Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பழைய பட்டுச் சேலையில், ட்ரெண்டி பியூட்டி ஆடைகளை உருவாக்கலாம்!

 
 

டைகளுக்கும் பெண்களுக்குமான காதல், புரியவைக்க முடியாததது. ``நம்மிடம் எத்தனை ஆடைகள் இருந்தாலும். ஒவ்வொரு முறை கடைக்குச் சென்று புத்தம் புது ஆடைகளைப் பார்க்கும்போதும், `அட இது நல்லா இருக்கே... வாங்கலாமே' என்றுதான் தோன்றும். அந்த வகையில், பட்டுப்புடவையைக்கூட இண்டோ வெஸ்டர்ன் ஆடையாக மாற்றமுடியும்'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர், கல்பனா ஜானு. அதற்கான அசத்தல் வழிகளையும் சொல்கிறார்.

``பொதுவாக, கல்லூரி செல்லும் பெண்கள், மாடர்ன் ஆடைகளைத்தாம் அதிகம் விரும்புவார்கள். அவர்களிடம் புடவை என்ற சொல்லே எடுபடாது. அதுவும் பட்டுப்புடவை சுத்தமாக எடுபடாது. சரி, பட்டுப்புடவையிலேயே நாம் விரும்பும் ட்ரெண்டி ஆடைகளைச் செய்ய முடியுமா என்றால், நிச்சயம் முடியும்.

சேலை

பொதுவாக, கொஞ்சம் ஒல்லியா இருக்கும் பெண்கள் தங்களுக்கு டிரெடிஷனல் ஆடைகள் சூட் ஆகாது என நினைப்பார்கள். அவர்களுக்கு இண்டோ வெஸ்டர்ன் நன்றாகப் பொருந்தும். இந்த இண்டோ வெஸ்டர்னை பொறுத்தவரை, டஸ்கி, ஃபேர் என்று எல்லா வகை நிறத்தவர்களுக்கும் சூட் ஆகும்.

உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு பட்டுப்புடவையை மிக்ஸ் மேட்ச் செய்தால், ஒரு இண்டோ வெஸ்டர்ன் ஆடை ரெடி. ஒரு புடவையில் ஒரு இண்டோ வெஸ்டர்ன் ஆடைக்கான ஸ்கர்ட் அல்லது டாப் தைத்துவிட்டு, மற்றுமொரு கான்ட்ராஸ்டான நிறமுள்ள புடவையில் நீங்கள் தைத்த ஸ்கர்ட் அல்லது டாப்ஸ்க்கு மேட்ச் டிரஸ் தயாரித்துக்கொள்ளலாம். ஒரு இண்டோ வெஸ்டர்ன் டிரஸுக்கு இரண்டு புடவைகளைச் செலவழிக்க வேண்டுமா என நினைப்பவர்கள், ஸ்கர்ட் அல்லது மாக்ஸி பேன்ட் மட்டும் பட்டுப்புடவையில் தைத்துவிட்டு, மேட்சிங்கை ரெடிமேடாகக் கடைகளில் எடுத்துக்கொள்ளலாம். அம்மா மற்றும் குழந்தை இருவரும் ஒரே மாதிரியாக அணிய வேண்டும் என விருப்பமுள்ளவர்கள், ஒரு புடவையில் குழந்தைக்கும் தனக்கும் ஸ்கர்ட் மட்டும் தைத்துக்கொள்ளலாம்.

உயரமானவர்களுக்கு:

 நடுவில் ஸ்லிட் வைத்த லாங் குர்தா (Slit Long Kurta), அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்திலான லாங் ஸ்கர்ட் அணிந்தால், நீட் லுக் கிடைக்கும். அல்லது, அடர் நிறத்தில் கிராப் டாப் (Crop Top) அணிந்து, லாங் அம்பர்லா கட் ஸ்கர்ட் அணியலாம்.

பட்டு சேலை

நடுத்தர உயரம் உடையவர்களுக்கு:

 குர்தாவின் இருபுறமும் ஸ்லிட் வைத்த சில்க் காட்டன் குர்தா அணிந்து, அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பலாஸோ பேன்ட் பர்ஃபக்ட் மேட்ச். 

டிரண்டி ஆடை

உயரம் குறைந்தவர்களுக்கு:

கழுத்துக்குக் கீழும் ப்ளீட்ஸ் வரும் இடத்திலும், ஃப்ரில் வருவதுபோன்ற லாங் கவுனை வடிவமைத்துக்கொள்ளலாம். இதில், ஃப்ரில்லும், ஆடையில் உள்ள மற்ற பகுதியும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது உங்களை அழகாகக் காட்டும்.

பட்டு சேலை

அணிகலன்கள் :

பொதுவாக, இண்டோ வெஸ்டர்ன் ஆடைகளுக்கு அதிகப்படியான அணிகலன்கள் கூடாது. எளிமையான அணிகலன்களைத் தேர்வுசெய்து அணியுங்கள். சாண்ட்பாலி (Chandbali) வளையல், தட்டையான காலணிகள் எனச் சாதாரண அணிகலன்களே மேட்சாக இருக்கும்.

பட்டு

இண்டோ வெஸ்டர்னில் இது புதுசு:

ஹை நெக் பிளவுஸ், ஸ்லிட் டைப் புடவை, கான்ட்ராஸ்ட் நிறத்தில் லெகிங்க்ஸ் அல்லது டைட் பேன்ட் அணிவது, புது ஸ்டைல். கூடவே, ஷூ அணிந்தால் ரிச் லுக் தரும். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, சோனம் கபூரில் ஆரம்பித்து, பலரும் இந்த வகையான சேலையிலேயே வலம்வருகிறார்கள்.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பேசும் படம்: வயலும் வாழ்வும் YouTube

 
pesum%202

பிரச்சினை எல்லாம் என்றுதான் தீருமோ சாமி.

 

pesum%203

வயல்வெளிக்கு மத்தியில் டிராக்டர் பயணம்.

       
 
pesum%204

விவசாயியின் இளைப்பாறல்.

 

 

pesum%205

நிஜக் காளைகள்.

 
pesum%206

பழசும் புதுசும்

pesum%207

இது வானம் பார்த்த பூமி அல்ல.

  • தொடங்கியவர்

`கார்ல், என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக..!' மார்க்ஸின் அன்புத் துணை ஜென்னி #KarlMarx200

 

கார்ல் மார்க்ஸ்

`உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஓர் இயக்கம்' - என்று சொல்லும் கார்ல் மார்க்ஸ், தன் சிந்தனையை முழுமையாக உழைப்பாளிகளின் உயர்வுக்காகப் பயன்படுத்தியவர். மிகச் சிறந்த தத்துவ ஆளுமை என்பது அதுவரை நிலவிய கோட்பாடுகளைத் தகர்த்து, புதிய ஒன்றைப் படைப்பது மட்டுமே அல்ல. அப்படி உருவாக்கும் கோட்பாடு உலகம் தழுவிய எளிய மனிதர்களுக்குப் பயன் தரும் விதத்திலும் அறிவியல் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதே அவரைத் தன்னிகரற்ற தத்துவ ஆசான் என இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளும். அதனால்தான் கார்ல் மார்க்ஸை உழைக்கும் மக்கள் நூற்றாண்டைக் கடந்தும் கொண்டாடி வருகிறார்கள். இன்று அவரது 200-வது பிறந்த நாள். 

`மூலதனம்' எனும் சமூக விஞ்ஞான நூலை இவ்வுலகிற்குக் கொடையாக அளித்திருக்கும் கார்ல் மார்க்ஸின் பெரும் பலமாகத் துணையிருந்தது அவரின் அன்புத் துணை ஜென்னி மார்க்ஸ். ஜென்னி, மார்க்ஸ் இவர்களின் குடும்பங்கள் நெருங்கிய நட்புகொண்டவை. அதனால் சிறு வயது முதலே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். தன்னை விட நான்கு வயது மூத்தவரான ஜென்னி மீது அளவற்ற காதல் கொண்டார் மார்க்ஸ். அந்தக் காதல் ஜென்னிக்கும் தொற்றிக்கொண்டது.

தனக்கு மிக விருப்பமான சட்டப் படிப்பைக் கற்க டிரியர் நகருக்குக் கார்ல் மார்க்ஸ் அரை மனத்தோடு சென்றார் காரணம் ஜென்னியை விட்டு பிரிந்துசெல்ல வேண்டும் என்பதே. ஏராளமான கடிதங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஜென்னி, தன் வீட்டுக்குத் தெரியாமல் கடிதப் போக்குவரத்தில் ஈடுபடுகிறார். அதற்காகப் பல சிரமங்களைச் சந்திக்கிறார். இது கார்ல் மார்க்ஸின் தந்தைக்கும் தெரிய வருகிறது. இது குறித்து, தன் மகனுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், ``அவள் உனக்காக விலை மதிக்க முடியாத தியாகத்தைச் செய்து வருகிறாள்" என்று குறிப்பிடுகிறார். 

கார்ல் மார்க்ஸ்

ஜென்னியின் கடிதங்கள் வரும் நாளே மார்க்ஸூக்கு மகிழ்ச்சியான நாள். அப்படி வராத நாள்களில் அவர் தன்னிலை இழந்துவிடுகிறார். சோகமுறுகிறார்; கோபமுறுகிறார். இவற்றுக்கு ஒரே மருந்து ஜென்னியின் காதலும் அதைச் சுமந்து வரும் கடித வரிகளும்தாம். அந்தச் சூழலில், `என் அன்பிற்குரிய ஒரே ஒருவனே...' எனத் தொடங்கி அவர் எழுதிய கடிதமொன்றில் சில வரிகள்...

"அன்பே! நீ எவ்வாறு என்னைக் காண்கிறாய் என்பது உனக்குத் தெரியாது! எத்தகைய விநோதமான உணர்வை நான் பெற்றேன் என்பதை நான் உண்மையில் உனக்கு விவரிக்க இயலாது. உன்னுடன் இறுதியாக நான் சேர்ந்து, உன்னுடைய சின்னஞ்சிறு மனைவி என்று நீ என்னை அழைக்கும்பொழுது அது எவ்வளவு நேர்த்தியாக இருக்க முடியுமென்பதை எனக்கு நான் சிந்தித்துக்கொள்கிறேன்... அன்பான கார்ல்! என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக... இந்த விநோதமான சின்னஞ்சிறிய அன்பிற்குரியவள் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறாள்." என்று நேசம் ததும்பும் உணர்வினைப் பகிர்ந்துகொள்கிறார். 

1843, ம் ஆண்டு கார்ல் மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் திருமணம் நடைபெறுகிறது. போதுமான வருமானம் இல்லாததால் இருவரும் எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம். பத்திரிகைகளில் எழுதுவதும் பத்திரிகை தொடங்குவதுமே மார்க்ஸின் பணிகளாக இருந்ததால், வறுமை நிரந்தரமாக அவர்களின் வீட்டில் குடிகொண்டது. ஆயினும், ஜென்னி சோர்ந்துவிடாமல் எதிர்கொண்டார். இருவருக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு `ஜென்னி' என்றே பெயர் வைத்தார் மார்க்ஸ். அந்தளவு ஜென்னி மீது காதல் கொண்டிருந்தார்.

கார்ல் மார்க்ஸ்

பல சமயங்களில் எதிர்பாராத விஷயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1845 ம் ஆண்டு, கார்ல் மார்க்ஸின் எழுத்துகளால், அதிருப்தியான அரசு குடும்பத்துடன் இவர்களை வெளியேறச் சொன்னது. அதுகுறித்து ஜென்னி,  ``கார்ல் மார்க்ஸ் பாரீசை விட்டு 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்கள். எனக்குச் சற்று அவகாசம் கொடுத்தார்கள். அதைப் பயன்படுத்தி, மேஜை, நாற்காலி முதலியவற்றை விற்று பயணத்துக்கான பணத்தைத் தேடினேன்' எனக் குறிப்பிடுகிறார். இந்தளவுக்கு மார்க்ஸ் பணிகளுக்கு உதவிகரமாக இருந்தார் ஜென்னி. இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்தது மூவர்தான். மீதம் வறுமை பலி கொண்டது. 

வாழ்நாள் முழுவதும் வறுமையின் பிடியில் இருக்க நேர்ந்தாலும் மார்க்ஸை இயங்க வைப்பதில் தனது பெரும் பங்கைச் செலுத்தியவர் ஜென்னி. 1881 ம் ஆண்டின் டிசம்பரில் புற்றுநோயின் கொடூரப் பிடியால் ஜென்னி இறந்துவிடுகிறார். அவரின் இழப்பு தாங்கவே முடியாத சோகத்தை மார்க்ஸுக்கு அளிக்கிறது. பதினைந்து மாதங்கள் கழித்து கார்ல் மார்க்ஸூம் இறந்துவிடுகிறார். காலம் கடந்து நிற்பது மார்க்ஸின் சிந்தனை மட்டுமல்ல, ஜென்னியின் காதலும்தான். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

''கால்களைதான் இழந்தும் காக்கிச்சட்டை மீதான காதலை அல்ல''

பஞ்சாப்பை சேர்ந்த ராம் தயால் எனும் போலீஸ் அதிகாரி, ஒரு சாலை விபத்தில் தனது கால்களை இழந்துவிட்டார். அத்துடன் கையில் ஏழு முறிவுகள் ஏற்பட்டன. தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், பல நாட்கள் கோமா நிலையில் இருந்தார். ஆனால், இவ்வளவு துயரங்கள் வந்தபோதிலும், காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றுவதை அவர் நிறுத்தவில்லை.

  • தொடங்கியவர்

காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி..!

 
 

றுப்பு வெள்ளை திரைப்படங்கள் மெள்ள மெள்ள மக்களின் மனங்களை ஆக்கிரமித்து, கொட்டகைக்குக் கூட்டம் கூட்டமாக ஈர்த்த காலம் அது. வெள்ளை ஸ்கிரீனில் அவரது முகத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரண்டு வருவார்கள். அவர்தான் அந்தக் காலத்து லேடி சூப்பர் ஸ்டார், டி.ஆர்.ராஜகுமாரி.

ராஜகுமாரி

ராஜகுமாரியின் இயற்பெயர் ராஜலட்சுமி (ராஜாயி என்று அழைப்பர்). தஞ்சாவூரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஏழ்மையான குடும்பம். தாயார் ரங்கநாயகி புகழ்பெற்ற இசை மேதை. இவருடைய பாட்டி குஜலாம்பாளும் சிறந்த இசை மேதை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாட்டிக்கும், அம்மாவுக்கும் இவரைப் பெரிய இசைக்கலைஞராக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்..! 

குடும்பச் சூழல் ராஜாயியை சினிமா என்னும் பிரமாண்டத்துக்குள் செல்ல வைத்தது. சினிமாவில் நுழைந்து, உழைப்பால் முன்னேறிவிடலாம் என்பதை செயலில் காட்டிய தன்னம்பிக்கை மனுஷி.

முதல் தமிழ்த் திரைப்படம், `குமார குலோத்துங்கன்'. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும்போது, தயாரிப்பாளர் ராஜாராவ் வைத்த பெயர்தான், டி.ஆர்.ராஜகுமாரி. ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. 

வர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம், `கச்ச தேவயானி'. அந்தப் படம், தனியோர் இடத்தைப் பெற்றுத்தந்தது. பல படங்களில் நடித்து, ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்தார். 

ராஜகுமாரி

மிழ் நட்சத்திரமாக மின்னிய ராஜகுமாரியை, சர்வேதச அளவில் அறிமுகப்படுத்தியவர், எஸ்.எஸ்.வாசன். `சந்திரலேகா' திரைப்படம் உச்சத்துக்குக் கூட்டிச் சென்றது. படத்தில் இவர் ஆடிய ஜிப்ஸி நடனம், முத்திரைப் பதித்தது. காதல்.. சிரிப்பு.. ஏக்கம்.. வலி என அனைத்தையுமே தன் நடிப்பின் மூலம் தீர்த்துக்கொண்ட நடிகை.

வருடைய தம்பி, டி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து ஒரு சில படங்களையும் தயாரித்திருக்கிறார். டி.ஆர்.ராமண்ணாவும் சிறந்த தயாரிப்பாளராக சினிமா உலகில் தடம் பதித்தவர். இதுமட்டுமன்றி, ராஜகுமாரி ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். கலை உலகில் எல்லா முடுக்குகளிலும் தன் திறமையை மின்னச் செய்த காந்தக் கண்ணழகி ராஜகுமாரி.

1954-ம் ஆண்டு வெளியான `மனோகரா' படத்தில் `வசந்தசேனை' என்கிற வில்லியாக, நடிப்பில் அடுத்த பரிமாணத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ராஜகுமாரி. அந்தக் கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.கே. ராதா, டி.ஆர். மகாலிங்கம் எனக் கறுப்பு வெள்ளை காலத்தின் சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்துப் புகழ்பெற்றவர், ராஜகுமாரி. மிகவும் எளிமையாக அனைவரிடனும் பழகுவது இவரது கூடுதல் அழகு..!

ராஜகுமாரி

ன் 41 வயதில் நடிப்புக்கு `குட்'பை சொல்லிவிட்டார். திருமணம் என்கிற கட்டமைப்பை தகர்த்து நடிப்பில் ஆர்வமாகத் திகழ்ந்த இவர், திரைத்துறையிலிருந்து வெளிவந்த பின்னரும் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கவில்லை. தம்பி டி.ஆர்.ராமண்ணா குடும்பத்துடன் இருந்துவிட்டார்.

`சென்னையில் தன் பெயரில் திரையரங்கைத் திறந்த முதல் தமிழ் நடிகை' என்கிற பெருமையைப் பெற்றவர் ராஜகுமாரி.

ம்பீரமும் நளினமும் கலந்த நடிப்பு. எத்தகைய கதாபாத்திரத்தையும் ஊதித் தள்ளும் திறமையினால், கறுப்பு - வெள்ளை திரைப்படங்களின் ராணியாக வலம்வந்தார். எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவருடைய எண்ணம் நடிப்பைத் தவிர வேறு எதிலுமே இருந்ததில்லை.

ன் 77-வது வயதில் மரணமடைந்தார் ராஜகுமாரி. அவர் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் பலரின் மனங்களில் இருக்கின்றன.

 

 

`லேடி சூப்பர் ஸ்டார்' என அந்தக் காலத்திலேயே புகழ்பெற்ற அழகிக்கு இன்று (மே 5) பிறந்தநாள்!

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

`இப்போ சைபர் வார்!’ - விஷால் - அர்ஜூன் மிரட்டும் `இரும்புத் திரை’ ட்ரெய்லர்

 

இரும்புத்திரை

விஷால், அர்ஜூன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குநர் P.S.மித்ரன் இயக்கியிருக்கும் படம் `இரும்புத்திரை'. `ராஜா ராணி', `கத்தி', `தெறி' படங்களில் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதமே திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்பட்டது. 

 

 

பட வேலைகள் முடியாமல் இருந்ததாலும், தமிழ்த் திரையுலகினர் நடத்திய ஸ்டிரைக்கினாலும் தாமதமான `இரும்புத்திரை’, வருகிற 11 ம் தேதி ரிலீஸாகவுள்ளது. நவீன உலகில் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது, அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து விஷாலும் தயாரித்துள்ளார்.

  • தொடங்கியவர்

உலகின் பிஸியான விமானப் பாதை எது தெரியுமா?


 

 

kuala-lumpur-singapore-named-busiest-international-air-route

  

மலேசியா மற்றும் கோலாலாம்பூர் இடையேயான விமானப் பாதையே உலகில் அதிக விமானங்கள் செல்லும் பாதையாக மாறியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவை  சேர்ந்த OAG  என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், "சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையிலான விமானப் பாதையில் ஒரு நாளைக்கு 80க்கும் மேற்பட்ட விமானங்கள் என வருடத்துக்கு 30,000 விமானங்கள் சென்று வருகின்றனர்.  ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமாக  மக்கள் பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இப்பாதை உலகின் பிஸியான விமானப் பாதையாக மாறியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

AIR ASIA, JET STAR, SINGAPORE, AIRLINES, MALASIYAN AIRLINES  ஆகிய விமான  நிறுவனங்களின் விமானங்கள்தான் இப்பாதையில் அதிக அளவு பயணம் செய்கின்றன. சிங்கப்பூருக்கும், கோலாலாம்பூர் இடையிலான பயணம் நேரம் சுமார் ஒரு மணி நேமாகும். மலேசியா மற்றும் கோலாலாம்பூர் விமான பாதைக்குப் பிறகு அடுத்த இடங்களில் ஹாங்காங் - தைபே விமானப் பாதையும், சிங்கப்பூர் -  ஜகர்தா  விமானப் பாதையும் உள்ளன.

http://www.kamadenu.in

  • கருத்துக்கள உறவுகள்

World's 10 busiest air routes

  1. Jeju-Seoul, South Korea: 64,991
  2. Melbourne-Sydney, Australia: 54,519
  3. Mumbai-Delhi, India: 47,462
  4. Fukuoka-Tokyo Haneda, Japan: 42,835
  5. Rio de Janeiro-Sao Paulo Congonhas, Brazil: 39,325
  6. Sapporo-Tokyo, Japan: 38,389
  7. Los Angeles-San Francisco, USA: 34,897
  8. Brisbane-Sydney, Australia: 33,765
  9. Cape Town-Johannesburg, South Africa: 31,914
  10. Beijing-Shanghai, China: 30,029

World's busiest international air routes

  1. Hong Kong-Taipei: 29,494
  2. Kuala Lumpur-Singapore: 29,383
  3. Jakarta-Singapore: 26,872
  4. Jakarta-Kuala Lumpur: 20,890
  5. Hong Kong-Shanghai: 20,818
  6. New York La Guardia-Toronto: 17,116
  7. Hong Kong-Seoul Incheon: 16,366
  8. Beijing-Hong Kong: 14,592
  9. Dublin-London Heathrow: 14,556
  10. Bangkok-Singapore: 14,455



Read more: http://www.traveller.com.au/worlds-busiest-airline-flight-routes-melbournesydney-now-worlds-second-busiest-h0e7ha#ixzz5EgosBkB3 
Follow us: @TravellerAU on Twitter | TravellerAU on Facebook

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: என்னா வெயிலுடா...

 

 
mem%203
mem%201
mem%205
mem%206
mem%207
mem%208
memes%201
memes%202
memes%203

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நியுக்ளியர் டைட்டானிக்... மிதக்கும் கப்பலில் ரஷ்யாவின் அணுமின் நிலையம்!

 
 

2007-ம் ஆண்டு. 'Akademik Lomonosov' என்று ரஷ்ய மொழியில் பெயரிடப்பட்ட அந்தக் கப்பலின் அடிக்கட்டை எனப்படும் 'keel' உயிர் பெறுகிறது. நீர்முழ்கிக் கப்பல்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் அந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடக்கின்றன. இது மற்ற கப்பல்களைப் போல இல்லை. இது நீர்மூழ்கிக் கப்பல் கிடையாது; போர்க்கப்பல் கிடையாது. பயணிகள் அல்லது சரக்குக் கப்பல்? இல்லை. இது கப்பலில் மிதக்கும் ஓர் அணுமின் நிலையம். இந்தக் கப்பலைச் செய்ய மொத்தம் 6 பில்லியன் ரூபிள்கள் செலவாகி இருக்கிறது. அதாவது 232 மில்லியன் டாலர்கள். 144 மீட்டர்கள் நீளம், 30 மீட்டர்கள் அகலம் கொண்ட இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது செயல்பட போவது ஆர்க்டிக் பிரதேசங்களில்... அதுவும் மிதந்து கொண்டே! 

தற்போது இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தை, ரஷ்யாவின் துறைமுக நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருந்து கடந்த ஏப்ரல் 28 அன்று தொடங்கி வைத்திருக்கிறார்கள். இந்தக் கப்பலின் ஒரே பிரச்னை என்னவென்றால், இதற்குத் தானாக பயணம் செய்யும் திறன் கிடையாது. உள்ளே அதற்கான பாகங்கள் எதுவும் இல்லை. எல்லா இடத்தையும் அணுமின் நிலையமே ஆக்கிரமித்து விட்டது. எனவே, வெளியில் இருந்து வேறு ஓர் இயந்திரத்தின் உதவியுடன் 'வரை இழுவை' (Towing) செய்யப்பட்டு இந்தக் கப்பல் கடலில் செலுத்தப்படும். 

Akademik Lomonosov கப்பல்

தற்போது கிளம்பியுள்ள இந்தக் கப்பல் வடமேற்கு ரஷ்யாவிலுள்ள மற்றொரு துறைமுக நகரான முர்மன்ஸ்க் (Murmansk) என்ற இடத்தில் நின்று, பயணத்திற்குத் தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்ளும். இதன் கடைசி நிறுத்தம் ஆர்க்டிக் வளைவில் உள்ள பெவெக் (Pevek) என்னும் இடம். இங்கே அந்தக் கப்பல் அடுத்த வருட இறுதிக்குள் அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே சென்றவுடன் கிட்டத்தட்ட 1,00,000 பேர் வசிக்கும் ஓர் ஊருக்கு இந்த மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். தற்போது புவி வெப்பமயமாதல் மூலம் பனிப்பாறைகள் உருகி சுலபமான கடல் வழிகள் பல புலப்படுவதால், இந்தக் கப்பல் கொண்டு ஆர்க்டிக் பிரதேசங்களின் புதைபடிவ எரிபொருள்களையும் கொணர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும். 

இந்த மிதக்கும் அணுமின் நிலையம் மட்டும் உயிர் பெற்றுவிட்டால் ரஷ்யாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பழைய மின் நிலையங்களை (ஓர் அணுமின் நிலையம் மற்றும் ஒரு நிலக்கரி மின் நிலையம், முறையே 1974 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை) நிரந்தரமாக மூடிவிடலாம். இதனால் அங்கே ஏற்படும் காற்று மாசைத் தடுக்கலாம் என்பது ரஷ்யாவின் கணக்கு. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பிவிட்டன. பலர் இதை விபரீத முயற்சி என்றும் இந்தக் கப்பலை 'மிதக்கும் செர்னோபில்' மற்றும் 'நியுக்ளியர் டைட்டானிக்' என்று விமர்சித்திருக்கிறார்கள்.

Akademik Lomonosov கப்பல்

 

ஆனால், இதைத் தயார் செய்த ரஷ்ய அரசின் நிறுவனம் இந்தக் கப்பல் முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்றும், சர்வதேச அணுசக்தி மையத்தின் விதிமுறைகள்படிதான் தயாரித்திருக்கிறோம் என்றும் உறுதியளித்துள்ளது. சுனாமி அல்லது மற்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் இந்தக் கப்பல் தாங்கும் என்றும், இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது. இருந்தும் இந்தக் கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஏற்கனவே புவி வெப்பமயமாதல் நிகழ்வால் பாதிப்படைந்து இருக்கும் ஆர்க்டிக் பிரதேசம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கோடையைக் குளிர்விக்கும் அலங்காரம்

 

 
Desktopjpg
 
 

மேமாதம், பள்ளிக் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, வெயிலுக்கும் ஆனது. நம் துணைக் கண்டத்தை விளையாட்டு மைதானமாக்கி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலைச் சமாளிக்க நாம் பல ஏற்பாடுகளைச் செய்கிறோம். அதுபோல வீட்டு அலங்காரத்திலும் சில மாற்றத்தைச் செய்யலாம். மண்ணால் செய்த சிலைகள், பூத் தொட்டிகள், தொங்கட்டம் கொண்டு வீட்டு அலங்காரத்தை மாற்றிப் பார்க்கலாம். அது பார்ப்பதற்கு நம் கண்களுக்கும் மனத்துக்கும் குளிர்ச்சியைத் தரும்.

ஓசை எழுப்பும் சிம் (chime) அலங்கார மாலைகள் மூங்கில், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களில்தான் முன்பு சந்தையில் கிடைத்தது. இப்போது டெரகோட்டாவிலும் சிம் வந்துவிட்டது. அதிலும் நீலம், சிவப்பு, பச்சையெனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. நம்முடைய பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் இவை உள்ளன என்பது சிறப்பு. இதன் தொடக்க விலை ரூ. 80.

பால்கனியை அழகாக்கவென்று சில தனிப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மட்பாண்டங்கள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகளும் பலவிதமான வடிவங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக அன்னப் பறவையின் உடல் பகுதியில், காளையின் உடல் பகுதியில் செடி நடுவது போன்ற வடிவைப்பில் கிடைக்கின்றன. பூந்தொட்டியின் தொடக்க விலை ரூ. 150.

வீட்டு வரவேற்பறையை அழகுபடுத்த ஏராளமான சுடுமண் சிற்பங்கள் இருக்கின்றன. யானைச் சிற்பங்கள், குதிரைச் சிற்பங்கள் அவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பல வகையான பொருட்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது புத்தர், காந்தி போன்ற மகான்களின் சிலைகளும் கிடைக்கின்றன. சிலைகளின் தொடக்க விலை ரூ.1000.

சுவரில் மாட்டுவதற்கென்று ஓவியம் போன்ற புடைப்பு மண் சிற்பங்களும் கிடைக்கின்றன. சூரியக் கடவுளின் சுவர் சிற்பங்களும் பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும் இவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. இதன் தொடக்க விலை ரூ.100.

இவை அல்லாது துளசி மாடம் கிடைக்கிறது. மிகச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு என வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் துளசி மாடம் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.150

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்
5 hours ago, nunavilan said:

World's 10 busiest air routes

  1. Jeju-Seoul, South Korea: 64,991
  2. Melbourne-Sydney, Australia: 54,519
  3. Mumbai-Delhi, India: 47,462
  4. Fukuoka-Tokyo Haneda, Japan: 42,835
  5. Rio de Janeiro-Sao Paulo Congonhas, Brazil: 39,325
  6. Sapporo-Tokyo, Japan: 38,389
  7. Los Angeles-San Francisco, USA: 34,897
  8. Brisbane-Sydney, Australia: 33,765
  9. Cape Town-Johannesburg, South Africa: 31,914
  10. Beijing-Shanghai, China: 30,029

World's busiest international air routes

  1. Hong Kong-Taipei: 29,494
  2. Kuala Lumpur-Singapore: 29,383
  3. Jakarta-Singapore: 26,872
  4. Jakarta-Kuala Lumpur: 20,890
  5. Hong Kong-Shanghai: 20,818
  6. New York La Guardia-Toronto: 17,116
  7. Hong Kong-Seoul Incheon: 16,366
  8. Beijing-Hong Kong: 14,592
  9. Dublin-London Heathrow: 14,556
  10. Bangkok-Singapore: 14,455



Read more: http://www.traveller.com.au/worlds-busiest-airline-flight-routes-melbournesydney-now-worlds-second-busiest-h0e7ha#ixzz5EgosBkB3 
Follow us: @TravellerAU on Twitter | TravellerAU on Facebook

நன்றி நுணா.

நான் மேலே இணைத்த செய்தி நேற்றய BBC இன் செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டு இருக்கவேண்டும்.

உலக பார்வை: உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான்

  • தொடங்கியவர்

இயற்கையைத் தேடும் கண்கள் : கோபக்காரக் கிளியே!

 
21chnvkrathika2JPG
21chnvkparakeetJPG
21chnvkrathika1JPG
 
 
 

ஒருமுறை ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் நீர்ப் பறவைகளைப் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று என்னை நோக்கி ஏதோ ஓர் உயிரினம் ஓடி வந்ததை உணர முடிந்தது. சத்தம் கேட்டுத் திரும்பிபோது, அது ஓர் உடும்பு என்று தெரிந்தது. அது ஏன் இவ்வளவு அரக்கப்பரக்க ஓடுகிறது என்று கவனித்தால், இரண்டு கிளிகள் அதை விரட்டி விரட்டித் தாக்கிக்கொண்டிருந்தன. உடும்பின் வாலை, அந்தக் கிளிகள் கொத்த முயன்றுகொண்டிருந்தன. பொதுவாக, உடும்பு போன்ற பல்லி இனங்கள் சுறுசுறுப்பாக இருக்காது. கிளிகளும் அமைதியானவை. அவை அமைதியிழந்து இப்படிச் சண்டையிடுகின்றன என்றால், அவற்றின் முட்டைகளைத் திருட உடும்பு முயன்றது ஒரு காரணமாக இருக்கலாம்.

நமக்கு நன்கு பரிச்சயமான பறவைகளுள் ஒன்று பச்சைக்கிளி. ஆங்கிலத்தில் ‘ரோஸ் ரிங்டு பாராகீட்’. இந்த வகையில் ஆண் கிளிகளுக்கு மட்டுமே கழுத்தைச் சுற்றி இளஞ்சிவப்பு ஆரம் இருக்கும். அதனால்தான் ‘ரோஸ் ரிங்டு’ என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. சிட்டுக்குருவிகளுக்கு அடுத்தபடியாக நகரங்களில் உள்ள பூங்காக்களிலும் கிராமத்துத் தோப்புகளிலும் அதிகம் தென்படுகிற பறவை இது. எப்போதும் கூட்டமாகத் திரியும் இவை, இரவிலும் ஓய்வாக இருக்கும் நேரத்திலும்கூட ‘கீ கீ’ சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.

தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருக்கிற அமைதியான பறவைகள் இவை. மரப் பொந்துகளில் முட்டையிடும் தன்மை கொண்டவை. ஆண், பெண் இரண்டு பாலினங்களுமே தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.

இந்தப் பின்னணியில் கோபக்காரக் கிளிகளை நான் பார்த்தது, அதுதான் முதன்முறை. ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அந்த நிமிடங்கள்தாம் இங்கு இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்கள். தங்கள் வாரிசுகளைப் பாதுகாக்கும் உணர்வு மனிதர்களுக்கு மட்டும்தான் உண்டா என்ன?

கட்டுரையாளர்,

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'குறும்புக்கார குழந்தைகள்' - பிபிசி நேயர்களின் புகைப்படங்கள் 

 

பிரவீன் குமார்

பிரவீன் குமார்

 

தனசேகரன் தனசேகரன்

 

குருநாதன் குருநாதன்

 

கார்த்திகேயன் கார்த்திகேயன்

 

வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி

 

அருண் குமார் அருண் குமார்

 

கோபிசங்கர், யாழ்ப்பாணம் கோபிசங்கர், யாழ்ப்பாணம்

 

மது பிரியா, விழுப்புரம் மது பிரியா, விழுப்புரம்

 

அஷாட், இலங்கை அஷாட், இலங்கை

 

செந்தமிழரசு, சேலம் செந்தமிழரசு, சேலம்

 

ராஜசேகரன், கோயம்புத்தூர் ராஜசேகரன், கோயம்புத்தூர்

 

https://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சமூக ஊடகத்தில் ஊசலாடும் காதல்!

 

 
fbjpg
 
 

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தாங்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்கிறோம் என்று காட்டிக்கொள்ள பெரும்பாலான காதலர்கள் விரும்புவதால்தான் இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அத்துடன், தங்களுடைய மனநிலையையும் பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களையும் நிலைத்தகவல்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களை மகிழ்ச்சியானவர்களாகச் சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும் தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? இல்லை என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும் தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் மெய்நிகர் உலகத்தில் தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். யாரெல்லாம் இப்படிப் பகிர்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும் நிலைத்ககவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்

சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்துவருகிறார்கள். மற்றவர்களிடம் அப்படிக் காட்டிக்கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்களுக்குச் சமூக ஊடகங்களில் அதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுவதில்லை. அவர்களுக்குப் பொறாமை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதில்லை. இருவருக்குமிடையில் இருக்கும் பரஸ்பர முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய உறவில் பாதுகாப்பையும் திருப்தியையும் உணர்பவர்களாக இருக்கிறார்கள்.

டென்மார்க்கின் மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், ஃபேஸ்புக்கை ஒரு வாரம் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆய்வுசெய்தது. அந்த ஆய்வில், ஒரு வாரம் ஃபேஸ்புக்கை விட்டு விலகி இருந்தவர்களுக்கு வாழ்க்கையின் மீதான மனத்திருப்தி அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

காதலர்கள், தம்பதிகளில் யாராவது ஒருவர், சுயமோக (narcissism) பிரச்சினையாலும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அது சமூக ஊடகங்களில்தான் முதலில் வெளிப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து சுய படங்களைப் பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மோசமான வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கு சாத்தியமிருப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காதலர்கள் தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றி கரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம்

இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளுக்கு தேசிய கீதம் அளித்த வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் 158-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. #RabindranathTagore

 
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம்
 
 
இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
கல்கத்தாவைச் சேர்ந்த இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
 
201805070903577488_1_tagoreee._L_styvpf.jpg
 
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.
 
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வம்சம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். 
 
இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர். #RabindranathTagore

 

 

https://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா யார் தெரியுமா? - உண்மைக் கதை #FeelGoodStory

 
 

நெகிழ்ச்சிக் கதை

`ங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்.’ என்பது அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் (Maya Angelou) புகழ்பெற்ற வரிகள். இந்த மனம் வாய்ப்பது வரம். அப்படிப்பட்ட மனம் வாய்க்கப் பெற்ற, பிறருக்கு உதவும் குணம் படைத்த எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்... கூட்டம் பிதுங்கிவழியும் பேருந்தில் பாய்ந்து இடம்பிடித்திருந்தாலும், தள்ளாமையோடு வரும் முதிய பாட்டிக்கு எழுந்து இடம் கொடுப்பார்கள்; சாலை விபத்து நடந்தால், பாதிக்கப்பட்டவருக்குத் உதவப் பாய்ந்து வருவார்கள்; எங்கேயோ சிரியாவில் கொத்தாகக் குழந்தைகள் குண்டுவீச்சில் பலியானால் அதைச் செய்தியாக மட்டும் படிக்காமல்,  பதறிப்போய் கலங்கி நிற்பார்கள்; `நீட்’ தேர்வெழுத தமிழக மாணவர்கள் ராஜஸ்தானுக்கும் கேரளாவுக்கும் அலைக்கழிக்கப்பட்டால், தங்களால் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவ முடியும் என்று யோசிப்பார்கள். மொத்தத்தில் அவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள்; சக மனிதர்களை நேசிப்பவர்கள்; தங்களால் இயன்றதைப் பிறருக்கு உதவும் பரோபகாரிகள். அப்படிப்பட்ட மனிதர்களில் இரண்டு பேரைப் பற்றிய உண்மைக் கதை இது.

கடிதம்

அது 2010-ம் வருடம். அவர்கள் இருவரும் நண்பர்கள். ஒருவர். ஜிம் கிளாப் (Jim Glaub), மற்றவர், டைலன் பார்க்கர் (Dylan Parker). இருவரும் அப்போதுதான் அமெரிக்கா, நியூயார்க்கிலிருக்கும் மன்ஹாட்டன் பகுதியிலிருக்கும் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்குக் குடிவந்திருந்தார்கள். வந்த சில நாள்களிலேயே அவர்கள் இருந்த முகவரிக்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. முதல் நாள் ஐந்து, அடுத்த நாள் 10, அதற்கடுத்த நாள் 15... இதில் பிரச்னை என்னவென்றால், அந்தக் கடிதங்கள் ஜிம் கிளாப்புக்கோ, டைலன் பார்க்கருக்கோ எழுதப்பட்ட கடிதங்கள் அல்ல. `கிறிஸ்துமஸ் தாத்தா’வுக்கு (Santa Claus) எழுதப்பட்டவை.

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் தங்களுக்கு ஏன் வருகின்றன என்று இருவரும் யோசித்தார்கள். அமெரிக்காவில் ஒரு பழக்கம் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். அவர்களின் விருப்பத்தை, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதமாக எழுதச் சொல்வார்கள். குழந்தைகள் எழுதியதும், `எங்கே... நீ சரியாத்தான் எழுதியிருக்கியான்னு பார்க்குறேன்...’ என்று அம்மாவோ, அப்பாவோ அந்தக் கடிதத்தைப் பார்த்து, குழந்தைகளின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வார்கள். பிறகு, கிறிஸ்துமஸ் தினத்தன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவே வந்து அவர்கள் விரும்பியதைக் கொடுத்ததுபோல் செய்துவிடுவார்கள். அமெரிக்கக்  குழந்தைகள், தங்கள் விருப்பத்தை வட துருவத்தில் (North Pole) இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அனுப்புவதுதான் வழக்கம். ஆனால், அவர்களுக்கு வந்த கடிதங்கள் அத்தனையிலும் `Santa Claus' என எழுதப்பட்டு இவர்கள் முகவரியே எழுதப்பட்டிருந்தது. ஏன் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. யாராவது நகைச்சுவைக்காக, வேடிக்கைக்காக இப்படி செய்கிறார்களா என்பதும் புரியவில்லை.

இதற்கிடையில், கடிதங்களின் எண்ணிகை அதிகமாகிக்கொண்டே போனது. ஜிம்மும் டைலனும் கூகுளில் தேடி, தங்கள் முகவரி சரிதான் (22nd Street). என்பதையும் உறுதிசெய்துகொண்டார்கள். ஒரு கட்டத்தில், சரி இந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படிக்கலாமே என்று தோன்றியது. ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்கள்.

கடிதம்

ஐந்து வயது சிறுவன் எழுதியிருந்தான்... `கிறிஸ்துமஸ் தாத்தா. என்னோட சாக்ஸ் கிழிஞ்சு நைஞ்சு போச்சு. இது குளிர்காலம் இல்லையா? ஷூ போட்டிருந்தாலும் கால் மட்டும் ஜில்லுனு ஆகிப் போயிடுது. ஒரு சாக்ஸ் வாங்கித் தருவீங்களா?’ இந்த எளிய கோரிக்கையைப் படித்ததும் உருகிப் போனார்கள் ஜிம்மும் டைலனும்.

அடுத்த கடிதம்... ஓர் ஆறுவயதுச் சிறுமி எழுதியிருந்தாள்... `தாத்தா... என்னோட அம்மா தனியா ரொம்பக் கஷ்டப்படுறாங்க. நான் கேட்குறதையெல்லாம் அவங்களால வாங்கிக் குடுக்க முடியலை. என்னோட துணிகளெல்லாம் ரொம்பப் பழசாகிப் போச்சு. நான் வளர்ந்துட்டதால, ஷூவும் போட முடியாத அளவுக்குச் சின்னதாகிடுச்சு. இந்த கிறிஸ்துமஸுக்கு எனக்குப் போட்டுக்குறதுக்கு டிரெஸ்ஸும், ஷூவும் கொஞ்சம் பொம்மைகளும் அனுப்பிவைப்பீங்களா?’ - கடிதத்தின் கீழே அந்தக் குழந்தைக்கான உடை, ஷூவின் சைஸும் குறிப்பிட்டிருந்தது.

ஒரு கடிதத்தில் 9 வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கேட்டிருந்தது. இன்னொரு கடிதத்தில், 21 மாதங்களே ஆன ஒரு குழந்தை எழுதுவதுபோல, அதன் அம்மா, குழந்தைக்கு ஸ்வெட்டர் கேட்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுள்ள, சமீபத்தில்தான் வேலையை இழந்திருந்த மனிதரொருவர் ஒரு மாதத்துக்கான மளிகைச் சாமானை தன் குடும்பத்துக்கு வாங்கித் தரும்படி கேட்டிருந்தார்... படிக்கப் படிக்க நெகிழ்ந்துபோனார்கள் நண்பர்கள் இருவரும். இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஆனால், எப்படி?

இருவரும் இதற்காகவே ஃபேஸ்புக்கில் `மிராக்கிள் ஆன் 22ண்ட் ஸ்ட்ரீட்’ (Miracle on 22nd Street) என்ற குரூப்பை ஆரம்பித்தார்கள். `கிறிஸ்துமஸ் தாத்தா’ பெயருக்கு (தங்களுக்கு) வந்த கடிதங்களையெல்லாம் பதிவிட்டார்கள். நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும், சில தன்னார்வலர்களிடமும் உதவி கேட்டார்கள். `ஒரு குழந்தையின் விருப்பத்தை உங்களால் நிறைவேற்ற முடியுமா?’ என்கிற வாசகத்தோடு இடப்பட்ட அவர்களின் பதிவுகளுக்கு வரவேற்பும் கிடைத்தது. அவர்களில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்களும் இருந்தார்கள். `ஜிம்மும் டைலனும் சேர்ந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ..!’ என்று நினைத்தவர்களும் இருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா

அவர்களை சந்தேகப்பட்ட ஒருவர், ஒருநாள் ஒரு கிஃப்ட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டு, பின்னாலேயே வேவு பார்க்கக்கூடச் செய்தார். அந்தப் பரிசை சுமந்து சென்ற வேன் பின்னால் சென்று பார்த்தார். அந்த வேன் ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தா இறங்கினார். அவரைப் பார்த்ததும், வீட்டிலிருந்த குழந்தைகள் வெளியே  ஓடிவந்தார்கள். தன் குழந்தைகளுக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுப்பதை கண்ணீர்மல்க, அவர்களின் தாய் பார்த்துக்கொண்டிருந்தார்.

2010-ம் ஆண்டு, இந்த நண்பர்களின் முகவரிக்கு 450 கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் 150 கடிதங்களின் குறைகளைத் தீர்த்துவைத்துவிட்டார்கள். கடந்த ஆண்டு வரை, தங்களால் முடிந்த உதவியை இந்த ரியல் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஜிம், டைலன் இருவரின் கதை உதவி செய்பவர்களுக்கு ஓர் உதாரணம். `பிறருக்கு உதவுவதால் யாரும் ஏழையாவதில்லை’ என்பது மறுக்க முடியாத உண்மை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்

 

 
06CHLRDTRANS

PUDUCHERRY, 02/05/2018: Transgenders purchasing at the makeshift shops selling thali and bangles near Koothandavar temple at Koovagam in Villupuram district. Photo: T. Singaravelou

06CHLRDBHAVANIDEVI

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் பிரவுன் தங்கப் பதக்கத்தையும் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

06CHLRDDANCE

உலக நடன நாளையொட்டி சென்னை செட்டிநாடு வித்தியாஷ்ரம் பள்ளியில் 130 பெண்கள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 வயது முதல் 80 வயதுவரை உள்ள பெண்கள் நடனமாடினார்கள்.

06CHLRDFLOWER

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மலர் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் அமெரிக்கா, ஐரோப்பா போன்று நாடுகளுக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் மலர் வளையங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

06CHLRDWATER

கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ராய்ச்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மிக மேசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிக நீண்ட தொலைவு பயணித்துத் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

1000 ஆண்டுகளில் முதல் முறையாக உலகிற்கு தெரிய வந்த தலைசிறந்த திபெத்திய படைப்புகள்


 

 

murals-tibet-paintins-thomas-laird

  

 

புத்தரின் வாழ்வையும் தியானத்தின் ரகசியங்களையும் எடுத்துக்காட்டுகின்றன பண்டைய திபெத்திய சுவரோவியங்கள். இவற்றில் பலவும் தொலைதூர மடங்களிலும் ஆலயங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவற்றின் சுவர்கள் பலவும் உடைந்துபோயிருக்கின்றன.

காலத்தின் கோலத்தினால் நம் கண்ணிலிருந்து அவை மறையும் வரை உன்னத ஓவியங்களாக அவைகள் திகழ்ந்தன என்பதுதான் உண்மை. பௌத்த கலாச்சாரத்தின் மிகப் பெரிய பொக்கிஷங்களை பெற்றிருக்கிறார்கள் திபெத்தியர்கள் என்பதை உலகத்துக்கு உணர்த்தியிருப்பவர் அமெரிக்க புகைப்படக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் தாமஸ் லாய்ர்டு.

தாமஸ் லாய்ர்டு ஒரு பத்தாண்டுகளை மாடு மேய்ப்பவர்களுடன் இதற்காக செலவிட்டார். பாறைக் குகைகளில் உள்ள மிகச் சிறந்த ஓவியங்களைக் காண விவசாயிகள் மற்றும் பௌத்தத் துறவிகளுடன் சேர்ந்து திபெத்திய குன்றுகள் முழுவதையும் தேடிச் சென்றனர். அவற்றில் சிலவற்றையே காணவும் படம்பிடிக்கவும் முடிந்தது.

இதன் விளைவாக, திபெத்தின் சுவரோவியங்களில் 998 ஓவியங்கள், மிகப் பெரியவையாக பார்த்து எடுக்கப்பட்டன - 2 அடி நீளத்திற்கும் அதிகமாக அச்சடிக்கப்பட்டன. மொத்த நகல்களும் தலாய் லாமாவின் ஆசீர்வாதமும் கையொப்பமும் பெற்றவை. அவற்றில் சில சுவரோவியங்களில் புத்த மதத் தோற்றத்தின் முதல் பாடங்கள் வெளிப்பட்டுள்ளன. அவற்றை அவரால் படிக்க முடிந்தது. 

முதன்முதலாக லாய்ர்டு மூலம் முதல் தடவையாக பல ஓவியங்களை நாம் பார்க்கிறோம். இந்த ஓவியங்களை தனது காமிராவுக்குள் திரட்டும் முயற்சி என்பது அவ்வளவு எளிதானதல்ல. மலைப்பாறைகளிலும் பிரமாண்ட குகைகளின் உட்புறங்களிலும் வரையப்பட்ட பல ஓவியங்கள் கைக்கெட்டாத உயரங்களில் அண்ணாந்து பார்க்கும்விதமாக அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல, பரந்த ஓவியங்களின் துண்டுகளாகவே பல ஓவியங்களைப் பார்க்கமுடிந்தது. அவற்றைக் காண போதிய வெளிச்சங்களும் இல்லை. டார்ச் அடித்தோ பைனாக்குலரிலோதான் பார்க்கமுடியும்.

ஆன்மிகம், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த ஓவியங்களை வெளிப்படுத்த தீர்மானித்து, தைத்து இணைக்கும் 'ஸ்டிட்ச் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பத்தைக் கையாண்டு முதலில் ஒன்றை அச்சடித்தார். மலைக்குகையில் பார்த்த சுவரோவியங்களின் அடர்ந்த நுட்பங்கள் எதிர்பாரா வண்ணம் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டியதால் இத்தொழில்நுட்பம் பிரதிபலித்ததால் 300 சுவரோவியங்களையும் இதே வகையில் அச்சடித்தார்.

இதுகுறித்து லாய்ர்டு கூறுகையில், ”உலக பாரம்பரியத்தின் அறியப்படாத மற்றும் ஆவணப்படுத்தாத மிகப்பெரிய அத்தியாயம் அங்கே அமைந்திருந்தது. 1000 ஆண்டுகள் பழமைமிக்க இந்த ஓவியங்களை எதிர்காலத் தலைமுறையினர் இழக்கப்போவதை நினைத்து எனக்கு அச்சம் ஏற்படுகிறது. நீங்கள் திபெத்திற்கு செல்லநேர்ந்தால், பல சுவரோவியங்களை சுலபமாகக் காண இயலாது. பெரும்பாலும் பல இடங்களில் மிகப்பெரிய உயர தூண் ஒன்று இருக்கும் அவற்றுக்கு மேலே 10 அடி உயரத்தில்தான் ஓவியங்களே ஆரம்பிக்கும்.

நீங்கள் அவற்றிற்கு கீழே நிற்கும்போது, இருளில் ஒரு சிதைந்த கோணத்தையே காணமுடியும். ஆனால் முதன்முறையாக ஐரோப்பாவின் பெரிய சுவர் ஓவியங்களைக் கற்பனை செய்து பாருங்கள். நாம் என்ன செய்தோம். இது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு அற்புதமான தருணமாகும்.

இவை வெறும் புகைப்படங்கள் அல்ல. பல துண்டு துண்டான படங்களை இணைத்து புதிய சித்திரங்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். இவற்றை அங்கு போய் நீங்கள் தேடினால் நிச்சயம் கிடைக்காத படங்கள் இவை. கண்ணுக்குத் தெரியாத ஓவியங்களைக் கொண்டு தற்போது பார்க்கத் தகுந்த வகையில் இவற்றை உருவாக்கியுள்ளேன். தற்போது முதன்முறையாக, ஒவ்வொரு தனி சுவரோவியங்களையும் உங்களால் பார்க்க முடியும். அக்காலத்தில் இவற்றை வரைந்த உண்மையான ஓவியக் கலைஞர்களின் கைரேகைகளை பார்க்க முடியும்.

கோங்கர் சோயிடே மடத்தில் காணப்படும் ’வானவில் ஒளி சூழப்பட்ட புத்தர் ஞானம்பெற்றக் காட்சி’யை சித்தரிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களை இழந்துள்ளோம். சுவற்றிலிருந்து பெயர்ந்து தரையில் விழுந்து குவிந்து கிடக்கும் ஓவியத் துண்டுகளை இணைத்து வைத்து உங்களுக்கு அந்தக் காட்சியை என்னால் காட்ட முடியும். இந்த ஓவியத்தை 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கியென்ட்ஸ் சென்மோ எனும் அற்புதமான ஓவியக் கலைஞர் தீட்டியுள்ளார்.

அவருடைய கைகள் லியார்னாண்டோவைப் போல. உள்ளுக்குள் மறைந்திருக்கும் நுட்பங்களை வெளிப்படுத்துகிறது. நூற்றாண்டுகளைக் கடந்ததால் மழைநீரோ, பனித்துளிகளோ ஆண்டுக்கணக்கில் பட்டுபட்டு சரிந்து சுவரில் ஒட்டியிருந்த ஓவியங்கள் தனியே விழுந்து விட்டன. புத்தரின் முகம், கீழே விழுந்துகிடக்கும் ஒரு துண்டுப்பகுதியில் காணக்கிடைக்கிறது.''

இவ்வாறு லாய்ர்டு தெரிவித்தார்.

திபெத்திய பீடபூமி முழுவதும் ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருக்கின்றன. பல்வேறு நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஓவியங்கள். ஆனால் அவை அனைத்தையும் பாதுகாப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. சுவரோவியங்களைப் புரிந்துகொள்வதற்காக ''the murals were a layer in the Dalai Lama's education, before he learned to read'' என்றே ஒரு புத்தகத்தை இந்த அமெரிக்க புகைப்படக்கலைஞரும் எழுத்தாளருமான தாமஸ் லாய்ர்டு எழுதியிருக்கிறார்.

இதில் உள்ள ஒருசொற்றொடர் மிகப்பெரிய சுவரோவியங்களின் மூலம் ஆற்றலைப் பெறமுடியும் என்பதை உணர்ந்தும் விதமாக இந்நூலில் ''தோங்ட்ரோல்'' எனும குறிப்பிட்ட சொற்றோடர் உள்ளது. இக்குறிப்பிட்ட சொற்றொடரை திபெத்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் 'பார்ப்பது மூலம் விடுதலை'.

- நன்றி தி கார்டியன்

http://www.kamadenu.in

  • தொடங்கியவர்

காலா படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது!

 
 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் `காலா'. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தனுஷின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலிருந்து `ஆல்பம் பிரிவ்யூ' என்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

காலா

இந்த வீடியோவில் `காலா' படம் சொல்லும் கதையை மேலோட்டமாக பா.இரஞ்சித்தும், படத்தில் எந்த மாதிரியான பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்று சந்தோஷ் நாராயணனும் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதிலிருந்து படம் முழுவதும் அரசியல் பேசியிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. `செம வெயிட்டு' என்று சில தினங்களுக்கு முன்பு, படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. வெளியானபோது சக்கபோடு போட்ட அந்தப் பாடல், இதுவரை 3 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது. 

அந்தப் பாடலைத் தொடர்ந்து போராடுவோம், நிக்கல் நிக்கல், கண்ணம்மா, தெருவிளக்கு, உரிமையை மீட்போம், தங்க சேலை, கற்றவை பற்றவை, என மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வருகிறது என்று ரஞ்சித்தும் அந்தப் பாடல்கள் தரும் உணர்வை சந்தோஷ் நாராயணனும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். படம் மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களில் இடம்பெற்றிருக்கும் வரிகளும் அரசியல் பேசியிருக்கிறது. 

காலா ட்ராக் லிஸ்ட்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வைக் கடத்தும் என்பது பாடல்களின் சில வரிகளைக் கேட்கும்போதே தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த `காலா' பட ஷூட்டிங் ஸ்பாட்டுமே திருவிழாபோல் தெரிகிறது. பிருந்தா மாஸ்டர், அருண்ராஜா காமராஜா, சமுத்திரக்கனி, கஸ்தூரி, சண்டைப் பயிற்சியாளர்கள், கோரிகிராஃபர்கள் எனப் படத்தில் வேலைபார்க்கும் ஒட்டுமொத்த படக் குழுவுமே என்ஜாய் பண்ணி வேலை பார்க்கிறார்கள். 

 

  • தொடங்கியவர்

ஹவாயில் கடும் எரிமலை சீற்றம்- வீடுகள் சேதம் (புகைப்பட தொகுப்பு)

ஹவாயில் கீலவேயா மலையில் ஏற்பட்ட கடும் எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 6.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

எரிமலை சீற்றம்

எரிமலை சீற்றம்

 

எரிமலை சீற்றம் எரிமலை சீற்றம் எரிமலை சீற்றம்  
  • தொடங்கியவர்

வாணி போஜனுக்கு போட் நெக்... சைத்ரா ரெட்டிக்கு போல்கி டைப்... சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்!

 
 

டாப் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்கள்!

கதைக்காக சீரியல் பார்ப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், மனதைக் கவரும் வகையில் ஆடைகள் அணிந்துவரும் சின்னத்திரை ஹீரோயின்களின் காஸ்ட்யூம்களுக்காகவே சீரியல் பார்க்கும் பெண்கள் நிறையப் பேர். சில நடிகைகளின் ஆடைகள், ட்ரெண்ட் செட் செய்யும். சில நடிகைகளின் ஆடைகள், ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி பெண்களுக்குச் சொல்வதாக இருக்கும். மொத்தத்தில், ஃபேஷனில் style_16372.jpg ஆர்வம்கொண்ட பெண்கள் அதில் தங்களை அப்டேட் செய்துகொள்ள, நம் சின்னத்திரை ஹீரோயின்கள் அவர்களுக்குக் கைகொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், டாப் சீரியல் ஹீரோயின்கள் சிலரின் காஸ்ட்யூம்கள் குறித்த தன் கருத்துகளைப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் கீதா.

 ``சீரியல் என்றாலே காட்டன் அல்லது சிந்தடிக் புடவை, மைல்டு கலர் என்றுதான் ஆக்ட்ரஸ்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் நடிக்கும் நடிகைகள் எனில், வெளிர் நிற ஆடைகள், ஓவர் மேக்அப் எனக் காட்டுகிறார்கள். இதுதான் அவர்களின் கேரக்டர்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஆடையின் நிறம், அணிகலன்கள் என்பதைத் தாண்டி, ஆடையின் வடிவமைப்பிலேயே ஒருவரின் கேரக்டரை பிரதிபலிக்கச் செய்ய முடியும். அப்படி தங்கள் ஆடையின் நேர்த்தியிலேயே தங்களின் கேரக்டரைச் சொல்லும் சீரியல் ஹீரோயின்களின் ஃபேஷன் பக்கங்களைப் பார்ப்போம்.

`தெய்வமகள்' வாணிபோஜன் :

வாணி போஜன் சரியான உயரம் மற்றும் அதற்கேற்ற உடல் எடை கொண்டவர். `தெய்வமகள்' சீரியலில், தன்னுடைய தாசில்தார் கேரக்டருக்கு ஏற்ப அடர் நிற காட்டன் புடவைகளைத் தேர்வுசெய்து அணிந்தது சூப்பர். காட்டன் புடவை என்றாலே பெரும்பாலான பெண்கள் முக்கால் கை பிளவுஸ் அணிவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் போட் நெக், பேக் ஒப்பன், ஹை காலர், பஃப் கை என வெரைட்டி காட்டியவர் வாணி போஜன். அந்த சீரியலில், எந்த அணிகலன்களும் அணியாமலேயே அவர் நீட் லுக் பெற்றதற்கான கிரெடிட்ஸ், அவருடைய ஆடைத் தேர்வுக்கே. சீரியலைத் தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்து வரும் ஆடைகளும் சூப்பர். அவரைப்போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கு வெஸ்டர்ன் ஆடைகளும் பொருந்தும்.

ஃபேஷன்


`யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டி:

`யாரடி நீ மோகினி' சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி, அந்த கேரக்டருக்கான ஆடையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளார். வில்லி என்பதாலேயே அதிக வேலைப்பாடுகள் செய்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணியாமல் தனக்கென்று ஒரு யுனீக் ஸ்டைலை கடைப்பிடிக்கிறார். ஃப்ரில் பிளவுஸ், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், நாட் பிளவுஸ், நெட்டட், போட் நெக்னு வித்தியாசமாகத் தேர்வுசெய்றார். அவர் அணிந்துவரும் போல்கி டைப், ஹேங்கிக் வகை கம்மல்களும், லாங், சிங்கிள் செயின் டைப் அணிகலன்களும் அவரின் ஆடைகளுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கிறது. புடவை அணிந்து செல்ல விரும்பும் கல்லூரிப் பெண்கள் சைத்ராவின் ஆடை நேர்த்தியைப் பின்பற்றலாம்.

ஃபேஷன்

`நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா:


`நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் சரண்யா அணிந்து வரும் ஆடைகள் புது லுக்கில் இருக்கிறது. இதுவரை சீரியல் நடிகைகள் தேர்வு செய்யாத நியான் கலர் ஆடைகளை அவர் தேர்வு செய்து அணிவதோடு, பலவிதமான பிளவுஸ்களையும் முயற்சி செய்கிறார். அவர் ஸ்கின் டோனுக்கு அது பொருத்தமாக இருக்கிறது என்பதுடன், அவரின் பப்ளி, சார்மிங் கேரக்டருக்கும் அது பொருத்தமாக இருக்கிறது. பார்ட்டிகளுக்கு புடவை அணிந்து செல்ல விரும்பும் பெண்கள் சரண்யாவின் ஆடைத்தேர்வை ஃபாலோ செய்யலாம்.

24899676_1799426060067456_26675985699775

`சின்னத்தம்பி' பவானி ரெட்டி :

11219115_410279382511865_321478939588510


`ரெட்டைவால் குருவி', `ஆபீஸ்', இப்போது `சின்னத்தம்பி' சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் பவானி ரெட்டிக்கு வெஸ்டர்ன் ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது. அவர் சீரியலில் அணிந்து வரும் காட்டன் குர்தாக்கள் அவருக்கு எளிமையான, அதே நேரத்தில் டிரெண்டியான லுக் கொடுக்கிறது. அவரின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப அவர் அடர் நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணிவது அவருக்குக் கூடுதல் அழகைத் தருகிறது. வொர்க்கிங் விமன்களுக்கு பவானியின் காஸ்ட்யூம் ஸ்டைல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

``செம்பருத்தி' ஜனனி:

22228302_728338464022581_413668138876927

 

நிறைய சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் ஜனனி, ஆடை, அலங்காரத்தில் சிறப்பான கவனம் செலுத்துகிறார். உயரமான இவரின் தோற்றத்துக்கு, இவர் அணிந்துவரும் கவுன், மல்டி கலர் புடவைகள், காட்டன் சல்வார் போன்றவை இவரைக் கவனிக்கத் தூண்டுகின்றன. ஸ்லிம், டால் கேர்ள்ஸ், ஜனனியின் ஆடைத்தேர்வை நோட் செய்துகொள்ளலாம்."

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலக செஞ்சிலுவை நாள்: மே 8- 1948

 

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

 
 
உலக செஞ்சிலுவை நாள்: மே 8- 1948
 
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922-ல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அனுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934-ம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15-வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948-ம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984-ல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.
 
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மக்கள் இல்லாத தீவுக்கு, வர விரும்பும் டூரிஸ்ட்... இது சீன ஸ்பெஷல்!

 

து 1990-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற ஒரு தீவின் அழிவைத் தொடர்ந்து இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொண்ட கதை இது. சீனாவின் ஷாங்காய் நகருக்குக் கிழக்கில் உள்ள ஷேங்சான் தீவு அது. ஷேங்சான் தீவுப் பகுதிக்கு உட்பட்ட தீவுகளில் ஒன்று ஷேங்சி தீவு. அப்பகுதிவாசிகளின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் மட்டும்தான். அத்தீவுப் பகுதிகளில் சுமார் 2,.000 மீனவர்கள் வசித்து வந்திருக்கின்றனர். இந்த இடத்தில் ஒரு துறைமுகமே செயல்பட்டு வந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு சுதந்திரமாகச் சுற்றிய மனிதர்கள் உணவுக்காகவும், கல்விக்காகவும் வெளியேறினர். சரியான வியாபாரம் இல்லாததும் ஒரு காரணம். அருகில் உள்ள பகுதிகளுக்குக் குடியேறிவிட்டனர். இதனால் காலப்போக்கில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிவிட்டது இந்தத் தீவு. மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி பேய் நகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி அழைப்பதால் மனிதர்கள் யாரும் அத்தீவுக்குள் நுழைய அச்சப்படுகிறார்கள்.

சீனா ஷேங்சி தீவு

மனிதச் செயல்பாடுகள் முற்றிலும் அற்றுப்போனதால் இயற்கை தனது மாயாஜாலத்தைக் காட்ட ஆரம்பித்தது. அத்தீவில் இருக்கும் கட்டடங்கள் முழுவதும் பசுமை படர்ந்து கண்கொள்ளாக் காட்சியளிக்கிறது. தீவின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட பசுமைக் கட்டடங்கள் மலைச்சரிவுகளில் வரிசையாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. மக்கள் முழுவதுமாக வெளியேறிய பின்னர் இங்கு யாரும் ஒரு நாள் இரவு கூட முழுமையாகத் தங்கியது இல்லை. இனி யாரும் அத்தீவில் குடியேற முடியாது. ஆனால், சில சுற்றுலாப் பயணிகள் மட்டும் வந்தவண்ணம் இருக்கின்றனர். இனி வரும் காலத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், பேய் நகரம் என்று அழைக்கப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் அத்தீவுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை.

பச்சை பசேலென கொடிகள் செ.மீ இடைவெளி கூட இல்லாமல் சினிமா செட் போலக் காட்சியளிக்கிறது. அத்தீவிற்குச் சென்று வரும் சுற்றுலாப் பயணிகள் 'அது பேய் நகரம் இல்லை, சோலைவனம்' எனப் போற்றுகின்றனர். பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் இது சொர்க்கம்தான் என்ற எண்ணத்தை நிச்சயம் ஏற்படுத்தும். கட்டடங்களின் சுவர்கள், துளைகள் என அனைத்துப் பகுதிகளிலும்கூட செடிகள் முளைத்திருக்கின்றன. இயற்கையை விரும்பி ரசிக்கும் புகைப்படக்காரர்களுக்கு நிச்சயமாக இது வரப்பிரசாதம்தான். ஹாலிவுட் திரைப்படங்களில் கிராஃபிக்ஸ் செய்தாலும் இப்படியோர் அழகை நிச்சயமாக வர வைக்க முடியாது. அதுதான் இயற்கையின் அற்புதம்... மனிதர்கள் இல்லாத இடத்தில்தான் இயற்கை வளரும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தத் தீவு இருக்கிறது. 

 

சேங்ஷி தீவு

 

இத்தீவில் பெரும்பாலான வீடுகளுக்குச் செல்லும் பாதைகளும், படிக்கட்டுகளும் பெரும்பாலும் கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கற்களையும் உடைத்து புற்களும், செடிகளும் முளைத்திருக்கின்றன. இத்தீவில் முன்பு குடியிருந்த மக்கள் பயன்படுத்திய பல பொருள்கள் பாழடைந்து காட்சியளிக்கின்றன. பச்சை நிற போர்வை போற்றியதுபோல அழகாக இருந்தாலும், மக்கள் இல்லாமல் அனாதையாகக் காட்சியளிக்கிறது. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியைக் காண வராமல் மக்கள் அஞ்சி நடுங்குவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை மக்கள் மீண்டும் வந்தால் இத்தீவு அதன் அழகை இழக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இயற்கை விரும்பிகள் ஒருமுறையாவது இத்தீவைச் சென்று காண வேண்டும். இந்தத் தீவை மீட்டெடுத்து சீனா சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிரிட்டன் டிசைனர் முதல் ஆனந்தின்  கண்டிஷன் வரை... சோனம் கபூரின் திருமண ஹைலைட்ஸ்! #SonamKiShaadi

 
 

பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா திருமணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கவிருப்பதையொட்டி, பாலிவுட் உலகமே விழாக்கோலத்தில் இருக்கிறது. கடந்த சில நாள்களாகவே, இதையொட்டிய பதிவுகள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை, சோனம் கபூருக்கு மெஹந்தி வைக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும்  கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், மும்பையில் இன்று நண்பகல் திருமணம் நடக்கவிருக்கிறது.  

சோனம் கபூர்

PC: www.instagram.com/dolly.jain/

பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கும்  இந்தத் திருமணம் பற்றியும், சோனம் கபூர்-ஆனந்த் அஹூஜா பற்றியும் சில சுவாரஸ்யத் தகவல்கள்! 

* ஆனந்த் அஹூஜாவும் சோனம் கபூரும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தாலும், ஊடகங்களில் இவர்களைப் பற்றிய செய்திகள் வெளிவரும்போதெல்லாம் இருவருமே அமைதி காத்துவந்தனர்.  'நான் ஊடகங்களில் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசமாட்டேன்' என்றார் சோனம் கபூர். தன் சமூகவலைத்தளப்  பக்கங்களில், மிகச்  சமீபத்தில்தான் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்தார். 

*ஆனந்த் அஹூஜா,‘பானே’ என்ற டெக்ஸ்டைல் பிராண்டின்  உரிமையாளர். 2012ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த், அமெரிக்காவில் அறிவியல், எக்கனாமிக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் படித்தவர், எம்.பி.ஏ முடித்தவர். 

 

31054614_183059342513126_594118192644961

PC: www.instagram.com/karanjohar/


* இந்த ஜோடி, திருமண அழைப்பிதழ்கள் எதுவும் அச்சடிக்கவில்லையாம். காகிதங்களை வீணடிக்கக்கூடாது என்ற கொள்கையுடன், எல்லோருக்கும் இ-அழைப்பிதழ் அனுப்பியிருக்கின்றனர்.

* மெஹந்தி நிகழ்ச்சியில், பிரபல டிசைனர் அனுராதா வகில் வடிவமைத்த ‘பீச்’ நிற லெஹங்காவை அணிந்திருந்தார் சோனம். ஆனந்த் அஹூஜா குர்தா மற்றும் நேரு கோட் அணிந்திருந்தார். 

* மெஹந்தி நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி மகள்கள்  ஜான்வி மற்றும் குஷி கபூர், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளை அணிந்திருந்தனர்.   பாலிவுட் நடிகர்  அர்ஜூன் கபூர், கரண் ஜோஹர், நடிகை ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். 

* பாலிவுட்டில் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உடை அணிந்து அசத்துபவர்  சோனம். இவரது திருமண உடையை வடிவமைத்திருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிடமும் எழுந்தது. இந்நிலையில், பிரபல  பிரிட்டன் டிசைனர் பிராண்ட் ரால்ஃப் அண்ட் ரூசோ, இவரின் திருமண உடையை வடிவமைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிசைனர்தான், இம்மாதம் 19ம் தேதி நடக்கவிருக்கும், பிரிட்டன் இளவரசர் ஹாரி -  மார்கேலின் திருமண உடையையும் வடிவமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Sonamkapoor wedding
via: twitter.com

* இன்று காலை, மும்பையிலுள்ள  பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும், மாலை லீலா ஹோட்டலில் பிரம்மாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது. 

* திருமணம் நடந்துமுடிந்த பிறகு, சோனம் கபூர் பங்கேற்கும் கேன்ஸ் விழா, 'வீரே தி வெண்டிங்'கின் விளம்பர வேலைகள்,  ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஏசா லாகா’ மற்றும் 'தி சோயா  ஃபாக்டர்' திரைப்படங்களின் ஷூட்டிங் என அடுத்தடுத்த வேலைகளில் செம்ம  பிசி மேடம். அதனால், அவர்களின் ஹனிமூன் திட்டத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்திருக்கின்றனர். கேன்ஸ் விழா வரும் 14, 15ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் ஆனந்த் அஹூஜா கலந்துகொள்ளமாட்டார் என்று  தெரிவித்திருக்கிறார் சோனம் கபூர். 

* திருமணத்துக்குப் பிறகு, ஆனந்த் அஹுஜா சோனம் கபூருக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். 'படுக்கையறையில் இருவரும் தொலைப்பேசி பயன்படுத்தக்கூடாது' என்பதுதானாம் அது! 

அட! 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.