Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காயலான் கடை சரக்கு கலையாகும் அற்புதம்

தும்பி, கிளி, காளை, ஒட்டகச்சிவிங்கி இந்தச் சிற்பங்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று தெரியுமா? பழைய இரும்பு சாமான்கள், தண்ணீர் டிரம்கள், பழைய வாகன உதிரி பாகங்கள் இப்படி அழகிய சிற்பங்களாக உருமாறியுள்ளன. பழைய இரும்பு சாமான்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிற்பங்களைவைத்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

 

2016ஆம் ஆண்டு கிருஷ்ண புஷ்கரம் விழாவின்போது இந்த பூங்கா நிறுவப்பட்டது. இப்பொழுது அமராவதி வளர்ச்சி அணையம் இதன் பராமரிப்பை பார்த்துக்கொள்கிறது. மாநகராட்சியை அழகு செய்யும் ஒரு திட்டத்தின்கீழ் இந்த சிற்பங்கள் பசுமை சூழ்ந்த இடத்தில், மின் விளக்குகள் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த பூங்கா அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியில் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கையில் கலையும் மனதில் கற்பனையும் இருந்தால் உடைசல் கூட உன்னத படைப்பாகும்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இப்படி எல்லாம் திருமணம் செய்ய முடியுமா..? இவர்களை பாருங்களே..!

 

இப்படி எல்லாம் திருமணம் செய்ய முடியுமா..? இவர்களை பாருங்களே..!

பெரும்பாலானோருக்கு ஒரு முறை நடைபெறும் திருமணத்தை புரட்சிகரமாக செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். அதன்படி திருமண மண்டபங்களில், கடற்கரைகளில், படகுகளில், அரண்மனைகளில் ஏன் அந்தரத்தில் கூட திருமணங்கள் நடந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்டார்டிகாவில் மிகவும் குறைந்த உறை நிலை கொண்ட ஒரு இடத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துக் கொண்டனர்.

இப்படி எல்லாம் திருமணம் செய்ய முடியுமா..? இவர்களை பாருங்களே..!

இங்கு வெப்பநிலை எப்போதும் மைனஸ் டிகிரியில்தான் இருக்குமாம். அந்த வகையில் மேற்கண்ட எந்த இடங்களிலும் இல்லாமல் வாகனம் ஓட்டியபடியே திருமணம் செய்துள்ளதை பார்த்துள்ளீர்களா. ஆம். வடக்கு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் கடந்த 1-ஆம் தேதி ஒரு உணவுக் கடையில் டெலிவரி பாயாக பணியாற்றும் ஒருவர் தனது காதலியை பைக் ஓட்டியபடியே கரம் பிடித்தார்.

அவர்கள் இருவரும் ஒரு பைக்கில் முன்னால் செல்ல, அவர்களுக்கு பின்னால் அந்த மணமகனுடன் பணியாற்றும் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். இது காண்போரின் கவனத்தை ஈர்த்தது மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் வைரலாகியது. இது உண்மையில் திருமணம்தானா அல்லது உணவு டெலிவரி நிறுவனத்தை பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

செல்பி பிரிட்ஜ் அறிமுகம் !!

 

தொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று  பயன்படுத்தும் சொல் 'செல்பி'  ஆகும்.

இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய  வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்த வரிசையில்   'செல்பி பிரிட்ஜ்' (குளிர்சாதனபெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது.

செல்பி      பிரிட்ஜ்      அறிமுகம்   !!

அமெரிக்காவில் இவ்வகை  குளிர்சாதனபெட்டி   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நகரம் - கிராமம் வித்தியாசமின்றி பெரும்பாலான வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது.

செல்பி      பிரிட்ஜ்      அறிமுகம்   !!

இந்த செல்பி பிரிட்ஜால் ஏற்கனவே இருக்கின்ற பொருளை மீண்டும் வாங்கி வந்து சிரமப்படுவது தவிர்க்கப்படுகிறது.  அந்த பொருட்களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது.

நாம், காய்கறி பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள்  வாங்க, கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, சிட்டையில், குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம்.

ஆனால் புதிதாக  அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால்,  நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை.

எப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கிறது,  இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை  வாங்கலாம்.

இதற்காக அந்த  குளிர்சாதனபெட்டிக்குள்,  3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் நாம்  குளிர்சாதனபெட்டியின்  கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகிறது.

அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

பெண் பேய் பயத்தில் தெலங்கானா கிராமம்: இரவில் ஊர் தங்காத ஆண்கள்

காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நிர்மல் மாவட்டத்திலுள்ள இந்த கிராமத்தில் 60 குடும்பங்கள் வாழ்கின்றன. அனைவரும் இந்த கிராமத்தில் பேய் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில் இங்குள்ள 3 பேர் திடீரென இறந்திருப்பது, இங்கு பெண் பேய் உலவுகிறது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இங்கு உலவுவது பெண் பேய் என்றும், அது ஆண்களை குறிவைத்துப் பழிவாங்குவதாகவும் நம்பப்படுகிறது. அதனால், இரவு நேரத்தில் ஆண்கள் யாரும் கிராமத்தில் இருப்பதில்லை. பேய் பயத்தால் இதுவரை 12 குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளன.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/HAJAMYDEENNKS 

தமிழ்நாட்டில் பண்டிகைகள் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், இடைத்தேர்தல்...!

twitter.com/Thaadikkaran

நமக்குன்னு டிரெஸ் எடுக்கப் போனா ஒரு டிரெஸ்ஸும் பிடிக்கிறதில்லை; கூட இருக்கிறவனுக்கு டிரெஸ் எடுக்கப் போனா துணிக்கடையே பிடிக்குது!

facebook.com/Brinda Keats

வர வர இந்தத் தமிழ்நாட்டு ஆண்களுக்கு வெட்கம் இல்லாம போயிடிச்சி. ‘சார், உங்க பனியன் ஸ்ட்ராப் தெரியுது. சரி பண்ணுங்கனு’ சொல்றேன், சரி பண்ணாம முறைச்சிட்டுப் போறான். எல்லாம் கலிகாலம்!

112p1.jpg

twitter.com/thoatta 

அவனவன் டெங்குல செத்துக்கிட்டிருக்கான், இவங்க சிங்கக்குட்டிக்குப் பேர் வச்சு, காது குத்தி, கெடா வெட்டிக்கிட்டிருக்காய்ங்க!112p6.jpg

twitter.com/HAJAMYDEENNKS 

டெங்கு மரணங்களையும் பயத்தையும் தாண்டி மக்கள் கொஞ்சம் சிரிக்கிறாங்கன்னா அதுக்கு நம் அமைச்சர்கள்தான் முழுக் காரணம்!

twitter.com/smhrkalifa

நம் கோபங்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பது நம் தாயிடம் மட்டுமே.

twitter.com/Kannan_Twitz

பொய்களிலேயே ஆகச்சிறந்த பொய்!

‘எல்லாருமே சொல்றாங்க.’

112p2.jpg

facebook.com/Vijayasankar Ramachandran

கவிழவேண்டிய ஆட்சியைக் காத்து நிற்பவர்கள், குஜராத்தில் நடக்க வேண்டிய தேர்தலை நடத்தத் தயங்குபவர்கள் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி நியாயமான ஆட்டம் ஆடுவார்கள் என்று தோன்றவில்லை. இன்னும் இந்த ஆட்சியின் தன்மை குறித்து வாதங்கள் நடத்திக்கொண்டிருப்பவர்களைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

twitter.com/ameerfaj 

ஹோட்டல்ல சாப்பிட இடம் கிடைக்கலனா, சாப்பிடறவன் தட்டைக் குறுகுறுனு பார்த்தால்போதும்,  இடம் எளிதில் கிடைத்துவிடும் என்பதை அறிக!

twitter.com/nathanjkamalan

வசதிகள் இல்லாவிட்டாலும் சொந்தமான வீடு என்ற கர்வம் கிராமவாசிகளிடம் மட்டுமே இருக்கிறது!

twitter.com/saravananucfc

பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்ல, ஆனால் சொல்ற அளவுக்கு இருக்கு வாழ்க்கை.

112p3.jpg

twitter.com/karunaiimaLar

சம்பாதிக்க ஆரம்பிக்காத வரை எல்லாப் பண்டிகையையும் சந்தோஷமா கொண்டாடியிருப்போம்!

twitter.com/umakrishh

என் மௌனங்கள் யாவும் உனக்கான கவன ஈர்ப்புத் தீர்மானங்களே... வந்து என்னவென்றுதான் கேளேன்...

பேசமாட்டேன் என்றாவது பேசிவிடுவேன்!

twitter.com/HAJAMYDEENNKS

கிராமத்து டீக்கடைகள் ஒரு அறிவு வளர்ப்பு மையம்...!

112p4.jpg

twitter.com/Tamil_Zhinii

கல்யாணத்த பண்ணிப் பார்! வீட்ட கட்டிப்பாருங்கறதோட நிறுத்தாம, பண்டிகை சமயத்துல வீட்ட சுத்தம் பண்ணிப் பாருங்கறதையும் சேர்த்துடலாம்!!!

twitter.com/Tamizha_Hiphop

ஒவ்வொரு உண்டியலும் சேமித்து வைத்துள்ளது ஓரிரு சில்லறைகளையும் ஓராயிரம் ஆசைகளையும்...

twitter.com/Kozhiyaar

பின்னிரவிற்குப் பின்னான ஆண்களின் விழிப்பு, ஒன்று காதல் பிரச்னையாக இருக்கும், இல்லை காசு பிரச்னையாக இருக்கும்!

twitter.com/ajmalnks

வக்கீல்களின் குறுக்குக் கேள்விகளுக்கு இணையானவை குழந்தைகள் கேட்கும் குறுக்குக் கேள்விகளும்.

112p5.jpg

twitter.com/abuthahir707

நம்ம ஆளுங்கட்சில இருக்குற விஞ்ஞானிகளை வெச்சி நம்மளே ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பலாம்போல!

twitter.com/manipmp

நல்ல வேளை, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லல!

facebook.com/tvignesh49

முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டுல கல்லெறிஞ்சா இன்ஜினீயர் மேல விழும். இனி அந்தக் கல் போட்டோகிராபர்கள் மேல விழும் நாள் வெகுதொலைவில் இல்லை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனித இனம் அழிந்தாலும் இந்த உலகில் நாய்கள் பிழைத்திருக்கும்… எப்படி?

 
 

நாய்கள்

நாய்கள் நம் மனித இனத்தோடு ஓர் அங்கமாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு சில வீடுகளில் எல்லாம் வசதியிருந்தால், தங்களின் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் கூட அவற்றைச் சேர்த்து விடுவார்கள். நன்றியுள்ள பிராணிகளாக வலம் வரும் நாய்கள் குட்டியிலிருந்து தன்னுடைய வயோதிக இறப்பு வரை ஒரே வீட்டில் அன்போடு வளர்க்கப்படும் கதைகள் ஏராளம். அதன் அன்பும் அரவணைப்பும் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனால், உண்மையில் மனிதர்களுக்குத்தான் நாய்கள் தேவை. மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும், நாய்கள் நிச்சயம் பிழைத்திருக்கும் என்கிறது அறிவியல். மனித இனம் அழிந்த பின்பு பல நூற்றாண்டுகள் கூட அவை பிழைத்திருக்கும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி சாத்தியம்?

 

நாய்களின் அசாத்திய பரிணாம வளர்ச்சி

அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் இருக்கும் அந்த ஆராய்ச்சி அறையைத் தன் உலகமாக மாற்றிக்கொண்ட டாக்டர். ஜாக் செங் ஒரு நாய் பிரியர். நாய்கள் குறித்த ஆராய்ச்சியில் கடந்த பத்து வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து கண்கள் விரிய விவரிக்கிறார்.  

“இந்த உலகில் மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி தோராயமாக 30 லட்சம் வருடங்கள் ஆகின்றன. நாய்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி 400 லட்சம் வருடங்கள் ஆகின்றன. அதாவது, நம் மனித இனம் தோன்றுவதற்கு பல காலம் முன்பே நாய்கள் உலகில் கால் பதித்துவிட்டன.”

நாய்கள்

இத்தனை வருடங்கள் ஓர் இனம் பிழைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த இடத்திற்கு மனிதனுக்கு மிக அருகில் வர நாய்கள் பல்வேறு பனியுகங்கள் மற்றும் வெப்பக்காலங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்கு ஏற்றபடி தன் உடல் அமைப்புகளையும் மாற்றிக் கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்தன. உலகின் முதல் நாய் இனம் தற்போதிருக்கும் நாய்கள் போன்று இருந்தது இல்லை. அவை அளவில் மிகவும் சிறியவை மற்றும் மரவாசிகள். பின்னர் மரம் என்ற ஒன்றைத் தாண்டி அவை வாழ ஆரம்பித்தபோது உணவுக்காகப் நீண்டதூரம் செல்ல வேண்டியிருந்தது. எனவே, ஓடுவதற்கு ஏதுவாக அதன் கால்கள் பெரியதாகின. உடலும் அதற்கு ஏற்றவாறு பெரியதானது. பனியுகத்தைச் சமாளிக்க உடல் பெருத்தன. அந்த இனத்திலிருந்து வந்தவைதான் தற்போதிருக்கும் ஓநாய்கள்.

எப்படிச் சாத்தியமானது?

இத்தனை வருடங்கள் நாய்கள் இனம் வாழ முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அதன் பற்கள். அதன் எலும்புகள் பலம் பெறும்போது அதன் பற்களும் பலம் பெற்றன. அதன் கடைவாய்ப்பல் இரையின் எலும்பைக்கூட உடைக்கக் கூடிய பலம் பெற்றது. முன்கடைவாய்ப்பற்கள் மற்றும் கோரைப்பற்கள் இரையைக் கிழிக்க உதவும். முன்னாளிருக்கும் வெட்டுப்பற்கள் இரையில் துளையிட உதவும். அதன் பற்கள் மனித பற்களைப் போல எளிதில் விழுந்து விடாது. இதனால்தான் நாய்களால் எந்த வகை உணவையும் உட்கொள்ள முடியும். எந்தப் பொருளையும் கடிக்க முடியும்.   

 

“நாம் நினைப்பது போல் நாய்களுக்கு உணவளிக்க, நாம் தேவையே இல்லை. காட்டு விலங்குகளைப் போல, தன் இரையைத் தானே வேட்டையாடும் திறன் கொண்டவை நாய்கள். காடுகள் என்ன, எந்தவித சூழலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும். இதனால்தான் நாய்கள் மனித இனம் அழிந்தாலும் பிழைத்திருக்கும் என்று கூறப்படுகிறது” என்று முடித்தார் டாக்டர். ஜாக் செங்.

 

 

நாய்கள் நிஜமாகவே போராளிகள்தாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

சர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆப்கன் அகதி

சர்வதேச கால்பந்து நட்சத்திரமாகியுள்ளார் ஆப்கன் அகதி. இவர் டென்மார்க் மற்றும் போர்ட்லேண்டுக்காக கால்பந்து ஆடுகிறார்.

  • தொடங்கியவர்

எளிமை: இலங்கை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

 எளிமை: இலங்கை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

அரசியல்வாதிகள் பயணிக்கும் வாகனத்தொடரணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வீதியில் பயணிக்கும் பொதுமக்களும் வாகனங்களும் விலத்திச் செல்லுமாறு பணிக்கப்படுவது இலங்கையில் வழமையானதொரு விடயமாகும்.

அரசியல்வாதிகள் ஹெலிகொப்டரில் பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரமே சாமானியர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை.

DRTC83A

இதற்கு முற்றிலும் முரணாக, நெதர்லாந்துப் பிரதமர் மார்க் ரூட் சைக்கிளில் பயணித்து, அரச அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்துள்ளார்.

வேறெந்தப் போக்குவரத்து சாதனங்களையும் விட மார்க் ரூட் சைக்கிளை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றார்.

Mark-Rutte-cycle

நெதர்லாந்து சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட மார்க் ரூட் சைக்கிள் ஒன்றை அண்மையில் பரிசளித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

PM-Cycle

நெதர்லாந்துப் பிரதமரிடம் சொகுசு வீடுகளும் இல்லை. 1992 இல் தனது சொந்த உழைப்பில் வாங்கிய தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் உள்ள வீட்டிலேயே இன்றும் வசித்து வருகின்றார்.

பிரதமரான பின்னரும் கூட நெதர்லாந்தின் கஷ்டப்பிரதேசமொன்றில் உள்ள பாடசாலைக்கு ஒவ்வொரு வாரமும் சென்று ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றார்.

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அடையாளங்காணப்பட்டுள்ள நெதர்லாந்தில் மக்களை விட சைக்கிள்களே அதிகம் என கூறப்படுகிறது. அந்நாட்டின் சனத்தொகை 17 மில்லியன்களாகும்.

மார்க் ரூட் மாத்திரமல்ல இவ்வாறான தன்னலமற்ற தலைவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

உதாரணத்திற்கு மலாவியின் ஜனாதிபதி ஜோய்ஸ் பன்டா, உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் பெப்பே முஜிக்கா ஆகியோரைக் கூறலாம்.

உருகுவே மக்கள் அவரை ”பெப்பே” என்றே அழைப்பது வழக்கம்.

mujica-768x452

அவர் 5 வருட ஆட்சிக்காலத்தின் பின்னர், ஆட்சியைத் தொடர 60 வீத மக்கள் ஆதரவு இருந்தும் பதவியிலிருந்து விலகினார்.

ஜனாதிபதியாக இருந்த போது கூட ஜனாதிபதி மாளிகையில் வசிக்காத அவர், தொடர்ந்தும் அவரது மனைவியின் தோட்ட வீடொன்றிலேயே வாழ்ந்து வந்தார்.

இரண்டு பேரை மட்டுமே தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்தார்.

2005 இல் உருகுவேயில் 39 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். பெப்பே முஜிக்காவின் தலைமைத்துவத்தை அடுத்து, அந்நாட்டின் வறுமைக்கோட்டு வீதம் 11 ஆகக் குறைந்தது.

இறுதிவரை அவர் தனது பழைய கார் ஒன்றிலேயே பயணித்து வந்தது இன்றும் பலருக்கு நினைவிருக்க வாய்ப்புண்டு.

Pepe

இலங்கை அரசியல்வாதிகள் பலர் இவ்வாறான அரசியல் தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

அவ்வாறானதொரு தலைவரைப் பெறும் நாளொன்றுக்காக இலங்கை மக்களும் காத்திருக்கின்றனர்.

http://newsfirst.lk/tamil

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 20

 

1803 : லூசியானா மாநிலத்தை பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஐக்கிய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

1827 : துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகளை நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

election-varalaru-300x250.jpg1941 : சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாஸி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் இராணுவம் யூகோஸ்லாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜேர்மனியிடமிருந்து மீட்டது.

1944 : அமெரிக்காவின் கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1947: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1952: பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்த கென்யாவில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னாளில் ஜனாதிபதியாகத் தெரிவான ஜோமோ கென்யாட்டாவும் இவர்களில் ஒருவராவார்.

1961: நீர்மூழ்கியிலிருந்து கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் முதல் தடவையாக பரிசோதித்தது.

1962: இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீன தாக்குதல்களை ஆரம்பித்தது. இது இந்திய – சீன யுத்தத்துக்கு வழிவகுத்தது.

1976 : அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.

Muammar-Gaddafi-varalaru.jpg1982 : இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

1982 : மொஸ்கோவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.

1991: இந்தியாவின் உத்ரகாசியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர்.

2001 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது.

2011: லிபியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேணல் முவம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

2016: யாழ் பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக் ஷன், என்.கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

மோடி தாயாரின் அசத்தல் தீபாவளி நடனம்!

 
 

மோடியின் தாயார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், நடனம் ஆடி தீபாவளி கொண்டாடும் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ’இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். இந்த முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார்’ என்று கிரண் பேடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல்!

 

Spirit of Deepavali at tender age of 97. She's mother of @narendramodi (Hiraben Modi -1920) celebrating Diwali at her own home

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

6 கண்டங்கள்... 72 நாடுகள்... 29 மாநிலங்கள்... கூகுள் தேடலில் மெர்சல் ரெக்கார்டு!

மெர்சல்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் வசூலில் கல்லாக்கட்டும் என்பது பல ஆண்டுகளாக நடப்பதுதான். இன்றைய ட்ரெண்டெல்லாம் எவ்வளவு மணி நேரத்தில் ட்ரெய்லர் மில்லியன் வியூஸ் தாண்டும்.. கூகுள் ட்ரெண்டில் முதல் நாள் முதல் காட்சி இடம்பெறுமா என்பது தான்.

  • தொடங்கியவர்

தமிழ் வாழ்த்துகளுடன் பயணிகளை வரவேற்கும் சிங்கப்பூர் பேருந்துகள்!

ம்ம ஊரு பஸ், தீபாவளி அன்றைக்குக்கூட புதுச்சட்டையைக் கிழித்துவிடும். படத்தில் நீங்கள் காண்பது சிங்கப்பூர் பஸ். தீபாவளியையொட்டி தமிழிலில் வாழ்த்துக் கூறி பயணிகளை வரவேற்கிறது. சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

தீபாவளி வாழ்த்துடன் பயணிகளை வரவேற்கும் பேருந்து

 

இதனால், தமிழ் அங்கு ஆட்சி மொழியும்கூட.  தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் பேருந்துகள் , மெட்ரோ ரயில்கள் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அழகுற அலங்கரிக்கப்பட்டு இயக்கப்பட்டுவருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் 'தீபாவளி வாழ்த்துகள்' என எழுதப்பட்டிருந்தன. 

தீபாவளி வாழ்த்துகள் எழுதப்பட்ட பஸ்

இந்தியர்கள், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 'லிட்டில் இந்தியா ' பகுதி தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.  அலங்காரத்தைக் காணவே ஏராளமான தமிழர்கள் தீபாவளியன்று மெட்ரோ ரயில் பயணம் மேற்கொண்டனர். இந்த மாதம் முழுவதும், பேருந்துகளும் ரயில்களும் இதேபோன்று அலங்காரத்துடன் இயக்கப்படும் என  சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் மெட்ரோ ரயில்

 

அலங்கரிக்கப்பட்ட பேருந்து, மெட்ரோ ரயில் புகைப்படங்களை சிங்கப்பூர் தரை வழிப்போக்குவரத்தை நிர்வகிக்கும் லேண்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், உற்சாகமான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘சிங்கிள்னா என்னா?’ - சிக்ஸர்களால் பேசிய சேவாக்! #HBDViru

299 ரன்களில் களத்தில் இருக்கிறார் அவர். அதுவரை எந்தவொரு இந்திய வீரரும் செய்திடாத சாதனை. 1 ரன் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்தியன் என்ற சரித்திரம் காத்திருக்கிறது. டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் - ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பது சச்சின்.  99, 199 ரன்களில் பந்தை எதிர்கொள்வது எவ்வளவு பிரஷர் என்பது அவருக்குத் தெரியும். பலமுறை அவர் 90களில் அவுட்டாகி சதத்தைத் தவறவிட்டிருக்கிறார். அவருக்கு எதிரே நின்று ஆடிக்கொண்டிருந்த அந்தக் கண்களில் எந்தவித பயமும் இல்லை. மாறாக, அந்தக் கண்கள் சிக்ஸர் அடிக்க ஏதுவான இடத்தை  தேடிக்கொண்டிருந்தன.

அனுபவ சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக்கின் கையில் பந்து. வழக்கமாக சதத்தைத் தடுக்க, 'சர்க்கிளு'க்குள் ஃபீல்டர்களை நிரப்புவது கேப்டன்கள் வழக்கம். ஆனால், அது பிரயோஜனமற்றது என்று பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் அறிந்திருந்தார். ஸ்கொயர்-லெக், டீப் மிட்விக்கெட், லாங் ஆன் என ஒருநாள் போட்டியைப் போல் ஃபீல்டர்களை நிற்க வைத்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர்களுக்கு இன்னும் டென்ஷன். சச்சினுக்கும் அதே பதற்றம். "சிக்ஸர் அடிக்க முற்பட்டால் உன்னை அடித்துவிடுவேன்" -  எச்சரித்துவிட்டு வருகிறார் சச்சின்.

 

"சிக்ஸர் அடிக்க முயன்று எட்ஜ் ஆனால்...?" அத்தனை இந்தியர்களுக்கும் அந்தப் பயம்தான். ஆகுமா என்ன?  களத்தில் நிற்பது யார்?  உலகையே அலறவிடும் பாகிஸ்தான் பந்துவீச்சை 2 நாள்கள் சொந்த மண்ணிலேயே பொம்மையாக நினைத்து ஆட்டங்காட்டியவர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென புது இலக்கணம் கொடுத்தவர். "நீங்கள் எவ்வளவு சிறப்பான, அனுபவமுள்ள பவுலராக இருந்தாலும், அவர் உங்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்" என்று பிரட் லீ எனும் பந்துவீச்சு அரக்கனால் புகழப்பட்டவர். களத்தில் நிற்பது வீரேந்திர சேவாக்! சிங்கிளா எடுப்பார் மனிதன்? மிடில் ஸ்டம்ப் லெந்த்தில் வந்த பந்தை இறங்கி வந்து Half Volley-ஆக மிட் விக்கெட் திசையில் அடிக்க, அந்தப் பந்து எல்லையைத் தாண்டி ஸ்டேண்டை அடைந்தபோது முல்தான் நகரமே அவர் தைரியத்தின் முன் மண்டியிட்டது.

சேவாக்

ஒரு பந்துவீச்சாளருக்கு நம்பிக்கை கொடுப்பது பிட்ச்சின் தன்மையும், ஆட்டத்தின் போக்கும் மட்டுமல்ல. அவர்களுக்குப் பிரதான நம்பிக்கையே எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனின் 'பாடி லேங்குவேஜ்'தான். பேட்ஸ்மேனின் கண்கள், அவர் தோள்பட்டை, அவரது கால்கள், இந்த மூன்றுமே, பேட்மேனின் 'மைண்ட் செட்டை' பவுலருக்குச் சொல்லிவிடும். பெளலரின் நம்பிக்கையை அது கூட்டிவிடும். ஆனால், இந்த மனிதனின் விஷயத்தில் மட்டும் அது என்றுமே ரிவர்ஸ். "ஓ நீதான் பவுலரா...சரி சரி போடு" என்ற தொனியில் அசால்டாக, கெத்தாக நிற்கும் சேவாக்கைப் பார்த்தால் எப்பேர்ப்பட்ட பவுலரின் பாசிடிவ் ஆடிட்யூடும் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். பிரெட் லீ, சேவாக்கைப் பற்றிக் கூறிய அந்த ஒற்றை வரி போதும் சேவாக்கின் ஆடிட்யூட் பற்றி அறிய.

டெக்னிக்கில் குறை, ஃபுட்வொர்க்கில் குறை என்று அவரது பேட்டிங்கை குறை சொல்லியவர்களுக்கு, "கிரிக்கெட்டை இப்படியும் ஆடலாம்" என்று பதிலளித்தார் சேவாக். அன்றெல்லாம் சச்சின் அவுட் ஆனால் தொலைக்காட்சிகள் அணைந்துவிடும். ஒருகட்டத்தில் சேவாக் அவுட் ஆனதும்கூட அவை அணைக்கப்பட்டன. ஆம், டெஸ்ட் போட்டிகளின் தன்மையால் அதை வெறுத்த ரசிகர்களைக்கூட, "சேவாக் ஆடுற வரைக்கும் மட்டும் பார்க்கலாம்" என்று வெள்ளை உடை ஆட்டத்தைப் பார்க்க வைத்தார் வீரு. உலகக்கோப்பைப் போட்டிகளின் ஃபினிஷிங்கைப் பார்க்க, வேலையை விட்டுவிட்டு TV-யின் முன்னாள் அமர்ந்தவர்களை, முதல் பந்தை மட்டும் பார்ப்பதற்காகவே ஏங்க வைத்தவர் வீரு! 36 வயதில், சி.எஸ்.கே அணிக்கெதிராக 58 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தபோது, இன்னொரு முறை இந்திய ஜெர்சியை இவர் அணிந்திட மாட்டாரா என்று ஏங்க வைத்தார். மொத்தத்தில் இவர் ரசிகர்களுக்கான கிரிக்கெட்டர்! 

சேவாக்

சேவாக்கின் அப்பா மிகுந்த கண்டிப்பானவர். எப்போதுமே அப்பாவிடம் சேவாக்குக்கு ஒருவித பயம் கலந்த மரியாதை இருக்கும். கூட்டுக் குடும்ப பின்னணியில் இருந்துவந்தவர். அதனால்,  மற்றவரை அனுசரித்துப் போவது என்பது அவரிடம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எடுத்துகாட்டாக, அவா் பேட்டிங் செய்யும்போது எதிரணியினரின் சீண்டல்களாக இருக்கட்டும், மைதானத்தில் இருக்கும் வேற்று அணி ரசிகர்களின் கேலி கூச்சல்களாக இருக்கட்டும், எதையும் பொருட்படுத்தாமல் அவர் சரவெடியாய் ரன் குவிப்பைத் தொடர்ந்து  கொண்டிருப்பார்.

சிறுவயது முதலே சேவாக்குக்கு கிரிக்கெட்டின் மீது தீராத காதல். வீட்டில் இருக்கும்போது 'பிராக்டிஸ்' பண்ணுகிறேன் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பொருள்களை உடைத்து, அப்பாவின் கண்களில் படாமல் 'கண்ணாம்பூச்சி' ஆட்டம் ஆடுவாராம். தந்தை கிருஷ்ணன் ஒரு தானிய விற்பனையாளர். மகனின் பயிற்சிக்காக வருமானத்தின் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்துவிடுவாராம். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை 90-களின் மத்தியில் நடைபெற்ற துலிப் டிராபி ஆட்டத்தில் சேவாக்கின் ஆட்டம் தூள் பறந்தது. தோ்வுக் குழுவினரையே "யாருய்யா இந்த 'சுருள் முடி'ப் பையன்" என புருவம் உயர்த்தவைத்தது. ஆம்...சேவாக்குக்கு முடி அப்போது சுருள் சுருளாக நிறைய இருந்தது. அதனால்தான், ஆரம்ப காலத்தில் 'சச்சினின் ஜெராக்ஸ்' என்று அழைக்கப்பட்டார். பிறகு, ரஞ்சி டிராபியிலும் அதிரடியைத் தொடர, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் வீரு.

சேவாக்


இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இந்திய தேசிய அணியில் இடம் பிடித்தார். வந்த நேரத்தில் இந்திய அணியில் ஒரு வறட்சி நிலவியது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் அந்நேரத்தில் பிரமாண்ட பிம்பமாக உயா்ந்து நின்றன. இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில், அந்த அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களை அவர் பந்தாட, தெறித்து ஓடியது இலங்கை. அதன்பிறகு சேவாக் இந்திய அணியில் ஐக்கியமாகிவிட்டார். ஒரு அதிரடி ஆட்டக்காரர் இல்லாமல் இந்திய அணி தவித்து வந்த நேரத்தில் தன் துடிப்பான  ஆட்டத்தின்  மூலம் இந்திய அணியை மீட்டெடுத்தார் . அவர் தலையில் துணியை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ஒரு கணம் புல்லரித்தான் ரசிகன். டெஸ்ட் போட்டியிலும்  ரன் வேட்டையைத் தொடர ஆரம்பித்தார். இவர் டெஸ்டில் ஆடினால்  எதிரணி கேப்டனை கிறுகிறுக்க வைத்துவிடுவார். சேவாக்குக்கு ஏதுவாக ஃபீல்டிங் அமைப்பதா, இல்லை டெஸ்ட் போட்டியின் அமைப்புக்கு ஏதுவாக ஃபீல்ட் செட் செய்வதா என எதிரணி கேப்டனை மண்டை காய வைப்பார்  இந்த ராட்சஷன். எப்படி 'சச்சின் - கங்குலி' ஓப்பனிங் ஜோடி இந்தியாவின் கோல்டன் பார்ட்னர்ஷிப்பாக வர்ணிக்கபட்டதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் திகழ்ந்தது 'சேவாக் - கம்பீர்' கூட்டணி. டெஸ்ட் அரங்கில் இந்தியா முதலிடம் பிடிக்க மிக முக்கியக் காரணமாக இருந்தது இந்த இணை.

 

 

கம்பீரோடு மட்டுமா? சச்சினுடன் இணைந்து ஒருநாள் போட்டிகளிலும் அட்ராசிட்டி செய்தார் இந்த டெல்லிக்காரர். மிடில் ஆர்டரில் இவர் சற்றுத் தடுமாற, தான் ஆடிவந்த ஓப்பனிங் ஸ்லாட்டில் சேவாக்கை இறக்கினார் அப்போதைய கேப்டன் கங்குலி. மிகப்பெரிய முடிவு. உலகின் உச்சபட்ச பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்த வெற்றிக் கூட்டணியை உடைத்து, ஒரு இளைஞனை அந்த இடத்தில் அமர வைக்கிறார். கேள்விகள் எழாமல் இல்லை. அந்தக் கேள்விகளுக்கான பதிலை கங்குலி சொல்லவில்லை. சேவாக்தான் பதிலளித்தார். மைக் பிடித்து அல்ல. பேட் பிடித்து.

2003 உலகக்கோப்பை ஃபைனல். ஆஸி பேட்டிங் முடிந்தபோதே ஆட்டம் கைவிட்டுப் போயிருந்தது. இருந்தாலும், இந்திய ரசிகர்களின் மனதில் சச்சின் என்ற நம்பிக்கை நாயகன் குடியிருந்தார். 4 ரன்களில் மெக்ராத்தின் கைகளில் அந்த நம்பிக்கையை அவர் காவு கொடுக்க, இடிந்து போனான் இந்திய ரசிகன். ஓவருக்கு 7 ரன்கள் வேண்டும். கேப்டன் கங்குலி அவுட். அடுத்து 4 பந்துகளில் கைஃப் அவுட். களம்புகுவது 'தி வால்'. அடித்து ஆடுவது யார்? மெக்ராத், லீ, பிராட் ஹாக், ஆண்டி பிக்கெல் என அனைவரையும் பந்தாடுகிறார். சச்சின் என்ற பெயர் வாடிப்போன ரசிகனின் மனதில் சேவாக் எனும் நம்பிக்கை துளிர்விட்டது. "இன்னைக்கு இவர் நம்மள ஜெயிக்க வைப்பாண்டா" - இது கோடி மனங்களின் நம்பிக்கை. ஒரு துருதிருஷ்ட ரன் அவுட். மொத்த நம்பிக்கையும், உலகக்கோப்பைக் கனவும் உடைந்துபோனது. ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நம்பிக்கையை மீண்டும் எழுப்பினார் சேவாக். வங்கதேசத்தை கிழித்தெறிந்து 175 ரன்கள் குவித்து, இந்தியாவின் இரண்டாவது உலகக்கோப்பை வெற்றியை 'இனிஷியலைஸ்' செய்தார். 

சேவாக்

இந்திய கிரிக்கெட்டின் சரித்திர தருணங்களில் இடம்பிடித்தவர். பலரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை அசால்டாகச் செய்தவர். டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 284 ரன்கள், ஓப்பனராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 7,500-க்கு மேற்பட்ட ரன்கள் அடித்தவர், நூற்றுக்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் முச்சதம் அடித்த அசாதரணன், இரண்டு டெஸ்ட் முச்சதம், ஒருநாள் டபுள் செஞ்சுரி என இவர் செய்தவை எல்லாம் வேற லெவல் ரெக்கார்ட்ஸ். இவர் எதிரணி வீரர்களிடம் மல்லுக்கட்டியதில்லை. ஆனால், தன் அதிரடி ஆட்டத்தால் மண்டியிட வைத்துள்ளார்.

"தொடர்ந்து 5 ஓவர்கள் மெய்டனாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசுவது என்பது சவால் இல்லை. சேவாக் போன்ற பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதே ஒரு பவுலருக்கு உண்மையான சவால்" என்று கபில் தேவ் என்னும் ஜாம்பவனால் புகழப்பட்டவர். அனைத்து பெளலருக்கும் தன் அதிரடியால் ஆட்டம் காட்டியவர், இப்போது ட்விட்டரில் அடித்துத் துவைத்துக்கொண்டிருக்கிறார். “எப்படி இந்த மனுஷன் யோசிக்கிறான்" என்று நினைக்கும் அளவுக்கு அங்கும் தனக்கென்று ஒரு யுனிக் ஸ்டைலை வகுத்துக்கொண்டார் வீரு. இன்று அவருக்கு 39-வது பிறந்தநாள். கிரிக்கெட் மைதானமோ, சமூக வலைதளமோ, தான் இருக்கும் தளத்தில் ரவுண்ட் கட்டி அடித்துக்கொண்டே இருப்பார் வீரூ. 39 என்பதெல்லாம் வெறும் நம்பர்தான்.

 

ஹேப்பி பர்த்டே வீரு!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகெங்கும் ஜொலித்த தீபாவளி (புகைப்படத் தொகுப்பு)

 

உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடப்பட்டதை காட்டும் ரசிக்கத்தக்க புகைப்படங்கள்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று பொன்னிறத்தில் ஜொலிக்கும் சிட்னி ஓபெரா ஹவுஸ்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று பொன்னிறத்தில் ஜொலிக்கும் சிட்னி ஓபெரா ஹவுஸ்

அகமதாபாதின் ஆலயம் ஒன்றில் வண்ணக் கோலங்களாய் ரங்கோலியை உருவாக்கும் பூசாரி.

அகமதாபாதின் ஆலயம் ஒன்றில் வண்ணக் கோலங்களாய் ரங்கோலியை உருவாக்கும் பூசாரி

 

மும்பை கடைத்தெருவில் அலங்கார பொருட்கள் விற்கப்படுகின்றன.

மும்பை கடைத்தெருவில் அலங்கார பொருட்கள் விற்கப்படுகின்றன

லண்டன் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு இசை மற்றும் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், இந்திய பாரம்பரிய நடனமாடும் பெண்கள்.

லண்டன் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் தீபாவளியை ஒட்டி இசை மற்றும் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், இந்திய பாரம்பரிய நடனமாடும் பெண்கள்.

சிலிகுரியில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளி கொண்டாடவேண்டும் என்ற செய்தியை கூறும் காற்றில் மிதக்கும் லாந்தர் விளக்குகள்.

சிலிகுரியில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளி கொண்டாடவேண்டும் என்ற செய்தியை கூறும் காற்றில் மிதக்கும் லாந்தர் விளக்குகள்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடும் பெண்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடும் பெண்கள்

தீபாவளி பூஜைக்காக தோட்டங்களில் இருந்து மலர் கொய்யும் பெண்கள்.

தீபாவளி பூஜைக்காக தோட்டங்களில் இருந்து மலர் கொய்யும் பெண்கள்

தீபாவளி கொண்டாட்டங்கள் பல நாட்கள் தொடர்வன. அதில் ஒரு நாளான தன்தேரஸ் தினத்தன்று நகைக்கடையில் நகை வாங்க சென்று புன்னகையுடன் நகையணிந்து அழகு பார்க்கும் பெண்.

தீபாவளி கொண்டாட்டங்கள் பல நாட்கள் தொடர்வன. அதில் ஒரு நாளான தன்தேரஸ் தினத்தன்று நகைக்கடையில் நகை வாங்க சென்று புன்னகையுடன் நகையணிந்து அழகு பார்க்கும் பெண்

 

 

ஜம்முவில், தீபாவளியை முன்னிட்டு தெய்வங்களின் புகைப்படங்களை விற்பனை செய்யும் பெண்.

ஜம்முவில், தீபாவளியை முன்னிட்டு தெய்வங்களின் புகைப்படங்களை விற்பனை செய்யும் பெண்.

அமிர்தசரஸ் நகரில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கும் குழந்தைகள். தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனையை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதனால், எந்த அளவு மாசு குறையும் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அமிர்தசரஸ் நகரில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கும் குழந்தைகள். தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனையை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதனால், எந்த அளவு மாசு குறையும் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

http://www.bbc.com

  • தொடங்கியவர்

அயோத்தியாவில் 1.71 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் பலூன் மூலம் எவ்வளவு உயரம் செல்லலாம்?

 

 
18CHSUJEARTH1

A hot air balloon glides during a flight over Nevsehir in Turkey's historical Cappadocia region, Central Anatolia, eastern Turkey, on September 5, 2017. The rides by hot air balloon start in the morning as the balloons cannot fly at temperatures over 28 degrees Celsius and during extreme windy conditions. Cappadocia is one of the most famous tourist sites in Turkey and has been listed as a World Heritage Site in 1985. / AFP PHOTO / YASIN AKGUL   -  AFP

ரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் அமைந்த பிரம்புத் தொட்டிலில் உட்கார்ந்தபடி வானில் பறக்க முடியும். அப்படிப் பறக்கும் போது கீழே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இது அற்புத அனுபவம்.

சரி, இப்படி பலூன் மூலம் எவ்வளவு உயரம் வரை செல்ல முடியும்? இது நல்ல கேள்வி. ஹீலியம் என்ற வாயு நிரப்பப்பட்ட பலூன் என்றால் மிக உயரத்துக்குச் செல்ல முடியும். பலூன் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லக்கூடியதுதான். ஆனால் மனிதனுக்கு அது சரிப்பட்டு வருமா என்பதுதான் கேள்வி.

ஏனெனில் உயரே போகப் போக பல ஆபத்துகள் காத்திருக்கின்றன. இந்த ஆபத்துகள் பற்றி எதுவும் தெரியாத காலத்தில் அதாவது 1862-ம் ஆண்டில் ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இரு விஞ்ஞானிகள் 82 அடி உயரமுள்ள ஒரு ராட்சத பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட பிரம்புக் கூடையில் அமர்ந்து வானை நோக்கிக் கிளம்பினர்.

பலூன் மேலும் மேலும் உயரே சென்றது. சுமார் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்றபோது அங்கு குளிர் மைனஸ் 11 டிகிரியை (செல்சியஸ்) எட்டியது. கிளைஷர் நினைவிழந்தார். காக்ஸ்வெல்லின் கைகள் குளிரில் மரத்துப் போயின. அவருக்கு உடலில் வலுக்குறைந்தது. இன்னும் மேலே போனால் ஆபத்து என்பதை காக்ஸ்வெல் உணர்ந்து கடைசியில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார். பலூன் மெல்லக் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர்.

18CHSUJEARTH
 

வானில் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறையும். அந்த அளவில் மூச்சு விடும்போது உடலுக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறையும். 9100 மீட்டர் உயரத்தில் ஒரு நிமிடத்தில் நினைவு போய்விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 15 வினாடியில் நினைவு தவறி விடும். விசேஷக் காப்பு உடை, சுவாசிக்க விசேஷக் கருவி இல்லையென்றால் 19 கிலோ மீட்டர் உயரத்தில் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பித்துவிடும். ரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும். உடல் வீங்கிவிடும். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். உடலுக்குத் தகுந்த அளவுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் பிரச்சினைதான்.

ஒரு ஸ்பூன் மருந்தை கால் தம்ளர் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் மருந்து உடலில் சேரும். ஆனால் அந்த ஒரு ஸ்பூன் மருந்தைப் பெரிய அண்டா தண்ணீரில் கலந்துவிட்டு அதிலிருந்து கால் தம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்தால் உடலில் சேரும் மருந்து குறைந்த அளவில்தான் இருக்கும். அது மாதிரி வானில் மிக உயரத்தில் என்னதான் நன்றாக மூச்சை உள்ளே இழுத்தாலும் உடலுக்குக் கிடைக்கிற ஆக்சிஜன் குறைவான அளவில்தான் இருக்கும். மார்பு பத்து மடங்கு பெரிதாக இருக்குமானால் ஒரு வேளை தகுந்த அளவு ஆக்சிஜன் கிடைக்கலாம். ஆனால் அதற்குச் சாத்தியமில்லை.

18CHSUJEARTHALAN

ஆலன் யுஸ்டாஸ்   -  AP

இப்படியாக வானில் உயரே செல்வதில் காற்றழுத்தக் குறைவு, கடும் குளிர், சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான கதிர்களின் தாக்குதல் எனப் பல ஆபத்துகள் உள்ளன.

ஆனாலும் சாதனை புரியும் நோக்கில் 2012-ம் ஆண்டில் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்னும் சாகச வீர்ர் ஹீலியம் வாயு அடங்கிய ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கூண்டுக்குள், பலத்த காப்பு உடை அணிந்தபடி உட்கார்ந்தார். 39 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று, அங்கிருந்து தலைகுப்புறக் கீழே குதித்தார். குறிப்பிட்ட உயரத்தில் பாரசூட் விரிந்ததும் அவர் பத்திரமாகத் தரையில் வந்து இறங்கினார்.

பாம்கார்ட்னர் உயரே கிளம்பியபோது அவர் 16 வகையான ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்று ஒரு நிபுணர் கூறினார். இந்த ஆபத்துகளைச் சமாளிக்க அவர் நான்கு அடுக்குகளைக் கொண்ட விசேஷ உடையை அணிந்திருந்தார். தகுந்த காற்றழுத்தம் கொண்ட காற்றை சுவாசிக்க அவரது கூண்டுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

18CHSUJEARTHFELIX

ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர்   -  AP

பாம்கார்ட்னரின் பலூன் உயரே செல்ல இரண்டரை மணி நேரம் பிடித்தது. அவர் கீழே குதித்த போது சில நிமிடங்களில் பூமிக்கு வந்துசேர்ந்தார்.

பாம்கார்ட்னர் சாதனை நிகழ்த்திய பின் 2014-ம் ஆண்டில் ஆலன் யுஸ்டாஸ் என்பவர் இதே போல பலூனில் 41 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று கீழே குதித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

 

ஆராதிக்கப்படும் ஆஃப்ரிக்கக் கலைஞன்

ஆஃப்ரோ-பீட் இசை முன்னோடியும், மனித உரிமை செயற்பாட்டாளரும், சுயாதீன இசைக்கலைஞருமான ஃபெலா கூட்டியின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் 'FELABRATIONS" இசை விழாவில் ஆயிரக்கணக்கான நைஜீரியர்கள் பங்கேற்றனர் . அவரது இருபதாவது ஆண்டு நினைவு நாள் இசைநிகழ்ச்சிகள் குறித்த பிபிசி செய்தித் தொகுப்பு .

  • தொடங்கியவர்

சே குவேராவின் அந்தப் படம் இவர் எடுத்தது..! ரெனே புர்ரி நினைவு தினப் பகிர்வு

``நான், என் கண்கள், மனம், மூளை அனைத்தையுமே இந்த உலகத்தின் ஒரு பகுதியாகவே பயன்படுத்த விரும்புகிறேன், என்னைச் சுற்றி இருப்பவற்றைப் புகைப்படமெடுப்பதற்காக...'' - இவை, உலகப் புகழ்பெற்ற புகைப்படங்கள் பலவற்றை எடுத்த ஸ்வீடன் நாட்டுப் புகைப்படக் கலைஞர் ரெனே புர்ரியின் வார்த்தைகள். இன்று அவரின் நினைவு தினம்.

ரெனே புர்ரி

 

ஒரு புகைப்படம் நம்மை என்ன செய்யும்?

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். போரில் பாதிக்கப்பட்ட குழந்தை அழும் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பசியில் வாடி, இறக்கும் தறுவாயில் உள்ள குழந்தையின் உடலைக் கொத்திச்செல்ல,  அதன் பின்னால் காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகின் புகைப்படம், அரசையும் அதிகாரத்தையும் உலுக்கும். கம்பீரம் பொருந்திய தன் தலைவனின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, துவண்டு கிடப்பவர்களுக்குப் புதியதொரு நம்பிக்கை பிறக்கும். புகைப்படங்கள் வெறுமனே படங்கள் மட்டுமே அல்ல. 

ரெனே புர்ரி - சே குவேரா

வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆவணம் சேர்த்ததில் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அத்தகைய புகைப்படக்காரர்களில் `ரெனே புர்ரி' முக்கியமானவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சில டாக்குமென்ட்ரிகளிலும் பிறகு ஜெர்மன் நாட்டிலுள்ள கேமரா நிறுவனம் ஒன்றிலும் வேலைசெய்தார். அதன்பிறகு சிலகாலம் `டிஸ்னி'யிலும் வேலைபார்த்த ரெனே, துருக்கி, எகிப்து, சிரியா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பல பத்திரிகைகளுக்குப் புகைப்படம் எடுக்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள் சுற்றியுள்ளார்.

ரெனே புர்ரி

சே குவேராவின் புகைப்படம்: 

`மேக்னம் போட்டோஸ்' நிறுவனத்தில் ரெனே புகைப்பட நிருபராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், பல்வேறு நாடுகளின் அரசியல்ரீதியான புகைப்படங்கள் எடுத்துவந்தார். அந்த நேரத்தில்தான் அவருக்கு சே குவேரா-வை புகைப்படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ``சே குவேரா கோபக்கார மனிதர். அவரது அறையில் அவர் கூண்டுக்குள் இருக்கும் புலியைப்போல காட்சியளித்தார்'’என, சே குவேராவை படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்தார் ரெனே. சே குவேராவை மட்டுமன்றி புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ, ஆர்கிடெக்ட் லீ கோர்புசியர், ஃபிடல் கேஸ்ட்ரோ உள்ளிட்ட பலரின் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் வீதிகளையும், பல்வேறுவிதமான மக்களையும் புகைப்படமெடுத்துள்ளார். கறுப்பு-வெள்ளை காலகட்டத்தில் மட்டுமன்றி வண்ணப் புகைப்படங்களின் காலகட்டத்திலும் மகத்தான புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.

ரெனே புர்ரி

டாக்குமென்ட்ரி மற்றும் விருதுகள்:

போர் சார்ந்த புகைப்பட நிருபராக இருந்த ரெனே புர்ரி, `தி டூ ஃபேசஸ் ஆஃப் சைனா' என்ற 53 நிமிட டாக்குமென்ட்ரியைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த டாக்குமென்ட்ரியை, பி.பி.சி மற்றும் ஜெர்மன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டன.

இதைத் தவிர, பல்வேறு நாடுகளில் இவர் எடுத்த புகைப்படங்களையும், சே குவேரா, பிகாசோ போன்றோரை எடுத்த புகைப்படங்களையும் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.  புகைப்படத் துறையில் இவரது சாதனைக்காக ஜெர்மன் போட்டோகிராஃபி சொசைட்டி, தி ராயல் போட்டோகிராஃபி சொசைட்டி உள்ளிட்டவை விருது வழங்கியுள்ளன. 2013-ம் ஆண்டில் `இம்பாசிபிள் ரெமினிசென்சஸ்' என்ற இவரது வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது. 

ரெனே புர்ரி

 

தன் 13-வது வயதில் முதல் புகைப்படத்தை எடுத்தார் ரெனே புர்ரி. கிட்டத்தட்ட 30,000-க்கும்  மேலான அவர் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. புகைப்படங்கள், நமக்குள் உணர்வுகளைக் கடத்தவல்லவை. அவை நமக்குள் கடத்தும் மகிழ்ச்சி, துக்கம், அதிர்ச்சி அத்தனைக்குப் பின்னாலும் அந்தக் கணத்தை தன் சட்டத்துக்குள் அடக்கிய புகைப்படக்காரர்களின் அசாத்திய உழைப்பும் சில தியாகங்களும் அடங்கியுள்ளன. புகைப்படங்களைக் கொண்டாடும் நாம், அதை எடுத்தவர்களையும் `ரெனே புர்ரி'யின் நினைவு நாளில் நினைவுகூருவோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இனி கூகுள் மேப் கொண்டு நிலா உட்பட மற்ற கோள்களுக்கும் போகலாம் ஒரு விசிட்!

 
 

பரந்துவிரிந்த இந்த உலகை, கூகுள் மேப் கொண்டு சுலபமாக அளந்துவிட முடியும். தொலைதூரத்தில் எங்கேயோ அமர்ந்தபடி, வேண்டிய இடத்தில் அங்குலம் அங்குலமாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இங்கே தமிழ்நாட்டின்  உசிலம்பட்டியில் இருந்துகொண்டு, கான்பெர்ராவில் இருக்கும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் உள்ளே வரை சென்று வர முடியும். பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவ்வப்போது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் இந்தக் கூகுள் மேப்தான், தெரியாத ஊர்களில் வழிகாட்டி.

கூகுள் மேப் - ஸ்பேஸ் மெனு

 

படம்: Google Maps

சர்வதேச விண்வெளி நிலையம்

படம்: Google Maps

 

 இனி, கூகுள் மேப் கொண்டு மற்ற கோள்களையும் விரிவாக அலச முடியும். உதாரணமாக, நிலாவில் முதல் பல்வேறு கடினமான கோள்கள் உட்பட சின்னஞ்சிறிய புளூட்டோ வரை எட்டிப் பார்த்துவிட முடியும். இதற்கு, சாட்டிலைட் வியூவுக்குச் சென்றுவிட்டு, பூமியில் இருந்து ஜூம் அவுட்டானால் போதுமானது. நம் பால்வெளி மண்டலத்தின் மற்ற கோள்கள் கண்களுக்குப் புலப்படும். மெர்க்குரியின் பனி மூடிய பிரதேசங்கள் தொடங்கி, பல கோள்களின் பெரும் பள்ளங்கள், வெள்ளிக் கிரகத்தின் மேகமூட்டங்கள் வரை அனைத்தையும் இதுவரை கிடைத்த சாட்டிலைட் படங்களைவைத்தே கட்டமைத்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தை இங்கிருந்தே அலசிப்பார்க்கும் ‘Street View’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது, அதையும் தாண்டி தன் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது கூகுள் மேப்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

நடு வீதியில் சிங்கம் செய்த அசிங்கம்!

தென்னாபிரிக்காவின் ‘க்ரூகர்’ தேசியப் பூங்காவின் பிரதான வீதியில், சிங்கங்கள் இரண்டு உறவில் ஈடுபட்டதால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

6_Lions_Mating.JPG

குறித்த வீதியில் பெண் சிங்கம் ஒன்று படுத்திருந்ததாகவும், திடீரென அங்கே வந்த ஒரு ஆண் சிங்கம் உறவுக்குத் தயாரானதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

“பொதுவாக சிங்கங்கள் மறைவிலேயே இணையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இங்கே இத்தனை வாகனங்களில் மக்கள் நிறைந்திருந்தும், ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் ஒலி எழுப்பியும் அவை அதைச் சட்டை செய்யவில்லை” என்கிறார் ஒரு பார்வையாளர்.

சிங்கங்களின் இந்த வேலையால், ஏறக்குறைய இருபது நிமிடங்கள் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

http://www.virakesari.lk

A female and male lion can be seen dossing in the middle of the street creating a build up in traffic. But the traffic gets even worse when the couple start a mating session in front of the cars

http://www.dailymail.co.uk/

  • தொடங்கியவர்

மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் (அக்.20.1982)

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

 
மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் (அக்.20.1982)
 
ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
 
*  1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
 
*  1941 - கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
 
*  1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.

*  1944 - கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
 
*  1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.
 
*  1946 - புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 
*  1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
 
*  1976 - மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
 
*  1982 - இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
 
*  1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் (அக். 21- 1945)

 

பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரிட்டன் கடற்படையை 20-ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. * 1805 - ஊல்ம் என்ற இடத்தில்

 
 
 
 
பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் (அக். 21- 1945)
 
பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரிட்டன் கடற்படையை 20-ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. * 1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா, நெப்போலியனின் பெரும் ராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30 ஆயிரம் பேரைச் சிறைப்பிடித்தான். * 1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெண்டுக்கான காப்புரிமம் பெற்றார். * 1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.

* 1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர். * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் எட்வேர்ட் பேக்கர் கொல்லப்பட்டார். * 1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது. * 1879 - தாமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சேவாக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின்: இணையத்தில் வைரலாகும் உல்டா டுவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கிற்கு, சச்சின் டெண்டுல்கர் தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
சேவாக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின்: இணையத்தில் வைரலாகும் உல்டா டுவிட்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் முன்னணி இடத்தை பிடித்திருந்தவர் சேவாக். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார். சேவாக்குடன் துவக்க வீரராக களமிறங்கிய சச்சின், அவருக்கு அவ்வப்போது சில டிப்ஸ்களை வழங்குவார். ஆனால், சரி என்று தலையாட்டிவிட்டு செல்லும் சேவாக், தனது பாணியில்தான் ஆட்டத்தை தொடர்வார். எனினும் இந்த ஜோடி, இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தது.

201710210945284753_1_sachin1._L_styvpf.jpg

தற்போது ஓய்வு பெற்றுள்ள சேவாக், நேற்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், அவருடன் துவக்க வீரராக விளையாடிய சச்சின் சற்று வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியை தலைகீழாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரு. இந்த புதிய வருடம் உங்களுக்கு மிகச் சிறந்த துவக்கத்தை அளிக்கட்டும். ஆடுகளத்தில் இருக்கும்போது நான் என்ன செய்யச் சொன்னாலும், எப்போதும் உல்டாவாக செய்வாய். அதனால், இந்த பதிவு” என கூறியுள்ளார்.

சச்சின் பதிவு செய்துள்ள இந்த உல்டா டுவிட், ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மக்கள் பார்வைக்கு வருகின்றன ஒபாமாவின் காதல் கடிதங்கள்

 


மக்கள் பார்வைக்கு வருகின்றன ஒபாமாவின் காதல் கடிதங்கள்
 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கல்லூரியில் படித்த காலத்தில் முதன்முறையாக அலெக்ஸாண்ட்ரா என்ற பெண்ணைக் காதலித்தார்.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் அவருக்கு பல கடிதங்களை ஒபாமா எழுதியுள்ளார்.

அவற்றில் 9 கடிதங்கள் மட்டும் காதல் கடிதங்கள் ஆகும். அதில் அலெக்ஸாண்ட்ராவை உருகி உருகி வர்ணித்திருக்கிறார்.

அந்தக் கடிதங்கள் மூலம் அவரின் தீவிர காதலை புரிந்துகொள்ள முடியும்.

குறித்த கடிதங்கள் 30-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டவை.

இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்துவிட்டு வழங்கியிருக்கிறார்.

மேலும், இக்கடிதங்களில் தான் பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள், கறுப்பினராகப் பிறந்ததால் பட்ட துயரங்கள், அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள், என அனைத்தையும் எழுதியுள்ளார்.

ஒபாமாவின் கடிதங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுத பலர் ஆர்வமாக உள்ளனர்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

800 உணவு வகைகளோடு சென்னை ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலில் குஜராத் வருட பிறப்பு கொண்டாட்டம்

f736ce45-27f7-456b-8381-733f156efe8ajpg

9f4afb65-0f21-4fdf-874a-a07da7fa1dadjpg

5252b20a-0451-4d36-aee4-af567c0cd389jpg

 

4a270213-8be9-4df4-b685-7b793e91a91ejpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.