Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் இந்த 9 அடிப்படைகள் இருக்கிறதா?

 

உலகப் புகழ் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்கரி,  அமெரிக்க புகைப்பட பத்திரிக்கையாளர். முதலில் சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர்,  தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் படிப்பை முடித்து, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் தொற்றிக்கொண்டதால் புகைப்பட பத்திரிக்கையாளர் ஆனார். 

பத்திரிகை அட்டையில் பிரசுரமான இவர் எடுத்த ஆப்கானிஸ்தான் பெண்ணின் புகைப்படம்,  நேஷனல் ஜியோகிராபிக்  சேனல் விருதை வென்றது. ஈரான் - ஈராக் போர், லெபனான் போர் போன்றவற்றை இவரது கேமரா பதிவு செய்தது. உலகமே கொண்டாடும் ஸ்டீவ் மெக்கரி,  போட்டோகிராபியின் அடிப்படையாக தான் கருதும்  9 டெக்னிக்குகளை பகிர்ந்துள்ளார். 


1.  ரூல் ஆப் தேர்ட்ஸ் என்னும் விதிப்படி, புகைப்படத்தை குறுக்கும்,நெடுக்குமாக 3 கோடுகள் பிரிப்பதாக நினைத்துக்கொண்டு, புகைப்படத்தை 9 சம பாகங்களாக பிரிக்க வேண்டும். புகைப்படத்தில் நீங்கள் எது கவனிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதை இந்த கோடுகள் சந்திக்கும், மையப்பகுதியில் இருக்கும்படி கம்போஸ் செய்ய வேண்டும்.

rule-of-thirds-still-life.jpg
 

2.   இரண்டாவது லீடிங் லைன்ஸ். அதாவது நாம் படம் இடக்கும் இடங்களில், இயற்கையாகவே சில கோணங்கள், சில அமைப்புகள் , புகைப்படத்தின் மைய கருத்தை நோக்கி செல்வது போல அமையும். நீண்ட சாலைகள், ஏதேனும் ஒரு புள்ளியை நோக்கி செல்வது போலத்தோன்றுமே..அது போல.. இந்த அமைப்புகள் நம் கண்களுக்கு மிக அழகாக தெரியும்.
 

leading%20line%201.jpg
 

 
3.  டயக்னல் லைன்ஸ் என்னும் குறுக்குவெட்டு கோடுகள், அழகான தோற்றத்தை கொடுக்கும். அதையும் ஃப்ரேமில் வைத்து கம்போஸ் செய்யுங்கள்.

 

diagnol.jpg



4.   எடுத்த போட்டோக்களை  நாம் டிஜிட்டல் எடிட்டர்களை கொண்டு, ப்ரேமிங் செய்வோமே? அதை விட, இயற்கையாக அமைந்த காட்சிகளை ப்ரேமாக பயன்படுத்தலாம். ஜன்னல்கள், கதவுகள், தூண்கள் போன்றவைகளை இப்படி பயன்படுத்தலாம்.
 

framing%203.jpg
 

5.   புகைப்படத்திற்கும், அதன் பின்புலத்திற்கும்(background) இடையே , தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். அந்த Contrast புகைப்படத்துக்கு ஒரு ராயல் டச் கொடுக்கும்.



contrast%201,%20figure%20to%20the%20grou


6.  மனிதர்களை, விலங்குகளை போர்ட்ரெய்ட்டுகளாக எடுக்கும்போது அந்தப் படம்,  முழு ஃபிரேமையும் ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.

fill%20frame%202%281%29.jpg


7.   புகைப்படம் எடுக்கும் நபரின் கண்களானது, புகைப்படத்தின் மையத்தில் இருப்பது போல இருந்தால், அந்த நபர் நம்மையே கவனிப்பது போன்ற வசீகரம் ஏற்படும்.


 centerdominanteye.jpg


8.  ஒரே மாதிரியான கட்டட வடிவமைப்புகள், மனிதர்கள், விலங்கு கூட்டங்கள், பூக்கள் போன்றவற்றை ஒரே புகைப்படத்தில் எடுத்தால் அழகாக இருக்கும். அதில் நாம் எதில் ஃபோகஸ் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தால், அது இன்னும் ஸ்பெஷல்! 
 

essential-composition-rules-patterns.jpg


9.  புகைப்படம் எடுக்கும் பொருளை, நபரை புகைப்படத்தின் மையத்தில் வைத்து எடுப்பது கண்களுக்கு அழகாக இருக்கும்.

photography-Symmetry.jpg

 

இவையெல்லாம் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் அழகு  சேர்க்கும் விஷயங்கள் மட்டுமே.  ஆனால் இதை விடவும், அழகான கோணங்கள், படங்கள் இந்த இயற்கையில் காணக்கிடைக்கும் என்பதால், இந்த பூமியில் இன்னும் புதிய விஷயங்களையும் நீங்கள் முயற்சி செய்யலாம்!

 

 

Consigli di Steve McCurry

Ecco alcuni consigli di Steve McCurry per fotografare come un professionista!ISCRIVITI su www.spreafotografia.it e carica le tue foto in alta qualità

Posted by

IL FOTOGRAFO

on 8 May 2015

http://www.vikatan.com/news/miscellaneous/56697-photo-composition-tips-by-steve-mccurry.art
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவதாக இன்னொன்றையும் சொல்லியிருக்கலாம் , இவற்றை எடுப்பதற்கு முக்கியமாக நல்ல கமரா உங்களிடம் இருக்க வேண்டும் .....!  :)

  • தொடங்கியவர்

சென்னை வெள்ளத்தை இந்தக் குழந்தைகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

 

சென்னை வீதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் அது, பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் அச்சத்தை விதைத்துச் சென்றிருக்கிறது.

சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு முதல் வருமானத்துக்கு வழி செய்த பொருள் வரை அனைத்தையும் கலைத்துப் போட்டுச் சென்றிருக்கிறது. இது உண்டாக்கிய மன அழுத்தத்திலிருந்து யாரும் எளிதில் மீண்டுவிட முடியாது. அதனாலேயே 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மட்டும் போதாது; அவர்களுக்கு மனநல ஆலோசனையும் அவசியம்'  எனக் கரிசனக் குரல்கள் எழுகின்றன. இது பொருளாதாரக் கவலை குறித்து யோசிக்கும் பெரியவர்களுக்கு.

எதையும் குபீரென கொண்டாடும், சட்டென மறக்கும் குழந்தைகள் இந்தப் பெருவெள்ளப் பாதிப்பை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதி குழந்தைகளைச் சந்தித்து,  அவர்களிடம்  மழை, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டேன்.

அவர்களின் அனுபவம்...அவர்களின் வார்த்தைகளிலேயே...
    
திவ்யதர்ஷினி:

divyadharsihhini1.jpg

 

"போன வாரம் நிறைய தண்ணி வந்தது. நாங்க இருக்க வீடு  மொத்தமும் தண்ணிக்குள்ள போய்டுச்சு. இதோ இந்தப் பாலம் மேலதான் முதல்ல நின்னு பார்த்தோம். அப்புறம் இதுவும் முழுங்கிடுச்சு. அவ்ளோ தண்ணி. தண்ணியெல்லாம் போனதும் வந்தோமா... எங்க வீடும் கொஞ்சம் வீடும்தான் அடிச்சுட்டுப் போகாம இருந்தது. இதுக்கு எங்க தாத்தாதான் காரணமாம். அவருதான் வீட்ட நல்லா கட்டிருக்காரு. அம்மாகிட்ட சொல்லி நான் ஸ்கூல் புக்கெல்லாம் பைல போட்டு எடுத்துகிட்டேன். அதனால தப்பிச்சது. பெரியவளா ஆனதும் படிச்சு டாக்டர் ஆகி எல்லோருக்கும் ஊசி போடுவேனே..!" எனச் சொல்லிவிட்டு வரையத் துவங்கினாள்.

divyadharsihhini1_2.jpg

 

முடித்துவிட்டு நிமிர்ந்து சிரித்தவள், "இந்த மரம் இருக்குல்ல... இது மட்டும் அடிச்சுட்டுப் போயிடுச்சு!’’ என தன் ஓவியத்தைக் காட்டிச் சிரிக்கிறாள்.

ஸ்ரீமதி:

srimathi_vc1.jpg

 

"நான் ஒண்ணாவது படிக்கிறேன். எனக்கு பொம்மைதான் வரையத் தெரியும். பரீட்சை அட்டையெல்லாமும் அடிச்சுட்டுப் போயிருச்சு.

srimathi_vc2.jpg

 

என்கிட்டே ஒரு கரடி பொம்மை இருந்துச்சு. அதுவும் காணல!’’  என வருத்தப்பட்ட ஸ்ரீமதியின் ஓவியத்தில் கரடி பொம்மை தண்ணீரில் மிதக்கிறது!

சூர்யா:

suriyavc_1.jpg

 

"என் பேரு சூரியா. வெள்ளம்னால நிறைய தண்ணி வந்துச்சா... அதனால நாங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டோம். அங்க நிறைய போலீஸ் அண்ணாதான் சோறுலாம் கொண்டு வந்து கொடுத்தாங்க. நிறைய பேரு கப்பல்ல ஊருக்குப் போனாங்க. மெழுகுவர்த்திலாம் வைச்சுட்டு நிறைய பேரு மாடி மேல நின்னுக்கிட்டு இருந்தாங்க.

suriyavc_2.jpg

 

வீட்டுக்கு கீழ எல்லாமும் நிறைய தண்ணியா இருந்தது!’’ -விறுவிறுவென வரைந்த சூரியாவின் ஆசை போலீஸ் அதிகாரி ஆக வேண்டுமென்பதாம்.

ஸ்ரீநிதி:

srinithi_vc1.jpg

 

"வெள்ளம் வந்தப்போ நிறைய வீடு அடிச்சுட்டுப் போயிருச்சு. நானு, அப்பா, அம்மாலாம் நிறைய தண்ணில நடந்து போனோம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு... கமலி. ஆனா, ஸ்ரீநிதினு கூப்பிட்டாதான் எனக்குப் பிடிக்கும்.

srinithi_vc2.jpg

 

நீங்களும் அப்படியே கூப்பிடுங்க!’’ என சொல்லிய ஸ்ரீநிதியின் ஓவியத்தில்,  அவளுடைய குடும்பத்தினர் மட்டும் இருக்கிறார்கள். சுற்றிலும் வெள்ளம்!

கீர்த்தனா:

"எனக்கு வரையத் தெரியாதே..." என முதலில் தயங்கியவளிடம், "உனக்குத் தெரிஞ்சத வரைஞ்சு கொடும்மா" என அம்மா நம்பிக்கையூட்டியதும் ஆர்வமாக முன்வந்தாள்.

keertha_1%281%29.jpg

 

"மழை ரொம்ப பெய்ஞ்சது. நிறைய தண்ணி வரும்னு சொன்னாங்க. வீடுலாம் அடிச்சுட்டுப் போயிருச்சு. ஓடும் அடிச்சுட்டுப் போய்டுச்சு. நாங்க காலி பண்ணிட்டுப் போய்ட்டோம். அப்புறம் எல்லாத்தையும் காய வைச்சுட்டு ரோட்லதான் சமைச்சு சாப்டறோம்!’’ என  உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக் கொண்டே வரைந்தாள்.

ஓவியத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் கூரையில் அமர்ந்திருப்பது... அவளேதான்!
 
சுமித்ரா:

sumithira_vc1.jpg

 

"வெள்ளம் வந்ததால நிறைய அடிச்சுட்டுப் போயிடுச்சு. ஆனா, குப்பை மட்டும் சேர்ந்துடுச்சு. அதான் இந்தப் படத்துல வரைஞ்சுருக்கேன். நிறைய குப்பையும், சேறுமா இருக்கிறதால இங்கே ரொம்ப பேருக்கு உடம்புக்கு சரி இல்லாம ஆகிடுச்சு. அதனால நான் படிச்சு பெரிய ஆள் ஆனதும் டாக்டர் ஆகப் போறேன்!" என குழந்தைதனம் மாறாத குரலில் சொல்கிறாள்.

sumithira_vc2.jpg



துளிர்களின் இந்த நம்பிக்கையை எந்தப் பெரு வெள்ளத்தாலும் அசைக்க முடியாது!

  • தொடங்கியவர்

பயனுள்ள தகவல்கள்

  • தொடங்கியவர்

சாரதா தேவி

 
saradha_2666689f.jpg
 

ஆன்மிகவாதி, ராமகிருஷ்ணரின் துணைவி

 

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் (1853) பிறந்தார். தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார்.

# கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார். ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார்.

# வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

# அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார்.

# நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர்.

# சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

# இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார்.

# ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.

# அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.

# ‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

விருப்பம்

p97a.jpg

‘‘இனி ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன்’’ என ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு லாக்அவுட் செய்த இரண்டாவது நிமிடம் மீண்டும் லாக்இன் செய்தான், எத்தனை லைக்குகள் வந்துள்ளன என்று பார்க்க!"

 


பாசம்

p97b.jpg

‘‘வந்து தூங்கு...’’ என குழந்தையின் முதுகில் அடித்து இழுத்தாள் அம்மா நிர்மலா. ‘‘அழாம தூங்குடா செல்லம்...’’ என பொம்மைக்கு முத்தம் தந்துவிட்டுத் தூங்கப்போனது குழந்தை!

 



முறிவு

p97c.jpg

‘‘தொட்டுத் தாலி கட்டுன என்னையே எதிர்த்துப் பேசுறியா?’’ கன்னத்தில் ஓங்கி அறைந்தான் வினோத்.  ‘‘யூ... ராஸ்கல், நிஜமாவே அடிச்சிட்டியா?’’ என ஸ்பாட்டை விட்டு வெளியேறிய தாராவை அதிர்ச்சியோடு பார்த்தார் டைரக்டர்!

 


வருகை

p97d.jpg

‘அவள் வருவாளா... அவள் வருவாளா?’ என இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், தன் மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பில் அவளுடைய லாஸ்ட் விசிட் டைமை! 

-


கோரிக்கை

p97e.jpg

‘‘அய்யா... என்னுடைய பல ஜோக்குகளும் துணுக்குகளும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பிரபல எழுத்தாளர்கள் திருப்பிக்கொடுத்துள்ள அந்த சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றை எனக்குக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துங்களேன்’’ -  கடிதத்தைப் பார்த்து உறைந்தார் அகாடமி  தலைவர்!

 


அறிவு

p97f.jpg

திருப்பு முனையில் எதிரே  வந்த வாகனத்துடன் மோதியவர்  ‘‘ஏம்ப்பா அறிவில்ல... திரும்பும்போது ஹாரன் அடிச்சுட்டுத் திரும்ப மாட்டே?’’ என்றார்.

எதிரே வந்தவரோ,  ‘‘சாரி சார்...  உங்களுக்கு அறிவிருக்கும்... ஹாரன் அடிப்பீங்கனு நெனச்சுத் திரும்பிட்டேன்’’ என்றார்!

 


லைஃப்... கார்டு!

p97g.jpg

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதியிடம் சிறை அதிகாரிகள் சோதனையிட்டபோது இரண்டு லைஃப் டைம் சிம் கார்டுகள் சிக்கின!

 


நீரின்றி...

p97h.jpg

“ மழை வரும்போல இருக்கு. மழைக்கு முன்னாடி சீக்கிரமா லாரியைக் கொண்டுவந்து ஸம்ப்பை நிரப்பிட்டுப் போப்பா!” – லாரியில் குடிநீர் சப்ளை செய்பவருக்கு  போன்செய்து சொன்னார் அந்த அடுக்குமாடிவாசி.

 


சேவை

p97j.jpg

‘யூ ரிங்... வீ ப்ரிங்’ நிறுவனத்துக்கு போன் செய்தாள். விரைந்து கொண்டுவந்தனர்,  குடித்துவிட்டு சாலையில் மயங்கிக்கிடந்த கணவனை!

 


நியூஸ்

p97k.jpg

‘‘மிஸஸ் திவ்யா, உங்களுக்கு ஒரு குட் நியூஸ்...’’

‘‘நான் மிஸ் திவ்யா.’’

‘‘அப்ப ஒரு பேட் நியூஸ்...’’ என்றார் டாக்டர்!

  • தொடங்கியவர்

734658_10154170817944578_937212478418794

  • தொடங்கியவர்

 உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களாக எப்போதுமே பிரேசில் வீரர்களே தெனாவட்டாகத் திரிவார்கள். இப்போதெல்லாம் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்ட்டினாவின் லியோனல் மெஸ்ஸியுமே மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர். `இருக்கட்டுமே... ஆனால் இவர்களின் `பீக் சீஸன்' கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு நெய்மார் முதல் இடத்தைப் பிடித்துவிடுவார். அவர் தொடர்ந்து நீண்டகாலம் நம்பர் ஒன்னாக இருப்பார்' என்று ஆருடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ. அப்பிடீன்றீங்க?

p40a.jpg

dot1.jpg இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்து உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக முதல் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். 2015-ம் ஆண்டில் இதுவரை  8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஷ்வின் 55 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார். இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 15 முறை 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியிருக்கிறார். `அஷ்வின்தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அவரால்தான் எங்களால் தொடர்ந்து வெற்றிபெற முடிகிறது. அவர் எங்கள் அணியின் பொக்கிஷம்’ எனப் புகழ்கிறார் கேப்டன் விராட் கோஹ்லி. இது சுத்தி அடிக்கிற பந்து... இது சுத்த விடுற பந்து!

dot1.jpg பார்க்க ஒன்றுபோலவே தெரியும் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஸ்கோர் செய்யும் ஒரே வீரர் பங்கஜ் அத்வானி. எகிப்தில் நடந்த ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சீனாவின் ஜுவா ஜிண்டாங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார் பங்கஜ். இந்த  வருடம் இவர் வெல்லும் மூன்றாவது பட்டம் இது. ‘ஒரே நேரத்தில் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் இரண்டிலும் ஜொலிப்பதில் மகிழ்ச்சி. விளையாடுவதைவிட, ஜெயிப்பதைவிட நாட்டுக்காகப் பதக்கங்கள் குவிப்பதில்தான் கூடுதல் மகிழ்ச்சி’ என்கிறார் பங்கஜ். பின்னி எடுங்க பாஸ்!

dot1.jpg ட்விட்டரில் நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஷேர் செய்து, லைக்ஸ் அள்ளுவது அமிதாப் ஸ்டைல். ஆனால், இந்த முறை சொன்னது சோகம்... ‘நான் தற்போது 25 சதவிகித கல்லீரலுடன் தான் உயிர் வாழ்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில், சிகிச்சைக்காக 200 கொடையாளி களிடம் இருந்து 60 பாட்டில்  ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. அப்போது யாரோ ஒருவரின் ரத்தத்தில் இருந்து பரவிய ஹெப்படைடிஸ் பி வைரஸ், என் கல்லீரலைச் சிதைத்துவிட்டது. யாருக்கும் இதுபோன்ற நிலை வரக் கூடாது. எனவே, குடிக்காதீர்கள். நோய்த்தொற்றை அலட்சியம் செய்யாதீர்கள்’ என அறிவுரை சொல்லியிருக்கிறார் அமிதாப். கெட் வெல் சூன் அமிதாப் ஜி!

dot1.jpgசர்ச்சைகளின் சிஷ்யப் பிள்ளை ராம் கோபால் வர்மா, தனது சுயசரிதையை எழுதி முடித்திருக்கிறார். ‘கன்ஸ் & தைஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் நிழல் உலக தாதாக்கள், அவர் வாழ்வில் வந்த முக்கியமான பெண்கள்... என பல ட்விஸ்ட்கள். ‘இந்தப் புத்தகத்தை அயன் ராண்ட், அமிதாப் பச்சன், புரூஸ் லீ, நடிகை ஊர்மிளா மற்றும் ஆபாசப்பட நடிகை டோரி பிளாக் ஆகியோருக்கும், சில கேங்ஸ்டர்களுக்கும் சமர்ப்பிக் கிறேன். அவர்கள்தான் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்’ என டீஸராக ட்விட்டியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. படமா எடுப்பீங்களாஜி?

p40b.jpg

dot1.jpg`மேரி கோம்’ ஆக நடித்து லைக்ஸ் குவித்த பிரியங்கா சோப்ரா, அடுத்து `கல்பனா சாவ்லா’ அவதாரம் எடுக்க இருக்கிறார். ஹரியானாவின் சிறிய கிராமத்தில் பிறந்து,
நாசா விண்வெளி வீராங்கனையாக உயர்ந்து, விண்வெளி ஆராய்ச்சியின் போதே உயிர்விட்ட கல்பனா சாவ்லாவாக நடிக்க இப்போதே பயிற்சிக்குத் தயாராகிவிட்டார் பிரியங்கா. பின்னி எடுக்குது பொண்ணு!

dot1.jpgஅப்பாவாகப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. முஸ்லிமாக மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா, கடந்த ஜனவரி மாதம் ஸஃப்ரன் நிஸாரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஸார் வயிற்றில் இப்போது குட்டிப் பாப்பா எட்டிப் பார்க்கிறது.`அடுத்த ஆண்டு பாப்பா வந்துவிடும். நான் இசையமைக்கும் படங்களும் அடுத்த ஆண்டுதான் அதிக அளவில் ரிலீஸாக இருக்கின்றன' மகிழ்வுடன் பேசுகிறார் யுவன். புதுப் பாப்பாவுக்கு வெல்கம்!

dot1.jpg ஹாலிவுட் நடிகர்களுக்கும் அரசியல் ஆசை உண்டு என்பதை நிரூபிக்க அர்னால்டுக்கு அடுத்து வில் ஸ்மித்தும் தயார். `வெறும் நடிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. இந்தச் சமூகத்துக்குப் பயன்தரும் ஏதேனும் செய்ய வேண்டும். அமெரிக்க அரசியலில் எனக்காக ஓர் இடம் காத்திருப்பதுபோல் தோன்று கிறது. விரைவில் அரசியலில் இறங்கு வேன்’ என்று அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் வில் ஸ்மித். நடிகர்கள் நாடாள்வது குளோபல் ட்ரெண்டா?

p40c.jpg

dot1.jpg ‘ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் ஒரு பெண் சாதிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது இன்னொரு பெண்ணுக்கு மட்டுமே தெரியும். இந்த டிஜிட்டல் யுகத்தில்கூட அடிப்படைத் தேவைகளுக்கு பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. விளையாட்டில்கூட ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகம்; பெண்களுக்குக் குறைவு. ஒரு பெண் தனது மனதில்படும் விஷயங்களைப் பேசினால், அவளை வேறுவிதமாகச் சித்திரித்துவிடுகிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் தனது மனதில் தோன்றும் விஷயங்களைப் பேசினால், அவரைக் கொள்கைவாதியாகப் பார்க்கிறார்கள்’ என பொங்கித் தீர்க்கிறார் சானியா மிர்ஸா. அழகுப் பொண்ணைப் புலம்பவிடாதீங்க கைஸ்! 

dot1.jpg ‘எனக்கு மீண்டும் இளமை எல்லாம் வேண்டவே வேண்டாம்’ என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. ‘தற்போது நான் மெனோபாஸ் நிலையில் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். இதற்காக நான் முகம் சுளிக்க மாட்டேன். நான் தினமும் பக்குவம் அடைந்துவருகிறேன் என்பது எனக்குச் சந்தோஷம்தானே. இதை அனுபவிக்க எந்தப் பயமும் தயக்கமும் இல்லை. நான் மீண்டும் இளமையாக மாற ஆசைப்படவில்லை’ என போல்டாகப் பேட்டி தட்டியிருக்கிறார் ஜோலி! # அசல் ஏஞ்சல்!

dot1.jpgதமிழில் க்யூட் ஹிட்டடித்த ‘ஓகே கண்மணி'யை, இந்தியில் தெறி ஹிட்டடித்த, ‘ஆஷிக்-2' படத்தின் ஆதித்யா ராய்கபூர் - ஷ்ரத்தா கபூர் ஜோடியை வைத்து ரீமேக் செய்யவிருக்கின்றனர். ‘அலைபாயுதே’ படத்தை ‘சாத்தியா’ என இந்தியில் ரீ மேக்கிய ஷாத் அலிதான்  ‘ஓகே கண்மணி'யையும் இயக்கவிருக்கிறார்.தயாரிப்பு மணிரத்னம். ஒ.கே பியாரி!

  • தொடங்கியவர்
9 hours ago, suvy said:

பத்தாவதாக இன்னொன்றையும் சொல்லியிருக்கலாம் , இவற்றை எடுப்பதற்கு முக்கியமாக நல்ல கமரா உங்களிடம் இருக்க வேண்டும் .....!  :)

உண்மைதான் சுவி அண்ணா

உங்கள் கருத்துகளுக்கும் வரவுக்கும் ஊக்கதிற்கும் நன்றி... :)

  • தொடங்கியவர்

12373312_192099194470182_365418281952392

பதில் சொல்லுங்கோ பார்ப்பம்... :)

  • தொடங்கியவர்

அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்ஸும்

 
jobs_2662175f.jpg
 

ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாதத்தை வலுவாக முன்வைக்கின்றன.

இதைத்தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார். சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல், ஒரு வளமாகக் கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "புலம்பெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாகப் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன்தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால்தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (http://www.banksy.co.uk/index1.asp) காணலாம்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் 23

 

629varalaru-1-%281%29.jpg1783 : அமெ­ரிக்க  இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து ஜோர்ஜ் வொஷிங்டன் வில­கினார்.

 

1914 : முதலாம் உலகப் போர்: அவுஸ்­தி­ரே­லிய மற்றும் நியூ­ஸி­லாந்துப் படைகள் எகிப்தின் கெய்­ரோவில் தரை­யி­றங்­கினர்.

 

1916 : முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்­கியப் படை­க­ளுடன் இடம்­பெற்ற சமரில் வெற்றி பெற்­றனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னிய இரா­ணுவம் வேக் தீவை கைப்­பற்­றி­யது.

 

1947 : முத­லா­வது டிரான்­சிஸ்டர் அமெ­ரிக்­கா­வி­லுள்ள பெல் ஆய்­வு­கூ­டத்தில் வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

 

1948 : பிர­தமர் டோஜோ உட்­பட ஏழு ஜப்­பா­னியப் போர்க் குற்­ற­வா­ளி­க­ளுக்கு டோக்­கி­யோவின் சுகோமோ சிறையில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1954 : முத­லா­வது மனித சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

1958: உலகின் மிக உய­ர­மான (332.9 மீற்றர்) இரும்­பி­னா­லான கோபு­ர­மான  டோக்­கியோ கோபுரம் திறக்­கப்­பட்­டது.

 

1970: நியூ­யோர்க்கில் உலக வர்த்­தக நிலைய கட்­ட­டத்­தொ­கு­தியின் வடக்கு கோபுரம் திறக்­கப்­பட்­டது. 417 மீற்றர் உய­ர­மான அக்­கட்­டடம் உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மாக விளங்­கி­யது. 

 

1972 : நிக்­க­ரா­குவா நாட்டின் தலைநகர் மனா­கு­வாவில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 10,000 இற்கு மேற்­பட்டோர் இறந்­தனர்.

 

1972 : தென் அமெ­ரிக்­காவில் அந்தீஸ் மலைத்­தொ­டரில் இடம்­பெற்ற விமான விபத்தில் உயிர் தப்­பிய 16 பேர் 73 நாட்­க­ளுக்குப் பின்னர் காப்­பாற்­றப்­பட்­டனர். இவர்கள் இறந்த சகாக்­களின் மாமிசத்தை உட்­கொண்டு உயிர்­பி­ழைத்­தனர். இது அந்தீஸ் ஆச்­ச­ரியம் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

 

629varalaru-1-%282%29.jpg1979 : ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூலை சோவியத்யூனி­யனின் படைகள் கைப்­பற்­றின.

 

1986 : எங்கும் தரை­யி­றங்­காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமா­னி­க­ளுடன் கலி­போர்­னி­யாவில் தரை­யி­றங்­கி­யது.

 

1990 : 88 சத­வீத ஸ்லோவே­னிய மக்கள், யூகோஸ்­லா­வி­யாவில் இருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

 

2003: ஈராக்கில் இயற்கை வாயு வய­லொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் 234 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2005 : அஸர்­பைஜான் விமானம் புறப்­பட்டு சில நிமி­டங்­களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்­கி­யதில் 23 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2005 :  சூடானுக்கு எதிராக சாட்  போர்ப் பிரகடனம் செய்தது.

 

2007: நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து பிரதமர் தலைமையிலான கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்கு   உடன்பாடு காணப்பட்டது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=629#sthash.RvkY30YU.dpuf
  • தொடங்கியவர்

இந்த ஆண்டின் சிறந்த சுற்றுலாப் புகைப்படங்கள்
-----------------------------------------------------------------------
2015ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச சுற்றுலா புகைப்படக் கலைஞருக்கான விருது மார்செல் வான் ஊஸ்டனுக்குக் கிடைத்திருக்கிறது. 110 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதில், இருவிதமான புகைப்படங்களுக்காக இந்த விருதைப் பெற்றிருக்கிறார் மார்செல்.

அமெரிக்காவின் லூசியானாவில் இருக்கும் அட்சஃபலயா கழிமுகப் பகுதியில் எடுக்கப்பட்ட சைப்ரஸ் மரங்களின் புகைப்படத்திற்காகக் கிடைத்தது.

இரண்டாவது படம் நமீபியாவில் வால்விஸ் வளைகுடாவுக்கு அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு படகிலிருக்கும் பூ நாரைகளின் படம்.

வேறு பல்வேறு பிரிவுகளின் கீழ் சேஸ் கட்மேன், திமோத்தி ஆலன், அலிஸன் ஜோனாஸ் கார்டோஸோ கோண்டிஜோ, அலெஜாண்ட்ரா மெனிகோன்ஸி, காய் ஸிபிங், ஜு ஸிங்யி, ஜோயல் ஸாண்டோஸ், எட்கர்ட் தி போனோ, சூ வோ கானல் ஆகியோரும் சிறந்த புகைப்படங்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர்.

581860_10153163936460163_220287508696680

12391959_10153163936440163_2615009521359

1798614_10153163936455163_11390441061882

12376534_10153163936530163_4758635781926

1511690_10153163936585163_52591682930621

1914575_10153163936615163_37713732720526

8354_10153163936675163_29306848081247016

1618597_10153163936805163_58249560399710

1910457_10153163936785163_60275901306810

10373522_10153163936845163_6933792856847

BBC

  • தொடங்கியவர்

12376438_959342437447784_413271795164470

இயக்குனர் சிகரம் K.பாலசந்தர் மறைந்து ஒரு வருடம்.

கவிதாலயாவின் கலை மகன், தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரங்கள் கமல், ரஜினியின் குருநாதர் KB அவர்களது நினைவுதினம்.

  • தொடங்கியவர்

12391847_10154170185219578_7409744107489

  • தொடங்கியவர்

ஸ்மார்ட் கிளாஸ்!

 

 

ங்க கையில் செல்போன் இருந்தால் போதும். செம ஜாலியான மற்றும் அறிவுக்கு சவால்விடும் ‘ஆப்ஸ்’களை டவுண்லோடு செய்து விளையாடலாம்.   

p54a.jpg

Dr.Panda’s Ice Cream Truck

ஐஸ்க்ரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? எத்தனை ஃப்ளேவர் வந்தாலும் அத்தனையையும் ஒரு வாய் டேஸ்ட் பார்த்துட்டு, இது போதாதே என நினைப்போம். அப்படியானால், ‘உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவர்களில் நீங்களே ஐஸ்க்ரீமை உருவாக்குங்க’ என்கிறது, டாக்டர் பாண்டா ஆப்ஸ்.

டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்க்ரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்க்ரீம்களை நீங்களே உருவாக்கலாம்.

ஐஸ்க்ரீம் மட்டுமல்ல, இன்னும் பலவற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.

Toca Lab

வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது.

தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம த்ரில்லிங்காக இருக்கும். அவற்றை அட்டவணையில் நிரப்பிக் கொண்டே வரலாம். உண்மையான ஆய்வகங்களைப் போல எதுவும் விபத்துக்கள் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

Cloud Maker

வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரஸ்யமான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதை டவுண்லோடு செய்தால், வானமும் மேகங்களும் காட்சியாக வரும். அந்த மேகங்களை உங்கள் இஷ்டப்படி மாற்றி,  பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான  உருவங்களை உருவாக்கலாம். காற்று அடிக்கும் திசை மற்றும் வேகத்தைக்  கட்டுப்படுத்தி, ‘என் வானம்... என் மேகங்கள்’ என மகிழலாம்.

Peekaboo UFO

ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும்  சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ்.

வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டடங்கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங்கள், எளிதாக மனதில் பதியும். 

 

  • தொடங்கியவர்

அழகிய பூக்கள்

  • தொடங்கியவர்
 

கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரென்ட் உரிமையாளருக்கு ரொம்பவே தாராள மனசு. அவர், தெரு நாய்கள் தூங்குவதற்காகவே தன் ரெஸ்டாரென்ட்டை திறந்துவைத்திருப்பார்.


அனாதயாக விடப்பட்ட வளர்ப்பு நாய்கள் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான இடத்துக்காக அலைவதைக் கண்ட அவர், இரவில் நாய்கள் தூங்குவதற்காகவே கடையைத் திறந்து வைத்திருப்பார்.


இரவில் கஸ்டமர்கள் எல்லோரும் சென்றபிறகு ஒவ்வொரு நாயாக மெதுவாக உள்ளே வந்து இருக்கைகள் மீது படுத்து உறங்கிச் செல்லும்.
இந்தச் சலுகை குளிர்காலம் முடியும் வரைதான் என்கிறார் அந்த ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் Eustratios Papa

12376588_658593927576486_121598477200479

  • தொடங்கியவர்

1064617_658532854249260_7959938092603191

  • தொடங்கியவர்
சிற்ப சின்னங்கள்!

 

ட்டாடக்கல்லு கர்நாடக மாநிலத்தின் வடக்கில் பாகல்கோட் மாவட்டத்தில், மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில் நகரம். அன்றைய சாளுக்கிய அரசர்கள் பலரும் இங்குதான் பட்டாபிஷேகம் மற்றும் முடிசூட்டு விழாவை நடத்தியிருக் கிறார்கள். இதையொட்டி 'பட்டாபிஷேகக் கல்’ என்று அழைக்கப்பட்ட இத் தலத்தின் பெயர் பின்னாளில் 'பட்டாடக்கல்லு’ என்றானதாம். 

விரூபாக்ஷர் ஆலயம், சங்கமேஸ்வரர் ஆலயம்,  மல்லிகார்ஜுனர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கட்சிதேஸ்வரர் சம்புலிங்கேஸ்வரர் ஆலயம், கல்கநாதர் ஆலயம், பாபநாதர் ஆலயம் மற்றும் சமணர் ஆலயம் என எட்டு ஆலயங்களுடன் திகழும் இந்த ஊரை, உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக (1987ல்) அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.

பெரும்பாலும், போர்களில் கிடைத்த வெற்றியின் சின்னங்களாகவே இந்த ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று, சாளுக்கியப் பேரரசன் 2ம் விக்கிரமாதித்தனின் மனைவிகள் இருவர் (இருவரும் சகோதரிகள்) போரில் பெற்ற வெற்றியை கெளரவிக்கும் வகையில், அந்த மன்னனால் கட்டப்பட்டது என்கிறது சரித்திரக் குறிப்பு. கோயில்கள் ஒவ்வொன்றும் ஒருபுறம் தமிழக பாணியிலும், ஒருபுறம் ஒடிசா பாணியிலுமான கட்டுமானத்தைக் கொண்டுள்ளன. ஆலயங்களின் கோபுர அமைப்புகள் இதை வெளிப்படுத்துகின்றன.

p116a.jpg

p116b.jpg

உறுதியான தூண்களும், அதில் அமைந்துள்ள சிற்பங்களும் கண்ணையும் கருத்தையும் கொள்ளைகொள்வன. குறிப்பாக, ராமாயணம் மற்றும் மகாபாரத சம்பவங்களை விளக்கும் தூண் சிற்பங்கள் கொள்ளை அழகு!

மற்றொரு தூண் சிற்பத்தில், பெண்ணொருத்தி தன் காதலனுக்குக் கடிதம் எழுதியதைக் குற்றமாகக் கருதி, அவள் தலையை யானையின் காலால் இடறச் செய்யும் காட்சி மிக தத்ரூபமாக அமைந்துள்ளது.

p116c.jpg

p116d.jpg

அழகு நளினங்களுடன், சிற்சில சிற்பங்களில் மூர்க்க பாவனையையும் காண முடிகிறது. அறக் கருணையோடு மறக் கருணையும் சேர்ந்து மிளிர்வது சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்று!

சுவர்களில் தென்படும் கன்னட வரிகளில் இருந்து, போர்க் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதும், இக்கோயிலுக்கு தேவதாசிகளை தானமாக அளித்த குறிப்பும் தெரியவருகிறது.

கோயிலுக்கு முன் மிகப் பெரிய நந்தி சிலை ஒன்று உள்ளது. கறுப்பு கிரானைட் கல்லால் ஆன இந்த நந்தியெம்பெருமான் பல்வேறு படையெடுப்புகள், கொள்ளைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கும் அழகு குறையாமல் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார்.

p116e.jpg

p116f.jpg

சாளுக்கிய சிற்பக் களஞ்சியங்களாகத் திகழும் பாதாமி மற்றும் ஐஹோல் ஆகிய தலங்களுக்கு நடுவில் பட்டாடக்கல்லு அமைந்துள்ளதால், இங்கு வருபவர்கள் மூன்று இடங்களையும் கண்டுகளித்துச் செல்கிறார்கள்.

பாதாமியில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும், ஐஹோலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பட்டாடக்கல்லு. சிற்பக்கலை அழகில் இத்தலம் பள்ளிக்கூடம் என்றால், பாதாமி ஒரு பல்கலைக்கழகம்!

  • தொடங்கியவர்

உறுதி மொழி!

லகம் போற்றும் உன்னதத் தலைவர் விவேகானந்தர் அளித்த உத்வேக வரிகள்; ஒவ்வொன்றும் வாழ்வில்  பின்பற்ற வேண்டிய வெற்றிக்கான படிக்கட்டுகள்!

p27a.jpg

p26a.jpg

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் 24

 

630MGR.jpg1715 : சுவீ­டனின் துருப்­புகள் நோர்­வேயை ஆக்­கி­ர­மித்­தன.

 

1777 : பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள கிறிஸ்மஸ்  தீவு எனவும் அழைக்­கப்­படும் கிரிட்­டி­மாட்டி தீவு பிரித்­தா­னிய கட­லோ­டி­யான ஜேம்ஸ் குக்­கினால் கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டது.

 

1851 : வோஷிங்டன் டிசி நகரில் காங்­கிரஸ் நூலகம் தீப்­பி­டித்­ததில் பெறு­ம­தி­யான நூல்கள் அழிந்­தன.

 

1906 : கன­டாவைச் சேர்ந்த ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முத­லா­வது வானொலி நிகழ்ச்­சியைத் தயா­ரித்து வழங்­கினார்.

 

1914 : முதலாம் உலகப் போரில் கிறிஸ்மஸ் தினத்­துக்­காக போர்­ நி­றுத்தம் நடை­மு­றைக்கு வந்­தது.

 

1924 : அல்­பே­னியா குடி­ய­ர­சா­கி­யது.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் ஜப்­பா­னியப் படை­க­ளிடம் ஹொங்கொங்  வீழ்ந்­தது.

 

1941 : மலே­ஷி­யாவின் சரவாக் மாநில தலை­நகரான கூச்சிங் ஜப்­பா­னி­ய­ரிடம் வீழ்ந்­தது.

 

1951 : இத்­தா­லி­யிடம் இருந்து லிபியா  சுதந்­திரம் பெற்­றது. லிபிய மன்­ன­ராக முதலாம் இத்ரிஸ் முடி­சூ­டினார்.

 

1953 : நியூ­ஸி­லாந்தில் டாங்­கிவாய் என்ற இடத்தில் ரயில் மேம்­பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்­தபோது அதில் சென்று கொண்­டி­ருந்த ரயில் ஆற்றில் வீழ்ந்­ததில் 153 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

630libya--varalaru.jpg1954 : லாவோஸ் சுதந்­திரம் பெற்­றது.

 

1966 : தெற்கு வியட்­நாமில் அமெ­ரிக்க இரா­ணுவ விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 129 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1968 : மூன்று விண்­வெளி வீரர்­களை ஏற்றிச் சென்ற அப்­பல்லோ 8 விண்­கலம் சந்­தி­ரனின் சுற்­று­வட்­டத்தில் நுழைந்­தது.

 

1974 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் டார்வின் நகரில் சூறா­வளி ட்ரேசி தாக்­கி­யதில் 71 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1979: ஐரோப்­பாவின் முத­லா­வது விண்­க­ல­மான ஆரியான் விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது.

 

1987: பிர­பல நடி­கரும் தமி­ழக முத­ல­மைச்­ச­ரு­மான எம்.ஜி. ராமச்­சந்­திரன் (எம்.ஜி.ஆர்.) கால­மானார்.

 

1994: அல்­ஜீ­ரி­யா­வி­லி­ருந்து பாரிஸ் நக­ருக்கு புறப்­பட்ட பிரெஞ்சு விமா­ன­மொன்று தீவி­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்­டது.

 

1997: அல்­ஜீ­ரிய கிரா­ம­மொன்றில் சுமார் 100 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

2008: கொங்கோ மீது உகண்டா கிளர்ச்­சிப்­ப­டை­யினர் பாரிய தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர். இதில் நூற்­றுக்­க­ணக்­கானோர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=630#sthash.QKjPKO6t.dpuf
  • தொடங்கியவர்

12375115_659063480862864_684304920521928

டிசம்பர் 24: பிரபல பாடகர் முகமது ரஃபி பிறந்த நாள் இன்று.

 
  • தொடங்கியவர்

12376179_1096414113732695_98730095686465

  • தொடங்கியவர்

12375024_659065307529348_356241661173738

டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு தினம் இன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.