Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
மனஒடுக்கம் உலகைக் கையில் அடக்கும்
 
 

article_1482293918-imagesnhjnkj.jpgமனிதர் தங்கள் மூளையினை முழுமையாகப் பாவிப்பதில்லை. ஆனால், தீர்க்கதரிசிகளும் யோகிகளும் தங்கள் தபஸ் மூலம் தங்கள் உடலையும் சித்தத்தையும் விருத்தி செய்து கொண்டார்கள். 

இதனாலேயே மூளையின் முழுப் பயன்களை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அறிவின் மேலாம் ஞானத்தைக் கல்வி மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. 

இதயத்தை இறைவன்பால் அர்ப்பணித்தால் மட்டுமே ஞானம் பெற முடியும். ஆத்மாவின் பலம் அளவிட முடியாது. ஆனால், நாங்கள் உலக யதார்த்த வாழ்க்கைக்கு மட்டுமே மூளையைப் பாவிக்கின்றோம். அகத்தினூடான சிந்தனையை வளர்த்திட யோகப் பயிற்சி அவசியமானது. இதனால் முக்காலத்தை அறிய முடிவதுடன் மனிதர்களால் செய்யப்படும் காரியங்களைவிட, மிக அற்புதமான அதிசயங்களையும் வெ ளிப்படுத்த முடியும். மனஒடுக்கம் உலகைக் கையில் அடக்கும்.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வில்லி நடிகைகள் வீட்டில் எப்படி?

சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர்களை விட வில்லிகளுக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் இன்றைய சீரியல்களில். ஹீரோயின்களை விட வில்லிகளுக்கு மவுசு அதிகம் எப்படியும் ஒரு சீரியலிலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சினிமாவில் எப்படி ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிறார்களோ அதேபோல சீரியல்களில் வில்லியும், ஹீரோயினும் சவால் விட்டு கொண்டு சண்டை போடுவார்கள். சில சீரியல்களில் வில்லிகள் உறவாடிக் கெடுப்பார்கள். இப்படி தமிழ் சீரியல்களில் வில்லிகளாக மிரட்டிக் கொண்டிருக்கும் சில சூப்பர் வில்லிகள் வீட்டில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

neelima_ranai_15053.jpg

நீலிமா ராணி: ''வாணி ராணி'' 

வாணி சீரியலில் டிம்பிள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ''வாணி ராணி சீரியலில் தான் முதன் முதலில் வில்லியாக நடிச்சிருக்கேன். எனக்கு இது புது அனுபவம். இந்த சீரியலில் ராதிகா மேடமுக்கு வில்லியாக நடிக்கும்போது மனசு கஷ்டமாத் தான் இருக்கும். அவங்க எவ்வளவு பெரிய லெஜண்ட். அவங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பேன். ஆனா, அவங்க அதை ரசிச்சுப் பார்த்துட்டு இருப்பாங்க. இதைப் பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன்.  பொதுவாக நான் ரொம்ப பிரண்ட்லி. எந்த உதவியாக இருந்தாலும் முதல் ஆளாப் போயி நிற்பேன். சின்ன வயசுல இருந்தே இந்தப் பழக்கம் உண்டு. நீ, வா, போ என்கிற வார்த்தையையே பெரும்பாலும் பயன்படுத்தினது கிடையாது. சீரியலுக்காத்தான் பேச வேண்டியிருக்கு. என்னுடைய நண்பர்கள் வட்டாரம் அதிகமாக சொல்வது என்னுடைய ஸ்மைலைத்தான். எவ்வளவுப் பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி அதை சிரிப்பை வச்சே சமாளிச்சிடுவேன். அதுக்காகக் கோபமே படமாட்டேன் என சொல்ல வரல. ஒவ்வொரு சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும்''. 

gayathri_15342.jpg

ரேகா குமார்: ''தெய்வமகள்''

காய்த்ரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்திக் கொண்டிருப்பவர். அண்ணியாரே தான் இவருடைய டிரேட் மார்க். 

''நான் ரொம்ப எமோஷனலான டைப், அப்பா என்கிற வார்த்தையைக் கேட்டாலோ, சொன்னாலோ உடனே அழுதுடுவேன். அப்பா காலமாயிட்ட பிறகு எப்போ நினைச்சாலும் அழுகை வந்திடும். அடுத்து என் மகள் பற்றி யாராவது பாராட்டிப் பேசினா ஆனந்தத்துல கண்ணீர் வரும். இப்படி சில விஷயங்களில் நான் ரொம்ப சென்சிட்டிவ். நீங்க சீரியலில்  பார்ப்பதற்கும், உண்மையான கேரக்டருக்கும் முழுக்க வித்தியாசம் இருக்கும். சீரியலில் சத்தமாக, கோபமாகப் பேசுவதுபோல நேர்ல பேசவே மாட்டேன். சாஃப்ட்டாதான் பேசுவேன். செம்ம ஜாலி டைப். மார்டன் டிரெஸ்ஸிங் தான் என்னோட ஃபேவரெட்.  கேமராவுக்கு முன்னாடி கத்திக் கத்திப் பேசுவதால பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்ல யூ டியூப்ல எனக்குப் பிடிச்ச பாடல்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.  ஸ்பாட்லயும் ரொம்ப கம்மியாகத்தான் பேசுவேன். இந்த அண்ணியார் கேரக்டருக்கு கிடைத்த ரீச் இதுவரை என்னோட லைஃப்ல கிடைச்சதே இல்ல. 

nalini_15011.jpg

நளினி: ''டார்லிங் டார்லிங்''

டாப் ஹீரோயின் அந்தஸ்தில் இருந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நளினி. 'சின்னபாப்பா, பெரியபாப்பா' தெலுங்கு சீரியல் என பல சீரியல்களில் பயமுறுத்தும் மாமியாராக அசத்தியிருக்கிறார்.

'நான் ரொம்ப சாதாரணமாகத்தான் இருப்பேன். சீரியலுக்காக அப்படி மாற வேண்டியிருந்தது. வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்துவதற்காக அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எனக்குப் பிடிக்கல. தயவு செய்து இனிமே இந்த மாதிரி நெகட்டிவ் ரோல்ல நடிக்காதீங்க'னு கேட்டுக்கிட்டாங்க. பசங்க சொல்லைத் தட்ட முடியல. அதுக்குப் பிறகுதான் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் குதிக்க ஆரம்பிச்சேன். இப்போ அது டிரென்டாகியிருக்கு. நான் செம்ம ஜாலியான ஆள். ப்ரண்ட்லியான ஆளும் கூட.  

saaaa_15255.jpg

சான்ட்ரா: ''தலையணைப் பூக்கள்''

தலையணைப் பூக்களில் வேதவல்லிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வீட்டின் இரண்டு மருமகளில் இவருக்கு வில்லி கதாபாத்திரம். தலையணைப் பூக்களில் கல்பனா என்னும் வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சான்ட்ரா. சீரியலில் வில்லியாக இருந்தாலும், வீட்டில் பக்கா ஹவுஸ் ஒய்ஃப். வீட்டுக்குப் போயிட்டா, அதில் முழுகிடுவேன். துணி துவைக்கிறது, வீட்டக் கிளீன் பண்றது, சமைக்கிறது என எல்லா வேலையும் நான் தான் செய்வேன். சீரியலில் அணியற மாதிரி ஹெவியான ஜூவல்லரி, டிரெஸ்ஸூக்கெல்லாம் நோ சொல்லிடுவேன். ரொம்ப சாதாரணமாக இருக்கப் பிடிக்கும். தலையணைப் பூக்களில் தான் முதன் முதலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறேன். பொதுவாக வெளிப்படையாகப் பேசிடுவேன். அதே போல உண்மையான காரணங்களுக்காக சண்டைப் போடுவேன். அது மாதிரியான ஆட்கள்கிட்டயும் பழக்கம் வச்சுக்க மாட்டேன். என்னைப் பார்க்கும்போது ஆட்டிடியூட் காண்பிக்கிறப் பொண்ணு மாதிரித் தெரியும். ஆனா, உண்மையில் நான் அந்த மாதிரிக் கிடையாது. அமைதியான சுபாவம். சீக்கிரம் யாரையும் நம்பி பிரண்டாக மாட்டேன். பழகினப் பிறகுதான் நன்றாகப் பேசவே ஆரம்பிப்பேன். 

vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und im Freien

 
 
அழகு நடிகை, திறமையான பாடகி அன்ட்ரியாவின் பிறந்த நாள் இன்று.

Happy birthday Andrea Jeremiah
  • தொடங்கியவர்

சுந்தர்பிச்சையும், மார்க் சக்கர்பெர்க்கும் எதற்கு அழுதார்கள்? அத்தியாயம் 1 #2016TechRecap

 

 

ஒவ்வொரு வருஷமும் பல டெக்னாலஜிகள் அறிமுகம் ஆகும், பல கேட்ஜெட்டுகள் மார்க்கெட்ட ஆக்கிரமிக்கும் சில வைரல் ஹிட்டாகும், சில சொதப்பல் ஹிட்டாகும். அப்படி ஒரு வருடத்தில் நடந்த டெக் நிகழ்வுகளில் ஒவ்வோரு மாதமும் நடந்த சுவரஸ்யமான உலகை கவனிக்க வைத்த டெக் வைரல்கள்  #2016TechRecap ஒரு தொகுப்பாக... 

நீங்கள் வியந்த டெக் வைரல்களை அது நடந்த மாதத்துடன் கமென்டில் தெரியபடுத்துங்கள்....2016ம் ஆண்டின் முதல் நான்கு மாத டெக் நிகழ்வுகள் #2016TechRecap இதோ...


ஜனவரி  #2016TechRecap

FBLive_13023.jpg

 வந்தாச்சு ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்!

அமெரிக்காவில் அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் நேரலை (லைவ் ஸ்ட்ரீமிங்) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் . இனி நாம் நேரலையாகவே வீடியோவை பகிர முடியும். உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் நேரலை வசதியை கொண்டு வந்தது  ஃபேஸ்புக்.

 

sanmay-ved_13509.jpg

 கூகுள்.காம் வாங்கிய நபருக்கு கூகுள் கொடுத்த தொகை

12 டாலருக்கு கூகுள்.காம் தளத்தை ஏதேச்சையாக வாங்கிய சன்மய் வேத்-ஐ நினைவிருக்கிறதா? அவருக்கு கூகுள் 6,006.13 டாலர் சன்மானம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. 'Google' வார்த்தை எண்களில் வர்ணித்தால்' 6,006.13' வரும். சன்மய் இதை நன்கொடை செய்ததைக் கேள்விப்பட்டு டபுள் தொகை கொடுத்ததாம் கூகுள்!

 

விலையில்லா வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப் அப்ளிகேசனை முதல் ஆண்டில் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு வருடத்திற்கு பின் இந்தியாவில் ஆண்டிற்கு ரூ.54 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கட்டணமும் ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனர் ஜேன் கௌம் தெரிவித்துள்ளார்.


பிப்ரவரி  #2016TechRecap

51037779_13046.jpg500 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்!

உலகிலேயே மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்று கூறப்படும் ப்ரீடம் 251 வெளியிடப்பட்டது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள இந்த போனின் விலை 500 ரூபாய்தான். இதன் மூலம் அனைவரையும் தொடர்பில் இணைக்க முடியும் என்பதை இலக்காக கொண்டு துவங்கப்பட்டது.

இந்த ஆண்டின் மகத்தான கண்டுபிடிப்பு இதுதான்

100 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்புகளிலே மகத்தான கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. 'லிகோ டிடெக்டர்' மூலம் புவி ஈர்ப்பு அலைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 


மார்ச்  #2016TechRecap

 

ஆசியாவிலேயே பெரிய டெலஸ்கோப் இந்தியாவில்

பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா - பெல்ஜியம் இணைந்து உருவாக்கியுள்ள ARIES டெலஸ்கோப்பை திறந்து வைத்தார். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே பெரிய டெலஸ்கோப். இதன் பிரைமரி லென்ஸ் 3.6 மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆர்யபட்டா வானியல் ஆராய்ச்சி மையம் இதை இயக்குகிறது.

இதைக்கூடவா ட்ரெண்ட் ஆக்குவீங்க?

puppy_13559.jpg

இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்ட ஒரு ஹேஷ் டேக் செம வைரலாகியது. #puppybelly என்பதுதான் அந்த ஹேஷ் டேக். அட ரொம்ப யோசிக்காதீங்க. நாய்க்குட்டியோட தொப்பைகளை படம் பிடித்து பதிவேற்ற வேண்டும். சும்மா இருப்பாங்களா நம்மாட்கள்? வித விதமான போட்டோக்களை பதிவேற்ற களைகட்டியுள்ளது இன்ஸ்டாகிராம். பதிவேற்றப்பட்டதில் மில்லியன் ஹிட் போட்டோக்கள் அதிகம். 

 


ஏப்ரல்  #2016TechRecap

 

'எல் நினோ'வின் தங்கை 'லா நினா' வருகிறது

கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' வெப்ப சலனத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெப்பத்தில் தகித்தது. 'எல் நினோ'வின் தாக்கம் இந்த ஆண்டு குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சுந்தர்பிச்சையும் மார்க்கும் ஏன் அழுதார்கள் தெரியுமா?

2016TechRecap

அமெரிக்காவின் சிலிகான் வேலியில் முக்கிய சி.இ.ஓக்கள் முன்னிலையில் கணித மேதை ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ராமானுஜத்தின் வாழ்க்கையை பார்த்து சுந்தர் பிச்சையும், மார்க் சக்கர்பெர்க்கும் கண்ணீர் வடித்துள்ளனர். மேலும் ராமானுஜத்தின் பெயரில் அமைப்பு ஒன்றை இணைந்து உருவாக்கவும் சபதம் எடுத்துக் கொண்டனர்.

அனிருத்தை பாராட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒவ்வொரு வருடமும்  இளம் விஞ்ஞானிகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வெள்ளை மாளிகையில் நடத்தி வருகிறார். இந்த ஆண்டு மின்சாரம் இல்லாமல் மருந்துகளை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதனப் பெட்டியை கண்டுபிடித்த இந்திய மாணவர் அனிருத் கணேசனை ஒபாமா மிகவும் பாராட்டினார். 

மே முதல்  ஆகஸ்ட் வரையிலான டெக் நிகழ்வுகள் நாளை.....

vikatan.

  • தொடங்கியவர்

 

பூமியின் பழமையான பனியைத் தேடி ஒரு பயணம்...
-----------------------------------------------------------------------------------------------

பூமியின் மிகப்பழமையான பனியைத்தேடும் உலக நாடுகளின் ஆய்வு முயற்சியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளும் இணைந்திருக்கிறார்கள். அந்த ஆதிப்பனிக்குள் உறைந்திருக்கும் ரகசியங்கள், பூமியின் தட்பவெப்ப வரலாற்றை திறக்கும் திறவுகோல்களாக இருக்கும் என்றும் அதைக்கொண்டு புவியின் சுற்றுச்சூழல் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

BBC

  • தொடங்கியவர்

நேட் ஜியோ அட்டைப்படத்தில் முதன்முறையாக ’மூன்றாம் பாலின சிறுமி’...!

 

trans_16363.png

1985-ம் ஆண்டு நேஷ்னல் ஜியோகிரஃபிக் இதழின் அட்டை படத்தில் ஆஃப்கான் அகதி பெண்ணின் விரக்தி கோவம் நிறைந்த பச்சை நிற கண்கள்  உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதே போன்று தற்போது 2017 ஜனவரி மாத நேட் ஜியோ அட்டைப் படத்தில், பிங்க் நிற கூந்தலுடன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் 9 வயது மூன்றாம் பாலின சிறுமி ’ஏவரி ஜாக்சன்’, மீண்டும் ஒருமுறை உலகை நேட் ஜியோ பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.  128 வயதான நேட் ஜியோ இதழின் அட்டை படத்தில் திருநங்கை இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

vikatan

  • தொடங்கியவர்

உலகின் மிக உயரமான நினைவிடம் இந்தியாவில்!!

 

shivaji-memorial-759a_13276.jpg

அரபிக் கடலில் நிறுவப்போகும் மன்னர் சத்ரபதி சிவாஜி மெமோரியல் தான், உலகிலேயே மிக உயரமான நினைவிடமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ரூ.3,600 கோடி செலவில் மும்பை கடற்கரை பகுதியையொட்டி, சிவாஜி நினைவிடம் உருவாக்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் மோடி இந்த மிகப் பெரிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  

  • தொடங்கியவர்

தைமூர்...பேரைக் கேட்டதுமே சும்மா அதிரும்! #TaimurAliKhanPataudi

 

தைமூர்

பாலிவுட் நடிகை கரீனாவுக்கும் சைஃப் அலிகானுக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு... அவர்கள், ‘தைமூர்’ என்று பெயர் வைத்ததுதான் தற்போதைய ட்ரெண்டிங் தகவல். ‘தைமூர்’ என்றால் இரும்பு என்றும், சைஃப் வரலாற்றுப் புத்தகங்கள் நிறையப் படிப்பார் என்பதால்தான்... தைமூர் என்று பெயர் வைத்தார் என்றும் பாலிவுட் பின்னணிகள் பல தகவல்களைத் தருகிறார்கள். ஆனால், அது மட்டுமல்ல காரணம். ஹரியானாவின் பட்டோடி நவாப்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர் சைஃப்

KareenaTaimur_17106.jpg

முகலாய மன்னர்கள் காலத்தில் அவர்கள் ஆட்சி ஒற்றுமையுடன் நடந்திட குறுநில ஆட்சியாளர்களாகவும், அமைச்சர்களாகவும் நவாப்கள் இயங்கிவந்தனர். ஆற்காடு, வங்காளம், பட்டோடி, ஹைதராபாத், பங்கனபள்ளி என உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியப் பகுதிகளை மன்னர்கள், அவர்கள் வசம் ஒப்படைத்து ஆட்சிப் புரிந்தனர். இது, நவாப்களைப் பற்றிய மேலோட்டமான வரலாறு.  

முகலாயர்களின் காலம் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெற்றது. சுமார் 450 வருட காலங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களின் ஆதி அரசர் எனக் கருதப்படுபவர்தான் தைமூர். முகலாயப் பேரரசர் பாபரின் முப்பாட்டன். ஒருவகையில், தற்போது பெயர் சூட்டப்பட்டிருக்கும் பிள்ளை தைமூருக்கு, மரபணு ரீதியிலான தொடர்புடையவர்தான் அரசர் தைமூர்.  

Timur_defeats_the_sultan_of_Delhi_17286.

அரசர் தைமூர், முகலாயர்களில் கொடுங்கோல் அரசராகக் கருதப்பட்டவர். நாடோடி அரசர்களில் கடைசி தலைமுறை என்று கருதப்பட்டவர். அவருக்குப் பின்னான முகலாயர்கள் நிலையான ஒரு நிலத்தில்தான் தங்களது ஆட்சியை நிறுவினார்கள். செங்கிஸ்கானின் வழித்தோன்றலாகத் தன்னை அறிவித்துக்கொண்ட தைமூர், வாழ்நாளில் தான் போர் தொடுத்த இடங்களில் எல்லாம் செங்கிஸ்கானின் கொள்கைகளைப் பரப்பியதாக வரலாற்றின் ஒரு பக்கம் கூறுகிறது. தைமூரை, நாடோடி எனக் குறிப்பிட்டாலும்... ஈரான் தேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்கிறார் ஆய்வாளர் சாண்டர்ஸ். 1370-ல் தொடங்கி எகிப்திலிருந்து தெற்கு ரஷ்யா, மத்திய ஆசியா எனப் பல பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கி இருந்தார் அரசர் தைமூர். தற்போதைய பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த தைமூர், டெல்லியின் சுல்தான் நாசர் அல் தீன்... அவரது, சிறு படையைத் தோற்கடித்து அனுப்பியதை அடுத்து... கோபம் கொண்டு அப்போதே கொரில்லா முறைத் தாக்குதல் நடத்தித் தலைகளை வெட்டிச் சாய்த்ததாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். போரில், தொடையில் தைத்த காயம் ஆறாமல் போகவே... கால் தாங்கி நடக்கும் பழக்கம் தைமூருக்கு ஏற்பட்டது. ‘நொண்டி தைமூர்’ என்ற சொல்லாடலும் அதற்குப் பிறகுதான் வந்தது.  டெல்லியைக் கைப்பற்றிய பின் அங்கிருந்து அபகரித்த யானைகளை... தனது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்திக்கொண்ட தைமூர், அதற்கு வண்ணம் பூசி காவலுக்கு நிற்கவைத்ததைத் தனது குறிப்புகளில் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆய்வறிஞர்கள். 

Timur_reconstruction03_17117.jpg

தைமூர், சமயோசிதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் பெயர்போன அரசர். அதற்கு, தைமூரின் மங்கோலிய மற்றும் நாடோடிப் பின்புலமும் உதவியாக இருந்தது. சட்டத்தை, தன் போக்கில் மாற்றிக்கொள்ள இந்தப் பின்புலத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் தைமூர் காலத்தைப் பற்றிய குறிப்புகளில் கிடைக்கின்றன. இந்தியாவைக் கைப்பற்றிய பின் வெளியேறிய தைமூர், இங்கிருந்த கலைஞர்களையும் சிற்பிகளையும் தன்னுடன் அழைத்துப்போனதாக வரலாறு கூறுகிறது. அடுத்து, சீனாவைக் கைப்பற்றத் திட்டங்களை வடிவமைத்து வந்த நிலையில் உடல்நிலை சிக்கல் காரணமாக இறந்ததாகக் கூறுகின்றன குறிப்பேடுகள். உலகத்தின் பகுதிகளை, தன் கரம் கொண்டு உலுக்கியவரின் மரணம் சாதாரணமாக நிகழ்ந்ததாகக் கூறுகின்றன ஆவணங்கள். 

காலம் என்னும் பிரம்மாண்டத்தின் முன்னே யாவரும் ஒன்றுதானே!

vikatan

  • தொடங்கியவர்

அழகை மறைக்க முகம் முழுக்க டாட்டூ! ஆச்சர்ய மலைகிராமம்

 

டாட்டூ

அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார்கள். மாநிறம். பொலிவான முகம்.கொஞ்சம் சின்னக் கண்கள். வளைவுகள் இல்லாத நேரான, நீளமான முடி. அந்த முடி அத்தனை மிருதுவாக இருக்கும். மெல்லிய உதட்டில் அழகான சிரிப்பு. சீரான பற்கள். சில சமயங்களில் சீரற்று இருந்தாலும் கூட, அதுவும் ஒருவித அழகைக் கொடுக்கவே செய்தது. சிலருக்கு சிரித்தால் குழி விழும் கன்னங்கள். மழைக் காடுகளை கடந்தோடும் அந்தக் கால்கள், சேற்றில் நனைந்து கரு நிறம் அப்பிக் கிடக்கும். கூழாங்கற்கள் நிறைந்த அந்த ஓடையில் கால்களை நனைக்கும் போது, தெளிவாகி அந்த அழகு திணறடிக்கும்.  திடகாத்திரமான உடல், உறுதியான உள்ளம். இந்தப் பெண்களை எப்படியாவது அடைய வேண்டுமென்ற இச்சையில், ராஜாக்களும், இளவரசர்களும் இன்னும் பலரும் ... இவர்களைக் கடத்திக் கொண்டு போவது வாடிக்கையானது. அந்த இனத்திற்கு இது பெரும் வேதனையானது...

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பர்மாவின் வட மேற்கு மலைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் கதை தான் இது. இதிலிருந்து தப்ப, தங்கள் இனப் பெண்களைக் காத்திட ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். முகம் முழுக்க பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களின்  முக அழகை மறைத்துக் கொண்டனர். பிற்காலத்தில், இது அவர்களின் கலாச்சாராமாகவே மாறிப்போனது. 

இன்றைய மியான்மரின் சின் மாநிலத்தில் சின் (Chin), டய் (Dai), மகாங் (Makang), மன் (Munn), மகன் (Magan) என பல பழங்குடி இனங்கள் விக்டோரியா மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.  மியான்மர் தலைநகர் நே பிய் தோவில் (Nay Pyi Taw) இருந்து 7 மணி நேரம் சாலையில் பயணிக்க வேண்டும். பின்னர், 4 மணிநேரம் விசைப்படகில் பயணம். அங்கிருந்து சில மணி நேரம் மலைப் பாதையில் நடந்தால், இந்த மலைக் கிராமத்தை  அடையலாம். 

வயதானவர்கள் மற்றும் மத்திய வயதுப் பெண்களின் முகங்களில் சின்ன சின்ன வட்டங்கள், நீளமான கோடுகள், புள்ளிகள் என ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு வடிவங்களில் டாட்டூக்களை வரைந்துள்ளனர். பன்றி கொழுப்பு, மூலிகைச் செடி, புகைக் கரி, மாட்டுக் குடல் ஆகியவற்றை சேர்த்து இந்த டாட்டூவுக்கான ரசாயனத்தைத் தயாரிக்கிறார்கள். ஆரம்பத்தில், அழகை மறைக்க வரையப்பட்ட டாட்டூக்கள், காலப்போக்கில் அழகின் அடையாளமாக மாறிப் போயின. பூப்பெய்தும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான டாட்டூக்களைத் தேர்ந்தெடுப்பார்கள் . குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஆகும் அதை முகத்தில் வரைய. வலி உயிர் போகும். முகம் வீங்கிப் போய், வலி குறைய ஒரு வார காலமாகும். இருந்தும் இதை மகிழ்ச்சியோடு செய்து கொண்டிருந்தார்கள் சின் இன பெண்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் பழக்கத்திற்கு தடை விதித்தது மியான்மர் ராணுவ ஆட்சி. இன்று ஜனநாயக அரசுப் பொறுப்பேற்ற பின்னரும் அந்தத் தடைத் தொடர்கிறது. 

அரசாங்கத் தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைய தலைமுறையினர் இதை செய்து கொள்ளத் தயாராக இல்லை. இளைஞர்கள் இன்று காடுகளிலிருந்து வெளியேறி பலரும் படிக்க, பணிபுரிய என நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இதை விரும்புவதில்லை. இன்று டாட்டூ முகத்தோடு இருக்கும் பெண்கள் தான் இந்தக் கலாச்சாரத்தின் கடைசி தலைமுறை. இது மட்டுமில்லாமல் இந்த இனங்களில் இன்னும் சில மாறுபட்ட பழக்கங்களும் இருக்கின்றன. 

collage_02_Compressed_13243.jpg

ஒவ்வொரு வீட்டின் முன் பக்கத்திலும் ஒரு கோழி முட்டையை வைத்திருக்கிறார்கள். அது தங்களை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கும் என்று நம்புகிறார்கள். மூக்கின் வழியே புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். ஆண்கள் வீடுகளில் சமைக்கக்கூடாது என்ற வழக்கம் இருக்கிறது. தன் மனைவி வீட்டிற்குப் போகும் கணவன்மார்கள் அங்கு ஏதொரு அசைவ உணவையும் சாப்பிடக் கூடாது. இப்படி பல பழக்கங்களும், அதற்கான பின்னணி காரணங்களும் அவர்களிடமிருக்கின்றன. 

இவர்களின் இந்த வாழ்வைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அந்தக் கிராமங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலந்தின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடு பர்மா. பர்மீயர்களைத் தவிர வேற்று நாட்டவர் யாரைப் பார்த்தாலும், வெள்ளையர்கள் என்று நினைத்தே பயப்படுகிறார்கள். தங்களை, தங்கள் வாழ்க்கையை ஒரு காட்சிப் பொருளாக்குவதை இவர்கள் விரும்புவதில்லை. அவர்களை ஏதோ விலங்கியல் பூங்காக்களில் அடைத்து வைத்திருக்கும் மிருகங்களைப் பார்ப்பது போன்று சுவாரஸ்யத்தோடுப் பார்த்து, அவர்கள் வாழ்வை கிண்டல் செய்து நகர்கிறது ஒரு பெருங் கூட்டம். அவர்களை அப்படி அணுகாமல், அவர்கள் வாழ்வியலை ரசனையோடு உணர்ந்து கொள்ள வருபவர்களை உபசரிக்க அவர்கள் தவறுவதில்லை. சக மனிதராக எவரையும் அணுகுபவர்களுக்கு.. எங்கும் சிவப்புக் கம்பள வரவேற்புதானே! 

vikatan

  • தொடங்கியவர்

 

மெய்நிகர் மனைவி - காணொளி

BBC

  • தொடங்கியவர்

102 வயதில் கிடைத்த வெற்றி!

 

7769414-3x2-940x627_23524.jpg

டேவிட் குட்ஆல் என்ற விஞ்ஞானி 102 வயதிலும், ஆஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். பல்கலையின் ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்காக, அவர் தொடர்ந்து பல்கலைக்கு சென்று பணி செய்து வருகிறார். தினசரி ஒன்றரை  மணி நேரம் பயணம் செய்து, நான்கு, ஐந்து வழித்தடங்களில் மாறி, அவர் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். இதனால், பல்கலைக்கழக நிர்வாகம், அவரது உடல்நிலையைக் கருதி  2017-ஆம் ஆண்டு முதல் அவரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தியது. ஆனால், அதை டேவிட் ஏற்கவில்லை. இதையடுத்து, அவரது வீட்டிற்கு சற்று அருகில் உள்ள, ஒரு கேம்பஸில், அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட், "எனது பழைய அலுவலகத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன். எனது உடல்நிலைக் கருதி செய்யப்பட்ட இந்த மாற்றம் தேவையற்றது" எனக்கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Text

 

ரசிகர்களின் மனதில் ராணியாக வலம் வரும் அழகு நடிகை தமன்னாவின் பிறந்தநாள்
Happy Birthday Tamannaah

 

  • தொடங்கியவர்

ரெயின்கோட் ரகசியங்கள்!

 

 
raincoat_3106531f.jpg
 
 
 

பள்ளிக்குக் கிளம்பும்போது மழை வந்தால் உங்கள் அம்மா என்ன செய்வார்? குடையைக் கொடுத்து அனுப்புவார். இல்லாவிட்டால் ரெயின் கோட்டை மாட்டிவிட்டு அனுப்பி வைப்பார் அல்லவா? மழைத் துளிகளில் இருந்து நம்மைக் காக்கும் இந்த ரெயின் கோட் எப்படி வந்தது?

ரெயின் கோட் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக இருந்தவர் ஃபிரான்சுவா ஃப்ரெஷ்நியூ என்ற பிரெஞ்சு இன்ஜினியர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீர் புகாத துணியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் ரெயின் கோட் உற்பத்தியைத் தொடங்கியவர் சார்லஸ் மேக்கின்டாஷ் என்ற ஆங்கிலேயர். இவர் ரெயின் கோட்டை எப்படித் தயாரித்தார் தெரியுமா?

இரண்டு காட்டன் துணிகளுக்கு நடுவே ஒரு மெல்லிய ரப்பரை வைத்துத் தைத்தார். அந்த ரப்பரை மென்மையாக்கக் கொஞ்சம் டர்பன்டைனையும் கலந்தார். பின்னர் ரெயின் கோட்டாகத் தைக்க டெய்லரிடம் கொடுத்தார். டெய்லர் தைத்துக் கொடுத்தவுடன் சட்டை போல ரெயின் கோட் தயாராகிவிட்டது. இதுவே மேக்ஸ் என்றழைக்கப்படும் மேக்கின்டாஷ் ரெயின் கோட்டின் வரலாறு. மேக்கின்டாஷ் உடைகள், மழையில் இருந்து உடலைக் காத்தன. ஆனால், மழை நின்று வெயில் அடித்தால் அவ்வளவுதான். உள்ளே வியர்த்துக் கொட்டும். ரப்பர் இளகி உடலோடு ஒட்டிக்கொள்ளும். ரப்பரின் வாசனையும் பாடாய்ப் படுத்தும்.

ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர்தான் இந்தப் பிரச்சினையைப் பல ஆண்டுகள் கழித்துத் தீர்த்து வைத்தார். இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான மழை உடைகள் வேதிப் பொருட்கள் கலந்தவைதான். இந்தக் காலத்தில் கோட் தயாரிக்கச் செயற்கை ரப்பரும் பயன்படுகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்
உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம்
 
 

article_1482378603-i-love-my-job_23-2147உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம். சாதாரணமாகக் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கூட உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  

சோம்பலை விடுத்து எமது பணியை நாங்களே முடிப்போமாக. எமது வேலை பற்றிப் பூரணமாக நாங்களே தெரிந்து வைத்திருக்கும்போது, ஏனையவர்கள் அதனைப் புரியாமல், உங்கள் சார்பில், கருமமாற்றும்போது, ஏற்படும் பாதிப்பு உங்களுக்கேயானது. உங்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு அல்ல. 

மிகப்பெரிய கருமங்களை நீங்கள் பிறர் உதவியுடன் செய்ய முற்படும்போது, அடிக்கடி சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கருமங்களைச் சரியாக நெறிப்படுத்துவீர்களாக. 

எந்தக் கருமங்களையும் செய்வதற்கு முற்படும்போது, இதனை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக நிறைவேற்றுவேன், எனத் திடசங்கல்பம் கொள்க. உங்கள் கருமங்களுக்குப் பிறர்மீது பாரம் சுமத்த வேண்டாம்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் (டிச.22, 1851)

 

இந்தியாவின் முதலாவது சரக்கு ரெயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் 1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்தியாவில் தயாரான ஒரு சரக்கு ரெயில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது அன்றை நாள்தான். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 
 
 
 
இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் (டிச.22, 1851)
 
இந்தியாவின் முதலாவது சரக்கு ரெயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் 1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்தியாவில் தயாரான ஒரு சரக்கு ரெயில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது அன்றை நாள்தான்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1666 - சீக்கிய குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள்.

• 1937 - நியூயார்க் நகரில் லிங்கன் சுரங்கம் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

• 1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பயன்படுத்த வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

• 1963 - லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
 
 

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள்

(டிச 22, 1887)

 
 

உலகத்தை வியக்கச் செய்த பெரும் கணித மேதை ராமானுஜன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் 1887-ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசய்யங்கார். தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுஜனின் தந்தையாரும், தந்தை வழிப்பாட்டனாரும்

 
 
 
 
கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் (டிச 22, 1887)
 
உலகத்தை வியக்கச் செய்த பெரும் கணித மேதை ராமானுஜன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் 1887-ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசய்யங்கார். தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுஜனின் தந்தையாரும், தந்தை வழிப்பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தாளராக பணியாற்றி வந்தனர்.

தாய்வழி பாட்டனாரும் ஈரோட்டு முன்சீப் அறமன்றத்தில் அமீனாக வேலைபார்த்தவர். ஆகவே, இவர் எளிய குடும்பத்தில் ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுணர்ந்தார்.

எண்களின் பண்புகளை அறிய எண் கோட்பாடகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மீன்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர் மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஜிம்முக்கு போகாமல் ஸ்லிம் ஆக்கும் பப்பாளி!

 

Super-sweet-Golden-yellow-papaya-fruit-s

பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், riboflavin உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு ’ஆல் ரவுண்டர்’ பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி  செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்!

  • தொடங்கியவர்

ஜூமா... ஹராம்பே... சக்திமான்... மனிதர்களிடம் சிக்கி உயிரிழந்த ஜீவன்கள்! #2016Rewind

 

2016ல் மனிதர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் விலங்குகளுக்கு அல்ல. இந்த ஆண்டு செய்திகளில் இடம்பெற்ற சில முக்கிய விலங்குகளை கொஞ்சம் நினைவு கூரலாம்.

1) பத்ரா:

1482139750_Bhadra_10470.jpg

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் இழிவான செயலில் சிக்கியது பத்ரா என்னும் நாய். மொட்டை மாடியில் இருந்து அந்த நாய்க்குட்டியை தூக்கி எறிந்து, ஸ்லோ மோஷனின் வீடியோ பிடித்து வைரல் ஆக்கினட் அந்த எதிர்கால டாக்டர்கள். பத்ரா கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு மருத்துவ உதவியும் கொடுக்கப்பட்டது. மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 


2) நாய்க்குட்டியும் குரங்கும்:

மனிதர்

தளபதி படத்தின் பிஜிஎம்மை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த குரங்கும், நாய்க்குட்டியும் சூர்யா தேவாதான். இரண்டும் இனங்களும் பரம விரோதிகள். ஆனால், ஒரே தட்டில் பால் குடிக்கும் அளவுக்கு நண்பர்கள். இத்தனைக்கும் சூர்யா நாய்க்குட்டியை, தேவா குரங்கு, பெரிய நாய் கும்பல் ஒன்றிடம் இருந்து காப்பாற்றித்தான் தன்னுடன் வைத்துக் கொண்டது.

விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

 

3) சித்தா யானை

e2_10479.jpg

கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக வனபப்குதியினர் தெரிவித்திருந்தனர். அந்த ஐந்து யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். அதற்கிடையில், சித்தா என்ற ஒரு யானை நகருக்குள் புகுந்து, சாலையை கடக்க முயற்சித்தது. அதிகாலை நேரம். அப்போது அங்கு வந்த அரசுப்பேருந்து ஒன்று யானை மீது மோத, அங்கேயே சரிந்தது சித்தா. அதன் கால் முறிந்தது. மருத்துவர்களின் நீண்ட முயற்சிக்கு பின் நவம்பர் மாதம் எழுந்து நின்றது சித்தா.

விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

 

4) சக்திமான் குதிரை

1482139749_shaktimaan_10434.jpg

  உத்தராகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க போராட்டம் நடத்தியது. போராட்டத்தை அடக்க வந்த போலீஸார் பயன்படுத்திய குதிரைதான் சக்திமான். அங்கிருந்த பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி குதிரையை கம்பால் வெறி கொண்டு தாக்கினார். இதில் சக்திமானின் கால் உடைந்து போனது. பின், சக்திமானுக்கு செயற்கை கால் பொருத்தினார்கள். ஆனாலும், சக்திமானின் உடல்நிலை மோசமாகவே இருந்தது. இறுதியில் உயிரை விட்டது சக்திமான். மனிதர்களை எதிர்த்து மனிதர்கள் போராடியதில், ஒரு குதிரையின் உயிர்தான் போனது.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 


5) ஜூமா சிறுத்தை

brez_10300.jpg


ஒலிம்பிக் டார் ஓட்டத்திற்காக அமேசான் காடுகளில் புகழ்பெற்ற சிறுத்தை ஒன்றை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சிறுத்தைதான் ஜூமா. நிகழ்ச்சி நடந்த இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு வைத்திருந்தார்கள். திடிரென பயிற்சியாளரின் கைகளில் இருந்து சங்கிலி நழுவ, ஜூமா ஓடத் தொடங்கியது. அதுதானே விலங்குகளின் இயல்பு? அதை பார்த்த ராணுவ வீரர் ஒருவர் ஜூமாவை நோக்கி சுட்டார். அங்கே செத்து வீழ்ந்தது ஜூமா
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும்

6) ஹராம்பே சிம்பன்ஸி

1482139750_Harambe_10384.jpg


சின்சினாட்டி நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் வாழ்ந்து வந்த சிம்பன்ஸிதான் ஹராம்பே. அங்கு வந்த பார்வையாளரின் மூன்று வயது குழந்தை ஒன்று தவறி ஹராம்பே வாழ்ந்த பகுதிக்குள் விழுந்து விட்டது. அங்கிருந்து தவழ்ந்தே அந்த குழந்தை மேலே ஏறியது. மீண்டும் தண்ணீருக்குள் விழுந்தது.

அங்கிருந்த மூன்று சிம்பன்ஸிகளை ஊழியர்கள் கூண்டுக்குள் அடைக்க முயற்சித்தனர். அதில் ஹராம்பே என்ற சிம்பன்ஸீ தவிர மற்ற இரண்டும் உள்ளே சென்றது. குழந்தையை நோக்கி சென்ற ஹராம்பேவின் நடவடிக்கைகளை பார்த்து பயந்த ஊழியர்கள் அதை சுட்டுக் கொன்று விட்டனர். சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம் தான் ஹராம்பேவின் 17வது பிறந்த நாள்.


7) பான் உர்ராங்குட்டான்

pan_10262.jpg

“உங்களுக்கு மத்தில வாழ்றதே சாதனைதான்” என்பது சினிமா பன்ச் மட்டுமல்ல. விலங்குகளுக்கு நிஜத்திலும்தான். உலகின் மூத்த உர்ராங்குட்டான் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது பான்.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

vikatan

  • தொடங்கியவர்

சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் : ஆய்வாளர்களின் கருத்தும் பொய்மையானது

 

 

வறட்சியாக காணப்பட்ட சகாரா பாலைவனம் முதன் முறையாக பனிமழையால் நிரம்பி பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவம்  அல்ஜிரியாவின் அன்செப்ரா நகரில்  பதிவாகியுள்ளது.3B88FD0500000578-4051448-Stunning_The_pi

1979 ஆம் ஆண்டில் அல்ஜிரியா அன்செப்ரா பாலைவனப் பகுதியில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது பனிப் பொழிவுகள் நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். 3B88FD6000000578-4051448-It_made_for_par

இப் பனிப்பொழிவுகளுடன் சாகாரா நிலத்தின் தோற்றம் மிகவும் அழகாக காட்சியளிப்பதை புகைப்படக் கலைஞர் கரிம் பௌஞ்செட்டா என்பவர் பதிவு செய்துள்ளார்.

உலகில் மிகப் பெரிய வரறட்சி பாலைவனமான சகாரா மீண்டும் பசுமைக்கு திரும்புவதற்கு 15000 ஆண்டுகள் தேவை என ஆய்வாரள்கள் கூறிவந்த நிலையில் 1000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெற்றிருப்பது வட ஆபிரிக்க பிராந்தியத்திற்கு அழகூட்டிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.3B88FD4400000578-4051448-It_is_just_the_3B88FD1100000578-4051448-This_time_the_s3B88FD4F00000578-4051448-Snow_was_last_s3B88FD4A00000578-4051448-Photographer_Ka3B88FCFD00000578-4051448-Karim_captured_

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஷாரூக் படத்தில் சன்னி லியோன் நடனமாடிய வீடியோ..!

 

maxresdefault_16347.jpg

ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான், மஹிரா கான், நவாசுதின் சித்திக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம், ‘ரயீஸ்’. அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘ரயீஸ்’ திரைப்படத்தில் சன்னி லியோன் நடனமாடியிருக்கும் பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டது. 

 

  • தொடங்கியவர்

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் இந்தோனீஷியா புகைப்படக் கலைஞர்

மொஹமத் ரோயம் இந்தோனீஷியாவை சேர்ந்த கத்துக்குட்டி புகைப்பட கலைஞர். இவர் எடுக்கும் புகைப்படங்களில், உயிரினங்களை மிக அருகில் பதிவு செய்திருக்கிறார்.

Wildlife photograph of a gecko by Muhammad Roem

இந்த வேடிக்கையான பல்லியின் புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்கிறார் மொஹமத் ரோயம்

நடனமாடும் தவளைகளில் ஆரம்பித்து வேடிக்கையான பல்லி வரை, 28 வயதுடைய ரோயமின் கேமராவில் எதுவும் தப்பவில்லை.

Wildlife photograph of an insect by Muhammad Roem

ரோயமின் சில புகைப்படங்கள் உண்மையில் மிகவும் கவனிக்கத்தக்கவை

முழு நேர செவியலராக பணியாற்றும் ரோயம் மூன்றாண்டுகளுக்கு முன்பு, பொழுது போக்கிற்காக புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார்.

தற்போது, பட்டமை சேர்ந்த இந்த கலைஞர், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் உயிரினங்களை படம் பிடிக்க துரத்திக் கொண்டிருப்பார்.

Close-up of an Iguana's eye by Muhammad Roem

கண்கள் மூடினால் தருணத்தை தவறவிட்டுவிடுவீர்கள் - உடும்பின் கண்

Wildlife photograph of a frog by Muhammad Roem

தவளைகளின் ரசிகன் மொஹமத் ரோயம்

Wildlife photograph of frogs by Muhammad Roem

மொஹமத் ரோயம் 100mm மாக்ரோ லென்ஸை பயன்படுத்துகிறார். ஆனால், மிகவும் நெருக்கமான துல்லிய படங்களுக்கு MP E 65mm லென்ஸை தேர்வு செய்கிறார்.

Wildlife photograph of the red & black Mason Wasp (Pachodynerus Erynnis) by Muhammad Roem

குளவியின் முகத்தில் தெரியும் துல்லியம்

Wildlife photograph of a dragonfly by Muhammad Roem

தும்பி மீது மழையை உங்களாலும் உணர முடியும்

'பூச்சிகளின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாட்டை படம் பிடிக்க அதனை பின் தொடர்ந்து செல்வேன். சிலநேரங்களில் டஜன் கணக்கான புகைப்படங்களில் ஒன்று மட்டுமே நல்ல உணர்ச்சி வெளிப்பாட்டை கொண்டிருக்கும். மற்ற நாட்களில், எனக்கு எதுவும் கிடைக்காது'' என்று சொல்கிறார் பிபிசியிடம்.

''ஒரு விலங்கின் குறிப்பிட்ட பாகங்களை கூர்ந்து நோக்குவது பெரும்பாலோனருக்கு தெரிவதில்லை அல்லது அதில் ஆர்வம் காட்டுவதில்லை'' என்று கூறுகிறார் ரோயம். '' நான் விலங்கின் குறிப்பிட்ட ஒரு பகுதியை காட்ட முயற்சி செய்வேன். அதாவது உயிரினத்தின் கண்களை நீங்கள் பார்த்தால் அற்புதமாக இருக்கும்''.

 

BBC

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 22

 

1790 : துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவரின் படைகள் கைப்பற்றின.

 

1807 : வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.

 

871varalaru-top-only.jpg1845 : பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

 

1849 : ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

 

1851 : இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

 

1915 : மலேஷியாவின் இலங்கைத் தமிழர்களின் நிதி உதவியால் வாங்கப்பட்ட  விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்விமானத்துக்கு "யாழ்ப்பாணம்" என பெயரிடப்பட்டிருந்தது.

 

1937 : லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

 

1963 : லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.

 

1989 : ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

 

1989 : கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் ஜேர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 : மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன சுதந்திரம் அடைந்தன.

 

2001 : ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திடம் ஆப்பானிஸ்தானின் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.

 

2001 : பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து அமெரிக்காவின் மியாமி நகரை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த பிரித்தானியரான ரிச்சர்ட் றீட், தனது பாதணிக்குள் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டின் மூலம் விமானத்தை தகர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் மரத்தின் கதை

 

 
christmas_tree_3107004f.jpg
 
 
 

கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.

இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது. இந்தப் பழக்கம் சீர்திருத்த கிறிஸ்தவ மதம் தோன்றிய பிறகு ஒழிந்தது. அப்படிப்பட்ட சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தவரான மார்ட்டின் லூதர் கிங் என்ற பாதிரியாரால்தான் கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

போனிபேஸ் வெட்டிய மரம்

ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடும்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்தமரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.

ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்தசில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப் போலவே கம்பீரமாக எழுந்து நின்றதை மக்கள் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் பார்க்கத் தொடங்கினார்கள். பாதிரியார் போனிபஸ் தனது ஊழியத்தை முடித்துக்க்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.

இதனால் கிறிஸ்வ வழிபாட்டில் பத்தாம் நூர்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது. ஆனால் கிறிஸ்துமஸ் மரமாக அது அப்போது உருப்பெறவில்லை.

மார்ட்டின் லூதர் வியந்த ஒளி மரம்

சீர்திருத்த கிறிஸ்துவ மதம் உருவாகக் காரணமாக இருந்த மார்ட்டின் லூதர் கிங்கும் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்தான். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார். இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களின் வர்த்தகச் சந்தை இன்று அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 50 ஆயிரம் மில்லியன் டாலர்கள் மதிப்பு என்றால் நம்ப முடிகிறதா?

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஒன்றரை ஆண்டில் 196 நாடுகள்!

 
கசன்ட்ரா டி பேகோல்
கசன்ட்ரா டி பேகோல்
 
 

எப்படி சச்சின் டெண்டுல்கர் செய்ததெல்லாம் சாதனையாக இருக்கிறதோ, எப்படி கருணாநிதி தொட்டதெல்லாம் சாதனையாக இருக்கிறதோ அப்படி ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் அமெரிக்கப் பெண் கசன்ட்ரா டி பேகோல்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் என்கிறீர் களா? வெறும் ஒன்றரை வருடத்துக்குள் இந்தப் பூகோளத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கிறார். ‘குறைந்த வயதில் உலகைச் சுற்றியவர்’, ‘மிகக் குறைந்த நாட்களில் உலகின் பல பகுதிகளுக்குச் சென்றவர்’, ‘15 மாதங்களில் 254 விமானங்களில் பயணித்தவர்’, ‘குறுகிய காலத்தில் உலகின் வெவ்வேறு பகுதியிலிருந்து சூரியனைப் பார்த்தவர்’, ‘குறுகிய காலத்தில் நான்கு பாஸ்போர்ட் புத்தகங்களைக் காலி செய்தவர்’ என்று சில உப சாதனைகளும் இவருடன் சேர்ந்துவிட்டன. இலோ லியு என்பவரது கின்னஸ் சாதனையையும் இவர் முறியடித்தார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் நகரைச் சேர்ந்த இவரின் வயது 27. இந்த உலகத்தை ஒரு ரவுண்ட் வந்தால் எப்படியிருக்கும் என்ற சாதாரண ஆசையையே லட்சியமாக்கி, ‘இலக்கு 196’ என்ற பெயரில் வீட்டிலிருந்து கிளம்பினார் கசன்ட்ரா. 2015 ஜூலையில் அமெரிக்காவிலிருந்து கிளம்பிய இவர், உலகிலுள்ள 196 நாடுகளில் இதுவரை 190 நாடுகளுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் 6 நாடுகளையும் இந்த வாரத்துக்குள் நிறைவு செய்துவிடுவார் என்கிறார்கள்.

இந்தப் பயணத்துக்குச் சுமார் 2 லட்சம் டாலர் (நம் நாட்டு மதிப்பில் சுமார் ரூ.1.30 கோடி) செலவழித்திருக்கிறார் கசன்டிரா. சென்ற எல்லா நாடுகளிலும் இரண்டு முதல் 5 நாட்கள் தங்கி அந்நாட்டின் இயற்கை அழகு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் உலகமறியச் செய்கிறார். இவர் எடுத்த சில புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன.

கல்லூரியில் படிக்கும்போது, அமெரிக்கா வில் உள்ள ஒரு மழைக் காட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார் கசன்ட்ரா. அப்போது கிடைத்த அனுபவம் காரணமாக உலகத்தையே சுற்றிவர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

இதற்காக உணவகங்களில் உணவு பரிமாறுதல், வணிக வளாகங்களைச் சுத்தம் செய்தல், தோட்டங்களில் செடிகளை நடுதல் போன்ற வேலைகளைச் செய்து சேர்த்த பணத்தில் தனது 24 வயதில் ஒரு சுற்றுலா சென்றார். அப்போது அவரால் வெறுமனே 24 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. உலகத்தையே சுற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவர், முந்தைய பயணம் மூலம் கிடைத்த அனுபவத்தோடு, பயணச் செலவுக்கு விளம்பர உபயதாரர்களின் உதவியை நாடினார். சாதித்துவிட்டார்.

நாமெல்லாம் பக்கத்து மாவட்டத்துக்குப் பயணப்பட்டாலே, அலுப்பாகி அரை நாள் விடுப்பெடுத்துவிடுகிறோம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

அலெப்போ நகர்: போருக்கு முன்பும் பின்பும்
---------------------------------------------------------------------------

அழகையும் அழிவையும் பேசும் படங்கள்......

  • தொடங்கியவர்

15589589_676935355806316_286825824713539

வரலாற்றில் ஒரு அரிய புகைப்படம்...

யேசுநாதர் வேடத்தில் மறைந்த MGR, அவருடன் அவரது அரசியல் எதிரியும் நீண்டகால நண்பருமான கலைஞர் கருணாநிதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.