Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

தைவான் நாட்டின் மிருகக் காட்சி சாலையொன்றில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துள்ளார். அவரை அங்கு எதிர்பாராத சிங்கங்கள் எப்படி நடந்து கொண்டன, அவர் காப்பற்றப்பட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...    

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

placeholder

placeholder

செல்ஃபி புள்ள சமந்தா

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் சூப்பர்.  இப்படி வாரத்துக்கு 7 முறை சமந்தா படங்களை இணைங்க! tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
இந்தியாவில் மட்டும் தான் இது நடக்கும்...கூகுளின் நெகிழ வைக்கும் படம்!
 

அக்டோபர் 10ம் தேதி சனிக்கிழமை அன்றைய ஒரு நாளை தேர்வு செய்து மொபைல் வீடியோவாகவோ, அல்லது கேமராக்களிலோ அழகிய படமாக எடுத்து ஒரு நாளில் இந்தியா (INDIA IN A DAY) என்ற தலைப்பில் கூகுள் உருவாக்க உள்ள முழு நீளப்படத்தில் பங்களிப்பளிக்கும்படி கூகுள் அறிவித்தது. இதனையடுத்து பலரும் இந்தியாவின் தங்கள் ஒரு நாளை படமாக எடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்தப்படம் குடியரசு தின சிறப்பாக வெளியாக உள்ளது. இந்தப்படத்தை இயக்குகிறார் ரிச்சி மேத்தா. இணை தயாரிப்பாளராக அனுராக் கஷ்யப். ரிட்லி ஸ்காட், மற்றும் முழு படமும் உங்களால் உருவாக்கப்பட்டது என டைட்டிலில் விழுகிறது. இந்தியாவுக்கு பல முகங்கள் உள்ளன, பல பாஷைகள் உள்ளன. ஆனாலும் இந்தியர்களுக்குள் மட்டும் தான் பகிர்தல் , நட்பு, உறவு, ஏன் நட்பைக் கூட உறவாக பார்க்கும் பாங்கு இருக்கிறது.

india-in-a-day-2-1050x555.png

 கலாச்சாரம், இலக்கியம், மனிதம் இப்படி இந்தியாவின் பல முகங்களை விளக்கப் போகிறது அந்தப் படம். முதற்கட்டமாக இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் இளைஞன் ஒருவர், தன் கிராமத்தில் தான் மட்டுமே படித்தவர், தான் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் என்கிறார், இன்னொருவரோ இதுதான் எங்கள் வீடு. எங்கள் ஏரியாவில் இண்டெர்நெட் கிடையாது. ஒரு வைபை கனெக்‌ஷனில் ஐந்து குடும்பங்கள் பகிர்ந்துகொண்டு பயன்படுத்துகிறோம் என இந்தியாவின் சில எதிர்மறையான முகங்களாக இருந்தாலும் அதையும் நேர்மறையாக மாற்றிக்கொள்ளும் இந்தியர்களை பிரதிபலிக்கிறது அந்த முன்னோட்டம். ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ள முழுமையான ஆவணப்படத்திற்கு இணையதள வாசிகள் பலரும் காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.இந்தியாவில் பிறந்ததற்கு நான் பெருமைப் படுகிறேன் என்ற வாசகமும் கொண்டுள்ளது அந்த 3 நிமிடங்கள் 54 நொடிகள் கொண்ட வீடியோ! 

 முன்னோட்டத்தைக் காண: 

vikatan.com

  • தொடங்கியவர்
1 hour ago, வாலி said:

வாவ் சூப்பர்.  இப்படி வாரத்துக்கு 7 முறை சமந்தா படங்களை இணைங்க! tw_blush::rolleyes:

நன்றி வாலி உங்கள் கருத்துகளுக்கு..:):grin:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொல்வனம்

கடவுளாக விருப்பமா?

கடவுள்
ஒருநாள் மனிதர்களைப்
பார்த்துக் கேட்டார்
'உங்களில் யாருக்குக்
கடவுளாக விருப்பம்?'
எல்லோருமே கையை உயர்த்தினார்கள்
ஒருவன் மட்டும் நின்றிருந்தான்
ஏனென்று கேட்டதற்கு
அவன் சொன்னான்,
'கடவுளாகிவிட்டால்
வரங்களிலும் சாபங்களிலுமே
வாழ்க்கை கழிந்துவிடும்' என்று!

விகடன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள் - மந்திரி பூதம்

விளக்கைத் தேய்த்ததும் வெளிவந்த பூதம், “என்ன வேண்டும் எஜமானரே... தங்கமா, பணமா?” என்று கேட்க, “அதெல்லாம் நானே சம்பாதிச்சுட்டேன். மாட்டிக்காம மட்டும் பார்த்துக்கணும்” என்றார் மந்திரி!

 
Vikatan EMagazines Foto.
  • தொடங்கியவர்

mohit-sharma-cover.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக மொஹிட்  சர்மா தனது மனக்கவர் காதலியான ஸ்வேதாவுடன்  வெகுவிரைவில்  திருமணபந்தத்தில் இணையவுள்ளார் .

மொகித் சர்மாவிற்கும் ஸ்வேதாவிற்கும் நேற்றுக்கு முன்தினம்  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார்.

virakesari

  • தொடங்கியவர்

 

வெள்ளி ஏன் சூரிய குடும்பத்தின் விசேஷ கோள் என்று அழைக்கப்படுகின்றது?

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 20

 

648varalru.jpg1265 : இங்­கி­லாந்து நாடா­ளு­மன்றம் தனது முத­லா­வது கூட்­டத்தை வெஸ்ட்­மினிஸ்டர் அரண்­ம­னையில் நடத்­தி­யது.

 

1523 : டென்மார்க், நோர்­வேயின் மன்னர் பத­வியில் இருந்து சுவீடன் மன்னர் இரண்டாம் கிறிஸ்­டியன்  அகற்­றப்­பட்டார்.

 

1649 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்­ன­ருக்கு எதி­ராக தேசத்­து­ரோகக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

 

1783 : பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகி­யன புரட்சிப் போரை முடி­வுக்குக் கொண்டு வரும் வகையில் சமா­தான உடன்­பாட்டில் கைச்­சாத்­திட்­டன.

 

1788 : இங்­கி­லாந்தில் இருந்து கைதி­களை ஏற்­றிக்­கொண்டு வந்த முதல் தொகுதி கப்­பல்­களின் மூன்­றா­வது கப்பல் அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சௌத் வேல்ஸின் பொட்­டனி விரி­கு­டாவை அடைந்­தது.

 

1795 : பிரெஞ்சுப் படைகள் நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டாம் நகரைக் கைப்­பற்­றின.

 

1839 : யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலி­வியா கூட்டுப் படை­க­ளுடன் இடம்­பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்­றது.

 

1841: பிரித்­தா­னி­யா­வினால் ஹொங் கொங் தீவு கைப்­பற்­றப்­பட்­டது.

 

1887 : ஹவாயின் பேர்ள் துறை­மு­கத்தை கடற்­ப­டைத்­த­ள­மாகப் பாவிப்­ப­தற்கு அமெ­ரிக்க செனட் அனு­ம­தி­ய­ளித்­தது.

 

1892 : முத­லா­வது அதி­கா­ர­பூர்­வ­மான கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டு அமெ­ரிக்­காவின் மசா­சுசெட் இடம்­பெற்­றது.

 

1936 : எட்டாம் எட்வேர்ட் ஐக்­கிய இராச்­சிய மன்­ன­னாக முடி­சூ­டினார்.

 

1929 : வெளிப்­புறக் காட்­சி­களைக் கொண்ட முத­லா­வது முழு-­நீளத் திரைப்­படம்  In Old Arizona திரை­யி­டப்­பட்­டது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னிய வான்­ப­டை­யினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்­டு­களை வீசினர்.

 

1945 : ஹங்­கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்­வ­தாக அறி­வித்­தது.

 

1948 : கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து மகாத்மா காந்தி உயிர் தப்­பினார்.

 

1969 : கிழக்குப் பாகிஸ்தான் பொலி­ஸா­ரினால் மாணவர் ஒருவர் கொல்­லப்­பட்டார். இதனால் ஏற்­பட்ட கிளர்ச்­சி­களும் பங்­க­ளாதேஷ் விடு­தலைப் போராட்­டத்­துக்கு பங்­காற்­றின.

 

1981 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின்  ஜனா­தி­ப­தி­யாக 69 வய­தான ரொனால்ட் ரீகன் பத­வி­யேற்றார். அதிக வயதில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றவர் இவர்.

 

1981 : அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ரொனால்ட் ரீகன் பத­வி­யேற்ற 20 நிமி­டங்­களில் ஈரான் தான் 444 நாட்­க­ளாகப் பிடித்து வைத்­தி­ருந்த 52 அமெ­ரிக்க பணயக் கைதி­க­ளையும் விடு­வித்­தது.

 

1990 : அஸர்­பை­ஜா­னிய சுதந்­தி­ரத்­துக்கு ஆத­ர­வான போராட்டம் சோவியத் இரா­ணு­வத்­தி­னரால் நசுக்­கப்­பட்­டது.

 

1992 : பிரான்­ஸி­லுள்ள மலை­யொன்றில்  விமா­ன­மொன்று மோதி­யது. விமா­னத்­தி­லி­ருந்த 96 பேரில் 87 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1999 : சீன அர­சாங்கம் இணை­யத்­தள பாவ­னை­களை கட்­டுப்­ப­டுத்­த­வுள்­ள­தாக  சீனச் செய்திச் சேவை அறி­வித்­தது.

 

1992 : பிரான்ஸில் பய­ணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்­கி­யதில் 85 பேர் கொல்லப்­பட்­டனர்.

 

2001 : பிலிப்­பைன்ஸில் இடம்­பெற்ற புரட்­சியில் ஜனா­தி­பதி ஜோசப் எஸ்ட்­ராடா பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டு, குளோ­ரியா அராயோ ஜனா­தி­ப­தி­யானார்.

 

2009 : அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பராக் ஒபாமா பத­வி­யேற்றார். அமெ­ரிக்­காவின் முத­லா­வது கறுப்பின ஜனாதிபதி இவராவார்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=648#sthash.FtzYEhaS.dpuf
  • தொடங்கியவர்

ஜனவரி 20: பஸ் ஆல்ட்ரின் எனும் சாகச காதலர் பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

பஸ் ஆல்ட்ரின் எனும் சாகச காதலர் பிறந்த தினம் இன்று; நிலவில் முதன்முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் நிலவுக்கு பயணம் போன இரண்டாவதாக இறங்கி நடந்த ஜீவன் இவர் தான் .

அமெரிக்காவில் பிறந்த இவர் படிப்பில் செம சுட்டியாக இளம் வயதிலேயே இருந்தார் ; ராணுவத்துக்கு போய் சாகசம்  செய்யவேண்டும் என அவர் எண்ணிய பொழுது அப்பா தடுத்து பொறியியல் பக்கம் அனுப்பினார். படித்து முடித்துவிட்டு விமானப்படையில் சேர்ந்தார்.

aldrein.jpg



கொரியப் போர்க்களத்தில் எண்ணற்ற சாகசங்கள் செய்து அளவற்ற சேதத்தை எதிரிப்படைகளுக்கு உண்டு செய்தார். இவர் மட்டுமே  இரண்டு மிக் விமானங்களை வீழ்த்துகிறார் . பின்  நாசாவில் இணைந்தார் ;அப்பொழுது விண்வெளிக்கு பயணம் போன குழுவில் பல்வேறு சோதனைகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது விண்வெளியில் ஆறு மணிநேரம் நடந்தார் -அதுவே அந்த காலத்தில் விண்வெளியில் நடக்கப்பட்ட அதிகபட்ச கால அளவு .

பின் அப்போல்லோ விண்கலத்தில் நிலவுக்கு போவதற்கு இவரும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் தெரிவு செய்யபட்டார்கள் ; ஆல்ட்ரின் தான் முதலில் இறங்குவதாக திட்டம். ஆனால், இவரின் ஆடையில் எதோ சிக்கல்கள் தோன்ற ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தார்.  அவருக்கு பின்னர் இவர் இறங்கினார்.

நிலவுப்பயணம் முடிந்து திரும்பியதும் இருவருக்கும்  விருது தரப்பட்டது .ஆனால், புகழ் வெளிச்சம் எல்லாம் ஆர்ம்ஸ்ட்ராங் மீதே விழுந்தது ; இவரை யாரும் சீண்டவில்லை. நிலவில் இரண்டாவதாக கால் வைத்தவர் என காரில் எழுதிக்கொண்டு திரிந்தார். குடித்து சீரழிந்தார்; மனப்பிறழ்வுக்கு உள்ளானார்; மணவாழ்க்கையும் முறிந்தது.

பின் மீண்டு வந்தார் அவரின் பெயரை சின்ன வயதில் ப்ரதர் ஆல்ட்ரின் என கூப்பிடாமல் சகோதரி பஸ்ஸர் ஆல்ட்ரின் என கூப்பிட அதையே சுருக்கி பஸ் ஆல்ட்ரின் என வைத்துக்கொண்டார் . குழந்தை போன்ற உற்சாகம் பீறிடுவதாக சொன்னார் ,அற்புதமான முன்னேற்ற நூல்களை எழுதினார் .

ஓய்ந்து போனதாக கருதப்பட்ட காலத்தில் டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்வில் பிரமாதமாக ஆடினார் அப்பொழுது வயது 58 !

தொண்டு நிறுவனம் தொடங்கி மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை இன்று வரை செய்து வருகிறார் .இரண்டாவதாக வருகிறவர்களை உலகம் கண்டு கொள்ளாது என்கிற எண்ணத்தை தகர்த்தெறிந்து மீண்டு வந்து நாட்டில் பல்வேறு இளைஞர்களை ஊக்குவிக்கும் மனிதராக உருவெடுத்த அவருக்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே.

vikatan

  • தொடங்கியவர்

#‎நெட்ஹிட்‬...

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, பாலியல் வல்லுறவு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
True. Knowledge is nowadays very important than money in this world.

12592736_1058441400881316_38883405250192

 

  • தொடங்கியவர்

12540617_668976396538239_631568475971680

ஹெல்மெட் மாட்டிய முதல் அம்பயர்!

ஆஸ்திரேலியா-இந்தியா இடையே இன்று நடந்து வரும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அம்பயர் ஜான் வார்ட் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நின்றார். சர்வதேசப் போட்டியில் பாதுகாப்புக்காக ஒரு அம்பயர் ஹெல்மெட் அணிந்து நிற்பது இதுவே முதல்முறை.

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

* சொல்வனம் *

ஆண்ட்ராய்டு எனும் கிராமம்

ஆண்ட்ராய்டு போனில்
பேட்டர்ன் லாக் எடுக்கும் பெண்
புள்ளிக்கோலம் போட்ட
சித்தியை நினைவூட்டுகிறாள்.

தெருமுக்கு அரசமரத்தின்
உச்சிக்கொம்பில் அமர்ந்து
மொத்தத் தெருவையும்
வேடிக்கை பார்ப்பதைப்போல்
இருக்கிறது பேஸ்புக்.

மணிச்சத்தம் கேட்டதும்
ஐஸ்வண்டியை நோக்கி ஓடியவன்தான்
வாட்ஸ்அப் ஒலித்ததும்
செல்போனை நோக்கி ஓடுகிறான்.

பெருமாள்கோயில் சங்கில்
வேண்டுதலைச் சொல்லிவிட்டு
நாம் சொன்னதைச் சங்கின் வழியே
கேட்டதுதான் டாக்கிங் டாம்.

மாலையில் கிழவிகள்
கூடிப்பேசும் பொரணியைப்போல்
தாமறிந்த செய்தியை
நொடிப்பொழுதில் ஊருக்கே
பரப்புகிறது ட்விட்டர்.

கவட்டையில் கல்வைத்து
காகத்தை அடித்த ஆட்டமும்
பொங்கச் சோறுக்காக
கோயிலுக்கு ஓடிய ஓட்டமும்
ஆங்க்ரி பேர்டு, டெம்பிள் ரன்.

நாம் தவறவிட்ட
கிராமத்தின் அழகியலை
அந்நியன் புகுத்திவிட்டான்
ஆண்ட்ராய்டு போனில்.

விகடன்

  • தொடங்கியவர்

887521_973389039376457_80494442852370971

முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளர் ஜூனியர் மறேயின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

160119173226_world_wealth_per_region_624

BBC

  • தொடங்கியவர்

 

தமிழுக்குத் தலைவணங்குவோம்

  • தொடங்கியவர்

12439089_1058433844215405_16682460894015

போஸ்டர் கலாட்டா
'இந்தியா அணி அடி வாங்குதுலா...ஆஸ்திரேலியாவுக்கு போலாம்ல...!'

  • தொடங்கியவர்
தெறி அப்டேட்: காவல் அதிகாரியாக விஜய்.. கண்ணியமிக்க மருத்துவராக சமந்தா
 
 சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் நடிகை சமந்தா 'மித்ரா எம்பிபிஎஸ்' என்னும் வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ராஜா ராணி புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Samantha plays Mithra MBBS in Theri

 

1 minute ago, நவீனன் said:
தெறி அப்டேட்: காவல் அதிகாரியாக விஜய்.. கண்ணியமிக்க மருத்துவராக சமந்தா
 
 

Samantha plays Mithra MBBS in Theri

 

வாலி

இதுக்கு பச்சை குத்தாம என்னதான் பண்ணிட்டிருக்கிறீங்கள்.

  • தொடங்கியவர்
22 minutes ago, ஜீவன் சிவா said:

வாலி

இதுக்கு பச்சை குத்தாம என்னதான் பண்ணிட்டிருக்கிறீங்கள்.

 

:grin::grin:

placeholder

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12493474_973391282709566_688578801709819

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் போல் அடம்ஸ் பிறந்தநாள்.
இவரது மாறுபட்ட பந்துவீச்சுப் பாணிக்காக குதிக்கும் தவளை என்று செல்லப் பெயரால் அழைக்கப்பட்டவர் அடம்ஸ்.

  • தொடங்கியவர்

90 வயது தோற்றத்துடன் வாழும் 15 வயது இளம்பெண்! (நெகிழ்ச்சி வீடியோ)

 

கொலம்பியாவில் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் வாழும் பெண் ஒருவர் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளார். உலக அளவில் ஒரு சிலருக்கே ஏற்படும் வயதுக்கு மீறிய தோற்றத்தை அளிக்கும் Progeria Syndrome நோயால்,  மகாலி கான்சாலிக் (Magali Gonzalez) என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
 

Woman%20Colombian.jpg

இவருக்கு மருத்துவ உதவிகள் அளித்து வரும் மருத்துவர்கள், 13 ஆண்டுகள் மட்டுமே இவரால் இந்த நோயுடன் உயிர் வாழ முடியும் என கணித்திருந்தனர். மருத்துவர்களின் அந்த கணிப்பை பொய்யாக்கி, மகாலி தனது 15-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தனது 15-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டதால் விழாவினை,  நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். 90 வயதுக்கான தோற்றத்துடன்  வாழ்ந்துவரும் மகாலி,  எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என அவரது பெற்றோர் அறிந்து வைத்துள்ளனர்.



இங்கிலாந்து மருத்துவர்கள் இருவரால் முதன்முறையாக உலகிற்கு விளக்கமளிக்கப்பட்ட இந்த நோய், அந்த மருத்துவர்களின் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. இந்த முதிர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,  இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறினால் 13 அல்லது 14 ஆண்டுகளில் உயிரிழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
 

10 செகண்ட் கதைகள் - பாஸ்வேர்டு சீக்ரெட்

“காலையில இருந்து நீங்க சொல்றதை எல்லாம் பையன் கேட்கிறானே... என்னங்க செஞ்சீங்க?” என்ற மனைவியிடம், “வைஃபை பாஸ்வேர்டை மாத்திட்டேன்” என்றார் குருபாதம்!

vikatan

  • தொடங்கியவர்

‘நான் இப்போ குடும்பப் பொண்ணு!’’ - சூப்பர் ஸ்மார்ட் சன்னி லியோன்

 

சன்னி லியோன்... இந்தியாவின் பிரத்யேக பெண். அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தாலும், இப்போது அவர் இந்திய கலாசாரத்தை கட்டிக் காக்க அவ்வளவு மெனக்கெடுகிறார்.  அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். தனது வாழ்க்கையில் மட்டுமல்ல; மோடிக்குப் பிறகு கூகுள் சர்ச்சிலும் அதிகமாக அடிபட்டு முன்னுக்கு வந்த சன்னி லியோனை, இப்போது ‘போர்னோ ஆக்ட்ரஸ்’ என்று யாராவது சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. ‘‘நான் இப்போ ஒரு குடும்பப் பெண்; எனக்கென்று ஒரு அழகான, செக்ஸியான கணவர் இருக்கிறார். எனவே, பெண்களே... என்னைப் பார்த்து மிரளாதீர்கள். உங்கள் கணவர் எனக்குத் தேவையில்லை!’’ என்று ‘தாட் பூட்’ குடும்பப் பெண்மணியாக அண்மையில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.

4201.jpg
 


தமிழர்கள் தினமான பொங்கலன்று வந்த  அந்தப் பேட்டிதான், இப்போது இந்தியாவின் ஹாட் பரபர! நிருபரின் எடக்குமடக்கான பல கேள்விகளுக்கு லாவகமாகப் பதில் சொல்லி அசத்திய சன்னிலியோன், ‘‘பணத்துக்காகத்தானே நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்கூட பணத்துக்காகத்தானே என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள்?’’ என்று மடக்கினார்.

325596-sunny-leone-700ew%281%29.jpg


மேலும், ‘‘என் வாழ்க்கையில் நான் எதற்காகவும் வருத்தப்பட்டது இல்லை. நான் போர்னோ படங்களில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அதுதான் என்னை இப்படிப்பட்ட நல்லதொரு இடத்துக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. ஆனால், என்னைப் பற்றிய சீப்பான சில கமென்ட்கள் வரும்போது, கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. நானும் ஒரு மனுஷிதானே... எனக்கும் உணர்வுகள் இருக்கத்தானே செய்யும். பல திருமணமான பெண்கள், என்னைப் பார்த்துப் பயப்படுவதாகச் சொல்கிறார்கள். தங்கள் கணவர்களை என்னிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள். பெண்களே, எனக்கு உங்களின் கணவர்கள் வேண்டாம். ஏனென்றால், எனக்கு அழகான, செக்ஸியான கணவர் இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி(!)’’ என்று பொங்கி எழுந்திருக்கிறார்.


vikatan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.