Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

70 வயது முதியவரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

 
 

மருத்துவ வளர்ச்சி, மனிதனின் ஆயுளை அதிகரித்துவருகிறது. அதற்கு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உறுதுணையாக உள்ளது. ஹாங்காங்கில் 76 வயது முதியவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. 

இந்த விநோதச் சம்பவத்தின் விவரம் இதோ...

 

ஆப்பிள் வாட்ச்

ஹாங்காங்கில் வசித்துவருபவர், கேஸ்டன் டி அக்வினோ. 76 வயதான இவர், வைர வியாபாரம் செய்துவந்தார். இவர், கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் கையில் கட்டியிருந்த கடிகார அலாராம் அலறியது. வாட்சைப் பார்த்த, கேஸ்டன் டி அக்வினோவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. `உங்களின் இதயத் துடிப்பு அதிகரித்துவருகிறது' என்ற தகவலை மெசேஜ் மூலம் எச்சரித்தது வாட்ச். உடனடியாக தேவாலயத்திலிருந்து வீட்டுக்குச் சென்றார். வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தைச் சொல்ல, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, கேஸ்டன் டி அக்வினோவுக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. `சரியான நேரத்துக்கு அவரைக் கொண்டுவந்துவிட்டீர்கள். இல்லையென்றால், அவரை எங்களால் காப்பாற்றியிருக்க முடியாது' என்று மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து, கேஸ்டன் டி அக்வினோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். 

 சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், வாட்ச்சால் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவித்து, வாட்ச்சை தயாரித்த ஆப்பிள் நிறுவனத்தின்  சி.இ.ஓ-வுக்கு இ-மெயிலில் கடிதம் எழுதியுள்ளார். அதில் முழு விவரத்தையும் குறிப்பிட்டு நன்றியையும் தெரிவித்திருந்தார். 

"ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் வாட்ச்சில் பல வசதிகள் உள்ளன. அலாரத்தில் தொடங்கி, மனிதனின் ஆயுளைக் காப்பாற்றும் ஆப்ஸ்கள் உள்ளன. இதயத் துடிப்பைத் துல்லியமாக இந்த வாட்ச்மூலம் கண்டறியும் வசதியுள்ளது. அதனால்தான், கேஸ்டன் டி அக்வினோவுக்கு இதயத் துடிப்பு அதிகரித்ததும் அவருக்கு வாட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாட்ச்சில், உடலின் வெப்பநிலை, போன் அழைப்புகள், மியூசிக் எனப் பல வசதிகள் உள்ளன"  என்றனர் ஆப்பிள் நிறுவனத்தினர். 

கேஸ்டன் டி அக்வினோ கூறுகையில், "சம்பவத்தன்று, நான் நலமாகத்தான் இருந்தேன். என்னுடைய உடலில் எந்தவித மாற்றங்களும் எனக்குத் தெரியவில்லை. திடீரென நான் கட்டியிருந்த வாட்ச்மூலம் எனக்கு அலெர்ட் வந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றதால், நான் உயிர் பிழைத்துள்ளேன்" என்றார்.

 

Source: Ndtv

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

மடகாஸ்கரில் நிலவும் மோசமான வானிலையால் வெனிலா ஐஸ் க்ரீம் விலை திடீர் உயர்வு

  • தொடங்கியவர்

சுறாவிடமிருந்து நீச்சல் வீரரைக் காப்பாற்ற அரண் அமைத்த டால்ஃபின்கள்..!

 
 

சிறுவனைக் காப்பாற்றிய ஃபிலிப்போ:

டேவிட் செசி என்ற பதினான்கு வயது சிறுவன் தன் தந்தையோடு அட்ரியாடிக் கடல் பிராந்தியத்தின் மான்ஃப்ரிடோனா என்ற பகுதியில் தன் தந்தையோடு படகில் சென்றுகொண்டிருந்தான். நடுக்கடலில் தன் மகன் படகிலிருந்து தவறி விழுந்ததை மீன்பிடித்துக் கொண்டிருந்த மும்முரத்தில் இம்மானுவேல் செசி கவனிக்கவில்லை. சிறுவன் டேவிட் தன் கைகளை உதறித் துடித்து மேலே வர முயன்று கொண்டிருக்க, நீச்சல் தெரியாததால் அவன் மேலும் மேலும் கீழே இழுக்கப்பட்டான்.

Dolphin

 

துடித்துக் கொண்டிருந்த கை கால்களின் வேகம் குறையத்தொடங்கியது. படகில் தன் மகன் இல்லாததைக் கவனித்த இம்மானுவேல் மகனைத் தேடி இரைந்து கொண்டிருந்தார். மறுகணம் சிந்திக்காமல் கடலில் குதித்தார். மகன் விழுந்த இடத்தில் இருந்து சில தொலைவுக்குப் படகு நகர்ந்து சென்றிருந்ததால் படகைச் சுற்றி எவ்வளவு தேடியும் மகன் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. மகன் எங்கே விழுந்திருப்பான், எப்போது விழுந்திருப்பான். அவன் விழுந்ததைக் கவனிக்காமல் வெகுதூரம் வந்துவிட்டோமோ?

அவருக்கு இதயம் கனத்துப் பதறியது. தன் மகனைக் கவனிக்காமல் மீன் பிடிப்பதில் மும்முரமாக இருந்ததற்குத் தன்னையே நொந்து கொண்டிருந்தார். அழுவதைத் தவிர அவரால் அந்தச் சூழலில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. "டேவிட்" என்று இரைந்தவாறு படகில் இருந்து சுற்றிலும் நோட்டம் விட்டார். வந்த வழியாகவே படகைத் திருப்பி ஓட்டுவோம் என்று அவர் சிந்தித்துத் திருப்ப எத்தனிக்கையில் சிறிது தூரத்தில் மகனின் தலை தெரிந்தது. தாமதப்படுத்தாமல் மகனை நோக்கிப் படகை செலுத்தினார். அதே சமயம் மகனும் படகை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஆனால் அவன் கை, கால்களை அசைக்கவில்லை. தந்தைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அருகில் வந்தபிறகுதான் தன் மகனை ஒரு டால்ஃபின் காப்பாற்றி கப்பலை நோக்கிக் கொண்டுவந்தது புரிந்தது. அந்த டால்ஃபினின் பெயர் ஃபிலிப்போ. அந்தப் பகுதிக்கு ஒருமுறை வந்த டால்ஃபின் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட ஃபிலிப்போ அங்கேயே ஆதரவின்றிச் சுற்றித்திரிகிறது. ஃபிலிப்போவின் மனிதர்களிடம் ஐயமின்றிப் பழகும் கபடமற்ற அன்பிற்காகவே அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரத்தொடங்கினர். சில நாள்களாக உள்ளூர் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவனாக இருந்த ஃபிலிப்போ தற்போது அந்தப் பகுதியின் ஹீரோ.

 

டால்ஃபின்கள்

டாட் என்ட்ரிஸ் ஒரு சர்ஃபிங் வீரர். இது நடந்தது அவரது 24-வது வயதில். கலிஃபோர்னியக் கடல் அலைகளுக்குள் சர்ஃப் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலுக்கடியில் இருந்து மேலெழும்பிய 15 அடி வளர்ந்த சுறா அவரது சர்ஃப் போர்டுக்குக் கீழே இருந்து கடித்தது. போர்டைத் தாண்டி அதனால் கடிக்க முடியாததால் அவருக்குக் காயம் ஏற்படவில்லை. இடறி போர்டின் மேல் விழுந்தவர் சுதாரித்து எழுவதற்குள் விலகிச் சென்ற சுறா தனது இரண்டாவது தாக்குதலுக்காக விரைந்தது. இந்தமுறை அவரை போர்டில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கடிக்க முனையும்போது சர்ஃப் போர்டை எடுத்து அதன் வாய்க்கும் தனக்கும் நடுவே வைத்துவிட்டார். சர்ஃப் போர்டு சிறிது சேதமடைந்தது.

``சுறா திரும்பிச் சென்றுவிட்டது. நிச்சயமாக இம்முறை அது மிகுந்த சீற்றத்தோடு வரும். நிச்சயமாக நம்மால் அதைச் சமாளிக்க முடியாது" என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் என்ட்ரிஸ். அவர் உடலளவில் மிகவும் சோர்வடைந்தும் இருந்ததால் நீந்தவும் முடியவில்லை. இந்தமுறை ஆக்ரோஷமாக வந்த சுறா அவரது வயிற்றுப் பகுதியைக் கவ்வியது. வலியால் அலறிக்கொண்டிருந்தார் என்ட்ரிஸ். தன் வாழ்க்கை முடியப்போகிறது என்பதை உணர்ந்தவர் சுறாவின் வாயிலா தனது முடிவு இருக்க வேண்டும் என்றும் அந்தச் சூழ்நிலையில் அவருக்குத் தோன்றியது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு டால்ஃபின் கூட்டம் அவரைச் சுறாவிடம் இருந்து போராடி மீட்டதோடு மீண்டும் சுறா நெருங்காதவாறு அவரைச் சுற்றி வளையம் போட்டு சுற்றத் தொடங்கின. அவர் கரையை நெருங்கும் வரை பாதுகாப்பு வளையமாக அவரைச் சுற்றிக்கொண்டே வந்தன அந்த டால்ஃபின்கள்.

Circle formation

சுறாவை நெருங்கவிடாமல் மனிதர்களைக் காப்பாற்ற டால்ஃபின்கள் உருவாக்கிய இந்த வளைய அமைப்பை அவை காலம் காலமாகச் செய்கின்றன. கிரேக்க வரலாற்றில் இருந்தே அதற்கான பதிவுகள் இருக்கின்றன. அதேபோல் நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் வாங்கரே தீவின் கடல் பகுதிக்குத் தன் மகள் நிக்கி மற்றும் அவரது இரண்டு நண்பர்களை அழைத்துச்சென்றார் ராப் ஹௌவ்ஸ் என்பவர். மீட்புப் பணியில் இருந்தவரான அவர் அதுவரை பார்க்காத ஒரு விசித்திரத்தை அனுபவித்தார்.
சில டால்ஃபின்கள் அவரையும் அவரது மகளோடு சேர்த்து நான்கு பேரையும் ஒரே இடத்தில் சேரவைத்து அவர்களைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. தொடக்கத்தில் அவை இவர்களோடு விளையாடவே விரும்புவதாக நினைத்த அவர்கள் ரசித்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அது நேரம் செல்லச்செல்ல நீண்டுகொண்டே போனதால் அந்த வளையத்தில் இருந்து வெளியே வர ராப் முயன்றபோது இரண்டு பெரிய டால்ஃபின்கள் அவரைப் பிடித்து வளையத்தின் நடுவே தள்ளியது. அவற்றால்தான் ஆபத்து என்று நினைத்தவர் உதவிக்கு ஆள் யாரேனும் வருகிறார்களா என்ற எண்ணத்தோடு அந்தப் பகுதியை நோட்டமிட்டார். அப்போதுதான் அதைக் கவனித்தார்.
அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ஒரு பெரிய சுறா காத்துக்கொண்டிருந்தது. அந்த டால்ஃபின்கள் சுற்றிக்கொண்டே இருந்ததால் வெகுநேரம் காத்திருந்து இரை கிடைக்காது என்று தெரிந்துகொண்டு சுறா சென்றுவிட்டது. அதன்பிறகும் அதேபோல் பாதுகாப்பாக அவர்களைக் கரைக்கு அருகே வரை அழைத்துவந்து விட்டுச்சென்றுள்ளன.

Dolphins

``எங்களுக்கு இரண்டு மீட்டர் தூரத்தில் சுறா இருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். டால்ஃபின்களுக்கு எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. ஆனால், அவற்றுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். டால்ஃபின்கள் உண்மையில் மிகவும் அற்புதமான பாலூட்டிகள்." என்கிறார்  டாட்

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டோக்கியோவில் பங்குச் சந்தை அமைக்கப்பட்ட நாள்: மே.15- 1978

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1978-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி பங்குச் சந்தை அமைக்கப்பட்டது * 1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர். * 1957 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது. * 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

 
டோக்கியோவில் பங்குச் சந்தை அமைக்கப்பட்ட நாள்: மே.15- 1978
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1978-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி பங்குச் சந்தை அமைக்கப்பட்டது

* 1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
 
* 1957 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
 
* 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது. * 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
 
* 1963 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.

* 1972 - 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
* 1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது
 
* 1985 - குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

* 1988 - எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
 
* 1991 - ஈடித் கிரெசன் பிரான்சின் முதற்பெண் பிரதமரானார்.
 
* 2006 - வவுனியாவில் நார்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

தீபிகாவின் பிரின்டட் கவுன், ஹூமா குரேஷின் மெட்டல் ஆடை..கேன்ஸில் அசத்தும் நடிகைகள்! #Cannes2018

 
 

கேன்ஸ்

லகின் பிரமாண்டமான திரைப்பட  விழாக்களுள் ஒன்று, கேன்ஸ். ஆண்டுதோறும், பாரீஸின் பிரென்ச் ரிவேரா என்ற இடத்தில் நடைபெறும் இந்த விழா, இந்த மாதம் 9 முதல் 19 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவில், இந்தியத் திரையுலகம் சார்பாக, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத் எனப் பல பிரபல பாலிவுட் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் திரைப்பட விழாவில், திரையிடப்படும் உலகப் படங்களையடுத்து, அதிக கவனம் ஈர்ப்பது, அங்கு வருகைதரும் பிரபலங்களின் விதவிதமான உடைகளே. அந்த வகையில், பாரீஸில் நடைபெறும் விழாவில் நம் இந்திய நடிகைகள் வண்ணமயமான உடைகள் அணிந்து அசத்தினார்கள். அவற்றுள் சில...

 

தீபிகா படுகோன்

கேன்ஸ்

PC: instagram.com/deepikapadukone

நியூயார்க்கில் `மீட் காலா 2018’ என்ற பிரமாண்ட கலை விழாவில் பங்கேற்று முடித்த கையோடு, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார் தீபிகா படுகோன். கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும் உற்சாகம், தீபிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பக்கத்தில் தெறிக்கிறது. மேக்கப் செய்துகொள்வதும் முதல் பிரத்யேக ஆடை அணிந்து போஸ் கொடுப்பது வரை, அப்டேட் செய்துவருகிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர், ஸூஹேர் முராத் வடிவமைத்த வெள்ளை நிற கவுன் அணிந்து, ரெட் கார்பேட்டில் அழகு நடை போட்டார். அதற்குப் பொருத்தமாக, எம்ரால்டு மற்றும் வைர தோடு அணிந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அன்று, பிரபலமான அஷி ஸ்டியோவின் `ஸ்பிரிங் சம்மர் 2018' கலெக்‌ஷனிலிருந்து, `ஸ்கல்ப்ட்ரல் ஃபூஷ்சியா' ( Sculptural Fuchsia) பிங்க் கவுன் அணிந்து, அட்டகாசமாக போஸ் கொடுத்தார். தவிர,  இரண்டு பிரின்டட் கவுன் அணிந்து போஸ் கொடுத்ததுதான் பலரின் கவனத்தை ஈர்த்தது.

கங்கனா ரனாவத்

கேன்ஸ்

PC: instagram.com

ரெட்ரோ ஸ்டைல், மினி ட்ரெஸ், ஜம்ப்ஸூட் என வெரைட்டி காட்டி அசத்தினார் கங்கனா ரனாவத். முதல் நாளன்று, பிரபல ஆடை வடிவமைப்பாளர், சப்யாக்ஷி முகர்ஜி வடிவமைத்த பளபளப்பான கறுப்பு நிற சேலை அணிந்திருந்தார். ரெட் கார்ப்பெட்டில், ஸூஹேர் முராத் வடிவமைத்த க்ரீம் நிற கவுனை அணிந்து `போஸ்' கொடுத்தார். நீட்ரெட் தசிரோக்லு உருவாக்கிய ஜம்ப்ஸூட் அணிந்து, பார்வையாளர்களை ஈர்த்தார். அதற்குமுன், ஈலிசாபேட்டா ஃப்ரான்சி வடிவமைத்த நீல நிற மினி டிரஸ் அணிந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

PC: instagram.com

கடந்த வருடம் போலவே, இந்த ஆண்டும் மகள் ஆராதயாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார், ஐஸ்வர்யா ராய். சில நாள்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த ஐஸ்வர்யா ராய், தன் மகளுடன் கேன்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டபடி இருக்கிறார். ரெட் கார்ப்பெட்டில், மெக்கேல் சின்கோ உருவாக்கி மயில் நிற கவுன் அணிந்து அசத்தினார். அதற்கு முந்தைய நாள், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோரா வடிவமைத்த, மல்டி கலர் கவுன் அணிந்துகொண்டார். மற்றொரு நாள், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர், ரமி கேடி வடிவமைத்த மின்னும் வெள்ளி நிற கவுனை அணிந்திருந்தார்.  

ஹூமா குரேஷி

கேன்ஸ்

PC: instagram.com

`காலா' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழையும் ஹூமா குரேஷி, திருவிழாவின் முதல் நாளில் ஃபெப்ரிக் உடையில் மெட்டலில் வடிவமைக்கப்பட்ட டிசைன் ஆடையை அணிந்திருந்தார். பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் வருண் பாஹ்ல் வடிவமைத்த வெள்ளை நிற கவுன் அணிந்து, பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

மல்லிகா ஷராவத்

மல்லிகா

PC: instagram.com

 

கடந்த ஒரு வருடமாகப் பாலிவுட் பக்கம் தலைகாட்டாத நடிகை மல்லிகா ஷராவத், இந்த விழாவில், பிங்க் நிறத்தில் கறுப்பு நிற டிசைன் போடப்பட்ட கவுனில், ரெட் கார்பெட் வலம்வந்தார். ஆனால், ஒப்பனைகள் எதுவும் பெரிதாக இல்லாமல் சிம்பிளாகவே தோன்றினார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கின்னஸை நோக்கி பயணிக்கும் ரயில்வே ஓவியர்

20%202
20

ஒரே ஓவியத்தை திருப்பினால் இரு உருவங்களை காட்டும் நுட்பமான ஓவியங்கள்.   -  படங்கள்: க.ஸ்ரீபரத்

39

தத்ரூபமான மூதாட்டி ஓவியம்.

DSC9337
DSC9339
 
 

ஓவியக் கலை எல்லோருக் கும் வாய்த்துவிடுவதில்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் பல செய்திகளைச் சொல் லும் அற்புத படைப்பால் உலக அள வில் புகழ் பெற்றவர்கள் பலர். கண்களால் பார்த்து அளந்து, உன்னிப் பாகக் கவனித்து, நிறத்தை தேர்வு செய்து தொடர்ந்து வரைந்து பயின்றால்தான் சித்திரம் கைப்பழக்கமாகும். அந்த வகையில் பள்ளி பருவத்தில் முத்து முத்தான எழுத்துகளால் தொடங்கி, இப்போது ஓராயிரம் ஓவியங்களை வரைந்திருக்கிறார் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.ஏ.சங்கரலிங்கம்.

 

தெற்கு ரயில்வேயில் ஓவியர் பணியில் இருக்கும் ஒரேயொரு ஓவியரும் ஊழியரும் இவர்தான். ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் ஏற்படுத்துதல், அதற்கான வாசகங்கள் உருவாக்குதல், போஸ்டர்கள் உருவாக்குவது, ரயில்வே ஊழியர்களுக்கான வாசகங்கள் ஏற்படுத்தி தருவது போன்ற இவரது பணிகள் 34 ஆண்டுகளாக தொடர்கிறது.

ஓய்வு நேரம் எல்லாம் ஓவியங்களை உருவாக்குவது சங்கரலிங்கத்தின் பணியாக மாறிப்போனது. அவரது கற்பனைகள் உயிராக உரு மாறி தத்ரூபமான ஓவியங்களாக பரணமிக்கின்றன. இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்திருக்கிறார். இப்போது இவ ரது ஓவிய பயணத்தின் அடுத்தகட்ட மாக கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் நம்மிடம் கூறும்போது, ‘‘பள்ளி பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர் வம் அதிகம். ஆரம்பத்தில் எனது கையெழுத்தைப் பார்த்து சிறப்பாக இருக்கிறது என பாராட்டிய ஆசிரியர்கள், ஓவியராக ஊக்கப்படுத்தினர். எனக்கு ரோல் மாடல் என யாரும் கிடையாது. ஓவியம் பிடிக் கும் என்பதால், ஓவியம் வரைவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறேன். பள்ளி கல்வி முடிந்தவுடன் ஓவியக்கல்லூரியில் சேர விரும்பினேன்.

ஆனால், என் குடும்பத்தார் ஓவி யம் வரைந்தால், வேலைவாய்ப்பு பெரிய அளவில் இல்லை எனக் கூறி வேறொரு பிரிவில் படிக்கச் சொன்னார்கள். எனக்கு அதில் ஆர் வம் இல்லாததால், ஃபெயில் ஆகிவிட்டேன். ஆனால், ஓவியம் வரைவதில் தொடர்ந்து ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் தெற்கு ரயில்வேயில் ஓவியர் பிரிவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியர்களுக்கு வழங்கப்படும் ‘நுண்கலை விருது’ கடந்த ஆண்டு எனக்கும் வழங்கப்பட்டது. சமீபகாலமாக ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்களை காண்பது போன்ற ஓவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்த வகையில் 32 ஓவியங்களை வரைந்துள்ளேன்.

அடுத்து ஒரு ஓவியத்தை இருபுறமும் பார்த்து ரசிக்கும் வகையில் 34 ஓவியங்களை வரைந்துள்ளேன். ஒரு புறத்தில் ஒரு உருவமும், அதை தலைகீழாக பார்க்கும்போது மற்றொரு உருவமும் தெரியும். இதுபோன்ற ஓவியங்களை ஒரு சிலர் மட்டுமே வரைவார்கள். இந்தப் பிரி வில் சிறந்த ஓவியங்களை வரைந்து கின்னல் சாதனை செய்ய முயற்சித்து வருகிறேன். ஒரே ஓவியத்தை 4 பக்கமும் பார்த்தால் 4 விதமான உருவங் கள் தெரியும் வகையில் புதிய ஓவியத்தை வரையும் முயிற்சியில் உள்ளேன்’’ என்கிறார்.

இவர் ரயில்வே ஊழியர்தான் என்றாலும் நமக்கு அவர் ரயில்வே ஓவியர். இவரது தூரிகை படைக்கும் ஓவியங்கள் நிச்சயம் கின்னஸ் சாதனை படைக்கும் என எதிர் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

``இதுதான் மகிழ்ச்சிக் கோட்பாடு..!” - ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பேப்பரின் மதிப்பு எவ்வளவு?

 
 

ல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன புதிய கோட்பாட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஐயோ ஐன்ஸ்டீனா, 'தியரி ஆஃப் ரிலேடிவிட்டியா' இருக்குமோ, ஒரு வேளை 'ப்ளாக் ஹோல்' பற்றியா எனப் பதற வேண்டாம். இது ஐன்ஸ்டீனின் மகிழ்ச்சிக்கான கோட்பாடு, தி தியரி ஆஃப் ஹேப்பினஸ் (The Theory of Happiness). மற்ற அறிவியல் கோட்பாடுகளைப் போல இது கடினமான ஒன்றும் கிடையாது!

2017 அக்டோபர் 24, ஜெருசலேம். ஐன்ஸ்டீன் தன் கைப்பட எழுதிய ஒரு சிறு காகிதத் துணுக்கு ஏலத்துக்கு வருகிறது. அது 5000 டாலர்கள் முதல் எட்டாயிரம் டாலர்கள் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 1.56 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்படுகிறது. அந்த சிறு காகிதத்தில் எழுதியிருந்த வாசகம் இதுதான், "A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness". (அமைதியின்மையுடன் கிடைக்கக்கூடிய வெற்றியைவிட சாதாரண அமைதியான வாழ்க்கையே நிறைய மகிழ்ச்சியைத் தரும்). இதேபோல இன்னொரு காகிதத் துணுக்கு 240,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், முன்னர் அது 6000 டாலர்களுக்கு விற்கப்பட்டாலே போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் எழுதியிருந்தது நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வாசகமே. "Where there's a will, there's a way" மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதே அது.

 

ஐன்ஸ்டீன்

இந்தச் சுருக்கமான கோட்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் கதை சுவாரஸ்யமானது. 1922-ல் ஐன்ஸ்டீன் ஜப்பானின் டோக்கியோவுக்கு ஒரு விரிவுரைக்காகச் செல்கிறார். அவர் தங்குவதற்காக அங்குள்ள 'இம்பீரியல் ஹோட்டலில்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அறைக்கதவு தட்டப்படுகிறது. வெளியே சென்றவருக்கு ஒரு கடிதம் கொடுக்கப்படுகிறது. கடிதத்தைப் பிரித்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றிருக்கிறார் என்பதை அறிவிப்பதற்கான அதிகாரபூர்வ கடிதம் அது. தனக்கு இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டுவந்த அந்தப் பையனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என ஒரு தொகையைக் கொடுக்கிறார். ஆனால், அங்குள்ள பழக்கத்தினால் அப்பெருந்தொகையை வாங்க மறுக்கிறார் கடிதத்தைக் கொண்டு வந்தவர். கையில் கொஞ்சம்கூட சில்லறையும் இல்லை. ஆனால், தனக்கு இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்த பையனை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லை. சட்டென அந்த ஹோட்டலின் பெயர் பொரறித்த இரண்டு காகிதங்களில் மேற்கண்ட இரு வாசகங்களையும் எழுதி அந்தப் பையனின் கையில் கொடுக்கிறார். 

 

``உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஒருவேளை என்னிடம் சில்லறை இருந்து அதை நான் கொடுத்திருந்தால் இருக்கும் அவற்றின் மதிப்பை விட இவை இரண்டின் மதிப்பும் ஒரு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாறும்" என்று கூறியதாக இந்தக் காகிதங்களை ஏலத்தில் விற்றவர் கூறுகிறார். இந்தக் கடிதங்களை விற்றவர் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்கில் வசிக்கிறார். இவர் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு வென்றதற்கான கடிதத்தைக் கொண்டு சென்றார் அல்லவா, அவருடைய சகோதரராம். அறிவியல் மட்டுமல்ல பணத்தைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கணிப்பும் 95 வருடங்கள் கழித்து பலித்துவிட்டது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.

வரலாற்றில் இன்று….

மே 15

நிகழ்வுகள்

1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.
1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.
1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.
1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
1935 – மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.
1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.
1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

047-500x303.jpg1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
1972 – 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது
1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

பிறப்புக்கள்

1859 – பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
1912 – இராமசுவாமி ஐயர் (புளிமூட்டை), நகைச்சுவை நடிகர்.
1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)
1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி.

இறப்புகள்

1978 – ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)

சிறப்பு நாள்

சர்வதேச குடும்ப தினம்
பராகுவே – விடுதலை நாள் (1811)
மெக்சிகோ – ஆசிரியர் நாள் (Día del Maestro)
தென் கொரியா – ஆசிரியர் நாள் (스승의 날)

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இளவரசர் ஹரியின் வருங்கால மனைவியின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகின

இளவரசர் ஹரி அமெரிக்கா நடிகை மெகன் மேர்கிலே திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் மார்கிலேயின் இளவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டிஸ் அரண்மனையின் ஒரு உறுப்பினராக இன்னும் சில நாட்களில் இணையவுள்ள மார்கிலே தனது பதின்ம வயதில் உற்சாகமான நண்பர்களுடன் சேர்ந்து மகிழும் குணம்கொண்டவராக விளங்கியதை படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

image-m-5_1526318505917.jpg

மார்கிலே சாதாரண யுவதியாக வளர்ந்தார்,ஆனால் அவர் மிகப்பெரும் புகழ்பெறுவார்  என நாங்கள் எப்போதும் நம்பினோம் என அவரது சிறுவயது நண்பியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து யுவதிகளினதும் பெருங்கனவாக உள்ள விடயத்தை அவர் சாதிக்கப்போகின்றார் இளவரசர் ஹரியை மணம் முடிப்பதன் மூலம் இளவரசியாகப்போகின்றார் எனவும் அவரது நண்பி தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள தொடர்மாடியொன்றில் வளர்ந்த அந்த சாதாரண சிறுமி பிரிட்டனின் அரச குடும்பத்தை ஒருவரை மணமுடிக்கப்போகின்றார் என்ற விடயம் நம்பமுடியாததாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையும் தாயும் பிரிந்த பின்னர் மார்கிலே லொஸ்ஏஞ்சல்சில் உள்ள இரு அறை வீட்டில் வசித்தார்.
ஆனால் அது சிறந்த இடமாகவே காணப்பட்டது என அவரது நண்பிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த தொடர்மாடியில் கலைஞர்கள் மற்றும் பின்னாளில் நடிகர்களாக மாறியவர்கள் வசித்தனர் என்கின்றார் அவரின் நண்பர் ஒருவர்.

அந்த தொடர்மாடி தாரளமான இடவசதி கொண்டதாக,அழகானதாக காணப்பட்டது கணவரை விவாகரத்து செய்தபோதிலும் அவரது தாய் அவரை சிறந்த முறையில் வளர்த்தார் எனவும் நண்பியொருவர் தெரிவிக்கின்றார்.

image-m-9_1526318540188-383x400.jpg
அனைத்து பதின்மவயதினர் போலவும் மார்கிலேயும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதை விரும்பியுள்ளார்.

கலிபோர்னியாவில் அவர் நண்பர்களுடன் நீச்சல் உடையில் காணப்படும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
பாடசாலையில் அவர் காணப்படும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மார்கிலேயின் தாய் ஆபிரிக்க அமெரிக்க பின்னணியை கொண்டவர். தந்தை நெதர்லாந்து அயர்லாந்து பின்னணியை கொண்டவர்.

ஆனால் அவர் அனைத்து இனப்பின்னணியை சேர்ந்தவர்களுடனும் நண்பராகயிருந்தார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் அவரை ஆபிரிக்க அமெரிக்காராக கருதினார்கள் எனவும் நண்பியொருவர் தெரிவித்துள்ளார்.

image-m-19_1526318833970-215x400.jpg
மார்கிலே தனது தந்தையுடன் காணப்படும் புகைப்படமொன்றும் வெளியாகியுள்ளது.
அவரது பெற்றோர்கள் மிகச்சிறந்தவர்கள் தாய் அமைதியானவர் பணிவுள்ளவர் சமூக சேவைகளில் அக்கறையுள்ளவர் என மார்கிலேயின் நண்பியொருவர் தெரிவிக்கின்றார்.

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

காபி கடவுள்!

 
15CHVCM-EDIT2-STARBUCKS
 

சில வாரங்களுக்கு முன் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடையில் இரண்டு கறுப்பின வாடிக்கையாளர்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இது நடந்தது அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஃபிலடெல்பியாவில். இந்த விவகாரம் நொடியில் ஆர்ப்பாட்டமாகி, கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு போலீஸாரை எதிர்த்துப் புரட்சிசெய்தனர். ‘ஸ்டார்பக்ஸ்’ நிர்வாகம் அநீதிக்குப் பொறுப்பேற்று, இனிமேல் இப்படி நடக்காது என உத்தரவாதம் அளித்தது. போலீஸார் கைதுசெய்ததைப் படம்பிடித்த காணொளியை வெளியிட்டபோது, அதை இரண்டு கோடி மக்கள் பார்த்தனர். இவை எல்லாம் பத்திரிகைகளில் வந்தன.

 

இதைப் படித்தபோது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு விருந்தினராகப் போன ஒருவர் சொன்னது. பத்திரிகையில் வராத செய்தி இது. இன்று உலகம் முழுக்க வியாபித்து ‘ஸ்டார்பக்ஸ்’ 27,500 கிளைகளைக் கொண்டிருக்கிறது. 2,40,000 ஊழியர்கள் வேலைசெய்கிறார்கள். இதன் வருமானம் வருடத்துக்கு 22 பில்லியன் டாலர்கள் என்று சொல்கிறார்கள். இதன் முகாமையாளர்களும், முக்கிய அதிகாரிகளும் வருடத்துக்கு ஒருமுறை மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

கொஸ்டாரிக்காவில் நடக்கும் விழாவில் கலந்துகொள் வதற்காகத்தான் அந்த விருந்தினர் விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். அங்கேதான் ‘ஸ்டார்பக்’ஸுக்குச் சொந்த மான பெரிய காபி தோட்டம் இருக்கிறது. காபி செடிகளை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது போன்ற விஷயங்களில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதன் உரிமையாளர் - தலைவர் நேரில் கலந்துகொள்கிறார் என்பதுதான். பணியாளர்கள் அவரைக் காண்பது மிகமிக அரிது. அவரைச் சந்திப்பது கடவுளைச் சந்திப்பதற்குச் சமம் என்று தங்களுக் குள் பேசிக்கொள்வார்கள். அன்று விமானத்தில் ஜனம் இல்லை. முதல் வகுப்பில் விருந்தினரும், இருபது இருபத் தோரு வயது மதிக்கக்கூடிய ஓர் இளைஞனும்தான். அவன் சாதாரண உடை அணிந்திருந்தான். நன்றாகத் தோய்த்து சுருக்கம் நீங்காத, முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ். சாயம் போன டீஷர்ட். முதல் வகுப்பில் அவன் பயணிப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவன் மாணவனா? விடுமுறை நாளாகவும் இல்லை. முதல் வகுப்பில் பயணப் படுவதால் பணக்காரனாக இருக்க வேண்டும் - இப்படியெல்லாம் யோசித்தார்.

அந்த இளைஞனுக்கும் ஓர் ஆச்சரியம் இருந்தது. அவன் விருந்தினரைப் பார்த்தான். அவர் கனவான்போல உடை யணிந்திருந்தார். முக்கியமான ஒரு சந்திப்புக்குப் போகிறார் அல்லது அதை முடித்துவிட்டுத் திரும்புகிறார் என யூகித்தான். ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பாளராக அவர் பதவி வகிக்கலாம். விமானத்தில் ஏறிய நேரத்திலிருந்து மடிக்கணினியைத் திறந்து வைத்து அதிலே தட்டச்சு செய்தார். விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பத்து நிமிடமும் வந்து அவரிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என விசாரித்தாள். அவருடைய கிளாஸில் பழரசம் முடியும் முன்னர் மீண்டும் நிரப்பினாள். அடிக்கடி அவர் அந்த விமானத்தில் பயணம் செய்பவராக இருக்க வேண்டும்.

ஆனால், இளைஞனை ஆச்சரியப்படுத்தியது அதுவல்ல. அவர் கையிலே பிடித்திருந்த வழுவழுப்பான அட்டையில் காபி தோட்டப் படம் ஒன்று காணப்பட்டது. அதற்கு மேலே வலது பக்க மூலையில் ‘ஸ்டார்பக்’ஸின் சின்னம் கடும் பச்சை நிறத்தில் பொறித்திருந்தது. நீண்ட தலைமுடியில் கிரீடம் வைத்து, கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி நிற்கும் பெண். அவர் நிச்சயமாக ‘ஸ்டார்பக்’ஸில் வேலை செய்யும் உயர் அதிகாரியாக இருக்க வேண்டும் என முடிவுசெய்தான். சட்டென்று கையை நீட்டி ‘நான் ரியோ’ என்று தன்னை அறிமுகப்படுத்தினான். விருந்தினரும் கையைக் குலுக்கியபடி தன் பெயரைச் சொல்லிவிட்டு, ரியோவைக் கூர்ந்து பார்த்தார். சிரித்த முகம். துணிச்சலான கண்கள். எவரையும் முதல் பார்வையிலேயே வசீகரித்துவிடும் முகம். அவனுக்குள் வார்த்தைகள் தோன்றி வெளியே வரத் துடித்துக்கொண்டிருப்பது உதடுகளில் தெரிந்தது. ‘நீங்கள் ஸ்டார்பக்ஸில் வேலைசெய்யும் அதிகாரியா?’ என்றான். அவன் குரலில் இருந்த மகிழ்ச்சி, அவன் ஏதோ ஒரு பெரிய கண்டு பிடிப்பைச் செய்துவிட்டதுபோல இருந்தது. அவர் சிரித்தார். ‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’

‘நீங்கள் கையிலே பிடித்திருக்கும் அட்டையில் அதன் சின்னம் உள்ளது. ஓர் ஊகம்தான்’ என்றான். ‘அப்படியெல்லாம் இல்லை. ‘ஸ்டார்பக்ஸ்’ நடத்தும் வருடாந்திர நிகழ்வில் கலந்துகொள்ளப்போகிறேன்.’ அப்போதுகூட தான் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டதை அவர் கூறவில்லை.

‘எங்கே விழா நடக்கிறது?’

‘கொஸ்டரிக்காதான். அங்கேதான் இந்த விமானத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்.’ ‘என்ன.. என்ன.. கொஸ்டரிக்காவா? அங்கேயா இந்த விமானம் பறந்துகொண்டிருக் கிறது?’ பளிச்சென்று பளிங்குபோல வெள்ளையாக இருந்த அவன் முகம் கறுத்துவிட்டது. ‘இது கலிஃபோர்னியாவிலுள்ள சான்ஹுசேக்கு அல்லவா போகிறது?’ சிறிது நேரம் யோசித்துவிட்டு, தன் பாக்கெட்டைத் துழாவி போர்டிங் அட்டையை உருவிச் சோதித்தான். பின்னர் சட்டென்று மௌனமாகி ‘ஸ்டார்பக்ஸ்’ சின்னத்து பெண்போல இரண்டு கைகளையும் மேலே தூக்கி தலையைக் குனிந்து முழங்கால்களைப் பார்த்தான். அவனுக்குத் தான் செய்த பிழை புரிந்தது.

ரியோவின் அப்பா பல வருடங்களாக அமெரிக்க விமானச் சேவையில் பணிபுரிகிறார். அந்தக் காரணத்தினால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இலவச விமானப் பயணச் சலுகை உண்டு. ரியோ இந்தச் சலுகையை அடிக்கடி பயன்படுத்துவான். ஒரேயொரு பிரச்சினைதான். விமானம் புறப்படுவதற்குச் சில மணி நேரம் முன்னே எந்தெந்த விமானம் எங்கிருந்து எங்கே போகிறது; ஏதாவது இடம் காலியாக இருக்கிறதா என்று கணினியில் பார்த்து தன் இருக்கையைப் பதிவுசெய்ய வேண்டும். அப்படிப் பல நகரங்களுக்குப் பயணித்திருக்கிறான். திரும்பும்போதும் காலியான விமானம் ஒன்றைப் பிடித்துத் திரும்பிவிடுவான்.

இது அவனுக்கு ஒரு விளையாட்டு மாதிரிதான். இம்முறை ஒரு தவறு நடந்துவிட்டது. அவன் பதிவுசெய்யும்போது கொஸ்டரிக்காவில் உள்ள சான்யுவானுக்குப் போகும் விமானத்தில் பதிவுசெய்துவிட்டான். ஓர் எழுத்துதான் வித்தியாசம். அவசரத்தில் அவன் தன் போர்டிங் அட்டையைக்கூடச் சரியாகக் கவனிக்கவில்லை. விருந்தினர் அவன் சொன்னது முழுவதையும் பரிவுடன் கேட்டார். பின்னர், ‘என்ன தயக்கம்? அடுத்த விமானம் பிடித்துத் திரும்ப வேண்டியதுதானே?’ என்றார். ‘ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும். என் நண்பர் அங்கே சான்ஹுசே விமான நிலையத்தில் எனக்காகக் காத்து நிற்பார். விமானம் தரை இறங்கியதும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுவேன். பெரிய நட்டம் ஒன்றுமில்லை.’ ஒருவாறு இளைஞன் தன்னையே தேற்றிக் கொண்டான்.

‘அது சரி.. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மாணவரா அல்லது எங்காவது வேலை பார்க்கிறீர்களா?’

‘இரண்டும்தான். நான் நாலு வருடமாக ‘ஸ்டார்பக்’ஸில் வேலை செய்கிறேன். இப்போது எனக்கு பாரிஸ்டாவாகப் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். ‘ஸ்டார்பக்’ஸில் பச்சை நிற கவுன் போட்ட ஊழியர்கள் சாதாரணர். நான் மேற்பார்வையாளர், கறுப்பு மேலுடை அணிந்திருப்பேன்’ என்றான். ‘மாணவன் என்று சொன்னீர்களே?’ ‘அதுவும் உண்மைதான். ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனம் மேல்படிப்பு படிக்க விருப்ப மானவர்களை ஊக்குவிக்கிறது. அரிசோனா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு எனக்கு வசதிசெய்து தந்திருக்கிறார் ‘ஸ்டார்பக்ஸ்’ தலைவர். அவர் எங்களுக்குக் கடவுள் மாதிரி. நான் அவரைச் சந்தித்தது கிடையாது’ என்றான் ஏக்கத்துடன். ‘உங்கள் நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’ என்ற பெயரை எப்படித் தேர்வுசெய்தது? உங்களுக்குத் தெரியுமா?’ இளைஞன் சொன்னான் ‘அது ஒன்றும் ரகசியம் இல்லை. மோபி டிக் நாவலில் வரும் ஒரு மாலுமியின் பெயர்.’

‘ஓ, அது எனக்குத் தெரியும். எப்படி அந்தப் பெயரை மட்டும் தேர்வுசெய்தார்கள். கப்பல் தலைவனின் பெயரைத் தேர்வுசெய்யவில்லையே?’

ரியோ சொன்னான், ‘சமீபத்தில்தான் இணையத்தில் படித்தேன். ‘St’ என்று தொடங்கும் எந்தப் பெயரும் அழகாக இருப்பதுடன் அந்தச் சத்தமே ஒரு வலிமையின் குறியீடாக இருக்கும். இதை ஆரம்பித்தவர்கள் முதல் இரண்டு எழுத்துகளைத் தீர்மானித்த பின்னர் பெயர்களைத் தேடி எடுத்தார் களாம்.’ ‘அப்படியா! இது நல்ல தகவல். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் எத்தனை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள்! அது சரி, தலைவரைச் சந்திக்க முடியாது என்று சொன்னீர்களே.. சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ ‘செய்வீர்களா? என் மீதி ஆயுளை வாழ்வதில் அர்த்தமில்லை. வாழ்நாள் பயனை அடைந்துவிடுவேன்.’ ‘உங்களுக்குத் தலைவரைச் சந்திக்க விருப்பமா?’

‘உண்மையாகவா?’

‘உண்மையாகத்தான். விமான நிலையத்திலிருந்து நேராக விழாவுக்குத்தான் போகிறேன். எனக்கு கார் அனுப்பியிருப்பார்கள். நீங்களும் என்னுடன் வரலாம். சந்திப்பு முடிந்த பின்னர் இன்று இரவே நீங்கள் விமானம் பிடித்துத் திரும்பிவிடலாம்.’

‘கனவுபோல இருக்கிறதே. என்னிடம் நல்ல மாற்று உடுப்புக்கூடக் கிடையாதே.’ ‘அதனாலென்ன? என்னிடம் கூடத்தான் மாற்று உடுப்பு இல்லை. உங்கள் உடை நன்றாகத்தானே இருக்கிறது. உங்களுக்கு ஆச்சரியம் தருவது போல உங்கள் தலைவருக்கும் ஓர் ஆச்சரியம் கிட்டலாம் அல்லவா?’

ரியோ விருந்தினரைப் பார்த்துச் சொன்னான். ‘என்னுடைய அம்மா நான் சிறு வயதாக இருந்தபோது சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. சிலவேளை தவறான ரயில் பிடித்துச் சரியான இடத்துக்குப் போய்ச் சேரலாம். பாருங்கள், தவறான விமானம் பிடித்து இங்கே வந்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் நடக்கவிருக்கிறது. எல்லாமே எப்போதோ எழுதப்பட்டுவிட்டது, இல்லையா?’ என்றான். அவன் முகம் முழுக்கப் பரவசமாக மாற்றம் கொண்டிருந்தது. விருந்தினருக்கு ஒரு நீண்ட கறுப்பு நிற பளபளக்கும் கார் விமான நிலையத்தில் காத்திருந்தது. அவருடன் ரியோவும் விழாவுக்குப் போனான். ‘ஸ்டார்பக்ஸ்’ தலைவர் பெருந்தன்மையாக ‘அவன் யார், ஏன் வந்திருக்கிறான்’ போன்ற கேள்விகள் ஒன்றையும் எழுப்பவில்லை. விழா சிறப்பாக நடந்தது. வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு நாடுகளின் பொறுப்பாளர்கள். விழா முடிவுக்கு வரும் சமயத்தில் இளைஞனை அறிமுகம் செய்ததோடு அவனைப் பற்றிய விவரங்களையும் விருந்தினர் தலைவருக்குச் சொன்னார். அவர் வியப்பு மேலிட அவனைப் பார்த்தார்.

ரியோவின் தலைக்குள் இருதயம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தலைவர் ‘மகிழ்ச்சி, மகிழ்ச்சி’ என்று இரண்டு தரம் சொல்லி அவன் பக்கம் தன் கையை நீட்டினார். பட்டுப்போல காற்றிலே அசையும் மெல்லிய துணியிலே தைத்த மடிப்புக் கலையாத ஆடையில் அவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். ரியோ அவசரமாக வலது கையில் இருந்த காபி கோப்பையை இடது கைக்கு மாற்றிவிட்டு, கையை நீட்டினான். எத் தனை முயன்றும் முகத்தில் இருந்த பதற்றத்தை அவனால் அகற்ற முடியவில்லை. கை நடுங்கியது. ஒரு துளி காபி அவருடைய வெள்ளை உடுப்பில் தெறித்து கறுப்பு வட்டமாக மாறியது. ரியோ நடுங்கிவிட்டான். ‘ஓ மன்னியுங்கள், மன்னியுங்கள்’ என்று கத்தினான். ‘இதில் என்ன? பல தடவை நடந் திருக்கிறது. உலகத்துக்கு காபியை உற்பத்திசெய்வதிலும் பார்க்க அதை உடையில் கொட்டுவதில்தானே என் சாமர்த்தியத்தை இதுவரை காட்டி வந்திருக்கிறேன்’ என்றார் கடவுள்!

அ.முத்துலிங்கம், மூத்த எழுத்தாளர்,

http://tamil.thehindu.com

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

காபி கடவுள்!

 
15CHVCM-EDIT2-STARBUCKS
 

சில வாரங்களுக்கு முன் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடையில் இரண்டு கறுப்பின வாடிக்கையாளர்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இது நடந்தது அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஃபிலடெல்பியாவில். இந்த விவகாரம் நொடியில் ஆர்ப்பாட்டமாகி, கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு போலீஸாரை எதிர்த்துப் புரட்சிசெய்தனர். ‘ஸ்டார்பக்ஸ்’ நிர்வாகம் அநீதிக்குப் பொறுப்பேற்று, இனிமேல் இப்படி நடக்காது என உத்தரவாதம் அளித்தது. போலீஸார் கைதுசெய்ததைப் படம்பிடித்த காணொளியை வெளியிட்டபோது, அதை இரண்டு கோடி மக்கள் பார்த்தனர். இவை எல்லாம் பத்திரிகைகளில் வந்தன.

 

இதைப் படித்தபோது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு விருந்தினராகப் போன ஒருவர் சொன்னது. பத்திரிகையில் வராத செய்தி இது. இன்று உலகம் முழுக்க வியாபித்து ‘ஸ்டார்பக்ஸ்’ 27,500 கிளைகளைக் கொண்டிருக்கிறது. 2,40,000 ஊழியர்கள் வேலைசெய்கிறார்கள். இதன் வருமானம் வருடத்துக்கு 22 பில்லியன் டாலர்கள் என்று சொல்கிறார்கள். இதன் முகாமையாளர்களும், முக்கிய அதிகாரிகளும் வருடத்துக்கு ஒருமுறை மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

கொஸ்டாரிக்காவில் நடக்கும் விழாவில் கலந்துகொள் வதற்காகத்தான் அந்த விருந்தினர் விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். அங்கேதான் ‘ஸ்டார்பக்’ஸுக்குச் சொந்த மான பெரிய காபி தோட்டம் இருக்கிறது. காபி செடிகளை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது போன்ற விஷயங்களில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதன் உரிமையாளர் - தலைவர் நேரில் கலந்துகொள்கிறார் என்பதுதான். பணியாளர்கள் அவரைக் காண்பது மிகமிக அரிது. அவரைச் சந்திப்பது கடவுளைச் சந்திப்பதற்குச் சமம் என்று தங்களுக் குள் பேசிக்கொள்வார்கள். அன்று விமானத்தில் ஜனம் இல்லை. முதல் வகுப்பில் விருந்தினரும், இருபது இருபத் தோரு வயது மதிக்கக்கூடிய ஓர் இளைஞனும்தான். அவன் சாதாரண உடை அணிந்திருந்தான். நன்றாகத் தோய்த்து சுருக்கம் நீங்காத, முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ். சாயம் போன டீஷர்ட். முதல் வகுப்பில் அவன் பயணிப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவன் மாணவனா? விடுமுறை நாளாகவும் இல்லை. முதல் வகுப்பில் பயணப் படுவதால் பணக்காரனாக இருக்க வேண்டும் - இப்படியெல்லாம் யோசித்தார்.

அந்த இளைஞனுக்கும் ஓர் ஆச்சரியம் இருந்தது. அவன் விருந்தினரைப் பார்த்தான். அவர் கனவான்போல உடை யணிந்திருந்தார். முக்கியமான ஒரு சந்திப்புக்குப் போகிறார் அல்லது அதை முடித்துவிட்டுத் திரும்புகிறார் என யூகித்தான். ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பாளராக அவர் பதவி வகிக்கலாம். விமானத்தில் ஏறிய நேரத்திலிருந்து மடிக்கணினியைத் திறந்து வைத்து அதிலே தட்டச்சு செய்தார். விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பத்து நிமிடமும் வந்து அவரிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என விசாரித்தாள். அவருடைய கிளாஸில் பழரசம் முடியும் முன்னர் மீண்டும் நிரப்பினாள். அடிக்கடி அவர் அந்த விமானத்தில் பயணம் செய்பவராக இருக்க வேண்டும்.

ஆனால், இளைஞனை ஆச்சரியப்படுத்தியது அதுவல்ல. அவர் கையிலே பிடித்திருந்த வழுவழுப்பான அட்டையில் காபி தோட்டப் படம் ஒன்று காணப்பட்டது. அதற்கு மேலே வலது பக்க மூலையில் ‘ஸ்டார்பக்’ஸின் சின்னம் கடும் பச்சை நிறத்தில் பொறித்திருந்தது. நீண்ட தலைமுடியில் கிரீடம் வைத்து, கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி நிற்கும் பெண். அவர் நிச்சயமாக ‘ஸ்டார்பக்’ஸில் வேலை செய்யும் உயர் அதிகாரியாக இருக்க வேண்டும் என முடிவுசெய்தான். சட்டென்று கையை நீட்டி ‘நான் ரியோ’ என்று தன்னை அறிமுகப்படுத்தினான். விருந்தினரும் கையைக் குலுக்கியபடி தன் பெயரைச் சொல்லிவிட்டு, ரியோவைக் கூர்ந்து பார்த்தார். சிரித்த முகம். துணிச்சலான கண்கள். எவரையும் முதல் பார்வையிலேயே வசீகரித்துவிடும் முகம். அவனுக்குள் வார்த்தைகள் தோன்றி வெளியே வரத் துடித்துக்கொண்டிருப்பது உதடுகளில் தெரிந்தது. ‘நீங்கள் ஸ்டார்பக்ஸில் வேலைசெய்யும் அதிகாரியா?’ என்றான். அவன் குரலில் இருந்த மகிழ்ச்சி, அவன் ஏதோ ஒரு பெரிய கண்டு பிடிப்பைச் செய்துவிட்டதுபோல இருந்தது. அவர் சிரித்தார். ‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’

‘நீங்கள் கையிலே பிடித்திருக்கும் அட்டையில் அதன் சின்னம் உள்ளது. ஓர் ஊகம்தான்’ என்றான். ‘அப்படியெல்லாம் இல்லை. ‘ஸ்டார்பக்ஸ்’ நடத்தும் வருடாந்திர நிகழ்வில் கலந்துகொள்ளப்போகிறேன்.’ அப்போதுகூட தான் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டதை அவர் கூறவில்லை.

‘எங்கே விழா நடக்கிறது?’

‘கொஸ்டரிக்காதான். அங்கேதான் இந்த விமானத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்.’ ‘என்ன.. என்ன.. கொஸ்டரிக்காவா? அங்கேயா இந்த விமானம் பறந்துகொண்டிருக் கிறது?’ பளிச்சென்று பளிங்குபோல வெள்ளையாக இருந்த அவன் முகம் கறுத்துவிட்டது. ‘இது கலிஃபோர்னியாவிலுள்ள சான்ஹுசேக்கு அல்லவா போகிறது?’ சிறிது நேரம் யோசித்துவிட்டு, தன் பாக்கெட்டைத் துழாவி போர்டிங் அட்டையை உருவிச் சோதித்தான். பின்னர் சட்டென்று மௌனமாகி ‘ஸ்டார்பக்ஸ்’ சின்னத்து பெண்போல இரண்டு கைகளையும் மேலே தூக்கி தலையைக் குனிந்து முழங்கால்களைப் பார்த்தான். அவனுக்குத் தான் செய்த பிழை புரிந்தது.

ரியோவின் அப்பா பல வருடங்களாக அமெரிக்க விமானச் சேவையில் பணிபுரிகிறார். அந்தக் காரணத்தினால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இலவச விமானப் பயணச் சலுகை உண்டு. ரியோ இந்தச் சலுகையை அடிக்கடி பயன்படுத்துவான். ஒரேயொரு பிரச்சினைதான். விமானம் புறப்படுவதற்குச் சில மணி நேரம் முன்னே எந்தெந்த விமானம் எங்கிருந்து எங்கே போகிறது; ஏதாவது இடம் காலியாக இருக்கிறதா என்று கணினியில் பார்த்து தன் இருக்கையைப் பதிவுசெய்ய வேண்டும். அப்படிப் பல நகரங்களுக்குப் பயணித்திருக்கிறான். திரும்பும்போதும் காலியான விமானம் ஒன்றைப் பிடித்துத் திரும்பிவிடுவான்.

இது அவனுக்கு ஒரு விளையாட்டு மாதிரிதான். இம்முறை ஒரு தவறு நடந்துவிட்டது. அவன் பதிவுசெய்யும்போது கொஸ்டரிக்காவில் உள்ள சான்யுவானுக்குப் போகும் விமானத்தில் பதிவுசெய்துவிட்டான். ஓர் எழுத்துதான் வித்தியாசம். அவசரத்தில் அவன் தன் போர்டிங் அட்டையைக்கூடச் சரியாகக் கவனிக்கவில்லை. விருந்தினர் அவன் சொன்னது முழுவதையும் பரிவுடன் கேட்டார். பின்னர், ‘என்ன தயக்கம்? அடுத்த விமானம் பிடித்துத் திரும்ப வேண்டியதுதானே?’ என்றார். ‘ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும். என் நண்பர் அங்கே சான்ஹுசே விமான நிலையத்தில் எனக்காகக் காத்து நிற்பார். விமானம் தரை இறங்கியதும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுவேன். பெரிய நட்டம் ஒன்றுமில்லை.’ ஒருவாறு இளைஞன் தன்னையே தேற்றிக் கொண்டான்.

‘அது சரி.. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மாணவரா அல்லது எங்காவது வேலை பார்க்கிறீர்களா?’

‘இரண்டும்தான். நான் நாலு வருடமாக ‘ஸ்டார்பக்’ஸில் வேலை செய்கிறேன். இப்போது எனக்கு பாரிஸ்டாவாகப் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். ‘ஸ்டார்பக்’ஸில் பச்சை நிற கவுன் போட்ட ஊழியர்கள் சாதாரணர். நான் மேற்பார்வையாளர், கறுப்பு மேலுடை அணிந்திருப்பேன்’ என்றான். ‘மாணவன் என்று சொன்னீர்களே?’ ‘அதுவும் உண்மைதான். ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனம் மேல்படிப்பு படிக்க விருப்ப மானவர்களை ஊக்குவிக்கிறது. அரிசோனா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு எனக்கு வசதிசெய்து தந்திருக்கிறார் ‘ஸ்டார்பக்ஸ்’ தலைவர். அவர் எங்களுக்குக் கடவுள் மாதிரி. நான் அவரைச் சந்தித்தது கிடையாது’ என்றான் ஏக்கத்துடன். ‘உங்கள் நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’ என்ற பெயரை எப்படித் தேர்வுசெய்தது? உங்களுக்குத் தெரியுமா?’ இளைஞன் சொன்னான் ‘அது ஒன்றும் ரகசியம் இல்லை. மோபி டிக் நாவலில் வரும் ஒரு மாலுமியின் பெயர்.’

‘ஓ, அது எனக்குத் தெரியும். எப்படி அந்தப் பெயரை மட்டும் தேர்வுசெய்தார்கள். கப்பல் தலைவனின் பெயரைத் தேர்வுசெய்யவில்லையே?’

ரியோ சொன்னான், ‘சமீபத்தில்தான் இணையத்தில் படித்தேன். ‘St’ என்று தொடங்கும் எந்தப் பெயரும் அழகாக இருப்பதுடன் அந்தச் சத்தமே ஒரு வலிமையின் குறியீடாக இருக்கும். இதை ஆரம்பித்தவர்கள் முதல் இரண்டு எழுத்துகளைத் தீர்மானித்த பின்னர் பெயர்களைத் தேடி எடுத்தார் களாம்.’ ‘அப்படியா! இது நல்ல தகவல். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் எத்தனை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள்! அது சரி, தலைவரைச் சந்திக்க முடியாது என்று சொன்னீர்களே.. சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ ‘செய்வீர்களா? என் மீதி ஆயுளை வாழ்வதில் அர்த்தமில்லை. வாழ்நாள் பயனை அடைந்துவிடுவேன்.’ ‘உங்களுக்குத் தலைவரைச் சந்திக்க விருப்பமா?’

‘உண்மையாகவா?’

‘உண்மையாகத்தான். விமான நிலையத்திலிருந்து நேராக விழாவுக்குத்தான் போகிறேன். எனக்கு கார் அனுப்பியிருப்பார்கள். நீங்களும் என்னுடன் வரலாம். சந்திப்பு முடிந்த பின்னர் இன்று இரவே நீங்கள் விமானம் பிடித்துத் திரும்பிவிடலாம்.’

‘கனவுபோல இருக்கிறதே. என்னிடம் நல்ல மாற்று உடுப்புக்கூடக் கிடையாதே.’ ‘அதனாலென்ன? என்னிடம் கூடத்தான் மாற்று உடுப்பு இல்லை. உங்கள் உடை நன்றாகத்தானே இருக்கிறது. உங்களுக்கு ஆச்சரியம் தருவது போல உங்கள் தலைவருக்கும் ஓர் ஆச்சரியம் கிட்டலாம் அல்லவா?’

ரியோ விருந்தினரைப் பார்த்துச் சொன்னான். ‘என்னுடைய அம்மா நான் சிறு வயதாக இருந்தபோது சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. சிலவேளை தவறான ரயில் பிடித்துச் சரியான இடத்துக்குப் போய்ச் சேரலாம். பாருங்கள், தவறான விமானம் பிடித்து இங்கே வந்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் நடக்கவிருக்கிறது. எல்லாமே எப்போதோ எழுதப்பட்டுவிட்டது, இல்லையா?’ என்றான். அவன் முகம் முழுக்கப் பரவசமாக மாற்றம் கொண்டிருந்தது. விருந்தினருக்கு ஒரு நீண்ட கறுப்பு நிற பளபளக்கும் கார் விமான நிலையத்தில் காத்திருந்தது. அவருடன் ரியோவும் விழாவுக்குப் போனான். ‘ஸ்டார்பக்ஸ்’ தலைவர் பெருந்தன்மையாக ‘அவன் யார், ஏன் வந்திருக்கிறான்’ போன்ற கேள்விகள் ஒன்றையும் எழுப்பவில்லை. விழா சிறப்பாக நடந்தது. வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு நாடுகளின் பொறுப்பாளர்கள். விழா முடிவுக்கு வரும் சமயத்தில் இளைஞனை அறிமுகம் செய்ததோடு அவனைப் பற்றிய விவரங்களையும் விருந்தினர் தலைவருக்குச் சொன்னார். அவர் வியப்பு மேலிட அவனைப் பார்த்தார்.

ரியோவின் தலைக்குள் இருதயம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தலைவர் ‘மகிழ்ச்சி, மகிழ்ச்சி’ என்று இரண்டு தரம் சொல்லி அவன் பக்கம் தன் கையை நீட்டினார். பட்டுப்போல காற்றிலே அசையும் மெல்லிய துணியிலே தைத்த மடிப்புக் கலையாத ஆடையில் அவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். ரியோ அவசரமாக வலது கையில் இருந்த காபி கோப்பையை இடது கைக்கு மாற்றிவிட்டு, கையை நீட்டினான். எத் தனை முயன்றும் முகத்தில் இருந்த பதற்றத்தை அவனால் அகற்ற முடியவில்லை. கை நடுங்கியது. ஒரு துளி காபி அவருடைய வெள்ளை உடுப்பில் தெறித்து கறுப்பு வட்டமாக மாறியது. ரியோ நடுங்கிவிட்டான். ‘ஓ மன்னியுங்கள், மன்னியுங்கள்’ என்று கத்தினான். ‘இதில் என்ன? பல தடவை நடந் திருக்கிறது. உலகத்துக்கு காபியை உற்பத்திசெய்வதிலும் பார்க்க அதை உடையில் கொட்டுவதில்தானே என் சாமர்த்தியத்தை இதுவரை காட்டி வந்திருக்கிறேன்’ என்றார் கடவுள்!

அ.முத்துலிங்கம், மூத்த எழுத்தாளர்,

http://tamil.thehindu.com

 

உதை எழுதியவர்  இதில என்ன சொல்ல வருகிறார் விளங்கவில்லை ?
 

  • தொடங்கியவர்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975

 

அ-அ+

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார். படிக்கும்போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969-ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று

 
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975
 
ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார்.

படிக்கும்போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969-ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார்.

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972-ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார்.

இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரெஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1975-ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக் கொண்டனர்.

1953-ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்காய் ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர்.

மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்துவிட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார்.

அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975-ம் ஆண்டு இதே நாளில் எவரெஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61 வயதாகும் இவர் வயது காரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக் கொண்டார்.

இதே தேதியில் முக்கிய நிகழ்வுகள்:-

* 1811 - கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்ச்சுக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன. * 1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது. * 1920 - ரோமில் ஜோன் ஆப் ஆர்க் திருத்தந்தை 15-ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார். * 1932 - பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். * 1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

* 1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. * 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. * 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. * 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. * 1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற்பெண் ஆனார்.

* 1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது. * 2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. * 2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

மற்ற கிரகங்களிலும் இடி, மின்னல், மழை இருக்குமா... என்ன சொல்கிறது அறிவியல்?

 
 

நெப்டியூன் கிரகத்தில் வைரங்கள் மழையாகப் பெய்யும். டைட்டன் கிரகத்தில் மீத்தேன் மழை பொழியும். OGLE-TR-56b கோளில் இரும்பு மழை பொழியும். இதுபோன்ற செய்திகளைச் சமூக ஊடகங்களில் நாம் அடிக்கடி கடந்திருப்போம். இதெல்லாம் உண்மைதானா? உண்மையில் வைர மழை பெய்யும் அளவிற்கு நெப்டியூன் கிரகம் செழுமையானதா? உடனே ஒரு ராக்கெட்டைப் பிடித்துப் போய் சில பல டன்கள் வைரங்களை எடுத்து வரலாமா என்று கற்பனையிலேயே நெப்டியூன் கிரகத்தின் வைர மழையில் நனைந்து உள்ளுக்குள் கொண்டாடியிருப்போம்.

இதுபோன்ற தகவல்கள் உண்மைதானா? மற்ற கிரகங்களில் மழைபெய்ய முதலில் எவ்வளவு தூரம் சாத்தியங்கள் உண்டு. எந்தெந்த கிரகங்களில் என்னென்ன வகையான மழைகள் பெய்யும் என்று பார்ப்போம். முதலில் வெள்ளி.

 

மழை

வெள்ளி கிரகத்தின் கந்தக அமில மழை:
சூரியனிலிருந்து இரண்டாவதாக இருப்பது வீனஸ். புவியின் அளவே கொண்டது. ஆனால், அதன் வளிமண்டலம் புவியின் வளிமண்டலத்தை விட 93 மடங்கு மிகவும் அடர்த்தியானது. அதன் வளியில் 96.5% கார்பன் டை ஆக்ஸைடு வாயுவே நிரம்பியுள்ளது. மீதம் 3.5% கூட நைட்ரஜன் வாயுதான். ஆரம்பகால ஆராய்ச்சி ஆதாரங்கள் அதன் வளிமண்டலத்தில் கந்தக அமிலமும், கந்தக டை ஆக்ஸைடு வாயுவும் கூட மிகக் குறைந்த அளவில் கலந்திருப்பது தெரியவந்தது.

வீனஸின் தட்பவெப்பநிலை 462 டிகிரி செல்ஷியஸ். சூரியனுக்கு வெகு அருகில் இருக்கும் மெர்க்குரி கிரகத்தைவிட அதிகமான அளவு இது. அங்கு பசுமை இல்ல வாயுவான கரிம வாயு மிகுதியாக இருப்பதுவே இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் மேகங்கள் 50 -70 கி.மீ அளவுக்கு அடர்த்தியாக இருக்கும். அதிகமான எரிமலைகள் இருப்பதால் அதிலிருந்து வெளியாகும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவும், கந்தக அமிலமும் மேகங்களில் கலந்திருக்கும். கந்தக அமிலம் மின்சக்தி கொண்டதாக இருப்பதால் அங்கு வீரியம் மிக்க மின்னல்கள் அடிக்கடி ஏற்படும். அத்தோடு கந்தக அமில மழையும் பெய்யும். ஆனால், வீனஸின் வெப்ப மிகுதியால் அமில மழைத் துளிகள் அதன் பரப்பை அடைவதற்கு 25 கி.மீ தூரம் இருக்கும்போதே ஆவியாகிவிடும். ஆக, வீனஸ் கிரகத்தில் கந்தக அமில மழை பெய்யும். ஆனால் அது தரையைத் தொடாது.

டைட்டானின் மீத்தேன் மழை:

Titan

சனி கிரகத்தின் 53 துணைக் கோள்களில் பெரிய கிரகமான டைட்டன் பூமியைப் போன்ற அமைப்புகளைக் கொண்டது. நமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக நீராதாரம் இருப்பது டைட்டன் கிரகத்தில்தான். பூமியைப் போலவே அங்கும் ஹைட்ரோ கார்பன்களால் ஆன கடல்கள், ஏரிகள் என்று இருக்கின்றன. ஆனால் ,டைட்டனில் மீத்தேன் வாயுக்கள் அதிகமாக உள்ளது. அங்கு இருக்கும் நீராதாரங்களிலும் மீத்தேன் மற்றும் ஈத்தேன் மூலக்கூறுகளே அதிகமாக இருக்கின்றன.

அதன் பருவநிலைகள் கூட பூமியைப் போலவே சில கால இடைவெளிகளோடு சீராக நடக்கிறது. புயல், மழை என்று அனைத்துமே இருந்தாலும் அதன் ஆறுகள், ஏரிகள், டெல்டா பகுதிகள், கடல் என்று அனைத்திலுமே மீத்தேன் கலந்திருக்கிறது. சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இங்கு இருப்பது போல் மணல் பரப்புகள் இல்லை. ஆனால், ஐஸ் துகள்கள் மணல் போலவே பரவி இருக்கின்றன. மேகக் கூட்டங்கள் மொத்த டைட்டனில் ஒரு சதவிகிதம் மட்டுமே. காலநிலை மோசமாகும் சமயங்களில் 8% வரை அதிகமாகின்றன. அதன் பருவநிலை சனியின் ஆதிக்கம் நிறைந்தது. கடந்த 2010 ம் ஆண்டு வரை டைட்டனின் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலமாக இருந்தது. அதன்பிறகு சனியின் சுழற்சியால் வடக்கு அரைக்கோளம் சூரியனின் பக்கமாகத் திருப்பப்பட்டுள்ளது.
ஆக, டைட்டனில் மீத்தேன் மழை பொழியும். அது விஷத்தன்மை நிறைந்தது என்பதால் நாம் அங்கு வாழமுடியாது.

நெப்டியூனின் வைர மழை:

நெப்டியூன், சூரியனிலிருந்து எட்டாவதாகவும் மிக தூரத்திலும் இருப்பது. முழுக்க முழுக்க வாயுக்களால் ஆனது. ஆகவே அங்கு மேற்பரப்பு என்ற ஒன்று இருக்காது. அங்கு போய் நீங்கள் இறங்க வேண்டும் என்று நினைத்துத் தரையிறங்கினால், மேற்புறமாகப் புகுந்து கீழ்புறமாக வந்துவிடலாம். அம்மோனியா மற்றும் மீத்தேன்களின் ஐஸ்கட்டிகளை அதிகமாகக் காணலாம். வேண்டுமானால் அங்கு தரையிறக்கலாம். என்ன ஒன்று, நடுவில் ஆங்காங்கே இருக்கும் புயலின் வேகமும் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் மீத்தேன் வைரங்களும் உங்கள் விண்கப்பலைச் சுக்குநூறாக உடைத்துவிடும். நெப்டியூன் 80% ஹைட்ரஜனால் ஆனது.

Neptune

அதன் காலநிலை நொடிக்கு 600 கி.மீ வேகமான புயற்காற்று நிறைந்தது. மீத்தேன், ஈத்தேன் துருவங்களைவிட மத்திய ரேகையில் ( Equator) 100 மடங்கு அதிகமாக இருக்கும். அங்கு ஏற்படும் அதிவேகப் புயல் ஐஸ் கட்டிகளைச் சுக்குநூறாக உடைத்துவிடும். அதுவும் மேற்பரப்பில் அல்ல. 7000 கி.மீ ஆழத்தில். அங்கிருந்து மத்தியப் புள்ளியை நோக்கி அந்த வைரம் போன்ற துகள்கள் மழைபோலப் பெய்யும்.
ஆக, நெப்டியூனில் வைரம் ``போன்ற"மழை பொழியும். ஆனால், 7000 கி.மீ ஆழத்தில்.

இரும்பு மழை பொழியும்  OGLE-TR-56b:

Exoplanet

OGLE-TR-56 என்ற நட்சத்திரத்தைச் சுற்றும் இந்தக் கிரகம் 2002 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தட்பவெப்பநிலை 2000 டிகிரிக்கும் அதிகமாக இருப்பதால் வேதிம மூலக்கூறுகள் ஆவியாகாது. மாறாக அதிகமான இரும்பு (Iron) மூலக்கூறுகள் உருவாகும். ஆகவே அங்கு இரும்பு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது இன்னும் நிரூபிக்கப்படாத ஊகம் மட்டுமே.

கோள்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அமைப்புகளும், தட்பவெப்பநிலையும் உண்டு. அவை அனைத்துமே விசித்திரமானவை. அறிய அறிய ஆர்வத்தைத் தூண்டுபவை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் ருசிகரம்: உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட நாய்

 

 
dog

அமெரிக்காவில் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட நாய் பாலி   -  படம்: ஏஃப்பி

 அமெரிக்காவில் அவசரப் போலீஸுக்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர் தான் வளர்த்த நாய் தன்னை சுட்டுவிட்டதாக பரபரப்புப் புகார் தெரிவித்ததால், போலீஸார் பதற்றமடைந்தனர்.

அமெரிக்காவின் ஐயோவா மாநிலம், போர்ட் டாட்ஜ் நகரைச் சேரந்தவர் ரிச்சார்ட் ரெம்மி. இவர் பிட்புல் மற்றும் லேப்ரடார் கலப்பின நாயை வளர்த்து வருகிறார். அதற்கு பாலி எனப் பெயரிட்டு இருந்தார்.

 

தினமும் அந்த நாய்க்கு ஓடுதல், சுவற்றில் ஏறி குதித்தல், கட்டளைக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பயிற்சிகளை ரிச்சார்ட் அளித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ரிச்சார்ட் தனது லைசென்ஸ் துப்பாக்கியை இடுப்புப் பகுதியில் வைத்திருந்தார்.

அப்போது நாய்க்கு, மெத்தை, ஷோபா மீது பாய்ந்து தாவுதல் பயிற்சியை ரிச்சார்ட் அளித்து வந்தார். அப்போது ஷோபா மீது ரிச்சார்ட் படுத்திருந்தார். அவர் மீது தாவி, குதித்து விளையாடி வந்த நாய்  பாலி திடீரென ரிச்சார்ட் மீது விழுந்து விளையாடியது.

அப்போது, ரிச்சார்டின் இடுப்புப் பகுதியில் வைத்திருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்தபோது, துப்பாக்கி லோடு செய்யப்பட்டிருந்தது. அதை ரிச்சார்ட் எடுப்பதற்குள் அவரின் நாய் பாலி, அதை தனது காலால் எடுக்க முற்பட்டு துப்பாக்கியை இழுந்தது. அப்போது, நாயின் கால் நகம் துப்பாக்கியின் டிரிக்கரில் பட்டவுடன் அது வெடித்து, ரிச்சர்ட் வலது காலில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து உடனடியாக உதவிக்காக 911 என்ற அவசர எண்ணுக்கு ரிச்சார்ட் அழைப்பு செய்தார். அவர்கள் வந்து ரிச்சார்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து ரிச்சார்ட் கூறுகையில், ''நான் வளர்க்கும் நாய் பாலிக்கு எப்போதும் போல்தான் பயிற்சி அளித்து வந்தேன். ஆனால், அன்று எனது இடுப்பிலிருந்த துப்பாக்கி லோடு செய்யப்பட்டிருந்தது. அந்த துப்பாக்கி கீழே வீழுந்ததும், அதே எடுக்க பாலி முற்பட்டபோது அது வெடித்தது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு, என் காலில் குண்டுபாய்ந்ததும் ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை அறிந்த எனது நாய் ஓ வென்று ஊளையிட்டு அழத்தொடங்கி, எனது காலின் அருகே படுத்துக்கொண்டது. அதன்பின் நான் அவசர எண்ணுக்கு அழைப்பு செய்து நாய் சுட்ட தகவலைக் கூறினேன்'' எனத் தெரிவித்தார்.

policejpg

ரிச்சர்டின் வீட்டை ஆய்வு செய்த போலீஸார்

 

இது குறித்து நகர போலீஸ் அதிகாரி ஷானன் வாட்ஸ் கூறுகையில், ’’ரிச்சார்ட் எங்களுக்கு போன் செய்து நாய் சுட்டுவிட்டது என்று கூறியதும் என்ன இவர் உளறுகிறார் என்று நினைத்தோம். ஆனால், அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோதுதான் எங்களுக்கு அனைத்தும் புரிந்தது. இதற்கு முன் நாய் ஒருவரை சுட்டுவிட்டதாக நான் கேட்டதே இல்லை. இருந்தாலும், எதிர்பாராத விபத்து என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். கவனக்குறையாக நடந்து கொள்ளக்கூடாது என்று ரிச்சார்டுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: ஜீன்ஸ்

 

 
shutterstock326276534%20Convertedcol

குழந்தை முதல் பெரியவர் வரை உலகம் முழுவதும் விரும்பி அணியப்படும் உடை ஜீன்ஸ். இன்று நவநாகரிக உடையாகக் கருதப்படும் இந்த ஜீன்ஸ் உருவாகி, 145 ஆண்டுகள் ஆகிவிட்டன! டெனிம் அல்லது டங்கரீ என்ற முரட்டுத் துணியால் ஜீன்ஸ் உருவாக்கப்படுகிறது.

 

17-ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் இத்தாலியிலும் முரட்டுத் துணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இந்தியாவில் தயாரித்த முரட்டுத் துணியை டங்கரீ என்று அழைத்தனர். இந்த டங்கரீயும் நீலச்சாயமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன.

JacobWDavisjpg

ஜேகப் டேவிஸ்   -  ஜேகப் டேவிஸ்

இப்படி நீலச் சாயத்தில் நனைக்கப்பட்ட முரட்டுத் துணிகளில் உருவான கால்சட்டைகளைப் பெரும்பாலும் தொழிலாளர்களே பயன்படுத்தி வந்தனர். இதே காலகட்டத்தில் இத்தாலியின் ஜெனோவா நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த முரட்டுத் துணிகளை, அந்த நகரின் பெயரிலேயே ‘ஜீன்ஸ்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற லெவி ஸ்ட்ராஸ், தனது சகோதரருடன் சேர்ந்து வியாபாரம் செய்தார். அப்போது சுரங்கத்தில் தங்கம் தேடும் பணி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான முரட்டுத் துணியில் கால்சட்டை தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று கருதினார். கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியை வைத்து ஒரு கால்சட்டை தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விட்டது.

வரவேற்பு அதிகம் இருந்ததால் பிரான்ஸிலிருந்து நீம் என்றழைக்கப்பட்ட முரட்டுத் துணியை வாங்கித் தைத்தார். அதுவே ‘டெனிம்’ என்று பின்னர் புகழ்பெற்றது. 1873-ம் ஆண்டு தையல் கலைஞர் ஜேகப் டேவிஸ், லெவி ஸ்ட்ராஸ் இருவரும் இணைந்து ’லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, நீலக் கால்சட்டைகளை அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்தனர். இப்படித்தான் ஜீன்ஸ் உருவானது. 1896 வரை புளூ ஜீன்ஸ் என்றழைக்கப்பட்டாலும், அவை நீலம் மற்றும் பழுப்பு வண்ணங்களிலேயே தயாராயின.
 

LeviStraussjpg
கடையாணி நீலக் கால்சட்டை (Reveted Jeans)

அல்கலி என்ற சுரங்கத் தொழிலாளி, சுரங்கத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை எல்லாம் ஜீன்ஸ் பாக்கெட்டிலேயே வைத்துவிடுவார். இதனால் ஜீன்ஸ் பாக்கெட்கள் அடிக்கடி கிழிந்து போகும். கிழிந்த பாக்கெட்களை தைத்துத் தைத்து சலிப்படைந்த தையர் கடைக்காரர், அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். பாக்கெட்களில் கடையாணி அடித்துவிடும்படி வேடிக்கையாகச் சொன்னார். இதையறிந்த லெவி ஸ்ட்ராஸ் ஜீன்ஸ் பாக்கெட்களில் கடையாணி அடிக்கும்படி கூறினார். இப்படித்தான் கடையாணி ஜீன்ஸ் உருவானது.

தொழிலாளர்கள் பயன்படுத்திய ஜீன்ஸ், பின்னர் ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் உடையாக மாறியது. 1950-களுக்குப் பின்னர் அனைவருக்குமான உடையாக உலகம் முழுவதும் மாற்றம் அடைந்தது. இன்று நவநாகரிக உடையாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

(கண்டுபிடிப்போம்!)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

வீட்டுக்கு அருகே பாய்ந்த எரிமலைக் குழம்பு

ஹவாயில் கீலவேயா எரிமலையின் சீற்றம் பல வீடுகளை அச்சுறுத்துகிறது. தனது உடைமைகளை எடுத்துச்செல்ல ஹவாயில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார் கீத் ப்ரோக். இவர் வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் எரிமலைக் குழம்பு பீறிடுவதைக் கண்டுள்ளார்.

  • தொடங்கியவர்

1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

வரலாற்றில் இன்று….

மே 16

நிகழ்வுகள்

1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1811 – கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
1920 – ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966 – சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.pop.jpg
1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.
1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.
1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

1931 – நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1830 – ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768)
1947 – பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)
2010 – அனுராதா ரமணன், எழுத்தாளர் (பி. 1947)

சிறப்பு நாள்

மலேசியா – ஆசிரியர் நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘நாளையும் மனிதன் வருவான்’
 

image_5470023e9e.jpgகாலப்பெரு வெளியினூடாக மானுடப் பயணங்கள் நடந்தபடியே உள்ளன. இந்தப் பயணத்தில் குதூகலமும் மங்கலமும் குளிரின் கதகதப்பும் உஷ்ணத்தின் சேட்டைகளும் காற்றின் மெல்லிய ஓட்டமும் - வேகமும் கடலின் மெனமும் - ஆர்ப்பரிக்கும் குமுறல்களும் மலையின் யௌவனமும் எரிமலையின் சீற்றங்களையும் கண்டபடியே, மக்கள் நடந்தபடியே...  

எங்கே தொடங்கியதோ, அதே புவனத்தின் மடியில் புரண்டு படுத்து, முடிவில் விழிகள் பனிக்க, உயிரை விடுவித்து மூச்சை நிறுத்துகின்றான். இது இயற்கையான சங்கதி. எல்லோருக்கும் இந்த அனுபவம் நடப்பது சர்வசாதாரணம். அழுது அரற்றுதல் அநாவசியம். 

எனவே, அச்சப்பட்டு அச்சப்பட்டு குறுகி நெளிந்து, ஓடி ஓடி ஒழிக்க இடமின்றி, இதுதான் வாழ்வா எனச் சொல்வதை விடுத்து, நிமிர்ந்து நடந்தால் என்னே உன் வீரம். இதுவே, மானுடன் என்றும் இருப்பான் என்னும் உயிர்ப்பு நிலை.  

நாளையும் மனிதன் வருவான்; ஒருவர் போகத் தொடரும் மனிதப் படையணி. துன்பப் படையெடுப்பை உங்கள் அறிவால் ஓட்டுக. உங்களால்த்தான் பயம் உங்களைப் பயமுறுத்த விழைகிறது. இருக்கும் வாழ்வு நிலையானது. அடுத்தவனுக்குப் பாடம் புகட்டுகிறது.

  • தொடங்கியவர்

சீன அதிபருக்கு அப்பா சொன்ன 3 வாழ்க்கைப் பாடங்கள்! - நம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

தன்னம்பிக்கை கதை

`ற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு நல்ல உதாரணமாக நான் இருக்கலாம்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரபல அமெரிக்க பேஸ்கெட் பால் பயிற்சியாளர் பேட் சம்மிட் (Pat Summitt). `நல்லது நினைத்தால், செய்தால் நமக்கும் நன்மையே விளையும்’ என்பது மூதுரை. இவை வெறும் சொற்களல்ல. அனுபவபூர்வமான உண்மை. நேர்மறை எண்ணம், நல்ல சிந்தனை, பிறரின் மேல் அக்கறைகொள்ளும் இயல்பு... இவையெல்லாம் நமக்கு நல்ல பலன்களையே பெற்றுத்தரும். இந்த உண்மையை உறக்கச் சொல்கிறது இந்தக் கதை... தவறு... உண்மைச் சம்பவம். சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping), ஒரு பத்திரிகையில் தனக்கு தன் அப்பாவிடமிருந்து கிடைத்த மூன்று பாடங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே அந்தப் பாடங்களைக் கேட்போமா?   

 

சீன அதிபர் ஜி ஜின்பிங்

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’ 

நூடுல்ஸ்

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ 

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. 

நூடுல்ஸ்

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)

 

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 
உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)
 

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.

உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.

இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும், அரசாங்கங்கள், தொழில்முறை சமுதாயங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பொது பேரணிகள் மூலம் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்து வருகின்றன. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.
 
 
 
 

இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை - மே 17, 2009

2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை - மே 17, 2009
 
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையே 1983-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டை நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த உள்நாட்டுப்போரின் உச்சகட்டமாக 2009-ம் ஆண்டு ராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தியது.

2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் வருமாறு:

1498 - வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்காட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 - நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 - நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

பிறப்புகள்

1873 – ஞானியார் அடிகள், சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)
1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)
1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி
1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்
1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்.

இறப்புகள்

1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
2007 – நகுலன், தமிழக எழுத்தாளர்
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
 

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்தது எப்படி? - சுவாரஸ்ய ஆய்வு

 

நீங்கள் 1500 கிலோ கணக்கும் போது உங்களால் எப்படி கூட்டில் அமர முடியும்? கடினம் தானே? பின் எப்படி ஆயிரம் கிலோவிற்கு மேல் கணக்கும் டைனோசர்கள் தங்கள் கூட்டில் அமர்ந்து முட்டைகளை அடைக்காத்து இருக்கும்?

தம் முட்டைகளை டைனோசர் எப்படி அடைகாத்து இருக்கும்? - சுவாரஸ்ய ஆய்வுபடத்தின் காப்புரிமைZHAO CHUANG

இதற்கான விடை அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் மிக சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது.

கடினமான ஆய்வு

ஆசியா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்கள் ஒன்றிணைந்த சர்வதேச ஆய்வு குழு ஒன்று இது குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

டைனோசரின் குழந்தை வளர்ப்பு பண்பு குறித்து ஆய்வு செய்வது என்பது சுலபமான ஒன்றாக இருப்பதில்லை. ஏனெனில், அதன் படிமங்கள் என்பது ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவானதாக இருக்கிறது. ஆனால், ஒரு நீண்ட முயற்சி மட்டும் ஆய்வுக்குப் பின் ஒவிராப்டோரோசர் என்று அழைக்கப்படும் டைனோசரின் ஒரு வகையின் அடைகாக்கும் தன்மை கண்டறியபட்டுள்ளது.

கூடும், முட்டையும்

இந்த டைனோசர்கள் நடுவில் கொஞ்சம் இடம் விட்டு ட்டமாக தங்களது முட்டைகளை கூட்டின் உள்ளே அடுக்கி வைத்து, அந்த வட்டத்தின் நடுவே அமரும்.

அந்த மைய வெளியானது டைனோசரின் எடையை தாங்கும். அதே நேரம், உடல் எடையினால் முட்டை உடையாமல், வெப்பமானது அந்த முட்டையினில்படும். இப்படியாக தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்து இருக்கிறது என்கிறது ஆய்வு.

தம் முட்டைகளை டைனோசர் எப்படி அடைகாத்து இருக்கும்? - சுவாரஸ்ய ஆய்வுபடத்தின் காப்புரிமைMASATO HATTORI

இந்த ஆய்வில் பங்கேற்ற கல்கரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த டர்லா, "இது ஒரு சுவாரஸ்யமான டைனோசர் குழு" என்கிறார்.

தம் முட்டைகளை டைனோசர் எப்படி அடைகாத்து இருக்கும்? - சுவாரஸ்ய ஆய்வுபடத்தின் காப்புரிமைKOHEI TANAKA

பெரும்பாலான டைனோசர்கள் நூறு கிலோ அல்லது அதற்கு குறைவான எடை உடையவை. பரவை போன்ற உடலும், குறிப்பாக கிளி போன்ற மண்டை ஓடும் உடையவை என்கிறார் அவர்.

நீல - பச்சை நிற முட்டைகள்

இந்த வகை டைனோசரின் முட்டைகள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் என்று முன்பே பல ஆய்வுகள் வலியுறுத்தி உள்ளன. பெரிய முட்டையின் எடையே 6 கிலோ வரை இருக்கும்.

தம் முட்டைகளை டைனோசர் எப்படி அடைகாத்து இருக்கும்? - சுவாரஸ்ய ஆய்வுபடத்தின் காப்புரிமைKOHEI TANAKA

இந்த ஆய்வினை `எளிமையானது மற்றும் நேர்த்தியானது` என்று கருத்து தெரிவித்துள்ளார் இயற்கை அறிவியலுக்கான வட கரோலினா அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் லிண்ட்சே.

இந்த ஆய்வானது டைனோசர் எப்படி பரிணமித்தது என்று புரிந்துக் கொள்ள உதவும் என்கிறார் அவர்.

https://www.bbc.com

  • தொடங்கியவர்

கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா படுகோனின் ‘வாவ்’ ஆடைகள்

மே’ மாதத்தின் மிகப்பெரிய உலக சினிமா விருது விழா என்றால் அது, ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’தான்.

கடந்த ஏழு தசாப்தங்களாக நடந்துவரும் இந்த விருது விழா தற்போது ஃபிரான்சில் நடைபெற்று வருகிறது. 71-வது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஐஸ்வர்யா ராய், ஹீமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், சோனம் கபூர் போன்ற பலர் கலந்துகொண்டனர்.

மே 19-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவில், ஒவ்வொருவரின் ரெட் கார்பெட் ஆடைகள்லேட்டஸ்ட் டிரெண்டிங். குறிப்பாக, தீபிகா படுகோன் தனது தினசரி ஆடைகளை
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட ஆறு ஆடைகளை
தேர்வுசெய்து அணிந்துவந்த தீபிகாவின் ‘வாவ்’  ஆடைகள்இதோ…

நீல நிற கெளபாய் காஸ்ட்டியூமில் ஃபிரான்சில் தரையிறங்கிய தீபிகாவின் கொள்கை, “கேன்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் ஸ்கின் கலருக்குத் தகுந்தமாதிரி டார்க் மேக்அப் போடுவதுதான்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குத் தகுந்தாற்போல் வெளிர் நிற உடைகளையே தேர்வுசெய்து அணிந்து வந்தார்.

deepika_3_19531-267x400.jpg

பாரம்பர்யமிக்க ராணி உடைகளிலிருந்து ஹாட் பிகினி காஸ்ட்டியூம்கள் வரை… தனக்குக் கொடுக்கப்படும் உடைகளுக்கு ஏற்றார்போல், லுக் அண்ட் ஸ்டைலை மாற்றிக்கொள்பவர், தீபிகா. இவ்விழாவில் தனது முதல் நாளில் ஃபேப்ரிக் க்ரேப் (Fabric Crepe) எனப்படும் மெல்லிய துணியில்  செய்யப்பட்ட உடையை (Gown) அணிந்திருந்தார். இதற்கு மேட்சிங்காக சுஹானி பரேக் என்பவர் வடிவமைக்கப்பட்ட
பிங்க் நிற காதணியை அணிந்திருந்தா

deepika_1_19390-338x400.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறைந்த அளவு மேக்கப் அணிய வேண்டும் என்று முடிவு செய்திருந்த தீபிகாவின் அடுத்த சாய்ஸ், வெளிர் நீல நிற பேன்ட் மற்றும் வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் டாப். அதற்குமேல் டெனிம் ஓவர் கோட். ஃபேஷன் நிறங்களில் ‘தி பெஸ்ட்’ எனப்படும் நீல – வெள்ளை நிற உடைக்குத் தகுந்தபடி ஸ்கின் கலர் ஃஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார் தீபிகா.

deepika_denim_19560-500x293.jpg

 

 

 

 

 

 

 

 

முதல் நாளின் தொடக்கத்தில் நெட் மற்றும் லேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட கிரீம் நிற ப்ரைடல் உடையைத் தேர்வு செய்திருந்தார். இதற்கு
பொருத்தமாக  வைரத் தோடுகள் மற்றும் சில்வர் நிற ஷூ அணிந்திருந்தார். முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்து தீபிகாவின் எவர் க்ரீன் ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார்.

deepika_2_19309-343x400.jpg

அடுத்ததாக, லோரியல் பாரிஸை (Loreal Paris) பிரதிநிதித்துவப் படுத்தும் முறையில், அந்த நிறுவனத்தின்ஆடைகளை அணிந்து வந்திருந்தார் தீபிகா. பர்பிள் நிற கோட் – சூட்டுக்கு  அடர் நிற காஜல் அணிந்திருந்தார்.

31521465_1848205528579143_39701426474351

 

மேற்கத்தைய
உடைகளுக்கான சிறந்தசிகைஅலங்காரம்  என்று கூறப்படும் ஸ்ட்ரெயிட்னிங் ஸ்டைலில், முழுக்க லோரியல் மேக்அப் பொருள்களை வைத்துத் தன்னை அலங்கரித்திருந்தார், தீபீகா.

இரண்டாவது நாளின் தொடக்கத்தில், மென்மையான உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருந்த சில்வர்-கிரீன் நிற உடையை அணிந்திருந்தார் தீபிகா. இத்தாலிய ஸ்டைலில் இந்த உடையை வடிவமைத்திருந்தார்,

deepika_loreal_19409-325x400.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்
மனதை கவர்ந்த ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு
 
 
IMGA0112%20copy.jpg
-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார்.

1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர்,  முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில்  500 இற்கும் அதிகமான 23 வகையான ஐந்தூரிய பூச்செடிகளை வளர்த்துவருகிறார். சிவப்பு, றோஸ்,  வெள்ளையென பல வர்ணங்களில் துலங்கும் ஐந்தூரியம் பூங்காவிற்குள் நுழைந்தால் குட்டி நந்தவனமாக காட்சி தருகிறது.

இதனைத் தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள இவர், தினமும் 300 முதல் 1,000 ரூபாவரை இதன் மூலம்  சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த பூச்செடிகளை தனியாகவும் பூச்சாடிகளிலும் வளர்த்துவருவதுடன்,  இவை  திருமண விழாக்கள்,  மரணச்சடங்குகள், வரவேற்பு வைபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.

இவரது குட்டி நந்தவனத்தை பலரும்  பார்வையிட்டு வருகின்றனர்.
IMGA0114%20copy.jpg
IMGA0116%20copy.jpg
IMGA0118%20copy.jpg
IMGA0119%20copy.jpg
IMGA0123%20copy.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

உலகத் தொலைத்தகவல் தொடர்பு தினம்

வரலாற்றில் இன்று….

மே 17

நிகழ்வுகள்

1498 – வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 – பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 – நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1846 – அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1983 – லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2006 – தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1749 – எட்வர்ட் ஜென்னர் – ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823)
1888 – டைச் பிரிமென், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1965)
1920 – பி. சாந்தகுமாரி, நடிகை, பாடகி
1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1967 – முகமது நசீது, மாலைதீவின் 4வது அரசுத்தலைவர்
1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
2006 – ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை
2007 – நகுலன், தமிழ் எழுத்தாளர்
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்

சிறப்பு நாள்world-1.jpg

உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்

நோர்வே – அரசியல் நிர்ணய நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

கண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல்  தமிழில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.