Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சீன கிராமம் ஒன்றில் பெர்சிமென் பழங்களை உலர வைக்கும் பருவகாலம்

விவசாயிகள் பெர்சிமென் பழங்களை உலர வைக்கும்போது, தென் கிழக்கிலுள்ள சீன கிராமத்தின் வீடுகள் ஆரஞ்சு வண்ணம் அடித்ததுபோல் மாறிப்போகின்றன.

சீனாவின் தென் கிழக்கிலுள்ள குவான்சோவ் நகரிலுள்ள வீடுகளின் கூரைகளில், உலர வைக்கப்பட்டுள்ள கண்கவரும் பெர்சிமென் பழக் கடலை வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

 

சீனாவின் தென் கிழக்கிலுள்ள குவான்சோவ் நகரிலுள்ள வீடுகளின் கூரைகளில், உலர வைக்கப்பட்டுள்ள கண்கவரும் பெர்சிமென் பழக் கடலை வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

பெர்சிமென் பழ உற்பத்திதான் ஃபுஜியன் மாகாணத்திலுள்ள கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரம்

பெர்சிமென் பழ உற்பத்திதான் ஃபுஜியன் மாகாணத்திலுள்ள கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரம்

ஒவ்வோர் ஆண்டும், சந்தையில் பழங்களை விற்பதற்கு முன்னால் உலர் பழங்களாக்க, வலுவான சூரிய ஒளியை உள்ளூர் மக்கள் பயன்படுத்திர் கொள்கின்றனர்.

 

ஒவ்வோர் ஆண்டும், சந்தையில் பழங்களை விற்பதற்கு முன்னால் உலர் பழங்களாக்க, வலுவான சூரிய ஒளியை உள்ளூர் மக்கள் பயன்படுத்திர் கொள்கின்றனர்.

இந்த பழங்களை உலர வைக்கின்ற பாரம்பரிய முறைகள் நீண்டகாலம், 50 நாள்கள் வரை எடுக்கலாம்.

 

இந்த பழங்களை உலர வைக்கின்ற பாரம்பரிய முறைகள் நீண்டகாலம், 50 நாள்கள் வரை எடுக்கலாம்.

“ஷிப்ளிங்” என்று சீன மொழியில் அழைக்கப்படும் உலர் பெர்சிமென் பழம் பிரபலமான உபசரிப்புக்கு வழங்கப்படும் ஒன்றாக உள்ளது.

“ஷிப்ளிங்” என்று சீன மொழியில் அழைக்கப்படும் உலர் பெர்சிமென் பழம் பிரபலமான உபசரிப்புக்கு வழங்கப்படும் ஒன்றாக உள்ளது.

இந்த பழத்தில் எதுவுமே வீணாக்கப்படுவதில்லை. அகற்றப்படுகின்ற பெர்சிமென் பழங்களின் தோல், கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த பழத்தில் எதுவுமே வீணாக்கப்படுவதில்லை. அகற்றப்படுகின்ற பெர்சிமென் பழங்களின் தோல், கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன.

சீனாவிலும், கிழக்கு ஆசியா முழுவதும் பல நாடுகளிலும் காணப்படும் பெர்சிமென் பழம், ஐக்கிய ராஜ்ஜியத்திலும் பிரபலமடைந்து வருகிறது.

 

சீனாவிலும், கிழக்கு ஆசியா முழுவதும் பல நாடுகளிலும் காணப்படும் பெர்சிமென் பழம், ஐக்கிய ராஜ்ஜியத்திலும் பிரபலமடைந்து வருகிறது.

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘வர்தா’வில் சிக்கிய 5,000 பறவைகளுக்கு உணவு தந்த அன்பர்..!

 

 

bird16161611_15055.jpg

டந்த வருட சென்னை மழை வெள்ளத்தைப் போலவே இந்த வருடமும் பாரபட்சம் பார்க்காமல் சென்னையை புரட்டிப் போட்டு போய் இருக்கிறது 'வர்தா' புயல். புயல் கரையை கடந்த அன்று வீசிய பலத்த காற்றில் பல இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதோடு பல பெரிய மரங்கள் புயல் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு வீழ்ந்தது தான் பெரும் சோகம். பெருகி வரும் வாகனங்களால் சீர்கெட்டு வரும் சென்னையின் சூழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வந்த இந்த மரங்கள் தான் பல ஆயிரம் பறவைகளுக்கும்  இருப்பிடம். 

'வர்தா' புயல் பதற்றத்தில் மனிதர்களே தங்கள் இருப்பிடங்களில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில், மரங்களையே தங்களது இருப்பிடமாக நம்பியிருந்த பறவைகள் நிலை எப்படி இருந்திருக்கும்? பலமாக வீசிய காற்றால் உணவைத் தேடியும் செல்ல முடியாத நிலையில் தவித்த பறவைகளுக்கு உணவளித்திருக்கிறார் சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 'பேர்ட் மேன்' சேகர்.

ராயப்பேட்டை பாரதி சாலையில் அமைந்திருக்கிறது 'பேர்ட் மேன்' சேகர் வீடு. அவரை சந்தித்து பேசினோம்..,

"கிட்டத்தட்ட 25 வருஷங்களா பறவைகளுக்கு உணவு கொடுத்துட்டு வரேன். ஆரம்பத்துல கொஞ்ச பறவைகள் தான் வந்துட்டு இருந்தது. 2004 சுனாமி சமயத்துல இரண்டு கிளிகள் இங்கே உணவு தேடி வந்தாங்க. (அப்படி மரியாதையாகத்தான் பறவைகளை குறிப்பிடுகிறார் சேகர்). அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா நிறைய கிளிகள் வந்தாங்க. கேமரா சரி பார்க்குறதுதான் என்னோட வேலை. இவங்களுக்காக  தினமும் 3 மணிக்கெல்லாம் கடையை மூடிட்டு வீட்டுக்கு வந்துடுவேன். தினமும் காலையில 6 மணியிலருந்து 7 மணிக்குள்ள வர ஆரம்பிச்சுடுவாங்க. மாடியில இருக்க இடத்துல பலகைகள் வைச்சு அரிசியை ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமா வைப்பேன். சாப்பிட்டு கிளம்பிடுவாங்க. அதே போல சாயங்காலம் 3 மணியிலருந்து வர ஆரம்பிச்சுடுவாங்க.

பறவைகள்

ற்ற பறவைகளை விட கிளிகள் தான் அதிகம். ஏறத்தாழ 2000 கிளிகள் தினமும் இங்கே வந்துட்டு இருக்காங்க. மழை காலங்கள்ல எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அவங்களுக்கு சரியான உணவு இருக்காது. இந்தப் புயல் வந்து சென்னையில இருக்க ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்ச்சுட்டு போயிருக்கு. கடந்த வருஷம் மழை வெள்ளத்தால சுமார் 8000 பறவைகள் வந்தாங்க. புயல் கரையை கடக்குற அன்னைக்கு எப்படியும் நிறைய பேர் வருவாங்கன்னு நினைச்சேன். அதே போலவே நிறைய பறவைகள். காத்துல அரிசி வைக்க வைத்திருந்த மரப்பலகைகள் எல்லாம் பறக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பவும் சிரமம் பார்க்காம வைச்சுகிட்டே இருந்தேன். 

228_14147.jpg

ந்த ரெண்டு நாளும் மழைல நனைஞ்சுக்கிட்டே உணவு வைச்சதால உடம்புக்கும் முடியாம போய்டுச்சு. வழக்கமான நாட்கள்ல ஒரு நாளைக்கு 50 கிலோ அரிசி தேவைப்படும். கோடைகாலங்கள்ல அது 25 கிலோவாகிடும். ஆனா இந்த மழை நேரத்துல 60 கிலோ உணவு தேவைப்பட்டது. அந்த காத்துல நமக்கே அவ்வளவு சிரமமா இருந்தது. பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுக்கிட்டே இருந்ததை மறக்கவே முடியாது. யாருகிட்டயும் உதவி கேட்குறது இல்லை. என்னால எவ்வளவு முடியுமோ அதை செஞ்சுட்டு இருக்கேன். இவ்வளவு நெருக்கடியான ஒரு பகுதியில இவ்வளவு பறவைகள் நம்மளை நம்பி வருதுங்கிற சந்தோஷம்தான் மேலும் என்னை இயங்க வைச்சுக்கிட்டு இருக்கு. அது போதும் தம்பி..!!" என்கிறார் நெகிழ்ச்சியுடன். 

vikatan

  • தொடங்கியவர்

ரஷ்ய அதிபர் பூட்டினின் நாய் : காணொளி

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die sitzen, Brille und Nahaufnahme

விஞ்ஞான ஆய்வாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், விண்வெளி + ஆழ்கடல் + புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆர்தர் சி. கிளார்க்கின் பிறந்த தினம் இன்று.

இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கையிலேயே பல ஆராய்ச்சிகள் செய்து எங்களுக்கும் பெருமை சேர்த்த அமரர் கிளார்க்கை நினைவுகூருகிறோம்.

  • தொடங்கியவர்

 

 

 

20p1.jpg

பியான்ஸும் ரிஹானாவும்தான் இன்றைய தேதியில் பாப் உலகின் லேடி சூப்பர்ஸ்டார்கள். இருவரும் சகட்டுமேனிக்கு விருதுகளை வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் இவர்களுக்கிடையே சண்டை என யாரோ ஒரு புண்ணியவான் கிளப்பிவிட, சோஷியல் மீடியாக்களில் இதுவே பேச்சானது. முதலில் அமைதியாக இருந்த ரிஹானா இப்போது மெளன விரதத்தைக் கலைத்துள்ளார். ``கறுப்பினப் பெண்கள் இருவருக்குள் சண்டை மூட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். அது நடக்காது'' என சூடாக அவர் சொல்ல, விவாதத்திற்கு ஃபுல் ஸ்டாப். பேச்சு பேச்சா இருக்கணும்!

20p2.jpg

டந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் மூன்று ஏக்கர் பரப்பளவிலுள்ள ஒரு பிரமாண்ட பங்களாவை வாங்கினார் அமெரிக்க மாடலான கைல் ஜென்னர். அப்போது அதன் மதிப்பு 4.5 மில்லியன் டாலர்கள். இவ்ளோ பெரிய பங்களா வாங்கி என்ன பண்ண? எனக் கேள்வி கேட்டவர்களை வாயடைக்க வைத்திருக்கிறார் கைல். இந்த வாரம் அந்த பங்களாவை 5.4 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். மூன்றே மாதங்களில் ஒரு மில்லியன் டாலர் லாபம். `செம மூளைக்கார புள்ளப்பா!' என சிலிர்க்கிறார்கள் ரசிகர்கள். காசு... பணம்... துட்டு... மணி!

20p3.jpg

செம குஷியில் இருக்கிறார் வளர்ந்துவரும் நடிகையான ரூத் நேகா. பிரபல இதழான வோக்கின் அட்டைப்படத்தில் இடம் பெற வேண்டும் என்பது முக்கால்வாசி ஹீரோயின்களின் கனவு. அதுவும் அமெரிக்கர் அல்லாத நடிகைகளுக்கு அது மிகப்பெரிய சாதனை. இந்நிலையில் எத்தியோப்பிய நடிகையான ரூத்தின் போட்டோவை அட்டைப்படத்தில் தாங்கி வெளியாக இருக்கிறது ஜனவரி மாத வோக் இதழ். இதனால் க்ளவுட் நைனில் பறக்கிறார் ரூத். எனக்கொரு கனவு உண்டு!

20p4.jpg

பிரபலங்களும் நோய்களில் இருந்து தப்புவதில்லை. லேட்டஸ்ட் உதாரணம் லேடி காகா. கடந்த சில ஆண்டுகளாகவே பி.டி.எஸ்.டி எனப்படும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் லேடி காகா. இது அவரைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்த நிலையில், `என் வாழ்க்கை அவ்வளவு சுலபமானதல்ல. என் உடல் ஒரு பக்கமும், மனம் ஒரு பக்கமும் அலைபாய்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் நான் தளரப் போவதில்லை. தோற்கப் போவதில்லை' என ஆயிரம் ஹார்லிக்ஸ் குடித்த புத்துணர்ச்சியோடு பேசுகிறார் காகா. நெஞ்சே எழு!

vikatan

  • தொடங்கியவர்
இது விதியா? காலத்தின் சதியா?
 
 

article_1481784735-Stylish-new.jpgஅவனது தாயார் இறந்துபோக, தந்தை வேறோரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இதனால் இவனது பாடுதான் பெரும் பரிதாபமாகி விட்டது. சிற்றன்னையின் கொடுமையால் இவன் படிப்பும் கெட்டு, அடி உதைதான் மிஞ்சியது. தந்தையும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.  

இந்நிலையில் ஒருநாள், அவளின் கொடுமை அதிகரிக்க, ஒரு தடியால் ஓங்கி அவளைத் தாக்கி விட்டான். விடயம் பெரிதாகிவிட, அவன் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தலையில் பலத்த அடி காரணமாகச் சிற்றன்னையும் சித்த சுவாதீனமற்றுப் போய்விட்டாள்.  

அவன் பலவருடங்களின் பின்னர் வீட்டுக்கு வந்தபோது, அவனது தந்தையே சிற்றன்னையை இதுவரைகாலமும் கவனமாகப் பராமரித்து வந்திருந்தார். இவனும் கடும்முயற்சியுடன் உழைத்து, நல்லநிலைக்கு வந்தபோது, தந்தையார் நோய் காரணமாகக் காலமாகி விட்டார். 

இப்போது சிற்றன்னையைப் பராமரிக்கும் பொறுப்பு இவனிடம் வந்தது. மனம் கோணாமல் அந்தப் பொறுப்பைச் சீராகச் செய்து வருகின்றான். இந்த நிலையில் இவனுக்குப் பெண் கொடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை. இன்றுவரை திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இது விதியா? காலத்தின் சதியா?   

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விமானத்தின் பிறந்தநாள் இன்று!

400_09160.jpg

ரைட் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வடிவமைத்த ரைட் பிளையர் விமானம் முதன்முதலில் வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் என்னும் பகுதியில் டிசம்பர் 17, 1903-ம் ஆண்டில் பறந்தது. மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்த அந்த விமானம்தான் வெற்றிகரமாக இயக்கப்பட்ட முதல் விமானம். இன்று அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நேஷனல் ஏர் & ஸ்பேஸ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ரைட் பிளையர்!

vikatan

  • தொடங்கியவர்

உலகின் சிறந்த கோயில்கள்

தமிழகத்தின் சிறப்பு கோயில்கள். கோயில்களுக்கு பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. கோயில்கள், கட்டிடக் கலைக்கான ஒரு வெளியாக இருந்துள்ளன. கோயில்கள் சார்ந்து நடனம், இசை, ஓவியம் எனப் பல கலைகளும் வளர்ந்துள்ளன. கலைகள் மட்டுமல்லாது ஆட்சி முறையில் கோயில்கள் முக்கிய இடம் வகித்துள்ளன. நிலங்கள், வரிகள் எல்லாம் கோயிலை மையப்படுத்திய வரலாறு உண்டு. திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா ஆட்சிப் பொறுப்பையே கோயில் வசம் ஒப்படைத்தார்.

இந்தியா முழுவதும் பல தரப்பட்ட கோயில்களைப் பார்க்க முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புடையது. தமிழகத்திலோ கோயில்களுக்குப் பஞ்சமே இல்லை. கோயில் இல்லாத ஊரே இல்லை எனலாம். இதில் பழமை வாய்ந்த கோயில்கள் ஏராளம். தாய்லாந்திலும், கம்போடியாவிலும், வியட்நாமிலும் உள்ள கோயில்கள் திராவிடக் கோயில் கட்டிடக் கலையால் உத்வேகம் பெற்றவை என்று சொல்லப்படுவதுண்டு. உலகம் முழுவதிலும் உள்ள கோயில்களுக்கும் இது பொருந்தும். அம்மாதிரியான கோயில்களின் ஒளிப்படத் தொகுப்பு இது

temples_3105056f.jpg

cambodia_3105055f.jpg
அங்கோர்வாட் கோயில், கம்போடியா
 
thailand_3105054f.jpg
வாட் அருண் புத்த கோயில், தாய்லாந்து
veitnam_temple_3105053f.jpg
பா தட் லூங் கோயில், வியட்நாம்
 
1_3105048f.jpg
புத்த கயா, இந்தியா
 
thanjai_3105049f.jpg
தஞ்சை பெரிய கோயில், இந்தியா
madurai_3105050f.jpg
மதுரை மீனாட்சியம்மன் கோயில், இந்தியா
 
konark_3105051f.jpg
கோனார்க் சூரியக் கோயில், இந்தியா
 

 

 

indonesia_3105052f.jpg
போரபுதூர் புத்த கோயில், இந்தோனேசியா
 

tamil.thehindu.

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம்

 
ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967
 
ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார்.

இவருடைய மரணம் இதுவரையில் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2005-ம் ஆண்டு மரண விசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.

 

 

 

முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர்.

முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903
 
ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர். விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை. வில்பர் ரைட் 1912-ம் ஆண்டிலும், ஆர்வில் ரைட் 1948-ம் ஆண்டும் மரணமடைந்தனர். இவர்களே விமானத்தை கண்டறிய முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள். இவர்கள் பறந்த அந்த தினத்தை ரைட் சகோதரர்கள் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.

* 1834 - அயர்லாந்தில் முதலாவது ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.

* 1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.

* 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

* 1970 - போலந்தில் கிதீனியா நகரில் ரெயிலில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கி சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

* 1973 - ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.

* 1983 - லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

* 1986 - போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

130 வருடங்களுக்கு பிறகு திருப்பி கொடுக்கப்பட்ட புத்தகம் ; ஆச்சரிய சம்பவம்

(லோகேஸ்)

தனது தாத்தா எடுத்து சென்ற புத்தகத்தை ஸ்டிபன் வூட்என்ற 72 வயது பேரன் திருப்பி கொடுத்த சம்பவம் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரிலுள்ள ஆர்மலி நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு புத்தகத்திற்காக விதிக்கப்பட்ட தண்டபண தொகையான சுமார் 20 இலட்சத்தையும்(10,679) பவுன்கள்) கட்டாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

unnamed.jpg

ஆர்மலி நூலுகம் மிகவும் பழமையான ஒரு நுலகமாகும். அங்கு ரஸ்மல் ஊட்டன் என்பவர் 1833 ஆம் ஆண்டு கிரேக்க வரலாற்றை கூறும் புத்தகம் ஒன்றை எடுத்து சென்றுள்ளார். நூலக விதிபடி புத்தகத்தை 14 நாட்களுக்குள் திருப்பி கொடுத்தல் வேண்டும் ஆனால் 14 நாட்கள் முடிவதற்குள் வூட்டன் இறந்துவிட்டாராம்.

unnamed__1_.jpg

இந்நிலையில் ஊட்டனின் மகள் மூலம் அவரது பேரனுக்கு அப்புத்தகம் கிடைக்கப்பெற்றுள்ளது. நீதிமன்ற உதவியாளராக இருந்த வூட் தற்போது ஓய்வு நிலை கொடுப்பனவுகளை பெற்றுவருபவர் என்பதால் அவரிடம் தண்டப்பணத்தை அறவிட முடியாது என்பதற்காகவும், புத்தகம் உரித்தான இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலுமேதான் அப் புத்தகத்தை திருப்பிக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

unnamed__2_.jpg

வூட்டின் இச்செயலை பாராட்டிய ஆர்மலி நூலகத்தின் பொறுப்பாளர். தமது நூலகத்திற்கு சேரவேண்டிய புத்தகங்களைஏனையோரும் திருப்பி கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மணி மணியான கடிகாரங்கள்

 

 
 
CLOCK_3105070f.jpg
 
 
 

கடிகாரங்கள் ஆரம்ப காலகட்டத்தில் நேரம் பார்ப்பதற்காகப் பயன்பட்டன. இந்தக் காலத்தில் செல்பேசியில், தொலைக்காட்சியில் எனப் பல சாதனங்கள் மூலம் மணி பார்த்துக்கொள்ள முடியும். கைக்கடிகாரம் அணிவதுகூட இப்போது குறைந்துள்ளது. அந்த வகையில் வீட்டுக்குக் கடிகாரம் என்பது மணி பார்ப்பதற்கு என்பதைவிட, அழகுக்குதான் முக்கியமானதாக இருக்கிறது. வீட்டை அழகுபடுத்தும் கடிகாரங்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில:

சங்கிலிக் கடிகாரம்

chain_3105072a.jpg

இந்த வகைக் கடிகாரம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது முற்களுக்குப் பதிலாக ஒரு சங்கிலி இருக்கும் சங்கியில் 1,2,3 என இலக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மையத்துக்கு வருவதை வைத்து கடிகாரம் மணி காட்டும்.

லாங்கேஸ் கடிகாரம்

long_3105071a.jpg

பழமையான சுவர்க் கடிகார வகை இது. ஒரு டயலுடன் இணைந்த இந்தக் கடிகாரம் பல அளவுகளில் கிடைக்கிறது. பெண்டுலத்துடனும் இருக்கும். இந்த வகைக் கடிகாரம் வீட்டின் மையத்தில் பொருத்துவதற்கு ஏற்றது.

அலமாரிக் கடிகாரம்

alamary_3105075a.jpg

இந்த வகைக் கடிகாரம் 1750-ம் ஆண்டு பிரான்சில் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்த வகை மிகப் பிரபலமானதாக இருந்தது. அலமாரிகள், படுக்கையறை களுக்கு இந்த வகைக் கடிகாரங்கள் ஏற்றவை.

குயில் கடிகாரம்

kuyil_3105073a.jpg

இந்த வகைக் கடிகாரம் பெண்டுலத்துக்குப் பதிலகாக குயில் திறந்து கூவுவது போன்ற வடிவ அமைப்பைக் கொண்டது. இது கடிகாரம் வரவேற்பறையில் மாட்டுவதற்கு உகந்தது.

விளக்குக் கடிகாரம்

vilakkku_3105074a.jpg

சுவர்களில் விளக்குப் பொருத்துவது போன்ற அமைப்பில் உள்ளதால் இந்தக் கடிகாரம் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வகைக் கடிகாரத்தைச் சுவர் விளிம்புகளில், இரு அறைகள் சந்தித்துக்கொள்ளும் இடங்களில் மாட்டலாம்.

இருமுக கடிகாரம்

central_3105076a.jpg

பெயர்ப் பலகை போன்ற அமைப்புடைய இந்தக் கடிகாரம் இரு பக்கமும் கடிகாரங்களை உடையது. இந்த வகைக் கடிகாரம் உணவகங்கள் போன்ற இடங்களில் மாட்டி வைக்கலாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இரவில் இளையராஜாவின் இந்த பத்து பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? 

இளையராஜா

சாப்பிடாமல் கூட உறங்கிவிடுவேன், ஆனால் பாடல்களை கேட்காமல் எனக்கு தூக்கம் வராது எனச் சொல்பவர்கள் தான் இங்கே அதிகம். இந்த இன்டர்நெட் யுகத்திலும் இரவு நேரங்களில் எப்.எம். களில் நேரம் செலவிடுவார்கள் எக்கச்சக்கம். இரவு நேர பாடல்கள் என்றால் இளையராஜா எப்போதும் டாப். தமிழகமெங்கும் இருக்கும் அத்தனை  ரேடியோக்களிலும் இரவு நேரங்களில் அதிகம் ஒலிபரப்பப்படுவது இளையராஜா பாடல்கள் தான்.  இரவை இனிமையாக்கும் இளையராஜாவின் பத்து முக்கியமான பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது. 

 

1. இளையநிலா பொழிகிறதே - (பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இருந்து)

 

 

2.  பிள்ளை நிலா  இரண்டும் வெள்ளை நிலா (நீங்கள் கேட்டவை) 

 

 

3.  ஈரமான ரோஜாவே... என்னை பார்த்து மூடாதே (இளமை காலங்கள்) 

 

 

4.  நலம் வாழ எந்நாளும் என்  வாழ்த்துகள்  (மறுபடியும்) 

 

 

5. ஓ வசந்த ராஜா... தேன் சுமந்த ரோஜா (நீங்கள் கேட்டவை)

 

 

6.  வா வெண்ணிலா உன்னைத்தானே (மெல்லத் திறந்தது கதவு)

 

 

7. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும்) 

 

 

8. பூவே செம்பூவே  உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு) 

 

 

9. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு (தர்ம யுத்தம்)

 

 

10. நிலா காயும் நேரம் சரணம்.. உலா போக நீயும் வரணும் (செம்பருத்தி)

 

 

இந்த நேரத்தில் நீங்கள் கேட்கும் டாப் 10 இளையராஜா பாடல்களை பட்டியலிடலாமே!

vikatan

  • தொடங்கியவர்

செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?

 

சிரியா நாட்டில் நடந்த போர்விமான தாக்குதலின்போது பெரிய அளவில் அடிபட்டு ஆம்புலன்சில் உட்கார வைக்கப்பிடிருந்தான் சிறுவன் ஒருவன். அச்சிறுவனைப் பற்றி சி.என்.என் செய்தி வாசிப்பாளர் Kate Bolduan விவரித்து சொல்லும்போதே கண் கலங்கிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்படியான பல தருணங்கள் தமிழகத்தைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்களுக்கும் நிகழ்ந்ததுண்டு. அந்த இக்கட்டான தருணங்களை அவர்களே நினைவு கூர்ந்துப் பேசுகிறார்கள்.

hema_rakesh_12267.jpg

ஹேமா ராக்கேஷ், தந்தி டி.வி:

2004-ம் ஆண்டில் 8- ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே டி.வி மீடியாவில் இருக்கிறேன்.  சேட்டிலைட் சேனலான தந்தி டி.வி க்கு வந்து  ஐந்து வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களில் செய்தி வாசிக்கும் போது நான்  கலங்கினேன் என்றால், அது கடந்த வருடம் டிசம்பர் மாத மழையின் போது தான். மழை வெள்ள பாதிப்பு குறித்து லைவ் செய்தி வாசிக்கும் போது கலக்கத்தை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு, அவரது உடல் போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லும் போது என்னால் சரியாக விவரிக்கவே முடியவில்லை. கண்களில் நீரோடுதான் செய்தி வாசித்தேன். என்னால் இந்த இரண்டு தினங்களையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
 

priya_12025.jpg

பிரியா, புதிய தலைமுறை:

குழந்தைகளின் பாலியல் பலாத்காரம் பற்றிய செய்தியை வாசிக்கும்போது கலக்கமாகவும், அதே நேரத்தில் கோபமாகவும் இருக்கும். இந்த நேரங்களில்  என்னை நான் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட சோகமான மனநிலைக்குப் போய்விடுவேன். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு தாய்மை குணம் இருக்கும் அல்லவா?  யாருடைய குழந்தையாக இருந்தாலும், ஒரு அவலம் ஏற்படும் பொழுது நாமும் கஷ்டப்படுவோம் இல்லையா? அந்த கஷ்டம் எனக்கு எப்போதும் உண்டு. இந்த ஃபீல்டுக்கு வந்தப் பிறகு பொறுமையை அதிகமா கத்துக்கிட்டேன்.

fathima_babu_12187.jpg

ஃபாத்திமா பாபு, ஜெயா டி.வி: 

30 வருடங்களாக செய்தி வாசிப்பில் இருக்கேன். மிகுந்த கனத்த மனதோடு, கண்ணீரோடு  வாசித்த செய்தி என்றால் அது முதல்வராக இருந்து மறைந்த அம்மா அவர்களுடைய மரண செய்திதான். அதற்கு முன்பு  2001,  செப்டம்பர் 11 ம் தேதி world trade center கட்டடம் தகர்க்கப்பட்ட செய்தியை வாசிச்சப்போ மனசுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. மற்றொரு செய்தி ஒரிசாவில் ஒருவர் இறந்த தன்னுடைய மனைவியை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த செய்தி இந்த மூன்று செய்தியையும் கனத்த மனதோடுதான் வாசித்தேன்.  
 

suresh_12400.jpg

சன் டிவி. சுரேஷ் குமார்:

20 வருஷமா மீடியாவில் இருக்கேன். செய்தி வாசிப்பு, திரை விமர்சனம் என தொடர்ந்து தொய்வில்லாமல் இப்போது வரைக்கும் என்னோட வேலை நகர்கிறது. 2004-ம் ஆண்டு சென்னையை தாக்கிய சுனாமி பற்றிய செய்தியை பயத்துடன் வாசித்தேன். சுனாமி வந்த போது நான் வீட்டிலிருந்தேன். என் வீட்டருகே இருந்தவர் ‘தண்ணீர் வந்திடுச்சு சார்'னு சொன்னார். அந்த வருடங்களில் தண்ணீர் பஞ்சம் என்பதால தண்ணீர் லாரிதான் வந்திருக்கும் என நினைத்தேன். அதற்கு பிறகுதான் சுனாமி வந்ததாகச் சொன்னார். உடனே நியூஸ் டெஸ்குக்கு போன் செய்து விசாரித்ததும் உடனே கிளம்பி வாங்கணு உத்தரவு. அவரசர அவசரமாக கிளம்பிப் போனேன்.  இன்னும் கூட நினைவில் பத்திரமாய் இருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

குளிரில் உறையும் காஷ்மீர்

 

kashmir_14057.png

ஜம்மு- காஷ்மீர் முழுவதும் நேற்று இரவு வரலாறு காணாத கடும் குளிர் நிலவியுள்ளது. ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில், மைனஸ் -4.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. சாலை, வாகனம், மரங்கள் என பனிக் கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஜம்மு மட்டுமின்றி டெல்லி, லக்னோ, அலகாபாத் போன்ற வட மாநில பகுதிகளிலும் கடும் பனி நிலவி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

vikatan

  • தொடங்கியவர்

2016-ம் ஆண்டு எப்படி? மீம்ஸ் வழி ஒரு ரீகேப்! #2016Rewind

 

மீம்ஸ்

2016ன் டாப் மீம்ஸ் சிலவற்றின் தொகுப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்

இது நெட்டிசன்களின் காலம். அந்த அளவுக்கு நம்ம பசங்க அப்டேட்டாக இருக்கின்றனர்! செய்திகளை முந்தித் தருவதில் ஊடகங்களை விடவும் மேலோங்கு மாதிரி சோஷியல் நெட்வொர்க்ஸ் வளர ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இதில் முதல் இடத்தில் உள்ளது. 

இதுபோன்ற நெட் வழியாக வரும் செய்திகளுக்கு உடனே ரிப்ளை செய்துவிடும் வசதி உள்ளதால் மக்கள் பெரிதும் விரும்பி படிக்கக்கூடிய, அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு ஊடகமாக இது மாறிவருகிறது. இந்த ரிப்ளை என்றொரு வார்த்தை சொன்னோம் பாருங்க!!! அப்படின்னா, மீம்ஸ்னு கூட ஒரு அர்த்தம் எடுத்துக்கலாம்!! ஒவ்வொரு வருஷமும் முடியும்போது, அந்த வருஷத்துல என்னலாம் நடந்துச்சுன்னு யோசிச்சு பார்க்கும் நமக்கு, இந்த வருஷம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்ஸோட ஹிஸ்ட்ரி போதும் போல. எத்தனை எத்தனை மீம்ஸ்!!!! எத்தனை எத்தனை விஷயங்கள்!!!! இந்த வருஷத்தோட சில சீரியஸ் விஷயங்களை மீம்ஸ் மூலமாக எப்படி இந்தப் பசங்க ஓட்டியிருக்கிறாங்கன்னு கொஞ்சம் கீழே பாருங்க!!!! 

இந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய பிரளயம் தான். ஜெயலலிதாவின் இறப்பு, வர்தா புயல், அப்போலோ ஹேக்கர்ஸ், சசிகலா பதவியேற்பு என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளைக் கண்டு, எப்பா போதும்டா முடியல எங்களாலன்னு சொல்லிட்டாங்க மக்கள்!!!! இந்த மாசம் முழுவதும் டெம்ப்ளேட்டிற்குப் பஞ்சம் இல்லாம நம்ம பசங்க இருந்தாங்க! அம்மா மறைந்ததும் உடனே சசிகலா அடுத்துப் பதவியேற்றதும் இவங்கள முழுச் சந்திரமுகியா மாறி வேலை பார்க்க வைச்சிருச்சு! இது எல்லாம் பத்தாதுன்னு இந்த வர்தா புயல் வேற ஒரு பக்கம் வந்து சென்னைய சூறையாட, பசங்க வீட்ட காப்பாத்தினாங்களோ இல்லையோ, மீம்ஸ் போட்டு அப்டூடேட்டா இருந்துட்டாங்க!!!! உண்மைய சொல்லணும்னா, இவங்க போட்ட வர்தா மீம்ஸும், இடை இடையில உதவிக்கு எண்கள் கொடுத்ததும் பலருக்கு ஆறுதலா இருந்திருச்சு!!! 

இந்த ஆறுதல் ரக மீம்ஸ் எனச் சில உண்டு.... இந்த 2016ல் அந்த மாதிரியான மீம்ஸுகள் நிறையவே இருந்தது. எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா, சிங்கிள் பாய்ஸிற்கான மீம்ஸ், வேலையில்லா பட்டதாரிகளுக்கான மீம்ஸ், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் அவங்களுக்கு அவங்களே போட்டுக்கொள்ளும் மீம்ஸ்... அதுலயும் நீயா நானா ஷோவிற்குக் கூப்பிட்டதற்கு இவங்க போட்ட கோபிநாத் மீம்ஸ் இருக்கே..... ம்ம்!!!!  அச்சம் என்பது மடமையடா படம் வந்த பிறகு வீட்ல பைக் கேட்டா அப்பா என்ன சொல்றாருங்கறத ஒரு கான்ஸெப்ட்டா பண்ணாங்க பசங்க!!! அப்பாக்கள் எப்போலாம் திட்டுவாங்க, எப்படியெல்லாம் அம்மா அப்போ நம்மளை காப்பாத்துவாங்கணு இவங்களுக்கு அத்துப்பிடி!!! 

no_shave_november_20211.jpg

ஒரு சில சிறப்புத் தேதிகள், சிறப்பு மாதங்கள்னு ஸ்பெஷல்ஸ் இருக்கும். உதாரணமா, புரட்டாசி மாதம் முழுக்க ஒரு தனித்துவம் இருக்கும் (யெஸ், நோ நான்-வெஜ்), நவம்பர் முழுக்க நோ ஷேவ் நவம்பர்.... இப்படி மாதக் கணக்குத் தொடங்கிச் சிறப்பு நாட்கள் வரை இன்னைக்கு நாம வந்துட்டோம்!!! அதில் தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்னு சொல்ல தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு பட்டாசுக்கும் ஒவ்வொரு டெம்ப்ளேட் உபயோகப்படுத்தியது, உலக ஆண்கள் தினத்திற்கு இவங்க செஞ்சது என எல்லாமே  மாஸ்!

ஒரு சில யூஸ்ஃபுல்லான விஷயங்களையும் நமக்குத் தருவார்கள்!!! உதாரணமா, TRUE CALLER மூலமா யார் ஃபோன் செய்றதுங்கறது கண்டுபிடிக்கிறது, பவர் பேங்க் என நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் இவங்க மீம்ஸ்லயும் இருக்கும். இவ்ளோ ஏன், நம்ம டோரா புஜ்ஜி கூட இந்த லிஸ்ட்டில் இருக்குதுன்னா பாருங்களேன்!

1_20188.jpg

எப்போதுமே ஒரு படம் வந்தவுடனே அதுபற்றிய மீம்ஸ் போடுவது இவர்கள் வாடிக்கை. அந்த வகையில், தியேட்டருக்கே போகாமல் நீங்க ரிவ்யூ தெரிஞ்சுக்கலாம்.  இந்த வருஷம் வந்த படங்கள்ல, சமீபத்தில அதிகமா பேசப்பட்ட படங்கள், அச்சம் என்பது மடைமயடா, சிங்கம்-3, கடவுள் இருக்கான் குமாரு, பிச்சைக்காரன், கொடி, எம்.எஸ்.தோனி முதலியவைதான். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்!கொலைப்பசி ஒரு ரகம்னா 500,1000 இன்னொரு ரகம்,... 

Modi_20204.jpg

500,1000 னு சொன்னதுக்கு அப்புறம்தான் நியாபகம் வருது, மோடி அவர்பாட்டுக்கு இனிமே 500 ரூ 1000ரூபாய்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டாரு, விஷயத்தை எவ்வளவு சீரியஸாக்க முடியுமா அவ்வளவு சீரியஸ் ஆக்குனது நம்ம பசங்க தான்!!! மோடி அறிவித்த அடுத்த 5 மணிநேரத்துல ஏறத்தாழ 200 மீம்ஸ் போட்ருகாங்க இவங்க! இவ்ளோ சீக்கிரம் எப்படிதான் யோசிக்கிறாங்களோ தெரியலை. சீரியஸ் சென்சேஷனல் விஷயங்களை ஊடகங்களே தர தயங்கும்போது, நம்ம மீம் பாய்ஸ் அசால்ட்டா உள்ள புகுந்து எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருவாங்க!!!! மறைந்த முதல்வர் மருத்துவமனையில அனுமதிகப்பட்டது தொடங்கி அவங்க மறைவுக்குப் போட்ட மீம்ஸ் வரைக்கும் பல சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், நம்ம ஊர் தேர்தல், விஜயகாந்த்துக்கு ஆதரவு கரங்கள் நீட்டியது, மோடியின் கறுப்புப் பண ஒழிப்பிற்கு முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு பின்னர் ஏ.டி.எம். வாசல்ல போய்க் கால் கடுக்கத் தினமும் நின்னுட்டு வீட்டுக்கு வந்தவுடனே “போங்கய்யா நீங்களும் உங்க தீர்ப்பும்னு” கோவமா மீம்ஸ் போட்டதுன்னு ஏகப்பட்ட களேபரங்கள் இங்கே நடந்துருக்கு!!! இப்ப கூடப் பாருங்க, சின்னம்மாவுக்கு அவ்ளோ மீம்ஸ்!!!! 

experts_20282.jpg

பல சமயங்களில் டெம்ப்ளேட் இல்லாத கஷ்டம் இவங்களுக்கு வரும்.....அது போன்ற நேரத்துல ஏதாச்சும் ஒரு கான்செப்ட்ட யூஸ் பண்ணிப்பாங்க!!! மொக்க விஷயத்தைக் கூட எடுத்துப் புடிச்சு கான்செப்ட்டாக்கும் திறமை மீம் பாய்ஸ்க்கு தான் இருக்கு!!! உதாரணமா, EXPERTS WOULD HAVE TOLD ME ன்னு ஒரு மீம் கான்செப்ட்....எதுக்கு எடுத்தாங்க, எப்போ எடுத்தாங்கன்னே தெரியாத ஒரு செக்ஷன் அதெல்லாம்!!!’

vikatan

 

  • தொடங்கியவர்

`எலி'மையான ஹோட்டல்!

 

 

8p1.jpg

நீங்க எத்தனையோ ஊருக்குப் போயிருப்பீங்க, எத்தனையோ நாட்டுக்கு போயிருப்பீங்க. அங்கே எத்தனையோ உணவகங்களைப் பார்த்திருப்பீங்க. ஆனால் இப்படி ஒரு உணவகத்தை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க. கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. அப்படி என்னப்பா உணவகம்? இது எலிகளுக்கான ஸ்பெஷல் உணவகம் பாஸ்!

rat.jpg ஸ்வீடன் நாட்டில்தான் இருக்கு இந்த உணவகம். அங்கே இருக்கும், `அனானிமௌஸ்' (Anonymouse) என்ற கலைக்குழு இந்த உணவகத்தை உருவாக்கியிருக்காங்க!

இந்தக் குழு அப்படியே ஒரு பெரிய உணவகத்தோட மினியேச்சரை அழகா உருவாக்கி அசத்தி இருக்காங்க.  அப்படியே ஒரு அசல் உணவகம் போலவே காட்சியளிக்கும் இந்த எலிகள் உணவகம் 25 இன்ச் நீளமும் 12 இன்ச் உயரமும் கொண்டது. `மல்மோ' (Malmo) என்ற நகரத்தில் இருக்கும் இந்த உணவகத்துக்கான நோக்கம் ஜீவகாருண்யமாம்!  இந்த உணவகத்தில் எலிகளுக்குப் பிடிச்ச உணவு எல்லாம் வரிசை கட்டி அடுக்கி வெச்சிருக்காங்க. பாதாம், பிஸ்தா போன்ற `நட்ஸ்' வகைகளும், விதவிதமான வெண்ணை வகைகளும் எலிகளுக்காக தயார் செஞ்சு வெச்சிருக்காங்க.

இது என்னடா அக்கப்போரா இருக்கு. நம்ம ஊர்ல எலிகள் வந்தா பாய்சனைத்தானே வெப்போம். ஆனால் இந்த ஊர்ல பாதம், பிஸ்தாலாம் வைக்கிறாங்க.

`அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே...'னு பாடத் தோணுதா பாஸ்?

vikatan

  • தொடங்கியவர்

’எம் மவ நடக்க ஆரம்பிச்சிட்டா’ 360 டிகிரியில் ஃபீல் பண்ணும் மார்க் 

 

mark_01338.png

காலையில் எழுந்ததும் 'குட் மார்னிங் ஃப்ரண்ட்ஸ்' இல் தொடங்கி.. ஆபிஸூக்கு கெளம்பியாச்சு.. மழை பெய்யுது.. ஏடிஎம் கியூல நிக்குறேன்னு என்ன நடந்தாலும் அதை ஒரு வரலாற்று சாதனை மாதிரி ஃபேஸ்புக்ல அப்டேட் செய்யறதுக்கு ஒரு கூட்டம் இருக்குதானே.. ஃபேஸ்புக்கில் சொந்தமாக ஒரு அக்கௌன்ட் வச்சிருக்கோம் நாமே, எது நடந்தாலும் பதிவு பண்ணணும்னு துடிக்கிறோமே.. ஃபேஸ்புக்கையே சொந்தமாக வச்சிருக்கும் மார்க் மட்டும் சும்மா இருப்பாரா?

மார்க் தனது குட்டி மகள் மேக்ஸ் என்ன செய்தாலும் அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி “அபியும் நானும்” பிரகாஷ்ராஜாக ஃபீல் பண்ணுவார். அதிலும் அவரது சமீபத்திய பதிவு ரொம்பவே ஸ்பெஷல். மேக்ஸ் முதல் முறையாக நடக்க ஆரம்பித்திருப்பதை 360 டிகிரி வீடியோவாக பதிவேற்றி இருக்கிறார். மேக்ஸ் தள்ளாடித் தள்ளாடி மழலை நடை நடந்து வருவதையும், மார்க் அவளை வாரி அணைத்துக் கொள்வதற்கு கைகளை விரித்து அமர்ந்திருப்பதையும் பார்க்க அழகு. அதை 360 டிகிரிக்கும் சுற்றிச் சுற்றிப் பார்க்க கொள்ளை அழகு.. இந்த வீடியோவிற்கு மார்க்கின் விளக்கம்தான் அக்’மார்க்’..

“நான் முதன்முதலாக நடக்க ஆரம்பித்தபோது என் அம்மா, பேபி புக்கில் எழுதி வைத்தார். என் சகோதரியின் குழந்தைகள் நடக்க ஆரம்பித்தபோது அவர் போட்டோவாகவும் வீடியோவாகவும் பதிவு செய்தார். என் மகள் மேக்ஸ் நடக்க ஆரம்பித்தபோது அதை 360 டிகிரியில் பதிவு செய்ய விரும்பினேன்.. அது பார்ப்பவர்களுக்கு நேரில் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கும்”

லவ் ரியாக்ஸன்ஸ் மார்க்...

 

vikatan

  • தொடங்கியவர்

 

தைவானில் ஒருபாலுறவு தம்பதி - காணொளி

BBC

  • தொடங்கியவர்

ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய பேரழகுப் புகைப்படங்கள்!

aishwarya_rai88

 

பிரபல பாலிவுட் புகைப்படக் கலைஞர் பிரசாத் நாய்க், ஐஸ்வர்யா ராயின் போட்டோஷூட்டிலிருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். உலக அழகியின் இந்தப் பேரழகுப் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

aishwarya_rai99.jpg

 

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

மார்கழி என்றதுமே நினைவில் வரும் எட்டு காட்சிகள்!

 

மார்கழி


மாதங்களில் அவள் மார்கழி' கண்ணதாசனால் புகழப்பட்ட மாதம் மார்கழி. விவசாய நாடான இந்தியாவில்  அறுவடையைத் தொடங்கி வைக்கும் மாதம் மார்கழி. மித வெப்ப நாடான இந்தியாவில் குளிரால் போர்த்திய நாட்களை நமக்குத் தரும் மாதம் மார்கழி.
 
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறதுதான் என்றாலும் மார்கழி என்றவுடன் நம் மனதிற்குள் சில அடையாளங்கள் சட்டென்று வந்து செல்வதே மார்கழிக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அப்படி, மார்கழியின் அடையாளங்களாய் எதெல்லாம் நம் கண்முன் வந்து செல்லும் என மனதை கிராமத்துக்குள் ஒரு ரவுண்ட் செல்ல ரெடியா?

p49a_05223.jpg

குளிர் தரும் பனி
மார்கழியின் முதல் அடையாளம் பனி. மாலை தொடங்கியதுமே மெல்ல ஆரம்பித்து, முன்னிரவில் ஆடை மேல் இன்னோர் ஆடை அணிய வைக்கச் செய்யும். பின் கம்பளிக்குள் ஒளியச் செய்து, ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் பனி. அதிகாலையில் புகைப் போல படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கி விடும்.

புனல் செட் பாடல்கள்
'தாயே கருமாரி..." கோவிலில் புனல் ஸ்பீக்கரில், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கனவின் எந்த அடுக்கில் இருந்தாலும் உலுக்கி எழுப்பி விடும். எல்.ஆர்.ஈஸ்வரியைத் தொடர்ந்து, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உள்ளிட்டோர் தொண்டையைச் சரிசெய்தப்படி நமக்காக காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன், மார்கழி மாதத்தில் ரெக்கார்டு போடுவதற்கு என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் டேப் ரெக்கார்ட்டரில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்து எல்லோரையும் எழுப்புவார். பென் ட்ரைவைச் செருவி விட்டால் நாள் கணக்கில் பாடல்கள் இசைப்பது போல அப்போது கிடையாது. ஆறு பாடல்கள் முடிந்ததும் கேசட்டைத் திருப்பிப் போட வேண்டும் என்பதால் அவரும் தூங்க முடியாது. அதேபோல மாலை நேரத்தில் பாடல்களைப் போடுவார். அப்போது சினிமா பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் இடம்பிடிக்கும்.

WhatsApp_Image_2016-12-17_at_5.39.41_AM_

சிக்கு கோலமா... பூ கோலமா...
எல்.ஆர். ஈஸ்வரி 4 மணிக்கே எழுப்பி விடுவது, தெருவை அடைத்து கோலம் போடுவதற்குதான். 48 புள்ளிகள், 64 புள்ளிகள் என முதல்நாளே இரவில் திண்ணையில் சாக்பீஸில் ஒத்திகைப் பார்த்தாலும் தெருவில் புள்ளி வைத்ததும், தர்மத்தின் தலைவன் ரஜினி வீடு மாறி செல்வதைப் போல, எல்லாம் சரி எங்கு தப்பு வந்தது எனத் தெரியாமல் அரைமணி குழம்பி, பின் அதையே வேறு கோலமாக மாற்றிப் போடுவது ஒரு திறமை. அதை பக்கத்து வீட்டுக்காரப் பெண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதுவே கலையாகி விடும். கோலம் போடுவதற்கு தம்பிகள், அக்கா இன்னைக்கு சிக்கு கோலமா... பூ கோலமா... என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தம்பிகளில் கெஞ்சல் ஓர் அழகு என்றால், சொல்றேன்... சொல்றேன் என அக்காக்கள் செய்யும் சஸ்பென்ஸ் இன்னும் பேரழகு. மார்கழியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு கோலங்களில் வித்தியாசம் காட்டி அசத்துவதும் நடக்கும்.

சாணிப் பிள்ளையார் :-
என்ன கோலம் என தம்பிகளை இழுத்தடித்தற்கு பழிவாங்கலாய், பிள்ளையார் செய்ய சாணி எடுத்து வர தம்பிகள் பிகு காட்டுவார்கள்.  நாளைக்கு உனக்கு பிடித்த கோலம் போடுகிறேன் எனச் சமாதானம் செய்த ஐந்து நிமிடங்களில் சாணி வந்துவிடும். கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையார் வைப்பது வழக்கம் நிறைவேறும்.

கூடுதல் அழகுக்கு பரங்கிப்பூ
கோலம் ரெடி.. நடுவில் பிள்ளையாரும் ஜம்மென்று வீற்றிருக்க... இரண்டையும் அலங்கரிக்க பரங்கிப்பூ அல்லது பூசணி பூ தேவை. மீண்டும் தம்பிகள் தயவு வேண்டும். அல்லது அந்த நேரத்தில் தம்பிகளாக மாறிவிடும் அப்பாவின் உதவியோடு பரங்கி பூ வந்து சேரும். பரங்கி பூ வை வைத்து நிமிர்ந்தால் சூரியன் சோம்பல் முறித்து பகலைத் திறப்பார்.

klel_05368.jpg

சுவையான பொங்கல்
கோலம் போட்டு முடிக்கும் நேரத்தில் சரியாக கோவில் மணியோசை கேட்கும், ஓடிச் சென்றால் ஊரில் சிறுவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே வெட, வெட என நிற்பார்கள். அர்ச்சகர் பொங்கல் வாளியின் மூடியைத் திறந்து, ஒரு கைப்பிடி பொங்கலை மட்டும் இலையில் வைத்திருப்பார். ஆனால் அதன் நறுமணம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். பூஜை எப்போது முடியுமென காத்திருந்து சுடச் சுட பொங்கலை கையில் வாங்கியதும் சூடு தாங்காமல் இந்தக் கையில் கொஞ்ச நேரம் அந்தக் கையில் கொஞ்ச நேரம் என மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே வீடு வருவதற்குள் பொங்கலின் சூட்டுக்கு கைப் பழகியிருக்கும்.

பஜனைப் பாடல்கள்
முதல்நாள் இரவே பாடல் புத்தகங்களைப் படித்து பஜனைப் பாடல்களை மனப்பாடம் செய்து, அதிகாலையிலேயே எழுந்து தூங்குமூஞ்சி நண்பன் வீட்டுக்குச் சென்று அவனை எழுப்பி கோவிலுக்குச் செல்வதற்குள் தனக்கு தருவதாக சொல்லியிருந்த ஜிங்க் சாக் கருவி வேறொருவனின் கையில் இருக்கும். அவன் நமக்கு முன்பே வந்து அதைக் கைப்பற்ற்றியிருப்பான். நாளை இன்னும் சீக்கிரமே எழுந்திருக்கணும் எனும் மார்கழி பாடத்தைக் கற்று, குருநாதரின் பாடலுக்கு பின் பாடத் தயாராவோம்.

WhatsApp_Image_2016-12-17_at_5.25.04_AM-

போகி
பொங்கல் பண்டிகைன்னா... அது தை மாசம் இல்லையான்னு சொல்றீங்களா.. மார்கழியின் கடைசி நாள்தான் போகி. மார்கழியின் குளிருக்கு ஏற்ற பண்டிகைதான் இது. வீட்டில் பயன்படாத பொருட்களை தீ வளர்த்து அதில் போட்டு, சுற்றி உட்கார்ந்து குளிர்காய்வது சுகமான அனுபவம்.


மார்கழியைப் போற்றுவோம்! மார்கழியைக் கொண்டாடுவோம்.

vikatan

  • தொடங்கியவர்

80 வருடங்களில் 8 ஆயிரம் மரங்கள்...உலகின் செல்வாக்குமிக்க மனிதருக்கு வயது 105

 

மரங்கள்

கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் குப்பி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சாலுமரடா திம்மக்கா. வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை. பத்து வயதில் இருந்து ஆடுமாடுகளை மேய்த்தார். பின்னர் கூலித் தொழில் பார்த்தார். இவரது கணவர் பெயர் சிக்கையா. கணவனும் மனைவியும் கூலி வேலை பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக குழந்தையும் பிறக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தையாக பாவித்துக் கொண்டனர்.

ஆனாலும் குழந்தை இல்லாதது தம்பதியரை மனதளவில் பெரியதாக பாதித்திருந்தது. 'குழந்தை இல்லையென்றால் என்ன?. மரங்களை உனது குழந்தையாக பாவித்துக் கொள்... ஊரெங்கும் சென்று மரங்களை நட்டு அதனை பத்திரமாக வளர்க்கலாமே  'என்று திம்மக்காவின் கணவர் மனைவிக்கு ஊக்கம் அளித்தார். கணவரின் வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த திம்மக்கா, மரக்கன்றுகளை குழந்தையாக பாவிக்கத் தொடங்கினார். 

காலையில் கணவரும் மனைவியும் சாப்பாட்டுக்காக உழைப்பார்கள். மாலையில் மரக்கன்றுகளை நடுவார்கள். முதன் முதலில் கல்லீகல் கிராமத்தில் இருந்து கூடூர் கிராமம் வரை,சாலையோரத்தில் 400 ஆலமர கன்றுகளை திம்மக்கா நட்டார். நட்டதோடு வேலை முடிந்து விட்டது என்று திம்மக்கா இருந்து விடவில்மலை. மரக்கன்றுகளைச் சுற்றிலும் வேலி ஏற்படுத்துவார். ஆடுமாடுகள் தின்று விடாமல் பார்த்துக் கொள்வார். மாலைவேளையில், நீரிட்டுப் பராமரிப்பார். மரங்கள் தானாக வளரும் வரை திம்மக்காவின் கண்காணிப்பு தொடரும். திம்மக்காவின் தீவிர கண்காணிப்பால் நடப்பட்ட 400 ஆலமரக்கன்றுகளில் ஒன்று கூட வீணாகிப் போகவில்லை. அத்தனையும் வளர்ந்து  விருட்சமாக மாறி இப்போது நிற்கின்றன. வெட்ட வெளியாக காணப்பட்ட அந்த சாலை இப்போது 400 ஆலமரங்களுடன் பசுமையாக காணப்படுகிறது. 

மரக்கன்றுகளுடன் ஒரு குழந்தையையும் தத்தெடுத்து உமேஷ் என பெயரிட்டு வளர்த்தார். மரக்கன்றுகளுடன் சேர்ந்து அந்த குழந்தையும் வளர்ந்தது. சில வருடங்களுக்கு முன் கணவர் சிக்கையா தவறி விட. இப்போது மகன் நிழலில் தனது பணியை மேற்கொள்கிறார் திம்மக்கா. மகன் உமேசும் தாயுடன்சேர்ந்து கிராமம் கிராமமாக சென்று மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். 'மரங்களை எனது குழந்தையாக பாவித்தேன். அடுத்த தலைமுறைக்கு செய்யும் சேவையாகவும் நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் கருதினேன் ''என கடந்த 2013-ம் ஆண்டு அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் திம்மக்கா. 

tim1_10517.jpg

திம்மக்காவுக்கு தற்போது 105 வயதாகிறது. இப்போதும் மரம் நடும் பணியை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த 80 வருடங்களாக மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். இந்த 80 வருடங்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் மரக்கன்றுகளைத் திம்மக்கா நட்டு வளர்த்திருக்கிறார். கர்நாடக அரசு முதியோருக்கான பென்ஷன் ரூ.500 தருகிறது. ஆனால், திம்மக்கா நட்டு வளர்த்த மரங்களின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொன்னால் அதிர்ந்து போவீர்கள். அந்த மரங்களின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடியை நெருங்குகிறது. அதே வேளையில் அவற்றால்  சுற்றுச்சூழலுக்கு விளையும் நன்மைகளுக்கு விலை போட முடியாது. 

தற்போது 'பூமியை காப்போம் ' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி திம்மக்கா நடத்தி வருகிறார். அதன் மூலம் நர்சரி ஒன்றைத் தொடங்கி மரக்கன்றுகளையும் விநியோகிக்கிறார். இதுவரைக்கும் 5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளார். தள்ளாத வயதில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கெஸ்ட் லெக்சர் எடுக்கிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை திம்மக்கா சந்தித்திருக்கிறார். திம்மக்காவை உதாரணமாகக் கொண்டு இப்போது லட்சக்கணக்கானோர் உலகமெங்கும் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திம்மக்காவின் செயலை கவுரவித்து சிபிஎஸ்ஈ பாடத்தில் அவரைப் பற்றிய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது. கர்நாடக அரசு பள்ளிப் பாடங்களில் திம்மக்காவின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம் பெற்றுள்ளது.  திம்மக்காவின் சேவையைப் பாராட்டி இந்தியாவின் 'சிறந்த குடிமகள் விருது' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு காட்ஃபிரே பிலிஃப்ஸ் விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது பிபிசி நிறுவனமும் திம்மக்காவின் சேவையை பாராட்டி உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில்  சேர்த்துள்ளது. 
இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள திம்மக்கா, விருது மூலம் கிடைக்கும் நிதியை வைதது என்ன செய்து வருகிறார் தெரியுமா?. சொந்த கிராமமான குப்பியில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனைக் கட்ட முயற்சித்து வருகிறார்.  

தன்னலமற்று சேவை புரிபவர்களுக்கு பணத்தை வைத்து வேறு என்ன செய்யத் தெரியும்?.

vikatan

  • தொடங்கியவர்

The Boss Baby படத்தின் டிரெய்லர்

 

 

 

ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் சிலது அதிக எதிர்பார்ப்பை கிளப்பும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் 'தி பாஸ் பேபி'. முழுவதும் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் டப்பிங் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவர உள்ள இந்த படத்தின் ட்ரெய்லரே செம ரகளையாக உள்ளது...

  • தொடங்கியவர்

காலை எழுந்ததும் ஏன் சோம்பல் முறிக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது தாக்குதல் நடத்திய நாள்: 18-12-1999

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. இதில் அவரது ஒரு கண் பறிபோனது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1911 - சேர் பொன்னம்பலம் ராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தேர்வானார். 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக்

 
 
 
 
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது தாக்குதல் நடத்திய நாள்:  18-12-1999
 
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. இதில் அவரது ஒரு கண் பறிபோனது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1911 - சேர் பொன்னம்பலம் ராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தேர்வானார். 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. 1941 - ஹாங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹாங்காங் மீது படையெடுத்தது. 1944 - இரண்டாம் உலகப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய ராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.

1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது. 1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 1973 - சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது. 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார். 1990 - ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை ராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது. 1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார். 2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர். 2012 - தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.
 

ரஷ்யாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம்: 18-12-1878

 

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி

 
 
 
 
ரஷ்யாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம்: 18-12-1878
 
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. அதன் பொருளாதாரம் மேம்பட்டது.

ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930-களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பயங்கரவாதி என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. அக்டோபர் 1945-ம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சாதனை நாயகன்

p128e.jpg

2016-ம் ஆண்டு, விராட் கோஹ்லிக்கு வழக்கத்தை விடவும் ராசியான ஆண்டாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், T20 போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து 3,500 ரன்களைக் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 235 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் மூலம் அதிக ரன்கள் குவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒரே ஆண்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்ததோடு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இவரது தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. ட்ரெண்ட்டை நொறுக்கித்தள்ள இது போதாதா?! கடந்த வாரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் @imVkohli மயமாகத்தான் இருந்தது. ரன் மெஷின்!


மல்லையாவுடன் மல்லுக்கட்டு!

p128f.jpg

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனைச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்று பதுங்கியுள்ளார். அவரிடமிருந்து கடன் வசூலிக்கப்படுமா? அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. இந்நிலையில் கடந்த வாரம் `லெஜியன்' என்றழைக்கப்படும் `ஹேக்கர்கள்', அவரது ட்விட்டர் அக்கவுன்ட்டை முடக்கி வங்கிக்கணக்குகள் உள்பட பல முக்கிய விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர். ஆனால் கொஞ்சமும் தளராத மல்லையா, `லெஜியன்' என்ற பெயரில் யாரோ அடையாளம் தெரியாதவர்கள் என்னுடைய மின்னஞ்சலை ஹேக் செய்துள்ளனர். என்னை ‘பிளாக்மெயில்’ செய்கின்றனர். வாட் எ ஜோக்” எனப் பதில் அளித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் போட்டி போட்டுத் தேடியதில் #vijaymallya #legion ஆகியவை ட்ரெண்டில் இடம்பிடித்தன. எவ்வளவு பணம் வெச்சிருக்காராம்?


தமிழகத்தின் தங்கமகன்

p128g.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 66 வயதை நிறைவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டாலும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்பட சோஷியல் மீடியாவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். ‘வர்தா’ புயல் வீசியதால் சென்னைக்கு அருகில் எந்த விதக் கொண்டாட்டங்களும் இல்லையென்றாலும், தமிழகத்தின் பல இடங்களில் வெகு விமரிசையாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, ஷாரூக் கான், சேவாக் உள்ளிட்ட பல பிரபலங்களும், ரசிகர்களும் சூப்பர் ஸ்டாருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததில் #happybirthdayrajinikanth டேக் இந்திய அளவில் முன்னிலை வகித்தது. வாழ்த்துகள் தலைவா!


சிறந்த நபரான ட்ரம்ப்!

p128a.jpg

உலகப் புகழ்பெற்ற இதழான ‘டைம்’ ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்கும். 2016-ம் ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்க அந்த இதழ் நடத்திய வாக்கெடுப்பில், இந்தியப் பிரதமர் மோடி அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆனால் வாக்கெடுப்பில் மோடி வெற்றி பெற்றாலும், டைம் இதழின் ஆசிரியர்களே, ‘Person of the Year’ தேர்வு செய்வார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால், இந்த ஆண்டின் சிறந்த நபராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து உலக அளவிலான ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Trump முதலிடத்தைப் பிடித்தார். ‘அமெரிக்க அதிபர் தேர்தலிலும் சரி, டைம் வாக்கெடுப்பிலும் சரி, குறைவான வாக்குகளைப் பெற்றாலும் ட்ரம்ப் வென்று விடுகிறார்’ என ஹிலாரியின் ஆதரவாளர்கள், ட்ரம்பை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்!


பணமே வேண்டாமாம்!

p128b.jpg

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. சில்லறைத் தட்டுப்பாடு நீங்கி இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் மின்னணு பரிமாற்றத்தை அடுத்த இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது. ரயில்வே பயணச்சீட்டை மின்னணு முறையில் பெறுவோருக்கு ரூ.10 லட்சம் அளவிலான காப்பீடு வசதி வழங்கப்படும், ரூ.2,000 வரை மின்னணுப் பரிமாற்றத்திற்கு கட்டணம் கிடையாது போன்ற முக்கியச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு 13 ஆயிரம் லைக்குகள் குவிந்து #cashlesspayment ட்ரெண்ட் ஆனது. பணமே இனி தேவையில்லைங்கிறீங்க... அதானே!


கவர்(ச்சி)ந்த டீஸர்!

p128c.jpg

மேற்கத்திய நாடுகளில் அதிகம் விற்பனையான `50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ புத்தகம், அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது. தற்போது இதன் அடுத்த பாகமான `50 ஷேட்ஸ் டார்க்கர்’ வருகின்ற பிப்ரவரி மாதம் உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியானது. முதல் பாகத்தைப் போல இதிலும் நாயகி டகோட்டா ஜான்சன் தாராளக் கவர்ச்சி காட்டியுள்ளதால், ரசிகர்களிடையே இந்த டீஸர் பலத்த வரவேற்பைப் பெற்று சில தினங்களிலேயே 54 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. #fiftyshadesdarker #DakotaJohnson டேக்குகளில் லட்சக்கணக்கான ட்வீட்கள் இன்னும் குவிந்தவண்ணம் இருக்கின்றன. தாராளமயம்!


புரட்டிப்போட்ட ‘வர்தா’!

p128d.jpg

தலைநகர் சென்னையை வர்தா புயல் புரட்டிப்போட்டுச் சென்றது. பலத்த மழையோடு மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று தனது வழியில் குறுக்கிட்ட அனைத்தையும் துவம்சம் செய்துவிட்டுச் சென்றது. இதன் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணற்ற மரங்கள் சாய்ந்ததோடு, பல குடியிருப்புப் பகுதிகள் சேதாரமாகின. 22 வருடங்களுக்கு முன் சென்னையைத் தாக்கிய புயலை விடவும் பலத்த சேதாரத்தை ‘வர்தா’ ஏற்படுத்தியுள்ளது. #CycloneVardah மட்டுமின்றி புயல் சேதாரம் ஏற்படுத்திய வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகின.  எல்லாம் சரி... பாகிஸ்தான் பெயரிட்ட இந்தப் புயலுக்கு `சிகப்பு ரோஜா'ன்னு அர்த்தமாம். நோ கமென்ட்ஸ்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.