த்ரிஷ்யம்'  100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அதுபோலத்தான் இந்த 100 கோடி ரூபாய் கிளப். ஆனால், இது ஆடியன்ஸுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. அவர்களது தேவை வித்தியாசமான கதைகளும் பொழுதுபோக்கும்தான். அதைத் தொடர்ந்து தருவேன்' என நிதானப் பேட்டி தட்டியிருக்கிறார் லாலேட்டன்.

அடி மனோகரம்!


p58c.jpg

விஷால் வீட்டுல விசேஷங்க. விஷாலின் தங்கை ஐஸ்வர்யா வுக்கும், பிரபல நகைக் கடை அதிபரின் வாரிசு கிரித்திஷுக்கும் விரைவில் திருமணம். அண்ணனுக்கு லைன் க்ளியர்!


p58d.jpg

`இந்தியாவில் நான்கு இடங்களில் பணம் அச்சடிக்கப்படுகின்றன. அங்கே 24*7 நேரமும் பணம் அச்சடித்தால்கூட அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நிலைமையைச் சீராக்குவது கடினம்' என்கிறது இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம். `கடன்களைக் கொடுப்பது, கடன்களை வசூலிப்பது, பணத்தை ஒரு வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு மாற்றுவது என, வங்கிகள் தங்களுடைய முக்கிய வேலைகள் எதையும்  செய்ய முடியாமல் போவதால் மீண்டும் பொதுமக்களுக்குத்தான் பெரிய பிரச்னை உருவாகும்' எனப் புலம்புகிறார்கள் வங்கி ஊழியர்கள். இதுவும் கடந்துபோகுமா?


p58e.jpg

செம அப்செட்டில் இருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். பணமதிப்பு நீக்க விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் சிதம்பரம் பேசத் தயாராக இருந்த நிலையில், ஆனந்த ஷர்மாவை ராகுல் முதலில் பேசச் சொன்னதுதான் காரணமாம். `சிதம்பரம் ஆங்கிலத் தில் பேசுவார். ஆனால், இது தொடர்பாக இந்தியில் பேசினால் தான் அது இந்தியா முழுக்கப் போய் சேரும். சிதம்பரம் இரண்டாவ தாகப் பேசட்டும் எனச் சொன்னேன்' என ராகுல் சொன்ன விளக்கத்தை ஏற்காமல், நாடாளுமன்றத்தில் பேசவே மறுத்துவிட்டாராம் சிதம்பரம். ராகுல் ரூல்ஸ்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.