Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா? பாடம் எடுத்த சிறுமியின் கதை! #FeelGoodStory

 
 

நெகிழ்ச்சிக் கதை

`நம்மை அறியாமலேயே நம்முள் நாம் சில அதிசயங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம்’ - இங்கிலாந்தைச் சேர்ந்த பல்துறை வல்லுநர் தாமஸ் பிரௌன் (Thomas Browne) ஆழ்ந்துணர்ந்து சொன்ன வாக்கியம் இது. மனிதப் பிறப்பே மாபெரும் அதிசயம். ஆனால், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழும்போதுதான் அந்தப் பிறவி முழுமையடைகிறது. `கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா...’ என்று ஒரு பழமொழி உண்டு. நம்முள்ளேயே எத்தனையோ சிறப்புகளை, அதிசயங்களை வைத்துக்கொண்டு. ஊரெங்கும் அதைத் தேடி அலைகிறோம் நாம். நிஜமாகவா? நிச்சயமாக. அதை எடுத்துச் சொல்கிறது இந்த நெகிழ்ச்சிக் கதை!

 

ஆன்னாவுக்கு (Anna) ஒன்பது வயது. இங்கிலாந்திலிருக்கும் சிறு கிராமத்தைச் சேர்ந்த குட்டிப் பெண். கிராமத்துப் பள்ளியில் நான்காம் கிரேடு வரை படித்திருந்தாள். அதற்கு மேல் படிக்க, அவள் அருகிலிருந்த சிறு நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்த ஒரு பள்ளியில் அட்மிஷனும் கிடைத்தது. மரியாதைக்குரிய முக்கியமான பள்ளி அது. அங்கே இடம் கிடைத்ததில் ஆன்னாவின் பெற்றோருக்குப் பெருமிதம்.

ஆன்னா, பள்ளி செல்லும் நாள் வந்தது. காலை... கிராமத்துக்குள்ளேயே வந்த பள்ளிப் பேருந்து, ஆன்னாவை ஏற்றிக்கொண்டது. அந்தச் சிறு பெண்ணுக்கு மனம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. புதுப் பள்ளி, முதல் நாள், ஆசிரியர்கள்-சக மாணவர்கள் எப்படியிருப்பார்கள் என்று தெரியாது... பதற்றமாகத்தானே இருக்கும்? 

பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆன்னா, தன் வகுப்பறைக்குச் செல்லும் வழியை விசாரித்துத் தெரிந்துகொண்டாள். அங்கே போனாள். பளிச்சென இல்லாத, நிறம் மங்கிய உடை, தேய்ந்துபோன ஷூ, சீராக வாரப்படாத தலை... தோற்றத்தை வைத்தே ஆன்னா, கிராமத்துப் பெண் என்பது வகுப்பிலிருந்த மாணவ, மாணவிகளுக்குத் தெரிந்துபோனது. தயங்கித் தயங்கி ஒரு டெஸ்க்கில் போய் அமர்ந்தாள் ஆன்னா. சக மாணவர்கள், அவளை ஜாடை காட்டிப் பேசி, சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள். யார் முகத்தையும் பார்க்காமல், ஆன்னா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். 

நெகிழ்ச்சிக் கதை

வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்தது. ஆசிரியை உள்ளே வந்தார். வகுப்பறை அமைதியிலாழ்ந்தது.

``ஆன்னா யாரு?’’

ஆன்னா எழுந்து நின்றாள். அவளை மற்ற மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார் ஆசிரியை. வகுப்புத் தொடங்கியது.   

``சரி... உங்களுக்கெல்லாம் இப்போ டெஸ்ட். முந்தா நாள் `உலகின் ஏழு அதிசயங்கள்’ பாடம் எடுத்தேனே... ஞாபகம் இருக்கா?’’

``யெஸ் மிஸ்...’’ கோரஸாகக் குரல்கள் எழுந்தன.

``எங்கே... எல்லாரும் அதையெல்லாம் வரிசையா எழுந்துங்க பார்ப்போம்... க்விக்...’’

அத்தனை பேரும் பேப்பரில் கடகடவென எழுத ஆரம்பித்தார்கள். ஆன்னா, தயக்கத்தோடு டீச்சரைப் பார்த்தாள். ``என்ன ஆன்னா... நான் கிளாஸ் எடுத்தப்போ நீ இல்லைனுதானே பார்க்கிறே... உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை எழுது...’’ 

``இல்லை மிஸ்... எனக்கு எத்தனையோ அதிசயம் தெரியும்... அதுல ஏழே ஏழு மட்டும் எழுதினா போதுமா?’’

டீச்சர் சிரித்தார். ஆன்னாவைத் தட்டிக் கொடுத்து, ``போதும்’’ என்று சொன்னார். 

நெகிழ்ச்சிக் கதை

 

ஆன்னாவும் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். மற்ற அனைவரும் பதிலை எழுதிக் கொடுத்த பிறகும்கூட, அவள் எழுதிக்கொண்டிருந்தாள். கடைசியாகத்தான் தன் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்தாள்.  

நெகிழ்ச்சிக் கதை

ஆசிரியை எல்லோரின் விடைத்தாள்களையும் படிக்க ஆரம்பித்தார். தாஜ் மகால், எகிப்து பிரமிடு, சீனப் பெருஞ்சுவர், பாபிலோன் தொங்கும் தோட்டம், ரோமின் கொலேசியம், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்ச், பைசா நகரத்து கோபுரம்... என அந்த ஆசிரியை சொல்லிக் கொடுத்ததை பெரும்பாலானவர்கள் எழுதியிருந்தார்கள். சிலர், சிலவற்றை எழுதாமல் விட்டிருந்தார்கள். கடைசியாக அந்த ஆசிரியை, ஆன்னா எழுதிய  விடைத்தாளைப் பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது... 

`உலகின் ஏழு அதிசயங்கள் என்னவென்றால்... நம்மால் பார்க்க முடிவது; கேட்க முடிவது; உணர முடிவது; சிரிக்க முடிவது; சிந்திக்க முடிவது; இரக்கப்பட முடிவது; அன்பு செலுத்த முடிவது...’

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

`பாட்டுப் பாடி அசத்திய சுரேஷ் ரெய்னா!' - மகிழ்ச்சியில் திளைத்த சக வீரர்கள்

 

இலங்கையில் பாடகராக மாறி சக வீரர்களை சுரேஷ் ரெய்னா மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

சுரேஷ் ரெய்னா

 

photo credit: BCCI

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்யவே, தொடர் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. இன்று 2-வது முறையாக இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கிடையே, வீரர்கள் அனைவரும் பயிற்சி நேரம் போக ஓய்வு நேரத்தில், இலங்கையில் ஜாலியாக வலம்வருகின்றனர். 

அதன்படி, நேற்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுடன் சேர்ந்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் பாடத் தொடங்கினார். பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடி சக வீரர்களை மகிழ்வித்தார். 1.55 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பி.சி.சி.ஐ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரெய்னா ஓர் இசைப்பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதற்கு முன்னர், "மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்" என்ற பாலிவுட் படத்தில் ரெய்னா ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கடவுள் முருகனுக்கு `ஐபோன் 6’ வழங்கி வியப்பூட்டிய பக்தர்!

 
 

தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு, `ஐபோன் 6’ ஒன்றை பக்தர் காணிக்கையாக வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்தச் சம்பவம் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

ஐபோன் 6

 


கிருஷ்ணா மாவட்டத்தில் மோபிதேவி எனும் இடத்தில் சுப்ரமனிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை 108 நாள்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் எடுத்துக் கணக்கிடும் பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. எப்போதும்போல் பணம் மற்றும் நகைகள் போன்ற காணிக்கைகள்தான் உண்டியலில் இருக்கும் என்று திறந்தனர் நிர்வாகிகள். 

ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாகப் பக்தர் ஒருவர், உத்தரவாத கடிதத்துடன்கூடிய புத்தம் புதிய `ஐபோன் 6’ ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி ஆச்சர்யப் படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட காணிக்கையைப் பார்த்த நிர்வாகம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துள்ளனர். 

இதைப்பற்றி கோயில் நிர்வாகம் தெரிவிக்கையில், இந்தக் காணிக்கையை யார் உண்டியலில் போட்டனர் என்று தெரியவில்லை. இந்தப் போனை ஏலத்தில்விட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கோயில் திருப்பணிக்காகச் செலவிடலாமா அல்லது பக்தர்களின் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாகப் பயன்படுத்தலாமா என்று புரியாமல் உள்ளோம் என்றார். 

 

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. இதேபோல், 2016-ம் ஆண்டு ஷீர்டியில் உள்ள சாய் பாபா கோயில், 92 லட்சம் மதிப்பிலான இரண்டு வைர நகைகளை பக்கதர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பக்கத்து வீடு: ஏழு கண்டங்கள் ஏழு சிகரங்கள்

 

 
11chlrdsarah

ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களிலும் ஏழு எரிமலைச் சிகரங்களிலும் கால் பதித்த ஒரே பெண் கேட்டி சாரா! ஆனால், தன்னுடைய சாதனையாக அவர் கருதுவது எதைத் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் சாராவுக்கு, சாகசப் பயணங்களின் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு. படிப்பு, திருமணம், அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் என்று வாழ்க்கை சென்றாலும் அதனூடே அந்த ஈர்ப்பும் செழித்து வளர்ந்து அவரது கனவையும் லட்சியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

   

சாகசப் பயணம் செல்பவருக்கு உடல் தகுதி மிக முக்கியம் என்பதால் தன் உடலை உணவாலும் உடற்பயிற்சிகளாலும் ஆரோக்கியமாக வைத்திருந்தார். குழந்தைகள் வளர வளர இவரது லட்சியத்துக்கான தூரமும் குறைந்துகொண்டே வந்தது. குழந்தைகள் பதின்ம வயதை அடைந்து தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ள ஆரம்பித்தவுடன், அவர்கள் சாராவின் லட்சியத்தைத் தொடரச் செய்தனர்.

மலையேறும் குழுக்களில் தன்னை இணைந்துகொண்டு தினமும் இரண்டு மணி நேரம் அதற்கான உடற்பயிற்சிகளில் சாரா ஈடுப்பட்டார். இவரது ஆர்வமும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் சக மலையேற்ற வீரர்களை மலைக்கவைக்கும் அளவு இருந்தன.

11chlrdsarah%205
 

 

தோல்வியில் கற்ற பாடம்

‘மலையேற்றம் என்பது சாதாரண விஷயமல்ல. உடலும் மனமும் காலமும் பருவமும் ஒருசேர ஒத்துழைக்க வேண்டும். ஷூ, ஆடை, கையுறை, டார்ச் எல்லாம் தரமாக இருக்க வேண்டும். இவற்றில் ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் நம் பயணம் சாத்தியப்படாது. இரவில் கூடாரத்துக்குள் தலையில் டார்ச் விளக்கோடு உறங்க வேண்டும். இருளில் கூடாரத்தை விட்டு வெளியே வந்தால் விழுந்து அடிபடக்கூடும். என்ன காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது’ என்பதை சாராவுக்குக் கற்றுக் கொடுத்தது அவரது முதல் மலையேறும் முயற்சியின் தோல்விதான்.

sarahjpg
 

ஆம், அது 2007. ஆசியாவின் உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தன் குழுவினருடன் சாரா ஏறினார். இன்னும் 400 மீட்டர் ஏறினால் சிகரத்தை அடைந்துவிடலாம். மனம் உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்தது. ஆனால், போதாத வேளை சட்டென்று வழுக்கி விழுந்தார். தோள்பட்டை உடைந்துவிட்டது. வலியில் துடித்த அவரால் அதற்கு மேல் போக முடியவில்லை.

கண்களுக்கு எட்டியது கால்களுக்கு எட்டாமல் போனது வருத்தமளித்தாலும், மீண்டும் வந்து அதன் உச்சியை அடைவேன் என்று சபதமிட்டுக் கீழே இறங்கினார். “இந்தத் தோல்வி கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் அதற்குப் பிறகான எல்லாப் பயணங்களிலும் மிகக் கவனமாகக் கையாண்டேன்” என்று சாரா சொல்கிறார்.

 

சிகரத்தை விரும்பிய கால்கள்

காயம் குணமடைய நீண்ட காலம் ஆனது. முழுவதும் குணமடையும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். அதற்குப்பின் பயிற்சியை ஆரம்பித்தார். 2008-ல் மீண்டும் தன் சாகசப் பயணத்தை அண்டார்டிகாவின் வின்சன் மலையில் தொடங்கினார். எவரெஸ்ட் மலையேற்றத்தில் நீளமும் கடினமான பாதையும் சவாலானவை என்றால் வின்சன் மலையேற்றத்தில் கடுங்குளிர் மிகப் பெரிய சவால்.

கொஞ்சம் கவனம் குறைந்தாலும் திரும்பிவர முடியாது. ஆனாலும், மிகுந்த நம்பிக்கையோடும் தைரியத்தோடும் மலையேறினார். ஏற்கெனவே கிடைத்த அனுபவத்தால் ஒவ்வோர் அடியையும் நன்கு திட்டமிட்டு நிதானத்தோடு வைத்தார். இதனால், இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பினார்.

sarah1jpg

2008-ல் முதல் வெற்றியை ருசித்தவுடன் அவரது கால்கள் பெரும் சிகரங்களை மீண்டும் விரும்பின. 2010-ல் ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் உள்ள மலைகளிலும் ஏறி முடித்தார். ஒரே ஆண்டில் மூன்று மலையேற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அசாத்திய உடல் வலிமையும் மன வலிமையும் தேவை. சாராவுக்கு அவை அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

இதனால், 2012-ல் தென் அமெரிக்காவிலும் 2013-ல் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள உயர்ந்த மலை உச்சிகளில் கால் பதித்தார். இதன் மூலம் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அதுவும் அந்தச் சாதனையை ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தினார். இருந்தாலும், இன்றும் தனக்குத் தோல்வியைப் பரிசளித்த எவரெஸ்ட் பயணத்தையே தனது முக்கியமான வெற்றியாக சாரா கருதுகிறார்.

 

வயது தடையல்ல

உயரமான மலைச் சிகரங்களில் எல்லாம் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன என்று யோசித்தவர், உயரமான எரிமலைச் சிகரங்களைத் தொடலாம் என்று முடிவெடுத்தார். பின் முழுமுயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட்டு அதிலும் வெற்றி அடைந்தார்.

11chlrdsarah%202

“மலையேற்றத்தில் வெற்றி பெறுவதற்குக் குழுவினரின் பங்கும் முக்கியமானது. ஒவ்வொரு பயணத்திலும் எனக்குச் சிறந்த நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்காக நம்முடைய சுமையை அவர்கள் தூக்குவார்கள் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அவர்கள் என்னை ஒரு பெண்ணாக நினைத்து ஒதுங்கி நிற்கவில்லை. மேலும், இந்த வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா என்றெல்லாம் நினைக்காமல் என்னால் எதையும் செய்ய முடியும் என்று ஊக்கப்படுத்தினார்கள்.

என்னைவிட இளையவர்களாக இருந்தாலும் அவர்களுக்குச் சமமாக என் திறமையை மதித்தார்கள். பாலினப் பேதத்தை நான் ஒரு நொடிகூட அவர்களிடம் உணர்ந்ததில்லை. இவை எனக்கு மன உறுதியையும் அமைதியையும் அளித்தன. இலக்கை நோக்கிச் செல்வதற்கு அவைதானே மிக முக்கியம்” என்கிறார் சாரா.

“மலையேற்றம் என்று எளிதாகச் சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு பயணமும் ஆபத்தானது. சில நேரம் ஆபத்தான விலங்குகள் குறுக்கிடும். சில நேரம் பனிப் புயல் வீசும். பனிப் பாறைகள் உடைந்து விழும். உயிர் பிழைத்துத்திரும்புவோமா என்ற அச்சம்கூடச் சில நேரம் தோன்றும். சுற்றிலும் பனிப் பிரதேசத்தையே நாள் கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பது வெறுமையாக இருக்கும். சில இடங்களில் குழுவினர்களில் சிலரை இழக்கவும் நேரிடும். இவற்றையெல்லாம் கடந்துதான் இந்தச் சாதனைகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்” என்று தன் நினைவலைகளில் மூழ்குகிறார் சாரா

 

உலகிலேயே முதல் பெண்

2018 ஜனவரி 14-ல் அண்டார்டிகாவின் சிட்லே எரிமலையில் ஏறி, ஏழாவது எரிமலையேற்றத்தை சாரா முடித்தார். அண்டார்டிகாவில் மலையேற்றத்தை ஆரம்பித்தவர் அண்டார்டிகாவிலேயே முடித்தார்.

11chlrdSarah-Katie

“நான் மலையேற்றத்தை ஆரம்பித்தபோது என் குழந்தைகள் பதின்ம வயதில் இருந்தனர். அம்மா என்றால் குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்பவர் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. அம்மாவுக்கும் தனிப்பட்ட ஆர்வம், திறமை எல்லாம் இருக்கும். அவற்றை மதிக்க வேண்டும், நம்மால் முடிந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தார்கள். ஒவ்வொரு மலையேற்றத்தின் போதும் உற்சாகமாக வாழ்த்தி அனுப்புவார்கள். தங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வார்கள்.

என்னுடைய ஒவ்வொரு சாதனையையும் பெரிய விஷயமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் என் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்கிறேனே என்ற குற்றவுணர்வு எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என் குழந்தைகளின் இந்தப் புரிதலைத்தான் நான் மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். என் சாதனைகளுக்கு ஊக்கமளிப்பதும் அந்தப் புரிதல்தான்” என்று சொல்லும் கேட்டி சாரா, அடுத்த ஆண்டு தன் 50-வது பிறந்தநாளுக்காக உலகின் 8-வது உயரமான மலைச் சிகரமான இமயமலையின் மனஸ்லுவில் ஏறும் திட்டத்தில் இருக்கிறார்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆஸ்கார் விருது வென்ற Piper என்ற மூன்று நிமிட அனிமேஷன் திரைபடம்...

  • தொடங்கியவர்

இளம் வயதில் ஒப்பனை கலைஞரான சிறுமி

பத்து வயதே ஆகும் நாதனனின் பேஸ்புக் பக்கத்தை 7.5 லட்சம் பேர் பின் தொடருகிறார்கள்.

  • தொடங்கியவர்

2013: புதிய பாப்பரசராக முதலாம் பிரான்சிஸ் தெரிவானார்

வரலாற்றில் இன்று…

மார்ச் – 13

 

624 : மக்­காவில் குரை­ஷி­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் சவூதியின் ஹெஜாஸ் பிராந்­தி­யத்தில் பத்ர் யுத்தம் நடை­பெற்­றது. இதில் முஸ்­லிம்கள் வென்­றமை இஸ்­லாத்தில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது.

1639 : அமெ­ரிக்­காவின் ஹாவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு சம­ய­வாதி ஜோன் ஹாவார்ட் என்­ப­வரின் பெயர் சூட்­டப்­பட்­டது.

1781 : வில்­லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்­டு­பி­டித்தார்.

1811 : பிரித்­தா­னியர் பிரெஞ்சுப் படை­களை லீசா என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தனர்.

1881 : ரஷ்­யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்­சாண்டர் தனது மாளி­கைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்­யப்­பட்டார்.

1900 : பிரான்ஸில் பெண்கள் மற்றும் சிறு­வர்­களின் வேலை நேரம் சட்­டப்­படி 11 மணி நேர­மாகக் குறைக்­கப்­பட்­டது.
1921 : சீனா­விடம் இருந்து பிரி­வ­தாக மொங்­கோ­லியா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

Varalaru-Pope-Francis-Dove.jpg1940 : இந்­திய விடு­தலைப் போராட்ட வீரர் உத்தம் சிங், லண்­டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் வைத்து இந்­தி­யாவின் முன்னாள் ஆளுநர் மைக்கல் டயரை சுட்டுக் கொன்றார்.

1943 : ஜேர்­ம­னியப் படைகள் போலந்தின் யூதக் குடி­யேற்­றங்­களை அழித்­தன.

1954 : வியட்நாம் போர்: வியட்நாமின் படைகள் பிரெஞ்சுப் படை­களைத் தாக்­கினர்.

1957 : கியூ­பாவின் ஜனா­தி­பதி புல்­ஜென்­சியோ பட்­டீஸ்­டாவைக் கொல்ல மாணவ தீவி­ர­வா­திகள் எடுத்த முயற்சி தோல்­வியில் முடிந்­தது.

1969 : அப்­பலோ 9 விண்­கலம் பாது­காப்­பாக பூமி திரும்­பி­யது.

1979 : கிரெ­ன­டாவில் இடம்­பெற்ற புரட்சி ஒன்றில் நாட்டின் பிர­தமர் எரிக் கெய்ரி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

1988 : உலகின் மிக நீள­மான கட­லடி சுரங்­கப்­பாதை ஜப்­பானில் திறக்­கப்­பட்­டது.

1992 : கிழக்கு துருக்­கியில் ஏற்­பட்ட 6.8 ரிச்டர் அளவு பூகம்­பத்தில் 500 பேருக்கு மேல் உயி­ரி­ழந்­தனர்.

1997 : அமெ­ரிக்­காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்­சங்கள் தெரிந்­தன.

2003 : இத்­தா­லியில் 350,000 ஆண்டு பழ­மை­யான மனித அடிச்­சு­வ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நேச்சர் இதழ் அறி­வித்­தது.

2007 : 2007 உலகக் கிண்ண (கிரிக்கெட்) சுற்­றுப்­போட்டி மேற்­கிந்­தியத் தீவு­களில் ஆரம்­ப­மா­கி­யது.

2013 : பாப்­ப­ரசர் 16 ஆம் ஆசிர்­வா­தப்பர் ஓய்­வு­பெற்­ற­தை­டுத்து புதிய பாப்­ப­ர­ச­ராக ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த கர்­தினால் ஜோர்ஜ் மரியோ பேர்­கோக்­லியோ தெரிவானார். அவர் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயருடன் பாப்பரசரானார்.

2016 : துருக்கியின் அங்காரா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 37 பேர் உயிரிழந்ததுடன் 127 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

குழந்தைகளின் குரலை அலட்சியம் செய்யலாமா? - ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

 

உன்னை அறிந்தால்

`வேலையில்லையா வீட்டில்தான் இருப்பேன். குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடவே நான் விரும்புகிறேன்’ - ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் தெலுங்குத் திரைப்பட உலகின் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. நம்மில் பெரும்பாலானோர் வீட்டையும் பார்க்கும் வேலையையும் பேலன்ஸ் செய்யத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறோம். நம்மில் பலரும் பணம், தான் சார்ந்திருக்கும் துறையில் புகழ், சமூக அந்தஸ்து என எதன் பின்னாலேயோ ஓடுகிறோம்... குடும்பத்தை, உறவை மறந்தவர்களாக! ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தால், முதுமை நெருங்கிவிட்டிருக்கும்... நட்பை, உறவை, நல்ல தருணங்களை எனப் பல முக்கியமானவற்றை இழந்திருப்போம். ஆக, எதற்கு, யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. நமக்குப் பிடித்தமானவர்களோடு அதிக நேரத்தைச் செலவிடவேண்டியது மிக மிக அவசியம்.  குடும்பத்தோடும், உறவுகளோடும் ஆழ்ந்த பிணைப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்தக் கதை. 

 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் (Manchester) நகரிலிருக்கும் ஒரு பூங்கா அது. மாலை நேரம். குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் மகன் ஒரு பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தான். குழந்தைகள் ஒருவரையொருவர் துரத்தி விளையாடுவது, ஊஞ்சலில் ஆடுவது, பார் கம்பியில் ஏறுவது... என அந்த இடமே குதூகலமாக இருந்தது. அந்தப் பெண்ணின் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். இருவரும் பரஸ்பரம் `ஹலோ...’ சொல்லிக்கொண்டார்கள். 

``அதோ... அங்கே விளையாடுறானே... அவன்தான் என் பையன்’’ என்று ஒரு சிறுவனைச் சுட்டிக்காட்டினார் அந்தப் பெண்மணி

குழந்தை

``குட். சுறுசுறுப்பா இருக்கானே...’’ என்றவர், ``அதோ அங்கே மஞ்ச கலர் கவுன் போட்டு, பபுள்ஸ் விட்டுக்கிட்டு இருக்காளே... அவதான் என் பொண்ணு...’’ என்று தன் மகளைக் காட்டினார். 

``ஸ்வீட் கேர்ள்...’’ 

பிறகு இருவரும் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். அவர் தன் மகள் விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி ஒரு பத்திரிகையை எடுத்து விரித்துவைத்துக்கொண்டார். அரை மணி நேரம் கழிந்தது. 

அவர் தன் வாட்ச்சைப் பார்த்தார். பிறகு தன் மகளை அழைத்தார்... ``எலிஸா... கெளம்பலாமா?’’ 

அந்தச் சிறுமி அவரின் அருகே ஓடி வந்தாள். ``அப்பா... அப்பா... இன்னும் அஞ்சே நிமிஷம்ப்பா. ப்ளீஸ்பா...’’ என்றாள். 

அவர் சிரித்தபடி தலையசைக்க, அந்தப் பெண் திரும்பவும் விளையாட ஓடினாள். மேலும் 20 நிமிடங்கள் கழிந்தன. இப்போது அவர் எழுந்து நின்றார். 

``எலிஸா... டைமாகிடுச்சு. வா, போகலாம்.’’ 

அந்தக் குட்டிப் பெண், அப்பாவிடம் ஓடி வந்தாள். ``இன்னும் அஞ்சே நிமிஷம்ப்பா... ஜாலியா இருக்குப்பா... ப்ளீஸ்ப்பா.’’ 

அவர் `சரி’ என்பதுபோலத் தலையை அசைக்க, ``தேங்க்ஸ்பா...’’ என்று சொல்லிவிட்டு அவள் விளையாட ஓடினாள். 

அவர் மீண்டும் பெஞ்சில் அமர்ந்துகொண்டார். அந்தப் பெண்மணி இப்போது சொன்னார்... ``நீங்க உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி.’’ 

கதை

அவர் இதைக் கேட்டு மென்மையாகச் சொன்னார்... ``இங்கே பக்கத்துலதான் எங்க வீடிருக்கு. இவளோட அண்ணன் தாமஸ் போன வருஷம் ஒரு பைக் ஓட்டிக்கிட்டிருந்தான். ஒரு ட்ரக் மோதி ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. அந்த ட்ரக் டிரைவர் குடிச்சிருந்தான். என் மகன் ஸ்பாட்லயே இறந்துட்டான். அவனோட நான் அதிகமா நேரத்தைச் செலவழிச்சதே கிடையாது. இப்போ அவன் இருக்கக் கூடாதா... ஒரு அஞ்சு நிமிஷம் அவன்கூட இருந்தாக்கூடப் போதும்னு இருக்கு. அதுக்காக எதையும் கொடுக்கறதுக்கு நான் தயாராக இருக்கேன். ஆனா, அது நடக்கப் போறதில்லை. அதே தப்பை நான் எலிஸாவுக்கும் செய்யக் கூடாதில்லையா? என் பொண்ணு, `கூடுதலா அஞ்சு நிமிஷம் விளையாடறோமே’னு நினைச்சுக்கிட்டு இருக்கா. உண்மை அது இல்லை. அவ விளையாடுறதை இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு நான் ரசிக்கிறேன். அவ்வளவுதான்...’’ 

***  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கறுப்பினச் சிறுமியைத் தன் அருகில் அமர அனுமதிக்காத லண்டன் பெண்..! #Viral

 
Chennai: 

`கறுப்பு', உழைக்கும் மக்களின் நிறம்; புரட்சியின் நிறம். சமீபத்தில் `காலா' திரைப்படத்தின் டீஸர் வெளியான பிறகு, பலராலும் பேசப்பட்ட வார்த்தை `கறுப்பு'. பெரும்பாலான மக்கள் கறுப்பாக இருக்கும் நமது நாட்டில், கறுப்பு 'பிடிச்ச கலராக' விரும்பப்படுகிறது. ஆனால், விஞ்ஞானத்தில் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பல உலக நாடுகளில், `கறுப்பு' இழிவான நிறமாகவே பார்க்கப்படுகிறது. கறுப்பு நிற கோட் அணியத் தயங்காத அவர்கள், `கறுப்பின' மக்களோடு அமரத் தயங்குகிறார்கள்.

சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ, இந்த நிறப் பாகுபாட்டை இன்னும் வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது. லண்டனில் பேருந்து ஒன்றில் பள்ளிச் சிறுமியை தன் அருகில் உட்கார அனுமதிக்காமல் சண்டைபோட்டுள்ளார் ஒரு பெண்.

 

கறுப்பு இனத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, தன் அருகில் உட்காருவதை இழிவாகக் கருதிய அந்தப் பெண், ``இது ஆப்பிரிக்கா அல்ல, லண்டன்" என அந்தச் சிறுமியுடன் சண்டைபோட்டுள்ளார்.

https://www.facebook.com/groups/blackbritish/permalink/1250475151722800/?pnref=story

கறுப்பின மக்கள்

கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் தொடர்ந்து நடப்பதுபற்றிய செய்திகள், பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தொகுத்து வழங்கினால், அது ஆச்சர்யமளிக்கும் ஒரு செய்தியாக மாறும் அளவுக்கு கறுப்பின மக்களின் நிலை உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் மாணவர்கள்மீது தொடர்ச்சியாக இனவெறித் தாக்குதல் நடந்தன. தென்னாப்பிரிக்காவில் 1950 காலகட்டத்தில், கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. `இன ஒதுக்கல்' என்ற சட்டமே அந்த நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டது. கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை, கல்வி போன்றவை பல வருடங்களாக மறுக்கப்பட்டன. கறுப்பின மக்கள் எப்போதும் தங்களுக்கான அடையாளச் சீட்டை வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் அவர்கள் நகர வீதிகளில் நடமாடக் கூடாது. உயர்தர உணவகங்களில் நுழையக் கூடாது போன்ற ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

கறுப்பினத்தவர் மட்டுமன்றி இந்தியர்கள், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனைத்து மக்கள்மீதும் பாகுபாடு பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை ரயில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டதும், இந்த நிறவெறிதான். பல்வேறு தலைவர்களும் நிறவெறிக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றனர். மக்களின் மனதில் பதிந்துவிட்ட இந்த எண்ணத்தை அழித்தொழிப்பது காலத்தின் கட்டாயம். 

பல்வேறு நிறங்கள் இருக்கும்போது, `கறுப்பு' நிறம் மட்டும் ஏன் இவ்வளவு விவாதங்களைக் கிளப்புகிறது? `கறுப்பு' நிறம் ஏன் எதிர்ப்பை வெளிக்காட்டும் நிறமாகிப்போனது? `கறுப்பு' ஏன் பலருக்கும் உவப்பில்லாத நிறமாக இருக்கிறது? கறுப்பாக இருக்கும் காரணத்தால் ஆண்களுக்கும்  பல பெண்களுக்கும் திருமணம் தடைபடுகிறதே ஏன்? அரசாங்க விழாக்களிலும் சரி, கல்லூரி விழாக்களிலும் சரி நடுவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருள்களைச் சுமந்துவரும் பெண்களாக ஏன் கறுப்பானவர்கள் இல்லை? செய்தி வாசிப்பாளர்களில்கூட கறுப்பானவர்களாக திரையில் தோன்றியவர்கள் எத்தனை பேர்? சினிமாவில் நடிகைகள் தேர்வின்போது ஏன் கறுப்பானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? அபூர்வமாக திரையில் வரும் கறுப்பு நிற நடிகைகளையும் ஏன் மேக்கப் மூலம் அவர்களின் நிறத்தை மாற்றுகிறார்கள். நமது நாட்டில் இன்று பல்லாயிரம் கோடி லாபம் தரும் துறையாக அழகு சாதனப் பொருள்கள் விற்கும் தொழில் வளர்ந்திருப்பதற்கான காரணங்கள் எவை? இந்தக் கேள்விகள், நமக்குள் அவ்வப்போது தோன்றியிருக்கும். 

 

 

இங்கு, கறுப்பு என்பது நிறமாக மட்டுமே பார்க்கப்படுதில்லை என்பதுதான் உண்மை. விவசாயம் செய்பவர், கட்டட வேலைசெய்பவர் என உழைக்கும் மக்களின் நிறமாக கறுப்பு இருப்பதால்தான், இந்த எண்ணம் தோன்றுகிறது. சாதிப் பாகுபாட்டின் ஓர் அம்சமாகவே கறுப்பு நிறம் பார்க்கப்படுகிறது. நிறத்தை வைத்தே ஒருவரின் சாதியைக் குறிப்பிடும் அபத்தம் நமது நாட்டில் உள்ளது. `யாதும் ஊரே யாவரும் கேளீர்', `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், செயல்படுத்த முனைதல் அவசியம். உலகின் எந்த ஒரு நாடாக இருந்தாலும் சக மனிதனை நிறம், மொழி, இனம் இவற்றைக் காரணமாகக்கொண்டு ஒடுக்குவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இதுவரை உலகில் நடந்த போர்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம், சக மனிதன்மேல்கொண்ட வெறுப்புதான். அதைக் களைய முயல்வோம்.  

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எண்பதுகளில் பல்லாயிரம் சம்பாதித்த கழுதை

லண்டன் ராயல்டி தியேட்டரில் நடித்த செசிலி என்ற கழுதைக்கு 5000 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள்,காசுகள், வரலாற்றுச் சுவடுகள் குறித்து களஆய்வு மூலம் சேகரித்த தகவல்களைத் தொகுத்து கட்டுரையாக எழுதி ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் துவங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவைகளை எழுதகூடிய பொருட்களாக பயன்படுத்தினர்.

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிக்க ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் பயிற்சி அளித்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி விசாலி தன் வீட்டில் இருந்த பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்கள் பயன்படுத்திய பழைய ஓலைச்சுவடிகளை தேடி அவற்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் வரவு எழுதும் வழக்கம் இருந்ததையும் கண்டறிந்துள்ளார்.

ஓலைச் சுவடி குறித்து மாணவி விசாலியின் பிபிசி தமிழிடம் கூறியபோது, '' இது திருப்புல்லாணியைச் சேர்ந்த பிச்சைப் பண்டிதர் மனைவி குட்டச்சி என்பவர் காலமானபோது எழுதப்பட்ட கருமாந்திர மொய் வரவு ஆகும். இது எழுதப்பட்ட நாள் பிங்கள ஆண்டு அற்பிசை மாதம் 23ஆம் நாள் வியாழக்கிழமை (08.11.1917) ஆகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 அண்டுகளுக்கு முன்பே, கருமாந்திர காரியத்தின் போது மொய் வரவு எழுதி வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.இதில் மொய் எழுதிய அனைவரும் ஒரு ரூபாய் மொய் கொடுத்துள்ளனர்.'' என்கிறார் அவர்.

இராமநாதபுரம்

''இந்த ஓலைச்சுவடியில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த நேரத்தை மணி, திதி, நட்சத்திரம் ஆகியவற்றால் குறித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கில ஆண்டுகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் தமிழ் எண்கள், தமிழ் மாதம், தமிழ் ஆண்டுகளையே பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்து எழுதுவதில்லை. புள்ளி உள்ள எழுத்துக்களை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை இதில் காணமுடிகிறது.'' என விவரித்தார் விசாலி.

இப்பகுதி மாணவர்கள் இதே போல் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேயா ஆகிய நாடுகளில் ஆங்கிலேயர் காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

இராமநாதபுரம்

''இலங்கை காசு 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை கி.பி.1901, 1912, 1926 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவை. இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அதனருகில் காசின் மதிப்பு தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளன.'' என கூறுகிறார் அவர்.

இது குறித்து, ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு,''ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரைக் கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். மேலும் வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில், கடலில் கலக்கிறது. இதனால் இக்கடலோரம் பழைய காசுகள் கிடைப்பதுண்டு.'' என்கிறார்.

இராமநாதபுரம்

மேலும் அவர், ''ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராடலுக்காக இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளார்கள். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது அங்குள்ள காசுகளை கொண்டு வந்துள்ளனர்.'' என்கிறார்.

பண்டைய காலத்து பொருள்களை சேகரிக்கும் மாணவி நமீதா,`` எல்லா இடத்திலும் பொருட்களை தேடினேன் அப்போ, முதல்ல பிளாக் அண்ட் ரெட் கல் கிடைத்தது. அது பண்டைய காலத்துல பண்படுத்தியது என பிறகு தெரியவந்தது. பிறகு ஒரு மணி கல் கிடைத்தது. இந்த மணி கல் இரண்டாயிரம் ஆண்டு பழமையான மணி செய்யப்பட்ட கல் என்று ஆசிரியர் கூறினார்``என்றார்.

இராமநாதபுரம்

இந்த மாணவிகளால் தேடி எடுக்கப்பட்ட பொருள்களின் பழமை தன்மை குறித்து தொல்பொருள் துறையின் முன்னாள்  உதவி இயக்குநர் சாந்தலிங்கத்திடம் கேட்ட போது,'' மண்ணின் மேல்; பரப்பில் மாணவர்களால் தேடி எடுக்கப்படும் அனைத்து பொருள்களையும்  நான் பார்த்து இருக்கிறேன். அந்த பொருள்கள் பண்டைய வெளி நாட்டை சேர்ந்த நாணயங்கள் மற்றம் பண்டைய கால பயன்பாட்டில் இருந்த ஓலை சுவடிகள்'' என தெரிவித்தார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
‘தர்க்கம், எல்லாச் சமயங்களிலும் எடுபடாது’
 

image_d0c8bcca66.jpgநகைச்சுவை என்கின்ற முறையில் திமிராகவும் ஒருவரைக் கிண்டலடிக்கவும் தங்கள் வார்த்தை ஜாலங்களைக் காட்ட, துடுக்காகவும் இடக்கு முடக்காகவும் பேசும்போது, இதற்குப் பதிலடியாக, தக்க பதிலிறுப்பதுண்டு.

விறகுவெட்டி ஒருவன் காட்டில் விறகு வெட்டக் கோடரியுடன் சென்றான். வழியில் விறகுவெட்டிக்குத் தெரிந்தவன், “எங்கு செல்கின்றாய்” எனக் கேட்டான்.  தான் எங்கு செல்கின்றேன் என்பது தெரிந்தும், அவன் இப்படிக் கேட்டதற்குத் தக்க பதிலளிக்க வேண்டுமென எண்ணிய விறகுவெட்டி, “மீன் பிடிக்கச் செல்கின்றேன்” என்றான்.

அதற்கு அவன், “வலை, தூண்டில் இல்லாமலா?” என்றான். விறகுவெட்டியோ, “கையாலேயே பிடிக்கலாமே” என்றான். “அப்படியாயின் எனது வீட்டுக்கும் கொஞ்ச மீன்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப்போ” என்றான்.  ஆத்திரமடைந்த விறகு வெட்டி, கோடரியை ஓங்கிக்கொண்டு சென்றான். கண்டபடி பேசினால் பகைமை உருவாகும். தர்க்கம், எல்லாச் சமயங்களிலும் எடுபடாது.

  • தொடங்கியவர்

1979 : சீன விமான விபத்தில் 200 பேர் பலி!

வரலாற்றில் இன்று….

மார்ச் – 14

 

313 : சீனாவின் ஸியாங்னு மாநில மன்னன் ஜின் ஹுய்டி கொல்­லப்­பட்டான்.

1489 : சைப்­பிரஸ் மகா­ராணி கத்­தரீன் கோர்­னாரோ, தனது இராச்­சி­யத்தை வெனிஸ் நக­ருக்கு விற்றார்.

1794 : பஞ்சைத் தூய்­மைப்­ப­டுத்தி அதன் விதையில் இருந்து பிரித்­தெ­டுக்கும் “கொட்டன் ஜின்” என்ற இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையை எலீ விட்னி பெற்றார்.

1898 : டாக்டர் வில்­லியம் கப்­ரியேல் றொக்வூட், இலங்­கையின் அர­சியல் நிர்­ணய சபைக்கு தமிழர் பிர­தி­நி­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

varalaru2-copy.jpg1926 : கொஸ்ட்­டா­ரிக்­காவில் ரயில் ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 248 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1939 : செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் பொஹே­மியா மற்றும் மொரா­வியா மாகா­ணங்­களை ஜேர்­ம­னியப் படைகள் ஆக்­கி­ர­மித்­தன.

1939 : ஜேர்­ம­னியின் வற்­பு­றுத்தல் கார­ண­மாக ஸ்லோவாக்­கியா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1951 : கொரியப் போரில் இரண்­டா­வது முறை­யாக ஐ.நா. படைகள் சியோல் நகரைக் கைப்­பற்­றி­ன.

1978 : இஸ்­ரே­லியப் படைகள் தெற்கு லெப­னானை ஆக்­கி­ர­மித்துக் கைப்­பற்­றின.

1979 : சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்­சாலை ஒன்றின் மீது வீழ்ந்­ததில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980 : போலந்தில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 87 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1984 : வட அயர்­லாந்தின் சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படு­கா­ய­ம­டைந்தார்.

1995 : ரஷ்ய விண்­வெளி ஓடம் ஒன்றில் அமெ­ரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முத­லாகப் பய­ணித்தார்.

1998 : தெற்கு ஈரானில் 6.9 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் தாக்­கி­யது.

2006 : ஆபி­ரிக்க நாடான “சாட்;”டில் இரா­ணுவப் புரட்சி தோல்­வி­யுற்­றது.

2008 : திபெத்தில் பாரிய ஆர்ப்­பாட்­டங்­களும் வன்­மு­றை­களும் ஆரம்­ப­மா­கின.

2012 : “ஸ்ரீலங்காஸ் கில்லிங் ஃபீல்ட் வோர் கிறைம் அன்பனிஸ்ட்” எனும் ஆவணப்படம் பிரித்தானிய சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பாகியது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பெரிய மீனை விட்டுவிட்டு சின்ன மீனைப் பிடிக்கலாமா? - வாய்ப்பு என்பது வரம்... விவரிக்கும் கதை! #MotivationStory

 
 

கதை

`ரு வாய்ப்பை நழுவவிடுவதைவிட மிகப் பெரிய இழப்பு வேறு எதுவுமில்லை’ - அருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஹெச்.ஜாக்சன் பிரௌன் ஜூனியர் (H.Jackson Brown Jr.). நம் முன்னேற்றத்துக்கு உதவும், சாதிக்க உறுதுணையாக இருக்கும் எத்தனையோ அற்புதமான வாய்ப்புகள் நம் வீடு தேடி வந்திருக்கும். `இது எனக்கானதில்லை’, `அது எனக்கானதில்லை’ என்று ஒவ்வொன்றாக அவற்றை ஒதுக்கியிருப்போம். பிடிவாதமாக ஏதோ ஒன்றுக்காகக் காத்திருப்போம். இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அதன் வாய்ப்பின் அருமை நமக்குப் புரியாதது; மற்றொன்று, அதைப் பயன்படுத்தத் தெரியாதது. நம்மில் பலர் அரிய வாய்ப்புகளைத் தவறவிடுவது இரண்டாவது காரணத்தால்தான். ஏன்? எளிமையான விளக்கம் சொல்கிறது இந்தக் கதை. 

 

நியூசிலாந்திலிருக்கும் சின்ன ஊர் அது. ஜானும் ஜேம்ஸும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். ஜேம்ஸ், அங்கே குடிவந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இருவருக்குமே ஓய்வாக இருக்கும் நேரத்தில் அருகிலிருக்கும் ஏரிக்குப் போய் மீன் பிடிப்பது பிடிக்கும். ஆனால், இருவரும் ஒன்றாகப் போய் மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காமலேயே இருந்தது. அந்த நாளும் வந்தது. 

இருவரும் அவரவர் தூண்டிலில் பிடிபடும் மீன்களைப் பத்திரப்படுத்த ஐஸ் பெட்டிகள், மற்ற துணைக்கருவிகள், அவர்களுக்கான சிறு ஸ்நாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அவரவர் வேலை, குடும்பம், பொது விஷயங்கள் எல்லாவற்றையும் பேசியபடி ஏரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சற்று இடைவெளிவிட்டு, தனித்தனியே அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். 

மீன் பிடித்தல்

ஜான் தூண்டிலைப் போட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பெரிய மீன் பிடிபட்டது. அவன் சத்தமாகச் சொன்னான்... ``ஜேம்ஸ்... நான் அதிர்ஷ்டக்காரன். எனக்குப் பெரிய மீன் கிடைச்சிடுச்சு...’’ பிறகு அந்த மீனைப் பிடித்து தான் கொண்டு வந்திருந்த ஐஸ் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தினான். சற்று நேரத்தில் மேலும் சில சின்ன மீன்களும் அவனுக்குக் கிடைத்தன. அத்தனையையும் ஐஸ் பெட்டிக்குள் போட்டான். `அவ்வளவுதான்... இனி கிளம்பிவிட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கும் வந்திருந்தான். ஆனால், நண்பனோடு வந்திருக்கிறானே... விட்டுவிட்டுப் போக முடியுமா? எனவே, ஜேம்ஸின் அருகிலமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். மேலும், ஒரு மணி நேரம் கழிந்தது. ஜேம்ஸின் தூண்டிலில் ஒரு மீன்கூட சிக்கவில்லை. 

``ஏன்... ஜேம்ஸ் தூண்டில்ல இரை இருக்கானு பாரு?’’ 

ஜேம்ஸ் தூண்டிலை இழுத்துப் பார்த்தான். இரை இருந்தது. மறுபடியும் தூண்டிலைத் தண்ணீருக்குள் விட்டான். 

மேலும் ஐந்து நிமிடங்கள் கழிந்தன. ``ஜேம்ஸ்... நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? என் தூண்டிலைப் போடுறேன். மீன் கிடைச்சா நீயே எடுத்துக்கோ!’’ 

``வேணாம் ஜான். இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் மீன் சிக்கிரும். நீ வேணும்னா கிளம்பேன். நான் பின்னாலேயே வந்துடுறேன்...’’ ஜான், அதற்கு பதிலேதும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். 

சரியாகப் பத்தே நிமிடங்கள்... ஜேம்ஸின் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டியது. அதைப் பிடித்த ஜேம்ஸ், மறுபடியும் அந்தப் பெரிய மீனைத் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். இதைப் பார்த்து குழம்பிப் போனான் ஜான். சற்று நேரத்தில் இன்னொரு பெரிய மீனும் கிடைத்தது. அதையும் திரும்ப ஏரித் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். அதற்குப் பிறகும் பெரிய மீன்கள் வரிசையாக தூண்டிலில் மாட்டிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நீருக்குத் திருப்பியனுப்பிக்கொண்டிருந்தான் ஜேம்ஸ். 

ஒரு கட்டத்தில் கத்திவிட்டான் ஜான். ``ஏன் பெரிய மீன் கிடைச்சா திரும்பத் தண்ணிக்குள்ளேயே விடுறே?’’ 

``அதுவா? என் வீட்டுல இருக்குற வாணலி கொஞ்சம் சின்னது. இவ்வளவு பெரிய மீனை அதுல போட்டு வறுக்கவோ, சமைக்கவோ முடியாது.’’ 

மீன் பிடித்தல்

இதைக் கேட்டு ஒரு கணம் திகைத்துப் போனான் ஜான். பிறகு சொன்னான்... ``சின்ன வாணலியாவோ, பாத்திரமாவோ இருந்துட்டுப் போகட்டும். மீனை முழுசாத்தான் சமைக்கணுமா என்ன... நறுக்கி சமைக்கலாம்ல?’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

"வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்

 

மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளி வந்து நிற்கும். தலை வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும், சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடை கொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தின் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து போய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல்... ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்து வரும் ஓர் அதி அற்புதன்... இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும்... உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்...

ஸ்டீபன் ஹாக்கிங்

 

அது இரண்டாம் உலகப் போர் சமயம். மருத்துவம் படிக்கும் பிராங்கும், தத்துவம் படிக்கும் இசோபெல்லும் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள். எங்கும் போர். பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மத்தியில், அந்தக் குழந்தையின் அழுகுரல் அத்தனை இன்பமானதாய் அவர்களுக்கு இருக்கிறது. கருவறைக் கடந்து பூமியில் கால் வைத்த அந்தக் குழந்தை எதிர்காலத்தில் அண்டம் கடக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்ற எண்ணம் துளியளவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அது 1942 ஆம் ஆண்டு, ஜனவரி 8 ஆம் தேதி. கலீலியோ பிறந்து சரியாக முந்நூறு ஆண்டுகள் ஆன சமயம். 

ஸ்டீபன் ஹாக்கிங் வளரத் தொடங்குகிறார்.  பள்ளியில் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால், ஏன்? எப்படி?, என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்று கொண்டே இருந்தது. 
1960 களில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ALS எனப்படும் "Amyotrophic Lateral Sclerosis" என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம், கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி அதை ஈடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், "ஈக்வலைஸர்" என்ற கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் உதவியோடு... இன்று கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி வருகிறார். 

ஸ்டீபன் ஹாக்கிங்

இது இவரின் அறிமுகங்கள். இவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief Histroy of Time) என்ற புத்தகம் தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. தி யூனிவர்ஸ் இன் அ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள் இவரின் கோட்பாடுகளைத் தழுவித்தான் எடுக்கப்படுகின்றன. 

கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி ஜேன் வைல்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர் எலைனுடன் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டு பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.
அதிதீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து இஸ்ரேலில் பங்கேற்க வேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார். வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என தன் வீல்சேரில் பயணித்தபடியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார். 
ஏலியன், வேற்று கிரகம், என 75 வயதாகியும் தொடர்ந்து இயங்கி வரும் ஸ்டீபன், மனித சமுதாயத்திற்கு மிக முக்கிய எச்சரிக்கை மணியை அடிக்கிறார்... 

ஸ்டீபன் ஹாக்கிங்

 

" நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது... மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்... அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " என உறுதிப் பட கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!              

https://www.vikatan.com

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • தொடங்கியவர்

இந்தியாவின் மகளே இரோம் ஷர்மிளா... We love you!  #HBDIromSharmila

 
 

இரோம் ஷர்மிளா 

உண்ணாவிரதப் போராட்டம் என்பது நம் நாட்டுக்குப் புதிதான ஒன்று இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய ஆயுதமாக உண்ணாவிரதத்தைத்தான் காந்தியடிகள் பயன்படுத்தினார். அவருடன் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். அதுவே நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் அரசை அஞ்சி நாட்டை விட்டே செல்லும் முடிவை எடுக்கவைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரோம் ஷர்மிளாவின் போராட்டம் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்ததற்குக் காரணம் அவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தார் என்பதே. 

 

இந்தியா விடுதலை அடைந்த பிறகு சிற்றரசுகள் மற்றும் சமஸ்தானங்களைத் தன்னுடன் இணைத்தது. அப்படிச் சேர்க்கும்போது பல இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டன. குறிப்பாக, அருணாச்சலம் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் சிக்கல் நிலவியது. அதனால் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, மற்றும் திரபுரா மாநிலங்களில் 1958-ம் ஆண்டு, சிறப்பு அதிகாரம் கொண்ட ஆயுதப் படைச் சட்டத்தை (ASFPA) அமல்படுத்தியது. வாரன்ட் இல்லாமல் ஒருவரை விசாரிப்பது, கைது செய்துவது, எந்த இடத்திலும் தேடுதல் வேட்டையைச் செய்வது உள்பட வானாளவிய அதிகாரங்கள் அச்சட்டம் தந்தது. அதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்தச் சட்டத்தைத் திரும்ப பெற்றுகொள்வதற்குப் பலரும் போராடினர் (இன்றும் போராடி வருகின்றனர்). அவர்களில் பலர் ஆயுத வழியை மேற்கொள்ள அகிம்சை வழியைக் கையில் எடுத்தவர் இரோம் ஷர்மிளா. 

இரோம் ஷர்மிளா

1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாளில் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள் எனப் பெரிய குடும்பம் இரோம் ஷர்மிளாவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படிக்கும் சூழல். ஆயினும் மனித உரிமைத் தொடர்பாகப் படிப்பதில் அவருக்கு அதீத ஆர்வம். 2000-ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி மணிப்பூர் மாநிலம், மலோம் எனும் ஊரில் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள்மீது எந்தக் காரணமுமின்றி இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. அதில் 10 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தாங்க முடியாத துயரம் என்னவென்றால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய வீரக்குழந்தை எனும் பட்டத்தைப் பெற்ற சீனம் சந்திரமணி எனும் சிறுமியும் இறந்தவர்களில் ஒருவர். அந்தச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கி எடுத்துவிட்டது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிறப்புச் சட்டத்தைக் காரணமாகக் காட்டித் தப்பித்துக்கொண்டனர். 

மலோம் துயரச் சம்பவம் இரோம் ஷர்மிளாவை ரொம்பவே பாதித்தது. அப்போது அவருக்கு வயது 28. அந்தச் சம்பவம் நடந்த நான்காம் நாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் இரோம் ஷர்மிளா.  அதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை. அவரின் உறுதியைக் கண்டு அஞ்சிய அரசு, இரோம் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி, நவம்பர் 6-ந்தேதி கைது செய்தது. ஆனால், அவர் அப்போதும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அதனால் மருத்துவமனையில் மருந்துகள் வழியாக உணவூட்டப்பட்டன. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், அறிஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இரோம் ஷர்மிளா

ஆயுதப்படைச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும்வரை தனது போராட்டத்தைத் தொடர்வது என இரோம் ஷர்மிளா முடிவெடுத்தார். நோபல் பரிசு பெற்ற இபடி (Ms.Ebadi)யின் வாழ்த்தில் தொடங்கி மனித உரிமை பரிசு வழங்குவது என்பதாக உலகம் தழுவிய ஆதரவு அவருக்குக் கிடைத்தது. முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், இடையில் கிடைத்த சிறு விடுவிப்பில் டெல்லிக்கே சென்று, காந்தியின் சமாதிக்கு மரியாதை செலுத்தி, அன்றே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நீடித்த இந்தப் போராட்டத்தை 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துக்கொண்டார். தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை வடிவத்தை மட்டும்தான் மாற்றப்போவதாகக் கூறினார். 

2017-ம் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தோபல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், மிகச் சொற்பமான வாக்குகளையே அவரால் பெற முடிந்தது. இந்தத் தோல்வி அவரை மட்டுமல்ல, அவரை ஆதரித்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதன்பின், அரசியலிலிருந்து விலகி, தமிழ்நாட்டுக்கு வந்து, தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார். 

ஒரு போராட்டத்தின்போது ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு இரோம் ஷர்மிளாவே மிகச் சரியான உதாரணம். அவ்வழியை இந்திய மக்களுக்குத் தன் வாழ்வின் அடையாளமாக மாற்றிக் காட்டியுள்ளார். சமுக மாற்றத்தை விரும்பும் எல்லோருமே, இரோம் ஷர்மிளாவிடம் சொல்ல விரும்புவது We love you.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?

 

1866-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஒடோர்டோ பெக்கரி (Odoardo Beccari) என்ற தாவரவியலாளர் தன் கண்ணில் பட்ட அந்த விநோதமான தாவரத்தை வரைந்து வைத்துள்ளார். அவரது பதிவைத் தவிர கடந்த 151 ஆண்டுகளில் வேறு எங்குமே அந்தத் தாவரம் தென்படவில்லை. ஆனால், தற்போது மலேசியாவின் போர்னியோ மழைக்காடுகளில் காணப்பட்ட அரிய வகைத் தாவரம் ஒன்று அதைப் போலவே இருந்ததால் அவரது பதிவையும், நேரில் பார்த்த தாவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த தாவரவியலாளர்கள் அதே இனம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு விஷயம் என்னவென்றால் 151 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்த அந்தத் தாவரம் ஓர் ஒட்டுண்ணித் தாவரம். அதென்ன ஒட்டுண்ணி?

ஒட்டுண்ணி தாவரம் திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis)

 

Photo Courtesy: Marianne North and Odoardo Beccari

தனக்கான உணவைச் சுயமாக உருவாக்கிக்கொள்ள இயலாத உயிரினங்கள் தன் உணவுக்காக வேறோர் உயிரினத்தைச் சார்ந்தே வாழும். அவ்வகை உயிரினங்களை அசைவ வகைப்பாட்டில் வரிசைப்படுத்துவார்கள். ஓர் உயிரினம் தேடிக்கொள்ளும் உணவாக உணவுச்சங்கிலியில் உள்ள வேறு ஓர் உயிரி, அதற்கான உணவிற்காக வேறு உயிர்களில் சார்ந்து இருக்கக்கூடாது. அத்தகைய உயிரினங்களை மட்டுமே உண்டு வாழும் உயிரினம் சைவ வகையில் சேரும். உதாரணமாக, மான் தாவரங்களை உண்கிறது. மானைப் புலி உண்கிறது. இங்கே புலி அசைவம். ஆனால், மான் சைவம். தாவரம் என்பது ஓர் உயிர்தான் என்றாலும், தனக்கான உணவை ஒளிச்சேர்க்கை மூலம்,  தாவர இனங்கள் தானே சமைத்துக்கொள்கின்றன. அதனால்தான் தாவரங்களை உண்டு வாழும் மான் போன்ற உயிர்கள் சைவ வகையினைச் சேர்ந்தவை. ஆனால், தாவரங்கள் அனைத்துமே சூரிய ஒளியை நம்பி வாழ்கின்றனவா என்றால், இல்லை. தாவரங்களிலும் அசைவ உயிரிகள் உண்டு.

அத்தகைய அசைவப் பிரியர்கள்தான் இந்த ஒட்டுண்ணித் தாவரங்கள். இவற்றின் உடற்பகுதியில் ஒளிச்சேர்க்கை செய்யத் தேவையான க்ளோரோபில் (Chlorophyll) எனப்படும் பச்சையம் என்ற மூலக்கூறுகள் மிகவும் குறைவு. ஆகையால் ஒளிச்சேர்க்கை செயற்பாடு இவ்வகைத் தாவரங்களில் மந்தப்பட்டிருக்கும். இவர்களுக்குப் பச்சையம் இல்லாத குறையை ஹாஸ்டோரியம் (Haustorium) என்ற உறிஞ்சும் உறுப்பு ஈடுசெய்கின்றது. இந்த ஹாஸ்டோரியம் ஒட்டுண்ணித் தாவரங்களின் இனப்பிரிவைப் பொறுத்து இருக்கும் இடம் வேறுபடும். தண்டின் உச்சியிலோ, கொடியாகப் படர்ந்தோ அல்லது வேர்ப்பகுதியிலோ இருக்கும். பொதுவாகத் தண்டின் உச்சியில் ஹாஸ்டோரியாக்களை கொண்டிருக்கும் தாவர வகைகள் பூச்சியுண்ணிகளாக இருக்கும். கொடிபோல் படர்ந்திருப்பவை சில சமயம் தன் கொடியில் சிக்கும் விலங்குகளைக் கூட உண்டுவிடும்.  ஹாஸ்டோரியம் வேர்களில் அமைந்திருந்தால் அவை பெரும்பாலும் அருகிலிருக்கும் தாவரங்களின் வேர் வரையிலும் நீண்டு, அதன் சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சி எடுத்து உயிர் வாழும். இத்தகைய ஒட்டுண்ணிகள் விவசாய நிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்குப் பல நஷ்டங்கள் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

ஒட்டுண்ணி திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis)

திஸ்மியா உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தப் புதிய ஒட்டுண்ணி. திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis) என்றழைக்கப்படும் இது பேச்சு வழக்கில் வனதேவதை (Fairy Lantern) என்றழைக்கப்படுகிறது. பெக்கரி 1866-இல் வரைந்த ஓவியத்தோடு இது முழுவதும் ஒத்துப்போகிறது. இது மற்ற அனைத்திலுமிருந்து சற்று மாறுபட்டதாகவும் சாதுவாகவும் இருக்கிறது. பெக்கரியின் கண்களில் பட்டபோது இதைப் பற்றிய விவரங்களை அவர் புரிந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் கண்டறியப்பட்ட போது அதன் செயற்பாடுகள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன் மொத்த எண்ணிக்கை இரண்டு மட்டுமே. 1866-இல் பெக்கரி பதிவு செய்தது ஒன்று, போர்னியோவில் தற்போது காணப்பட்டது மற்றொன்று. மேலும் எங்காவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மென்மையான வெளிர்நிற தண்டுகளைக் கொண்ட இந்த ஒட்டுண்ணி நிலத்தடி பூஞ்சைகளை உறிஞ்சுவதற்கு ஏதுவாக மிகவும் எளிமையான வேர்களைக் கொண்டது. கட்டை விரல் வடிவத்தில் இருக்கும் அதன் நுனிப் பகுதியில் நீளமான மூன்று கொம்பு வடிவத் தண்டுகள் மெல்லிசாக நீட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் கட்டை விரல் வடிவ நுனிப்பகுதி வெளிர்சிவப்பு நிறத்தில் சிறிது விரிந்து, மலர் போன்று காட்சியளிக்கிறது.

ஒட்டுண்ணி

Photo Courtesy: PhytotaxaCreative Commons

ஹாஸ்டோரியம் வேர்களைக் கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி தனது வேர்களை நேரடியாக அருகிலிருக்கும் தாவர வேர்களோடு இணைத்து சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சாமல், தாவரங்களில் இருக்கக்கூடிய பூஞ்சைகளை மட்டுமே உண்டு வாழ்கின்றது. இந்த ஒட்டுண்ணியின் உடலில் ஒளிச்சேர்க்கை மூலக்கூறுகள் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் விதம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆயினும் நெப்டியூனிஸின் பூவிற்குள் இருந்த இரண்டு வண்டினங்கள் மகரந்தச் சேர்க்கைதான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தாவரங்களின் பூஞ்சைகளை உண்டு வாழும் இவை நேரடியாக மற்ற தாவரங்கள் எதையும் பாதிப்பதில்லை. இந்தத் தனித்தன்மை, மற்ற ஒட்டுண்ணித் தாவரங்களிடமிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.

மழைக்காடுகளின் அளவு வேறு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், சேற்றுப் பகுதிகளில் மழைக்காடுகளுக்குள் வாழும் இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் வேறு பல தாவர இனங்களைக் கண்டறியவும் அதன் மூலம் மழைக்காடுகளைக் காக்கவும் ஓர் ஊக்கத்தை அளித்துள்ளது. ஏனென்றால், பெக்கரியின் ஆய்வுகளுக்கு உட்பட்ட வனப்பகுதிகளின் பெரும் பகுதி மீண்டும் வேறு யாராலும் ஆராயப்படாமலே இருக்கிறது. அவற்றை ஆராயத் தொடங்குவது அறிவியல் உலகிற்கு மேலும் பல அதிசயங்களைக் கொடுக்கலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

thumb_large_New_Layout__3_.jpg

வேலைக்கு ஹை ஹீல்ஸைஅணிந்து செல்லும் ஆண் கூறிய காரணம்!!!

 

 
 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக ஹை ஹீல்ஸ்களை அணிந்து செல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த Ashley Maxwell-Lam கடந்த 1 ஆண்டாக தன்னுடைய அலுவலகத்திற்கு 6 இன்ச் ஹை ஹீல்ஸை அணிந்து செல்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது,

"இதைப் பற்றி வெட்கப்படவோ, ரகசியமாக சொல்லவோ வேண்டிய அவசியமில்லை எனவும் ஒருநாள் நான் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது என்னுடைய சப்பாத்தை  காணவில்லை.

நான் என்னுடைய தங்கையின் ஹை ஹீல்சை அணிந்து சென்றேன். வீதியில் நான் நடந்து சென்ற போது என்னை அனைவரும் ஒரு வித்தியாசமாக பார்த்தனர். நான் அவர்களை கடந்து சென்ற போதும் அவர்கள் என்னை திரும்பி திரும்பி பார்த்தனர்.

இது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் காரணமாகவே தொடர்ந்து ஹை ஹீல்சை அணிய ஆரம்பித்தேன்" என்று கூறியுள்ளார்.

இதைத் தவிர அவரது ஆடைவடிவமைப்பாளர் சப்பாத்தை  விட உங்களுக்கு ஹீல்ஸ் தான் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளதால் அவர் தொடர்ந்து அலுவலகத்திற்கு ஹீல்ஸ்களையே அணிந்து சென்று வருகிறார்.

இதனால் மிகவும் பிரபலமாகியுள்ள Ashleyயை உள்ளூர் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஸ்டீஃபன் ஹாக்கிங்: வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்

இன்று மரணமடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் வாழ்வில் எடுக்கப்பட்ட சில முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு.

Stephen Hawking

2007இல் புவியீர்ப்பு விசை இன்மை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விமானத்தில் பயணிக்கும் முதல் கை கால்கள் செயலிழந்த நபரானார் ஸ்டீஃபன் ஹாக்கிங்

Stephen Hawking

தனது 22ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதல் மனைவி ஜேன் உடனான திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, அவர் ஓரிரு ஆண்டுகளே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

Stephen Hawking 1942ல் பிறந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படித்தபோது அண்டவியலில் ஆய்வு மேற்கொண்டார்.

Stephen Hawking

2017இல் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.

Stephen Hawking

 

பிரிட்டன் ராணி எலிசபெத்துடன் 2014இல் நடந்த ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் ஸ்டீஃபன் ஹாக்கிங்

Stephen Hawking

தனது செவிலியர்களின் ஒருவரான எலைன் மேசனை 1995இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் மணந்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்குள் மணமுறிவு ஏற்பட்டது.

Stephen Hawking

சக்கர நாற்காலியில் பெரும்பாலான காலத்தைக் கழித்த ஸ்டீஃபன் ஹாக்கிங், செயற்கையாக குரல் எழுப்பும் கருவி மூலமே பேசினார்.

Stephen Hawking

ஸ்டீஃபன் ஹாக்கிங்-இன் வாழ்க்கை வரலாறு 'தி தியரி ஆஃப் எவெரிதிங்' எனும் பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

Stephen Hawking

அறிவியல் மற்றும் கணிதவியலில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்டீஃபன் ஹாக்கிங், 2009இல் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் கௌரவம் மிக்க 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்' பதக்கத்தைப் பெற்றார்

Stephen Hawking

ஸ்டீஃபன் ஹாக்கிங் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு அறிவியல் வகுப்புகள் எடுத்துள்ளார்

Stephen Hawking

2017இல் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

திருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்!!!

 

 
 

சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

New_Layout__3_.jpg

25 வயதான  Fu Xuewei என்ற இளம் பெண் 87 வயதான தனது தாத்தாவான Fu Qiquanயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் Fu Xuewei தனது தாத்தாவை திருமணம் செய்வது போன்ற புகைப்படம்  எடுத்துக் கொண்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இது குறித்து Fu Xuewei  கூறுகையில்,

"தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தாவின்  முகம் தெரியவேண்டும்.

இதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும் அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன்" என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில் தாத்தா தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் எனவும் Fu Xuewei  உருக்கத்தோடு கூறியுள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! #Viral

 
 

 

சீன தம்பதி

 

அந்த அபூர்வ புகைப்படம்..

சீனப் பெண் ஒருவர்  தன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், தற்செயலாகத் தன் கணவரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார். குழப்புகிறதா...  இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்..


சீனாவைச் சேர்ந்த யீ (Ye) - சூய் (Xue) தம்பதி கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் முதன்முதலில் சந்தித்துக்கொண்டது 2011-ம் ஆண்டு செங்டூ என்னும் இடத்தில் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் காதல் வாழ்க்கையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.

கடந்த மார்ச் 4-ம் தேதி யீ தன் மனைவியின்  புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடலோர நகரமான கிங்டாவோவில் மே ஃபோர்த் ஸ்கொயர் ( May Fourth Square) என்னும் இடத்தில் எடுத்த புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தில் தன் மனைவியின் பின்னால் அவரும் இடம்பெற்றிருந்தார். அந்தப் புகைப்படத்தை தன் மனைவியிடன் காண்பித்தபோதுதான் உண்மை விளங்கியது.  

சீன தம்பதி
 

18 ஆண்டுகள் முன்னர் அதாவது 2000-ம் ஆண்டு யீ, மே ஃபோர்த் ஸ்கொயர்  என்ற இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதே நாளில் சூய்யும் அதே இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சூய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தொலைவில் 'யீ'யின் உருவமும் பதிவாகியுள்ளது. சூய் இங்கு போஸ் கொடுக்கும் அதே சமயம், பின்னால் நின்றுகொண்டிருக்கும் 'யீ'யும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். ’இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு முன்னரே ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். காதலில் விழுவதற்கு முன்னரே ஏதோ ஒரு தருணத்தில் என் மனைவியை நான் கடந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உடல் புல்லரிக்கிறது’ என்று யீ சீன ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். 

’குஷி’ பட பாணியில் சீனாவில் ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் - மார்ச் 14- 1879

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் - மார்ச் 14- 1879
 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.

இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டார். * 1926 - கோஸ்ட்டா ரிக்காவில் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர். * 1939 - செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜெர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.

* 1951 - கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா. படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது. * 1978 - இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது. 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
‘அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன்’
 

image_da0790cd29.jpgநல்ல மனமும் பரந்த நோக்கமும் இல்லாதவன், தான் சார்ந்த மதத்துக்கோ அல்லது மனித இனத்துக்கோ விசுவாசமானவனாக இருக்க முடியாது. 

ஆனால், இத்தகைய வீணர்கள்தான், இன, மத குரோதத்தை வளர்த்து வருகின்றார்கள். அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன். இவர்களிடத்தில் எந்தவிதமான அனுகூலத்தையும் உலகம் பெற்றுவிடமுடியாது.

இதன்பொருட்டு, இத்தகையவர்களை நாங்கள் பூரணமாக விலக்கிவிடவும் கூடாது. சமூகப் பிணைப்புக்குள் இணைந்துகொள்ள, ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.  

எவரையும் ஒதுக்க நினைத்தலாகாது. வெறுப்பால் எதையும் சாதிக்கவும் முடியாது. சமூகப்பிரக்ஞையை உண்டுபண்ண வேண்டும். எவரையும் அரவணைக்க எம்மால் முடியும். கல்லுக்கு உள்ளேயும் நீர் மறைந்து ஓடும். பாறையைப் பிளக்க ஊற்று வருவதில்லையா? ஒரு மனிதனையும் தனித்திருக்க விடாதீர்கள். அவர்கள் எம்மவர்கள்தான். உணர்க! 

  • தொடங்கியவர்

2011 : சிரி­யாவில் சிவில் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று…

மார்ச் – 15

 

கிமு 44 : ரோமன் குடி­ய­ரசின் மன்னன் ஜூலியஸ் சீசர், மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்­டர்­களால் குத்திக் கொல்­லப்­பட்டான்.

933 : பத்து வரு­ட­கால அமை­திக்குப் பின்னர் ஜேர்­மா­னிய மன்னர் முதலாம் ஹென்றி, ஹங்­கே­ரிய இரா­ணு­வத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் தோற்­க­டித்தார்.

syria-varlaru-copy.jpg1493 : கிறிஸ்­டோபர் கொலம்பஸ், அமெ­ரிக்­கா­வுக்­கான தனது முத­லா­வது பய­ணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்­பினார்.

1776 : தற்­போ­தைய அமெ­ரிக்க மாநி­ல­மான தெற்கு கரோ­லினா பிரித்­தா­னி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக அறி­வித்­தது. பிரித்­தா­னி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெற்ற முத­லா­வது அமெ­ரிக்கக் குடி­யேற்ற நாடு இது­வாகும்.

1802 : இலங்­கையின் முத­லா­வது அரச வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது.

1848 : ஹங்­கே­ரியில் புரட்சி வெடித்­தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்­சி­யா­ளர்கள் சீர்­தி­ருத்தக் கட்­சியின் முக்­கிய நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று.

1877 : முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன் நகரில் ஆரம்­ப­மா­னது.

1917 : ரஷ்­யாவின் இரண்டாம் நிக்­கலாஸ் சார் மன்னன் முடி துறந்தார்.

1922 : எகிப்து ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து முறை­யாக விடு­தலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்­ன­னானார்.

1943 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்­ம­னியப் படைகள் உக்­ரைனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இரா­ணு­வத்­திடம் இருந்து கைப்­பற்­றின.

varalaru25-copy.jpg1961 : தென் ஆபி­ரிக்கா பொது­ந­ல­வாய நாடு­களில் இருந்து வெளி­யே­றி­யது.

1970 : எக்ஸ்போ ’70 உலகக் கண்­காட்சி ஜப்­பானின் ஒசாக்கா நகரில் ஆரம்­ப­மா­னது.

1985 : உலகின் முத­லா­வது .கொம் இணை­யத்­தள பெயர்; (symbolics.com) பதி­வு­செய்­யப்­பட்­டது.

1988 : ஈராக்­கியப் படைகள் குரு­திய நக­ரான ஹலப்ஜா மீது இர­சா­யன நச்சுக் குண்­டு­களை வீச ஆரம்­பித்­தது. 5,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1990 : மிக்கைல் கொர்­பசேவ், சோவியத் ஒன்­றி­யத்தின் முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானார்.

1991 : இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்­ம­னியின் ஆதிக்க நாடு­க­ளான ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், ஐக்­கிய அமெ­ரிக்கா, சோவியத் ஒன்­றியம் ஆகி­ய­வற்­றிடம் இருந்து ஜேர்­மனி முழு­மை­யான விடு­த­லையைப் பெற்­றது.

2007 : இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.

2011: சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பமாகியது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

செல்ஃபி எடுத்த பென்குயின்கள்... இது அண்டார்டிகா அதிசயம்!

 
 

றவைகள் என்றால் நன்றாகப் பறக்க வேண்டும் அல்லவா? இவற்றுக்குப் பறக்கவே தெரியாது. ஆனால், நன்றாகவே நீந்தும். மற்ற பறவைகளுக்கு இருப்பதுபோல் இவற்றின் சிறகுகள் மென்மையாக இருக்காது, நீண்ட கைகளைப் போல் மிகவும் கடினமானது. வாத்து போன்ற கால்களைக் கொண்ட இவை, தரையில் தன் உடலைத் தூக்கிக்கொண்டு அந்தச் சின்னக் கால்களால் மெல்ல நடக்கும் நளினத்தின் முன் அன்ன நடைகூடத் தோற்றுத்தான் போக வேண்டும். தரையில் சோம்பேறிக்குச் சொந்தக்காரன்போல் இருக்கும் இந்தத் தென் துருவப் பறவைகள், நீருக்குள் புகுந்துவிட்டால் இதுவா அப்படி அன்னநடை போட்டது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வேகமாக நீந்தும்.

எம்பரர் பென்குயின்

 

பறக்கத் தெரியாது, கைகளைப் போல் கடினமான எலும்புகளைக் கொண்ட சிறகுகள் போன்ற உடலுறுப்பு, நன்றாக நீந்துகிறது. பிறகு எப்படிப் பறவையினம் என்று கூறுகிறார்கள்?

ஆம், அது ஒரு பறவைதான். பறவை இனங்களைப் போலவே முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கக்கூடிய இவற்றின் முகத்தில் நீண்டிருக்கும் அலகுகள் அதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கடற்பறவை வகைகளில் பறக்க இயலாத ஒரே பறவை, பனிப்பாடி என்று தமிழில் அழைக்கப்படும் இந்தப் பென்குயின்கள் மட்டுமே.

உலகளவில் மொத்தம் 17 வகையான பென்குயின்கள் இருக்கின்றன. அதில் எம்பரர் பென்குயின் (Emperor Penguin) என்ற இனம்தான் இருப்பதிலேயே உயரமானது. பொதுவாக அனைத்து இனங்களுமே மீன்கள், சிப்பி வகைகள், க்ரில் (Krill) என்ற ஒரு வகை இறால்களையே அதிகம் உண்ணுகின்றன. பனிப்பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படும் இவை பனிச்சிறுத்தை, நரி போன்ற விலங்குகளாலும் ஸ்குவா (Skua), ஷீத்பில் (Sheathbill) போன்ற கடற்பறவைகளாலும் வேட்டையாடப்படுகின்றன. இத்தகைய வேட்டையாடிகளால் வராத ஆபத்து, இன்றைய உலக வெப்பமயமாதலால் இந்தப் பென்குயின்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பென்குயின்

உலகம் வெப்பமடைவதால் தென் துருவ அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகிக்கொண்டிருக்கின்றன. இதனால் உருவாகும் காலநிலை மாற்றங்களால் உலகின் உயிர்கள் அனைத்தும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதுபோலவே, பென்குயின்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது. பனிப்பிரதேசக் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பிரத்யேக மீன் மற்றும் இறால் வகைகளையே இவை உணவாகக் கொள்கின்றன. ஆனால், வெப்பமடைதல் காரணமாக அவற்றின் எண்ணிக்கை குறைவதாலும், இருப்பதையும் அதீத மீன் பிடித்தல் மூலம் மனிதர்கள் சுரண்டி விடுவதாலும் பென்குயின்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு காலனியில் வாழும் மொத்த பென்குயின்களும் 1.93 லட்சம் டன்கள் இறாலையும், 18,000 டன்கள் மீன்களையும் அவற்றின் இனப்பெருக்கக் காலத்திற்கு மட்டும் உணவாகக் கொள்கின்றன. ஆனால் வரும்காலத்தில் அவைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி தற்போதைய நிலவரப்படியே, பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறி இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் அவற்றை சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்துள்ளது.

23 லட்சம் பென்குயின்கள்

Satellite Photo Courtesy: Thomas Sayre McChord, Hanumant Singh, Northeastern University, Woods Hole Oceanographic Institution

சென்ற ஆண்டு செயற்கைக்கோள் மூலம் கிழக்கு அண்டார்டிகா பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், 23 லட்சம் பென்குயின்களைக் கொண்ட புதிய காலனி ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் காலனி இத்தனை நாள்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தது ஆச்சர்யமே. மறைந்திருந்த காலனியில் இருப்பவை அண்டார்டிகாவில் மட்டுமே காணப்படும் என்டெமிக் பென்குயின் இனமாகும். இப்போது பென்குயின்களைப் பாதுகாப்பது இன்னும் சிக்கலாகிவிட்டது. இவற்றுக்கான உணவு, வாழ்வாதாரம் போன்றவை வரும் காலத்தில் தீர்ந்துவிடாமல் தக்கவைக்க வேண்டியது அவசியமாகிறது.

நம்மை ரசிக்க வைப்பதையும் தாண்டி பென்குயின்கள் சுற்றுச்சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. அவை கடலிலும், நிலத்திலும் வாழ்வதால் நிலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரிலிருந்தும், கடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நிலத்திலிருந்தும் தான் உண்ணும் உணவிலிருந்து சில சத்துகளை மலத்தின் மூலமாகப் பகிர்ந்தளிக்கிறது. நிலத்தில் இனப்பெருக்க காலத்தின்போது அடைகாக்க அவை குழி தோண்டுவதால் நிலத்தின் தன்மை சீரமைக்கிறது. அது மட்டுமின்றி பனிச்சிறுத்தை, நரி மற்றும் சில கடற்பறவைகளுக்கு உணவாக இருக்கும் இவை அழிந்துவிட்டால் உணவுச் சங்கிலியின் தொடர்ச்சி பாதிக்கப்படும்.

செல்ஃபி எடுத்த பென்குயின்கள்

Photo Courtesy: Eddie Gault - Australian Antarctic Division 

 

இத்தனை நன்மைகளைப் புரியும் பென்குயின்கள், தனக்கு இருக்கும் ஆபத்துகளைப் பற்றிய சிந்தனை சிறிதளவும் இல்லாமல் அண்டார்டிகாவில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதற்கு அத்தாட்சி கூறுவதுபோல் அமைந்துள்ளது ஒரு ஜோடி பென்குயின்கள் எடுத்த செல்ஃபி. அண்டார்டிகாவில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான மாவ்ஸன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அருகில் எட்டி கால்ட் (Eddie Gualt) என்ற ஆய்வாளர் தனது கேமராவைத் தொலைத்துவிட்டார். அங்கே சுற்றித் திரிந்த பென்குயின்களில் ஒரு ஜோடி, தாங்கள் கண்டெடுத்த கேமராவை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தபோது, அவை இரண்டின் முகமும் அழகான செல்ஃபியாகப் பதிந்துவிட்டது. பின்னர், கால்ட் அந்தக் கேமராவை மீண்டும் எடுக்கச் சென்றிருக்கிறார். மீட்டெடுத்த அந்தக் கேமராவில் அந்தப் புகைப்படத்தையும் கவனித்திருக்கிறார். அந்த அழகுப் பென்குயின்களின் அம்மாஞ்சியான முகத்தைக் கண்டதும், செல்ஃபியின் அழகை மறந்து, அந்தப் பென்குயின் இனத்திற்கே விரைவில் நேரவிருக்கும் சிக்கல்களை நினைத்து அவருக்கு வருத்தமே மேலோங்கி இருக்கிறது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.