Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: குளிக்க தண்ணிய ஃப்ரிட்ஜுல வெய்

 

 
mem%2012
mem%2011
mem%2014
mem%2016
mem%206
mem%208

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘புத்திமதி கூறவும் பொறுமை அவசியம்’
 

image_1f917a0f81.jpgசிலருக்கு வலிந்து புத்திமதி சொன்னால், அது சிலவேளை, எமக்கு பெரிய அவமானத்தையும் உண்டு பண்ணி விடலாம். 

நல்லது சொன்னாலே, சிலருக்குப் பிடிக்கவும் பிடிக்காது. தாங்கள் சொல்வது, நினைப்பதுவே மேலானது என எண்ணுபவர்கள், எக்காலத்திலும் தங்களை மெருகேற்றிட முடியாது.  

“எல்லாமே தெரியும்” என்பவர்களுடன், விவாதம் செய்ய முடியாது; உபதேசங்களும் எடுபடாது. சில விடயங்களை நாம், கண்டு கொள்ளாமல் இருப்பதே மேல். வீறாப்புடன் பேசுபவர்கள், ‘பட்டால்தான் புரியும்’ என்பது போல், விரும்பாத அனுபவங்களை வலிந்து பெற்றாவது, உண்மையை மறைத்து விடுவார்கள். 

பிள்ளைகளிடம் நாம், பாராமுகமாக இருந்துவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு நிலையில், வழிக்கு வந்துவிடுவார்கள். நல்லதைச் சொன்னால், கேட்கும் மனப்பக்குவம் பெரியவர்களிடம்தான், பலதடவை இல்லாமல் போய் விடுவதுண்டு. 

இடம், பொருள், சூழ்நிலை அறிந்தே நாம் இயங்க வேண்டியுள்ளது. புத்திமதி கூறவும் பொறுமை அவசியம். 

  • தொடங்கியவர்

இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848

 
 
 

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம்,

 
 
 
 
இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848
 
ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862-ம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868-ல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894-ல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58-வது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சிங்கிள் கேர்ள் ஆர்மி ஆனதெல்லாம்... சான்ஸே இல்லை ஓவியா! #HBDOviya

 
 
Chennai: 

ன்று 38-வது நாள். நேரம் மாலை 4 மணி. "நீ ஏன் என்னை இப்படி பண்ணே...அப்படியெல்லாம் பழகினே...முத்தம் தந்தே...இப்போ இப்படி மாறிட்டே, ஃப்ரென்ட்னு சொல்ற, சட்டு சட்டுனு மாறுறே, என்னால அப்படியெல்லாம் மாற முடியாது" என்று பிக் பாஸ் வீட்டிற்குள் இத்தனை நாள்களாக அழுத்திக்கொண்டிருந்த குமிழ் உடைகிறது. உண்மையான காதல் உணர்வையும் தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தவிப்பையும் நொடிக்கொருமுறை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த நடவடிக்கைகளுக்குப் பின் வைக்கப்பட்ட விமர்சனங்கள், கொஞ்சநஞ்சம் அல்ல. 'பைத்தியம்', 'அட்டென்ஷன் சீக்கிங்', 'இம்மெச்சூர் கேர்ள்' என்று அந்நாள்களில் அவர் கடந்து வந்த வார்த்தைகளை, அந்த வீட்டில் வேறொருவர் கடக்க நேர்ந்திருந்தால், கட்டாயம் மிஞ்சியிருப்பது மனவருத்தம் மட்டுமே. தனிமையில் இருக்கும்போது, 'வலி கடத்துதல்' என்பது அவ்வளவு எளிதல்ல. எதிர்மறை எண்ணங்கள் சூழ் வீட்டில் தாக்குப்பிடித்து, முகமூடி போட்டுக்கொள்ளாமல், அப்படியே தனது இயல்பை வெளிப்படுத்துவது, இந்த உலகில் பலருக்கும் அமையாத ஒன்று. அதைப் பார்த்த நம் மனம் அவரது குழந்தைத்தனத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்தது. ஏனெனில் இவர்தான் நம் ஆல்டர் ஈகோவின் அற்புத வெளிப்பாடு. 

ஓவியா

ஒன்றரை மணி நேர டிவி ஷோவில் ஒன் கேர்ள் ஆர்மியாக செயல்பட்டு ஆயிரமாயிரம் லைக்குகளையும், ஷேர்களையும் தன் வசம் இழுத்தவர் இவர். இவை அனைத்துக்கும் காரணம் அவருடைய நேர்மையும், தன்னலமில்லா செயல்பாடுகளும் தான். நடனமாடுவதில் தொடங்கி, அழுவது வரைக்கும் அத்தனையும் வசீகர விமர்சனங்களால் நம் வாயை அசைபோட வைத்தன. என்னதான் தவறு அடுத்தவர்களிடம் இருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் முற்போக்குத் தன்மை, தரம்.! இவர் வீட்டை விட்டு வெளியேறிய அன்று, பிக் பாஸ் பார்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்களும் ஏராளம். நள்ளிரவு மழையில் நனைவது தொடங்கி, 'டேக் இட் லைட்' பாலிசியை கடைபிடிப்பது வரை பெண்களுக்கே உரித்தான இயல்பான குணங்களையும் இன்று தன்னுடையதாக பேசவைத்திருக்கிறார் இந்த பிக் பாஸ் தேவதை, பெயர் ஓவியா.! 

Oviya

'களவாணி' மகேஸ்வரி, 'முத்துக்கு முத்தாக' ஸ்வேதா, 'மெரினா' சொப்பன சுந்தரி, 'கலகலப்பு' மாயா, 'மதயானைக் கூட்டம்' ரிது என நம் வீட்டுப் பெண்ணாக இவர் வாழ்ந்த கதாபாத்திரங்கள் ஏராளம்.  ஓவியா சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர் அறிமுகமான 2007-ஆம் ஆண்டில்தான் அமலா பால், எமி ஜாக்சன் ஆகியோரின் சினிமா பயணமும் ஆரம்பித்தது. அவர்களுக்கு நிகராக ஒவ்வொருவரின் வீட்டிலும் கொண்டாடப்பட்ட ஓவியாவை வளரவிடாமல் தடுத்தது அவரது 'அந்த' முடிவுதான். கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி, நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர், பின்னர் க்ளாமருக்கு அதிக இடம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 

ஓவியா

ஸ்கூல் யூனிஃபார்மில் 'களவாணி' மகேஷாக, அவர் செய்த அழிச்சாட்டியங்கள், கலகலப்பில் அவரது க்ளாமர் கெட்டபின் மூலம் மொத்தமாக திசை மாறியது. அன்றுவரை அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் களைந்து, மார்க்கெட் இழந்து, 'ஃபெய்லியர் படங்களின் நாயகி' என்றாகிவிட்டார். அதை கொஞ்சம் சீர் செய்து மறுபடியும் ஹோம்லி கெட்டப்பில் அவரை நிலை நிற்கச் செய்ததுதான் 'மதயானைக் கூட்டம்' திரைப்படம். அறிமுக நடிகர் கதிர், அறிமுக இயக்குநர் விக்ரம் சுகுமாரன், ஓவியா கம்பேக் என்று உருவான இந்த கூட்டணியின் வெற்றிக்கு சாட்சி அப்படத்தின் ஒற்றைப் பாடலின் ஹிட் என்று கூறலாம். மதயானைக் கூட்டம் படத்துக்குப் பின்பு மீண்டும் சோர்ந்து போன இவரது சினிமா பாதை, பிக் பாஸ் நிகழ்ச்சியால் மெருகேற்றப்பட்டது. சரியாக இந்நிகழ்ச்சிக்கு முந்தய ஆண்டான 2016-ல் அவரது அம்மா மறைந்த சம்பவம் திரையுலகினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும்கூட தெரிவிக்கப்படவில்லை. இதைப் பற்றி விமல் அளித்த பேட்டியில், "எதேச்சையாக ஓவியாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோதுதான் தெரியவந்தது, அவரது அம்மா உயிர்நீத்த சம்பவம். இருப்பினும், முன்பு அவரை எப்படி சந்தோஷமாக பார்த்தேனோ, அன்றும் என்னிடம் அப்படித்தான் பேசினார். தன்னுடைய கவலை மற்றவர்களை பாதித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். மற்றவர்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே அளிக்கும் பாசிட்டிவ் வெளிச்சம் ஓவியா" என்று கூறியிருக்கிறார். 

ஓவியா

 

முப்படைகளையும் தாண்டி நான்காவது படையாக உருவான ஓவியா ஆர்மியின் மூலம் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க', 'கொக்கு நெட்ட கொக்கு', 'திரும்பிக்கோ...இல்லைன்னா ஸ்ப்ரே அடிச்சுப் போட்ருவேன்' போன்ற பொன்மொழிகள் வைரலானது. மிகவும் எதார்த்தமாக இருக்கும் குணங்கள் கொண்ட பெண்களை 'ஓவியா' என்று அழைக்கும் அளவுக்கு இவரது தன்னிகரில்லா பண்பு மக்களுடன் ஒன்ற வைத்தது. கடினமான பாதையைக் கடந்து வந்தும் சோகம் இவரை அப்பிக்கொள்ளாததற்கு காரணம், ஓவியாவின் உலகில் அவருக்கு முன்னுரிமை தரப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் மனநிலைதான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' என்ற கேள்வி ஒருபோதும் அவருக்கு முட்டுக்கட்டை போட்டதில்லை. தன்னுடைய உலகின் பிரத்யேக விதிகளின் படி வாழ நினைக்கும் ஓவியாவின் அடுத்த கட்ட சினிமா வெற்றி, பல முன்னணி கதாநாயகிகளுக்கு நிகராக கமிட்டாகியிருக்கும் படங்கள்தாம். 'சிலுக்குவார் பட்டி சிங்கம்', 'களவாணி-2', '90 எம்எல்', 'கணேசா மீண்டும் சிந்திப்போம்' என இந்த ஆண்டு படங்கள் வரிசை கட்டியிருக்கிறது. ஓவியா புரட்சிப் படையில் தொடங்கி, அகில இந்திய ஓவியா பேரவை வரை முக்குக்கு முக்கு போஸ்டர் ஒட்டி நூறு நாள்கள் கொண்டாடிய பிக் பாஸ் அழகியின் பிறந்த தினம் இன்று. இனி அவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவினாலும், அவர் 'நம்ம வீட்டுப் பொண்ணு' என்று நினைக்கும் மிடில்-ஏஜ் ரசிகர்கூட்டம் என்றும் மாறாது. வெல்டன் ஓவியா, மைல்ஸ் டு கோ.! 

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

ஜோடி சேரும் ஜிமிக்கி கம்மல்!

 

 
sheril
 
 
 

கேரளத்து லாட்டரியில் பம்பர் பரிசு அடித்ததைப் போல, ஒரே பாடலில் புகழின் உச்சத்திற்கே சென்றவர் ஷெரில்! அட, ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலேதான். கம்மல் கலக்கிய கலக்கலுக்குத் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்தால், அம்மணியோ கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டார்!

ஜிமிக்கி கம்மல் வெற்றிக்குப் பின்பு, மலையாளத்தில் மாதம் இரு முறை வெளிவரும் இதழான வனிதாவின் அட்டைப்பட சூட்டிங்கில் கடந்த ஜனவரி மாதம் பங்கேற்றார் ஷெரில். மலையாள நடிகர் ஜெயசூர்யா, டப்ஸ்மேஷ் புகழ் செளபாக்யா, ஜிமிக்கி கம்மல் ஷெரில் மூவரின் செல்ல அரட்டை அட்டைப்படமாக புகைப்படத்தை வெளியிட்டது வனிதா. இதற்கென நடந்த பிரத்யேக போட்டோ ஷூட்களும், வீடீயோ மேக்கிங்கும்கூட வைரலாகின. இதில், ஜெயசூர்யா நடித்து ஹிட்டான ‘சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டடா… சங்காதி நீயானால் கல்யாணம் வேண்டடா’ எனும் பாடலுக்கு நடனம் ஆடினார் ஷெரில். ‘நண்பன் நன்றாக இருந்தால் கண்ணாடியே வேண்டாம்… நல்ல நண்பன் நீயாக இருந்தால் கல்யாணமே வேண்டாம்’ என்பது இதன் அர்த்தம். கல்யாணம் வேண்டாம் என்று ஆடிய முகூர்த்தமோ என்னவோ, ஷெரில் வீடு, கெட்டிமேளச் சத்தத்துக்குத் தயாராகிவிட்டது.

நெருங்கிய உறவுகள், நண்பர்கள் புடைசூழ, எர்ணாகுளம் மாவட்டம், வாழக்குளத்தில் ஷெரில், ப்ரஃபுல் டாமி திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதை ஷெரில் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து பல ஊடகங்களும், ஷெரிலைப் பேட்டிக்காக துரத்த, ‘நிச்சயதார்த்தம் தனிப்பட்ட விசயம் தானே! இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்’ எனச் செல்லமாய் குறுந்தகவல் அனுப்பி இன்னமும் எஸ்கேப் ஆகிவருகிறார்.

“இப்பவே, ஷெரிலுக்குக் கட்டுப்பாடு ஏதும் போட்டுருக்கீங்களா, மீடியாக்களிடம் சிக்காம ஜூட் விடுறாங்களே’’ என்ற கேள்வியுடன் ஷெரிலின் வருங்கால மாப்பிள்ளை ப்ரஃபுல் டாமியைச் சந்தித்தேன். “அப்படியெல்லாம் இல்லை. நான் ரொம்ப ஜாலியான கேரக்டர்தான்” என நெருங்கிய நண்பனைப் போல ஒட்டிக்கொள்கிறார் ஜிமிக்கி கம்மல் பிரியர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா இவரது பூர்வீகம். எம்.பி.ஏ பட்டதாரியான டாமி, பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறார். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இவர்களுடையது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பெங்களூருவில் வேலைக்குச் சென்றுவிட்டார் ப்ரஃபுல் டாமி. “ஷெரிலை ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியபோதே, யூடியூபில் பார்த்தேன்(நீங்க மட்டுமா பார்த்தீங்க?). ‘குட் பர்ஃபார்மன்ஸ்’னு யூடியூபிலேயே கமென்ட்செய்திருந்தேன். ஆனால், அவரே மனைவியாக வருவார் என்றெல்லாம் யோசித்ததுகூட இல்லை. வீட்ல எனக்குப் பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, குடும்ப நண்பர் ஒருத்தர் மூலமாத்தான் ஷெரிலோட வரம் வந்துச்சு. அவங்க குடும்பமும் நல்ல பாரம்பரியப் பின்புலம் உள்ள குடும்பம். இரண்டு வீட்டுக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. முதல்ல நிச்சயதார்த்தம்... ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் கல்யாணம்னு பிளான் பண்ணாங்க. சீக்கிரமே கல்யாண தேதியும் சொல்றோம்.

பொதுவாகவே, பசங்களுக்குக் கல்யாணம்னா, கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்ங்க பொண்ணு போட்டோ காட்டச் சொல்வாங்க. ஆனா, எனக்கு அந்தச் சிக்கல் இல்லை. என் ஆபீஸ்ல தென்னிந்தியாவோட நிறைய பகுதியில இருந்தும் நண்பர்கள் வேலைசெய்றாங்க.

எல்லாருக்குமே அவங்களைத் தெரியுது. அப்படியே ஷெரிலைத் தெரியாதவங்ககிட்ட, யூடியூபில போய் ஜிமிக்கி கம்மல்னு போடுங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். சினிமா வாய்ப்புகளில் நடிப்பதா, வேண்டாமா என்பதை ஷெரிலே முடிவுசெய்வார். இதையெல்லாம் தாண்டி ஒரு விசயம் சொல்லணும்னா, ஜிமிக்கி கம்மல் பாடல் இவ்வளவு வைரல் ஆகும்ன்னு ஷெரிலே நினைச்சுப் பார்த்ததில்லைன்னு சொன்னாங்க. அதுக்கு தமிழ்நாடு இளைஞர் பட்டாளத்துக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்.

அந்த வீடீயோ மேக்கிங்கும் தற்செயலா அமைஞ்சதுதான். கல்லூரி வளாகத்தில சும்மா ஒரு ரிலாக்ஸுக்கான முயற்சியாத்தான் பண்ணிருக்காங்க. ஜிமிக்கி கம்மல் வீடியோ வந்தபோது, கொச்சினில் கல்லூரி ஆசிரியர் வேலையில் ஷெரில் இருந்தாங்க. அதிலிருந்து இப்போ விலகிட்டாங்க. எனக்கு பெங்களூருவில் வேலை என்பதால், அவங்களும் அங்க வேலை தேடிட்டு இருக்காங்க. திருமணத்துக்குப் பின்னாடி பெங்களூருவில் செட்டிலாகிற பிளான் வெச்சுருக்கோம். கேரளாவில் இருந்து, ஒவ்வொரு தடவையும் தமிழகம் வழியாத்தான் பெங்களூரு போகணும். திருமணம் முடிஞ்சதும், தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி கோயிலுக்குப் போகணும்னு நினைச்சுருக்கோம்.

எனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்காங்க. அவங்ககூடவும் ஷெரில் நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க” என்கிறார் ப்ரஃபுல் டாமி. மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படப் பாடலுக்குப் பட்டையைக் கிளப்பிய ஷெரில், தீவிரமான தல ரசிகை. ப்ரஃபுல் டாமியோ அதி தீவிர தளபதி ரசிகர். இருவருமே மலையாள தேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்தாலும் அழகுத் தமிழில் பேசுகிறார்கள். `“இது எப்படி பாஸ்?’’ என்று ஆச்சரியமானால், “எனக்கு விஜய் தமிழ் டீச்சர். அவங்களுக்கு அஜித்! இவங்களோட படங்களைப் பார்த்துதான் நாங்க சரளமாத் தமிழ்ப் பேசப் பழகிருக்கோம்” என்ற டாமி, “அடுத்த முறை ஷெரிலைச் சந்திக்கும்போது கொடுக்கிறதுக்கு சர்ப்ரைஸா ஒரு ஜிமிக்கி கம்மல் வாங்கி வெச்சுருக்கேன்” என்றார்.

சாருக்கு இப்போதே முகத்தில் மாப்பிள்ளைக்களை தாண்டவமாடுகிறது!

http://tamil.thehindu.com

 

  • தொடங்கியவர்

உயிர் கொடுத்து உருவான கால்வாய்

 

 
panama

உழைப்பாளர் நாள்: மே1

வீடு கட்டுவது, ஆலயம் எழுப்புவது போன்ற எல்லாக் கட்டுமானங்களிலும் உழைப்பாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. இப்படியான அரிய, அர்ப்பணிப்பான உழைப்புடன் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். அது கட்டப்பட்டபோது அதன் உழைப்பாளர்கள் பட்ட பாடும் உயிரிழப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இந்த உழைப்பாளர் தினத்திலும் அவை நிச்சயம் நினைவுகூரத்தக்கவை.

பனாமா எனும் நாடு வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பகுதியில் ஒரு கால்வாய் அமைந்தால் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருக்கும் என எண்ணியது அமெரிக்கா.

காரணம் அதன் ஒரு பகுதியான சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மறுபகுதியான நியூயார்க்குக்கு ஏதாவது பொருளை கப்பலில் அனுப்ப வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை வலம் வந்துதான் செல்ல வேண்டியிருக்கும். பனாமா பகுதிக்குள்ளே கால்வாய் வெட்டப்பட்டால் கப்பல் பயணத்தில் சுமார் 8,000 மைல் தொலைவைக் குறைக்க முடியும். நேரம், பணம் இரண்டுமே நிறைய மிச்சமாகும். இந்தக் கால்வாய் பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கக்கூடியது.

இப்போதைய பனாமா நாடு அப்போது கொலம்பியாவின் ஒரு பகுதியாக இருந்தது. கொலம்பியாவுக்கு ஒரு பயம். “ஏதாவது வல்லரசு பனாமா பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு கால்வாயையும் வெட்டி, அது தனக்கே சொந்தம் என்று கூறிவிட்டால் என்னாவது? எனவே 1846-ல் கொலம்பியா அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

பனாமா பகுதியில் நடைபெறும் அனைத்து வணிகத்திற்கும் அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும்.

பனாமா பகுதியில் கால்வாயை நிறுவ லூசியனட் நெப்போலியன் என்பவருக்கு அனுமதி அளித்தது. அவர் அந்த உரிமையை வேறொருவருக்கு விற்று விட்டார்.

பனாமா என்பது மிகப் பரந்த பகுதியாக இல்லை. பார்ப்பதற்கு மிக மெலிதாக இது இருக்கும். ஆனால் இதை மனதில் கொண்டு ‘இங்கு கால்வாய் தோண்டுவது சுலபம்’ என்று எண்ணினால் அது அந்த உழைப்பாளிகளுக்குச் செய்யும் துரோகம்.

கால்வாய் என்றதும் ஏதோ நடுவிலுள்ள மண்ணை நீக்கி கடலின் இருபகுதிகளையும் இணைப்பது என்பதல்ல. பனாமா கால்வாய் மிக மிக பிரம்மாண்டமான திட்டம். பனாமா கால்வாயை ஒரு கப்பல் கடக்க எட்டிலிருந்து பத்து மணி நேரம் ஆகும். சில இடங்களில் கடல் மட்டத்தைவிட 85 அடி மேலே கூட இது அமைக்கப்பட்டிருக்கிறது. கப்பலின் மாலுமிகள் தாங்களாகவே இந்தக் கால்வாயைக் கடக்க முடியாது. இதற்கென்றே தனிப்பயிற்சி பெற்ற ஒருவரைத்தான் பனாமா கால்வாய் நிர்வாகம் அனுமதிக்கும்.

அந்தக் காலத்தின் தலைசிறந்த பொறியியல் திட்டமாக இது கருதப்பட்டது. (இப்போதும் கூடப் பல பொறியியல் வல்லுனர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்). உரிமை பெற்ற பிரெஞ்ச் நிறுவனம் கால்வாயிலிருந்து ஏழு கோடி க்யூபிக் யார்டு மண்ணைத் தோண்டி எடுத்த பிறகு அந்த நிறுவனமே திவாலாகிவிட்டது (கணக்கில் தில்லுமுல்லு நடந்ததாகக் கூறப்பட்டு அதன் பல நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்).

பனாமா கால்வாய் கட்டுமானத்தின்போது மொத்தம் 20,000க்கும் அதிகமான கட்டுமானப் பணியாளர்கள் இறந்தனர். இதில் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தினால் இறந்தவர்கள் பலரும் உண்டு. போதாக்குறைக்கு மஞ்சள் காய்ச்சல் மற்றும் மலேரியா காரணமாகவும் இறந்தனர். கட்டுமானத்தின்போது அங்கு நிலவிய மோசமான சூழலும் அசுத்தக் காற்றும் இதற்குக் காரணம்.. போதாக்குறைக்கு கொசுக்களின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவிய பிறகு அவசர அவசரமாக தேங்கிய நீரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இல்லையேல் கொசுக்கள் மேலும் தங்களைப் பெருக்கிக் கொள்ளுமே!

panamacanal
 

1901ல் அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான கட்டுமானப் பணிகளை ஏற்றுக் கொண்டது. 1907ல் மாதம் பத்து லட்சம் க்யூபிக் யார்டு மண் தோண்டி எடுக்கப்பட்டது. உச்ச நேரத்தில் இது 30 லட்சத்துக்கும் அதிகமானது.

நான்கு அணைகளும் கட்டப்பட்டன. ஒவ்வொன்றின் நீளமும் 150 மீட்டரிலிருந்து 2,300 மீட்டர் வரை. இவற்றுக்கான பூட்டுகள் (அதாவது தண்ணீரை வரவிடாமல் தடுக்கும் பகுதிகள்) கட்டுவதற்குப் பெரும் சவாலாக விளங்கின. இவற்றுக்கு 10 லட்சம் கன மீட்டர் அளவு கொண்ட உறுதியான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது. பல பகுதிகளை இடித்துத் தள்ள வேண்டியிருந்தது.

தினமும் 10 மணி நேரம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இப்படி 40,000 பணியாட்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர். ஐம்பது நாடுகளைச் சேர்ந்த உழைப்பாளர்கள் பனாமா கால்வாய் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

டைனமைட் வைத்துத் தகர்ப்பது, உடையும் பாறைகள் இவற்றின் காரணமாகவும் பலவித நோய்கள் ஏற்பட்டன. ஐம்பது பவுண்டு எடை கொண்ட டைனமைட் பெட்டிகளை நூற்றுக்கணக்கான முறை சுமந்து செல்வது, எதிர்பாராமல் சற்ற முன்னதாகவே பாறையைத் தகர்த்துவிட்டால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை வேறு.

இனவேறுபாடுகள் வேறு தலை காட்டின. அதிக சிரமமான வேலைகள் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்திருந்த கறுப்பர் இன மக்களுக்கு அளிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை அள்ளிச் செல்வதற்கென்றே சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. (கால்வாய்க்கு அருகில்தான் ரயில் பாதை இருந்தது). சரிந்து விழுந்திருந்த மண் பகுதிகளிலிருந்து பின்னர் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 27,000 பேர் இறந்ததாகக் கணக்கெடுக்கிறார்கள்.

1914 ஆகஸ்ட் 14 அன்று பனாமா கால்வாய் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. 48 மைல் நீளம் கொண்ட கால்வாய்!

உலக வரைபடத்தைப் பார்க்கும்போது கிழக்கு மேற்காக இந்தக் கால்வாய் கட்டப்பட்டிருக்கும் என்று நினைப்பார்கள். இல்லை. தெற்காகச் சென்று, பிறகு கிழக்குப் பகுதியில் திரும்பிச் செல்கிறது இந்தக் கால்வாய்.

இன்று 13,000க்கும் அதிகமான கப்பல்கள் தினந்தோறும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துகின்றன. 160 நாடுகள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 10,000 ஊழியர்கள் இன்று இந்தக் கால்வாயை நிர்வகிக்கிறார்கள். 24 மணி நேரமும் இயங்குகிறது இந்தக் கால்வாய். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாக பனாமா கால்வாய் மதிக்கப்படுகிறது. இதை வடிவமைத்த மேதைகளுக்கும்,

பெரும் சவால்களுக்கிடையே உழைத்த கட்டுமானப் பணியாளர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் செய்வதுதான் முறை.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

 

கடந்த நூற்றாண்டின் கவிதை வெளி பாரதியின் தடங்களிலிருந்து தொடர்ந்தது. அதே காலகட்டத்தில் கவிதை வெளியிடை தமிழ் செய்ய வந்த மற்றுமொரு கவிச்சுடர் பாவேந்தர் பாரதிதாசன். கடவுளைத் தவிர்த்து தனிமனித ஈர்ப்பின் பால் "தாசன்" என பெயர் மாற்றும் தளத்தை பாரதிதாசன் ஏற்று பாரதியின் தாசனாக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டார். ஆனால், தமிழ் கவிதைகளை சுவாசிக்கும் தமிழர்களுக்கு இருவருமே வேறு வேறு திசைகளில் எழுத்துருக்களில் அலங்காரம் செய்தவர்கள் என்பது புரியும். இவர்கள் இருவரையும் ஒரே திசையில் பயணிக்கச்செய்தது அவர்களுக்குள் இருந்த காதல். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள தொடர்பை காதலில் வைத்து அறிந்துகொள்வது இனிமையாக இருக்கிறது. 

பாரதிதாசன்

 

'கள்' என்னும் பொதுச்சொல்லுக்கு நன்மைகளும் தீமைகளும் வெவ்வேறு அளவீடுகளில் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அகத்தியரின் குணப்பாட பாடல் கள்ளை "பனைமது" என்று குறித்து அதை நன்மையானது என்று கூறுகிறது. வள்ளுவர் தீங்கில் சேர்த்து கள்ளுண்ணாமை என்று அதிகாரம் செய்திருக்கிறார். கம்பரும் கூட கம்பராமாயணத்தில் கள்ளை தீமையில் சேர்த்திருக்கிறார். கள் என்பதற்கு பயன்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் ஏற்றாற்போல மாறுபட்ட பார்வைகள் இருக்கின்றன.

 

பாரதியும் பாரதிதாசனும் "கள்வெறி" என்ற சொல்லை வெவ்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
'கள்'  "களிப்பு" என்னும் வேர்ச்சொல்லில் இருந்து களித்தல், மகிழ்வுறுதல் போன்றவற்றின் அடையாளமாக 'கள்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை மகிழ்ச்சியின் பொருளில் எடுத்திருக்கிறான் பாரதி. பெருமகிழ்ச்சியின் குறிப்புணர அதை "கள்வெறி" என்று எழுதுகிறான்.


"கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ"

கன்னத்து முத்தத்தில் அடைந்த உள்ளத்தின் எழுச்சியை, மகிழ்ச்சி மிகுதியை கள்வெறி கொள்வதாய் பாரதி எழுதியிருக்கிறான். பாரதிக்கு கள்வெறியின் அனுபவம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை விட கவிதையில் அனுபவங்கள் தேவையில்லை என்று சொல்லி கடந்துவிடுவது தமிழுக்கு சுபம். காதல் மரணவலி என்று எழுதுபவர்கள் யாருக்கும் மரணித்த அனுபவம் இருக்குமா என்ன ? "கள்வெறி" என்ற சொல்லுக்கென்று இருவேறு பொருள்கள் புலப்பட்டாலும் அதன் ஆதி மகிழ்ச்சியையே சுட்டுகிறது.

பாரதியைப்போல பாரதிதாசனும் தனது  கவிதை ஒன்றில் "காணும் எழிலெல்லாம்  மெல்லியின்வாய்க் கள்வெறியோ" என்று கள்வெறியை பயன்படுத்தியிருக்கிறார்.


            தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!

            தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்!

            விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம்

            மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்

            வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!

            வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை!

            கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்!

            கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!

 

அந்திசாய்ந்த முன்னிரவில் காதலிக்காக காத்திருக்கும் காதலன் காத்திருப்பின் கணங்களை கவிதையாய் மாற்றி, இறுதியில் காதலி வந்ததும் எவ்வளவு எழுதினாலும் எழுதமுடியாத கவிதை காதலி தான் என்று சொல்லி முடிக்கும் இந்த கவிதை கீழுள்ளவாறு தொடங்குகிறது.


மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
மனவௌியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

இந்த பெருங்கவிதையின் சாரம் பாரதியின் கண்ணம்மா கவிதையை நினைவுப்படுத்துகிறது. 

 

பாரதியின் கவிதையும் அதே மாலைநேரத்து காத்திருப்பின் கணங்கள் சொல்லும் கவிதை தான்.

மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்

பாரதி 'கண்ணம்மா" என்று காதலிக்கிறார். பாரதிதாசன் 'அவள்' என்று காதலிக்கிறார். ஆனால், இருவரின் காதலும் ஒன்றாகவே இருக்கிறது.

"சுட்டும் விழிச்சுடர் தான் –கண்ணம்மா சூரிய சந்திரரோ?" என்று பாரதியார் கண்ணம்மாவை எழுதினால் "தண்ணிலவும் அவள்முகமோ!" என்று பாரதிதாசன் குளிர் நிறைந்த நிலவை அவள் முகமென எழுதுகிறார்.

பாரதியைப் போலவே காதலை கொஞ்சம் அதிகமாகவே காதலோடு எழுதியிருக்கிறார் பாரதிதாசன்.

"இரவு சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்!
எனினும் சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்

தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?"

புரட்சிக்கவிஞரின் 'காதல் கவிஞர்' அவதாரம் படிக்க படிக்க அத்துனை அழகு. பாரதி விட்டுச்சென்ற காதல்தமிழின் நீட்சி பாரதிதாசன்.

புரட்சி வேள்வியில் தமிழ் சமூகத்தைக் கட்டிப்போட்ட இந்த பெருங்கவிஞர் தற்கால தமிழ் இசை ரசிகர்களையும்  "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று ரஹ்மான் இசையில் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விமானம் கட்டும் விவசாயி!

 

 
farmer%20plane
 

வாழ்க்கையில் ஒரு நாளாவது விமானத்தில் பறக்க வேண்டும். இது பலருக்கும் உள்ள ஆசைதான். ஆனால், சீனாவில் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி ஸு யூவுக்கு (Zhu yue) விமானத்தில் பறக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சொந்தமாக ஒரு விமானத்தை வாங்க வேண்டும் என்றும் ஆசை. அந்த ஆசைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் சொந்தமாக விமானம் வடிவமைக்கும் பணியிலும் அவர் இறங்கியிருக்கிறார்.

ஒரு விவசாயியால் எப்படி விமானத்தை வடிவமைக்க முடிகிறது? தனது இளமைக் காலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்ட ஸு யூ, பின்னர் வெல்டராகவும், மோட்டார் பைக் மெக்கானிக்காகவும் பல அவதாரங்களை எடுத்தார். இதில் கிடைத்த அனுபவப் பாடங்களைக்கொண்டே சொந்தமாக விமானம் உருவாக்கும் முடிவுக்கு வந்தார் ஸு யூ. அதற்குத் தேவையான பணத்தைச் சேர்த்து வந்த அவர், தன் நண்பர்கள் 5 பேரிடம் தனது கனவுத் திட்டம் பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஆச்சரியமடைந்த நண்பர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.

நண்பர்கள் துணை கிடைத்ததால் உற்சாகமடைந்த ஸு யூ, தனது விமானம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல்வேறு விஷயங்களை இணையதளங்கள் மூலம் தெரிந்துகொண்டார். சுமார் 3 மாத கால ஆய்வுக்குப் பின்னர் 2016-ம் ஆண்டில் ஒரு நல்ல நாள் பார்த்து தனது கனவு விமானத்தை வடிவமைக்கும் பணியை ஆரம்பித்தார்.

farmer%20plane3
 

லியோனிங் மாகாணத்தில் செயல்படும் கையூன் (Kaiyuan) தொழிற்பூங்காவில் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கே விமானம் கட்டும் பணியை மேற்கொண்டார். ஆரம்ப காலத்தில் சிரமங்களைச் சந்தித்தாலும், தனது சிறுவயது கனவை அடைய வேண்டும் என்ற உத்வேகமும் நண்பர்களின் உதவியும் இருந்ததால் மனம் தளராமல் கனவு விமானத்தைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார் ஸு யூ.

தற்போதைய நிலவரப்படி 85 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. 40 டன் கம்பி, இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடியைக் கொண்டு தனது கனவு விமானத்தை இழைத்துவருகிறார் ஸு யூ. தற்போதுவரை ₹70 லட்சத்தை இதற்காகச் செலவு செய்திருக்கிறார் இவர். கனவு விமானம் கட்டுமானப் பணியைச் சமூக ஊடங்களில் அவ்வப்போது நேரடியாக ஒளிபரப்பியதால், அவரது கனவுத் திட்டம் சீனாவின் பல பகுதி மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறது.

ஸு யூ கட்டிய கனவு விமானம் பார்ப்பதற்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் போலவே இருக்கிறது. உண்மையான விமான பாகங்கள் அனைத்தையும் இதில் பொருத்தியிருப்பது விமானத்துக்கு அழகைக் கூட்டியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் விமானம் கட்டும் பணியை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸு யூ. இதே விமானத்தில் தனது குடியிருக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இப்படியும் ஒரு விவசாயி!

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சீர் லீடரான ஸீவா-வின் சுட்டித்தனங்கள்

 

 
ziva

 

தற்போது 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. மேலும் இதில் மகேந்திர சிங் தோனி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வெற்றிகளைப் பெற்றுத் தருகிறார்.

ziva_1.jpg

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இம்முறை சிஎஸ்கே அணி தான் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என ஐபிஎல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ziva_2.jpg

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் அதிரடி ஆட்டத்துக்கு இணையாக மைதானத்தில் அவரது மகள் ஸீவா செய்யும் சுட்டித்தனங்கள் பலரது மனங்களைக் கவர்ந்து வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார். அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ziva_3.jpg

ஸூவாவுக்கென பிரத்தியேக இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய அத்தனை குறும்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 

அவ்வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் விசில் ஆந்தமுக்கு ஸீவா ஆடும் ஆட்டமும், பின்னர் சிஎஸ்கே......சிஎஸ்கே......சிஎஸ்கே...... என்ற அவரது கோஷமும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

 
 

http://www.dinamani.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

எத்தனை பிரபலயங்களுக்கு பிள்ளை பிறக்குது...தோனியின் பிள்ளை தான் உலகத்தில் இல்லாத பிள்ளை மாதிரி ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

எத்தனை பிரபலயங்களுக்கு பிள்ளை பிறக்குது...தோனியின் பிள்ளை தான் உலகத்தில் இல்லாத பிள்ளை மாதிரி ?

 

 

நீங்கள் ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்....! இன்றைய யந்திர வாழ்க்கையில் சாதாரண வேலை செய்ப்பவர்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு மணித்தியாலம் கூட ஒதுக்க முடிவதில்லை.இவர்கள் பிரபலங்கள் என்பதற்கும் அப்பால் ஒரு பெற்றோராக தமது பிள்ளைக்கு நேரத்தை செலவிடுகின்றார்கள்.இவ்வளவுக்கும் அவர்களது நிமிடங்கள் லட்ஷம் பெறுமதியானவை. ஏனைய பெற்றோர்களும் இதை முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.எனக்கும் அதுதான் ஆசை.ஆனால் டூ லேட் .....! tw_blush:

  • தொடங்கியவர்
‘உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க’
 

image_ee2173fe48.jpgஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான். கூடப்பிறந்தாலும் அல்லது உறவினர்களாக, நண்பர்களாக இருந்தாலும் வாழ்க்கையும் வாழும் முறைகளும் ஒரேமாதிரி அமைந்துவிடாது. 

இதில் நீயா, நானா என வாதிடுவதும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பேதம் புகழ்வதும் ஆகாது. ஏற்றம், இறக்கம் கொண்டதுதான் மனித வாழ்வு. எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்? எதையும் தீவிரமாக எதிர்பார்த்தால் ஏமாற்றங்களும் ஏற்படலாம்.  

எனக்கு மட்டும் ஏன் இப்படித் துயரம் வாட்டுகின்றது எனச் சொல்வது இயற்கையின் வலுப்பற்றி அறியாமல் இருப்பதுதான் காரணமாகின்றது. நல்லது நடந்தாலும் இறுமாப்புக் கொள்வது நிறை மாந்தர் இயல்பு அல்ல. 

கற்றவர்களுக்கு மட்டுமே உயர் பதவி கிடைப்பதுமில்லை. ஒன்றுமே தெரியாதவனும் கோடீஸ்வரன் ஆகின்றான். இதை விதி என்கின்றார்கள். மதி கூடத் தடுமாறுவதுண்டு. சலனமற்று இயங்குக; இயற்கை மாற்றங்களைப் புரிந்து கொள்க. உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க

  • தொடங்கியவர்

உங்களுக்காக கடவுள் அனுப்பிய தேவதையின் பெயர் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

 
 

உன்னை அறிந்தால்

'டவுள் அனுப்பும் தேவதைகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை’ என்பது ஓர் ஐரோப்பியப் பழமொழி. இது தேவதைகள் சூழ்ந்த உலகம். அவர்களின் ஆசீர்வாதத்தால்தான் நம் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. தத்தித் தவழும் காலம் தொடங்கி ஆளாகும் நாள் வரை அவர்களின் உதவியில்லாமல் நம் வளர்ச்சி சாத்தியமில்லை. நம் உடல்நலக் கோளாறுகளுக்கு உதவுவதிலிருந்து, மனப் பிரச்னையின்போது மயிலிறகால் வருடுவதுபோல் ஆறுதல் வார்த்தைகள் தருவதுவரை தேவதைகளின் அரவணைப்பு மகத்தானது. உங்களுக்காக கடவுள் அனுப்பிவைத்திருக்கும் தேவதை யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்வியைக் கேட்டால் யாராலும் உடனே பதில் சொல்லிவிட முடியாது. அந்தப் பதிலைக் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறது இந்தக் கதை. 

ஒரு குழந்தை பூமியில் வந்து பிறப்பதற்குத் தயாராக இருந்தது. சொர்க்கத்திலிருந்த அந்தக் குழந்தை கடவுளிடம் கேட்டது... ''சாமி... நான் இவ்ளோ குட்டியா இருக்கேன். எனக்கு உதவி செய்றதுக்கும் ஆள் இல்லை. நான் எப்பிடி பூமிக்குப் போய் பொழைக்கப் போறேன்?’’ 

கடவுள் சொன்னார்... 'கவலைப்படாதே கண்ணு. என்கிட்ட நிறைய தேவதைகள் இருக்காங்க. அவங்கள்ல ஒரு தேவதையை உனக்காகத் தேர்ந்தெடுத்துவெச்சிருக்கேன். அந்த தேவதை உனக்காக பூமியில காத்துக்கிட்டிருக்கு. அது உன்னை நல்லா பார்த்துக்கும்.’’ 

சொர்க்கம்

''ஆனா கடவுளே... இங்கே, சொர்க்கத்துல நான் எதையும் செய்யறதில்லை. என்ன... பாட்டுப் பாடுறேன், சிரிக்கிறேன். என் சந்தோஷத்துக்கு அது போதுமானதா இருக்கு. ஆனா, அங்கே பூமியில...’’ 

''தினமும் உன்னுடைய தேவதை உனக்காகப் பாட்டுப் பாடும்; சிரிக்கும். அந்த அன்பை நீயும் அனுபவிப்பே. மகிழ்ச்சியாத்தான் இருப்பே.’’ 

''சரி... அங்கே மனுஷங்க என்கிட்ட பேசுவாங்கல்ல? அவங்க பேசுற மொழி எனக்குத் தெரியாத நிலையில நான் எப்படி அதைப் புரிஞ்சுக்குவேன்?’’ 

''இதுவரைக்கும் நீ கேட்டேயிருக்காத அழகான, இனிமையான வார்த்தைகளை தேவதை உன்கிட்ட பொறுமையாகவும் அக்கறையோடவும் சொல்லித்தரும். நீ எப்படிப் பேசணும்கிறதையும் அதுவே உனக்குக் கத்துத் தரும்.’’ 

''அது இருக்கட்டும். உங்ககிட்ட பேசணும்னா, நான் என்ன செய்யறது?’’ 

''தேவதை உன் கைகளைக் குவிச்சு எப்பிடி என்னை வணங்கணும், எப்பிடி பிரார்த்தனை பண்ணணுங்கிறதையெல்லாம் சொல்லித் தரும்.’’ 

''அப்புறம்... நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். பூமியில ரொம்ப மோசமான மனுஷங்க நிறைய பேர் இருக்காங்களாமே... என்னை யார் காப்பாத்துவா?’’ 

''உன்னோட தேவதை  உன்னைப் பாதுகாக்கும்... தன் உயிரைக் குடுத்தாவது எந்தச் சூழ்நிலையிலும் உன்னைக் காப்பாத்தும்.’’ 

அம்மா கதை

''ஆனாலும், இனிமே உங்களை என்னால பார்க்க முடியாதுனு ரொம்ப துயரமா இருக்கு கடவுளே...’’ 

''வருத்தப்படாதே.  உன் தேவதை எப்பவும் என்னைப் பத்தியே உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்; எப்பிடி என்கிட்ட திரும்பி வர்றதுங்கிறதையும் சொல்லித் தரும். அதோட, நானும் உன்கூடவேதானே இருக்கப் போறேன்.’’ 

சொர்க்கத்தில் இப்போது முழு அமைதி. பூமியிலிருந்து குழந்தையை அழைப்பதற்கான குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. 

''நன்றி கடவுளே. நான் கிளம்பவேண்டிய நேரம் வந்துடுச்சு. தேவதை, தேவதைனு சொன்னீங்களே... அதோட பேர் என்ன?’’ 

''அதோட பேர் முக்கியமில்லை. உனக்குக் கூப்பிடணும்னு தோணிச்சுன்னா, இப்பிடிக் கூப்பிடு... 'அம்மா..!’ ’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: 29.04.18

 
29CHLRDFAWCETT

இங்கிலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்ட புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் மில்லிசென்ட் ஃபாவ்செட்டின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பெண் தலைவர் ஒருவரின் நினைவாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்ட முதல் சிலை இது.

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

29chlrdiit

சென்னை ஐஐடியில் நண்பர் ஒருவருடன் இருந்த மாணவியைத் தவறான கண்ணோட்டத்தில் ஒளிப்படம் எடுத்த தொழில்நுட்ப ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்வாக அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நபர் எடுத்த ஒளிப்படம் அழிக்கப்பட்டது.

29CHLRDNABITAJIMA

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117 வயதான நபி தச்மா உடல்நல குறைவு காரணமாகச் சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இவர் உலகின் அதிக வயதுடைய பெண்மணியாகக் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தார்.

29CHLRDJAPAN
0be58e3e

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாக்குச்சாவடி அருகே ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த திங்கள்கிழமை நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

0be53265

ஆசிய படகுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட பாய்மரப் படகு தேர்வுப் போட்டியில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள போபால் தேசிய பாய்மரப் படகு பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த ஏக்தா யாதவ், ஷைலா சார்லஸ் இருவரும் முதலிடத்தைப் பிடித்தனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இந்தியாவில் இக்காலத்திலும் தொடரும் புறாவிடு தூது

 
 
qa_24042018_SPP.jpg

நவீன தொடர்புசாதனங்கள் செயலிழந்து போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை

புறாவின் கால்களில் கடிதங்களைக் கட்டி அனுப்பும் அஞ்சல் சேவை உலகிலேயே இப்போது இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் மட்டும்தான் தொடர்கிறது. ஒடிசா பொலிஸ்துறையில் இன்னமும் 50 புறாக்களுக்குத் தகுந்த பயிற்சியும், உணவும் அளித்து இதற்காகவே வளர்த்து வருகின்றனர்.

இந்த அரிய, பழங்காலக் கடிதப் போக்குவரத்து சேவையைக் கொண்டாடும் விதத்தில் கடந்த 14-ம் திகதி புவனேஸ்வரத்திலிருந்து கட்டாக் நகருக்கு தகவல்களை அனுப்பினர். 25 கிலோ மீட்டர் தொலைவை 20 நிமிடங்களில் கடந்து, பார்வையாளர்களுக்கு உற்சாகம் ஊட்டின புறாக்கள். கலை, கலாசாரப் பாரம்பரியத்தைக் காப்பதற்கான இந்திய தேசிய அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தகவல் தொழில்நுட்பம் நவீனமடைந்து விட்ட இக்காலத்தில் மின்னஞ்சல் சேவை உள்ளிட்ட எல்லாவித சாதனங்களும் விரல் நுனியில் காரியங்களைச் சாதிப்பதால் 'புறா விடு தூது' பொதுவாக வழக்கொழிந்து விட்டது. இருந்தாலும், ஒடிசா மாநிலத்தில் இந்தப் பாரம்பரியத்தை அறுத்து எறிய மனமில்லாமல் இன்னமும் தொடர்கிறார்கள். பெரிய புயல், சூறாவளி அல்லது அதுபோன்ற இயற்கைப் பேரிடர்களின் போது மின்சாரம் தடைபட்டால் விரைவாகவும் நிச்சயமாகவும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க புறாக்கள்தான் பயன்படுகின்றன.

ஒடிசா பொலிஸ்துறையில் 1946-இல் 200 புறாக்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது. அதற்கும் முன்னால் இந்தப் புறாக்கள் இராணுவத்தின் அஞ்சல் சேவைப் பிரிவில் செயல்பட்டன. இவை யாரோ- யாருக்கோ எழுதிய கடிதங்களைக் கொண்டுபோய்க் கொடுக்காது. ஒரு இராணுவப் பாசறையிலிருந்து இன்னொரு பாசறைக்கோ, தலைமையிடத்துக்கோ அனுப்பும் இரகசியச் செய்திகளை வழி மாறாமல் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

இப்போதும் பொலிஸ் துறையினர் தங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இதை அடையாளத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

வாகனங்களால் போக முடியாத வழிகளில் கூட இவை பறந்து செல்லும்.

முதலில் கோராபுட் மாவட்டத்தில்தான் இச்சேவை தொடங்கியது. பெல்ஜியம் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு பிறகு உள்நாட்டு இனங்களுடன் கலப்பினமாக்கப்பட்ட 700 புறாக்கள் இச்சேவையில் பயிற்சி பெற்றன. எளிதில் அணுக முடியாத தொலைதூரத்தில் இருந்த காவல் நிலையங்களுக்குத் தகவல் அனுப்ப இவைதான் பெரிதும் பயன்பட்டன.

1999-இல் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும் புயல் வந்த போதும் இந்தப் புறாக்கள் மிகவும் துடிப்பாகச் செயல்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் தகவல் தொடர்பு கோபுரங்கள் செயலிழந்ததாலும் ஏற்பட்ட தகவல் தொடர்பு இடைவெளியைப் புறா படைதான் இட்டு நிரப்பியது.

1982-இல் பங்கி என்ற சிறு நகரம் வெள்ளத்தால் சூழப்பட்ட போது அங்கிருந்த நிலைமையைக் காவல் துறை மூலம் பெற்று வர இந்தப் புறாக்கள்தான் அனுப்பப்பட்டன. இந்தப் புறாக்கள் வெறும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் தூது வேலையைத்தான் செய்தன என்று நினைக்க வேண்டாம்.

சில குற்றவாளிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து கண்காணித்து பிடித்தும் கொடுத்துள்ளன! 

http://www.thinakaran.lk

  • தொடங்கியவர்
17 hours ago, suvy said:

நீங்கள் ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்....! இன்றைய யந்திர வாழ்க்கையில் சாதாரண வேலை செய்ப்பவர்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு மணித்தியாலம் கூட ஒதுக்க முடிவதில்லை.இவர்கள் பிரபலங்கள் என்பதற்கும் அப்பால் ஒரு பெற்றோராக தமது பிள்ளைக்கு நேரத்தை செலவிடுகின்றார்கள்.இவ்வளவுக்கும் அவர்களது நிமிடங்கள் லட்ஷம் பெறுமதியானவை. ஏனைய பெற்றோர்களும் இதை முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.எனக்கும் அதுதான் ஆசை.ஆனால் டூ லேட் .....! tw_blush:

 

  • தொடங்கியவர்

43 வயதில் மறைந்த உலகின் வயதான சிலந்தி! - சோகத்தில் ஆழ்ந்த சூழலியல் ஆர்வலர்கள்

 

உலகின் வயதான சிலந்தி என்று அறியப்பட்ட 'நம்பர் - 16' சிலந்தி ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

spider_18189.jpg

மேற்கு ஆஸ்திரேலியாவின், மத்திய வீட் பெல்ட் பகுதியில் 1974-ம் ஆண்டு, மிகப்பெரிய சிலந்தி பூச்சி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிலந்திக்கு 'நம்பர் 16' என விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். இதை ஆய்வகத்துக்குக் கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். முதற்கட்ட ஆய்வில், இது வைல்டு டிராப்டோர் வகையைச் சேர்ந்த சிலந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, வைல்டு டிராப்டோர் வகை சிலந்திப் பூச்சிகள் அடர்ந்த காடுகளில் வளரக்கூடியவை.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்காக்களிலும் வளர்ந்த மரங்களிலும் பரவலாகக் காணமுடிந்தது. எனவே, டிராப்டோர் வகை சிலந்திகளின் குணநலன்களை ஆய்வு செய்வதற்காக நம்பர் - 16 பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் பூச்சி ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன் அளித்தது. இந்நிலையில், தன்னுடைய 43வது வயதில் டிராப்டோர் வகை சிலந்தி மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகப் பூச்சியல் துறை ஆய்வாளர் ஒருவர்,  'வழக்கமாக டிராப்டோர் வகை சிலந்திகள் 5 முதல் 20 ஆண்டுகள் வரைதான் உயிர் வாழும். ஆனால், நம்பர் - 16ஐ ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்து வளர்த்ததால் 43 வயது வரை வாழ்ந்திருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் பதிவுசெய்யப்பட்ட சிலந்திப் பூச்சிகளில் மெக்சிகோ நாட்டின் டிரான்டுலா என்னும் சிலந்திதான் நீண்ட நாள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்பட்டது. அந்தச் சாதனையை நம்பர் - 16 முறியடித்து, உலகின் மிகவும் வயதான சிலந்தி என்ற பெயரைப் பெற்றது' என நெகிழ்ந்தார். 

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

எத்தனை பிரபலயங்களுக்கு பிள்ளை பிறக்குது...தோனியின் பிள்ளை தான் உலகத்தில் இல்லாத பிள்ளை மாதிரி ?

 

 

 

23 hours ago, suvy said:

நீங்கள் ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்....! இன்றைய யந்திர வாழ்க்கையில் சாதாரண வேலை செய்ப்பவர்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு மணித்தியாலம் கூட ஒதுக்க முடிவதில்லை.இவர்கள் பிரபலங்கள் என்பதற்கும் அப்பால் ஒரு பெற்றோராக தமது பிள்ளைக்கு நேரத்தை செலவிடுகின்றார்கள்.இவ்வளவுக்கும் அவர்களது நிமிடங்கள் லட்ஷம் பெறுமதியானவை. ஏனைய பெற்றோர்களும் இதை முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.எனக்கும் அதுதான் ஆசை.ஆனால் டூ லேட் .....! tw_blush:

மன்னிக்க வேண்டும் அண்ணா...என்னைப் பொறுத்த வரைக்கும் இவர்கள் இதை பப்பிளிசிட்டிக்காட்க தான் செய்கிறார்கள்...இவர்களை  விட பிரபல்யமான பிரபலயங்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளோடு நேரம் செலவழிக்காமாலா இருக்கிறார்கள் ?...அதை எந்த நேரமும் பப்பிளிக் பண்ணிக்க கொண்டா இருக்கிறார்கள்?...தோனியின் மனிசி வீட்டில தான் இருக்கிற ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தைப் பற்றி கதைக்கிறம். இதில் மன்னிப்பு எல்லாம் எதற்காக சகோதரி.....!  tw_blush:

  • தொடங்கியவர்
தாங்கிக் கொள்ள மனம் இருந்தால்…
 

image_6fe8d39c32.jpgஎங்களுக்கு யாராவது தேவையற்ற விதத்தில் அளவுக்கு மீறி, இல்லாதவை பொல்லாதவைகளைச் சொன்னால், நாங்கள் அவர்களிடத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும். காரியம்பெறச் சிலர் தேவையின்றி, பொய்யான புகழ் உரைகளைப் பொழிவார்கள். நல்ல நோக்கத்துக்காக இன்றிச் சுயநலம் மேலிட சிலர் எதுவுமே செய்யலாம். 

ஆனால், வெளிப்படையாகவே உதவி கோருவதில் தவறு ஒன்றும் கிடையாது. தகைமைகள் உள்ளவர்கள் முகஸ்துதிக்கோ அல்லது காரணமின்றிப் புகழப்படுவதையோ விரும்பமாட்டார்கள். 

யாராவது கூச்ச மிகுதியால், வார்த்தைகள் வெளியே வராமல்த் திணறினால், நீங்களே வலிந்து கேட்டுத் தேவையானவற்றை இயன்றளவு செய்து கொடுத்தல் சிறப்பாகும். 

பலகரங்களால் தூக்கி நிறுத்தப்படுவதே, இந்த உலகம். இந்தக் கரங்களுடன் உங்கள் கரங்களும் இணைந்து கொள்ளட்டும். 

இப்படி இணைவதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுகூட, எமக்குப் பெருமைதான். தாங்கிக் கொள்ள மனம் இருந்தால் மலையும் சிறுதுரும்புதான்.

  • தொடங்கியவர்

புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930

 
அ-அ+

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-ல் கணிக்கப்பட்டு 1930-ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.

 
 
 
 
புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930
 
புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-ல் கணிக்கப்பட்டு 1930-ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.

நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

1930-ம் ஆண்டு மே 1-ந்தே புளூட்டோ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 

 

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அஜித்... வெற்றியோ தோல்வியோ... மனங்கவர் கலைஞன்! #HBDAjith

 
 

பள்ளிப் பருவத்தை பாதியிலேயே இழந்த சிறுவன்... பைக்கின் மீது உள்ள தீராக் காதலால் மெக்கானிக்கான இளைஞன்... சினிமாவின் மீதுள்ள ஈர்ப்பினால் விடாமுயற்சியோடு போராடி, தற்போது 'தல' என்ற செல்லப் பெயரோடு கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் கலைஞன்... இளைய தளபதியின் மதிப்பிற்குரிய போட்டியாளன்... இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், 'மை டியர் தல' அஜித்குமார். பிள்ளையார் சுழியாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, கட்டுரைக்குள் போவோம்.  

அஜித்தின் ஆரம்பகாலம்...

அஜித் குமார்

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பைக் ஷெட்டில் மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்தார், அஜித். காரணம், பைக், கார் ரேஸின் மேல் உள்ள அதீதக் காதல். அது, ஆங்காங்கே நடக்கும் பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ள வைத்தது. பணம் தேவைப்பட்டதால், சின்னச் சின்ன விளம்பரங்களில் நடித்து, அதில் வரும் வருமானத்தை வைத்துப் பந்தயங்களில் கலந்துகொண்டார். அந்த சமயத்தில்தான், அவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது. 'என் வீடு என் கணவர்' படத்தில் சிறு வேடத்தில் நடித்து, திரையுலகில் ஆரவாரமின்றி தன் கால்களைப் பதித்தார், அஜித். அதற்குப் பின் 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்குப் படத்தில் ஹீரோவானார். எதிர்பாராத விதமாக அந்தப் படத்தின் இயக்குநர், படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தினால் இறந்துவிட, அவரது தந்தையால் அந்தப் படம் இயக்கப்பட்டது. 

அந்தப் படத்தை முடித்தபின், மீண்டும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் நடித்துக்கொண்டே, தன் லேட்டஸ்ட் புகைப்படங்களைக் கையில் வைத்துக்கொண்டு சினிமா துறையில் வேலை செய்யும் அனைவரிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்துகொண்டிருந்தார். வேட்டி விளம்பரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது, சுரேஷ் சந்திரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அஜித், அவரது புகைப்படங்களைக் கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். அவர்தான் அஜித்தின் இன்றைய மேனேஜர். அப்போது, 'அமராவதி' படத்தின் ஹீரோவாக நடிக்க வேறொருவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் செல்வாவிடம், அஜித்தின் புகைப்படங்களைக் காட்டியிருக்கிறார், சுரேஷ் சந்திரா. 'இந்தப் பையனைத்தான் நாங்களும் தேடிட்டு இருந்தோம், வரச் சொல்லுங்க' எனச் சொல்லி, அஜித்தை அமராவதியுடன் ஜோடி சேர்த்தார், செல்வா. அந்தப் படத்தில் அஜித்துக்குக் குரல் கொடுத்தவர், விக்ரம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, ரிலீஸ் ஆகத் தயார் நிலையில் இருந்தது. 

அந்த முதல் சந்திப்பு...

விஜய் - அஜித்

தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸைப் பார்க்க, அஜித், செல்வா, ஒளிப்பதிவாளர் இமயவரம்பன் உள்பட பலர்,  வடபழனி கமலா தியேட்டருக்கு வெளியே பைக்கில் நின்றுகொண்டிருந்தனர். குழந்தை நட்சத்திரமாக நடித்து, முதல் முறையாக 'நாளைய தீர்ப்பு' எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார், ஒரு புதுமுக நடிகர். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர்தான் இவர்களுடன் இருந்த இமயவரம்பன். அங்கு நின்றுகொண்டிருந்த அவரிடம், 'ஹாய்' என்று கை காட்டியிருக்கிறார், அந்தப் புதுமுக நடிகர். அப்போது அங்கிருப்பவர்கள் அனைவரோடும் சேர்த்து அஜித்துக்கும் அவரை அறிமுகம் செய்துவைக்கிறார், இமயவரம்பன். 'அஜித்... இவர்தான் விஜய். விஜய்... இவர்தான் அஜித்' என்கிறார். அஜித்துக்கு அதுதான் முதல் படம் என்பதால், 'ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்' என்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இப்படித்தான் இவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தை கேள்விப்படும்போது 'புயலுக்கு முன் அமைதி' என்ற பழமொழிதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 

சினிமா குழப்பம்...

அஜித் குமார்

'அமராவதி' படத்திற்குப் பிறகு 'பாச மலர்கள்' படத்தில் கேரக்டர் ரோலுக்கான சான்ஸ், அஜித்தைத் தேடிவந்தது. 'பைக் ரேஸில் கலந்துகொள்ள காசு வேண்டும்' என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு, மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட காலகட்டம் அது. இந்தப் படத்திலும் விக்ரம்தான் அஜித்துக்குக் குரல் கொடுத்தார். பைக் ரேஸில் நடந்த விபத்து ஒன்றில் அஜித் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். 'பவித்ரா' படத்தில் அஜித்துக்கு ஆபரேஷன் முடிந்து படுக்கையில் இருக்கும் கதாபாத்திரம். 'நிஜத்திலே அப்படித்தானே இருக்கோம், இதையே படத்துல பண்ணுவோம்' என்று நினைத்த அஜித், 'பவித்ரா' படத்தில் நடிக்கக் கமிட்டானார். பின்னர் ஒரு சில மனக் கசப்புகளோடுதான் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் அஜித்தை ஒரு நடிகனாக பார்த்துக்கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் சில டி.வி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அஜித்தைத் தேடி வந்தது. ஆனால், 'சினிமாவுக்கு வந்த பின் எதற்காக மறுபடியும் டி.வி சீரியலில் நடிக்கவேண்டும்' என்ற எண்ணம் அஜித்தின் சினிமா ஆசையை உத்வேகப்படுத்தியது. இப்படித்தான் இவருக்குள் இருந்த குழப்பம், ஆசையாக மாறியது. அது 'ஆசை' படத்திலே நிறைவேறியது. இந்தப் படம்தான் அஜித் என்ற ஒரு நடிகனை திரும்பிப் பார்க்க வைத்தது.  

'அமர்களம்' காதல்...

'அமர்களம்' படத்தில் நடிக்க ஷாலினியிடம் பேசும்போது முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. 'சின்ன வயசுல இருந்து எனக்கு நடிச்சு நடிச்சு திகட்டிருச்சு, நான் படிக்கப்போறேன்', என்று இயக்குநர் சரணிடம் சொல்லியிருக்கிறார். சரண், இதை அஜித்திடம் சொல்ல உடனே ஷாலினிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ஷாலினியின் தோழிகள் அஜித்தின் ரசிகை என்பதால், ஷாலினி நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் ஆரம்பித்தது. தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியை எடுத்துவரும் காட்சியில் ஷாலினியின் கையை கத்தியால் கிழிப்பது போன்ற காட்சி. இதைப் படமாக்கும்போது உண்மையிலேயே ஷாலினியின் கைகள் கிழித்து ரத்தம் வரத் தொடங்கியது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் உறைந்துபோனது. அஜித் உடனடியாக முதலுதவி செய்தார். ஷாலினி இனி இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று அனைவரும் நினைக்க, ஷாலினியின் அப்பா, 'ஷாலுவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டா, படம் கண்டிப்பா ஹிட்' என்று சென்டிமென்ட் வசனத்தைப் பேசியிருக்கிறார்.

அஜித் - ஷாலினி

இப்படி படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த சின்னச் சின்ன விஷயங்கள், அஜித்தின் காதல் செல்களுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஒருநாள் வேகமாக இயக்குநர் சரணிடம் சென்று, 'சரண் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடுங்க. ரொம்பநாள் இந்தப் படத்துல நடிச்சேன்னா ஷாலுவை லவ் பண்ணிடுவேன் போல' எனச் சொல்லியிருக்கிறார். ஷாலினியும் அப்போது பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார். இதைக்கேட்டதும், ஷாலினி வெட்கத்தில் தலை குனிந்துவிட்டார். அங்கேதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் வரும் காதல் காட்சிகளுக்கும் அது உதவியது. அஜித் - ஷாலினியின் காதல்தான், காதலிக்கும் பல ரோமியோ - ஜூலியட்டுகளுக்கு இன்ஸ்பிரேஷன்.

தமிழ் சினிமாவில் உதித்த இரட்டைகள்...

தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல் என ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து பல போட்டியாளர்களைக் கண்டுள்ளது தமிழ்சினிமா. நடிப்பு ஜாம்பவான்களின் ஆதிக்கம், தமிழ்சினிமாவில் தலைதூக்கி இருந்த நேரத்தில் வந்தவர்கள்தான், விஜய் - அஜித். இவர்களைத் தொடர்ந்து தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன், என இரட்டைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், வரிசையில் விஜய், அஜித் இடம்பெற்றது சரி, தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் இடம்பிடிப்பதும் சரி, அது அவ்வளவு சாதரணமான காரியமில்லை. 

இதற்காக இருவரும் தனித்தனியே சந்தித்த இன்னல்களும், இடையூருகளும் ஏராளம். 'நாளைய தீர்ப்பு' படத்தின் தோல்விக்குப் பின், 'இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கவேண்டியிருக்கு' என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்காக மூலையில் முடங்கியிருந்தால், 'இளைய தளபதி' விஜய்யையும் நாம் பார்த்திருக்க முடியாது. பல அறுவை சிகிச்சைகளுக்கு இரையான போதும், தன்னம்பிக்கையைக் கைவிடாமல் ரசிகர்களுக்காகப் படம் நடிக்கும் அஜித்தையும் நாம் பார்த்திருக்க முடியாது. இருவருமே தங்களைத் தானே செதுக்கியவர்கள்தான். 

அஜித்

சிவாஜியும், கமலும் ஒரே வழியில் பயணிப்பவர்கள். அதாவது, அவர்கள் படத்தில் அவர்களையே சாகடிக்கத் தயங்கமாட்டார்கள். 'நாயகன்' என்ற பிம்பத்தை உடைத்து எந்த விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர்கள். அதற்கு நேரெதினாவர்கள்தான், ரஜினியும், எம்.ஜி.ஆரும். அவர்கள் படத்தில் சமூகக் கருத்து, தொழிலாளர் வர்க்கத்திற்குக் குரல் கொடுப்பது, தாய் சொல்லை மதிப்பது என இதுபோன்ற காட்சியமைப்புகள்தான் அதிகமாக இருக்கும். இப்படிக் கதை பார்த்து, களம் பார்த்து படங்கள் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இந்த இருவரும் காதல் நாயகர்களாகக் களமிறங்கினார்கள். ஆம், இவர்கள் ஆரம்ப காலத்தில் அனைத்துப் படங்களும் காதல் கதைகொண்ட படங்கள்தான். அஜித் 'காதல் மன்னனாக' ஆட்சி செய்ய நினைத்தால், விஜய் 'காதலுக்கு மரியாதை' கொடுத்துக்கொண்டிருப்பார். அஜித் 'அவள் வருவாளா' என்று காத்துக்கொண்டிருந்தால், விஜய் 'துள்ளாத மனதை வைத்துத் துள்ளி'க்கொண்டிருப்பார். இப்படி இருக்கும்போது, 'மாஸ்' என்ற வட்டத்திற்குள் இருவரும் சுருங்கியது எப்போது?

ரசிகர்கள் சண்டை...

அஜித், அவரது 30-வது படமாக, 'தக்‌ஷத்' என்ற இந்திப் படத்தின் ரீ-மேக்கில் நடிப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் படம் டிராப் ஆனது. அந்த சமயத்தில் அஜித்துக்கு ஒரு இயக்குநரின் ஞாபகம் வருகிறது. அவரை அழைத்து, 'நீங்கதானே தம்பி எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டன்ட். 'வாலி' பட ஸ்பாட்ல பார்த்திருக்கேன். ஏதாவது கதை வெச்சுருக்கீங்களா?' எனக் கேட்டுள்ளார். 'தங்கையின் காதலனைக் கொல்லத்துடிக்கும் அண்ணன். கொடுத்த சத்தியத்துக்காக தங்கையின் காதலனைக் காப்பாற்றப் போராடும் வளர்ப்பு அண்ணன்' என படத்தின் ஒன்லைனை சொல்லியிருக்கிறார், அந்த அறிமுக இயக்குநர். அவர்தான், இன்றைய வெற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் பெயர் 'தீனா'. அந்தப் படத்தின் மூலம்தான் மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார், அஜித். இவ்வளவும் நடந்தது 2001-ல். அடுத்த ஒரு வருடத்தில் 'திருமலை' படத்தின் மூலம் மாஸாக மாறினார், விஜய். இப்படித்தான் இருவரும் மாஸ் என்ற வட்டத்திற்குள் வந்தார்கள். இதுக்குத் தகுந்த மாதிரி ரசிகர்கள் சண்டையும் ஆரம்பித்தது. 

அஜித்தை ஏன் பிடிக்கும்?

அஜித்

எந்த விழாக்களிலும் கலந்துகொள்வது இல்லை, சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. ரசிகர் மன்றங்களையும் வேண்டாமென ஒதுக்கித் தள்ளியவர், யார் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் அவரைப் பார்க்க முடியாது, பேட்டிகள் கொடுக்கமாட்டார், தொடர் தோல்வியடைந்த பின்னும், ஒரே இயக்குநருடன் படம் பண்ணுபவர்... இப்படிப் பல விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும், அஜித்தை ஏன் பிடிக்கிறது? என்று அஜித் ரசிகர்களிடம் கேட்டால் அவர்களது பதில், 'அஜித் மிகவும் தன்னம்பிக்கையானவர்', 'எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்தவர்', 'விளம்பரங்களை விரும்பாதவர்', 'வெறித்தனமாக கார், பைக் ஓட்டுவார்' எனத் திரைக்கு வெளியில் அவருக்கு இருக்கும் பிம்பங்களை வைத்துதான் அவருக்கு ரசிகனாக இருக்கிறார்கள். ஆகச்சிறந்த ஒரு கலைஞனின் திறனே சிறப்பாக நடிப்பதுதானே என்று கேட்டால், அது எதுவும் அஜித்திடம் எடுபடாது. 'திரையில் உங்களைப் பார்த்தாலே போதும்' என்ற மனநிலையில்தான் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் சார்பாக உங்களிடம் (அஜித்திடம்) ஒரு கோரிக்கை...

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். உங்களை எந்தப் பொது விழாக்களிலும் நாங்கள் பார்க்க வேண்டாம், பேட்டியும் கொடுக்க வேண்டாம். எந்த சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டாம், சமூக வலைதளங்களில் வைரலாகும் உங்களது புகைப்படமே எங்களுக்குப் போதும். எந்த பெரிய இயக்குநர்களுடனும் நீங்கள் படம் பண்ண வேண்டாம். என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அனைவரும் கலாய்த்தாலும் பரவாயில்லை. படம் பண்ணுங்க, உங்களை ஸ்க்ரீன்ல பார்த்தாலே போதும்!

பிறந்தநாள் வாழ்த்துகள் தல!

 

 

https://cinema.vikatan.com

Bild könnte enthalten: 17 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 01
 
 

image_5e2f1703e1.jpg1884: ஐக்கிய அமெரிக்காவில், எட்டு மணிநேர வேலைநாள் வேண்டி, பொது அறிவிப்பு வெளியானது.

1886: ஐக்கிய அமெரிக்காவில் 8 மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி, வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள், பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1900: ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

1915: லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள், அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில், 1,198 பேர் உயிரிழந்தனர்.

1925: சீனாவில் அனைத்துச் சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று, 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929: ஈரான் – துருக்மெனிஸ்தான் எல்லையை, 7.2 ரிச்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.

1944: இரண்டாம் உலகப் போர் - 200 கம்யூனிசக் கைதிகள், ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸும் அவரது மனைவி மேக்டா பியூரரும், பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்துகொண்டனர். இவர்களது பிள்ளைகளும், தாயினால் சயனைட் பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து, ஜேர்மனியின் தெம்மின் என்ற இடத்தில், 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர்.

1946: மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பாரா என்ற இடத்தில், அவுஸ்திரேலியப் பழங்குடிகள், மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 3 ஆண்டுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1950: குவாம் - ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

1956: யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி, பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1956: மினமாட்டா என்ற கொள்ளை நோய், அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1960: குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

1961: கியூபாவை, சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1977: தொழிலாளர் நாள் நிகழ்வின் போது, துருக்கியின் இஸ்தான்புல் நகரில், 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978: ஜப்பானியர் நவோமி யூமுரா, தன்னந்தனியாக வடமுனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

1987: இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண் மதகுரு ஈடித் ஸ்டெயின், பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1989: இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து, விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993: இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த போது,  மனிதக் குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். டிங்கிரி பண்டா விஜயதுங்க, ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004: சைப்பிரஸ், செக் குடியரசு, எசுத்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2009: சமப்பால் திருமணம், சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011: பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - அல் கொய்தா தலைவர் உசாமா பின் லாடன், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.tamilmirror.lk/

மே தினம் – உலகத் தொழிலாளர் தினம்

வரலாற்றில் இன்று….

மே 01

நிகழ்வுகள்

1328 – ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1707 – இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.
1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
1851 – லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1891 – பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.
1898 – அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.
1900 – ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1915 – ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
1930 – புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1931 – நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
1940 – கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.
1945 – சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.
1946 – மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1948 – கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.
1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.
1956 – இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 – மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.
1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1977 – தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
1978 – ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.
1987 – இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.
1989 – இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.
1993 – இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
2004 – சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2006 – புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.
2011 – அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால் பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புக்கள்

1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (இ. 1985)
1919 – மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2013)
1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர்
1971 – அஜித் குமார், தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)
1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (பி. 1924)
2011 -அலெக்ஸ், திரைப்பட நடிகர், மாஜிக் நிபுணர்
2011- உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)

சிறப்பு நாள்mayday-200x125.jpg

மே தினம் – உலகத் தொழிலாளர் தினம்
இத்தாலி – தேசிய நாள் (Giorno dei Lavoratori)
செக் குடியரசு – தேசிய காதல் நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்

மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்வில் மறக்க முடியாத கணவனின் வாழ்த்து – ஒவ்வொரு கணவரும் உணர வேண்டிய உண்மை

திருமணத்திற்குப் பின் நடிகை அனுஷ்கா சர்மா , கணவர் விராட் கோஹ்லியுடன் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

gtgtgt-367x400.jpg

அதில் அனுஷ்காவுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்பே….நீ மிகவும் நேர்மையானவள், நேர்மையான எண்ணங்களை கொண்டவள் என்பது எனக்கு தெரியும். ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

Bild könnte enthalten: 1 Person, Himmel, Wolken, Nahaufnahme und Text

பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாள்.
திறமையான நடிகை என்பதோடு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியின் அன்பு மனைவி என்பதால் மேலும் பிரபலம் பெற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்
Happy Birthday Anushka Sharma

  • தொடங்கியவர்

 

ரஜினி நடித்த காலா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியானது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.