Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

உயிரினங்களின் உணர்வுகளை பதிவு செய்யும் இந்தோனீஷிய கலைஞர்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மார்க்... ஜார்விஸ்... கட்டப்பா... பாகுபலி... ஃபேஸ்புக்! #Welcome2017

 

ஜார்விஸ்


ஏம்ப்பா நாமெல்லாம் புத்தாண்டு சபதம் எடுத்தா என்ன பண்ணுவோம்? ஜனவரி ஒண்ணாந்தேதி நல்ல புள்ளையா ”நான் இந்த வருசம் இதைச் செய்யப்போறேன்.. அதைச் செய்யப் போறேன்”னு உணர்ச்சி பொங்கப்பொங்க ஒரு ஸ்டேட்டஸை டைப் பண்ணி, அதுல Feeling Determined னு வேற சேர்த்து போஸ்ட் பண்ணி எத்தனை லைக்கு வருதுனு எண்ணிட்டு இருப்போம்.  குறைந்தபட்சம் அடுத்தநாள், அதிகபட்சம் ஒருவாரத்துல நார்மல் மோடுக்கு வந்திருப்போம். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க், மனிதகுலத்தின் இந்த மகத்தான கலாச்சாரத்திற்கு எதிராக, நியூ இயர் உறுதிமொழியை டிசம்பர் வரை ஞாபகம் வைச்சு, செஞ்சும் இருக்காரு. 

அப்படி என்ன சபதம் எடுத்தார் மார்க்?

இரண்டு முக்கியமான சவால்களை இந்தாண்டுக்குள் தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பதாக கடந்த ஜனவரி மாதம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார் மார்க். ஒன்று உடலுக்கு... 365 மைல் ஓடுவது. இன்னொன்று மூளைக்கு, தனக்கென ஒரு வர்ச்சுவல் அசிஸ்டெண்டை உருவாக்குவது. அதுவும் ஐயர்ன் மேன் படத்தில் வரும் ஜார்விஸ் மாதிரியான ஒரு அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் மார்க். சொன்ன சொல் தவறாமல் அப்படி ஒன்றை உருவாக்கியும் விட்டார் மனுஷன். 
மார்க் ஸக்கர்பெர்க் ஒரு விர்ச்சுவல் அசிஸ்டெண்டை உருவாக்கியிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கு தன் விருப்பம்போலவே “ஜார்விஸ்” என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த ஜார்விஸ் என்பது ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப்ரோக்ராம். நமது மொபைலில் இருக்கும் “ஓக்கே கூகுள்”.. “சிரி” போன்று வாய்ஸ் கமெண்டுகள் மூலம் இயங்கக் கூடிய அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனோடு தன் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களுடன் இணைத்து தன் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கியிருக்கிறார். மார்க் ஒரு குரல் கொடுத்தால் போதும் ”ஆலம்பனா நான் உங்கள் அடிமை” என்று இட்ட பணியை சட்டென முடிக்கும் ஜகஜ்ஜால கில்லாடி ஜார்விஸ். நம்ம சிட்டி மாதிரியான்னு கேட்டா, ஆமாங்க.  

என்னவெல்லாம் செய்யும் ஜார்விஸ்?

வீட்டில் லைட் ஆன்/ஆஃப் செய்யவேண்டுமா.. கிட்டா ஆங் ஸ்டைலில் மார்க் சொன்னால் உடனே லைட் அணையும்/எரியும். தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓவராக் குளிருதா? ரிமோட்டைத் தேடி எடுத்து குறைக்க வேண்டாம்.. அந்த ஏசியைக் கொஞ்சம் கம்மி பண்ணேன் என்று சொன்னா போதும். அதுவே குறைத்துவிடும்.

காலைல எழுந்ததும் மார்க் எங்கெல்லாம் போகணும்? யாரையெல்லாம் மீட் பண்ணனும் என்று நினைவூட்டும். வீட்டு வாசலில் யாராவது காலிங் பெல் அடித்தால் அவர்களுடைய முகத்தை படம் பிடித்து ஃபேஸ்புக் உதவியுடன் வந்திருப்பவர் யார் என்பதை மார்க்கிற்கு தெரியப்படுத்தும்.

பாட்டு கேட்கணும்னா மார்க்கிற்கு என்ன மாதிரியான பாட்டெல்லாம் பிடிக்கும்னு சரியா ஞாபகம் வச்சு அதுக்கேத்த மாதிரி படிக்கும். படம் பார்ப்பதென்றாலும் அப்படித்தான். சொன்னதை மட்டும்தான் செய்யுமா? நோ நோ மார்க் தன் மனைவி மகளுடன் இருக்கும்போது ஒரு பாட்டைச் சொல்லி அதை ப்ளே பண்ணுனு சொல்ல.. ’புள்ளைய பக்கத்துல வச்சிக்கிட்டு இந்தப் பாட்டா கேட்ப’ என்று மார்க்கை அதட்டுவதோடு இந்த பாட்டைக் கேளு என்று மார்க்கின் மகள் மேக்ஸ் ரசிக்கும் வண்ணம் ஒரு பாட்டை ஓடவிடுகிறது (வாவ்டா) 
ஒரு வயதாகியிருக்கும் மார்க் மகள் மேக்ஸைக் கவனிப்பதுதான் ஜார்விஸின் தலையாயப் பணி. விளையாடிக்கிட்டே மேக்ஸ் அறையை விட்டு வெளியே சென்றால்... “பாப்பா வெளில போகப்போறா...சீக்கிரம் வாங்க” என்று அபயக்குரல் எழுப்பி மார்க்கையும் அவரது மனைவியையும் அலர்ட் ஆக்கும். (like reaction)

maxresdefault_14193.jpg

இப்படி ஒரு உதவியாளரைத்தான் தனது ஓராண்டு கால உழைப்பில் உருவாக்கியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் நாயகன். இது போன்ற வர்ச்சுவல் அசிஸ்டென்டுகளுக்கு வாய்ஸ்தான் விஷயமே.. ஒரு கம்பியூட்டர் ப்ரோக்ராமை உண்மையான ஆள் போன்ற ப்ரம்மை ஏற்படுத்த அது பேசும் குரல் ஒரு மிக முக்கியக் காரணி. பொதுவாக இது போன்ற ஏ.ஐ (AI) களுக்கு  பெண் குரலைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் மார்க் கொஞ்சம் வித்தியாசமாக ஆண் குரலைப் பயன்படுத்தி இருக்கிறார். ஜார்விஸ்க்கு வாய்ஸ் கொடுத்த, அந்த ஆண் யார் தெரியுமா? தனது கரகரக் குரலால் நம்மை வசியம் செய்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன். (Love Reaction). இவர் குரலைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், மார்க் இப்படி ஒன்றை உருவாக்கப் போவதாக சொல்ல கிட்டத்தட்ட 50000 பேர் இவர் குரலைப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்டார்களாம். 

சரி வீட்டில் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் வீட்டம்மாவின் ஒத்துழைப்பு வேண்டுமே? இது பற்றி மார்க்கின் மனைவி ப்ரிசில்லா என்ன சொல்கிறார்.. ப்ரிசில்லாவிற்கு முதல் ஏமாற்றம்.. முதலில் இது மார்க் சொல்வதை மட்டுமே கேட்டது. ப்ரிசில்லா ஏதாவது சொன்னால் தேமே என்று இருந்தது. பிறகு மார்க் இதை சரி செய்தார். சில நேரங்களில் கொடூரமான குரல் வருவது.. ஏதோ கமென்ட் சொல்ல எக்குத்தப்பாக எதாவது நடப்பது என்று சில விஷயங்கள் வெறுப்படையச் செய்தாலும் ப்ரிசில்லாவும் இதை லைக் தான் செய்கிறார்.   

எப்படி வேலை செய்கிறது “ஜார்விஸ்”?

ஜார்விஸ், Voice Recognition அடிப்படையில் இயங்கும் Artificial Intelligence ப்ரோக்ராம். மார்க் வீட்டிலுள்ள லைட், ஏசி, டிவி, வாசலில் இருக்கும் கேமரா என்று எலெக்ட்ரானிக் சாதனங்களோடும் இணைக்கப்பட்டுள்ளது. மார்க் ஒரு கட்டளையைச் சொன்னால் அதை சம்பந்தப்பட்ட சாதனத்திற்கு அனுப்பி வேலையை முடிக்கிறது. ஆனால் ’அண்டாகாகசம் அபூகா ஹுக்கும் திறந்திடு சீசேம்’ என்ற சத்தம் வந்தால் சற்றும் யோசிக்காமல் சக்கரத்தை சுற்றிக் கதவுகளைத் திறந்துவிடும் அலிபாபா பட அடிமைகளைப் போல் அல்ல ஜார்விஸ். வெறுமனே இந்தக் கட்டளையைச் சொன்னால் இப்படிச் செயல்பட வேண்டும் என்ற அடிமைத் தனத்துக்கு கட்டுப்பட்டதல்ல. Natural Language Processing அடிப்படையில் தனக்கு வரும் கட்டளைகள் ஒவ்வொன்றையும் சேமித்துக் கொள்வதன் மூலம் யார் கட்டளையைச் சொல்கிறார், எந்த அறையில் இருந்துகொண்டு சொல்கிறார். அவரின் ரசனை எப்படிப் பட்டது? அவர் என்ன மாதிரியான  பாடல்களை விரும்பிக் கேட்கிறார்? எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? என்பதை தொடர்ந்து கற்றுக்கொள்வது. ஒரு வார்த்தையை சொல்லும் தொனியை வைத்தே அவர் என்ன மனநிலையில் இருக்கிறார். சோகமாக இருக்கிறாரா? மகிழ்ச்சியாக இருக்கிறாரா? என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது என்று தனக்குத்தானே கற்றுக் கொள்ளும் (Technically Machine Learning). 

அடுத்த லெவல்?

இப்போது சோதனை அளவில் இருக்கும் இதை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுதான் இப்போதைக்கு மார்க்கின் திட்டம்.


2017ல் நாம் அதிகம் எதிர்பார்க்கும் இரண்டு தகவல்கள் 
1) கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்
2) மார்க் எடுக்கப்போகும் 2017 ரெசொல்யூஷன்.

vikatan

  • தொடங்கியவர்

நோர்வே

  • தொடங்கியவர்

ஆறுதல் தரும் ஆன்றோர் மொழிகள்..! #InspirationalQuotes

 

வாழ்க்கையில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் நம்மைத் துரத்தும்போதும், வறுமைத் துன்பம் நம்மை வாட்டும்போதும் நம்முடைய மனம் தடுமாறாமலும், தடம் மாறிச் சென்று அல்லல்படாமலும் இருக்கச் செய்வதில் ஆன்றோர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்ததை  பொன்மொழிகளாக நமக்குத் தந்து சென்றிருக்கின்றனர். நம்முடைய மனதை செம்மைப்படுத்தி, நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்தும் பொன்மொழிகள் இங்கே உங்களுக்காக...

Car_19416.jpg

Card_19587.jpg

Card2_19288.jpg

Card3_19122.jpg

Card4_19414.jpg

Card5_19408.jpg

Card6_19245.jpg

Card7_19593.jpg

Card8_19280.jpg

 

 

  • தொடங்கியவர்

2j5lais.jpg

அனைவருக்கும் நத்தார்  வாழ்த்துகள்?

 

 

மானிட விடுதலைக்காக அவதரித்தவர் இயேசு கிறிஸ்து.!

 

 

மனி­த­னாக வந்த இறைவன் மனி­தரின் வேத­னை­களை பாடு­களை நன்கு அறிந்­தவர். அவர் ஏழை­யாகப் பிறந்தார். 40 நாட்கள் உண­வ­ருந்­தாமல் இருந்தார் அவ­ருக்குப் பசி­யெ­டுத்­தது. பசியின் கொடு­மையை அவர் அறிந்­தி­ருந்தார்.  சிறு­வ­ய­தி­லேயே அக­தி­யானார்.

Birth-of-Christ.jpg

உலகில் பல தலை­சி­றந்த மனி­தர்கள் மதத்­த­லை­வர்கள் மார்க்­கத்­த­லை­வர்கள் அர­சியல் தலை­வர்கள் சிந்­த­னை­யா­ளர்கள், சாத­னை­யா­ளர்கள் விடு­த­லை­யா­ளர்கள் பிறந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்­துவின் பிறப்பு தனித்­து­வ­மா­னது, தன்­னி­க­ரற்­றது. அதற்­கான கார­ணங்­களை நாம் அவ­தா­னிப்போம். 

குறித்த ஒர் இனத்­திற்­கா­கவோ மதத்­திற்­கா­கவோ பிறக்­கா­தவர்

இயேசு கிறிஸ்து கிறிஸ்­தவ மதத்தை ஸ்தாபிப்­ப­தற்­கா­கவோ இஸ்­ரவேல் நாட்­டி­ன­ருக்­காகவோ பிறக்­க­வில்லை. அவர் சகல மானிடர்­க­ளுக்­காவே பிறந்தார் எனவே தான் அவர் பிறந்த போது தேவ­தூதன் “இதோ எல்லா ஜனத்­துக்கும் மிகுந்த  சந்­தோ­ஷத்தை உண்­டாக்கும் நற்­செய்­தியை உங்­க­ளுக்கு அறி­விக்­கி­றேன். (லூக் 2:10)” என்று அவ­ரது பிறப்­பைக்­கு­றித்து அறி­வித்தார். கிறிஸ்து மத இன குல நிற சமூக பாகு­பா­டு­க­ளைக்­க­ளைந்து சகல மனி­தர்­க­ளுக்கும் உரி­யவர்.  ஆபி­ரிக்­கனும் அவரைத் தொழுது கொண்டான் ஐரோப்­பி­யனும் அவரைத் தொழு­துகொண்;டான். வித்­தி­யா­ச­மான மதப்­பின்­ன­னியைச் சேர்ந்­த­வர்­களும் அவ­ரிடம் வந்து அவ­ரைத்­தொ­ழுது கொண்­டனர். அவர் சகல மனி­த­ருக்கும் உரி­யவர் . அவர் வருகை சகல ஜனத்திற்;கும் சந்­தோ­ஷத்தை ஏற்­ப­டுத்தும்  நற்­செய்­தி­யாகும் .

கன்­னியின் வயிற்றில் பிறந்­தவர்

அவர் இவ்­வு­லகில்  பிறப்­ப­தற்கு பல­நூறு வரு­டங்­க­ளுக்கு முன்பே தீர்க்­க­த­ரிசி ஏசாயா என்­பவர் அவர் கன்­னியின் வயிற்றில் பிறப்பார் என உரைத்தார். (ஏசா 9:6) பெத்­ல­கேமில் பிறப்பார் என இன்­னொரு தீர்க்­க­த­ரிசி மீகா உரைத்தார். கன்­னி­யான மரி­யா­ளுக்கு தேவ­தூதன் இதனை முன்­ன­றி­வித்தார் (லூக்) கணவன் மனைவி உட­லு­றவில்லாமல் ஆணின் விந்து சம்­பந்­த­மில்­லாமல் பிறந்­தவர்.

பிறப்­ப­தற்கு முன்­பா­கவே இருந்­தவர்

கிறிஸ்து பிறந்த போது தோன்­றி­ய­வ­ரல்ல கல்தோன்றி மண்­தோன்றா கால முதலே அவர் இருந்தார். அவ­ருக்கு இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழந்த ஆபி­ர­கா­முக்கு முன்பே தான் இருந்­த­தா­கவே அவரே வேதா­க­மத்தில் கூறி­யுள்ளார் (யோவான் 8:58). உலகம் தோன்­று­வ­தற்கு முன்பே பிதா­வோடு இருந்­த­தா­கவும் (யோவான் 1:1,14) அவ­ரோடு அன்­பைப்­ப­கிர்ந்­து­கொண்­ட­தா­கவும் இயேசு கூறு­கிறார் (யோவான் 17:24);. ஆம் அவர் உலகம் படைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே இருந்தார் பர­லோகில் இருந்தார். 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மனி­த­னாக இவ்­வு­ல­கிற்கு வரு­தற்கு முன்பே இருந்தார் அவர் இல்­லா­தி­ருந்த காலமே இருந்;ததில்லை . அவர் இல்­லா­தி­ருக்­கப்­ப­போகும் காலமும் இனி இருக்­கப்­போ­வதில்;லை. அவர் நித்­திய கால­மாக இருப்­பவர் அவ­ருக்குத் தொடக்­கமும் முடிவும் இல்லை. அவ­ரது மனு­அ­வ­தா­ரத்­திற்கே தொடக்­கமும் முடிவும் இருந்­தது. அவர் நித்­தி­ய­மா­னவர்.

4.மனி­த­னாக வந்­தவர்; மனி­தனைப் படைத்­தவர்

“இறைவன் மனி­த­னாகப் பிறக்க வேண்டும்” என்று ஒரு தமிழ் பாடல் உண்டு. அது உண்­மை­யா­கவே நடந்­தது இயேசு கிறிஸ்து  உல­கத்­தோற்­றத்­திற்கு முன்பே இருந்­தவர் மட்­டும்­மல்ல,பர­லோகை விட்டு மனி­த­னாக வந்­தவர் வெறு­மனே இன்­னொரு மனி­த­ரல்ல, வானத்­தையும் பூமி­யையும் அதி­லுள்ள யாவற்­றையும் மனி­த­னையும் படைத்த இறைவன் வேதா­க­மத்தில்  “சக­லமும் அவர் (இயேசு) மூலமாய் உண்­டா­யிற்று : உண்­டா­ன­தொன்றும் அவ­ரா­லே­யல்­லாமல் உண்­டா­க­வில்லை” (யோவான்1:3) என்று பரி­சுத்த வேதம் கூறு­கி­றது.

மனி­தனைத் தனது சாயலில் படைத்த தெய்வம் மனித சாய­லானார். சிற்­பியே சிலை­யா­வது போல மனி­தனை தனது சாயலில் படைத்த இறைவன் மனித சாய­லானார். பர­லோக சந்­தோ­ஷங்­களை அனு­ப­வித்த தேவன், மாமி­சமும் சதையும் எடுத்து மனி­த­னாக வந்தார். ஒரே­நே­ரத்தில் எல்லா இடத்­திலும் இருக்­க­கூ­டிய இறைவன் இயேசு தன்னைக் கட்­டுப்­ப­டுத்தி  மனி­த­னாக வந்தார்.

 மனி­த­னாக வந்த இறைவன் மனி­தரின் வேத­னை­களை பாடு­களை நன்கு அறிந்­தவர். அவர் ஏழை­யாகப் பிறந்தார். 40 நாட்கள் உண­வ­ருந்­தாமல் இருந்தார் அவ­ருக்குப் பசி­யெ­டுத்­தது. பசியின் கொடு­மையை அவர் அறிந்­தி­ருந்தார்.  சிறு­வ­ய­தி­லேயே அக­தி­யானார். இயே­சு­கி­றிஸ்தும் சிறு­கு­ழந்­தை­யா­யி­ருக்கும் போதே எரோது அரசன் இயே­சுவைக் கொல்­வ­தற்­காக சிறு­பிள்­ளை­களைக் கொலை செய்­த­போது இயே­சுவின் வளர்ப்புத் தந்­தையும் இவ்­வு­லகத் தாயும் அவரை எடுத்­துக்­கொண்டு எகிப்து நாட்­டிற்கு அக­தி­க­ளாகச் சென்­றனர்; (மத்2:13-17). அக­தி­யா­யி­ருப்­பதன் அவ­லத்­தையும் அவர் அறிவார்.

நண்­பர்­களால் கைவி­டப்­ப­டு­வதன் வேத­னையை அவர் அறிவார்.அவ­ரோடு ஒன்­றாக இருந்து உண்டு குடித்த அவ­ரது சீடர்­களில் ஒருவன் அவ­ரைத்­தெ­ரி­யா­தென மறு­த­லித்தான். இன்­னொரு சீடன் பணத்­திற்கு ஆசைப்­பட்டு அவரைக் காட்­டிக்­கொ­டுத்தான். அவ­ருக்கு ஆபத்து வந்த வேளையில் அவ­ரிடம் நன்மை பெற்­ற­வர்கள் பலர் அவரை கொலை­செய்­யும்­படி என்று கூக்­கு­ர­லிட்­டனர். நன்­றி­யற்­ற­வர்­களின் நன்­றி­யற்ற தன்­மை­யையும் நண்­பர்­களால் கைவி­டப்­ப­டு­வதன் வேத­னை­யையும் நன்கு அறிவார். 

மனக்­கா­யங்கள் எம் உள்­ளங்­களில் மாறாத வடுக்­­களை ஏற்­ப­டுத்தி விடு­வ­துண்டு. இயே­சு­கி­றிஸ்­துவும்; காயப்­பட்­டவர். எனவே மனக்­கா­யத்தின் வேதனை அவர் அறிவார் . அவர் காயப்­பட்­டவர் மட்­டும்­மல்ல காயங்­களை குண­மாக்­கு­கி­ற­வ­ரா­யு­மி­ருக்­கிறார். 

அவர் பொய்க்­குற்றம் சாட்­டப்­பட்டார் (லூக் 23:4) (லூக் 23:14-15)  பொய்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­ப­டு­வதன் வேதனை அறிந்­தி­ருந்தார். பல­வி­த­மான பொய்க்­குற்­றச்­சாட்­டு­களை அவர் மேல் சுமத்தி; அவரை சிறை­ப்பி­டித்­தனர். செய்­யாத தவ­றுக்­காக பொய்க் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு சிறை­யி­லி­ருப்­பதன் வேதனை அவர் அறிந்­தி­ருக்­கிறார். 

எம்மில் எவ­ருமே அவ­மா­னப்­பட விரும்­ப­வ­தில்லை. நாம் இர­க­சி­யமாச் செய்த தவ­றுகள் கூட மற்­ற­வர்­க­ளுக்குத் தெரிந்தால் அவ­மா­னப்­பட வேண்­டுமே என நாம் அவ்­றறை மூடி மறைக்­கிறோம். இயேசு கிறிஸ்­துவோ தவ­றொன்­றையும் செய்­ய­வில்லை ஆனால் அவரை அவ­மா­னப்­ப­டுத்­தி­னார்கள் 

மரிப்­ப­தற்­கா­கவே பிறந்­தவர்

அவர் பிறந்த நோக்­கமும் தன்­னி­க­ரற்­றது தனித்­து­வ­மா­னது. இன்று அநே மகான்­களும் மதத்­த­லை­வர்­களும் அர­சியல் தலை­வர்­களும் பிறந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருமே வாழ்­வ­தற்­காகப் பிறந்­த­வர்கள். ஆனால் மரிப்­ப­தற்­கா­கவே பிறந்­தவர் இயேசு கிறிஸ்து.

அக்­கா­லத்தில் பலஸ்­தீ­னாவில் பாவம் செய்­த­வர்கள் ஒர் ஆட்­டுக்­குட்­டியை எடுத்து அதன் மேல் கைகளை வைத்து தமது பாவங்­களை அதன் மேல் சுமத்தி அதனை கொலை செய்­வ­துண்டு. பாவத்தை சுமத்­து­கிற மனி­த­னு­டைய பாவங்­களை அந்த ஆடு சுமந்து அந்த மனி­த­னுக்­குப்­ப­தி­லாக மரிப்­ப­துண்டு.  இயேசு கிறிஸ்து ஒரு மனி­த­னு­டைய பாவத்­தை­யல்ல முழு உலக மனி­த­ரு­டைய பாவத்­தையும் சுமந்து முழு மனி­த­ருக்­காவும், மரிப்­ப­தற்­கா­கவே மனி­த­னானர். எனவே யோவான் ஸ்நானகன் இயே­சுவைப் பார்த்து “ இதோ உல­கத்தின் பாவங்ளைச் சுமந்து தீர்க்­கிற தேவ ஆட்­டுக்­குட்டி (யோவான் 1:29)” என்றார். இயேசு இவ்­வு­ல­கிற்கு வந்த ஒரு முக்­கி­ய­கா­ரணம் எனக்­கா­கவும் உங்­க­ளுக்­கா­கவும் ( மதம், இனம், குலம் கடந்து அனை­வ­ருக்­காவும்) மரிப்­ப­தற்­காக வந்தார். 

“ நாம் பாவி­களாய் இருக்­கையில் கிறிஸ்து நமக்­காக மரித்­த­தி­னாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்­கப்­பண்­ணினார் ( ரோமர் 5:8)” உங்­க­ளுக்­காக உயி­ரையே கொடுக்­கு­ம­ள­விற்கு உங்­களை நேசிக்­கிறார். உங்கள் பாவங்ளைத் தன்மேல் ஏற்று அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தார். நான் தவறு செய்து இன்னொருவர் எனது தண்டனையைஏற்று சிறைக்குச் செல்வது போல நானும் நீங்களும் செய்த பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்று சிலுலையில் மரித்தார்  எனவே தான் பைபிலில் “ மெய்யாகவே அவர்(இயேசு) நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார். நம்முடைய மீறுதல்களினினிமித்தம்( பாவங்கள்) அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்.  நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம  ( ஏசா 53:4-5;” 

ஆகவே கிறிஸ்துவின்  பிறப்பு மானிட மக்கள் பாவத்திலிருந்து விடுதலை  பெறுவதற்காகவே  இவ்வுலகிற்கு வந்ததை உணர்த்துகிறது . இதனை புரிந்து  ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக  நாம் அனைவரும்  உண்மையான சமாதானத்துடன்  வாழ்வோம் 

 

https://s-media-cache-ak0.pinimg.com/originals/de/81/12/de8112cc482c7ddbd081079de4773fda.gif

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

’அந்த’ பத்து பேரில் ஒருவர் நீங்களா? ஸ்மார்ட்ஃபோன் சங்கடங்கள்! #SmartphoneAddiction

 

ஸ்மார்ட்ஃபோன்

அமெரிக்கர்கள் இடையே நடத்தப்பட்ட சர்வேயில் பத்தில் ஒருவர் உடலுறவு கொள்ளும்போது கூட ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். ’அமெரிக்கர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு பொய் சொல்கிறார்கள்.ஆசியாவில் பத்தில் ஐந்து பேர் செக்ஸின் போது மொபைலை பயன்படுத்துவார்கள்” என இன்னொரு ஊகம் தீயில் பெட்ரோல் ஊற்றுகிறது. 

ஒரு சின்ன டெஸ்ட். கடைசியாக உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது அபார்ட்மெண்ட்வாசியிடம் எப்போது நேரில் பேசினீர்கள்? அவரை பார்த்தால் கூட “கால் பண்றேன்” என்று சொல்லி விட்டுப் போவதுதானே அதிகம்? ஒரு வேளை நீங்களும் அவரும் ஒரே வாட்ஸப் க்ரூப்பில் அதிகம் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் நேரில் பார்த்தால் நம்மை அறியாமல் எஸ்கேப் ஆக திட்டமிடுகிறோம். இதுவரை நம் வாழ்க்கையின் ஆதாரமாக அம்மா, அப்பா, காதலி, நண்பன் என ஏதோ ஒரு உறவாக சக மனிதனே இருந்திருக்கிறார். இந்த இடத்தை மெல்ல ஆக்ரமித்து விட்டன மொபைல் ஃபோன்கள்.

மொபைலை தங்கள் உடலின் இன்னொரு பாகமாக பார்க்கிறது இன்றைய உலகம். தன்னிடம் இருந்து ஐந்து அடிக்குள் மொபைல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பாத்ரூமோ, பாட்டு கிளாஸோ.. அலுவலக மீட்டிங்கோ, காதலியுடன் டேட்டிங்கோ. எங்கு சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதில்லை. எடுத்து செல்வதும் கூட சரி. அங்கேயும் மொபைலை நோண்டி கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். மொபைலை பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்ட மாதிரி பதறிவிடுகிறார்கள்.

வீட்டிலிருந்த கிளம்பிய 15வது நிமிடத்தில் ஃபோனை வீட்டிலே மறந்தது தெரிந்தால் எப்படி இருக்கும்? ”திக்”கென்று இருக்கிறதா?மொபைல் கையில் இல்லாமல் ஒரு நாளை கடத்துவது என்பது இன்றைய வாழ்வில் சாத்தியமே இல்லை. ஆடை இல்லா மனிதன் அரைமனிதன் என்ற பழமொழியை ரிமிக்ஸ் செய்து “ஸ்மார்ட்ஃபோன் இல்லா மனிதன் அரைமனிதன்” என்றாக்கியிருக்கிறது விஞ்ஞானம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை “தன்ணி வேண்டுமா,பாத்ரூம் போறீங்களா” என கேட்பதை தொடர்ந்து “WiFi பாஸ்வேர்ட் வேண்டுமா” என்பதும் விருந்தோம்பல் என மாறியிருக்கிறது. Battery 100% charged என்பதுதான் வெளியெ கிளம்புவதற்கு நல்ல நேரம். ஒரு நிமிடம் கிடைத்தாலும் மொபைலில் மூழ்கி முந்தைய நொடியில் உலகில் என்ன நடந்தது என்பதை பார்க்கிறோம். கேண்டி கிரஷில் யாருக்கேனும் உயிர் தந்து உதவுகிறோம். அடுத்த நாள் காலை என்ன கோலம் போடலாம் என தேடுகிறோம்.. இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கணிணியும், இணையமும் மக்களிடம் சென்று சேர எடுத்துக்கொண்ட காலத்தை விட  ஸ்மார்ட்ஃபோன்ஸ்க்கு குறைவாகவே தேவைப்பட்டிருக்கிறது. மெயில் அனுப்பிய அப்பாக்களை விட இப்போது மொபைலில் லைக் போடும் அம்மாக்கள்தான் அதிகம்.  ஸ்மார்ட்ஃபோன் நம் வாழ்க்கையின் நகராத நொடிகளை வேகமாக நகர்த்துவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் வாழ்வை எளிமையாக்க மனிதன் கண்டுபிடித்த எல்லா வசதிகளுமே ஒரு கட்டத்தில் அவனுக்கு சுமையாகி போனது என்பதுதானே வரலாறு?

13265-smartphone-addiction_00580.jpg

இன்று என்ன நடக்கிறது? நான்கு நண்பர்கள் ஒன்றாக கேண்டினுக்கு வருவார்கள். இடம் கிடைத்து அமர்ந்த பின் எல்லா கைகளையும் ஸ்மார்ட்ன்போன்ஸ் ஆக்ரமிக்கும். அரட்டை அடிக்க வந்தவர்கள் மொபைலில் மூழ்குவார்கள். உச்சக்கட்ட காமெடியாக, எதிரில் இருப்பவருக்கே ஏதேனும் ஃபார்வர்டை வாட்சப் செய்வார். அவரும் நிமிர்ந்து பார்க்காமலே அதை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார். எல்லோருமே கர்ணன். எல்லோர் கைகளிலும் மொபைல் கவசம். உலகெங்கும் 50 சதவிகித மக்கள் தற்போது ஸ்மார்ட்ஃபோன்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விபரங்கள். 

ஸ்மார்ட்ஃபோன்களால் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ப்ரைவசி. பெரும்பாலானோருக்கு அடுத்தவர்களின் மொபைலில் இருப்பதை பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பொறாமை, சந்தேகம், தனிமை, விரக்தி என இன்றைய இளைஞர்களை இருட்டுப்பாதைக்கு கொண்டு செல்வதில் மொபைல்கள் தான் முக்கிய பங்கு வகிப்பதாக மன நல நிபுணர்கள் கவலை கொள்கிறார்கள். மொபைலை தங்களது அந்தரங்க பகுதியாக நினைத்துக் கொண்டு வேண்டாத பல விஷயங்களை சேமித்து வைக்கிறார்கள். இது மற்றவர்கள் கண்ணில் படும்போது மரியாதை இழக்கிறார்கள். தேவையற்ற சண்டை எழுகிறது. 

அடுத்த பிரச்னை கவனக்குறைவு. முன்பு குறுஞ்செய்திகளுக்கு கட்டணம் இருந்தது. இப்போது வாட்சப் காலம். இதனால் தேவையோ இல்லையோ எப்போதும் எதையாவது டைப் செய்து கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டுகிறார்கள்.. 15 செகண்டுக்கு மேல் சிக்னலில் நின்றால் மொபைலை எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கார் ஓட்டிக்கொண்டே மெசெஜ் அனுப்புவதும் உண்டு. சாப்பிடும் போதும் கையில் மொபைல்.  இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய பழகி கொள்வதால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மல்ட்டி ஸ்கில் என்பதும், மல்ட்டி டாஸ்க் என்பதும் வேறு வேறு. மல்ட்டி டாஸ்க்கிங் என்பது எந்த வேலையையும் சிக்கலாக்கும் வழிமுறைதான்.

பீட்ஸா வட்டமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதை முக்கோண வடிவமாகத்தான் பார்ப்பார்கள். அது போல, ஸ்மார்ட்ஃபோனிலே வாழ்பவர்களுக்கு நண்பர்கள் என்பவர்கள் கூட வெறும் நம்பர்கள்தான். மொபைல் மூலமான உரையாடலில் நன்றாக பேசும் இவர்கள் நேரில் பேசவே அஞ்சுவார்கள். மனிதர்களின் அடையாளமே இவர்கள் பார்வையில் மாறியிருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். மொபைலுக்கு அடிக்ட் ஆனவர்கள் “ஸ்மார்ட் தீவு” என்ற மாய வலைக்குள் சிக்கி தவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களை யதார்த்த வாழ்க்கைக்கு திருப்புவது என்பது கடினமான செயல். 

தினம் ஒரு புதுப்பிரச்சினை எழுப்பி வரும் ஸ்மார்ட்ஃபோன்கள் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கிய மிகப்பெரிய சிக்கல் செல்ஃபி. நம்மை நாமே படமெடுத்துக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும் தானே? இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் டீன் ஏஜ் யுவதி ஒருவர் ஒரே இரவில் 2000 செல்ஃபிக்கள் எடுத்திருக்கிறார். அதை விட கொடுமை, அந்த செல்ஃபிக்கள் எவையுமே திருப்தி தராமல் மறுநாள் காலை தற்கொலை செய்து கொண்டார். நம்ம ஊரிலும் செல்ஃபி எடுக்கிறேன் என பின்னாலே சென்று தடுக்கி விழுவது, விபத்தில் சிக்கிவது ஆன பல சுவாரஸ்ய துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. 

stock-vector-smartphone-addiction-infogr

ஸ்மார்ட்ஃபோன்களால் நம் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களை நாம் ஸ்மார்ட்ஃபோனில் செலவு செய்கிறோம். இதனால் உடல் எடை பிரச்சினை, முதுகு வலி ஆகிய கோளாறுகள் வருகின்றன. சிறு வயதில் நம் இடது மூளை வளர்ந்து, பின் வலது மூளை வளரும். ஆனால் ஸ்மார்ட்ஃபோன்ஸ் பயன்பாடு இடது மூளை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் மனிதர்களுடன் உரையாடாமல் மொபைல், டேப்லட் போன்ற இண்ட்ராக்டிவ் கருவிகளுடன் அதிக நேரம் செலவிட்டால் அவர்களது யோசிக்கும் முறையே மாறிவிடும். மனிதர்களையும் அவர்கள் இன்னொரு கருவியாக மட்டுமே பார்க்க நேரிடலாம். இதனால் எதிர்காலத்தில் அன்பு, பாசம், பயம் போன்ற எந்த மனித உணர்வுக்கும் வேலையே இருக்காது என எச்சரிக்கிறார்கள். 

முடிவாக, இன்னொரு டெஸ்ட். மொபைல் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இருப்பது சாத்தியமில்லைதான். ஆனால் குறைக்கலாமே! அழைப்புகள், அலுவலக விஷயங்கள் தவிர மற்ற எதையும் பயன்படுத்தாமல் உங்கள் மொபைலுடன் ஒரு நாள் இருந்து பாருங்கள். நீங்கள் எந்த அளவிற்கு அடிக்ட் ஆகியிருக்கிறீர்கள் என்பது புரியும். டெக்னாலஜியும் பணத்தை போலதான். நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான் அது வரம். அதன் கட்டுப்பாட்டில் நாம் போய்விட்டால் சாபம்.

vikatan

  • தொடங்கியவர்

'லவ்வபிள் மதர்’ - நாயின் அன்பால் நெகிழ்ந்த இணையம் (வீடியோ)

 

அம்மா

தெரு நாய்களை அடிக்க ஓடுகிறோம். கல் எடுத்து வீசுகிறோம். ரோட்டில் அலையும் மனிதர்களுக்கு மத்தியில் எத்தனையோ இன்னல்களைத் தாண்டி தெருநாய்களும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றன. அதுவும் குட்டிகள் பிறந்து விட்டால், நாய்கள் அவற்றை வளர்க்க பெரும் பாடுதான் படுகின்றன. ஒரு நாய் மனிதனைக் கடித்தால் வெறி கொண்டு 100 நாய்களை கொல்வது மனிதனின் குணம் . ஆனால், ஒரு முறை பசியாற்றினால் கூட வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் பார்ப்பது நாய்களின் குணம்.  நாய்களை கற்களைக் கொண்டு தாக்குவதற்கு முன், ஒரு முறை அவற்றுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைத்து பாருங்கள்' என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வரும். தாய்மை ஸ்தானம் அடையும் போது மனிதன், விலங்குகளுக்குகிடையே எந்த பேதமும் இல்லை. அம்மா என்றால் அன்பு என்றாகி விடுகிறது. 

குட்டிகள் பிறந்து விட்டால்,   ஒவ்வொரு விலங்கினத்திடமுமே மாற்றத்தை காண முடியும். தனக்காக வாழாமல் குட்டிகளுக்காக வாழத் தொடங்கி விடும். அங்கே ஓடுவதும் இங்கே ஓடுவதுமாக இருக்கும். குட்டிகளுக்கும் சேர்த்து இரை தேட வேண்டுமே. அதனால், அவற்றின் பொறுப்பு அதிகரித்துவிடும். பால் குடி மாறிய குட்டிகளை வளர்ப்பதற்கு எல்லா விலங்குகளுமே மனிதர்களைப் போலவேத்தான் கஷ்டப்பட்டுகின்றன. 

சிங்கம் தனது குட்டிகளுக்கும் சேர்த்து கூடுதலாக உணவு வேட்டையாட வேண்டும். யானை குட்டியின் வயிறு நிரம்புவதற்காக பல சதுர அடி தொலைவு நடக்கத் தொடங்கும். இப்படி ஒவ்வொரு விலங்கினங்களுமே தாய்மை ஸ்தானத்தை அடையும் போது தங்களின் பசியை மறந்து விடுகின்றன. குட்டிகளின் பசி மட்டும்தான் அவற்றின் மனதில் நிற்கிறது. தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

                                         

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், தெரு நாய் ஒன்றிற்கு ஒருவர் கிரில் சிக்கன் வழங்குகிறார்.  அதன் கண்களில் ஒரு பரிதாபம் தெரிகிறது. கிரில் சிக்கனை வாயில் கவ்விக் கொண்டதும் அந்த நாய் எங்கேயோ ஓடுகிறது. வழக்கமாக பசியில் இருக்கும் நாய்கள் உணவிட்டால், லபக் லபக் என்று சாப்பிட்டு விடும். ஆனால் இந்த நாய் சற்று வித்தியாசமாக ஓடத் தொடங்கியதால், அந்த நபரும் நாயின் பின்னாலேயே ஓடுகிறார். அத்துடன் நாயின் செயலையும் வீடியோவாக பதிவு செய்து கொள்கிறார். 

சில நிமிடங்கள் ஓடிய அந்த தெரு நாய் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் நின்று விடுகிறது.  ஒரு இடத்தில் இருநது சில நாய்க்குட்டிகள் அந்த நாயை நோக்கி ஓடி வருகின்றன. அவைகள் பெரும் பசியுடன் இருக்கின்றன. வாயில் கொண்டு வந்த சிக்கனை தனது குட்டிகளின் முன் போடுகிறது தாய் நாய். ஆனால், ஒரு குட்டிக்கு கூட அந்த சிக்கன் போதாது. உணவு குறைவாக இருந்தாலும் அந்த தாய் நாயின் அன்புதானே பெரியது. தெருநாய்கள் அவற்றின் குழந்தைகளை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதை இந்த வீடியோ விளக்குகிறது,

இந்த நிகழ்வை படம் பிடித்த நபர் அதனை இணையத்தில் வெளியிட்டார். இணையத்தில் வைரலாகியது. லட்சக்கணக்கானோர் அதனை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனார்கள். 'அப்படி ஒரு லவ்வபிள் அம்மா எங்கேயிருக்காங்க.. ' என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். பலர் குட்டிகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

 தாய்மைக்கு மனிதனிலும் விலங்கிலும் பேதமில்லை!

vikatan.

  • தொடங்கியவர்

 

ஜப்பானில் சிரிப்புப் பண்டிகை - காணொளி

  • தொடங்கியவர்

1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை

ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எனப்படும் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை மணல் ஓவியமாக செதுக்கியதன் மூலம் பிரபல மணல் ஓவியர் சுதர்சன் பட்நாயக் புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 
1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை
 
புவனேஸ்வர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தையநாள் பரிசுப் பொருட்கள் கொண்ட மூட்டையுடன் சிகப்புநிற அங்கி அணிந்து வீடுவீடாகவரும் வெண்தாடி தாத்தா, குழந்தைகளால் அன்புடன் ’கிறிஸ்துமஸ் தாத்தா’ என்று அழைக்கப்படுகிறார்.

அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சான்ட்டா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சான்ட்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார்.
423E8585-41AB-4F1A-B69C-D4DFECEEC828_L_s
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயரையும், புகழையும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கும் வகையில் ஒடிசா மாநில மணல் ஓவியக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள கடற்கரையில் ’உலகத்துக்கு மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள்’ என்ற தலைப்பில் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக செதுக்கியுள்ளார்.

அதன் அருகாமையில் அன்னை மேரி மற்றும் குழந்தை இயேசுவின் திருவுருவங்களையும் மணல் சிற்பமாக செதுக்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
22CAF83C-C589-450D-9829-683BCCEE39BF_L_s
சான்ட்டா திருவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மணல் ஓவியங்களை வரும் ஜனவரி மாதம் முதல் தேதிவரை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

புரியாத புதிர் படத்தின் 'மழைக்குள்ளே' பாடல்...

 

 

 

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் 'புரியாத புதிர்'. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க சி.எஸ்.சாம் என்பவர் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் வரும் பாடலான 'மழைக்குள்ளே'-வின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு முதலில் 'மெல்லிசை' என்று பெயரிடப்பட்டு பின்பு 'புரியாத புதிர்' என மாற்றப்பட்டது. வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. 

  • தொடங்கியவர்

சுவர்களுக்கு இடையில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்!

 

boy_00338.jpg

நைஜீரியாவில் மூன்று நாட்களாக சுவருக்கு மத்தியில் சிக்கித்தவித்த சிறுவனை கப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடுடுவா பகுதியைச் சேர்ந்த அடுராக்பிமி சகா என்ற 12 வயது சிறுவன்  விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று 12 அங்குலம் 
இடைவெளியிருக்கும் இரு சுவர்களுக்கு மத்தியில் விழுந்துவிட்டான். அதனால் யார் கண்களுக்கும் அவன் தென்படவில்லை.

சுவர்களுக்கு இடையில் விழுந்த அச்சிறுவன்  பயத்தில் தொடர்ந்து சத்தமிட்டுள்ளான். யாரும் கண்டுகாள்ளவில்லை. அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் சத்தம்போட்டுள்ளான். தொடர்ந்து சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த சுவர்களை இடிக்கும்படி உத்தரவிட்டனர். நிதானமாக சுவரை இடித்து, தூசி  தூளியமாக அந்தச்  சிறுவனை உயிருடன் மீட்டனர். அப்போது அவன் அழுதுகொண்டிருந்த காட்சி அப்பகுதி மக்களை  கண்கலங்க வைத்துள்ளது.
 

  • தொடங்கியவர்

உங்க Wi Fi வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!

 

வைஃபை


வருடத்தில் 350 நாட்கள் பி.எஸ்.என்.எல் பிராடுபேண்டு சொதப்பும்.மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த ஐந்து நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற “ஸ்பீடு” பிராண்ட்பேண்டுகள் இன்னும் ’ஐ எம் பேக்’ முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.


* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள்.

aluminum1_16477.jpg

* ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.

1_16126.JPG

* ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.

32_16313.jpg

* சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதையெல்லாம் முறையாக மூட வேண்டியது அவசியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக்கொண்டு வேகத்தை குறைத்துவிடும்

* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

41_16512.png

* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட்வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும். யாருக்குத் தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்

* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

7_16218.jpg

* இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசாமல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டிவிடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150 மீட்டர்கள். ரிப்பீட்டர் அந்த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட் செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

p109e.jpg

facebook.com/suguna.diwakar: ‘சசிகலாவுக்குப் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது’ என்கிறார் தா.பாண்டியன். ஊழல் வழக்கில் ஜெயலலிதா உள்ளே போனபோது அவரை ‘மக்கள் முதல்வர்’ என அழைத்தார்கள். இப்போது ‘சின்ன அம்மா’ சசிகலாவுக்கு எதிராக ‘மக்களின் சின்ன அம்மா’ என தீபாவை விளித்து, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மக்களின் சித்தப்பா’ என நடராசனுக்கு, சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டலாம். இதுவரை ‘புரட்சி’ என்ற வார்த்தைதான் தமிழ்நாட்டில் அசிங்கப்பட்டது. இப்போது ‘மக்கள்’ என்ற வார்த்தையும் சிக்கிச் சீரழிகிறது. பாவம் மக்களே!

p109a.jpg

facebook.com/Music Santhosh: மகிழ்ச்சி மக்களே! (இயக்குநர் பரதன், சந்தோஷ் நாராயணனுடன் விஜய்)


facebook.com/Franklin Alexander: `புயலே புயலே சுத்திவரும் புயலே பதினெட்டு வயசு புயலே...’ எனக் கிளுகிளுப்பா பாட்டு எழுதியவர் யாருப்பா? அவரைக் கொஞ்சம் வெளியே வரச் சொல்லுங்க. ஆனா, முடிக்கிறப்ப `ஐயோ... ஐயையோ'னுதான் முடிச்சிருக்காப்ல!

facebook.com/ramesh.ram.7165: அவங்க என்னடான்னா `இட்லி சாப்பிட்டார்’, `பொங்கல் சாப்பிட்டார்’னு கிளப்பிவிட்டாங்க. இவங்க என்னடான்னா ` `பாட்ஷா’ பார்த்தார்’, ` `பாகுபலி’ பார்த்தார்’னு சொல்றாங்க. அது என்ன ஹாஸ்பிட்டலா... இல்ல வேறு எதுவுமா?

p109b.jpg

twitter.com/Sweetie_Girl_:

கணவன்: லேப்டாப்பில் என்ன பாஸ்வேர்டு குடுத்திருக்க?

மனைவி: என் பிறந்த தேதிதான்.

கணவன்: கிராதகி... இப்ப கேட்கவும் முடியாது; லாக்இன் பண்ணவும் முடியாதே!

twitter.com/meenammakayal: இத்தனை வருஷ வாழ்க்கையில் சலிக்காத ஒண்ணு இருக்குன்னா அது சோறுதான்!

twitter.com/karuthu_ganesan:  உப்புமா சாப்பிட்டவன் கொஞ்சம் வசதியானதும், காய்கறி போட்டு ட்ரை பண்ணினதுதான் கிச்சடி உருவான கதையாக இருக்கும்!

twitter.com/cirppan: நேர்மையாக இருந்து சாதித்துக் காட்டுவதைவிட, நேர்மையாக இருப்பதே சாதனையாக இருக்கிறது!

p109c.jpg

 facebook.Com/Dhanush:  விஐபி-கள் கூட்டணி (கஜோல் மற்றும் செளந்தர்யாவுடன் தனுஷ்)


twitter.com/JanuShath: ஏதோ ஓர் எண்ணத்துல `சாஞ்சாடம்மா சாஞ்சாடு’னு பாடிட்டேன். தூங்கினவ எழுந்து உட்கார்ந்து சாஞ்சாடுறா # அவ்வ்வ்!

twitter.com/indiavaasan: உணர்வுகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் சொற்கள் வசப்படுவது ஒரு வரம்!

twitter.com/maanniiiiiii: நாய் சாப்பிட்டால் `பொற’, நாம சாப்பிட்டால் `வர்க்கி’. அதையே பிரிட்டானியா கம்பெனிக்காரன் பேக் பண்ணி விற்றால் `ரஸ்க்’. இவ்வளவுதான் சார் வாழ்க்கை!

twitter.com/ivanganeshk_s: கடைசிக் கரண்டி தோசைமாவு வரைக்கும் அம்மா சொல்லும் ஒரே வார்த்தை # இன்னொரு_தோசை!

twitter.com/JenniferBlessy: தெளிவான முடிவுகள் சில செருப்படிகளுக்குப் பின்னரே எடுக்கப்படுகின்றன. என்ன... அதை டீசன்ட்டா `அனுபவம்’ என்கின்றனர் :)

twitter.com/CreativeTwitz: சோப்பு நுரைகளை உடைத்தும், பலூன்களை உடைக்காமலும் விளையாட வேண்டும் என்பது, இயல்பாகத் தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு.

p109d.jpg

facebook.com/Indian Hockey:  ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ்! (இந்திய ஜூனியர் ஹாக்கி அணி)


twitter.com/sivakannivadi: `ஸ்வச் பாரத்’ முதல் கட்டமாக ஏ.டி.எம் மெஷின்களில் அமலாகிறது!

twitter.com/ Chaintweter:  நல்லது பண்ணினா கைதட்டாத எந்தச் சாமியும் கெட்டது பண்ணினா  கண்ணைக் குத்தாது!

twitter.com/Kozhiyaar: பிள்ளைகளுக் காகத்தான் உழைக்கிறோம் என்பதை, பிள்ளைகளுக்குத் தெரியாமலேயே உழைத்துக்கொண்டிருக்கிறோம்!

twitter.com/Aruns212: பஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் எடுக்குறாங்களோ இல்லையோ, முதல்ல கையில் மொபைலை எடுக்குறாங்க!

vikatan

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: Text
 

உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம் - பொக்கிஷ பகிர்வு

துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது

பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .

மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !

ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .

பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது . அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன

வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். ""நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது" என்று சொன்னார் அவர்.

பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும், வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.

தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.

ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.

அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,"அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் ""என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது. சாப்ளின் ,"நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !"என்றார். பின் ஏசுவே ஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர்
தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.

அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.

தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்

vikatan

 

சாப்ளினின் பொன்வாசகங்களில் சில:

* டாக்கி  (பேசும் சினிமா) வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது.

* உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.

* ரஷ்யாவுக்கு நான் சென்று வந்ததால், 'என்னை கம்யூனிஸ்டா?' எனக் கேட்கிறார்கள். மனிதநேயத்துடன் வாழ  நான் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

* மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது.

* லாங் ஷாட்டில் பார்க்கும் போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதுதான். க்ளோசப் ஷாட்டில் பார்க்கும்போதுதான் அதில் சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்.

* திரைப்படத்தின் மூலம் உங்களை சிரிப்பலைகளில் மிதக்க வைக்க, எனக்கு  ஒரு பூங்கா, ஒரு போலீஸ்க்காரர், மற்றும் அழகிய ஒரு பெண் இருந்தால் போதும்.

* சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான்.

* இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உள்பட.

* ஏசு கிறிஸ்து ஜனாதிபதியாக இருக்கும்போதுதான் நான் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவேன்.   

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 7 Personen, Personen, die lachen, Personen, die sitzen
 

எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்!!!

நம்மைச் சுற்றி எவ்வளவோ நடைபெறுகின்றது. சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரிந்தும் நமது வாழ்க்கைக்கு உபயோகமானவை இல்லை, ஆனால் வேறு சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரியாமலே நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. அப்படி ஒன்றானது தான் electronmagnetic waves என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்காந்த அலைகளும் கூட. இந்த மின்காந்த அலைகள் நம்மைச் சுற்றி எப்போதுமே இருக்கின்றன. உண்மை சொல்லப் போனால், இந்த அலைகள் இல்லாமல் நமது இன்றைய நவீன உலகமும், வாழ்க்கையும் இருக்க முடியாது. இவ்வாறு முக்கிய இந்த அலைகள் பற்றி சில சுவாரசியமான விஷயங்களை அறியப் போகின்றீர்களா?

வானொலிப்பெட்டி, செல்லிடத் தொலைபேசி (Mobile Phone), WiFi, புவியிடங்காட்டி (GPS Navigation) போன்ற பலவற்றை இந்த மின்காந்த அலைகள் இல்லாமல் செயல்படாது. இந்த மின்காந்த அலைகளின் wavelength என்று கூறப்படும் அலைநீளம் பொறுத்து, இவை வெவ்வேறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அந்த வகைகளில் ஒன்று தான் ஒளி (light). ஒளியைத் தவிர்த்து மேலும் வானொலி அலைகள் (radio waves), நுண்ணலைகள் (micro waves), அகச்சிவப்புக் கதிர்கள் (infrared waves), புற ஊதா கதிர்கள் (ultraviolet waves), ஊடு கதிர் அலைகள் (x-ray) மேலும் காம்மா அலைகள் (gamma waves) என்கிற வகைகள் காணப் படுகின்றன. நமது நவீன உலகில் இந்த அனைத்து வகையான மின்காந்த அலைகளும் ஒவ்வொரு விதமாக உபயோகிக்கப்படுகின்றன. இதற்கு சில உதாரணங்களைத் தருகிறேன்.

வானொலி அலைகள் இருப்பதால் தான் வானொலிப் பெட்டியில் தினமும் பாடல்களைக் கேட்க முடிகின்றது. நுண்ணலைகளின் உதவியுடன் செல்லிடத் தொலைபேசியூடாக தூரத்தில் இருக்கும் நண்பனுடன் பேச முடிகின்றது. அகச்சிவப்புக் கதிர்கள் இருப்பதால் தொலைக் கட்டுப்படுத்தியின் (remote control) உதவியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை மாற்ற முடிகின்றது. புற ஊதா கதிர்கள் மருத்துவத்தில் சில பாக்டீரியாக்களைக் கொல்ல உபயோகிக்கப் படுகின்றது. ஊடு கதிர் அலைகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். டாக்டரிடம் சென்று எக்ஸ் ரேய் (X-Ray) படம் எடுப்பதற்கு ஊடு கதிர் அலைகள் தேவைப்படுகின்றன. மற்றும் காம்மா அலைகளும் மருத்துவத்தில் சில விதமான புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகின்றது.

மின்காந்த அலைகளில் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? இந்த அலைகள் ஒரு பொருளில் படும் போது, அதன் அலைநீளம் பொறுத்து ஏற்படும் விளைவு மூன்று விதமாக இருக்கக் கூடும். ஒன்று அந்த அலை அந்தப் பொருளில் பட்டுத் தெறிக்கின்றது, இல்லை என்றால் அந்தப் பொருளை ஊடுருவிச் செல்கின்றது அல்லது அவ்வலை உறிஞ்சி எடுக்கப் படுகின்றது. இந்தக் காரணத்தால் தான் உதாரணத்திற்கு ஒளி ஒரு வீட்டுச் சுவரில் பட்டுத் தெறிக்கின்றது, ஆனால் வானொலி அலைகள் அந்தச் சுவரை ஊடுருவிச் செல்கின்றன. அப்படி ஊடுருவிச் செல்வதால் தான் வீட்டுக் கதவும், ஜன்னல்களும் மூடி இருந்தும், நம்மால் வானொலிப் பெட்டியில் பாடல்களைக் கேட்க முடிகின்றது. மேலும் இதே காரணத்தால் தான் நாம் வீட்டில் ஒரு அறைக்குள் இருந்தும் செல்லிடத் தொலைபேசியில் பேச முடிகின்றது.

சரி, கடைசியாக மின்காந்த அலைகள் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றைக் கூறுகின்றேன். 100 வருடங்களுக்கு முன்பு வானொலிப் பெட்டி கண்டுபிடித்து உபயோகித்த போது அனுப்பப் பட்ட வானொலி அலைகள் இன்று கூட விண்வெளியில் பறந்து செல்கின்றன. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா, நண்பர்களே? விண்வெளியில் ஏதாவது வேற்றுலக உயிரிகள் (aliens) உள்ளன என்று எடுத்துக்கொள்வோம். அந்த உயிரிகள் நமது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட அந்த வானொலி அலைகளை தமது வானொலிப் பெட்டியில் பெற்றுக்கொண்டால், அதில் 100 வருடங்களுக்கு முன்பு புவியில் ஒலித்த பாடலை தான் கேட்பார்கள்.

https://www.facebook.com/n.thillainathan?pnref=story

 

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: ATM-ல் உரையாடல்:

 

 
4_3107438f.jpg
 
 
 

1_3107441a.jpg

ATM-ல் உரையாடல்:

“சீக்கிரம் கிளம்புங்க.டைம் ஆகறது உங்க கண்ணுக்கு தெரியலையா?”

“சரி,சரி கத்தாதே.நீ எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?”

“அதெல்லாம் எப்பவோ ரெடி பண்ணிட்டேன்.இங்க பாருங்க.பிரஷ், பேஸ்ட் வச்சிருக்கேன். யூஸ் பண்ணிக்குங்க”

“சரி”

“தலைவலி மாத்திரை எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கங்க”

“சரி”

“மத்தியானத்துக்கு தயிர் சாதம்,ஊறுகாய் வச்சிருக்கேன். சாப்பிடுங்க.”

“சரி”

“பிபி,சுகர் மாத்திரை வச்சிருக்கேன். கரெக்ட் டைமுக்கு போட்டுக்குங்க”

“சரி”

“தண்ணீர் பாட்டில்,பெட் ஷீட் எடுத்து வச்சிருக்கேன். தூக்கம் வந்தா பின்னாடி நிக்கறவர் கிட்ட சொல்லிட்டுப் போய் கொஞ்ச நேரம் தூங்குங்க.”

“சரி”

“சீக்கிரம் கிளம்புங்க.எதிர் வீட்டுக்காரர் விடியற்காலை 5 மணிக்கே போயிட்டாரு தெரியுமா?”

“அடப்பாவி. என்கிட்ட 8 மணிக்குப் போறதா தானே சொன்னான்.”

“ம்க்கும். அவர் பொழைக்கத் தெரிஞ்சவர். உங்களை மாதிரியா”

“சரி. சரி. அலுத்துக்காதே.”

“இங்க பாருங்க.ஒரு எடத்துல இல்லைன்னா வேற எங்க இருக்கும்னு விசாரிச்சுப் பாருங்க. யாராவது அரசியல் பேசினா அவங்க வாயைப் பார்த்துக்கிட்டே நிக்காதீங்க. புரியுதா.”

“சரி”

“சரி.எப்ப வருவீங்க?”

“ஏண்டி, நான் என்ன ஏற்காடு டூரா போறேன்? இத்தனாந்தேதி திரும்ப வருவேன்னு சொல்ல? ஏடிஎம்ல பணம் எடுக்கப் போறேன்டி. திரும்ப எப்ப வருவேன்னு கடவுளுக்குத் தாண்டி வெளிச்சம்”

....கிளம்பினார் அந்த அப்பாவி !!!!!

2_3107440a.jpg

3_3107439a.jpg

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல
 
 

article_1482727480-consider-before-buyinவீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; சந்தோசமாக ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்கும் புனிதமான ஸ்தலம். இதனை நாம் கௌரவிக்க வேண்டுமானால், அங்கு வசிக்கும் அங்கத்தினர் யாவருமே, ‘இது இறைவன் அமைத்த எமக்கான அன்பளிப்பு, கொடை’ எனக் கருத வேண்டும்.   

வீட்டை அழகாக அமைத்தால் மட்டும் போதுமா? அங்குள்ளவர்கள் தங்கள் இதயத்தை விசாலமாக்கி, ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாகவும் இருக்க வேண்டும்.

அன்பு மருவாத இல்லத்தில் ஆண்டவன் சஞ்சாரம் செய்யமாட்டான். உள்ளும் புறமும் தூய்மை துலங்க வாழ்வதே அறவாழ்க்கையாகும். 

இல்லத்தை இனிமை துலங்கும் கோவில் ஆக்குக. அங்கு அமைதியும் இறைவழிபாடும் அவசியமானது. அதேசமயம் சதா மௌனமாக, சூனியப் பிரதேசமாகவும் ஆக்கிவிடக்கூடாது. குதூகலமும் இனிய சப்த ஜாலமும் உயிர்ப்புடன் துலங்குவதே வீடு.  

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நம்புங்கள்! எதிரிகள் தான் உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்! #MondayMotivation

 

#Mondaymotivation

கடைசியா மிச்சமிருந்த ஒரே ஒரு அரசு விடுமுறையான கிருஸ்துமஸை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்ட சோகத்துடன் இந்த வாரம் தொடங்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அரசு விடுமுறையான ஆங்கில வருடப்பிறப்பையும் இன்னொரு சண்டே எடுக்கப்போகிறது. இருந்தாலும் இந்த ஆண்டின் கடைசி வாரத்தை வெற்றிகரமாக கடக்கவும் இனி வரும் வாரங்களுக்கும் சில #Mondaymotivation டிப்ஸ்...

செமையா தூங்குங்க - பார்ட்டி,அவுட்டிங் எல்லாத்தையும் வெள்ளி, சனிக்கிழமைகளின் மாலைகளில் முடித்துவிடுங்கள். ஞாயிறு மாலை என்பது திங்கள் கிழமையின் ஆரம்பம் என வைத்துக்கொள்ளுங்கள். 8 மணிக்கே டின்னர் + வாழைப்பழம்,பாலுடன் முடித்துக்கொள்ளுங்கள். (வாழைப்பழமும் பாலும் தூக்கத்தை தூண்டும்) அது போல சாப்பிட்ட உடனே தயவு தாட்சன்யமின்றி மொபைலின் வைபை மற்றும் மொபைல் டேட்டாவை அணைத்து வைத்துவிடுங்கள். புத்தகங்கள் படிக்கலாம். எப்படியும் 1 மணி நேரத்துக்குள் தூக்கம் வந்துவிடும். பரபரப்பான வாரத்தை எதிர்கொள்ள நல்ல தூக்கம் அவசியம். 

மனதை தயார் செய்யுங்கள் - என்னதான் சீக்கிரமே படுத்தாலும் காலையில் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என தூங்கி அரக்க பரக்கத்தான் கிளம்புவோம். அந்த நேரத்தில் அதாவது ப்ரஷில் பேஸ்டை வைத்து கண்ணாடி பார்க்கையில் "இதெல்லாம் ஒரு மண்டேயா?" போன வாரம் 9 மணி வரைக்கு தூங்கிட்டு ஆபிஸ் போனேமே" - என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடமாட்டோமா நாம யாரு" என உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக்கொள்ளவேண்டும்.(வேறு வழி)  

பட்டியல் போடுங்கள் - எப்படியும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் காத்திருக்கும். அது இல்லாமல் அலுவலகம் போனவுடன் மேலாளர் புதிதாக எதையும் உங்கள் தலையில் கட்டும் வாய்ப்பும் இருப்பதால் கையில் இருப்பதில் உடனே முடிக்க வேண்டிய வேலைகள் எவை எவை என லிஸ்ட் போடுங்கள். அதுதான் புதிதாய் வரப்போகும் வேலைகளிலிருந்து உங்களை காக்கும். இந்த லிஸ்ட்டை ஞாயிறு இரவே போட்டு வைத்துக்கொள்வது இன்னும் நல்லது. 

வேறு வேலைகளை உருவாக்குங்கள் - அலுவலக வேலைகள் தாண்டி வேறு என்னவெல்லாம் இந்த வாரம் செய்யவேண்டியது இருக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு புதன் அன்று ஒரு படத்துக்கு போகவேண்டி இருந்தால் அதற்கு டிக்கட் புக் செய்து உங்களை என்கேஜ் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் அலுவலகம் முடியும் நேரத்தில் போக வேண்டிய ஒரு சின்ன வேலையாவது வைத்துக்கொள்ளுங்கள். இது பகலில் உங்கள் வேலையில் கவனம் சிதறாமல் தடுக்கும். 

தொலைபேசுங்கள் - தினமும் ஒரு உறவினருடனோ, அடிக்கடி பார்த்துக்கொள்ளமுடியாத நண்பர்கள் இவர்களுடனோ போன் செய்து பேசுங்கள். உங்களின் அலுவலகம் சார்ந்த மனநிலையிலிருந்து உங்களுக்கு இருக்கும் வேறு ஒரு உலகத்தை உணரவைக்கும். வேலை அழுத்தத்தை வெல்ல இது ஒரு வெற்றிகரமான வழி. உதாரணத்துக்கு உங்கள் நண்பர் ஒருவருக்கு போன் செய்து "வேலையெல்லாம் எப்படி போகிறது" என்று கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் பெரிததொரு புலம்பலை வெளிப்படுத்தும் போது "அப்பாடா நம்ம வேலை எவ்வளவோ பரவாயில்லை" என்கிற நிம்மதி உங்களுக்கு ஏற்படும் அல்லவா.

மானசீக எதிரிகளை உருவாக்குங்கள் - அலுவலகத்தில் எதிரிகளுக்கு சொல்லவே வேண்டாம். நீங்கள் உருவாக்க வேண்டாம் அவர்களே உருவாகிவிடுவார்கள். அப்படி ஒருத்தர் இல்லையெனில் மனதுக்குள்  உடன் வேலை செய்பவரை உங்கள் ப்ரிய எதிரியாக  உருவகித்து அவரை விட அதிகம் வேலை செய்வதை உங்கள் லட்சியமாக வைத்து செயல்படுங்கள். போட்டி இருந்தால்தான் வெல்ல முடியும். நாய் துரத்தாமல் நீங்கள் ஓடமாட்டீர்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வெற்றிக்கு முதல், முக்கிய காரணமாக இருப்பது உங்கள் எதிரிகள்தான்! எனவே மனதுக்குள்ளாகவே ஒரு எதிரி கட்டாயம் தேவை உங்களின் வெற்றிக்கு. இனிய வாரத்துக்கு வாழ்த்துக்கள். 

vikatan

  • தொடங்கியவர்
33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்தில் பறந்த விமா­னத்­தி­லிருந்து வீழ்ந்து உயிர்­தப்பி 44 வரு­டங்கள் வாழ்ந்த பெண் மரணம்
 
 

21423aaa.jpg33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்தில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்­தி­லி­ருந்து உயிர் தப்பி, 44 வரு­டங்கள் உயிர்­வாழ்ந்த பெண்­ணொ­ருவர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளார். 

 

சேர்­பி­யாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்­ப­வரே இப்­பெண்­ணாவார். மேற்­படி அனர்த்­தத்தில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக உயிர்­தப்­பிய அவர் தனது 66 வயதில் இறந்­துள்ளார்.

 

1972 ஜன­வரி 26 ஆம் திகதி மேற்­படி விமான அனர்த்தம் இடம்­பெற்­றது. 

 

அப்­போது 23 வயது யுவ­தி­யாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூகோஸ்­லா­வி­யாவின் (சேர்­பியா, பொஸ்­னியா, குரோ­ஷியா உட்­பட பல குடி­ய­ர­சுகள் ஒன்­றி­ணைந்த நாடு) விமான சேவை நிறு­வ­ன­மான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் விமானப் பணிப்­பெண்­ணாக பணியாற்­றி ­வந்தார். 

 

1972 ஜன­வரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் டக்ளஸ் டி.சி 9 விமா­ன­மொன்றில் வெஸ்னா  வுலோவிக் பணியில் இருந்தார். 

 

அவ்­வி­மானம் சுவீ­டனின் ஸ்டொக்ஹோம் நக­ரி­லி­ருந்து புறப்­பட்டு டென்­மார்க்கின் கொப்­பன்­ஹேகன் நகரில் தரை­யி­றங்­கிய பின் யூகோஸ்­லா­வி­யாவின் தலை­நகர் பெல்­கி­ரேட்டை நோக்கிப் புறப்­பட்­டது.

 

214234.05StyuardessaVesna.jpg

அதன்பின் செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் (தற்­போ­தைய செக் குடி­ய­ரசின்) மலைப்­பி­ராந்­தியம் ஒன்­றுக்கு மேலாக பறந்­து­ கொண்­டி­ருந்­த­போது அவ்­வி­மானம் வெடித்துச் சித­றி­யது.

 

யூகோஸ்­லா­வி­யாவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழு­வொன்­றினால் விமா­னத்தில் வைக்­கப்­பட்ட வெடி­குண்டு வெடித்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

 

அப்­போது 33,000 அடி உய­ரத்தில் பறந்­து­ கொண்­டி­ருந்த மேற்­படி விமா­னத்தில் அவ்­வே­ளையில் மொத்­த­மாக 28 பேர் இருந்­தனர்.

 

அவர்­களில் 27 பேர் பலி­யா­கினர். ஆனால், வெஸ்னா வுலோவிக் மாத்­திரம் உயிர்­தப்­பினார். 

214234.jpg

விமானப் பணிப்­பெண்­ணான வெஸ்னா, விமானம் கீழே விழத்­தொ­டங்­கி­ய­போது, விமா­னத்தின் வால்­ப­கு­தியில் உணவு வண்­டி­யொன்­றுக்­கி­டையில் அகப்­பட்­டி­ருந்தார். 

 

விமா­னத்தின் வால்­ப­கு­தி­யா­னது மரங்கள் அடர்ந்த அதி­க­ள­வான பனி ­பொ­ழிந்­தி­ருந்த பகு­தியில் வீழ்ந்­தது.

 

21423171fc14b49a79ea979710de5b3402b30_XLமரங்­களும் பனிப்­ப­டி­வு­களும் ஒரு குஷன் போன்று அமைந்­ததால் விமா­னத்தின் வால்­ப­குதி நொருங்­காமல் இருந்­தது. 

 

விமா னம் வீழ்ந்து சில மணித்­தி­யா­லங்­களின் பின், மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களால் வெஸ்னா வுலோவிக் மீட்­கப்­பட்டார்.

 

அவர் மிக மோச­மாக படு­கா­ய­ம­டை­டைந்­தி­ருந்தார். மண்­டை­யோட்டில் வெடிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது, கால்கள், இடுப்பு எலும்பு, விலா எலும்­பு­களில் முறி­வுகள் ஏற்­பட்­டி­ருந்­தன.

 

வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வெஸ்னா வுலோவிக் 10 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.

 

சிறிது காலம் அவரின் உடல் இடுப்­புக்குக் கீழ் இயங்­க­வில்லை. அவரை குணப்­ப­டுத்­து­வ­தற்­காக பல்­வேறு சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­யப்­பட்­டன. 

 

பல மாதங்கள் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்த வெஸ்னா பின்னர் எழுந்து நட­மா­டி­ய­துடன் மீண்டும் யூகோஸ்லோவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் வேறொரு பணி­யில் இணைந்தார். எனினும், மேற்­படி விமான அனர்த்தம் குறித்த எந்த நினைவும் அவ­ருக்கு மீளத் திரும்­ப­வில்லை.  

 

21423dffsdfsfsdf.jpg

 

2008 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்­ஸுக்கு அளித்த செவ்­வி­யொன்றில், நான் உடைந்து நொறுங்­கினேன். மருத்­து­வர்கள் என்னை மீள ஒன்­றி­ணைத்­தனர்' எனக் கூறி­யி­ருந்தார்.

 

33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்­தி­லி­ருந்து பரசூட் உத­வி­யின்றி வீழ்ந்து உயிர்­தப்­பி­யதால், உலகில் அதிக உய­ரத்­தி­லி­ருந்து பரசூட் இன்றி வீழ்ந்து உயிர்தப்பியவராக 1985ஆம் ஆண்டு வெஸ்னா வுலோவிக் கின்னஸ் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

21423BBxwkx6.jpg

 

66 வயதான வெஸ்னா வுலோவிக், கடந்த வெள்ளிக்கிழமை சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டிலுள்ள தனது வீட்டில் இறந்தார் என  சேர்பிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரின் மர­ணத்துக்­கான காரணம் உட­ன­டி­யாக கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுனாமியும்....நீங்கா நினைவுகளும்! #TsunamiDay

 

சுனாமி

டிசம்பர் 26. இந்த நாளை எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஆம். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, உலகையே நிலைக்குலையச் செய்த, சுனாமியின் கோரத்தாண்டவம் அரங்கேறிய நாள்.

மனிதர்களின் கழுத்தை நெரித்த கடல் அலை!

12 ஆண்டுகளுக்கு முன்னர், டிசம்பர் 26-ம் நாள், அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 7 மணி. விடுமுறை நாள் என்பதால் இயல்பான பரபரப்பு மக்களிடம் சற்றே குறைந்திருந்தது. ஆனால்,கடற்கரைப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வழக்கம்போல பரபரப்பாக தங்கள் வழக்கமானப் பணிகளை செய்துகொண்டிருந்தார்கள். கடற்கரைப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், பள்ளி அரையாண்டு விடுமுறையை இனிதே கழித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் என லட்சக்கணக்கானோர், இன்னும் சற்று நேரத்தில் கடலின் கோரப்பசிக்கு தாம் இறையாகப் போகிறோம் என அறிந்திருக்கவில்லை.

வழக்கமாக கரையிலோ அல்லது சில அடிதூரம் சற்று விலகியோ நிற்கும் மனிதர்களின் கால் பாதங்களை வருடி, உரசிச்செல்லும் கடல் அலை, அன்று மட்டும் 100 மீட்டர் உயரம் வரை கர்ஜித்து லட்சக்கணக்கானோரின் குரல்வலையை நெரித்தது.

பத்து நிமிட நிலநடுக்கமும்....12 ஆண்டுகள் சோகமும்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக் கடலில் 30 கி.மீ ஆழத்தில், 9.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பமே ஒட்டுமொத்த மனிதர்களின் அலறலுக்குக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்த இந்த நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி, ஆயிரத்து 600 கி.மீ பரப்பளவுள்ள நிலப்பரப்பு பகுதியில் கொடும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், 12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்றும் பலரது நினைவில் அழியா வடுவை பதித்துவிட்டுச் சென்றது. 

உலகின் மிக மோசமான இயற்கை சீரழிவுகளில் 6-ம் இடம் பெற்ற சுனாமி, நேரடியாக 12 நாடுகள் உள்பட 39 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் 1,60,000 பேரும், இலங்கையில் 35,000 பேரும், இந்தியாவில் 12,000 பேரும், அந்தமானில் 10,000 பேரும், தாய்லாந்தில் 7,000 பேரும் என சுனாமியின் கோரப்பசிக்கு கொடுத்த உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 8,000 பேர் உயிரிழந்ததுடன், சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சுனாமி

கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டிச் சென்ற சுனாமி!

100 மீட்டர் உயரம் வரை மேலெழுந்த கடல் அலைகள், கடற்கரை மற்றும் அதனைச் சுற்றிய பல கிலோ மீட்டர் பகுதிகளில் இருந்த மனித உயிர்கள், விலங்கினங்கள், வாகனங்கள்,  வீடுகள், அலுவலகங்கள் என தன் கண்ணுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் வாரிக்கொண்டுச் சென்றது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வீடுகளை இழந்தனர். ஏராளமானோர் தங்கள் மகன், மகள், கணவர், மனைவி, பெற்றோர் என இரத்த உறவுகளை இழந்து, வீதிகளில் உறவுகளைத் தேடி அழைந்தது சோகத்தின் உச்சக்கட்டம். கடல் நீர் வற்றியப் பிறகு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை திக்கெட்டும் மாண்டுக் கிடந்த மனிதர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு, கடற்கரைக்கு அருகிலேயே கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன. அந்நிகழ்வுகள் கடல்நீர்க்கு இணையாக  பலருக்கும் கண்ணீரை வரவழைத்தன.

சுனாமி

கைகொடுத்த மனித நேயம்!

லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகளையும் வீடுகளையும் இழந்து நிற்கதியாய் நின்றனர். சில வார சோகங்களுக்குப் பின்னர் அவர்கள், மீண்டும் ஆரம்பக் கட்டத்தில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடங்கினர். இதற்கிடையே உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் உணவு உதவி, நிதியுதவி, பொருளுதவி, மருத்துவ உதவி என சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரில், பாதிக்கப்படாத மக்களும் பங்கெடுத்து,சோகத்திலும் மனித நேயத்துடன் ஆதரவு கரம் நீட்டியது ஆறுதலைத் தந்தது.  தொடர்ந்து வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு மற்றும் தனியாரால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் செய்யப்பட்டு, வீடு இழந்தோர்க்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டன. பெற்றோர்களை இழந்து தவித்த பல குழந்தைகளை, சிலர் தத்தெடுத்து புத்துயிர் கொடுத்தனர். 

இயற்கை உணர்த்தியது என்ன?

சுனாமியின் தாண்டவத்தை பல்வேறு வார்த்தைகளில் நாம் வசைப்பாடினாலும், இயற்கை சீற்றத்தை நம்மால்  தடுக்க இயலாது என்பதும் நாம் அறிந்ததுதான். உலகில் 300 கோடி மக்கள் கடற்கரை சார்ந்த பகுதிகளில் வசிக்கின்றனர். ஆண்டு தோறும் சிறியதும், பெரியதுமாக உருவாகக்கூடிய கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ இந்த கடற்கரைப் பகுதி மக்கள்தான். இப்பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், இவை தொடர்கதையாகவே இருக்கிறது. இயற்கை சீற்ற நிகழ்வைத் தடுக்க முடியாவிட்டாலும், அவற்றின் தாக்கத்தை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் முடியும் என்பதும் நிதர்சன உண்மைதான். ஆனால் அவற்றை அரசும், நாமும் முழுமையாக செய்கிறோமா?.

அதிலும் முக்கியமானவை முன்னறிவித்தலில் போதிய கவனமின்மை, முன்னறிவித்தலில் தெளிவற்ற தன்மை, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள போதிய யுக்திகளை கையாளாமல் இருப்பவை என தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறிய இன்றைய காலகட்டத்திலும், இன்னும் பல இயற்கை நிகழ்வுகளில் நாம் தடுமாற்றத்தையே சந்திக்கிறோம். 

குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை நிகழ்வில் கைகோர்த்து செயல்பட வேண்டும்; பேரிடர் மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தி, இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். மேலும், கடற்கரைப் பகுதிகளில் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள், முக்கியமான அலுவலகங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு என்பதையும் சுனாமி சொல்லாமல் சொல்லிச்சென்றது.

சுனாமி

தவறு இயற்கை மீதா? மனிதன் மீதா?

உயிர், பொன், பொருள், வீடு, வாகனங்கள் என பல சொத்துக்களை வாரிச்சுருட்டிச்சென்ற சுனாமியைப் போன்ற ஒரு நிகழ்வு, கனவிலும் வரக்கூடாது என்பதுதான் நம் அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. சுனாமிப் போன்ற இயற்கை சீற்றத்தின் மிகப்பெரிய விளையாட்டை பார்த்த பின்னர்கூட, இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மறக்கிறோம்...மறுக்கிறோம் என்பதுதான் வேதனையான விஷயம். தமிழகத்தில் 8,000 மனித உயிர்களை பழிகொடுத்தப் பின்னரும்கூட, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தில் சென்னை மீண்டும் ஒரு முறை உயிர் பிழைத்தே வந்துள்ளது. சென்ற ஆண்டுக்கு சற்றும் சளைக்காமல், இந்த ஆண்டு கடந்த இரு வாரத்துக்கு முன்பாக வர்தா புயலும் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. 

எப்போதும் இயற்கை தன் வேலைகளை மனித சக்திக்கு அஞ்சாமல் செய்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், மனிதர்களாகிய நாம் தான், ஒரு இயற்கை நிகழ்வின் போது அஞ்சுகிறோமே தவிர, இயற்கையிடம் இருந்து பாடம் கற்க மறுக்கிறோம். அடுத்து சில காலங்களிலேயே நடந்த சோகத்தையும் மறந்துவிடுகிறோம். அதனால்தான் தொடர்ந்து நம்மை நாம் இழந்துகொண்டே வருகிறோம்.

தவறு இயற்கை மீதா, இயற்கையுடன் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் மீதா?

vikatan

  • தொடங்கியவர்

நியூ இயர் ரெசல்யூஷன் - எடுக்கறத்துக்கு முன்னாடி இதை படிச்சுடுங்க!

 

நியூ இயர் ரெசல்யூஷன்

'நியூ இயர்'னு சொன்னா நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது கமல்ஹாசன் கலர் சொக்கா போட்டுகிட்டு சோக்கா பாட்டு பாடிட்டு வரும் 'ஹாப்பி நியூ இயர்...' பாட்டும், 'நமக்கு நாமே' திட்டமும் தாங்க. நமக்கு நாமேனு சொன்னதும் வேறெதையோ நினைச்சுக்காதீங்க. இதுக்கு அர்த்தம்,  இந்த வருஷமாவது உருப்படியா? ஏதாவது செய்யணும் மனசுக்குள்ள பிளான் பண்ணும் புது வருட தீர்மானம் (நியூ இயர் ரெசல்யூஷன்).

நம்மிடம் இருக்கும் சின்ன தவறுகளையும், சறுக்கல்களையும் தூசி தட்டி சரி செய்யவே ரெசல்யூஷன் எடுக்கிறோம். நீங்கள் முதலில் எந்தெந்த இடங்களில் என்னென்ன தவறு செய்யறீங்க என்பதை நீங்களே உணர்ந்து, உங்களை செக் செய்யவே இந்த செக் லிஸ்ட். ஒவ்வொரு கேள்விக்கும் ஆம், இல்லை என  நீங்கள் அளிக்கும் பதில்களை வைத்து உங்களைச் சரிசெய்துக்கொள்ள, பாராட்டிக்கொள்ள, சின்னத் தூண்டு சக்தியாக இது இருக்கலாம். நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க.... கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் கொண்டாடுங்க. 

உங்களை பற்றி : 

* உங்களை நீங்களே மிகவும் நேசிப்பவரா? 

* அதிகாலையில் எழுபவரா? 

* தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்களா?

* அதிகமாக கோபம் படுவீர்களா?

* பிறரிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்குபவரா?

* தினமும் குறிப்பிட்ட நேரத்தில், தேவையான அளவு தூங்குவீர்களா?

* தினமும் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு உண்பவரா?

* உங்களிடம் வங்கிக்கணக்கில் அல்லது பர்ஸில் எவ்வளவு பணம் உள்ளது என்பதைச் சொல்ல முடியுமா?

* புகையிலை, மது போன்ற கெட்ட பழக்கங்கள் உடையவரா?

* நீங்கள் தினமும் என்ன செலவு செய்கிறீங்கள் என்பதை குறித்து வைக்கும் பழக்கம் உடையவரா?

* வாசிப்பு பழக்கம் உடையவரா? 

* எதிர்கால இலக்குவைத்து உழைப்பவரா? 

* அணியும் உடையின் மீது கவனம் செலுத்துபவரா?

* துவைக்காமல் ஒரே உடையை மாற்றி மாற்றி அணிபவரா?

* எதையும் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்துபவரா? 

* பிறருக்கு கஷ்டம் என்றால் உடனே உதவுவீர்களா?

* ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வளைதலங்களில் அதிக நேரம் செலவிடுபவரா?

* மற்றவர்கள் உங்களிடம் சொல்லும் கருத்தை கேட்பவரா?

* நண்பர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவரா?

* பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் சொல்லும் கருத்தை கேட்பவரா? 

நியூ இயர் ரெசல்யூஷன்

 

வேலை சார்ந்த கேள்விகள் : 

* நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்துள்ளதா?

* உங்களது வேலை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுக்கிறீர்களா?

* சரியான நேரத்தில் அலுவலகம் செல்பவரா?

* அலுவலகத்தில் சொன்ன வேலையைச் செய்ய முடியாவிட்டால் என்ன காரணம் சொல்லலாம் என யோசிப்பவரா?

* நீங்கள் உங்களுக்காக வேலைசெய்யாமல் மேலதிகாரியின் கவனம் ஈர்ப்பதற்காக வேலை செய்பவரா?

* உங்கள் வேலையை அலுவலக நேரத்துக்குள் முடிப்பீர்களா?

* கொடுத்த வேலைகளை பலமுறை நினைவூட்டினால்தான் முடிப்பீர்களா?

* அலுவலகத்தில் உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறதா?

* நீங்கள் அலுவலக வேலை நேரத்தையும் தாண்டி அலுவலகத்தில் இருப்பவரா? 

* அலுவலக நேரத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் இயங்குபவரா?

குடும்பம்:

* உங்கள் குடும்பத்துக்கு அன்றாட நேரம் ஒதுக்குகிறீர்களா?

* உங்கள் குடும்ப வரலாறு தெரியுமா... தாத்தா, பாட்டி வாழ்க்கையைப் பற்றி அறிந்துவைத்துள்ளீர்களா?

* உங்கள் வீடு சுத்தமாக இருக்குமா?

* குடும்பத்துடன் வருடம் ஒருமுறையாவது சுற்றுலா செல்கிறீர்களா?

* குடும்ப வரவு/செலவு கணக்கை, பிற குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவீர்களா? 

* வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனை சொன்னால் கேட்பீர்களா?

* வீட்டுக்கு எப்போது வருவீர்கள், எங்கே செல்கிறீர்கள் போன்ற தகவல்களை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வீர்களா?

* கல்யாணம் ஆனவர் எனில் மகன்/மகள் முன் சண்டை போடுவீர்களா? 

* உங்கள் பிள்ளைகள்/பெற்றோர்கள் எதிர்காலத்துக்கு என தனியாகச் சேமித்து வருகிறீர்களா?

* உங்களைக் கண்டால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயப்படுகிறார்களா? 


நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க... 2017-ல் பட்டைய கிளப்புங்க.....

vikatan.

  • தொடங்கியவர்

காங்கோ: கூழுக்கு கும்பி அழும் வறுமையில் கோட்,சூட்டில் அலம்பல் செய்யும் கும்பல்

 

கும்பி கூழுக்கு ஏங்குது - கொண்டை பூவுக்கு அலையுது என்ற தமிழ் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிநவீண மேல்நாட்டு பாணியை கடைபிடிப்பதற்காக ஒரு கும்பல் லட்சக்கணக்கில் செலவழித்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

 
 
காங்கோ: கூழுக்கு கும்பி அழும் வறுமையில் கோட்,சூட்டில் அலம்பல் செய்யும் கும்பல்
 
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சுமார் 10 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1960-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்நாட்டில் வாழும் தற்போதைய தலைமுறையினரின் முன்னோர்களில் சிலர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போர் முடிந்து காங்கோவுக்கு இவர்கள் திரும்பியபோது சம்பளமாக கிடைத்த பணத்தை எல்லாம் விலையுயர்ந்த பேண்ட், கோட், டை, தொப்பி, ஷூ, கைக்கடிகாரம் ஆகியவற்றை வாங்கிகொண்டு வெறுங்கயுடன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

போதுமான உணவு கிடைக்காமல் அந்நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வறுமை நிலையில் அரைப்பட்டிணியாக கிடக்கும் நிலையில், ‘பிரிட்டிஷ் துரை’ பாணியில் மிடுக்கான, விலையுயர்ந்த உடையலங்காரத்துடன் அவர்கள் உலா வந்தனர்.

அவர்களது செய்கையையும், ஊதாரித்தனத்தையும் பார்த்து சொந்த குடும்பத்தினர் வயிறெரிந்தாலும், உள்ளூரில் வசிப்பவர்களிடையே இவர்களுக்கு போலியானதொரு மரியாதையும், வறட்டு கவுரவமும் கிடைத்தது.

இந்த பிரிவினரை சேர்ந்தவர்களின் வாரிசுகளும், இவர்களைப்போல் நாமும் மிடுக்காக தோன்ற வேண்டும் என்று முன்னர் நினைத்த இன்றைய இளையதலைமுறையினரும் இதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தனர்.

குறிப்பாக, காங்கோ குடியரசுக்கும் காங்கோ நதி பாயும் பிரேஸவில் காங்கோ பகுதிக்கும் இடையில் வசிக்கும் ஏழை மக்களிடம் இந்த ஆடம்பர மோகம் அதிகமாக தலைதூக்க தொடங்கியது.

இதன்விளைவாக, இதைப்போன்ற விலையுயர்ந்த நவநாகரிக உடை அணியும் நபர்களுக்காக ‘லா ஸாப்பே’ என்ற தனியொரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் தலைவராகவும், இப்பகுதியின் உடையலங்கார கதாநாயகனாகவும் மேக்ஸைம் என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் பயன்படுத்தும் கோட், சூட் ஒவ்வொன்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ‘பிரான்டட்’ பொருட்களாகவே உள்ளது.
D70E7C9C-7FCA-44D5-8F06-4D62C40659B7_L_s
முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஷுக்களை அணிந்தபடி சேரிப்பகுதியில் உள்ள தங்களது வீடுகளைவிட்டு இவர்கள் வெளியே வருவதை ‘காணக் கண் கோடி வேண்டும்’ எனலாம். இவர்கள் ஒரு ஜதை ஷூ வாங்கும் பணத்தை வைத்து இங்கு பல ஏக்கர் நிலம் வாங்க முடியும்.

இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் பல ஜோடி கோட்,சூட், ஷுக்களை வைத்திருக்கிறார்கள். டைகள் மற்றும் தொப்பிகளும் டஜன் கணக்கில் உள்ளன.

இவர்கள் அனைவரும் அசத்தலான உடையலங்காரத்துடன் வாரந்தோறும் சனி,ஞாயிறுகளில் ஒரு இடத்தில் சந்தித்து தங்களது சுயப்பெருமையை ஒருவருக்கொருவர் பறைசாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை.

இவர்களில் சிலர் தந்தையின் தொழில் வருமானத்தில் இருந்து பணத்தை திருடி தங்களது நவநாகரிக மோகத்துக்கு தீனிபோட்டு வந்துள்ளனர். வேறு சிலர், பிறரிடம் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கி தங்களது ஆசையை நிறைவேற்றிகொண்டு, அதன் பலனாக குடும்பத்தையும், மனைவி, பிள்ளைகளையும் கடன்தொல்லையில் சிக்கவைத்துவிட்டு, செத்து மடிந்துள்ளனர்.

லாட்டரி விளையாடி கிடைத்த பலகோடி ரூபாய் பணத்தை உடைகளுக்காகவே செலவழித்த ஒருவரும் இந்த இயக்கத்தில் உண்டு.

குடும்பத்தவர்கள் பனங்கிழங்குகளையும், பனம்பழச் சாற்றையும், கீரை, காய்கறிகளையும் அரை வயிற்றுக்கு சாப்பிட்டு வயிரையும், உயிரையும் காப்பாற்றிவரும் நிலையில், இந்த ‘ஜென்டில்மேன்’களைப் போலவே தாங்களும் வாழ்வதே இங்குள்ள பல குழந்தைகளின் இன்றைய லட்சியக் கனவாக உள்ளது.

’காங்கோ டான்டீஸ்’ என்று இவர்களை குறிப்பிட்டு சமீபத்தில்ஒரு செய்திப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கும் அக்கப்போரை வீடியோ வடிவில் காண..,
 
 

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

குஜராத் பாடகி மீது பணமழை

 

rupee_14225.png

குஜராத் திருமண நிகழ்ச்சியில் பெண் பாடகர்  மீது பணத்தை தூவும் வீடியோ வைரலாகி வருகிறது.   சுமார் 40 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, சுற்றி நின்றிருப்பவர்கள் பாடகி மீது வீசுகின்றனர். பண மழை நடுவே அந்த பாடகி பாடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் நெட்டிசன்ஸ் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டு தட்டுபாடால் நாடு முழுவதும் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் பாடகி மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிவது கண்டிக்கத்தக்கது என சாடி வருகின்றனர்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் 3000 வருடங்கள் பழமையான கல்லோவியங்கள்

 

 

இயேசு கிறிஸ்து காலத்திற்குரியதாக நம்பப்படும் 3000 வருடங்களுக்கு முற்பட்ட கல்லோவியங்கள் எகிப்தின் சகாரா பாலைவனத்தை அண்டிய குகை ஒன்றினுள் தற்போது மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

3B9C971500000578-4063638-image-a-1_14825

கடந்த 2005 ஆம் ஆண்டு இத்தாலியின் அருங்காட்சியக இயக்குனர் மார்க்கோ மொரல்லியினால் கில்ப் கெபிர் பீடபூமி மற்றும் நைல் நதியிற்கிடையிலான நிலங்களில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த, சகாரா பாலைவனத்தின் சிவப்பு மலைப்பகுதியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பதான கல்லோவியங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

3B9D551600000578-4063638-image-a-26_1482

இவ் ஓவியங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ள மொரல்லி குறிப்பிட்டுள்ளதாவது, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் குழந்தை மகப்பேற்றை குறிப்பதான குறிப்புகளை வெளிப்படுத்தும் ஓவியமாகவே அது அமையப்பெற்றுள்ளது. அது குழந்தை, தாய், தந்தை என்போரோடு சூழ நிற்கும் விலங்குகளையும் குறிப்பிடுகிறது. நிச்சயமாக அது  3000 வருடங்களுக்கு முன்புள்ள கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் ஓவியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மாவோ - புரட்சிகளுக்கு சொந்தக்காரன்! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

 

மாவோ

ருநாள் வயலில் நெற்கதிர்களைக் காயவைத்துக் கொண்டிருந்த சமயம்... திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது ஷன்செங்... அவர் மகனிடம், ‘‘உடனடியாக கதிர்களை அப்புறப்படுத்து. இல்லையென்றால் மழை நாசம் செய்துவிடும்’’ என்றார். அவனும், விரைவாக கதிர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென்று, அவனைக் காணவில்லை. தந்தை, வயல் முழுவதும் தேடினார். எங்குத் தேடியும் அவன் கிடைக்காததால்... ஷன்செங், மற்ற வேலையாட்களைவைத்து நெற்கதிர்களைப் பாதுகாப்பாக வீடு கொண்டுபோய்ச் சேர்த்தார்.

மழை நின்றது... மகன் வந்தான். ‘‘எங்கு சென்றாய்? உன்னிடம் நான் என்ன சொன்னேன்’’ என்று தந்தை கோபத்துடன் கேட்டார். ‘‘அப்பா... நம்மிடம் வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால், பக்கத்து நிலத்தில் இருப்பவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உதவவே அங்குச் சென்றேன். விளைபொருள்கள் நாசமாகிவிட்டால் அவர்களால் ஈடு செய்ய முடியாது. குத்தகை பணம்கூட கொடுக்க முடியாது’’ என்று நிதானமாகப் பதில் சொன்னான், அவன். ‘‘உனக்கு உன்வீடு முக்கியமா... இல்லை, அவர்களுடைய வீடு முக்கியமா’’ என்று மீண்டும் கோபத்துடன் கேட்டார் ஷன்செங். ‘‘அவர்கள் வீடுதான் முக்கியம்’’ என சட்டென சொன்னான் அவன். இப்படிப் பதில் சொன்னவர் வேறு யாருமில்லை. சீன மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாவோ என்ற மா சே துங். அவருடைய பிறந்த தினம் இன்று.

வாழ்க்கையின் ஆரம்ப காலம்!

மாவோ, 1893-ம் ஆண்டு ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில்... மா ஷென்செங் - வென் குய்மெய் என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்த மாவோ, ஆசிரியரின் அடிக்குப் பயந்து பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து... மாவோவின் பெற்றோர்கள் அவரைக் கண்டுபிடித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர, ‘‘பள்ளிக்கு செல்லமாட்டேன்’’ என்றார் மாவோ. காரணம், ஆசிரியர் அடிப்பார் என்ற பயம். ஆனால் அந்த ஆசிரியர், ‘‘இனி உன்னை அடிக்கமாட்டேன் நீ பள்ளிக்கு வா’’ என்றார். அதன்பிறகு, மாவோவும் பள்ளிச் செல்ல ஆரம்பித்தார். பகலில், பள்ளிக்கூடம்... இரவில், விவசாயம். படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின், பீகிங் பல்கலைக்கழக நூலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இப்படியாகக் கழிந்தது அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப காலம்.

சன்யாட் சென் புரட்சி!

Mao1_15074.jpg

‘வேர்ட்ஸ் ஆஃப் வார்னிங்’ (எச்சரிக்கை தரும் வார்த்தைகள்) என்கிற புத்தகம் மாவோவுக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். இதிலிருந்துதான் சீனாவின் அப்பட்டமான பலவீனங்களையும், மேற்கத்திய நாடுகளின் பலங்களையும் நன்றாகத் தெரிந்துகொண்டார். 17-ம் நூற்றாண்டு முதல் சீனாவை ஆண்டுவந்த ஷிங் வம்சம், மக்களுக்கு எதிரான பல சீர்கேடுகளை நடத்திக்கொண்டிருந்தது. அது, நாட்டை அழிவின் பாதையில் கொண்டு செல்ல வழிவகுத்தது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், 1911-ம் ஆண்டு மன்னர் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தனர். இதன் காரணமாக எழுந்ததே சன்யாட் சென் புரட்சி. இதன் தாக்கத்தால்... மன்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சீனா மக்களாட்சி நாடாக மாறியது. பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில், அந்தப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களால்... ஒற்றுமையான அரசை ஏற்ப்படுத்த முடியவில்லை. இதனால் சீனாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் அதிகமாக எழத் தொடங்கின. இது, உள்நாட்டுப் போருக்குக் காரணமாக அமைந்தது. இதையெல்லாம் 18 வயதான மாவோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார். 

‘சீன பொதுவுடைமைக் கட்சி!’

இதற்கிடையில், மாவோ இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு... 1920-ம் ஆண்டு பொதுவுடைமை கொள்கைக்காரராக மாறினார். பின், மாவோ உட்பட 12 பேர் இணைந்து 1921-ம் ஆண்டு, ‘சீன பொதுவுடைமைக் கட்சி’யைத் தோற்றுவித்தனர். 1931-ம் ஆண்டு புரட்சிப்படை ஒன்றைத் தோற்றுவித்து ஆயுத பயிற்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கான பணிகள் ஆகியவற்றை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை, அப்போது சீனாவின் அதிகாரத்தில் இருந்த சியாங் கே-ஷேக் அறிந்துகொண்டு ராணுவத்தின் மூலம் மாவோவுக்குப் பல பிரச்னைகளைக் கொடுத்தார். இதன் காரணமாக, தன் புரட்சிப் படையுடன் 8 ஆயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார் மாவோ. இந்தப் பயணத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலர் மாவோவுடன் தன்னை இணைத்துக்கொண்டனர். இதன்மூலம், மாவோவின் செல்வாக்கு சீனா முழுவதும் பரவத் தொடங்கியது. 1934-ம் ஆண்டு சீனப் பொதுவுடைமை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், சியாங் கே-ஷேக்-க்கு எதிராகப் பல போராட்டங்களைச் செய்து... சீனாவை, மக்கள் ஆட்சி நாடாக ஏற்படுத்த வேண்டும் என்பதிலேயே அவரது எண்ணமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போர்!

mao2_15284.jpg

இந்த நிலையில்தான் 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது. ஜப்பான், சீனாவைத் தாக்கியது. சீனாவுக்கு, அடிகள் விழத்தொடங்கின. இந்த நிலை தொடருமானால்... சீனாவை, ஜப்பான் அழித்துவிடும். ஆனால், தன்னிடம் உள்ள படையும், ஆயுதங்களும் ஜப்பானை தாக்குவதற்குப் போதாது என நினைத்த மாவோ, நமது உள்நாட்டுப் பிரச்னையை பின்பு வைத்துக்கொள்வோம். முதலில், ஜப்பானிடமிருந்து சீனாவைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு, நாம் இனைந்து ஜப்பானோடு போர் புரிய வேண்டும் என சியாங் கே-ஷேக்கிடம் சொன்னார். அவரும் சம்மதிக்க, இருவரின் படைகளும் இணைந்து... ஜப்பானோடு சண்டை போட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியை சந்தித்தது. சீனாவோடு நடந்த யுத்தமும் முடிவுக்கு வந்தது. மீண்டும், உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்தது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தன் படை வீரர்களோடு இணைந்து மாபெரும் கொரில்லா யுத்தம் நடத்தி சியாங் கே-ஷேக்கைத் தோல்வியடையச் செய்தார். இதனால் சியாங் கே-ஷேக் நாட்டைவிட்டுத் தப்பியோடினார். 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சீனா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. சீனக் குடியரசின் முதல் அதிபராக மாவோ பதவியேற்றார்.

சீன வளர்ச்சிக்குப் பாடுபட்டார்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டிருந்தன. பொருளாதாரத்தில், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்தது. மக்கள், வறுமையால் வாடினர்; படிப்பறிவு இல்லாமல் இருந்தனர். இந்தப் பிரச்னைகளைக் களைந்து சீனாவை எப்படிச் சர்வ வல்லமை படைத்த நாடாக மாற்ற முடியும் என்ற எண்ணமே மாவோவுக்கு மேலோங்கி இருந்தது. இவை, அனைத்தும் மிகப்பெரிய சவால்களாக அவர் முன் இருந்தன. சீனாவை வளமிக்க நாடாக மாற்றச் சில திட்டங்களைக் கையிலெடுத்தார். ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. ‘‘அதிகம் படிப்பறிவு இல்லாத நம் மக்களிடத்தில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்தது என் தவறுதான்’’ என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 1961-லிருந்து 1963 வரைக்கும் ஏற்பட்ட பஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். இதனால், ‘‘மக்களுக்கு முதலில் படிப்பைப் பற்றியும், விவசாயத்தின் வளர்ச்சி பற்றியும் புரியவைக்க வேண்டும்’’ என்றார். பின், சீனா சீரான வளர்ச்சிப் பெற ஆரம்பித்தபோது... மாவோ, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1976-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாள் இறந்தார். அவர், ஆசைப்பட்டதுபோலவே இன்று... சீனா பலம் வாய்ந்த உலக நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளது. 

சீனாவின் வளர்ச்சிக்குக் காரணமான மாவோ, சீனர்கள் மனதில் என்றும் நிலைகொண்டிருப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

.vikatan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.