Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அழகிய‌ மலர்களின் வரவேற்பு...

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12496256_998311860242000_743761843203903

 

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!

டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
முயலாமை மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.

வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

vikatan

  • தொடங்கியவர்

இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்!

 
 
arr_2706164f.jpg
 

இயற்கைப் பேரிடரால் துவண்டு கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பியது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி. ஏழு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.

உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்த‌ளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் வந்தபோதெல்லாம் குதூகலித்தனர்.

இசை உலகில் கால் பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை, பித்தர்களை வென்றெடுத்தவர். இரு ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். அத்தனையும் கடந்து தனக்கே உரிய ‘மிஸ்டர் கூல்' பாணியில் எளிமையாக, அமைதியாக மேடை ஏறினார் ரஹ்மான். அடுத்த நொடியே ஒட்டுமொத்த திடலும் அதிர்ந்தது. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டீ' என்ற பாடலை ரஹ்மானே பாடி மேடை ஏறினால் கேட்கவா வேண்டும்! ரஹ்மான் பெயரைக் கேட்டாலே சிலிர்ப்படைந்த இளைஞர்கள் இப்போது அவரை நேரில் கண்டதும் ஆர்ப்பரித்தனர்.

‘காதல் தேசம்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்தும் நட்பின் தேசிய கீதமாகக் கொண்டாடப்பட்டு வருவது ‘முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல். இதை ரஹ்மான் பாடியபோது தனக்காகவே பாடுவதாக ஒவ்வொருவரும் தோழமையில் திளைத்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களின் விளக்கை ஏற்றிவைத்து கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி ‘ஓ...ஒ...' என பாட்டின் கோரஸை ரஹ்மானோடு இணைந்து நட்பு பொங்கப் பாடினர்.

கார்த்திக்கின் 'ஏ சினாமிகா', ஹரிஹரனும் ஸ்வேதா மோகனும் இணைந்து மேடை ஏற்றிய ‘குறுக்கு சிறுத்தவளே', விஜய் பிரகாஷூம் ஸ்வேதா மோகனும் பாடிய ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...' போன்ற பாடல்கள் ஜனவரி மாத மாலைப் பனியாக இளைஞர்களின் காதலைச் சொட்டச்சொட்ட நனைய வைத்தன.

ரஹ்மானின் ஆஸ்தான ராப் இசைக் கலைஞரான பிளஸ்ஸேவும் குழுவினரும் ‘பேட்ட ராப்' முதல் 'காரா… ஆட்டக்காரா காத்திருக்கேன்' வரை பிரித்துக் கோர்த்துப் ஆடிப் பாடி அசத்தினர். ராப்பர்களில் ஒருவரான லேடி காஷ் என்னும் பெண் ராப் பாடகி கூடுதல் மெருகூட்டினார்.

அதிரவைக்கும் பாடல்களுக்கு அடுத்து ஒரு அமைதி.

நீண்ட வெள்ளை நிற இருக்கை ஒன்றில் பாடகர் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண் அமர்ந்திருந்தனர். நண்பர்களோடு அரட்டை அடிப்பதுபோல மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார் ரஹ்மான். ‘இப்போ நீங்க நாலு பேரும் உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் பத்திச் சொல்லணும்' என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்லியே ஆகணும்” எனக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இளைஞர்களைப் பார்த்து ‘எல்லோருக்கும் லவ் பிடிக்கும்தானே!' என அவர் கேட்டதும் ‘யெஸ்....' என காதலில் விழுந்தனர் அத்தனை பேரும். இப்படியாகத் தொடங்கியது ரஹ்மான் ரசிகர்களே மறந்துபோன உழவன் திரைப்பட ‘பெண் அல்ல பெண் அல்ல ஊதாப் பூ' பாடல். நான்கு பேரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க இன்னும் தனித்துவமாகவும் அருமையாகவும் இருந்தது.

‘நெஞ்சே எழு' பாடலை ரஹ்மானோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பாடகர்களும் ஒருங்கிணைந்து பாட நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியது. கூடுதல் சிறப்பாக, வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் ‘தள்ளிப் போகாதே' பாடல் வெளியிடப்பட்டது.

49வது பிறந்த நாளை ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கொண்டாடிய இசைப் புயலுக்கு அவரை இசைக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ரஹ்மானின் பிம்பம் மேடையிலிருந்தும் திரையிலிருந்தும் மறைந்த பின்பும் மாலை முதல் நள்ளிரவுவரை துடிப்புடன் இருந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘இனியொரு இனியொரு விதி செய்வோம். ஓ யூவா யூவா...யூ வா....' என ஒரே ஸ்ருதியில் லயித்து பாடிக்கொண்டே திடலைவிட்டு வெளியேறியபோது மெய்சிலிர்த்தது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்கவைக்கும் யானை, கடல், ரயில் போல ரஹ்மானும் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் இசையைக் கடந்து அவர் தன்னிடம் தக்கவைத்திருக்கும் நெகிழ்வுத் தன்மை எனலாம். மேற்கத்திய இசை பாணியின் துள்ளலையும் இந்தியப் பாரம்பரிய இசை வடிவங்களின் ஆன்மாவையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் தந்துகொண்டிருப்பவர் அவர்.

tamil.thehindu
  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholder

அஞ்சலி

  • தொடங்கியவர்

 

நமது மூளையில் எவ்வளவு பதிவு செய்ய முடியும்?

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 25

 

651idiamin---varalaru.jpg1498 : போர்த்­துக்­கீச நாடுகாண் பயணி, வாஸ்கோட காமா தென்­கி­ழக்கு ஆபி­ரிக்­காவை அடைந்தார்.

 

1755 : மொஸ்கோ பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1881 : தோமஸ் அல்வா எடிசன், அலெக்­சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரி­யண்டல் டெலிபோன் கம்­பெனி என்ற நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தனர்.

 

1882 : வேல்ஸ் இள­வ­ர­சர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் இலங்­கைக்கு வந்­தனர்.

 

1890 : நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முடித்துக் கொண்டார்.

 

1917 : டேனிஷ் மேற்­கிந்­தியத் தீவுகள் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு 25 மில்­லி­யன்­க­ளுக்கு விற்­கப்­பட்­டது.

 

1918 :  போல்­ஷெவிக் ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக யுக்ரைன் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. 

 

1919 : நாடு­களின் அணி (லீக் ஒவ் நேசன்) நிறு­வப்­பட்­டது.

 

1924 : முத­லா­வது குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்­டுக்கள் பிரான்ஸில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்­ப­மா­னது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: தாய்­லாந்து ஐக்­கிய அமெ­ரிக்கா மீதும் ஐக்­கிய இராச்­சியம் மீதும் போரை அறி­வித்­தது.

 

1949 : சீனக் கம்­யூ­னிஸ்­ட்­களின் படைகள் பீக்­கிங்­கினுள் நுழைந்­தன.

 

1949 : இஸ்­ரேலில் இடம்­பெற்ற முத­லா­வது பொதுத் தேர்­தலில் டேவிட் பென்-­கூ­ரியன் பிர­த­ம­ரானார்.

 

1955 : ஜேர்­ம­னி­யு­ட­னான போர் நிலையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தாக அறிவித்து சோவியத் ஒன்­றியம் அதி­கா­ர­பூர்­வ­மாக போரை நிறுத்­தி­யது.

 

1971 : உகண்­டாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மில்ட்டன் ஓபோட் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு இடி அமீன் ஜனா­தி­ப­தி­யானார்.

 

1971 : இந்­தி­யாவின் 18 ஆவது மாநி­ல­மாக இமா­சலப் பிர­தேசம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

 

1981 : மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங்­கிற்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இது பின்னர் ஆயுள் தண்­ட­னை­யாகக் குறைக்­கப்­பட்­டது.

 

1986 : தேசிய எதிர்ப்பு இயக்­கத்­தி­னரால் உகண்டா அரசு கவிழ்க்­கப்­பட்­டது.

 

1994 : நாசாவின் கிள­மென்டைன் விண்­கலம் சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது.

 

1995 : யோசப் வாஸ் அடி­களார் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் முத்­திப்­பேறு பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­பட்டார்.

 

1998 : கண்­டியின் தலதா மாளி­கையில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் 8 பேர் கொல்­லப்­பட்டு 25 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

 

1999 : கொலம்­பி­யாவில் ஏற்­பட்ட 6.0 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்­தினால் 1000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

2004 : ஒப்­போர்ச்­சு­னிட்டி விண்­ணு­ளவி  செவ்வாய் கிர­கத்தின் தரையில் இறங்­கி­யது.

 

2005 : இந்­தி­யாவின் மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் மந்­தி­ரா­தேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சன­நெ­ரி­சலில் சிக்கி பெண்கள், குழந்­தைகள் உட்­பட 258 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2006 : சூரியக் குடும்­பத்­திற்கு வெளியே பால் வழியின் நடு­விற்குக் கிட்­ட­வாக பூமியில் இருந்து 21,500 : 3,300 ஒளி­யாண்­டுகள் தூரத்தில்  OGLE-2005-BLG-390Lb  என்ற கோள் கண்டுபிடிக்­கப்­பட்­டது.

 

2009 : முல்­லைத்­தீவில் ராம­நா­த­புரம் பகு­தியில் உள்ள கல்­மடு குளத்தின் அணை விடு­தலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

 

2010 : எத்தியோப்பிய விமானமொன்று மத்திய தரைக்கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 90 பேரும் உயிரிழந்தனர்.

 

2013 : வெனிசூலாவில் சிறைச் சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத் தினால் 50 பேர் பலியானதுடன் மேலும் 120 பேர் காயமடைந்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=651#sthash.CU0VQpPQ.dpuf
  • தொடங்கியவர்

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

 

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்..

personal-development%20%281%29.jpg

அதே கதிரவன் காலையில் உதிக்கும் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள். நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நீங்கள்தான் ரசனை அற்றவராக இருக்கிறீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..


2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!

547301-b1566610-773e-11e3-98ae-182602204
 

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

 3.அக்கறையை  வளர்த்துக்கொள்ளுங்கள்!

SocialResponsibility_Hero.jpg


 நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

4. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!

Many-people-chatting-about-everything-le



 “வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

 

 5. தடை..அதை உடை.!

personal-development.jpg



 எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.

 6.நினைத்தை முடிக்கவும்!

personalised-learning.jpg


 நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.

 7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

1423208875_personal-development-plan.jpg



 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.


8.அடிக்கடி சிரியுங்கள்!

 

3d-smiley-faces.jpg



அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..

 9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!

 

forgive_vancouversun.jpg



கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !

10.நன்றி சொல்வது, நன்று!

 

Personal-Development-image-1.jpg


 உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.


11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

pinky-love.jpeg


வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.

 12.கொள்கையில் உறுதி வேண்டும்!

on-target.jpg


நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.

13.தியானம் நல்லது!

yoga.jpg


 ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

 14.செய்வதை திருந்தச்செய் !

how-do-i-choose-and-decide-on-the-right-
 

நீங்கள் எந்த வேலை  வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

 

 15. நம்பிக்கை..அதானே எல்லாம்!

 

believe-pic.jpg
 

வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை.  இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !

 16. ஆதலால் அதிகம் காதல் செய்!

love.jpg



 நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !

 17.முயற்சியை கைவிடாதீர்கள்!

37039.jpg


 உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.

18.உங்களது சிறப்பைக்கொடுங்கள்!

Personal-Development%20%283%29.jpg



 ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

 


 19.நமக்கு நாமே நல்லது!

Personal-Development%20%282%29.jpg



 உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.

 



 20. நன்மையே செய்வோம்!

Achievement.jpg



 எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் !

ஹார்வர்டு பல்கலைக்கழகம் மகிழ்ச்சியாக இருக்க, சொல்லிக்கொடுக்கும் வழிகள்தான் இவை. இதை இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல. எல்லா ஆண்டும் பின்பற்றுவதன் மூலம், மகிழ்ச்சி அதிகரிக்கும்தானே?

vikatan

  • தொடங்கியவர்

12493772_975687625813265_147038891869164

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி நட்சத்திரம் லென்டில் சிமன்சின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
சொல்வனம்

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை

சனிக்கிழமை மாலையே
துவங்கிவிடுகிறது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம்
பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு

ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்
ஒன்றிவிடுகின்றார்
ஓய்வு பெற்ற தாத்தா

தொலைக்காட்சியின்
ஆட்டம் பாட்டங்களில்
ஆரவாரிக்கின்றனர்
அக்காவும் தங்கையும்

சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை
தூக்கத்தில் கிடக்கின்றனர்
அண்ணன்கள்

அசைவ உணவுத் தயாரிப்புக்காக
மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர்
அப்பாவும் சித்தப்பாக்களும்
மெலிதான டாஸ்மாக் வாசனையுடன்

அவரவர் ஞாயிற்றுக்கிழமை
அவரவர் விருப்பம்போல

ஆனால்
அன்றாடம்போலவே
அடுப்படியில் தொடங்கி
அங்கேயே முடிகிறது
அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

vikatan

  • தொடங்கியவர்

பித்துக்குளி முருகதாஸ்

 
பித்துக்குளி முருகதாஸ் | கோப்புப் படம்.
பித்துக்குளி முருகதாஸ் | கோப்புப் படம்.

முருக பக்தர், பாடகர்

சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான பித்துக்குளி முருகதாஸ் (Pithukuli Murugadas) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கோவையில் (1920) பிறந்தவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டரை வயதில் தாயையும், 7 வயதில் தந்தையையும் இழந்தார். இவருக்கு பல பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார் பாட்டி. கோவை பிக் பஜார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் வீராசாமி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

l பழநியில் உள்ள சித்தி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஒருமுறை, பழநி மலை வெட்டாற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பஞ்சவர்ண குகைக்கு சென்றார். அங்கு அடிக்கடி சென்று, தியானம் செய்யத் தொடங்கினார். அங்குள்ள துறவிகள் முழங்கும் சரவணபவ மந்திரம் உபதேச மந்திரமாக இவரது மனதில் பதிந்தது.

l பிரம்மானந்த பரதேசியாரிடம் நாதயோகத்தை அக்கறையுடன் கற்றார். அவர்தான் இவருக்கு ‘பித்துக்குளி’ என்ற பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது. தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.

l சிறந்த மாணவராக இருந்தாலும், ஆன்மிகம், விடுதலைப் போராட்டம் என்று ஈடுபட்டதால், படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 13 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். மெக்கானிக், சமையல் வேலை, ஹோட்டல் சர்வர் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பழநியில் சித்தப்பா நடத்திய லாட்ஜில் சிறிது காலம் வேலை செய்தார்.

l உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கைது செய்யப்பட்டு, சிறையில் பல சித்ரவதை களை அனுபவித்தார். ஏற்கெனவே விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவரது இடது கண்ணில் போலீஸார் தாக்கியதால், பார்வை பறி போனது. அதிலிருந்து கருப்புக் கண்ணாடி அணியத் தொடங்கினார்.

l சுயமாக முயன்று ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றினார். இவருக்கு உபதேசம் அளித்து, ‘முருகதாஸ்’ என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பரமானந்த ஸ்வாமிகள் தனக்கு வைத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, ‘பித்துக்குளி முருகதாஸ்’ ஆனார்.

l நாடு முழுவதும் 1940-களில் பாத யாத்திரை மேற்கொண்டார். கங்கை நதிக்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து பாடுவார். மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர் உள்ளிட்ட ஏராளமான புண்ணியத் தீர்த்தங்களை தரிசித்தார்.

l பின்னர் தமிழகம் திரும்பியவர், வெள்ளியங்கிரி மலைக் காட்டில் பல மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

l திருப்புகழ் பாராயணத்துக்கு பெயர்பெற்றவர். திரைப்படங்களிலும் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

l தனது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த நவம்பர் 17-ம் தேதி 95-வது வயதில் மறைந்தார். தீவிர முருக பக்தரான இவர், தைப்பூசத்தில் பிறந்து, கந்த சஷ்டியன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
 

10 செகண்ட் கதைகள் - அறியாமை

''அம்மா, இதுகூடவா தெரியலை'' மிதுன், தன் அம்மாவுக்குப் புத்தம்புது ஆப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது காலிங் பெல் சத்தம். வாசலில், கிராமத்தில் இருந்து அவனது அத்தையும் மாமாவும். கதவைத் திறந்தவன் கத்தினான், ''அம்மா... யாரோ வந்திருக்காங்க பாரு. எனக்குத் தெரியலை!''

விகடன்

  • தொடங்கியவர்

308B004000000578-0-image-a-1_14536751166

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பேர்க் (Mark Zuckerberg) தனது மகளின் முதலாவது நீச்சல் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிறந்து இரண்டே மாதமாகியுள்ள மைக்சிமா மார்க் ஜூக்கர்பேர்க் (Maxima Chan Zuckerberg) நீச்சல் பயிலும் இந்த புகைப்படமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

virakesari.lk

  • தொடங்கியவர்

அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி.: கோழிக்கழிவை உணவாக கொடுத்ததாக இளம்பெண் அதிர்ச்சி புகார்!

 

லண்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வளர்ப்புக் கோழிக்கறி விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம் கே.எப்.சி., அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கமாகவே உள்ளது. தற்போது லண்டன் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை விற்பனை மையம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவருக்கு பொறித்த, ருசியான கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை பரிமாறி,  கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது உலகத் தரம் வாய்ந்தது என பெயர் பெற்ற கே.எப்.சி. நிறுவனம்.        

  K%20F%20C%20one%20new.jpg

சில மாதங்களுக்கு முன்னர்,  கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில், கோழிக்கு பதிலாக எலியை பொறித்துக் கொடுத்ததாக கிளம்பிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தற்போது கோழிக்கு பதிலாக கோழிக் கழிவுகள் பரிமாறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ்  என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு கடந்த 13-ம் தேதி சாப்பிடச் சென்றுள்ளார். 6 பவுண்ட் செலுத்தி,  ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சியையும், பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத் தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கறிக்குப் பதிலாக தூக்கி குப்பையில் வீசப்படும், கோழியின்  மூளை, இரைப்பை போன்ற  கழிவுகள்தான் இருந்துள்ளது. அதுவும் வேகாத நிலையில்.

இது தொடர்பாக ஹாரிஸ் அளித்த பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே மிகக் கேவலமாக இருந்தது. நான் அதைத்  தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல்  இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிடவே  மாட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம், இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது.

ingland%20one%20kfc.jpg

“நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் விடுவதால் சில எதிர்பாராத தருணங்களில்  இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் நினைவு படுத்தியுள்ளோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.

இது போல தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கே.எப்.சி. மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது என்று  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

vikatan.com

  • தொடங்கியவர்

நிவின் பாலி என்ற ஒரு வார்த்தைக்கு மலையாளம் மற்றும் தமிழ்ப் பெண்கள் மத்தியில் இருக்கும் வசீகரம் இப்போது கொஞ்சம் அதிகம் தான். ஆனால், இந்த வசீகரத்தை சாதாரணமாகப்பெற்று விடவில்லை நிவின் பாலி.

 

"பூக்கள் பனி நீர் பூக்கள்" பாடல்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்   நவீன்.... இப்போதுதான் கேட்கிறேன்....!!

  • தொடங்கியவர்

12647194_1029385280453819_19681277089954

placeholder

placeholder

placeholder

placeholder

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் கலக்கல்

சென்னை அணி படங்கள்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சன்னி லியோனியும் இந்திய ஆண்களும்!

 
சன்னி லியோனி | படம்: சந்தீப் சக்சேனா
சன்னி லியோனி | படம்: சந்தீப் சக்சேனா

இதை நீங்கள் படிப்பதற்கு முன்னால் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கட்டுரைக்கும், சன்னி லியோனி நடித்த படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரின் சமீபத்திய பாலிவுட் படத்துக்காகப் புரமோஷன் கொடுக்க வந்தவரை தேசிய செய்தி ஊடகங்கள் எப்படி நடத்தின என்பது குறித்த சிந்தனையே இந்தக் கட்டுரைக்கான மூல காரணம்.

பஞ்சாபி பெண் கரண்ஜித் கவுராகப் பிறந்து, கனடாவில் வளர்ந்து, போர்ன் ஸ்டாராகி இப்போது பாலிவுட் ஸ்டாராக இருக்கிறார் சன்னி லியோன். கடந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராக, பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார். போர்ன் ஸ்டாராக இருந்து சினிமா ஸ்டாராக மாறியவருக்கு எங்கிருந்து இத்தனை செல்வாக்கு வந்தது?

வெள்ளை இன மக்களுக்கு இடையே, கனடாவில் தனித்து வளர்ந்த சன்னி லியோனி இல்லை கரண்ஜித் கவுர், தன் டீனேஜ் பருவத்தில்அழகற்ற சிறுமியாகவே தன்னை உணர்ந்திருக்கிறார். மிகச்சில நண்பர்களுடன் தன் பள்ளிப்படிப்பை முடித்தவர் முன்னால் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று படிப்பு, மற்றொன்று மாடலிங். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், தன் சொந்த விருப்பத்தில் பெண்ட் ஹவுஸ் இதழில் மாடலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரையில், கலாச்சாரம் என்பது கற்பு என்ற விஷயத்தை மட்டுமே கொண்டிருப்பதில்லை. படித்த படிப்பை, செய்யும் தொழிலை, சம்பாதிக்கும் விதத்தை வைத்து, அவர்கள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மருத்துவர் தொழிலானாலும், பாலியல் தொழிலானாலும், செய்யும் தொழில்தான் அவர்களுக்குப் பிரதானம். அத்தகைய இடத்தில் வளர்ந்தவர் சன்னி லியோனி. போர்ன் ஸ்டாராகும் முன் பேக்கரியிலும், வணிக நிறுவனத்திலும் பணி புரிந்திருக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிலும் ஓர் அரசாங்கம் இருக்கிறது. ஒவ்வோர் அரசிலும், ஊடகத்துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசின் ஊடகத்துறைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லா நாட்டு ஊடகங்களும் ஒரே மாதிரியான இறையாண்மையைப் பின்பற்றுகின்றனவா?

கடந்த ஆண்டு நடந்த பாரீஸ் தாக்குதல், அதற்கு முன்னால் நடந்த கோர தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாட்டு ஊடகங்களின் பின்வினை எப்படி இருக்கிறது? நமக்குக் கிடைக்கும் எந்தவொரு செய்தியிலும், வெளிநாட்டு மக்களின் இறப்பையோ, ரத்தத்தையோ பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் எப்படி இருக்கின்றன?

இந்திய ஊடகத்துறை, சினிமாத் துறையைப் போல இருக்கவே ஆசைப்படுகிறது. மிக முக்கியமாக காட்சி ஊடகங்கள். அவற்றுக்கு ரத்தம் வேண்டும், சண்டை வேண்டும், உணர்ச்சிகள் தெறிக்க வேண்டும். விபத்துக்களின் கோரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்பாவிகளின் உறவினர்கள் ஓலக் குரல்கள் ஒலிக்க வேண்டும். இதே மனநிலைதான் சன்னி லியோனியின் சமீபத்திய நேர்காணலிலும் நிகழ்ந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னால், பிரபல இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார் சன்னி லியோனி. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?

உங்களுடைய கடந்த காலத்தை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

உங்கள் மேல் வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரபல கதாநாயகர்கள் உங்களுடன் நடிக்க மறுக்கிறார்களே?

உங்களால் எத்தனை பேர் போர்னோ ஸ்டார் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள்?

உங்களை இந்தியாவின் அபாயமாகப் பார்ப்பது குறித்து?

சமூக ஊடகங்களில் பெரும்பாலான மனைவிகள் உங்களை அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்களே, அவர்களின் கணவர்களைக் கவர்ந்து சென்று விடுவீர்கள் போன்ற அவர்களின் பயம் குறித்து?

இவை அனைத்துக்கும் கோபப்படாமல், சிரித்த முகத்துடன் எல்லாவற்றுக்கும் பதிலளித்தார் சன்னி லியோன். எல்லாவற்றுக்கும் உச்சமாக, "உங்களுடன் இப்போது பேசிக் கொண்டிருப்பதால், நான் கறைபடிந்தவன் ஆகிவிடுவேனோ என்று யோசிக்கிறேன்!" என்கிறார். நிதானம் காத்த சன்னி லியோனி, "நீங்கள் விரும்பினால், நான் இந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறேன்" என்கிறார்.

நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்? கடந்த காலத்தில் அவர் போர்ன் ஸ்டார் என்பதை அறிந்தே, நேர்காணலுக்கு அழைத்துவிட்டு, அத்தகைய கேள்விகளைக் கேட்கவேண்டுமா?

சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஊடகவியலாளர், சராசரி இந்திய ஆணின் மனநிலையோடும், விகாரமான உடலசைவுகளோடும் பேட்டி எடுக்கிறார். எதிராளியைப் பேசவே விடாமல், கேள்விகளைத் தொடர்ந்து திணித்துக்கொண்டே இருக்கிறார். பேட்டி எடுக்க வேண்டும் என்பதைவிட, கடந்த காலத்தை அறிய வேண்டும் என்ற ஆவலில் குறுக்கு விசாரணைகளை நடத்துவது போலத் தெரிகிறது. நேர்காணலுக்கு அழைக்கும் சினிமா நடிக, நடிகைகள், அரசியல்வாதிகள் அனைவரிடமும் சன்னி லியோனிடம் கேட்ட கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஒரே ஆறுதல், அந்தப் பேட்டி எடுக்கப்பட்ட அதே நாளில், மற்றொரு காட்சி ஊடகத்திலும், சன்னி லியோனி நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறார். முந்தையதற்கு முற்றிலும் நேர்மாறாக, ஊடக தர்மங்களுக்கு உட்பட்டுத் தன் கேள்விகளைக் கேட்கிறார் ஊடகவியலாளர். சன்னி லியோனின் குழந்தைப் பருவத்தைப் பற்றி விசாரிக்கிறார். முக்கியமாக சன்னி லியோனைத் தடையின்றிப் பேச அனுமதிக்கிறார்.

போர்னுக்கு ஆதரவாக, எதிர்ப்பாகவோ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. கடந்த காலத்தை முழுமையாக உணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டு வாழும் பெண்ணை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது. மொத்தத்தில், சன்னி லியோனியா என்று சிறிய அதிர்வுடன் கடந்து செல்லும் மக்களின் பார்வை, இந்த நேர்காணல்கள் மூலம் நிச்சயம் மாறும். அது போதும்!

tamil.thehindu.

  • தொடங்கியவர்

 

இது எப்படி

  • தொடங்கியவர்
உலக மகா சீரியல்கள்!
 
 

 

லக சினிமாக்களுக்கு இணையானவை உலக சீரியல்கள். பிரமாண்ட பட்ஜெட், புகழ்பெற்ற நடிகர்கள், மிரளவைக்கும் கதைக்களம்... என அவர்கள் ரேஞ்சே வேறு. ஹாலிவுட் நடிகர்கள், மேடை நாடகங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் விட்டுவைப்பது இல்லை. பல டி.வி சீரியல்கள், சினிமாக்களைவிடவும் புகழ்பெற்றவை. இப்போது கலக்கிவரும் டாப் சீரியல்கள் பற்றிய ஒரு கலர்ஃபுல் கலெக்‌ஷன்...

p24a.jpg

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)

`GoT' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்', ஒரு கலக்கல் கின்னஸ் ரிக்கார்டு படைத்திருக்கிறது. அதிகப் பேரால் சட்டத்துக்குப் புறம்பாக டெளன்லோடு செய்யப்பட்ட சீரியல் இது. இருப்பினும் இதன் டி.ஆர்.பி இன்னும் தாறுமாறு. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை வாரத்துக்கு ஒரு எபிசோடு என 10 எபிசோடுகள் ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

p24b.jpg

`வெஸ்ட்டரோஸ்' என்கிற ஏழு நிலப் பரப்புகளை ஆள, பல்வேறு குழு மனிதர்களுக்கும், பனியில் புதைந்து இருக்கும் `வொயிட் வாக்கர்ஸ்' எனப்படும் ஜீவராசிகளுக்கும் நடக்கும் யுத்தம்தான் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதே வெஸ்ட்டரோஸை அழிக்க டிராகன்களின் துணையோடு தனியாகப் போராடுகிறாள் டனேரியஸ் டார்கேரியன். இந்த சீரியலின் ஹைலைட்டே, யாருமே நல்லவர் கிடையாது என்பதுதான். எந்த நேரமும் யார் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதால் நகம் கடித்தபடியேதான் ரசிக்கிறார்கள்.

ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய `எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்' நாவல்தான் மூலம். 2011-ம் ஆண்டு வரை மார்ட்டின் எழுதிய ஐந்து பாக புத்தகங்களே பணமழையில் நனைக்க, ஹெச்.பி.ஓ தொடரால் அடித்தது சர்ப்ரைஸ் ஜாக்பாட். புத்தகம், தொலைக் காட்சித் தொடர், கேம்ஸ், பொம்மைகள் என, தொட்டதெல்லாம் மிடாஸ் டச். பிரைம் டைம் எம்மி விருதுகளை இதுவரை 26 முறை வென்றிருக்கும் இந்த நாடகத்தின் ஆறாவது சீஸனுக்காக, ஏப்ரல் 2016-ம் ஆண்டை நோக்கி ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

 ஜெஸ்ஸிகா ஜோன்ஸ் (Jessica Jones)

டி.சி காமிக்ஸுக்குப் போட்டி உண்டு. அது மார்வெல் காமிக்ஸ். அதில் புகழ்பெற்ற கேரக்டர்களான டேர்டெவில், ஜெஸ்ஸிகா ஜோன்ஸ், ல்யூக் கேஜ் ஆகியவற்றை வைத்து தனித்தனி தொடர்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது `நெட் ஃபிலிக்ஸ்’ நிறுவனம். இதில் அதிக லைக்ஸ் வாங்கிய கேரக்டர்தான் `ஜெஸ்ஸிகா ஜோன்ஸ்’. சூப்பர் ஹீரோவான ஜெஸ்ஸிகா ஜோன்ஸ், தனியாகப் பிரிந்து உளவு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவர் சந்திக்கும் சம்பவங்கள்தான் தொடரின் கதை.

p24c.jpg

முதல் சீஸனின் 13 எபிசோடுகளையும் கடந்த நவம்பர் 20-ம் தேதி வெளியிட்டது நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம். ஒரே நாளில் வெளியிடுவதால் ரசிகர்கள் அடுத்த எபிசோடுக்காகக் காத்திருக்கத் தேவை இல்லை என்பது நிறுவனத்தின் எண்ணம். 2016-ம் ஆண்டு பல மார்வெல் தொடர்களை வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டு இருப்பதால், மார்வெல் ரசிகர்களுக்கு ஏக குஷி.

ஃபார்கோ (Fargo)

p24d.jpg

1996-ம் ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாட் ஹிட் படம் `ஃபார்கோ'. அதைத் தழுவி அதே பெயரில் சீரியல் எடுத்திருக்கிறார்கள். க்ரைம், த்ரில்லர், காமெடி என ஒரு காக்டெயிலாக வரும் `ஃபார்கோ', முதல் எபிசோடில் இருந்தே ரசிகர்களைக் குஷியாக்கிவருகிறது. `ஃபார்கோ' படத்தை எழுதி, இயக்கிய கோயன் சகோதரர்கள் இதை இணைந்து தயாரிக்க, நோ ஹாலி இதற்கு என எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் கதாபாத்திரங்களை உருவாக்கி யுள்ளார். முதல் சீஸன் இரண்டு `கோல்டன் குளோப் விருது'களையும், மூன்று `எம்மி விருது'களையும் அள்ளியது. இப்போது இரண்டாவது சீஸனிலும் பல விருதுகளுக்குப் போட்டிபோடுகிறது. `ஃபார்கோ', ரசிகர்களை ஈர்க்கக் காரணம் தொடரின் நடிகர்கள்தான். ஹாபிட் ஹீரோ மார்டின் ஃப்ரீமேன், ஸ்பைடர் மேன் படங்களில் நடித்த கிறிஸ்டன் டன்ஸ்ட் என பல சினிமா பிரபலங்கள் `ஃபார்கோ'வில் கலக்கிவருகிறார்கள்.

மிஸ்டர் ரோபோ (Mr.Robot)

அமெரிக்க டி.வி சீரியல்களில் 2015-ம் ஆண்டின் மெகா ஹிட் `மிஸ்டர் ரோபோ'தான்.  நியூயார்க் நகரத்தில் இருக்கும் `ஆல் சேஃப்’ என்கிற பாதுகாப்பு நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு
(Cyber security)ப் பிரிவில் வேலைபார்க்கிறான் எலியட் ஆல்டர்சன். இணையத்தில் பல பிரபலங்களின் கணக்குகளை ஹேக்செய்யும் வேலைதான் எலியட்டுக்கு. மிஸ்டர்.ரோபோ, அங்கு இருக்கும்  இ-கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கணக்கை ஹேக்செய்து மக்களது கடன்களை அழிக்க நினைக்கிறான். அதற்காக எலியட்டை வேலைக்கு எடுக்கிறான். ட்வீட் பாணியில் சுருங்கச் சொன்னால், அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளைப் பழிவாங்கும் ராபின்ஹுட் கதை.

p24e.jpg

எலியட்டாக ரமி மாலெக்கும், மிஸ்டர் ரோபோவாக கிறிஸ்டியன் ஸ்லேட்டரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருக் கிறார்கள். சமகால விஷயங்களை ஸ்கிரீன் ப்ளேயில் சேர்ப்பதுதான் சுவாரஸ்யத் துக்குக் காரணம் என்கிறார்கள் மிஸ்டர்.ரோபோ ஃபேன்ஸ். இந்த ஆண்டின் `கோல்டன் குளோப் விருது'களில் சிறந்த தொடர், சிறந்த துணை நடிகர் (கிறிஸ்டியன் ஸ்லேட்டர்) என விருதுகளை அள்ளியது `மிஸ்டர் ரோபோ’.

ட்ரூ டிடெக்டிவ் (True Detective)

p24f.jpg

2014-ம் ஆண்டு `ட்ரூ டிடெக்டிவ்'-ன் முதல் சீஸன் ஹெச்.பி.ஓ-வில் வெளியானது. மரண ஹிட். முதல் சீஸனின் கதாநாயகன் `இன்ட்டர்ஸ்டெல்லர்' பட ஹீரோ மாத்யூ மெக்கன்னே, அடுத்த சீஸனுக்கு `டோட்டல் ரீகால்' புகழ் காலின் ஃபாரெல். அமெரிக்க நாவல் ஆசிரியரான நிக் பிசோலட்டோதான் இந்தத் தொடரின் அனைத்து எபிசோடுகளையும் எழுதியவர். ஒவ்வொரு சீஸனுக்கும் புது கதாபாத்திரங்கள், புது வில்லன், புதுக்களம் என நிக் அடிப்பது எல்லாம் சிக்ஸர்தான். முதல் சீஸனில் கொலையாளியை வேட்டையாடுவது, இரண்டாவது சீஸன் ஊழலுக்காக நடக்கும் அரசியல் கொலைகள் என வெரைட்டி படையல்.ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 20 லட்சம் பேர் பார்க்கிறார்கள். `வாட் நெக்ஸ்ட்?’ என யூகிக்க முடியாத  திரைக்கதைதான் இதன் ட்ரம்ப் கார்டு. சீரியல் என்பதால், நீட்டி முழக்குவது எல்லாம் கிடையாது. ஒரு சீன்கூட தேவை இல்லாமல் வைக்கப்படுவது இல்லை.  மூன்றாவது சீஸனுக்கு ஹேஷ்டேக் போட்டு, ஆரவாரமாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

 தி ஃப்ளாஷ் (The Flash )

தெறி ஃபேமஸ் டி.சி காமிக்ஸின் முக்கிய கேரக்டர் பேரி ஆலன். அதை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்தான் `தி ஃப்ளாஷ்’. சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் காவல் துறை அலுவலகத்தில் தடயவியல் நிபுணராகப் பணிபுரிகிறான் பேரி. ஸ்டார் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு கோளாறால், சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். பேரியும் பாதிக்கப்பட, ஒன்பது மாதங்கள் கோமாவில் இருக்கிறான். அதில் இருந்து மீளும் பேரிக்கு, அதிவேகமாகப் பயணிக்கும் பவர் கிடைக்கிறது. அதைவைத்து எப்படி சென்ட்ரல் சிட்டியைக் காக்கிறான் என்பதுதான் கதை.

p24g.jpg

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது வில்லனை இறக்கி டி.ஆர்.பி-யை ஏற்றிக்கொள்வது இவர்கள் ஸ்டைல். 2014-ம் ஆண்டு வெளியான இந்த சீரியலின் 23 எபிசோடுகளுமே தெறி ஹிட்!
சி.டபுள்யூ (CW) சேனலில் 2012-ம் ஆண்டில் இருந்து வெளியாகும் `ஏரோ'வின் (Arrow) கிளைக்கதைதான் `தி ஃப்ளாஷ்'. `ஏரோ' கதை ஸ்டார்லிங் சிட்டியில் இருக்கும் தீயவர்களை அழிப்பது என்றால், `தி ஃப்ளாஷ்' சூப்பர் வில்லன்களை அழிக்கும் சூப்பர் ஹீரோ பற்றியது. இந்த இரண்டு சீரியல்களின் கேரக்டர்களோடு வேறு சிலரையும் சேர்த்து, `லெஜென்ட்ஸ் ஆஃப் டுமாரோ’ (Legends of Tomorrow) என்ற தொடரும் ஜனவரி 21-ம் தேதி முதல் வெளியாக இருப்பது, டி.சி காமிக்ஸ் ரசிகர்களை வைரல் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

p24h.jpg

ந்தியாவில் பிரமாண்ட சீரியல்கள் உருவாக்கும் முயற்சியில் பாலிவுட் ஸ்டார்கள்தான் முதலில் இறங்கினார்கள். அமிதாப் பச்சன் நடிப்பில், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் `யுத்' என்ற ஒரு சீரியல் சோனி சேனலில் ஒளிப்பரப்பானது. தென் இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் `பாட்ஷா’, `பாகுபலி’யையும் தொலைக்காட்சித் தொடராக எடுக்க இருக்கிறார்கள். படத்துக்காக உருவாக்கிய செட்களும் பொருட்களும் அப்படியே இருப்பதால், பட்ஜெட்டைக் குறைக்க உதவும். 

vikatan

  • தொடங்கியவர்

12631282_1095752340444006_91787070241025

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அதிதீவிர கிரிக்கெட் ரசிகர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23.1.2016 at 8:28 PM, நவீனன் said:

1 லட்ச ரூபாய்க்கு 'வாட்டர் ப்ரூஃப்' புடவை! - முதல் கஸ்டமர் ஆன மாநில முதல்வர்!

 

அரசியல், எலெக்சன், கட்சி - இதையெல்லாம் தாண்டி ‘பரபர’ மூடிலும் பளபளவென்று ஜாலியாக இருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா.

கட்சிப் பொதுக் குழுக்களில் கலந்து கொள்வதைவிட கடைத் திறப்பு போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் சித்தராமைய்யாவுக்கு. அண்மையில் ஒரு புடவைக் கடைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றவர், அந்தப் புடவைக் கடைக்கு முதல் கஸ்டமரும் ஆகியிருப்பதுதான் இப்போது கர்நாடக ஸ்பெஷல்.

karnataka_1.jpg

கர்நாடக மாநிலம் தவாங்கீர் என்னும் இடத்தில், ‘கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்’ எனும் புடவைக் கடையைத் திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் சித்தராமைய்யா.

ஷோரூமைத் திறந்துவைத்துவிட்டு, ‘கடையில் என்னப்பா ஸ்பெஷல்?’ என்று வழக்கம்போல் ஜாலி மூடில் விசாரித்திருக்கிறார்.

அப்போது ‘வாட்டர் ப்ரூஃப்’ என்னும் புடவை பற்றித் தகவலறிந்தவர், ‘‘உண்மையிலேயே இது நனையாதுல்ல?’’ என்றபடி, ஒரு லிட்டர் குடிநீரை புடவையில் ஊற்றினாராம். என்ன ஆச்சர்யம்!

பந்துபோல, புடவையில் தண்ணீர் உருண்டு விளையாடியது. ஒரு சொட்டு நீர்கூட புடவையில் இறங்காததைக் கண்டு வியந்தவர், ‘‘மழையில தைரியமா இதைப் போட்டுக்கிட்டுப் போகலாம். என் மனைவிக்கு இது ஒண்ணு பேக் பண்ணிடுங்க!’’ என்று, வரியோடு 1,09,385 ரூபாய் பில் செட்டில் செய்துவிட்டு, பார்சலோடு கிளம்பி விட்டார்.

முதல்வரின் இந்த பர்ச்சேஸுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த ‘வாட்டர் ப்ரூஃப்’ புடவைக்கு, இப்போது கர்நாடகாவில் செம டிமாண்டாம்!

vikatan

எனக்கு ஒரு மூண்டு சாறி வேணும். :cool:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஜனவரி - 26

 

652varalaru.jpg1340 : இங்­கி­லாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்ஸின் மன்­ன­னாக அறி­விக்­கப்­பட்டார்.

 

1500 : விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேஸில் நாட்டில் காலடி வைத்த முத­லா­வது ஐரோப்­பியர் ஆனார்.

 

1531 : போர்த்­துக்கல், லிஸ்பன் நகரில் நில­ந­டுக்கம் ஏற்­பட்­டதில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1788 : ஆர்தர் பிலிப் தலை­மையில் பிரித்­தா­னியக் கைதி­களின் முத­லா­வது தொகு­தியைக் கொண்ட கப்பல் அவுஸ்­தி­ரே­லிய சிட்­னியை அடைந்து புதிய குடி­யேற்றம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது அவுஸ்­தி­ரே­லிய நாளாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

 

1841 : ஹொங்­கொங்கை ஐக்­கிய இராச்­சியம் அதி­கா­ர­பூர்­வ­மாக ஆக்­கி­ர­மித்­தது.

 

1924 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரம் லெனின்­கிராட் எனப் பெயர் மாற்­றப்­பட்­டது.

 

1926 : ஜோன் லோகி பெயர்ட் தொலைக்­காட்சிப் பெட்­டியைக் காட்­சிப்­ப­டுத்­தினார்.

 

1930 : இந்­திய தேசிய காங்­கிரஸ் 26 ஜன­வ­ரியை இந்­தி­யாவின் விடு­தலை நாளாக (பூரண சுய­ராஜ்ய நாள்) அறி­வித்­தது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­யினர் முதல் தட­வை­யாக ஐரோப்­பாவை (வட அயர்­லாந்து) அடைந்­தனர்.

 

1949 : அவுஸ்­தி­ரே­லியக் குடி­யு­ரிமைச் சட்டம் அமு­லுக்கு வந்­தது.

 

1950 : இந்­தியா குடி­ய­ரசு நாடா­னது. ராஜேந்­திர பிரசாத் அதன் முத­லா­வது குடி­ய­ரசுத் தலை­வ­ரானார்.

 

1952 : பிரித்­தா­னிய மற்றும் எகிப்­திய உயர் வகுப்பு வர்த்­த­கர்­க­ளுக்­கெ­தி­ராக எகிப்தில் இடம்­பெற்ற வன்­மு­றை­களில் கெய்ரோ நக­ரத்தின் நடுப் பகுதி தீயினால் சேத­மாக்­கப்­பட்­டது.

 

1958 : ஜப்­பா­னிய பய­ணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்­கி­யதில் 167 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1965 :  இந்­தி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக இந்தி அறி­விக்­கப்­பட்­டது.

 

1980 : இஸ்­ரேலும் எகிப்தும் தூத­ரக உறவை ஆரம்­பித்­தன.

 

1992 : ரஷ்­யாவின் அணு­வா­யுத ஏவு­க­ணைகள் ஐக்­கிய அமெ­ரிக்க நக­ரங்­களை நோக்கி செலுத்­தப்­ப­ட­மாட்டா என ரஷ்ய அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறி­வித்தார்.

 

2001 : இந்­தி­யாவின் குஜராத் பூகம்­பத்தில் 20,000 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.

 

2004 : ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கையெழுத்திட்டார். 

 

2015 : இங்கிலாந்து திருச்சபையின் முதலாவது பெண் ஆயராக லிபி லேன் நியமிக்கப்பட்டார்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=652#sthash.Ddnj1IXW.dpuf
  • தொடங்கியவர்

ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....

 

sony ஆகியோ மோரிடாவிடம் இருந்து பத்து பாடங்கள் :

புதிய பாதையில் பயணி :

இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப sony_1.jpgபிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !

முயன்றால் எதுவும் சாத்தியம் :

375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.

ஆய்வு செய் ! அற்புதம் நிகழும் :

லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்து சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். npn என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதை தயாரிக்கஉரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாக சொன்னதை கேட்டது. அப்பொழுதைய ஜாம்பாவன் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளை தொடர்ந்தார்கள். துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tunneling effect' ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸாக தந்தது

பெயரும் முக்கியம் ஜெயிக்க :

ஏழை நாடாக இருந்த ஜப்பானை விட அடித்துக்கிளப்பும் அமெரிக்கா நல்ல சாய்ஸ் என்று பட்டது மோரிடாவுக்கு. அங்கே போய் கம்பெனி நடத்தலாம் என்று முடிவு செய்த பொழுது ஈர்க்கும் ஒரு sony_2.jpgபெயருக்கு அலைந்தார்கள். இலத்தீனில் ஒலியை குறிக்கும் சோனஸ் தாக்கத்தில் சோனியை வார்த்தார்கள். தரமும் சேர்ந்து கொள்ள சோனி சாதித்தது !

குறைத்து எடை போடாதே உன்னை :

அமெரிக்காவின் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்திருந்தார்கள் சோனி. அன்றைக்கு ஷேர்களின் விலை என்ன என்று அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆள் ரூமில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். விலையை
அறிவிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் நிலவரம் என்ன என்று விசாரித்தால் அதிர்ச்சி ! பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் ஓயாமல் அழைத்து விலையென்ன என்று கேட்கிறார்கள். மதிப்பு
வெகு உச்சத்தில் இருக்கிறது என்று சொன்னதும் டாப் விலை சொன்னார்கள் !

தேவைகளில் இருந்து புதிதைத்தருக :

பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களை கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டு பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியை படைத்தார்கள். அதை ஆங்காங்கே எடுத்து  அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடா. பின்னர் நண்பர் இபுகா இப்படி சத்தமாக கேட்கவும் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல ஹெட்செட் என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். அப்படியும் இளைஞர்களின் கனவுப்பொருளான வாக்மேன் வந்தது இப்படித்தான்!

தவறுகளை ஒத்துக்கொள் :

கால்குலேட்டர் பிஸினசில் நுழைந்திருந்தது சோனி. பல ஜப்பானிய நிறுவனங்களும் அதில் ஈடுபட்டதால் பெரிதாக வருமானம் கிடைக்காமல் அந்த தொழிலை மோரிடா இழுத்து மூடிவிட்டார். ஆனால்,அதை அப்படியே வைத்திருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் உலகை முற்றுகையிட்ட கணினித்துறையில் இன்னமும் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் அவர்

குடும்பம் நிறுவனம் :

சோனியில் தலைமை அதிகாரிக்கும், அடுத்தடுத்து இருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள விகித வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. எல்லா நபர்களையும் குடும்பம் போல நடத்துவார்கள். வெறும் பட்டம் மட்டுமே திமைக்கு அளவுகோலாக கொள்ளப்படாமல் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறி கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் தருவது உறுதி செய்யப்பட்டது ! கோக கோலா, ஜெனரல் மோட்டர்ஸ் என்று டாப் நிறுவனங்களுக்கும் மேலே அமெரிக்காவில்
நம்பகத்தன்மை பெற்று நின்றது சோனி !

sony_3.jpg

விளம்பரம் கொஞ்சம் வில்லங்கம் :

ஒரு புதிய கருவியை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருந்தார் மோரிடா. அது பெரிய ஹிட் அடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் ஒழுங்காக விற்க வைக்க அதிகபட்ச விளம்பரங்களை செய்யச்சொல்லி ஏஜ் இருந்த அதிகாரிக்கு உணர்த்த ,"இவ்வளவு மில்லியன் டாலர் நீங்கள் செலவு செய்யவேண்டும் ! இல்லையென்றால் வீட்டுக்கு போக வேண்டியது தான் !" என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே செலவு செய்தார் அந்த அதிகாரி. என்ன ! மற்ற பொருள்களுக்கான விளம்பரத்தை குறைத்து அதை இந்த புது குழந்தைக்கு திருப்பி எப்பொழுதும் ஆகும் செலவுக்குள்ளேயே சாதித்தார்!

செய் ! செய்யாதே !:

"தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ,ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் " என்பதை தன் தாரக மந்திரமாக கொண்டிருந்த அகியோ மோரிடா ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ரோல் மாடல். மேட் இன் ஜப்பான் என்கிற பிராண்டை உலகத்தின் தரத்தின் உச்சமாக மாற்றிய உழைப்பில் எண்ணற்ற நாட்டு மக்களை ஈடுபடுத்திய அவரும்,அவர் தோழர் இபுகாவும் ,"எதுவும் முடியாது என்று சொல்லத்தெரியாத நாடு ஜப்பான் !" என்றே அறியப்பட வேண்டும் என்றார். பெயர் மாறினாலும் நம் நாடும் அப்படி ஆக பயணிப்போம் !

உலகப்போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில் நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள் .1946 இல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள் .முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை ;பார்த்தார் மனிதர் .பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள்; மாபெரும் வெற்றி பெற்றது அது  .அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி ,வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள் .உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்  என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.

sony_5.jpg

அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சி கரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர் ; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம் .சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார் ;நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார் ;.ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்கா விட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர் .அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர் ;ஜப்பானியர்
என்கிற பெருமையை அவர் விடவில்லை .அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார் ;எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில்  மக்களால் பார்க்கப்பட்டது .தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர் .என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்குரோல் மாடல்  அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத்தெரியாத ஜப்பான் -அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த  நாள் இன்று

vikatan

  • தொடங்கியவர்

12400948_1061591183899671_70079183811599

குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையில் உள்ள சியாச்சின் மலையில் உச்சியில் -23 டிகிரி குளிரில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்...

  • தொடங்கியவர்

ஜனவரி 26; குடியரசு தினம் - டாப் 10 தருணங்கள்..

 

இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :

சேர்ந்து உருவான அற்புதம் :

காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .

indipendance_1.jpg

117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் "அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !"

வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :

indipendance_3.jpg

உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின்
மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !

பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :

indipendance_4.jpg

இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !

indipendance_5.jpgமொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :

மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் "சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?" என்று கேட்டு பின்னுங்கள்

இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.

indipendance_6.jpg

பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது

மீட்கப்பட்ட மாட்சிமை :

indipendance_7.jpg

தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன

நியாயம் காக்கும் நீதிமன்றம் :

indipendance_8.jpg

எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்

உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :

indipendance_9%281%29.jpg 

காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :

indipendance_10.jpg

முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.

இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :

indipendance_11%281%29.jpg

"ஏண்டா கொண்டு வந்தோம் !" என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.