Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தாகத்தில் மயங்கிய கீரிக்கு, தண்ணீர் தந்த காவல் அதிகாரி..! நெகிழ்ச்சி வீடியோ

 

கீரி

காடுகளின் வறட்சி புழு, பூச்சிகள், விலங்குகள், மரம், மண் என்று எதையுமே விட்டு வைக்கவில்லை. பூமியின் வெப்ப நிலை உயர்வு சராசரி அளவை விட 0.5 சதவீதம் உயர்த்திருப்பதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். 0.5  சதவிகித வெப்ப அளவு என்பது நமக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் புழு பூச்சி போன்ற சிறு உயிர்களுக்கு? ஈரம் தேடி பயணிக்கிற  உயிரினங்கள் பல சவால்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. அதில் முதல் சவாலே மனிதன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் உண்மை. 

காடுகளில் தண்ணீரில்லாமல் குளம் குட்டை எனத் தேடி அலைகிற உயிரினங்கள் கடைசியில் குடியிருப்புப் பகுதிகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் வருகின்றன. அப்படிப் புதிதாக சாலைகளுக்கு வருகிற உயிரினங்கள் வாகனங்களைக் கண்டு மிரண்டு போகின்றன. வாகனங்களின் இன்ஜின் சத்தம், ஹாரன் சத்தம் எனப் புதிதாக வருகிற சத்தங்கள் உயிரினங்களை மிரட்டி விடுகின்றன. சத்தங்களில் மிரண்டு ஓடுகிற உயிரினங்கள் அவ்வழியாக வருகிற வாகனங்களில் மோதி படுகாயம் அடைகின்றன. சில உயிரினங்கள் உயிரிழப்பதும் தொடர்கிறது. வாகனத்தில் அடிப்படுகிற விலங்குகளை வாகன ஓட்டிகள்  அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அப்படித்தான் சாலைக்கு நடுவே கீரி ஒன்று சிக்கியது.

https://www.facebook.com/groups/nilgirihistory/permalink/1116400108464246/?pnref=story

வீடியோவில் இருப்பவர் பெயர் ஆனந்த். இவர் குன்னூர் காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அவரிடம் கேட்டபோது "நாங்க மூணு பேர்  கோத்தகிரியிலிருந்து வண்டிச்சோலை வழியா குன்னூர் வந்துட்டு இருந்தோம், ரோட்ல கீரி ஒண்ணு அடிபட்டு கெடந்துச்சு, அதோட காலில்தான் அடிபட்டுருந்துச்சு, எல்லாரும் கடந்து போனாங்க,  எங்களுக்கு மனசு கேக்கல, அதான் தண்ணி குடுத்து கால நீவி விட்டேன்,  அதுவா ஊர்ந்து மெதுவா காட்டுக்குள்ள போய்டுச்சு. தண்ணீ குடிச்சதும் கொஞ்சம் தெம்பு வந்துச்சு. இந்நேரம் பழைய நிலைமைக்கு வந்திருக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்"  

"விலங்குகள் நடமாடும் பகுதி மெதுவாகச் செல்லவும்" "வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்த வேண்டாம்" என வனத்துறை எவ்வளவோ அறிவுறுத்தியும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகொள்வதாகவே இல்லை. மலைப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டக் கூடாது என்கிற விதியிருந்தும் யாரும் அதைக் கடைபிடிப்பதுமில்லை. சமவெளிகளில் வாகனம் ஓட்டிப் பழகிய ஓட்டுனர்கள், மலைப்பகுதிகளிலும் அப்படியே வாகனத்தை இயக்குகிறார்கள். மலை சாலைகளுக்கென்று இருக்கிற கட்டுப்பாடுகளையும் யாரும் கடைபிடிப்பது இல்லை. அதன் காரணமாகவே அநேக விபத்துகள் நடக்கின்றன. மேலும் வனப்பகுதிக்குள் பல்வேறு சத்தங்களை எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்துவதும் விலங்குகள் விபத்திற்குள்ளாக முக்கியக் காரணமாகிறது.  

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருகிற பெரும்பாலான பயணிகள் மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்தி உணவருந்துகிறார்கள், மீதியான உணவுகளைச் சாலையில் கொட்டி விடுகின்றனர். உணவு தேடி வருகிற உயிரினங்கள் அவற்றை உட்கொள்ள தொடங்குகின்றன. மனித உணவுகளுக்குப் பழகுகிற உயிரினங்கள் உணவை எதிர்பார்த்து சாலையையொட்டிய பகுதிகளிலேயே தங்க ஆரம்பிக்கின்றன. இதுவும் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். 

சின்ன சின்ன வன உயிரினங்களின் இறப்புதானே என எளிதில் கடந்து விடலாம். ஆனால் இறப்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதுதானே?

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen und Sonnenbrille

 
 
நக்கல், நையாண்டி நாயகன்..
நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணியின் பிறந்தநாள்

இன்று 78வது பிறந்த நாளைக் கலக்கலாகக் கொண்டாடும் நகைச்சுவை மாமணி, கிண்டல், கலாய்த்தல் சிகாமணி அண்ணன் கவுண்டமணி அவர்களுக்கு  இனிய வாழ்த்துக்கள்
 
 
 
 
 
 
 
 
Bild könnte enthalten: 5 Personen, Nahaufnahme und im Freien
 

மே 25: லொள்ளு மன்னன் கவுண்டமணி பிறந்தநாள் இன்று

கவுண்டமணி....கல கல மணி!

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

* ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

* 'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

* 2010-ல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

  • தொடங்கியவர்

இவை மாடப் புறாக்கள் அல்ல 'பீச்' புறாக்கள்

 
p_3167709f.jpg
 
 

IMG_9622_3167687f.jpg

IMG_9626_3167685f.jpg

IMG_9657_3167674f.jpg

 

IMG_9653_3167675f.jpg

IMG_9651_3167676f.jpg

IMG_9648___3167677f.jpg

IMG_9642_3167678f.jpg

IMG_9634_3167680f.jpg

IMG_9627_3167684f.jpg

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

kaala first look

ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இன்று படத்தின் பெயர் வெளியாகி ரசிகர்களை இன்னும் குஷியாக்கிவிட்டது.

kaala first look

 

மும்பையில் வாழும் நெல்லை மக்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் கூறியிருந்தார். அதே போல் ரஜினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியானது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கூட்டமாக வேட்டையாடும் பாம்புகள்..! ஆச்சர்யப்பட வைத்த ஆய்வு

 

பாம்புகள் சில சமயம் கூட்டமாகச் சென்று வேட்டையாடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

snake
 

அமெரிக்காவின் டென்னசி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ’கியூபா போ’ என்னும் தீவு நாட்டின் மிகப்பெரிய விலங்குகள் வாழ் நிலப்பரப்பில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள வெளவால்கள் குகையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு விசித்திரக் காட்சி அரங்கேறியுள்ளது. இரவில் வெளியே இறை தேடிச் சென்று விடியற்காலையில் குகைக்குத் திரும்பும் வெளவால்களைக் கூட்டாகச் சேர்ந்து பாம்புகள் வேட்டையாடியுள்ளன.

குகையின் நுழைவாயிலில் ஆங்காங்கே பதுங்கி இருந்த பாம்புகள் ஒரு வெளவால் குகையின் நுழைவாயிலை நெருங்கும்போதே, தங்களுக்குள் சிக்னல் கொடுத்துக்கொள்கின்றன. பின்னர் கூட்டாக இணைந்து வெளவாலை வேட்டையாடுகின்றன. அதாவது, தங்கள் இறையான விலங்கை வீழ்த்த ஒற்றுமையாகச் செயல்படுகின்றன. பாம்புகளுக்குக் கூட்டமாகச் செயல்படும் தன்மையும் உள்ளது இந்த ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

பொதுவாக பாம்புகள் தனித்துத்தான் இறையைத்தேடிச் செல்லும் என்று சொல்வார்கள். ஆனால், இந்தத் தீவில் அரங்கேறியுள்ள சம்பவம் புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. டென்னசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  ’Animal Behavior and Cognition’ என்னும் ஆய்வுப் பத்திரிகையில் இந்த ஆராய்ச்சி குறித்து வெளியிட்டுள்ளனர்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள்

 

ஃபிளமிங்கோ பறவைகள் இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அது அவற்றின் தனிப்பட்ட நிற்கும் பாணியாக இருக்கலாம். ஆனால், ஒற்றைக் காலில் பறவைகள் நிற்பது ஏன் ? எதனால் , என்பவை போன்ற கேள்விகள் நீண்டகாலமாக நிலவிவரும் புதிராகும்.

ஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்திருக்கிறது.படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image captionஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்திருக்கிறது.

தற்போது, அமெரிக்காவை சேர்ந்த குழு ஒன்று ஃபிளமிங்கோக்கள் ஒற்றைக் காலில் நிற்கும் போது தசைகளை எவ்விததிலும் அசைக்கும் சுறுசுறுப்பான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதை காட்டியுள்ளனர்.

ஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்து, ஃபிளமிங்கோக்கள் மிதமான தூக்கத்திலிருக்கும் போதும் கம்பீரமாக நிற்க அனுமதிக்கிறது.

முன்பு, பறவைகள் ஒரு காலிலிருந்து மாறி மற்றொன்றில் நிற்பதன் காரணமாக, ஒற்றை காலில் நிற்கும் முறையானது தசை சோர்வை குறைக்க உதவுமா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

 

ஃபிளமிங்கோக்களின் இந்த பழக்கம் அவைகளின் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுவதாக மற்ற ஆராய்ச்சிக் குழுக்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தற்போது, அட்லாண்டாவில் உள்ள ஜியார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் யங்-ஹுய் ச்சாங் மற்றும் அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த லீனா எச் டிங் ஆகியோர் கூட்டாக ஃபிளமிங்கோக்களின் இந்த அசரவைக்கும் தந்திரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய இயந்திர ரகசியங்களை கண்டறிந்துள்ளனர்.

உயிருள்ள மற்றும் இறந்த பறவைகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் பல சோதனைகளை நடத்தியுள்ளனர். ஆச்சரியமாக, ஃபிளமிங்கோ பறவைகளின் இறந்த உடல்கள் எவ்வித வெளிப்புற ஆதரவின்றி ஒற்றை காலில் நிற்க வைக்க முடியும் என்பதை இரு ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வை `செயலற்ற நிலையில், ஈர்ப்பு சக்தியுடன் இணைந்திருக்கும் முறை` என்று வர்ணித்துள்ளனர்.

ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனினும், இறந்த பறவைகளின் உடல்களை எவ்விதமான ஆதரவுமின்றி இரு கால்களால் நிற்க வைக்க முடியவில்லை. இந்த வகை நிலையில் சுறுசுறுப்பான தசை ஆற்றலின் ஓர் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதை இது வலியுறுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள பறவைகளை ஆய்வு செய்த நிலையில், அவை ஒற்றை காலில் நின்று கொண்டு ஓய்வெடுக்கையில் அவை நகர்வதென்பது அரிதான நிகழ்வாக இருந்தது. இதன்மூலம், ஃபிளமிங்கோவின் செயல்படாத நிலையின் ஸ்திரத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

பில்லெடெல்பியாவை சேர்ந்த விலங்கு நடத்தை நிபுணரும், செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் சோதனை உளவியலாளருமான மருத்துவர் மேத்யூ ஆன்டர்சன், இந்த ஆராய்ச்சிக் குழுவின் முடிவுகளை `` குறிப்பிடத்தக்க முன்னேற்றம்`` என்று பாராட்டியுள்ளார்.

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பரிசுத்த காற்று... அடர் மரங்கள்... விடுமுறை சொர்க்கம்... பரளிக்காடு!

 
 

பரளிக்காடு

எங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய் கிடந்த பொக்கிஷங்களாக மாறிப்போய் விட்டன. அப்படி ஒரு பொக்கிஷம் தான் பரளிக்காடு. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் மலை கிராமம். 

கொஞ்சும் இயற்கை எழில், சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெழிந்து ஓடும் ஆறு, பளிங்கு நீரில் பரவி கிடக்கும் கற்கள், மண் மணம் மாறாத மக்கள் என முற்றிலும் இயற்கை அழகால் நிரம்பி உள்ளது பரளிக்காடு. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நீங்கள் ஒரு பயணம் செல்ல விரும்பினால், பரளிக்காடு உங்களுக்கான சரியான சாய்ஸ். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் சில கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்தால் நீங்கள் புறப்படலாம்.

சூழல் சுற்றுலா தளங்கள்

வனத்தையொட்டிய இந்த மலை கிராமம், இயற்கையை தொலைத்து விடாமல் இருக்க முக்கிய காரணம் மலைவாழ் மக்கள். இயற்கையோடு ஒத்த வாழ்க்கையை வாழ்ந்து, இயற்கை மாறாமல் இந்த கிராமத்தை பராமரித்தும் வருகிறார்கள். இந்த கிராமம் சுற்றுலா தளமாக மாறியது 2007 மே மாதத்தில்.  தற்போது 10 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று விட்டார்கள். ஆனாலும் இன்றும் எந்த சூழலியல் பாதிப்பையும்  இந்த கிராமம் சந்திக்கவில்லை. முழுக்க முழுக்க சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுற்றுலாவாகத்தான் இந்த பயணம் இருக்கிறது. எந்த கடையும் இருக்காது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியாது. 

10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த ஆண்டு முதல் கிராமத்திலேயே ஒரு இரவு தங்கி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் மட்டும் கழிக்க பரளிக்காடு சூழல் சுற்றுலா தளமும், காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை அங்கேயே இருந்து கழிக்க பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பரளிக்காடு செல்வது எப்படி?

கோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்னும் மாசுபடாமல் இயற்கை மிக தூய்மையாக காட்சியளிக்கும் பரளிக்காடு, தமிழக - கேரளா மாநில எல்லையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. கோயமுத்தூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இயற்கை எழில் மிகுந்த இந்த அழகிய பிக்னிக் ஸ்பாட்டை நீங்கள் அடையலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தான் அனுமதி. பரளிக்காடு செல்ல ஒரு வாரத்துக்கும் முன்னரே அப்பகுதி வன அலுவலரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். எனவே முழுமையான திட்டமிடலுடன் தான் இங்கு செல்ல முடியும். கோயமுத்தூரில் இருந்து மேட்டுப்பாளையாம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால் பரளிக்காடு உங்களை வரவேற்கும். 

பரிசல் பயணத்துக்கு காலை 10 மணிக்கு முன்பாக அங்கு இருக்க வேண்டும் என்பதால், காலை 7 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு விடுவது நல்லது. அப்போது தான் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அழகை ரசித்து செல்ல முடியும்.

காரமடையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர்களை கடந்து விட்டாலே நகரங்களின் அடையாளங்கள் மறைந்து அழகிய கிராமிய அடையாளங்கள் நம்மை வசீகரிக்க துவங்குகின்றன. சில கிலோமீட்டர்களை கடந்தால் வருகிறது வெள்ளியங்காடு. இது தான் மலையடிவாரத்தில் உள்ள கடைசி கிராமம். 

வெள்ளியங்காட்டை கடந்து விட்டால் காட்டுக்கு நடுவே பயணிக்கிறது சாலை. சுற்றிலும் மலைகள், வளைந்து நெழிந்து செல்லும் மலைப்பாதை, பறவைகளின் வினோத சத்தங்கள், அழகிய நீரோடைகள் என கொட்டிக்கிடக்கும் எழில் நம் பயணத்தை ரம்மியமாக்குகிறது. கொண்டை ஊசி வளைவுகளிடையே வாகனத்தை நிறுத்தி மலைகளையும், பறவைகள், விலங்குகளின் சத்தத்தையும் நீங்கள் ரசிக்கலாம். மலைப்பாதை என்பதால் பொறுமையாகவும், கவனத்துடனும் பயணிப்பது நல்லது.

செல்லும் வழிகளில் அங்கங்கே சில சிறிய மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களை கடந்து சென்றால் அடர்ந்த காடுகளுக்கு நுழைகிறது சாலை. அங்கிருந்து சில கிலோமீட்டர் கடந்து சென்றால் பரளிக்காடு. வழியில் நீங்கள் வனத்துறையின் இரண்டு செக்போஸ்ட்களை கடந்து வர வேண்டும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். 

பரளிக்காடு

 

பரளிக்காடு சூழலியல் பயணம்

முதலில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பற்றி பார்க்கலாம்.  பில்லூர் அணைக்கு பின்பகுதியில் உள்ள பரளிக்காடு கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு அருகில் ஆலமரத்தடியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, சுக்கு காபியுடன் வரவேற்கின்றனர் அங்குள்ள பழங்குடியின மக்களும், வனத்துறையினரும். சுக்கு காபி குடித்து விட்டு பயணத்தின் களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், பரிசல் பயணம் துவங்குகிறது. 

20 பரிசல்கள் உள்ளன. 20க்கும் அதிகமான ஓட்டுனர்கள் உள்ளனர். ஒரு பரிசலில் 4 பேர் வரை மட்டும் தான் செல்ல முடியும். பரிசல்கள் மூங்கில்களால் தயாரிக்கபடாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக பைபர் கிளாசால் செய்யப்பட்ட பரிசல்கள் தான் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயணிகள் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு பரிசல் பயணம் துவங்குகிறது.

ரம்மியமான பரிசல் பயணம்

பரிசலை இயக்குபவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே, ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் சளிக்காமல் விடை தருகிறார்கள். ’இந்த ஏரி எவ்ளோ ஆழமிருக்கும்?’ என மிதமான பயத்துடன் நம்மிடம் இருந்து வந்த கேள்விக்கு, அதுவா 50 அடியில இருந்து 60 அடி இருக்கும்’ என சாதரணமாக பதிலளித்தனர். என்னது 60 அடியா? ஒண்ணும் பயம் இல்லையே? என்ற கேள்விக்கு பின்னால் இருந்த அச்சத்தை உணர்ந்தவர்கள். “அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க. இங்க 2007ம் வருஷத்துல இருந்து பரிசல் சவாரி நடக்குது. ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்ததில்ல. நாங்க சின்ன வயசுல இருந்து இங்க தான் இருக்கோம். இந்த ஏரி, காடு எல்லாம் எங்களுக்கு நல்லா பரிச்சயம். வெறும் மரக்கட்டையிலேயே ஏரியில இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு போவோம். அதனால பயம் எல்லாம் அவசியமே இல்லை. நீங்க சந்தோஷமா இருங்க,” என தைரியம் கொடுத்தனர். 

சுமார் 30 நிமிட பரிசல் பயணத்துக்கு பின்னர் வனத்தையொட்டி நிற்கிறது. சும்மா காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க.னு பரிசல் ஓட்டிகள் கூற, இறங்கி நடந்தோம். கொம்புடன் இருந்த காட்டெருமையின் மண் ஓடு முதலில் பயமுறுத்தினாலும், பின்னர் அனைவரும் அதை எடுத்து விளையாட துவங்கி விட்டனர். தொடர்ந்து காட்டுக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம். வன விலங்குகள் உலவும் காடு என்பதால் சிறிது நேரம் தான் அனுமதி. அரிய பறவைகள், உடும்பு, வாய்ப்பிருந்தால் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்கலாம். மீண்டும் அங்கிருந்து பரிசல் பயணம். 10.30 மணிக்கு துவங்கிய பயணம், 12.30 மணிக்கு துவங்கிய இடத்திலேயே நிறைவுறுகிறது பரிசல் பயணம்.

சுவையான மதிய உணவு

மீண்டும் மர அடிவாரம். நாற்காலிகளில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினால் மதிய உணவு ரெடி. அந்த பகுதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரால் மதிய உணவு வழங்கப்படுகிறது. கேசரி, சப்பாத்தி, குருமா, ராகி களி உருண்டை, சிக்கன், கீரை, வெஜிடபிள் பிரியாணி, வெங்காயசட்னி, உருளைக் கிழங்கு சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய், வாழைப்பழம் ஆகிய உணவுகள் பரிமாறப்படுகிறது. தேவையான அளவு சாப்பிடலாம். சுவையாக பரிமாறப்படும் உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் சிறிது நேரம் இளைப்பாறினால், 2 மணிக்கு வன காவலர் ட்ரெக்கிங் செல்லலாம் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

பரளிக்காடில் இருந்து சென்ற வழியிலேயே திரும்பி 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் அத்திகடவு பாலம் வருகிறது. அங்கு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அத்திக்கடவு ஆற்றையொட்டி ட்ரெக்கிங் செல்லலாம். உடன் பழங்குடியினத்தவர் ஒருவரும், வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும் உடன்வருகின்றனர். ஓரிரு கிலோ மீட்டர் ஆற்றையொட்டி நடந்து சென்றால், ஆளை மயக்கும் ரம்மியமான இடத்தில் குளிக்க அனுமதிக்கின்றனர். வெயில் நேரத்திலும் கூட மிகவும் குளிர்ந்தே இருக்கிறது ஆற்று நீர். 

ஆறு குறித்து உடன் வந்த பழங்குடியின மக்களிடம் கேட்டபோது. “இது அத்திக்கடவு ஆறு. மலையில் இருந்து வருகிறது. இது மூலிகை நீர். குளித்தால் மிகவும் புத்துணர்வு கிடைக்கும்,” என்றார். எல்லோரும் ஆனந்தமாக குளியல் போட்டுக்கொண்டிருக்க, “மணி 5 ஆகப்போகுது. குளிச்சது போதும் எல்லோரும் கிளம்புங்க,” என அழைக்க யாரும் அழைப்பை மதிப்பதாய் தெரியவில்லை. ”சீக்கிரம் கிளம்புங்க. யானைங்க எல்லாம் தண்ணி குடிக்க இங்க தான் வரும்” என சொன்னவுடன் ஆற்றில் இருந்தவர்கள் எல்லாம் கரைக்கு வந்து விட்டனர். மீண்டும் மலை பயணம். பறவைகளின் ஒலி, விலங்குகளின் வினோத சத்தம் என உங்களின் இந்த பயணம் கட்டாயம் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த ஆண்டு முதல் பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளம் துவங்கப்பட்டுள்ளது. பரளிக்காடு பயணத்தில் திளைத்த பயணிகள் பலர், இங்கு ஒரு இரவு தங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவிக்க, பரளிக்காடு அருகில் பூச்சமரத்தூரில் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 தங்கும் விடுதிகள் உள்ளன. ஒரு அறையில் 8 பேர் வரை தங்கலாம். ஒரு நாளில் 24 பேர் வரை தங்கலாம். இங்கும் சனி, ஞாயிறு மட்டுமே அனுமதி. முன் பதிவு அவசியம். ஒரு நபருக்கு 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 

பரளிக்காடு

 

காலை 10 மணிக்கு பூச்சமரத்தூர் வந்தடைபவர்களுக்கு வெல்கம் டிரிங் கொடுக்கப்படுகிறது. சற்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் மதிய உணவு தயாராகிவிடும். மலைவாழ் மக்களால் தயார் செய்து வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மாலை 4 மணிக்கு பரிசல் பயணம் துவங்குகிறது. பரிசல் பயணம் முடிந்து மாலை 6 மணிக்கு நீங்கள் அறையை வந்தடையலாம். வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் அதன் பின்னர் வெளியே அனுமதிப்பதில்லை. இரவு நேரங்களில் பறவைகள், விலங்குகள் சத்தத்தை நீங்கள் கேட்க முடியும். மறக்க முடியாத இரவாக அது நிச்சயம் இருக்கும். இந்த தங்குமிடம் சூழலை பாதிக்காத வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மறுநாள் அதிகாலை எழுந்த உடன் வனத்தையொட்டிய பகுதியில் நீங்கள் வாக்கிங் செல்லலாம். உங்களோடு வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் வனத்தைப்பற்றியும், விலங்குகள், பறவைகள் மற்றும் சூழலியல் குறித்து விரிவாக பேசுவார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு 10 மணிக்கு அங்கிருந்து புறப்படலாம். 

பழங்குடியின மக்கள் நலனுக்காக

இந்த சுற்றுலா மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் பழங்குடியின மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பரிசல் ஓட்டுபவர்கள், மதிய உணவு தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் போக மீதமுள்ள தொகை பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

”இது வர்த்தக ரீதியில் லாப நோக்கத்தில் துவங்கப்படவில்லை. இந்த பயணத்துக்கு நீங்கள் வழங்கும் முழுத்தொகையும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இங்கு வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு பல மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இது போக 12 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பில் உள்ளது,” என்கிறார்கள் வனத்துறையினர்.

சூழல் சுற்றுலா தளமாக இந்த இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தவும், புகை பிடிக்கவும் தடை உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் உட்பட பல நிறுவனங்கள் கடை அமைக்க அனுமதி கோரியும் அனுமதிக்கப்படவில்லை.

நகர வாழ்க்கையில் இருந்து விலகி, பரபரப்பு இல்லாம இப்படி அமைதியா இயற்கையோட ஒரு நாளை நீங்கள் கழிக்க விரும்பினால் அதற்கு சரியான இடம் பரளிக்காடு. சுற்றிலும் மலைகள் சூழ, குளுமையான வானிலையில் சுத்தமான காற்றை சுவாசித்து, சுவையான, சத்தான உணவை உண்டு, இதமாய் இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் இருப்பதில்லை தான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பரளிக்காடு பயணத்துக்கு முன் கவனிக்க...

* பரிசல் பயணம், மதிய உணவு, ட்ரெக்கிங், மூலிகை குளியல் என அனைத்துக்கும் சேர்த்து பெரியவர்களுக்கு 500 ரூபாயும், 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.

* ஒரு நாள் தங்கியிருக்க வேண்டுமானால் ஒரு நபருக்கு ரூ.1500 கட்டணம் பெறப்படுகிறது.

* இந்த சூழல் சுற்றுலாவுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டுமே அனுமதி. வார நாட்களில் குறைந்தது 40 பேர் கொண்ட குழுவாக செல்ல விரும்பினால் அனுமதி வழங்கப்படும்.

* பயணத்துக்கு ஒரு வாரம் முன்னரே வன அலுவலரிடம் முன் பதிவு செய்ய வேண்டும்.

* கண்டிப்பாக மது அருந்த, புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

* பாலீத்தீன் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தக்கூடாது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உருளும், அருளும் ஆரூர் அழகுத் தேர்!

 

ழியிலே தோன்றிய அலைமகளுக்கு ஆரூர் ஈசன் அருள்புரிந்ததற்கு நன்றி செலுத்துவதே போல், அந்த ஆழியே தேராக வந்துவிட்டதோ என்று சொல்லும்படி, மிகப் பிரம்மாண்டமாக அமைந்ததுதான் திருவாரூர் தேர். பிரமாண்டமான கடலைப் போலவே காட்சி தருவதாலேயே திருவாரூர்த் தேர் ஆழித் தேர் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது போலும்!

திருவாரூர் தேர்

பெரும்பாலான கோயில்களில் தேர்த் திருவிழா நடைபெற்றாலும், திருவாரூர்த் தேர்த் திருவிழாவுக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்று சொன்னால், அதற்குக் காரணம் ஆழித் தேரின் பிரம்மாண்டம்தான்.

திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரப் பதிகத்தில், 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று பாடி இருப்பதில் இருந்து, திருவாரூரில் கி.பி.5-6 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

1748 ஆம் ஆண்டு ஆழித் தேரோட்டம் நடந்தது பற்றிய விவரம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் 1765 ஆம் வருடம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆழித் தேரோட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

முதல்முதலில் ஆழித் தேர் யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் இருந்து ஆழித்தேர் பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஆழித்தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. அதற்குப் பிறகு 1928 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, 1930-ல் மறுபடியும் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேரோட்டம், என்ன காரணத்தினாலோ தடைப்பட்டுவிட்டது.

தகவல்கள்

பிறகு 1970 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, அவருடைய முயற்சியாலும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியாலும் மறுபடியும் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது. 

முற்காலத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது தேருக்கு பத்து சக்கரங்கள் இருந்தன. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தினர் ஆழித் தேரில் இரும்பு அச்சுகள், சக்கரங்கள், பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினார்கள். 10 சக்கரங்களுக்கு பதிலாக நான்கே சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இந்த மாற்றங்களால் இப்போது மூவாயிரம் பக்தர்கள் இழுத்தால் போதும்... தேர் நகர ஆரம்பித்துவிடும். 

அலங்கரிக்கப்படாத இந்தத் தேர் உயரம் முப்பது அடி. உச்சி விமானம் வரை துணி போன்ற தேர் சீலைகளால் அலங்கரிக்கும் பகுதியின்  அடி நாற்பத்தி எட்டு. விமானத்தின் உயரம் பன்னிரண்டு அடி. தேரின் கலசம், ஆறு அடி... என தேரின் மொத்த உயரம் 96 அடி. இரும்பு அச்சுகள், சக்கரங்கள் உள்பட அலங்காரம் அற்ற மரத்தேரின் எடை சுமாராக இருநூற்று இருபது டன்கள். தேர்ச் சிலைகளும் பனஞ்சப்பைகளும், மூங்கில்களும் பயன்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன்கள் ஆகும்.

ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனபீடம் என 7 அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. 

எண்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தத் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்திருக்கும் குதிரைகளின் நீளம் 32 அடி; உயரம் 11 அடி ஆகும். தேரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம், சிவபுராணம், நாயன்மார்கள் வரலாறு போன்றவற்றை விவரிக்கும் வகையில் அந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

தேர் பவனி

ஆழித் தேர் ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்குத் திரும்பும் காட்சியே அற்புதமாக இருக்கும். 8 முதல் 10 இரும்பு பிளேட்டுகளை சிறு வளைவான வரிசையில் வைத்து, அந்த பிளேட்டுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் ஏறித் திரும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆழித் தேரோட்டம் காண்பதே ஆனந்தமாக இருக்கும். 

தகவல் உதவி: சிவநேசன் - தலைமை ஸ்தபதி, இளவரசன் - உதவி ஸ்தபதி

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ஐ.பி.எல். வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் `மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வென்று சாதனை படைத்திருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். ரவிச்சந்திரன் அஷ்வின் காயம் அடைந்ததால், புனே அணியில் சேர்க்கப்பட்ட 17 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர், இன்னும் ப்ளஸ் டூ பரிட்சையைக்கூட எழுதி முடிக்காத பள்ளிமாணவர். அதென்ன வாஷிங்டன் சுந்தர் என்று பெயர்க் காரணம் விசாரித்தால், இவருடைய அப்பா சுந்தர் தமிழ்நாட்டின் முன்னாள் ரஞ்சி ப்ளேயர். இவர் கிரிக்கெட் விளை யாடவும், படிக்கவும் உதவியவர் வாஷிங்டன் என்னும் ராணுவ வீரர். அவர் இறந்த கொஞ்ச நாள் களிலேயே சுந்தருக்கு மகன் பிறக்க வாஷிங்டன் சுந்தர் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். சுந்தர் ஷாட்!

p35a.jpg

ந்த ஆண்டுக்கான கான்ஸ் விழா தொடங்கிவிட்டது. தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசன், நந்திதா தாஸ் என ரெட் கார்ப்பெட்டில் ஏகப்பட்ட இந்திய முகங்கள். இந்த முறை இந்தியப்படங்கள் எதுவும் தேர்வாகவில்லை என்றாலும், ஆறுதலாக இலங்கையில் இருந்து ‘ஜூட் ரத்தினம்’ என்கிற தமிழர் இயக்கிய ஈழ யுத்தம் குறித்த ‘சொர்க்கத்தில் பிசாசுகள்’ என்ற படம் திரையிடப்பட்டிருக்கிறது. ஜூட் ரத்னத்தின் 10 வருட முயற்சி இந்தப் படம்! மண்ணின் குரல்!

p35b.jpg

`இனி நீங்கள் ஐ.பி.எல். ஆட வேண்டாம், அந்தச் சம்பளத்தைவிட அதிகமாக நாங்களே தருகிறோம். நாட்டுக்காக மட்டும் ஆடுங்கள்’ என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர், ஸ்மித், ஸ்டார்க் உள்ளிட்ட சில நட்சத்திர வீரர்களிடம் பேரம் பேசியிருக்கிறது.“தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு இன்னமும் சரியான கான்ட்ராக்ட் போடவில்லை, சம்பளம் போதவில்லை; ஒழுங்கான சம்பளம் இல்லையெனில், இந்த ஆண்டு ஆஷஸ் விளையாடுவதற்கு சீனியர் வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் அந்தப் பிரச்னையைச் சரிசெய்யச் சொல்லுங்கள்” என உறுமியிருக்கிறார் அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர். ஐ.பி.எல். அலப்பறைகள்!

p35c.jpg

`மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளும் பெண் திரைக்கலைஞர்களும் இணைந்து  `Womens Collective in cinema' என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு, மலையாள சினிமாவில் இயங்கும் பெண்களுடைய உரிமைகளுக்காகப் போராடப்போகிறதாம். மஞ்சு வாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரிது வின்சென்ட், சஜிதா, அஞ்சலி மேனன், பீனா பால் முதலான பல கலைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். அமைப்பைத் தொடங்கியதும் முதல்வேலையாக கேரள முதல்வர் பினரயி விஜயனைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது இந்தப் புதிய கூட்டணி. சேச்சிகளின் முயற்சி!

 இந்த ஆண்டு தசரா விழாவுக்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். 86 லட்சம் புடவைகள் வாங்கி விநியோகிக்க இருக்கிறார்களாம். இலவச வசியம்!

p35d.jpg

டிகை பிரியங்கா சோப்ராவின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ‘பர்ப்பிள் பெபிள்’. இந்த நிறுவனம் இந்தி அல்லாத, அதிகம் அறியப்படாத மாநில மொழிகளில் படம் எடுப்பதற்காகவே தொடங்கப்பட்டது. போஜ்புரி, மராத்தி, பஞ்சாபி, சிக்கிமிஸ் என இதுவரை நான்கு மொழிகளில்  ஐந்து படங்களைத் தயாரித்திருக்கிறார் பிரியங்கா. இதில் `வென்ட்டிலேட்டர்' என்னும் மராத்திப் படம் தேசிய விருது களை வென்றது. இப்போது அதே உற்சாகத்தில் ரவீந்திரநாத் தாகூர்-அன்னபூர்ணா காதலைப்பேசும் படம் ஒன்றைப் படமாக பெங்காலி, மராத்தி என இரண்டு மொழிகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. படத்தின் பெயர் `நளினி'. பிரமாதம் பிரியங்கா!

  • தொடங்கியவர்
‘மூச்சை நிறுத்தும் முயற்சி வெகு உஷாராக நடக்கின்றது’
 

image_47943a4b15.jpgமக்களின் உயிர்நாடி ஒட்சிசன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், இதன் சந்தைப் பெறுமதி எவ்வளவு என அறிந்தால் மூக்கில் விரல் வைப்பீர்கள். 

ஒரு பெரிய விருட்சம் எமக்குத் தரும் ஒட்சிசனின் விலை, ஒருநாள் பெறுமதி, பத்து இலட்சம் ரூபாயாகும். அதாவது வைத்திய சாலைகளில் பெறப்படும் ஒட்சிசனின் விலையுடன் ஒப்பிட்டே, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, சற்றுச் சிந்தியுங்கள். உலகில் இன்றுள்ள காடுகளின் பெறுமதியை எம்மால் கணிப்பிட முடியுமா? 

காடுகளை அழிப்பதனால் உலகம் அழிவை நோக்கிப் போகின்றது. மனிதன் மூச்சை நிறுத்தும் முயற்சியானது வெகு உஷாராக நடக்கின்றது. சுவாசிக்கும் அனுமதியை யாரிடம் கோருவதோ?

  • தொடங்கியவர்

நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943

 

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்

நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
 
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர்.

தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாளில் அவரை போற்றி புகழ்வோம்.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

’கற்றதும் பெற்றதும்’-ல் சுஜாதா சொன்ன எவையெல்லாம் நிஜமாகியிருக்கின்றன?

 

தொழில்நுட்பம் சுஜாதா

90களின் இறுதியில் சுஜாதா அவர்கள் ஒருமுறை எதிர்கால தொழில்நுட்பம் பற்றி கணித்திருந்தார். விரைவில், கையடக்க அளவில் ஒரு மின்னணு கருவி வரும். அது உலகம் முழுவதையும் உள்ளங்கைக்கு கொண்டு வரும் என்றார். அப்போது மொபைல்கள் இருந்தாலும், ஸ்மார்ட்போன்கள் வராத காலம். அவர் கணித்தது அடுத்த 10 ஆண்டுகளில் நிஜமானது. 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ’கற்றதும் பெற்றதும்’ என்ற தொடரை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அதில், அடுத்த பத்தாண்டுகளில் (2017-ல்) டெக்னாலஜியில் என்னென்ன முன்னேற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் எழுதியதில் எவையெல்லாம் இன்று சாத்தியமாகியிருக்கின்றன; எவையெல்லாம் நினைத்ததை விடவும் வேகமாக மாறியிருக்கின்றன என ஒரு ரீகேப்.

”நடக்கவே இயலாதவர்கள் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். காலில் பதிக்கப்பட்ட சென்ஸார்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தும் ஆணைகள் மூலம் இயல்பாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.”

நினைத்ததை விட இத்துறையில் நிறைய ஆச்சர்யங்கள் நடந்திருக்கின்றன. மூளையின் சிக்னலுக்கு ஏற்றபடி செயல்படும் பிராஸ்தெட்டிக் செயற்கைக் கால்களே வந்துவிட்டன. அதுவும் 2013-ம் ஆண்டிலேயே இது சாத்தியாமியிருக்கிறது.

 

 

 

“நேனோட்யூப்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் எஃகைவிடவும் 1000 மடங்கு வலுவானதாக இருக்கும்; எந்த பூகம்பத்தையும் தாங்கும் ”


நேனோட்யூப்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், சுஜாதா குறிப்பிட்டதைப் போல 1000 மடங்கு பலமான கட்டடங்கள் எதுவும் வரவில்லை. வேறு சில தொழில்நுட்பத்தால், பூகம்பங்களைத் தாங்கக்கூடிய கட்டடங்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். என்றாலும், நேனோட்யூப்கள் கட்டடங்கள் இன்னும் சாத்தியமாகவில்லை.

”இன்டர்நெட்டுக்கு புத்திசாலித்தனம் ஏற்பட்டு, நீங்கள் கேட்கும் கேள்வியின் அர்த்தத்தையும் உங்களையும் புரிந்துகொண்டு நெத்தியடியாக தகவல் தரும்.”


செயற்கை நுண்ணறிவைதான்(AI) தான் சொல்லியிருக்கிறார். சிரி, அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் என ஏகப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் இதை கச்சிதமாக செய்கின்றன. கூகுளில் வாய்ஸ் சர்ச் எப்போதோ வந்துவிட்டது. அதுவே சுஜாதா குறிப்பிட்டதை செய்துவிட்டது. நாம் விரும்பும் விஷயங்களை, அதிகம் தேடும் வார்த்தைகளை சேகரித்து வைத்து, நமக்குத் தேவையானதை சரியாக சொல்லும் கூகுள் சர்ச். ஆக, இதுவும் சாத்தியமாகிவிட்டது.

”செய்தித்தாள்கள் மடிக்கக்கூடிய கம்ப்யூட்டர் வடிவில் வரும். படித்துவிட்டு பழைய பேப்பர்காரனுக்கு போட வேண்டாம். ஏனெனில், மறுநாள் அதே பேப்பர். வேறு செய்தி வரும்”


இதுவும் நடந்துவிட்டது. அமேஸான் கிண்டில் இதைத்தான் செய்கிறது.  சொல்லப்போனால், அனைத்து டேப்லட்களும், மொபைல்களுமே கூட இதைச் செய்கின்றன. கிண்டில் கூடுதல் ஸ்பெஷல். கிட்டத்தட்ட அனைத்து ஊடக நிறுவனங்களும் டிஜிட்டல் தளத்திலும் கால் வைத்துவிட்டன. நாளிதழ் தொடங்கி, மாத இதழ்கள் வரை அனைத்துமே மொபைல் ஆப்ஸ் மூலம் கிடைக்கின்றன. அந்த வகையில் சுஜாதா குறிப்பிட்ட விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியமாகிவிட்டது.

”இந்த வருஷமே குளோனிங் முறைப்படி ஒரு முழுக் குழந்தையை உருவாக்குவார்கள்.”


2002 ஆம் ஆண்டே ஒரு குழந்தையை குளோனிங் முறையில் உருவாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. 2007-ல் தான் சுஜாதா, இதை எழுதியிருக்கிறார். எனவே அதை விட்டுவிடலாம். 2007-க்கு பிறகு குளோனிங் முறையில் மனிதர்கள் உருவாக்கப்படவில்லை. அந்த டெக்னாலஜி சட்டச்சிக்கல்களை உருவாக்கியதால், முயற்சிகள் தொடரப்படவில்லை.

”எதிர்காலத்தில் அப்பாக்கள் வழக்கொழிந்து போய் Artificial gametes என்னும் முதிர்ச்சியடைந்த ஒற்றை செல்கள் இன்டர்நெட்டில் கிடைக்கும். அப்பாவின் தேவையின்றி, பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும்.”

2007க்கு முன்பே Artifical gametes ஆராய்ச்சிகள் வெற்றியடைந்திருக்கின்றன. அவை ஆன்லைன் மூலமே வாங்கும் அளவுக்கு எளிமையாகும் என சொல்லியிருக்கிறார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெளியேற்றப்பட்ட பல்கலைக்கழகத்திலேயே, கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் மார்க் சக்கர்பெர்க்..!

 

உலகின் 5-வது பெரிய பணக்காரர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற டாப் சமூக வலைதளங்களுக்குச் சொந்தக்காரர். இவரின் வளர்ச்சியைக் கண்டு, 'இவர்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர்' என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்தது. இப்படி தினசரி தவிர்க்க முடியாத செய்தியாகிவரும் மார்க் சக்கர்பெர்க், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

Zuckerberg


கடந்த 2004-ம் ஆண்டு, ஃபேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், சக்கர்பெர்க். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பல்கலைக்கழகத்தில் அவருக்கு சட்டத்துறைக்கான, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Mark Zuckerberg


அப்போது, மாணவர்களிடம் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சக்கர்பெர்க், தான் ஃபேஸ்புக்கிற்காக திட்டமிடப்பட்ட கம்ப்யூட்டர் குறித்த படங்களைக் காட்டியும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அவர் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்றும் பார்வையிட்டார். நிகழ்வுகள் அனைத்தையும், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் போஸ்ட் செய்தார். 


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 366-வது பட்டமளிப்பு விழாவில், இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: மரம் வளர்க்கும் அதிசயப் பறவை!

 

 
சேகரித்த விதையைச் சாப்பிடுகிறது
சேகரித்த விதையைச் சாப்பிடுகிறது
 
 

படித்த ஒரு விஷயத்தை, பார்த்த ஒரு புதிய இடத்தை உங்களால் எத்தனை நாட்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்? எபிங்காஸ் என்ற ஓர் உளவியல் அறிஞர் இது பற்றி ஒரு சோதனையை நடத்தினார். இந்தச் சோதனைப்படி படித்து முடித்தபின் முதல் ஒரு மணி நேரத்தில் படித்ததில் பாதி மறந்து போய்விடுகிறது, ஒரு வாரத்தில் படித்ததில் ஐந்தில் நான்கு பங்கு மறந்து போய்விடுகிறது, ஒரு மாதத்துக்குப் பிறகு முழுவதுமாக மறந்து போய்விடுகிறது என்று கூறினார். ஆனால், ஒரு பறவை தான் சேகரித்த ஆயிரக்கணக்கான விதைகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பறவையின் பெயர் ‘கிளார்க் நட்கிரேக்கர்’ (Clark’s Nutcracker).

வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி மலைச் சரிவுகளிலும், மெக்சிகோ நாட்டின் சில பகுதிகளிலும் வாழக்கூடிய பறவை இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் கிளைகளில் கூடு கட்டி வாழும் பறவை. வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் பெயரில் இதனை ‘கிளார்க் நட்கிரேக்கர்’ என்று அழைக்கிறார்கள். சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கிறார்கள்.

பொதுவாக 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 12 ஆயிரம் அடி உயரம் வரை ஊசியிலைக் காடுகளில் வசதியாக இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொண்டு சிறகடிக்கும் பறவை இது. இதன் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் அதிசயமும் ஆச்சரியங்களும்தான். இனப்பெருக்கக் காலம் தவிர மற்றக் காலங்களில் நட்கிரேக்கர் இரை தேடித் தாழ்வான பகுதிகளை நோக்கிப் பறந்துகொண்டேயிருக்கும். இதற்காக நீண்ட தூரப் பயணம் செய்யும் இது, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் வரையிலும்கூட கீழிறங்கிப் பறந்து வரும்.

பைன் மரத்திலிருந்து கிடைக்கும் விதைகள்தான் இப்பறவையின் முக்கிய உணவு.இதைச் சேகரிப்பதில் இப்பறவை அழகிய அசாத்தியமான முறையைக் கையாள்கிறது. கோடைக் காலம் தொடங்கியவுடன் இரை தேடிப் புறப்படும் நட்கிரேக்கர், பைன் மரத்தின் பழங்களைத் தன் அலகால் சிதைத்தும், உடைத்தும் அதன் விதைகளைச் சேகரித்துக்கொள்கிறது. ஏதோ கொஞ்சம் விதைகளை மட்டும் சேகரித்துக்கொள்ளும் என்று நினைக்காதீர்கள்.

Clark_s_Nutcracker_3167421a.jpg
பைன் மரத்திலிருந்து விதை சேகரிப்பு

குளிர் காலம் முழுமைக்கும் தேவையான விதைகளைச் சேகரித்துக்கொண்டு போய், தன் வசிப்பிடத்தின் அருகே சேமித்து வைக்கும். ஓரிடத்தில் 1 முதல் 15 விதைகள் வீதம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சம் வரையிலான விதைகளைச் சேமித்து வைத்துவிடும். பைன் மரங்களிலிருந்து விதைகளைப் பிரித்துத் தன் வாயாலேயே, தன் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்கிறது. இதற்காக இதன் வாயில், நாக்கின் கீழே ஒரு ‘பை’ போன்ற அமைப்பு உள்ளது. இந்தப் பையில் விதைகளின் அளவை பொருத்து 50 முதல் 150 விதைகளைச் சேகரித்துக்கொண்டு பறக்கும். அதைக் கொண்டு போய்த் தன் இருப்பிடம் அருகே பூமிக்கடியில் குழிகளில் பதுக்கி வைக்கும்.

aa_3167690a.jpg

இவ்வளவு விதைகளையா இப்பறவை சாப்பிடும்?

ஆமாம், குளிர்காலம் முழுக்க உட்கார்ந்து ஆற அமர சாப்பிட இவ்வளவு விதைகளைச் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு லட்சம் விதைகள் என்பது தேவைக்கு அதிகமான விதைகள்தான். ஆனால், இவ்வளவு விதைகளைச் சேமித்து வைப்பதற்குச் சில காரணங்களும் உள்ளன. பைன் மர விதைகளை விட்டுவிட்டால் வேறு மாற்று உணவுக்கு வழியில்லை. சில சமயங்களில் சிறு பூச்சிகளையும், பழங்களையும் உணவாக உட்கொள்கிறது என்றாலும் பைன் விதைகள் போன்று அவை தாராளமாகக் கிடைப்பதில்லை.

நட்கிரேக்கர் பறவை சேமித்து வைக்கும் விதைகளை மற்ற சில உயிரினங்களும் சாப்பிட்டுவிடும். அதனால் கொஞ்சம் கூடுதலாக விதைகளைச் சேமித்து வைப்பதாகப் பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை குளிர்காலத்தில் சாப்பிட்டது போக மீதியிருக்கும் விதைகள் பூமிக்கு உள்ளேயே புதைந்து கிடக்கும். நல்ல ஈரப்பதமும் வெப்பமும் இருக்குமிடங்களில் இவை முளைத்துப் பெரிய மரங்களாகவும் வளர்ந்துவிடுகின்றன.

அதெல்லாம் சரி, இப்படி எங்கெங்கோ சேகரித்து வைக்கும் விதைகளை இப்பறவை எப்படித் திரும்பவும் கண்டுபிடிக்கிறது?

விதைகளைச் சேகரிப்பதும், சேமிப்பதும்தான் இப்பறவையின் வாழ்க்கை. ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதன் பயணமும் பாதையும் நன்றாகப் பழகி விடுகிறது. அதனால்தான் 9 மாதங்களுக்குப் பிறகுகூட, மூன்று அடி ஆழத்தில் பனியால் மூடி கிடக்கும் விதைகளை இந்த நட்கிரேக்கர் பறவையால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. தன் குஞ்சுகளுக்கு முதல் வேலையாக விதை சேகரிக்கும் கலையைத்தான் தாய்ப் பறவை கற்றுத் தருகிறது.

அதோடு நட்கிரேக்கர் பறவை இயற்கைக்கு மிகப் பெரிய தொண்டையும் செய்கிறது. தீயினாலும், இயற்கைச் சீற்றத்தாலும் அழியும் பைன் மரங்களைப் பாதுகாப்பவை நட்கிரேக்கர் பறவைகள் தான். இவை புதைத்து வைக்கிற விதைகள் முளைத்துத்தான் பைன் மரம் மீண்டும், மீண்டும் முளைத்து வளர்கிறது. பைன் மரம் இல்லையென்றால் நட்கிரேக்கர் இல்லை. நட்கிரேக்கர் இல்லையென்றால் பைன் மரம் இல்லை.

ஞாபக சக்திமிக்க நட்கிரேக்கர் பறவையை இனிமேல் நம்மால் மறக்க முடியுமா

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

செய்தி வேளையில் உள்நுழைந்த நாயினால் ஏற்பட்ட வினை (வீடியோ இணைப்பு)

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று திடீரென அவ்விடத்திற்கு வந்தமையினால் செய்தியாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவில் இயங்கிவருகின்ற ஒரு தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தவேளையில் செய்தி வாசிப்பாளரின் பின் பக்கத்திலிருந்து தீடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பயந்துப்போன குறித்த செய்தி வாசிப்பளாரான பெண்  அதைச் சமாளித்து செய்தியினை தொடர முயற்சித்த வேளையில் குறித்த நாய் மேசையின் மீது ஏறி முயற்சி செய்த காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.


குறித்த நாயின் செய்த வேளையினால் செய்திசேவை 15 நிமிடங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/CreativeTwitz

கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு விஷயத்தைப் பிரபலப்படுத்தி விடுகிறார்கள்!

twitter.com/thoatta

பொறந்தவீட்ல கத்திச்சண்டை போட்டுக்கிட்டிருந்த தேவசேனா, புகுந்தவீட்ல தலைல தீச்சட்டிய தூக்கிட்டு அலையுது, இவ்வளவுதான் இந்தியக் கல்யாணம் :(

p112a.jpg

twitter.com/the_kadavul

கடவுள் இருக்காரா, இல்லையானு கேட்கிறவங்க,  வீட்டுக்குப் போனீங்கனா ஒரு ஜீவன் “சாப்பிடுறியா”னு கேட்கும். அதுதாங்க கடவுள்.

twitter.com/twittornewton

எல்லா நெறிகளுக்கும் குறள் தந்தவர் வள்ளுவர். எல்லா உணர்வுகளுக்கும் இசை தந்தவர் ராஜா. எல்லா நிகழ்வுகளுக்கும் காமெடி தந்தவர் வடிவேலு!

twitter.com/tvignesh46

பார்த்துக் கொண்டிருப்பது பாட்ஷா படம் என்றுகூட தெரியாமல் தில்லானா தில்லானா பாடலுக்காகக் காத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை!

twitter.com/BoopatyMurugesh

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - மீம் கிரியேட்டர்கள் சங்கம்!

twitter.com/balasrivaishu

காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும் தெரிந்து விடுகின்றன. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் மட்டும் தெரிவதில்லை.

twitter.com/sundartsp

நடிகர்களுக்கு வயசாவதைவிட, ரசிகர்களுக்கு வயசாவதுதான் அவர்களுக்கு பெரிய பிரச்னை!

p112b.jpg

twitter.com/HAJAMYDEENNKS

ஆவியைக் கண்டு பயப்படுவது போல்,  தமிழகத்தில் காவியைக் கண்டு பயப்படுகின்றனர் - தமிழிசை
#இப்படி நீங்களே கலாய்ச்சுக்கிட்டால் நாங்க என்ன பண்றது.

facebook.com/Ram Vasanth

English Writers Forum ன்ற குருப்புல நான் இருக்கும்போது... நீ  ஏன் தலைவா அரசியலுக்கு வரக் கூடாது?

twitter.com/withkaran

முன்ன ஃபெயிலானாலும் முன்னேறலாம்னு சொல்லிட்டு இருந்தாய்ங்க... இப்ப
என்னடான்னா ஃபெயிலானாத்தான் முன்னேற முடியும்ங்கிற ரேஞ்சுல போறாய்ங்க.

twitter.com/HAJAMYDEENNKS

திங்கள்கிழமை காலையில பணம் போடவோ எடுக்கவோ பேங்குக்குப் போறது, சின்ன வயசுல பள்ளிக்கூடத்துக்கு போன மாதிரியான எரிச்சல் உணர்வையே கொடுக்கிறது!

twitter.com/saravananucfc

குழந்தைகளுக்குச் சொல்லப்படும் அத்தனை அழகான கதைகளை விடவும்  அழகு. அவுங்க கதைக்கு கூடவே ``உ” கொட்றது.

twitter.com/latha_Bharathy

தன் பக்கம் ஆதரவாய் அப்பா நிற்பது தெரிந்த பின்னரே அம்மாவுடனான சண்டையில் வலு கூட்டுகின்றன பெண் குழந்தைகள்.

twitter.com/saravananucfc

இப்பலாம் ஆகச் சிறந்த அவமானங்கள் பட்டியலில் வயசுப் பசங்க/பொண்ணுங்ககிட்ட டச் போன் இல்லாததும் சேர்ந்துவிட்டது.

p112c.jpg

twitter.com/jeytwits

உடம்பு அந்தரத்தில் மிதக்க, பெரிதாய் தியானம் செய்யத் தேவையில்லை.. கவர்மென்ட் பஸ்ஸின் கடைசி சீட்டில் பயணம் செய்தாலே போதுமானது.

facebook.com/Arun Dir

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு ரன்தான் வித்யாசம் எனில், அந்த வெற்றிக்கு என்ன மதிப்பிருக்கிறது? அல்லது, அந்தத் தோல்வியில்தான் அவமானப்பட என்ன இருக்கிறது? #IPL

twitter.com/Hrithikmrp

EBக்கு போன் பண்ணி 'மழை  நின்னு 8 மணி நேரம் ஆச்சு; எப்ப கரன்ட் வரும்'னு கேட்டா, 'உன் போன்ல இன்னுமா சார்ஜ் நிக்குது? என்ன மாடல்?'னு கேக்குறான்.


p112d.jpg

மெஷின் லேர்னிங் மூலம் மேஜிக் காட்டிய கூகுளின் I/O டெவலப்பர் கான்ஃபரன்ஸ்தான் கடந்த வார ஆன்லைன் ட்ரெண்ட். ஒரு கடையின் பெயர்ப் பலகையை மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்தாலே, அதுபற்றிய விவரங்களைக் காட்டும் கூகுள் லென்ஸ், மொபைல் இல்லாமலே இயங்கும் VR ஹெட்செட், ஐபோனிற்குள் அடியெடுத்து வைக்கும் கூகுள் அசிஸ்டென்ட், ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு ஓ, குறைந்த மெமரியில் இயங்கும் ஆண்ட்ராய்டு கோ என வெரைட்டி காட்டியது கூகுள். மொபைல் கேமரா மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகிய இரண்டையும் மிக்ஸ் செய்து அடித்த கூகுள் லென்ஸ்தான் இந்த நிகழ்வின் ஹைலைட்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஶ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்!

 
 

ந்துமதத்தை மதம் சார்ந்ததாக இல்லாமல் ஆன்மிக வாழ்நெறியாகவும், பாரத தேசத்தை புண்ணிய பூமியாகவும் மாற்றிய ஆளுமைமிக்க ஆன்றோர்கள் பலரும் அவதரித்த பூமி இது. இவர்களில் சுவாமி விவேகானந்தருக்கு தனித்துவமான இடம் உண்டு. சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொண்ட பிறகு கையில் பணமோ உடைமைகளோ எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆன்மிக அன்பர்கள் தரும் அன்போடுதரும் உணவுகள், செய்து தரும் ஏற்பாட்டில் மட்டுமே தன் வாழ்நாளைக் கழித்தவர். ஒருமுறை அவர் உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் இருந்த பெட்டியில் பெரும் செல்வந்தரான வியாபாரி ஒருவரும் பயணித்தார்.

விவேகானந்தர்

இந்த தனவானுக்கோ சந்நியாசிகளை சாதுக்களை அறவே பிடிக்காது. உழைக்காமல் சோம்பித்திரிபவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர். அதனால், தொடக்கத்திலேயே விவேகானந்தரை ஏதோ பார்க்கக்கூடாததை பார்ப்பது போல் அலட்சியப் பார்வையை வீசினார்.

சுவாமிஜிக்கு தண்ணீர் தாகமாக இருந்தது. நேரமோ சென்று கொண்டிருந்தது. ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்போது தண்ணீர் கொண்டுவந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனவானோ தேவையான அளவு தண்ணீரை வாங்கிப் பருகிக்கொண்டே, ‘பார்த்தீர்களா? சுவாமிஜி! பச்ச தண்ணீர்கூட வாங்க வழியில்லாமல் பூமிக்கு பாரமாக நீங்களெல்லாம் ஏன் இருக்கிறீர்கள்?’ என்று சுவாமிஜியை கேலி செய்தார். சுவாமி விவேகானந்தர் எதையும் கண்டுகொள்ளவில்லை. 

விவேகானந்தர் பாறை

ரயில் இவர்கள் இறங்க வேண்டிய ஊரான தாரிகாட் என்னுமிடத்தை வந்து அடைந்தது. சுவாமிஜியும் தனவானும் இறங்கினார்கள்.சுவாமி விவேகானந்தரோ அங்கிருந்த பயணிகள் தங்கும் அறைக்குப் போனார். அங்கும் அவரைக் கேவலமாகப் பேசி விரட்டினர். 
தனவானோ அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பூரி, லட்டு என தின்பண்டங்களை வெளுத்துக்கட்ட தொடங்கினார். விவேகானந்தரைப் பார்த்து பார்த்தீரா? இனியாவது போய் எங்காவது உழைத்து சாப்பிடு என்று பரிகாசம் செய்தார்.

 

அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ  ஒரு ஆசாமி சாப்பாடு, தண்ணீர் மற்றும் படுக்கை விரிப்புடன் அங்கு வந்தார். அங்கிருந்த மரநிழலில் விரிப்பை விரித்து, அன்போடு சுவாமிஜியை அழைத்து வந்து அமரச் செய்து உணவு பரிமாறினார்.
சுவாமிகள் அந்த அன்பரை விசாரிக்க அவரோ தூங்கிக்கொண்டிருந்த ஶ்ரீராமன் தன் கனவில் வந்து தங்களை உபசரிக்கும்படி கூறினார். 'நானோ கனவுதானே' என்று இருந்தேன். அவர் மறுமுறையும் கனவில் வரவே புறப்பட்டு வந்தேன் எனக் கூறவே சுவாமிஜி ஶ்ரீ ராமன் நிகழ்த்திய அற்புதத்தை எண்ணி வியந்தார். அவர் மட்டுமா? அங்கு கூடி இருந்தவர்கள் அனைவருமே வியந்தனர். அதில் முதல் ஆளாக ஆச்சர்யப்பட்டு வியந்து போனவர் அந்த தனவான்தான்.

சுவாமிஜியின் பெருமையை உணர்த்துவதற்காகவே பகவான் ஶ்ரீராமன் நிகழ்த்திய அற்புதம் அல்லவா? உடனே அவர் சுவாமிஜியின் காலில் விழுந்து வணங்கி அவரது தவ வலிமைக்கு வந்தனம் செய்தார். 

 

கடவுள் அநேக வேளைகளில் நம்மைத் தேடிக் கொண்டு வருகிறார். ஆனால், நாம்தான் வீட்டைப்பூட்டிவிட்டு வெளியில் போய் விடுகின்றோம். மகான்கள் ஒவ்வொரு நிமிடமும் இறை பக்தியிலும் அவர் மீதான நம்பிக்கையிலும் துளியும் சந்தேகம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நாமும் இருந்தால் நிச்சயம் நம்முடைய வாழ்விலும் மறைபொருளாக வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வீட்டைத் திறந்து வைத்து விட்டு காத்திருந்தால் கடவுள் வாராரோ இல்லையோ, பூட்டி போட்டுப் போனதுக்கு அப்புறம்தான் கள்ளன் வந்து போகிறான்....!  tw_blush:

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Text und Nahaufnahme

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.

பல்லாயிரக்கணக்கான படங்கள்..
பலதரப்பட்ட பாத்திரங்கள்..
அற்புத நடிப்பாற்றல்..
வெள்ளந்தி மனம்...

மனோரமா தன் நடிப்பினால் எங்கள் மனங்களில் நிரந்தர இடம்பிடித்த நடிப்புலக அம்மா, இப்போதும் உயிரோடிருந்திருந்தால் இன்று தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்

 

 

கோபிசந்தா டூ ஆச்சி... தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு அரசாட்சி! #Manorama

 

கோபிசாந்தா என்னும் அந்தச் சிறுமியின் தந்தை ராஜமன்னார்குடியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மிகுந்த செல்வச்செழிப்புமிக்க ரோடு கான்ட்ராக்டர். பிறக்கும்போதே `பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட வளம்கொழிக்கும் குடும்பத்தில் 1943-ம் ஆண்டு, மே 26-ம் தேதி பிறந்த மாணிக்கம்தான் கோபிசாந்தா. ஆனால், என்று கோபிசாந்தாவின் அம்மா, தனது தங்கையை இரண்டாம் தாரமாக தன்னுடைய கணவருக்குத் திருமணம் செய்துவைத்தாரோ, அந்தத் தருணம் அவர்களது வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டது. சொந்த அக்காவையும் அக்கா பெற்ற மகளையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார் அந்தச் சித்தி. அப்பாவும் அதற்குத் துணை. ஒருகட்டத்தில் துன்பம் பொறுக்க முடியாத தாயார், வீட்டிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்ய முயன்றார். அதிலிருந்து மீண்டவர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடைக்கலம் தேடி சென்ற இடம் காரைக்குடிக்கு அருகில் அமைந்துள்ள பள்ளத்தூர். அந்த ஊர்தான் அவர்களுக்கு வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தது. கோபிசந்தாவுக்கு சினிமா உலகில் `ஆச்சி' என்னும் அடைமொழியையும் கொடுத்தது. ஊசிமுள்ளாகக் குத்திய வலிகளைத் துடைத்தெறிந்துவிட்டு, பார்க்கும் ஒவ்வொருவரையும் சிரிக்கவைத்து தமிழ் சினிமாவின் சகாப்தமாக நிலைத்துவிட்ட கோபிசந்தாவுக்கு, வெள்ளித்திரை கொடுத்த பெயர் ‘ஆச்சி’ மனோரமா. அவரது பிறந்த நாள் இன்று.

ஆச்சி மனோரமா

பள்ளத்தூரில் வாழ்க்கையைத் தொடங்கிய மனோரமாவின் அம்மா, சிறிய பலகாரக் கடையை நடத்தி, இருவரது ஜீவனத்தையும் நடத்திவந்தார். செல்வவளத்தைப் பறித்துக்கொண்டாலும், கடவுள் மனோரமாவுக்கு அறிவுவளத்தையும் குரல் வளத்தையும் அள்ளிக் கொடுத்திருந்தார். அந்தக் குரல்வளம், 12 வயதிலேயே மேடை நாடக வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அதே மேடையில் `மனோரமா' என்னும் பெயரும் அவருக்குக் கிடைத்தது. தெளிவான வசன உச்சரிப்பு, கேட்போரை ஈர்க்கும் குரல்வளம், சிறந்த நடிப்பு, பாட்டுத்திறன் எல்லாமே மனோரமாவை உச்சத்தில் கொண்டுவைத்தன. திராவிட இயக்க நாடகங்களில் மனோரமா நிச்சயம் இருப்பார்.

ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கருணாநிதியுடன் இணைந்து மேடை நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா., என்.டி.ஆர் ஆகியோருடன் திரைப்படங்களில் சரிக்குச் சமமாக நடித்தார் மனோரமா. 5,000-க்கும் மேற்பட்ட நாடக மேடைகள், 1,200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்... மனோரமாவின் நடிப்புத் திறமைக்குக் கட்டியம் சொல்கின்றன இந்த எண்ணிக்கை. 

நாடகங்களில் ஜொலித்துக்கொண்டிருந்த மனோரமாவை, திரைத் துறையில் கால் பதிக்கவைத்தவர் கவியரசு கண்ணதாசன். 1958-ம் ஆண்டு தான் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் மனோரமாவை அறிமுகப்படுத்தினார் கண்ணதாசன். 1963-ல் `கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் நாயகியானார்.  ஆனால், மனோரமா என்னும் நகைச்சுவை அரசியின் வாழ்க்கையில் மைல்கல் இன்றளவும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம்தான்.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், சோ, நாகேஷ் என எத்தனை ஜாம்பவான்கள் படத்தில் இருந்தாலும், அத்தனை பேருடைய நடிப்பையும் தாண்டி மனோரமாவின் நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றேதீரும். `வா வாத்தியாரே வூட்டாண்டே...' என்று சென்னைத் தமிழில் பாடும் மனோரமாவால், அப்படியே மாற்றி “ஏன்னா... வாங்கிண்டுதான் வாங்கோளேன்” என அய்யராத்து பாஷையையும் வெளுத்துக்கட்ட முடியும். காலம் அவரை சகலகலா வித்தகியாக மாற்றியிருந்தது.

ஆச்சி மனோரமா

கதாநாயகி, குணச்சித்திர நடிகை, அம்மா, பாட்டி என மூன்று தலைமுறைகளுக்கும் மேற்பட்ட நடிகர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. `கம்முனு கெட' இன்றும் ஆச்சி ரசிகர்களின் டிரேட் மார்க் டயலாக். கடினமான பூர்விக வாழ்க்கை, கசந்துபோன குடும்ப வாழ்க்கை இரண்டையுமே என்றும் அவர் தனது நடிப்பில் காட்டியதில்லை என்பதுதான் மனோரமாவின் ப்ளஸ் பாய்ன்ட். தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதை சரியாகப் புரிந்துவைத்திருந்த ஆச்சியின் மனமுதிர்ச்சி, நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம்.

“ஆண்களின் அதிகார உலகம்” என்று வர்ணனை செய்யப்படும் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக, அதுவும் நகைச்சுவை நடிகையாக அரை நூற்றாண்டு காலம் அரியணையை அலங்கரித்திருந்தார் மனோரமா. பத்ம ஸ்ரீ, கின்னஸ் சாதனை, கலைமாமணி, மக்கள் கலை அரசி... இப்படி எத்தனை எத்தனையோ விருதுகள், மனோரமாவின் சினிமா சிம்மாசனத்துக்கு அழகு சேர்த்தன. 

“கதாநாயகிக்கு சினிமா ஃபீல்ட் ரெண்டு, மூணு வருஷம்தான். காமெடி நடிகையானால் ஆயுசுக்கும் நீ நடிகைதான்” மனோரமாவை வெள்ளித்திரையில் மின்னவைத்த கண்ணதாசன் சொல்லிய வார்த்தைகள் இவை. இதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு ஒருமுறை மனோரமாவே நெகிழ்ந்திருக்கிறார். இன்பம் துன்பம் இரண்டையும் தராசு தட்டில் சரியாகப் பங்கிடத் தெரிந்த மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது மிகப் பொருத்தம். அரை நூற்றாண்டு சாதனை போதும் என்பதாலோ என்னவோ, அந்த அதிசய மனுஷி நம்மிடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு விடை பெற்றுக்கொண்டார்.

 

என்றேனும் உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் எழுந்தாலோ மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். இளமையில் வறுமை, பதினைந்து நாள்கள் மட்டுமே நீடித்த மணவாழ்க்கை... என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள், அதையே அவர் படிக்கற்களாக மாற்றிக்கொண்ட திறமை, புடம்போட்ட தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறுவலிக்க சிரிக்கவைத்த நகைச்சுவை உங்களை ஒரே நொடியில் வாழ்க்கைமீது அதீத காதல்கொண்டவர்களாக மாற்றிவிடும். அன்பான பாட்டியாக, ஆதரவான அம்மாவாக, தோழியாக, ஆசிரியராக நம்மை சிரிக்கவைத்த அந்த அற்புத மனுஷிக்கு, மரணமே கிடையாது... ஆச்சியின் அரசாட்சி என்றும் தொடரும்!

http://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரண்டு இளம் தலைவர்கள் சந்தித்தால் இப்படித்தான் நடக்கும்!

 

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் சந்தித்து சிறிது நேரம் நடைபயணம் மேற்கொண்டு உரையாடினர்.

macron

அண்மையில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று அதிபராக பொறுப்பேற்றார் இமானுவேல் மக்ரான். 39 வயதான இவரே பிரான்ஸின் இளமையான அதிபராவார். அதேபோல 45 வயதான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் உலக அளவில் சிறப்பாக பணியாற்றும் இளமையான தலைவர் என்று புகழப்படுகிறார். இவர் கடந்த மாதம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே இவ்விரு தலைவர்களும் இத்தாலியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். அப்போது இருவரும் சில தூரம் தனியாக நடைபயணம் மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த பூங்காவில் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த இருஇளம் தலைவர்கள் நட்புடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"வாழ்க்கை ஒரு வட்டம்" - ட்ரம்ப் ட்வீட் தந்த ட்விஸ்ட்!

 
 

ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப்

ர் அரசன் சட்டம் இயற்றுகிறான் அல்லது மற்ற நாட்டவரை விமர்சிக்கிறான் என்றால், அந்த விஷயத்தில் அவன் வலிமையானவனாக இருக்கிறான் என்றுதான் அர்த்தம். ஆனால் அது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விஷயத்தில் தலைகீழ். எதைத் தவறு என்று ட்ரம்ப் விமர்சித்தாரோ அதையே அவரது மனைவியும், மகளும் செய்து ட்ரம்ப்-ஐ தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று 100 நாள்களுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த நிலையில், அவர் தனது முதல் அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியாவுக்குச் சென்றார். மனைவி மெலானியாவுடன் சவுதி அரேபியா வந்து இறங்கிய ட்ரம்ப்-ஐ அந்த நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வரவேற்றார். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மே 20, 2017 சனிக்கிழமை அன்று சவுதி அரேபியாவுக்குச் சென்றார் ட்ரம்ப். அப்போது, இஸ்லாமியர்கள் வழக்கமாக அணியும் 'பர்தா' எனப்படும் தலையங்கியை ட்ரம்ப்பின் மனைவி மெலானியா அணியவில்லை. அவர் வழக்கமான அவரது நேர்த்தியான உடையிலேயே வந்திருந்தார். மெலானியாவைப் பொறுத்தவரை அவர் முன்னாள் 'மாடல்' என்பதால் அவருக்கு எந்த உடையும் கச்சிதமாகப் பொருந்தும். அதுபோன்ற சவுதிஅரேபியப் பயணத்தின்போதும் மெலானியா உடை அணிந்திருந்தார். இத்தகைய சூழலில், சவுதி அரேபியாவுக்கே உரிய வழக்கமாக பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஆடைகளையே அணிவர். அது மட்டுமல்லாமல், தலையங்கியும் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுதான் அந்நாட்டு வழக்கம். ஆனால், மெலானியா தலையங்கி அணியவில்லை. என்றாலும், அந்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில், 'மெலானியா அணிந்திருந்தது ஒரு கண்ணியமான உடைதான். அதைப் பார்க்கும்போதே அபையா அணிந்திருப்பதுபோலத் தான் காட்சியளித்தது' என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், ட்ரம்ப் மனைவியின் ஆடை பற்றி பல மதிப்புமிக்க விமர்சனங்களும் வந்துள்ளன. தலையங்கி அணியாமல் சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களில் மெலானியா முதல் பெண்ணல்ல. ஏற்கெனவே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவும் தலையங்கி அணிந்தது இல்லை. மற்ற பெண் தலைவர்களான  பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரும் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது, தலையங்கி அணியவில்லை.

இதுவரை சவுதி அரேபியாவுக்குச் சென்ற பெரும்பாலான பெண் தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களின் மனைவிகளும் தலையங்கிகள் அணிந்தது கிடையாது. ஆனால், 2015 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஓபாமா மனைவி மிச்சல் ஓபாமா தலையங்கி அணியாமல் சவுதி அரேபியாவுக்குச் சென்றதை, ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில், "ஒபாமா மனைவி தலையங்கி அணிய மறுத்ததைப் பலரும் பாராட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு அவமானப்பட்டிருக்கிறார்கள். இப்போது இருக்கும் எதிரிகளே போதும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ட்ரம்ப் அப்போது பதிவிட்டதை பலரும் இப்போது பேசி வருகின்றனர்.

2015-ல் ட்ரம்ப் செய்த ட்வீட்

 

மெலானியாவின் உடை மற்றும் தலையங்கி பற்றி வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "பெண்கள் அபையா அணிவது முக்கியமானது என்று கருதும் ஒரு நாடு சவுதி அரேபியா. மெலானியாவுக்கு உடை தயாரித்தவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஸ்டெல்லா மெக்கார்ட்னி என்பவர்தான். அவர் கறுப்பு நிறத்தில் நீள கவுன், தங்க நிறத்திலான பட்டை (belt), கைகளில் தங்க நிறத்திலான பட்டன் ஆகியவற்றை வைத்து மிக நேர்த்தியாக உருவாக்கியிருந்தார். மெலானியாவைப் பொறுத்தவரை, அவர் சென்ற இடத்துக்கு ஏற்றவாறுதான் உடை அணிந்திருந்தார். மேலும், அவர் தலையங்கி அணிய வேண்டியத் தேவையில்லை. அதுமல்லாமல், யாரும் அவரை தலையங்கி அணியும்படி கட்டாயப்படுத்தவும் இல்லை" என்று தெரிவித்தார்.

மெலானியாவுடைய உடை பற்றிய விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அவர் ட்ரம்பின் கையை தட்டிவிட்டதுதான் வைரலாகப் பரவி வருகிறது. இஸ்ரேல் விமான நிலையத்தில் இறங்கியது முதல் மெலானியாவை ட்ரம்ப் கண்டுகொள்ளவே இல்லை. மீடியா மற்றும் பத்திரிகை அருகில் வருவதைப் பார்த்த ட்ரம்ப் உடனே மெலானியாவின்  கையைப் பிடிப்பதற்காக தன் கையை நீட்டினார். ஆனால், மெலானியா அதை தட்டிவிட்டார். இந்தச் செயல், செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களின் வீடியோவில் பதிவானது. இப்படி, ட்ரம்ப் என்ன செய்தாலும் சர்ச்சை மற்றும் வைரலுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார். வெளிநாட்டில், ட்ரம்ப் உடன் கைகோக்க அவரது மனைவி மறுத்தது, மிச்சல் ஒபாமாவை ட்ரம்ப் விமர்சனம் செய்த நிலையில், அவரது மனைவியே தலையங்கி அணியாமல் சென்றது போன்ற விஷயங்கள் அவரது முதல் வெளிநாட்டுப் பயணத்தில் மிகப் பெரிய மைனஸ் தான்.

ட்ரம்ப் தொடர்புடைய இந்த சர்ச்சைகளை நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு விட்டு வைக்காமல், ஏராளமான மீம்ஸ்களைப் போட்டு விமர்சித்து வருகிறார்கள்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கிரேக்கத்தில் ஒரு தீமிதி திருவிழா

கிரேக்க கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சாமியாட்டம், சன்னதம், பிரார்த்தனை, சிலையெடுப்புடன் கூடிய தீமிதி திருவிழா காட்சிகள்

  • தொடங்கியவர்

 

படமெடுத்தவாறே ஜீவ சமாதி

நாகபாம்பு ஒன்று படமெடுத்தவாறே ஜீவ சமாதியாகியுள்ளமை இங்கு காணலாம்.

  • தொடங்கியவர்

பஸ்சை இழுத்த பேராண்மை சீனர்!

 

 

கொசகொசவென சிக்கலான நூடுல்ஸை குச்சியில் குத்தி தின்னும் சீனர்கள், யோசிப்பதே மீட்டருக்கு மேல ரகத்தில்தான். அதிலும் குங்பூ மாஸ்டர்களின் சாதனைகளெல்லாம் ஏன் இப்படி? என்ற விநோதரச மஞ்சரி கேட்டகிரியில் வருபவைதான்.
24.jpg
சீனாவின் குவாங்டாங் பகுதியைச் சேர்ந்த குங்பூ மாஸ்டர் ஹூயூசு செய்த சாதனையைத்தான் உலகில் பலரும் கிச்சுகிச்சு சிரிப்போடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் என்ன காரியம் செய்தார் தெரியுமா? சிம்பிள். பஸ்ஸை இழுத்தார். அவ்வளவுதான். கயிற்றால் அல்ல. தன் ஆண் உறுப்பால் என்பதுதான் சீனா முழுக்க குருவின் புகழ் தீயாய் பரவக் காரணம். பஸ்ஸை பல்லைக்கடித்துக் கொண்டு தம் கட்டி 6 அடி தொலைவுக்கு கட்டி இழுத்து சாதித்திருக்கிறார் மாஸ்டர் ஹூயூசூ. பஸ்ஸின் எடை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 13 டன்கள்! 

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

 

| நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.