Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சமுத்திரக்கனி நடித்திருக்கும் ’ஏமாலி’ படத்தின் டீசர்..!

 

முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ஆறு மெழுகுவர்த்திகள் போன்ற படங்களின் மூலம் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் வி.இஸட். துரை. 

Yemali_18507.jpg

 


இவர் தற்போது சமுத்திரக்கனி, சாம், அதுல்யா, பால சரவணன் என பல நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கும் படம் ஏமாலி. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் துரை. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தில் டைட்டிலில் பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்தநிலையில், அதற்கான விடை படத்தில் இருக்கும் என்று இயக்குநர் வி.இஸட். துரை விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய சச்சின்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் காரில் சென்ற சச்சின் டெண்டுல்கர் திடீரென்று காரில் இருந்தபடியே இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்லவலியுறுத்தினார். 

Untitled_2_09119.jpg

 


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நேற்றுமுன்தினம் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துப் பேசினார். அவரைச் சந்தித்து, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துபோட்டியின் 4-வது சீசனின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். அவரைச் சந்தித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர், திடீரென்று காரின் கண்ணாடியை இறக்கி, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதனால், சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு சக்கர வாகனத்தில் இருந்த பெண், சச்சின் சொல்வதைக் கேளாமல், அவரையை பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி படுகொலை செய்யப்பட்ட தினம்: 04-11-1921

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி 1921-ம் ஆண்டு இதே தேதியில் டோக்கியோ நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவர் 1918-ம் ஆண்டில் இருந்து படுகொலை செய்யப்படும்வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

 
ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி படுகொலை செய்யப்பட்ட தினம்: 04-11-1921
 
ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி 1921-ம் ஆண்டு இதே தேதியில் டோக்கியோ நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவர் 1918-ம் ஆண்டில் இருந்து படுகொலை செய்யப்படும்வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

1333 - ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1576 - ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றியது. மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1914 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
1918 - முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா- ஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918 - 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதையடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
1956 - அக்டோபர் 23-ல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966 - இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1979 - ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1984 - நிகராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
1995 - இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2004 - ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

படுக்கையறைச் சுவர்களுக்கான அலங்காரம்!

 

 
4chgowbedroom%20walls3

டுக்கையின் பின்னால் இருக்கும் சுவரைத் திட்டமிட்டு வடிவமைத்தால் படுக்கையறையின் தோற்றத்தை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி எளிமையாக மாற்றிவிடலாம். இந்தச் சுவரைக் கலைப்பொருட்கள், விளக்குகள், வண்ணங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கலாம். இந்தப் படுக்கைச் சுவர் அலங்காரம் அறையின் தோற்றத்தையும் பெரிதாக்கிக்காட்ட உதவும். படுக்கைச் சுவர்களை வடிவமைப்பதற்கான அலங்காரம்...

     
4chgowbedroom%20walls5
 

பாரம்பரியமான படுக்கையறையை வடிவமைக்க நினைப்பவர்கள், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் பழமையான மரக் கதவைப் பொருத்தலாம். இந்தக் கதவில் ஒரு உலோக விளக்கையும் சிறிய கண்ணாடியையும் பொருத்தலாம்.

பூக்கள் வடிவமைப்பிலான உலோக ஜாலியைக் (Floral Metal Jali) கொண்டும் படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரை வடிவமைக்கலாம். இந்த உலோக வடிவமைப்பு அறைக்கு ரசிக்கத்தக்க அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் விளக்கு அலங்காரத்தைக் கொடுக்கும் படுக்கையைத் (Backlit bed) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகள் அறைக்கு இந்த வடிவமைப்பு பொருத்தமானதாக இருக்கும்.

4chgowbedroom%20walls1
 

எளிமையான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைச் சுவரை மென்மையான வண்ணங்களாலான சுவரொட்டிகளால் அலங்கரிக்கலாம். இளஞ்சிவப்பு, சாம்பல், இளமஞ்சள் போன்ற வண்ணங்களாலான சுவரொட்டிகளை இதற்குத் தேர்ந்தெடுக்கலாம்.

நாடகக் காட்சிகளில் வருவது போன்ற ரசனையான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கை சுவருக்குப் பின்னால் முப்பரிமாண (3டி) சுவரொட்டிகளையோ வடிமைப்புகளையோ தேர்ந்தெடுக்கலாம். இந்த முப்பரிமாண வடிவமைப்புகளால் படுக்கையறை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.

4chgowbedroom%20walls4

சுவரெழுத்துகளால் (Graffiti) படுக்கையின் சுவரை வடிவமைப்பதும் இப்போதும் பிரபலமாக இருக்கிறது. இந்தச் சுவரெழுத்துகள் வடிவமைப்பும் அறையின் தோற்றத்தை நாடகத்தன்மை கொண்டது போல் மாற்றும் ஆற்றல்கொண்டது.

எளிமையான அலங்காரத்தை விரும்புவர்கள், ‘ஜியோமெட்ரிக்’ வடிவமைப்புகளான சுவரொட்டிகளைப் படுக்கைச் சுவரில் அமைக்கலாம்.

படுக்கையறையில் பொருட்களை வைக்க வேண்டிய தேவையிருப்பவர்கள், படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரில் அலமாரியை (Wardrobe) அமைக்கலாம். இந்த அலமாரி படுக்கையறையில் இடப்பற்றாக்குறை ஏற்படுத்துவதைக் குறைக்க உதவும். படுக்கைக்குப் பொருந்தும் வண்ணத்தில் இந்த அலமாரியை வடிவமைப்பது அறையின் தோற்றத்தை மெருகேற்றுவதற்கு உதவும்.

4chgowbedroom%20walls2
 

படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரை மென் செலடான் பட்டு (soft celadon silk) அல்லது சாடின் திரைச்சீலைகளாலும் வடிவமைக்கலாம். ஆடம்பரமான அலங்காரத்தை விரும்புபவர்களுக்கு இந்தத் திரைச்சீலை அலங்காரம் ஏற்றதாக இருக்கும்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! - #VikatanPhotoStory

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்றுகூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த  திருவாசகத்தை அருளிய  மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில் குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல...  தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக விளங்கும் திருக்கோயில்... ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!  ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக...

ஆவுடையார் கோயில்

 

பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்... ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்...

 

துவாரபாலகர்

நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன் .. சொல்லாமல் சொல்லும் ஆவுடையார் கோயில் துவாரபாலகர்

 

குரு

குருந்தமரத்தடியில் குருவாக அமர்ந்து ஆட்கொண்ட அருளாளர் காட்சி தரும் கோலத்தை தரிசிக்கும் பக்தர்கள்...

 

ஆநிரைகள்

ஆவுடையார்கோயில் பிராகாரத்தில் பசியாறும் ஆநிரைகள்...

 

பாண்டியன்

மாணிக்கவாசகரைச் சிறைப்படுத்திய அரிமர்த்தன பாண்டியன்.. இவன் கொடுத்த பொன்னும் பொருளும் கொண்டு எழுப்பப்பட்ட ஆலயம்தானே ஆவுடையார்கோயில்?!

 

பாம்பு

கலைநயம் மிக்கத் தூணில் சிவலிங்கத்துக்கு மேலாக இருப்பது கற்கோலம் அல்ல; பின்னிப் பிணைந்த இரண்டு பாம்புகளின் கலைக் கோலம்...

 

கொடுங்கைகள்

பிற்காலச் சிற்பிகள் செய்யத் தயங்கும் ஆவுடையார்கோயில் கொடுங்கைகள்... அன்றைய சிற்பிகளின் அற்புதக் கலைவண்ணம்...


 

நடன நங்கை

ஆடலரசனை ஆடலால் வழிபடும் நடன நங்கை தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகுக் கோலம்!

 

பிராகாரம்

இருளும் ஒளியும் போல இன்பம் துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை... கோயில் பிராகாரம் உணர்த்தும் உண்மை இதுதானோ..?

 

ஞானவெளிச்சம்

மாயை இருளைக் கடந்தால்... ஞானவெளிச்சம் தோன்றுமோ?

 

திருவாசகம்

குருந்த மரமும்... குருமூர்த்தியும்... திகட்டாத திருவாசகம் அருளிய மணிவாசகரும்...

 

பிள்ளையார்

எண்ணெயும் நீரும் காணாமல் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறாரோ பிள்ளையார்?

 

அழகன்

அழகு மயிலேறி அருள்புரிய வரும் அழகன் முருகனின் எழிற்கோலம்...

 

ஈட்டி வீரன்

சிவநிந்தை செய்வோரை விடமாட்டேன்...சினம் கொண்டு ஈட்டி எறியும் வீரன்...

 

ஞானம்

மண்டபத்தினுள்ளே ஞானம் தேடி ஏகாந்தமாக இருக்கிறார்களோ..?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உண்மையான அழகுப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionநேபால் (இடது) மற்றும் ஐஸ்லாந்து (வலது) நாடுகளில் மைஹேலா இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

''இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்'' என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக்.

அவர் சொன்னதை நான் செய்தேன். பத்து லட்சத்துக்கும் அதிகமான முடிவுகள் வந்து விழுந்தன.

'' அங்கே என்ன பார்க்கிறாய்? மிகவும் பாலியல் ரீதியாக கவர்ச்சியூட்டும் புகைப்படங்கள் தானே? நான் சொல்வது சரியா'' எனஅவள் கேட்டாள்.

ஆம். தேடலில் முதலில் கிடைத்த படங்களில், பல பெண்கள் குதிகாலை உயர்த்தும் காலணிகள் அணிந்திருந்தனர். மேலும் இளமையான ஒல்லியான பொன்னிற கூந்தலுடன், பூரண தோலுடன் உடல் அச்சுக்குள் பொருந்தும் வண்ணம் உடைகளை வெளிப்படுத்தும் பெண்களின் படங்களாக இருந்தன.

'' ஆகவே அழகு என்பது எப்போதுமே இப்படித்தான் பார்க்கப்படுகிறதல்லவா. பெண்களை காட்சிப்படுத்தி, அவர்களை மிகவும் பாலியல் ரீதியிலான கவர்ச்சிப் பொருளாக்கினால்தான் அழகு என்பது ஏற்கப்படுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' என்கிறார் மைஹேலா .

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

'' பெண்கள் அப்படியானவர்கள் அல்ல. நம்மிடம் நமது கதைகள் இருக்கின்றன, நமது போராட்டங்கள், நமது சக்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரதிநிதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நம் பிரதிபலிப்பைத்தான் கூகிள் வெளியிடுகிறது. இது போன்ற புகைப்படங்கள் தேடலில் முதலில் வருவதற்கு நாம் அனைவருமே குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தியிருக்கிறோம்'' என்கிறார் மைஹேலா.மைஹேலா மிகச் சமீபத்தில் அவரது முதல் புகைப்பட புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். 'அட்லஸ் ஆஃப் பியூட்டி' என்ற பெயரிலான அப்புத்தகம் 500 பெண்களின் உருவப்படங்களை உள்ளடக்கியிருக்கிறது.

பல்வேறு வயது, தொழில் மற்றும் பின்னணியில் உள்ள பெண்கள் இந்த புகைப்படங்களில் உள்ளனர். ''மக்கள் எனது படங்களை விரும்புகிறார்கள் ஏனெனில் அவர்கள் நம்மைச்சுற்றி உள்ளவர்களையே, தெருக்களில் நம்மைச்சுற்றியுள்ள மக்களையே சித்தரிக்கிறார்கள்'' என நொரொக் விளக்குகிறார்.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC, INDIA Image captionபுஷ்கர், இந்தியப் பெண்

''என்னுடைய படங்கள் இயல்பாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. இவை ஆச்சர்யமாகவும் இருக்கலாம் ஏனெனில் வழக்கமாக நாம் இதுபோன்ற புகைப்படங்களை அழகுக்கான புகைப்படமாக பார்த்திருக்கமாட்டோம்'' என்றார் அந்த பெண் புகைப்படவியலாளர்.

அந்தப் புத்தகத்தில் உள்ள 500 படங்களில் ஒவ்வொன்றுக்கும் அந்த புகைப்படத்தை விவரிக்கும் ஒரு குறிப்பும் இருக்கிறது. அதில் எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல் உள்ளது.

எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான தகவல் ஒவ்வொரு புகைப்படத்திலும் மாறுபடும். நேபால், திபெத், எத்தியோப்பியா, இத்தாலி, மியான்மர், வட கொரியா, ஜெர்மனி, மெக்சிகோ, இந்தியா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் என பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionகொலம்பியா (இடது) மற்றும் இத்தாலியில் (வலது) எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

சில இடங்கள் மற்ற இடங்களை விட பிரச்னைக்குரியவை என்பது நிரூபணமானது.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionமெக்சிகன் காவல்துறையில் பணிபுரியும் கேப்டன் பெரீநைஸ் டோரஸ்

'' நான் தெருக்களில் பெண்களை புகைப்படம் எடுக்க அணுகினேன். என்னுடைய திட்டம் குறித்து அவர்களிடம் விளக்கினேன். சில நேரங்களில் எனக்கு 'எடுக்கலாம்' என்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் எனக்கு 'இல்லை' என்ற பதிலே கிடைக்கும். அந்த பதிலானது எந்த நாட்டில் நான் நின்றுகொண்டு கேட்கிறேன் என்பதைப் பொறுத்து மாறுபடும்'' என அவர் விவரித்தார்.

'' மிகவும் பழைமைவாத சமூகத்திடம் நாம் செல்லும்போது சில விஷயங்களை நாம் கவனிக்க முடியும். அந்தப் பெண்ணுக்கு சமூகத்திடம் இருந்து சில குறிப்பிட்ட வகையில் அதிக அழுத்தம் இருக்கும் மேலும் அவளது தினசரி வாழ்க்கை வேறு சிலரால் மிககவனமாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.அதனால் அவள் எளிதில் புகைப்படம் எடுக்க சம்மதிக்க மாட்டார். அவள் ஒருவேளை அவளது குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் சம்மதம் பெற வேண்டியதிருக்கலாம்.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionநியூயார்க்கில் புகைப்படம் எடுக்கப்பட்ட சகோதரிகள்

உலகின் மற்ற சில பகுதிகளில் அவர்கள் அதீத கவனமாக இருக்கிறார்கள் ஏனெனில் அங்கே கொலம்பியாவைப் போல பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம். ஏனெனில் கொலம்பியாவில் பாப்லோ எஸ்கோபர் மற்றும் அவரது மாஃபியாவால் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நீடித்தது.'' என்றார் நொரொக்.

''இதே புகைப்படம் எடுக்கும் திட்டத்தை ஆண்களுக்காக யாராவது துவங்கியிருந்தால் அது மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஏனெனில் ஆண்கள் அவர்களது மனைவியிடமோ, சகோதரிகளிடமோ, அன்னையிடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை'' என அடுக்குகிறார் அந்த புகைப்படவியலாளர்.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionவடகொரியாவில் ராணுவ மியூசியத்தில் வழிகாட்டியாக பணிபுரியும் பெண்

தான் எப்போதாவது தனது படங்களை போட்டோஷாப்பில் பயன்படுத்துவதாகவும் ஆனால் அது நீங்கள் நினைக்கும் காரணங்களுக்காக அல்ல என்கிறார் மைஹேலா.

''நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது அது மூல படமாக இருக்கும். அதாவது நிஜத்தில் நாம் பார்க்கும் வண்ணங்கள் அதில் இருக்காது. ஆகவே, நான் அவற்றை நிஜ இடத்தில் இருந்ததுபோல துடிப்பானதாகவும், வண்ணமயமாகவும் மாற்றுவதற்காக அந்த புகைப்படங்களில் திருத்தங்கள் மேற்கொள்வேன். ஆனால் யாரையாவது மெலிதாக காட்டுவதற்காகவோ அல்லது அதுபோன்ற ஏதேனும் விஷயங்களுக்காக எப்போதும் பயன்படுத்தமாட்டேன். ஏனெனில் அவை வலி மிகுந்தது''.

'' ஏனெனில் நானும் ஒரு பெண்ணாக வளர்வதிலுள்ள அனைத்து கடினமான விஷயங்களையும் அனுபவித்து வளர்ந்தேன். நான் ஏதாவதொரு வகையில் மெலிதான உடல்வாகு கொண்டவளாக தோற்றமளிக்க வேண்டுமென விரும்பினேன். அது நான் தினசரி வாழ்வில் பார்த்த போலியான புகைப்படங்களின் தாக்கத்துடன் தொடர்புடையது'' எனச் சொல்கிறார் மைஹேலா .

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionமியான்மர் மற்றும் நேபாள நாட்டில் எடுக்கப்பட்ட பெண்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு கிம் கர்தாஷியன் வெளியிட்ட செல்பி புத்தகங்களில் இருந்து மைஹேலாவின் புகைப்பட புத்தகம் முற்றிலும் மாறுபட்டது. ''இந்நாட்களில் நமது உலகின் மிகப்பிரபலமான பதிவர்கள் சாதிக்க கடினமான போலியான அழகு தர நிர்ணயம் செய்கிறார்கள் செய்கிறார்கள். ஒரு பெண்ணாக அதனை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பது கடினமாக இருக்கிறது .

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionகிரீஸ் நாட்டின் அகதிகள் முகாமில் உள்ள சிரியா பெண்கள்

கிம் கர்தாஷியனுக்கு பத்து கோடி பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஆகவே வித்தியாசத்தை கற்பனை செய்து பாருங்கள். அது ஆச்சர்யமானது. ஆனால் மெல்ல மெல்ல இயல்பான மற்றும் எளிமையான அழகு என்பது உலகம் முழுவதும் பரவும் என நினைக்கிறேன்'' என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionஎத்தியோப்பியா, டெல்பியா கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

ஆகவே புகைப்படவியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மைஹேலா கொடுக்கும் ஆகச்சிறந்த ஆலோசனை என்னவாக இருக்கும்? நல்ல தரமான கேமராவை வாங்க வேண்டுமா? கண்ணாடி வில்லை மற்றும் கோணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா ?

இல்லை

'' நல்ல ஷூ ஒன்றை வாங்குங்கள்'' எனச் சொல்லி விட்டு சிரிக்கிறார்.

An image from Atlas of Beautyபடத்தின் காப்புரிமைMIHAELA NOROC Image captionபெர்லினில் மைஹேலாவைச் சந்தித்த பெண்

''ஏனெனில் நீங்கள் நிறைய நடக்க வேண்டும் நிறைய விஷயங்களை ஆராய வேண்டும்'' என்கிறார் மைஹேலா நொரொக்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

 
 
வாழ்க்கை இப்படித்தான்!
  • தொடங்கியவர்

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

 

 

நாளைய தலைமுறைக்குப் பத்திரமாகத் திருப்பித்தர வேண்டிய ஜென்மக்கடனல்லவா இந்த பூமி? ஆனால், இங்கு சுற்றுச்சூழலுக்கு எதிரான அச்சுறுத்தல்  ஒவ்வொரு நொடியும் வலுவடைந்துகொண்டே வருகிறது. இந்த யுத்தக்களத்தில் மனம் தளராது நின்று, இயற்கையைக் காப்பதற்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் நம் பெண்கள். அப்படிப்பட்ட ஆகச்சிறந்த இயற்கைப் போராளிகளைச் சந்திப்போம், வாருங்கள்...

அரசைப் பணிய வைத்த அகிம்சைப் போராட்டம்

அலிட்டா பெளன் (Aleta Baun) - இந்தோனேசியா 

பல லட்சம் விலை நிர்ணயித்திருக்கிறார்கள் இவர் தலைக்கு. கைகளில் கால்களில்... ஏன் முகத்தில்கூட  இவருக்கு வெட்டுகள் விழுந்திருக்கின்றன. ஆனாலும், எதற்கும் பயந்ததில்லை. அன்றும் அப்படித்தான்... பயமற்றவராகவே தன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரைக் கொல்ல வந்தது. சாவைக்கண்டு பயமில்லைதான். இருப்பினும், செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று இருக்கிறதே... அதற்காகவே உயிர் பிழைக்க வேண்டுமென்று நினைத்தார். ரத்தம் சொட்டச் சொட்ட குத்துயிரும் கொலைவுயிருமாகத் தப்பித்தார். அவரை முற்றிலுமாக அழித்தொழிக்க வேறொரு கும்பலும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்கத் தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையோடு வனப்பகுதிக்குள் பதுங்கினார். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் வனவாசம். பிறகு, காட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இந்தப் பெண்மணிதான் அலிட்டா  பெளன்.

இந்தோனேசியாவின் மேற்கு தைமூரின் முடீஸ் மலைப்பகுதி புகழ்பெற்று விளங்குவதற்குக் காரணம் பசுமை வனம் மட்டுமல்ல,  இங்கிருக்கும் மோலோ (Mollo) எனும் பழங்குடியின மக்களும்தான். இந்த மலையோடு அத்தனை அன்போடு வாழ்ந்துவந்தவர்கள் அவர்கள்.

p26a.jpg

1980-களில், இந்தோனேசிய அரசாங்கம் இந்த மலையில் மார்பிள் சுரண்டியெடுக்க சுரங்க முதலாளிகளுக்கு அனுமதியளித்தது. பெருநிறுவனங்கள் மலைவனத்தில் காலடியெடுத்து வைத்தன. அழிவு தொடங்கியது.
அலிட்டா பெளன் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவரை வளர்த்தெடுத்ததே மலைக் கிராமத்துப் பெண்கள்தான். அதனாலேயே இம்மக்கள்மீதும் மலைகள்மீதும் அத்தனை காதல் இவருக்கு. அழிக்கப்படும் மலைகளைக் காக்க, பலவித போராட்டங்களை முன்னின்று நடத்துகிறார் அலிட்டா. ஆனால், சுரங்க நிறுவனங்களும் அவற்றுக்்கு அனுமதியளித்த அரசு அமைப்புகளும் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க மறுக்கின்றன.

முடீஸ் மலைகளைச் சுற்றியிருக்கும் 24 கிராமங்களுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டார் அலிட்டா. ஒவ்வொரு கிராமத்தினரிடம் பிரச்னைகளை விவாதித்து, போராட்ட வழிமுறைகளுக்கான திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தினார்.

200-க்கும் அதிகமான பெண்களைத் திரட்டி, சுரங்கங்களைச் சுற்றி மலைகளை ஆக்கிரமித்தார்.

அங்கு இவர்கள் கோஷம் எழுப்ப வில்லை, யாரையும் திட்டவில்லை, சண்டையிடவில்லை, வாக்குவாதம் செய்யவில்லை. மாறாக, பறித்து வரப்பட்ட பஞ்சுகளிலிருந்து நூலை உருவாக்கத் தொடங்கினார்கள். அந்த நூலையும் ஊசியையும் கொண்டு கைகளை மட்டும் பயன்படுத்தி, துணி நெய்தார்கள்.
 
மோலோ மக்கள் அந்த மலையின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த வாழ்விலும் இயற்கை சார்ந்தே இயங்குபவர்கள். உடைகளைக்கூட இயற்கை முறையிலேயே தயாரித்துக் கொள்ளும் வழக்கமுடையவர்கள். இவர்களின் இந்த வித்தியாசமான அகிம்சைப் போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது.

பெண்களின் போராட்டம் ஓராண்டைக் கடந்தும் தொடர, வீட்டையும் சமையலையும் குழந்தை களையும் ஆண்கள் பார்த்துக் கொண்டார்கள். `எதிர்த்தால்  விரட்டியடிக்கலாம்' என்கிற எண்ணத்திலிருந்த எதிரிகளுக்கு, புன்னகை முகத்தோடு, அமைதியாக அமர்ந்து துணி நெய்யும் இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல், இந்தப் போராட்டம் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திரும்ப வைப்பதைக் கண்ட அரசாங்கம், சுரங்க அனுமதிகளைத் திரும்பப்பெற்று, நிறுவனங்களை மலையிலிருந்து வெளியேற்றின.

2013-ம் ஆண்டு அலிட்டாவுக்கு உலகின் மிக முக்கிய சூழலியல் அங்கீகாரமான `கோல்டுமேன் சூழலியல்’ விருது வழங்கப்பட்டது. உலகின் மிக முக்கிய ஊடகங்கள் அவர் முன்னே மைக் நீட்டின. அப்போது இப்படிச் சொன்னார்...

“நாங்கள் இந்தப் பூமியை ஒரு மனித உயிராகவே பார்க்கிறோம். இந்தக் கற்கள் எங்கள் எலும்புகள், இந்தத் தண்ணீர் எங்களின் ரத்தம், இந்த நிலம் எங்களின் சதை, இந்தக் காடுகள் எங்களின் கூந்தல். இதில் ஏதேனும் ஒன்று எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டாலும் நாங்கள் முடங்கிப்போவோம். இயற்கை எங்கள் கடவுள்...”

தன் இனம் முழுமையான தற்சார்பு வாழ்வை வாழ்வதற்காகவே, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறார் அலிட்டா.

ரத்தத்தின் நடுவே கேட்கும் இயற்கையின் சத்தம்

பெர்தா ஜுனிகா (Berta zunika) - ஹண்டோரஸ்

“ஜுனிகா... தவறில்லையென்றால் உங்கள் வயதை நான் தெரிந்துகொள்ளலாமா?”

“என் வயது 26.''

“இந்த வயதில் எப்படி, இப்படி ஒரு தைரியம்?”

“சுயமரியாதையும் சுயசிந்தனையும் தைரியமும் கொண்ட பெண்ணுக்குப் பிறந்தவள் நான். `எம் உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும், மக்களின் சுதந்திரத்துக்காகவும் போராட வேண்டும்' என்று என் அம்மா சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் கண்ட கனவை உறுதியோடும் தைரியத்தோடும் களம் கண்டு நிறைவேற்றுவேன்.”

தன் தாய் பெர்தா காசெரஸ் கொல்லப்பட்ட சில நாள்களிலேயே அவருடைய பணியைத் தொடர அந்த இடத்துக்கு வந்துவிட்டார் ஜுனிகா. உடனே அவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து மீண்ட பொழுதில்தான், மேற்கூறிய விஷயங்களைத் தெரிவித்தார் ஜுனிகா.

ஹண்டோரஸ் ஓர் அழகிய தேசம். அமெரிக்கக் காலடியின்கீழ் கிடக்கும்  சிறிய நாடு. அரசியல் சிக்கல்கள் கொண்டது. உறுதியான அரசாங்கம் இல்லாத நிலை. பசியும், பட்டினியும், கொலையும், கொள்ளையும், இயற்கை வளச் சுரண்டல்களும் மிகுந்திருக்கும் பூமி.

p26b.jpg

ஹண்டோரஸின் பூர்வகுடிகள் `லென்கா’.  இவர்களின் பூர்வீக நிலப்பகுதிகளில் ஆர்ப்பரித்துப் பாயும் குவர்கார்க் நதியின் மடியில் ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி, மின்சாரம் எடுக்கப்போகிறோம் என்று சொன்னது அரசாங்கம். இதற்கான குத்தகையை ஒரு சீன நிறுவனமும், உலக வங்கியின் ஒரு கிளையும், உள்நாட்டின் ஒரு தனியார் நிறுவனமும் பிரித்துக்கொண்டு வேலைகளைத் தொடங்கின. லென்கா மக்களின் மொத்த வாழ்வையும் சூறையாடும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி மிகக் கடுமையாகப் போராடி வந்தார் பெர்தா  காசெரஸ். அவரின் தொடர் போராட்டம்  சர்வதேச கவனத்தை ஈர்த்தது. திட்டம் முடக்கப்பட்டது. பெர்தாவுக்கு வலிமையான எதிரிகள் உருவானார்கள்.

இரவு 11.30 மணி. மறுநாள் நடக்கவிருக்கும் ஒரு வழக்குக்காக நண்பரோடு சேர்ந்து குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் பெர்தா. கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும் அந்தக் குண்டு அவரின் நெற்றியைத் துளைத்தது. கதவில் ரத்தம் தெறித்தது. இது நடந்தது மார்ச் 2016-ல். ஹண்டோரஸின் மொத்த குடிகளும் பெர்தாவின் மரணத்துக்குக் கண்ணீர் சிந்தினர். அரசாங்கம் மட்டும் வன்மத்தைக் காட்டியது.

`கொள்ளை சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டார்’ என்று பெர்தாவின் கொலையை முதலில் பூசி மெழுகியது ஹண்டோரஸ் காவல்துறை. கடும் எதிர்ப்பு  கிளம்பவே, பின்னர் அதை மறுத்தது. உலகப்புகழ்பெற்ற `தி கார்டியன்’ பத்திரிகை பெர்தாவின் கொலை குறித்துச் சில ஆதாரங்களை வெளியிட்டது. கொலையில் கைது செய்யப்பட்ட எட்டு  பேரில் மூன்று பேர் அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்; இந்தக் கொலைகளுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது ஆகிய அதிர்ச்சி உண்மைகளுக்கான ஆதாரங்கள் இதன்மூலம் கிடைத்தன.

தன் தாய் இறந்த சில நாள்களிலேயே, அவர் முன்னெடுத்திருந்த `COPINH’ எனும் சூழலியல் அமைப்பின் பொறுப்பை ஏற்றார் 26 வயதான ஜுனிகா. முதல் போராட்டத்தை முடித்த அன்றே அவரைக் கொல்லும் முயற்சியும் நடந்தது.  ஒருவழியாகப் போராடி அவர்களிடமிருந்து உயிர் பிழைத்து வந்தார் ஜுனிகா.

எந்நேரம் வேண்டுமானாலும் தான் கொல்லப்படலாம் என்கிற சூழலிலும் நதியையும் மலைகளையும் மக்களையும் காத்திடும் வகையில் ஜுனிகாவின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  

ஒரு பட்டாம்பூச்சியின் போராட்டம்

ஜூலியா பட்டர்ஃபிளை ஹில் (Julia Butterfly Hill) - அமெரிக்கா

அப்பாவின் பணி காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு மாற வேண்டும். இப்படி, இயல்பிலேயே பயணம் இவருக்குப் பிடித்த விஷயமாகிவிட்டது. ஒரு தடவை காட்டுக்குள் ட்ரெக்கிங் செய்யத் தொடங்கியபோது ஒரு பட்டாம்பூச்சி இவரின் கைமீது அமர்ந்தது. அது அன்று முழுவதும் இவர் கையிலேயே இருந்தது. அந்த நாள் முதல் இயற்கையோடு ஏதோ ஒரு நெருங்கிய உறவு இவருக்கு ஏற்பட்டு விடுகிறது. தன் பெயரோடு, பட்டாம்பூச்சியை இணைத்துக்கொள்கிறார்.

1997-ல் கலிஃபோர்னியாவில் ஒரு சூழலியல் அமைப்பின் போராட்டத்தில் பங்கெடுக்கச் சென்றார் ஜூலியா. ஒரு பெரிய ரெட்வுட் (Redwood) மரத்தை வெட்ட `பசிபிக் லம்பர்’ எனும் நிறுவனம் தயாராக இருக்கிறது. அதை எதிர்த்து அனைவரும் மரத்தின் அடியில் நின்று போராடுகின்றனர். அப்போது அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், `இந்தப் போராட்டத்தை இன்னும் வீரியப்படுத்த யாரேனும் ஒருவர் மரத்தின்மீது ஒருவார காலம் தங்க வேண்டும்' என்று சொல்கிறார்.

p26c.jpg

அங்கிருந்த களப்போராளிகள் அனைவரும் அந்த மரத்தைப் பார்க்கிறார்கள். அது 1500 வருடப் பழைமையான மரம். உயரம் 180 அடி. அதன்மீது ஏறி ஒரு வாரம் தங்குவதா என எல்லோருமே அமைதி காக்கிறார்கள். யாரும் முன்வராத சூழலில் முதன்முறையாகச் சூழலியல் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் ஹில் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

1997 டிசம்பர் 10 அன்று அந்த மரத்தில் ஏறுகிறார். சூழலோ அவரை ஒரு வாரத்தில் இறங்கவிடவில்லை. அவர் அங்கு மொத்தம் 738 நாள்கள் இருந்தார். அந்த மரத்துக்குச் செல்லமாக `லூனா’ என்று பெயரிட்டார். வெயிலிலும் மழையிலும் குளிரிலும் அந்த மரத்தின் மீதே இருந்தார். 738 நாள்கள் கழித்து அந்த நிறுவனம் அந்த மரத்தை வெட்ட மாட்டோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்தான் ஜூலியா கீழே இறங்கினார்.

மரத்தைவிட்டு நிலத்தில் கால் வைத்த தருணம் தன் ஒட்டுமொத்த வாழ்வும் மாறியிருக்கும் என்று ஜூலியா நினைக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி இயல்பு வாழ்வைக் கவனிக்கலாம் என்றே நினைத்திருந்தார். உலகமோ அவரைப் பெரும் போராளியாகப் பார்த்தது. தன் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானத்தைப் புரிந்துகொண்ட ஹில், `இனி இதுதான் வாழ்க்கை' என்று சூழலியலுக்கான பணிகளைத் தொடங்கினார். 
ஏழு வருட தொடர் ஓட்டத்துக்குப் பின் சற்று நிற்க வேண்டியிருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. தொடர்ந்து இருமுறை மிகப்பெரிய விபத்துகளில் சிக்கித் தேறினார். அதற்குள் அடுத்த அடி. ஒருவித பூச்சிக்கடி காரணமாக `லைம்’ (LYME) எனும் நோய் அவருக்குப் பரவியிருந்தது. அதுவும் கடைசி நிலையில்தான் அறியப்பட்டது. இப்போது, உடல் மொத்தமும் தளர்ந்துபோயிருந்தாலும், மனவலிமையோடு மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார், இந்தப் பூமிக்காக.

களம் காணும் ‘தனி’ ஒருத்தி!

ஜோசஃபின் பகலன் (Josephine Pagalan) - பிலிப்பைன்ஸ்

தெற்கு பிலிப்பைன்ஸ் காடுகளில் வசிக்கும் `மனோபோ' (Manobo) பூர்வகுடிகளின் காடுகளைச் சுரங்கங்களுக்கும் மரம் வெட்டும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் தாரைவார்க்கத் தொடங்கியது. அதை எதிர்த்து தனியொருவராகக் களம் கண்டவர் ஜோசஃபின் பகலன். தன் கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடையை நடத்தியபடி தன் குடும்பத்தையும், தன் மக்களுக்கான போராட்டத்தையும் ஒருசேர நடத்தி வந்தவர். இவரை மிரட்டும்விதமாக, இவர் நண்பரைச் சுட்டு வீழ்த்தியது அதிகாரக் கும்பல். அந்தக் கொலை இவரைப் பெரிதும் பாதித்தது. மரணத்துக்கான  நீதி கிடைக்காததும் பெரும் வலியைக் கொடுத்தது. தன்னால் தன்னைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று குடும்பத்தையும் கிராமத்தையும் விட்டுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்தார் ஜோசஃபின்.

p26d.jpg

இன்று நகரில் வாழ்ந்தபடியே மக்களுக்கான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

மழைக்காடுகளின் போராட்டக் குரல்!

மரினா சில்வா (Marina Silva) - பிரேசில்

பதினாறு வயதில் தாய் தந்தையை இழந்து ஆதரவற்றுப் போனவர். பிரேசிலின் ரப்பர் தோட்டத்தில் பிறந்தவர். ஆசிரமத்தில் வளர்ந்தவர். பின்னர் வீடுகளில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார். 1980-களில் உலகப்புகழ்பெற்ற சூழலியல் போராளி சிக்கோ மெண்டீஸுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி வந்தார். 1988-ல் சிக்கோ மெண்டீஸ் கொலை செய்யப்பட, அவரின் இடத்தை நிரப்பினார் மரினா. அமேசான் மழைக்காடுகளைக் காப்பதற்காகக் களத்தில் போராடினார்.

p26e.jpg

அதிகாரம் கையிலிருந்தால்தான் இன்னும் நிறைய நல்ல விஷயங்களை மக்களுக்குச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் தேர்தலில் கால் பதித்தார். செனெட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் களத்தில் சூழலியல் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். சமீபத்தில் பிரேசில் நாட்டின் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 20 சதவிகித ஓட்டுகளைப் பெற்றார். பெரும் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதால் அரசியலில் பலமுறை வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் தளராமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்.

பூமியைக் காக்கும் ‘கேப்டன்’ தேவதை!

நிக்கி சில்வெஸ்ட்ரி (Nikki Silvestri) - அமெரிக்கா

`மண் மற்றும் நிழல்’ (Soil - Shadow) எனும் அமைப்பின் தலைவர் நிக்கி சில்வெஸ்ட்ரி. `மண், மலைகளில் உட்கார்ந்து அழுக்கு உடைகளோடு போராடுபவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், யதார்த்தம் புரியாதவர்கள், நவீன வாழ்க்கை புரிபடாதவர்கள்' எனச் சூழலியல் போராளிகளுக்கான அனைத்துப் பிம்பங்களையும் உடைத்தெறிந்து, உலகின் பல மேடைகளில் சூழலியல் பிரச்னைகளை விவாதிக்கும் நவீன உலக யுவதி.

உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவர், பேராசிரியர், மாணவி, போராளி என பல முகங்களைக் கொண்டவர் இவர். அமெரிக்காவின் ஆக்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களைக் களத்திலும்,  நீதிமன்றங்களிலும், பல உலக அரங்குகளிலும் நடத்தி வருகிறார்.

p26f.jpg

``நீங்கள் சூழலியல் போராளியாக மாற காரணம்..?''

``கேப்டன் பிளானெட் எனும் கார்ட்டூன்.''

``என்ன?!''

``அதில் அந்த ஹீரோ இந்தப் பூமியைப் பல்வேறு பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார். சிறுவயதில் அந்த கார்ட்டூனைப் பார்த்த பிறகு, இந்தப் பூமியை நான் காப்பாற்றிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். அதற்காகத்தான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறேன்.''

சமீபத்தில் `டெட்எக்ஸ்' (TedX) நிகழ்ச்சியில் நிக்கி சொன்ன பதில்தான் இது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 

கெமிஸ்ட்ரி... நோபல்... பெண்கள்... இந்த காம்போவில் இருப்பது நான்கே பேர்தான்!

 

டிஜிட்டல் இந்தியாவை விடுங்கள். அது வலியவர்கள் மற்றும் பணக்காரர்களால் ஆனது. புதிய இந்தியாவை விடுங்கள். அது ஆயிரம் கோடிகளில் சிலைகள் வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்களால் ஆனது. ஆண்களின் இந்தியாவை விடுங்கள். எதிர் பால் இனத்தினர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கூட அறிய முற்படாதது. பெண்களின் இந்தியா தெரியுமா? அதிகபட்சமாக ஏதாவது ஒரு டிகிரி. பதின்பருவம் தாண்டிய சில மாதங்களிலேயே திருமணம். அதன் பிறகு சொந்தமாக ஒரு கனவுகூட  காண முடியாத வாழ்க்கை. கணவன் வீட்டில் அனுமதித்தால், மேற்கொண்டு படிக்கலாம், வேலைக்கும் போகலாம். எல்லாருக்கும் அப்படி இல்லை என்றாலும், பலருக்கு இப்படித்தானே வாழ்க்கை அமைகிறது?

இந்தியா அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த எட்டு பேர் இதுவரை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். அவற்றுள், அன்னை தெரசா தவிர மற்ற அனைவருமே ஆண்கள். ஆமாம். இந்தியாவை விட மோசமான நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம்மை விடச் சாதித்தவர்கள் தானே நமக்கு ரோல் மாடல்கள்? நாடுகளிலும் அதே கணக்கு தானே?

 

உலக அரங்கில் 1901ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை, 48 பெண்கள் மட்டுமே நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். வேதியியல் களத்தில் இந்த எண்கள் இன்னமும் மோசம். அதிலே இதுவரை நான்கு பெண்கள் மட்டுமே நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள். இதற்குக் காரணம், அறிவியல் பெண்களுக்கான களம் இல்லை என்ற பிற்போக்கு சிந்தனைதான். ஆனால், சாதித்த பெண்களின் கதைகள் ஒவ்வொன்றும் எழுச்சி ஏற்படுத்துவதாகவும், உத்வேகம் மூட்டுவதாகவும் இருக்கும். மேலும் பலர் சாதனைக்களம் காணச் சிவப்பு கம்பளம் விரிக்கும் தன்னம்பிக்கை காவியங்கள் அவை.

மேரி கியூரி (Marie Curie)

நோபல் பரிசு - மேரி கியூரி

  • 1903ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு
  • 1911ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

போலாந்தின் தலைநகரான வார்ஸாவில் வாழ்ந்து அந்தக் குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால்தான் ஐந்தாவது குழந்தையாக, கடைக்குட்டியாகப் பிறந்தாலும், மேரி கியூரிக்கு பாரிஸ் சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கேதான், தன் வருங்கால கணவன் பியரி கியூரி (Pierre Curie) அவர்களைச் சந்தித்தார். இருவருக்கும் அறிவியலில் பேரார்வம். இணைந்தே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். கதிரியக்கம் குறித்து கண்டறிந்த ஹென்றி பெகுயுரேல் (Henri Becquerel) என்பவரின் ஆராய்ச்சி பிடித்துப் போக, அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்ய முடிவு செய்தனர். பிட்ச்ப்ளேன்ட் (Pitchblende) என்ற கனிமத் தாதிலிருந்து கதிரியக்கம் உடைய யுரேனியம் மட்டுமே எடுப்பார்கள். கியூரி தம்பதிகள், தங்களின் ஆராய்ச்சியில், அதே தாதில் யுரேனியத்தை விட அதிக கதிரியக்க குணமுடைய பொலோனியம் மற்றும் ரேடியம் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த மைல்கல் சாதனைக்காக மேரி கியூரி, தன் கணவர் பியரி கியூரி மற்றும் இந்த ஆராய்ச்சிக்கு வித்திட்ட ஹென்றி பெகுயுரேல் ஆகியோருடன் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

1906 ஆம் ஆண்டு கணவர் பியரி கியூரி இறந்துவிட, துவண்டு போகாமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் மேரி கியூரி. 1910ம் ஆண்டு, வெற்றிகரமாக பொலோனியம் மற்றும் ரேடியம் உலோகங்களை பிட்ச்ப்ளேன்ட்டிலிருந்து பிரித்து எடுத்தார். இவரின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, 1911ம் ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசையும் வென்றார். இதன் மூலம், இரண்டு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். நோபல் பரிசை வென்றதோடு மட்டுமல்லாமல், மற்றொரு விதையும் நட்டார். அது பின்னர் விருட்சமாக வளர்ந்து சாதித்தது. அந்தக் கதை, அடுத்த கதை.

ஐரீன் ஜோலியட் கியூரி (Irène Joliot-Curie)

நோபல் பரிசு - ஐரீன் ஜோலியட் கியூரி

  • 1935ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரீன் வேறு யாருமல்ல. மேரி கியூரி மற்றும் பியரி கியூரி தம்பதிக்குப் பிறந்த குழந்தை. அறிவியல் குடும்பம் என்பதால் சிறு வயதிலேயே ஆராய்ச்சிகளில் ஆர்வம். தன் தாயிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டார். முதலாம் உலகப் போரின் போது, தன் தாயுடன் இணைந்து எக்ஸ்ரே மெஷின்களை மருத்துவமனைகளுக்கு, இராணுவ தளங்களுக்குக் கொண்டு செல்லும் பணியைச் செய்தார். யுத்தம் முடிந்தவுடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பை முடித்தவுடன், தன் பெற்றோர் நிறுவிய பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றினார். அங்குதான் தன் வருங்கால கணவரான ஃப்ரெடெரிக் ஜோலியட் (Frédéric Joliot) அவர்களைச் சந்தித்தார். இருவரும் இணைந்து கதிரியக்க தனிமங்கள் குறித்த மேரி கியூரியின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். 1934ம் ஆண்டு, முதன் முதலாகக் கதிரியக்க தன்மையுடைய கூறுகளைச் செயற்கையாக உருவாக்கிக் காட்டினர். இந்தச் சாதனையை கௌரவப்படுத்தும் விதமாக 1935 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தத் தம்பதிக்கு பிறந்த குழந்தைகளில் ஹெலன் லேஞ்சாவின் ஜோலியட் (Hélène Langevin-Joliot) என்பவர் அணு இயற்பியலாளராகவும், பியர் ஜோலியட் (Pierre Joliot) என்பவர் உயிரியலாளராகவும் கோலோச்சி வருகின்றனர்.

டோரதி க்ரோஃபூட் ஹாட்ஜ்கின் (Dorothy Hodgkin)

நோபல் பரிசு - டோரதி க்ரோஃபூட் ஹாட்ஜ்கின்

  • 1964 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

எகிப்தில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகளான டோரதியின் ஆய்வாளர் வாழ்க்கை தொடங்க பெரும் காரணமாக அமைந்தது சிறுவயதில் அவருக்குக் கிடைத்த ஒரு வேதியியல் புத்தகம். அது படிகங்களைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கான புத்தகம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நல்ல முறையில் கற்றுத்தேர்ந்த போதும், பெண் என்ற காரணத்தால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சரியான வேலையும் கிடைக்கவில்லை. இறுதியில் நவீன மூலக்கூறு உயிரியலில் கில்லாடியான J.D. பெர்னல் வாய்ப்பளித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். படிகங்கள் குறித்த ஆராய்ச்சியில் முழு மூச்சாக இறங்கினார்.

1930 களில் பெரிய மற்றும் சிக்கலான மூலக்கூறுகளின் தன்மைகள் எப்படியிருக்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகள் செய்தார். படிகங்கள் வழியே எக்ஸ்ரே கதிர்கள் செல்லும் போது, அது உருவாக்கும் படங்கள் அந்தப் படிகங்களின் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். இதன் மூலம், 1946 ஆம் ஆண்டு பெனிசிலின் கட்டமைப்பு மற்றும் 1956 ஆம் ஆண்டு மிகவும் சிக்கலான வைட்டமின் B12 கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று படம் பிடித்துக்காட்டினார். இவரின் இந்த மாயாஜால சாதனைக்காக 1964 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அடா E. யோனாத் (Ada E. Yonath)

நோபல் பரிசு - அடா E. யோனாத்

  • 2009 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

1939 ஆம் ஆண்டு தற்போதைய இஸ்ரேலில் இருக்கும் ஜெருசலேம் நகரில் பிறந்தார் அடா E. யோனாத். அவரது தந்தை ஒரு யூத குரு என்ற போதிலும், அவரின் குடும்பம் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வாழ்ந்து வந்தது. ஜெருசலேமில் இருக்கும் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் வேய்ஸ்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே ஆராய்ச்சியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்பு பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தன் பணியைத் தொடர்ந்தார்.

நம் உடலில் புரதத்தை உருவாக்கும் ரிபோசோம்கள் வேதியியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 1970களில் தன் சக ஆராய்ச்சியாளர்களுடன் இந்த ரிபோசோம்கள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார் அடா. அது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தொடர்ந்தது. இறுதியாக எக்ஸ்ரே படிகவியல் பயன்படுத்தி ரிபோசோம்கள் எப்படியிருக்கும் என்று முப்பரிமாண முறையில் உயிர்கொடுத்து விளக்கினார். பின்னாளில், இது ஆன்டிபயாடிக் மருத்துகள் தயாரிக்க பெரிதும் உதவி செய்தது. இதற்காக 2009 ஆம்  ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு இவருடன் சேர்ந்து மேலும் இருவருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

 

பெண்களால் அறிவியல் துறையில் என்ன சாதிக்க முடியும் என்ற பல நூற்றாண்டு கால மூடத்தனமான கேள்விக்கு, ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு அறிவுக்கு இல்லை, உழைப்புக்கு இல்லை, முயற்சிக்கு இல்லை என்று பதிலளித்தவர்களில் இந்த நால்வரும் முக்கியமானவர்கள். அவர்கள் வாழ்ந்த நாடுகளில் தற்போது இருக்கின்ற சிறுமிகளின் கைகளில் அறிவியல் புத்தகங்களைக் கொண்டு சேர்த்த பெருமை இவர்களையே சாரும். ஆனால், இவர்கள் உருவாக முக்கிய காரணம் அதற்கான வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள். எனவே, உங்கள் குழந்தைகள் அறிவியலில் ஆர்வமாக இருந்தால், இது நமக்குச் சரிவராது என்று கூறி அந்தக் கனவை சிதைத்து விடாதீர்கள். பின்னாளில், அந்தக் கனவுகள் நோபல் பரிசு வரை நீளலாம்!

http://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா..! மெரினா புகைப்படங்கள்

 

 
4jpg

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருவாரத்துக்கும் மேலாகிவிட்டது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பருவத்துக்கு ஏற்ற மழை, பருவம் தவறாமல் பெய்தால் நன்மை நமக்கே. 2015 மழை வெள்ளம் சென்னைவாசிகளுக்கு மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். அதில் அரசும் மக்களும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

இருப்பினும் மழையும் மகிழ்ச்சியும் ஒட்டிப்பிறந்தவை. அதை உணர்ந்த சிலர், சென்னை மெரினாவில் நேற்று "அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா. சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா. ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி ஆனந்தம்..." என  கடற்கரையில்... மனலைப் போர்த்திய மழைநீரில் குதூகலித்துக் கொண்டாடினர்.

3jpg
5jpg
6jpg
1jpg

படங்கள் | ஆர்.மாதவன்.

மேலிருந்து ஒரு பார்வையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் நமக்கும் மகிழ்ச்சியைக் கடத்துகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கடி!1f605.png?

கணவன் சோகமாக வீடு திரும்பினான்....

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

  • தொடங்கியவர்

காங்கோ இளைஞர்களை ஏழ்மையில் இருந்து மீட்கும் 'மர பைக்'

 

  • தொடங்கியவர்
‘தர்மம் செய்யப் பிரியப்படுவீர்களாக’
 

image_1d1059aed6.jpgநற்கருமங்கள், உங்கள் மூலம் பிறருக்குச் செய்விக்கப்படுவதனால், அது உங்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் பெரும் கௌரவமாகும்.  

எனவேதான், தர்மம் செய்யப் பிரியப்படுவீர்களாக. உலகின் செல்வங்கள் யாவும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். 

 ஆனால், இன்று இந்நிலை இல்லை. எல்லாமே வலிமைமிகு செல்வந்தர்கள் கரங்களுக்குள் சென்றுள்ளன.  

‘கரங்களை விரித்துக் கொடை செய்யும் கருணையைத் தா’ என நாம் கடவுளிடம் கேட்கவேண்டும்.  

பாவிக்கப்படாத சொத்துகள் வெறும் குப்பைக்குச் சமமானது. அதை அனுபவிக்கச் செல்வந்தர்களுக்கோ அவர்களின் சந்ததியினருக்கோ ஆயுள் போதாது. இருக்கும் ஆயுளில் எதைச் சாதிக்க வேண்டும் என எண்ணினால், கொடை செய்வதே ஒரே வழி. இந்தப் பிறவியே உண்மை. அத‌ற்குள் பிறருக்கு உதவுதலே, பெரும் கடமை என உணர்க. 

  • தொடங்கியவர்

ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006

 

முன்னாள் ஈராக் நாட்டின் அதிபரான சதாம் உசேன் 1937-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி பிறந்தார். இவர் ஜூலை 16, 1979-ல் இருந்து 2003 ஏப்ரல் 9-ந்தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் வரை ஈராக்கின் அதிபராக இருந்தார். ஈராக்கின் 'பாத்' கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும்

 
 
 
 
ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்:  5-11-2006
 
முன்னாள் ஈராக் நாட்டின் அதிபரான சதாம் உசேன் 1937-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி பிறந்தார். இவர் ஜூலை 16, 1979-ல் இருந்து 2003 ஏப்ரல் 9-ந்தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் வரை ஈராக்கின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் 'பாத்' கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்- ஈராக் போர் (1980– 1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார்.

இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது. மேலை நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம் அவர் காட்டிய எதிர்ப்பை பாராட்டி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர்.

அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006-ல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006-ல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 அவர் தூக்கிலிடப்பட்டார்.

 

 

அமெரிக்க அதிபராக பிராங்களின் ரூஸ்வெல்ட் 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (நவ.5 -1940)

 

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1882-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 32-வது அதிபர் ஆவார். அதிபராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தேர்வு செய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தேர்வுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

 
 
 
 
அமெரிக்க அதிபராக பிராங்களின் ரூஸ்வெல்ட் 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (நவ.5 -1940)
 
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1882-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 32-வது அதிபர் ஆவார். அதிபராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தேர்வு செய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தேர்வுசெய்யட்டவர் இவர் ஒருவரே.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 * 1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின. * 1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. * 1861 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று. * 1862 - மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

* 1911 - செப்டம்பர் 29-ல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது. * 1913 - ஐக்கிய பிரிட்டன் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது. * 1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். * 1935 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

* 1940 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். * 1945 - நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. * 1965 - ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. * 1967 - லண்டனில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். * 1987 - தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

* 1996 - பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார். * 1999 - இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ரன் மிஷின், சேஸிங் கிங்... இந்திய கிரிக்கெட்டின் இருமுகன் கோலி! #HBDKingKohli

 
 

ஒன்பது வருடங்கள், 316 சர்வதேசப் போட்டிகள், 49 சதம் மூன்று ஃபார்மட்களிலும் 50+ சராசரி. இதெல்லாம் விராட் கோலியின் சாதனை. அவரது ரசிகர்களிடம் பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, எங்கு, எப்போது யாருக்கு எதிராக கோலி சதம் அடித்தார் என்பதை அப்டேட்டாக சொல்வார்கள். கோலி, எப்படி கிங் கோலியானார்? ஏன், இன்றைய இந்திய அணிக்கு விராட் கோலி மிக முக்கியம்?

கோலி

 

சுனில் காவஸ்கரின் நேர்த்தியான பேட்டிங், ஸ்போர்ட்ஸ் பிரியர்களை ஹாக்கியிலிருந்து கிரிக்கெட் நோக்கித் திரும்ப வைத்தது. கபில் தேவின் இளம் அணி, வீழ்த்தவே முடியாதளவில் கிரிக்கெட்டில் கோலோச்சிய மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகண்டு, சச்சின் போன்றோரை கிரிக்கெட் பேட் பிடிக்க வைத்தது. அசாருதீன் காலத்தில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமல்லாமல், அதிலிருக்கும் நுணுக்கங்கள் மற்றும் வீரர்களின் ஸ்டைலை பின்பற்ற வைத்தது. சச்சினின் அசாத்திய பேட்டிங், தூர்தர்ஷனுக்குக் காசு கொடுத்து போட்டிகளை ஒளிபரப்ப கெஞ்சிய பி.சி.சி.ஐ-யை, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் போன்றவர்கள் இன்று ஒளிபரப்பு உரிமத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் கொட்டும் நிறுவனமாக்கியது. தோனியின் வருகை, ஒரு நிரந்தர விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற தேடலையும் தாண்டி, ஒரு தலைவனையும், தலைவர்களை உருவாக்கும் வீரரையும் பெற்றுத்தந்தது. அதோடு, இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கனவை நிறைவேற்றியது.  இனி, இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன்மேல் வெறிகொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை - விராட் கோலி!

'வெற்றியைத் தவிர எனக்கு ஒன்றுமே வேண்டாம். வீழ்ந்தாலும் கடைசி நொடி வரை போராடிவிட்டுத்தான் வீழ்வேன். என்னையும் என் அணியையும் நீங்கள் வெல்வது அவ்வளவு எளிதல்ல' என்பதை உரக்கச் சொல்லி வருகிறார் கோலி. அவரது இந்தப் போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. டெல்லி அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற, தந்தையின் மரணத்தைத் தாண்டி, பேட்டிங் செய்துவிட்டு திரும்பிய நாள் முதல் இன்று வரை நீள்கிறது. வெற்றிகள் கோலியின் தலையில் ஏறாமலில்லை. 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையை வென்றவுடன், "பிசிசிஐ' எவ்வளவு பரிசுத்தொகை அறிவிப்பார்கள்’’ என்று கேட்டதிலிருந்து, ஐ.பி.எல் சர்ச்சைகள் வரை, கோலி அவரின் நெகட்டிவ்களை நாளுக்குநாள் குறைத்துக்கொண்டே வருகிறார்; முன்னேறுகிறார். 
 

விராட் கோலி

இதுவரை சவாலான சுற்றுப்பயணங்களில், இந்திய அணியின் கேப்டன்களைக் குறிவைத்து அந்நாட்டின் பத்திரிகைகளும், வர்ணனையாளர்களும் ஏதாவது கொளுத்திப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். பிரஸ் மீட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய வரலாறு நிறைய உண்டு. இதை உடைத்தவர் கோலி. தோனி ஆட முடியாமல் போன காரணத்தினால், 2014 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவே, இரண்டு இன்னிங்ஸிலும் பெரிய சதங்கள் அடித்து வெற்றியைத் துரத்தினார். மிச்செல் ஜான்சனின் நிலைகுலைய வைக்கும் பௌன்ஸரைத் தாங்கிக்கொண்டு, அணியின் ஸ்கோரோடு நம்பிக்கையையும் சேர்த்தே உயர்த்தினார். அந்தப் போட்டியில் வெற்றியைத் துரத்தாமல் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால், டிரா செய்திருக்க முடியும். ஆனால், வெற்றியைத் துரத்தி வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர, வெற்றியை நோக்கிப் பயணப்படமால் இருக்க மாட்டேன் என்று நிரூபித்தார்.
 
அடுத்த வருடமே, உலகக்கோப்பை அரை இறுதியில் ‘ஹூக்' செய்ய முற்பட்டு, ஒரே ரன்னில் வெளியேறினார். உடனே  'கோலி சொதப்பியதற்கு அனுஷ்கா ஷர்மாதான் காரணம்' என ட்விட்டரில் வசைபாடினர். எதைப் பற்றியும் கவலைப்படாத கோலி, ‘நான் இப்படித்தான்’ என்பதுபோல, இந்தியா திரும்பியதும் அனுஷ்காவின் கையை இறுகப் பற்றி நடந்தார்.

விராட்


2015-ம் ஆண்டின் கசப்பான அனுபவத்துக்கு, அடுத்த வருடமே எண்ட் கார்டு போட்டார். 2016 இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரிட்டர்ன் டிக்கட் போட்டு கொடுத்து அனுப்பும் வகையில் ஆடிய அந்த ஆட்டம், வெறித்தனத்தின் உச்சம். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய பந்தை, ஏறி வந்து மிட் ஆஃப் திசையில் லாஃ ப்ட் செய்ய, கேட்ச் ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் பதற, பந்து பௌண்டரியைத் தாண்டிச் சென்றபோது, கோலி கத்தியது அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கும் கேட்டிருக்கும். அதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில், ஃபாக்னர் ஏதோ சொல்ல முற்பட, "உன்னுடைய பந்துவீச்சை போதுமான அளவு வெளுத்துவிட்டேன். இனிமேல், உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. போய், பந்துவீசு..." என்று சொன்னதெல்லாம் வேற லெவல்.  அதற்கு முன் 2011-ல், பௌண்டரிக்கு அருகில் ஃபீல்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் வசைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரலை உயர்த்தியது என... எதற்கும் பணியாமலும், பயப்படாமலும் வளைய வரும் கோலியை பிரதிபலிப்பது அவ்வளவு எளிதல்ல. 


டிராவிட் சமீபத்தில் குறிப்பட்டதைப் போல, கோலியைப் பின்பற்றி ஜூனியர்கள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறதுதான், மறுப்பதற்கில்லை. அதேசமயம், ஆக்ரோஷமாக பயணிக்கும் தலைவனை இந்தியா கங்குலியின் ரூபத்தில் கண்டிருந்தாலும், கங்குலி டெஸ்ட் போட்டிகளில் அவரின் திறமைக்கேற்ப விளையாடாமல் போனது அவருக்கே கொஞ்சம் அதிருப்தியாக இருந்திருக்கும். மேலும், கங்குலியின் அணியில் தனித்தன்மை வாய்ந்த வீரர்கள் அவர்களின் ஆளுமைக்கேற்ப செயல்பட்டபோதும், ஒட்டுமொத்த அணியாக ஆக்ரோஷமாக செயல்பட முடியாமல் போனது. கோலியின் அணியோ நேர்மாறாக இருக்கிறது. இந்த ஆண்டு புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இஷாந்த் ஷர்மா வேண்டுமென்ற ஸ்மித்தை வெறுப்பேற்ற, அதைத் தடுக்காமல் இருந்தார் கோலி. 

கோலி


 

முந்தைய நாளை விட முன்னேறிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது கோலியின் தாரக மந்திரம். சென்றமுறை இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தில், ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் தொடர்ந்து வெளியேற விமர்சனத்துக்குள்ளானார். ஆனால், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் மட்டுமே கோலி சோபிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மிச்செல் ஜான்சன் 37 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு 'ஆஷஸ்' மீட்டுக்கொடுத்த அடுத்த ஆண்டிலேயே, அவரின் கோட்டையிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 672 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை நிரூபித்தார் இந்த லிவ்விங் ரன் மெஷின்.


யாரிடம் விக்கெட்டை இழந்தோமோ, அடுத்தமுறை அவரது பந்தில் வெளுத்து, சதங்களைக் குவிப்பது கோலியின் ஸ்டைல். சென்ற வருடம் 4-0 என்று தோற்ற விரக்தியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ‘‘கோலி இந்தியாவில் மட்டும்தான் இப்படி அடிக்க முடியும், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அடித்தால் நல்லது’’ எனப் புலம்பும் வகையில் இருந்தது கோலியின் ஆட்டம். இன்னமும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்படும் பந்துகளைத் தேவையில்லாமல் துரத்துகிறார் என்கிற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மிடில் & லெக் ஸ்டம்பில் இருந்து ஆடுவதை விடுத்து, ஆஃப் & மிடில் ஸ்டம்ப்பிலிருந்து ஆடத் தொடங்கியிருக்கிறார். அதற்கு உடனே பலனும் கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 92 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் என, தொடருக்கு தொடர் தன்னுடைய பலவீனங்களைக் குறைப்பதில் முனைப்பு காட்டுகிறார்.
 

கோலி 

கோலி குறுகிய காலத்தில் இவ்வளவு சாதித்தாலும், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற, வென்றே தீர வேண்டிய போட்டியில் தோள்பட்டை காயத்தால் கோலி விலக, பயிற்சியாளர் கும்ப்ளே, கோலியின் இடத்தில் பேட்ஸ்மேனுக்குப் பதிலாக, இடது கை சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை களமிறக்கினார். இதுவே, கோலி - கும்ப்ளே உரசலுக்குக் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனே, சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பயணித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது பாஸ்ட் ஃபார்வேர்டில் கடக்க வேண்டியவை. சௌரவ் கங்குலி முதற்கொண்டு கோலியின் பிடிவாதத்தை அவ்வப்போது விமர்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கோலிக்கு அவர் கேட்டபடியே பயிற்சியாளர், வீரர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக, அடுத்த உலகக்கோப்பை வரை.
 
திறமைக்கேற்ப விளையாடும் வீரர்களின் மத்தியில், இல்லாத ஒன்றை வளர்த்துக்கொள்வதே கோலியின் சிறப்பு. கோலிக்கு இயல்பாக 'ஸ்வீப்' ஷாட் மூலம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளத் தெரியாது. ஆனால், ரோஹித், தவான், புஜாரா, ரஹானே ஆடுவதைப்பார்த்து, அவர்களிடம் கற்றுக்கொண்டார். சேஸிங் செய்வதில் மட்டும் கில்லி என்றிருந்ததை மாற்றி, இன்று முதல் இன்னிங்சிலும் டாப் கியரில் பயணிக்கிறார். அஸ்வின், ஜடேஜாவைத் தாண்டி தரமான ஸ்பின்னர்களை உருவாக்கும் விதத்தில், அணியைக் கட்டமைத்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு டீம், ஒன்டே மேட்ச்சுக்கு ஒரு டீம் உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். 9-0 என்ற விகிதத்தில், இலங்கையை வென்ற பின்பு, "இம்மாதிரியான இக்காட்டான சூழ்நிலையை ஒவ்வோர் அணியும் கடந்தே தீர வேண்டும். இலங்கைக்கு எங்களால் ஏதேனும் உதவ முடியுமென்றால் கண்டிப்பாக அவர்களின் அடிப்படையைக் கட்டமைக்க உதவுவோம்" என்று கூறியது இதுவரை யாரும் சொல்லாதது.
 

கோலி

 


 கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், கோலியைப் போன்று, நம்முடைய கேப்டன்கள் ஃபிட்டாக இருந்து, மைதானத்தின் எந்த மூலையிலும் எந்நேரத்திலும் நின்றிருக்கிறார்களா என்றால்... இல்லை. ஃபிட்னெஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பாண்டிங் போல அட்டகாசமான ஃபீல்டராகவும் நம்முடைய கேப்டனை பார்க்கும்போது ஒருவித சந்தோஷம் தொத்திக்கொள்கிறது! 
 
ஜாம்பவான்களின் கூற்றுக்கேற்ப, ஒரு பேட்ஸ்மேனின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் 28 - 32 வயதில்தான் வெளிப்படும். ஏனென்றால், கிரிக்கெட் விளையாடும் அனைத்து இடங்களுக்கும் ஒருமுறை பயணம் செய்த அனுபவமும், பொறுமையும் அந்த சமயத்தில்தான் கிடைக்கும்.  கோலி அவரின் சிறந்த காலகட்டத்தில் அணியின் தலைவனாகவும் இருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெரிய வரம். வாய்ப்புக் கிடைத்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் விடுபட்டு,  இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் பங்கேற்க தயார் என்று அறிவித்ததிலயே கோலியின் கணக்கு புரிபடும்.
 
கோலி, ஒரு யுகத்துக்கான வீரன்!

http://www.vikatan.com

தோல்வியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி - வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய போட்டிக்கு பிறகு ஓய்வு அறையில் அணியினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

 
தோல்வியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி - வீடியோ
 
 
புதுடெல்லி:
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
201711051042374242_1_virat1._L_styvpf.jpg
நேற்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும், விராட் கோலியின் பிறந்தநாளை இந்திய அணியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவில் கேக்கை வெட்டிய விராட் கோலி முதலில் ஷிகர் தவானுக்கு  ஒரு வாய் கேக் ஊட்டுகிறார். அதன் பின் தவான் முதலில் கோலியின் முகத்தில் கேக்கை பூசினார். அதன்பிறகு அணியினர் அனைவரும் சேர்ந்து விராட் கோலியின் முகத்தில் கேக் பூசி கொண்டாடினர்.
201711051042374242_2_virat2._L_styvpf.jpg
ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள டிவிட்டில், "நம்பர் 1 பழிவாங்குதல். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன்" என்று குறிப்பிட்டு முகம் முழுவதும் கேக் பூசப்பட்ட விராட் கோலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

  • தொடங்கியவர்

குதிரை சவாரி, மேள தாளத்துடன் ஆரவாரமாய் ஐபோன் X வாங்கிய இளைஞர்

மும்பையின் தானே பகுதியை சேர்ந்த இளைஞர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 
குதிரை சவாரி, மேள தாளத்துடன் ஆரவாரமாய் ஐபோன் X வாங்கிய இளைஞர்
 
மும்பை:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று துவங்கியது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஐபோன் X விற்பனை துவங்கியுள்ளது.

ஒவ்வொரு முறை புதிய ஐபோன் விற்பனை துவங்கும் போதும் ஆப்பிள் ப்ரியர்களின் அதீத ஆர்வம் செய்திகளாக உலா வருவதை வாடிக்கையான விஷயமாகும். சிலர் விற்பனைக்கு ஓரிரு நாட்கள் முன்பே ஆப்பிள் ஸ்டோர் வாயிலில் காத்திருந்து முதலாவதாக ஐபோன் வாங்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் தான் விரும்பும் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் ஆரவாரமாய் சென்றுள்ளார். அதன்படி மும்பையேின் தானே மாவட்டத்தில் ஐபோன் X பெற சரியாக 6.30 மணிக்கு வந்தடைந்தார். கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.  

201711041128187695_1_iPhone-X-horse._L_styvpf.jpg

ஆப்பிள் வரலாற்றில் மிகவும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இதை குறிக்கவே ஐபோன் X என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X (64 ஜிபி) மாடல் விலை ரூ.89,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் விற்பனை துவங்கிய பெரும்பாலான நாடுகளில் புதிய ஐபோன் X வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்தியாவிலும் ஏர்டெல் தளத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது.

ஐபோன் X ஸ்மார்ட்போன் வாங்க குதிரையில் சென்ற வாலிபரின் வீடியோவை கீழே காணலாம்..,

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

சீக்கிய மதத்தின் நிறுவனரும் முதல் குருவுமான குருநானக் தேவ்ஜியின் 549 வது பிறந்த நாள் விழா இன்று. இவ்விழா சென்னை தி.நகர், பார்த்தசாரதிபுரம் கோபதி நாராயணசாமி சாலையில் உள்ள குருத்வாராவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவைத் தரிசிக்கச் சென்றோம். 

குருத்வாரா

 

மின்னொலியால் ஜொலித்துக்கொண்டிருந்தது குருத்வாரா. அன்பாக நம்மை வரவேற்று கையில் ஒரு துணியைக் கொடுத்தார்கள். அதைத் தலையில் கட்டிக்கொண்டோம். குருத்வாராவை ஒட்டியிருந்த சிறு உணவு கூடாரத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்கள். சமோசா, குளோப் ஜாமுன், பிரெட் பஜ்ஜி, கட்லெட், ஐஸ் க்ரீம், பஞ்சாபி சர்பத் எனப் பெரும் விருந்து பரிமாறப்பட்டது. 

அன்னதானம்

விருந்து உபசரிப்பு முடிந்ததும் குருத்வாராவுக்குள் அழைத்துச் சென்றார்கள். படிகளில் கால் வைக்கும் முன்னர் காலணிகளை விட்டுவிட்டு, நீரில் கால்களைச் சுத்தப்படுத்திக்கொண்டே உள்ளே நுழைய வேண்டும். உள்ளே சீக்கிய கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மொழி புரியாவிட்டாலும் அந்த ராகமும் ஆலாபனைகளும் மனதுக்கு இதமாக இருந்தன. 

 ஹாலின் மத்தியில் 'குருகிரந்த சாஹிப்' புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அதை மண்டியிட்டு வணங்கி, அருகிலிருந்த பெட்டியில் காணிக்கைகளைச் செலுத்திவிட்டு அமர்ந்து கீர்த்தனைகளில் லயிக்கிறார்கள்.

வழிபாடு

குருத்வாராவை நிர்வகிக்கும் குருநானக் சத் சங்க சபாவின் பொதுச் செயலாளர் ஹர்பிந்தர் சிங் நம்மை வரவேற்று அமரவைத்து குருத்வாரா நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். 

சீக்கியர்"எங்கள் குருவின் பிறந்தநாளை, ஒவ்வொரு சீக்கியரும் தன்னுடைய பிறந்தநாளாகவே கருதி கொண்டாடுவார்கள். வழிபடுவார்கள். சென்னையில் வாழும் 700-க்கும் மேற்பட்ட பஞ்சாபியர்களின் குடும்பங்களுக்கு இந்த ஒரே குருத்வாராதான். நாள்தோறும் இங்கு வழிபாடுகளும் கீர்த்தனைகளும் நடந்தாலும், உணவிடுவதுதான் எங்கள் கோயிலின் முக்கியமான பணி. நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 1,000 பேர் வரை பசியாறுவார்கள்.

பசித்தவர்களுக்கு உணவிடுவதே எங்கள் வழிபாடு. அதற்காகவே 'லங்கர்' எனப்படும் எங்கள் உணவுக்கூடம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. காலணியை அவிழ்த்துவிட்டு தலையில் துணி அணிந்து, எவரும் இங்கே பசியாற வரலாம். ஏழை, பணக்காரர் வேறுபாடெல்லாம் எங்கள் குருத்வாராவில் இல்லை. எல்லோருமே தரையில் அமர்ந்து ஒன்றாகத்தான் உண்ண வேண்டும். இங்கு உணவு மட்டுமல்ல. வசதியில்லாதவர்கள் தங்கிச் செல்ல குறைந்த வாடகையில் அறைகளும் அளிக்கிறோம். 

எங்களுக்கு 10 குருமார்கள் உண்டு. அவர்களின் ஜெயந்தி விழா, 'வைஸாக்கி' எனும் புத்தாண்டு விழா போன்றவை எங்களுக்கான முக்கிய விழாக்கள். இங்கு பணியாற்றும் அத்தனை பேருமே பக்தர்கள்தான். ஒருவரைக்கூட நாங்கள் வேலையாள் என்று வைத்துக்கொள்வதில்லை. எங்கள் முன்னோர்களும் எங்கள் கடவுளான குருகிரந்த சாஹிபும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது, மக்கள் சேவையை மட்டும்தான்..."  கனிவும் கருணையாகப் பேசுகிறார் ஹர்பிந்தர் சிங்.  

குருத்வாராவின் இன்னொரு பக்கம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான பதிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வரீந்தர் சிங் என்பவரிடம் பேசினோம். 

சீக்கியர்"குருநானக் தேவ்ஜி தன்னை எப்போதுமே கடவுளாகச் சொல்லிக்கொண்டதில்லை. அவர், ஓர் இறைத்தூதுவர்... அவ்வளவே. குருநானக் தேவ்ஜியைப்போல எங்களுக்குப் 10 குருமார்கள் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துகளும் எங்கள், 'குருகிரந்த சாஹிப்'பில் உள்ளன. உலகின் எல்லாத் தேவைகளுக்குமான தீர்வுகளும் எங்களது இந்தப் புனித நூலில் உள்ளன. அதனாலேயே அது எங்களின் கடவுளாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு புனிதநூலைத் துயில் எழுப்பி வாசிப்போம். மீண்டும் மாலை சந்தியா வேளையில் 'சுக் ஹாசன்' செய்வோம். 'சுக் ஹாசன்' என்பது, எங்கள் கடவுளான புனிதநூலை அமைதியாக துயில் கொள்ளும் வகையில் அனுப்பி வைப்போம்.  இதுவே எங்களின் முக்கிய அன்றாட கடமை. இதைத்தவிர மக்கள் பணியே முக்கிய வழிபாடாக உள்ளது. 

எங்கள் மத்தியில்  'தஸ்வந்த்' என்றொரு நடைமுறை உள்ளது. அதாவது, ஒவ்வொருமாதமும் சம்பாதிப்பதில் பத்து சதவிகிதத்தைக் கோயிலுக்காகக் கொடுத்து விடுவோம். அதைக்கொண்டே இந்த சம பந்தி விருந்து நடைபெறுகிறது. அதைப்போலவே ஒவ்வொரு குடும்பமும், மாதத்தில் சில நாள்களை கோயில் பணிக்கென்று ஒதுக்கி விடுவோம். இங்கு சிறு அளவு கூட உணவைக் கூட வீணாக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படிச் செய்வது பாவம் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..." என்கிறார்  வரீந்தர் சிங்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு சூட்கேஸில் உள்ள சூரிய சக்தி உயிர்களை காப்பாற்றுமா ?

  • தொடங்கியவர்

புதுமைப் பயணம்: பைசா செலவில்லாமல் இந்தியா சுற்றிய இளைஞர்!

 

 
vimal

ந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் என்ன செய்வார்கள்? மனதுக்குப் பிடித்த காரில் கன்னியாகுமரி முதல் இமயமலைவரை பயணிப்பார்கள். சாதிக்க நினைப்பவர்கள் சைக்கிள் அல்லது பைக்கில் டூர் அடிப்பார்கள். ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் விமல் கீதானந்தன் சற்றே வித்தியாசமானவர். அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த இவர், இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு பயணம் செய்து ஊர் திரும்பியிக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இவர் ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் 11 மாநிலங்களுக்கும் பயணம் சென்று திரும்பியிருப்பதுதான் ஆச்சரியம்!

 

லாரிப் பயணம்

மனிதநேயம் என்ற ஒரே ஒரு சொல், விமல் நெஞ்சில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் விளைவு, 11 மாநிலங்களுக்கும் காசில்லாமல் அவரை பயணிக்க வைத்திருக்கிறது. தற்காலிக டென்ட், இலகு ரக படுக்கை, 3 செட் துணி, ஒரு லேப் டாப், பவர் பேங்க் ஆகியவைதான் விமல் தன்னுடன் கொண்டு சென்ற பொருட்கள். அனந்தபூரில் இருந்து ஜூலை முதல் தேதி பயணத்தைத் தொடங்கிய விமல், சரக்கு லாரி ஓட்டுநரின் உதவியால் பெங்களூரு சென்றார். இந்தியாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விமலின் ஆசைக்கு நம்பிக்கை அளித்தது அந்த லாரிப் பயணம்தான். அஸ்கர் என்ற அந்த இஸ்லாமிய லாரி ஓட்டுநர், ரமலான் நோன்பு மேற்கொண்டிருந்தபோதிலும், விமல் சாப்பிடாததை அறிந்து, அவருக்கு தேவையான உணவை வாங்கிக் கொடுத்து உபசரித்திருக்கிறார். இந்த மனித நேயம்தான் விமல் மனதில் நம்பிக்கை விதையைப் போட்டது.

 

முத்தாய்ப்புச் சம்பவம்

பெங்களூரு சென்ற விமல், கர்நாடகம், தமிழகம், கேரளாவுக்குப் பயணம் செய்தார். பின்னர் மகாராஷ்டிரத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற விமல், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்தில் சுற்றி விட்டு, மேற்கு வங்கம் வந்திருக்கிறார். பல இடங்களுக்கு சென்ற விமல், கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தைத்தான் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

“கேரளாவின் மூணாறு அருகே உள்ள ஒரு குக்கிராமத்துக்கு சென்ற போது, மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த ஒரு குடும்பத்தினர் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர். மிகச் சிறிய அந்த வீட்டில் ஒரே ஒரு கட்டில் மட்டுமே இருந்தது. அதை எனக்கு கொடுத்துவிட்டு, அவர்கள் தரையில் படுத்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும், மனிதநேயம் மரணித்து விடவில்லை என்ற நம்பிக்கையை எனக்கு உணர்த்தியது” என்கிறார் விமல்.

பயணத்தின் பெரும்பாலான நேரம் சமூக வலைதள உதவியுடன், இருக்கும் இடத்திலிருந்து விமல் உதவி கேட்டிருக்கிறார். அவருக்குத் தேவையானபோது அறிமுகம் இல்லாதவர்களும் சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து, தேடி வந்து உதவியுள்ளார்கள். கார், பைக், பஸ், படகு என பல்வேறு வாகனங்களில் பயணித்த விமல், ரயிலிலும் சென்றிருக்கிறார். ஆனால், சக பயணிகள் உதவியாலேயே அவர் டிக்கெட் எடுத்துப் பயணித்திருக்கிறார்.

vimal-geethanandan

விமல் கீதானந்தன்

 

 

மனதைப் பாதித்த கொல்கத்தா

இந்தப் பயணத்தில் மனதைப் பாதித்த சம்பவம் எதுவும் நடக்கவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, “கொல்கத்தாவில் பாலியல் தொழில் நடைபெறும் சோனாகஞ்ச் பகுதிக்கு சென்றபோது அங்கு பாலியல் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்து மனம் வருந்தினேன். சோனாகஞ்ச் பகுதிதான் என்னை மனதளவில் பாதித்தது. அங்குள்ள பெண்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் சமூக வலைதளம் ஒன்றைத் தொடங்கப்போகிறேன்” என்று தீர்மானமாகச் சொல்கிறார் விமல்.

இந்தியா முழுவதையும் ஒரு ரூபாய் செலவில்லாமல் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்ற இலக்குடன் இருந்த விமலுக்கு அவரது அம்மாவிடமிருந்து வந்த மொபைல் அழைப்பு, கொலகத்தாவுடன் லட்சியப் பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. பெங்களூருவுக்கு வீட்டை மாற்ற வேண்டும் என்ற குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் அனந்தபூருக்குத் திரும்பினார் விமல். பெங்களூருவுக்கு வீட்டை மாற்றிய விமல், தற்போது தனது லட்சியப் பயணத்தில் தனக்கு உதவியவர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். லாரி ஓட்டுநர் அஸ்கர் தொடங்கி வழியில் சந்தித்த நல் உள்ளம் படைத்த அனைத்து மனிதர்களை வீட்டுக்கு அழைக்க உள்ளார்.

வித்தியாசமான இளைஞன்; புதுமையானப் பயணம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இது புதுசு: இவங்க வேற மாதிரி!

 

 
badaga1

 

‘மை ஆக்கி கையோட

   

உசிர எத்தி ஹோதியவே

அவ ஓப்போ தாரி எல்லா

கவ பீத்து ஹோதியவே’

அட்டகாசமாகத் தொடங்குகிறது அந்த படுகுப் பாடல். அந்தப் பாடலின் தமிழ் மொழியாக்கம் இது:

‘மை போட்ட கையோடு

உயிரைக் கொண்டு செல்கிறாளே…

அவள் போகும் பாதை எல்லாம்

அன்பை வைத்துச் செல்கிறாளே..’

2 நிமிடங்கள் 13 நொடிகள் மட்டுமே கொண்ட அந்தப் பாடல் முழுக்க காதல் நிறைந்து வழிகிறது. பாடல் வரிகள், நடன அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அத்தனையும் புது முயற்சியாக இருந்தாலும்… அசத்தல்!

badaga%20dance

பாரம்பரிய படுகா நடனம்

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இனம், தனித்துவமான பல கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது. அதில் ஒன்று அவர்களின் பாரம்பரிய நடனம். திருமணம், திருவிழா என எந்தச் சுப நிகழ்வாக இருந்தாலும், தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வது படுகர்களின் வழக்கம்.

ஒரு புறம், பாரம்பரிய நடனம் பின்பற்றப்பட, இன்னொரு புறம், படுகு மொழியில் துள்ளலான பாடல்களை இயற்றி, அதற்கு ‘வெஸ்டர்ன் ஸ்டைல்’ நடனம் ஆடும் முயற்சி தற்போது நடைபெற்றுவருகிறது.

badaga2
 

‘படுகா பட்டிங் ஹவுஸ்’ (பி.பி.ஹெச்.) தயாரிப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியமலை பகுதி இளைஞர்கள் சிலர், ‘எங்க பேரே’ (தமிழில்: நாங்க வேற) என்ற பெயரில் இந்த ‘சிங்கிள் ட்ராக்’கை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு, சமூக வலைத்தளங்களில் உள்ள படுகர் இன மக்களிடம் பிரமாத வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்!

 

வாசனை சூழ வாழ யாருக்குத்தான் பிடிக்காது? நல்ல நறுமணம்... உறைவிடத்தை மட்டுமன்றி, உள்ளத்தையும் ரம்மியமாக மாற்றும். ஊதுவத்தியோ, சாம்பிராணியோ சில நிமிடங்கள் மட்டுமே நறுமணம் பரப்பும். தரையைச் சுத்தம் செய்கிற திரவங்கள் கூடுதலாகச் சில நிமிடங்கள் மணம் வீசலாம். பல மணி நேர நறுமணச் சூழலுக்கு ரூம் ஸ்பிரேக்கள்தான் தீர்வு. அதிலும் ஏசி அறைகளிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறவர்களுக்கு இருப்பிடத்தைச் செயற்கையாக நறுமணமூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆபத்தில்லாத கெமிக்கல்களைக்கொண்டு, வீட்டிலேயே விதம் விதமான நறுமணங்களில் ரூம் ஸ்பிரே தயாரிக்கக் கற்றுத்தருகிறார் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கலைச்செல்வி.

‘`பதினஞ்சு வருஷங்களுக்கு மேல் பினாயில், லிக்விட் சோப், ஹேண்ட் வாஷ், ஃப்ளோர் கிளீனர் தயாரிக்கிற பிசினஸைப் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுல ஒரு பிரிவுதான் ரூம் ஸ்பிரே தயாரிப்பு. பினாயிலும் ஃப்ளோர் கிளீனரும் ஆர்டர் கொடுக்கிற பலரும் ரூம் ஸ்பிரேயும் சேர்த்துக் கொடுத்தா நல்லாருக்கும்னு கேட்டாங்க.

p58a.jpg

இன்னிக்குக் கடைகள்ல கிடைக்கிற ரூம் ஸ்பிரே எல்லாம் காஸ் நிரப்பினது. அது சிலருக்குச் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். கடைகள்ல கிடைக்கிற ஸ்பிரேக்கள்ல இன்னொரு பிரச்னை, அவற்றின் வாசனை. ஸ்டாண்டர்டா சில வாசனைகள்லதான் ஸ்பிரேக்கள் கிடைக்கும். அதைத் தாண்டி சில வாசனைகள் சிலருக்குப் பிடிக்கலாம். வீட்டுலேயே நாமே தயாரிக்கிறபோது அப்படி நம்ம விரும்பற வாசனையில தயாரிக்க முடியும். கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேணும்னாலோ, மைல்டா வேணும்னாலோ அதுக்கேத்தபடி வாசனையை அட்ஜஸ்ட் செய்துக்கலாம்’’ என்கிற கலைச்செல்வி, ஃப்ரூட் மஸ்க், கார்டன் ப்ளூம், லெமன், ஆரஞ்சு, ஜாஸ்மின் எனப் பிரத்யேக மணங்களில் ரூம் ஸ்பிரே தயாரிக்கிறார்.

‘`காஸ் சேர்க்காமல் தயாரிக்கிறதால, இந்த லிக்விட் ஸ்பிரே 4 முதல் 5 மணி நேரம் வரை வாசனையை அப்படியே இருக்கச் செய்யும். ஸ்ட்ராங்கான வாசனை வேணும்னு கேட்கறவங்க ஃப்ரூட் மஸ்க், ஜாஸ்மின் மாதிரி வாசனைகளைத் தேர்ந்தெடுக்கலாம். மைல்டா இருக்கணும்னா லெமன் தேர்ந்தெடுக்கலாம். ராத்திரி தூங்கற நேரத்துல லாவண்டர் உபயோகிக்கலாம். அது நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். காலை நேரத்துக்கு சாண்டல் யூஸ் பண்ணலாம். காஸ் சேர்த்துத் தயாரிக்கிற ஸ்பிரேக்கள்ல வெறும் வாசனை மட்டும்தான் வெளியில வரும். லிக்விட் வெளியில தெரியாது.  ஆனா, நான் தயாரிக்கிற ஸ்பிரேக்கள்ல லிக்விட் வெளியில வரும். ஆனா, உடனே ஆவியாகிடும். சுவர்ல கறையாகுமோங்கிற பயம் வேண்டாம்...’’ - நல்ல தகவல்கள் பகிர்கிறவர், வெறும் 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் ஈடுபட பெண்களுக்கு நம்பிக்கை தருகிறார்.

அக்வா மிக்ஸ், பெர்ஃப்யூம், ஸ்பிரே பாட்டில்கள் என எல்லாவற்றுக்குமான செலவுகள் இந்த 500 ரூபாய் முதலீட்டில் அடக்கம். இந்தப் பொருள்கள் எல்லா மாவட்டங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன.

‘`ஒரு லிட்டர் ரூம் ஸ்பிரே தயாரிக்க நமக்கான அடக்க விலை வெறும் 100 ரூபாய்தான். அதையே நாம 200 ரூபாய் வரை விற்கலாம். கால் லிட்டர், அரை லிட்டர் பாட்டில்களும் விற்கலாம். வெறும் அரை மணி நேரத்தில் 20 லிட்டர் வரை தயாரிக்கலாம். ஒரே நாளில் நாலஞ்சு வகையான ரூம் ஸ்பிரேக்களுக்கு ஆர்டர் இருந்தாலும் பிரச்னையில்லை. ஒன்றோடு ஒன்று வாசனை கலக்காதபடி சில நுணுக்கங்களைக் கத்துக்கிட்டா போதும்...’’ - கலக்கலாகச் சொல்கிற கலையிடம் ஒரே நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில் ரூம் ஸ்பிரே தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம். ``அடிப்படை நுட்பங்கள் மட்டும்தான் முக்கியம். அவற்றை வைத்துப் பதினைந்துக்கும் மேலான வாசனைகளில் ரூம் ஸ்பிரே தயாரிக்கலாம்’’ என்கிறார் கலைச்செல்வி.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘கவலையுடன் வாழ்வதைவிடக் கருமத்தைச் செய்வதே மேல்’
 

image_eca1ebe198.jpgபடைச்சிப்பாய் ஒருவனுக்கு படை முகாமில் இருக்கவே பிடிக்கவில்லை. காரணம் என்னவெனில், தனது ஆருயிர்க் காதலியை, விட்டுவிட்டுச் சேவை புரிய வந்தபோது, பொழுதெல்லாம் அவள் நினைவினால் தவித்துப்போனான்.  

இங்கிருந்து தப்புவதற்கு ஏது வழி எனச் சிந்திக்கலானான்.  தினமும் வேண்டுமென்றே, சில தவறுகளைச் செய்தான். ஆனால் அவனை, அதிகாரிகள் வேலையில் இருந்து தூக்கிவிடாமல் சிறுசிறு தண்டனைகளையே விதித்தனர். முடிவு எப்படியோ முகாமை விட்டுத் தப்பித்து வெளியேறினான். அதுவும் சாத்தியப்படவேயில்லை; பிடிபட்டான்.

மீண்டும் கட்டாய சேவையில் அமர்த்தப்பட்டான்.  ஆனால், அவனுக்கு திடீரென ஒரு செய்தி வந்தது. அவனது காதலி வீட்டை விட்டு ஓடிப்போய், வேறோருவனைக் கைப்பிடித்துக் கொண்டாள் என்பதே அந்தச் செய்தியாகும். பித்துப்பிடித்தவனானான். மனம் அலை பாய்ந்தது. இவளை நினைத்து மறுகுவதை விட, இருக்கும் பணியைச் செய்வதே மேலானது என எண்ணி, தன்னை மாற்றிக்கொண்டான். கவலையுடன் வாழ்வதைவிடக் கருமத்தைச் செய்வதே மேல்.  

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 06
 

1632 - முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான

1844 - டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் 'லேடி ஹவ்லொக்' முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1918 - போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

1962 - ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1977 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் 16 வது அதிபராக லிங்கன் பொறுப்பேற்ற நாள் இன்று!

அமெரிக்காவின் 16 வது அதிபராக 1860-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.

லிங்கன்

 

அமெரிக்காவின் கெண்டகியில் 1809-ம் ஆண்டு பிறந்த ஆபிரஹாம் லிங்கன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. வறுமையில் வாடியதால், புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படித்தார் லிங்கன். அவர் தந்தையிடமிருந்து நேர்மையைக் கற்றிருந்த அவர், தான் படித்த வக்கீல் படிப்பை லாபம் சம்பாதிக்கும் கருவியாக ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியோடு இருந்தார்.

அவரது பதினைந்து வயதில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் விலைக்கு விற்கப்படுவதையும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதையும் கண்டிருந்தார். பிற்பாடு, அவர்களுக்கு உதவ நினைத்து லிங்கனே அரசியலில் இறங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்றபோது, அடிமையில்லா அமெரிக்காவை உருவாக்குவேன் என்று கூறினார். அதன் பின்னர் கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தைப் போக்க அவர் சந்தித்த போராட்டங்களும் சவால்களும் எதிர்கொண்ட ஏளனங்களும் ஒன்றிரண்டல்ல.

 

”மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி” என கெட்டிஸ்பர்க் கூட்டத்தில் லிங்கன் பேசியதுதான் இன்றுவரை ஜனநாயகத்தின் விளக்கமாக உள்ளது. வறுமையில் இருந்தாலும் நேர்மைதான் முக்கியம்; போராட்டத்தில் வெற்றிகளைவிட நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் அவசியம்  என்று உணர்த்தியவர் லிங்கன்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.