Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966

உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை நிறுவனரான டிஸ்னி (தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக

 
உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966
 
உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை நிறுவனரான டிஸ்னி (தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் 59 ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கார் விருதை வென்றது உலக சாதனைப் படைத்தார்.

ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

http://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வருந்தும் விராட்டின் ’ஒரு தலைக் காதலி’! : தேற்றும் ரசிகர்கள்

 
 

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் திருமணத்தால் அதிகம் கவலை அடைந்துள்ளவர், இங்கிலாந்தின் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வயட்.

விராட், டேனியல் வயட்

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்தாலியில் இனிதே நடைபெற்றது. 29 வயதான விருஷ்கா ஜோடி, இந்து சமயச் சடங்குகளைப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு, இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவிலிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், இந்தத் திருமணத்தால் மிகுந்த மனவருத்தத்துக்கு ஒருவர் உள்ளாகியுள்ளார். அவர், டேனியல் வயட். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டின் வீராங்கனையான இவர், கடந்த 2014-ம் ஆண்டு “கோலி, என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று ட்விட் மூலம் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். பின்னர், இங்கிலாந்தில் நடந்த டி-20 கிரிக்கெட் தொடரின்போது டேனியல் வயட்டை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தார் கோலி.

தற்போது விராட்- அனுஷ்கா திருமணத்துக்கு மிகுந்த வருத்தங்களுடன் ‘வாழ்த்துகள்’ தெரிவித்துள்ளார், டேனியல் வயட். இதற்கு பதிலளித்துள்ள விராட், “வாழ்க்கை நகரும்...” எனக் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மன வேதனையில் இருக்கும் டேனியல் வயட்டுக்கு இந்திய ரசிகர்கள் பலர் இந்தியில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான காதல் தோல்வி பாடல்களை கேட்குமாறும் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

https://www.vikatan.com

அனுஷ்கா மற்றும் விராட் கோலியின் வைரலாகும் தேனிலவு புகைப்படம்.!

அனுஷ்கா மற்றும் விராட் கோலியின் வைரலாகும் தேனிலவு புகைப்படம்.!

  • தொடங்கியவர்

2010 : கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் படகு உடைந்ததால் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் பலி

வரலாற்றில் இன்று….

டிசம்பர் – 15

 

1256 : மொங்­கோ­லியப் பேர­ரசன் குலாகு கான் அலா­முட்­டினால் (தற்­போ­தைய ஈரானில்) எனும் இடம் கைப்­பற்றி அழிக்­கப்­பட்­டது.

1891 : கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1905 : அலெக்­சாண்டர் புஷ்­கினின் கலா­சாரப் பழ­மை­களைப் பேணும் பொருட்டு ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்­கப்­பட்­டது.

varalaru2-2.jpg1914 : முதலாம் உலகப் போர்: சேர்­பிய இரா­ணுவம் தலை­நகர் பெல்­கி­ரேடை மீண்டும் கைப்­பற்­றி­யது.

1914 : ஜப்­பானில் மிட்­சு­பிஷி நிலக்­கரிச் சுரங்­கத்தில் ஏற்­பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : யுக்­ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசி­க­ளினால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1960 : நேபாள மன்னர் மஹேந்­திரா அந்­நாட்டு அர­சாங்­கத்தைக் கலைத்து நாட்டின் முழு அதி­கா­ரத்­தையும் தன­தாக்கிக் கொண்டார்.

1967 : அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் ஒகையோ ஆற்­றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்­ததில் 46 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1970 : சோவியத் ஒன்­றி­யத்தின் வெனேரா 7 விண்­கலம் வெள்ளிக் கோளின் மேற்­ப­ரப்பில் மெது­வாக இறங்­கிய முத­லா­வது கல­மா­கி­யதும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்­கிய முத­லா­வது விண்­க­ல­மாகும்.

1970 : தென் கொரியப் பய­ணிகள் கப்பல் கொரிய நீரி­ணையில் மூழ்­கி­யதில் 308 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1978 : மக்கள் சீனக் குடி­ய­ரசை அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும் தாய்­வா­னு­ட­னான உற­வு­களைத் துண்­டிப்­ப­தா­கவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் அறி­வித்தார்.

1981: லெப­னானின் பெய்ரூட் நகரில் ஈராக்­கிய தூத­ரகம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் லெபனா­னுக்­கான ஈராக் தூதுவர் உட்­பட 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1994 : இணைய உலாவி நெட்ஸ்கேப் நவி­கேட்டர் 1.0 வெளி­யி­டப்­பட்­டது.

1997 : தஜி­கிஸ்தான் விமா­ன­மொன்று ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் ஷார்ஜா விமான நிலை­யத்­துக்கு அருகில் வீழ்ந்து நொறுங்­கி­யதில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1997 : தென் கிழக்கு ஆசி­யாவை அணு­வா­யு­த­மற்ற பகு­தி­யாக அறி­விக்கும் உடன்­ப­டிக்கை பாங்­கொக்கில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.
2000: செர்­னோபில் நகரில் மூன்­றா­வது அணு உலை மூடப்­பட்­டது.

2001 : பைஸாவின் சாயும் கோபுரம் 11 ஆண்­டு­களின் பின்னர் மீண்டும் திறக்­கப்­பட்­டது.

2006 : கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் கலா­நிதி சிவ­சுப்­பி­ர­ம­ணியம் ரவீந்­தி­ரநாத் கொழும்பில் இனம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­க­ளினால் கடத்­தப்­பட்டார்.

2009 : போயிங் நிறு­வ­னத்தின் 787 விமானம் முதல் தட­வை­யாக அமெ­ரிக்­காவின் சியாட்டில் நக­ரி­லி­ருந்து பறந்­தது.

2010 : புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் 90 பேரை ஏற்றிச் சென்ற பட­கொன்று அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறையில் மோதி உடைந்ததால் 48 பேர் உயிரிழந்தனர்.

2014: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹோட்டலொன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரை பணயக்கைதியாக பிடித்துவைத்திருந்தான். பொலிஸாரின் முற்றுகையின்போது துப்பாக்கிதாரி உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரு கிளாஸ் டீ குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள் இன்று சர்வதேச ‘டீ தினம்’!

 

 
e73f18787087d54ee5c36a458d8f7bbf

 

மழைச் சாரலில் சிலிர்த்தபடியே ரோட்டோரத்து கடைகளில் இருக்கும் கண்ணாடி குவளையில் டீ பருகியவாரே பெய்யும் மழையில் தொலைந்து போகும் ரசிகரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ரசனையுடன் நீங்கள் குடிக்கும் இந்த தேநீரில் உள்ள பயன்களையும் அதை பற்றிய சுவாரசிய தகவல்களையும் அறிவீர்களா?

என்னதான் இப்போதெல்லாம் குறைவாக மழை பெய்தாலும், வேலைக் கெடுபிடிகளுக்கு மத்தியில், ஏற்கனவே குளிர் சாதன அறையில் பாதி உறைந்த நிலையில் இருக்கும் பலரது மனதில் எழும் எண்ணம், ‘இப்போ சுடச்சுட ஒரு நல்ல டீ சாப்பிட வேண்டும்’ என்பதே. 

தேயிலையில் இருக்கும் பாலிபினால் என்ற கலவை சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மிக்கது. முச்சுமுட்டும் வாகன புகைகளுக்கு மத்தியில் தினமும் பயணிப்பவர்களுக்கு அன்றாடம் டீ குடிக்கும் பழக்கம் இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். 

ckmnp_216427.jpg

உணவு முறைகளின் மாற்றம், மன அழுத்தம், பணிச்சுமை, இரவில் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் மட்டுமில்லாமல் இயல்பாகவே வயது காரணமாக ஏற்படக்கூடிய சுருக்கம், நினைவாற்றல் குறைப்பாடு ஆகியவற்றில் இருந்தும் நம் உடலையும், மூளையையும் இந்த டீ குடிக்கும் பழக்கம் பாதுகாக்கும்.

தேயிலைகள் பல வகைப்படும், ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகையில் சுவையான தேநீரை நமக்கு தருகிறது. உதாரனத்திற்கு;

  • மசாலா டீ
  • கிரீன் டீ
  • பிளாக் டீ


மசாலா டீ:

vegan-masala-chai-5.jpg

என்னதான் தேநீரின் பிறப்பிடம் சீனா என்றாலும், இந்தியாவின் பாரம்பரிய தேநீர் வகைக்கு என தனி சிறப்புண்டு. மசாலா டீ அதாவது ‘சாய்’ என்று பரவலாக அழைக்கப்படும் இதில் தேயிலையுடன் ஏலக்காய், இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகுகிறோம். இது நம் நாட்டின் இயற்கை சூழலுக்கு ஏற்ற ஒரு பானமாகும். இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களுக்குமே தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு என்பது பலரும் அறிந்ததே. இது உடல் வீக்கம், தொண்டை பிரச்னை, சளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என ஒரு சர்வ நோய் நிவாரணியாக செயல்படுகிறது.

கிரீன் டீ:

150060635_XS.jpg

இந்த பெயர் பல டீ விரும்பிகளுக்கு பிடிக்காத ஒன்றுதான் என்றாலும் இதில் நிறைந்துள்ள பயன்கள் ஏராளம். ‘உடல் எடையை குறைக்க வேண்டுமா? இளமையாகவே இருக்க வேண்டுமா? கிரீன் டீ குடியுங்கள், இதுதான் என் அழகின் ரகசியம்’ என்று பல முன்னனி நடிகைகள் அடிக்கடி விளம்பரங்களில் வந்து இவ்வாறு சொல்வதை நாம் பார்த்திருப்போம். உண்மையில் அதுதான் அவர்களுடைய அழகின் ரகசியமா என்று தெரியாது ஆனால், கிரீன் டீ நிஜமாகவே உடல் எடையை குறைப்பதோடு, மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துவது, வாய் புண்ணை சரி செய்வது போன்ற பல நன்மைகளை வழங்கவல்லது.

பிளாக் டீ:

432699-black-tea.jpg

தலைவலிக்குது நல்லா ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சாதான் சரியாகும்னு அடிக்கடி ஃபீல் பன்னுபவரா நீங்கள்? அப்போ சரிதாங்க, உண்மையில் ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு அதிக திடமான பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. அது மட்டுமின்றி சிறுநீரக கோளாறு, குறைந்த ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய பாதுகாப்பு என இன்னும் பல நன்மைகளையும் தரக்கூடியது. 

 

டீ பருகாதவர்களை விட டீ குடிப்பவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 3% வரை உங்கள் உடலின் கலோரியை டீ குறைக்க வல்லது. அதாவது தினமும் 60-70 கலோரிகளை குறைப்பதன் மூலம் எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் 3.5 கிலோ வரை உடல் எடையை உங்களால் இழக்க முடியும்.  

தேநீரில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்ஸ் பேக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் பற்களின் மேற்பரப்பில் உருவாகும் படலம் போன்றவற்றிலிருந்து பற்களை பாதுகாக்கும். இன்னும் சொல்லப்போனால் தேநீரில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது வெண்மையான பற்களையும் தரும். எனவே வெள்ளை பற்களுடன் கூடிய அழகிய சிரிப்புக்கு தேநீரில் சர்க்கரை சேர்ப்பதை தவிருங்கள்.

tumblr_nf9qvmc5GM1r498yho1_500.jpg

காபியைவிட தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் 50% குறைவான கஃபைன் அளவே உள்ளது. அதனால் தேநீரில் கெடுதலே இல்லையா என்று கேட்காதீர்கள், ‘அளவுக்கு மீறினல் அமிழ்தமும் நஞ்சு’ எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற அளவு டீ குடிப்பதில் எந்தவொரு அபாயமும் இல்லை. அடுத்து வரவிருக்கும் மழை காலத்தில் உங்களை உற்சகப்படுத்துவதோடு உடலிற்கும் பல நன்மைகளும் தரும் என்கிற நம்பிக்கையோடு தேநீரை சுடச்சுட பருகி மகிழுங்கள். 

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க'

 

WhatsAppImage2017-12-02at5_(1)_19193.jpg

 

டிசம்பர் என்றாலே பாபர் மசூதி, வெடிகுண்டு, சுனாமி, ஜெயலலிதா மரணம் என்று எத்தனை சோகங்கள்! `இந்த மாதம் அப்படி ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக்கூடாது’ என்று என்னை மாதிரி நாத்திகர்களையே கடவுளிடம் வேண்டவைப்பதுதான் டிசம்பர் மாத டிசைன். ஆனால், இந்த டிசம்பர் மாதம், என் காதல்களை எல்லாம் தாண்டி நினைவில் நிற்கும் என நினைக்கிறேன். காரணம், கொல்லிமலை ட்ரிப்.

விஷால், தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ மீம் ஒன்றைப்  பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஆசிரியரிடம் இருந்து பீப் மெசேஜ். `கொல்லிமலை ட்ரிப்... என்னாச்சு?’

அடடா! ரூம், போட்டோகிராபர் என்று அவசரம் அவசரமாக ஸ்கெட்ச் போட்டேன். சில நேரங்களில் அவசரமும் அவசியமும்தான் வாழ்க்கையை போரடிக்காமல் வைத்துக்கொள்கிறது. தூக்கமே வரவில்லை.

`சம்முவம்... எட்றா வண்டியை’ என்று எனக்கு நானே நாட்டாமையாக மாறி, காலையில் ஒரு மாருதி காரைக் கிளப்பினேன். ‘Meet me @ Trichy...’ என்று ஒரு ஹோட்டல் பெயரைக் குறிப்பிட்டு, போட்டோகிராபருக்கு ஒரு மெசேஜ். `நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலைக்குப் போக, திருச்சிக்கு எதுக்கு வரச் சொல்றான் இந்த ஆளு’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது எனக்குக் கேட்டுவிட்டது. நீங்கள் நினைப்பது ஒரு வகையில் சரிதான்.

சென்னையிலிருந்து கொல்லிமலை செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று வழிகள். வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக நாமக்கல் செல்வது ஒன்று. விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் வலதுபுறம் திரும்பி கள்ளக்குறிச்சி வழியாக ஆத்தூர் டச் பண்ணிவிட்டு நாமக்கல் போவது மற்றொரு ரூட். வேலூருக்கு முன்பே இடதுபுறம் திரும்பி ஆரணி, திருக்கோவிலூர் வழியாகவும் ஒரு ரூட் சொன்னது ஜிபிஎஸ். ஆனால், எப்படியும் நாமக்கல் போக வேண்டும். இதுவே திருச்சிக்காரர்களுக்கு என்றால் ரொம்ப ஈஸி. ஏனென்றால், நான் டூர் கிளம்பியதே லேட். திருச்சியில் தங்கிவிட்டுக் கிளம்பினால், டென்ஷன் ஃப்ரீ என்று நினைத்ததுதான் இதற்குக் காரணம்.

கொல்லிமலை

வழக்கம்போல, செங்கல்பட்டு வரை டிராஃபிக் பெப்பே காட்டியது. ஸ்டீரியோவை ஆன் செய்து இளையராஜா பாட்டு போட்டேன். பயணத்துக்கும் இளையராஜாவுக்கும் ஆரம்ப காலங்களில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு டோல் தாண்டும்போது, `நீங்க வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?’ என்ற போட்டோகிராபரின் மெசேஜுக்கு, `எட்டு இளையராஜா பாட்டு' என்று ரிப்ளை செய்தேன். (உபயம்: `வலைபாயுதே' )

ஆட்டுக்கு தாடி மாதிரியும் நாட்டுக்கு கவர்னர் மாதிரியும் இந்த டோல்கேட்டுகள். நெடுஞ்சாலைக்குத் தேவைதானா என்றொரு சந்தேகம், எனக்கு ரொம்ப நாளாக இருக்கிறது. (தெரிந்தவர்கள் கமென்ட் செய்யலாம்.) நல்ல சாலை இருந்தால்தான் பயணம் ஸ்மூத்தாக இருக்கும். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கரடுமுரடான ரோடுகளுக்கும் டோல் பில்லை கலெக்ட் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில டோல்களில், இலங்கை கிரிக்கெட் டீம்போல் தகிடுதத்தமெல்லாம் பண்ணுகிறார்கள். விழுப்புரம் டோல்கேட்டில், என் பில்லை செக் செய்தேன். வேறு ஏதோ ஒரு கார் நம்பர் இருந்தது. இறங்கி சண்டை போட்ட பிறகு, வேறு பில் தந்தார்கள். இன்னொரு டோலில், கார் நம்பர் என்கிற இடத்தில் இரண்டு கார்களையே நிறுத்திவிடலாம்போல் காலி இடம்தான் இருந்தது. பிறகு நயமாக விசாரித்தேன். அதாவது, சில தனவான்களுக்கு டோல்களில் நிற்பதற்கு நேரமெல்லாம் இருக்காது. பில்லை வாங்கக்கூட நேரமில்லாத அவர்கள், விட்டுச்செல்லும் பில்களை இப்படிக் கைமாற்றிவிடுவது நடப்பதாகத் துப்பறிந்தேன். ஒருசிலர், டெம்ப்ளேட் பில்லெல்லாம் ரெடி பண்ணி வைத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், வெளியூர் நம்பர் பிளேட்கொண்ட கார்களில் பயணம் செய்பவர்களுக்கு, டோல் பில் என்பது மிகவும் முக்கியம். MH ரிஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருந்த என் நண்பர், டோல் பில் இல்லாததால், நெடுஞ்சாலை RTO-வில் 50,000 ரூபாய் வரை தண்டம் அழுதார்.

திருச்சியில் நன்றாகத் தூங்கினேன். புகைப்பட நிபுணர் உற்சாகமாகக் கிளம்பினார். வழக்கம்போல பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்லோவாகவே முடித்து, லேட்டாகத்தான் கிளம்பினேன். ஸாரி, கிளம்பினோம். முசிறி, தொட்டியம் வழியாக கார் பறந்தது. மதியம் வந்திருந்தது. `பசிக்குது பாஸ்’ என்பதுபோல வயிற்றைத் தடவி குறிப்பால் உணர்த்தினார் புகைப்பட நிபுணர். `அட, லன்ச் வந்திடுச்சு!’ வேலைன்னு வந்துட்டா வேலைக்காரனாக மாறிவிடும் என்னைப் பற்றித் தெரிந்துதான், அவர் ஞாபகப்படுத்தியிருப்பார். நெடுஞ்சாலையில் செல்பவர்கள் ஹோட்டல்களில், மோட்டல்களில் நுழைந்து தண்டம் அழுவதைவிட, நல்ல ஆப்ஷன் சொல்கிறேன். `மண்பானைச் சமையல்' என்று போர்டு தென்பட்டால், தைரியமாக உள்ளே நுழையலாம். நாமக்கல் செல்லும் பாதை முழுக்க மண்பாண்டச் சமையல் குடிசைகள் ஏராளம். அதுவும் அசைவப் பிரியர்களுக்கு சிக்கன், மட்டன், மத்தி மீன் குழம்பு என்று மத்தியான சாப்பாடு, செ`மத்தியான’ சாப்பாடுதான். நீங்களே ஒரு நாட்டுக்கோழியைத் தேர்ந்தெடுத்து சூப், குழம்பு, வறுவல் எனப் பொறுமையாக உண்டு கழித்துவிட்டுச் செல்லலாம். `ஜிஎஸ்டி-தான் குறைஞ்சிடுச்சே’ என்பவர்களுக்கு, நல்ல ரெஸ்டாரன்ட்களும் இருக்கின்றன.

கொல்லிமலை

நாட்டுக்கோழி ஏப்பம் வந்தது. அடுத்து, சேந்தமங்கலம் என்றோர் ஊர் வந்தது. பஸ்ஸில் வருபவர்களுக்கு சரியான ஆப்ஷன், சேந்தமங்கலம். நாமக்கல் அல்லது  சேந்தமங்கலத்திலிருந்து பேருந்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சேந்தமங்கலம் தாண்டி 15 கி.மீ-க்கு முன்பாகவே மொத்த மலையும் தெரிய ஆரம்பிக்கிறது.

கார்களில் வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ். தமிழகத்தில் செம ட்ரிக்கான மலைப்பாதையைக் கொண்டது கொல்லிமலை. எத்தனை வளைவு நெளிவுகள்... ஏற்ற இறக்கங்கள்! கொண்டை ஊசி என்பது, கொல்லிமலைக்குத்தான் பொருந்தும். `இப்போதான் கார் வாங்கிப் பழகிட்டிருக்கேன். அப்படியே கொல்லிமலைக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம்'னு என்று யாராவது நினைத்திருந்தால், சேந்தமங்கலத்திலேயே `யூ-டர்ன்’ அடித்துவிடுங்கள். வாகனம் ஓட்டப் பழகுவதற்குச் சரியான இடம் அல்ல கொல்லிமலை. இங்கு, நீங்கள் ஒருமுறை பாதுகாப்பாக கார் ஓட்டிவிட்டால், உங்களைப்போல திறமையான ஓட்டுநர் எவரும் இல்லை.

செக்போஸ்ட் இருந்தது. எம்.எல்.ஏ-க்கள் இல்லாத கூவத்தூர் ரிசார்ட் மாதிரி காலியாகவே இருந்தது. ``கீழே வருவதற்கு டைமிங் உண்டா’' என்று விசாரித்தேன். ``அப்படி ஏதும் இல்லை'' என்றார்கள். காரவள்ளியிலிருந்து மலைப்பாதை ஆரம்பித்தது. சும்மா இல்லை; மொத்தம் 70 கொண்டை ஊசிகள். 4 மீட்டருக்கு மேற்பட்ட செடான் கார் என்றால், அதன் டர்னிங் ரேடியஸ் மலைத்திருப்பங்களில் பத்தாது. ட்ரக், பஸ் போன்ற பெரிய வாகனங்கள், கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி வரைதான் அனுமதிக்கப்படுகின்றன. சில 100/150 சிசி பைக் ரைடர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நான், சில இடங்களில் ரிவர்ஸ் வருவது, அப்புறம் மேலேறுவது என பழக்கமாக்கிக்கொண்டேன். மலைச் சாலைகளில் ஏறும் வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக டிரைவர்கள் இதில் கவனமாக இருந்தது வியப்பு! இறங்கும்போது, இது எனக்கும் பொருந்தும். தயவுசெய்து, மலையில் மேலேறுபவர்களுக்கு வழிவிடுங்கள்.

கொல்லிமலை

பரீட்சைக்குப் போகும் மாணவனின் மனநிலையில் இருந்தேன். அபூர்வமான மூலிகைகள், குள்ளர் குகை, சிறுதானியங்கள், மூச்சு முட்டும் மூலிகை அருவிகள் என கொல்லிமலையைப் பற்றி ஏற்கெனவே கூகுள் செய்திருந்தேன். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,300 மீட்டர் உயரம் என்றார்கள். மலை உச்சியிலிருந்து பார்த்தால், பச்சை பச்சையாக இச்சையைத் தூண்டியது மொத்த அழகும். சாயங்காலத்துக்குள்  70 கொண்டை ஊசிகளையும் தாண்டியிருந்தேன்.

செம்மேடு வந்திருந்தது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். அழகிய பள்ளத்தாக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதுபோல இருந்தது ஊர். இந்தக் கிழக்குத்தொடர்ச்சி மலையில் வெயிலுக்கு என்ட்ரி போர்டே இருக்காதுபோல! செம குளிர். பழைய ஹாலிவுட் படங்களில் வரும் வின்டேஜ் கிராமம்போல இருந்தது. ஒன்றிரண்டு ஹோட்டல்கள், ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட், அதில் ஒரே ஒரு பஸ் நின்றது. ``இதான் கடைசி பஸ்’’ என்றார்கள். ஊரில் ஏதோ ஒரு வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. மனித மணம் குறைவு என்பதால், மாசுக்குறைபாடே இல்லாமல் இயற்கை மணத்துடன் நிறைந்திருந்தது செம்மேடு.

கொல்லிமலை

கொல்லிமலைக்கு சீஸன் டைம் என்ற ஒன்றே கிடையாது. எனவே, சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு எப்போதுமே பிரச்னை வந்ததே இல்லையாம். ரூம் விசாரித்தேன். என்னைப் போன்ற முன்ஜாக்கிரதைப் பேர்வழிகளைப் பார்த்து, `போயா லூஸு' என்பதுபோல பல்லிளித்தன காலியாக இருந்த சில காட்டேஜ்கள். நான், ஏற்கெனவே ரூம் புக் செய்திருந்தேன். 600-லிருந்து 1,500 வரை ரூம்கள்  கிடைக்கின்றன. செம்மேட்டில் இருந்த `வசந்த மாளிகை’ எனும் ஹோட்டலில் குளிரக்குளிர பரோட்டாவைப் பிய்த்துப்போட்டு, ரூமில் தஞ்சம் புகுந்தோம்.

திடீரென இரவில் கண்விழித்தேன். கனவில் கொல்லிப்பாவை வந்தது. நான் ஸ்டேட் போர்டு என்பதால், பள்ளியில் கொல்லிப்பாவை பற்றிப் படித்தது ஞாபகம் வந்திருக்கலாம். மற்றபடி CBSE மாணவர்களுக்கு பாரி, ஓரி, கொல்லிப்பாவை எல்லாம் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. `பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்று ரஜினிக்கு முன்பே, பள்ளி வயதிலேயே எனக்கு பன்ச் டயலாக் சொல்லி மிரட்டியது கொல்லிமலைதான். `இங்கே போறவங்களை எல்லாம் அந்தக் கொல்லிப் பேய் கொன்னுடுமாம்’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இங்குள்ள மூலிகைகளைக் காப்பதற்காக சித்தர்கள் செய்த ட்ரிக்.

கொல்லிமலை

மறுநாள் ரெஃப்ரெஷ்மென்ட், அதே வசந்த மாளிகையில்தான். வழக்கம்போல, குளு குளு தோசை. வல்வில் ஓரி எனும் மாவீரன் ஆண்ட இடம் கொல்லிமலை. ஒரே அம்பில் யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு என்று  ஐந்து விலங்குகளைப் பதம்பார்த்த வில்லாளன். மலைப்பாதையில் வல்வில் ஓரி பற்றி ஓவியம் வரைந்திருந்தார்கள். இங்கே, ஓரிக்குத் திருவிழாகூட நடக்கிறது. செம்மேட்டின் நடுவில் ஓரிக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். ஊர்க்காரர் ஒருவரிடம் விசாரித்தேன். ``ஆகஸ்ட் மாதம்தான் முடிஞ்சது’’ என்று எனக்காக நிஜமாகவே வருத்தப்பட்டார்.

அப்படியே வலதுபுறத்தில் வண்டியைத் திருப்பினேன். ``ஏதோ வியூ பாயின்ட் இருக்குன்னு சொன்னாங்களே...’' என்று விசாரித்தேன். சீக்குப்பாறை, சேளூர், கோயிலூர் என மூன்று வியூ பாயின்ட்களைக் காட்டினார்கள். பில்லரிலிருந்து பார்த்தால், சில ஆயிரம் அடிகளுக்குப் பரந்துவிரிந்து மனதைக் கொள்ளைகொண்டது கொல்லிமலை அடிவாரம். குழந்தைகளைக் கூட்டிச் செல்பவர்கள், ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பு ஏதும் இல்லை.

கொல்லிமலையில் ரொம்ப ஃபேமஸ், அரப்பளீஸ்வரர் ஆலயம். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்து இன்ஜினீயர்போல யோசித்தேன். `டைம் மெஷின் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்’ எனத் தோன்றியது. ராசிபுரத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, அரப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து சுரங்கப்பாதை ஒன்று அந்தக் காலத்தில் கட்டியதாகச் சொல்கிறார்கள். ``இன்னும்கூட இருக்கு!’’ என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னார் ஒரு முண்டாசுப் பெருசு. அருவியில் குளிக்க, மலை ஏற என்பதைத் தாண்டி அரப்பளீஸ்வரர் கோயிலுக்காகவே சில பக்தர்கள் கொல்லிமலைக்கு மலையேறுகிறார்கள்.

 

கொல்லிமலை

`ஹிஸ்டரி, கோயில்னா நமக்கு அலர்ஜிங்க’ என்பவர்களுக்காகவே இருக்கிறது ஆகாச கங்கை அருவி. 140 அடி உயரத்தில் ஆகாசத்திலிருந்து கொட்டுவதுபோல இருப்பதால், இதற்கு `ஆகாச கங்கை அருவி' என்று பெயர். இந்த அருவிக்கும் சீஸன் இல்லையாம். `வெச்சா பரட்டை; சிரைச்சா மொட்டை’ என்பதுபோல  சில அருவிகள், சில நேரங்களில் `கரகாட்டக்காரன்' சண்முக சுந்தரம்போல ஓவராகப் பொங்கும்; பல நேரங்களில் கோவணத் துணிபோல தொங்கும். ஆகாச கங்கை அப்படி அல்ல. திருமண வீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எந்நேரமும் வேலைபார்த்துக்கொண்டே இருக்கும் தந்தைபோல, 24/7 விழுந்துகொண்டே இருக்கிறது ஆகாச கங்கை. 

`நோ பெய்ன்; நோ கெய்ன்’ என்பதுபோல, ஆகாச கங்கையை அசால்ட்டாக அடைய முடியாது. வாசலில் இருக்கும் அரப்பளீஸ்வரர் கோயிலில் காரை பார்க் செய்துவிட்டு, குளிர் தோசை செமிக்கும் அளவுக்கு 1,200 படிகள் இறங்கித்தான் ஆகாச கங்கையில் தஞ்சமடைந்தேன். பாதி படியிலேயே சிலர், எதிர்க்கட்சிக்காரர்களிடம் அடிவாங்கிய வண்டுமுருகன்போல சுருண்டுகிடந்தார்கள். ``இறங்கும்போது ஒண்ணும் தெரியமாட்டேங்கு; ஏறும்போது மூச்சு வாங்குதுடே!’’ என்றார் ஒரு குடும்பத் தலைவர். திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பார்கள் என்று நான் நினைத்தது சரியாக இருந்தது. ``எங்கூர்ல தாமிரபரணி ஆத்துல குளிக்கிறகணக்கா சுகமாத்தாம் இருக்கு. ஆனா, ஏற முடியலை பார்த்துக்கிடுங்க!’’ என்றார். இவர்களுக்காகவே, மேலே கோயில் வாசலில் சிற்றருவி ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். அடம்பிடிப்பவர்களை ‘வாக்கிங் அட் ஓன் ரிஸ்க்’ என்று எச்சரித்துதான் அனுப்புகிறார்கள்.

கொல்லிமலை

அய்யாற்றிலிருந்து விழும் அருவி நீரைத் தலைக்கு வாங்கினால், ‘தொம் தொம்’ என ஆசீர்வசிப்பதுபோலவே இருக்கிறது. 300 அடி என்றார்கள். எனக்கு நிறைய அடி விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தேன். ‘ஆகாச கங்கைனு சரியாகத்தான் பேர் வெச்சிருக்காங்க’ என்று நினைத்துக்கொண்டேன்.

அருவியை ஒட்டினாற்போல சருகுகளில் சறுக்கியபடி லேசாக நடந்துபோனால், ஒரு குகை தெரிந்தது. பாம்பாட்டிச் சித்தர் குகை என்றார்கள். சித்தர்கள் காலத்தில் இந்தப் பாம்பாட்டிச் சித்தர் ரொம்ப ஃபேமஸ்போல. அவர் இந்தக் குகையில் தங்கியிருந்ததால், அவர் பெயரையே இந்தக் குகைக்கு வைத்துவிட்டார்கள். ‘மனிதர் உணர்ந்துகொள்ள’ என்று சவுண்டு விட்டுப் பார்த்தேன். `குணா' குகைபோல எக்கோ அடித்தது.

மறுபடியும் 1,200 படி மேலே ஏறுவதற்கு வார்ம்-அப் செய்துகொண்டேன். இந்த முறை நான் வண்டுமுருகன் ஆனேன். ``வேற ஏதும் அருவி இருக்கா?’’ என்று விசாரித்தேன். `மாசிலா அருவி' என்று ஓர் அருவியைக் காட்டினார்கள். தான் வரும் வழியெல்லாம் இருக்கும் மூலிகைகளைக் கட்டியணைத்து, அவற்றின் சிறப்புகளைத் தன்னிலடக்கி, ஸ்படிகம் போன்ற தண்ணீரைத் தரும் அருவி என்பதால், மாசிலா அருவி. ஆகாச கங்கைபோல பிரமாண்டமாக இல்லை என்றாலும் அருவிக்கான வசீகரத்துக்குக் குறைவில்லை.  தண்ணீர்ப் பஞ்சத்தில்தானே அடிக்கடி குளிக்கக்கூடாது? அருவிக்கு இது பொருந்தாது. மீண்டும் அருவிக் குளியல். தலை நனைக்கும்போதே ஆனந்தமாக இருந்தது. ஒரு மகிழ்ச்சியான விஷயம் - ஆகாச கங்கைபோல, படிகளெல்லாம் இறங்கி மூச்சுவாங்க வேண்டியதில்லை. இது தவிர, வாண்டுகளுக்கு என்று ஓர் ஆப்ஷன் இருக்கிறது. `நம்ம அருவி'. வீட்டில் குழாயைத் திருக்கிவிட்டால் தண்ணீர் விழுமே... அதுபோல செல்லமாக விழுவதுதான் நம்ம அருவியின் ஸ்பெஷல். இதற்கு சீஸன் உண்டு. கோடைக்காலங்களில் ‘கிணறு காணாமல்போன’ கதையாக, அருவியையே தேடவேண்டியிருக்கும் என்றார்கள். 

கொல்லிமலை

`போட்டிங் போனா தேவலாம்’ என்று மனசு சொல்லியது. வாசலூர்ப்பட்டி என்கிற இடத்தில் போட்டிங் சவாரிக்கு ஆள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப மலிவாக இருந்தது. 50 ரூபாய்தான் கட்டணம் வாங்கினார்கள். செம ஜாலியாக இருந்தது. சின்ன ஏரியில் ஆபத்தே இல்லாத வாத்துப் படகில் மிதந்தபடி போனேன்.  சில இடங்களில் போட்டிங் போனால் டெரராக இருக்கும். இந்த போட்டிங், `தடால்’ என தண்ணீருக்குள் டைவ் அடிக்க வேண்டும்போல இருந்தது. `நீச்சல் தெரிஞ்சா பயமே தேவையில்லை’ என்று யாரோ தைரியமூட்டியதுதான் காரணம். ஏரியும் அவ்வளவாக ஆழமில்லை.

கொல்லிமலை

கொல்லிமலை, வாழவந்தி நாடு, வளப்பூர், அரியூர், தின்னனூர், குண்டூர், சேளூர், தேவனூர், ஆலந்தூர், குண்டுனி, திருப்புலி, எடநாடு என்று 16 நாடுகளைக்கொண்ட கொல்லிமலையில், 20,000-த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.

அரிய மூலிகைகளின் புதையலாக இருப்பதால்தான், மற்ற அருவிகளைவிட கொல்லிமலை அருவிகளுக்கு ஒரு மதிப்பு. ஜோதிப்புல், ஆளை மறைக்கும் ஆதள மூலிகை, ஆயுளைக் கூட்டும் தினை, ராகி, வரகு என ஏகப்பட்ட சிறுதானியங்கள் கொல்லிமலையில் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள் மலைவாழ் மக்கள். ஆதள மூலிகையைப் பற்றி ஓர் அதிசயம் சொன்னார்கள். இந்த மூலிகையின் இலையைக் கிள்ளி, அதிலிருந்து வரும் பாலுடன் கரும்பூனையின் முடியைப் போட்டு, செம்புப் பாத்திரத்தில் சுடவைத்து, மலைத்தேன் கொண்டு பிசைந்து, உருண்டையாக்கி, செப்புத் தகடு இந்திரத்தினுள் மூடி, வாயில் போட்டு அதக்கினால்... யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையலாம் என்றார்கள். கேட்கும்போதே மூச்சு முட்டியது... கண்ணைக் கட்டியது!

கொல்லிமலையில் ஓர் ஆச்சர்யம் - சமதளத்தில் பயிரிடப்படுவதைப்போல, இந்த மலைக் கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. அதற்கான சீதோஷ்ணநிலைதான் இதற்குக் காரணம். ஓர் இடத்தில் மிளகு புரொடக்‌ஷன் நடந்துகொண்டிருந்தது. நாம் சூப்பர் மார்க்கெட் மற்றும் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் பாக்கெட் மிளகு, தேர்டு குவாலிட்டி என்கிற உண்மை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ``இதைச் சவைச்சுப் பாருங்க’’ என்று இனிப்பாகப் பேசி காரமான ஒரு குறுமிளகைக் கொடுத்தார், ஓர் அக்கா. ஃபர்ஸ்ட் குவாலிட்டிபோல. கண்கள் வியர்க்க ஆரம்பித்தன. அரைக்கிலோ 250 ரூபாய்க்கு ஃபர்ஸ்ட் குவாலிட்டியை பேக் செய்து கொண்டோம்.

கொல்லிமலை

இது தவிர அன்னாசிப்பழம், பலா, வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஏலக்காய், தேன் என வழியெங்கும் விளைவித்துக்கொண்டிருந்தார்கள். கொல்லிமலை மொத்தம் 250 ச.கி.மீதான் என்பதாலும், முட்டை வடிவில் இருக்கும் என்பதாலும்  நீங்கள் எங்கு காணாமல்போய் அலைந்தாலும், உங்கள் கார் தானாகவே செம்மேட்டில்தான் வந்து நிற்கும். கன்னாபின்னாவென சந்து பொந்துகளுடன் ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ‘ரூட் மாறிடுச்சோ’ எனக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமில் லன்ச் முடித்தோம். டூர் முடித்துவிட்டு வந்தது தெரியாமல், ``சார், கார் வேணுமா? டவேரா சார்... 6 பேர் சார்... 6 இடம் சுத்திக் காண்பிக்கிறோம்... 1,700 ரூபாய்தான் சார். உங்களுக்காக கம்மி பண்ணிக்கலாம் சார்’’ என்று சுற்றிவளைத்தார்கள் கைடுகள். பஸ்களில் வருபவர்களுக்கு இவர்கள்தான் சரியான ஆப்ஷன். நாம் கார் கஸ்டமர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதும், அவர்கள் முகம் வாடியது. நல்ல கஸ்டமர்கள் கிடைக்க வேண்டிக்கொண்டேன்.

செம்மேட்டிலிருந்து மலை இறங்க ஆரம்பித்தேன். மலை ஏறும்போது கனவுகளைச் சுமந்து ஏறியவன், இப்போது நினைவுகளைச் சுமந்து இறங்கிக்கொண்டிருந்தேன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இவரை தெரியுமா? - நிக் வுட்மேன்

 
16CHPDJ%20WOOD

$ உலகின் முன்னணி கேமரா நிறுவனமான கோபுரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2002-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ இவரின் மொத்த சொத்து மதிப்பு 94.7கோடி டாலர்

$ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விஷுவல் ஆர்ட்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.

$ எம்பவர்ஆல் டாட் காம் என்ற நிறுவனத்தை தொடங்கியவர். பன்பக் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியவர்.

$ எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வழங்கக்கூடிய சிறந்த தொழில்முனைவோருக்கான விருதை 2013-ம் ஆண்டு பெற்றவர்.

$ சிலிக்கான் வேலி அறக்கட்டளையை தொடங்கி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

$ 2014-ம் ஆண்டுக்கான பொறியியல் துறைக்கான எம்மி விருதை பெற்றவர்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

99233167dantdm1jpg
99108522gettylilly2jpg
99233167dantdm1jpg
99108522gettylilly2jpg

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

99108515dantdm1jpg

இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் போகிமோன் ஆகிய விளையாட்டுகளை காணொளியாக பதிவு செய்து யூடியூபில் பகிரத் தொடங்கினார்.

16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை யூடியூபில் பெற்றுள்ள இவரின் காணொளிகளை 10 பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

99108522gettylilly2jpg

Lilly Singh is the only woman on the list   -  Getty Images

டான் மிடில்டன் என்பதை தனது இயற்பெயராக கொண்ட இவர், கடந்த ஆண்டின் முதல் 10 பேர்களில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற நான்கு பேர் மட்டும்தான் இந்தாண்டுக்கான முதல் பத்து பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இவ்வருடத்துக்கான பட்டியலில் ஒரேயொரு பெண்தான் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த லில்லி சிங் என்பவர் சுமார் 66 கோடி வருமானத்துடன் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

1. டேனியல் மிடில்டன் - 105.67 கோடி

99108518dantdm3jpg

டான் டிடிஎம் "தி டயமண்ட் மைன் கார்ட்" என்று அழைக்கப்படுகிறார்.   -  BBC

2. ஈவன் பாங் - 99.37 கோடி

99106560gettyfongjpg

இப்பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள ஈவன் பாங்கும் ஒரு கேமராவார்.   -  Getty Images

3. டூட் பெர்பெக்ட் - 89.76 கோடி

99106558gettydudejpg

24 மில்லியன் சந்தாதாரர்களுடன் கூடிய டூட் பெர்பெக்ட் என்பது முன்னாள் உயர்நிலை பள்ளி கூடைப்பந்து வீரர்களின் குழுவாகும். அவர்கள் விளையாட்டு தொடர்பான வித்தைகளையும், தந்திரங்களையும் காணொளியின் மூலம் செய்கிறார்கள்.   -  Getty Images

4. மார்கிப்லீர் - 80.14 கோடி

99107273gettymarkiplierjpg

மார்க் பிஸ்ச்பாச் என்பதை இயற்பெயராக கொண்ட கேமரான இவர் கடந்த ஆண்டை விட பட்டியலில் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார்.   -  Getty Images

4. லோகன் பால் - 80.14 கோடி

99107266gettyloganjpg

22 வயதான லோகன் பால் தமது பெயரை வைன் ஸ்டார் என்று மாற்றிக்கொண்டு யு டியூபுக்கு வந்தார்.   -  Getty Images

6. பியூடைபை - 76.93 கோடி

99107270gettypewdiepiejpg

இப்பட்டியலில் உள்ளவர்களிலேயே அதிக சந்தாதாரர்களை கொண்ட இவரது இயற்பெயர் பெலிக்ஸ் கெஜ்பெர்க்.   -  Getty Images

7. ஜாக் பால் - 73.65 கோடி

99106562gettyjakejpg

இப்பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ள லோகன் பாலின் இளைய சகோதரர்தான் ஜாக் பால்.   -  Getty Images

8. ரயான் டாய்ஸ்ரிவியூ - 70.52 கோடி

எச்சரிக்கை: மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கம், விளம்பரங்களையும் உள்ளடக்கியது.

ஆறு வயதான ரயான் தனது பக்கத்தில் பலவிதமான பொம்மைகளை குறித்த தனது கருத்தை காணொளியின் மூலமாக தெரிவித்து வருகிறார்.

8. ஸ்மோஸ் - 70.52 கோடி

99107272gettysmoshjpg

இயன் ஹெக்கோஸ் என்ற இயற்பெயரை கொண்ட இவர், நகைச்சுவை சார்ந்த யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.   -  Getty Images

10. லில்லி சிங் - 67.24 கோடி

99106564gettylillyjpg

கடந்த ஆண்டுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த லில்லி தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எறும்புத்தின்னிகளின் விலை என்ன தெரியுமா? - விலங்குகளை வேட்டையாடும் மனித மிருகம்!  #AnimalTrafficking

 
 


இந்தியாவில் இன்றைய தேதிக்கு அதிகமாக கடத்தப்பட்டு, கொல்லப்படும் உயிரினம் யானையோ, புலியோ, சிறுத்தையோ இல்லை. நம் காடுகளில் சுதந்திரமாக திரிந்துக் கொண்டிருக்கும் சாதாரண எறும்புத்தின்னி. 

எறும்புத்தின்னி

 

உலக உயிரினங்களில் அதிகபட்சமாக உடலெங்கும் செதில்களைக்கொண்ட ஒரே பாலூட்டி இனம் பங்கோலின் ரக எறும்புத்தின்னிகள் தான். இன்றைய நிலையில் உலக அளவில் சட்டவிரோதமாக விற்கப்படும் முதன்மையான விலங்கு. கடந்த பத்து ஆண்டுகளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாகப் பெரிய செதில்களைக்கொண்ட பங்கோலின் என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னிகள் அதிகம் அழிக்கப்பட்டிருக்கின்றன.

எந்த விலங்குகளாலும் எறும்புத் தின்னியின் செதில் சூழ்ந்த உடலைக் காயப்படுத்திவிட முடியாது. பலம்வாய்ந்த புலிகளின் நகங்களால்கூட இவ்விலங்கைக் காயப்படுத்திவிட முடியாது. அந்த அளவிற்கு பலம் பெற்றது எறும்புத் தின்னியின் செதில்கள். எறும்புத் தின்னிகளுக்கு மிகப் பெரிய இயற்கை கவசமாக இருப்பது அதன் செதில்கள்தான். எந்தக் கவசம் மற்ற விலங்குகளிடமிருந்து எறும்புத் தின்னியை பாதுகாக்கிறதோ அதே கவசம்தான் மனிதர்கள் அவற்றை அழிக்கக் காரணமாய் இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. 

எறும்புத் தின்னிகள் குறித்த செய்திகளும் சில சம்பவங்களும்:
2017 ஆண்டு  ஜனவரி 17, 2.9 டான் எடையுள்ள எறும்புத்தின்னியின் செதில்களை தாய்லாந்து சுங்க அதிகாரிகள் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில்  கைப்பற்றினர். இவை சீனாவிற்கு கடத்த இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஜனவரி மாதம் வரை செதில்கள் நீக்கப்பட்ட இறந்து போன எறும்புத் தின்னிகளும் அவற்றின் செதில்களும் மட்டுமே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஆனால் கடத்தல்காரர்கள் அதோடு நின்று விட வில்லை. தங்களின் எல்லைகளை விரிவாக்கி சுமத்ரா தீவுகளின் தடை செய்யப்பட்ட ஆளில்லா கடற்கரையையும் படகுகளையும் பயன்படுத்தி செதில் கடத்துவதை தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். போலீசார் தீவிர சோதனையில் இருந்தாலும் செதில் கடத்தல் தொடர்ந்தது.

2017 ஆண்டு மே 1 கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய சரக்கு வைக்கும் கார்கோவில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள். சோதனையில்  எட்டு மூட்டைகளில் 408 கிலோ எறும்புத் தின்னியின் செதில்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்கின்றனர். செதில்கள் காங்கோவில் இருந்து சவுதி அரேபியா வழியாக கோலாலம்பூர் விமான நிலையத்திற்குக் கடத்தி வந்தது தெரிய வருகிறது. அடுத்த நாள் மே 2 மீண்டும் தொடர்ந்த சோதனையில் எட்டு மூட்டைகளில் 304 கிலோ எறும்புத் தின்னியின் செதில்களைக் கைப்பற்றுகிறார்கள். இந்தச் செதில் மூட்டைகள் காங்கோ தலைநகர் மின்சசாவில் இருந்து கென்யா,  நைரோபி, சவுதி அரேபியா வழியாகப் பயணித்து கோலாலம்பூர் வந்திருக்கிறது. விசாரணையில் எல்லாச் சரக்குகளும் தவறான முகவரிகளில் இருந்து தவறான முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. எல்லா மூட்டைகளிலும் உலர்ந்த மூலிகைகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கூட கைது செய்ய முடியாமல் திணறியது அப்போதைய மலேசிய அரசாங்கம். இவற்றின் சர்வதேச மதிப்பு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 10 கோடி இந்திய ரூபாய்.

எறும்புத்தின்னி

 

2017 ஆண்டு அக்டோபர் 6 சுமத்ரா தீவில் இருக்கிற டுமாய் நகரின் மேடங்கம்பை என்கிற இடத்தில் கைரில் அன்வர் என்கிறவரின் தலைமையில் சுங்க அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபடுகிறார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக வருகிற ஒரு காரை ரகசியமாகப் பின் தொடர்கிறார்கள். கார் தடைச் செய்யப்பட்ட கடல்பகுதிக்குள் நுழைகிறது. போலீஸ் பின்தொடர்வதை அறிகிற கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டுத் தப்பித்து விடுகிறார். காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட 100 எறும்புத் தின்னிகளும் 37 கிலோ எறும்புத் தின்னியின் செதில்களும் இருப்பதைக் கண்டறிகிறார்கள். இவற்றின் கறுப்பு சந்தை விலை 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்தோனேசியா, மலேசியா எனக் கடத்தி வரப்படுகிற எறும்புத் தின்னியின் செதில்கள் அங்கிருந்து சீனாவிற்கும் வியட்னாமிற்கும் கடத்தப்படுகின்றன. செதில்களைப் பொறுத்தவரை சீனாதான் கடத்தல்காரர்களின் ஹாட் ஸ்பாட். சீனாவிலும் வியட்நாமிலும் பங்கோலின் ரக எறும்பு திண்ணியின் மாமிசம் மிகவும் விரும்பி உண்ணப்படும். இவற்றின் செதில்கள் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தனைக்கும் இந்த பங்கோலின் ரக எறும்புத்தின்னிகளின் செதில்கள் மனித நகங்களைப் போல வெறும் கெராடின் என்கிற வேதிப்பொருளால் ஆனது தான். அதற்கு மருத்துவக் குணங்கள் இருப்பதாக சிலர் வதந்திகளைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அவற்றை உண்மை என நம்பிய சீனர்கள் எறும்புத் தின்னியின் செதில்களுக்காகத் தவம் இருக்கிறார்கள்.

செதில்களைக் கடத்துவதில் கடத்தல் கும்பல் இப்போது தனியார் கூரியர்  நிறுவனங்களைப் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நிலம், நீர், காற்று என ஐம்பெரும் பூதங்களில் மூன்று பூதங்களின் வழியில்தான் செதில் கடத்தல் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. தரைவழி, கடல்வழி, வான்வழி என எல்லா வழிகளிலும் அதிவிரைவு போக்குவரத்து, எளிதில் கண்டுபிடிக்க முடியாது போன்ற வசதிகளால் கொள்ளையர்கள் கூரியரை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஏற்காமலும் இருக்க முடிவதில்லை. தவறான முகவரியை பார்சல்களில் கொடுத்துவிட்டுச் சரியான இடங்களுக்குச் சென்று பார்சல்களை பெற்றுக்கொள்கிறார்கள். எல்லாச் செயல்களுக்கும் அந்தச் சரியான இடத்தில் இருக்கிற ஒருவர் உதவிக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் உண்மை. கடத்தலுக்குக் கடத்தல்காரர்கள் மட்டுமே காரணமாக இருப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் துறைகளில் இருக்கிற ஒரே ஒருவரை கைக்குள் போட்டுக் கொள்ளுகிற கடத்தல் கும்பல் மற்ற எல்லாத் தடைகளையும் எளிதாகத் தாண்டி விடுகிறது.

சீனா, தாய்லாந்து எனக் கடந்து போகிற உலகளாவிய செதில் கடத்தல்  சம்பவங்களில் சில தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது. நவம்பர் 21 2015 ஆம் ஆண்டு  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து எறும்புத்தின்னிகளைக் கொன்று அதன் ஓடுகளை காரில் கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரகர் பெர்னாட், வனரோந்து படை வனச்சரகர் சாமியப்பன் மற்றும் வன ஊழியர்கள் பவானிசாகர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மல்லியம் பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டதில் அதில் ½ கிலோ எறும்புத்தின்னி ஓடுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் அளித்தத் தகவலின் பெயரில் கடத்தலுக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட பத்து பேரை நான்கு தனிப்படை அமைத்துத் தேடியது வனத்துறை. பத்தில் ஐந்து பேர் மட்டும் கோவையில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் செதில்கள் சென்னையில் இருந்து சீனாவிற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. சிக்கியவர்கள் யாருக்கும் செதில்களை ஏன் கடத்துகிறோம் எதற்கு கடத்துகிறோம் என்ற எந்த அடிப்படைத்  தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் வினோதம்.

குமுளி பகுதியில் கைப்பற்றப்பட்ட செதில்கள் குறித்து விசாரித்த வனத்துறை அளித்த அறிக்கை மற்ற உலக நாடுகளை விட வித்தியாசமானது. “எறும்புத்தின்னியின் செதில்களை எரிப்பதன் மூலம் வெளியே கிளம்பும் புகையைச் சுவாசித்தால் மூலவியாதி குணமாகும்” என்ற தவறான நம்பிக்கையால் உள்ளூர் மக்கள் எறும்புத்தின்னியை வேட்டையாடி இருக்கிறார்கள். தமிழகத்திலும்  சட்டவிரோதமாக எறும்புத்தின்னிகள் கொல்லப்பட்டு செதில்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி, சட்டவிரோத வன வியாபாரத்திற்கான பிரபலமான நாடுகள் என இந்தோனேசியாவையும் தாய்லாந்தையும்   அறிவித்துள்ளது. மிகப்பெரிய விமான நிலையம், மிக நீண்ட நில எல்லைகளைக் கொண்டிருப்பது மற்றும் அண்டை நாடுகளுக்கான தொடர்பு என தாய்லாந்து  நாட்டை எல்லா வகைகளிலும் விலங்குகள் கடத்தலுக்கு மையப்புள்ளியாகப்   பயன்படுத்தி வருகின்றனர். இந்தோனேசியாவில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் பொதுவாக உள்ளூர் மக்களால் நடத்தப்படுகின்றது. 

இந்தோனேசியாவின் ஜகாரிடா, யோகியாகர்ட்டா, மாநாடொவ் போன்ற முக்கிய நகரங்களில் எல்லாம் விலங்குகள் மார்க்கெட் சட்ட விரோதமாக இப்போதும் செயல்பட்டு வருகிறது. அழிந்து வரும் உயிரினம் என உலக விலங்குகள் நல  வாரியம் அறிவித்துள்ள விலங்குகளின் மிச்சங்கள் இந்தோனேசியா மார்க்கெட்டுகளில் இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியான தகவல். தாய்லாந்து இந்தோனேசியாவில் விலங்குகள் கடத்தல் குறித்தத் தண்டனைகள் மிகக்  கடுமையாக இருந்தும் அண்டர்கவர் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.  

காட்டுப்பகுதியில் எத்தனை எறும்புத் தின்னிகள் எஞ்சியுள்ளன என்பது தெரியவில்லை, நான்கு ஆசிய இனங்கள் அபாயகட்டத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். ஆசியாவில் இருந்த 100ல் 85 சதவிகித எறும்புத்தின்னிகள் அழிந்து விட்டன. கடத்தல்காரர்கள் தங்களின் பார்வையை இப்போது ஆப்ரிக்கா நாடுகளின் மீது திருப்பி இருப்பது உலகின் மீதமிருக்கும் எறும்புத்தின்னிகளையும் அழித்துவிட  வழிகோலியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் நான்கு பாங்கோலின் இனங்கள் ஆபத்தானவை அல்ல; ஆனால் அவையும்  பாதிக்கப்படக்கூடியவை எனக் கருதப்படுகின்றன. எறும்புத்தின்னியின் தேவை அதிகரிக்குமானால் உலகம் முழுமைக்கும் மீதமிருக்கிற எறும்புத் தின்னிகள் கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது. கடத்தல்காரர்கள் அடிக்கடி இலக்கை மாற்றிக் கடத்தல் திட்டங்களை மாற்றி  அமைக்க நேர்ந்தால்  அவற்றிற்கும் பாதிப்பு வரும் என்கிறது விலங்குகள் நல வாரியம்.

அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் குறித்த சபையில்  சீனா உறுப்பினராக உள்ளது.  CITES   (Convention on International Trade in Endangered Species) ஆனால் இன்னொரு பக்கம்  மருத்துவ பாரம்பரியங்களை மதிப்பதற்காக எறும்புத்தின்னிகளின் நுகர்வுகளைச் சீன அரசு அனுமதிக்கிறது. மருத்துவ சிகிச்சை மற்றும் காப்புரிமை பெற்ற சீன மருந்துகளின் உற்பத்திக்கு பாங்கோலின் செதில்கள் பயன்படுத்தப்படுவதே அதற்கு முக்கிய காரணம். விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது விலங்குகளை வர்த்தகம் செய்வது தொடர்பான தடைகளை நடைமுறைப்படுத்தியுள்ள பெரும்பாலான நாடுகள் , தடையை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளை விதித்திருக்கிறது. இருப்பினும் போதிய வன பணியாளர்கள் இல்லாமை மற்றும் நிதி இல்லாமை காரணமாக, தவறுகள் நடந்து  விடுவதாக சில நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

எல்லா நாடுகளிலும் விலங்குகள் கடத்தல் குறித்த தண்டனைகள் ஒரு தடையாக இருக்க  வேண்டும், அப்படி நடக்காதவரை விலங்குகள்  வர்த்தகம்  தொடர்ந்துக் கொண்டே இருக்கும். காரணம் பணம் பத்தும் செய்யும் அந்தப் பத்துக்காக மனிதன் எதையும் செய்வான்

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 
 

பெண் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

14p1_1512970074.jpg

`மீ டூ’ பெண்களுக்கு உச்சபட்ச கௌரவம்!

புகழ்பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான `டைம்’ ஒவ்வோர் ஆண்டும் ‘பெர்சன் ஆஃப் தி இயர்’ என்கிற அங்கீகாரத்தை அளித்துவருகிறது. கடந்த ஆண்டு இந்தச் சிறப்புக்கு உரித்தானவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஆண்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்த்து, #metoo பிரசாரத்தை உலக அளவில் கொண்டுசென்ற ஆறு பெண்களுக்கு மரியாதை செய்திருக்கிறது டைம். ஆஷ்லி ஜட், டைலர் ஸ்விஃப்ட், சூசன் ஃபவுலர், இசபெல் பாஸ்கல், அடாமா இவு ஆகிய ஐந்து பெண்களின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்டிருக்கும் டைம், ஆறாவது பெண்ணான டெக்ஸாஸைச் சேர்ந்த, முகம்காட்ட விரும்பாத மருத்துவமனை பணிப்பெண் ஒருவரது முழங்கையின் படத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் முகம்காட்டாமல், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியிட உதவிய ‘மீ டூ’ பிரசாரத்தைக் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய சமுதாய மாற்றமாக விவரித்திருக்கிறது டைம். இந்த அங்கீகாரத்தை இரண்டாவது முறையாக வெல்லக் காத்திருந்த ட்ரம்ப் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

பலே... அதிபரையே முந்திட்டாங்களே இந்தப் பெண்கள்!


14p2_1512970091.jpg

இந்தியாவில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்!

கபில்தேவ் பந்து வீச, அதை எதிர் கொள்ளும் சச்சின் டெண்டுல்கர், அவர்களை வேடிக்கை பார்க்கும் ரொனால்டோ... ஷ்ரேயா கோஷல், ஆஷா போஸ்லே என்று மைக்குடன் பாடகிகள் ஒருபுறம். பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், கரீனா கபூர், பழம்பெரும் நடிகை மதுபாலா மறுபுறம். இரு கரங்களையும் ஆக்ரோஷமாக மடக்கிக் குத்த தயார் நிலையில் மேரி கோம், ‘பறக்கும் சீக்கியர்’ என்று புகழப்படும் மில்கா சிங் என விளையாட்டு வீரர்களின் மெழுகுச் சிலைப் பட்டாளம் புடைசூழ மிளிர்கிறது உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் 23-வது அருங்காட்சியகம். டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ரீகல் சினிமா காம்ப்ளெக்ஸின் இரண்டு தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், விளையாட்டு வீரர்களின் மெழுகுச் சிலைகள். மகாத்மா காந்தி, பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அப்துல் கலாம், நரேந்திர மோடி எனத் தலைவர்கள் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் தவிர, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் என ஐம்பது மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. டிசம்பர் 1 அன்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் மேடம் டுஸாட்ஸ் அருங் காட்சியகத்தின் சிலைகள் அனைத்தும் லண்டனின் மெர்லின் மேஜிக் மேக்கிங் என்ற ஸ்டூடியோவின் படைப்புகள். பெரியவர்களுக்கு ரூ.960, சிறுவர்களுக்கு ரூ.760 என இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு நூறு ரூபாய் தள்ளுபடியும் அறிவித்துள்ளது மேடம் டுசாட்ஸ் (madametussauds.com/delhi).

மனசுக்குப் பிடிச்ச செலிப்ரிட்டி கூடநின்னு செல்ஃபியா சுட்டுத்தள்ள வேண்டியதுதான்!


14p3_1512970114.jpg

ஜெஸ்ஸிகாவின் தேன் குரலில் ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம்!

பிரசித்தி பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தெற்காசிய ஆய்வுகள் பிரிவு ஒப்புதல் அளித்ததையடுத்து, அதனுடன் இணைந்து இருக்கையை அமைக்க தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள், தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கவாழ் மருத்துவர்கள் வி.ஜானகிராமன் மற்றும் எஸ்.சம்பந்தன். டொரொன்டோவில் சமீபத்தில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பின் விழா ஒன்றில் அரங்கேறியது, ஹார்வர்டு தமிழ் இருக்கையின் எழுச்சி கீதம்.

பாடலை எழுதியிருக்கிறார் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். `உலகத் தமிழருக்கோர் தமிழ் இருக்கை’ என்று தொடங்கும் பாடலைத் தன் தேன் குரலில் தெளிவான உச்சரிப்புடன் பாடியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஜெஸ்ஸிகா. `சங்கத் தமிழ்மொழிதானே நம் தகமைகள் காக்கும், இன்பத் தாய்த்தமிழ் தரணியிலே பண்பாட்டை ஊக்கும், பொங்கும் அறநெறி அறிவியல் ஆர்க்கும், அன்பே பூரிக்கத் தமிழருக்கே புதுமைகள் சேர்க்கும்' என்று மொழி உணர்வைத் தூண்டுகிறது இந்த அருமையான பாடல் (https://goo.gl/THDScr).

அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம்...எத்தனை பெருமை… எத்தனை மகிழ்ச்சி!


14p4_1512970134.jpg

பெண் இனத்துக்குக் குரல்கொடுக்கும் இவாங்கா ட்ரம்ப்!

தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு ஹைதராபாத்தில் சமீபத்தில் நிறைவுற்றது. அமெரிக்க குடியரசுத் தலைவரின் மகளும், அவரின் கௌரவ ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்தியாவில் தொழிலாளர் பாலின இடைவெளியைப் பாதியாகக் குறைத்தால், அடுத்த மூன்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 150 மில்லியன் டாலர் உயரும் என்று குறிப்பிட்ட இவாங்கா, ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டு, சமுதாயத் தடைகளை நீக்கி, பெண்கள் புதுமைகளைப் படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெண்களுக்குப் போதிய அதிகாரம் இருந்தால்தான், நம் குடும்பம், நம் பொருளாதாரம், நம் சமுதாயம் என அனைத்தும் முழுமையான ஆற்றலை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த விழாவில் அனைவரையும் அசத்தியது இவாங்கா மற்றும் பிரதமர் மோடியை வரவேற்ற ஐந்து அடி உயரம்கொண்ட `மித்ர’ என்கிற ரோபோ. பெங்களூரைச் சேர்ந்த இவென்ட்டோ ரொபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ரோபோ, விருந்தினரை வரவேற்க, புகைப்படம் எடுக்க, `டிஜே’யாக செயல்பட என்று திருமணம், வரவேற்பு, பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் வரவேற்புப் பணிகளுக்கு விற்பனைக்கோ, வாடகைக்கோ அளிக்கப்படுகிறது (mitrarobot.com).

கல்யாண வீட்டுல `வாங்க'னு கூப்பிட இனி ரோபோவாச்சும் இருக்கும்!


14p5_1512970155.jpg

குட்டி இளவரசன் பராக் பராக்!

`பிள்ளைப்பேறு இல்லாமல் தலைமுறைகள் கருகட்டும்' என்றொரு சாபம் 400 ஆண்டுகளாக மைசூரு அரசக் குடும்பத்தை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தி வருவதாகக் கதைகள் பல உண்டு. துரதிர்ஷ்டவசமாக அந்தச் சாபம் பலித்ததுபோல ஆண் வாரிசு இல்லாமல், 2013-ல் இறந்துபோனார் மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம உடையார். அவருக்குப் பின், அவரின் தங்கை மகனான யதுவீரைத் தத்து எடுத்துக்கொண்டார், அவர் மனைவி பிரமோதா தேவி. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மன்னராக முடிசூட்டப்பட்ட யதுவீர், ராஜஸ்தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரியைச் சென்ற ஆண்டு மணந்தார். மைசூரு அரண்மனையில் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமணம் இது. இந்த நிலையில் செப்டம்பரில் நடைபெற்ற தசரா விழாவில் கர்ப்பிணியான திரிஷிகா கலந்துகொண்டார். டிசம்பர் மாதம் அழகிய இளவரசன் பிறந்திருக்கிறார்.

1612-ம் ஆண்டு... முதலாம் ராஜ உடையார் விஜய நகரத்தின் கடைசி அரசன் திருமலைராஜாவைத் தோற்கடித்து, அரசி அலமேலம்மாவை அவரது நகைகளைப் பிடுங்கத் தேடுகிறார். நகைகளுடன் தலக்காடு ஓடும் அலமேலம்மாவைப் படையினர் துரத்த, அவர்களைச் சபிக்கிறார் அலமேலம்மா. `தலக்காடு மணல் மூடிப் போகட்டும், மாலங்கி நதி வறண்டு போகட்டும், உடையார் பரம்பரை வாரிசு அற்று போகட்டும்' என்று சபித்துவிட்டு, ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். உடையார் மனம் வருந்தி அவருக்கு மைசூரு அரண்மனையிலேயே சிலை வைத்து வழிபாடு செய்கிறார். தலக்காட்டில் கோயிலும் கட்டி வழிபடுகிறார். ஆனால், 400 ஆண்டுகளாக இரு தலைமுறைக்கு ஒருமுறை பிள்ளைப் பேறு இல்லாமல், தத்தளித்து வந்திருக்கிறது மைசூரு அரச குடும்பம். அலமேலம்மாவின் ஆசியுடன் இப்போது பிறந்திருக்கும் குட்டி இளவரசரைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மைசூரு மக்கள்.

ச்சோ ஸ்வீட்... குட்டி ராஜா வெல்கம்!


14p6_1512970174.jpg

தங்கம் வென்ற இரும்பு மங்கை!

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த சைக்கோம் மீராபாய் சானு முதலிடம் பிடித்து, தங்கம் வென்றிருக்கிறார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கிடைத்திருக்கும் தங்கம் இது. நொங்க்பொக் காக்சிங் என்ற சிறிய ஊரைச் சேர்ந்த மீராபாய், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில், ஸ்னாட்ச் முறையில் 85 கிலோ எடையும், க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 109 கிலோ எடையும் தூக்கி தேசிய சாதனை யும் படைத்தார். இரும்பு மங்கை என்ற பெயரை அத்தனை எளிதில் சம்பாதித்துவிடவில்லை மீராபாய்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பரிமளிக்கவில்லை. சோகத்துடன் நாடு திரும்பிய மீராபாய், ஓராண்டு முழுவதும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். பெற்றோரைச் சந்திக்கவில்லை. செல்போன் இல்லை. தோழிகள் யாரையும் பார்க்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டுகளை ஆண்டு முழுக்க நினைத்துக்கூட பார்க்கவில்லை. போட்டிக்குச் சில நாள்கள் முன் நடைபெற்ற சொந்த அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. இந்தக் கடும் பயிற்சிக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம். தவறவிட்ட அர்ஜுனா விருது எப்படியும் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மீராபாய், தன் அடுத்த இலக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்கிறார்.

அர்ப்பணிப்புக்கு ஓர் உதாரணம் மீராபாய்!


14p7_1512970192.jpg

ஹாதியா என்கிற அகிலா!

சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 24 வயது அகிலா அசோகன், திடீரென ஒருநாள் கல்லூரிக்கு புர்கா அணிந்துவந்தார். உடன்பயின்ற இஸ்லாமிய மாணவிகள் சிலரால் ஈர்க்கப்பட்டு, ஹாதியா எனப் பெயர் மாற்றம் செய்து, இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதாகத் தெரிவித்தார். தகவலறிந்து அவர் தந்தை அசோகன், கேரளா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மகள் மதம் மாற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் `லவ் ஜிகாத்’தான் காரணம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கல்லூரியின் மகளிர் விடுதியில் தங்கிப் படிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே இஸ்லாமியத் திருமணத் தகவல் வலைதளம்மூலம், 27 வயதான, மஸ்கட்டில் வேலை செய்துவந்த இளைஞர் ஷஃபின் ஜகானைச் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டதாக அறிவிக்கிறார் ஹாதியா.

ஹாதியாவின் தந்தை, ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று மீண்டும் வழக்கு தொடர, `அவரது திருமணம் செல்லாது' என்று அறிவித்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஹாதியா. இவ்வழக்கில், இடைக்காலத் தீர்ப்பாக, தன் படிப்பை ஹாதியா சேலத்தில் தொடரலாம் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், அதேநேரத்தில், இவருக்கும் கணவர் ஷஃபின் ஜகானுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க தேசியப் புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, `பிஎஃப்ஐ’ என்ற அமைப்புக்கும் ஷஃபினுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது புலனாய்வு அமைப்பு. வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திடுக் திடுக் திருப்பங்கள், சிந்துபாத் கதைக்கு அப்புறம் ஹாதியா கதையில்தான்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

சீனாவில் நீங்கள் எங்கும் தப்பிக்க முடியாது? ஏன் தெரியுமா?

நான்கு மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் குய்யாங் நகரில், வெறும் 7 நிமிடங்களில் பிபிசி நிருபரை அந்நாட்டு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். எப்படி தெரியுமா?

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: குக்கர் சின்னம் எதுக்கு?

 

YouTube

 
memes%201
memes%2010
memes%2011
memes%2012
memes%2013
memes%2014
memes%203
memes%205
memes%206
memes%207
memes%208
memes%209
 
Keywords
 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ !

வணக்கம் நேயர்களே!

போக்குவரத்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?

ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில், வெள்ளிக்கிழமையன்று புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.

மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.

புகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.

மற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.

BBCபடத்தின் காப்புரிமைPUNIT PARANJPE

மேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.

புகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலதிக தகவலை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் இணையதளம், பிபிசி தமிழ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்த வாரத் தலைப்பு

மூன்றாவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'போக்குவரத்து'

போக்குவரத்து எனும் தலைப்பில் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எடுத்த புகைப்படங்களை வரும் வெள்ளிக்கிழமை (22.12.2017) காலை 10 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

ஈ மெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.

ஈ-மெயில் முகவரி: bbctamizhosai@gmail.com

http://www.bbc.com

யாழ் கள உறவுகள் யாராவது ஆர்வம் இருந்தால் பங்குபற்றுங்கள்

 

போன வார படங்கள் இந்த இணைப்பில்

  • தொடங்கியவர்

 

கடல்வாழ் உயிரினங்கள் இடையே நடக்கும் கண்கவர் சண்டை

 

கண்மறைவாக நடக்கும் கடல்வாழ் உயிரிகளின் சண்டைகள் வெறித்தனமானவை. துறவி நண்டு, பீட்லெட் அனிமோன், லிம்பெட் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவைக்குள்ளே நடக்கும் விதவிதமான சண்டைகளை விளக்குகிறது இந்த காணொளி.

  • தொடங்கியவர்

ஹனிமூனில் இருக்கும் விராட்-அனுஷ்கா ஜோடி: வைரலாகும் இன்ஸ்டா போட்டோ

 

அனுஷ்கா

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம்தான் இந்த வாரத்தின் டாக் அப் தி டவுன். இந்த நிலையில், ஹனிமூனில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.  

 

இத்தாலியில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ, கடந்த 11-ம் தேதி, விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான சீரிஸ் தொடங்கவிருப்பதால், திருமணம் முடிந்தவுடன், இருவரும் தென்னாப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது அனுஷ்கா ஷர்மா தன் இன்ஸ்டாகிராமில், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் போட்டோ வெளியான 20 நிமிடங்களில்  இரண்டு லட்சம் பேர் லைக்ஸ் செய்தனர். மேலும், அனுஷ்கா, “சொர்க்கத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை பதிவிடவில்லை. ஆனால், அவரின் ரசிகர்கள் பலரும் “இது இத்தாலியா?” பின்லாந்தா அல்லது ‘ஸ்விட்சர்லாந்தா’ என கமென்ட்களில் கேட்டிருக்கின்றனர்.  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘காலமாற்றம் பேச்சுகளையும் எண்ணங்களையும் மாற்றியபடி உள்ளது’
 

image_e8ca9dbc8e.jpg‘எனது வாழ்க்கை வரைபடத்தில் முழுஉருவான அன்பரே! தங்கள் திருப்பாதத்தை அனுதினமும் நெஞ்சக் கமலத்தில் நினைந்துருகும் அடியாள் நான். என்மூச்சோடு கலந்து சுவாசிக்கும் சுவாசமே தாங்கள்தான். எனது எண்ணங்கள் உங்கள் இதயத்துடன், சங்கமிக்க இல்லையா? நான் தூதுவிடும் நினைவுப் பூக்கள், உங்கள் நெஞ்சத்தில் இன்னும் ஸ்பரிசிக்கவில்லையா?’ 

இது அன்றைய காதலி, தனது காதலன் மீதான மையலில் தனக்குள் தானே உணர்ந்தவை.  

இன்றைய காதலி, தனது காதலனை இப்படிச் சொல்வாள். “டேய் என்ன, என்ன திமிராய் பேசுறாய்? என்மீது இஷ்டமில்லாமலா சும்மா சுத்திச் சுத்தி வாறாய்? சேட்டை விட்டாயோ, உன்னைக் கடித்துக் குதறிவிடுவேன்; சும்மா நடிக்கிறாயா?”  

இதற்குப் பதிலாக அவன் சொல்கிறான். “அடி சரிதான் போடி; சும்மா பாத்தால் பெரிசாப் பேசுறியோ? சரி.. சரி சண்டையிட்டதுபோதும் இன்றைக்கு கடற்கரைக்குப் போவோமா? கோவிக்காதேடி” 

காலமாற்றம் பேச்சுகளையும் எண்ணங்களையும் மாற்றியபடி உள்ளது.

  • தொடங்கியவர்

மலரும் மகளிரும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

99236901gaya3bfa-yahoocomjpg

பிபிசி தமிழின் இரண்டாம்வார புகைப்பட போட்டிக்கு மலரும் மகளிரும் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

99237033659bc22a-1bc1-472f-a6de-53373f40

மலரும் என் மகளும்! - ராஜேஷ் மதுசூதனன், போலந்து   -  BBC

9923703248036f14-0225-4c1a-b61f-9de3ebbd

அழகுப் போட்டி!... - காயத்ரி அகல்யா, சென்னை   -  BBC

99237035e2f44d4f-0dc7-47a9-9a9e-744d4625

ஒளிரும் மலர்கள்... - குணாகரன், தஞ்சாவூர்   -  BBC

9923703600ad1af1-cee9-4405-a60e-0e098a6c

பூத்தது முகமா? - ரஞ்சிதா ரவீந்திரன், கோயம்புத்தூர்   -  BBC

9923703780d324d5-da73-476e-a3d0-17b45a51

பார்க்கும் சூரியகாந்தி? - ஹம்ஷத்வாணி கெங்காதரன், தாய்லாந்து   -  BBC

99237034091e5f42-ee4a-4c31-845a-98e6bd9d

பரந்து கிடக்கும் நம்பிக்கை...- மோகனகிருக்ஷ்ணன், சென்னை   -  BBC

99237031484cf885-9d23-4093-9cc8-d6cfea29

காலை மலரே...! - ராஜேஷ் சுந்தர்ராஜன், அமெரிக்கா   -  BBC

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

6.4 லட்சம் டொலர்களிற்கு ஏலத்தில் விற்பனையாகிய யானையின் எலும்புக்கூடு!

 

6.4 லட்சம் டொலர்களிற்கு ஏலத்தில் விற்பனையாகிய யானையின் எலும்புக்கூடு!

தனியார் நிறுவனம் ஒன்றிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த பழங்கால ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு 6.4 லட்சம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இதிலுள்ள 80 எலும்புகள் உண்மையானவை என்பதால் இது மிகவும் அரியவகையானதாகும். மீதமுள்ள 20 சதவிகிதம் பிசின் கலந்து அதன் உருவம் முடிக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு ஒரு ஆண் யானையினதாகும்.

இது சைபீரியாவின் நிரந்தர பனிக்கட்டிகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பற்களில் அழுகல் தன்மையை பார்ப்பதாக கூறும் விஞ்ஞானிகள் அதன் இறப்பிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

நிரந்தரப் பனிக்கட்டிகள் பல பெரிய மிருகங்களை கண்டறிவதை அதிகப்படுத்தியுள்ளதாக மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் புவி அறிவியல் பிரிவின் பொறுப்பாளரான டேவிட் கெல்ஸ்த்ரோப் தெரிவித்துள்ளார். புவியியல் மாற்றங்களால் சைபீரியாவிலுள்ள நிரந்தரப்பனிக்கட்டிகள் மிகவும் வேகமாக உருகிவருகின்றன என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

 
 
13CHSUJMUSSOORIE

 

உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் மிகப் பசுமையான மலை நகரம் முசோரி. (மன்சூரி என்றும் சொல்கிறார்கள்). இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள். கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும் வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை விரிவாக்கினார். அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன், மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.

முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின் வளைவுகளில், ‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’, ‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

13CHSUJMOSSORIE

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர் ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது. 1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு, அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’, லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில் அதிகமாகக் குவிகின்றனர்.

லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா தேவாலயம் இருக்கிறது. இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன. மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில் தேநீரும் கிடைக்கின்றன.

’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன் அமைத்திருக்கின்றனர். பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத் தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை ரசித்துப் பார்க்கலாம். அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!

மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில் முசோரியும் முக்கியமானது.

shutterstock553954891
 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மண்ணுக்கு உயிர் கொடுப்பவர்கள்

 

 

15CHVANSelvan13-11jpg

சுடப்படாத மட்பாண்டம் பானை, சட்டிகளாக தட்டப்பட்டு உருவாகும்போது...

வேதாரண்யம் அருகே உள்ளது செம்போடை கிராமம். செம்போடை கடைத்தெருவுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஓர் அமைதியான, அழகான ஓடை. ஓடையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல மரப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 1998-களில் அக்கரையில் இருந்த கிராமங்களுக்குச் செல்ல எனக்கு ஆர்வம் அதிகம்.

15CHVANSelvan13-1jpg

பானை செய்ய எடுத்து வரப்படும் களிமண், செம்போடை, வேதாரண்யம்

   
 

ஒரு நாள் பாலத்துக்கு அருகில் சென்றபோது, மேல்சட்டை அணியாத பெரியவர் ஒருவர் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தலையில் கூடை வடிவில் எதையோ சுமந்து அந்தப் பாலம் வழியாக வந்துகொண்டிருந்தார். அதைக் கண்டு எதிர் வெளிச்சத்தில் அவரைப் படமெடுத்தேன்.

அருகே வந்ததும்தான் தெரிந்தது அவர் தலையில் இருந்தது கூடையல்ல, களிமண் என்று! எதற்காக இந்தக் களிமண் என்று கேட்டபோது, எல்லா மண்ணிலும் பானை செய்துவிட முடியாது. இது பானை செய்ய உகந்த களிமண் என்றார். அக்கரைக்குப் போகாமல் அவருடனேயே நடந்துசென்றேன்.

15CHVANSelvan13-4jpg
 

அவர் வாழும் குடியிருப்பு வந்தது. முதலில் தண்ணீரைவிட்டு மண்ணைப் பிசைந்தார். சக்கரத்தின் மீது மண்ணை வைத்து எழுந்து நின்று கோலால் சக்கரத்தைச் சுற்றிவிட்டார். பின் அமர்ந்து பானை வனையும் வேலையைத் தொடங்கினார். இடையிடையே சக்கரத்தின் வேகம் குறைந்த போதெல்லாம் கம்பால் சக்கரத்தைச் சுற்றிவிட்டார்.

சக்கரத்தின் மேலிருந்த மண் அவர் கை பட்டு பானையாக உருவெடுக்கத் தொடங்கியது. பானை உருவம் வந்த பிறகு சுடப்படாத பானையை சக்கரத்திலிருந்து லாகவமாக அறுத்தெடுத்து மின்னல் வேகத்தில் தரையில் வைத்தார். எல்லாமே மிக வேகமாக நடைபெற்று முடிந்தது.

15CHVANSelvan13-5jpg

அந்தக் கைவினைஞர்கள் ஒவ்வொரு பானையையும் வடித்தெடுத்து முடிக்கும்போது ஒரு இனம் புரியாத திருப்தி அவர்கள் மனதில் உருவாவதைக் காண முடிந்தது.

அறுத்தெடுக்கப்பட்ட மண் பானை, சட்டிகள் சற்று இறுகியதும் அடிப்பகுதியைச் சீரமைத்துப் பானையும் சட்டியும் வடிவம் பெற்றதையும் கண்டேன். சொந்தப் பயன்பாட்டுக்காக, உறவுகளுக்காக, விற்பனைக்காக, பொங்கல் திருநாளுக்காக இப்பானை, சட்டிகள் தயாராகின்றன.

15CHVANSelvan13-8jpg

ஒரு மண் பானை, சட்டி தயாரிப்பதில் உள்ள முன்தயாரிப்பு, உடல் உழைப்பு, செய்நேர்த்தி போன்ற எல்லாமே அன்றைக்குத் தெளிவாகப் புரிந்தது.

இன்றைக்கு செம்போடை மரப்பாலம் சிமெண்ட் பாலமாகிவிட்டது. கையில் சக்கரம் சுற்றிய கைகள் பல இடங்களில் ஒரு பொத்தானின் அழுத்தத்தில் மின்சாரத்தில் சுழலும் சக்கரமாகிவிட்டன. இவை எல்லாம் மாறியும்கூட மண்பாண்டத்தை வடிக்கும் கைகள் மாறவில்லை. அந்தக் கைகள் காலங்களைக் கடந்த நம் கைவினையின் இடையறாத தொடர்ச்சியல்லவா?

15CHVANSelvan13-3jpg

மட்பாண்டத் தயாரிப்பின் அடுத்தடுத்த நிலைகள்...

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மனதில் உறுதி வேண்டும் – 13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 68 வயது பரத நாட்டிய தாரகை தனது 13 வயது பேத்தியுடன் பெங்களூரில்  எதிர்  வரும் 21-ம் திகதி நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

13 வயது பேத்தியுடன் பரத நாட்டியம் ஆடும் 68 வயது பாட்டி

 
 
கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரை சேர்ந்த தேவா ஜித்தேந்திரா நஹாதா எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடகர் என பல பரிமானங்களை கொண்டவர்.   இவர் தன் வாழ்வின் அரை நூற்றாண்டின்  பின்னைய நாட்களில் பரத நாட்டிய குரு கே.எம்.ராமன் மற்றும் அவரது மகளான சத்யாவதி சுரேஷ் ஆகியோரிடம் பரத நாட்டியம் பயின்று கடந்த 2010-ம் ஆண்டு தனது 60-வது வயதில் முதல் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
 
கலையார்வத்துக்கும், விடாமுயற்சிக்கும் வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நாட்டிய விழாவில் விஹார் மஞ்ச் கலைக்கூடத்தின் ’பிரம்மி கலா’ விருதை பெற்றார். பிரபல இந்தி கவிதைகளை நாட்டிய வடிவில் ‘பாவ அபினயா’ என்ற பெயரில் அரங்கேற்றியுள்ளார்.
 
இந்நிலையில், தனது பேத்தி சவிடோல் நஹாதாவை பரத நாட்டிய வகுப்பில் சேர்த்து, தேர்ச்சி பெறவைத்த   தேவா ஜித்தேந்திரா நஹாதா, தற்போது 13 வயதாகும் பேத்தியுடன் ஒன்றாக மேடையேற தீர்மானித்துள்ளார்.
201712171909290005_1_Dance-1._L_styvpf.jpg?w=1320
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பாடசாலையில்  எட்டாம் வகுப்பில் கற்கும் சவிடோல் நஹாதா, தனது நான்காம் வயதில் இருந்து மேற்கத்திய  ‘பாலட்’ நடன பயிற்சி பெற்று ‘சின்ட்ரெல்லா’, ‘சிலீப்பிங் பியூட்டி’ உள்ளிட்ட சில பாலட் வகை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் கற்றல் தவிர இதர கலைகளிலும் சிறந்த மாணவியாக வந்துள்ளார்.
 
பாட்டி அளித்த ஊக்கத்தினால் தனது ஏழாம் வயதில் இருந்து பரத்ஜி விட்டல் என்பவரிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்றுள்ளார். பாட்டியுடன் சேர்ந்து ஒரே மேடையில் நடனமாடும் அரிய வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.
 
‘நிருத்திய சங்கம்’ என்ற பெயரில் 68 வயது பாட்டியும் 13 வயது பேத்தியும் நடனமாடும் பரத நாட்டிய நிகழ்ச்சி பெங்களூர் நகரில் உள்ள சவுடையா நினைவு அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.
 
 

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

உடலை உலர செய்யும் விலங்குகள் பயன்படுத்தும் உயர் நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உடலை உலர செய்யும் விலங்குகள் பயன்படுத்தும் உயர் நுட்பத்தை தத்ரூபமாக விளக்கும் காணொளி.

  • தொடங்கியவர்

மாத்தியோசி: ரிட்டர்ன் கிப்ட் செய்த மாயம்!

 
 
 
 
eg%202

 

ரிட்டர்ன் கிப்ட் கலாச்சாரம் இப்போது பெருகிக்கொண்டிருக்கிறது. திருமணம் போன்ற விழாக்களுக்குச் சென்று, புது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பரிசுப் பொருட்களை நாம் கொடுத்தது மாறி, இன்று திருமண வீட்டார் பரிசுகள் கொடுத்து அனுப்புகிறார்கள். இந்த ரிட்டர்ன் கிப்ட் கான்செப்ட்டையும் ஃபேஸ்புக்கையும் வைத்து சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாதந்தோறும் கணிசமாக சம்பாதிக்கிறார்.

அந்த இளைஞரின் பெயர் பவன்குமார் (22). பொறியியல் படித்துவிட்டு, எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று அலையாமல், ரிட்டர்ன் கிப்ட் பிசினஸ் செய்யும் ஐடியா இவருக்கு உதித்தது எப்படி?

eg%203

பவன்குமார்

“நான் ஒய்வில் இருக்கும்போது ஃபேஸ்புக் பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அதில் மூழ்கியிருந்தபோது ‘சென்னை ஷாப்பிங் குரூப்’ கண்ணில்பட்டது. அதில், நிறையப் பேர் கல்யாணத்துக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுக்கவேண்டும், அதற்கு பொருட்கள் வேண்டும் எனப் பதிவிட்டிருந்தனர்.

நான் அதைப் பார்த்தபிறகு, என் வீட்டு மொட்டை மாடியில் வளரும் மரக்கன்றுகளை ஏன் ரிட்டர்ன் கிப்டாக விற்கக் கூடாது எனத் தோன்றியது. பின்னர் என் மரக்கன்றுகளைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். என் பதிவைப் பார்த்துவிட்டு ஒருவர் அணுகினார். 30 மரக்கன்றுகள் கேட்டார்.

இப்படித்தான் என்னுடைய ரிட்டர்ன் கிப்ட் தொழில் தொடங்கியது” என்கிறார் பவன்குமார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எதேச்சையாகத் தொழிலைத் தொடங்கிய இவர், இன்று இதை முழு நேரத் தொழிலாகவே மாற்றிக்கொண்டுவிட்டார். இதற்காக ஒரு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். ரிட்டர்ன் கிப்டுக்காக 75 முதல் 80 வகையான மரக்கன்றுகளை எப்போதுமே தயார்செய்து வைத்துக்கொள்கிறார். ஒரு மரக்கன்றை 30 ரூபாய்க்கு விற்கிறார்.

“முதலில் மரக்கன்றுகள் வைத்து மட்டும்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஃபேஸ்புக் மூலமே என் தொழிலை விளம்பரப்படுத்தி வருகிறேன். இதனால், என்னுடைய ரிட்டர்ன் கிப்ட் இந்தியாவில் செல்லாத இடங்களே இல்லை. மரக்கன்று ரிட்டர்ன் கிப்ட் கொடுத்த அனுபவத்தால், இப்போது இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைத்துத் தரும் வேலையையும் செய்யத் தொடங்கியிருக்கிறேன்” என்று பெருமையாகச் சொல்கிறார் பவன்.

eg%204
 

பொறியியல் படித்து விட்டு, வேலை கிடைக்கவில்லை என்று புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பவன்குமாரின் ஐடியா புது பல்பு ஏற்றி வைத்தால் நல்லதுதானே!

பவன்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்க: https://www.facebook.com/Pkrgreens/

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

100 சீனத் தம்பதியினருக்கு கொழும்பில் திருமணம்.!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாள்” மனிதத்தை மதிக்கும் பேரன்புக்காரி!

squirrel-come-back-save-family-bella-bra

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆந்தையால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்ட அணிலை, அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள க்ரீன்வில்லி கவுண்ட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பம் காப்பாற்றியது. இன்றுவரை அந்த வீட்டுக்கு சென்று கொண்டே இருக்கிறது அந்த அணில். “2009-ம் ஆண்டு பிறந்து 4 வாரங்களே ஆன சிறிய அணிலை, ஒரு ஆந்தை மோசமாகத் தாக்கியது. அது பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம். நல்லவேளையாக வனவிலங்குகள் மீட்புக் குழுவினர் வந்து, இந்த அணிலுக்கு மருத்துவம் செய்தனர். அணில் பிழைத்துக்கொண்டது. மிகச் சிறிய அணிலாக இருந்ததால், சிறிது காலம் பராமரித்து, பிறகு காட்டில் விட்டுவிடும்படிச் சொன்னார்கள். நாங்களும் மகிழ்ச்சியோடு அணிலை அழைத்துவந்தோம். ஏனென்றால் நாங்கள் ஏற்கெனவே இதுபோன்று பாதிக்கப்பட்ட அணில்களுக்கு அடைக்கலம் அளித்து, காட்டில் விட்டிருக்கிறோம். ஆனால் இந்த பெல்லா மட்டும் வித்தியாசமானவள். ஓரளவு வளர்ந்த பிறகு இன்னும் சில அணில்களுடன் சேர்த்து, காட்டில் விட்டோம். எல்லா அணில்களுமே சில நாட்களுக்கு எங்கள் வீட்டுக்குத் தினமும் வந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் காட்டுடன் இணக்கமான பிறகு வருவதை நிறுத்திவிட்டன. ஆனால் இந்த பெல்லா மட்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் வந்துகொண்டிருக்கிறாள். இவளுக்காக நாங்கள் சிறப்புக் கவனம் எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.

தினமும் காலை கதவுக்கு முன்னால் வந்து காத்திருப்பாள். சற்று நேரம் அவளை யாரும் கவனிக்கவில்லை என்றால், உணவு அறையின் ஜன்னலில் ஏறி, கண்ணாடி வழியே பார்ப்பாள். யாராவது பார்த்துவிட்டால், கதவைத் திறந்து விடுவோம். வீடு முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, அமர்வாள். அவளுக்குப் பிடித்த பருப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்போம். எங்கள் மடி மீது அல்லது தோள் மீது அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுவாள். என் கணவர் ஜான்தான் தினமும் இவளுக்குப் பழங்களும் பருப்புகளும் வாங்கிவருவார். உணவு மேஜையில் இவளது உணவு இல்லை என்றால், உடனே ஜானின் அறைக் கதவைத் தட்டுவாள். சாப்பிட்டு முடித்தவுடன் எங்கள் வீட்டுக் குழந்தைகள், நாய்களுடன் விளையாடுவாள். பிறகு காட்டுக்குச் சென்றுவிடுவாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்லா தாயானாள். இனி வர மாட்டாள் என்று நினைத்தோம். குட்டிகளை ஈன்ற சில வாரங்களில் தன் 4 குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்த நாளை எங்களால் மறக்க முடியாது. மனிதக் குடும்பமும் அணில் குடும்பமும் சந்தித்துக்கொண்ட அற்புதமான தருணம் அது! சென்ற ஆண்டு காலில் அடிபட்டதோடு வீட்டுக்கு வந்தாள். அவளை வீட்டில் வைத்து சிகிச்சையளித்தோம். அப்போது மீண்டும் 3 குட்டிகள் போட்டாள்.

குட்டிகளையும் கவனித்து, சில வாரங்களுக்குப் பிறகு காட்டுக்கு அனுப்பி வைத்தோம். அணில்களைப் பற்றிய பல கற்பிதங்களை பெல்லா உடைத்திருக்கிறாள். உண்மையில் அணில்கள் அற்புதமான பிராணிகள் என்று எங்கள் நண்பர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறாள். எல்லா ஜீவன்களுக்கும் இரக்கம் என்பது முக்கியமானது என்ற பாடத்தை பெல்லா கற்றுக் கொடுத்திருக்கிறாள். இன்று சமூகவலைதளங்களிலும் பெல்லாவின் புகழ் பரவிவிட்டது” என்கிறார் பிரான்ட்லி ஹாரிசன்.

 

Back in October 2009, this baby squirrel was found injured and alone after an apparent owl attack

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-33

Rescuers placed the poor thing with Brantley Harrison and her family in SC, who soon named her Bella

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-30

For 5 months, the Harrisons lovingly raised and nurtured Bella back to health alongside three other squirrels

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-26

Eventually, the time came to release all 4 squirrels into the wild, never to be seen again after a few days

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-25

One of their former guests, however, just kept coming back to visit every single morning

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-23

It was Bella! The little lady just wasn’t ready to part with the family that saved her life

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-5

Whenever she stops by, she asks for nothing more than a handful of walnuts and plenty of cuddles

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-21

“Bella sits right at the front door waiting for someone to notice she has come by for a visit,” Brantley says

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-20

“She has even resorted to jumping over to the dining room window to peer in for someone to see her”

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-37

A few years later, Bella turned up one morning with an injured foot – and a secret surprise

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-36

Just before she was re-released, Bella gave birth to three babies, and was once again in need of care

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-3

“It was truly amazing to watch the baby I raised raise her own babies,” Brantley commented

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-4

Though it’s been 8 years since Bella and the Harrisons first met, their bond is still just as strong

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-22

Bella even has her own Instagram account now, where her human family documents her adventures

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-12

“My husband will be running late for something and rushes out the door to be greeted by her…”

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-10

“And he HAPPILY runs back inside… and goes back out to spend some time with her”

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-6

This just might be the SWEETEST human-animal friendship we’ve ever seen!

squirrel-come-back-save-family-bella-brantley-harrison-14

நன்றி   இந்து & boredpanda.com

http://globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகள்  நன்றி மறப்பதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.