Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை!!!

 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

ஆலமரத்தில் ஒரு கிளையில் பூச்சுத்தொற்று ஏற்பட்டது. இந்த பூச்சித்தொற்று மற்ற பகுதிக்கு பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயம் உள்ளதால் ஆலமரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கமைய  மனிதர்களை போலவே ஆலமரத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போத்தல்களில்  பூச்சிக்கொல்லி மருந்துகள் நிரப்பப்பட்டு மரத்திற்கு செலுத்தப்பட்டுள்ளன. மேலும் சத்து நிறைந்த உரங்கள் போடப்பட்டு வருகின்றன.

New_Layout__3_.jpg

ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.அவற்றில் ‘யாமிருக்க பயமே', ‘கவலை வேண்டாம்' படத்தின் இயக்குநர் டிகே இயக்கவிருக்கும் ‘காட்டேரி' படமும் ஒன்று. நிறைய படங்களில் ஒவியா பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதில் ஓவியாவுக்குப் பதிலாக   ‘மீசைய முறுக்கு' படத்தில் நடித்த ஆத்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். 

p19a_1523957855.jpg


தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஷாலினி பாண்டே தற்போது பரதம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். பிடித்த ஹீரோ அமிதாப் பச்சன். பிடித்த இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக். ஜபல்பூரில் பிறந்து வளர்ந்த ஷாலினிக்குத் தென்னிந்தியக் கலாசாரம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதனால், இங்கிருக்கும் பையனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

p35a_1523966226.jpg


ஞ்சலி, வெளிப்புற ஷூட்டிங் ஸ்பாட் அருகே புகழ்பெற்ற கோயில்கள் இருந்தால் விசிட் அடிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது ஃபிட்னஸ் பக்கம் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறார். காலையில் ஒரு மணிநேரம் ஜிம்மும், இரவில் ஒரு மணிநேரம் யோகாவும் அஞ்சலியின் To-do லிஸ்டில் நிச்சயம் இருக்கும். ‘சேதுபதி’ பட இயக்குநர் அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

p93a_1524047356.jpg

p93b_1524047365.jpg


சாதியத்தை முற்றிலுமாக மறுப்பவர் நடிகை பார்வதி. சமீபத்தில் தனது பாஸ்போர்ட் உட்பட அடையாள அட்டைகளில் ‘மேனன்' என்ற சாதிப்பெயரை நீக்கியுள்ளார். “எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கும்  சாதிப்பெயர் இருக்காது. பெயரில் சாதி தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது” என்கிறார். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் பார்வதியின் கொள்கை.

p63a_1524048521.jpg
 


சைவ உணவு வகைகளை மட்டுமே விரும்பி உண்ணும் சாய் தன்ஷிகா, டயட் என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலடைகிறார். ‘சாம்பார் சாதம் பிடிக்கும். நாம செய்யும் வேலைக்குத் தகுந்தமாதிரி என்னமாதிரியான டயட்டையும் ஃபாலோ பண்ணலாம்’ என்கிறார். உலகத்தை சுற்றிப் பார்க்கும் தீரா ஆசை உண்டு. புட்டபர்த்தி சாய்பாபா கோயிலும் சித்தூர் அம்மாஜி தர்காவும் சாய் தன்ஷிகாவுக்கு ரொம்பப் பிடித்த இடங்கள்.

p99a_1524048715.jpg

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நவீனன் said:

பிட்ஸ் பிரேக்

 

 


தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஷாலினி பாண்டே தற்போது பரதம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். பிடித்த ஹீரோ அமிதாப் பச்சன். பிடித்த இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக். ஜபல்பூரில் பிறந்து வளர்ந்த ஷாலினிக்குத் தென்னிந்தியக் கலாசாரம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதனால், இங்கிருக்கும் பையனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

p35a_1523966226.jpg


 

 

தென் இந்தியாவில் மட்டும்தான் பார்க்கிறாரா. ஜெர்மன், பிரான்ஸ் என்று சிலமன்......!  tw_blush:

  • தொடங்கியவர்

காதுக்குள் கேட்ட அந்த க்றீச் க்றீச் சத்தம்..! #EnvironmentStory

 
 


``அய்யோ.... காது கிழியுதே..."

``என்னாச்சு... என்னாச்சு..." கட்டிலில் தலை சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த நாகப்பனின் மகள் தந்தையின் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு எழுந்தாள்.

``ஏம்புள்ள... என்ன சத்தம் அது... இவ்ளோ பயங்கரமா கேக்குது" 

``எந்தச் சத்தமும் இல்லையேங்ப்பா... இங்க அமைதியா தான இருக்கு"

மீண்டும் அதே அலறல். காதை அடைத்துக்கொண்டு ``என்னதான் ஆச்சு" என்று பதறிக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கி மருத்துவமனை அறைக்கு வெளியே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். இரவு 11 மணி இருக்கும் எங்கும் நிசப்தம், மருத்துவமனையின் வடமேற்குப் பகுதியில் அவர்கள் இருந்த வளாகத்துக்கு அருகிலேயே புதிய வளாகம் கட்டுவதற்காக அங்கிருந்த மரத்தை இருவர் வெட்டிக்கொண்டு இருந்த இயந்திர ஓசையைத் தவிர வேறு எந்த ஓசையும் இல்லை.

அவர் பேசும்போது எந்தச் சத்தமும் இல்லை. பேச்சை நிறுத்தி அமைதியடைந்தால் மீண்டும் அதே மரண ஓலம். நாகப்பனுக்குக் குழப்பமாக இருந்தது.

``அப்பா... ஏதாவது கெட்டக் கனவு கண்டீங்களா!" தனது தந்தைக்குக் காதில் அடிப்பட்டது இன்னும் குணமடையவில்லையோ என்ற கவலை வானதியின் மனதை உறுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

மரத்தை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் வெட்டுவதை நிறுத்திவிட்டு அன்றைய கூலியை வாங்கிக்கொண்டு கிளம்புவதைக் கவனித்துக்கொண்டே, ``இல்ல புள்ள, திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு, யாரோ அழுகுற மாதிரி" என்றார்.

``காதுல அடிபட்டதால எதாவது பிரச்னையா இருக்கும், தூங்கி ஓய்வெடுங்கப்பா... காலையில டாக்டர் வந்ததும் கேட்டுக்கலாம்." எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்று படுத்தார். 

மறுநாள் காலை சோதித்த மருத்துவர், ``உடம்புக்கு ஒண்ணும் இல்ல. வண்டியில இருந்து கீழ விழுந்தப்ப காதுல அடிபட்டதால கொஞ்ச நாளைக்கு காதுக்குள்ள ஏதாவது சத்தம் வந்துட்டு இருக்கும். போகப்போக சரி ஆகிடும். இங்கயே இருந்தா இப்படித்தான் மனசு இறுக்கத்தால ஏதேதோ யோசிக்கத் தோணும். உடம்புக்கு ஒண்ணுமில்லை, இவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க" என்று கூறிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றுவிட்டார். வானதியும் பாக்கிகளைக் கட்டிவிட்டுத் தனது தந்தையை அழைத்துச் சென்றாள். காரில் அமர்ந்த நாகப்பனுக்கு மீண்டும் அதே சத்தம் கேட்டது, ``புள்ள... நேத்து மாதிரியே சத்தம் கேக்குது."

``ஒன்னுமில்லீங்ப்பா, டாக்டர்தான் கொஞ்ச நாள் போனா சரி ஆயிடும்ன்னு சொன்னாரே. கவலைப்படாதீங்க" என்று ஆறுதல் சொல்லிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினாள். சிறிது தூரம் செல்லும் வரை கேட்டுக்கொண்டே இருந்த அந்தச் சத்தம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் கேட்டது. இப்படியாக ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாகக் கேட்டுக்கொண்டே இருந்த அந்த ஓசையை சில மணிநேரங்களில் உற்றுக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், அது என்ன சத்தம் என்று மட்டும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சத்தம்

இப்படியாக ஒரு வாரத்தை ஓட்டிய நாகப்பன், அன்றைய அதிகாலை சமயம் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது கிறீச்... கிறீச்...என்று அதே போல் மீண்டும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். வீட்டுத் தோட்டத்தில் வானதி செம்பருத்திப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள். அவளைத் தவிர வேறு யாரையுமே அவர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. மீண்டும் சில நொடிகள் இடைவெளியில் அதே சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையைக் கவனிக்கத் தொடங்கினார். மெள்ள மெள்ள உற்றுக் கவனிக்க அவரது கழுத்து தனது மகள் இருக்கும் திசைநோக்கித் திரும்பியது. ``இப்படியும் இருக்குமா...!" தனக்குத் தானே சிந்தித்தவர், ``ச்சே ச்சே... ரொம்ப கற்பனை பண்றேன்" என்று சொல்லிக்கொண்டாலும் தயக்கத்தோடு அவரது மகளை மேலும் கவனித்தார். அவரது மகள் ஒவ்வொரு செம்பருத்தியாய் பறிக்கப் பறிக்க அதே சத்தம் கேட்டது. அதிர்ந்துபோனார்.

மலர்களைப் பூஜைக்காக எடுத்துச் சென்ற தனது மகளை, ``வானதி... வானதி... இங்க வா புள்ள" என்று அழைத்தார்.

``ஏனுங்ப்பா..."

``ரெண்டு மூணு பூவை எடு" அவளும் தனது கூடையிலிருந்து இரண்டு பூவை எடுத்துக்கொடுத்தாள், ``அட... செடியில இருந்து எடு புள்ள..."

ஏதும் புரியாமல் வானதியும் குழப்பத்தோடு இரண்டு பூக்களைக் கொய்தாள். ஒவ்வொன்றையும் காதுகொடுத்து உற்றுக்கேட்ட நாகப்பனுக்கு அதே ஓசை கேட்டது. அவ்வளவு அருகில் கேட்ட பிறகுதான் புரிந்தது, அது செடியின் அழுகைச் சத்தம் என்று.

காதில் அடிபட்ட அதிர்வால் அவரது அங்கண நரம்பு ( Vestibular nerve) மேலும் விரிவடைந்து மனிதர்களால் கேட்கமுடியாத ஓசைகளையும் கேட்கும் திறன் வந்திருந்தது. அன்று மருத்துவமனையில் கேட்ட ஓசை கூட மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது மரம் அலறியது தானோ என்ற சிந்தனை தோன்றவே அவசரமாக வீட்டிற்குள் ஓடினார்.

கையில் அரிவாளோடு வெளியே வந்தவர் நேராக வீட்டில் இருந்த கொய்யா மரத்தின் அருகே சென்றார். ``இப்ப தெரிஞ்சுரும்..." என்று சத்தமாகவே சொல்லிக்கொண்டவர் அரிவாளை ஓங்கி மரத்தின் மீது வீசினார். அரிவாள் மரத் தண்டில் ஆழமாகப் பதிந்து நின்றது. இன்னதென்று விவரிக்க முடியாத வகையில் ஓர் ஓலம் காதை அடைக்கும் அளவுக்குக் கேட்டது. சில நிமிடங்கள் நீண்ட ஓலச் சத்தம் மெள்ள மெள்ள அரற்றும் விதமாகக் குறைந்து முனகலாகி அடங்கிவிட்டது. அதிர்ந்துபோன நாகப்பன் வேகவேகமாக அரிவாளை வெளியே எடுத்தார். ``அழாத கண்ணு சரி ஆயிடும், இனிமே உன்ன காயப்படுத்த மாட்டேன்" என்று கொய்யா மரத்தைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினார். வீட்டிற்குள் ஓடிச்சென்று மஞ்சள் தூளை எடுத்து வந்து வெட்டுப்பட்ட காயத்தில் அதைத் தேய்த்துவிட்டு, ``சரி ஆயிடும், சீக்கிரமே சரி ஆயிடும்..." என்று தன்னை மறந்து மரத்தைத் தடவிக் கொடுத்தார். என்னவோ ஏதோ என்று ஓடிவந்த வானதி, தந்தையின் செயல்களைக் கண்டு ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

அந்தச் சமயத்தில் மீண்டும் அதே போல் மரண ஓலம் கேட்டது. இது அடங்குவதாக இல்லை, நிமிடங்கள் போகப்போக அதிகமானது. பதறிக்கொண்டு எழுந்த நாகப்பன், அடித்துப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினார். பக்கத்து வீட்டில் ஒரு முருங்கை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார்கள். ``செல்லமுத்து... செல்லமுத்து.... மரத்த வெட்டாத" என்று கத்திக்கொண்டு ஓடிவந்த நாகப்பனைப் பார்த்து செல்லமுத்துவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

``ஏனுங் நாகப்பா... இந்த மரத்த வெட்டிட்டு மகனோட புது கார் நிறுத்த இடவசதி செய்யணும், சரி நீங்க போய் ஓய்வெடுங்க, உடம்பு சரியில்லாம அலையாதீங்க..." என்று சொல்லிவிட்டு அவர் தனது வேலையைத் தொடங்க, மரத்தின் மரண ஓலத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த நாகப்பன, "டேய்... கொலைகாரா... இப்ப இந்தக் கொலைய நிறுத்தப் போறியா இல்லையா...!" என்று அரிவாளை ஓங்கிக்கொண்டு செல்லமுத்துவைக் கொலைவெறியோடு முறைத்தார். அவரது நடத்தையைக் கண்டு பின்தொடர்ந்த வானதி அதிர்ச்சியடைந்து, ``அப்பா... ஒண்ணும் பண்ணிடாதீங்க..." என்று தடுக்க முயல அவளை ஆக்ரோஷமாய்த் தள்ளிவிட்டார். பயத்தில் கோடாரியைப் போட்டுவிட்டு அவர் நகர்ந்துசெல்ல, ``வானதி கொய்யா மரத்துக்கிட்ட மஞ்சள் தூள் இருக்கும் சீக்கிரமா எடுத்துட்டு வா..." என்று கண்கள் கலங்க அவர் கட்டளையிட வானதி ஓடிச்சென்று எடுத்து வந்தாள்.

 

வானதி கொடுத்த மஞ்சள் தூளை வெட்டுப்பட்ட காயங்களோடு கதறிக்கொண்டிருந்த முருங்கை மரத்தின் அருகில் அமர்ந்து காயங்களில் தடவி விட்டார். அப்பாவின் நிலை கண்டு மனமுடைந்த வானதி, ``அப்பா..." என்று உடைந்த குரலில் அவர் தோள் தொட்டு அழைக்கவே, ``மரம் அழுகுறது எனக்குக் கேக்குது புள்ள..." என்ற அவரது கதறல் அந்த முருங்கை மரத்தின் மரண ஓலத்தை அங்கு நின்றிருந்த இருவரின் மனதிலும் ஆறா வடுவாய்ப் பதிய வைத்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பிளாஸ்டிக்கை அழிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு

பெருங்கடல்களில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னையை சமாளிக்க பிரிட்டன் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
‘தரையில் நினைவிழந்து விழ, அவனது ஆவி பிரிந்தது’
 

image_68473f11b9.jpgகோவில் திருவிழா; கூட்டம் அலை மோதியது. கூட்டத்தின் நடுவே சின்னஞ் சிறுவன் ஒருவன், கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தவனை, ஒரு பொலிஸ்காரர் கண்டுகொண்டார். “என்ன தம்பி அப்பா, அம்மாவைத் தவற விட்டுவிட்டாயா” என்று அனுதாபத்துடன் கேட்க, அவனிடம் பதில் வரவில்லை. அழ ஆரம்பித்து விட்டான். “அப்பா என்ர அப்பா” என ஈனஸ்வரத்துடன் அழுதவன், மயங்கி விழுந்தான். 

அவனைத் தூக்கி அணைத்தபடி, கோவிலில் அமைந்த, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முதலுதவி செய்து, அன்புடன் “அழாதே, உன் அப்பாவிடம்  உன்னை ஒப்படைப்பேன்” என்றார்.  

தவறவிடப்பட்ட பையனைப் பெற்றுச் செல்லுமாறு, ஒலிபெருக்கியில் அறிவுப்புச் செய்தார். ஒருவருமே வரவில்லை; மாலையாகி விட்டது; பையன் உண்ண மறுத்தான். பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து, பையனை அநாதை இல்லத்தில் ஒப்படைத்தார்.  

திருவிழா நடந்த தினம்; மத்தியான நேரம், ஒருவர் தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருந்தார். “என்ன ராசா நான் என்னடா செய்வேன்? நோய் என்னை வருத்துகிறது; உன் தாயும் போய் விட்டாள். உன்னை இங்கு விட்டுவிட்டுப் போவதைவிட என்னால் என்ன செய்ய முடியும்” எனக் கூறி, தரையில் நினைவிழந்து விழ, அவனது ஆவி பிரிந்தது.  

  • தொடங்கியவர்

மீண்டும் கண்ணடித்து மயக்கிய பிரியா வாரியர்

Da4bGAUW4AAatA--500x262.jpg

‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடலில், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார்.

இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.

இந்த நிலையில் தற்போது பிரியா வாரியர் நடித்துள்ள, சாக்லெட் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளம்பரத்தில் கண்ணைச் சிமிட்டியபடி சாக்லேட்டை சுவைப்பதுடன், Deewar படத்தில் அமிதாப் பேசும் புகழ் பெற்ற வசனத்தையும் பேசி உள்ளார். இதனால், இந்த “ஒரு அடார் லவ்” கண்சிமிட்டல் காட்சியைப் போலவே, சாக்லெட் விளம்பரமும் தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் காதலனை பார்த்து இடது கண்ணடித்து காதல் சிக்னல் தந்த பிரியா, தற்போது வலது கண்ணடித்து சிக்னல் தந்திருக்கிறார்.

 

  • தொடங்கியவர்

மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808

 

மூன்றாம் நெப்போலியன் (Napoleon III), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoleon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவர் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவர்.

 
 
 
 
மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808
 
மூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின் மகனாவார். முதலாம் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் லூயி நெப்போலியனின் தந்தை பிரான்சின் ஒரு பகுதிக்கு அரசனாக்கப்பட்டார். 1815-ல் முதலாம் நெப்போலியனின் கடைசித் தோல்வியை அடுத்து நெப்போலியன் குடும்பம் முழுவதும் நாடு கடத்தப்பட்டனர். சிறுவனான லூயி நெப்போலியன் சுவிட்சர்லாந்தில் அவனது தாயாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மனி கல்வி கற்க அனுப்பப்பட்டார். இளம் வயதில் இத்தாலிக்கு அவனது தமையன் நெப்போலியன் லூயியுடன் வசித்தார். அங்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்திருந்த ஆஸ்திரியாவை எதிர்த்த இயக்கத்தில் இணைந்து போராடினார்.

அக்டோபர் 1836-ல் பிரான்சுக்கு ரகசியமாகத் திரும்பி அரசுக்கெதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் அவனது முயற்சி தோல்வியடையவே அவன் ரகசியமாக ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு 4 ஆண்டுகள் நியூயார்க்கில் வசித்தார். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 1840-ல் சில கூலிப் படைகளுடன் நாடு திரும்பினார். இம்முறை அவன் கைது செய்யப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1846-ல் அவன் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகருக்கு குடியேறினார். அங்கு கட்டிடத் தொழிலாளி போல வேடமணிந்து வாழ்ந்தார். ஒரு மாதத்தின் பின்னர் அவனது தந்தை இறக்கவே பிரான்சின் முடிக்கு நேரடி வாரிசானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
 
* 1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
 
* 1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
 
* 1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
 
* 1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
 
* 1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
 
* 1967 - சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1968 - தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆப்பிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது. * 1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

* 1998 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு ராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
 
* 1999 - கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 2007 - டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

https://www.maalaimalar.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

facebook.com/Karl Max Ganapathy:

போராளிகள் இங்கு அனலாகக் கக்கும்போது, அந்த வெம்மையிலிருந்து தப்பிக்க சில நண்பர்களின் பக்கங்களுக்குப் போய்க் குத்தவைப்பது வழக்கம். இப்போது அத்தகைய நண்பர்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். மாற்று முயற்சியாக ஃபேக் ஐடியைத் தூசுதட்டிக் கிளம்பினால், சக ஃபேக் ஐடிகளும் களத்தில் உக்கிரமாகவே இருக்கிறார்கள்.

p112a_1524053364.jpg

facebook.com/Ramya Leela:

எல்லா வெற்றிடங்களும் யாரோ ஒருவரால் நிரப்பத்தான்படுகின்றன. என்ன, அதே அளவு இல்லாமல் கொஞ்சம் மேடு பள்ளங்களாக...!

facebook.com/Abdul Hameed Sheik Mohamed

இந்திய வரலாற்றில் தமிழக சாலைகளில் நுழைய முடியாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மோடி.

p112f_1524053446.jpg

twitter.com/Kozhiyaar

ஓட்டு போடும்போது மட்டும்தான் மூளையைக் கழட்டிவெச்சுடுவோம். மத்தபடி நாங்க அறிவாளிங்கதான்!

twitter.com/Kadharb32402180

மார்க்கெட் இல்லாத இயக்குநர்லாம் போராட வந்துட்டாங்களாம்! சரி, நீங்க என்னண்ணே பண்றீங்க?நாங்க, நோட்டாகூட போராடிட்டு இருக்கோம்.

p112b_1524053381.jpg

twitter.com/Kozhiyaar:

சொன்னாக் கேட்க மாட்டோம், செருப்பைத் தூக்கிப் போட்டால்தான் திரும்பிப் பார்ப்போம் என்றால், தவறு யார் மீது?!

twitter.com/amuduarattai:

``உங்க அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது” என்பதில் தொடங்கி ``உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா” என முடிகிறது நம் வீடுகளில்.

p112c_1524053398.jpg

twitter.com/manipmp:

 பத்து பேய்ப்படம் பார்த்த த்ரில்லைத் தருவது... தலை துவட்டிய டவலில் உதிர்ந்த நம் முடிகள்.

twitter.com/mekalapugazh:

இணையம் கண்டுபிடிக்கப்பட்டதால் நம்முடைய நேரம் மிச்சமாகும்னு எப்படி நம்பப்பட்டதோ, அப்படித்தான் மதங்கள் தோன்றியபோது குற்றங்கள் குறையும் என நம்பப்பட்டிருக்கும்போல. இரண்டுமே பொய்யாய்ப்போனதே கசக்கும் உண்மை.

 twitter.com/manipmp:

 ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும். அன்பே, நீ உப்புமா செய்திருந்தால்!

p112d_1524053414.jpg

twitter.com/Thaenmittai1910:

Youtube-ல மட்டும் அஞ்சு நிமிஷத்துல சமையல் செஞ்சு முடிச்சிடுறாங்க.

நமக்கு, சமையல் அறையில் லைட்டர் தேடவே அஞ்சு நிமிஷம் ஆகுது.

p112e_1524053431.jpg

twitter.com/thoatta:

`IPL இடம் மாற்றத்தினால் காவிரி மேலாண்மை வாரியம் வந்திடும்ல’னு நக்கலடிக்கிற இதே வாய்தான், பணமதிப்புநீக்க சமயத்துல `ஒருநாள் பொறுத்துக்குங்க, எல்லாம் சரியாகிடும்; கறுப்புப் பணம் ஒழிஞ்சுடும்; இந்தியா 2020-ல வல்லரசாகிடும்’னு ஊளைவிட்டுச்சு. இப்ப வல்லரசாகிட்டு இருக்கோமா?

p112g_1524053465.jpg

twitter.com/raajaacs:

நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகின்றன கண்கள். சுற்றிவளைத்து வருகின்றன சொற்கள்.

twitter.com/kathir_twits:

 ரஜினி, போருக்குத் தயாரோ இல்லையோ, கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சமாளிக்கும் போருக்குத் தயாராகிவிட்டனர் பெற்றோர்கள்!

p112h_1524053478.jpg

facebook.com/karthikeyan maddy:

எனக்கு லோன் கூட வேணாம்டா..

தயவுசெஞ்சு வடநாட்டுலருந்து போன் பண்ணி “ஹலோ மிஸ்டர் கார்த்திகீயான்”னு மட்டும் கூப்புடாதீங்கடா!

https://www.vikatan.com

21 hours ago, suvy said:

தென் இந்தியாவில் மட்டும்தான் பார்க்கிறாரா. ஜெர்மன், பிரான்ஸ் என்று சிலமன்......!  tw_blush:

நான் செய்திகள், தகவல்கள் மாத்திரம்தான் இங்கு இணைக்க முடியும். மிகுதி எல்லாம் உங்கள் சொந்த முயற்சி.tw_blush:

ஏதாவது சரி வந்தால் என்னக்கும் ஒரு சொல் சொல்லி விடுங்கள்..:grin:

  • தொடங்கியவர்
 
 

புறாக்கள்   – தெரிந்துகொள்வோம்

 

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.

11225212_441859889339761_295424748554854

புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. வெப்ப மண்டலக் காடுகளில் இவை அதிகம் வசிக்கின்றன.

வெப்பப்புல்வெளிகள் (சவானாக்கள்), பிற புல்வெளிகள், சில பாலைவனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள் , வட்டப் பவளத்திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்கள் போன்றவற்றிலும் வசிக்கின்றன.

புறாக்கள் வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை.

maxresdefault-4.jpg

மிகச் சிறியவை ஜெனஸ் கொலம்பினா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.
புறாக்களின் உடலில் மூன்று வகை இறகுகள் உண்டு. அவை
இறக்கை இறகுகள், உருவ இறகுகள், இழை இறகுகள்

இறக்கையில் 23 இறக்கை இறகுகள் உள்ளன. இதில் மேல்கையில் இணைந்துள்ள 11 இறகுகள் முதனிலை இறகுகள் எனப்படும். நடுக்கையில் இணைந்துள்ள 12 இறகுகள் இரண்டாம் நிலை இறகுகள் எனப்படும்.

வால் பகுதியில் 12 இறகுகள் உண்டு. இவை விசிறி வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. உருவ இறகுகள் சற்றுச் சிறியவை, மென்மையானவை. இவை உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கும். இழை இறகுகள் மிகவும் மென்மையானவை.

p25a.jpg

இது தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு.

பழங்கள் போன்றவை அல்லாது பிறவற்றை உண்ணும் புறாக்களும் உண்டு. நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன. பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன.

புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் புறாக்கள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுகின்றன. குஞ்சுகள் 7 முதல் 27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வருகின்றன.

http://newuthayan.com/

  • தொடங்கியவர்

காதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி!!!

thumb_large_New_Layout__3_.jpg

மெக்சிகோவை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஒருவர் காதல் கடிதங்கள் எழுத பள்ளியில் சேர்ந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ். இவர் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்ததால் அவரால் படிக்க முடியவில்லை, பிறகு திருமணமான பின் கோழி விற்பனை செய்து வந்தார். 

பின்னர் வயது முதிர்ந்த நிலையில் அவர் பள்ளியில் படிக்க ஆசைப்பட்டார். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் படிக்க தொடங்கினார். தற்போது அவர் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்து விட்டார்.

இந்த படிப்பு ஆர்வம் குறித்து அவரிடம் கேட்ட போது, மூதாட்டி காதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக தான் படிக்க தொடங்கினேன் என கூறியுள்ளார்.

மேலும் தனது 100 வயதிற்குள் உயர் கல்வியை முடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்

http://www.virakesari.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விஞ்ஞானிகள் கண்டறிந்த உயிர்த்தியாகம் செய்யும் எறும்புகள்!

 

விஞ்ஞானிகள் கண்டறிந்த உயிர்த்தியாகம் செய்யும் எறும்புகள்!

 

ஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல காடுகளில், எதிரிகளிடமிருந்து தம் இனத்தை காப்பாற்றுவதற்காக உயிர்த்தியாகம் செய்யும் எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆசியாவில் தென்கிழக்கு வெப்பமண்டல காடுகளில் புதிய 15 எறும்பு இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் இவ் எறும்பு இனத்தில், மற்ற எறும்பு இனத்தில் இருந்து மாறுபட்ட பாதுகாப்பு அமைப்பை கொண்ட எறும்பு இனம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர்.

இதனடிப்படையில் கோலோபோசிஸ் எக்ஸ்ப்லோடன்ஸ் என்ற இந்த எறும்பு வகை, எதிரிகளிடமிருந்து தம் இனத்தை காப்பாற்றுவதற்காக, உயிர்த்தியாகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மற்றைய பூச்சி இனங்கள், தம் இனத்தை தாக்க வந்தால், தம் இனத்தை காப்பாற்றுவதற்காக, ஒரு வித விச திரவத்தை வெளியிட்டு, தாக்க வரும் பூச்சி இனத்தை கொல்வதோடு, திரவத்தை வெளியிட முழு சக்தியையும் பயன்படுத்துவதால், எறும்பும் இறந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் எறும்பு வகைகள் போர்னியோ தீவு பகுதியில் காணப்படுவதாகவும், இது போன்ற எறும்பு இனங்கள் 1916 ஆம் ஆண்டு பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள்…..

Pramiln_CI.jpg?resize=400%2C300
ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர்.

 

தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

 

இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.

சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள்இ நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும்இ உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.

‘கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்’ என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைஇ கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 20

நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
1859 – சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 – லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 – திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 – கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 – டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

பிறப்புகள்

1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வே பிரதமர்
1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்

இறப்புகள்

1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1850)
1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘மண்ணும் விண்ணும் எமக்கானது, உணர்வோம்’
 

image_d78feff3d5.jpgதனது வீட்டுக்குள் மட்டும் கொண்டாடி மகிழ்வது பூரணமானதல்ல; எல்லோரும் கூடியிருந்து பேதமற இணைந்து கொண்டாடிக் களிப்பதுவே வாழ்வின் உச்சக் களிப்பாகும். 

உங்களுக்கு வேண்டியவர்களுடன் மேலும், நல்ல அன்பர்களையும் புதிதாக இணைத்துக் கொள்க. எங்கள் கொடை, அன்பின் விலாசம், பரிமளத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

புதிதாகப் பல விடயங்களை, மக்கள் பற்றிய உணர்வுகளை, அடுத்தவரின் பிரச்சினைகளைக் கேட்க செவியில் இடம்கொடுக்கவும்.  

இதனால் எங்களாலும் சில உதவிகள் பகிரப்படலாம். ஒன்றுமே தெரியாதவர்போல், பாசாங்குடன் கண்மூடித் தன் வழியே செல்வது, இந்தப் பிறப்பையே அர்த்தமற்றதாக்கி விடும்.  ஏங்கும் மைந்தரைத் தாங்குங்கள்; தூங்கும் மைந்தரைத் தட்டி எழுப்புங்கள்.

உலகத்தில் நாம் பிறந்ததன் அர்த்தத்தைப் புரிய வைத்திடுக. உயிரும் உடலும் உலகுக்கானதுதான். மண்ணும் விண்ணும் எமக்கானது, உணர்வோம். 

 

  • தொடங்கியவர்

பொம்மைகளின் கதை: மேடம் அலெசாண்டர் பொம்மைகள்

 

 
18chsujdolls1jpg

அமெரிக்காவைச் சேர்ந்த பீட்ரைஸ் அலெக்சாண்டர், தனது பெயரிலேயே வடிவமைத்த துணி பொம்மைகள்தான் ’மேடம் அலெக்சாண்டர்’ பொம்மைகள். குழந்தைகள் புத்தகம், பாடல்கள், திரைப்படக் கதாபாத்திரங்களை சட்டப்பூர்வமாக உரிமை பெற்று, பொம்மைகளாக்கிய முதல் பொம்மை வடிவமைப்பாளர் இவர்தான்.

     

முதல் உலகப் போரின்போது பொருளாதாரத் தடை காரணமாக ஜெர்மனியிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் மேடம் அலெக்சாண்டர் தனது முதல் பொம்மையைச் செய்தார். மூக்கும் முழியுமாக அவர் செய்த பொம்மை செஞ்சிலுவை தாதியர் அணியும் உடையை அணிந்திருந்தது. போர்க் காலம் என்பதால் அந்தப் பொம்மைகள் குழந்தைகளிடையே மிகுந்த புகழைப் பெற்றன. 1923-ல் கடன் பெற்று சகோதரிகள், அண்டைவீட்டார் என 16 பேருடன் சேர்ந்து அலெக்சாண்டர் பொம்மை நிறுவனத்தை ஆரம்பித்தார் மேடம் அலெக்சாண்டர்.

18chsujdollsMadameAlexanderjpg
 

முதல் உலகப் போருக்குப் பின்னர் உறுதியான பிளாஸ்டிக்கிலும் 1960-களில் வினைலிலும் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார். 1960-களில் அமெரிக்காவின் முன்னணி பொம்மைத் தயாரிப்பாளராகப் புகழ்பெற்றார். 1980-களில் மேடம் அலெக்சாண்டர் ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் பொம்மைகளைத் தயாரித்தார். பார்பி பொம்மைகள் உருவாவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் உருவாக்கிய பேஷன் பொம்மை ‘சிஸ்ஸி’.

மேடம் அலெக்சாண்டர் தயாரித்த புஸ்ஸி கேட் பொம்மை, பெயருக்கு ஏற்ற மென் ரோம உடையுடன் புசுபுசுவென்று இருக்கும். ‘தி பர்ஸ்ட் லேடிஸ் ஆப் தி யுனைட்டெட் ஸ்டேட்ஸ்’ பொம்மைகளும், தேவதைக் கதைகள் பொம்மைகளும் புகழ்பெற்றவை. இவர் 1953-ல் அறிமுகம் செய்த வெண்டி பொம்மை, இன்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறது.

சின்ட்ரெல்லா, ரேம்போ முதல் ஹல்க்வரை திரைப்படக் கதாபாத்திரங்கள் சார்ந்து குழந்தைகளிடம் நாயக, நாயகி பொம்மைகள் தயாரிக்கப்படுவதற்கு முன்னோடி மேடம் அலெக்சாண்டர். அத்துடன் சமகாலத்தில் வாழும் தலைவர்கள், ஆளுமைகளையும் பொம்மைகளாகச் செய்து பிரபலப்படுத்தியவர் இவர்தான். பிரிட்டனின் 36-வது ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றபோது 1953-ல் 36 பொம்மைகள் கொண்ட செட் ஒன்றை உருவாக்கினார்.

18chsujdollsjpg
 

ஆஸ்திரிய நாட்டிலிருந்து குடிவந்த பெற்றோருக்கு, 1895-ம் ஆண்டு பிறந்தவர் அலெக்சாண்டர். ப்ரூக்ளின் நகரத்தில் பெர்த்தா என்ற பெயரில் வளர்ந்த அவர், இருபது வயதில் தனது பெயரை பீட்ரைஸ் ஆக மாற்றிக் கொண்டார்.

இத்தாலியைச் சேர்ந்த லென்சி பொம்மைகளை உருவாக்கிய மேடம் லென்சிதான் இவருக்கு முன்மாதிரி. நாம் இழந்த உலகின் மகத்துவங்கள், அரண்மனை ஆடம்பரங்கள் மீது மேடம் பீட்ரைஸ் அலெக்சாண்டருக்குச் சிறுவயதிலிருந்தே ஈர்ப்பு இருந்தது.

18chsujdolls2jpg
 

அதைப் பிரதிபலிக்கும்படி அவர் உருவாக்கிய பொம்மைகள்தான் மேடம் அலெக்சாண்டர் பொம்மைகள். புலம்பெயர்ந்த ஏழைப் பெற்றோருக்குப் பிறந்த பெர்த்தாவாக அவர் தன்னைக் கருதவே இல்லை. அவருக்கு மேடம் பீட்ரைஸ் அலெக்சாண்டர் என்ற கம்பீரமான பெயர்தான் பிடித்திருந்தது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

 
 அ-அ+

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். இவர் ஐக்கிய நாடுகள் உள்பிட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வெறு பெயர்களின் ஆட்சிப் பெயர்களை கொண்டிருந்தாலும்

 
 
 
 
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926
 
எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். இவர் ஐக்கிய நாடுகள் உள்பிட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வெறு பெயர்களின் ஆட்சிப் பெயர்களை கொண்டிருந்தாலும், ஐக்கிய நாடுகளிலேயே லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவரே. இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநரும் ஆவார்.

62 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார். விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.

எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடி துறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936-ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953-ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

மிழுக்கு வருகிறார் பாலிவுட் ஸ்டார்  நவாஸுதீன் சித்திக். ரஜினி நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் விஜய்சேதுபதியோடு முக்கியமான ரோலில் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். “தமிழில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுநாள்வரை நிறைய கமிட்மென்ட்டு களால் தமிழில் நடிக்க முடியாமல் இருந்தது. இனி வருடம் ஒரு படமாவது நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!” என்கிறார் தோழர் நவாஸுதீன்!  சூப்பர் காம்ரேட்!

p70a_1524041770.jpg


ன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்து அண்மையில் ரிலீஸான ‘டகரு’ அங்கே பட்டிதொட்டி யெங்கும் தாறுமாறு ஹிட்டடித்திருக்கிறது. சிவராஜ் குமாரின் அப்பா மறைந்த ராஜ்குமாரின் அந்நாளைய மெகா ஹிட்களைவிட இவர் வசூலில் இமாலய சாதனை படைத்திருப்பதால், ராஜ்குமாரின் ரசிகர்களும் கட் அவுட்,   பாலாபிஷேகம் எனக் கொண்டாடி வருகிறார்கள். இந்தி பேசும் மாநிலங் களிலும் டப்பிங் செய்யப்படாமலேயே ரிலீஸாகி ஹிட் அடித்திருப்பதால் ‘சிவாண்ணா’ விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. `வஜ்ரகாயா’ படத்தில் ஏற்கெனவே நம்ம சிவகார்த்திகேயன் `கேமியோவாக’ நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவிரியைக் கண்ணுல காட்டுங்க பாஸு!

p70b_1524041782.jpg


ந்தியப் பெண்கள் அணியின் விராட் கோலியாக விஸ்வரூபம் எடுத்துவருகிறார் ஸ்மிரிதி மந்தனா. கடந்த 3 மாதங்களாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளையும் பந்தாடியவர், விளையாடிய கடைசி 10 இன்னிங்ஸ்களில் 7 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஓப்பனராகக் களமிறங்கி இவர் வெளுக்கும் சிக்ஸர்களைப் பார்ப்பதற்காகவே மகளிர் கிரிக்கெட் பக்கமும் பார்வையைத் திருப்பியுள்ளனர் இந்திய ரசிகர்கள். மித்தாலி ராஜ் விரைவில் ஓய்வுபெறப்போகும் நிலையில், மந்தனாதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் என இப்போழுதே ஏகப்பட்ட பேச்சு. இவர் ஜெர்சி நம்பரும் விராட் கோலி அணிந்திருக்கும் அதே 18 தான். லேடி கோலி!

p70c_1524041795.jpg


னந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் படம் ‘ஜீரோ.’ மும்பை நகரிலிலுள்ள வசை என்னும் இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷாருக் வசிக்கும் பாந்த்ரா விலிருந்து வசைக்கு
50 கிலோ மீட்டர் தொலைவு. மும்பை டிராபிக்கில் கார் பயணம் மேற்கொண்டால் 3 மணி நேரம் வீணாகும் என்பதால் ஷாருக் தனது ஹெலிகாப்டரில் படப் பிடிப்புக்குச் சென்று வருகிறார். இருக்கப்பட்ட மகராசன்! 

p70d_1524041809.jpg


ஹாங்காங்கில் பிறந்து, லண்டனில் வளர்ந்த கேத்ரீனா கைஃப் 2003-ல் வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஷாருக்கானுடன் நடித்து வரும் இவர் தனது சுயசரிதையைப் புத்தகமாக எழுதத் திட்டமிட்டுள்ளார்.  ‘பார்பி ட்ரீம்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், லண்டன், பெல்ஜியம் என்று பல நாடுகளில் வசித்த அனுபவம் கேத்ரினாவுக்கு உண்டு என்பதால், பெர்சனலோடு வேறு சில சுவாரஸ்யங்களும் புத்தகத்தில் எதிர்பார்க்கலாம்! ‘பார்பி’ஸ் பயோ!


ங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ இசை யமைப்பாளர் யாரென்று அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஷங்கர் - அனிருத் மீட்டிங் நடந்து, நான்கு பாடல்கள் அனிருத்திடம் ரெடியாக இருக்கிறதாம்!   கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராக்ஸ்டார் ராக்ஸ்! 


p70e_1524041863.jpg

ரிலீஸுக்கு முன்பே அனலை வீசியிருக்கிறார் ‘பிரின்ஸ்’ மகேஷ் பாபு.  கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் ஆந்திர அரசியலைப் பிழிந்து காயப்போட்டிருக்கிறார்கள். ஃபாரின் ரிட்டர்ன் மகேஷ் பாபு ஆந்திராவின் நிலையைக் கண்டு பொங்கி, பெற்றோரின் சத்தியத்துக்காக அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிப்பதே கதை. நம் ஊர் ‘தலைவா’ அளவுக்கு எதிர்ப்பில்லை என்றாலும் ஒரு சில தெலுங்கு தேச ஆட்கள் புகைச்சலைக் கொடுத்து வருகிறார்கள். ‘இது கமர்ஷியல் மசாலா மட்டுமே. அரசியல் கம்மிதான்!’ என்று  ஆடியோ ரிலீஸில் கூல் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் சரத்குமார். மகேஷ் பாபுவின் அப்பாவாக நடித்திருக்கிறார் சுப்ரீம் ஸ்டார். தண்ணி காட்டுங்க!


p70f_1524041876.jpg

பாரம்பர்ய இசைக்கருவிகளைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று ஏ.ஆர். ரஹ்மானை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆவணப் படத்தின் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தில் இசைக்கப்படும் ‘மிழாவு’ என்ற இசைக்கருவி குறித்த படப்பிடிப்பு, திருச்சூர் மாவட்டம் செரு துறுத்தியி லுள்ள கேரள கலாமண்டலத்தில் நடைபெற்றது. இந்த ஆவணப்படத்தை  ஏ. ஆர். ரஹ்மானை அறிமுகப்படுத்திய கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது. வான்... வருவான்!

  • தொடங்கியவர்

கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

 

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே

 
 
 
 
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964
 
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லூரி தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளித்தன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்கு பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29-இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு இதே நாளில் இயற்கை மரணம் எய்தினார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
* 1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
* 1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
* 1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
* 1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
* 1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.

 

 

பாரதிதாசன்: சில நினைவுகள்...

 

 
bharathidasan

புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் இன்று பாரதிதாசன் நினைவு இல்லமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறி நிற்கிறது அந்த வீடு. ஐம்பதுகளில் ஒருநாள் முதல் முறையாக பாரதிதாசனைச் சந்திக்கும் ஆர்வத்தோடு வேலூரிலிருந்து புதுவைக்குப் புறப்பட்டுப் போனேன்.

மட்ட மத்தியான நேரம். தெருவை அடைந்தபோது ஆள் நடமாட்டம் அதிகமில்லை. ஒரு வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியை நெருங்கி, “இங்கே பாரதிதாசன் ஐயா வீடு எதுனு தெரியுமா?” என்றேன்.“தம்பி… யாருப்பா நீ?”என்று எதிர் வீட்டிலிருந்து கேட்டது ஒரு கம்பீரமான குரல். கையில் ஒரு புத்தகத்தை ஏந்தியபடி நின்றிருந்தவர், அவரேதான்! “நான்தான் பாரதிதாசன்… இப்ப என்ன வேணும் உனக்கு?” என்றார் குறும்பாக.

அதுதான் அவருடன் முதல் சந்திப்பு. “ஐயா… வேலூரிலிருந்து வர்றேங்க… என் ஆசான் கோவேந்தன் சொல்லி வந்திருக்கேன்” என்றதுமே பாரதிதாசன் முகம் அகன்று மகிழ்ச்சியில் விரிந்தது. “அடடே… அப்ப நீ ரொம்ப வேண்டப்பட்ட பையன். உள்ளே வா” என்று அழைத்துப் போனவர், என்னைப் பேசக்கூட விடாமல், வீட்டில் இருந்தவர்களை அழைத்து எனக்கு விருந்தோம்ப வைத்துத் திணறடித்தார். இத்தனைக்கும் அப்போது நான் இருபதுகளில் இருந்த சின்னப் பையன்! தன் அருமை நண்பர் கோவேந்தனின் பெயரைச் சொன்னதுக்கே இப்படி ஒரு உபசரிப்பு தந்தார் பாரதிதாசன்.

 

பேதங்கள் இல்லாத நட்பு

நான் எழுதிச் சென்றிருந்த கவிதைகளை வாங்கி அக்கறையாகப் படித்துவிட்டு, அதில் சில இலக்கணத் திருத்தங்களை எளிமையாகச் சொல்லிப் புரியவைத்தார். முதல் சந்திப்பின்போதே, தன்னுடைய ‘தேனருவி’ பாடல்கள் சிலவற்றை உரக்கப் பாடிக் காட்டி, அதில் உள்ள இசை இலக்கண நுட்பங்களை எடுத்துச் சொன்னார். பாரதிதாசனுக்கு நன்கு அறிமுகமான வேலூர் கலைமாமணி கோவிந்தசாமியுடன் அடுத்தடுத்த புதுவைப் பயணங்கள் அமைந்தன. ஒருநாள் வெகு சுவாரஸ்யமாக சில பகுத்தறிவுக் கருத்துக்களை பாரதிதாசன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தசாமி, “ஐயா… இவனுக்கு அதெல்லாம் புரியுமா? இவன்...” என்று சொல்ல, எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. பாவேந்தரோ இடி இடி என்று சிரிக்கிறார். “ஐயா… கவிஞர் சுரதாகூட என்னை அப்படித்தான் கூப்பிடுவாருங்க. ஆனா, உங்களை மாதிரியே பிரியமா நடத்துவாருங்க” என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். மறுபடி இடிச் சிரிப்பு!

“ஏம்பா இவனே…. அப்படிப் பார்த்தா என் குருவே அய்யர்தானே… தமிழ் வளர்க்குறதுக்கு உடன்பட்டு யார் வந்தாலும் எனக்கு அவங்க வேண்டியவங்கதான். நீ எப்பவும்போல வந்து போயிக்கிட்டு இரு” என்றார்.

 

நிறைவேறாமல்போன திரைக்கனவு

நெடுஞ்சாலைத் துறையில் வேலையில் இருந்துகொண்டே, கவிதை, நாடகம் என்று நான் எழுதிக்கொண்டிருப்பதை பாரதிதாசன் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சின்போதெல்லாம், திரைப்படத் துறை மீது அவருக்கிருந்த ஆர்வம் அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ‘வளையாபதி’, ‘பொன்முடி’ என்று அவருடைய பங்களிப்பில் படங்கள் உருவானாலும், தனது ‘பாண்டியன் பரிசு’ இலக்கியத்தைத் தானே படமாக்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் பாரதிதாசன். சிவாஜி கணேசன் அதன் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புதுவையிலிருந்து சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்தார் பட வேலைகளுக்காக. ‘பாண்டியன் பரிசு’க்காக எடுக்கப்பட்ட கம்பீரமான சிவாஜி கணேசனின் படம் அவர் வீட்டில் நுழையும்போதே சிரித்து அழைக்கும்.

சினிமா உலகம் எத்தனை சிக்கல்கள் நிறைந்தது என்பதைப் பாரதிதாசன் சீக்கிரமே புரிந்துகொண்டார். படம் உருவாக முடியாமல் பல தடைகள் ஏற்பட்டு, அந்தக் கனவுத் திட்டம் நின்றே போனது. அப்போதும்கூட, “போகட்டும்யா…. என் குருநாதர் வரலாற்றைப் படமாக எடுக்கும்விதமாக முழுப் பிரதியும் எழுதிவிட்டேன். அதற்கு ஒரு வாய்ப்பு வந்தால் அதுவே போதும்” என்று சொல்லி மனதை ஆற்றிக்கொள்வார் அவர்.

அதுவும் கடைசிவரை நிறைவேறாமல் போனாலும், ‘ஆயிரம் கவிஞர்கள் இணையும் ஏடு’ என்ற அறிமுகத்துடன் அவர் தொடங்கிய ‘குயில்’ பத்திரிக்கை அவருக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது. இதழ்களை ஒழுங்குபடுத்துவது, பிழை திருத்துவது உள்ளிட்ட விஷயங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னைக்கு வந்து செய்வதற்கு அவர் என்னை அனுமதித்தார். அப்படியே நான் எழுதும் கவிதைகளையும் அன்புடன் பிரசுரிக்க உற்காகம் கூட்டினார்.

 

திசை எட்டும் சேர்ப்போம்!

ஒருநாள், ‘குயில்’ இதழுக்கு மொழிபெயர்ப்பு தொடர்பாக வந்திருந்த படைப்பு பற்றி பேச்சு வந்தது. “தெரியுமாய்யா…. என் படைப்பை ‘செக்’ மொழியில் ஒரு பேராசிரியர் மொழிபெயர்த்து இருக்காரு. குருநாதர் சொல்ற மாதிரி, இங்குள்ள நல்ல கவிதைகள் எல்லாமே வெளி மொழிகளுக்குப் போகணும்யா. இல்லாட்டி, நம்மூர்க்காரனே நம்ம அருமையைப் புரிஞ்சுக்காமத்தான் இருப்பான்” என்று சொன்னபோது அவர் குரலில் ஒரு வேதனை இழையோடியது.

1964-ம் வருடம், ஏப்ரல் மாதம் 21-ம் நாள்… உடல்நலக் குறைவால் சென்னைப் பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இன்னுயிர் பிரிந்தது. புதுவையில் அதே பெருமாள் கோவில் தெரு இல்லத்துக்கு அவர் உடல் வந்து சேர்ந்தது. எப்போதும் அவரை அகலாமல் இருந்த ஒரு சிறு கூட்டம்தான் அவருடைய இறுதி ஊர்வலத்திலும் கண்ணீருடன் முன்னால் நடந்தது. பாப்பாம்மாகோவில் மயானத்தை அடைந்தபோது, அதிலும் பலர் பாதியிலேயே திரும்பிவிட்டதைக் கண்டு என் நெஞ்சு பதைத்தது.

இறுதி வரை இருந்த அன்பர் கூட்டம் இடுகாட்டிலேயே நினைவுக் கூட்டம் நடத்திவிட்டுக் கலைந்தபோது… அந்த மாபெரும் ஆத்மாவின் தன்மானத்தையும் தமிழ்க் காதலையும் வாய்ப்பு வரும்போதெல்லாம் ஊருக்குச் சொல்வோம் என்ற உறுதிமொழியுடன்தான் அந்தக் கூட்டம் கலைந்தது.

- வேலூர் இரா.நக்கீரன், கவிஞர்.

ஏப்ரல் 21: பாரதிதாசன் நினைவுதினம்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு, டீக்கடை நடத்தி ‘ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் இளம் தம்பதி’

 

 
ChaiVilla-FB

நிதினின் தேநீர் கடை “சாய் வில்லா” : கோப்புப்படம்

சாப்ட்வேர் வேலையை உதறிய இளம் கணவர், மனைவி டீக்கடை தொடங்கி ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த நிதின் வி. பியானி(வயது36), அவரின் மனைவி பூஜா(34) ஆகியோர் சாப்ட்வேர் பணியை ராஜினாமா செய்து டீக்கடை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தங்களின் குடும்பத்தினர் ஆலோசனைகள், அறிவுரைகள்படி தரமான மூலப் பொருட்களை வாங்கி டீக்கடை நடத்தத் தொடங்கி இப்போது அவர்கள் இருவருக்கும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

சாப்ட்வேர் தொழிலில் மாதம் சம்பாதித்தைக் காட்டிலும் இருவரும் அதிகமாக சம்பாதிப்பதாகவும், மனநிறைவுடன் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாக்பூரின் பரபரப்பு மிகுந்த தரோத்கர் ஸ்கொயர் பகுதியில் கடையைத் தொடங்கி அனைத்து வாடிக்கையாளர்களையும் இருவரும் ஈர்த்து வருகின்றனர்.

இது குறித்து நிதின் நிருபர்களிடம் கூறியதாவது:

நானும், என் மனைவி பூஜாவும் மிகப்பெரிய, புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருந்தோம். அதில் பணியாற்றுவதும், கிடைக்கும் வருமானமும் எங்களுக்கு நிம்மதியைத் தரவில்லை.

ஆதலால், எங்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், மற்றவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் டீக்கடை தொடங்க முடிவு செய்தோம். மிகுந்த சுவையான, சத்தான, தரமான டீயை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்தோம்.

பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ததிதல் தரத்தில் மோசமாகவும், சுவையில்லாமலும் டீ கிடைப்பதை கண்டோம். அதைத்தான் வாடிக்கையாளர்கள் வேறுவழியில்லாமல் குடித்து வருகிறார்கள். அதேசமயம், தரமான, சுவையான டீ கிடைத்தால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று எண்ணினோம்.

இதற்கு ஏற்றார்போல், ஏறக்குறை. 4 மாதங்கள் கள ஆய்வு செய்தோம். மக்களுக்கு என்ன விதமான டீ விரும்புகிறார்கள், எப்படி சுவை இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை தெரிந்து கொண்டோம். நாள் ஒன்றுக்கு ஒருவர் குறைந்தபட்சம் இருமுறையேனும் டீ அருந்துகிறார்கள். ஆதலால், தரமான தேநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்பினோம்.

சூடான, சுவையான, தரமான தேயிலை மிகக்குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவுசெய்தோம். அதற்கான ஏற்பாடுகளாக தேயிலை,சர்க்கரை, பால், மசாலா உள்ளிட்ட பொருட்களை உரிய இடத்தில் தரமானதாக வாங்கினோம்.

ஆரஞ்சு நகரம் எனச் சொல்லப்படும் நாக்பூரில் கடந்த நவம்பர் மாதத்தில் கடையைத் தொடங்கினோம். நாங்கள் கடை தொடங்கிய இடம் மிகப்பெரிய அதிகாரிகள், பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வந்து செல்லக்கூடிய இடம். அவர்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு சுவைகளில், சூடான டீயும், ஐஸ்டீ என 20வகைகளில் தயாரித்து வழங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 1.75 லட்சம் கோப்பை தேநீர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 30 சதவீத லாபத்துடன் இதுவரை ரூ.15லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம்வரை சம்பாதிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் எங்களிடம் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறைந்தபட்சம் 5 டீக்களுக்கு அதிகமாக, அல்லது ரூ.100க்கு அதிகமாக ஆர்டர் செய்பவர்களுக்கு இருப்பிடத்துக்கே சென்று தேநீர் சப்ளை செய்கிறோம்.

சுவையான, தரமான தேநீர் உரிய நேரத்தில் கிடைக்கிறது என்பதால், எங்கள் கடையில் இருந்து நாள்தோறும் ஒரு சில நிறுவனங்களுக்கு தேநீர்சப்ளை செய்து வருகிறோம். சாதாரண கடைகளின் விலைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் தேநீர் விலையும் ரூ.8 முதல் ரூ.20 வரைதான் விற்பனை செய்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றார்போல், பேப்பர் கிளாஸ், பீங்கான் கோப்பை, களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பை ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். அமைதியான, சுகாதாராமான சூழலில் கடை நடத்துகிறோம். எங்களின் கடையின் கிளைகளை திறக்க பலர் ஆர்வத்துடன் கேட்டு இருக்கிறார்கள். விரைவில் விரிவுபடுத்துவோம்

இவ்வாறு நிதின் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

விண்வெளி வீரர்கள் மல ஜலம் கழிப்பது எப்படி?

விண்வெளியில், புவியீர்ப்பே இல்லாத சூழலில் விண்வெளி வீரர்கள் மல ஜலம் எப்படி கழிக்கின்றனர் என்பதை விளக்கும் காணொளி.

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்

 

 
mem%201
mem%2010
mem%202
mem%203
mem%207
mem%208
mem%209
  • தொடங்கியவர்
‘ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம்’
 

image_14453fec8c.jpgஉபதேசங்களை, நல்லோர்கள் மூலம் கேட்க வேண்டும். ஆனால், போலிச் சுவாமிகள் கூடத் தங்களை ஞானிகள் என்று கூறுவதை, ஆமோதிக்கும் கூட்டம் பெருகி விட்டது. 

ஆன்மீகத்தை, அதன் தாற்பரியத்தைப் புரியாமல், இத்தகையவர்கள் உளறும் பேச்சுகளால் பலர், இன்று குழம்பிப் போய் இருக்கிறார்கள்.  

ஆன்மீக சிந்தனைகள் கற்கும் பொருள் அல்ல; மாறாக உண்மையை உணருவது என்பதை, உணராமல் இருப்பது கவலைக்குரியது.

தவறான நடிப்புகளுடன் கூடிய  பொய்மையான வார்த்தைகளைக் கேட்பதால், காலம் விரையமாகின்றது.மூளைக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது. 

ஒருவரின் நல்ல தேடல்களை, சிந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய ஞானிகளின் நூல்கள் இன்னும் இருக்கின்றன. இவற்றைத் தேடிப் படித்து உணராமல், காசைத் தேடும் சுவாமிகளிடம் எதைப் பெறமுடியும்? 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம். இதற்குப் பொய்யர்களின் உதவி எதற்கு?

  • தொடங்கியவர்

புவி நாள்

 
அ-அ+

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

 
 
 
 
புவி நாள்
 
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 5-ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.

 

 

 

லால்குடி ஜெயராமன் இறந்த தினம்: ஏப்ரல் 22- 2013

 
அ-அ+

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.

 
 
 
 
லால்குடி ஜெயராமன் இறந்த தினம்: ஏப்ரல் 22- 2013
 
லால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்.

இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.

ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:

* அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
* செம்பை வைத்தியநாத பாகவதர்
* செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்
* ஜி. என். பாலசுப்பிரமணியம்
* மதுரை மணி ஐயர்
* ஆலத்தூர் சகோதரர்கள்
* கே. வீ. நாராயணசுவாமி
* மகாராஜபுரம் சந்தானம்
* டி. கே. ஜெயராமன்
* மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
* டி. வீ. சங்கரநாராயணன்
* டி. என். சேஷகோபாலன்
புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.

விருதுகளும் சிறப்புகளும்
------------------------------

* பத்மஸ்ரீ விருது 1972
* வாத்திய சங்கீத கலாரத்னா விருது: பாரதி சொசைட்டி, நியூயார்க்
* சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்
* மாநில வித்வான் விருது 1979: தமிழக அரசு
* சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது: கர்நாடகா அரசாங்கம்
* இசைப்பேரறிஞர் விருது 1984
* பத்ம பூசன் விருது 2001: இந்திய அரசு
* தேசிய திரைப்பட விருது 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பபுள்ஸ் விட்டிருக்கீங்களா? அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது?

 
 

சிறு வயதில் அம்மா துணி துவைக்கும்போது அருகில் அமர்ந்து சோப்பு நுரைகளில் வெளிப்படும் குமிழிகளை உடைத்து விளையாடி இருப்போம். அதே சோப்பு நீரைப் புட்டியில் அடைத்து சிறிய கழி(குச்சி)யொன்றின் நடுவில் போட்ட ஓட்டையின் வழியாக அதில் முக்கியெடுத்து ஊதி ஊதிக் குமிழிகளை நாமே உருவாக்கிச் சிறு வயது விஞ்ஞானிகள் என்று பெருமை கொண்டிருப்போம். கடந்த நூற்றாண்டுக் குழந்தைகளின் அந்தக் கால ஞாபகங்களை அசைபோடுவதே அலாதிச் சுகம்.

Bubbles

காலப்போக்கில் அதையே வியாபாரம் ஆக்கினார்கள். பல வண்ண, பல வடிவப் புட்டிகளில் சோப்பு நுரைகளை அடைத்துச் சிறிய, பெரிய ஓட்டைகளைக் கொண்ட குறுங்கழிகளால் ஓட்டையின் அளவுகளைப் பொறுத்துப் பல்வேறு அளவுகளில் ஊதப்படும் குமிழி மூலமாகக் குழந்தைகளை ஈர்க்கும் விற்பனையாளர்களை இன்றும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் நாம் பார்க்கலாம். வயதுகள் போனாலும் குமிழிகளின் மீதான ஆசை மட்டும் குறைவதே இல்லை. இதுபோன்ற அனுபவங்களை நான் பெறவில்லை, இதைப் பற்றித் தெரியாது என்று யாராவது கூறினீர்களே என்றால் அதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கமுடியும். நீங்கள் மனதளவில் உயிர்ப்புடன் இல்லை அல்லது நீங்கள் வேற்று கிரகவாசியாக இருக்க வேண்டும்.

Bubble stick


நம் குழந்தைப் பருவத்தில் நீங்கா இடம்பிடித்த இந்தக் குமிழிகள் ஏன் எப்போதும் உருண்டை (Sphere) வடிவத்திலேயே உருவாகின்றன.
அதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் குமிழிகள் எப்படித் தோன்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காற்றின் மூலக்கூறுகள் மிகவும் மென்மையானது. அது சிறிதளவு உந்துதல் கிடைத்தால் கூட நகரும். சிறு கழியில் ஓட்டையிட்டு சோப்பு நீரில் முக்கி எடுத்தால் சோப்பின் ஒட்டுதல் தன்மை காரணமாக நீரைப் படர வைத்து அது அந்தக் கழியில் இருக்கும் காலியிடம் முழுவதையும் நிரப்பிக்கொள்ளும். அவ்வாறு கண்ணாடி போன்று பரவியிருக்கும் சோப்பு நீரை நாம் ஊதும்போது காற்றின் மூலக்கூறுகள் அந்த வேகத்தில் முன்சென்று நீர்ப்பரப்பில் மோதி அதை முன்னால் தள்ளும். அதனால் பரவியிருக்கும் நீர்ப்பரப்பு உடைந்து தன்னைத் தள்ளும் காற்று மூலக்கூறுகளை உள்ளே அடைத்துக்கொண்டு குமிழிகளாக காற்றில் மிதக்கும். வெளியிலிருந்து ஏதாவது உந்துதல் ஏற்பட்டால் (உதாரணமாக யாராவது உடைப்பது அல்லது எதன் மீதாவது மோதுவது) அது உடையும். சில சமயம் அது தானாகவே உடைந்து விடும். அதற்குக் காரணம் காற்று மூலக்கூறுகளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நீர்ப்பரப்பு சிறிது சிறிதாக ஆவியாகத் தொடங்கும். அந்தச் சுவர் ஆவியாகி மெலிந்து சுயமாக உடைவதால் சிறைப்பட்டு இருக்கும் காற்று விடுதலை அடைகின்றன. 

அதுசரி, இந்தக் குமிழிகள் நீரின் மீதான காற்று மூலக்கூறுகளின் மோதலால் உண்டாகிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அது எப்படி, எல்லாக் குமிழிகளுமே உருண்டை வடிவத்திலேயே வருகின்றன. ஏன் அது சதுர வடிவத்திலோ முக்கோண வடிவத்திலோ வரக்கூடாதா? அல்லது வேறு ஏதாவது வடிவத்தில் வரக்கூடாதா?

வரக் கூடாது என்பதை விட வரமுடியாது என்பது சரியான பதிலாக இருக்கும். அதற்கும் விஞ்ஞானம் பதில் கூறுகிறது. எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன், என்ன, எப்படி என்ற கேள்விகளைக் கேட்பதன் மூலமே பகுத்தறிவு வளரும். விஞ்ஞானமும் அப்படியே வளர்ந்தது. நாமும் அந்தக் கேள்விகளின் வழியாகவே இதற்கும் விடை கண்டுபிடிக்க முயலுவோம். முதலில் ஏன்...

குமிழிகள் ஏன் உருண்டை வடிவத்திலேயே உருவாகின்றன என்ற கேள்வி தோன்றுகிறதா? நான் கேட்க வந்தது அதுவல்ல. குமிழிகளால் ஏன் வேறு எந்த வடிவங்களுக்கும் வரமுடிவதில்லை?

குமிழி


அதற்குப் பரப்பு இழுவிசை (Surface Tension) தான் காரணம். ஆம் குமிழிக்கு உள்ளிருக்கும் காற்று மூலக்கூறுகள் வெளியேறுவதற்காக அதைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நீர்ச்சுவர்களை முட்டிக்கொண்டே இருக்கும். அதே சமயம் வெளியில் இருக்கும் காற்று மூலக்கூறுகளில் கூட குமிழிகள் மோதிக்கொண்டே இருக்கும். ஓரிடத்தில் நில்லாமல் அலைந்துகொண்டே  இருக்கிறதல்லவா! அது அலைவதோ வெட்டவெளியில். அங்கோ ஆயிரக்கணக்கான காற்று மூலக்கூறுகள் திரிந்துகொண்டே இருக்கின்றன. அவையும் அடைபட்ட தமது சகாக்களை விடுவிக்க நீர்ச்சுவர்களை மோதிக்கொண்டே இருக்கும். 

உள்ளிருந்தும் அழுத்தம், வெளியில் இருந்தும் அழுத்தம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அடைந்திருக்கும் மூலக்கூறுகள் நகரக்கூட விடக் கூடாது. சதுரம், முக்கோணம் என்று எந்த வடிவம் எடுத்தாலும் அதன் நீள் அகலப் பரிமாணங்கள் அதிகமாக இருக்கும். காற்று மூலக்கூறுகள் நன்றாக நகரமுடியும். அது உருண்டையில் முடியாது. உதாரணமாக ஒரே நிறைகொண்ட உருண்டை வடிவத்தையும் சதுர வடிவத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் அளந்து பாருங்கள். உருண்டையை விடச் சதுரத்தின் அளவுகள் அதிகமாக இருக்கும். ஆகையால், காற்றின் அழுத்தம் காரணமாக அதனால் வேறு எந்த வடிவத்தையும் எடுக்கமுடியாது. உடையாமல் தன்னைத் தக்கவைக்க உருண்டை வடிவத்தை எடுப்பது மட்டுமே ஒரே தீர்வு.

காற்றின் அழுத்தத்திற்கும் நீர்க்குமிழியின் வடிவத்திற்கும் என்ன சம்பந்தம் ?
அறிவியலில் சமநிலை என்ற ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் Equilibrium என்று கூறுவோம். அதாவது இருவேறு திசைகளிலிருந்து ஒரே விதமான அழுத்தம் கிடைத்தால் அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அதன் அளவும் சமமாகத்தான் இருக்குமாம். அது எப்படி? உள்ளிருந்து கிடைப்பது கொஞ்சம் மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம். வெளியில் பல்லாயிரம் மூலக்கூறுகள் வந்து மோதமுடியும்.

அப்படியிருக்க இரண்டும் ஒரே அளவாக எப்படி இருக்க முடியும்?
வெளியில் பல ஆயிரம் என்ன பலகோடி மூலக்கூறுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அனைத்தும் ஒரே சமயத்தில் குமிழி மீது மோத முடியாதல்லவா? ஒரு நேரத்தில் மோதக்கூடிய மூலக்கூறுகள் அதன் பரப்பைச் சுற்றி உள்ளிருந்து மோதும் அதே பகுதிகளில்தான் வெளியிலிருந்தும் மோதமுடியும். எனில் இரண்டின் அழுத்தமும் சம அளவு தானே. இப்படிச் சம அளவிலான அழுத்தம் என்பது உருண்டை வடிவத்தில்தான் சாத்தியம்.

Pressure Diagram


அடுத்தது எப்படி...

மேலே சொன்ன அனைத்தையுமே ஏற்றுக்கொள்கிறோம். கழியின் ஓட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீர்ச்சுவர் நாம் ஊதும்போதே உருண்டை வடிவம் பெற்றுவிடுகிறதே அது எப்படி?

 

நாம் ஊதும்போது காற்று வேகமாகச் சென்று நீர்ச்சுவரின் நடுவில் மோதுகிறது அதனால் நடுப்பகுதி முழுவேகத்தில் முன்னால் விரிவடையும். காற்று சுவரின் மற்ற பகுதிகளில் குறைந்த வேகத்தோடு படுவதால் அவற்றின் வேகம் சிறிது மந்தமாக இருக்கும். ஆகவே வேகமாக விரிவடையும் நடுப்பகுதி முன்னால் செல்லச் செல்ல சுவரின் பரப்பும் சுருங்கிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் கழியில் இருக்கும் அதன் பிடியை விடவேண்டிய தருணத்தில், உடையும் நீர்ச்சுவரில் இருக்கும் சோப்பின் ஒட்டுத்தன்மை பிரிந்து செல்லும் ஓரச்சுவர்களை ஆங்காங்கே ஈர்த்து ஒட்டவைத்து விடுகிறது. இதனால் பின்பக்கமும் ஒன்றுசேர்ந்து உருண்டை வடிவங்களை அடைகிறது. மிகச் சரியான உருண்டை வடிவம் அவற்றுக்குக் கிடைப்பதில்லை. காற்றில் அசைந்து திரியும் குமிழிகள் காற்று மூலக்கூறுகளின் மோதும் வேகத்திற்கு ஏற்ப சுவர்களை வளைத்துச் சிறிது மாற்றங்களைச் செய்துகொள்ளும். தோராயமாக அனைத்துமே உருண்டை வடிவம்தான்.
குமிழியோடான உங்கள் குழந்தைப் பருவ அனுபத்தைக் கீழே பதிவிட்டு எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.