Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

p58d.jpg

 கடையில் பணிபுரியும் ஒரே ஒரு பெண்ணால் பிசினஸ் பிச்சிக்கிச்சு என்றால் நம்புவீர்களா? தாய்வானில் உள்ள ஒரு மெக்டோனால்ஸ் உணவகத்தின் கேஷியர்தான்  வைவை (Weiwei). எப்போதோ வந்த ஒரு கஸ்டமர் இவருடன் எடுத்த  செல்ஃபியை, அவரின் ப்ளாகில் அப்லோடி 'இந்தப் பொண்ணு பார்க்கிறதுக்கு பொம்மை மாதிரி இருக்குய்யா’ என எழுத, வைவை வைரல் ஆனாள். இவளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவே இளசுகளின் படை இப்போது பறந்துவருகிறதாம். பார்ட் டைம் வேலை செய்யும் காலேஜ் கேர்ள் வைவை, ஓசி பாப்புலாரிட்டி என பொம்மையைப்போலவே அழகாகச் சிரிக்கிறாள். வைவை வைரல்! 

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

05-1393999226-nandiatbrihadisvaratemple.

ஒற்றைக்கல் நந்தி! பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த ஒற்றைக்கல் நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.
 
  • தொடங்கியவர்

575839_963013490414012_52774676790291375

நடிகை கௌஷல்யாவின் பிறந்த தினம் இன்று.

  • தொடங்கியவர்

p106a%281%29.jpg

P106.jpg

  • தொடங்கியவர்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

6jkole.png

  • தொடங்கியவர்

1916012_963026870412674_5369856229488523


ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் நினைவு தினம்.
(தூக்கில் இடப்பட்ட நாள்)

  • தொடங்கியவர்
 
2015 இன் கனவுக்கன்னி யார்?....
 

 2015 முடிவை நெருங்கிவிட்டது. 2015ம் வருடமும் பல நடிகைகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து, சில நடிகைகளுக்கு எதிர்பாராத  திருப்பங்களைக் கொடுத்தது.  பல புது ஹீரோயின்களையும்  தமிழுக்குக் கொண்டு வந்துள்ளது. 

அந்த வகையில், அதிகப் படங்கள் மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர்கள் வட்டம், நடிப்பு, என 2015ம் ஆண்டின் கனவுக் கன்னி யார்? என்ற கேள்வியுடன் சினிமா விகடனில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நயன்தாரா அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

dream.jpg

 ‘மாயா’, ‘மாஸ்’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ என நயன்தாராவுக்கு இந்த வருடம் அமைந்த படங்களும் ஒரு காரணம். முக்கியமாக நானும் ரவுடிதான், மாயா போன்ற படங்கள் 60 சதவீதம் நயன்தாராவை மையப்படுத்தியே வெளியான படங்கள். இதன் காரணமாக சேலத்தில் கடைத்திறப்பு விழாவின் போது ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு நயன்தாராவைக் காண கூட்டம் குவிந்தது. 

 ஒரு நடிகையின் வரவிற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது என்றால் அதுவே முதல் முறை எனலாம்.  கருத்துக்கணிப்பிலும், நயன்தாரா 49.5 சதவீத வாக்குகளுடன் 2015ம் ஆண்டின் கனவுக் கன்னியாக முதலிடத்தில் இருக்கிறார்.

dreamgirl.jpg

மற்ற நடிகைகள் பிடித்துள்ள இடமும் வாக்குகளின் சதவீதமும்.

1. நயன்தாரா 45.5%

2. சமந்தா 11%

3. ஸ்ரீதிவ்யா 8%

4. அனுஷ்கா 7%

5. எமி ஜாக்சன் 5%

6. த்ரிஷா 4%

7. ஹன்சிகா 4%

8.ஸ்ருதி ஹாசன் 4%

9. காஜல் அகர்வால் 3%

10. லட்சுமி மேனன் 3%

11. தமன்னா 2%

  • கருத்துக்கள உறவுகள்

உது பொய்! இல்லை! என்னால் முடியாது! நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்! நாட்டாமை தீர்ப்பை மாற்று! சமந்தா தான் முதலில் வரவேண்டும்! நயன்தாரா வேண்டுமென்றால் ஆண்டி நடிகைகளில் முதலிடத்தில் இருக்கலாம்!

6 minutes ago, வாலி said:

சமந்தா தான் முதலில் வரவேண்டும்!

வந்தாச்சு

1. சமந்தா 11%

2. நயன்தாரா 45.5%

3. ஸ்ரீதிவ்யா 8%

4. அனுஷ்கா 7%

5. எமி ஜாக்சன் 5%

6. த்ரிஷா 4%

7. ஹன்சிகா 4%

8.ஸ்ருதி ஹாசன் 4%

9. காஜல் அகர்வால் 3%

10. லட்சுமி மேனன் 3%

11. தமன்னா 2% 

wsn0va.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

போனவருடம் பல மொழிப் படங்களிலும் ஸ்ருதி  நடிப்பை , திறைமையைக் காட்டின காட்டுக்கு ஐம்பதுக்கு மேல வந்திருக்க வேண்டும் , இதைப் பார்க்கும்போது ரசிகர்கள் தெளிவாத்தான் இருக்கின்றார்கள்...!   :)

55 minutes ago, suvy said:

போனவருடம் பல மொழிப் படங்களிலும் ஸ்ருதி  நடிப்பை , திறைமையைக் காட்டின காட்டுக்கு ஐம்பதுக்கு மேல வந்திருக்க வேண்டும் , இதைப் பார்க்கும்போது ரசிகர்கள் தெளிவாத்தான் இருக்கின்றார்கள்...!   :)

:D::D::D:

  • தொடங்கியவர்
4 hours ago, வாலி said:

உது பொய்! இல்லை! என்னால் முடியாது! நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்! நாட்டாமை தீர்ப்பை மாற்று! சமந்தா தான் முதலில் வரவேண்டும்! நயன்தாரா வேண்டுமென்றால் ஆண்டி நடிகைகளில் முதலிடத்தில் இருக்கலாம்!

 

4 hours ago, ஜீவன் சிவா said:

வந்தாச்சு

1. சமந்தா 11%

2. நயன்தாரா 45.5%

3. ஸ்ரீதிவ்யா 8%

4. அனுஷ்கா 7%

5. எமி ஜாக்சன் 5%

6. த்ரிஷா 4%

7. ஹன்சிகா 4%

8.ஸ்ருதி ஹாசன் 4%

9. காஜல் அகர்வால் 3%

10. லட்சுமி மேனன் 3%

11. தமன்னா 2% 

wsn0va.jpg

 

சரி இரண்டு  பேரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்காளா :D:

  • தொடங்கியவர்
மர்மம் சூழ்ந்ததாக சிப்பிகளிலான ஓர் செயற்கைக் குகை

 

sippi.jpg

 

 




பிரிட்டனில், கென்ட் (Kent) மாநகரில் சிறியதொரு நகரமாக மார்க்கேட் (Margate) என்னுமிடத்தில் முற்றிலும் மர்மம் சூழ்ந்ததாக சிப்பிகளிலான ஓர் செயற்கைக் குகை அமைந்திருக்கிறது.

46 லட்சம் வண்ண வண்ண சிப்பிகளினால் அலங்கரிக்கப்பட்-டு அழகுடன் மிளிரும் இந்த செயற்கைக் குகைக்கு (Grotto) செல்வாதனால் நிலத்தின் அடிக்குச் செல்லும் 70அடி நீளமான வளைந்து செல்லும் பாதையின் வழியாகச் செல்லுதல் வேண்டும்.

அவ்விதம் இறங்கிச் சென்றால் அங்கு ஒரு நீள் சதுர அறை காணப்படும். சிப்பிகளிலான இந்த செயற்கைக் குகை சந்தேகத்துக்கு இடமில்லாமல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒர் இடமாகும்.

 

அங்குள்ள சுவர்கள், தரைகள், கூரைகள் எல்லாமே சிப்பிகளை ஒழுங்கமைத்துப் பதிப்பிக்கப்பட்டவையாகவே உள்ளன. வாசல்கள் மிக அழகான வளைவுகளுடன் காட்சி தருகின்றன. ஓர் அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்லக் கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் குகையுடன் சேர்ந்ததாக ஓர் அரும் பொருள் காட்சியகம், பரிசுப் பொருள் விற்பனைக் கடை, ஒரு கபே ஆகியனவும் உள்ளன.

இதை உருவாக்கிய நோக்கம் தெரியவில்லை. இங்கு பெரும்பாலான மாதிரிகள் நட்சத்திரம் மற்றும் சூரியன் வடிவத்திலேயே காணப்படுகின்றன. இந்தக் குகை கண்டுபிடிக்கப்பட்ட விபரம் அடங்கிய கட்டுரை 1838 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி கென்ரிஷ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் இது பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து விட இருப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Edited by நவீனன்
எழுத்து பிழை திருத்தும்

  • தொடங்கியவர்

அரண்மனை பாடல் ப்ரமோ!

 

  • தொடங்கியவர்

கொல்ஃப் விளையாட்டின் புலி...
வெற்றிகளைத் தொடர்ச்சியாக்கிக் காட்டிய டைகர் வூட்சின் பிறந்தநாள் இன்று.

10489879_963012927080735_231938151994708

  • தொடங்கியவர்

1779768_1101054139935359_512495270220566


Winner is ... த்தூ....

  • தொடங்கியவர்

2015-ல் அதிகம் பகிரப்பட்ட படங்கள்

 
w1_2676038f.jpg
 

w10_2676037a.jpg

 

w11_2676036a.jpg

 

w12_2676035a.jpg

 

w13_2676034a.jpg

 

w2_2676033a.jpg

 

w3_2676032a.jpg

 

w4_2676031a.jpg

 

w5_2676030a.jpg

 

w6_2676029a.jpg

 

w7_2676028a.jpg

 

w8_2676027a.jpg

 

w9_2676026a.jpg

  • தொடங்கியவர்
7 hours ago, suvy said:

போனவருடம் பல மொழிப் படங்களிலும் ஸ்ருதி  நடிப்பை , திறைமையைக் காட்டின காட்டுக்கு ஐம்பதுக்கு மேல வந்திருக்க வேண்டும் , இதைப் பார்க்கும்போது ரசிகர்கள் தெளிவாத்தான் இருக்கின்றார்கள்...!   :)

 

6 hours ago, ஜீவன் சிவா said:

:D::D::D:

ரூம் போட்டுதான் யோசிப்பீர்களா :)

  • தொடங்கியவர்

பாலிவுட் கி ராணி  கங்கணா ரனாவத்தின் சம்பளம் 11 கோடியாம். 'நான் நடித்த கேரக்டர்களை எல்லோராலும் பண்ணிவிட முடியாது. நான் அத்தனை அர்ப்பணிப்புடன்  உழைத்திருக்கிறேன். அதற்கு, இது சரியான சம்பளம். ஹீரோக்களுக்குச் சமமாக சம்பளம் வாங்கும் நிலை  ஹீரோயின்களுக்கு வர வேண்டும். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்  கொண்டிருக்கிறோம்’ எனத் தீர்க்கமாகப் பேசுகிறார் கங்கணா. அசத்து புள்ள! 

p58a.jpg

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 31

 

635varalaru2.jpg1600 : பிரித்­தா­னிய கிழக்­கிந்­திய கம்­பனி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1695 : இங்­கி­லாந்தில் கட்­ட­டங்­களின் ஜன்­னல்­க­ளுக்கு வரி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து பல கட்­டட உரி­மை­யா­ளர்கள் தமது கட்­ட­டங்­களின் ஜன்­னல்­களை செங்கல் கொண்டு மூட ஆரம்­பித்­தனர்.

 

1857 : விக்­டோ­ரியா மகா­ராணி கன­டாவின் தலை­ந­க­ராக ஒட்­டா­வாவைத் தேர்ந்­தெ­டுத்தார்.

 

1862 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரில் மேற்கு வேர்­ஜீ­னி­யாவை கூட்­ட­ணியில் இணைப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தில் ஆபி­ரகாம் லிங்கன் கையெ­ழுத்­திட்­டதால் வேர்­ஜீ­னியா இரண்­டாகப் பிரிந்­தது.

 

1879 : வெள்­ளொ­ளிர்வு விளக்கு முதற்­த­ட­வை­யாக தோமஸ் எடி­சனால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1881 : அந்­தமான் நிக்­கோபார் பகு­தியில் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்தின்  அதிர்­வுகள் இலங்­கையில் உண­ரப்­பட்­டன.

 

1923 : லண்­டனின் பிக் பென் மணிக்­கூண்டின் மணி­யொலி மணிக்­கொரு தடவை பிபி­சியில் ஒலி­ப­ரப்பு செய்­வது ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1944 : இரண்டாம் உலகப் போரின்­போது, ஜேர்­மனி மீது  ஹங்­கே­ரிக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1946 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஹரி ட்ரூமன், இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் பங்கு முடி­வுக்கு வந்­த­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார்.

 

1963 : மத்­திய ஆபி­ரிக்கக் கூட்­ட­மைப்பு ஸாம்­பியா, மலாவி, ரொடீ­சியா என மூன்று நாடு­க­ளாகப் பிள­வுற்­றது.

 

1981 :  கானாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் ஜனா­தி­பதி ஹில்லா லிமான் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

 

1986 : புவேர்ட்டோ ரிக்­கோவில் சான் ஜுவான் நகரின் ஹோட்­ட­லொன்றில்  இடம்­பெற்ற தீ விபத்­தினால் 97 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 140 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1987 : ரொபேர்ட் முகாபே ஸிம்­பாப்­வேயின் ஜனா­தி­ப­தி­யாகத்  தெரி­வானார்.

 

1991 : சோவியத் சோச­லிசக் குடி­ய­ர­சு­களின் ஒன்­றி­யத்தின் அனைத்து நிறு­வ­னங்கள் மற்றும் சோவியத் ஒன்­றியம் அதி­கா­ர­பூர்­வ­மாக கலைக்­கப்­பட்­டன.

 

1999 : ரஷ்­யாவின் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து பொரிஸ் யெல்ட்சின் வில­கினார்.

 

1999 : 1977 ஆம் ஆண்டில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­திற்கு அமைய, பனாமா கால்­வாயின் அதி­கா­ரத்தை பனா­மா­விடம் ஐக்­கிய அமெ­ரிக்கா  ஒப்­ப­டைத்­தது.

 

1999 : 155 பய­ணி­க­ளுடன் இந்­திய விமானம் ஒன்றைக் கடத்­திய ஐந்து கடத்­தல்­கா­ரர்கள் தாம் விடு­விக்கக் கோரிய இருவர் விடு­விக்­கப்­பட்­டதை அடுத்து விமா­னத்தைக் கைவிட்டு வெளி­யே­றினர்.

 

2004 : தாய்­வானின் 509 மீட்டர் உயர மான தாய்ப்பே 101 உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் திறக்­கப்­பட்­டது. 509 மீற்றர் (1670 அடி) உய­ர­மான இக்கட்டடம், 2010 ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான கட்டடமாக விளங்கியது.

 

2014 : சீனாவின் ஷாங்காய் நகரில் புது­வ­ரு­டப்­ பி­றப்­புக்கு முந்­தைய கொண்­டாட்­ட­மொன்றில் லட்­சக்­க­ணக்­கான மக்கள் திரண்­டி­ருந்­த­போது சன நெரி­சலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=635#sthash.uEYqhLLI.dpuf
  • தொடங்கியவர்

http://www.welcomehappynewyear2016.com/wp-content/uploads/2015/10/Good-Bye-2015-Welcome-2016.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

945880_10153757166614757_251457617379916


5th Century Sri Lankan (King's) response to a 21st Century Sri Lankan (President's) Question. <_<

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
2015 டாப் 10 மனிதர்கள்
 
 

 

p12_1.jpg

சென்னையும் கடலூரும் திடீர் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அத்தனை வெள்ளத்திலும் உயிர்த்துடிப்போடு இருந்தது நம் இளைஞர்களின் மனிதம். தம் உயிரையும் பணயம்வைத்து மக்களை மீட்ட எத்தனை நாயகர்களை இங்கே பட்டியலிட... ஆபத்து என்றதும் தங்கள் படகுகளோடு களம் இறங்கிய மீனவ இளைஞர்கள், எந்தப் பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் ஊரைச் சுத்தமாக்கிய துப்புரவுப் பணியாளர்கள், உணவு அளித்து உதவிய ஆயிரமாயிரம் தன்னார்வலர்கள், இன்னமும் நிவாரணம் செய்துகொண்டிருக்கிற ஈரமான இதயங்கள்... என ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நாயகன் அவதரித்தான். கர்ப்பிணிப் பெண்ணைக் கரைமீட்ட யூனுஸ், சாக்கடையாகக் கிடந்த ஊரை சளைக்காமல் சுத்தம்செய்த இஸ்லாமிய அமைப்புகள், இரவு பகல் பாராமல் இளைஞர்களைத் திரட்டி உதவிகள் குவித்த இளைஞர்கள், உலகம் எங்கிலும் இருந்து வாரி வழங்கிய நிதி என, நாம் ஒவ்வொருவருமே ஹீரோதான். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் போய் விஷப்பூச்சி கடித்து இறந்துபோன இம்ரானின் தியாகம், நம் தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்பைச் சொல்லும் உதாரணம். ஊரைச் சுத்தம் செய்வதில் இறந்துபோன பழனிச்சாமியின் மரணம், துப்புரவுத் தொழிலாளர்களின் உழைப்பின் ஒரு துளி. இவர்கள்தான் இந்த ஆண்டின் மகத்தான மனிதர்கள்!


p12_2.jpg

மதுவிலக்கு வேண்டும் என எல்லாரும் குரல்கொடுக்க... தன் உயிரையே கொடுத்தவர் சசிபெருமாள். இவருடைய தியாகம், மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி. `என் பயணத்தின் முடிவு, என் கையில் இல்லை. எதையும் இழக்கத் தயாராக இருக்கும் 10 சத்தியாகிரகத் தியாகிகள் இருந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்’ எனச் சொல்லிவிட்டு குமரிப் போராட்டத்துக்குப் போன சசிபெருமாள், உயிரின்றிதான் வீடு திரும்பினார். இயற்பெயர் பெருமாள். சேலம் மாவட்டம், இடங்குனசாலை அருகே உள்ள மேட்டுக்காடுதான் சொந்த ஊர்.  8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மகாத்மா காந்தியையும் காமராஜரையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர். ஒரு சமயம் காங்கிரஸில் இருந்த பழைய நடிகர் சசிகுமாரை, தன் கிராமத்துக்கு அழைத்துவந்து கூட்டம் போட்டார். அவர் அந்தக் கிராமத்துக்கு வந்து போன ஒரு வாரத்திலேயே விபத்தில் இறந்துவிட, அந்தப் பாதிப்பில் தன் பெயரோடு சசியையும் சேர்த்து ‘சசிபெருமாள்’ ஆனவர். ‘உண்ணாமலைக்கடை’ டாஸ்மாக்கை மூடச் சொல்லி, சசிபெருமாள் போராட்டத்தைத் தொடங்கியபோதெல்லாம் ‘மூடிவிடுவோம்’ எனச் சொல்லி போராட்டத்தை அவ்வப்போது கைவிடவைத்த அரசு அதிகாரிகள், இறுதி வரை கடையை மூடவே இல்லை. இறுதிப் போராட்டமாக செல்போன் டவர் மீது ஏறிய சசிபெருமாளை, பிணமாகத்தான் இறக்கியது போலீஸ். தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஒழிப்பின் தந்தையாக, வருங்கால வரலாறு சசிபெருமாளை நினைவுகூரும்!


p12_3.jpg

கடைக்கோடிக் கிராமத்துச் சிறுவன் ஒருவன், தமிழ் இசைக்கு இறைவன் ஆன கதை இவருடையது. இப்போதும் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இந்தப் பூமியில் சூரியன் எழாது; விழாது. அத்தனை கோடித் தமிழர்களையும், அவர்தம் இதயங்களையும் இசைத்து அசைத்து இணைத்த மானுடன். தன் ஆயிரமாவது படத்துக்கு இசையமைத்து விட்டு, இதுவும் கடந்துபோகும் என்கிற புன்னகையுடன் போகிற புதிர் இவர். இளையராஜா விரல் தொட்டால், ரயில் கூவல் சோகம் சொல்லும்; மழைச் சாரல் மனதை மீட்டும். இளையராஜாவின் பாடல்கள், தமிழர்களுக்கு வெறும் பாடல்கள் அல்ல; வெவ்வேறு தருணங்களின் நினைவுகள். பகலில் பலநூறு பாடல்களை நம் செவிக்குள் திணிப்பதில் சேனல்கள் போட்டிபோட்டாலும், இரவில் இதயத்தில் இறங்குவது ராஜாவின் இசை மட்டும்தான். மிகச் சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு உலகங்களுக்குள் உலவவிடும் மாயாஜாலம் இளையராஜாவின் இசை. ராஜாவின் மெட்டுக்களைத்தான் துடைத்துத் துடைத்துப் போட்டு இப்போதும் ஹிட்டு களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே பல இசையமைப்பாளர்கள். அந்த அளவுக்கு அவரது ஹார்மோனியத்துக்குள் தான் ஒளிந்திருக்கின்றன, நமது 40 ஆண்டு கால கண்ணீரும் புன்னகையும்!


p12_4.jpg

கனிமவள மோசடிகளைக் கறாராக விசாரித்து, பண முதலைகளைப் பந்தாடிய அதிரடி அதிகாரி. கிரானைட் முறைகேட்டால் அரசாங்கத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேர்ந்த பயங்கரத்தை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிப்பதற்குள் சகாயம் பட்டபாடு அத்தனையும் ஆக்‌ஷன் சேஸிங் கதை! கனிமவள மோசடிகளை சகாயம் குழு விசாரிக்காமல் செய்ய, உச்ச நீதிமன்றம் வரை மல்லுக்கட்டியது தமிழ்நாடு அரசு. `மதுரையில் மட்டும் விசாரிங்க’ என சகாயத்துக்கு நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்தாலும், விசாரணைக்கான அனுமதி கிடைக்காமல் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டார். விசாரணை தொடங்கியதும் வெடிகுண்டு மிரட்டல்கள், ஒட்டுக்கேட்புக் கருவிகளால் குடைச்சல், மாநகராட்சி நிர்வாகமே விசாரணை வளாகத்துக்கு சீல் வைத்தது, கொலைமிரட்டல்... என அனைத்தையும் தாண்டி அசராமல் கடமையாற்றியது சகாயம் தலைமையிலான குழு.  கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் போன சகாயத்துக்கு காவல் துறை அதிகாரிகள்கூட ஒத்துழைக்க மறுத்தனர். ‘தோண்டியே தீருவேன்’ என சுடுகாட்டிலேயே படுத்து உறங்கிய சகாயத்தின் அஞ்சாநெஞ்சம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அடுத்தடுத்த நாட்களில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட, உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. `அப்துல் கலாம் விட்டுச்சென்ற இடத்தை இட்டுநிரப்ப, இவரால் முடியும்’ என எதிர்பார்க்கிற இளைஞர்களின் புதிய நம்பிக்கை சகாயம் ஐ.ஏ.எஸ்.!


p12_5.jpg

ஏழை வீட்டு லட்சுமிதான். அன்பர்கள் பலரின் ஆதரவில் கல்வி பயின்றவர். இன்று அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, ஜவ்வாது மலைவாழ் மக்களுடைய குழந்தைகளுக்குக் கல்விக் கண் திறக்கும் சரஸ்வதி. ஜவ்வாது மலையின் அரசுவெளி என்கிற பகுதியில் இருக்கிறது அரசின் உண்டு உறைவிடப் பள்ளி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காகவே நடத்தப்படுவது. 2006-ம் ஆண்டில் மகாலட்சுமி இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தபோது வருகைப்பதிவேட்டில் இருந்த எண்ணிக்கை, வெறும் 10 மாணவர்கள் மட்டும்தான். அத்துவானக் காட்டில் ஒற்றை ஆளாகத் திரிந்து, சுற்றியுள்ள கிராமங்களுக்கு நடையாக நடந்து, பள்ளி செல்லாத பிள்ளைகளைத் தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தார். மனப்பாடப் பயிற்சி தருகிற மடமாக இருந்த பள்ளியை, குழந்தைகள் வளர்கிற வாழ்க்கைத் தளமாக மாற்றியவர். தன் சொந்தச் செலவில் உபகரணங்கள் வாங்கி மாதிரிப் பள்ளியை உருவாக்கினார். பள்ளியே கண்டிராத அந்த மலைக்கிராம மனிதர்களில் மூன்று பேர் இன்று கல்லூரி வரை முன்னேறியிருக்கிறார்கள். ‘என் கல்விக்காக பலர் உதவியதைப்போல, மலைவாழ் மக்களின் கல்விக்காக உதவ எப்போதும் நான் இருப்பேன்’ என்று உறுதியாகச் சொல்லும் மகாலட்சுமி, அந்த மலைவாழ் மக்களின் வனதேவதை!


p12_6.jpg

போபாலில் பிறந்து, டெல்லியில் வளர்ந்த வடநாட்டுத் தமிழன். இந்திய கரன்ஸியில் கையெழுத்திடும் ரிசர்வ் வங்கி கவர்னர். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மட்டும்தான் இவருடைய இலக்கு. அரசாங்கத்துக்கு அடிபணியாமல், பல மாற்றங்களை அறிமுகப்படுத்திவருபவர். `வங்கிகளின் கடன் விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ரகுராம் ராஜன்தான்’ என அருண் ஜெட்லியால் கைகாட்டப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு ரகுராம் ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைத்த பிறகும் அரசு வங்கிகள் குறைக்கவில்லை. 2013-ம் ஆண்டில் ரகுராம் ராஜன் பொறுப்பேற்கும்போது சில்லறை வர்த்தகத்தில் பணவீக்கம் 9.8 சதவிகிதமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளில் அதை 3.78 சதவிகிதம் வரை குறைத்திருப்பது மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பும் ரகுராம் ராஜனின் வரவுக்குப் பிறகு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸ் முறையைப் பின்பற்றிவருகிறார். ‘வலிமையான அரசு என்பதால் மட்டுமே அது எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாகிவிடாது’ என்கிற ரகுராம் ராஜனின் கொள்கைதான் நம் அரசு அதிகாரிகளுக்கு அவசியமான அரிச்சுவடி!


p12_7.jpg

மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருக்கும் நந்தகுமார், ராமநாதபுரத்தை ‘தண்ணியுள்ள காடாக’ மாற்ற மெனக்கெடுபவர். விவசாயம் தழைக்க 5,000-த்துக்கும் அதிகமான பண்ணைக் குட்டைகள், குடிநீர் வளம் பெருக 600-க்கும் அதிகமான உறைகிணறுகள்  அமைத்துத் தந்துள்ளார். ஏராளமான விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பி, அதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளார். அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் ஏழை மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தருகிறார். தன் சொந்த பொறுப்பில் அவர்களைத் தங்கவைத்து, உணவும் தனிப் பயிற்சிகளும் வழங்குகிறார். இவர்களில் இருந்து இரண்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்; பலர் பொறியியல் படிக்கிறார்கள். வறட்சி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்றப் போராடும் நந்தகுமார், வளர்ச்சியின் நாயகன்!


p12_8.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் சுழலாயுதம்; ஆண்டு முழுக்க ஒற்றை ஆளாக எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத்தந்த சென்னையின் செல்லப்பிள்ளை; ட்வென்ட்டி ட்வென்ட்டியோ, டெஸ்ட் போட்டியோ பாணிகள் மாறலாம்; ஆனால், பாய்ச்சலில் குறைவின்றி பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிய ஆஃப் ஸ்பின் கில்லி ரவிச்சந்திரன் அஷ்்வின். இதுவரை ஆடிய 32 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை தொடர் நாயகன் விருதை வென்று, சச்சின் டெண்டுல்கரின் (200 டெஸ்ட்களில் ஐந்து முறை) சாதனையை சமன் செய்திருக்கிறார். அந்நிய மண்ணில் தோல்வியே கண்டிராமல், ஒன்பது ஆண்டுகள் கம்பீரமாக உலகம் சுற்றியது தென்ஆப்பிரிக்க அணி. ஒன்மேன் ஆர்மியாக நான்கே டெஸ்ட் ஆட்டங்களில், 31 விக்கெட்டுகளை வீழ்த்தி யாருக்கும் அடங்காத தென்ஆப்பிரிக்காவை மண்டியிட வைத்தது அஷ்வினின் சுழல். `டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50, 100, 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர்’ என்கிற சாதனையும் அஷ்வின் வசமே. `இப்போது அஷ்வினுக்கு வயது 29. இதே உத்வேகத்தோடு தொடர்ந்து விளையாடினால், 700 விக்கெட்டுகளைச் சாய்ப்பார்’ என ஆருடம் சொல்கிறார் முத்தையா முரளிதரன். நல்ல கனவு நனவாகட்டும்!


p12_9.jpg

மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில், தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என உறுதி குறையாமல் உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. ஒரே ஆண்டில் ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ். நாயகியாக 10 வருடங்கள் கடந்துவிட்டார். ஆனால், இன்னமும் சரமாரி சக்சஸ் கிராஃப். சர்ச்சைகள், தொடரும் வம்புகள் என ஆயிரம் வந்தபோதும் அர்ப்பணிப்புள்ள உழைப்பால் நம்பர் ஒன்னாக நிலைத்திருக்கிறார். மாஸ் ஹீரோக்களை மையம்கொண்ட தமிழ் சினிமாவை ஹீரோயின் நோக்கி ஈர்த்ததில் நயனுக்கு முக்கியப் பங்கு உண்டு. மாஸ் ஓப்பனிங் என்ற தகுதியைப் பெற்ற ஒரே நாயகி. நயன்தாராவின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் மாஸ் ஹீரோக்கள், மெகா இயக்குநர்களின் பட்டியலே இதற்குச் சான்று. எப்போதும் உழைக்கக் காத்திருக்கிற உற்சாக மனநிலைகொண்ட நயன்தாரா... நம்ம ஆளு!


p12_10.jpg

உலகமயமாக்கலின் இருண்டப் பக்கங்களை தமிழ் சினிமா சமரசங்கள் இன்றி, அச்சுஅசலாக ஆவணப்படுத்திய விளாம்பட்டியின் வித்தியாச இளைஞர். உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுத்தந்த இளம் இயக்குநர். சென்னை சேரிகளின் அசலான மனிதர்களை அடையாளம்காட்டிய மணிகண்டன், `காக்கா முட்டை’யைக் கண்டடைந்த பாதை அத்தனை கரடுமுரடானது. குடிப்பழக்கத்துக்குப் பலியான தந்தைக்குப் பிறகு குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதாக இருந்தது. வயிற்றுப் பிழைப்புக்குப் பார்த்த வேலைகள் சிந்தனைகளைச் சிதைக்க, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார். பெயின்டர், போட்டோகிராஃபர் எனப் பல வேலைகள் பார்த்தவரை, மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்தது சினிமா ஆர்வம். உதவி ஒளிப்பதிவாளராகத் தொடங்கி இயக்குநரானார். ‘காக்கா முட்டை’யில் சர்வதேச விருதுகள் பெற்றது பெருமிதம்; சாமானியனின் இதயம் தொட்டது புது விதம்!

  • தொடங்கியவர்

2015-ன் பேசும் படம்: மனிதநேயக் கடல்

கிரேக்க தீவுக்கு வருகை தந்த அகதிகள் பயன்படுத்தி விட்டுச் சென்ற உயிர்காப்பு அங்கிகளுக்கு இடையே நடந்து செல்லும் தன்னார்வலர்கள். | படம்: ஏஎப்பி.
 

கிரேக்க தீவுக்கு வருகை தந்த அகதிகள் பயன்படுத்தி விட்டுச் சென்ற உயிர்காப்பு அங்கிகளுக்கு இடையே நடந்து செல்லும் தன்னார்வலர்கள்.

ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் இந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட புகைப்படமாகும். கடந்த ஓர் ஆண்டில் துருக்கி, சிரியா போன்ற நாடுகளிலிருந்து வெளியேறி வாழ்வியலுக்கான சூழலைத் தேட கிரேக்க தீவுகளை அடைந்தோர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

ஏகன் கடலைத் தாண்டி லெஸ்போஸின் கிரேக்க தீவுக்கு வந்தடைந்த இவர்கள் கழட்டி வைத்த உயிர்காப்பு அங்கிகள் இவை.

  • தொடங்கியவர்

நடிப்பை விடப்போகும் சமந்தாவின் எதிர்காலத் திட்டம் என்ன?

 

விஜய்க்கு ஜோடியாக தெறி படத்திலும், சூர்யாவிற்கு ஜோடியாக 24 படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. அதுமட்டுமின்றி தெலுங்கிலும் பிஸி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமுகப் பணிகளில் ஈடுபட்டுவரும் சமந்தா, அறக்கட்டளை தொடங்கி குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்கும் உதவி வருகிறார். அதுமட்டுமின்றி சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் முழு நேர சமூக சேவையில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

http://spicy.southdreamz.com/cache/samantha-collections/sexy-actress-samantha-latest-hot-stills-119_650.jpg

அதுபற்றி சமந்தா கூறும்போது,

‘‘நான் நல்ல நடிகையாக பெயர் வாங்கி விட்டேன். சினிமாவில் நடிப்பதோடு சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு ஓய்வே கிடைப்பது இல்லை. இரண்டு வேலைகளையும் எப்படி உங்களால் செய்ய முடிகிறது? கஷ்டமாக இல்லையா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். வேலை இல்லாமல் இருந்தால் தான் கஷ்டமாக இருக்கும்.

இந்த உலகத்தில் என்னை விட அழகான பெண்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். என்னை விட திறமைசாலிகளும் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கடவுள் எனக்குக் கதாநாயகி என்ற அந்தஸ்தை தந்து இருக்கிறார். எனவே சினிமா தொழிலை உயர்வாக நேசிக்கிறேன்.

சினிமா மீது எனக்குள்ள காதலுக்கு எல்லையே கிடையாது. எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. படப்பிடிப்பு அரங்கை விட்டு வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை. படப்பிடிப்பில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சினிமாவே எனது வாழ்க்கையாகவும் மாறி விட்டது” என்று சமந்தா கூறினார்.

யாழ் கள வாலியின் திட்டம் என்ன

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.