Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 5 வருடங்களுக்குள் சமந்தா திரையுலகில் இருந்து விலகினால் நான் யாழ்களத்தில் இருந்து முற்றாக விலகிவிடுவேன். அத்தோடு தன்னைவிட அழகான பெண்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்று சொல்லுவதை சமந்தா கைவிடவேண்டும். சமந்தாவை விட உலகில் எவருமே அழகியில்லை என்பதை யாழ்களத்தினூடாக புரியவைப்பேன்!<_<

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
1 hour ago, நவீனன் said:

சினிமா மீது எனக்குள்ள காதலுக்கு எல்லையே கிடையாது. எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. படப்பிடிப்பு அரங்கை விட்டு வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை. படப்பிடிப்பில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சினிமாவே எனது வாழ்க்கையாகவும் மாறி விட்டது” என்று சமந்தா கூறினார்.

யாழ் கள வாலியின் திட்டம் என்ன

வாலி மீது எனக்குள்ள காதலுக்கு எல்லையே கிடையாது. எப்போதும் வாலியே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாலியை விட்டு வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை. வாலி இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. வாலியே எனது வாழ்க்கையாகவும் மாறி விட்டது” என்று சமந்தா கூறினார். :D::D:

  • தொடங்கியவர்
பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே V 2.0 - 2015
 

 

twitter.com/teakkadai: மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

twitter.com/jeevalancer: குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்!

twitter.com/bommaiya: தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!

twitter.com/DrEzhilan: ரஜினி படம்னா, ரிலீஸுக்குப் பிறகு பஞ்சாயத்து. கமல் படம்னா, ரிலீஸுக்கு முன்னாடியே பஞ்சாயத்து. #அம்புடுதேன்!

twitter.com/MissLoochu: “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!

twitter.com/writerMiRa: அன்பழகண்ணே... வக்கீல் சரியில்லைனு கேஸ் போட்டீங்களே, ஸ்கெட்ச் வக்கீலுக்கு இல்லை.. ஜட்ஜ் ஐயாவுக்கு!

twitter.com/Railganesan: OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!

p150a.jpg

twitter.com/prakashalto: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!

twitter.com/chitrangadhai: ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

twitter.com/BoopatyMurugesh: ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். # ஆணாதிக்கச் சமூகம்!

twitter.com/tamilreporter: பிழையான தீர்ப்பை, கடைசி வரை ‘தீர்ப்பில் பிழை’ என்றே சொல்லிவிட்டார்கள்!

twitter.com/maanniiiiii: அஜித் ரசிகனுக்கு விஜய் ரசிகையும், விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துணைவியா வரணும். :) சாகட்டும் பக்கிக. கொலையாக் கொல்லுதுங்க. :( முடியலடா!

twitter.com/maanniiiiii: எனக்கு உங்க புருஷன்னா மட்டும்தாங்க பயம். மத்தபடி ஐ லவ் யூங்க! How to propose?

twitter.com/ikrishs: ட்ரெய்ன்ல சைடு லோயர்னா, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!

twitter.com/rajesh_off: பத்தாம் வகுப்புல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பொண்ணுகிட்ட ‘அடுத்து என்ன பண்றதா ப்ளான்?’னு கேக்கிறானுங்க ஜெயா டி.வி-யில! # அடுத்து ப்ளஸ் ஒன்தான். இதுகூடத் தெரியாம...

twitter.com/stalingsk50: அடிக்கடி பாராட்டு விழா நடந்தால், அது தி.மு.க. ஆட்சி. அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தால், அது அ.தி.மு.க ஆட்சி. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!

twitter.com/Iniyavan_Voice: கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!

twitter.com/krishs: சாம்பார் சாதத்தை குட்டி டப்பால வாங்கிட்டு வர்றாங்க. பேசாம, அந்த ரெண்டு வாய்ச் சோறை கடைக்காரங்களையே ஊட்டிவிடச் சொல்லி, சாப்பிட்டு வந்திரலாம்!

twitter.com/natpuanrajesh: ஒருவேளை நாமெல்லாம் செவ்வாய்க் கிரகத்துல பொறந்து, செத்த அப்புறம் இந்த நரகத்துக்கு வந்துட்டோமோ! # டவுட்டு!

p150b.jpg

twitter.com/kalasal: இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியில் இருந்து அழிப்பதற்கு, ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப் படுகிறது. :(:(

twitter.com/Anandraaj04: ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்கவேண்டும் என, முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் பல காத்திருப்பதாகச் சொன்னார்கள் கடைசியில பார்த்தா... அது இட்லிக் கடைகளாம்!

twitter.com/writercsk: சமூக வலைதளங்களில் யாரும் கற்க வருவது இல்லை; எல்லோரும் கற்பிக்கவே வருகிறார்கள்!

twitter.com/jeranjit: நாம் ஒரு அட்டென்ஷன் சீக்கிங் தலைமுறை!

twitter.com/jv.balaji: நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கோம். ஆனா, நூடுல்ஸே நொந்தது இதுதான் முதல் தடவை!

twitter.com/SriDevDev: நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?

twitter.com/skpkaruna: அடடே! யோகாவை இந்து மதத்துல சேர்த்துட்டாங்களா? பதிலுக்கு பிரியாணியை இஸ்லாம் மதத்துல சேர்த்திருங்க. ஹும்... ஒருத்தனும் விளங்கப்போறது இல்லை!

twitter.com/meenammakayal: சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது!

twitter.com/pinkpretty1: நாளடைவில் சண்டையிட்ட காரணம் மறந்துவிடுகிறது; சண்டை மட்டும் நிலைத்து நிற்கிறது!

twitter.com/vinuthaas: நடக்கவே தெரியாதபோது இடுப்பில் இருந்து இறங்கி ஓட யத்தனிப்பதும், நடக்க ஆரம்பித்த பிறகு தூக்கச் சொல்லி அடம்பிடிப்பதும்தான் குழந்தை!

twitter.com/MrElani: அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைத் தேடினா... ஊர்ல ஒரு பய இல்லை. தெருவுக்கு நாலு இன்ஜினீயர் மட்டும் இருக்கானுங்க!

twitter.com/LegDada: ‘மாப்ள அர்விந்த் சுவாமி மாதிரி இருப்பாரா?’னு கேட்க ஆரம்பிச்சதில் இருந்தே அவன் வில்லன்தான்டா எங்களுக்கு!

twitter.com/goingfake: ‘சத்தியமா நம்மளை உள்ள விடமாட்டாங்க’னு சின்ன காக்காமுட்டை சொல்றது ஞாபகம் வரும்... மேட்ரிமோனி சைட்ல சில பெண்கள் புரொஃபைல் பார்க்கும்போது!

facebook.com/nagarajachochthan: ஆபீஸ் லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டே கிளையன்ட் கால் அட்டெண்ட் பண்ற சுகம் இருக்கே... அந்தக் கால ரைட்டர்கள் ஆபீஸ்ல உட்கார்ந்து இலக்கியம் படைச்சதுக்கு ஈடானது!

twitter.com/vandavaalam: வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராகவும், நம்ம மனசுக்கு நாமே வக்கீலாகவும் இருப்பதால்தான்!

twitter.com/kaviintamizh: முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!

twitter.com/chevazhagan1: முந்தானைப்படி பார்த்தால் தமிழச்சிகள் இடதுசாரிகள்; மார்வாடிகள் வலதுசாரிகள்!

twitter.com/bottatto: Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!

p150c.jpg

twitter.com/yaaro_: ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!

twitter.com/ponraam: நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!

twitter.com/kumarfacutty: யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!

twitter.com/indirajithguru: சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை ஒன்றுக்கு, ‘டிரஸ்ட்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்!

twitter.com/itzNandhu: மூன்றுவித உயரங்கள், ஆறுவித ஆங்கிள்கள்... என எல்லாப் பக்கங்களிலும் தலையில் தட்டுவதே வாழ்க்கை!

twitter.com/Jana_Vel:  பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் ‘எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!

facebook.com/tmaniji:  முதல்ல நீதியை வாங்கினாங்க; இப்ப சத்யம்; இன்னும் நேர்மை பாக்கி இருக்கே!

twitter.com/Senthilbds: ஆத்திகன், கடவுளை ஊத்தி ஊத்திக் கழுவுறான்; நாத்திகன், கழுவிக் கழுவி ஊத்துறான்!

twitter.com/ashokiie:  ‘மூடு டாஸ்மாக்கை மூடு...’ பாடலுக்காக கோவனைக் கைதுசெய்த தமிழ்நாடு அரசு, ‘ஓப்பன் த டாஸ்மாக் பாடலுக்காக அனிருத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்!

twitter.com/vanithaj: வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது. டெக்னாலஜி மனஅழுத்தம் தருகிறது!

twitter.com/powshya:  எவ்வளவு பிற்போக்கா சிந்திச்சாலும், கடவுள் நம்பிக்கை வர மாட்டேங்குது. எவ்வளவு பகுத்தறிவா சிந்திச்சாலும் பேய் பயம் போக மாட்டேங்குது!

twitter.com/Tubelighd:   பிச்சைக்காரன் தன்னை நம்பி வெளியிலே நின்றுவிடுகிறான். மற்றவன் எல்லாம் கடவுளை நம்பி உள்ளே செல்கிறான்!

twitter.com/mpgiri: ரஹ்மானே லாங் டிரைவ் போனா, ராஜா பாட்டுதான் கேட்பார்னு நினைக்கிறேன்!

twitter.com/im_bahavathar19: எனக்கு எல்லா குழந்தைகளையும் பிடிக்கும். என் மொபைலை கேம் விளையாடக் கேட்காத வரை ;)

twitter.com/gowtwits: ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!

twitter.com/Siva_D_offl: அஜித் - விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள். தெரிந்துவிட்டால், ஆயுத சப்ளையை ஆரம்பித்துவிடுவார்கள்!

twitter.com/mekalapugazh:  ‘பெரியார், தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?’ என்பவர்களுக்கு, வட இந்தியா தினமும் ஒரு பதில் தந்துகொண்டிருக்கிறது!

twitter.com/deepishtalks : ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!

twitter.com/mrithulaM: அறிமுகமான மறுகணமே பெயர் சொல்லி அழைப்பவர்கள், மிகச் சிறிய பதற்றத்தையோ பரவசத்தையோ தருகிறார்கள்!

twitter.com/ini_avan : ‘உயிர் பலியைத் தடுக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை’   - அப்போ டாஸ்மாக்ல சத்து   டானிக் விக்கிறாங்களா யுவர் ஹானர்?

twitter.com/suriikumar: இந்தியாவில் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதன் அர்த்தம், ‘நகருப்பா... வழியில நிக்காதே’ என்பதே!

twitter.com/bladeVijiL: சோப்பு விளம்பரத்தில வர்ற டாக்டர்கள் எல்லாம் போலி டாக்டர்னு எல்லோருக்கும் தெரியுமே... அப்புறம் எதைவெச்சு அவனுங்க சொல்றதை நம்பச்சொல்றானுக?

twitter.com/laksh_kgm : கடவுளைப் படைத்தவனே இன்னும் சுத்தியலும் கையுமாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறான்!

twitter.com/minimeens: அவன் - ஹலோ! அவள் - சொல்லுங்ணா! # உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை!

twitter.com/ashoker_UHKH : மீசை வெச்சா சந்திரன்; மீசை எடுத்தா இந்திரன்; மீசையே முளைக்கலேனா எந்திரன்!

twitter.com/jill_online:  ஒருவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அவனை இந்தப் பெண்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அம்மம்மா அய்யய்யோ!

 twitter.com/Lorrykaran:  அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!

twitter.com/ManiMaindhan:  கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. `ஏன் இப்படி இருக்கிறார்?’ என்பதில்தான் என் எல்லா சந்தேகமும்!

twitter.com/kasaayam: பசங்க குடிச்சுட்டு `மச்சி ஸ்மெல் வருதா?’னு ஊதிக் காட்டுற மாதிரிதான், பொண்ணுங்க மேக்கப்ல `கொஞ்சம் ஓவரா இருக்கா?’ன்றதும்!

 twitter.com/tamilreporter: நிலம் கையகப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பில்லைன்னும் சொல்லியாச்சு # விவசாயிகளின் மீது அக்கறைகொண்ட அரசாங்கமேதான்!

twitter.com/ammuthalib: குஸ்கா என்பது ‘மக்கள் பிரியாணி’!

twitter.com/i_Soruba:  `வீட்ல இருக்கும்போதுகூட வேலை செய்யணுமா?’ `வீட்ல இருக்கும் போதாவது வேலை செய்’ - அம்மா நோஸ் ஆல் டீட்டெய்ல்ஸ் :-(

twitter.com/thoatta : காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்! 

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா நாட்டில் பிறந்த புது வருடம் 2016 . கண்கவரும் வரவேற்பு ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருமாதிரி அவுஸில் சுகமாய் பிறந்திட்டுது ,இப்ப இங்கு வந்து கொண்டிருக்கு , அவசரப்பட்டு மலேசியன் விமானத்தில் ஏறாமல் இருக்க வேண்டும்....! :)

  • தொடங்கியவர்

http://images.express.co.uk/img/dynamic/68/590x/secondary/75193.jpg

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மத்தியூ ஹொகார்டின் பிறந்தநாள்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

p99_1.jpg

பேசாத பேச்சு!

``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா!

- கி.ரவிக்குமார்


ஞானம்

p99_2.jpg


கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த  மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி  தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்!


- கீர்த்தி


நடிப்பு

p99_3.jpg

`ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்!

- எஸ்.ரமணி


சின்ன மீன்...

பெரிய மீன்!

p99_4.jpg

வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட  கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்...

 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி !

- ஸ்ரீ ரங்கம்  ஏ.எஸ்.முரளி


சுதந்திரம்?!

p99_5.jpg


சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்!


- சொக்கம்பட்டி தேவதாசன்


அனுபவம்... அறிவு!

p99_6.jpg

“நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?”  “அப்பதாம்ப்பா,
அவங்க நல்லா படிப்பாங்க!”

- கி.ரவிக்குமார்


ஒன்று எங்கள்  சாதியே...

p99_9.jpg


சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்!

- கா.ரமேஷ்


ஆடுகளம்

p99_8.jpg

10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்...
வீடியோ கேம்ஸில்!

- பெ.பாண்டியன்


சந்தேகம்

p99_7.jpg

``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” -

சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்...

“உங்க ஆபீஸுக்கு!”

- கி.ரவிக்குமார்


பாடம்!

p99_10.jpg

நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது...
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது!

- நவநீ குரு

  • தொடங்கியவர்

சொல்வனம்

p148.jpg

 

 ஒரு மிட்டாயும்...  ஒரு சாக்லேட்டும்...

‘இதுல மயக்கமருந்து ஏதும் கலக்கல'
என்று சொன்ன பிறகும்கூட
டெய்ரிமில்க் சாக்லேட்டை வாங்க மறுத்தாள்
என்னருகே பேருந்தில் பயணித்த
கல்லூரிப் பெண்.
தனியாய்ச் சாப்பிட சங்கடப்பட்டு
சாக்லேட்டை பைக்குள் வைத்துவிட்டு
ஜன்னலுக்கு வெளியே வெறித்தபடி சிறிதுநேரம் மௌனமானேன்.
அரைமணி நேர வற்புறுத்தலுக்குப் பின்
நான் கொடுத்த சாக்லேட்டை
வாங்கிப் புன்னகைத்தவள்
தன் பையிலிருந்து எடுத்த
எக்லேர்ஸ் மிட்டாயொன்றை
என்னிடம் கொடுத்தாள் புன்னகையோடு.
டெய்ரிமில்க் சுவைத்தபடி நானுமதை
வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.
இரண்டரை மணிநேரப்
பயண உரையாடல் முடிந்து
பேருந்து நிலையத்தில் விடைபெற்று
ஒருவர் பார்வையில் ஒருவர் மறைந்த பிறகு, அவள் கொடுத்த எக்லேர்ஸ் மிட்டாயை எடுத்து வீசிவிட்டேன் குப்பைத்தொட்டியருகே.
அதற்கும் அருகிலேயே கிடந்தது
ஒரு டெய்ரிமில்க்.

  • தொடங்கியவர்

p36d.jpg

dot1.jpg 1986-ம் ஆண்டு, பேன் அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளோடு நடுவானில் கடத்தப்பட்டது. அந்த விமானத்தின் பணிப்பெண் நீர்ஜா பானோட் கடத்தல்காரர்களோடு தைரியமாகப் போராடி அத்தனை பயணிகளையும் காப்பாற்றினாலும், இறுதியில் கொல்லப்பட்டார். அந்த உண்மைச் சம்பவத்தை `நீர்ஜா’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக்கியிருக்கிறார்கள். நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். `நீர்ஜா, சாதாரணப் பெண் அல்ல; நிறையப் பேருக்குப் பாடமாக இருக்கிறாள். நீர்ஜாவாக நடித்தது என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று’ என நெகிழ்கிறார் சோனம். சல்யூட் நீர்ஜா!

  • தொடங்கியவர்

சிம்பு எங்கே... எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்... ?

 

ருஷம் முடியப் போகுது. இன்னும் கொஞ்ச நேரத்துல கமல் ஹைபிட்ச்ல 'ஹாப்பி நிய்ய்ய்யூ இயர்ர்ர்ர்'-னு கத்திட்டே ஓடி வர்றது மட்டும்தான் பாக்கி. அதுவரைக்கும் சந்தோஷம்தான். ஆனா, இந்த வருசம் நடந்த சில விஷயங்களுக்கு விடை தெரியாம மனசாட்சி மழை சீசன் கொசு மாதிரி நசநசங்குது!

* மோடி மொத்தம் எத்தனை நிமிஷம்ய்யா இந்தியால இருந்தாரு? இந்த கேள்விக்கு கூகுளே கன்ஃபியூஸ் ஆகுதேய்யா... சொல்லுங்களேன் யாராவது!

simbu%20600%20%20a.jpg

* ராகுல்ங்கிற அந்த பச்சைக் குழந்தையை இந்த வருசத்துல ரெண்டு மாசம் எங்கய்யா ஒளிச்சு வச்சுருந்தீங்க? பாவம் அந்த பச்சை மண்ணுக்கு பேச்சு கூட சரியா வராதேய்யா. அவr ஒளிச்சு விளையாட எப்படிய்யா மனசு வந்தது?

* நியூட்டன் மரத்துக்கு கீழ தேவுடு காத்து, மண்டைல ஆப்பிள் கொட்டு எல்லாம் வாங்கி கண்டுபிடிச்ச லா ஆப் கிராவிட்டிய எப்புடி விஷாலால சுமோ வச்சு அசால்ட்டா முறியடிக்க முடிஞ்சது? இதை பத்தி ஏன் எந்த சயின்டிஸ்ட்டும் ஆராய்ச்சி பண்ணலை?

* போன வருஷம் வரை அவரில்லாம ஒரு கட்டுரை இல்ல. ஸ்டேட்டஸ் இல்ல. இப்போ ஊருக்குள்ள சுத்துற பெரிய பெரிய மீம் கிரியேட்டர்ஸ் எல்லாம் அவரை அடிச்சு பெரியாளு ஆனவங்கதான். அப்பேர்ப்பட்ட எங்க தானைத்தலைவன் மன்மோகன் சிங் எங்கய்யா இருக்காரு இப்போ?

* வாய்ப்பாடு ஒழுங்கா சொல்ல வராத வாய் கூட ஒரு கோர்ட் கணக்குல கோளாறு கண்டுபிடிச்சதே? அந்தக் கணக்கு ரிசல்ட் என்னாச்சுய்யா? சரியா தப்பா...?

kumarasamy-amithap-vadivelu600.jpg

* வேதாளம் மாதிரி தலைகீழா தொங்கிக் கூட பாத்துட்டேன். எந்த ஏங்கிள்ல பாத்தாய்யா அமிதாப்,  சிவாஜி மாதிரி தெரியுறாரு? கனவுன்னாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?

* இஸ்கூல்ல எஸ்.டி.டி ஒழுங்கா படிக்காதவன்கூட இந்த கேள்வியை கேட்டுகிட்டு திரிஞ்சான். ’கட்டப்பா ஏன்யா பாகுபலியை குத்துனாப்ல?’ சம்பவம் நடந்தது நைட்டு நேரம். ஒரு வேளை... அடப்பாவிகளா டாஸ்மாக்கை மூடுங்கன்னு தலைப்பாடா அடிச்சுகிட்டோமே. கேட்டீங்களா?

* வாட்ஸ்அப்ல குபீர் கிளப்புன ஹரஹரமகாதேவகி சாமியார் எங்கேய்யா போனாப்ல?

* மலையாளத்துல ஹிட் அடிக்கிற படத்தை எல்லாம் ரீமேக் பண்றோம்னு சேட்டு பீடாவை குதப்புற மாதிரி குதப்புறீங்களே? ஏன்ய்யா? அதுவும் பிரேமம் ரீமேக் கேஸ்டிங் பாத்தாலே அடிவயிறு கவ்வுதே... ஐயோ!

* கத்தி படம் வந்தப்போ லைகாக்கு அன்லைக்னு கத்துனீங்களே? நானும் ரவுடிதான், எந்திரன்- 2னு வரிசையா வர்றப்போ அ.தி.மு.க அமைச்சர் மோடுக்கு போயிட்டீங்களே? உங்க தமிழுணர்வு எல்லாம் வாடகை சைக்கிள்ல போயிடுச்சா?

* அதெப்படி ஸ்டாலின் கூட்டமா இருக்குற இடத்துக்கு போறப்போ எல்லாம் அவர் கை வழுக்கி யார் கன்னத்துலயாவது லேண்ட் ஆவுது?

stalin%20kicd01.jpg

* புலி படம்,  பாகுபலிக்கே பிம்பிலிக்கா பிலாப்பி காட்டும்னு கிளப்பி விட்ட புண்ணியவான் யாரு? யாரு? யாரு? இப்போ அவரு எங்கே என்ன பண்ணிட்டு இருக்காரு?

* நீங்க நிவாரண வேலை பாக்காததை கூட மன்னிச்சுடலாம்ய்யா. ஆனா மிலிட்டரி வண்டிய மறிச்சு ஸ்டிக்கர் ஒட்டுற ஐடியாவை சொன்ன மகராசன் யாருய்யா? அந்த அகண்ட மூளைக்காரனை இந்த தமிழகம் பார்த்தே ஆகணும்!

* சல்மான் கார் ஓட்டலை. ஆனா டிரைவர் சீட்ல இருந்தது அவர்தான். அதுக்காக டிரைவர் சீட்ல இருக்குறவர் எல்லாம் டிரைவர் ஆயிடுவாங்களா? ரொம்ப குழப்புதுல. யாராவது இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கய்யா.

* 'அம்மாவின் ஆணைக்கிணங்க மழை' சயின்ஸ் கூட புரிஞ்சுடும் போல. இந்த 'ஆலுமா... டோலுமா...' லிரிக்ஸ் புரியவே இல்லையேய்யா. என்ன அர்த்தம் அதுக்கு?

* நட்ராஜை ஏன் கட்சியைவிட்டு நீக்குனாங்க. ஒரே நாள்ல ஏன் திருப்பி சேத்தாங்க? மிக முக்கியமா அவரு ஏன் எதுக்குமே ரியாக்ட் பண்ணாம மத்தியான நேரம் வெண்பொங்கல் சாப்பிட்ட மாதிரியே இருக்காரு?

* விஜயகாந்த் பா.ஜ.க.வோட கூட்டணில இருக்காரா இல்லையா? ஒருபக்கம் அவர் எங்களோட இருக்கார்னு பா.ஜ.க சொல்லுது. இன்னொரு பக்கம் தி.மு.க, ம.தி.மு.க எல்லாம் வலை விரிக்குது. கேப்டன் என்ன கோயில் பிரசாதமாய்யா ஆளுக்கு கொஞ்சம் அள்ளி வாய்ல போட்டுக்க?

simbu600.jpg

* இதுதான் இந்த வருஷத்தோட ரொம்ப முக்கியமான கேள்வி. கொஞ்ச நாள் முன்னாடி வரை சென்னைடா, தமிழன்டானு ஒண்ணு மண்ணா இருந்த பசங்களை எல்லாம் ஒரே ஒரு பாட்டை லீக் பண்ணி மண்டை உடைய மல்லுகட்ட வைச்சு சிம்பு ராசா... நீ எங்கேய்யா இருக்க?

இது போல கேள்விகள் உங்களுக்கும் தோணுச்சா... ஸேம் பீலிங்! ஸ்டிக்கர் ஒட்டு... கொண்டாடு!

  • தொடங்கியவர்

1238726_1047579151967541_290587068871025

  • தொடங்கியவர்

http://kesandung.xyz/wp-content/uploads/2015/12/happy-new-year-wallpaper.jpg

அனைத்து உறவுகளுக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

05-1393999118-inscriptions.jpg

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
 
சோழர் கால கல்வெட்டு தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்.
  • தொடங்கியவர்

சீனாவில் டீ- பார்க் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத்தின் மீது பாலத்தை அமைத்திருக்கிறார்கள். கயிறுகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் மீது 'தில்' உள்ளவர்கள் மட்டுமே நடந்து செல்லமுடியும். அப்படி நடந்து செல்பவர்கள் அழகான தேயிலைத் தோட்டத்தைக் கண்டு ரசிக்கலாம்.
உங்களுக்கு 'தில்' உண்டா?!

1947590_661199547315924_2860178689511146

1927664_661199540649258_4667635702487069

1915142_661199543982591_6506730710395613

1936155_661199587315920_1670279472956694

1555582_661199597315919_3081148896040619

 

  • தொடங்கியவர்

8893_10154197777444578_88880894071275355

  • தொடங்கியவர்

2016-ல் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 9 பழக்கங்கள்!

 

புதிய ஆண்டு... புதிய நம்பிக்கை... புதிய இலக்குகள்... என புதிதாகத் தொடங்க இருக்கிறோம். 'நான் நியூ இயரிலிருந்து டயட் கன்ட்ரோல் ஃபாலோ செய்யப்போகிறேன்', 'நான் சிகரெட்டை நிறுத்திடுவேன்', 'நான் ஃபோன் பேசறதைக் குறைச்சிடுவேன்', 'அடுத்த வருஷத்துக்குள்ள எப்படியாவது என்னோட பேங்க் பாலன்ஸை அதிகமாக்கிடனும்'... இப்படி, எத்தனை எத்தனை புதிய திட்டங்கள்... புதிய இலக்குகள்.

2016-01.jpg

உங்கள் புத்தாண்டு இலக்குகள் எதுவாகவும் இருக்கட்டும் அதனோடு இந்த சின்னச் சின்ன சக்சஸ் மந்த்ராக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்... எதிர்வரும் இந்த 2016 உங்கள் வசமாகும்...
 
ஸ்டே பாசிடிவ்

என்ன நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க இருக்கிறதோ எல்லாமும் சரிதான் என்ற நேர்மறை எண்ணங்களை விதைத்திடுங்கள். நினைத்தது நடந்தது சரி என்றும், நடக்காததை ரொம்பச் சரி என்றும் நினைத்துக்கொள்ளலாம். இதுவே, நம் பாதி மனஉளைச்சலைக் குறைத்துவிடும். கலர் கலர் பேப்பரில் ரிப்பன் கட்டித் தராவிட்டாலும், நமது வாழ்க்கை ஒர் அழகான பரிசுதான்.

2016-02.jpg

சன்ரைஸ் மார்னிங்

நம்மில் எத்தனை பேர் சூரிய உதயத்தைப் பார்க்கிறோம் என்று நமக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்வோம். விடை நமக்குள்ளாகவே இருக்கட்டும். இனி வாரம் ஒருமுறை 'சன்ரைஸ்' பார்க்கலாம் என்ற முடிவை எடுங்கள். இதனுடன், பௌர்னமி நிலவின் அழகையும் ரசித்திடுவோம். மாதம் ஒருமுறை நேச்சுர் வாக். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிடித்த இடங்களைச் சுற்றிப் பாருங்கள். இப்படி, உங்களின் பயணம் முடிவில்லாமல் தொடங்கட்டும்.

நமக்குள் மாற்றம்!

மாற்றங்களைப் பார்க்க அனைவருக்கும் ஆசைதான். அது நம்மிலிருந்து தொடங்குவது இன்னும் சிறப்பானது. விரைவில், நம் மாற்றம் நாம் விரும்பும் மாற்றமாகும். நம் வாழ்வியல் பழக்கங்களிலும், உணவுப் பழக்கங்களிலும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவோம். காபி அடிக்‌ஷனாக இருந்தாலும் சரி, லேட் நைட் துங்குவதாக இருந்தாலும் சரி, முதலில் தீயவற்றைக் கைவிடுவதும், புதிய முடிவை எடுப்பதும் நாமாக இருப்பின், அதுவே மாற்றத்திற்கான முதல் மற்றும் அடிப்படை வெற்றி.

3E-க்களோடு வாழலாம்!

Energy, ஊக்கம், ஆற்றல் என என்றென்றும் பவர் பேக்டு மனிதராக மாறிவிடுங்கள். Enthusiasm, உற்சாகமான மனிதர்களைச் சந்திப்போம். உற்சாகத்தைப் பகிர்ந்தளிப்போம். Empathy, மாற்றார் உணர்வு அறிதல். இதுவே நம்மைச் சுற்றி ஒரு அன்பு வட்டத்தை அமைத்துக்கொடுக்கும்.

குட்பை 2 நெகடிவ்

உங்களின் எனர்ஜியைக் கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம். எதிலும், ஒரு நன்மையைத் தேடிக் கண்டுபிடித்து, உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.

2016-03.jpg

தாங்ஸ், சாரி எனும் மந்திர வார்த்தைகள்

நன்றி, மன்னிப்பு இந்த இரண்டு வார்த்தைகளையும் தாரளமாகப் பயன்படுத்துங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து விடுங்கள். 'சின்ன உதவிதானே' என்றோ 'சின்ன தப்புத்தானே' என்றோ அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பெருந்தன்மையாக இருப்பது, நிறைய விஷயங்களை சாதிக்கும்.

கோ நேச்சர்

பிளாஸ்டிக் பிரஷ்ஷையோ, பிளாஸ்டிக் சீப்பையோ மாற்றுவது கடினம்தான். ஆனால்,  நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில், லன்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் பிளேட்டை நிச்சயம் மாற்ற முடியும். இப்படி, சின்ன சின்ன மாற்றங்கள் செய்து இயற்கையோடு கொஞ்சம் இணைவோம்.

2016-04.jpg

நேரத்தைப் பரிசளியுங்கள்

பிடித்தவர், உறவினர், நண்பர்கள் என உங்களின் விருப்பப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உங்களின் நேரமே அவர்களுக்குப் பரிசாக அமையட்டும். பொருட்களைப் பரிசளிப்பதைவிட, உங்களின் நேரத்தைப் பரிசளிப்பது அவர்களுடன் உங்களின் உறவைப் பலப்படுத்தும்.

2016-05.jpg

ஹேப்பி பேங்க்

பணத்தைச் சேமிக்க எத்தனையோ திட்டங்கள். ஆனால், உங்களின் மகிழ்ச்சியைச் சேமிக்க ஒரு வங்கியைத் தொடங்குங்கள். அதன் பெயர் ஹேப்பி பேங்க். அலுவலகத்தில் நீங்கள் இன்கிரிமென்ட் வாங்கினாலும் சந்தோஷம்தான். அதேபோல பிடித்த ஆடையை அணிந்து, அந்த ஆடையில் உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்ப்பதும் சந்தோஷம்தான். சாக்லெட் வாங்கப் போய் சாக்லேட் கேக் கிடைத்தால், குழந்தை எப்படி குஷியாகுமோ அப்படி உங்கள் மனதை மெருகேற்றிக்கொள்ளுங்கள். குட்டிகுட்டி சந்தோஷங்களைக்கூட பேப்பரில் எழுதி, ஒரு பாக்ஸில் சேமித்து வையுங்கள். ஹேப்பி பேங்க் கணக்கின் முதல் கோட்டீஸ்வரர் நீங்கள்தான்..

உற்சாகமாக, 2016 துவங்குவோம்... வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

2015 தெறிக்கவிட்ட மீம்ஸ்!

p138a.jpg

p138b.jpg

p138c.jpg

p138d.jpg

  • தொடங்கியவர்

லண்டன் மியூசியத்தின் வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கான விருது அறிவிப்பு

 

வ்வொரு வருடமும் லண்டன் இயற்கை வரலாற்று மியூசியம், சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கு  விருது வழங்கி கவுரவப்படுத்துவது வழக்கம். இணையத்தில் வாக்களித்து  மக்களே சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞருக்கான விருது கனடாவை சேர்ந்த டான் கடோஸ்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

photo%202.jpg

கனடாவின் வபூஸ்க் தேசிய பூங்காவில் மைனஸ் 30 டிகிரி குளிரில் சிவப்பு நரி ஒன்று ஆர்டிக் நரியை வேட்டையாடுவது போன்ற இந்த படத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கேனான் ஈஓஎஸ் 1 டி கேமராவில் 400 எம்.எம். லென்சை பயன்படுத்தி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

mam%20.jpg

இதே வரிசையில் நமீபியாவில் எடுக்கப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள் படம் 2வது இடத்தை பெற்றுள்ளது. இதனை ஸ்பெயின் புகைப்பட கலைஞர் மரினா கானோ எடுத்துள்ளார்.

photo%201.jpg

சிறந்த இளம் புகைப்படக்காரருக்கான விருது செக்குடியரசுவை சேர்ந்த ஆன்ட்ரெஜ் பிலானெக்கிற்கு கிடைத்துள்ளது. நார்வேயில் இவர் எடுத்த பறவைகள் புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் நிகான் 800 கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

bird.jpg

பறவைகள் வரிசையில், இஸ்ரேல் புகைப்பட கலைஞர் அமீர் பென் டோவ் எடுத்த செந்நிற கால்களுடைய ஃபால்கான்ஸ் பறவைகள் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் கேனான் ஈ.ஓ.எஸ். 1டி எக்ஸ் கேமராவில் 500  எம்.எம்.லென்ஸ் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

vul.jpg

பறவைகள் பிரிவில் இங்கிலாந்து புகைப்பட கலைஞர் சார்லஸ் ஹாமில்டன் ஜேம்ஸ் எடுத்த ஆப்ரிக்க கழுகுகள் இறை உண்பது போன்ற புகைப்படம் 2வது இடத்தை பிடித்தது. இந்த படம் பானாசானிக் லூமிக்ஸ் ரக கேமரா பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

phots.jpg

நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன வரிசையில் நெதர்லாந்தை சேர்ந்த எட்வின் ஜிஸ்பெர்ஸ் என்ற புகைப்பட கலைஞருக்கு  விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது புகைப்படங்கள் பி.பி.சி. இதழ் மற்றும் நேஷனல் ஜியோகிராபி புத்தகங்களில் அடிக்கடி இடம் பெறுபவை.

butter.jpg

முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் வரிசையில், இத்தாலி புகைப்பட கலைஞர் யூகோ மெலோனி எடுத்த இந்த வண்ணத்துப்பூச்சி படம் பெறுகிறது.

lus%20.jpg

தாவரங்கள் வரிசையில் ஆஸ்திரிய புகைப்பட கலைஞர் எடுத்த ஜார்ஜ் பாப் எடுத்த, ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த சைப்ரஸ் செடி புகைப்படம் பெறுகிறது. அமெரிக்காவில் லுசியானா மாகாணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

thimi%20.jpg

கடல் வாழ் உயிரினங்கள் வரிசையில், ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் மிக்கேல் ஏவால் எடுக்கப்பட்ட, திமிங்கலத்தின் வாயிற்குள் குட்டி மீன்கள் செல்வது  போன்ற இந்த புகைப்படத்துக்கு கிடைத்துள்ளது.

malai%20.jpg

அழகிய மலைகள் வரிசையில், ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று குழம்பு வெளியேறிய நிலையில் சாம்பல் படலத்துடன் காணப்படுவது  போன்ற இந்த புகைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இதனை ஸ்வீடன் புகைப்பட கலைஞர் ஹேன்ஸ் ஸ்ட்ரேன்ட் எடுத்துள்ளார்.

green%20.jpg

வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையில், ஸ்பெயின் புகைப்படக் கலைஞர் ஃபேர் சோலரால் எடுக்கப்பட்ட ,பாகியா டி ஸ்காடிஸ் வன உயரின பூங்கா படத்துக்கு கிடைத்துள்ளது.

monkey.jpg

இந்தியாவை சேர்ந்த தாமஸ்விஜயன் எடுத்த லங்கூர் குரங்குகள் குடும்பம் படமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பெரிய குரங்குகளின் வாலில் குட்டி குரங்கு ஒன்று தொங்கி கொண்டு ஊஞ்சலாடுவதை போன்ற அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் விருதுக்கு தேர்வாகவில்லை.

  • தொடங்கியவர்

எப்படி இருக்கும் 2016?

 
2k16_2679401f.jpg
 

டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கடிகாரம் ஓசை எழுப்பும்போது, புதிய வருடம் மட்டும் பிறப்பதில்லை. கூடவே, புதிய நம்பிக்கைகளும், அந்த ஆண்டுக்கான புதிய எதிர்பார்ப்புகளும் பிறக்கின்றன. கடந்து சென்ற ஆண்டின் வலிகள், கண்ணீர், நிராசைகள், ஏக்கங்கள், கசப்புகள் எல்லாவற்றையும் 'ஸ்பாம்' ஆக்கிவிட்டு, புதிய ஆண்டை கனவுகளோடும், முன் தயாரிப்புகளோடும் எதிர்கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது நமக்கான வெற்றி!

தேர்தல்... தேடல்!

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் ‘டாலர்' தேசத்தின் தலைவிதியை மாற்றுமா என்று உலகமே எதிர்நோக்க, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் யார், எந்தக் கட்சி, எவ்வளவு தரும் என்று மக்கள் மனங்களில் ஊகங்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலோ, தமிழக சட்டமன்றத் தேர்தலோ... புதிய தலைமைக்குச் சவால்கள் நிறையவே இருக்கின்றன. ‘இவர் இல்லையென்றால் அவர்', ‘இந்தக் கட்சி இல்லையென்றால் அந்தக் கட்சி' என தேர்தலை ஒரு சம்பிரதாயமாக நோக்காமல், ஒரு தேடலாக மேற்கொள்ளும்பட்சத்தில் கிடைக்கும் ஒரு நல்லரசு தலைமை! அமெரிக்காவில் இது சாத்தியம். ‘ஆல்கேட்ஸ்' பலர் நிறைந்திருக்கும் தமிழகத்தில்..?

முடிவிலா போர்!

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசியல் கொதிப்பு மிகுந்த இடங்களில் போர்கள் தொடரும் என்பது கணிக்கவே தேவையில்லாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் ஐ.எஸ். அமைப்பு வளர்ந்து வர, இன்னொரு பக்கம் உலகை ‘நாட்டாமை' செய்வதற்கு இது ரஷ்யாவின் முறை! சிரியா, உக்ரைன் ஆகிய பிரச்சினைகளின் காரணமாக தற்போது ரஷ்யாவின் கையே ஓங்கியிருக்கிறது. பொருளாதார நசிவு, மக்களின் அதிருப்தி ஆகியவற்றுடனே இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது ரஷ்யா. ஆனாலும், அதையெல்லாம் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்' என்று அமெரிக்காவையே பயமுறுத்தி வருகிறது.

நடுங்கும் பொருளாதாரம்!

பொருளா தாரத்தைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு உலகம் முழுவதற்குமே கொஞ்சம் மந்தமான ஆண்டாகத்தான் இருக்கும். 'உலகளவிலான பொருளாதார வளர்ச்சி என்பது இந்த ஆண்டு 3.6 சதவீதமாக மட்டுமே இருக்கும். இது கடந்த ஆண்டின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது (3.1 சதவீதம்) மந்தமான முன்னேற்றம்தான்' என்கிறார் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட். ஆசிய அளவில் சீனாவின் பொருளாதாரமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைவாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 'அந்நிய நேரடி முதலீடு அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளது. எனவே 2016ம் ஆண்டில் வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியப் பொருளாதாரம் முன்னனியில் இருக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், 'எல் நினோ' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, நாட்டில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதை எப்படி நமது அரசுகள் எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் சாமான்யனின் கேள்வி.

தேர்தல், போர், பொருளாதாரம்... இந்த மூன்றும்தான் இந்த ஆண்டை வழிநடத்தும் விஷயங்களாக இருக்கப் போகின்றன. இவற்றில் எதிர்பார்த்தவை நிகழலாம். எதிர்பாராதவையும் நிகழலாம். ஆனால், நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதில்தானே இருக்கிறது வருடங்களின் அழகும் வரலாற்றின் வசீகரமும்!

2k_2679187a.jpg

2k1_2679188a.jpg

 

2k11_2679189a.jpg

2k111_2679190a.jpg

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 01
 

250%2815%29.jpgகி.மு. 45:  ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.

1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.

1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.

1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.

1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.

1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.

1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.

1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.

1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.

1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.

1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.

2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.

2008: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.

2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.

- See more at: http://www.tamilmirror.lk/162833/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-#sthash.RshrObem.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எல்லோரும் கொண்டாடுவோம்!

 
 
china_2676085f.jpg
 

உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. ஒரே மாதிரிக் கொண்டாடப்படுவதும் இல்லை. உலகின் பல்வேறு பகுதி மக்கள் புத்தாண்டுகளை உற்சாகம் பொங்க எப்படி வித்தியாசமாக வரவேற்கிறார்கள் என்று பார்ப்போமா?

உயிரினப் புத்தாண்டு

சீனப் புத்தாண்டு ஒவ்வொரு முறையும் ஜனவரி 21-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 21-ம் தேதி வரையிலான ஒரு மாத இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் வரும். சீனர்களுடைய நாட்காட்டி நிலவை அடிப்படையாகக் கொண்டது. முதல் மாதத்தின் முழு நிலவு வரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஓர் உயிரினத்தின் பெயரால் அறியப்படுகிறது.

சீனப் பாரம்பரியத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் புத்தாண்டு, வசந்த விழாவும்கூட. அப்போது 15 நாட்களுக்குக் கொண்டாட்டம்தான். வலிமையின் சின்னமாகச் சீனர்கள் கருதும் டிராகன் பொம்மைகளைத் தொடர்ந்து அலங்கார விளக்குகளுடன் மக்கள் பேரணியாகச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கும் புதிய சீன ஆண்டு, குரங்குகளின் ஆண்டு.

கொம்பூதும் புத்தாண்டு

blow_2676086a.jpg

யூதர்களின் புத்தாண்டு ‘ராஷ் ஹஷானா’ எனப்படுகிறது. ஹீப்ரு நாட்காட்டியின் ஏழாவது மாதத்தின் முதல் இரண்டு நாட்களே புத்தாண்டு. பொதுவாகச் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலையுதிர் காலத்திலேயே இது வரும். இந்த நேரத்தில் முந்தைய ஆண்டில் செய்த தவறுகளைத் திரும்ப நினைத்துப் பார்த்து, புதிய ஆண்டில் அதைத் திருத்திக்கொள்ள யூதர்கள் திட்டமிடுவார்கள். புத்தாண்டை இனிப்பாகத் தொடங்குவதன் அடையாளமாக ஆப்பிளைத் தேனில் முக்கிச் சாப்பிடுவது வழக்கம். ‘ஷோபர்’ எனப்படும் கொம்புகளால் செய்யப்பட்ட இசைக்கருவி, புத்தாண்டின் தொடக்கமாக ஊதப்படும்.

நகைகளின் புத்தாண்டு

jwel_2676088a.jpg

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா நாட்டின் புத்தாண்டு என்குடாடாஷ் எனப்படுகிறது. அதற்கு ‘நகைகளின் பரிசு’ என்று அர்த்தம். பெருமழையின் முடிவில் செப்டம்பர் 11-ம் தேதி இந்தப் புத்தாண்டு வரும். இதை ஆடல், பாடல் என வசந்த விழாவாக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். 2000 ஆண்டுகளாக ரோமப் பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டுவரும் தொன்மையான புத்தாண்டு இது.

நீருற்றும் புத்தாண்டு

water_2676087a.jpg

‘சாங்க்ரன்’ எனப்படும் தாய்லாந்து புத்தாண்டு, ஏப்ரல் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத் தாய்லாந்து மக்கள் வேடிக்கையாக ஒருவர் மீது மற்றொருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொள்வது வழக்கம். கோப்பைகள், குவளைகள், தண்ணீர்த் துப்பாக்கிகள், குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொள்வார்கள். புதிய ஆண்டு நல்ல மழையைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஆறுகளில் மீன்களை விடுவதும் உண்டு. சக மனிதர்களின் மீதான பிடிப்பின் வெளிப்பாடாக நல்லெண்ணக் கயிறு களைக் கைகளில் கட்டி விடுவதும் வழக்கமாக உள்ளது.

  • தொடங்கியவர்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
ராஜராஜன் சிலை
கோயிலுக்குள் காணப்படும் மாமன்னன் ராஜராஜனின் சிலை.

05-1393999336-rarajanstatue.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1240113_1690440744532202_485512871084654

10689509_1690440757865534_25528244793870

10398322_1690440777865532_73264094330752

67627_1690440791198864_89496778768610036

480548_1690440824532194_2360388840588696

946798_943369962407442_20423550108719235

68252_943369905740781_895741398365078356

வடமராச்சியில் இரவில் வானத்தை அலங்கரிக்கும் மின்ஒளி பட்டங்கள்

  • தொடங்கியவர்

ரீவைண்ட் 2015

 

two_2679177f.jpg
 

சென்ற ஆண்டு பொதுஜன ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் ‘வைரலான' படங்கள் இவை. ஜனவரியில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ‘சார்லி ஹெப்தோ' தாக்குதல் முதல் டிசம்பரில் ஏற்பட்ட சென்னை வெள்ளம் வரை ஒளிப்படங்கள் வழியே ஒரு ‘ஃப்ளாஷ்பேக்'...

mark_2679163a.jpg

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தம்பதி தங்களின் குழந்தையுடன்...

yoga_2679159a.jpg

முதன்முறையாக நடந்த சர்வதேச யோகா தினத்தின் போது...

nasa_2679164a.jpg

செவ்வாயில் நீர் இருப்ப‌தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா' வெளியிட்ட படம்...

nepal_2679165a.jpg

நேபாள நிலநடுக்கத்தின்போது..

charlie_hepto_2679160a.jpg

‘சார்லி ஹெப்தோ' பத்திரிகை மீது நடத்தப்பட்ட‌ தாக்குதலை எதிர்த்து மக்கள் அணி திரண்டபோது...

paris_2679166a.jpg

பாரிஸ் நகரத்தின் மீது ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியபோது...

kill_2679172a.jpg

ஜிம்பாவே நாட்டில் வாழ்ந்து வந்த செசில் என்ற சிங்கம் வால்டர் பால்மர் எனும் மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொன்றதை எதிர்த்து அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது...

fifa_2679161a.jpg

சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையான 'ஃபிஃபா'வில் நடைபெற்ற ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது அதன் தலைவர் செப் ப்ளாட்டர் மீது பிரிட்டிஷ் நடிகர் லீ நெல்சன் போலி டாலர் நோட்டுகளை வீசி எறிந்தபோது..

rain_green_2679167a.jpg

மியான்மர் நாட்டிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்... | மரங்கொத்திப் பறவை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு வீசல் ஒன்று பறக்கும் இந்த‌ ஒளிப்படத்தை மார்டின் லு மே என்பவர் எடுத்தார். சென்ற வருடத்தின் ஆகச் சிறந்த பறவைப் படம் இது!

trans_asia_2679171a.jpg

தைவான் நாட்டில் ‘ட்ரான்ஸ் ஆசியா' விமானம் விபத்துக்குள்ளானபோது...

greece_2679162a.jpg

கிரீஸ் நாடு கடனில் தத்தளித்தபோது, தனது ஓய்வூதியத்தைப் பெற முடியாமல் கதறி அழுத முதியவர்

rain_2679168a.jpg

சென்னை வெள்ளத்தின்போது

syria_2679169a.jpg

சிரியா நாட்டுப் போரால் அங்கிருந்து தப்பித்துத் தனது குழந்தைகளுடன் வேறு நாட்டுக்குத் தஞ்சம் தேடி வரும் ஒரு தந்தை...

syria1_2679170a.jpg

சிரியா போரிலிருந்து தப்பித்து தனது குழந்தைகளுடன் வேறு நாட்டுக்கு அகதியாக ஓடி வந்துகொண்டிருந்தவரை, தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தன் காலால் இடறி விழச் செய்தபோது...

  • தொடங்கியவர்

சொல்வனம்

நீயும்... நானும்!

லட்சுமி வீட்டுக்கும் பக்கத்து வீடுதான் கீர்த்தி வீடும்.

லட்சுமியும் கீர்த்தியும் விளையாடுவது சேர்ந்துதான்.p40b.jpg

லட்சுமி நாய்க்குப் பயப்படுவதைப்போல

கீர்த்திக்கும் நாயென்றால் பயம்.

லட்சுமிக்கும் கீர்த்திக்கும் ஜெம்ஸ் மிட்டாய் உயிர்.

லட்சுமி வைத்துள்ள

மஞ்சள் கலர் பென்சில் பெட்டிபோலவே

கீர்த்தியும் வாங்கிக்கொண்டாள்.

லட்சுமியும் மூன்றாம் வகுப்புதான்

கீர்த்தியும் மூன்றாம் வகுப்புதான்.

லட்சுமி படிப்பது பஞ்சாயத்துப் பள்ளியில்

கீர்த்தி படிப்பது ஆங்கிலப் பள்ளியில்!

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.