Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மெக்சிகோ மேயரின் விசித்திரமான திருமணம்

மெக்சிகோவின் சன் பெட்ரோ உமெலுலா பகுதியில் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர் முதலையை திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Local_News.jpg

நகர மேயரான விக்டர் என்பவரே இவ்வாறு முதலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

முதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டு,  அதன் வாய்ப்பகுதி துணியினால் மூடப்பட்டு மக்கள் முன்னிலையில் மேயர் முதலையை கோலாகலமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

சம்பிரதாய பூர்வ திருமண சடங்குகளுக்கு பின்னர் மேயர் முதலையை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார்.

59d3515bcb4ab-IBCTAMIL.jpg

வருடா வருடம் மேயர் ஒரு முதலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு செய்தால் அந்நாட்டு மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

http://www.virakesari.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அன்று பைக் திருடன்... இன்று கால்பந்தின் பிதாமகன்! #HBDZlatan

 
 

அர்ஜென்டினாவின் வீதிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்களைக் கண்டுவிட முடியும். மெஸ்ஸியையும் பார்சிலோனாவையும் ஆதரிக்கும் ரசிகர்கள் போர்ச்சுக்கல் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால், இந்த இருவரையும் கொண்டாடாத ஓர் ஊர் இருக்கிறது. அது மால்மோ, ஸ்வீடனில் உள்ள ஒரு நகரம். அந்த ஊர் சிறுவர்களைப் பொறுத்தவரை `அவர்' ஒருவர்தான் ரோல்மாடல்; அவர்தான் கால்பந்தின் ஹீரோ. அவர்கள் கொண்டாடும் ஒரே பெயர் `ஸ்லாடன்' (ZLATAN). தங்கள் நகரத்தில் பைக் திருடிக்கொண்டிருந்து, பிறகு உலகம் வியக்கும் ஒரு நட்சத்திரமாக உயர்ந்து, வறுமையில் வாடும் தங்களையெல்லாம் போராடத் தூண்டும் அவர்தான் அவர்களுக்கு `கால்பந்துக் கடவுள்'. ஸ்லாடன் இப்ராஹிமோவிச் - கால்பந்து உலகின் `தனி ஒருவன்'!

Zlatan

 

மெஸ்ஸியின் ட்ரிபிள், ரொனால்டோவின் ஸ்கில்ஸ், பெக்காமின் ஃப்ரீ- கிக், ஜிடேனின் பாஸ் ஆகியவற்றைக் கண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பான் கால்பந்து வெறியன். அவனிடம் சென்று `ஸ்லாடனிடம் என்ன பிடிக்கும்?' எனக் கேட்டால், புன்னகையே பதிலாக வரும். காரணம், அவனால் ஸ்லாடனின் ஸ்பெஷல்களைப் பட்டியலிட முடியாது. ஏனெனில், அவர் ஒரு வாழும் மியூசியம். அவரது ஒவ்வொரு செயலும் அசைவும் வித்தியாசமானவை; கொஞ்சம் விநோதமானவை; தனித்துவம் வாய்ந்தவை; ஒவ்வொன்றும் ரசிக்கத் தூண்டுபவை. களத்தில் இறங்கினால் கோல்கள் பறக்கும். பேட்டி கொடுத்தால் மைக்குகள் தெறிக்கும். கால்பந்து உலகம் கண்ட Unique வீரர் ஸ்லாடன். 

222 மில்லியன் கொடுத்து வாங்கி, நெய்மாருக்கு `காஸ்ட்லி வீரர்' என்ற அடையாளத்தைக் கொடுத்தது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. ஆனால், உலக அரங்கில் அந்த அணிக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் ஸ்லாடன் இப்ராஹிமோவிச். 31 வயதில் அந்த அணியுடன் ஒப்பந்தமாகிறார். `வயதாகிவிட்டது. கடைசிக் காலத்தை ஸ்பெயினில் நிம்மதியாகக் கழிக்க வருகிறார்' என்றார்கள். ``வயசானாலும் என் ஸ்டைலும் திறமையும் என்னைவிட்டுப் போகாது" என்று சொல்லாமல் சொன்னார். அந்த அணிக்காக 180 போட்டிகளில் 156 கோல்கள். ஒரு பட்டத்துக்கு ஏங்கியிருந்த அணிக்கு நான்கு ஆண்டுகளில் 12 பட்டங்கள் வென்று தந்தார். PSG அணியின் சரித்திரம், `நெய்மாருக்கு முன், நெய்மாருக்குப் பின்' என எழுதப்படாது. அது `ஸ்லாடனுக்கு முன், ஸ்லாடனுக்குப் பின்' என்றுதான் எழுதப்படும். கால்பந்தை தீவிரமாகப் பார்க்காதவர்களுக்கு இவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவரின் திறமைக்கு சாம்பிளாக இந்த வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு, அடுத்த பத்தியைப் படிக்கத் தொடங்குங்கள்...

இப்படியொரு கோல் வேறு எந்த ஒரு ஜாம்பவானாலும் சாத்தியமில்லை. ஸ்லாடனால் மட்டுமே முடியும். அனைவரும் ஆடுவதைப்போல் ஆடுவது அவரது ஸ்டைல் அல்ல. அவரது ஸ்டைல் தனி ஸ்டைல். அவரது ஆட்டம் தனியாகத் தெரியும். எப்பேர்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் தங்கள் ஸ்கில்களை பாக்ஸுக்கு வெளியேதான் காட்டுவார்கள். பாக்ஸுக்குள் கோலடிக்க முயல்வது வழக்கமான ஷாட்கள் மூலம்தான். ஆனால், ஸ்லாடன் பாக்ஸுக்குள்தான் வித்தையே காட்டுவார். காலணியின் அடிப்பகுதியைக் கொண்டுகூட பல கோல்கள் அடித்து அசத்தியவர். `குங்ஃபூ கிக்' ஸ்லாடனின் ஸ்பெஷல்களில் ஆகச்சிறந்தது. டேக்வாண்டோ கற்றுத் தேர்ந்தவராயிற்றே. ஆனால், அவற்றையெல்லாம்விட ஸ்பெஷல் அவரது Attitude.

இவரைப் போன்ற Attitude கொண்டுள்ள ஒரு வீரரைக் கண்டிட முடியாது. தற்பெருமைகொண்டவர், கோபக்காரர், சண்டைக்கோழி. இதன் காரணமாகவெல்லாம் இவரை அவ்வளவு சீக்கிரம் வெறுத்திட முடியாது. ஒருவரை இகழ்ந்து இவர் சொல்வதை தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதைக்கூட நம்மால் ரசிக்க முடியும். அவருக்குள் ஷேக்ஸ்பியர் ஒளிந்திருக்கிறாரோ என்றுகூடத் தோன்றும். கால்பந்து உலகமே கொண்டாடும் பயிற்சியாளர் கார்டியாலோ. அவர் பயிற்சியின் கீழ் விளையாடாத வீரர்கள்கூட அவரைப் புகழ்வர். ஆனால், ஸ்லாடனைப்போல் கார்டியாலோவை வறுத்தெடுத்த ஆள் நிச்சயம் இருக்க முடியாது.

பார்சிலோனா அணியில் அவர் ஆடியபோது இருவருக்கும் முட்டிக்கொள்ள, பிறகு ஒருமுறை அவரைப் பொளந்துகட்டினார். ``யாருய்யா அவன், சும்மா கண்ணீர், வியர்வை, ரத்தம்னு பேசிட்டிருக்கான்" என்று பொறிந்த அவர், ``அவர் ஃபெராரியை வாங்கிவிட்டு, அதை ஃபியட் காரைப்போல் ஓட்டினார்" என்று சொல்ல பல மாதங்கள் டிரெண்டிங்கில் இருந்தது அந்த டயலாக். ``மெஸ்ஸி, இனியஸ்டா போன்றோரெல்லாம் ஸ்கூல் பையன்களைப்போல் கார்டியாலோ சொல்வதையெல்லாம் கேட்பார்கள். என்னால் அதெல்லாம் முடியாது" என்று தில்லாகக் கூறினார். இதே வார்த்தைகளை வேறொரு வீரன் சொல்லியிருந்தால் மெஸ்ஸியின் ரசிகர்கள் காலிசெய்திருப்பார்கள். இது ஸ்லாடன் ஆயிற்றே!

இப்ராஹிமோவிச்

சொற்களால் மட்டுமல்ல, நேரடியாகவும் பலரைத் தாக்கி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் ஸ்லாடன். சர்வதேசப் போட்டி ஒன்றில் ஆடியபோது, தன் க்ளப் வீரரைத் தாக்கினார். பயிற்சியின்போது சொந்த அணி வீரர்களையே தாக்கியுள்ளார். போட்டிகளில் எதிர் அணி வீரர்களைப் பதம்பார்த்துள்ளார். பலரையும் அடித்துள்ளார், உதைத்துள்ளார், மிதித்துள்ளார். சேரியில் இருந்து வந்தவர். ஏழ்மையை, வறுமையை, புறக்கணிப்பை அனுபவித்துவந்தவர். வாழ்க்கையின் மறுமுகத்தை, கோரமுகத்தை அருகில் நின்று பார்த்துணர்ந்தவர். 

ஸ்லாடனின் அப்பா, போஸ்னியாவைச் சேர்ந்தவர். அம்மா குரோஷியா. 1981-ம் ஆண்டில் ஸ்லாடன் பிறக்க இரண்டு ஆண்டுகளில் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். முதலில் அம்மாவுடன்தான் இருந்தான். அரவணைப்பு கிடைக்கவில்லை. பல நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட, வெளியில் இருந்த மைதானம் அவனுக்கு உறைவிடம் ஆனது. சிறிது காலத்தில் உலகமாகவும் ஆனது. ஒரு பிரச்னை காரணமாக அப்பாவுடன் வளரத் தொடர்கிறான். அவர் தன் பிரச்னைகளில் மூழ்கிக்கிடக்க, தனிமையும் ஏழ்மையும் மொத்தமாக அவனை ஆட்கொண்டது. ரோஷன்கார்ட் நகரச் சிறுவர்களோடு சேர்ந்துகொண்டு சைக்கிள், பைக்குகள் திருடத் தொடங்கினான். கால்பந்து பொழுதுபோக்காகவும், திருட்டு ஒரு தொழிலாகவும் மாறிப்போனது. ``அவன் நல்ல திறமையான திருடன்'' என அவன் நண்பர்களே கூறுகிறார்கள். அவனை சரிசெய்ய, அவனைக் கால்பந்து பயிற்சியில் பயிற்சியாளர் மூழ்கடிக்க, ஒருநாள் அவர் வண்டியையே களவாடிச் சென்றானாம் இளம் ஸ்லாடன். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்தின் மீது கவனம் செலுத்த, தன் கோபம், முரட்டுத்தனத்துக்கெல்லாம் களத்தில் வடிவம் கொடுத்தான். மெஸ்ஸி, ரொனால்டோவைபோல் தன் பதின் பருவத்திலேயே பெயர் பெற்றவன் அல்ல அவன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் செதுக்கிக்கொண்டான். இதோ இன்று 33 பதக்கங்கள் வென்று, க்ளப்களுக்காக அதிகப் பதக்கங்கள் வென்றவர்கள் பட்டியலில் அவர்களுக்கு முன் நிற்கிறான்.

இப்ராஹிமோவிச்

இப்படியொரு சூழலில், பின்புலத்திலிருந்து வந்ததால்தான் ஸ்லாடனிடம், அந்தக் கடுமையான குணம், சண்டையிடும் போக்கு அனைத்தும் மிகுதியாக இருக்கின்றன. தன் பிரச்னைகளிலிருந்து மீண்டு வர, அவன் கவனித்தது முகம்மது அலியை. அவரது போர்க்குணம் அப்படியே இவனுக்குள் புகுந்தது. தன்னை நிலைநாட்டிக்கொள்ள தன் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டதால் அவன் போராளியாகவே தன்னை வெளிப்படுத்தினான். ஸ்வீடன் அகராதியில், `ஆகச்சிறந்த திறமையால் ஒரு செயலைச் செய்வது' என்பதைக் குறிக்க `To Zlatan' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரது  சுபாவம் பலம்வாய்ந்தது. ஸ்லாடனின் சண்டைகளைவிட, சச்சரவுகளைவிட ஸ்லாடனின் பேட்டிகள் எல்லாம் மரண வைரல். அதற்காகவே அவரது ரசிகர்கள் ஆனவர்களும் உண்டு. கூகுளில் `Zlatan quotes' என டைப் செய்தால் போதும், அருவியாகக் கொட்டும். அந்தப் பேட்டிகள்கூட ஸ்லாடனின் தனித்துவத்தை அழகாக எடுத்துரைக்கும்.

ஆர்சனல் க்ளப் ப்ரீமியர் லீகில் மாபெரும் சக்தியாகக் கிளம்பிக்கொண்டிருந்தது. அப்போது ஸ்லாடனுக்கு வயது 17. கால்பந்து அணிகள் இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு `trial' பார்ப்பது வழக்கம். ஆர்சனல் அணியின் பயிற்சியாளர் ஆர்சன் வெங்கர், ஸ்லாடனை trials-க்கு அழைக்கிறார். மாபெரும் அணியின் மிகச்சிறந்த பயிற்சியாளர் அழைக்கிறார். புறக்கணிக்கிறான் ஸ்லாடன். வெங்கருக்கு ஆச்சர்யம்... அதிர்ச்சி! `ஸ்லாடன் trials-க்கு எல்லாம் வர மாட்டான்' என்று ஸ்லாடன் கூறியபோது, அவன் வயது 17. வெங்கருக்குச் சொன்ன பதில் ஒட்டு மொத்த கால்பந்து உலகையும்  ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தில், அந்த கெத்து... அதான் ஸ்லாடன்!

அவர் எப்போது பேசினாலும், தன்னையே மூன்றாம் நபர்போலத்தான் குறிப்பிடுவார். உதாரணமாக, `இது என்னுடையது' என்று கூற மாட்டார். `இது ஸ்லாடனுடையது' என்பார். இப்படி அனைத்திலும் அவர் தனித்துவமானவர். தன்னை எந்த இடத்திலும் உயர்த்தித்தான் பேசுவார். எரிக் கான்டோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கேப்டன். `கிங் ஆஃப் மான்செஸ்டர்' என்று அழைக்கப்பட்டவர். ``அவரைப்போல் நீங்களும் மான்செஸ்டரின் கிங் ஆவீர்களா?'' என்று கேட்க, ``No, I will be God of Manchester" என்று அவர் பதிலளிக்க, மெர்சலாகினர் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள். இதுதான் ஸ்லாடன். தனக்கு மேலானவர் எவருமே இல்லை என நினைப்பவர். பொதுவாகவே `நான்' என்ற அகந்தையை வெறுக்கும் இந்த உலகம், ஸ்லாடனின் அகந்தையை மட்டும் ரசிப்பது விநோத முரண்.

இப்ராஹிமோவிச்

மூர்க்கத்தனுமும் தற்பெருமையும் நிறைந்தவர் என அவரை ஒதுக்கிவிட முடியாது. இதுதான் ஸ்லாடன் என்று நீங்கள் நினைத்தால், அது அல்ல அவர். ஏனெனில், அவர் ஸ்லாடன். ``என்னால் அமைதியாகவும் இருக்க முடியும்" என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பலமுறை தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த அந்த `ஸ்வீட்' மிருகத்தையும் நடமாடவிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு ஒரு போட்டியில் கோல் அடித்த ஸ்லாடன், அதைக் கொண்டாட தன் ஜெர்சியைக் கழற்றினார். வழக்கமாக அவர் உடலை அலங்கரித்திருக்கும் டாட்டூக்களுக்கு நடுவே பல புதிய `temporary' டாட்டூக்கள். பெயர்கள்போல் தெரிந்தன. ஆம், உலகெங்கும் பசியால் செத்துக்கொண்டிருக்கும் 50 பேரின் பெயர்களை தன் உடலில் பச்சை குத்தியிருந்தார் இந்தச் சண்டைக்காரர். பசியின் கொடுமையை உலகுக்கு உணர்த்த...

மாற்றுத்திறனாளிகள் உலகக்கோப்பை கால்பந்துக்கு ஸ்வீடன் வீரர்களை அனுப்ப காசு இல்லை. ஸ்வீடன் சீனியர் அணி வீரர்களின் ஜெர்சிகளை வாங்கி, அதை ஏலத்தில்விட்டு பணம் ஏற்பாடு செய்யத் திட்டுமிட்டு வீரர்களிடம் கேட்கின்றனர். ஒருசில வீரர்கள் அதற்கு உதவ, தங்கள் ஜெர்சியை அளித்தனர். ஸ்லாடனிடம் வந்து கேட்கிறார்கள். அவருக்குக் கோபம். ``ஒரு ஜெர்சி எவ்வளவு தொகை பெற்றுத்தரும்?" கத்திக்கொண்டே  51,000 அமெரிக்க டாலர்களை எடுத்து நீட்டுகிறார்.

அவர் தன் ஜெர்சியில் `இப்ராஹிமோவிச்' என்று எழுத, காரணம் இருக்கிறது. தன் தாயின் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர் ஏன் தந்தை வழி வந்த பெயரைக்கொண்டிருக்க வேண்டும்? அதுதான் அவர் எங்கிருந்து வந்தார் என்பதற்கான அடையாளம். தான் எங்கிருந்து வந்தோம் என்பதை உலகம் உணர்ந்துகொள்ள, தான் வளர்ந்த இடத்தில் இருப்பவர்கள் `ஸ்லாடனால் முடியுமென்றால், நம்மாலும் முடியும்' என்று நம்பிக்கைகொள்ள, ஸ்லாடன் என்று முன்பு எழுதியிருந்ததை மாற்றினார் இவர்.

இப்ராஹிமோவிச்

தான் வளர்ந்த இடத்திலிருந்து இன்னொருவன் பைக் திருடப் போய்விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால் ரோஷன்கார்டில், சிறுவர்கள் விளையாட `ஸ்லாடன் கோர்ட்' என்ற சிறு கால்பந்து அரங்கம் அமைத்துக்கொடுத்துள்ளார். தான் முதன்முதலாக விளையாடிய FBK Balkan அணிக்கு இன்னும் உதவிவருகிறார். அவரைப் பொறுத்தவரை தன்னால் முடிந்தது, அங்குள்ள எந்தச் சிறுவனாலும் முடியும். அவர்கள் அனைவரும் தான் தொட்ட உயரம் தொட வேண்டும். அவ்வளவே. இந்தக் குணங்கள்தான் அவரின் நெகட்டிவ்களை முற்றிலுமாகப் புறந்தள்ளி அவரை ரசிக்கவைக்கிறது; அவருக்கு வெற்றியை வழங்கியது. ஸ்லாடன் செய்த பல சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆறு வேறு அணிகளுக்காக கோல் அடித்துள்ள ஒரே ஆள் ஸ்லாடன்தான். இந்த ஆண்டு அது ஏழாகக்கூட ஆகலாம். இந்தச் சாதனைகளைத் தாண்டி ஸ்லாடனின் கோல்கள், அவர் செய்து சாகசங்கள் வேற லெவல். 

 

 

 

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஸ்லாடன், கடந்த ஏப்ரல் மாதம் காயமடைந்தார். ``இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும். ஸ்லாடனின் கால்பந்து வாழ்க்கை முடிந்தது" என்றார்கள். மான்செஸ்டர் அணியும் அவரது ஒப்பந்தக் காலம் முடிந்ததும், கல்தா கொடுத்தது. அவர் அணிந்திருந்த 9-ம் நம்பர் ஜெர்சியை அவர் அனுமதியோடு தனதாக்கினார் லுகாகு. விடுவாரா ஸ்லாடன்? `மான்செஸ்டரின் கடவுள் ஆவேன்' எனச் சொன்னவராயிற்றே. சாதாரணமாகப் போய்விடுவாரா என்ன? பரபரவென தன்னைத் தயார்படுத்தினார். ஐந்தே மாதங்களில் அவர் ரெடி. மீண்டும் அவரை வான்ட்டடாக ஒப்பந்தம் செய்தது யுனைடெட். ரூனி விட்டுச் சென்ற 10-ம் நம்பர் ஜெர்சி, இப்போது அவருடையது. ட்வீட்டினார் - `I never left. I just upgraded my number'. மீண்டும் அதிர்ந்தது மான்செஸ்டர். இதுதான் ஸ்லாடன்!

இப்ராஹிமோவிச்

 ஸ்லாடன் ஒருமுறை சொன்னது, ``நான் கண்ணாடி முன்பு நின்றால், என் கண்களுக்கு எதுவுமே தெரியாது. ஏனெனில், இந்த உலகத்தில் ஒரே ஒரு ஸ்லாடன்தான்" என்றார். உண்மை. மெஸ்ஸிக்கு முன்பு மரடோனா இருந்தார். இப்போது நெய்மார். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முன்பு ரொனால்டோ நஸாரியோ இருந்தார். இப்போது எம்பாப்பே எழுந்துகொண்டிருக்கிறார். எப்படிப்பட்ட வீரனைப்போலவும் முன்பு ஒருவர் இருந்துள்ளனர். புதிதாக ஒருவர் பிறக்கிறார். ஆனால், ஸ்லாடனைப்போல்! அவருக்கு முன்பும் அப்படி ஒருவர் இருந்ததில்லை. இனியும் ஓர் ஆள் பிறக்கப்போவதில்லை. Because Zlatan is Zlatan!

 

ஹேப்பி பர்த்டே ஸ்லாடன்!

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்லாடன் பற்றிய அருமையான தொகுப்பு.....என்ன ஒரு விளையாட்டு வீரன் செம...செம....சூப்பர்ப்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

9 மாதத்தில் 750 கி.மீ தூரம் பயணித்த ‘உம்கா’..! - கரடி இனத்தின் “பியர் கிரில்ஸ்”

அந்த நதிக்கரையோரம் ஏதோ ஒரு புது உயிரினத்தின் நடமாட்டம் இருப்பதை அந்தத் தொழிற்சாலையில் இருப்பவர்கள் உணர்கிறார்கள். அவ்வப்போது நாய்கள் குரைத்தபடி அங்குமிங்கும் ஓடுகின்றன. பயத்தால் குரைப்பது போல் இல்லை அந்த நாய்கள் குரைப்பது. தெருவில் சுற்றும் நாய்களும் கூட கடந்த சில நாட்களாக அதிகம் தெருக்களில் நடமாடுவது கிடையாது. எல்லா நாய்களும் ஒன்றுகூடி அந்த நதிக்கரையின் மறைவான பகுதிக்கு ஓடிப்போகின்றன. நாய்கள் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகின்றன. இது அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

அப்படி அந்த கொலிமா (Kolyma) நதிக்கரையோரம் என்னதான் இருக்கிறது என்று பார்க்க சிலர் நாய்களைப் பின்தொடர்ந்துப் போகிறார்கள். அவர்கள் வேலை செய்வது ஒரு மீன் தொழிற்சாலை. ரஷ்யாவின் யகுட்ஸ்க் (Yakutsk) பகுதி அது. கரையோரம் ஓடிய நாய்கள் ஒரு இடத்தில் நின்றன. சில நொடிகளில் அந்தப் பக்கமிருந்த புதரிலிருந்து அந்த விலங்கு வெளி வந்தது. வெள்ளை வெளேரென்று இருந்தது அது. தூரத்தில் நின்று கொண்டிருந்த இவர்களுக்கு அது என்னவென்று தெரியவில்லை. கொஞ்சம் நெருங்கிப் போகிறார்கள். 

 

பனிக் கரடி - பியர் க்ரில்ஸ்

அது ஓர் அழகான பனிக் கரடி குட்டி. இவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். அந்தப் பனிக்கரடி நாய்களோடு விளையாடத் தொடங்கியது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசியபடி அங்கிருந்து வெளியேறினார்கள். நேராக தொழிற்சாலைக்கு சென்று, அங்கிருந்து கொஞ்சம் மீன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்தக் கரையோரப் பகுதிக்கு வந்தார்கள். அந்தப் பனிக்கரடி நாய்களோடு விளையாடியபடி இருந்தது. இவர்கள் அதை நெருங்கினார்கள். கொஞ்சம் மெதுவாக அடி மேல் அடி வைத்து தான் நடந்தார்கள். தங்களைக் கண்டு அந்தக் குட்டி கரடி பயந்து ஓடிவிடுமோ என்று நினைத்தார்கள். ஆனால், அந்தப் பனிக்கரடி இவர்களைப் பார்த்ததும், எதுவும் செய்யவில்லை. இவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கூடையிலிருந்து மீன்களை எடுத்துப் போட்டனர். தீவிர பசியில் இருந்த பனிக்கரடி உடனடியாக போட்ட அத்தனை மீன்களையும் தின்று தீர்த்தது.

பனிக் கரடி - உம்கா

இந்தத் தகவல் அந்தப் பகுதி முழுக்க பரவுகிறது. உயிரியல் பூங்காவைச் சேர்ந்தவர்களும், கால்நடை மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அங்கு வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பனிக்கரடியை, அந்தப் பகுதியில் பார்ப்பது பெரும் ஆச்சர்யம். காரணம், அது பனிக்கரடிகள் வாழும் பகுதி கிடையாது. அங்கிருந்து தோராயமாக 750கிமீ தூரத்தில் இருக்கும் ஆர்க்டிக் பனி பிரதேசத்தில்தான் இந்தப் பனிக்கரடிகள் இருக்கும். இது எப்படி இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கும் என்ற கேள்விக்கு விடை தேட தொடங்கினார்கள். அதன் பயண வழி குறித்து பல விஷயங்களை ஆராய்ந்தனர்.

தூரத்திலிருந்து அதைப் பார்த்தபோது, கால்நடை மருத்துவர்களுக்கு அதற்கு 2 வயது இருக்கும் என்று கணித்தனர். ஆனால், அதை மயக்க ஊசி போட்டு பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அதற்கு வயது 9 மாதங்கள்தான் என்பதை உறுதி செய்தனர். அது தன்னந்தனியாக எப்படி அவ்வளவு தூரம் வந்தது? அதுவும் அது கடந்து வரும் காட்டுப் பாதையில் "பிரவுன் பேர்" (Brown Bear) எனப்படும் கரடிகள் அதிகமிருக்கும். அதுவும் இது அந்தக் கரடிகள் நீண்ட உறக்கத்திற்குப் (Hybernation) போகும் காலம். இந்த சமயத்தில் பனிக் கரடி தங்கள் வாழ்விடத்திற்கு வருகிறது என்றால் அவை நிச்சயம் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கும். அதிலிருந்து எல்லாம் இது எப்படி தப்பித்திருக்கும்? 

ஒரு வேளை வேட்டைக்காரர்கள் இதன் தாயைக் கொன்று இதைக் கடத்தி வரும்போது, பாதி வழியில் இது தப்பித்திருக்குமோ என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், உறுதியாக இது எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. இப்பொழுது அந்தப் பகுதியிலிருக்கும் "ஓர்டோ டொய்டூ மிருகக்காட்சி சாலை"யில் (Orto Doidu Zoo) அது வைக்கப்படிருக்கிறது. நாய்களோடு நன்றாக பழகுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களிடத்திலும் பாசமாக இது நடந்துக் கொள்கிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் "உம்கா" (Umka) என்று செல்லப் பெயரிட்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் பிரபலமான ஒரு கார்ட்டூனில் வரும் பனிக்கரடியின் பெயர் இது.

பனிக் கரடி

 

ஒருவேளை ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து அத்தனை தூரமும், அத்தனை ஆபத்துகளையும் கடந்து உம்கா வந்திருந்தால், உம்காதான் இன்றைய உலகின் ஆகச் சிறந்த ஊர்சுற்றியாக இருக்க முடியும். பனிக்கரடி இனத்தில் உம்கா ஒரு "பியர் கிரில்ஸ்" (Bear Grylls) என்று செல்லமாக பாராட்டுகிறார்கள் ரஷ்யவாசிகள்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் ஆபத்தான பாம்புகள் ராஜ்ஜியம் செய்யும் வனப்பகுதி!

  • தொடங்கியவர்

15 வருட கோமாவை வென்ற மனிதர்... உதவிய மருத்துவம்!

 
 

எது விழிப்பு நிலை? எது உறக்க நிலை? இவ்விரண்டுக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்று ஒன்று இருக்கிறதா? உறக்க (கோமா) நிலைக்குச் செல்லும் முன் இருக்கும் நினைவுகள், இருக்கும் திறன்கள், இவை அனைத்தும் விழித்தப் பின்னும் இருந்தால்தானே அது சரியான விழிப்பு நிலையாக இருக்க முடியும்? ஏதோ ஆன்மிக தர்க்கமாக தெரியும் இதுகுறித்து கட்டுரையின் இறுதியில் காண்போம்.   

கோமா நிலை

 

அந்த 35 வயது மனிதர் மருத்துவமனையின் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். விதவிதமான நவீன மருத்துவ உபகரணங்கள் அவர் உடம்பில் மாட்டப்பட்டிருக்கின்றன. 20 வயதில் ஒரு கோரமான கார் விபத்தில் மாட்டிக்கொண்டார். அப்போதிருந்து இப்போது வரை கோமா (Comatose) நிலை. 15 வருடங்கள் மருத்துவமனையில் உயிர் இருந்தும், மூளை செயலிழந்ததால் பிணமாக இருக்கும் நிலை. ஆங்கிலத்தில் வெஜிடேட்டிவ் ஸ்டேட் (vegetative state) என்று அழைப்பார்கள். எந்த வகை சிகிச்சையையும் பயனளிக்காது போகவே, நவீன ஆராய்ச்சிகள் பக்கம் சென்றனர் மருத்துவர்கள்.

தற்போது அவர் இருக்கும் நிலையில், மூளை நரம்புகளில் முக்கிய நரம்பான வேகஸ் நரம்பை (Vagus Nerve) தூண்டி விடுவதன் மூலம் மீண்டும் மூளைக்கு உயிரூட்டலாம். அதை உணர்ந்த நரம்பியல் மருத்துவர்கள், சிறிய அளவிலான மின் தூண்டுதல்கள் கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இது வலிப்பு நோயாளிகளுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் கொடுக்கும் சிகிச்சை. இந்த வேகஸ் நரம்பானது உடம்பின் பல்வேறு உறுப்புகளோடு தொடர்புடையது. அதன் செயல்பாடுகளை பெருமளவில் பாதிக்கும் ஒன்று. எனவே, இதன் மூலம் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் அந்த நபரின் மார்பில் ஒரு சிறிய கருவியைப் பொறுத்திவிட்டனர். அது அவ்வப்போது சிறிய அளவில் மின் தூண்டுதல்களை அரங்கேற்றி வேகஸ் நரம்பைத் தூண்டி விடும் முயற்சியில் இறங்கியது.

ஒரு மாத காலம் முடிந்த பின், சிறிதளவு முன்னேற்றத்தை மருத்துவர்களால் உணர முடிந்தது. மூளையின் செயல்படாமல் இருந்த பல பகுதிகள் இதனால் செயல்படத் தொடங்கியது. ஒரு பொருளை கண் முன்னே காட்டிவிட்டு அதை வலது மற்றும் இடது புறமாக நகர்த்தும் போது, அவரின் கருவிழிகள் அதேபோல் நகரத் தொடங்கின. யாரேனும் பேசும்போது, அவர்கள் இருக்கும் திசையை நோக்கித் திரும்பத் தொடங்கினார். அவருக்கு மிகப் பிடித்தமான பாடலை ஒலிபரப்பியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. சிகிச்சை தொடரும் பட்சத்தில் நிச்சயம் இன்னமும் முன்னேற்றம் நிகழும், விரைவில் இவர் முன்பிருந்த நினைவுகளுடன் பூரண குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். இந்த ஆச்சர்யமான மருத்துவ நிகழ்வைக் குறித்து ‘தற்போதைய உயிரியல்’ (Current Biology) என்ற ஆய்வுக் கட்டுரையில் விலாவாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை நரம்புகள் சிகிச்சை

சரி, இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம். எது விழிப்பு நிலை? ஒரு நோயைப் போல, இது இருக்கிறதா இல்லையா என ஒரு பரிசோதனையின் மூலம் மட்டும் நமக்கு இதற்கான விடை கிடைத்து விடாது. கிரிக்கெட் ஆட்டத்தில் ரன் அவுட்டா இல்லையா என மூன்றாவது அம்பயர் கொண்டு கண்டுபிடித்துவிடலாம். ஆனால், LBW விக்கெட்கள் முழுக்க முழுக்க அம்பயர்கள் தருவதே. DRS கருவிகள் இருந்தாலும், அது பந்து இப்படிச் சென்றிருக்கலாம் என்று தன் கணிப்பை மட்டுமே சொல்லும். அதேபோல் தான் இந்த கோமா நிலையும்.

 

ஒரு சில நாடுகளில் வெஜிடேட்டிவ் ஸ்டேட்டில் இருக்கும் நோயாளி திரும்பவும் எழுந்து நடமாட வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், அவரின் உறவினர்கள் விருப்பப்பட்டால் கருணைக் கொலை செய்யலாம். ஒரு சில நோயாளிகள் அரை விழிப்பு நிலையில் இருப்பார்கள். அவர்கள் இன்னொருவரின் துணை கொண்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் கருணைக் கொலை செய்துவிடுவார்கள். இந்தியாவில் இப்படிச் செய்யச்சொல்லி பலமுறை வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது விழிப்பு நிலை, இது கோமா நிலை என்று அளவுகோல் எல்லாம் கிடையாது. கோமா நிலை என்று உணர்ச்சியில்லாமல் படுத்திருந்த ஒருவர், எழும்போது, மருத்துவமனையில் தன்னைச் சுற்றி என்னவெல்லாம் நடந்தது என்று விளக்கிய சம்பவமெல்லாம் நடந்துள்ளது. எனவே, உண்மையில் எது விழிப்பு நிலை, எது கோமா நிலை, ஒருவர் மீண்டும் நினைவுகளுடன் எழுவாரா, எழ மாட்டாரா என்று எவராலும் கூறிவிட முடியாது, மருத்துவர்கள் உட்பட. இந்நிலையில், கருணைக் கொலை என்ற முடிவு, கொலைக்குச் சமமானதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பார்பெக்யூ புல்லட்: உணவுப் பிரியர்களை கவரும் சாலையோர உணவகம்

வாகனங்களில் உணவு என்பது புதுமையில்லை என்றாலும், புல்லட்டில் பார்பெக்யூ இளைஞர்களை ஈர்க்கின்றது.

இந்திய பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மட்டும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுவதில்லை.

சாலையோர உணவகம் அமைக்கவும் இவைதான் ஏற்றவை என்கிறார், இதை நிறுவியவர்களில் ஒருவரான அருண். சிறிய, கவர்ச்சியான வாகனத்தில் உணவகம் அமைக்க வேண்டும் என்பதற்காக இதை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நெரிசலான இடங்களில், உணவகம் அமைக்க, இடவசதி இல்லாமையை சமாளிக்கவும் இது ஒரு தீர்வாகிறது.

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Brille, Nahaufnahme und Innenbereich
 

அக்.3: வில்லனாக அறிமுகமாகி நாயகனாக வலம்வந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வரும் சத்யராஜ் பிறந்தநாள் இன்று

Bild könnte enthalten: 3 Personen, Text

  • தொடங்கியவர்
‘தான, தர்மம் இல்லை. எனவே மழையும் இல்லை’
 

image_d5400d757d.jpgஎங்கள் முன்னோர்கள் காலத்தில், சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் சான்றோர்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.  

ஆனால் இன்று, அரசியல் குளறுபடிகள், மனித ஏற்றத்தாழ்வுகள், தெய்வ பக்தி இன்மை, சுயநலம் போன்ற பல காரணங்களினால் துரோகிகளும் வன்முறையாளர்களுமே தங்களைப் பெரியவர்கள், உத்தமர்கள் போல் காட்டிக்கொண்டிருக்கின்றனர். 

முயற்சி இல்லாமலேயே இத்தகையவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுகின்றது.

சட்டவிரோத நடவடிக்கைகள், அராஜகம் போன்ற வழிமுறைகளூடாகப் பணம், செல்வாக்கு ஆகியவற்றைப் பெற்று விடுகின்றனர். நீதிகோணலாகி அதுவே உண்மைபோலாகி விட்டது.  

தான, தர்மம் இல்லை. எனவே மழையும் இல்லை. அந்நிய நாட்டுக்கு நிலம், வளம் எல்லாமே விற்கப்படுகின்றது. மக்களும் இதுபற்றிப் பேசுவதும் இல்லை. அறத்தை மறந்தால், நிறைந்த வாழ்வு எப்படிக் கிடைக்கும்? 

  • தொடங்கியவர்

இந்தக் கோப்பையின் விலை என்ன தெரியுமா?

படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

3_Ceramic.JPG

சீனாவை ஆண்ட ‘சோங்’ ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்தது.

ஐஸ் துகள்கள் படர்ந்ததுபோலக் காட்சியளிக்கும் 13 சென்றிமீற்றர் அளவு விட்டம் மட்டுமே கொண்ட இந்தக் கோப்பை, அந்நாட்களில் தூரிகைகளைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஏலத்தின்போது சுமார் 13 மில்லியன் டொலர் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டது. எனினும், இருபதே நிமிடங்களில், அதைவிட சுமார் இருபத்து நான்கு மில்லியன் டொலர் அதிக விலைக்கு இந்தக் கோப்பை கோரப்பட்டது.

இதை ஏலத்தில் எடுத்தவர் தனது விபரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஜென் கதை: வாழ்வில் காண வேண்டிய தெளிவு

 

உலகத்தின் பிறவற்றைப் பார்க்கப் பழகியவன், இந்த உலகத்தை விட்டுப் போன பிறகும் கூட எல்லோராலும் நினைக்கப்படுவான் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

 
 
ஜென் கதை: வாழ்வில் காண வேண்டிய தெளிவு
 
புகழ்பெற்ற ஜென் ஞானிகளில் ஒருவர் சீஜோ. அவரிடம் ஒரு இளைஞன் வந்தான். அவரை வணங்கியவன், தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி சீஜோவை வேண்டினான்.

அவனை உற்று நோக்கிய சீஜோ, ‘நான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். அதற்கு முன் நீ போய், அருகில் இருக்கும் குளத்தில் என்ன தெரிகிறது என்று பார்த்து விட்டு வா’ என்றார்.

‘எதற்காக குளத்தை எட்டிப்பார்க்கச் சொல்கிறார்?’ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், குரு சொல்லிவிட்டாரே என்பதால் ஓடிப்போய் குளத்தை எட்டிப்பார்த்தான். குளத்தின் நீர், எந்த கலங்கலும் இல்லாமல் தெளிந்த நீரோடையைப் போல் காட்சியளித்தது. குளத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு மீண்டும் குருவிடம் திரும்பி வந்தான்.

அவனைப் பார்த்த குரு சீஜோ, ‘சரி.. இப்போது சொல். அந்தக் குளத்தில் நீ எதைக் கண்டாய்?’ என்றார்.

அதற்கு அந்த இளைஞன், ‘நான் என்னுடைய முகத்தைப் பார்த்தேன். பிறகு எனது பரிபூரண பிம்பத்தைப் பார்த்தேன்’ என்றான்.

அவனது பதிலைக் கேட்டதும் பலமாக சிரித்தார் குரு.

குருவின் சிரிப்பில் இருந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடியாமல் தவித்தான் அந்த இளைஞன். அவனது குழப்பமான முகத்தைக் கண்ட குரு சீஜோ, ‘நீ மீண்டும் சென்று அந்தக் குளத்தைப் பார்த்து விட்டு வா.. இந்த முறை கொஞ்சம் தெளிவாக பார்த்து விட்டு வா’ என்றார்.

குரு சொன்னது போலவே, மீண்டும் குளத்தின் அருகே சென்று எட்டிப் பார்த்தான். பின்னர் மீண்டும் குருவிடம் வந்தான். இப்போது அந்த இளைஞனின் முகம் தெளிவாகி இருந்தது.

அவனிடம் ‘சொல்.. என்ன தெரிந்தது?’ என்றார் குரு.

‘குருவே! நான் உண்மையைக் கண்டு கொண்டேன். இப்போது அந்தக் குளத்தில் எனது பிம்பத்தை அல்ல.. அழகிய வண்ண மீன்களைக் கண்டேன். அவைகள் துள்ளி விளையாடும் அழகை ரசித்தேன். தெளிந்த குளத்து நீரின் கூழாங்கற்களை கண்டேன்’ என்றான்.

அதைக் கேட்டு புன்னகைத்த குரு, இளைஞனை ஆரத் தழுவிக் கொண்டார். ‘இப்போது தான் நீ எனது சீடனாகும் தகுதியைப் பெற்றாய்’ என்றார்.

முன்பு குரு சீஜோ பலமாக சிரித்ததற்கும், இப்போது அவர் புன்னகைத்த விதத்திற்கும் இடையே இருந்த பெரிய வித்தியாசத்தைக் கண்டான் அந்த இளைஞன்.

அந்த வித்தியாசம் இதுதான். உண்மையை உணராதவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பான். தனக்காக மட்டுமே வாழ்வான். அவன் கடைசி வரையில், தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துளி கூட இல்லை என்பதை உணரமாட்டான். அதனால் அவன் வாழ்ந்த காலம் மட்டும் நல்ல பதிவுகளை பதிய மாட்டான். ஆனால் தன்னை விலக்கிக் கொண்டு, உலகத்தின் பிறவற்றைப் பார்க்கப் பழகியவன், இந்த உலகத்தை விட்டுப் போன பிறகும் கூட எல்லோராலும் நினைக்கப்படுவான்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பஸ்டர் கீட்டன்

 
2

மவுனத் திரைப்பட யுகத்தின் ஜாம்பவான் பஸ்டர் கீட்டனின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• சொந்தப் பெயர் ஜோசப் பிராங்க் கீட்டன். பெற்றோர் ஜோ கீட்டன் - மைரா கீட்டன் இருவரும் நாடக நடிகர்கள். மூன்று வயதில் படிக்கட்டில் இருந்து தடுக்கி விழுந்த கீட்டனுக்கு அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை. ‘பஸ்டர்’ (விளையாட்டாக குழந்தைகளைத் திட்டும் சொல்) என்று கூறி அவனைத் தூக்கினார் குடும்ப நண்பர். அது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

• பள்ளிக்கு போகாமல் அப்பா, அம்மாவுடன் நாடகங்களில் நடித்தார். அம்மா சாக்ஸபோன் வாசிப்பார். அப்பா கூட்டத்தில் இவரைத் தூக்கிப் போட்டுப் பிடித்து சாகசம் செய்வார். எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகமாகத் தூக்கிப் போட்டாலும் அடிபடாமல் லாவகமாக கீழே விழுவார் கீட்டன்.

• அந்த நிகழ்ச்சிகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தாலும், அப்பா அடிக்கடி எக்குதப்பாக தூக்கி வீசியதால், அதை நிறுத்தவேண்டியதாயிற்று. அப்போது பரவலாகத் தொடங் கிய மவுனப் படத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் கீட்டன்.

• உணர்வுகளைக் காட்டாமல் எப்படி அடித்தாலும், அடிபட்டாலும் கல் மாதிரி இருந்த கீட்டனின் நகைச்சுவைகள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. அவரது படத்துக்கு அலைகடலெனக் கூட்டம் கூடியது.

• வசனங்களுடன் கூடிய படங்கள் வரத் தொடங்கியபோதும், மவுனப் படங்களை விட்டு விலக மறுத்து அதிலேயே பல படங்கள் எடுத்தார் கீட்டன். பிரம்மாண்டக் காட்சிகளை திரையில் கொண்டுவந்து அசத்தினார்.

• பணத் தட்டுப்பாட்டால் எம்.ஜி.எம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். போகப்போக கட்டுப்பாடுகள் அதிகரித்தன. குடும்பப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்ட தில் கம்பெனியில் இவர் தொடர முடியவில்லை.

• பல ஆயிரம் டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் சுத்தமாக வாய்ப்பு இழந்தார். வாரத்துக்கு நூறு டாலர் வாங்கிக்கொண்டு படத்தில் நடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சாப்ளினுடன் ‘லைம்லைட்’ படத்தில் தோன்றினார்.

• அப்பா, மகன் இருவரும் குடிநோயாளிகளாகினர். கீட்டனின் பின்னடைவுக்கு காரணமே அவரது குடிநோய்தான். சில காலம் குடிநோய் முற்றி, மனநோயாளியானார். மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்பு மீட்கப்பட்டார்.

• பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் நாடகங்களில் தோன்றியதால் மீண்டும் புகழ் கூடியது. அவர் நடித்து தோல்வியடைந்த படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வசூலை அள்ளின. அவரைப் பற்றிய படத்துக்கு 50 ஆயிரம் டாலர் சம்பளம் பேசினார்கள். கவுரவ ஆஸ்கார் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்.

• இறுதிப் படத்தை நுரையீரல் புற்றுநோயோடுதான் முடித்துக் கொடுத்தார். உணர்ச்சிகளைக் காட்டாமல் நடிக்கும் முகபாவத்துக்கும், டைமிங் காமெடிக்கும் பிதாமகர் என்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படுகிறார் கீட்டன்.

http://tamil.thehindu.com

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

மாதவிடாய் குறித்த கட்டுகதைகளை முறியடிக்கும் பெண்கள்

  • தொடங்கியவர்

சூதாட்ட கிளப்புகள், கேளிக்கை விருந்துகள், கண்கவர் நடனங்கள், கலை நிகழ்ச்சிகள்: அமெரிக்காவின் சொர்க்கபுரி லாஸ் வேகாஸ்

 

 
04CHKANLASVEGAS

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் ஹோட்டல் கட்டிடத்தில், துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.   -  படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரம் அந்நாட்டின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. தூங்கா நகரமான அங்கு 24 மணி நேரமும் கேளிக்கை விருந்துகள், கண்கவர் நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், சூதாட்ட கிளப்புகள் என்று மனதை மயக்கும்.

ஒரு இரவில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் கை மாறும். சூதாடுபவர்களுக்கு கிரெடிட் கார்டு மாதிரி ஒரு கார்டு தரப்படும். அதில் வாடிக்கையாளர்கள் விளையாடும் பணத்துக்கு ஏற்றபடி சலுகைகள் உண்டு. நூறு டாலர் விளையாடினால் அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் இலவச அறை, ஆயிரம் டாலர் விளையாடினால் லிமோசின் (Limousine) எனும் சொகுசு கார் ஓட்டுநருடன் தரப்படும். பத்தாயிரம் டாலர்கள் மற்றும் அதற்கு மேல் என்றால், தங்களது சொந்த ஊரிலிருந்து லாஸ் வேகாஸ் வருவதற்கு தனி ஹெலிகாப்டர் அல்லது சிறிய விமானம் வழங்கப்படும்.

சூதாடுபவர்கள் அனைவருக்கும் விரும்பிய மது வகைகளை உடனுக்குடன் ஊற்றிக் கொடுக்க அழகிய இளம் பெண்கள், விளையாடி களைப்பாகும் போது உடலை அமுக்கிவிட மசாஜ் அழகிகள், கேளிக்கை நடனங்கள், கண்கவர் இசை நிகழ்ச்சிகள் என்று அங்குள்ள சூதாட்ட விடுதிகள் ஜெகஜோதியாக இருக்கும். 1 டாலர் போட்டு விளையாடும் மெஷின்கள் முதல் ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும் பிளாக் ஜாக் ஆட்டம் வரை பல்வேறு சங்கதிகள் உண்டு. சராசரியாக ஒவ்வொரு சூதாடியும் பத்து மணி நேரம் இங்கு விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், தங்கள் ஆண்டு விழா மற்றும் பொருட்கள் அறிமுக விழாக்களையும் இங்கு நடத்தும். அப்பொழுது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆகவே உலகின் அனைத்து நாட்டு மக்களும் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அனைத்து நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும்.

சூதாட்ட விடுதியில்தான் தங்கும் இடங்களே அமைந்துள்ளன. அறையை விட்டு வெளியே வந்தால் சூதாட்ட மெஷின்கள்தான் கண்ணில்படும். சூதாட்டத்தின் வாசனை அறியாதவர்கள்கூட இங்கே வந்து மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போக முடியும். பல்வேறு கண்கவர் மாளிகைகளை கொண்ட சொர்க்கபுரியாகவும் லாஸ் வேகாஸ் அமைந்துள்ளது.

 

உலக அதிசயங்கள்

பாரிஸ் நகரின் ஈபிள் டவர், எகிப்து பிரமிடுகள், தாஜ்மகால், எம்பயர் ஸ்டேட் பில்டிங் ஆகிய உலக அதிசயங்கள் தத்ரூபமாக கண் முன்பு காட்சி தரும். லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் (strip) எனும் மகிழ்ச்சியின் சங்கமத்தில்தான் உலகப் புகழ்பெற்ற கேஸினோக்கள் அமைந்துள்ளன. பெல்லாகியோ, லக்ஸர், எம்.ஜி.எம். கிராண்ட், ஸ்டிராடோஸ்பியர், மிராக், வெனிஷியன் சீசர்ஸ் பேலஸ் ஆகிய புகழ்பெற்ற கேஸினோக்கள் இடையே அமைந்துள்ளது மண்டாலே பே கன்வென்ஷன் செக்டர்.

இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அரங்குகள், மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட கடற்கரை, சுரா மற்றும் திமிங்கலம் உலா வரும் பகுதியில் கண்ணாடி அன்டர்கிரவுண்ட் டனல் எனப்படும் சுரங்கப்பாதையில் சென்று கண்டுகளிப்பது போன்ற பல்வேறு கேளிக்கைகள் இங்கு உண்டு. இது எம்.ஜி.எம். ரிசார்ட் எனும் நிறுவனத்துக்கு சொந்தமானது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் இதுவும் ஒன்று. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு லாஸ் வேகாஸ் வருவதும் உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர்ஸ் இங்கே மிகவும் பிரபலம்.

தற்காப்புக்காக அமெரிக்க குடிமகன்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்கிறது. கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்கா தொன்மையாகவே வேட்டையாடுபவர்களை கொண்ட நாடு. செவ்விந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே ஆதிகால அமெரிக்கர்கள் ஆயுதங்களை ஏந்தினர். ஆயுதங்கள் மாறி துப்பாக்கியாக உருவெடுத்தது. அமெரிக்காவில் பல ஆயிரம் வகையான துப்பாக்கிகள் சுமார் 45 சதவீத அமெரிக்கர்களின் வீடுகளை அலங்கரிக்கின்றன.

துப்பாக்கிகளை விற்பதற்கு என்றே அதிநவீன கடைகள் உண்டு. தங்கள் டிரைவர் லைசன்ஸை காட்டி ஏ.கே.47 கூட வாங்கலாம். சில மாகாணங்கள் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் யார் வேண்டுமானாலும் எந்தவிதமான துப்பாக்கிகளையும் வாங்க முடியும். சில மாகாணங்கள் துப்பாக்கி லைசென்ஸ் முறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளன. அமெரிக்காவில் பத்தாண்டுகளில் சுமார் பத்து லட்சம் மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு பலியாகி உள்ளனர். ஒவ்வொரு முறையும் துப்பாக்கி குண்டுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாகும்போது, துப்பாக்கிகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை என்ற கோஷம் எழுந்து அடங்கும்.

 

துப்பாக்கி கட்டுப்பாடு கோஷம்

நேஷனல் ரைபிள் அசோசியேஷன் (NRA) எனும் ஆயுத வியாபாரிகள் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு முறையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி உரிமத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கத் தொடங்கியதும் இந்த அமைப்பு எம்.பி.க்ககளை லாபி செய்து ஆஃப் செய்துவிடும். இதற்காக கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்யும்.

2001-ம் ஆண்டு உலக வர்த்தக மைய கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக செயல்களுக்கு பிறகு ஆயுத ஒழிப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைகளில் அமெரிக்காவில் விற்கப்படும் ஆயுதங்களே கிடைப்பது பற்றி பொது விவாதங்கள் நடைபெற்றன. நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க்கும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முயற்சி எடுத்தார். இவருக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவை தெரிவித்தார். ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்களுக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு. அதை நசுக்குகிறார்கள் என்று இவர்கள் மீது வலதுசாரியினர் பிரச்சாரம் செய்தனர்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

“சினிமாவுல நூற்றுக்கணக்கான கெட்டப் போட்டிருந்தாலும்... இந்தக் காஸ்ட்யூம்தான் பெஸ்ட்!” நடிகை குஷ்பு

 
 

நடிகை குஷ்பு

டிகை குஷ்புவை ராஜ வம்சத்துப் பெண் சாயலில், பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. திடீரென இப்படி ஒரு போட்டோஷூட் எதற்கு? எனிதிங் ஸ்பெஷல்? இந்தக் கேள்வியோடு குஷ்புவை அணுகினால், கலகலவெனச் சிரிக்கிறார். 

 

“சத்தியமா இப்போ எந்த ஸ்பெஷல் காரணங்களுக்காகவும் போட்டோஷூட் பண்ணலைங்க. இந்தப் புகைப்படம் ரிலீஸானதிலிருந்து நிறையபேர் இதே கேள்வியக் கேட்டுட்டிருக்காங்க. காரணம், ரொம்பவே சிம்பிள். போன வருஷம் டிசம்பரில் சென்னையைத் தாக்கின வர்தா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் பேசி, நிறைய பிளான் பண்ணினோம். நிதி திரட்டி மக்களுக்குக் கொடுக்கும் வகையில், வித்தியாசமான கெட்டப்ல போட்டோஷூட் பண்ணலாம்னு ஒரு யோசனை வந்துச்சு. போட்டோகிராபர் வெங்கட்ராம்கிட்ட பேசினோம். 'சூப்பர் ஐடியா. பக்காவா பண்ணலாம்'னு சொன்னார்.

அதுக்கப்புறம், 'நார்மலான போட்டோஷூட் மாதிரி இருக்கக் கூடாது. பார்த்தவுடனே 'வாவ்!'னு சொல்லும்படி இருக்கணும். அதில் பாரம்பர்யமும் கலைநயமும் இருக்கணும்னு முடிவெடுத்தோம். எடுக்கும் போட்டோக்களை ஃப்ரேம் பண்ணி கண்காட்சி நடத்தலாம், அல்லது விற்பனை செய்து, வர்தா புயலால் பாதித்த மக்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவெடுத்தோம். நடிகை சுஹாசினியும் வெங்கட்ராமும்தான் நிறைய மெனக்கெட்டு பிளான் பண்ணினாங்க. இறுதியா, ஓவியர் ரவிவர்மாவின் ஃபேமஸ் ஓவியத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி போட்டோஷூட் பண்றதா முடிவாச்சு. எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் பலருக்கும் பொருத்தமான காஸ்டியூம், அக்ஸசரீஸ் விஷயங்களை சுஹாசினி செலக்ட் பண்ணினாங்க" என்கிறார் குஷ்பு. 

நடிகை குஷ்பு

போட்டோஷூட் சமயத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார். “எல்லா பிளானிங்கும் முடிவாகி, ஜனவரி மாசம் போட்டோஷூட் பண்ணினோம். எனக்கு மகாராஷ்டிர ராஜ வம்சத்துப் பெண் சாயலில் ஷூட் நடந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் நடிகைகளான லிசி, ஜெயஶ்ரீ, கிருத்திகா சுப்ரமணியம் உள்ளிட்ட பலருக்கும் பல கெட்டப். எங்களை அந்தந்த கெட்டப் டிரஸ், அக்ஸசரீஸில் பக்காவா ரெடி பண்ணினது சுஹாசினி. காஸ்டியூம் மட்டுமல்லாமல், ரவிவர்மா ஓவியம் மாதிரியே கையில் பழங்கள் மற்றும் வேறு பொருள்களை வெச்சுட்டு, பல மணி நேரம் போட்டோஷூட் நடந்துச்சு. சில காரணங்களால் டெக்னிக்கலான போட்டோஷூட் புராசஸை முடிக்க தாமதமாச்சு. அதனால், நிதி திரட்ட வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டோம். அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் அமிதாப்பச்சன் சார் வந்திருந்தார். அதனால், ராணி கெட்டப்ல எடுத்த புகைப்படங்களை அப்படியே வெச்சுட்டோம். அந்தப் புகைப்படங்களையே சில தினங்களுக்கு முன்னாடி, வெங்கட்ராம் வெளியிட்டிருக்கிறார்" என்கிறார். 

 

புகைப்படத்துக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருவதில் பூரித்திருக்கும் குஷ்பு, "சினிமாவில் நிறைய கெட்டப் போட்டிருக்கேன். ஆனால், இந்த போட்டோஷூட் ரொம்பவே தனித்துவமாகவும் பாரம்பர்யமாகவும் இருந்ததால், ரசிகர்கள்கிட்டே நல்லா ரீச் ஆகியிருக்கு. இப்போ, நாங்களே புதுசா பார்த்துப் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லா கிரெடிட்டும் கோஸ் டு ரவிவர்மா, வெங்கட்ராம் அண்டு சுஹாசினி. 'உன் கெட்டப் ஆஸம். உன் ஆக்டிங் கரியர்லயே இதுதான் பெஸ்டு'னு பலரும் சொன்னாங்க. 'ரவிவர்மா ஓவியத்தைப் பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு உங்க ஞாபகம்தான் வரும். அந்த அளவுக்கு உங்களை மாடலாவெச்சு அந்த ஓவியத்தை வரைஞ்ச மாதிரி இருக்கும். அதனால்தான், அந்த மாதிரி போட்டோஷூட் பண்ணினேன். ரொம்ப சந்தோஷம்'னு வெங்கட்ராம் சார் சொன்னார்" எனப் புன்னகைக்கிறார் குஷ்பு.

http://cinema.vikatan.com/

  • தொடங்கியவர்

1830 : நெதர்­லாந்­தி­லி­ருந்து பெல்­ஜியம் பிரிந்­தது

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 04

 

1582 : கிற­க­ரியின் நாள்­காட்டி, பாப்­ப­ரசர் பதின்­மூன்றாம் கிற­க­ரியால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­தாலி, போலந்து, போர்த்­துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் அக்­டோபர் 4 இற்குப் பின்னர் நேர­டி­யாக அக்­டோபர் 15 இற்கு நாள்­காட்டி மாற்­றப்­பட்­டது.

1824 : மெக்­ஸிகோ குடி­ய­ரசு ஆகி­யது.

netherlands_belgium-400x400.jpg1830 : நெதர்­லாந்­தி­லி­ருந்து பிரிந்து பெல்­ஜியம் தனி­நா­டா­கி­யது.

1910 : போர்த்­துக்கல் குடி­ய­ர­சாக பிர­க­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இரண்டாம் மனுவேல் மன்னர் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு தப்பிச் சென்றார்.

1918 : நியூ ஜேர்­ஸியில் ஷெல் கம்­ப­னியில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு விபத்தில் நூற்­றுக்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர்.

1940 : ஜேர்மன் சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்­லரும் இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோலி­னியும் ஆஸ்­தி­ரிய, இத்­தா­லிய எல்­லையில் சந்­தித்­தனர்.

1943: இரண்டாம் உலகப் போரின்­போது ஐக்­கிய அமெ­ரிக்கா சொலமன் தீவு­களைக் கைப்­பற்­றி­யது.

1957: பண்டா, செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக கண்­டிக்கு நடைப்­ப­யணம் நடத்­தப்­பட்­டது.

1957: முத­லா­வது செயற்கைச் செய்­மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது.

1958: பிரான்ஸின் ஐந்­தா­வது குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

1959: லூனா 3 விண்­கலம் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது. இது சந்­தி­ரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்­பி­யது.

1963: கியூ­பாவை சூறா­வளி தாக்­கி­யதில் 7,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

1965: ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு சென்ற முத­லா­வது பாப்­பாண்­டவர் பாப்­ப­ரசர் ஆறாம் போல் நியூயோர்க் சென்­ற­டைந்தார்.

1966: பசுட்­டோ­லாந்து ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து விடு­தலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

1992 : மொஸாம்­பிக்கின் 16 ஆண்டு கால உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

1992 : நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டம் நகரில் குடி­யி­ருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று வீழ்ந்துமோதி­யதில் தரையில் இருந்த 39 பேர் உட்­பட 43 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1997 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வர­லாற்றில் இரண்­டா­வது மிகப் பெரிய வங்கிக் கொள்­ளை­யா­னது வட கரோ­லினா மாநி­லத்தில் இடம்­பெற்­றது. 17.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. இவற்றில் 95 சத­வீதப் பணம் பின்னர் மீட்­கப்­பட்­டது.

2001 : சைபீ­ரி­யாவில் விமானம் ஒன்றை யுக்­ரைனின் ஏவு­கணை தாக்­கி­யதில் விமானம் கருங்­க­டலில் வீழ்ந்து 78 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2004 : விண்­வெ­ளிக்குச் சென்ற தனியார் விண்­கலம் எனும் பெரு­மையை ஸ்பேஸ்ஷிப் வண் எனும் விண்­கலம் பெற்­றது.

2006 : இர­க­சிய தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்தும் விக்­கிலீக்ஸ் இணை­யத்­தளம் வெளி­யி­டப்­பட்­டது.

2012 : பங்­க­ளா­தேஷில் பௌத்­தர்கள் மீதான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக கொழும்பில் பொது பல சேனாவின் ஏற்­பாட்டில் ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது. மியன்மார், பங்­க­ளாதேஷ், தாய்­லாந்தை சேர்ந்த பிக்­கு­களும் இந்த ஆர்ப்­பாட்­டத்தில் பங்குபற்றினர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கோலிக்கு டோனி வைத்த பட்டப் பெயர்!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, ‘சீக்கு’ (முயல்) என்று தன்னை அழைப்பதற்கான காரணத்தை தற்போதைய அணித் தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார்.

1_Dhoni.JPG

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பொலிவுட் நடிகர் அமீர் கானுடன் பேசியபோதே கோலி அந்த இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

“பதினேழு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அணியில் நான் விளையாடும்போது எனது சிகையலங்காரம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால், எனது காதுகள் இரண்டும் மற்றவர்களை விடப் பெரிதாகத் தோற்றமளித்தது. இதனால் எல்லோரும் என்னை சீக்கு என்று குறிப்பிட்டனர். அதையே டோனி பிடித்துக்கொண்டார். ஸ்டம்ப் மைக்கின் மூலம் அது உலகுக்கே வெளிச்சமாகிவிட்டது” எனக் கூறிச் சிரித்தாராம் கோலி!

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

இன்று உலக விலங்குகள் தினம்!

 

அக்டோபர் 4,  இன்று உலக விலங்குகள் தினம். 

விலங்குகள் தினம்

 
 


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.

இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உங்கள் படங்கள்: உருமறைப்பு

ஒவ்வொரு வாரமும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின்கீழ் வாசகர்களின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடுகிறோம். இந்த வார புகைப்படத் தொகுப்பின் கருப்பொருள் "உருமறைப்பு"

ஜென்னி டவுனிங்: "ஓநாயின் ஆடையில் ஒரு செம்மறி ஆடு போன்ற பூனை."

ஜென்னி டவுனிங்: "ஓநாயின் ஆடையில் ஒரு செம்மறி ஆடு போன்ற பூனை."

லீ ஃபாக்ஸ்: "ராணுவத்தினரின் உருவத்தை பார்க்கவேண்டும் ஆனால் இதில் பார்க்க முடியாது."

லீ ஃபாக்ஸ்: "ராணுவத்தினரின் உருவத்தை பார்க்கவேண்டும் ஆனால் இதில் பார்க்க முடியாது."

டான் பிரேக்: "அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் ஆந்தைகள் பொதுவாக காணப்படுபவை, எங்கள் வீட்டு பின் முற்றத்தில் இருந்து சமையலறை ஜன்னலுக்குள் இந்த ஆந்தை வருவதுபோல் தெரிந்தது. அதன் இறகுகள் வண்ணக் கலவைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதை நான் நன்றாக பார்ப்பதற்கு முன்பு அது என்னை பார்த்துவிட்டது."

டான் பிரேக்: "அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் ஆந்தைகள் பொதுவாக காணப்படுபவை, எங்கள் வீட்டு பின் முற்றத்தில் இருந்து சமையலறை ஜன்னலுக்குள் இந்த ஆந்தை வருவதுபோல் தெரிந்தது. அதன் இறகுகள் வண்ணக் கலவைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதை நான் நன்றாக பார்ப்பதற்கு முன்பு அது என்னை பார்த்துவிட்டது."

 

சைமன் டேவி: "லண்டனின் டேட் மாடர்ன் கேலரிக்கு சென்றபோது, இந்த பையன் கலக்கலாக நின்று கொண்டிருந்தான்"

சைமன் டேவி: "லண்டனின் டேட் மாடர்ன் கேலரிக்கு சென்றபோது, இந்த பையன் கலக்கலாக நின்று கொண்டிருந்தான்"

மைக்கேல் ஸ்டேபெர்ட்: "இந்த நரிக் குட்டி அதன் குகைக்கு வெளியே வந்திருந்தாலும் ஒரு இலைக்கு பின்னால் மறைக்க முயன்றதுபோல் தோன்றுகிறது. அந்த பருவத்தில் பிறந்த மூன்று குட்டிகளில் இதுவும் ஒன்று".

மைக்கேல் ஸ்டேபெர்ட்: "இந்த நரிக் குட்டி அதன் குகைக்கு வெளியே வந்திருந்தாலும் ஒரு இலைக்கு பின்னால் மறைக்க முயன்றதுபோல் தோன்றுகிறது. அந்த பருவத்தில் பிறந்த மூன்று குட்டிகளில் இதுவும் ஒன்று".

ஜேசன் சுப்ரூப்: "போவிங்கில் டாங்க் மியூசியத்தில் காணப்படும் இந்த புகைப்படத்தில் கவச வாகனங்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை உருமறைந்து காணப்படுகின்றன."

ஜேசன் சுப்ரூப்: "போவிங்கில் டாங்க் மியூசியத்தில் காணப்படும் இந்த புகைப்படத்தில் கவச வாகனங்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை உருமறைந்து காணப்படுகின்றன."

கொலின் மெக்மரிஸ்: "பச்சோந்தி தன் உருவை மறைத்துக் கொள்ளும் திறமைக்கு பிரபலமானது. ஆனால் ஸ்பெயினில் அவக்கோடா மரங்களின் இலைகளின் மத்தியில் இந்த பச்சோந்தியை நான் அதன் உரு மறையாமல் கண்டுபிடித்த்து, உடனே புகைப்படம் எடுத்துவிட்டேன். சில நிமிடங்களில் மேலும் சில புகைப்படங்களை புகைப்படங்கள் எடுக்கலாம் என்று பார்த்தேன், ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை

கொலின் மெக்மரிஸ்: "பச்சோந்தி தன் உருவை மறைத்துக் கொள்ளும் திறமைக்கு பிரபலமானது. ஆனால் ஸ்பெயினில் அவக்கோடா மரங்களின் இலைகளின் மத்தியில் இந்த பச்சோந்தியை நான் அதன் உரு மறையாமல் கண்டுபிடித்த்து, உடனே புகைப்படம் எடுத்துவிட்டேன். சில நிமிடங்களில் மேலும் சில புகைப்படங்களை புகைப்படங்கள் எடுக்கலாம் என்று பார்த்தேன், ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை

டோரிஸ் எண்டர்ஸ்: "அமெரிக்காவில் டெக்சாஸில், கற்களுக்கு கற்களுக்கு இடையே செதுக்கப்பட்டதுபோல் காணப்படும் அசல் பல்லி."

டோரிஸ் எண்டர்ஸ்: "அமெரிக்காவில் டெக்சாஸில், கற்களுக்கு கற்களுக்கு இடையே செதுக்கப்பட்டதுபோல் காணப்படும் அசல் பல்லி."

ரெபேக்கா ஸ்ட்ரோஃப்டன்: "கோஸ்டாரிக்காவில் தேனிலவுக்குப் சென்றிருந்தபோது, ரியோ டர்டுவெரோ பூங்காவில் அதிகாலை நேரத்தில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அப்போது, நாணல்களுக்கும் புற்களுக்கும் இடையில் மறைந்துகிடந்த கைமன் வகை முதலையை பார்த்தேன், படம் பிடித்தேன். எங்களுக்கு முன்னரே இதை பார்த்துவிட்ட எங்கள் வழிகாட்டி இது அருகில் செல்வது பாதுகாப்பானதே என்று சொன்னது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்."

ரெபேக்கா ஸ்ட்ரோஃப்டன்: "கோஸ்டாரிக்காவில் தேனிலவுக்குப் சென்றிருந்தபோது, ரியோ டர்டுவெரோ பூங்காவில் அதிகாலை நேரத்தில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அப்போது, நாணல்களுக்கும் புற்களுக்கும் இடையில் மறைந்துகிடந்த கைமன் வகை முதலையை பார்த்தேன், படம் பிடித்தேன். எங்களுக்கு முன்னரே இதை பார்த்துவிட்ட எங்கள் வழிகாட்டி இது அருகில் செல்வது பாதுகாப்பானதே என்று சொன்னது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்."

சவோயிர்ஸ் ஹாரிஸ்: கோஸ்டாரிகாவில் வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்கு பிறகு சோம்பிக்கிடந்த பொழுதில் விளக்கின் அருகில் இருந்து ஒருவித ஒலி கேட்பதை கேட்டதும், படுத்துக்கிடந்த நான் துள்ளி எழுந்தேன். அங்கு என்ன இருக்கிறது என்று ஆவலுடன் பார்த்த எனக்கு இந்த பல்லி அதை தன்னுடைய தனிப்பட்ட இடமாக மாற்றியிருப்பது தெரிந்தது. உடனே கேமராவில் அதை படம்பிடித்தபோது, அது கேமராவின் லென்சை நேரடியாக பார்த்து போஸ் கொடுத்த்து."

சவோயிர்ஸ் ஹாரிஸ்: கோஸ்டாரிகாவில் வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்கு பிறகு சோம்பிக்கிடந்த பொழுதில் விளக்கின் அருகில் இருந்து ஒருவித ஒலி கேட்பதை கேட்டதும், படுத்துக்கிடந்த நான் துள்ளி எழுந்தேன். அங்கு என்ன இருக்கிறது என்று ஆவலுடன் பார்த்த எனக்கு இந்த பல்லி அதை தன்னுடைய தனிப்பட்ட இடமாக மாற்றியிருப்பது தெரிந்தது. உடனே கேமராவில் அதை படம்பிடித்தபோது, அது கேமராவின் லென்சை நேரடியாக பார்த்து போஸ் கொடுத்தது."

சைமன் கேம்பிள்: "கோபன்ஹேகனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட கட்டிடத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன் ஆனால் என் உருவம் மறைந்திருக்கிறது."

சைமன் கேம்பிள்: "கோபன்ஹேகனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட கட்டடத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன். ஆனால், என் உருவம் மறைந்திருக்கிறது."

A white bird against the snow.

கில்லியன் ஹேய்ஸ்: "முதலில் இதை நான் கவனிக்காமல் கடந்து சென்றுவிட்டேன். நகர்ந்து சென்று சூரிய ஒளி மட்டுமே இதன் இருப்பை எனக்கு காட்டிக்கொடுத்தது. இது ஃபின்லாந்தில் ஆர்க்டிக் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனவே பனிப்பொழிவு உள்ள ஸ்காட்லாந்தில் இருப்பவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றின் குளிர்கால நிறங்கள் லேசானவை என்று நினைக்கிறேன்."

இறுதியாக நீராஜ் பாண்டியாவின் படம். அடுத்த புகைப்பட தொகுப்புக்கான கருப்பொருள் "சாலையில்" (on the road").

 

இறுதியாக நீராஜ் பாண்டியாவின் படம். அடுத்த புகைப்பட தொகுப்புக்கான கருப்பொருள் "சாலையில்" (on the road").

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க’
 

image_ee2173fe48.jpgஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான். கூடப்பிறந்தாலும் அல்லது உறவினர்களாக, நண்பர்களாக இருந்தாலும் வாழ்க்கையும் வாழும் முறைகளும் ஒரேமாதிரி அமைந்துவிடாது. 

இதில் நீயா, நானா என வாதிடுவதும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பேதம் புகழ்வதும் ஆகாது. ஏற்றம், இறக்கம் கொண்டதுதான் மனித வாழ்வு. எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்? எதையும் தீவிரமாக எதிர்பார்த்தால் ஏமாற்றங்களும் ஏற்படலாம்.  

எனக்கு மட்டும் ஏன் இப்படித் துயரம் வாட்டுகின்றது எனச் சொல்வது இயற்கையின் வலுப்பற்றி அறியாமல் இருப்பதுதான் காரணமாகின்றது. நல்லது நடந்தாலும் இறுமாப்புக் கொள்வது நிறை மாந்தர் இயல்பு அல்ல. 

கற்றவர்களுக்கு மட்டுமே உயர் பதவி கிடைப்பதுமில்லை. ஒன்றுமே தெரியாதவனும் கோடீஸ்வரன் ஆகின்றான். இதை விதி என்கின்றார்கள். மதி கூடத் தடுமாறுவதுண்டு. சலனமற்று இயங்குக; இயற்கை மாற்றங்களைப் புரிந்து கொள்க. உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க. 

  • தொடங்கியவர்

1948 : துர்க்மேனிஸ்தான் பூகம்பத்தினால் 110,000 பேர் பலி!

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 05

 

1582 : கிற­கோ­ரியன் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தா­லி, போலந்­து, போர்த்­துக்­கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் 1582 ஆம் ஆண்டில் ஒக்­டோபர் 5 ஆம் திகதி இல்­லாமல் போனது.

1789 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதி­னாறாம் லூயி மன்­ன­னுக்கு எதி­ராக வொர்சாய் அரண்­மனை நோக்கி அணி­தி­ரண்டு சென்­றனர்.

1793 : பிரெஞ்சுப் புரட்சி: பிரான்ஸில் கிறிஸ்­தவ மதம் தடை­செய்­யப்­பட்­டது.

varalaru.jpg1795 : இலங்­கையின் மன்னார் பிராந்­தி­யத்தில் ஒல்­லாந்­தர்கள் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து அப்­பி­ராந்­தி­யத்தை ஆங்­கி­லேயர் கைப்­பற்­றினர்.

1799 : கைது ­செய்­யப்­பட்ட வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மனை ஆங்­கி­லே­யர்கள் கயத்­தாறு சிறை­யி­ல­டைத்­தனர்.

1864 : இந்­தி­யாவின் கல்­கத்தா நக­ரத்தில் இடம்­பெற்ற சூறா­வளி நகரை முற்­றாக சேதப்­ப­டுத்­தி­யது. 60,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1905 : வில்பர் ரைட் 24 மைல்­களை 39 நிமி­டங்­களில் விமா­னத்தில் பறந்து சாதனை படைத்தார். 1908 ஆம் ஆண்­டு­வரை இச்­சா­தனை நீடித்­தது.

1910 : போர்த்­துக்­கலில் அர­சாட்சி முடி­வுக்கு வந்­து, அது குடி­ய­ரசு நாடா­கி­யது.

1915 : முதலாம் உலகப் போர்: பல்கே­ரியா போரில் இறங்­கி­யது.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தட­வை­யாக கனே­டிய விமானப் படை­யினர் பிரான்ஸில் சுட்டு வீழ்த்­தினர்.

1944 : பிரான்ஸில் பெண்கள் வாக்­க­ளிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டனர்.

1948 : துர்க்­மே­னிஸ்தான் தலை­நகர் அஷ்­க­பாத்தல் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 110,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1962 : முத­லா­வது ஜேம்ஸ் பொண்ட் திரைப்­ப­ட­மான ‘டொக்டர் நோ’ பிரிட்­டனில் வெளி­வந்­தது.

1974 : இங்­கி­லாந்தில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் மது­பான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்­ததில் 5 பேர் கொல்­லப்­பட்­டனர். 65 பேர் காய­ம­டைந்­தனர்.

1978 : ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் இலங்கைப் பிர­தி­நி­தி­யான அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் உரை­யாற்­று­வ­தற்கு முன் இலங்கைச் சட்­டத்­த­ர­ணி­யான கிருஷ்ணா வைகுந்­த­வாசன் திடீ­ரென உரை­யாற்ற ஆரம்­பித்­து, இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை குறித்து கூறி­ய­துடன் தமி­ழீழ தேசத்­தினைத் தனி­நா­டாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

1987 : விடு­தலைப் புலி­களின் சிரேஷ்ட தலை­வர்கள் 12 பேர் இந்­தியப் படையின் காவலில் இருக்­கும்­போது நஞ்­ச­ருந்தி மரண­மா­னார்கள்.

1991 : இந்­தோ­னே­ஷி­யாவின் இரா­ணுவ விமானம் ஒன்று ஜகார்த்­தாவில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 137 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1999 : மேற்கு லண்­டனில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 31 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசேவிச்சுக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2013 : தாய்லாந்தில் மேகோங் நதியில் சென்று கொண்டிருந்த இரு சீன கப்பல்களின் 13 மாலுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஓர் ஆண்டு முழுவதும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிட்ட மனிதர்... ஏன்?

 

உருளைக்கிழங்கு

உணவு ஒவ்வொரு மனிதனின் பிரதான தேவை. உயிர்வாழ்வதற்காக மட்டும் உண்டு கொண்டிருந்த மனித இனம் இன்று சமையலை ஒரு கலையாக பார்க்கிறது. உணவில் நாம் எத்தனையோ புதுமைகளை கொண்டு வந்துவிட்டோம். ஒவ்வொரு வேளைக்கும் பலவிதமான உணவுகளை சாப்பிட்டு பழகிய நம்மால் இனி காலம் முழுக்க ஒரே உணவு வகையை சாப்பிட்டு காலம் தள்ள முடியாது.

 

ஆனால், "ஒரே உணவை வாழ்நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்னவாகும்... அது சாத்தியமா?" என்ற கேள்வியுடன் வெளிநாடுகளில் ஓர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது உருளைக்கிழங்கைதான்.

2016 ம் ஆண்டு முழுக்க ஆண்ட்ரூ டெய்லர் என்ற வெளிநாட்டவர் உருளைக்கிழங்கை மட்டுமே தன் பிரதான உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சில மூலிகைகள், உப்பு, தக்காளி சாஸ், கூடவே வைட்டமின் B12 என்று சிலவற்றை தன் உணவில் சேர்த்துக் கொண்டாலும், காலை மாலை இரவு என்ற மூன்று வேளைக்கும் உருளைக்கிழங்கை மட்டும் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார். அந்த ஆண்டில் செய்யப்பட்ட 4 பரிசோதனைகளில் அவர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாக முடிவு வந்தது. அதுமட்டுமல்லாமல் கணிசமான அளவு எடையை குறைத்ததோடு ஆண்டுமுழுக்க புத்துணர்ச்சியோடும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தமாதிரி ஒரே வகையான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது அவ்வளவு சரியானாதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ 20 அமினோ அமிலங்கள் தேவை. அதில் ஒன்பது அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானவை. இந்த அமினோ அமிலங்களை நம் உடலே தன்னிச்சையாக உற்பத்தி செய்துகொள்ள முடியாது. எனவே நாம் இவற்றைப் பெற உணவுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இதர சில கனிமங்களும் தாதுக்களும் உணவிலிருந்து மட்டுமே கிடைக்கின்றன. இவற்றோடு சேர்த்து உட்கொள்ளப்படும் நீர் நம் செல்லின் இயல்பான இயக்கங்களுக்கு உதவுகிறது. எனவே ஒற்றை உணவுமுறை என்பது கொஞ்சம் சாத்தியப்படாத ஒன்றுதான்.

வரலாறு முழுக்க நாம் கலவை உணவுமுறையை மட்டும்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் அரிசி, தயிர், காய்கறிகள், நெய், நட்ஸ் என்று இவை எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுகிறோம். இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெரும்பாலும் சமன்செய்துவிடும். ஆனால் ஒற்றை உணவு முறையில் உடலுக்குத் தேவையான இவை எல்லாமும் நிச்சயமாக நமக்கு கிடைக்கவே கிடைக்காது. பஞ்சம், விரதம் போன்ற காலங்களில் கூட குறைந்தபட்சம்  இரண்டு விதமான உணவுகளையாவது உட்கொண்டால் தான் மனிதன் ஆரோக்கியமாகவே வாழ முடியும்.

ஆண்ட்ரூ டெய்லரை போலவே இந்த ஒற்றை உணவுப் பழக்கத்தை வரலாற்றில் நிறையபேர் பின்பற்றி இருக்கிறார்கள். 1800 களின் தொடக்கத்தில் ஐரிஷ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கான கலோரிகளை முழுக்க முழுக்க உருளைக்கிழங்குகளில் இருந்துதான் பெற்றார்கள். 2015-ம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கனும் 115 பவுன்ட் உருளைக்கிழங்கை உண்டிருந்தார்கள்.

சொல்லப்போனால் உருளைக்கிழங்கு ஒரு சரியான தேர்வுதான். இதில் நம் உடலுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்கிற அத்தனை அமினோ அமிலங்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்திருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கில் மட்டுமே தங்கிவிட்டால் நிச்சயமாக வைட்டமின் மற்றும் கனிமக் குறைபாடுகள் கட்டாயமாக ஏற்படும்.

உருளைக்கிழங்கு

தோராயமாக உடலுக்குத் தேவையானவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த உருளைக்கிழங்குகள் தந்தாலும் அது போதுமானதாக இருக்காது. கால்சியம் சத்து சரியான அளவுக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஒருநாளைக்கு 84 உருளைக்கிழங்குகளை சாப்பிட வேண்டிவரும்.

ஒற்றை உணவுமுறையில் உருளைக் கிழங்கை மட்டும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளும்போது அது தேவையற்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடல் பருமனும் கூட அதிகரிக்கும்.

ஆண்ட்ரூ டெய்லர் எடை குறைந்திருக்கிறார், ஆனால் இதுவொரு சோதனை மட்டுமே. வாழ்வில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து பார்க்க விரும்பி அவர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முடித்தும் விட்டார். அவ்வளவே. அதற்காக இது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப்படும் என்று அர்த்தமல்ல.

ஊட்டச்சத்து நிபுணர்கள் பெரும்பாலும் உருளைக்கிழங்கை உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். தவிர காய்கறிகள் பழங்கள் தானியங்கள் எண்ணெய் புரதங்கள் போன்றவை கலந்தக் கலவை உணவையே பரிந்துரை செய்கிறார்கள். உண்மையில் அதுதான் ஆரோக்கியமும் கூட. எனவே உருளைக்கிழங்கை மட்டும் தனியாக உண்ண வேண்டாம். ஆரோக்கியமான உணவுப்பொருள்களோடு உருளைக்கிழங்கையும் சேர்த்தே பயண்படுத்துங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஸ்காட்லந்தின் ரகசிய சிவப்பு பாறைகள் (காணொளி)

ஒரு விநோதமான உயிரினத்தால் உருவாக்கப்பட்ட ரகசிய சிவப்பு பாறைகளை காட்டும் காணொளி.

  • தொடங்கியவர்

'எம்.ஜி.ஆருக்கு சோ தந்த பதிலடி!' சோ பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

cho%20left.jpgணர்ச்சிகளை அடையாளப்படுத்த இன்று எமோஜிக்களை பயன்படுத்துகிறோம். உலகில் அத்தனை கோடி மனிதர்களுக்கும் வெவ்வேறு விதமான அங்க அடையாளங்கள் இருப்பது இயற்கையின் ஆச்சர்யம். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது நிச்சயம்  நமக்கு எம்.ஜி.ஆரைத்தான் நினைவுபடுத்தும்.  தமிழகத்தில் இன்னொரு பிரபலத்தையும் அப்படி எளிதாக  அடையாளம் காணலாம். அது சோ. ஒரு வழுக்கையை வரைந்து அதற்கு பெரிய கண்ணாடி வரைந்தால் அதுதான் சோ.

பத்திரிகையாளர் வழக்கறிஞர் எழுத்தாளர் அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட சோ வுக்கு பிறந்தநாள் இன்று.

1934 ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சோ, தன் பள்ளிப்படிப்பை மயிலாப்புர் பி.எஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லுாரிப்படிப்பை லயோலாவிலும் படித்தவர். 1955 ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டப்படிப்பு படித்த சோ ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்.

தொழிலதிபர் டி.டி.கே வாசுவின் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக 2 ஆண்டுகாலம் பணியாற்றியபோதுதான் நாடகங்களின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் ஒய்.ஜி.பட்டு நடத்திவந்த நாடகக்குழுவில் நடிக்கத்துவங்கினார். அப்போது நாடகக்குழுவில் அவருடன் நடித்த இன்னொரு பிரபலம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.

சினிமா நாடகம் இவற்றின் மீது பெரிய ஈர்ப்பு இல்லாத குடும்பம் சோவினுடையது. ஆனால் அதற்கு நேர்மாறாக சோ வுக்கு இந்த விஸயங்களில் ஈடுபாடு அதிகம் இருந்தது. நாடகங்களின் மீதான காதலால் நிறுவனத்தின் உரிமையாளர் டி.டி.கே வாசுவிற்கு தெரியாமல் நாடகங்களில் நடிக்கத்துவங்கினார். பல வருடங்கள் வரை அவர் நாடகங்களில் நடித்துவந்த விஸயம் வீட்டாருக்கு தெரியாமல் இருந்தது ஆச்சர்யம்.

சட்டுத் துணிச்சலுக்கு இன்னொரு பெயர் சோ. டி.டி.கே. நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர் பணிக்கு நேர்முகத்தேர்விற்கு சென்றார் சோ. நிறுவனச்சட்டம், தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா என்றனர். சுத்தமாக தெரியாது என்றார் துணிச்சலாக. “அப்பறம் எப்படி நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக செயல்படமுடியும்“ என்றார் நேர்முகத்தேர்வு நடத்தியவர். எல்லா சட்டங்களையும் மனப்பாடம் செய்திருக்கவேண்டியதில்லை. தேவைப்படும்போது சட்டப்புத்தகங்களை புரட்டிப்பார்த்தால் போதும்” என்றார். “சரி 3 மாதங்களில் தயாராகுங்கள்” என்றார் அதிகாரி. 3 மாதம் ஏன்...15 நாள் போதும் என பட்டென பதிலளித்தார் சோ. அதிர்ந்த நிர்வாகி. அவரது மனதைரியத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி நல்ல பெயரெடுத்தார் சோ.

cho%20mgr%202.jpg

 

பார் மகளே பார் திரைப்படம்தான் சோ நடித்த முதற்படம். 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவினரால் நடத்தப்பட்டது. அதை சிவாஜியும் பீம்சிங் இருவரும் ஒருநாள் பார்த்தனர். பார்த்ததும் அதை படமாக்க முடிவெடுத்தனர். பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்த அவர்கள் அதில் சென்னை பாஷை பேசி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நாடகத்தில் நடித்த சோ வே நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 'நாடகமே சிக்கல், இதில் சினிமா வேறேயா வேண்டாவே வேண்டாம்' என்று கைகூப்பிய சோவை வற்புறுத்தி நடிக்கவைத்தனர். சினிமா ஆசை இல்லாத சோ இப்படிதான் சினிமா நடிகரானார்.

காமராஜர் மீது அன்பு கொண்ட சோ, பிற்காலத்தில் காமராஜர் மற்றும் இந்திரா தலைமையில் பிளவுபட்ட காங்கிரஸை இணைப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரசுடன் மட்டும் இணைய விருப்பம் தெரிவித்த இந்திரா ஸ்தாபன காங்கிரஸை இணைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். சோவின் முயற்சி வெற்றிபெற்றிருந்தால் தமிழகத்தில் அரசியல் காற்று திசைமாறியிருக்கும்.

துக்ளக் பத்திரிகை துவக்கப்பட்டதும் ஒரு சாதாரண விஷயத்திற்காகத்தான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சென்ற சோவிடம் மாணவர்கள் பல கேள்விகள் கேட்டனர்.  சகட்டுமேனிக்கு அதேசமயம் சரியான பதில்களை சொல்லி அசத்தினார் சோ. உடன்வந்த நண்பர்கள் 'நீ என்ன பெரிய மேதாவியா...அரசியல் பொருளாதாரம் அறிவியல் என எதைகேட்டாலும் பதில் சொல்கிறாய்...இத்தோடு இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்' என்றனர். 'பேசவே கூடாதா...அப்படியென்றால் எழுதுகிறேன்' என்றார் சோ. 'நீ எழுதுவே யார் அதை பத்திரிகையில் போடுவார்கள்' என்றனர் நண்பர்கள் கிண்டலாக. 'ஏன் நானே ஒரு பத்திரிகை ஆரம்பிச்சி எழுதுறேன்.' என்றார் சடாரென.

mgr%20cho%203.jpg

ண்பர்கள் திரும்பவும், ' எதை வேணும்னாலும் பேசிடுவ... ஆனால் எழுத முடியாது' என்றனர். நண்பர்களின் பேச்சை சீரியஷாக எடுத்துக்கொண்டு பத்திரிகை துவக்கும் முடிவுக்கு வந்தார் சோ. இந்து பத்திரிகையில் தனது பத்திரிகை துவங்கும் எண்ணத்தை வெளியிட்டு ஆரம்பிக்கட்டுமா வேண்டாமா“ என்று கேட்டிருந்தார். ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்தன. சோவிற்கு நம்பிக்கை பிறந்தது. கூடவே துக்ளக் பிறந்தது.

மர்ஜென்சி காலத்தில் அதிகம் தணிக்கை செய்யப்பட்ட இதழ் துக்ளக். எமர்ஜென்சியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அரசியல் பத்திரிகைகளில் துக்ளக்கிற்கு தனியிடம் உண்டு. எமர்ஜென்சியின் கொடுமையை சொல்வதற்காக தன் ஒரு இதழின் அட்டைப்படத்தை கருப்பாக அச்சிடடு வெளியிட்டவர் அவர்.

துக்ளக்கில் எம்.ஜி.ஆரைப்பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தநேரம். எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சோ. படத்தின் இயக்குனர் ப. நீலகண்டன், எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவதற்காக, 'என்ன சோ உங்க துக்ளக் எப்படி போகுது' என்றார். நல்லா போகுது என்றவரிடம் 'கலைமகள் விற்பனை எப்படி' என்றார் திரும்ப. 'பரவாயில்லை' என்றார் சோ. இதுதான் சமயம் என நீலகண்டன், 'பாருங்க, தரமான பத்திரிகை விற்கமாட்டேங்குது...தரமில்லாத பத்திரிகை நல்லா போகுது” என்றார் நக்கலாக. உடனே சோ, 'ஆமாம் சார், தரமுள்ள படங்கள் ஓடுவதில்லை. தரமில்லாத படங்கள் பல ஓடுகின்றன. பல படங்கள் தோல்வி. எம்.ஜி.ஆரின் என் அண்ணன் நல்லா போகுது” என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியான எம்.ஜி.ஆர். நீலகண்டன் சொன்ன கேட்கமாட்டீங்க...தேவையா இது.“ என தலையிலடித்துக்கொண்டார்.

cho%20with%20editor%20600.jpg

ரசியல் விமர்சனங்களையும் தனிப்பட்ட நட்பையும் எப்போதும் சேர்த்து குழம்புவதில்லை சோ. கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கிடையேயும் சம்பந்தப்பட்டவர்கள் அவருடன் நட்பு பாராட்டுவார்கள். இப்படி ஆரோக்கியமான இதழியல் பணியை அவர் மேற்கொள்கிறார்.

பாஜகவில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட எந்தவித முகாந்திரமும் இல்லாதபோதே தமிழக வாக்காளர்களுக்கு அவரை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்தவர் சோ. அத்தனை தீர்க்கதரிசனம்.

70களில் சோ வின் நாடகங்கள் ஆங்கில பெயரகள் இருக்கும். இது பல தமிழார்வலர்களை கோபம் கொள்ளச்செய்தது. ஆனால் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு மேடையில் சோவின் இந்த குணத்தை கடிந்துகொண்ட டி.கே சண்முகம், 'தமிழ் நாடகங்களுக்கு ஆங்கில பெயர் வைப்பது தவறு. சோ இதை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்றார். அதற்கு பதிலளித்த சோ, 'அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இனி தன் நாடகங்களுக்கு ஆங்கிலப்பெயர் சூட்டுவதில்லை' என்றார். நடந்தது என்ன தெரியுமா...அவரது அடுத்த நாடகத்தின் பெயர் கோ வாடீஸ். இது லத்தின் மொழி.! இதுதான் சோ.

த்திரிகையாளர் , அரசியல், விமர்சகர் ,எழுத்தாளர், நடிகர் என்று மட்டும் இயங்கி வந்தவரை எம்.பியாகவும் ஆக்கியது முந்தைய பாஜக அரசு. மாநிலங்களவைக்கு தேர்வான அவர் தன் எம்.பி நிதியிலிருந்து தான் செலவு செய்த நிதி, மீதமான தொகையின் வரவு செலவு கணக்குகளை தனது துக்ளக் இதழில் வெளியிட்டார். அரசியல்வாதிகளிடம் இல்லாத அரிய குணம் இது.

cho%20rajni.jpg

 

மிழக பத்திரிகையாளர் என்றாலும் இந்திரா, மொரார்ஜி, ஆச்சார்ய கிருபாளினி, உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களும் அவரது ஆலோசனைக்கு மதிப்பளித்தனர். எந்த பிரச்னையிலும் தனக்காக பார்வையில் ஒரு தீர்வை சொல்வது அவரது பாணி.

cho%20right.jpgம் பத்திரிகையில் மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளித்து வெளியிட்டவர் சோ. துக்ளக் இதழில் வரும் ஒரு கட்டுரை தனக்கு உடன்பாடில்லாததை தனது கேள்வி பதில் பகுதியில் வெளிப்படையாக சொல்லிவிடுவார்.

ஆச்சர்யமாக சில கட்டுரைகளுக்கு மறுவாரம் அவரே மறுப்பு கட்டுரை எழுதுவார். கோஷ்டி அரசியலில் அதிமுக அதகளப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 'கூவம் நதிக்கரையினிலே' என அங்கத சுவையுடன் அவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி கதாபாத்திரங்களை அமைத்து  வெளியிட்ட தொடர் அவரது (அசட்டு)துணிச்சலுக்கு சாட்சி.  

ரு முறை துக்ளக் இதழின் கடைசிப்பக்கம் அச்சிடாமலேயே வெளிவந்தது. அதன்மேல், ' செய்தி எதுவும் இல்லை. தாய்மார்கள் தங்கள் வரவு செலவு கணக்குக்கு இந்த பக்கத்தை உபயோகப்படுத்திக்கொள்ளவும்' என குறிப்பு வெளியிட்டிருந்தார்.

துக்ளக்கின் முதல் அட்டைப்படம் மங்களகரமாக வரவேண்டும்...எந்த தலைவரின் படத்தைப்போட்டு அச்சிடலாம். முதல் இதழே வாசகர்களிடம் பளிச்சென ஒட்டிக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்குழு பேசி முடிவெடுக்க, சோவின் யோசனையில் முதல் இதழின் அட்டைப்படம் வெளியானது. ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்தார்கள் வாசகர்கள்.

ஆம்...2 கழுதைகள்  பேசிக்கொள்வதுபோல் அட்டைப்படம் வெளியானது. முதல்கழுதை, 'சோவின் பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே' என்கிறது. அதற்கு அடுத்த கழுதை, 'அப்படியா இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான் எனச் சொல்கிறது. இதுதான் சோ!

http://www.vikatan.com/

சர்வதேச கிரிக்கெட்டில் முதன் முதலாக மூன்றாவது அம்ப்பயரால் அவுட் என அறிவிக்கப்பட்ட பேட்ஸ்மேன் யார் ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.