Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது

சிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

 
ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது
 
சிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்ற தவறாக கருத்து சிலரிடம் உள்ளது. மிகத் தவறான கருத்து.

நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.

ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.

எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம். இரண்டுமே சிறந்த பயிற்சிகள் தான். அவரவர் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி

இந்தியாவில் உள்ள உலக புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலில் நடைபெறும் பலூன் திருவிழாவில் 50 அடி உயரத்தில் வானில் பறப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். இத்திருவிழாவிற்கு 12 நாடுகளிலிருந்து 15 விமானிகள் வந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

15590531_1342875559104564_83685678712829

 

``ஏ.டி.எம் எல்லாம் காலியாக இருப்பதைப் பார்த்தால், நிலைமை சீராகிவிட்டதுபோலிருக்கே!''

``நாம்தான் ஏ.டி.எம்-மில் பணமே போடுவது இல்லையே மன்னா!''

  • தொடங்கியவர்
உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம்
 
 

article_1482378603-i-love-my-job_23-2147உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம். சாதாரணமாகக் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கூட உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  

சோம்பலை விடுத்து எமது பணியை நாங்களே முடிப்போமாக. எமது வேலை பற்றிப் பூரணமாக நாங்களே தெரிந்து வைத்திருக்கும்போது, ஏனையவர்கள் அதனைப் புரியாமல், உங்கள் சார்பில், கருமமாற்றும்போது, ஏற்படும் பாதிப்பு உங்களுக்கேயானது. உங்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு அல்ல. 

மிகப்பெரிய கருமங்களை நீங்கள் பிறர் உதவியுடன் செய்ய முற்படும்போது, அடிக்கடி சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கருமங்களைச் சரியாக நெறிப்படுத்துவீர்களாக. 

எந்தக் கருமங்களையும் செய்வதற்கு முற்படும்போது, இதனை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக நிறைவேற்றுவேன், எனத் திடசங்கல்பம் கொள்க. உங்கள் கருமங்களுக்குப் பிறர்மீது பாரம் சுமத்த வேண்டாம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 23

 

1783 : அமெ­ரிக்க  இரா­ணுவத் தள­பதி பத­வி­யி­லி­ருந்து ஜோர்ஜ் வொஷிங்டன் வில­கினார்.

 

1947 : முத­லா­வது டிரான்­சிஸ்டர் அமெ­ரிக்­கா­வி­லுள்ள பெல் ஆய்­வு­கூ­டத்தில் வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

 

1948 : பிர­தமர் டோஜோ உட்­பட ஏழு ஜப்­பா­னியப் போர்க் குற்­ற­வா­ளி­க­ளுக்கு டோக்­கி­யோவின் சுகோமோ சிறையில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1954 : முத­லா­வது மனித சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

872varalaru-1-%281%29.jpg1970 : நியூ­யோர்க்கில் உலக வர்த்­தக நிலைய கட்­ட­டத்­தொ­கு­தியின் வடக்கு கோபுரம் திறக்­கப்­பட்­டது. 417 மீற்றர் உய­ர­மான அக்­கட்­டடம் உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மாக விளங்­கி­யது. 

 

1972 : நிக்­க­ர­குவா நாட்டின் தலை­நகர் மனா­கு­வாவில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 10,000 இற்கு மேற்­பட்டோர் இறந்­தனர்.

 

1972 : தென் அமெ­ரிக்­காவில் அந்தீஸ் மலைத்­தொ­டரில் இடம்­பெற்ற விமான விபத்தில் உயிர் தப்­பிய 16 பேர், 73 நாட்­க­ளுக்குப் பின்னர் காப்­பாற்­றப்­பட்­டனர். இவர்கள் இறந்த சகாக்­காளின் மாமிசம் உட்­கொண்டு உயிர்­பி­ழைத்­தனர். இது அந்தீஸ் ஆச்­ச­ரியம் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

 

1979 : ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூலை சோவியத் யூனி­யனின் படைகள் கைப்­பற்­றின.

 

1986 : எங்கும் தரை­யி­றங்­காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமா­னி­க­ளுடன் கலி­போர்­னி­யாவில் தரை­யி­றங்­கி­யது.

 

1990 : 88 சத­வீத ஸ்லோவே­னிய மக்கள், யூகோஸ்­லா­வி­யாவில் இருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

 

2003 : ஈராக்கில் இயற்கை வாயு வய­லொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் 234 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2007 : நேபாளத்தில் மன்ன ராட்சியை ஒழித்து பிரதமர் தலைமையிலான கூட்டாட் சியை ஏற்படுத்துவதற்கு   உடன்பாடு காணப்பட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15672983_1343484319043688_32319406071029

 

டிச.: 23: விவசாயிகள் தினம்! - வாழ்த்துகளை பகிர்வோம்!

'இந்தியா ஒரு விவசாய நாடு’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம்.

விவசாயம் பெருமதிப்புமிக்கதாக நாளாக மாற விவசாயத்தையும், விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு மிக்க நாளில் வாழ்த்துகளை பகிர்வோம்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, Brille und Text
 

டிச.23: தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று

தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.

தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930ல். ஆம், 84 வயது கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்!

சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!

கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்று விடுவார் ரஜினி!

இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், 'நீர்க்குமிழி'. 'பொய்' வரை பட்டியல் நீள்கிறது!

ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில். கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!

தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!

மனைவியின் பெயர் ராஜம். கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!

பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். 'தென்றல் தாலாட்டிய காலம்' என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!

தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!

எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து 'எதிரொலி' என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!

மலையருவியும், கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்!

விநாயகர்தான் இஷ்ட தெய்வம். பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர்கூட 'விநாயகா'!

பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து, இவரை கல்லூரி வரை படிக்கவைத்தது கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத்துறையில் தான் பெரிய உயரத்துக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னமும் இருக்கு டைரக்டருக்கு!

1972 மார்ச் 10ஆம் தேதி வரை செயின் ஸ்மோக்கர். மார்ச் 11ஆம் தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!

கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். 'ஏக் துஜே கேலியே' மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய 'தேரே மேரே பீச் மே' இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!

பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!

அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். 'இரு கோடுகள்' படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலை வைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!

சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் 'ரெட்டச் சுழியில்' நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடித்து வந்தார்!

இன்னமும் சினிமாதான் உலகம். சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும்தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!

படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். '16 வயதினிலே' பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா!

சூட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம்கூட காண முடியாது!

ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!

தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது 'ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!

vikatan

  • தொடங்கியவர்

'பனானா' பவுன்ராஜ் முதல் யோகிபாபு வரை - 2016 ன் டாப் காமெடியன்ஸ்!

 

காமெடியன்ஸ்

டிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி ஃபீல்டில் இல்லாத இந்த வருடத்தில் 'பனானா' பவுன்ராஜ், யோகிபாபு எனப் பல புது காமெடியன்ஸ் குறுக்கே புகுந்து ஸ்கோர் செய்தார்கள். ஒரு படம் வெற்றிப்படமாவது அந்தப் படத்தில் ஹிட் அடிக்கும் காமெடிக் காட்சிகளையும் வைத்துத்தான். 2016 -ல் காமெடியில் கலக்கியவர்களின் லிஸ்ட் இது... 

 

பவுன்ராஜ் : 

 

இந்த வருடத்தில் இவர் நடித்ததே இந்த ஒரு படம்தான். ஆனாலும், பார்க்கும் ரசிகர்களைப் படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் 'பனானா பவுன்ராஜ்'. 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை' எனச் சொன்னது இவர் ஸ்லாங்கில் எட்டுத்திக்கும் ஹிட் அடித்த காமெடி. ஒவ்வொரு ஊர்ப் பஞ்சாயத்துக்கும் ஃபாலோ பண்ணிப்போய் அவ்வப்போது கவுன்ட்டர்கள் இறக்குவது, சூரியைக் கலாய்ப்பது என பாடி லாங்குவேஜ், டைமிங், ஸ்லாங் எனப் பட்டையைக் கிளப்பினார். இதற்கு முன்பு, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும் கிச்சுக்கிச்சு மூட்டிய இவர் இயக்குநர் பொன்ராமின் அசிஸ்டென்ட் டைரக்டராம்.

 

யோகி பாபு : 

 

வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியனாக நடிக்காத இந்த வருடத்தைக் கொஞ்சம் நிரப்பியதில் நிறையப் பங்கு யோகி பாபுவுக்கே. புறாக்கூடு போல மண்டை, ஸ்டைலிஷ் இங்கிலீஷ் எனப் பார்த்ததும் சிரிக்கவைக்கும் தோற்றத்தைச் சரியாகப் பயன்படுத்தி இந்த வருடம் இவர் செய்தது காமெடி டிராஜடி. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'ரெமோ', 'ஆண்டவன் கட்டளை, 'குற்றமே தண்டனை' உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார். 'ஆண்டவன் கட்டளை'யில் விஜய் சேதுபதியோடு அலைந்து திரிந்து வாடகைக்கு வீடு தேடுவது, 'ரெமோ'வில் 'ரெஜினா மோத்வானி'க்கு ரூட் போடுவது என காமெடி கிடார் வாசித்தார். குழந்தை ரசிகர்களைத் தன்னிடத்தில் ஈர்க்கும் மேஜிக் வடிவேலுவுக்குப் பிறகு இவருக்கு வெகுவாய் வாய்த்திருக்கிறது. இந்த வருடத்தின் காமெடி பாம் யோகிபாபு. 

விஜய் வரதராஜ் : 

 

இந்த ஆண்டின் இன்னொரு புதுவரவு காமெடியன் விஜய் வரதராஜ். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் ஜி.வி.பிரகாஷின் நண்பனாகக் கூடவே லந்து பண்ணிய விஜய் வரதராஜுக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம் பக்கா. இந்தப் படத்தின் மூலம் சினிமாத் துறையில் கவனிக்கப்படும் காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். 

 

பால சரவணன் :

 

'ஒரு நாள் கூத்து' படம் பாலசரவணனுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்த 'அண்டா' நடிகரும் கவனிக்கப் பட்டார். மேலும் இவர் நடித்த 'கவலை வேண்டாம்', 'ராஜா மந்திரி' படங்களிலும் தனக்குரிய ரோலைச் சிறப்பாகச் செய்துமுடித்திருந்தார். 

ஆர்.ஜே.பாலாஜி : 

 

ஹியூமர்சென்ஸ், கடகட டயலாக் டெலிவரி, எல்லோரையும் கலாய்க்கும் ரோல் என மொத்தமும் ஒருசேர வாய்க்க, 'க்ராஸ் டாக்' பாலாஜி இந்த வருடமும் காமெடியில் கலக்கினார். 'கடவுள் இருக்கான் குமாரு' படம் இந்த வருடத்தில் அவருக்கு குட் கிராஃப் ஏற்றிக் கொடுத்த படம். ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து மீடியாக்களை வறுத்தெடுத்து வடகமாய்க் காயப்போட்ட 'கடவுள் இருக்கான் குமாரு' பாலாஜியின் காமெடி இல்லையெனில் சுத்தமாகத் துடைத்துத் தொங்கப்போடப்பட்டிருக்கும். 'கவலை வேண்டாம்' எனப் படத்தின் பெயர் வைத்தாலும் பாலாஜிக்கு அந்தப் படத்தில் கவலை தீரவில்லை என்பதே நிஜம். 

பரோட்டா சூரி :

 

'ரஜினி முருகன்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' எனக் கலகல காமெடிப் படங்களில் நடித்து டென்ஜன் ரசிகர்களை கூல் ஆக்கிய சூரி எப்போதும் போல இந்த வருடமும் கிராமத்து ரசிகர்களின் டாப் சாய்ஸ். அவர் இங்கிலீஷ் பேசும் ஸ்டைலுக்கே லட்ச ரசிகர்களின் அப்ளாஸ்.'ப்ளீஸ் எல்ப் மீ... ப்ளீஸ் எல்ப் மீ...' என அவர் கையை ஆட்டி மிரட்டும் காட்சிகள் உட்பட அவருக்கே உரிய மேனரிசத்தோடு செய்த அதகளம். தனக்கு எது வரும் எனத் தெரிந்து ஸ்டைல் காமெடியை இறக்கிவிடும் சூரி, காமெடியில் கில்லாடி. 

ரோபோ சங்கர் : 

 

ரோபோ சங்கர் பத்துப் படங்களுக்கும் மேல் இந்த வருடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேர் சொல்லிய படங்கள் ஒன்றிரண்டுதான். அதில் ரொம்பவே ஸ்பெஷல் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. ஒரே வசனத்தை டயர்டாகாமல் சொல்லியெ எல்லோரையும் டயர்டாக்கி ரசிகர்களை உருண்டு புரண்டு சிரிக்க வைத்தார். 'அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்...' வசனம்தான் இந்த வருடத்தின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற காமெடி டயலாக். சின்னக் குழந்தையைப் போல மிட்டாயைச் சப்பிக்கொண்டே கார்ட்டூன் பார்த்துக்கொண்டே அவர் கலாய்த்தது கலகல.

சதீஷ் :

hqdefault_15332.jpg

வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்த சதீஷ் இந்த வருடம் அரை டஜன் படங்களுக்கு மேல் தலையைக் காட்டினார். சில படங்கள் சறுக்க, 'தேவி', 'றெக்க', 'ரெமோ' ஆகிய படங்கள் தூக்கி நிறுத்தின. இந்த மூன்றும் ஒரே நாளில் ரிலீஸான படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைமிங்கில் டயலாக் பாஸ் செய்வதில் சதீஷ் எப்போதும் கில்லி. அவருக்கு சிறப்பான காம்போ அமைந்தால் அந்தப் படத்தில் நகைச்சுவை தெறிக்கும்.

பிபின் : 

 

தமிழில் வெளிவந்த பிளாக் ஹியூமர் படமான 'ஜில் ஜங் ஜக்' தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்துவந்த கதைக் கட்டுமானங்களை உடைத்துப் புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. வாட்ஸ்அப் தலைமுறை மக்கள் மத்தியில் மோஸ்ட் பாப்புலர் கேரக்டரான 'ஹர ஹர மஹாதேவகி' வாய்ஸை அந்த மொட்டைத்தலை கேரக்டருக்குக் கொடுத்து இன்னும் கலகலப்பாக்கியது இந்தப் படத்தின் ஸ்பெஷல். 'ஹர ஹர மஹாதேவகி'யின் ரசிகர் வட்டத்தை அப்படியே படத்திற்கும் பயன்படுத்திக்கொண்ட வகையில் காமெடியில் சைலன்ட்டாக கெத்து காட்டியது இந்தப் படம். 

ஆனந்தராஜ் : 

 

ஒரு காலத்தில் வில்லன் நடிகராக முறைத்து மிரட்டிக்கொண்டிருந்த ஆஜானுபாகு ஆனந்தராஜ் கடந்த வருடங்களிலேயே 'காமெடி பீஸ்' ஆக நடிக்கத் தொடங்கிவிட்டார். சென்ற வருடத்தில் இவர் நடிப்பில் 'நானும் ரெளடிதான்' படத்தில் காமெடி ரௌடியாக இவரை ஃபார்ம் ஆக்கியது. 'என்னடா பாம் எல்லாம் போடுறீங்க...' வசனம் மீம்ஸ் வஸ்துவாகப் பயன்படுத்தப்பட்டதே அதற்குச் சான்று. இந்த ஆண்டில், 'தில்லுக்கு துட்டு' காமெடிப் பேய்ப் படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாக விக் வைத்து நடித்தார். வில்லன் நடிப்பு இன்னும் விட்டுப் போய்விடவில்லை போல... காமெடி சீன்களிலும் இந்த மனிதர் முறைத்துக்கொண்டேதான் இருக்கிறார்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

red-dot1.jpg `விராத், என்னைவிட இரண்டு மடங்கு ஆக்ரோஷமானவர்' என சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. `விராத், ஒரு இன்ச் கூட எதிரிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார். கேப்டனாகவும் ப்ளேயராகவும் கோஹ்லி உச்சம் தொட்டுவிட்டார்' எனப் புகழ்ந்திருக்கிறார் தாதா. குரு புகழ்ச்சி!

p36a1.jpg

red-dot1.jpgபரபரப்பைக் கிளப்பிய மனிதர்களின் கதைகளைப் படமாக்கி பாப்புலர் ஆனவர் ராம்கோபால் வர்மா. தாவூத் முதல் வீரப்பன் வரை பலருடைய சொந்தக்கதைகள் ராம்கோபால் வழியே திரை கண்டுள்ளன. அவருடைய அடுத்த படம் `சசிகலா' என ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.

` `சின்னம்மா'னு பேரு வைங்க பாஸ். வரிவிலக்கு கிடைக்கும்' என இப்போதே அட்வைஸைத் தட்டியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.  தி ட்ரபிள் மேக்கர்!

red-dot1.jpg`நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்' என்ற ஹேஷ்டேக் போட்டுப் புரளிகளைக் கிளப்பிவிடுவதில் ஃபேஸ்புக்குக்கே முதல் இடம். தனது பயனாளர்களுக்கு இந்தத் தொல்லை கூடாது என முடிவெடுத்திருக்கிறது ஃபேஸ்புக். நம் டைம்லைனில் வரும் இது மாதிரியான பொய்யான கதைகளை `இது ஃபேக் பாஸ்' என அலெர்ட் செய்ய, புது வசதி கொண்டு வந்திருக்கிறது ஃபேஸ்புக். காரணம் சரியாக இருந்து நிறையப் பேர் ஒரு செய்தியைப் பொய் எனச் சொன்னால், அதை ஃபேஸ்புக்கில் இருந்தே நீக்கிவிடுவாராம் மார்க்.  ரூம் போட்டு யோசிப்பாங்களே ரூமர்பாய்ஸ்!

red-dot1.jpg`டியர் ஜிந்தகி' ஃபீவர், அலியா பட்டை இன்னமும் விடவில்லை. படத்தில், ஒளிப்பதிவாளராக வருவார் அலியா பட். இந்த கான்செப்ட்டில் ஒரு பாடலை உருவாக்கி வைரல் அடித்திருக்கிறது `ஜிந்தகி' டீம். இதில் அலியா பட் அவரே பாடி நடனம் ஆட, அதை இன்னோரு அலியா பட் ஒளிப்பதிவு செய்ய என ரகளை ரணகளமாக்கியிருக்கிறார்கள். ஜாலி ஜிந்தகி!

p36b.jpg

red-dot1.jpg இசைப் புயல், மீண்டும் ஆஸ்கர் வானத்தை மையம்கொண்டிருக்கிறது. பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலேவின் பயோகிராஃபியான ‘Pele; A Birth Of A Legend’ ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்ததற்காகப் பின்னணி இசை, பாடல் என இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் தேர்வுப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. பரிந்துரைக்கான இறுதிப் பட்டியல் 24-ம் தேதி வெளியாகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

red-dot1.jpg `கம்யூனிட்டி லிவிங்' எனப்படும் குழும வாழ்க்கைமுறைதான் டிரெண்ட். அந்தப் பட்டியலில் புது வரவு `ஹவுஸ் போட்ஸ்'. கடந்த எட்டு ஆண்டுகளில் லண்டனில் வீடுகளின் விலை 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். இதற்கு மாற்றாக நதிகளில் படகுகளிலே வாழ்கிறார்கள். ஒரு ஹவுஸ் போட்டை உருவாக்க, ஐந்து லட்ச ரூபாய் செலவாகும். நல்ல சொகுசான ஒரு ஹவுஸ் போட்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை ஆகும். லண்டனில் ஒரு சாதாரண அப்பார்ட்மென்ட் மாத வாடகை மட்டுமே குறைந்தது 70 ஆயிரம் ரூபாய். ஹவுஸ் போட்டில் சோலார் மூலமும் இஞ்ஜின் பேட்டரி மூலமும் கரன்ட் எடுத்துக்கொள்ளலாம். `ஹவுஸ் போட் வாழ்க்கையில், என்னால் நிறையச் சேமிக்க முடிகிறது. அந்தப் பணத்தைக்கொண்டு எனக்குப் பிடித்த மற்ற விஷயங்களைச் செய்ய முடிகிறது. குளிர்காலத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்' என்கிறார் ஹவுஸ் போட்வாசி ஒருவர். வாழ்க்கைப் படகு!

red-dot1.jpgநாக சைதன்யாவுடன் திருமணச் செய்தியை உறுதிப்படுத்தியதில் இருந்து சமந்தா அப்செட். அதன் பிறகு, பட வாய்ப்பே இல்லை என்கிறது சினிமா வட்டாரம். `தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த வருடம் நிறைய ஹிட்ஸ் கொடுத்திருக் கிறேன். என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. பிறகு ஏன் புதிய வாய்ப்புகளே இல்லை என்பதுதான் தெரியவில்லை. அடுத்த வருட இறுதியில்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். ஆனாலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார் சமந்தா. நீ கவலைப்படாத தெறி பேபி!

p36c.jpg

red-dot1.jpgகோவையைச் சேர்ந்த வருண் ஆதித்யா என்கிற 25 வயது இளைஞர், நேஷனல் ஜியாகிரஃபியின் இந்த ஆண்டுக்கான சிறந்த வனஉயிரினப் புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்றுள்ளார். மலபார் வனப் பகுதியில் கிரீன்வைன் பாம்பை க்ளிக்கியதற்குத்தான் இந்த விருது. போட்டியில் பங்கேற்ற 20 ஆயிரம் புகைப்படங்களைப் பின் தள்ளிவிட்டு, வருணின் புகைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விருதுடன் 2,500 அமெரிக்க டாலரும் பரிசு. லண்டனில் எம்.பி.ஏ படித்துள்ள வருணின் போட்டோகிராஃபி பயணம் தொடங்கியது, சாதாரண செல்போனில்தான். தாறுமாறு!

vikatan

  • தொடங்கியவர்

ஸ்மார்ட் தொட்டி!

 

 

p75a.jpg

சைக்காகவும் அழகுக்காகவும் பலவிதமான செடிகள் வாங்கிருப்போம். ஆனா செடிக்கு எப்போ தண்ணி ஊத்தணும்னு தெரியாது. வெளியூர் போகும்போதோ அல்லது மறதியிலோ தண்ணி ஊத்தாம செடிகளை வாட விட்டுருவோம். நெதர்லாந்து நாட்டில் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிருக்காங்க!

வழக்கமான பூந்தொட்டிகளில் நாம தண்ணீர் ஊற்றும்போது, செடிகளுக்குத் தேவையான அளவு போக மீதமுள்ள நீர் தொட்டிக்குக் கீழ் வெளியேறிவிடும். மறுபடியும் செடிகளுக்கு நீர் தேவைப்படும் நேரத்தில் சரியாக நாம் நீர் நிரப்ப வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது ‘தி நேச்சுரல்ஸ் பேலன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூந்தொட்டி.

செடியில் உள்ள மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டு நீர் ஊற்றத் தனியாக ஒரு பகுதி இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மண் முழுவதும் நனையாமல், செடிக்குத் தேவைப்படும்போது மட்டும் நீர் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரைக்குமான, செடிக்குத் தேவைப்படும் நீர் இந்தப் பகுதியிலிருந்து தொட்டிக்குச் செல்கிறது.

இது மட்டுமல்லாமல் இத்தொட்டியில் ஊற்றப்படும் நீர் காலியானதும், நேராக இருக்கும் தொட்டியானது சிறிதளவு சாய்ந்துவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘இதனால் இனி ஆசையாய் வாங்கிவைத்த செடியை வாடவிடாமல் பாதுகாக்க முடியும்'  என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

‘சிம்பிள் கான்செப்ட்தான்ல!’ என நாம் யோசிக்கலாம். ஆனால் 2015-ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய இதன் வடிவமைப்பில் பலவித மாறுதல்கள் செய்யப்பட்டு தற்போதுதான் முழுவடிவம் பெற்றுள்ளது. விரைவில் நல்ல விலைக்கு சந்தைக்கு வரவிருக்கிறதாம்!

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸை வரவேற்கும் கூகுள்

 

dood_07117.jpg

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இன்றைய ’கூகுள் டூடுல்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. 'Google' என்னும் வார்த்தையில் உள்ள ஆறு எழுத்துகளும் க்யூட்டாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு எழுத்துகளும் தெரு விளக்கின் கீழ் ’Tis the season’ என இசைத்து பாடி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸை வரவேற்கின்றன. 

  • தொடங்கியவர்

இதைப்படித்தபின், இந்தப் பெண்களை நிச்சயம் பாராட்டுவீர்கள்! #MustRead #LasPatronas

 

Las Patronas

செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி...

பிப்ரவரி 14, 1995ஆம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு பாக்கெட் பிரெட் மற்றும் ஒரு லிட்டர் பாலோடு, அந்த ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருக்கிறார்கள். பெர்னார்டா தண்டவாளத்தில் காது வைத்து, அந்த சத்தத்தைக் கேட்டு மகிழ்கிறாள். அவளின் விளையாட்டைக் கண்டித்து ரயில் நெருங்குவதை உணர்த்தி பின்னுக்கு இழுக்கிறாள் ரோசா. ஒதுங்கி நிற்கிறார்கள். வேகமாகக் கடக்கிறது அந்த சரக்கு ரயில். அதன் கூரைகளில், இண்டு இடுக்குகளில் எல்லாம் மனித கூட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவர்களின் கையிலிருந்த உணவைப் பார்த்து "பசி".." மேடம் பசி..." என்று அலறியது பெருங்கூட்டம். ஒரு நொடி தான்... எதையும் யோசிக்காமல் தங்கள் கைகளிலிருந்த உணவை அவர்களை நோக்கித் தூக்கி எறிந்தார்கள். ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அதைப் பெற்றவரின் கைகள் இவர்களுக்கு நன்றி சொன்னபடியே இருந்தது. வீட்டிற்கு சென்று தங்கள் அம்மாவிடம் நடந்ததை பயந்த படியே சொன்னார்கள். ஆனால், அவர் அம்மாவோ அவர்களைப் பாராட்டினார். இனி தினமும் ரயிலில் அப்படி செல்பவர்களுக்கு உணவளிக்கலாம் என்றும் சொல்கிறார்.

1_04040.jpg

பிப்ரவரி 15, முதல் நாள் வீட்டில் 25 சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கட்டி, தண்டவாளத்தின் ஓரம் நின்றபடி உணவைக் கொடுத்தார்கள். அன்று தொடங்கி 21 ஆண்டுகளாகியும், இன்று வரை இதை ஒரு சேவையாக செய்து வருகின்றனர் "லாஸ் பேட்ரோனாஸ்" (Las Patronas) என்ற பெண்கள் அமைப்பினர். 

மத்திய அமெரிக்காவில் இருக்கும் கெளதமாலா, கோஸ்டரிகா, எல் சால்வேடர், ஹண்டுரஸ் போன்ற நாடுகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், பிழைப்புத் தேடி அகதிகளாய் அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சிப்பார்கள். கள்ளத் தோணியில், நடந்து, லாரியில் என பல வழிகளில், எல்லைக் கோடுகளைத் தாண்டும் இவர்கள் மெக்சிகோவை சரக்கு ரயிலின் கூரைகளில் அமர்ந்து கடக்கிறார்கள். உண்ண உணவில்லாமல், உடுத்த மாற்று உடையில்லாமல், பல நாட்கள் பல்லிகளாய் ஒட்டிக் கொண்டு ரயிலில் பயணிக்கும் இவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது இந்தப் பெண்கள் குழு.

முதல் ஏழு வருடங்கள் தங்களின் கைக் காசைப் போட்டு இந்த சேவையை செய்து வந்தது பெர்னார்டா குடும்பம். பின்னர், கிராமத்தின் பிற பெண்களும் இந்த சேவையில் இணைய "லாஸ் பேட்ரோனாஸ்" குழு தொடங்கப்பட்டது. அதிகாலையிலேயே சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அரிசி சாப்பாடு, பீன்ஸ், பிரெட், பழங்கள், மெக்சிகன் டார்டிலா ஆகியவற்றை இரண்டு கவர்களில் அடைத்து ஒன்றாக கட்டுகிறார்கள். தண்ணீர் பாட்டில்களை கயிற்றைக் கொண்டு கட்டி விடுகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள். காலை 11 மணி வாக்கில் ஒன்று, மாலை ஆறு மணி வாக்கில் ஒன்று. ரயில் வரும் சத்தம் கேட்டதும், உணவுப் பொட்டலங்களைக் கூடையில் அடுக்கி, தண்டவாளத்தின் ஓரத்தில் வரிசையாக நிற்கிறார்கள். ரயில் கடக்கும் நேரத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் அந்தக் கிராமத்து பெண்களே மொத்த வேலைகளையும் செய்கிறார்கள். 

இவர்களின் இந்த சேவை ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜூலியா என்ற பெண் தான் எப்படி இந்தக் குழுவில் இணைந்தேன் என்பதை விளக்கியுள்ளார். ஜூலியாவின் வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது. தன் வீட்டை ஒட்டி இது போன்ற விஷயங்கள் நடப்பது அவருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை...

8_04249.jpg

"ஒரு நாள் சிக்னல் கிடைக்காமல் ரயில் நின்றது. ஒரு 12 வயது பையன் அவன்... கதவைத் தட்டினான். குளிரில் நடுங்கியபடி இருந்தான். அவன் உடல்... எலும்பிற்கு போர்வைப் போர்த்தியது போன்றிருந்தது. 'பசிக்கிறது... சாப்பிட ஏதாவது தாருங்கள்' என்று கெஞ்சினான். நாய்க்கு வைத்திருந்த சாப்பாட்டை வெறுப்புடன் தந்தேன். கண்ணீரோடு அதை அவ்வளவு அவசரமாகவும், ருசித்தும் சாப்பிட்டான். கிளம்பும் போது... என் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு. நீங்கள் என் அம்மாவிற்கும் மேல்... என்று சொன்னபடியே அந்த இருட்டில் மறைந்து போனான். இந்த சேவையின் உன்னதத்தை அப்போது தான் உணர்ந்தேன்." என்று உணர்ச்சி மேலோங்க சொல்கிறார். 

ரயில் போகும் வேகத்தில் உணவு கொடுக்கும் போது கைகளில் பலமாக அடிபடும். சமயங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். சட்டவிரோதமாக செல்லும் அகதிகளுக்கு உதவுவதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. அனைத்தையும் ஒற்றுமையாக இருந்து எதிர்த்து, கடந்து வந்திருக்கின்றனர் இந்தப் பெண்கள். எந்த விடுமுறை நாட்களிலும் இவர்களின் சேவை தடைபடுவதில்லை. பசிக்கு விடுமுறையில்லையே? 

இந்த வழியாகப் போகும் சரக்கு ரயில்களை செல்லமாக "பீஸ்ட்" என்றழைக்கிறார்கள். ஆம், அது உண்மையிலேயே அரக்கன் தான். இரவு, பகல் கடந்து, குளிர், மழையில் நனைந்து, தூக்கம் தொலைத்து பயணிக்கும் எத்தனையோ அகதிகள் தவறி விழுந்து இறந்திருக்கின்றனர். சாதாரணமாக ஒரு நாளைக்கு 300 சாப்பாட்டு பொட்டலங்களை வழங்குகின்றனர் இந்தப் பெண்கள் குழுவினர். 2005 - 2009 காலகட்டங்களில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த சமயங்களில் 800 சாப்பாட்டு பொட்டலங்கள் வரைக் கொடுத்திருக்கிறார்கள். 

7_04428.jpg

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், பலரும் இப்போது நடந்து வரவும் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கு சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கு ஒரு விடுதியையும் இவர்களே சேர்ந்து கட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். ஹண்டுரஸில் இருந்து பயணம் செய்த 14 வயது சிறுவன் அல்ஃப்ரெடோ (Alfredo) ரயில் கூரையில் உட்கார்ந்து பயணிக்கும் போது, வழுக்கி கீழே விழுந்துவிட்டான். அவனின் ஒரு கையும், காலும் பிய்ந்து போனது. அவனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார்கள் லாஸ் பெட்ரோனாஸ்.

"எனக்கு அப்பா இல்லை. அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்கள நல்லா வச்சு பார்த்துக்கணுங்குறதுக்காகத் தான் அமெரிக்காவுக்கு கிளம்பினேன். இப்ப என்ன செய்றதுன்னு தெரில... நடந்தாவது போயிடலாம்னு பார்த்தா... காலும் இல்ல... என் அம்மா பாவம். நான் அவங்களவிட்டு வந்திருக்கக் கூடாது..." என்று சொல்லி அழுகிறான். ஆதரவற்ற அவனுக்கு ஆறுதலாய் அவனை சுற்றி நிற்கிறார்கள் அந்தப் பெண்கள். இதைப் பார்த்தபடி அருகில் நிற்கும் அல்ஃப்ரெடோவின் அண்ணன்..." என் தம்பியோட உயிர காப்பாத்திக் கொடுத்திட்டாங்க. இவங்க நிச்சயம் சொர்க்கத்துலருந்து வந்த தேவதைங்க தான்..." என்று கண்ணீரோடு சொல்கிறான். அழுக்குப் படிந்த தன் சட்டையைக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். ஆம்... ஒருவேளை தேவதைகள் இப்படித் தான் இருக்கக் கூடும்

vikatan

  • தொடங்கியவர்

ஜப்பான் ஏர்போர்ட்டில் அடடே தொழில்நுட்பம்!

 

wipes-for-smartphones-japan_19117.jpg

ஜப்பான், டோக்யோ விமானநிலையத்தின், கழிவறைகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு பேப்பர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேப்பரை, நமது ஃபோனில் தேய்த்தால், அதில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். மேலும், வைஃபை விபரங்கள், ட்ராவல் மேப் உள்ளிட்டவைகளும் காட்டப்படுகிறதாம். அங்குள்ள NTT Docomo நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி வருகின்ற மார்ச் மாதம் வரை அங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவறைகளில் பொதுவாக பயன்படுத்தும், டாய்லெட் பேப்பர் ரோலுக்கு அருகிலேயே, இந்த ஸ்மார்ட் ஃபோன் பேப்பர் ரோலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அடடே என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Master_19549.jpg

  • தொடங்கியவர்

 

கனடா கரடிகளின் கண்கவர் நடனம்

குளிர்காலம் முடிந்து இளவேணிற்காலம் துவங்கும்போது கனடா கரடிகள் மரங்களைச் சுற்றிவந்து வித்தியாசமான நடனமாடுவது ஏன்? விடை தருகிறது பிபிசியின் இந்த காணொளி

BBC

46 minutes ago, நவீனன் said:

கனடா கரடிகளின் கண்கவர் நடனம்

எனோ தெரியாது எங்கள் வீட்டு கிணத்தை சுத்தி கட்டியிருந்த மதில் மூலை ஞாபகம் வருகுது.:grin:

IMG_3690.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

அமேசானில் ஃபோட்டோக்ராஃபரின் தெறி க்ளிக்!

 

tribe_20080.jpg

பிரேசில் நாட்டைச் சேர்ந்த, ஃபோட்டோ கிராஃபர் ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை படம் பிடிக்க சென்றபோது, மழை பெய்துள்ளது. இதனால் ஹெலிகாப்டரை வேறு தடத்தில் இயக்கியுள்ளனர். அப்போது, உலகத்துடன் தொடர்பில்லாமல் இருக்கும் பழங்குடி மக்கள் தெரியவே, ரிகார்டோ தனது கேமராவை எடுத்து க்ளிக்கியுள்ளார். அவர் எடுத்த அந்த தெறி க்ளிக்குகள், தற்போது செம வைரலாகி வருகிறது. உலக மக்களின் பார்வை படாமல் இருந்த பழங்குடியினர் என்பதால் இந்த படங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதுகுறித்து ரிகார்டோ கூறுகையில், "ஹெலிகாப்டரை திசைப் திருப்பும் சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே பழங்குடியினரை கண்டவுடன் என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை. இது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு தருணம். ஹெலிகாப்டரை கண்டதும், பழங்குடியினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடலில் சாயங்களை பூசிக்கொண்டனர். ஒரு சிலர் ஆயுதங்களை எடுத்தும் குறிபார்த்தனர்" என்றார்.

tribe3_20343.jpg

vikatan

  • தொடங்கியவர்

நாக்-அவுட் செய்த விஜேந்தர் சிங்!

p126a.jpg

உலகக் குத்துச்சண்டை அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற ஆசிய-பசிஃபிக் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் விஜேந்தர் சிங் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். தான்சானியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான ஃபிரான்சிஸ் செக்காவ், போட்டி தொடங்குவதற்கு முன் ‘இந்தப் போட்டியுடன் விஜேந்தர் சிங்கின் கேரியர் காலியாகிவிடும்’ என காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார். இதற்கு பதிலடி தருவது போல போட்டி தொடங்கி, எட்டு நிமிடத்துக்குள் நாக்-அவுட் முறையில் விஜேந்தர் சிங் அபாரமாக வென்றார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் எட்டுமுறை தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்த விஜேந்தர் சிங்குக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. நெட்டிசன்களின் ஆயிரக்கணக்கான வாழ்த்துகளால் #VijenderSingh பெயர் இந்திய அளவில் ட்ரெண்ட்டில் முதலிடம் பிடித்தது. சொல்லி அடி!


p126b.jpg

அசரவைத்த அஜித்தின் ஸ்டன்ட்!

நடிகர் அஜித்குமார் தனது 57-வது படம், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரிய நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தில் பணிபுரியும் பல்கேரிய ஸ்டன்ட் மேன் ஜோரியன் போனமரெஃப் என்பவர், அஜித்தின் பைக் ஸ்டன்ட் வீடியோ  ஒன்றைக் கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அஜித்தை ஏகத்துக்கும் புகழ்ந்த அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது. இதன் காரணமாக இந்திய அளவிலான ட்ரெண்டில் இரண்டு நாட்களுக்கு #AK57 மற்றும் #Thala57 போன்ற டேக்குகள் முன்னிலை வகித்தன. தல போல வருமா!


p126c.jpg

ட்ரெண்டில் இந்திய அழகி!

2016-ம் ஆண்டுக்கான உலக அழகியைத் தேர்வுசெய்யும் போட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 117 நாடுகளைச் சேர்ந்த மாடல் அழகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் போர்ட்டோரிகா (Puerto Rico) நாட்டைச் சேர்ந்த ‘ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ்’ உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். எப்படியும் உலக அழகிப் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அழகி பிரியதர்ஷினி சாட்டர்ஜியால், ‘டாப்-20’ வரை மட்டுமே செல்ல முடிந்தது. என்றாலும், அவருக்கு வாழ்த்துகள் குவிந்ததால், #PriyadarshiniChatterjee பெயர் இரண்டு நாட்களாக ட்ரெண்டில் முன்னிலை வகித்தது. சீக்கிரம் நடிக்க வாம்மா!


p126d.jpg

வரலாறு படைக்கும் சென்னை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இடையே மிகப்பெரிய பந்தம் உள்ளது. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றில் பல சாதனைகளை இங்கு புரிந்துள்ளது. அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிராக நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 759 ரன்களைக் குவித்தது. இதுவே டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி அசத்தினார் கருண் நாயர். இதனால் #IndVsEng #KarunNair ஆகியவற்றோடு #Chennai-யும் ட்ரெண்ட்டில் இடம்பெற்றன. சென்னைடா!


p126e.jpg

அரைசதம் அடித்த எஸ்.பி.பி!

தனது பிரத்யேகக் குரல் மூலம் தென்னிந்தியர் களின் மனம் கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம், பாடத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றன. சமீபத்தில் சென்னைக்கு வந்த இந்திய அணியின் கோச் அனில் கும்ப்ளே, முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் ஆகியோர், பொன்விழா காணும் எஸ்.பி.பி-யைச் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது குறித்து அனில் கும்ப்ளே வெளியிட்ட புகைப்படம் வைரல் ஆனது. தென்னிந்திய ட்விட்டர் பயனாளிகளின் வாழ்த்து மழையால் #SPBalasubramaniam ட்ரெண்ட் ஆனதோடு, இதுவரை இந்த டேக்கில் பத்தாயிரம் ட்வீட்கள் கடந்து சாதனைப் படைத்துள்ளது. வாழ்த்துகள்!


p126f.jpg

‘ஹம்மா’டியோவ்!

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’, தற்போது இந்தியில் ‘ஓகே ஜானு’-வாக ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தின் ட்ரெயிலரும், ஒரு பாடலும் அடுத்தடுத்து வெளியாகி பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைக் கெளரவிக்கும் பொருட்டு, பாதுஷா மற்றும் தனிஷ்க் பக்‌ஷி ஆகியோர் ‘பாம்பே’ படத்தில் இடம்பெற்ற ‘ஹம்மா’ பாடலை ரீ-க்ரியேட் செய்திருந்தனர். இந்தப் பாடலே படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயகி ஷ்ரதா கபூரின் ‘ஹாட்’ நடனத்தால் ஹிட் அடித்துள்ள இந்தப் பாடல், யூ-டியூபில் படத்தின் ட்ரெயிலரைவிட அதிகப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை 1 கோடியே 87 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ம்!


p126g.jpg

ஹாக்கியில் சாதித்த இந்தியா!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி கடந்த வாரம் லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில், பெல்ஜியத்தை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தலா மூன்று லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே @TheHockeyIndia #HJWC2016 போன்ற டேக்குகள் ட்ரெண்டில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. Chak de India!

vikatan

  • தொடங்கியவர்

மார்க்குக்கு ஏவ்ரில் லாவிக்னே கண்டனம்!

 

avril-lavigne-avril-lavigne-22661429-128

கனடாவைச் சேர்ந்த இளம் பாடகியும், நடிகையுமான ஏவ்ரில் லாவிக்னே, தான் அங்கம்வகித்த 'நிக்கெல்பேக்' என்ற இசைக்குழு குறித்து கேலியான கருத்துக்களைப் பதிவு செய்ததற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் பணிவிடை செய்வதற்காக 'ஜார்விஸ்' என்ற புதிய மென்பொருளை மார்க் உருவாக்கியுள்ளார். இந்த மென்பொருளை அவரது வீட்டு உபயோகப் பொருட்களில் இணைத்து, வாய்ஸ், மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலமே கட்டுப்படுத்தும்படி அவர் வடிவமைத்துள்ளார். இது குறித்த விளக்க வீடியோவில், 'நிக்கெல்பேக்' இசைக்குழுவின் நல்ல பாடலை ஒலிக்குமாறு ஜார்விஸ்க்கு மார்க் உத்தரவிட, 'எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் ஒலிபரப்ப முடியாது' என ஜார்விஸ் பதில் அளிக்கிறது. உன்னைப் பரிசோதிக்கவே அவ்வாறு ஆணையிட்டேன். நிக்கெல்பேக் இசைக்குழுவில் ஏது நல்ல பாடல்? எனக் கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்த கருத்திற்கு எதிராகத்தான் ஏவ்ரில் லாவிக்னே தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், 'நிக்கெல்பேக் குறித்த உங்கள் கேலி ரசிக்கும்படியாக இல்லை. பிறரை சொற்களால் காயப்படுத்தும் செயல்கள் அதிகரித்திருக்கும் இவ்வேளையில், நீங்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்' என அவர் மார்க் சக்கர்பெர்க்கிற்குத் தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

‘இவன் என்னவன், என் துன்பம் இவன் அறிவான்; எனைப் பிரியான்’
 

article_1482208318-happy-girl-in-love.jpகாதலன் எவ்வளவுதான் தன் காதலியுடன் அன்பு பாராட்டிப் புகழ்ந்தாலும் கூட, அவள் மனதில் மருட்சியும் பயமும் இழைந்தோடுவது இயற்கை. 

“ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இவன் என்னுடன் கேலியும் கிண்டலுமாய் சிலசமயங்களில் குறும்போடு கூடிய பொய்யுரையும் பகர்கின்றானே; எங்கே சில சமயம் என்னை மறந்து ஏகி விடுவானோ என அச்சமும் அடைகின்றேனே; இது எப்படி என் மனசை வதைக்கின்றதே என நெஞ்சம் கிலேசமடைகின்றது” 

மிக ஆழமான காதல் உருவாகினால் கூட, பெண்மைக்குரிய மென்மையினால் சிறிது அச்சம் ஏற்படினும், கூடவே இவன் என்னவன், என் துன்பம் இவன் அறிவான்; எனைப் பிரியான் என்று மனம் சிலிர்த்துத் தனது எண்ணத்தையிட்டு மனம் வருந்துவாள். காதல் வாழ்வில் இன்பமே என்றாலும், இதுபடுத்தும்பாடு, அனுபவித்தால்த்தான் புரியும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

 

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில்

 
 
 
 
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
 

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.

குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சீன KFC -யின் புது டெக்னிக்!

 

download_03261.jpg

கே.எஃப்.சி-யின் பீஜிங் கிளை ஒன்று, பாய்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களை அசத்துகிறது. வாடிக்கையாளர் Kiosk முன் நின்றாலே போதும், அதுவே அவர்களின் வயது, பாலினம். முக பாவனை மற்றும் மனநிலையக் கண்டறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் அவர் என்ன உணவு சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறது. அது பரிந்துரைக்கும் உணவை தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுக்காமல் போவதும் வாடிக்கையாளர் விருப்பமாம்.

  • தொடங்கியவர்

11,124 கி.மீ. புல்லட்டில் பயணித்தால் என்ன நடக்கும்? #RoadTrip

 

புல்லட்

"இமாச்சலப் பிரதேசத்தில் உதய்பூர் என்ற ஒரு சின்ன டவுன். இரவு பதினோரு மணியளவில்... நல்ல குளிர். பெளர்ணமி. தனியாக என் தண்டர்பேர்ட்  500-ல் போய்க் கொண்டிருந்தேன். புல்லட் பீட் பின்னணியில் ஒரு கிடார் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தேன். ரோட்டின் ஓர் ஓரத்தில் ஒரு பையன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம் போனேன். அவனிடமிருந்து கிடார் வாங்கி எனக்குத் தெரிந்த சில பாடல்களை பாடி, வாசித்தேன். அதன் பின், அவன்... அவனுடைய விரல்கள் கிடாரில் பெரிய மேஜிக் செய்தன. அந்த இரவை அங்கேயே அப்படியே பாட்டு பாடி கழித்தோம். என் பெயர் அவனுக்குத் தெரியாது, அவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், இருவருக்குமே அது ஒரு அற்புதமான இரவு...இது தான் பயணத்தின் அழகு " என்று தன் பயணக் கதையை கிக் ஸ்டார்ட் செய்கிறார், கோவையைச் சேர்ந்த சாய்க் குமார்.

இவர்  சமீபத்தில் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி டூ வட உச்சி  ஜம்மு காஷ்மீர் வரை தனியாக ஒரு பைக் பயணம் போய்வந்திருக்கிறார். மொத்தம் 77 நாட்கள்... 11, 124 கிமீட்டர்கள் என அவர் கடந்து வந்த கதையை புல்லட் வேகத்திலேயே சொல்லத் தொடங்குகிறார்...

எதற்காக இந்தப் பயணம் ?

" பயணம் தொடங்கும் பலரும் சொல்லும் அதே காரணம் தான் என்னுடைய தொடக்கமும். வேலை... ஒரே மாதிரியான வாழ்க்கை முறை... அதை உடைக்க வேண்டும் என்ற ஆர்வம், பயணம் மீதான ஆசை. ஆனால், இதற்கு மேல் ஒரு பயணியாக எனக்கு ஒரு முக்கிய குறிக்கோள் இருந்தது. அது என்னை நான் புரிந்து கொள்வது... அதற்கேற்றார் போல இந்த பயணம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது".

தனியாக பயணம் செய்தது எப்படி இருந்தது?

"நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரிசர்வ்டான ஆள் தான். எனக்குத் தனியாக இருப்பது பிடிக்கும். அதனால், தனியாக பயணித்தது பெரிய கஷ்டமாக இல்லை. மேலும், தனியாக பயணித்தாலும் இதில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குஜராத்தின் ரேன் ஆஃப் கட்ச் பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரர்... பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ரொம்ப தனிமையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தவர், தொடர்ந்து 4 மணி நேரம் விடாமல் பேசினார், அதே போல், டில்லியில் ஒரு கஷ்மீர் நண்பன் கிடைத்தான்... கஷ்மீரியாக அவன் படும் வேதனைகள், அவன் வாழ்வின் பிரச்சினைகள்... அதே போன்று சில இஸ்ரேலிய ஊர்சுற்றிகளோடு ஒரு வாரம் பயணம் செய்தேன். பயணத்தை தனியாக தொடங்கினாலும், பயணம் தனிமையானதாக இல்லை. பயணத்தில் பார்க்கும் இடங்கள் அழகு என்றால், பழகும் மனிதர்கள் பேரழகு..."

உங்கள் பயண நண்பன் தண்டர்பேர்ட் 500 குறித்து சொல்லுங்களேன் ?

"பொதுவாகவே இந்தியாவில்  தொலை தூரப் பயணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவது புல்லட்கள் தான். அதன் அடிப்படையிலேயே தண்டர்பேர்ட் 500யைதேர்ந்தெடுத்தேன். ஆனால், பலரும் அதற்கான சர்வீஸில் பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரியே வண்டி எடுத்ததில் இருந்தே பல பிரிச்சினைகள் இருந்தன. வண்டியில் இருந்த பிரச்சினைகளைவிடவும், சர்வீஸ் ஆட்களோடு போராடுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்து பயணம் தொடங்கிய பிறகு, வண்டியில் பெரிய தொந்தரவுகள் இல்லை. மைலேஜும் 28யில் இருந்து 30 வரை கிடைத்தது."

collage_02_COMPRESSED_16531.jpg

பயணத்தின் போது ஏதேனும் விபத்துகள்?

"குஜராத்தின் புஜ் பகுதியில் வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது, ஒரு பையன் ரிக்‌ஷாவில் வந்து மோதிவிட்டான். அதில் சைலன்சர், ஹேண்டில் பார், க்ராஷ் பார் என அனைத்தும் வளைந்துவிட்டன. பின்னர், அதையெல்லாம் சீர் செய்தேன். ரொடாங் பாஸ் ரோடு வழியாக லேவிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த ரெண்டு பேர் எனக்கு முன்னாடி போய்க் கொண்டிருந்தார்கள். சரியாக பிரேக் பிடிக்காமல், ஸ்லிப்பாகி என் கண் முன்னாடியே பல நூறு அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார்கள். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது." 

பயணத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் " ஏண்டா... பயணம் கிளம்பினோம்..." என்று வருந்தியது உண்டா?

"நிச்சயமாக இல்லை. நான் ஆபிஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து பயணம் குறித்து யோசித்ததைவிட, நிஜப் பயணம் கடுமையாக இருந்தது உண்மை தான். ஆனால், அதற்காக நான் எந்த தருணத்திலும் வருத்தப்படவில்லை."

உங்களின் பயண வழி என்னவாக இருந்தது? 

"கோவையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக மும்பை சென்றடைந்தேன். அங்கிருந்து குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர்... பின்பு, திரும்பும்போது டெல்லி, ஹைதரபாத், பெங்களூரு, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சூர் கடைசியாக, ஆரம்பித்த கோவையில் வந்து முடித்தேன்."

பயணத்தில் சவாலாக இருந்த பகுதிகள் என்ன?

"உறுதியாக லே டூ மணாலி தான். கடுமையான பாதை. குளிர். ஆங்காங்கே நிலச் சரிவு. கொஞ்சம் ஸ்லிப்பானாலும் கூட, மரணம் நிச்சயம். அதில் ஓட்டியது பெரிய சவால். அதுமட்டுமில்லாம, கிட்டத்தட்ட 18 ஆயிரம் அடி உயரம்... ஆக்சிஜன் அளவு மிக குறைவு. ஒரு கட்டத்தில் ஆல்டிட்யூட் மெடிக்கல் சிக்னஸ் ( ALTITUDE MEDICAL SICKNESS ) வந்துவிட்டது. மயக்க நிலையிலேயே கிடந்தேன். அங்கு நான் தங்கியிருந்த கூடாரத்தின் ஓனர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். என்னோடு பயணித்த சக பயணிகளும், எனக்காக அவங்களோட பயண திட்டத்துல மாற்றம் செய்துட்டு எனக்கு உடல் தேறும் வரை என்னோடு இருந்தாங்க. அந்த நாட்களையும், அந்த மனிதர்களையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்." 

collage_01_COMPRESSED_16126.jpg

மொத்த பயணத்துக்கான செலவு எவ்வளவு? 

"பயணத்தோட மொத்த செலவு 1.3 லட்சம். இதில் பெரும்பாலான பணம் பெட்ரோலுக்குத் தான் செலவானது. வண்டியோட டேங்க் கெபாசிட்டி 20 லிட்டர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் டேங்கை நிரப்பினேன். தோராயமாக ஒரு நாளைக்கு 300 கிமீட்டர் பயணித்தேன். "

பயணத்திற்குப் பின் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்?

"மனிதர்களை பொதுவாக அவர்களின் உடைகள், நடவடிக்கைகள் வைத்து ஜட்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளேன். இவர் நம்மை ஏமாற்றிவிடுவாரோ என்ற பயத்திலேயே பிறரிடம் பழகும் எண்ணம் மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் அவ்வளவு அழகானவர்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக, என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கிறது." 

இப்படி ஒரு பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் போவது சாத்தியமா?

"கஷ்டம் தான் . ஆனால், வேறு வழியில்லை. வாழ்க்கைக்குப் பணம் அவசியமாகிறதே... இந்த பயணங்களின் நினைவுகளோடு, அடுத்த பயணத்திற்குத் தயாராக பணம் சேர்க்க தொடங்கியுள்ளேன். வேலை போரடிக்கிறது... வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி பயணம் கிளம்புபவர்களுக்கு ஒரேயொரு விஷயம்... பயணம் ஒரு " எஸ்கேபிசம்" கிடையாது. இதிலிருந்த தப்ப, பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. பயணம் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு கடினமானதும் கூட..." என்று சொல்லி முடிக்கிறார் சாய்க் குமார். அவர் இருக்கும் திசையில் தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த நீல நிற தண்டர் பேர்ட்... 

vikatan

  • தொடங்கியவர்

விண்ணில் பறக்கும் காகித விளக்கு!

 

 
படங்கள்: ம. சுசித்ரா
படங்கள்: ம. சுசித்ரா
 
 

பரபரப்பான தைப்பே நகரின் எல்லையைக் கடந்ததும் சில்லென்ற சாரலோடு வரவேற்றது தைவானின் நயாகரா என்று அழைக்கப்படும் ஷைஃபன் அருவி. காட்டாறு போல ஓடி வந்து மலை உச்சியிலிருந்து ஷைஃபன் விழுவதைப் பார்க்க ஏதுவாக எதிரில் உள்ள மலையில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மலைக் காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் செம்மண் நிற மரப் படிக்கட்டுகளில் ஏறியபடியே பால்போல வழியும் ஷைஃபன் அருவியைப் பார்க்க ஏகாந்தமாக இருந்தது.

shapain_3104582a.jpg

மலையிலிருந்து இறங்கினால் பிங்க்ஸி நகரின் ரயில் தண்டவாளங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. தண்டவாளத்தின் இருபுறமும் ஏகப்பட்ட துரித உணவகங்கள், சாக்லேட்-கேக் போன்ற சிற்றுண்டிப் பண்டங்களை விற்கும் கடைகள், அந்த ஊரின் தனித்துவத்தைச் சொல்லும் அழகிய அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வரிசை கட்டின. பல கடைகளில் விற்கப்பட்ட ஆளுயர வண்ணமயமான காகிதங்களைப் பெரும்பாலானோர் வாங்கினார்கள். அவர்களைப் பார்த்து நாங்களும் வாங்கினோம்.

தண்டவாளத்தில் வாழ்க்கை

காகிதத்தோடு தண்டவாளத்தின் நடுவே ஆங்காங்கே இளைஞர்கள் குழுக்களாகக் கூடி நின்றனர். ஒவ்வொரு குழுவும் அவர்களுடைய விருப்பத்தை அந்தக் காகிதத்தின் எல்லாப் பக்கங்களிலும் தூரிகையில் மை தொட்டு எழுதினார்கள். பிரித்தால் நீள் வட்ட வடிவிலான பாராச்சூட் போல அந்தக் காகிதம் விரிந்தது. தீ மூட்டப்பட்ட கற்பூரம் போன்ற ஒரு வஸ்தை அதற்கு அடியில் வைத்துக் கட்டியதும். பறக்கத் தயாரானது. ஒரே நேரத்தில் அங்கு கூடி நின்ற அனைவரும் அவரவர் கனவுகளை, வேண்டுதலை, விருப்பத்தை எழுதிய காகித விளக்குகளை விண்ணில் பறக்கவிட்டோம். வானம் வண்ணமயமாய் மாறியது.

“சீன வருடப் பிறப்பின்போது இப்படி விண்ணில் காகித விளக்குகளைப் பறக்க விடுவதுதான் பிங்க்ஸி விண் விளக்குத் திருவிழா” என்றார் பயண வழிகாட்டி ஃபிரான்ஸிஸ் ஹூ. ஆகாயத்தை அசந்துபோய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரெனத் தண்டவாளத்தில் நின்ற கூட்டம் கலைந்தது. சீறிப் பாய்ந்தது ஒரு ரயில். சில நொடிகள் கழித்து மீண்டும் தண்டவாளத்தில் திரண்டது ஜனம்!

கொன்னுட்டாங்கப்பா!

‘உலகத் தரம் வாய்ந்த 27 பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றது ஜான்ஃபசன் தீம் பார்க்’ என்கிற பெயர்ப் பலகையை வாசித்துக்கொண்டே நடந்தோம்.

theme_park_3104585a.jpg

“இதுதான் டைவிங் மஷீன் ஜி5. உலகின் முதல் ஃபிரீஃபால் ரைட். யாருக்குத் துணிச்சல் இருக்கோ அவங்க மட்டும் வாங்க” என இன்ட்ரோ கொடுத்தார் அந்த தீம் பார்க்கின் மேலாளர் யூ செங்க் லீ. ‘அட! எல்லா தீம் பார்க்கலயும் கொடுக்குற பில்டப்தானே’ என மைண்ட் வாய்ஸ் சொல்ல, எங்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் முன்வந்தோம். ரோலர் கோஸ்டர் நாற்காலியின் முதல் வரிசையில் உட்கார்ந்து பெல்ட்டைக் கட்டிக்கொண்டோம்.

நிதானமாக நகரத் தொடங்கிய ரோலர் கோஸ்டர் உயரம் ஏறியது. லேசாக வயிறு கூசியது. சிரித்துக்கொண்டே சுற்றிப் பார்த்தோம். பத்து நொடிகள் மிதமான வேகத்தில் ஓடி ஒரு இடத்தில் நின்றது. மேலிருந்து கீழே பார்த்தால் ஏதோ காட்டுக்கு மேலே வெட்ட வெளியில் மிதப்பது போன்ற உணர்வு. சிரிப்பு குறைந்து. ஆனால் ரோலர் கோஸ்டர் நகரவில்லை. திடீரென மேலே இருந்து குப்புறத் தள்ளிவிட்டதுபோல தடதட வென எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விழுந்தது ரோலர் கோஸ்டர். கண்ணை மூடித் திறப்பதற்குள் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தது. “கொன்னுட்டாங்கப்பா!” என்கிற கமண்ட் கனபொருத்தம். “நீங்கள் இப்போ 65 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தீர்கள். இப்போ புரியுதா நான் சொன்ன ஃப்ரீ ஃபால்” எனச் சிரித்தார் யூ செங்க் லீ.

உயிரோட்டமான வரலாறு

போதும் போதும் எனப் பயத்தில் வெளியே வந்த எங்களை நருவன் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க ரோப் காரில் ஏற்றிவிட்டார்கள். அடுத்த சாகசம் ஆரம்பம்!

naruvan_3104583a.jpg

ஜி5-ல் போன பிறகு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் தொங்கும் ரோப் காரில் பயணிப்பது சாதாரணமாகத்தான் தோன்றியது. கீழே சன்மூன் ஏரி, சுற்றிலும் மலை, மேலே மழை மேகம். ஆனால் பயம் கொஞ்சமும் இல்லை. அற்புதமான மலைக் கிராமம் ஃபார்மோசான். அங்கிருந்த அருங்காட்சியகம் உயிரற்ற தொல்பொருட்களின் குவிப்பாக இல்லாமல் உயிரோட்டமாக அதன் வரலாற்றைக் காட்சிப்படுத்தியது. அதைவிடவும் சிறப்பாக நருவன் வாழ்க்கையை நாட்டிய நாடகமாகக் காட்டியது நருவன் கலை நிகழ்ச்சி.

தைவான் பயணத்துக்கு முத்தாய்ப்பாக சீமிங் தாங் கோயில் தரிசனம் அமைந்தது. இயற்கையைக் கடவுளாக வழிப்படும் பண்பாட்டைக் கொண்ட தாவோ மதத்தின் சிறப்பைச் சொல்கிறது இந்தக் கோயில். தாமரை ஏரியில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அந்த அற்புதத்தைப் பார்த்தபடியே தைவானிடம் கற்றுக் கொண்டோம்.

temple_3104581a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்... கரத்தை பிடித்தபடியே இறந்தனர்..!

 

Trent_600_14573.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரென்ட் வின்ஸ்டீட் (88) மற்றும் டோலோர்ஸ் வின்ஸ்டீட் (83) 64 ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்தனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு டோலர்ஸ்சும் உடல்நிலை பாதிப்படைந்ததால் ட்ரென்ட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும், ஒரே அறையில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். 

இதையடுத்து, டிசம்பர் 9-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டோலோர்ஸின் உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, அடுத்து சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட்டும் இறந்துள்ளார்.

ட்ரென்ட் இறக்கும் போது அவரது வாழ்வில் 64 ஆண்டுகள் கூடவே பயணித்த மனைவி டோலோர்ஸின் கரத்தை பிடித்தபடியே இறந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் 8 பேரக்குழந்தைகளும் உள்ளன.

vikatan

  • தொடங்கியவர்

 

பாம்புகளிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இகுவானா பல்லி - காணொளி

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.