Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
 

10 செகண்ட் கதைகள்

கொலை... கலை...

யானையைக் கொன்று தந்தத்தைத் திருடுகிறான் ஒருவன். அந்தத் தந்தத்தில் யானையைச் செதுக்கி விற்கிறான் இன்னொருவன்!

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பேசும் படம்: இம்ஸத்... மீண்டும் மீட்டுவோம்!

meet_2711315f.jpg
 

ஒற்றைத் தந்தி வயலினான ‘இம்ஸத்’ இசைக் கருவியை வாசிக்கும் அதிகாரமும் ஆளுமையும் தென் அல்ஜீரியாவின் ‘டுவாரஜ்’ பழங்குடிப் பெண்களுக்கு மட்டுமே உண்டு.

சுரைக்காய் கூடு மீது மிருகத் தோலைப் பதித்து, குதிரை முடியைச் சரடாக நெய்து, இந்த இசைக் கருவியைத் தயாரிப்பவர்களும் தாய் வழிச் சமூகமாக வாழும் டுவாரஜ் பெண்களே.

ஆனால், நவீன தாள வாத்தியங்களின் வருகையால் இவ்விரு பெண்களைத் தவிர, யாருக்கும் இப்போது இதை வாசிக்கத் தெரியாது. அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கு இம்ஸத்தை வாசிக்கப் பயிற்றுவிப்பதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்க மீண்டும் இம்ஸத்தை மீட்டுகிறார்கள் இவர்கள்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு

 

காட்சி ஒன்று: 

அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டு நாற்பது வருடங்கள் இருக்கும் :
 
இந்தியாவின் கடைக்கோடி குடிமகன்களில் ஒருவரான எளிய மனிதர் உள்ளே வருவார். அது நிலவுக்கான பயணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கூடம். உள்ளே அவரை அழைத்து வரும் நபர் இப்படிச் சொல்வார்:

rrklakshmnan_1.jpg



"இவரைத்தான் நிலவுக்கு அனுப்பப்போகிறோம். இவருக்குச் சோறு, தண்ணீர்,வெளிச்சம், காற்று, இருப்பிடம் எதுவும் தேவையில்லை." என்பதாக அது அமைந்திருக்கும். 

எளிய மனிதனை எப்படி அரசுகள் பார்க்கின்றன என்பதை இதைவிட எளிமையாகச் சொல்லிவிட முடியாது. 

காட்சி இரண்டு:.
 
மன்மோகன் சிங்கும், நரசிம்ம ராவும் ஒரு சந்தின் நுழைவில் ஓரமா நின்று கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் கையில் விலைவாசி ஏற்றம் என்கிற பெரிய ஆயுதம் இருக்கும். சுவரில் டீசல் விலை, கேஸ் விலை ஏற்றம் என்று போஸ்டர்கள் தொங்கிக்கொண்டு இருக்கும். காமன்மேன் ஓய்ந்து போய் அந்தச் சந்தில் நடந்து வந்து கொண்டிருப்பார். அவரைத் தாக்க மன்மோகன் தயாராக இருப்பார். ராவ் அசையாமல் இப்படிச் சொல்வார் : 

"அவரின் நிலைமை இன்னமும் மோசமாகக் கூடாது என்று கருணையோடு நாம் இதைச் செய்கிறோம் என்று நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்."

rrklakshmnan_2.jpg



ஆட்கள் தான் மாறியிருக்கிறார்கள். காட்சிகள் மாறவில்லை அல்லவா? 

மேலே சொன்ன அந்த இரண்டு கார்ட்டூன்களையும் வரைந்தது ஆர்.கே.லக்ஷ்மண். ஆர்.கே.லக்ஷ்மணின் அந்தக் 'காமன் மேனை' பார்த்து இருக்கிறீர்களா? கோடு போட்ட சட்டை, எளிமையான வேட்டி, சொட்டை விழுந்த தலையில் ஓரிரு முடிகள், எப்பொழுதுமே வாயைத் திறக்காத மவுனம், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள் தரும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள எப்பொழுதும் உயர்ந்திருக்கும் புருவம். இது தான் காமன்மேன். இந்தச் சாதாரண மனிதனை கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் மக்களின் மனசாட்சியாக அவர் உலவ விட்டார்.

rrklakshmnan_4.jpgராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். 

பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் கல்லூரியின் முதல்வர் கடுகடுப்பான முகத்தோடு "எங்கள் பள்ளியில் சேர வேண்டிய தகுதி உனக்கில்லை தம்பி." என்று அனுப்பி வைத்தார். 

வீட்டுக்கு திரும்பி நிறைய வருத்தத்தோடு மைசூர் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனோடு ப்ளிட்ஸ், சுயராஜ்யா இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்து அனுப்பினார். தன்னுடைய அண்ணன் ஆர்.கே.நாராயண் 'தி இந்து'வில் எழுதிய கதைகளுக்கும் படங்கள் வரைந்து தள்ளினார். 

பால் தாக்கரே வேலை பார்த்த ப்ரீ பிரஸ் ஜர்னலில் இவரும் கார்ட்டூனிஸ்டாக இணைந்தார். அங்கே எக்கச்சக்க வேலை வாங்கப்பட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்த லக்ஷ்மண் கருத்து மோதல்களால் அந்த இதழை விட்டு வெளியேறினார். 

பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். முதலில் அவரைச் செய்தித்தாளின் மாலை இணைப்பிதழில் வரைய வைத்தார்கள். 

rrklakshmnan_6.jpgஇவரின் பேனாவின் பெருமை புரிந்து சீக்கிரமே தினமும் அரசியல் கார்ட்டூன் வரையும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ,'you said it' என்கிற பெயரில் ஐம்பது வருடங்களுக்கு இடைவிடாமல் காமன்மேன் மூலம் மக்களின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை அவர் கொண்டு சேர்த்தார். 

காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களில் மதியம் வரை முழுமையாகத் தன்னைப் பல்வேறு செய்திகளுக்குள் ஈடுபடுத்திக்கொள்வார். பல்வேறு அரசியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்ட பின்னர், மக்களின் வலியை எப்படி அங்கதத்தோடு சொல்வது என்று மதிய உணவுக்குப் பின்னர் யோசித்துவிட்டு அவர் கேலிச்சித்திரத்தை தீட்டி முடிக்கையில் சாதாரண மனிதனின் அழுகுரல் நகைச்சுவையோடு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும். 

எந்த அளவுக்கு அவர் அரசியல்வாதிகளை கவனித்தார் என்றால் தேவகவுடா, வி.சி.சுக்லா ஆகியோர் எந்த பாணியில் பேசுவார்களோ அதை அப்படியே மிமிக்ரி செய்கிற அளவுக்கு ஆழமாக அரசியல்வாதிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றை கல்லூரியில் பயின்றது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.



"நீங்கள் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?" என்று கேட்கப்பட்ட பொழுது, "அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிடுகிற நாளோடு நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அது எப்பொழுதும் நடக்காது இல்லையா?" என்று கண்சிமிட்டிய அவர் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி செயல்பட்டுத் தன்னைச் சலிப்புக் கொள்ளச் செய்வதாகப் புலம்பினார். அவருக்கு ஆறுதலாக அவ்வப்பொழுது வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டிருந்த இருவர் லாலுவும், ஜெயலலிதாவும் தான்! 

rrklakshmnan_5.jpg90 ப்ளஸ் வயதில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவரின் உடல் பெரும்பாலும் செயலிழந்தது. அந்தச் சூழலில் கூட ஒரே ஒரு கையால் அவர் வீட்டில் இருந்தபடியே கேலிச்சித்திரங்கள் வரைந்தார். அதை எடுத்துக்கொண்டு போகப் புனாவில் இருந்து வீட்டுக்கு ஒருவர் அனுதினமும் வந்து சென்றார். ராமன் மகசேசே, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றிருக்கும் அவரின் ஒரு கார்டூன் பற்றிய விவரிப்போடு முடிப்பது சரியாக இருக்கும். 

விவாசய நிலங்கள் மீதான உச்சவரம்பை அரசு நீக்கியது என்கிற செய்தி மேலே எழுதப்பட்டு இருக்கும். விவசாயியின் தலை மீது பெரிய கல் ஸ்லாப் இறக்கப்படும். அதன் மீது அரசியல்வாதி வெற்றி பெருமிதத்தோடு அமர்ந்து இருப்பார். இப்படி மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவரின் நினைவு தினம் இன்று

vikatan

  • தொடங்கியவர்

 

இது புதுசு கண்ணா புதுசு!

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

திருவிழாவுல காணாமப்போற குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறதுக்கும் தொலைஞ்சு போய் திரும்ப வந்த குழந்தைகளைப் பற்றி அறிவிக்கிறதுக்கும் மைக் செட்டு, குழாயோடக் காத்துக்கிட்டு இருக்கும் ஒரு கும்பல். ஊர்ப்பக்கம் இப்படி! சிட்டியில சொல்லவா வேணும்? குழந்தைகள் தொலைஞ்சு போறதுக்குனே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அடுக்கு மாடி தியேட்டர்கள், மெரினா பீச்னு பல விஷயங்கள் இருக்கு. சரி, விஷயத்துக்கு வருவோம். வீட்டுல விளையாடிக்கிட்டு இருந்த குழந்தை, அடுத்த தெருவுல இருந்தாலே அம்மாக்களுக்கு ஹை-வோல்டேஜ்ல பதற்றம் வரும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைங்கனா, ‘எங்கதான் போறாங்க இவங்க?’னு எரிச்சல் வரும். கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டான்னா, ‘எங்கதான் போறியோ?’னு சலிப்பும் வரும். இப்படி உங்களோட அத்தனை வெரைட்டி ரியாக்‌ஷன்களையும், ஷிஃப்ட், டெலிட் கொடுத்து விடுவிக்கத்தான் ‘ஃபேமிலி லொக்கேட்டர் & கிட்ஸ் டிராக்கர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். வெரி நைஸ்ல?

12548952_1061811190544337_45021244539660

 

அப்ளிகேஷனைப் பதிவேற்றி திறக்க வேண்டியது, குடும்பத்தில் இருக்கும் கணவன், மனைவி, குழந்தைகள் என அத்தனை பேரின் எண்களையும் பதிவேற்றிக்கொள்ள வேண்டியது. அவ்வளவுதான்! யார் எங்கே சென்றிருக்கிறார்கள், எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் இருக்கும் இடம் பாதுகாப்பான இடமா? என அத்தனை விஷயங்களையும் உங்கள் கைகளில் தவழும் செல்போன்களில் ‘மேப்’ வழியாகத் தெரிந்துகொள்ளலாம். ‘ஜி.பி.எஸ்’ டிராக்கிங் தொழில் நுட்பத்தில் இந்த அப்ளிகேஷன் செயல்படுவதால், மகன் அல்லது மகள் எங்கே இருக்கிறார்? என்பதை அப்ளிகேஷனில் தேடும் முன், மொபைலில் ‘ஜி.பி.எஸ்’-ஐ ஆன் செய்துகொள்ள வேண்டும். செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு சரி... குழந்தைகளுக்கு? சின்னக் குழந்தைகளிடம் செல்போன் புழக்கம் சாத்தியம் இல்லை என்பதால், மோதிரம், டாலர் என குழந்தைகளுக்குக்காகவே வடிவமைக்கப்பட்ட ‘ஜி.பி.எஸ்’ கருவிகளைப் பொருத்திக்கொண்டால், 24 மணி நேரமும் உங்கள் குழந்தை உங்களது கண்காணிப்பில் இருக்கும் என்கிறார்கள் அப்ளிகேஷனைக் கண்டுபிடித்தவர்கள்.

இருக்கும் இடத்தைத் தெரிவிப்பதுடன் நாம் தேடும் நபர் நடந்து வருகிறாரா, வாகனத்தில் சென்றுகொண்டிருக்கிறாரா, வாகனம் சரியான வேகத்தில் செல்கிறதா, ஆபத்தான வேகத்தில் செல்கிறதா? என எக்கச்சக்கமான பயன்பாடுகளையும் அடுக்கி வைத்திருக்கிறது இந்த அப்ளிகேஷன். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மொபைல் எண்களையும் இணைத்துக்கொள்வதால், இந்த ‘ஃபேமிலி லொக்கேட்டர் & கிட்ஸ் டிராக்கர்’ அப்ளிகேஷனை குடும்பத்திற்கான ‘சாட்டிங் குரூப்’பாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆக, இனி ‘எங்கடா போய்த் தொலைஞ்சே?’னு கேள்வி கேட்டு அடிச்சவங்க, அப்ளிகேஷன்ல நாம இருந்த லொக்கேஷனை ஜூம் பண்ணிக்காட்டி, ‘இங்கே உனக்கு என்ன வேலை?’னு அடிப்பாங்க. அவ்வளவுதான்!

டவுன்லோடு லிங்க் :
https://play.google.com/store/apps/details…

vikatan

  • தொடங்கியவர்

12552711_1029875757071438_22392967568525

அரண்மனை 2 பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

விஷ மருந்து

p42_1.jpg

டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்!



பிரார்த்தனை

p42_2.jpg

`சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்!

 

கால்ஷீட்

p42_3.jpg

“ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்!



செல்ஃபி நேரம்

p42_4.jpg

மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. முகத்தை மூட கடைசி வரட்டி காத்திருந்தபோது, ‘`முகத்தை மூடப்போறேன்... செல்ஃபி எடுக்கிறவங்க எடுத்துக்கலாம்’’ எனக் குரல் வந்தது!



செம கலாய்...

p42_5.jpg

ஜாலியாகக் கலாய்த்ததில் கோபப்பட்டு வெளியேறினார் வேணு மாமா.

‘Venu Uncle Left’ எனக் காட்டியது வாட்ஸ்அப் குரூப்!



தெளிவு

p42_6.jpg

“ `வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?”

“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”

 

தீர்மானம்

 

p42_7.jpg

`காப்புக் கட்டிய பிறகு, வெளியூர் போகக் கூடாது!’ என்ற ஊரார் உத்தரவுக்குப் பணிந்து, ‘கோயிலிலேயே திருடுவது’ எனத் தீர்மானித்தான் திருடன்!

 


வாழ்க்கை முரண்

p42_8.jpg

``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு. மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’ என்கிறார்கள்’’ எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா!



கோரிக்கை

p42_9.jpg

கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்த வசந்தி பாட்டி சொன்னார், “அநாதை இல்லத்தையும், முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்தில் வைக்கலாம். ரெண்டு பேருக்கும் அன்பு கிடைக்கும்!”



காணவில்லை

p42_10.jpg

‘‘டாட்... இங்க இருந்த ரிவர் எங்கே?” - பாலத்தின் மேல் காரில் சென்றுகொண்டிருந்த யுவன், அப்பாவிடம் கேட்டான்!

vikatan

  • தொடங்கியவர்

12573096_668570196578859_598054905349021

12472698_668570179912194_109821805514794

12573890_668570169912195_233093437934567

12122506_668570223245523_377558193722703

12548882_668570229912189_542186584364420

12540849_668570239912188_760452598691065

1937106_668570269912185_5769755666995379

12573806_668570286578850_810327105317889

12507183_668570326578846_419584594653413

12509477_668570289912183_453117170184330

'கார்ன் பேலஸ்' என்றதுமே மக்காச்சோளத்தில் கட்டப்பட்ட கட்டடம் என்று நினைத்துவிடாதீர்கள். செங்கற்கள், மணல், சிமென்ட் கொண்டு கட்டப்பட்ட மாளிகைதான். ஆனால், வருடாவருடம் மக்காச்சோளப் பயிர் அறுவடை நடந்ததும், இந்தக் கட்டடம் 'கார்ன் பேலஸ்' ஆக மாறிவிடும். ஆயிரக்கணக்கான மக்காச்சோளங்களைக் கொண்டு விதவிதமான டிசைன்களால் இந்த மாளிகையை அலங்கரிப்பார்கள். அப்போது, இந்தக் கட்டடம் முழுக்க மக்காச்சோளமாகக் காட்சியளிக்கும்.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள இந்த 'கார்ன் பேலஸ்'-ஐ பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

ஆள் பாதி... தோல் பாதி!

 

சருமப் பாதுகாப்பு ரகசியங்கள்

 

 

கத்தின் அழகு முகத்தில் தெரியும். பொலிவான தோற்றமே நம் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் காட்டும் கண்ணாடி. ஆரோக்கியமான தோற்றம் நமக்குத் தரும் தன்னம்பிக்கை அசாதாரணமானது. சருமம் என்பது நம் உடலுக்கு வெறும் போர்வை மட்டும் அல்ல; வெயிலில் இருந்தும், குளிரில் இருந்தும், புறஊதாக் கதிர் போன்றவற்றில் இருந்தும் நம் உடலைக் காக்கும் பிரதான இயற்கை அரணும் இதுவே!   

p70a.jpg

பட்டுப் போன்ற பளபளப்பான சருமம் வேண்டும், அழகான தோற்றம் வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். இதற்காக, பியூட்டி பார்லருக்குப் போய் செயற்கையான கிரீம்களை, வேதிப்பொருட்களை முகத்தில் பூசி, பக்கவிளைவால் முகத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் ஒருபுறம். `இப்ப என் அழகுக்கு என்ன குறை... நான் என்ன நடிக்கவா போறேன்... எதுக்குத் தேவை இல்லாம’ என்ற மனநிலையில், தோற்றத்தைப் பற்றிய கவலை இன்றி இருப்பவர்கள் மறுபுறம். உண்மையில், ஆரோக்கியமான சருமம் என்பது அடைய முடியாத விஷயம் இல்லை. தேவை கொஞ்சம் மெனக்கெடல் மட்டுமே. சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும்; சிலருக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்பான சருமம் இருக்கும். நமக்கு என்ன வகையான சருமம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற அழகு தெரப்பிகளையும், மசாஜ்களையும் செய்துவந்தால், ஆரோக்கியமான சருமம் சாத்தியமே!

p72a.jpg

இயற்கைமுறையில் உடல் அழகைப் பெறுவதைப் பற்றி விளக்குகிறார் `சஞ்சீவனம்’ ஆயுர்வேத தெரப்பி மையத்தின், அழகுக்கலை மற்றும் ஆரோக்கிய நிபுணர் அஞ்சலிதேவி. சருமப் பராமரிப்புகள், சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான தீர்வுகளைப் பற்றி விளக்குகிறார், டாக்டர் தலத் சலீம். சருமத்துக்கு ஊட்டச்சத்து தரும் ரெசிப்பிக்களை செய்துகாட்டுகிறார், திருச்சி, ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் கணேசன். 

p73a.jpg

கிளென்சிங்

முகத்தைச் சுத்தம்செய்வதுதான் சருமப் பராமரிப்பின் தொடக்கம். அழுக்கு, தூசு, வானிலை மாற்றம், சூரியக் கதிர்கள், புகை, கிரீம், சோப், உணவுப் பழக்கம், நீர்ச்சத்துக்கள் குறைதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சருமத்தைச் சுத்தம்செய்வதுதான் கிளென்சர்.
செயற்கை கிரீம், லோஷன் இல்லாமல் இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்வது நல்லது.

இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்ய, பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தப் பாலை, பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தொட்டுத் துடைக்க வேண்டும்.

கீழிருந்து மேலாக மென்மையாக, மிருதுவாக மசாஜ்செய்து தேய்ப்பதால், இறந்த செல்கள் உதிரும்; அழுக்குகள் நீங்கும்.

p75a.jpg

பலன்கள்: முகம், கழுத்து, காது சுத்தமாகும். அடுத்த சிகிச்சையைச் செய்வதற்கு சருமம் தயார் நிலையில் இருக்கும்.

ஸ்க்ரப்

கண்களுக்குத் தெரியாத, செதில் செதிலான இறந்த செல்களை நீக்க உதவுவது ஸ்க்ரப். சொரசொரப்பான கலவையைத் தயாரித்து, அதை முகம், கழுத்து, கை, கால்களில் பூசி, மென்மையாக மசாஜ்செய்வதே ஸ்க்ரப் என்ற சிகிச்சை.

p77a.jpg

நவரா அரிசி, பாதாமை ஊறவைத்து, பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்க வேண்டும். கொரகொரப்பான இந்தக் கலவையை முகம், கழுத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக, மூக்கு ஓரங்கள், முன் நெற்றி, இதழ்களின் கீழே அழுத்தித் தேய்க்க, சின்னச்சின்ன குருத்துகள் நீங்கும்.

பலன்கள்: கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகள் நீங்கும். இறந்த செல்கள், பருக்களின் மிச்சங்கள் நீங்கிவிடும். சருமம் மிருதுவாக, ‘பளிச்’ என மாறும்.

கண்களுக்கான பேக்

கண்களை மூடிக்கொண்டு, சுற்றிலும் ஸ்க்ரப் கலவையைப் பூசி, மென்மையாக மசாஜ்செய்து சுத்தம்செய்ய வேண்டும். மீண்டும், தண்ணீரால் துடைக்க வேண்டும். பின்னர், கண்களின் மேல் வைக்கும் அளவுக்குக் கற்றாழையைப் பெரிய துண்டாக நறுக்க வேண்டும். 

நன்றாகக் கழுவிய பின், நடுவில் பிளந்து, இரு துண்டுகளாக்க வேண்டும். இதை, இரு கண்களின் மேல் வைத்து, மெல்லிய துணியால் கண்களைக் கட்டிக்கொள்ளலாம். அரை மணி நேரத்துக்குப் பிறகு, கற்றாழையை எடுத்துவிட்டு, கண்களைச் சுத்தம்செய்ய வேண்டும்.

p78a.jpg

பலன்கள்: நீண்ட நேரம் மொபைல், கணினி பார்க்கும் கண்களுக்குச் சிறந்த சிகிச்சை. உடலின் வெப்பம் கண்களில் தெரியும். வெப்பத்தை எளிதில் எடுக்கக்கூடிய ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. கண்களின் சூட்டை கற்றாழை எடுத்துக்கொள்ளும். தொடர்ந்து செய்தால், கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் மறையும். கண்கள் ஃப்ரெஷ்ஷாக, பிரகாசமாக மாறும்.

மூலிகை ஃபேஸ் பேக்

துளசி, வேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவி, பேக் போட்டுக்கொள்ளலாம். கழுத்திலும் தடவிவர, நல்ல பலன் தெரியும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரீல் கழுவ வேண்டும்.

p80a.jpg

பலன்கள்: முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். கரும்புள்ளிகள் மறையும். பருக்கள் தொந்தரவால் அவதியுறுவோர் வாரம் இருமுறை செய்துவரலாம். மூன்றே மாதங்களில் பருக்கள் பரவுவது தடுக்கப்படும். பளபளப்பான ஆரோக்கி
யமான தோற்றம் கிடைக்கும்.

ரெட் பேக்

கேரட், பீட்ரூட்டுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து நன்கு அரைக்க வேண்டும். இந்தக் கலவையை கண்களைத் தவிர மற்ற இடங்களில் தடவ வேண்டும். தடிமனாகத் தடவுவது நல்லது.  பஞ்சை நனைத்துக் கண்களில் வைத்துவிட்டு, அதன் மீது இந்த பேக் போட்டுக்கொள்ளலாம்.

p82a.jpg

பலன்கள்: முகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும். சருமம் பளிச்சிடும். சரும செல்கள் புத்துயிர் பெறும்.

நால்பாமரம் ஃபேஸ் பேக்

ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகிய நால்பாமரத்தின் நான்கு பட்டைகள், துளசி, கொழுந்து வேப்பிலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, முகம் முழுவதும் பூசி, 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளலாம்.

p84a.jpg

பலன்கள்: பொலிவான சருமம் கிடைக்க உதவும். சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். சருமத் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து, மணமக்கள் இந்த சிகிச்சையைச் செய்துவர, சருமம் பிரகாசமாக இருக்கும்.

லிக்விட் தெரப்பி

எலுமிச்சைச்சாறு, தேன், முட்டையின் வெள்ளைப்பகுதியை ஒன்று சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். இந்த திரவத்தை, கைகளால் முகம் முழுக்கத் தடவ வேண்டும். மூக்கு ஓரங்கள், மேல் உதடு, கீழ் உதட்டைச் சுற்றிலும் தடவலாம். கழுத்து வரை முழுவதும் தடவிய பின், 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட வேண்டும்.

p86a.jpg

பலன்கள்: கறுப்பாக இருப்போருக்குச் செய்யப்படும் ஸ்கின் லைட்னிங் சிகிச்சை இது. கருமை மறைந்து, பொலிவு அதிகரிக்கும். இந்தச் சாறு, சருமத் துவாரங்கள் வழியே உள்சென்று, நல்ல பலனைத் தரும்.  அழகுக்கலை நிபுணரின் ஆலோசனைப்படி, அனைவரும் செய்து கொள்ளலாம்.

கைகளுக்கான பேக்

நால்பாமராதி எண்ணெயில் மஞ்சள் கலந்து, கைகள் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். மென்மையான அழுத்தத்துடன் முன்னும் பின்னும் இதமாகத் தடவ வேண்டும்.

பின்னர், ஊறவைத்த நவரா அரிசியின் விழுதைக்கொண்டு, கைகள் முழுவதையும் ஸ்க்ரப் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பைத் தொடர்ந்துசெய்யலாம்.

பின்னர், அதைத் துடைத்துவிட்டு, அரிசி மாவு, பச்சைப் பயறு மாவு, மஞ்சள், புதினா, கற்றாழை, பன்னீர், வேப்பிலை, கடலை மாவு, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து கைகள் முழுவதும் பேக் போட்டுக்கொள்ளவும்.

p88a.jpg

பலன்கள்: அழகு நிலையங்களில் செய்யப்படும் மெனிக்யூரின் மாற்று இது. கைகள் பளிச்சென அழகாகும். புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். ஆடைகள் மூடப்பட்ட இடம் சிவப்பாகவும், மற்ற இடங்கள் கறுப்பாகவும் இருக்கும் பிரச்னை நீங்கிவிடும். கறுப்புப் புள்ளிகள் மறைந்துவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைச்செய்யலாம்.

கால்களுக்கான பேக்

நால்பாமராதி எண்ணெய், மஞ்சளைக் கலந்து, கால்கள் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். மென்மையான அழுத்தத்துடன் முன்னும் பின்னும் இதமாகத் தடவ வேண்டும். பாதத்திலும் தடவலாம்.

பின்னர், ஊறவைத்த நவரா அரிசியின் விழுதைக்கொண்டு, கால்கள் முழுவதையும் ஸ்க்ரப் செய்யலாம். 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பைத் தொடர்ந்துசெய்யலாம். மசாஜ் செய்யும்போது பலன் இரட்டிப்பாகும்.

ஸ்கரப் பேக்கின் மேலே மூலிகை பேக்கை போட்டுவிட வேண்டும். அதாவது, துளசி, வேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்த மூலிகை பேக்கை கால் முழுவதும் பூசிவிடலாம். அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிட வேண்டும்.

p90a.jpg

பலன்கள்: கால்களில் உள்ள கருமை மறையும். தோல் வறட்சி நீங்கி, கால்கள் பிரகாசமாகும். அரை மணி நேர சிகிச்சையால் கால்களுக்குப் பொலிவு அதிகரிக்கும். இறந்த செல்கள் உதிர்ந்து, ‘பளிச்’ கால்களாக மாறும்.

ஸ்கின் க்ளோ தெரப்பி

p92a.jpg

உடல் முழுதும் செய்யக்கூடிய சிகிச்சை இது. திருமணத்துக்குத் தயாராவோர் செய்து கொள்ளலாம்.  பால், குங்குமப்பூ, பாதாம், முந்திரி, ஓட்ஸ் பவுடர், தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்பட்டு, கிளென்சிங், ஸ்க்ரப், மசாஜ், பேக் எனப் படிப்படியாகச் செய்யப்படும் சிகிச்சை. முதலில், பால் மற்றும் குங்குமப்பூவைக்கொண்டு உடல் முழுதும் கிளென்சிங் செய்யப்படும்.

அடுத்து தேன், எலுமிச்சைச் சாற்றால் மசாஜ் செய்யப்படும். பிறகு, பாதாம், முந்திரி விழுதைக்கொண்டு, உடல் முழுதும் ஸக்ரப் செய்யப்படும். நால்பாமரம் எண்ணெயால் மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்யப்படும். சுமார், இரண்டரை மணி நேரம் ஆகும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளலாம்.

p93a.jpg

p94a.jpg

பலன்கள்: முழு உடலும் பளிச்சிட உதவும். வலிகள், பிடிப்புகள் நீங்கும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். சரும செல்கள் புத்துயிர் பெறும். தூக்கமின்மை, வலி, மன உளைச்சல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் தெரப்பி

இன்று வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனஅழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கான சிறந்த தெரப்பி இது.

18 வகையான அரோமா எண்ணெய், பால், மூலிகை எண்ணெய்கள்கொண்டு, மூன்று மணி நேரத்துக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படும்.

p95a.jpg

பலன்கள்: அரோமா எண்ணெயின் வாசம் மூக்கில் நுழைந்து, மூளையின் அதீதச் செயல்பாட்டைக் குறைக்கும். எண்ண ஓட்டங்களைக் குறைத்து, மன அமைதி அடையச் செய்யும். மென்மையான அழுத்தங்களும், வாசமும் தூக்கத்தை வரவழைத்து, உடலை ஓய்வுபெறச்செய்யும். இதனுடன், முகத்தில் அரோமா ஃபேஷியலும் செய்யப்பட்டு, முகம் பிரகாசமாகும். மனம் தொடர்பான பிரச்னைகளை விரட்டி அடிக்கும். இந்த தெரப்பியை மாதம் ஒரு முறை செய்யலாம்.

மூலிகை எண்ணெய்களும், தைலங்களும் பூசி ரிலாக்ஸ் தெரப்பி செய்வதன் மூலம், கால் வலி, பாத வலி, எரிச்சல், கணுக்கால் பிடிப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும். பாதத்தை அழுத்தி, சில மென்மையான புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்தாலே, பாதிப் பிரச்னை குறைந்துவிடும்.  அனைவரும், மாதம் ஒரு முறை இந்த தெரப்பியை செய்துகொள்வது நல்லது.

p96a.jpg

சிகிச்சைக்கு முன்பு கவனிக்க வேண்டியவை!

சிகிச்சைக்குப் பின் உடனே முழுப் பலன்களும் தெரியாது. தொடர்ந்து செய்துவந்தால், நல்ல பலன்கள் கிட்டும்.

p97a.jpg

ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்ற சரும சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டும். அனைவருமே உடல்நலம், மனநலம் மற்றும் தோற்றத்தைச் சீராகப் பராமரித்துக்கொள்வது முக்கியம். ஆண், பெண் இருவருமே தங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். பிரச்னைகளுக்கு தெரப்பி எடுத்தால் மட்டும் போதாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல்முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம்தான், விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய முடியும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் பிரச்னைகளைப் பொறுத்து, சிகிச்சைகள் மாறுபடும். அவரவர்களுக்கான சிகிச்சைக் காலமும், மூலிகைகளும் வேறுபடும். மசாஜ் மற்றும் தெரப்பிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளாக இருக்க வேண்டும். மூலிகை, எண்ணெய், கிரீம் போன்றவற்றை முறையான பக்குவத்துடன் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

p98a.jpg

சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை!

சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், சிகிச்சையின் பலன்கள் நீடித்து இருக்கும்.

p99a.jpg

சிகிச்சைக்குப் பின் சோப்பு போட்டு, வெந்நீரில் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது ஸ்கார்ஃப், குடை போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்லலாம்.

குறைந்தது, எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. அதுவும் முன் தூங்கி முன் எழும் பழக்கமும் இருந்தால், சருமத் தொல்லைகளுக்கு வாய்ப்பே இருக்காது. எண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். இவை, உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும்.

அக்குள் பகுதியில் கருமை நீங்க!

சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். கை தூக்குவதற்குக்கூடத் தயங்குவார்கள். ரேசர் பயன்டுத்தி அதிக அளவில் ஷேவ் செய்வது, மரபியல் காரணங்கள், அதிகப்படியான வியர்வை, டியோடரன்ட், அதிக கெமிக்கல் நிறைந்த பர்ஃப்யூம் பயன்படுத்துவது போன்றவை கருமை நிறத்தைத் தரலாம்.

p100a.jpg

கருமை நீங்க: ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அக்குள் பகுதியில் பூசலாம்.

கடலை மாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், புளித்த தயிர் - 2 டீஸ்பூன் எடுத்து, ஒன்றாகக் கலந்து பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம். வாரத்தில் நான்கு முறை இதைச்செய்ய கருமை நீங்கிவிடும். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர, இந்தப் பிரச்னை முற்றிலுமாக நீங்கிவிடும்.

மூட்டுகளில் கருமை நீங்க...

சிலருக்கு, கை, கால் மற்றும் கணுக்கால் மூட்டுக்கள் கருமையாக இருக்கும். நாற்காலியின் கைப்பிடியில் கை மூட்டுகள் படுமாறு அமர்வது, அந்த இடத்தைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவது, மரபியல் காரணங்களால் இந்தப் பிரச்னை இருக்கும்.

p101a.jpg

2 டீஸ்பூன் புளித்த தயிருடன், 2 டீஸ்பூன் வினிகர் கலந்து, மூட்டுகளில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து மிதமான நீரீல் கழுவிவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

டார்க் லிப்ஸ்

வெள்ளரிச் சாறு, தேன், பன்னீர் தலா ஒரு டீஸ்பூன் கலந்து, இதில் பஞ்சை நனைத்து உதட்டின் மேல் அந்தப் பஞ்சை வைத்துக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்துவந்தால் கருமை நீங்கி, உதடு இயற்கையாகவே சிவப்பாகும்.

ஸ்ட்ரெச் மார்க்

பிரசவத்துக்குப் பிறகு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருக்கும். பராமரிப்பைப் பொறுத்து, தழும்புகளின் நிறம் அடையாளமாகத் தெரியும். ஆப்ரிகாட்டை வெட்டி, அதன் கொட்டையை நீக்கிவிட்டு, அதில் சிறிது பால்விட்டு மையாக அரைக்க வேண்டும். இந்தக் கலவையை ஸ்ட்ரெச் மார்க் மீது பூசி, 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரில் இன்னொரு முறை கழுவ வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் செய்ய, ஸ்ட்ரெச் மார்க் நீங்கும்.

முகத்தில் கருமை நீங்கிட...

p103a.jpg

எட்டு பாதாம்களை முந்தைய நாள் இரவில் ஊறவைத்துவிட வேண்டும்.  மறுநாள் இவற்றுடன் சிறிது பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி, இந்தக் கலவையைப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

சரும நிறம் அதிகரிக்க உதவும். இளமையான தோற்றம் கிடைக்கும். ஸ்ட்ரெச் மார்க், தழும்புகள், வடுக்கள் உள்ள இடங்களில் தடவிவர கருமை நீங்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினரும், அதிகமாகப் பருக்கள் இருப்பவர்களும் இந்த சிகிச்சையைத் தவிர்க்கலாம்.

முகப்பொலிவுக்கு...

p014a.jpg

மஞ்சள் - அரை டீஸ்பூன், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் கலந்து முகம், கழுத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

வறட்சி, எண்ணெய், சென்சிட்டிவ், நார்மல் போன்ற சருமத்தினர் வாரம் ஒரு முறை செய்துவரலாம்.

அனைத்துச் சருமத்தினரும் செய்ய வேண்டிய மூலிகை மாஸ்க் இது. இதை, வீட்டிலேயே செய்யலாம்.

எண்ணெய்ப் பசை சருமத்துக்கு...

p105a.jpg

முகத்தை இரு முறை கழுவினாலும் சிலருக்கு எண்ணெய் வடியும். முகத்தில், எண்ணெய் சுரப்பு அதிகமாக இருப்பதனாலும் பருக்கள் வரலாம். இவர்கள், இரண்டு டீஸ்பூன் தக்காளிச் சாற்றை எடுத்து முகத்தில் பூசி வர, எண்ணெய்ப் பசை நீங்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு ஓரளவுக்குக் கட்டுக்குள்வரும்.

புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகத்தில் எண்ணெய்ப் பசை படிப்படியாக நீங்கிவிடும்.

பருக்கள் நிறைந்த சருமத்துக்கு...

சிலருக்கு, பருக்கள் முகம் முழுதும் பரவி, முக அழகைக் கெடுத்து, பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். எண்ணெய் சுரப்பு, ஹார்மோன் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தீர்வு காண்பது சிறிது கஷ்டம்தான்.

கொழுந்து வேப்பிலை இலைகளைப் பறித்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து, முகம் முழுக்க ஃபேஸ் பேக்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

சருமத்தில் இருக்கும் நச்சுக்களை அகற்றும் சக்தி புதினா இலைகளுக்கு உண்டு. புதினா இலைகளைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் முழுமையாக, திக்காகப் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, பருக்கள் குறையும். தொடர்ந்து, இதைச் செய்துவந்தால், பருக்கள் உருவாவது தடுக்கப்படும்.

p106a.jpg

இறந்த செல்கள் நீங்க...

பச்சைப் பயறு மாவு, அரிசி மாவு, தேன், தயிர் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் அரை டீஸ்பூன் கலந்து, முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட, இறந்த செல்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிடும்.

முதலில், மிதமான நீரில் கழுவிய பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். செல்கள் புத்துயிர் பெறும். முகமும் பிரகாசமாகும். வாரம் இரு முறை செய்திட, முகம் அழகாக ‘பளிச்’ என இருக்கும். கரும்புள்ளிகள் மறையும்.

கரும்புள்ளிகள் நீங்க...

ஒரு சிறிய கிளாஸில் பால், அரை கிளாஸ் தண்ணீர், ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடி ஆகிய வற்றைக் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். அரை கிளாஸாக சுண்டிய பின் அந்தப் பாலில் பஞ்சை நனைத்து, முகம் முழுவதும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

கரும்புள்ளிகள் மறைந்து சருமம் சீராகும். அழகான தோற்றம் கிடைக்கும். கறுப்பான சருமம் இருப்பவர்களுக்கு நல்ல ஸ்கின் லைட்னிங் சிகிச்சை இது.

p109a.jpg

சன் டேன் நீங்க...

இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழையின் சதைப்பகுதி, பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு தலா இரண்டு டீஸ்பூன் கலந்து, சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, சன் டேன் சரியாகிவிடும். ஐஸ் க்யூப்களால் ஐந்து நிமிடங்களுக்கு முகம் முழுவதும் மசாஜ் செய்யலாம். இதனால், திறந்த சருமத் துளைகள் மூடிக்கொள்ளும். அழுக்கு, தூசு போன்றவை  உள்ளே நுழையாது. கோடை காலத்தில் சருமத்தைப் பராமரிக்க எளிய வழி இது.

வெயிலில் அலைந்து பின், மாலையில் அல்லது இரவில் இந்த சிகிச்சையைச்செய்ய வேண்டும். காலையில் செய்வதைத் தவிர்க்கலாம். 

சருமத்தை அழகாக்கும் எளிய சிகிச்சைகள்...

ஓட்ஸ் மீல் சால்ட் ஸ்க்ரப் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, முகத்தை நன்றாகக் கழுவிய பின் பூச வேண்டும்.

பிறகு, முகம் முழுதும் மென்மையாக ஸ்க்ரப்செய்ய வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.

பிரகாசமான சருமத்துக்கு...

வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்த கேரட் ஜூஸ் குடிக்க, சரும செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். புதிய செல்கள் உருவாக உதவும்.

மது, சிகரெட், காபி, டீ தவிர்த்துவிட்டு, மூலிகை டீ குடித்துப் பழகலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் ப்ரிம்ரோஸ் ஆயில் (Primrose oil) மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிடலாம். இழந்த சருமப்பொலிவு மீண்டும் கிடைக்கும்.

எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இனிப்புத் தேவைக்கு தேனும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை மீன், முட்டை சாப்பிட்டுவரலாம்.

p110a.jpg

பிரகாசமான சருமத்துக்கு...

வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்த கேரட் ஜூஸ் குடிக்க, சரும செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். புதிய செல்கள் உருவாக உதவும்.

மது, சிகரெட், காபி, டீ தவிர்த்துவிட்டு, மூலிகை டீ குடித்துப் பழகலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் ப்ரிம்ரோஸ் ஆயில் (Primrose oil) மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிடலாம். இழந்த சருமப்பொலிவு மீண்டும் கிடைக்கும்.

எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இனிப்புத் தேவைக்கு தேனும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை மீன், முட்டை சாப்பிட்டுவரலாம்.

ஸ்டீமிங்

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், 5 துளிகள் லாவெண்டர் ஆயில், 5 புதினா ஆகியவற்றை வெந்நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் வரை ஆவி பிடித்த பின், முகத்தைத் துடைக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய்ப் பசையை வெளியேற்ற முகத்தில் ஆவி பிடிக்கலாம். கிளென்சிங், மட் பேக் போடும் முன் ஸ்டீமிங் செய்வது நல்லது.

முட்டையின் வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்

முட்டையின் வெள்ளைக்கரு - 1, ஆப்பிள் சிடர் - 1 வினிகர்-பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன் ஆகியவற்றை பேஸ்ட்டாகக் கலந்து, முகம் முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் பவுடர் - 2 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

ஃப்ரூட் பேக்

p113a%281%29.jpg

பப்பாளி - இரண்டு துண்டுகள், யோகர்ட் - 1 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கூழாக்கி, முகத்தில் பூசிய 20 நிமிடங்களுக்குப் பிறகு, மிதமான நீரால் கழுவவும்.

வீட்டில் செய்யக்கூடிய சருமப் பராமரிப்புகள்...

சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கரைத்து, கை, கால்களில் ஸ்க்ரப் செய்தால், கை, கால்கள் சுத்தமாகும்.

ரசாயனங்கள் கலந்த கிரீம்கள், எண்ணெய், ஷாம்பு போன்றவற்றைத் தவிர்த்து, எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் முகம் கழுவுவது, மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, காய்கறிகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் உடல் அழகுபெறும்.

தக்காளி, எலுமிச்சைச் சாறு, தயிர், தேன், கேரட் போன்றவற்றால் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.

சூரியக் கதிர்கள் பாதித்த சருமத்தில் (சன் டேன்), புளித்த தயிரைத் தடவினால், கருமை நீங்கிவிடும்.

p115a.jpg

கை, கால்களைச் சுத்தப்படுத்த, இளஞ்சூடான நீரில், எலுமிச்சைச் சாறு மற்றும் கல் உப்பைப் போட்டு, அதில் கை, கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சருமம் பொலிவுபெறும்.

இளஞ்சூடான நீரில் முகம் கழுவினால், சருமத் துளைகள் திறந்துகொள்ளும். அதற்குப் பின், சாதாரண நீரில் முகம் கழுவ, மீண்டும் மூடிக்கொள்ளும்.

உலர் சருமம், தோல் உரிதல் போன்ற எந்த சருமப் பிரச்னையாக இருந்தாலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும்  இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்துவது நல்லது.

எலுமிச்சைச் சாறை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

தினமும் நமது சமையலில், மூன்று ஏலக்காய் விதைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சருமம் சீராகும்.

அலர்ஜி இல்லாதவர்கள், குங்குமாதித் தைலத்தைக் குளிக்கும் முன் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாதாரண நீரால் முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது. இதனால், தூசு, அழுக்கு, புகை, சூரியக் கதிர்களின் தாக்கம் போன்றவை குறையும்.

அக்ரூட், உலர் திராட்சை, பேரீச்சை தலா இரண்டு, பாதாம் நான்கு எடுத்து, இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்த நாள், இவற்றைச் சாப்பிடலாம். உடலில் ரத்த உற்பத்தி சீராக இருக்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்தல் பிரச்னை சரியாகும். உடல் ஆரோக்கியமாகும்.

ஏலாதித் தேங்காய் எண்ணெய், நால்பாமராதி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய் நம் சருமத்துக்குப் பொருந்துகிறதோ, அதை மருத்துவரின் ஆலோசனையுடன் முகம், சருமம் முழுவதும் பூசிக் கழுவலாம். குளிக்கும் முன், எண்ணெய் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், சருமம் புத்துயிர்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

p111a.jpg

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, புரத உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். முட்டை, முளைகட்டியப் பயறு வகைகள், பாதாம், வால்நட், பருப்பு, பால், மோர் ஆகியவற்றைச் சாப்பிட்டால், கூந்தல் உதிர்தல் பிரச்னை நிற்கும். மாலத்யாதி, செம்பருத்தியாதி போன்ற எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனையுடன் தடவிவந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.

சீரற்ற ஹார்மோன் செயல்பாடுகள், மெனோபாஸ், மன அழுத்தம், பொடுகு, ஊட்டச்சத்துக் குறைபாடு, மாசற்ற சூழல், ஏ.சி-க்குக் கீழ் உட்காருதல் போன்றவையால் முடி உதிரும். இதில், எந்தக் காரணத்தால் பிரச்னை எனக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகள், உணவு, எண்ணெய் போன்றவற்றைப் பின்பற்றிவந்தால், பிரச்னை சரியாகும்.

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கீழாநெல்லி போன்றவற்றைச் சம அளவில் எடுத்து, கூந்தலில் ஹேர் பேக்போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அலசினால், இளநரை கறுப்பாகும்; கூந்தலின் வளர்ச்சி சீராகவும் கருகருவெனவும் இருக்கும்.

காலையில் ஃப்ரெஷ்ஷான காற்றில் 15 நிமிடங்கள் பிராணயாமம் செய்வதால், ஆக்சிஜன் சீராக உடலில் பாய்ந்து, ஒவ்வொரு செல்லுக்கும் சென்று, செல்களைத் தூண்டிவிடும். இறந்த செல்களையும் நீக்கிவிடும். தினமும் தவறாமல் நாடிசுத்தி, பிராணயாமம் செய்பவர்களின் முகம் பொலிவுடன் காணப்படும்.

ஆரோக்கியமான சருமத்துக்கு...

சருமத்தை ஆரோக்கியமாக்கும் புரதம்

அழகான சருமம், கூந்தல், நகத்துக்கு அவசியமான சத்தாக இருப்பது புரதம். பால் பொருட்கள், சோயா, அரிசி, யோகர்ட், முட்டை, மீன், சிக்கன், மட்டனில் புரதம் அதிகமாக இருக்கிறது. பாதாம், எள், பூசணி விதை, வெள்ளரி விதையிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

p119a.jpg

நல்ல பாக்டீரியா உருவாக உதவும் கால்சியம்

தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிட்டால், அதில் உள்ள அசிடோஃபிலஸ் (Acidophilus) எனும் நல்ல பாக்டீரியா செரிமானத்துக்கு உதவும். பாதாம், கேழ்வரகு மற்றும் எள்ளில் கால்சியம் சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும்.

பளபளப்புக்கு நீர்ச்சத்துக்கள்...

உடலில் தேவையான நீர்ச்சத்துக்கள் இருப்பின், அது சருமத்தைப் பளபளப்பாக மாற்றும். உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை வெளியேற்ற, நீர்ச்சத்துக்கள் உதவும். காலையில் குடிக்கும் எலுமிச்சைச் சாறு, வெள்ளரிச் சாறு கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இதன் விளைவாக, சருமம் பொலிவாக மாறும்.

சரும நிறத்துக்கு வைட்டமின் சிவைட்டமின் சி சத்துக்கள், அஸ்கார்பிக் அமிலத்தை கொண்டுள்ளன. இந்தச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தேவை. கொலஜனை உற்பத்திசெய்ய, வைட்டமின் சி உதவுகிறது. சருமம் மிருதுவாக, பளபளப்பாக, ஆரோக்கியத்துடன் இருக்க உதவுவது வைட்டமின் சி சத்து.

p120a.jpg

சீரான செரிமானமே சருமத்தின் ஆரோக்கியம் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உட்கார்ந்து, மெதுவாக மென்று சுவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால், செரிமானம் சீராகும். செரிமான சக்தி சீராக இல்லை என்றால், செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலம் உணவில் உள்ள புரதத்தை உடைத்துவிடும். இதனால், புரதச்சத்து உடலில் சேராத நிலை ஏற்படும்.  ஆரோக்கியமற்ற சருமம், முடி உதிர்தல், நகம் அடிக்கடி உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கிரீம்களைவிட உணவே பெஸ்ட்!

காஸ்ட்லியான கிரீம்களைப் பூசுவதைவிட, ஒரு ஆரஞ்சோ, கேரட்டோ சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். பல நாட்கள் கிரீம் தடவி சருமத்தைப் பராமரிப்பதைவிட தினம் ஒரு பழம் சாப்பிட்டு, பலன்களை இரட்டிப்பாக்க முடியும்.

p121a.jpg

சரும அழகைத் தரும் ரெசிப்பிக்கள்...

சருமத்துக்கு எனச் சில ரெசிப்பிகள் உண்டு. அதாவது, இந்த ரெசிப்பிகளில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சருமத்தின் நண்பன். சருமத்துக்கு உகந்த பொருட்கள் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரியும் போது பலன்கள் இரட்டிப்பாகும்.

p122a%281%29.jpg

பொதுவாக, காய்கறிகள், பழங்களின் கூட்டு, சருமத்துக்கு அற்புதமான தோற்றத்தைத் தரும். நமது அன்றாட உணவுப் பட்டியலில் இவற்றைச் சேர்த்துக்கொண்டால், சருமப் பராமரிப்பின் வேலையும் மிச்சமாகும். இவை அழகைத் தருவது மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ரெசிப்பிக்கள்.

p123a.jpg

கேரட் பாதாம் கூலர்

தேவையானவை

நறுக்கிய கேரட் - 3

பாதாம் - 10

நறுக்கிய பேரீச்சம் பழம் - 10

பால் அல்லது சோயா பால் - 1 கப்.

p125a.jpg

செய்முறை: கேரட், பாதாம், பேரீச்சை ஆகியவற்றை ஒரு கப் பால் ஊற்றி வேகவிட வேண்டும். இவற்றை மிக்ஸியில் அரைத்து, ஸ்மூத்தியாக்க வேண்டும். இவை குளிர்ந்த பிறகு, மீதம் இருக்கும் பாலைக் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்துச் சில்லென்ற டிரிங்க் பருகலாம்.

பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பேரீச்சையில் உள்ள இரும்புச்சத்து, பாலில் உள்ள கால்சியம் சேர்ந்து கிடைக்கும் ஃப்ரெஷ் டிரிங்க் இது. சருமம், கூந்தல் ஆரோக்கியமாகும். உடலுக்கும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 2 கப்

வாழைப்பழம் - 2 (சிறியது)

பொடியாக நறுக்கிய புதினா - 2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

யோகர்ட் - 1 கப்

வென்னிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்.

p127a.jpg

செய்முறை:  எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். நீர் சேர்க்காமல் இருந்தால், திக் ஸ்மூத்தியாகக் கிடைக்கும்.

பலன்கள்: ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், எலாஜிக் ஆசிட் சருமத்துக்கான மினுமினுப்பைத் தரும். இளமையை நீட்டிக்கவைக்கும் உணவாகக் கருதப்படுவது யோகர்ட், இதனுடன் வைட்டமின் சி சத்துக்களும் சேர்வதால், ஸ்கின் ஃப்ரெண்ட்லி ஸ்மூத்தி இது.

கீரை சூப்

தேவையானவை

சுத்தம் செய்த கீரைகள் - 2 கட்டு

தேங்காய்ப் பால் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

சிவப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்

உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப.

p129a.jpg

செய்முறை: கீரையில் உப்பு போட்டு வேகவைக்க வேண்டும். இதனுடன், தேங்காய்ப் பால், தண்ணீருடன் கலந்து, கீரைகளை மிதமாகக் கொதிக்கவிட வேண்டும். உப்பு, மிளகு, மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.

பலன்கள்: ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், சருமத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் ஆரோக்கியமாகவும், ‘பளிச்’ என்றும் மாறவும் உதவும்.

கலர்ஃபுல் சூப்

தேவையானவை

நறுக்கிய பரங்கிக்காய் - 1 கப்

நறுக்கிய கேரட் - 1 கப்

தக்காளி - 2 (பெரிய சைஸ்)

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

உப்பு, மிளகு, மிளகாய் ஃப்ளேக்ஸ் - சுவைக்கு ஏற்ப.

p130a.jpg

செய்முறை: பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்க வேண்டும்.தண்ணீர், உப்பு, மிளகாய் ஃப்ளேக்ஸ், மிளகு ஆகியவற்றைக் கலந்து கொதிக்கவிட வேண்டும். காய்கள் வெந்த பிறகு, இறக்கி அரைக்க வேண்டும். அரைத்த கலவையை மீண்டும் அடுப்பில்வைத்து, ஆரஞ்சு ஜூஸ் கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டாகரோட்டின், லைகோபீன் சத்துக்கள் கிடைக்கின்றன. ஒமேகா 3 சத்துக்கள், இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கும். சத்துக்களை உடல் எளிதில் கிரகிக்க, ஆரஞ்சு ஜூஸ் உதவும்.

கலர்ஃபுல் சாலட்

தேவையானவை: வெங்காயம் - 1, குடமிளகாய் - 1, கேரட் - 1, தக்காளி - 1, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை: காய்கறிகளை வட்ட வடிவில் மெலிதாக அரிந்துகொள்ள வேண்டும். வெந்நீரில் போட்டு ஒரு நிமிடத்தில் எடுத்துவிட்ட பின்னர், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம்.

p132a.jpg

பலன்கள்: சருமத்துக்கான சிறந்த கிளென்சராக இந்த சாலட் இருக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கும். இதை மாலை வேளையில் அனைவரும் சாப்பிட்டுவர, சருமப் பொலிவு கிடைப்பது உறுதி.

பவர் பேக்டு சாலட்

தேவையானவை: முட்டைகோஸ், கேரட், குடமிளகாய், முளைவிட்ட தானியங்கள், தக்காளி, ஸ்பிரிங் ஆனியன் (நறுக்கியது) - 1 கப், கரம் மசாலா - 1 சிட்டிகை, உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெந்நீரில் தானியங்கள், காய்கறிகளைப் போட்டு, இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, நீரை வடிகட்டிவிட்டு, அதில் கரம் மசாலா, உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாலட்டாகச் சாப்பிடலாம்.

p134a.jpg

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை கிளென்ஸ் செய்யும் சாலட்டாக இது அமையும். காலை அல்லது மாலையில் சாப்பிட ஏற்றது. சருமத்துக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.

சருமம் அழகாக என்ன சாப்பிடலாம்?

p136.jpg

கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும்.

வைட்டமின் ஏ, சி நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால், சருமம் பிரகாசிக்கும்.

பப்பாளி, எலுமிச்சை, கிவி, கேரட், கீரைகள், முட்டை, ஆரஞ்சு, சிவப்புக் கொய்யா, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், அன்னாசி, மாம்பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

ஜனவரி - 27

 

653valrau2.jpg1695 : ஓட்­டோமான் பேர­ரசின் மன்னன் இரண்டாம் அஹ­மது இறந்­ததை அடுத்து இரண்டாம் முஸ்­தபா மன்­ன­ரானார்.

 

1880 : தோமஸ் அல்வா எடிசன் வெள்­ளொ­ளிர்வு விளக்­குக்­கான காப்­பு­ரிமை பெற்றார்.

 

1915 : ஐக்­கிய அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் ஹெயிட்­டியை ஆக்­கி­ர­மித்­தனர்.

 

1918 : பின்­லாந்தில் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­னது.

 

1924 : விளா­டிமிர் லெனினின் உடல் மொஸ்­கோவின் செஞ்­ச­துக்­கத்தில்  அடக்கம் செய்­யப்­பட்­டது.

 

1926 : ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பை நடத்திக் காட்­டினார்.

 

1938 : நியூ யோர்க்கில் நயா­கரா நீர்­வீழ்ச்­சியில் நயா­கரா பாலம் உடைந்து வீழ்ந்­தது.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடு­களின் இரு ஆண்­டு­க­ளுக்கு மேல் நீடித்த  லெனின்­கிராட் ஆக்­கி­ர­மிப்பு முடி­வுக்கு வந்­தது.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் லட்­சக்­க­ணக்­கான யூதர்கள் குரூ­ர­மாகக் கொல்­லப்­பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்­தி­ர­வதை முகாமில் எஞ்­சி­யி­ருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்­ப­டை­யி­னரால் விடு­விக்­கப்­பட்­டனர்.

 

1967 : அப்­பலோ 1 விண்­வெளி வீரர்­க­ளான கஸ் கிறிஸம், எட்வர்ட் வைட், ரொஜர் சஃபி ஆகியோர் கென்­னடி விண்­வெளி மையத்தில் தமது விண்­க­லத்தைப் பரி­சோ­திக்கும் போது இடம்­பெற்ற தீ விபத்தில் கொல்­லப்­பட்­டனர்.

 

1973  : வியட்நாம் போரை முடி­வுக்குக் கொண்டு வந்த உடன்­பாடு பாரிஸ் நகரில் எட்­டப்­பட்­டது.

 

1984 : பொப்­பிசைப் பாடகர் மைக்கல் ஜக்ஸன், விளம்­பர படப்­பி­டிப்­பொன்­றின்­ போது தீவி­பத்­துக்­குள்­ளானார். 

 

1996 : நைஜரில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் நாட்டின் முத­லா­வது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டு இரா­ணுவத் தள­பதி இப்­ராகிம் மயி­னா­சரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

 

2002 : நைஜீ­ரி­யாவின் லாகோஸ் நகரில் இரா­ணுவக் களஞ்­சி­ய­மொன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களில் 1,100 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

 

2011 : யேமனில் அர­சாங்­கத்­துக்கு எதிராக அந்நாட்டு தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

 

2013 : பிரேஸிலில் இரவு விடுதியொன் றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 242 பேர் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=653#sthash.NrMLzIn2.dpuf
  • தொடங்கியவர்

2,100 பேரை மீட்ட யூனுஸுக்கு அண்ணா பதக்கம்

12525400_1061624557229667_16589368342235

கடந்தாண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய 2,100 பேரை முகமது யூனுஸ் மீட்டு காப்பாற்றினார். அவரது செயலை பாராட்டி யூனுஸுக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு சிறப்பித்துள்ளது. மேலும், ஆய்வாளர் பாஸ்கர், சீனிவாசன், செல்வன் ரிஷி ஆகியோருக்கும் முதல்வர் ஜெயலலிதா பதக்கத்தை வழங்கினார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12473526_976529655729062_649820573556064

 

இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸின் பிறந்த நாள் இன்று.

இலங்கை இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்.
உலகின் மிகச் சிறந்த இடது கை வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர்.
இப்போது அயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
வாழ்த்துக்கள் வாஸ்.
  • தொடங்கியவர்

ஜனவரி 27: மொசார்ட் எனும் மாபெரும் இசைஞானி பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு..

 

mozart.jpgசிலருக்கு பிறவியிலேயே இசைஞானம் வாய்த்திருக்கும் என்பார்களே அப்படி ஒரு மாமேதை மொசார்ட். ஏழாவது குழந்தையாக பிறந்த அவர் மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டிய பொழுது மக்கள் சொக்கி நின்றனர் ; நான்கு வயதில் இசை நூல்களை கற்றுத்தேறினார்.

ஐந்து வயதில் தானே பாடல்களையும்,ஏழு மற்றும் எட்டு வயதுகளில் முறையே சோனட் மற்றும் சிம்பனிக்களை இயற்றினார் , பத்து வயதிற்குள் இசை கருவிகள் யாவற்றையும் இயற்றுகிற ஆற்றல் அவருக்கு வாய்த்தது . அவரின் இசை கேட்ட பதினைந்து நிமிடங்கள் மனிதர்கள் பரவசத்தில் உறைந்து போவதாக சொல்ல வருங்காலத்தில் இசையால்  மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் அது மொசார்ட் விளைவு என்றே அழைக்கபட்டது.

வெறும் பத்து வயதில் இவர் இசைக்கோர்வையை   கேட்டு  ஆஸ்திரியா ராணி  இவரை மடியில் அள்ளிக் கொஞ்சினார் அவர் . மித்ரிடட் டி போன்டிட் எனும் இசைக்கோர்வையை பதினான்கு வயதில் இவர் வாசித்த பொழுது பலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்க சொல்லி மக்கள் நெகிழ்ந்தார்கள் . மண வாழ்க்கை சோகமானதாக அமைந்தது , இசையில் ஆறுதல் தேடினார் மனிதர் .; இசையிலேயே மூழ்கினார்

24 வயதிலே புகழ்பெறத்துவங்கி, மன்னரின் விருப்பத்திற்குரிய இசைக்கலைஞராக கௌரவிக்கப்பட்ட சலேரி என்பவர் அரண்மனையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இசை அமைப்பது, இளவரசர்களுக்கு இசை கற்றுதருவது, சபையில் இசை வாசிப்பது என்று முக்கிய புள்ளியாக இருந்தார்.அதை மொசார்ட் உடைத்து காண்பித்தார் ,இவர் இசைத்த இடங்களில் மக்கள் கண்ணீர் சிந்தினார்கள் ; தேவகானம் கேட்பதாக ,இறைவனே கூட வந்து விரும்பி கேட்பதாக சிலிர்த்தார்கள் .

இதைக்கண்டு மனம் வெம்பினார் சலேரி .இதை ஒட்டி எடுக்கப்பட்ட அமேடிஸ் படம் எட்டு ஆஸ்கர்களை அள்ளியது . தன் வாழ்நாளில் வறுமையில் தான் பெரும்பாலும் அவர் வாடினார் ; கடன் சுமையால் பாதிக்கபட்டு இருந்தார் . அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிரிவதற்கு சிலகாலத்துக்கு முன்பு மாயக்குழல் எனும் இசைக்கோர்வையை உருவாக்கினார் .

அவர் 35 வயதில் மரணமடைந்தார். அன்றைக்கு ஆஸ்திரியாவில் இருந்த சடங்குகளின் படி அவரை பலபேர் அடக்கம் செய்யப்பட்ட சவக்குழியில் அடக்கம் செய்தார்கள் ; மக்கள் பெரும்பாலும் அவரை வழியனுப்ப வரவில்லை -அதுவும் ஆஸ்திரியாவின் பழக்கமே . அவர் இறந்த பிறகு எண்ணற்ற நூல்கள் எழுந்து அவர் புகழை மீண்டும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின ; இசை உள்ள காலமெல்லாம் அவரின் கோர்வைகளும் உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும்

vikatan.com

  • தொடங்கியவர்

 

 

 

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கண்டு தரிசித்த இணுவைக்கந்தனின் தைபூசத்தின உலகப்பெருமஞ்ச பெருந்திருவிழா தென்னிந்தியாவின் உலகப்புகழ் தமிழ் தொலைக்காட்சியான Sun TV யில் இன்றைய தினம் ஒளிபரப்பபட்டது. இலங்கையின் புகழ் பெற்ற வர்ணனையாளர் கு.வீரா அவர்கள் நேர்முக வர்ண்ணனையை வழங்கி இருக்கின்றார்....
இணுவைக்கந்த பெருமானுக்கு அடியார்கள் எடுத்த காவடிகள், பால்குடங்கள், கோவில்வாசல் திறப்பு விழா மற்றும் பால் அபிஷேகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்ற உலகப்பெருமஞ்ச பவனி என அனைத்து தொகுப்புக்களையும் தொகுத்து வழங்கி இருந்தனர் SunTv நிறுவனத்தினர்....
அக் காணொளி உங்கள் பார்வைக்காக....
தைபூசத்தின உலகப்பெருமஞ்ச திருவிழாவை காண காத்திருந்த அனைத்து அடியவர்களின் எதிர்பார்ப்பையும் இத் தொகுப்பு நிவர்த்தி செய்கின்றது....
காண கிடைக்காத இந்த தைபூச நிகழ்வுக் காணொளியை பகிர்ந்து உலகில் உள்ள முருகன் அடியவர்கள் எல்லோருக்கும் முருகனின் அருள் பெற வழிசெய்யுங்கள்.....
இணுவைக்கந்தன் சார்பாக தாங்களாக முன்வந்து நேரலை ஒளிபரப்பு செய்த SunTv தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் Astro Ulagam தொலைக்காட்சி நிறுவனர்த்தினர்க்கும் மிக்க நன்றிகள்.....

 

  • தொடங்கியவர்

11056556_976547455727282_160476466863096

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், சுழல் பந்துவீச்சாளர், சகலதுறையாளர் டானியேல் வெட்டோரியின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

வருடாந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் விருது விழாவில் விருதுகள் பெற்ற அவுஸ்திரேலிய வீரர்கள்..(படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் மிகச் சிறந்த வீரர் - டேவிட் வோர்னர்
மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்- டேவிட் வோர்னர்
மிகச்சிறந்த ஒருநாள் வீரர் - க்லென் மக்ஸ்வெல்
மிகச்ச்சிறந்த வீராங்கனை - எலிசா பெரி
மிகச்சிறந்த உள்நாட்டு வீரர் - அடம் வோஜஸ்
மிகச்சிறந்த இளையவீரர் - அலெக்ஸ் றோஸ்

12645147_528624127304107_237382320081810

12647344_528624200637433_634370034343136

12592237_528624213970765_627397012192781

12642944_528624207304099_621723357088441

12647277_528624240637429_145867702634576

12592404_528624253970761_909114066608779

12573744_528625893970597_666635665271989

12631297_528625890637264_163865704805152

12417642_528625897303930_641157585819308

12645083_528625953970591_843364456584333

12552977_528625950637258_507562001437053

SOORIAN FM

  • தொடங்கியவர்

கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்

12647032_1062136127178510_74658932033539

 

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான கிருஷ்ணனுடன் சமமாக விளையாடிய இன்னொரு கிருஷ்ணன் இருந்தார் என்றால், அது ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறு யாருமல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!

சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.

சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.

டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.

விகடன்

  • தொடங்கியவர்

VnKO4cE.gif

அடியாத்தீ.... என்னா கண்ணு!   

  • தொடங்கியவர்

12628482_976555392393155_302307417569994

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கிய கிரேம் பொல்லொக்கின் பிறந்தநாள்.
இவரது பெறாமகன் தான் பின்னாளில் தென் ஆபிரிக்காவுக்குத் தலைமை தாங்கிய ஷோன் பொல்லொக்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎01‎/‎2016 at 11:59 PM, குமாரசாமி said:

எனக்கு ஒரு மூண்டு சாறி வேணும். :cool:

 

 

எதுக்கு அண்ணேய் 3 சாறி

  • தொடங்கியவர்

திருடனுக்கு நாய் கூறிய பதில்...

12604895_999645220108664_427179648042457

 

ஒரு திருடன் ஒரு வீட்டிற்கு திருடச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு நாய் இருந்திருக்கிறது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குலைத்தால் என்ன செய்வது என்று கவலை.

இப்போதே குலைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று எண்ணம்.

யோசித்தவன் முடிவாக பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதைக்கண்டவுடன் நாய் திருடனை நோக்கி பாய்ந்துள்ளது.

அப்போது திருடன் நாயிடம், "சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக உனக்கு பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னிடம் ஏன் சண்டை இடுகிறாய்" என்று கேட்டிருக்கிறான்.

அதற்கு அந்த நாய் சொல்லி இருக்கிறது...
நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக, தெரிந்தவராக இருக்குமோ என்று யோசனையாக இருந்தது.

எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை வழங்கினாயோ அப்போது உறுதியாகிவிட்டது நீ திருடன் என்று, அதனால்தான் என்று சொன்னதாம்.

யோசிக்க வேண்டிய விஷயம்தானே?

 

  • தொடங்கியவர்

 

 

யாருடா தம்பி நீ..... ஏன்யா இப்படி????

 

  • தொடங்கியவர்

சொல்வனம்

இரவில் தூரமாகும் ஊர் 

கோவில்பட்டியிலிருந்து

புளியங்குளம் கிராமத்திற்கு

இரவில் போவதென்றால்

பத்துக்கண் பாலத்தில் ஒரு பேயையும்

ஒற்றைப் பனைமர முனியையும்

மஞ்சனத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்

தாவு பால வெள்ளைப் பிசாசையும் கடந்தே

இன்றுவரை ஊர் வழக்கத்தில்

வெகுதூரம் பயணிக்கிறோம்.

பகலில் போவதென்றால்

காலேஜ் தாண்டியதும்

ஒத்தக்கடை நிறுத்தத்தில்

வலது பக்கம் திரும்பினாலே

ஊர் வந்துவிடுகிறது.

p66a.jpg

vikatan

  • தொடங்கியவர்

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்!

 

ம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.

The-Diving-Bell-and-the-Butterfly.jpg

அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான   "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.

பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.

குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.

Jean-Dominique-Bauby-01.jpg

வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.

The-Diving-Bell-and-the-Butterfly-DI.jpg

கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார் தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.

41D43yaI08L__SY344_BO1,204,203,200_.jpg

இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால், பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.

பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.

உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைத்திருக்கிறார்.

விகடன்

On 25/01/2016 at 5:29 AM, குமாரசாமி said:

எனக்கு ஒரு மூண்டு சாறி வேணும். :cool:

டேய் பையா! அண்ணைக்கு 3 சாறி பார்சல்.

பில் 328 155ரூபா.

(இப்பவெல்லாம் சாரி ஒரு தடவை மட்டும் பாவிக்கும் பொருளாகிவிட்டது. அது தண்ணீரில் நனைஞ்சா என்ன நனையாட்டி என்ன).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.