Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 11
 

1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.

1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.

1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.

1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.

2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.

2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.

2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.

http://www.tamilmirror.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐஸ்கிரீம் கட்டிடங்கள்

 

09jkrThe%20Architecture%20of%20the%20Boo

Irma Boom எழுதிய The Architecture of the Book

09jkrFausto%20Felice%20Niccolini%20The%2

Valentin Kockel எழுதிய The Houses and Monuments of Pompeii

09jkrThe%20Architecture%20of%20the%20Boo

Irma Boom எழுதிய The Architecture of the Book

09jkrFausto%20Felice%20Niccolini%20The%2

Valentin Kockel எழுதிய The Houses and Monuments of Pompeii

கட்டிடக் கலையில் நாள்தோறும் புதுமைகள் நிகழ்கின்றன. உலகின் பல பாகங்களில் புதிய கட்டுமானச் சாதனங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடக் கலைக்குப் புதிய மாதிரிகளை ஒரு பேக்கரி வழங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள இந்த பேக்கரி, கட்டிடக் கலை குறித்த புத்தகங்களை வைத்து மாதிரிக் கட்டிடங்களை உருவாக்கியுள்ளது. சிமெண்ட் கலவை கொண்டல்ல, ஐஸ்கிரீம் கலவை கொண்டு உருவாக்கியுள்ளார்கள். உதாரணமாக The Cooper Hewitt எழுதிய Making Design புத்தகத்தை ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் மீது தட்டைக் கோபுரமாக வடிவமைத்துள்ளனர். Michael Meredith எழுதிய Selected Works புத்தகத்தை கூம்பு வடிவ ஐஸ்கிரீம் மீது வடிவமைத்துள்ளனர். Virginia McAlester எழுதிய A Field Guide to American Houses புத்தகத்தை புர்ஜ் கலீபா போல வானுயர் கட்டிடமாக வடிவமைத்துள்ளனர். இதுபோல் கட்டுமானத் துறையில் புகழ்பெற்ற பல புத்தகங்கள் சுவை மிக்க ஐஸ்கிரீம் கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

09jkrA%20Field%20Guide%20to%20American%2

Virginia McAlester எழுதிய A Field Guide to American Houses

09jkrKnoll%20Textiles%201945-2010

Earl James Martin எழுதிய Knoll Textiles, 1945-2010

09jkrSelected%20Works%20Michael%20Meredi

Michael Meredith எழுதிய Selected Works

09jkrMaking%20Design%20The%20Cooper%20He

The Cooper Hewitt எழுதிய Making Design

09jkrthe%20classical%20language%20of%20a

John Summerson எழுதிய The Classical Language of Architecture

09jkrthe%20pillars%20of%20the%20earth%20

Ken Follett எழுதிய The Pillars of the Earth

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

பொதுக்கழிவறை தட்டுப்பாடு : வழிகாட்டும் ஜெர்மன்

உலகின் சில நகர்ப்புற பகுதிகளில் ஒரு பொதுக்கழிப்பறையை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், ஜெர்மனியில் அப்படியல்ல. அங்கு ஒரு நகரில், பொதுக் கழிப்பறை வசதிகளுக்காக 'தி நைஸ் டாய்லெட்' வசதி இருக்கிறது.

  • தொடங்கியவர்

புதிய முறையில் காதலைச் சொன்ன சீன இளைஞர்!

காதலைச் சொல்வதற்கு எத்தனையோ வழியிருக்க, சீன இளைஞர் ஒருவர் புதிய முறையில் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தியது 25 ஐபோன் எக்ஸ் கைபேசிகளை!

கைபேசி விளையாட்டு வடிவமைப்புத் துறையில் இருக்கும் இந்த இளைஞர், நீண்ட நாட்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் சம்மதம் கேட்க நினைத்த அவர், சற்று வித்தியாசமான முறையில் அதைச் செய்ய நினைத்தார்.

9_iPhone.JPG

அதன்படி, அழகானதொரு பின்னணியில், ரோஜாப் பூ இதழ்களின் மேலே அப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடான ஐபோன் எக்ஸ் கைபேசிகள் 25ஐ நண்பர்களின் உதவியுடன் இதயத்தின் வடிவில் ஒழுங்குபடுத்தி, நடுவில் திருமண மோதிரத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

பின் தன் காதலியை அழைத்து வந்து தனது கோரிக்கையைக் ‘காட்டினார்’!

வித்தியாசமான இந்த முயற்சி கைமேல் பலன் அளித்திருக்கிறது அந்த இளைஞருக்கு! அவரது காதலி அவ்விளைஞரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து விட்டார்.

9_iPhone1.JPG

தானும் தன் காதலியும் கைபேசி விளையாட்டுக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும், அதனாலேயே ஐபோனைப் பயன்படுத்தியதாக அவ்விளைஞர் கூறியுள்ளார். மேலும் தனது காதலியின் வயதைக் குறிக்கும் முகமாகவே 25 போன்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் செலவிட்டிருக்கும் தொகை, இலங்கை மதிப்பில் ‘வெறும்’ அறுபது இலட்சம் மட்டுமே! 

என்னதான் இருந்தாலும் பெருந்தன்மையான மனம் அந்த இளைஞருக்கு! 25 ஐபோன்களையும் தனது திருமணம் கைகூட உதவிசெய்த நண்பர்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டாராம்!

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

வாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்!

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், புரட்சி வெடித்ததையடுத்து மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களைப் புகைப்படங்கள் வாயிலாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரஷ்ய புரட்சியின் ஒரு கட்டமாக அக்டோபர் 1917-ஆம் ஆண்டு பெட்ரோகிராட் என்று அறியப்பட்ட, தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த மக்கள் பேரணி

ரஷ்ய புரட்சியின் ஒரு கட்டமாக அக்டோபர் 1917-ஆம் ஆண்டு பெட்ரோகிராட் என்று அறியப்பட்ட, தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த மக்கள் பேரணி

அக்டோபர் 14, 1917 அன்று ரஷ்ய புரட்சியின்போது, குடியாட்சிக்கு கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருக்கும் ரஷ்ய ராணுவத்தினர்.

அக்டோபர் 14, 1917 அன்று ரஷ்ய புரட்சியின்போது, குடியாட்சிக்கு கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருக்கும் ரஷ்ய ராணுவத்தினர்.

கெக்ஸ்கோல்ம் படையின் வீரர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேரணியாகச் செல்லும் காட்சி

கெக்ஸ்கோல்ம் படையின் வீரர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேரணியாகச் செல்லும் காட்சி

ரஷ்ய புரட்சியின்போது, அரசாங்கம் வசமிருந்து கைப்பற்றிய தொலைபேசி நிலையம் ஒன்றை புரட்சி வீரர்கள் காவல் காக்கும் புகைப்படம்

ரஷ்ய புரட்சியின்போது, அரசாங்கம் வசமிருந்து கைப்பற்றிய தொலைபேசி நிலையம் ஒன்றை புரட்சி வீரர்கள் காவல் காக்கும் புகைப்படம்

பெட்ரோகிராட் பகுதியில் ரஷ்ய புரட்சியின்போது, நெவ்ஸ்கி பிராஸ்பெக்ட் என்ற நகரின் முக்கிய வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலிருந்து உயிர்பிழைக்கத் தப்பியோடும் பொதுமக்கள்

பெட்ரோகிராட் பகுதியில் ரஷ்ய புரட்சியின்போது, நெவ்ஸ்கி பிராஸ்பெக்ட் என்ற நகரின் முக்கிய வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலிருந்து உயிர்பிழைக்கத் தப்பியோடும் பொதுமக்கள்

1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ரஷ்ய புரட்சியில் பெட்ரோகிராட் பகுதியிலிருக்கும் செயிண்ட் ஐசாக் தேவாலயத்திற்கு முன் பேரணி நடைபெறும் காட்சி

1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ரஷ்ய புரட்சியில் பெட்ரோகிராட் பகுதியிலிருக்கும் செயிண்ட் ஐசாக் தேவாலயத்தின் முன் பேரணி நடைபெறும் காட்சி

வாக்களிக்கும் உரிமை கோரி ரஷ்ய புரட்சியின்போது பெண்கள் மேற்கொண்ட அணிவகுப்பு

வாக்குரிமை கோரி ரஷ்ய புரட்சியின்போது பெண்கள் மேற்கொண்ட அணிவகுப்பு

ரஷ்யா புரட்சியின்போது, தலைநகர் மாஸ்கோவில் அமைந்திருந்த சேதமடைந்த ஒரு கடை

ரஷ்யா புரட்சியின்போது, தலைநகர் மாஸ்கோவில் அமைந்திருந்த சேதமடைந்த ஒரு கடை

அரசியலமைப்பு சட்டமன்றத்தில் திரை ஒன்றுக்கு பின்னால் தன்னுடைய வாக்கை செலுத்தும் பெண்

அரசியலமைப்பு அவையில், திரை ஒன்றுக்கு பின்னால் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யும் பெண்

ரஷ்யா புரட்சியையடுத்து மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் விடுதியின் முன்பகுதி சேதமாகியிருக்கும் காட்சி

ரஷ்யா புரட்சியையடுத்து மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் விடுதியின் முன்பகுதி சேதமாகியிருக்கும் காட்சி

http://www.bbc.com

  • தொடங்கியவர்

மூன்று நிமிடங்களில் 10,000 கோடி! - இது அலிபாபாவின் ’சிங்கிள்ஸ் டே’ சாதனை

 

உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அலிபாபா', மூன்று நிமிடங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் (1.51 பில்லியன் டாலர்) மதிப்பிலான பொருள்களை விற்று சாதனை படைத்துள்ளது.

jack ma

 

ஒவ்வோர் ஆண்டும் அலிபாபா நிறுவனம், ’சிங்கிள்ஸ் டே’ என்னும் மெகா ஆன்லைன் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு, ’சிங்கிள்ஸ் டே’ விற்பனை நேற்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய முதல் 3 நிமிடங்களில் 10,000 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 97 சதவிகித வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.   

’சிங்கிள்ஸ் டே’ என்பது, சீனாவில் திருமணமாகாமல் சிங்கிள்ஸ் ஆக உலா வரும் இளைஞர் இளைஞிகள், தங்கள் வாழ்க்கை முறையைக் கொண்டாடும் ஜாலி டே. ஒவ்வோர் ஆண்டும் 11/11 அதாவது, நவம்பர் 11-ம் தேதி, சிங்கிள்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் முயற்சியில், கடந்த 2009-ம் ஆண்டு அலிபாபா நிறுவனர் ஜேக் மா ’சிங்கிள்ஸ் டே சேல்’ என்னும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தினார். ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தில் கோடிகளை அள்ளும் அலிபாபா  நிறுவனம், இந்த முறை முதல் 15 நிமிடங்களிலேயே சுமார் 32,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்று, கோடிகளை அள்ளியுள்ளது.    

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Baseball

#OnThisDay l சர்வதேச கிரிக்கெட்டில் பிரவேசித்து 40 வருடங்களின் பின்னரே நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு தொடர் வெற்றியொன்று கிடைத்தது

Bild könnte enthalten: 1 Person, Text

#Football l 2014ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணத்தில் ஜேர்மனி கால்பந்து அணியின் தலைவராக செயற்பட்டு அவ்வணியினை சம்பியன்களாக வழிநடாத்திய பிலிப் லாம் தனது 34 ஆவது பிறந்த நாளினை இன்று கொண்டாடுகின்றார்.

  • தொடங்கியவர்

கோலி 25

கோபக்கார இளைஞன். இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய். ஆடும் ஒவ்வொரு மேட்சிலுமே அப்டேட் ஆகிறது கிரிக்கெட் வரலாறு. `சச்சினுக்குப் பிறகு யார்?’ என்ற கேள்விக்கு ரன்களால் பதில் சொன்ன அதிரடி பேட்ஸ்மேன் கோலியின் வின்னிங் 25 இங்கே!   

p74a.jpg

1   வரும் நவம்பர் ஐந்தாம் தேதி தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் கோலி பிறந்தது டெல்லியில். அப்பா கிரிமினல் வழக்கறிஞர். அண்ணன், அக்காவுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி கோலி.

  2    சச்சின், ஷேவாக், கங்குலி, அசாருதின் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைலைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அதனால்தான் கோலியிடம் நான்கு பேரின் ஸ்டைலையும் பார்க்கமுடியும். 

  3  மிகவும் துடுக்கான, எல்லாவற்றுக்குமே கொந்தளிக்கும் டீன்ஏஜ் பையன்போல மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவராக இருந்தாலும், பேட்டிங்கில் கோலி காட்டும் நிதானம் ராகுல் டிராவிட்டிடம்கூடப் பார்க்காத ஒன்று. இன்றைய தேதிக்கு கிரிக்கெட்டை இவ்வளவு நேர்த்தியாக ஆடும் ஒரே பேட்ஸ்மேன் கோலி மட்டுமே.

  4  ‘‘நான் கிரிக்கெட் ஆடத்தொடங்கியபோது மிகவும் பேஷனோடு, ஆர்வத்தோடு ஆடத்தொடங்கினேன். ஆனால், சின்ன வயது என்பதாலோ என்னவோ, என்னுடைய ஃபோகஸை பாதியில் இழந்துவிட்டேன். என் அப்பாவின் திடீர் மரணம் என்னுடைய கவனத்தை மீண்டும் கிரிக்கெட் பக்கம் கொண்டுவந்தது. ஆனால், ஐபிஎல் கொண்டாட்டம் என்னை மீண்டும் பார்ட்டிகளுக்கு அழைத்துச்சென்றது. என்னுடைய ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் கேப்டனாவதற்காக நான் கொடுத்த உழைப்பு நானே எதிர்பார்க்காதது’’ என்பார் கோலி.

  5    டாட்டூக்களின் அதிதீவிர ரசிகன். உடலில் பல இடங்களில் டாட்டூக்களைப் பார்க்கலாம். தனது நட்சத்திரம், பெற்றோர் பெயர்கள், தியானத்தில் இருக்கும் சிவன் என்று பலவற்றில் அவருக்குப் பிடித்த டாட்டூ, இடது கையில் அவர் பதிந்திருக்கும் வாளுயர்த்தி இருக்கும் சாமுராய் டாட்டூதான்.

  6    விராட் கோலியின் முதல் க்ரஷ், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தவர் ஸ்பானிய நடிகையும் மாடலுமான, பெனலோப் க்ரூஸ்.

  7     பந்துகளை பயமின்றி அனாயாசமாக எதிர்கொள்ளும் கோலிக்கு, பயம் ஒரே விஷயத்தில்தான். அது, உயரம். “எது என்னமோ... சின்ன வயசுல இருந்து, உயரம்னா பயம்” என்பார்.

  8    களத்தில் கோபப்படுபவர், ஆக்ரோஷமானவர் என்ற பெயர் இவருக்குண்டு என்பது சொல்லத் தேவையே இல்லாத விஷயம். ஆனால், அந்தக் கோபம் பற்றி இவர் சொல்வது என்ன தெரியுமா? “என் கோபம்தான்... என் பலம்!”

9   டஸ்டர், ஃபார்ச்சூனர், ஆடி சீரிஸில் 6, 7, 8 என்று பல கார்கள் வைத்திருந்தாலும், கோலியின் கனவுக் கார் ஆஸ்டன் மார்ட்டின்.

 10   பல பாராட்டுகளைப் பெற்றாலும், விராட் பிரியமாய் நினைப்பது விவியன் ரிச்சார்ட் சொன்னது. விராட் கோலி தன்னைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ரிச்சர்ட்ஸ்.

p74b.jpg

  11    டெல்லியில், கர்நாடகாவுக்கு எதிராக ரஞ்சி போட்டியின்போது, கோலி 40 ரன்களில் இருக்க அந்த நாளின் போட்டி நிறைவுக்கு வந்தது. அன்று இரவு, திடீரென கோலியின் தந்தை மரணமடைந்துவிட்டார். பலத்த மனப்போராட்டங்களுக்குப் பிறகு அடுத்தநாள் மைதானத்துக்குச் சென்று ஆட்டத்தைத் தொடர்ந்து, 90 ரன்கள் எடுத்தார். பேட்டிங் முடிந்ததும் நேராக அப்பாவின் இறுதிச்சடங்கில் சென்று கலந்து கொண்டார். விளையாட்டுத்தனமாய் இருந்த தன் வாழ்வை மாற்றிய தருணமாக இதைக் குறிப்பிடுவார் கோலி.

  12    கிரிக்கெட்டுக்கு அடுத்து ஃபுட்பால், டென்னிஸ் இரண்டுமே பிடித்த விளையாட்டுகள். இந்தியன் சூப்பர் லீகின் கோவா டீமின் இணை உரிமையாளராகவும், டென்னிஸில், UAE ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.

  13   அணியில் கோபம், சண்டைகள் எல்லாம் தாண்டி, விராட் கோலியின் இணைபிரியா நண்பன் ஷிகர் தவான். டெல்லி அணிக்காக ரஞ்சி விளையாடும் காலத்திலிருந்து நண்பர். தன்னைப்போலவே கோபக்காரர் என்று ஆரம்பித்து இருவருக்குள்ளும் அப்படி ஒரு பிணைப்பு.

  14    எந்த பெளலரையும் எளிதில் சமாளிக்க புதிய புதிய டெக்னிக்குகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். யாருடைய பெளலிங்கை எதிர்கொள்ளச் சிரமப்படுவீர்கள் என்ற கேள்விக்கு விராட் கோலி சொல்லும் பதில்: தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன்.

  15    பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் விராட், தனது மனதுக்குப் பிடித்த சாதனையாகக் குறிப்பிடுவது, தனது முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே சதம் அடித்தது.

  16    இவரது செல்லப்பெயர்: ச்சிக்கூ! “ச்சிக்கூ... ஒரு செல்ஃபி ப்ளீஸ்’ என்று ரசிகர்கள் அதிக உரிமையாக அழைக்கிறார்கள். காரணம் தோனிதான்” என்பார் கோலி. ஒரு போட்டியில், ஸ்டெம்ப் மைக்கில் சத்தமாக தோனி கூப்பிட்டதுதான் காரணம்.

  17     ஃபிட்னஸுக்கு மிகமிக முக்கியத்துவம் கொடுப்பார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வொர்க் அவுட்தான். “130 கோடி பேரின் பிரதிநிதிகளாக இருக்கும் 15 பேரில் ஒருத்தராக இருக்கிறேன். அதை நியாயப்படுத்துவது என் கடமை” என்பார்.

  18    உணவுப் பிரியர். அம்மா சமைக்கும் பஞ்சாபியின் ஃபேமஸான ‘ராஜ்மா சாவல்’ அவருக்குப் பிடித்த உணவு. பட்டர் சிக்கனும் பிடித்த உணவாக இருந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக சிக்கன் சாப்பிடுவதை விட்டுவிட்டார்.
 
  19    விராட் கோலி சொல்லும் பன்ச்: “தினமும் கடின உழைப்பை வெளிப்படுத்தினால், யாருக்கும் பதில் சொல்லத் தேவையிருக்காது!”

p74c.jpg

  20    உலகத்தில் எந்த நாட்டுக்கும் போகப்பிடிக்கும் என்பவர், போக விரும்பும் இடமாகக் குறிப்பிட்டது, விண்வெளியை. “அங்கே போய் என்ன இருக்கிறதென்று பார்க்க ஆவல்” என்கிறார் கோலி.

  21    கோலியின் ஃபேவரிட் ஸ்டார்ஸ், ஹாலிவுட்டின் ஜானி டெப், ஏஞ்சலினா ஜோலி. பாலிவுட்டில் அமீர்கான், ஐஸ்வர்யா ராய். இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு லைக்ஸ் அதிகம்.

  22    நேரம் கிடைக்கும்போது டிவியும் பார்ப்பதுண்டு. குறிப்பாக சீரிஸ் ரசிகர். அமெரிக்காவின் த்ரில்லர் சீரிஸான ‘ஹோம்லேண்ட்’ (Homeland) கோலியின் ஃபேவரிட். அடுத்த இடத்தில் இருப்பது ப்ரேக்கிங் பேட். (Breaking Bad.)

  23    ஹேர்ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கலக்குவார். சில வருடங்களுக்கு முன், இவரது ஹேர் ஸ்டைல் பரவலாகப் பேசப்பட்டு, “யார் அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட்?” என்று பலரும் கேட்டார்கள். அமைதி காத்தவர், சில மாதங்களுக்குப் பிறகு உண்மையைப் போட்டுடைத்தார். முயன்று பார்க்கலாம் என்று அவர் தனக்குத் தானே வெட்டிக்கொண்டதுதான் அந்த ஸ்டைல்!

  24    ‘`கிரிக்கெட் பேட் என்பது, எனக்கு  பொம்மை கிடையாது; என்னுடைய ஆயுதம். அதுதான் என்னை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது; எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. அந்த ஆயுதத்தை எப்போதும் என் கையில் வைத்திருப்பேன். அதை யாரும் என்னிடமிருந்து அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது!” என்பார் கோலி.

  25     டிரஸ்ஸிங்கில் மிகவும் ஆர்வம் கொண்ட கோலிக்குப் பிடித்த டிரஸ்ஸிங் ஆளுமை, அமெரிக்காவின் பாடகரும் நடிகருமான ஜஸ்டின் டிம்பர்லேக். (Justin Timberlake)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹங்கேரியில் ஓவியம் தீட்டும் இந்திய யானை

 

 

ஹங்கேரியில் ஓவியம் தீட்டும் இந்திய யானை
 

ஹங்கேரியின் புடாபஸ் நகரில் சர்க்கஸ் நிறுவனத்தில் உள்ள இந்திய யானை ஒன்று வண்ண ஓவியங்கள் தீட்டும் காட்சி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்க்கஸுக்கு 2 வயது குட்டி யானையாக வந்த அந்த யானையின் பெயர் சான்ட்ரா.

தற்போது சான்ட்ராவுக்கு 42 வயதாகிறது.

சான்ட்ரா யானை கோடுகளை ஓவியமாக்குவதற்கு தனது தும்பிக்கையையே தூரிகையாக்குகிறது.

சான்ட்ரா வரைந்த ஒரு ஓவியம் 150 டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

யானைகளுக்கு பயிற்சியளித்த ஃப்ளோரியன் ரிக்டர் என்ற பெண்மணி சான்ட்ராவுக்கு தாம் எந்தவித துன்புறுத்தலும் செய்யவில்லை என்றும் அதுவாகவே ஆர்வத்துடன் ஓவியம் கற்றுக்கொண்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

யானை வரைந்த அழகில் சொக்கிப்போகும் பார்வையாளர்கள் அதை ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர்.

அப்படித் திரட்டப்படும் தொகை, மலேசியக் காடுகளில் உள்ள யானைகளின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

சர்க்கஸில் உள்ள குதிரைகளுக்கும் ரிக்டர் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

painting_elephant_848x480_1088623683581

Sandra, a 42-year-old elephant, poses for a photo with Hungarian circus fans who bought her painting in the Florian Richter Circus in Budapest, Hungary November 4, 2017. REUTERS/Laszlo Balogh NO RESALES. NO ARCHIVES

http://newsfirst.lk/tamil/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: இந்தியாவின் கிராண்ட் கேன்யன்!

 

 
8chsujgrand4jpg

கி

ராண்ட் கேன்யன் என்றால் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று பொருள். உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது இந்தப் பள்ளத்தாக்கு. கொலரோடா என்ற மிகப் பெரிய நதியின் ஓட்டத்தாலும் அழுத்தத்தாலும் பாறைகள் அரிக்கப்பப்டுகின்றன. காலப்போக்கில் இப்படிப் பள்ளத்தாக்கை உருவாக்கிவிடுகின்றன. பூமியின் மீதுள்ள டெக்டோனிக் தகடுகளின் செயல்பாடுகளும் பள்ளத்தாக்கு ஏற்பட உதவுகின்றன.

   

கொலரோடா நதி பாறைகளைப் பிளந்து 446 கி.மீ. நீளமும் 29 கி.மீ. அகலமும், 1800 மீட்டர் ஆழமும் உடைய மிகப் பெரிய பள்ளத்தாக்கை உருவாக்கியிருக்கிறது. நிலவியலாளர்கள் கிராண்ட் கேன்யன் உருவாகி சுமார் 7 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். இது ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

8chsujgrand1JPG
 

இதுபோன்ற மிகப் பெரிய பள்ளத்தாக்கு இந்தியாவிலும் இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் கந்திகோட்டா என்ற சிறிய கிராமத்துக்குச் சென்றால் இதைப் பார்த்துவிடலாம். ‘கந்தி’ என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு என்று பொருள். அமெரிக்கப் பள்ளத்தாக்கு அளவுக்குப் பெரியதாக இல்லாவிட்டாலும் மிக அற்புதமான, அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று.

பென்னாறு நதி எர்ராமலையின் குறுக்கே ஓடுவதால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி, அவற்றைக் கைகளால் அடுக்கிவைத்ததுபோல் உள்ளது! சிவப்பும் மஞ்சளும் பழுப்புமாகப் பல்வேறு வண்ணங்களில் பாறைகள் மிக அழகாகக் காணப்படுகின்றன. இரண்டு பக்கமும் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே பென்னாறு ஓடுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும்! இந்தியாவில் மறைந்திருக்கும் அதிசயங்களில் கந்திகோட்டா பள்ளதாக்கும் ஒன்று.

இங்கே மிகப் பெரிய கோட்டை ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது அந்தக் கோட்டைச் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.ஐந்து கி.மீ. சுற்றளவில் இந்தக் கோட்டையின் மதில் சுவர் அமைந்துள்ளது. 20 அடி உயரத்தில் கோட்டையின் நுழைவாயில் உள்ளது.

8chsuj-grandjpg
 

கோட்டையில் 101 இடங்களில் 40 அடி உயரத்துக்கு முகப்பு அமைப்புகள் உள்ளன. 13-ம் நூற்றாண்டில் கப்பா என்ற அரசரால் கட்டப்பட்ட இது, தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. விஜயநகர மன்னர்களின் படைத் தளபதிகளான பெம்மாசனி நாயுடு பரம்பரை 13-ம் நூற்றாண்டிலிருந்து 282 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது.

கோட்டை வளாகத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் மிகவும் பழமையானதாகவும் அழகான கட்டிடக்கலையுடனும் காட்சியளிக்கிறது. இங்குள்ள மாதவ சுவாமி கோயிலின் கட்டிடக்கலை ஹம்பிக்கு ஈடாக இருக்கிறது. வெளிப்புற அமைப்பைவிட உட்புறம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாமியா மசூதியை ஒட்டி மிகப் பெரிய தானியக் கிடங்கு ஒன்றும் உள்ளது. இந்தக் கோட்டைக்கு அரணாக இந்தக் கந்திகோட்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

இயற்கையை நேசிப்பவர்கள் அவசியம் ஒருமுறை கந்திகோட்டா பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்க வேண்டும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மீன்களுக்கு இரையை மொத்தமாகக் கொட்டிய ட்ரம்ப்!

ட்ரம்ப்

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு கொயிங் என்ற மீன் வகை குளத்துக்கு உணவளித்த ட்ரம்ப், ஒட்டுமொத்த உணவுப் பெட்டியில் இருந்த உணவை ஒரே நேரத்தில் கொட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ட்ரம்பின் செயல் மீன் பிரியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

 

ட்ரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இருவரும் மீன் குளத்தில், 'கொயிங்' என்ற மீன் வகைக்கு உணவளித்தனர். மீன்களுக்கு உணவை இரைப்பாகப் போட வேண்டிய இடத்தில், பொறுமையின்றி ட்ரம்ப் கையில் இருந்த மொத்த உணவு வைக்கப்பட்டிருந்த உணவு டப்பாவையும் குளத்தில் போட்டுவிட்டார். அருகில் இருந்த அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், ட்ரம்பின் செயலைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நின்றிருக்கிறார். இருந்தாலும், ட்ரம்பின் இந்தச் செயலுக்கு ட்விட்டரில் பல கோப ட்வீட்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘சோதனைகளே அனுபவங்களை ஊட்டுகின்றன’
 

image_a608a86d67.jpgவைராக்கியம் இல்லாமல் எப்படி இயங்க முடியும். வீடு தேடி எல்லாமே வரும் எனப் பலர் கருதுகின்றனர். எதற்கும் காலம் வரும் என நம்பி, அடுத்தவரிடம் கடன் கேட்கக் கூடாது.  

படிக்கச் சோம்பல் பட்டவன் எப்படிப் பரீட்சையில் சித்தி பெற முடியும். தொழிலைத் தெரியாமல் தொழில் அதிபராக ஆசைப்பட முடியுமா?  

வைராக்கிய சிந்தனையினால், அடிமட்ட நிலையில் இருந்தவர்கள் அதி உயர் நிலைக்கு, எங்கள் கண்ணெதிரே வந்திருக்கின்றனர்.  

இட்டியை நடைபாதையில் இருந்து விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து, அதைச் செய்யும் விதத்தை அறிந்து, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நடைபாதையில் வியாபாரத்தை ஆரம்பித்தார். மன வைராக்கியத்துடன் தொழிலை ஆரம்பித்தவர், பல உணவகங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். எதிர்ப்படும் துன்பங்கள், சோதனைகளில் மூழ்கினால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா?  

சோதனைகளே அனுபவங்களை ஊட்டுகின்றன. மனதில் வைராக்கியத்தை உருவாக்கி, மனிதனாக்குகின்றன.  

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 12
 

1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.

1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.

1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் 'செர்வோனா உக்ரயீனா' மூழ்கடிக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.

1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ஆம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.

1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.

1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.

1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.

1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.

1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனேசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.

1994 - இலங்கையின் 5ஆவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.

2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

செவ்வாய் கிரகத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சா?: ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம்

 

நாசாவின் ‘இன்சைட்’ (Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) திட்டம் மூலம் பூமியிலிருந்து சிவப்புக் கிரகமான செவ்வாய் கிரகத்துக்கு வருகிற 2018-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி ராக்கெட் புறப்படுகிறது. இந்தப் பயணத்துக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் அனுப்பப்படும் என நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் பலர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 1,38,899 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. டிக்கெட்டில் பயணிகளின் பெயர் சிலிகான் மைக்ரோ சிப்களில் எழுதப்படுகிறது. மனித தலைமுடியை விட நூறு மடங்கு மெல்லிய எலக்ட்ரான் இலைகள் மூலம் பெயர் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 

நேற்று நாசா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்துக்கு முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 6,76,773 முன்பதிவு பயணிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 2,62,752 பேருடன் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள்

பிரேஸிலில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான அழகுராணி போட்டி அண்மையில் நடைபெற்றது.

மிஸ் பம் பம் பிரேஸில் எனும் இப் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்தனர்.

brazil.jpg

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் அவர்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.

பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் மிஸ் பம்பம் போட்டி நடைபெற்றது. இதன்போது சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுகைளுக்கு மேலாக இவர்கள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

brazil-2.jpg

பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம் என இவர்கள் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான லே டி காகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விருது வழங்கல் விழாவவொன்றில், இறைச்சியினாலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

 

20 ஆண்டுகளாகியும் மாறாத பெண்களின் கல்வி நிலை

  • தொடங்கியவர்

கீரிப்புள்ள தலைகள்!

 

9-mohawk-with-length-and-frosted-tips
17-soft-spiked-mohawk
9-mohawk-with-length-and-frosted-tips
17-soft-spiked-mohawk

மொஹாக் (mohawk) ஸ்டைல் தெரியுமா? ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் செந்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வருவார். அதைப் பார்க்கும் கவுண்டமணி, “அது என்னடா தலையில கீரிப்புள்ள படுத்திருக்கு"ன்னு முடியைத் தடவிப் பார்த்து நக்கல் செய்வாரே, அந்த ஸ்டைலுக்குப் பெயர்தான் மொஹாக்.

தலையின் இரு புறங்களிலும் முடியை மழித்துவிட்டு, முன்பக்கத்திலிருந்து பின்பக்க மண்டை வரைக்கும் நடுவில் மட்டுமே ஹேர் ஸ்டைல் இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களுக்குப் பிடித்த ஹேர்ஸ்டைல் இதுதான். ஆண்கள் இந்த ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் வலம் வருவதைப் பார்த்து இளம் பெண்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் இப்போது மொஹாக் ஹேர்ஸ்டைலுக்கு மாறிவருகிறார்கள். பெண்களுக்காக மட்டும் மெஹாக் ஸ்டைலில் 70 ரக கெட்டப்புகள் இருக்கின்றனவாம். சில கெட்டப்புகளை நீங்களே பாருங்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலகப் புகழ் பெற்ற 3 பெண் உளவாளிகள் யார் என்று தெரியுமா!

 

 
anna_chapman

எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும், உளவுத் துறையின் மிக முக்கியமான வேலை ஒற்று அறிவதுதான். எதிரி முகாமின் அளவு, வலிமை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உளவாளிகளால் தான் கொண்டு வர முடியும். நூற்றாண்டு காலமாக ஆண்களைப் போல பெண்களும் உளவுத் துறையில் சிறந்து விளங்கியுள்ளார்கள். சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று பெண் உளவாளிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

நூர் இனாயத் கான் (Noor Inayat Khan)

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத். நோரா பேக்கர் என்று ஜெர்மனியரால் அறியப்பட்ட இந்திய இளவரசி ஆவார்.

noor_inayat_khan.jpg

பிரான்ஸ் நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்த சமயத்தில், அங்கு உளவுப் பணிக்காக நூர் அனுப்பப்பட்டார். 1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற வேறொரு பெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் தொடங்கினார். தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கிய நூர் அவ்வப்போது முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.

noor.jpg

நூரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு, திடீரென்று அவரைக் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர் நாஜிப் படையினர். பலவிதமான சித்திரவதைக்கு உட்படுத்தி உண்மையைக் கூறும்படி துன்புறுத்தப்பட்டும் நூர் தான் சார்ந்த எந்தவொரு தகவலையும் சொல்ல மறுத்தவிட்டார். இதற்கு மேல் வதைக்கமுடியாது எனும் நிலையில் நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனாயத் கானின் வயது 30 தான். போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் நூர் நினைவுக் கூறப்படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (விடுதலை).

noor_inayat_khan_spy_princess.jpg

நூர் இனாயத் கான் பற்றிய புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘ஸ்பை பிரின்ஸஸ்’ என்ற தலைப்பில் அதை எழுதியவர் சப்ரானி பாசு. பிரின்ஸஸ் ஸ்பை என்ற ஆவணப்படமும் அவரைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

அன்னா சாப்மேன் (Anna Chapman)

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியைப் போல் தோற்றம் அளிக்கும் அன்னா சாப்மேன் ரஷ்யாவை பூர்விமாகக் கொண்டவர். அழகில் மட்டுமல்ல, அறிவுக் கூர்மையும் அன்னாவின் சொத்து. நியூயார்க்கில் அவர் வாழ்ந்த சமயத்தில் அவரது ஐக்யூ 162 என்று கண்டறியப்பட்டது.

Anna-Chapman.jpg

27, ஜூன் 2010-ம் ஆண்டு அன்னா சாப்மேன் அமெரிக்க படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு உளவுத் துறையின் கீழ் இயங்கும் எஸ்விஆர் (Sluzhba Vneshney Razvedki) என்ற அமைப்பிற்காக உளவு வேலை செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார் அன்னா. பின்னர் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

Anna-Chapman-Former-Russian-Spy-Instagra

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடெனுக்கு தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார் அன்னா. ஸ்னோடென், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று அன்னா சாப்மேன் கேட்டுள்ளார். இதற்கு பதில் வராத நிலையில், எனது குழந்தைகளை பார்த்துக் கொள்வீர்களா? என்று அன்னா கேட்டுள்ளார். இதற்கும் ஸ்னோடென் பதில் அளிக்கவில்லை.

anna.jpg

நாடு கடத்தப்பட்டும் அன்னாவின் இத்தகைய பதிவுகளால் அமெரிக்க ராணுவம் அது உண்மையில் அன்னாவின் டிவிட்டர் கணக்கா என்று ஆராய்ச்சி செய்தது. இதுவரை அது குறித்து அவர்களிடம் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாத்தா ஹரி (Mata Hari)

மாத்தா ஹரியின் இயற்பெயர் மார்கரெத்தா கீட்ருய்டா ஸெல்லி. நெதர்லாந்தில் ஆகஸ்ட் 7, 1876-ம் ஆண்டு பிறந்தவர்.  இவர் ஆண்களின் காதல் பார்வைக்கும் பெண்களின் பொறாமைக்கும் உள்ளான பேரழகி.

matahari.jpg

18 வயதில் மார்கரெத்தா டச்சு கேப்டன் ருடால்ஃப் மெக்லியோட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 20 வருடங்கள் வயது வித்தியாசம். மண வாழ்க்கை கசந்து கணவரைப் பிரிந்தார் அவர். பாரீஸ் சென்று ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். சர்க்கஸில் குதிரை ஓட்டும் பெண், ஓவியர்களுக்கு மாடல் என வெவ்வேறு பணிகளைச் செய்தார். அவரது அழகு தான் அவருக்கு எதிரியாக இருந்தது.

mata-hari-1906-close-up.jpg

எதிலும் நிலைத்திருக்க இயலாமல் கடைசியாக நடன மங்கையானார் மார்கரெத்தா. இத்துறை அவரைக் கைவிடவில்லை. காரணம் அழகியலுடன் கவர்ச்சியும் கைகோர்த்து அவரது நடனம் உலகப் புகழ்ப்பெற்றுவிட்டது. தன்னுடைய பெயரை மாத்தா ஹரின் என்று மாற்றி வைத்தார் மார்கரெத்தா. அவரோடு பழகுவதற்கு ஐரோப்பாவின் செல்வாக்கு மிக்கவர்கள் போட்டி போட்டனர். 1905-ல் ஆரம்பித்த அவருடைய நடனப் பயணம், 1915 வரை தொடர்ந்தது. வீழ்த்தியது. முதல் உலகப் போரின் போது ஜெர்மனியை உளவு பார்க்க பிரான்ஸ் மாத்தா ஹரியின் உதவியை நாடியது.

mata-hari-2.jpg

போரின் இறுதிக் கட்டத்தில் அவர் ஜெர்மனியின் உளவாளியாக இருப்பாரோ எனச் சந்தேகித்த பிரான்ஸ், அவரைக் கைது செய்தது. 1917-ம் ஆண்டு அக்டோபர் 15-ல் மாத்தா ஹரி சுட்டுக் கொல்லப்பட்டார். அழகிய உளவாளியான மாதாவின் மரணம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மனத் துயரை அளித்தது.

mata_hari.jpg

ப்ரான்ஸில் வாழும் தமிழ் எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா மாத்தா ஹரி பற்றிய புத்தகம் எழுதியுள்ளார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

 

ஜெட் எந்திர விசை அங்கியோடு பறந்து சாதனை படைத்த சாகச மனிதர்

  • தொடங்கியவர்

மோதிப்பார்... சாலையில் எதிர்த்து நின்ற இளைஞர்..! வைரல் வீடியோ!

சாலை விதிகளை மதிக்காமல் வந்த ஜீப் டிரைவரைப் பைக்கில் வந்த இளைஞர் தனியாக எதிர்த்து நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

viral video

 


ஒருவழிப்பாதையில் தவறாக வேண்டுமென்றே எதிர் திசையில் ஜீப்பில் வந்தவருடன் ஜீப்பின் எதிரே தன் பைக்கை நிறுத்தி அந்த இளைஞர் துணிச்சலுடன் மல்லுக்கட்டுகிறார். ஜீப்பை மோதுவதுபோல் முன்னே கொண்டு வந்தபோதும் இளைஞர் அசரவில்லை. முடிவில் ஜீப் டிரைவர் பின்னால் செல்கிறார். அதன்பிறகு, அந்த இளைஞர் தன் பைக்கில் அங்கிருந்து செல்கிறார்.

 

சுமார் 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நடந்தது எங்கே எனத் தெரியவில்லை. ஆனால், இந்தூரைச் சேர்ந்த ஒருவர், தனக்கு தெரிந்தவரின் சகோதரர் அந்த இளைஞர் என்று சொல்லி அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அதி நவீன  தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரயிலை ஜேர்மனின் Deutsche Bahn அறிமுகபடுத்தத உள்ளது.

 

railcolorinnovation_dbideenzug201702deutschebahn.jpg?resize=1215%2C810

 

 

railcolorinnovation_dbideenzug201710deutschebahn.jpg?resize=1215%2C810

railcolorinnovation_dbideenzug201704deutschebahn.jpg?resize=1215%2C810

 

railcolorinnovation_dbideenzug201714deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201712deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201716deutschebahn.jpg?fit=1600%2C1067

 

railcolorinnovation_dbideenzug201715deutschebahn.jpg?fit=1600%2C1067

 

railcolorinnovation_dbideenzug201718deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201701deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201702deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201705deutschebahn.jpg?fit=1600%2C1067

railcolorinnovation_dbideenzug201711deutschebahn.jpg?fit=1600%2C1067

 

 

தகவல்..Deutsche Bahn

  • தொடங்கியவர்
‘எல்லோருக்கும் ஆறுதல் அளிப்பேன்’

image_94331615a3.jpg“இந்தச் சமூகத்துக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை; நான் வசதியற்றவன்; மனதில் திராணியும் இல்லை; என்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்” எனச் சிலர் சொல்வதுண்டு. 

இவ்வாறான பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உதவிசெய்யப் பணம் மட்டும் தேவையானது அல்ல; எல்லோருக்கும் ஆறுதல் அளிப்பேன் என்கின்ற வலுவான எண்ணம் இருந்தால் மட்டும் போதும். எமக்கான ஆற்றல்கள் தானாகவே வந்துவிடும்.  

வெறும் வாயால் சொல்வதை விட, உங்கள் மனதுக்கு நீங்கள் நல்ல காரியம் செய்ய விரும்புவதாகச் சொல்லுங்கள். நல்ல பணி செய்யச் சலனமான நினைப்புடன் இயங்க வேண்டாம். 

எந்த நல்ல பணியையும் முதல் தொடங்கி விடுங்கள். அப்புறம் எல்லாமே நன்றாக நடக்கும். உங்களுடன் பல கரங்கள் இணைந்து கொள்ளும். எதற்கும் வீணான சாட்டுதல்களைச் சொல்லற்க. உடல் உழைப்பை நல்குவதே, பணத்தை விடமேலானது. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 13

1989: இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர கொல்லப்பட்டார்...

1916: அவுஸ்திரேலியா பிரதமர் பில்லி ஹியூஜ்ஸ் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் தொழிற்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

1947: உலகில் அதிகம் விற்பனைசெய்யப்பட்ட துப்பாக்கியான ஏ.கே.47 உருவாக்கப் பணிகளை ரஷ்யா நிறைவுசெய்தது.

1950: வெனிசூலா ஜனாதிபதி ஜெனரல் கார்லோஸ் டெல்காடோ சல்போட் படுகொலை செய்யப்பட்டார்.

1954: உலகின் முதலாவது றக்பி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை பிரிட்டன் தோற்கடித்தது.

1965: பஹாமஸுக்கு அருகில் எஸ்.எஸ். யார்மௌத் எனும் நீராவிக் கப்பல் மூழ்கியதால் 90 பேர் பலி.

1971: அமெரிக்காவின் மரைனர் 9 எனும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்ததன் மூலம், மற்றொரு கிரகத்தை சுற்றிவந்த முதல் விண்கலமாகியது.

1982: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த குத்துச்சண்டைப் பொட்டியில் ரே மான்சினி என்பவர் டுக் கூ கிம் என்பவரை தோற்கடித்தார். 4 நாட்களின் பின்னர் கூ கிம் இறந்ததையடுத்து இவ்விளையாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

1985: கொலம்பியா நாட்டில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 23,000 பேர் பலியாகினர்.

1989: இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர கொல்லப்பட்டார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

ஒலிம்பிக், டைட்டானிக், பிரிட்டானிக்... மூன்று கப்பல் விபத்துகளை சமாளித்த வயலெட் ஜெஸ்ஸப்! #FeelGoodStory

 

உன்னை அறிந்தால்...

நெருப்பு சுடும் என்று தெரிந்த பிறகு, யாராவது அதைத் தொடுவார்களா? வாழ்வதற்காக ஒரு வேலை... ஆனால், அந்த வேலையில் இருந்தால் உயிருகே ஆபத்து என்பதை உணர்ந்ததற்குப் பிறகும் யாராவது தொடர்ந்து அதில் இருக்க முயற்சிப்பார்களா? முயற்சிப்பார்கள்.  உயிருக்கு உத்தரவாதமில்லாத ராணுவம், விமானப் படை, கப்பற் படை போன்றவற்றை விட்டுவிடுவோம். பாதுகாப்பான, பொருத்தமான, பயமில்லாத வேலைகள் பல இருந்தும், அவற்றை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு அபாயம் நிறைந்த வேலையைத் தேடி ஓடுகிறவர்களும் உண்டு. சிலர் அப்படித்தான். இதற்கு, அவர்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று அர்த்தமில்லை; பார்க்கும் வேலையை அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று அர்த்தம். இது ஒரு மனோபாவம். வயலெட் ஜெஸ்ஸப் (Violet Jessop) அவர்களில் ஒருவர். ஒருமுறை அல்ல... மூன்று முறை கப்பல் விபத்துகளைச் சந்தித்து உயிர் மீண்டவர். அப்படியென்ன பேரிடர்களைச் சந்தித்தார் வயலெட் ஜெஸ்ஸப்? பார்க்கலாம்... 

 

வயலெட் ஜெஸ்ஸப்

1887-ம் வருடம் அர்ஜென்டினாவில் பிறந்தார் வயலெட். அப்பா, வில்லியம், அம்மா கேத்தரின். இவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூத்தவர் வயலெட். முதல் குழந்தை என்பதாலேயே வீட்டில் வயலெட்டுக்குப் பொறுப்பு அதிகம். அம்மாவும் அப்பாவும் இல்லாத நேரங்களில் அவர்தான் சகோதர, சகோதரிகளைப் பார்த்துக்கொள்வார். அப்பா வில்லியமுக்கு ஆடு வளர்ப்பதுதான் தொழில். அவர் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. வயலெட்டுக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அப்பா வில்லியம் இறந்துபோனார். அதற்குப் பிறகு அங்கே வாழ வழியில்லாமல் கேத்தரின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். 

இங்கிலாந்தில் கேத்தரினுக்கு வேலை கிடைத்தது. கப்பல் பணிப்பெண் வேலை. ஒரு முறை கப்பலில் ஏறிக் கிளம்பிப் போனால் எப்போது வீடு திரும்புவார் என்று சொல்ல முடியாது. வாரங்கள், சில மாதங்கள்கூட ஆகலாம். வயலெட்தான் அம்மா இல்லாத நேரங்களில் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு, ஆதாரம். கான்வென்ட்டுக்குப் போய் படித்தபடியே, வீட்டையும் பார்த்துக்கொண்டிருந்தார். பலருக்கு வாழ்க்கை சுமுகமாக, ஒரே சீராகப் பயணிப்பதில்லை. விதி என்கிற ஒன்று மிக மோசமாக சிலரை மட்டும் தொந்தரவு செய்யும். அது, வயலெட்டையும் விட்டுவைக்கவில்லை. அம்மா கேதரினுக்கு கடல் பயணம் ஒப்புக்கொள்ளவில்லை; அவர் உடல் அந்த வேலைக்கு ஒத்துழைக்கவில்லை. படுக்கையில் விழுந்தார். இப்போது வயலெட்டின் முறை. குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கவேண்டிய அடுத்த தூணாக வயலெட்டை பீடத்தில் அமர்த்தியது காலம். 

அம்மாவைப்போலவே கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை வயலெட்டுக்கு இருந்தது. கப்பல் பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். அவரின் 21-வது வயதில் லண்டனில் இருந்த `ராயல் மெயில் ஸ்டீம் பாக்கெட் கம்பெனி’ என்ற கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு `ஒலிம்பிக்’ (Olympic) என்ற புகழ்பெற்ற கப்பலில் பணிப்பெண் வேலை. ஒலிம்பிக் அந்தக் காலத்தில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்று பெயர் வாங்கிய ஒன்று. ஆடம்பரமான, அழகான கப்பல். அதில் பணியாற்றுவதை மிகவும் விரும்பினார் வயலெட். 

கடல் பயணம் அலாதியான அனுபவம். ஆனால், எந்த நேரமும் ஆபத்தும் நேரலாம். இது, வயலெட்டுக்குத் தெரிந்தேதான் இருந்தது. வயலெட், ஐந்தடி மூன்று இன்ச் உயரம். அவருடைய திறமைக்கு லண்டனிலேயே ஏதோ ஓர் நிறுவனத்தில் அல்லது மருத்துவமனையில் நல்ல வேலை கிடைத்திருக்கும். அது என்னவோ கப்பல் பயணம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு கடல் பறவையாக, கடலின்மேல் பறக்க முடியாவிட்டாலும், கப்பலிலாவது பயணம் செய்யலாமே என்கிற தீராத வேட்கை. 

ஒலிம்பிக் கப்பல்

1911-ம் ஆண்டு முதல் பேராபத்தை எதிர்கொண்டார் வயலெட். இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் (Southampton) துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஒலிம்பிக் கப்பல், இங்கிலாந்தின் போர்க்கப்பலான ஹெச்.எம்.எஸ் ஹாக் (HMS Hawke) மீது எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் மோதியது. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு கப்பல்களுக்கும் பலத்த சேதம் என்றாலும்கூட, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இரு கப்பல்களும் கடலில் மூழ்கவும் இல்லை. இன்னொரு அதிசயம், இரண்டு கப்பல்களுமே கரைக்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டன. ஒலிம்பிக் அற்புதமான பயணிகளின் கப்பல்தான். ஆனால், அன்றைக்கு அதில் பயணம் செய்தவர்கள் எல்லோருமே அரண்டுபோனார்கள். எப்போது கரைக்குத் திரும்புவோம் என்கிற பீதியோடு உறைந்துபோயிருந்தார்கள். ஆனால், வயலெட் துளிக்கூட அச்சம்கொள்ளவில்லை. வேறு யாராக இருந்தாலும், அன்றைக்கே கப்பல் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போயிருப்பார்கள். வயலெட், எதுவுமே நடக்காததுபோலத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தார். 

வயலெட், தன் 24-வது வயதில் `எதனாலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்’ என்று பெயர் பெற்றிருந்த `டைட்டானிக்’-ல் பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்தார். கப்பல் கிளம்பிய நான்காவது நாள், வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்து. அந்த விபத்து நடந்த இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் வயலெட். அவசரமாக எழுப்பப்பட்டார். மேல்தளத்தில் இருந்து உயிர்காக்கும் படகுகளில் பெண்களும் குழந்தைகளும் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெண்களை ஒருங்கிணைக்கும் வேலை வயலெட்டுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வயலெட்டுக்கும் ஒரு படகில் இடம் கிடைத்தது. படகு கப்பலிலிருந்து கீழே இறக்கப்படும் சமயத்தில், ஓர் அதிகாரி வயலெடின் மடியில் ஒரு குழந்தையைக் கிடத்தினார். `இந்தக் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கோ’ என்றார். பனிப்பாறையில் மோதிய இரண்டே மணி நேரத்தில் முழு டைட்டானிக்கும் கடலுக்குள் மூழ்கிவிட்டது என்கிறது வரலாறு. 

டைட்டானிக் கப்பல்

அடுத்த நாள் காலை, டைட்டானிக் விபத்தில் உயிர்பிழைத்தவர்களைக் காப்பாற்றியது கார்பாத்தியா (Carpathia) என்ற கப்பல். அதில் ஏறிய சில நிமிடங்களுக்குள் ஒரு பெண், வயலெட்டைத் தேடி ஓடி வந்தார். அவர் மடியிலிருந்த குழந்தையை எடுத்து, வாரி அணைத்துக்கொண்டார். `என் கண்ணு... என் செல்லம்’ என்று கொஞ்சியபடி குழந்தையோடு நகர்ந்தார். `அந்தப் பெண்மணிதான் குழந்தையின் தாய் என்பது பார்த்ததுமே புரிந்தது. ஆனால், அவர் எனக்கு ஒரு நன்றியோ... ஏன்... என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை’ என்று குறிப்பிடுகிறார் வயலெட். 

பிரிட்டானிக்

டைட்டானிக்கில் வயலெட்டுக்கு நடந்தது பேராபத்துகள். ஆனாலும், தன் பணிப்பெண் வேலையை விட அவர் தயாராக இல்லை. கடலும் கப்பலும் அவரை இரு கரம் நீட்டி, `வா... வா...’ என அழைத்துக்கொண்டிருந்தன. முதல் உலகப் போரின்போது இங்கிலாந்தின் செஞ்சிலுவை சங்கத்தில் நர்ஸாகப் பணியாற்றினார் வயலெட். `ஹாஸ்பிட்டல் ஷிப்’ என்று அழைக்கப்பட்ட பிரிட்டானிக் (Britannic) கப்பலில் வேலை செய்யவேண்டியிருந்தது. கப்பல் ஏஜியன் கடலில் (Aegean Sea) சென்றுகொண்டிருந்தது. அது, 1916, நவம்பர் 21. பயங்கரமான வெடிச் சத்தம். கப்பலில் இருந்தவர்கள் அலறினார்கள். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பதில் பலவிதமான ஊகங்கள் இருந்தனவே தவிர, கடைசிவரை உண்மை தெரியவில்லை. எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு ஏவுகணை வந்து மோதியது என்றார்கள். கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்றார்கள். எது எப்படியோ இந்த முறை வயலெட்டைக் காப்பாற்ற எந்த உயிர்காக்கும் படகும் வரவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வயலெட் கடலில் குதித்தார். 55 நிமிடங்களில் பிரிட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிப் போனது. 30 பேர் இறந்துபோனார்கள். 

கப்பல் பணிப்பெண்

கடலில் குதித்தபோது கப்பலின் அடித்தளத்திலிருந்த ஒரு கட்டையில் மோதிக்கொண்டதில், தலையில் பலமான அடி. எப்படியோ, எதையோ பிடித்துக்கொண்டு அடுத்த உதவி கிடைக்கும் வரை நீந்தித் தப்பித்தார் வயலெட். ஆனாலும் கப்பல் வேலையை அவர் விடவேயில்லை. 1920-ம் ஆண்டில் மறுபடியும் வேலைக்குத் திரும்பிவிட்டார். பின்னாளில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார் வயலெட்... ‘அன்னிக்கி என் தலையில பட்ட அடி என்னனு அப்போ தெரியலை. நாளாக ஆக, அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சுது. டாக்டர்கிட்ட போனேன். என்னென்னவோ சோதனைக்கு அப்புறம் `மண்டை ஓட்டுல பலமான அடிபட்டதாலதான் தலைவலி வருது’னு சொன்னாங்க...’ என்றார்.

 

மன உறுதிமிக்க பணிப்பெண்ணாகவும் நர்ஸாகவும் பணியாற்றிய வயலெட், கப்பலில் கழித்த வருடங்கள் 42.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது? #KnowScience

 

நிற்கா பூமியின் சுழற்சியால், பகலுக்கு அடுத்த நிறுத்தமாக இரவு தினமும் வந்தே தீரும். ஒரு நாளின் முடிவாகவும், மற்றொரு நாளின் தொடக்கமாகவும் இரண்டு பணிகளைச் செய்யும் இரவு, நமக்குக் காண்பதற்கரிய காட்சிகள் பலவற்றைக் காட்டுகிறது. விண்வெளியில் தோன்றும் இரவு நேர நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கவே பல நாள்கள் பலர் ஏழு மாடிகள் வரை ஏறிய கதைகள் எல்லாம் உண்டு. தலையைத் தூக்கி வானை ரசித்து விட்டு நம் பணிக்குத் திரும்பி விடுவோம். ஏதேனும் ஒரு சமயத்தில், என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வி நிச்சயம் எட்டிப் பார்த்திருக்கும். இந்த இரவு ஏன் இப்படி இருக்கிறது?

நட்சத்திர இரவு

 

Artist: Vincent van Gogh

பரந்து விரியும் பேரண்டத்தில் நம் சூரியனைப் போன்ற, சூரியனை விடப் பெரிய நட்சத்திரங்கள் கூட ஏராளம் உண்டு. ஒற்றைச் சூரியனால் நம் பூமியின் ஒரு பகுதியில் பகலாகவும், வானம் பளீர் வெளிச்சத்துடன் நீல நிறமாகவும் தெரிகின்றது. அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்? நமக்கு இரவு என்ற ஒன்று இருக்கவே கூடாது தானே? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான விடைகளைத் தருகிறது அறிவியல்.

பகல் எதனால் ஏற்படுகிறது?

முதலில் இரண்டாம் கேள்வியைப் பார்த்து விடுவோம். “இரவு இருக்கவே கூடாது தானே” என்பதை “பகல் ஏன் ஏற்படுகிறது” என்று எடுத்துக் கொள்வோம். சூரியனால் வெளிச்சம் ஏற்படுகிறது என்றாலும், பகலாகத் தெரியும் பூமியின் ஒரு பகுதியில், வானம் நீலம் நிறமாகத் தெரிய முக்கியக் காரணம், நம் வளிமண்டலம். இந்தக் காற்றுவெளி மண்டலத்தின் தன்மைதான் பகலை பூமியின் ஒரு பகுதி மக்களுக்குத் தருகிறது, வானை நீலமாகக் காட்டுகிறது. சூரியனின் ஒளி, பூமியின் மேல் படர்ந்துள்ள காற்றுவெளி மண்டலத்தைச் சந்திக்கும் போது ஒளிவிலகல் ஏற்பட்டு நீல நிறத்தை வானம் முழுவதும் அள்ளித் தெளிக்கிறது. ஒருவேளை நிலா அல்லது மற்ற கோள்களைப் போல நம் பூமிக்கும் வளிமண்டலம் இல்லை என்றால், இந்த ஒளிச்சிதறல் ஏற்படாது. வானமும் நீல நிறம் ஆகாது. சூரியன் இருந்தாலும் அது கறுப்பாகவே தெரியும்.

விண்வெளி

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?  

“கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்?” அடுத்த கேள்வியான இதற்குப் பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டை நாம் எட்டும் வரை, ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த பொதுவான கருத்து, நம் அண்டம் அளவில்லாதது. முடிவில்லாமல் நீள்கிறது. இது சாத்தியம் என்றால், வானத்தில் நாம் திரும்பும் இடமெல்லாம் நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும். அப்படி இருக்கும் என்றால் வானம் எவ்வளவு வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்? 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களின் இடையே தூசியினால் ஆன மேகங்கள் உலவுவதால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தை அவை உள்வாங்கிக் கொள்வதாகக் கருதினர். அதற்குப் பின்னர் வந்தவர்கள், அப்படி அந்த மேகங்கள் நட்சத்திர வெளிச்சத்தைத் தடுத்தால், அந்த நட்சத்திரங்களை விட இந்த மேகங்கள் அதிகம் ஒளிபெறும் என்றும், இதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு ஒரு சாத்தியமான பதில் என்னவென்றால், நம் அண்டம் விரிவடைந்து கொண்டே இருந்தாலும், அதற்கு எல்லைகள் உண்டு. அதாவது ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் முடிவுற்று வெறும் கரும்போர்வை மட்டுமே இருக்கும் என்று எடுத்துக் கொண்டால், இந்த எல்லைகள் கொண்ட பேரண்டத்தை நிரப்பும் அளவிற்கு நம்மிடம் நட்சத்திரங்கள் இல்லை. இதனால்தான் நாம் பார்க்கும் பல இடங்களில் நட்சத்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன. எல்லா இடத்திலும் ஒளி பரவாமல் இருட்டாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் ஒரு சாரர் நினைத்திருந்தனர். ஆனால், இந்தக் கோட்பாடு, விடை தெரியாத கேள்விக்கு ஏதோ ஒரு பதில் கூறுவோம் என்பது போல தான், ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

இது ஒளி நிகழ்த்தும் மாயாஜாலம்!

விண்வெளி

நவீன ஆராய்ச்சியின் படி இதற்கு ஓர் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு காலை நேரத்தில் ஒரு கல்லூரி அரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர் திடீரென உங்களை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார். அவர் உங்களை நோக்கி கை நீட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால்தானே நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் எனப் புரியும்? நீங்கள் அவர் திசையில் பார்த்தாலும், அவரின் செயலை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒளி தானே? அந்த ஒளியை உங்கள் ஆசிரியர் உள்வாங்கிப் பிரதிபலித்து, அந்தப் பிரதிபலித்த ஒளி உங்களை அடைந்தால் மட்டுமே அங்கே அவர் நின்று கொண்டிருப்பதே உங்களுக்குத் தெரியும்.

என்ன தான் ஒளி மிகவும் வேகமானது என்றாலும், அந்தப் பிரதிபலித்த ஒளி, ஆசிரியர் கையைத் தூக்கிய பிறகு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் உங்களை வந்தடையும். அந்தக் கால இடைவெளி ஒரு நொடியை, மில்லியன் கூறுகளாக வெட்டியபிறகு அதிலிருக்கும் ஒரு கூறு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் தூரம் அதிகமாக அதிகமாக, இந்தக் கால இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி நம்மை அடைய எவ்வளவு நேரம் ஆகும்? இதன்படி, நாம் இன்று பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளி எப்போதே அதிலிருந்து கிளம்பிய ஒளியாக இருக்கும். நாம் பார்க்கும் நட்சத்திரம் இல்லா வானில் கூட நட்சத்திரங்கள் இருக்கலாம், அதன் ஒளி நம்மை இன்னமும் வந்து அடையவில்லை என்பதே உண்மை.

இது மட்டுமன்றி, நம் பேரண்டம் உருவாகி 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. ஒரு சில நட்சத்திரங்கள் தங்கள் ஆயுட்காலம் முடிந்து ஒளியிழந்து போயிருக்கலாம். இதனால் கூட நமக்குப் பல நட்சத்திரங்கள் தெரியாமல் போகலாம். சற்று குழப்பம் ஏற்படுத்துகிறது என்று நினைத்தால், இதோ சில முக்கியக் குறிப்புகள்.

விண்வெளி

நம் பேரண்டத்தில் அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் இருந்தும் வானம் ஏன் இருட்டாக இருக்கின்றது?

பகுதி 1: இருக்கும் நட்சத்திரத்தை விட நம் அண்டம் பெரியது. பிரபஞ்சத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் அளவிற்கு இங்கே நட்சத்திரங்கள் இல்லை.

பகுதி 2: தொலை தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிட்ட ஒளி நம்மை அடைந்தால் மட்டுமே அப்படி ஒரு நட்சத்திரம் இருப்பதே நமக்குத் தெரிய வரும். அந்த ஒளி நம்மை வந்தடையும் கால அவகாசத்தைத் தீர்மானிப்பது நமக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இருக்கும் இடைவெளி தான்.

பகுதி 3: பல நட்சத்திரங்கள் தன் ஒளியை இழந்ததால், அது நம் கண்ணிற்கு தற்போது தெரியாமல் இருக்கலாம்.

 

 

இந்த அறிவியல் விவாதத்தைத் தத்துவ ரீதியாக முடிக்க வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். இருள் இருந்தால்தானே, நாம் ஒளியை ரசிக்க முடியும்? பேரண்டத்தின் இருட்டுதான் நம்மை நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வைக்கிறது. இருட்டிற்கு நன்றி!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.