Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

10341435_957326700982691_342743934865559

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரிக்கி பொன்டிங்கின் பிறந்தநாள் இன்று.

மூன்று தடவை உலகக் கிண்ணம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பெருமைக்குரியவர்.
இதில் இரு தடவை இவரது தலைமையிலேயே ஆஸ்திரேலியா முடிசூடியது.

பொன்டிங்கின் துடுப்பாட்டமும் வழிநடத்தலும் ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பல டெஸ்ட் வெற்றிகளையும், கிண்ணங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் பெற சிறப்பான தலைமையை வழங்கியவர்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்.

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமெரிக்காவை கொலம்பஸ்தான் கண்டுபிடித்தாரா?: வெளியான புதிய தகவல்கள்

 

மெரிக்கா நாட்டை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே அந்நாட்டில் பிற நாட்டினர் நுழைந்துள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 

America%20Columbus,%20Romans.jpg

இத்தாலி நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,  கடந்த 1492-ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்றதாக வரலாறு. ஆனால், அமெரிக்காவிற்கு கொலம்பஸ் செல்வதற்கு முன்னதாகவே சீனர்கள், நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் சென்றனர் என பலவாறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
 
இதன் உச்சக்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த லிப்ஸ் எரிச்சன் என்பவர்தான் முதன் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்ற தகவலும் ஏற்கனவே வெளியானது.

எனினும், இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கொலம்பஸ் அமெரிக்காவிற்கு செல்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு ரோமானியர்கள் சென்றதற்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 

America%20Columbus,%20Romans%201.jpg 

இதற்கான ஆதாரமாக அமெரிக்காவில் உள்ள ஓக் தீவிலிருந்து பழமையான போர் வாள் மற்றும் கேடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயணம் மேற்கொண்ட கப்பலின் பாகங்களும் ஆதாரங்களாக கிடைத்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
புதிதாக வெளியாகியுள்ள இந்த தகவலை சில அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். ஆனால், ஆய்வை மேற்கொண்டு வரும் ஜோவன் ஹட்டன் பிலிட்சர் என்ற ஆய்வாளர், இந்த வாள் ரோமானியர்களுக்கு சொந்தமானது என்றும், அது முதலாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்றும்  உறுதியாக தெரிவித்துள்ளார்.
 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாக உள்ளதால், அதில் அமெரிக்காவை கண்டுபிடித்தது யார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/world/56548-romans-discover-america-columbus.art

  • தொடங்கியவர்

உலகின் பர்மா பஜார்!

 

கார்க்கிபவா

 

யீவு...  இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு' என்ற இந்த நகரம்தான்.

சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது.
17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. தினமும் ஒரு லட்சம் வியாபாரிகள் தங்கள் நாடுகளுக்கு பொருட்களை வாங்க வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் யீவு-வில் இருந்து 1,500 கன்டெய்னர்கள் உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரத்தின் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீனப் புத்தாண்டு மட்டுமே யீவு-வுக்கு விடுமுறை நாள்.

சிறிய கிராமமாக இருந்த யீவு, இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரம். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச் சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களைத் தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்கு பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கியக் காரணம்.

p52a.jpg

யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றது அல்ல. எனவே, அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்பவேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம், பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையைக் கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளைப் பண்ட மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களைச் செழுமைப்படுத்தியது. அந்த இறகுகளைக் கொண்டு பலவிதமான கைவினைப்பொருட் களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றை விற்பனை செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்லும் போது, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்துகொண்டார்கள். உடனே அந்தப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இன்று யீவு நகரத் தயாரிப்புகளின் சிறப்பே இதுதான். `யீவுக்குப் போனால் நம் பிரச்னையைத் தீர்க்கும் பொருளை வாங்கிவிட முடியும்' என்ற நம்பிக்கைதான் இந்த நகரத்தின் அடிப்படை.

நீண்ட நெடுங்காலமாக சீனா ஒரு கம்யூனிஸ நாடு. அனைத்தும் பொதுவுடைமை என்ற நிலை இருந்ததால், அங்கு வணிக சுதந்திரம் (free trade) தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வணிகத் தைப் பிரதானமாகக்கொண்ட யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவப் பிரதிநிதிகளாகப் பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே, ரகசியமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர்ந்தார்கள். காவல் துறையிடம் சிக்கினால் பொருள் நஷ்டத்துடன் சிறைவாசமும் கிடைக்கும். 1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம் ஒரு துணிச்சல்மிக்க பெண்ணால் முடிவுக்கு வந்தது.

p52b.jpg

ஐந்து குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரைச் சென்று பார்த்து, `உங்கள் நகர மக்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்?’ எனக் கோபமாக பேசி விட்டு, அறைக்கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவி பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள்தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல்முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தெருவில், 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான்.
 
அதன் பின் யீவு நகரத்தின் வளர்ச்சி அசுரத்தன மாக உயர்ந்தது. தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களைவிடவும் வேகமாக வளர்ந்தார்கள் யீவுவாசிகள். இன்று யீவு நகரில் 70,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் யீவு நகரில் கைமாறுகிறது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40,000 கோடி ரூபாய். இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தகவல்படி சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட பொருட்களில் 60 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. தாயம், பல்லாங்குழி போன்ற இந்தியக் கலாசார விளையாட்டுப் பொருட்களைக் கூட தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள். நம்புவீர்களா? லட்டு, பாதுஷா போன்ற நம் ஊர் ஸ்பெஷல் ஸ்வீட் வகைகளும் சீனாவில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நமது வீடுகளுக்கே டெலிவரி செய்கிறார்கள்.

p52c.jpg

உலகின் மிகச் சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் டூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடி வரை எல்லா பிராண்டட் பொருட்களின் ஷோ ரூம்களும் யீவுவில் இருந்தன. ஆனால், இன்று அந்த ஒரிஜினல்கள் அனைவரும் கடையை மூடி விட்டார்கள். அவர்களின் இடத்தை அச்சு அசலான போலிப் பொருட்கள் ஆக்கிரமித்திருக் கின்றன. எந்த ஒரு புதுப்பொருளும் சந்தைக்கு வந்த பத்தாவது நாளில் யீவுவில் அதன் போலியை வாங்கலாம். ஆனால் `இது இட்லி இல்லை என சட்னியே வந்து சத்தியம் செய்தாலும்' நம்ப முடியாத அளவுக்கு ஒரிஜினாலிட்டியுடன் இருக்கும்.

இப்படி எல்லாம் செய்வதால் சீனப் பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இதற்கு அவர்கள் சொல்லும் பதில்... `இது வியாபாரம். இங்கு நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை!'


p52d.jpg

ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே யீவு நகரை நம்பித்தான் இருக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்களில் 60 சதவிகிதம் யீவு நகரில் வாங்கப்படுகின்றன. பொருட்களை விரைவாக தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, யீவு நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஒரு ரயில் விடப்பட்டது. மொத்தம் 13,052 கி.மீ பயணம் செய்த இதுதான் உலகில் அதிக தூரம் பயணம் செய்த ரயில். 40 பெட்டிகள், 1,400 டன் எடையுள்ள பொருட்களுடன் பயணித்த இந்த ரயில் மொத்தம் 30 நாடுகளைக் கடந்து ஸ்பெயினைச் சென்று சேர்ந்தது!


போலிகளும் சீனப் பொருட்களும்!

சீனாவில்தான் தரத்துக்கு பெயர் போன ஆப்பிள் மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன; விலை குறைந்த மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன. வேண்டிய பொருட்களை வேண்டிய விலையில், வேண்டிய தரத்தில் செய்து தரக்கூடிய திறன் சீனாவுக்கு உண்டு. ஆனால், வளர்ந்து வரும் போலிகள் காரணமாக சீனாவின் பெயர் உலக அளவில் மதிப்பிழந்து வருகிறது. எந்த ஒரு பொருளையும் ‘காப்பி’ அடிக்க சீன நிறுவனங்களால் முடியும். சமீபத்திய ஆய்வுகளின்படி சீனாவில் கிடைக்கும் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை; தரம் குறைந்தவை. அது மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ஏமாற்றுகிறார்கள். `வியாபாரி ஒருவர் சீனாவுக்கு சென்று, ஆயிரம் கொசு பேட்டுகளுக்கு ஆர்டர் தந்தால், இறக்குமதியாவதில் 200 கொசு பேட்கள் வேலை செய்யாது. சீனாவுக்கு திரும்பச் சென்று கேட்பது கூடுதல் செலவு என்பதால், இறக்குமதி செய்பவர் அதற்கும் சேர்த்து விலையைக் கூட்டி விற்றுவிடுகிறார். இதுபோன்ற செயல்களால் சீனா என்றாலே டூப்ளிகேட் என்ற பிம்பம் அழுத்தமாக பதிந்து வருகிறது’ என்கிறார்கள்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் பலவற்றை, `குழந்தைகளுக்கு உகந்தது அல்ல' எனச் சொல்லி, நம் நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் உண்டு. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்து குழந்தைகள் விளையாடினால் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தரும் தர சான்றிதழ்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும். பொம்மைகள் மட்டுமல்லாமல் சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ் என சீனப்பொருட்களில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக `இந்தியாவில் இறக்குமதி ஆகும் சீனப்பொருட்களின் தரம் எப்போதும் பாஸ்மார்க்குக்கும் குறைவுதான்' என்கிறார்கள் அதிகாரிகள்.

அதேநேரம் சீனாவின் இந்த `போலி கிங்' இமேஜுக்குப் பின்னால் ‘பிக் பாஸ்’ அமெரிக்காவின் கை இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. `பொருளாதார ரீதியாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தடுக்க இயலவில்லை. எனவே, சீனப் பொருட்கள் குறித்த மதிப்பை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைச் செய்கிறது. சீனாவில் போலி பொருட்கள் தயாரிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், இவர்கள் மிகைப்படுத்தும் அளவுக்கு இல்லை. அப்படியானால் ஆப்பிள் உள்பட பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உதிரிபாக தயாரிப்புப் பணியை சீனாவிடம் வழங்குவது ஏன்? உண்மையில், இன்று அமெரிக்கா தனது உள்நாட்டு தேவைகளுக்கு சீனப் பொருட்களையே நம்பி இருக்கிறது. அமெரிக்கர்கள் தலையில் போடும் தொப்பியில் இருந்து காலில் போடும் ஷூ வரை சீனபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்கிறார்கள்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113306&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

1052610_1093016470739126_146708636224114

சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு,
BOSS வைத்த TEST..!!

‪#‎BOSS‬: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..??

*வேலையாள்: 49 இருக்கும்..!!

‪#‎ஒரு‬ யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??

*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!

#ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!

‪#‎அன்னைக்கு‬ சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..??

*மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!!

‪#‎முதலைகள்‬ வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..??

*தாரளமா கடக்கலாம்..
எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!!

‪#‎ஆனாலும்‬ பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..??

*குளத்தில் மூழ்கிட்டாங்க..!!

‪#‎அதான்‬ இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!!
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!!
ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!!

☆☆☆
நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது.

  • தொடங்கியவர்

வானத்திலிருந்து குதித்த மகன்... ஸ்கைப்பில் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்! [வீடியோ]

 

யர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ரயான், ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பெற்றோருக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி அதிர்ச்சியடைய செய்துள்ளார். தனது பெற்றோருக்கு ஸ்கைப் மூலம் வீடியோ காலிங் செய்து,  "நான் விமானத்தில் இருந்து குதிக்கப்போகிறேன்...!" என்று கூறிவிட்டு, பாராசூட்டுடன் வானிலிருந்து குதித்தார்.

வீட்டிலிருந்தபடி மகனை ஸ்கைப்பில் பார்த்து கொண்டிருந்த பெற்றோர்கள் "என்ன செய்து கொண்டிருக்கிறாய்...? ஓ மை காட், அவன் விமானத்திலிருந்து குதித்து கொண்டிருக்கிறான். அவன் ஏதோ பேருந்தில் இருக்கிறான் என்று நினைத்தோம். விமானத்திலிருந்து குதித்து செல்ஃபி எடுத்து கொண்டிருக்கிறான்..!" என அதிர்ச்சியோடு கூறினர். இதனை 'ஹாஸ்டல் வேர்ல்டு'  என்ற வீடியோ தொடருக்காக செய்ததாகவும், இதனை உங்கள் பெற்றோரிடத்தில் முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

http://www.vikatan.com/news/miscellaneous/56581-man-skypes-his-parents-while-skydiving.art

  • தொடங்கியவர்

1985 ல் இணையத்தின் தாக்கத்தை கற்பனை செய்த ஸ்டீவ் ஜாப்ஸ்

 

ப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் steevjobs.jpgஆண்டு வெளியான அந்த பேட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம், அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு.

இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை இந்த பேட்டி உணர்த்துகிறது. மக்கள் கம்ப்யூட்டர்களை விரும்பி வாங்குவார்கள் என்பதற்கு ஜாப்ஸ் முன் வைத்த காரணம், தேசிய அளவிலான தகவல் தொடர்பு வலைப்பின்னலில் இணைவதற்காக என்பதாகும்.

ஜாப்ஸ் குறிப்பிட்டது இணையத்தை தான். மிகவும் மகத்தான மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கிறோம் என்றும் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் ஜாப்ஸ் இந்த கணிப்பை பகிர்ந்து கொண்ட அந்த காலகடத்தில், இணையம் பல்கலைக்கழகங்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் மட்டுமே அறிந்த, பயன்படுத்திய வலைப்பின்னலாக இருந்தது .அதோடு பர்சனல் கம்ப்யூட்டர்களின் விலையும் சரி, அவற்றின் செயல்பாடும் பெரும்பாலானோருக்கு எட்டாக்கனியாக இருந்தது. அப்படி இருந்தும் கூட ஜாப்ஸ், பெரும்பாலானோர் வீட்டிலேயே கம்ப்யூட்டர்களை பயன்படுத்த துவங்குவார்கள் என்ற கணிப்பை உறுதிபடி வெளியிட்டிருந்தார்.
 
கம்ப்யூட்டர்கள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது எனும் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜாப்ஸ், நமக்கு கிடைத்த அற்புதமான சாதனம் என்றும் கம்ப்யூட்டரை வர்ணித்திருப்பதை அவரது பதிலில் உணரலாம்.

ஒருவர் பர்சனல் கம்ப்யூட்டரை ஏன் வாங்க வேண்டும் எனும் கேள்விக்கு அலுவலகம் மற்றும் கல்வியில் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை பட்டியலிட்டுள்ளதோடு , வீடுகளிலும் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என சொல்லியிருப்பதுதான் இந்த பேட்டியின் ஹைலைட். எல்லா வீடுகளிலும் கம்ப்யூட்டர் முக்கிய அங்கமாகும் என்றும் அவர் பதில் அளித்திருக்கிறார்.

அது எப்படி ?எனும் கேள்விக்கு தான், தேசிய அளவிலான வலைப்பின்னல் பற்றி குறிப்பிடுகிறார். ஆச்சர்யம் தான் இல்லையா?

மேக்கிண்டாஷ் வடிவில் பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டதால் மட்டும் ஜாப்ஸ் இவ்வாறு கூறியிருக்கவில்லை. உண்மையில் கம்ப்யூட்டர்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அவர் ஊகித்திருந்தார். கம்ப்யூட்டர்களை பயனுள்ளதாக ஆக்ககூடிய வலைப்பின்னலின் தாக்கத்தையும் அவர் முன்நோக்கியிருந்தார்.

ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களை கிராஹாம் பெல்லின் தொலைபேசியுடம் ஒப்பிட்டு, அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
 
100 ஆண்டுகளுக்கு முன் கிராஹாம் பெல்லிடம் தொலைபேசி மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேட்டிருந்தால் அவருக்கு பதில் சொல்லத்தெரிந்திருக்காது. அதே போலதான் கம்ப்யூட்டர்கள் விஷயத்திலும் மகத்தான மாற்றம் வரப்போகிறது என ஜாப்ஸ் பதில் அளித்திருக்கிறார்.

தந்தி செய்யாத மாற்றத்தை தொலைபேசி செய்தது பற்றி விளக்கியுள்ள ஜாப்ஸ் , ஐபிஎம் கம்ப்யூட்டர் செய்யாததை தனது மேக்கிண்டாஷ் செய்யக்கூடிய விதம் பற்றியும் பேசியிருப்பது அவரது கர்வத்திற்கு மட்டும் அல்ல, தொலைநோக்கு பார்வைக்கும் சான்று.

ஸ்டீவ் ஜாப்சின் இந்த பேட்டி ஆச்சர்யப்படக்கூடிய வகையில் 1985 ல் பிளேபாய் இதழில் வெளியானது. பிளேபாய் இதழை கிளர்ச்சியூட்டக்கூடிய படங்களுக்காக பலரும் அறிந்திருந்தாலும், அருமையான முழுநீள நேர்காணல்கள் பல அதில் வெளியாகி இருப்பது பலரும் அறிந்திராதது. அப்படி வெளியான ஸ்டீவ் ஜாப்சின் முழுநீள பேட்டியைதான், லாங்க்பார்ம் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

பொறுமையாக படிக்க வேண்டிய நீளமான, ஆழமான பழைய மற்றும் புதிய கட்டுரைகளை தேடி கண்டுபிடித்து வெளியிட்டு வரும் இணையதளம் இது.

ஸ்டீவ் ஜாப்சின் முழு நீள பேட்டியை படிக்க:http://longform.org/stories/playboy-interview-steve-jobs

ஜாப்சின் பேட்டியின் முக்கிய பகுதியை படிக்க: http://paleofuture.gizmodo.com/steve-jobs-imagines-nationwide-internet-in-1985-intervi-1671246589/+ericlimer

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=36282&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: நிர்வாக திறமை

 
t7_2662203f.jpg
 

t6_2662209a.jpg

 

t5_2662208a.jpg

 

t4_2662207a.jpg

 

t8_2662202a.jpg

 

ஜாலி ட்விட்டர்

t1_2662204a.jpg

t2_2662205a.jpg

t3_2662206a.jpg

 
 
  • தொடங்கியவர்

12359848_1025052884224040_86592839054922

  • தொடங்கியவர்

10009839_743946385740192_294796553620881:grin:

  • தொடங்கியவர்

ஸ்டார் ஃபிட்னெஸ்

`சிக்ஸ்பேக் வைத்தால் முகம் பொலிவு இழக்கும்’ என்பார்கள். ஆனால், ஷாரூக் மட்டும் இதில் விலக்கு. 50 வயதாகும் ஷாரூக் இன்றும் டீன்களின் டிரீம் பாய். ஷாரூக் எப்படி உடலை மெருகேற்றினார்?

p14a.jpg

dot3%2810%29.jpg`விருப்பத்தோடு உடற்பயிற்சி செய்யுங்கள்’ என்கிறார் ஷாரூக். எந்த வேலையைச் செய்தாலும், அதில் 100 சதவிகிதம் ஆர்வத்தோடு செய்வது ஷாரூக் ஸ்டைல். அப்படிச் செய்வதால், பலன்களும் 100 சதவிகிதம் முழுமையாகக் கிடைக்கும். `உடற்பயிற்சியும் அப்படித்தான். விருப்பத்தோடு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்’ என்பது ஷாரூக் தரும் சக்சஸ் டிப்ஸ்.

dot3%2810%29.jpg`15 நாட்களுக்கு ஒரு முறை வொர்க்அவுட் அட்டவணையை மாற்றுங்கள். ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் செய்வது மனதளவில் சோர்வு தரும். மேலும், உடல்தசைகளும் அதற்கேற்ப மாறி, பலன்கள் குறையத் தொடங்கிவிடும்’ என்கிறார்.

dot3%2810%29.jpg`ஆரோக்கியமும் ஃபிட்டான உடலும் உங்களுக்குத் தேவை என முடிவெடுத்தால், உடனே ஆல்கஹால் எடுப்பதை நிறுத்துங்கள். வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை என்பன எல்லாம் கண்கட்டு வித்தை. தேவை இல்லை என்றால், உடனே நிறுத்திவிட வேண்டும். அந்தக் கட்டுப்பாடுதான் ஆரோக்கியத்தின் திறவுகோல்’ என்கிறார்.

dot3%2810%29.jpg`வழிகாட்ட, முறையான ஆள் இருந்தால், அதன்படி நிறைய புரோட்டின் சாப்பிட்டு, அதை அன்றே உடற்பயிற்சிகள் மூலம் எரித்துவிடலாம். இதனால், சீக்கிரமே சிக்ஸ்பேக் உடற்கட்டு கிடைக்கக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யாமல்விட்டால், அதுவரை செய்துவந்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். எனவே, நல்ல பயிற்சியாளர் அமைவது அவசியம்’ என்கிறார் ஷாரூக்.

dot3%2810%29.jpg`ஜங்க் ஃபுட்களை தடுத்து நிறுத்த, நாம் ஒருவர் மட்டும் போராடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண்களிலேயே அவை படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரி, ஜங்க் ஃபுட். அதை நிறுத்தினாலே, பாதி ஆரோக்கியம் வந்துவிடும். மீதிப் பாதிக்கு உடற்பயிற்சி’ என ஃபிட்னெஸ் ரகசியம் பகிர்கிறார் இந்த பாலிவுட் கிங்.

ரண்டு குழந்தைகளின் அம்மா, 40 வயது என கஜோலைச் சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். இன்று மீண்டும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது?

p15a.jpg

dot3%2810%29.jpgமுதல் குழந்தை பிறந்தபோது இருந்த சற்று பருமனான உடலைக் கஷ்டப்பட்டுக் குறைத்தார் கஜோல். `எடை கூடுவது என்பது நம் திறமை குறைவதுபோல’ என்கிறார் கஜோல். மீண்டும் நடிக்க வேண்டும் என முடிவெடுக்காத காலத்திலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் கஜோல்.

dot3%2810%29.jpg`நமது இலக்கு, பெரிதாக,  அசாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் படிகள் பிராக்டிக்கலாக இருக்க வேண்டும். வாரம் ஐந்து நாட்கள் பயிற்சி  செய்யலாம். வாரம் ஏழு நாட்கள், தினமும் மூன்று மணி நேரம் எனத் திட்டமிட்டால், அது நடக்க வாய்ப்பே இல்லை. பின் அதுவே நமது அடுத்தக்கட்ட பயிற்சிகள் செய்யாமல் இருக்கக் காரணமாகிவிடும்’ என்கிறார் கஜோல்.

dot3%2810%29.jpg`இல்லத்தரசிகள்தான் கூடுதல் ஃபிட்னெஸோடு இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலைகள் அளவுக்கு வேறு யாரும் செய்யப்போவது இல்லை. எனவே, இல்லத்தரசிகள் கூடுதல் கவனத்தை ஃபிட்னெஸ் மீது செலுத்த வேண்டும்’ என்கிறார் இந்த ஃபிட்டான இல்லத்தரசி.

dot3%2810%29.jpg‘யோகாவைப்போல எளிதான வொர்க்அவுட் வேறு எதுவும் இல்லை’ என்பது கஜோலின் இன்னொரு சீக்ரெட். `ஆரோக்கியம் என்பது உடலும் உள்ளமும் இணையும் புள்ளியில் இருக்கிறது. யோகா உங்களை மனதளவிலும் ஃபிட்டாகவைத்திருக்கும்’ என்கிறார்.

dot3%2810%29.jpg `மனதுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். ஆனால், உங்கள் உடல், ஃபிட்னெஸ் இழக்காமல், எவ்வளவு தாங்குமோ அந்த அளவுக்குச் சாப்பிடுங்கள். இதுதான், டயட் என்பதற்கான எளிய சூத்திரம்’ என்கிறார் `தில்வாலே’ நாயகி.

  • தொடங்கியவர்

Untitled.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

யோகாசன பயிற்சி பெறும் புகைப்படம்

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, நவீனன் said:

Untitled.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

யோகாசன பயிற்சி பெறும் புகைப்படம்

 

Untitled%20f_zpssmbgzkhz.jpg

தலைகீழாய் பார்க்கேலாத ஆக்களுக்கு.....:cool:

  • தொடங்கியவர்

12362696_1144327348919693_65652922476229

மேற்கு இந்தியதீவுகள் கிரிக்கெட் வீரர் Darren Sammy இன் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

12391178_1040248589367264_25380639091495

அக்ரூட் நன்மைகள் !

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.

சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

 
  • தொடங்கியவர்

2015ம் ஆண்டுக்கான அஜால் குஜால் @ டெக்னாலஜி விருதுகள்....

சிறந்த டிரைவர்- சல்மான்கான்

சிறந்த நீதிபதி- குமாரசாமி

சிறந்த பேச்சாளர்- நாஞ்சில் சம்பத்

சிறந்த பாடகர்-சிம்பு

சிறந்த இசையமைப்பாளர்- அனிரூத்

சிறந்த நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே படத்தில் நடித்தற்காக)

சிறந்த வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)

சிறந்த துணை நடிகர்- ஒ.பன்னீர் செல்வம்

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ)

சிறந்த வசனகார்த்தா- இளையராஜா( உனக்கு அறிவு இருக்கா).............

சிறந்த படகோட்டி- கலைஞர் (கட்டுமரம்)

சிறந்த ஆடைவடிவமைப்பாளர்- மோடி ( 10லட்ச ரூபா கோட்)

சிறந்த மனித நேய பண்பாளர்- ரஜினி (10 லட்ச வெள்ள நிவாரணம்)...

சிறந்த டயலாக் - வை.கோ
.(ஒருத்தர் போனா நூறு பேரு வருவாங்க (கட்சியவிட்டு)

கஜினி முகம்மது விருது- டாக்டர் ராமதாஸ்( 2001, 2006, 2011,2016,2012 பாமக ஆட்சியை பிடிக்கும்)

சிறந்த துணை நடிகை- அமைச்ச்சர் வளர்மதி ( பெங்களூர் தீர்ப்பு வந்த நேரம் அழுத அழுகைக்காக)

சிறந்த கிரைம் ஸ்டோரி - யுவராஜ் ( நான் சரண்டர் ஆகுற நேரம் நாள் குறிச்சு வச்சு சரண்டர் ஆவேன்,முடிஞ்சா பிடிச்சுக்கோ)

சிறந்த அந்தர்பல்டி- கமலஹாசன் ( வரிப்பணம் எங்கே போச்சு- நான் சொன்னது பணத்துல நடுவுல ஒரு மெல்லிய சில்வர் வரி போட்டுருப்பாங்க அது எங்கே போச்சுனு கேட்டேன், ஏண்ட இருந்த ஒரு நோட்ல அந்த வரி இல்ல))

சிறந்த சொம்பு தூக்கி பத்திரிக்கை- தினமலர் ( அம்மா இராணுவ தளபதி போல் செயல்பட்டார் )

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று டிசம்பர் 21 

 

627varalaru.jpg1768 :  நேபாள ராஜ்­ஜியம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1913 : உலகின் முத­லா­வது குறுக்­கெ­ழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்­தி­ரி­கையில் வெளி­யா­னது.

 

1967 - உலகின் முத­லா­வது இத­ய­மாற்றுச் சிகிச்சை பெற்ற தென்­னா­பி­ரிக்­காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்­கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்­களின் பின்னர் இறந்தார்.

 

1968 : சந்­தி­ர­னுக்­கான மனி­தனை ஏற்றிச் சென்ற விண்­கலம் அப்­பலோ 8  அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் இருந்து ஏவப்­பட்­டது. புவி­யீர்ப்பை கடந்து சென்ற முத­லா­வது மனித விண்­கலம் இது­வாகும்.

 

1971 : ஐ.நா.வின்  பொதுச் செய­லராக கூர்ட் வால்ட்­ஹெயிம் தெரி­வானார்.

 

1973 : அரபு- – இஸ்ரேல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான ஜெனீவா மாநாடு ஆரம்­ப­மா­னது.

 

1979 : ரொடீ­சி­யாவின் (தற்­போ­தைய ஸிம்­பாப்வே) சுதந்­தி­ரத்துக்­கான உடன்­ப­டிக்கை லண்­டனில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

1988 : ஸ்கொட்­லாந்தில் லொக்­கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் பான் எம். 103 எனும்  விமா­னத்தில் குண்டு வெடித்­ததில் 270 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : கசகஸ்­தானின் அல்­மா-­ஆட்டா நகரில் கூடிய பதி­னொரு சோவியத் குடி­ய­ர­சு­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர ­நா­டு­களின் பொது­ந­ல­வாய அமைப்பு உரு­வா­கி­ய­வுடன் சோவியத் ஒன்­றியம் கலைக்­கப்­படும் என அறி­வித்­தனர். 

 

1992 : நெதர்­லாந்து விமா­ன­மொன்று போர்த்­துக்­கலில் வீழ்ந்­ததில் 56 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : இயேசு கிறிஸ்து பிறந்த பெத்­லஹேம் நகரம் இஸ்­ரே­லி­யர்­க­ளிடம் இருந்து பாலஸ்­தீ­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

 

1999: ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக வேன் ஒன்றில் ஏற்­றிச்­ செல்­லப்­பட்ட 950 கிலோ­கிராம் வெடி­பொ­ருட்­களை  அந்நாட்டுப் படையினர் கைப்பற்றினர்.

 

 2007 : பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=627#sthash.12KvzXO5.dpuf
  • தொடங்கியவர்

சீனர்களும் விரும்பும் இந்தியத் தலைவர்!

 

கூகுளில், சீனாவில்  அதிகம் பேரால்  தேடப்படும் இந்திய தலைவர்கள் வரிசையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் முதலிடத்தில் இருக்கிறார்.

CN%20.jpg

லட்சக்கணக்கான தெலுங்கு மக்கள் அமெரிக்காவில் வசிப்பதால், அங்கு அதிகம் பேர் தேடப்படும் இந்திய தலைவர்களில்  சந்திரபாபு நாயுடுவுக்குதான் முதலிடம். விர்ஜினியா, டெக்சாஸ், கலிபோர்னியா மாகாணங்களில் அதிக தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர். அது போல் நகரங்கள் வரிசையில் நியூ ஜெர்சி, நியூயார்க்கிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு மவுசு அதிகமாக இருக்கிறதாம்.

அமெரிக்கா மட்டுமல்ல சீனாவிலும் கூட  கூகுளில் சந்திரபாபு நாயுடுவை அதிகம் பேர் தேடுவதுதான்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் கூகுள் தடை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் கூட தனியார் தேடுபொறி மூலம் சீனர்கள் சந்திரபாபு நாயுடுவை தேடியுள்ளனர்.தற்போது சீனாவின் ஒரு அங்கமாக இருந்தாலும் தனி அந்தஸ்துடன் செயல்பட்டு வரும் ஹாங்காங் நகரத்தில்தான், கூகுளில் சந்திரபாபு நாயுடுதவை அதிகம் பேர் தேடியுள்ளனர். 

http://www.vikatan.com/news/india/56625-china-googles-chandrababu-naidu-the-most.art

  • தொடங்கியவர்

12369133_1182828085078427_14012841570553


Elephant Rock in New Zealand (Duntroon, Otago)

  • தொடங்கியவர்

12376403_10154160695149578_2323501950359

  • தொடங்கியவர்

நீருக்குள் நிற்கும் தேவாலயம்!

 

அதிசயம்

 

‘புனித ஜெபமாலை தேவாலயம், மழைக்காலங்களில் முழுமையாக ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிவிடும். கோடைகாலத்தில் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும். அப்போது இந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால், மீண்டும் நீரில் மூழ்கி அடுத்த முறை தேவாலயம் வெளியில் தெரிவதற்குள் பிரார்த்தனை நிறைவேறும்!’

p54a.jpg

- புனித ரோசரி சர்ச் பற்றிய சுருக்கமான, சுவாரஸ்யமான குறிப்பு இது!

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள செட்டிஹள்ளி என்ற இடத்தில் ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறது புனித ரோசரி சர்ச். இந்தியாவில் மூழ்கிய நிலையில் இருக்கும் தேவாலயங்களில் மிகவும் நேர்த்தியாகவும், எழிலுடனும் காட்சி அளிக்கக்கூடியது இத்தேவாலயம். குறிப்பாக, நீர் சற்றுக் குறைந்து ஆலயம் பாதியளவு வெளியில் தெரியும்போது, ஆற்றுக்குள் கம்பீரமான ஒரு கப்பல் மூழ்கி இருக்கும் தோரணையில் கண்களைக் கொள்ளைகொள்ளும்.

மைசூரில் இருந்து மூன்று மணி நேரத்தில், 135 கிலோ மீட்டரில் அமைந்துள்ள செட்டிஹள்ளிக்கு பேருந்தில் பயணிக்கலாம். சாலைகள் மிக நேர்த்தியாக இருப்பதுடன் 24 மணி நேர பேருந்து வசதியும் உண்டு. ஆனால், செட்டிஹள்ளியில் இருந்து புதர்கள் நிறைந்த ஒற்றைப் பாதையில் ஆற்றுக்குள் இறங்கிதான் தேவாலயத்துக்குள் செல்ல முடியும். அதுவும் கோடைகாலத்தில் குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஹேமாவதி அணையில் தண்ணீர் வற்றி இருந்தால் மட்டுமே தேவாலயத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

இந்த புனித ரோசரி சர்ச், ஃபிரான்ஸ் மிஷனரியைச் சேர்ந்த அப்பே ஜீன் அன்டுனே டுபாய்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. இவர் 1765-ல் பிறந்தவர்.  தெற்கு ஃபிரான்ஸில் உள்ள விவிர்ஸ் மாவட்டத்தில் 1792-ல் மதபோதகராக முடிசூட்டப்பட்டவர். அதே ஆண்டு ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு படுகொலைகள் நடைபெற்றதையடுத்து, டுபாய்ஸ் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் முதன்முதலில் ரோமன் கத்தோலிக்க மிஷனரியில் வெளிவிவகார வேலைகளை பாண்டிச்சேரி மிஷனரியில் இருந்து பணியாற்றினார்.

p54b.jpg

1799-ம் ஆண்டு மைசூர் அருகே உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குச் சென்ற டுபாய்ஸ் அந்த மக்களின் நடை, உடை, பாவனைகளை கூர்ந்து கவனித்து அவர்களைப் போலவே நடக்க ஆரம்பித்ததோடு, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் அவர்களின் மத, சமூக அமைப்புகளைப் பற்றி விளக்கமாக 1817-ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. டுபாய்ஸின் உட்சபட்ச சேவைதான், புனித ரோசரி சர்ச்!

செட்டிஹள்ளி தேவாலயம் மிகப் பெரிய கட்டடங்களால் கட்டப்பட்டு, அலங்காரப்படுத்தப்பட்டது. தேவாலயத்தை ஒட்டி மகளிர் பயிலும் கான்வென்ட், செட்டிஹள்ளியில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இருந்தது. இப்படி செட்டிஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்களுக்கு சேவை செய்து வந்தது இந்த தேவாலயம்.

செட்டிஹள்ளி வழியாக ஓடிய ஹேமாவதி ஆற்றிலிருந்து அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இந்திய அரசு 1979-ம் ஆண்டு இந்தப் பகுதியில் அணை கட்ட முடிவெடுத்தது. கோரூர் அணை கட்ட செட்டிஹள்ளி பகுதி தேர்வானது. இங்கு வசித்த மக்கள் அர்கல்குட்டு அருகே உள்ள மரியாநகர், சென்னராயப்பட்னா அருகே உள்ள அல்போன்ஷாநகர், ஹாசன் தாலுகாவில் உள்ள ஜோசப்நகர் போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அணையின் நீர்மட்டம் உயர உயர இந்த அழகிய செட்டிஹள்ளி கிராமம் வடிவிழந்து போனது. புனித ரோசரி தேவாலயமும் நீரில் மூழ்கியது.

தேவாலயத்தின் மேற்கூரை 1982-ல் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. ஆனால், அதன் நீண்ட கோபுரங்களும், கோயிலின் தோற்றமும் இன்னும் அப்படியே கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் முழுமையாக நீரில் மூழ்கி விடும். வறட்சி காலங்களில் ரெண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும்.

p54c.jpg

தேவாலயத்தின் நுழைவாயில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது; தேவாலயம் கிழக்குப் புறம் பார்த்திருக்கிறது; தேவாலயத்தின் உள்ளே மேற்குப் பார்த்த மாதிரி கட்டடங்கள் இருக்கின்றன. எல்லா சுவர்களும் தெற்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கட்டட அமைப்புகளைக் காண்பது அரிது என்கிறார்கள் தேவாலயத்தை பார்வையிடும் கட்டடக்கலை வல்லுநர்கள். இத்தேவாலயம் முட்டையும், வெல்லமும் கலந்து கட்டப்பட்டதாக அருகில் இருந்த கிராமத்து முதியவர்கள் சொல்கிறார்கள். அதை உதாசீனப்படுத்த முடியாது. ஏனென்றால், லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கட்டடமான படா இம்மாம்பரா கட்டடத்தில் அரேபிய கோந்தும், பருப்பும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்படக் குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வரும் இடமாகவும் இருக்கும் இந்த தேவாலயத்தின் உள்ளே செல்ல படகு வசதிகளும் உண்டு. மூன்று தலைமுறைகள் கடந்தும், நீரினுள்ளும் உறுதியாக நிற்கும் இந்த புனித ரோசரி தேவாலயத்துக்கு மதங்களைக் கடந்து வருகிறார்கள் மக்கள். திறந்தவெளி நீரோடைகள், மரங்கள், பறவைகள் சூழ்ந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது உணரப்படும் அதிர்வலைகள், ஆன்மாவை ஊடுருவுகின்றன. அடுத்த முறை இவ்வாலயம் வெளியில் தெரிவதற்குள் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் கருணையுடன் மிளிர்கிறது சிலுவை!

கோடைகாலத்தில் கர்நாடகம் சென்றால், அனுபவித்து வரலாம் அந்த அருளை

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=113504&sid=3461&mid=3&utm_source=facebook&utm_medium=timepassonline&utm_campaign=18

  • தொடங்கியவர்

12376012_10154168065134578_7170799487954

  • தொடங்கியவர்

** அகதி **
‪#‎சொல்வனம்‬ ‪#‎solvanam‬

வீட்டு மாடத்திலும்
மேற்கூரையிலும்
பறவைகள் வசிப்பதை
பெருமையாக நினைக்க ஒன்றுமில்லை
காடுகளை இழந்து
அகதியாய் வாழ்வதில்
என்ன பெருமை இருக்கிறது!

blauer Vogel, Nest

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

டிசம்பர் 22 

 

628varalaru-top-only.jpg1790 : துருக்­கியின் இஸ்­மாயில் நகரை ரஷ்­யாவின் சுவோரவ் என்­ப­வரின் படைகள் கைப்­பற்­றின.

 

1807 : வெளி­நா­டு­க­ளு­ட­னான வர்த்­தகத் தொடர்­பு­களை நிறுத்தும் சட்­ட­மூலம் ஐக்­கிய அமெ­ரிக்­காவில் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

1845 : பஞ்­சாபில் ஃபெரோ­சிஷா என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் பிரித்­தா­னியப் படைகள் சீக்­கி­யர்­களைத் தோற்­க­டித்­தனர்.

 

1849 : ரஷ்ய எழுத்­தாளர் பியோதர் தஸ்­த­யெவ்ஸ்­கியின் மர­ண­தண்­டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்­யப்­பட்­டது.

 

1851 : இந்­தி­யாவின் முத­லா­வது சரக்கு ரயில் உத்­த­ராஞ்சல் மாநி­லத்தில் ரூர்க்கீ நக­ரத்தில் ஓட­வி­டப்­பட்­டது.

 

1915 : மலே­ஷி­யாவின் இலங்கைத் தமி­ழர்­களின் நிதி உத­வியால் வாங்­கப்­பட்ட  விமானம் பிரித்­தா­னிய வான்­ப­டைக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டது. இவ்­வி­மா­னத்­துக்கு "யாழ்ப்­பாணம்" என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.

 

1937 : லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொது­மக்­க­ளுக்­காகத் திறந்­து­வி­டப்­பட்­டது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்­ப­தற்­கென வீ-–2 ஏவு­க­ணை­களை உற்­பத்தி செய்ய ஹிட்லர் உத்­த­ர­விட்டார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: வியட்­நாமில் ஜப்­பா­னிய ஆக்­கி­ர­மிப்­புக்­கெ­தி­ராக வியட்நாம் மக்கள் இரா­ணுவம் அமைக்­கப்­பட்­டது.

 

1963 : லக்­கோ­னியா என்ற டச்சுக் கப்பல் போர்த்­துக்­கலில் மூழ்­கி­யதில் 128 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : ஒரு வார சண்­டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்­யூ­னிச ஆட்­சி­யா­ள­ரான நிக்­கலாய் செய்­செஸ்­குவை வீழ்த்தி ருமே­னி­யாவின் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

 

1989 : கிழக்கு ஜேர்­ம­னி­யையும் மேற்கு ஜேர்­ம­னி­யையும் பேர்­லினில் பிரித்த "பிராண்­டன்பேர்க் கதவு" 30 ஆண்­டு­களின் பின்னர் திறந்து விடப்­பட்­டது.

 

1990 : மார்ஷல் தீவுகள், மைக்­கு­ரோ­னீ­சியா கூட்டு நாடுகள் ஆகி­யன சுதந்­திரம் அடைந்­தன.

 

2001: ஜனா­தி­பதி ஹமீட் கர்ஸாய் தலை­மை­யி­லான இடைக்­கால அர­சாங்­கத்­திடம் ஆப்கா­னிஸ்­தானின் ஆட்­சி­ய­தி­காரம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

 

2001: பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் மியாமி நகரை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணம் செய்த பிரித்­தா­னி­ய­ரான ரிச்சர்ட் றீட், தனது பாத­ணிக்குள் மறைத்­து­வைத்­தி­ருந்த வெடி­குண்டின் மூலம் விமா­னத்தை தகர்ப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது.

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=628#sthash.NHVDgJr5.dpuf
  • தொடங்கியவர்

10659301_958835270831834_103306819929579

ஓய்வை அறிவித்தார் நியூ சீலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் பிரெண்டன் மக்கலம்.
உலக T20 போட்டித் தொடரில் விளையாட மாட்டார்.

  • தொடங்கியவர்

1937046_1041123455946444_838494275427988

கணிதத்தின் துருவ நட்சத்திரம் ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

ணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர்; மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர். பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன ramanujam5.jpgபொழுது ; பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்.

அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணமாக அமைந்தது. அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது .

அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல், பச்சையப்பா கல்லூரி போனார் .

அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள்
இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .

எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட் ஹார்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”

ramanujam3%281%29.jpgஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.. எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை ஜார்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார். ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் பிறந்தநாள் இன்று.. (டிசம்பர் 22).

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=36462&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.