Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வைரலான கண்கலங்க வைக்கும் மூதாட்டி- குரங்கு புகைப்படம்!

 
 

குரங்கு ஒன்றின் புகைப்படம் கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. பார்த்த உடனேயே மனதை வருத்தும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

குரங்கு

முந்தைய காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாகவே வாழ்ந்து வந்தனர். ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது அனைவரும் சேர்ந்திருக்கும் சூழ்நிலை அமையும். அதுபோன்றே முந்தைய காலகட்டம் இருந்தது. ஆனால், நாம் தற்போது நவீன உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு வீட்டில் மூன்று பேருக்கு மேல் இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களும் தங்களின் பாதி நேரத்தை இணையம், செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் மட்டுமே செலவிட்டு வருகின்றனர். தற்போதுள்ள இளைஞர்கள், சிறுவர்களிடம் உறவுகள் மீதான பாசம் வெகுவாக குறைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஒருவருக்குப் பிறந்தநாள் அல்லது வேறு முக்கிய நிகழ்ச்சி என்றால் வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் செய்தால் தற்போதைய கொண்டாட்டங்கள், வாழ்த்து பகிர்தல் முடிந்து விடுகிறது.

 

 

இப்படி நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் உலகில், மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சமூகவலைதளத்தில் கடந்த நான்கு நாள்களாகதான் மனதை வருத்தும் புகைப்படம் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது. அதில் பாட்டி ஒருவர்  காய்கறி மார்க்கெட்டில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் குரங்கு ஒன்று உள்ளது. இதுதான் அந்தப் புகைப்படம். இதில் என்ன மனதை வருத்தக் கூடிய விஷயம் உள்ளது எனக் கேட்கலாம். ஆனால், அந்தப் படத்தில் உள்ளவர்கள் செய்யும் செயல் மற்றும் அவர்களின் உணர்ச்சிகள்தான் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்தப் பாட்டி ஏதோ ஒன்றைக் குரங்கிடம் புலம்புவது போன்றும் அதற்கு அந்தக் குரங்கு ஆறுதல் கூறுவதும் போன்றும் புகைப்படம் அமைந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படம் கூறும் கருத்து மிகப் பெரியது. கவனிக்க ஆள் இன்றி தவிக்கும் முதியவருக்கு ஒரு குரங்கு ஆறுதல் கூறுகிறது. ஆனால், மனிதர்களுக்கு நேரமில்லை. இதைப் பார்க்கும்போது நான் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

தட்டச்சு எந்திரம் மூலம் ஓவியம் - அற்புதம் நிகழ்ந்தது எப்படி?

உள்ளக தொலைபேசி எண்களை தட்டச்சு செய்து கொடுக்க சொன்னபோது, அதனை தொலைபேசியின் வடிவில் தட்டச்சு செய்து வழங்கியதை அனைவரும் விரும்பியுள்ளனர்

  • தொடங்கியவர்

கை குலுக்கிக் கொண்ட ‘கிம்- ட்ரம்ப்’: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ருசிகரம்

 

 
kim-and-trump

தென் கொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று முகமுடி அணிந்த இருவர் கைகுலுக்கிக் கொண்ட காட்சி   -  படம்: ராய்டர்ஸ்

பர்மிங்ஹாமில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அங்கு, வட கொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபரின் முகமூடிகளை அணிந்து வந்தவர்கள் கைகுலுக்கிக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

 

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல ஒருவர் உடை அணிந்து, அவரின் முகமுடி அணிந்து கையில் ஏவுகணை பொம்மையை ஏந்தி நடந்து பார்வையாளர்கள் அமரும் இடத்துக்கு வந்தார். இவரைப் பார்த்தவுடன் ரசிகர்கள் கூட்டம் அனைத்தும் இவர் பக்கம் திரும்பியது.

kimjpg

வட கொரியஅதிபர் கிம் போன்று முகமுடி அணிந்த நபர்

 

உடனடியாக அங்குப் பாதுகாவலர்களும், போலீஸாரும் வந்தனர். ஆனால், ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மற்றொருவர் எழுந்து கிம் ஜாங் உன் முகமூடி அணிந்திருந்தவரை நோக்கி வந்தார். அவரைக் கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஏனென்றால், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முகமுடி அணிந்து கிம் ஜாங் முகமூடி அணிந்தவரை நோக்கி நடந்து வந்தார்.

இருவரும் அருகருகே வந்ததும், ஒருவொருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டதையடுத்து, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

kim-and-trumpjpg

வடகொரிய அதிபர் கிம் போன்று முகமுடி அணிந்த நபர்

 

எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோர் சமீபத்தில் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். இந்தச் சந்திப்பு உலகநாடுகள் அனைத்திலும் கவனிக்கப்பட்டது. அதை உணர்த்தும் வகையில் இரு தலைவர்களின் முகமுடி அணிந்த இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். இதனால், ரசிகர்கள் மத்தியில் பெருத்த கரஒலியும், விசில் சத்தமும் எழுந்தது.

https://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது (ஆக.5, 1884)

 
அ-அ+

1884-ம் ஆண்டு இதே தேதியில் அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுதந்திர சிலை, அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச்சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ

 
 
 
 
அமெரிக்காவில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது (ஆக.5, 1884)
 
1884-ம் ஆண்டு இதே தேதியில் அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

சுதந்திர சிலை, அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச்சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார். இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையையும், மக்களாட்சியையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்....

• 1914 - அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமா கால்வாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

• 1949 - ஈக்குவாடரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.

• 1962 - 17 மாதத் தேடுதலுக்குப் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.

• 2003 - இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மேரியாட் உணவு விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். 
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இயற்கையைத் தேடும் கண்கள் : புல்வெளி தொலைந்தால் தொலையும் பறவை

 

 
iyarkaijpg

பேல்லிட் ஹாரியர்

கடந்த வாரம் வெளியான செய்தி ஒன்று நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. ஹாரியர் (பூனைப் பருந்து) பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதுதான்.

உலகம் முழுவதும் சுமார் 16 வகையான ஹாரியர் பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் மோண்டாகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவுக்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

   
 
iyarkai%203jpg

ஈஸ்டர்ன் மார்ஷ் ஹாரியர்

 

ஐரோப்பா, ரஷ்யா, தென் சீனா போன்ற பகுதி களிலிருந்து குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களுக்கு இவை வலசை வரும். இவற்றின் வாழிடம் வறண்ட, புல்வெளி நிலங்கள்தாம். எனவே ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா,  ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவற்றைக் காண முடியும்.

இவற்றின் உணவுப் பட்டியலில் சிறு சிறு பறவைகள், வெட்டுக் கிளிகள் போன்ற பூச்சிகள் முதல் எலிகள், பாம்புகள்வரை அடங்கும். இதர பறவைகளைப் போல இவை, மரத்தில் குந்திக்கொண்டி ருக்காமல், வானில் எப்போதும் சுற்றியலைந்தபடியே இருப்பதுதான் ஹாரியர் பறவைகளின் சிறப்பம்சம்.

iyarkai%202jpg

மோண்டாகு ஹாரியர்

 

பல காட்டுயிர் ஒளிப்படக்காரர்கள் பல வகையான ஹாரியர் பறவைகளைப் படம் எடுத்திருந்தாலும், மோண்டாகு ஹாரியர் பறவையைப் படம் எடுப்பது அவர்களின் கனவாக இருக்கும். காரணம், அவை மிகவும் சிறிய, ஆனால் நேர்த்தியான ஒரு பறவை. அந்தப் பறவையை நான் முதன் முதலில் தால் சப்பார் சரணாலயத்தில் படம் எடுத்தேன்.

முன்பெல்லாம் ஒரு இடத்தில் ஆயிரம் எண்ணிக்கையில் ஹாரியர் பறவைகளைப் பார்த்தால், இப்போது அதே இடத்தில் வெறும் நூறு எண்ணிக்கையில் மட்டுமே இந்தப் பறவைகளைப் பார்க்கிறேன். ஏன் அப்படி? நகரமயமாக்கலால் புல்வெளிகள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற, விவசாயப் பயன்பாட்டுக்கான ரசாயன உரங்களால் வெட்டுக்கிளி போன்றவை காணாமல் போக, ஹாரியர் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன. அவற்றைக் காப்பதற்கான முதல் படி, புல்வெளி நிலங்களைக் காப்பாற்றுவதுதான்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மர்லின் மன்றோ நினைவு தினம்

 

ஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டாலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது" என்று அன்றே உள்ளதைச் சொல்லி ஒட்டுமொத்த ஹாலிவுட் ஜாம்பவான்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் அந்த நம்பிக்கை நாயகி!

மர்லின்..! 1950-களில் பலருக்கும்  கனவுத்தாரகை. கிளாசிக்கல் கண்ணம்மா..பாப் கலாச்சாரங்களின் லிட்டில் பிரின்சஸ்..பத்திரிக்கை அட்டைப்படங்களின் டியரஸ்ட் டார்லிங்!  தன் மஸ்காரா விழிகளால் உலகையே மயக்கிக் கிறங்கடித்த மர்லின் மன்றோ நினைவு தினம் இன்று.

இப்படி எத்தனையோ கோடி மக்களின் மனம் கவர்ந்திழுத்த மர்லினின் இளமைக்காலம் அவ்வளவு ஈஸியானதாக அமைந்துவிடவில்லை. மூன்று திருமணங்கள், ஜான் எஃப் கென்னடியுடனான கிசுகிசுப்புகள், முப்பத்தாறு வயதிலேயே மரணம் என்று சர்ச்சைக்குரிய 'செக்ஸ்' சிம்பலாகவே பேசப்படும் மர்லினின் மறுபக்கம் மறைக்கப்பட்ட மர்மம்!!!

 

 

 

மர்லின் மன்றோ

சிறுவயதிலேயே தந்தையும் இல்லை. தாய்க்கும் மனநலம் சரியில்லை. ஆதலால் தன்னுடைய குழந்தைப் பருவம் முழுவதையும் அநாதை இல்லங்களிலேயே கழித்திருக்கிறார் இந்த அழகிய 'லைலா'. 16 வயதிலேயே கட்டாயத் திருமணம்,  பாலியல் சீண்டல்கள் என பல இன்னல்களைச் சந்தித்தவர்.  தனக்கான அடையாளங்களை தன்னம்பிக்கையுடன் தேடியிருந்திருக்கிறார். பள்ளிக் கல்வி கூட முடிக்காவிட்டாலும், பின்னாளில் பல்வேறு அறிஞர்களின் புத்தகங்களை தேடித் தேடி வாசித்து தன் வீட்டில் தனக்கென ஒரு மினி லைப்ரேரியை அமைத்து தன்னை செதுக்கியிருக்கிறார். கைவிடப்பட்ட விலங்குகளிடமும் சாலைகளில் திரியும் செல்ல பிராணிகளிடமும் மனிதநேயத்துடன் அன்பு காட்டும் பழக்கமுடையவர்.

 

 

தன் கவர்ச்சியால் மட்டுமல்லாமல் காந்தக் குரலாலும் எண்ணற்ற பாடல்களையும் பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் மர்லின்! கென்னடியும் இவரும் இணைந்து பாடிய, 'ஹேப்பி பர்த்டே மிஸ்டர் பிரசிடண்ட்' என்ற பாடல் ரசிகர்களின் ஏகபோக லைக்குகளை அள்ளியது. வெறும் 50 டாலர்களுக்கு அவரை போட்டோ எடுத்த நிலையை மாற்றி, அவர் அணிந்திருந்த உடையை மட்டுமே 1,267,500 டாலருக்கு விற்கச் செய்தது மர்லினின் வாழ்நாள் சாதனை!

"ஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டாலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது" எனச் சொல்லி ஹாலிவுட் ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்த நம்பிக்கை நாயகி!

மர்லின் மன்றோ! - சர்ச்சையல்ல.... சாதனை!!!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வெளியானது ‘சீமராஜா’ டீஸர்

  • தொடங்கியவர்

நம் மனதோடு பயணிக்கும் டிராவலர்ஸ் - `நண்பர்கள்'

3277_thumb.jpg
 
 
நம் மனதோடு பயணிக்கும் டிராவலர்ஸ் - `நண்பர்கள்'
 

`டேய் மச்சான்... நண்பர்கள் தினம் வரப்போகுது. எங்க போயி கொண்டாடலாம், என்ன ப்ளான்?' என, சுற்றி உள்ளவர்களின் கூச்சல் கடந்த வாரம் அதிகமாகவே கேட்டது. உலகத்தில் இருக்கும் எந்த உறவும் சாதாரணமானதல்ல. நம் மனதோடு ஒன்றிணைந்து பயணிக்கும் பயணிகளில் என்றுமே மறக்க மறுக்க முடியாத டிராவலர்ஸ் `நண்பர்கள்'தான். முதல் காதலின் நினைவுகளுக்குக் குறைந்ததல்ல நண்பர்களின் சேட்டைகள். அப்படிப்பட்ட சேட்டை ஃப்ரெண்ட்ஸ் கதைதான் இது.

நண்பர்கள்

5 மணிக்கு டான்னு அலாரம். 5:30-க்குக் குளியல். 6 மணி முதல் படிப்பு. 8 மணிக்கு, காலை உணவு. 8:30-க்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இப்படி ஏகப்பட்ட கடுமையான சட்டங்கள்கொண்ட விடுதி அது. இந்த ரூல்ஸைப் பின்பற்றவில்லை என்றால், `பெரம்பால்' நல்ல வரவேற்பு இருக்கும். இடைப்பட்ட நேரத்தில், குழுவாய் நின்று பேசவோ, சத்தமாகச் சிரிக்கவோ கூடாது. மின்னணு உபகரணங்களைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. வெளியிலிருந்து எந்த உணவு வகையும் கோட்டுக்கு இந்தப் பக்கம் வரக் கூடாது. `ஏன்டா... இப்டிலாமா ரூல்ஸு?'னு வாயைப் பிளக்கவைக்கும் அளவுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். ஏற்கெனவே பெற்றோரைப் பிரிந்து வாழும் அவர்களுக்கு, இவை மிகவும் சிரமமாக இருந்தது. இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு நடுவே முளைத்தது இவர்களின் அழகான நட்பு.
 
வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்தவள் ப்ரீத்தி. கட்டுப்பாடுகளே வாழ்க்கை என வாழ்ந்தவள் அபி. அதுவரை பாசம் என்றால் பணம் இருந்தால்தான் வரும் என நினைத்திருந்த அபிக்கு, ப்ரீத்தியின் அன்பு முழுமையைக் கொடுத்தது. விவரம் தெரிந்த நாள் முதல் அபியின் பெற்றோர், சகோதரர்கள்மூலம் தப்பித்தவறிகூட ஒரு பருக்கைச் சோறும் அவள் வாயில் விழுந்ததில்லை. இது அவளுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது. மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்தவள் அபி. அத்தனையும் ப்ரீத்தியின் அளவு கடந்த பாசத்தால் மீண்டு வந்தாள்.

 

 

இரண்டு வருட விடுதி வாழ்க்கை. மிகவும் சுட்டிப்பெண்ணான ப்ரீத்தி, அபியை சோகமாகவே வைத்திருப்பாளா என்ன? தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறாளோ இல்லையோ, போடப்பட்ட அத்தனை விடுதி நிபந்தனைகளையும் உடைக்க வேண்டும் என்பதே ப்ரீத்தியின் லட்சியம். இதற்கு கூட்டாளிதான் அபி. `ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்' என்று இதில் பெருமைவேறு பேசித் திரிந்தனர். 5 மணி அலாரம் அடித்ததும், உடம்பு சரியில்லை எனப் பொய் சொல்லிவிட்டு தூங்குவதும், பாதுகாவலருக்குத் தெரியாமல் சுவர் ஏறி குதித்துத் தின்பண்டங்கள் வாங்குவதும், வகுப்புக்குத் தாமதமாகப் போவதும், சாக்பீஸால் அடித்து விளையாடுவதும் என அத்தனை கோட்பாடுகளையும் வெற்றிகரமாக உடைத்துவிட்டனர். ஒருகட்டத்தில் எல்லை மீறி, குளியலறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். பிறகு, தலைமை ஆசிரியர்களிடம் இவர்கள் `1000 வாலா' பட்டாசுகள் வாங்கியது வேறு கதை. 

இத்தனை சுட்டித்தனங்களுடன், பள்ளி வாழ்க்கையைக் கடந்து சென்றவர்கள், ஒருகட்டத்தில் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். காரணம், அதே கட்டுப்பாடு, கோட்பாடுகள். இந்தமுறை விடுதி ரூல்ஸ் அல்ல. திருமணம், அலுவலகம், குடும்பம், குழந்தைகள் போன்றவை. எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், நினைத்த மறுகணமே தொடர்புகொள்ள வசதிகள் இருந்தாலும், மனிதனின் எல்லையற்ற ஓட்டம், வட்டமாக அல்ல நீளமாக மட்டுமே போய்க்கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் வட்டமாக மாறும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

எந்த உறவுமே, நம் கூடவே இருக்கும்போது அதன் மதிப்பு தெரியாது. விடுதியில் சேர்க்கும் வரை பெற்றோரின் பாசம் புரியாது. சந்தோஷமோ துக்கமோ அதைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும்போதுதான் உடன்பிறந்தவர்களின் முக்கியத்துவம் புரியும். இப்படி வாழ்க்கையில் `மிஸ்' செய்யும் அனைத்தையும் ஒரே ஒரு நல்ல நண்பனால் மட்டுமே கொடுக்க முடியும். கண் அசைவை வைத்து நம் மனதில் நினைப்பவற்றைப் புரிந்துகொள்ள லைஃப் பார்ட்னரால் மட்டும்தான் முடியுமா என்ன? மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு வாடிய முகத்தைக் கண்டு மனைவியிடமிருந்து தன் நண்பனைக் காப்பாற்றுவதும் நண்பர்கள்தானே! ரத்த சொந்தங்கள்கூட சுயநலமாக வாழும் இந்தக் காலத்தில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் அனைத்து நண்பர்களுக்கும், `நண்பர்கள் தின வாழ்த்துகள்!' பிஸியான வாழ்க்கையில் கொஞ்சம் நண்பர்களுக்காக பிரேக் எடுத்துக்கொள்வது தவறில்லையே! 

https://www.vikatan.com

நண்பர்கள் வாழ்க! - இன்று நண்பர்கள் தினம்


 

 

frinenshipday

 

 

எல்லா விஷயங்கள் குறித்தும் அப்பாவிடம் பேசமுடியுமா. அப்படிப் பேசுகிற நிலை, எந்த அப்பா ஏற்படுத்தித் தருகிறாரோ... அந்த மகன்கள், ‘அவர் எங்கிட்ட அப்பா மாதிரியே நடந்துக்கமாட்டார். ஒரு ப்ரெண்டு மாதிரிதான் நடந்துக்குவார்’ என்று கொண்டாடுவார்கள். மனித வாழ்க்கையில், நண்ப ஸ்தானம் என்பது, தனித்த இடம். உயர்ந்த பந்தம். உன்னதமான சொந்தம்.

சமீபத்தில் கூட, நடிகர் பிரபுதேவா தான் எழுதிய தொடர் ஒன்றில், ‘இங்கே அப்பா இல்லாதவர்கள் இருப்பார்கள். அம்மா இல்லாதவர்கள் இருப்பார்கள். அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்று இல்லாதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கள் என்று எவருமே இருக்கமுடியாது’ என்பதாகச் சொல்லியிருப்பார்.

 

உண்மைதான். நட்புக்கு இடம்பொருள்ஏவலும் இல்லை. நல்லதுகெட்டது பாகுபாடுகளும் பிரித்துவிடமுடியாது.

ஒருவருக்கான நட்பு, குடியிருக்கும் தெருவில் இருந்து தொடங்குகிறது. வீட்டுத்தெருவில் உள்ள நண்பர்கள், அபார்ட்மெண்ட்ஸில் உள்ள நண்பர்கள் என அறிமுகமாகி, பரந்துவிரிகிறது. அவ்வளவு ஏன்... கில்லி விளையாட ஒரு நட்புக்கூட்டம், பட்டம் விட இன்னொரு நட்புவட்டம், விழுந்துவிழுந்து படிக்க ஒரு நட்புக்கூட்டம், விழுந்ததையும் எழுந்ததையும் பரிமாறிக்கொள்ள நட்புநெருக்கம் என வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நட்பு, உடலினுள்ளே இருக்கும் நரம்பென இழைஇழையாக வந்துகொண்டே இருக்கும்.

மாப்ளே, மச்சான், டேய், தோழர், நண்பா, கிச்சு, விச்சு, குண்ஸு என என்ன சொல்லி அழைத்தாலும் குதூகலித்துப் போய்விடுவதுதான் நட்பின் ஸ்பெஷாலிட்டி.

வீட்டில் ஒரு டம்ளரைக் கூட இங்கிருந்து அங்கே நகர்த்தமாட்டார்கள். ஆனால் நண்பனின் அக்காவுக்கோ அண்ணனுக்கோ கல்யாணம் என்றால், ஆளை பிடிக்கவே முடியாது. றெக்கைக் கட்டிப் பறப்பார்கள். மண்டபத்தில் டெகரேட் செய்வது, சாம்பார் வாளி தூக்குவது, குத்தாட்டம் போடுவது, எதிர்வீட்டாரை விழுந்துவிழுந்து கவனிப்பது என எல்லாவேலையையும் இழுத்துப்போட்டுச் செய்வது என்று அவ்வளவு பொறுப்புடனும் சிரத்தையுடனும் நேர்த்தியாகச் செய்வதன் பின்னணியில் எதிர்பார்ப்பற்ற நட்பு, கோலோச்சுகிறது.

திருமணம் என்றில்லை, மரணத்தையும் தன் துக்கமாகப் பார்க்கிற மனசு, நண்பனின் பிரச்சினையை தன் கவலையெனக் கொள்கிற புத்தி, நண்பனுக்காக அடிக்க கை ஓங்குகிற வீரம், காதலுக்குத் தூது போகிற பறவை, பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கிற நெருக்கம் என நட்பு சூழ் உலகத்தின் வைட்டமின் சம்பவங்கள் எல்லோருக்கும் உண்டு!

வீட்டுத்தெரு நண்பர்கள், பள்ளித் தோழர்கள், கல்லூரி நண்பர்கள், ஹாஸ்டல் ரூம் மேட் நண்பர்கள், மேன்ஷன் நண்பர்கள், சென்னை நண்பர்கள், சொந்த ஊர் நண்பர்கள், ஆபீஸ் நண்பர்கள் என்று எத்தனையெத்தனை நண்பர்கள் இருந்தாலும், அரைநிஜார் பருவத்திலிருந்தே நம் ப்ளஸ் மைனஸ் தெரிந்து பழகுகிற பால்ய நண்பர்களுக்கு எல்லோர் மனதிலும் வாழ்விலும் தனியிடம் உண்டு.

உறவுக்காரர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்பவர்களை விட, நண்பர்களிடம் பேசினால் மட்டுமே நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பார்கள். அது பேச்சில்லை. மனசின் ஓபன் டாக். ஈகோ இல்லாத இடமும் பொறாமை கொள்ளாத இடமும் நட்பு மட்டுமே. அப்படி இவையெல்லாம் எட்டிப்பார்த்தால், அங்கே நட்புக்கோ தோழமைக்கோ இடமே இல்லை.

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். நட்பின்றி... என்றும் போட்டுக்கொள்ளலாம்.

உலகின் எல்லா நண்பர்களுக்கும் எல்லாரின் நண்பர்களுக்கும் இந்த நண்பர்கள் தினத்தில்... வாழ்த்துகள்!    

  • தொடங்கியவர்

கடவுளின் கைகளென கூறும் வியாட்மின் தங்க பாலம்…!

 

வியட்நாமின் துராங் சன்  மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள  பாலம் 100 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தற்போது இந்த பாலம் பலரது கவனத்தை பெற முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி தற்போது உலகம் முழுக்க பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

201808021502011626_handsofgod3._L_styvpf

வியட்நாமில் பானா மலைப்பகுதியில் காவ் வாங்க் கோல்டன் பாலத்தில்தான் இந்த கடவுளின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தை தாங்கி பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் அங்கு இருக்கும் மலையில் இருந்து வருவது போல சீமெந்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவருடமாக தீவிரமாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. டிஏ லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தை சேர்ந்த வு வியட் ஆன் இதை வடிவமைத்து இருக்கிறார்.

201808021502011626_hands-of-god._L_styvp

ஆனால் இந்த கோல்டன் பாலம் ஏற்கனவே கட்டப்பட்டது. இதில் இருக்கும் கை பகுதிதான் இப்போது கட்டப்பட்டது. 150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1919இல் கட்டப்பட்டது. பிரெஞ்ச் காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் இது. இந்த பாலம் கட்டப்பட்டபின் அந்த பகுதியில் நிறைய சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அங்கு பயணிகள் குவிந்து வருகிறார்கள். அதேபோல் இதன் புகைப்படமும் உலகம் முழுக்க பிரசித்தி பெற்று வருகிறது.

http://metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2-ம் உலகப்போரில் ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது (6-8-1945)

 
2-ம் உலகப்போரில் ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது (6-8-1945)
 
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றி பெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் 'பேர்ல்' துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. நேச நாடுகள் முதலில் ஜப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன.

பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி ஜெர்மனி 1945, மே 8-ம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் சரண் ஆவணம் கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது. பின்னர், 1945, ஜுலை 26-ம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய பிரிட்டனோடு இணைந்து, பாட்சுடம் அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ஜப்பானின் அரசு தோல்வியை ஏற்று, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடனடி, முழு அழிவுக்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் உடனடி, முழு அழிவு என்னும் சொற்கள் ஜப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று. இந்த எச்சரிக்கையை ஜப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை.

மான்ஹாட்டன் செயல்திட்டம் என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் ஜப்பானின் மீது வீசப்பட்டன. சிறு பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் நாளும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 9-ம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.

இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2- 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மக்களும், நாகசாக்கியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60 சதவீதம் பேர் தீக்காயங்களாலும், 30 சதவீதம் பேர் கட்டிட இடர்பாட்டிற்குள் சிக்கியும் பலியானார்கள். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இத்துடன் நான் திருடிய பணத்தை வட்டியுடன் அனுப்பியிருக்கிறேன்!- ஒரு நெகிழ்ச்சிக் கடிதம்


 

 

years-after-she-stole-money-from-a-restaurant-former-waitress-writes-an-apology-letter

 

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைவிட வலிமையானவை மனம் திறந்து எழுதப்படும் கடிதத்தின் வரிகள். காரணம் அதில் ஒரு நேர்மை இருக்கும்.  அதானால்தான் கடிதங்கள் வரலாறாக மாறிவிடுகின்றன. அரசியல் தலைவர்கள் எழுதிய கடிதத்தை நாம் போற்றிப் பேணுவதில்லையா?! அதுகூட வார்த்தைகளின் வலிமையால்தான்.

அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது ஒரு கடிதம் இணைய உலகில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்து வருகிறது. 

 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உணவகத்தில் வேலை பார்த்துவந்த ஊழியர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கடையில் இருந்து தான் திருடிய பணத்தை கடை முதலாளிக்கு வட்டியும் முதலுமாக அனுப்பியிருக்கிறார்.

அரிசோனாவின் டக்ஸோன் நகரில் கார்லோட்டா ஃப்ளோரஸ் என்பவர் எல் சார்ரோ என்ற மெக்சிகோ உணவகத்தை நடத்தி வந்தார். கடந்த வாரம் அவருக்கு வந்த கடிதம் ஒன்று அவரை நெகிழச் செய்துள்ளது.

அந்தக் கடிதத்தை உடனே தனது ட்விட்டரில் பகிர்ந்த கார்லோட்டா, "ஒரு காரியத்தை செய்வதால் இரண்டு பேருக்கு நன்மை கிடைக்கும் எனும்போது அந்தக் காரியத்தை செய்பவர் தனது அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற தேவையில்லை. எங்கள் வாரத்தை இந்தக் கடிதம் இனிதாக்கியுள்ளது. honestyisthebestpolicy #makeamends #behonest #nevertoolate #thankful" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்துடன் 1000 டாலர் பணமும் இருந்துள்ளது. அந்த நபர் எழுதிய கடிதத்தில் தன்னை ஒரு பெண் என்பதை மட்டும் அடையாளப்படுத்தியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் விவரம்:
நான் உங்கள் உணவகத்தில் 1990-களில் சில காலம் வேலை செய்தேன். என்னுடன் பணியாற்றிய சக ஊழியரின் உந்துதலின் பேரில் கடைப் பணத்தைத் திருடினேன். நான் பால்ய பருவத்தில் தேவாலயத்தில்தான் வளர்ந்தேன். அப்போதெல்லாம் நான் பணம் திருடியதில்லை. உங்கள் ஹோட்டலில் திருடிய பின் இதுநாள் வரை நான் வேறு எங்கும் எப்பொழுதும் திருட்டில் ஈடுபட்டதில்லை. 

ஆனால், என்னை நீங்கள் அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்தீர்கள். 20 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதும்கூட அந்த திருட்டு சம்பவத்தை நினைத்து நான் வருந்துகிறேன். உங்களிடமிருந்து திருடியதற்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்கவும். எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்துடன் நான் திருடிய பணத்தை வட்டியுடன் அனுப்பியுள்ளேன். உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் இறைவன் எப்போதும் ஆசிர்வதிக்கட்டும்" என நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிறார்.

https://www.kamadenu.in

  • தொடங்கியவர்

1945 ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு.

ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பலான அகஸ்டாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் அறிவித்தார். இதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குண்டைவிட, 2,000 மடங்கு பெரிய குண்டு இதுவென ட்ரூமன் கூறினார்.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைLIBRARY OF CONGRESS

ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு "லிட்டில் பாய்" எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைPA

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

குண்டு விழுந்த இடத்திலிருந்து ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக ஆவியானார்கள்.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைUNIVERSAL HISTORY ARCHIVE/UIG?GETTY IMAGES

மாபெரும் புகை எழுந்ததையும் மிகப் பெரிய தீ சுவாலைகள் பரவியதையும் பார்த்ததாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் அழிந்துபோயின.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைALINARI VIA GETTY IMAGES

இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைAFP

ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

இந்த நபர் குண்டுவீச்சின் போது அணிந்திருந்த கிமோனோ ஆடையில் அழுத்தமான வண்ணங்கள் என்ன பாணியில் இருந்ததோ, அதே பாணியில் தீக்காயம் ஏற்பட்டது.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

ஜெர்மனியும் அணுகுண்டைத் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்தப் பந்தையத்தில் முந்தியதாகக் கருதப்பட்டது.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.

Presentational grey line ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால், குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள். இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டதும், 1945 ஆக்ஸட் 8ஆம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. அதே மாதம் 14ஆம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.

https://www.bbc.com

  • தொடங்கியவர்

மனித மாமிசத்தை உண்பதற்கு தடையில்லா 5 நாடுகள்

 

உலகம் நாகரீகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் இந்த காலத்திலும் மனித மாமிசத்தை உண்பதற்கான தடையை விதிக்காத சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில், அவ்வாறு சில நாடுகளைப் பற்றி நோக்கினால்,

Untitled-2.jpg

01- இந்தோனேசியா - கொரோவா

 

ukanda.jpg

இந்தோனேசியாவில் தற்போது வாழந்துகொண்டிருக்கும் இறுதி பழங்குடியினரே  கொரோவா பழங்குடியினர். 

இவர்கள் மனித மாமிம்சம் உண்பதை திருவிழாவாகக் கொண்டாடி அதனை உண்பார்கள், இவர்கள் மனிதனுடைய முடி, நகம், பல் மற்றும் ஆண்  பெண் உறுப்புக்களை தவிர்ந்து மற்றையவைகளை விரும்பி உண்பார்கள். மேலும் மனித மாமிசத்தை சமைத்து வாழை இலையில் பரிமாறி உண்பது இவர்களுடைய வழக்கமாகும்.

 

02 - உகாண்டா 

 

indonesia.jpg

உகாண்டாவில் மனித மாமிசத்திற்கு தடை கிடையாது, ஆனால் மனிதனை கொலை செய்வதற்கு தடைவிதித்துள்ளனர். உலகில் மனித மாமிசம் உண்பவர்களில் அதிகம் உகாண்டாவிலுள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரே  ஆகும். இவர்கள் இறந்த மனித உடல்களை சமைத்தும் உண்பார்கள்.

 

03 - கம்போடியா 

 

campodia.jpg

2002 ஆம் ஆண்டில் கம்போடியாவில் சுடுகாட்டிற்கு எரிக்க வந்த பிணத்தை வைனில் வேகவைத்து உண்டதற்காக இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும் கம்போடியாவில் மனித மாமிசத்தை உண்பதற்கு தடை விதிக்காததால் இரு வாரங்கள் கழித்து அவர்களை விடுதலை செய்தனர்.

 

04 -  இந்தியா - அகோரிகள் 

 

akori.jpg

இந்தியா மற்றும் இதர நாடுகளில் வாழும் அகோரிகள் என்று அழைக்கப்படும்  ஆன்மீகவாதிகள் இறந்த பிணங்கள், சுடுகாட்டில் அரைகுறையாக எரிந்த பிணங்கள் என்பவற்றை உண்பார்கள், இந்திய சட்டத்தில் இவர்களுக்கு இவற்றிக்கான எவ்வித தடையும் கிடையாது. புனித இடமான காசியில் இவர்கள் அதிகமாக வாழ்வார்கள், உலகிலே மொத்தம் நூற்றுக்குட்பட்டோரே வாழ்கின்றனர், இவர்கள் மனித மண்டையோட்டில் உணவுகளை உண்பதும் நீரைப் பருகுவதும் இவர்களது தினசரி நடவடிக்கையாகும். 

 

05 - சீனா 

 

chine.jpg

உலகிலே மிகவும் மோசமான மனித மாமிசம் உண்பவர்கள் இங்கே தான் உள்ளனர். பொதுவாக மனிதமாமிசம் உண்பவர்கள் இறந்த உடலைதான் உண்பார்கள். ஆனால் இங்கு மனித கருக்களை உண்கின்றனர். கரு கலைந்த சிசுக்களை சூப் வைத்து உண்பார்கள். சகிப்புத்தன்மை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிடப்பட்ட கருத்தரிப்புகளை உண்கின்றனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

அழகின் குவியலாகும் ரயில் பெட்டி தொழிற்சாலை கழிவுகள்

உலோக கழிவுகளை கலை கண்ணோட்டத்தோடு பார்த்து, அவற்றை கலை சின்னங்களாக உருவாக்கி ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஃஎப்) மறுசுழற்சிக்கு தீர்வை கண்டறிந்துள்ளது. ‘கழிவுகளும் கண்கவர் கலை பொருட்களாய்‘ மாறி நமது இல்லங்களை, அலுவலகங்களை பூங்காக்களை அலங்கரிக்கலாம் என்பதை விளக்குகிறார்கள் சென்னை ஐசிஃஎப் அதிகாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெல்டிங் வேலை செய்பவர்கள் கண்களுக்கு பாதுகாப்பில்லாமல் வேலை செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்

ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை (7-8-1960)

 
ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை (7-8-1960)
 
கோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.

இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 1893 இல் பிரெஞ்சு காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960-ல் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சாலமோன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

* 1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

* 2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

* 1819 - கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

* 1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* 1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்காட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

* 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

* 1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பாடல் திறமையால் பிரபலமாகும் பாகிஸ்தான் பெயிண்டர்: நெட்டிசன்கள் பாராட்டு

 
pakistanpng

முகமது ஆரிப்

சாமானிய மனிதர்களை நட்சத்திரங்களாக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள்  எளிமையாக்கியுள்ளன. அதற்கு மற்றுமொரு உதாரணமாகி இருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்ற பெயிண்டர் வீட்டின் கட்டிடப் பணியின்போது ஹிந்தி பாடல் பாடும் வீடியோவை, அக்பர் ட்வீஸ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சன்னமரியா, ஆஷிகி ஆகிய பாடல்களை நல்ல தேர்ந்த பாடகர் போலப் பாடுகிறார் ஆரிஃப்.

 

சுமார் 30 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் இந்த வீடியோவை இதுவரை பார்க்கப்பட்டுள்ளது. 60,000க்கும் அதிகமானவர்கள் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். மேலும் முகமது ஆரிஃபின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் பலர்,  அந்நாட்டு இசையமைப்பாளர்களின் சமூக வலைதளப் பக்கங்களை குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் சிலரது பதிவுகள், “உயிரோட்டமான குரல், எனது கண்களில் நீர் வருகிறது. அவரது குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர்  நிச்சயம் பிரபலமாவதற்கு தகுதியானவர்” என் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர்  "இயற்கையான குரல். நிச்சயம் இவருக்கு இசையமைப்பாளர் ஒருவர் வாய்ப்பளிக்க வேண்டும். வாழ்த்துகள் முகமத் ஆரிஃப் "என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இதே போன்று இந்தியாவில் கேரள இளைஞர் ராகேஷ் உன்னி 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் பாடிய உன்னைக் காணாத பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் அவருக்கு வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

https://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

`ஆவிகள் மேல் தீரா மோகம்..!' - இங்கிலாந்து பெண்ணின் விசித்திரமான ஆசை

 
 

ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்வது சாத்தியம் என்கிறார் ஆவிகள் உலகின் ஆலோசகரான அமேதிஸ்ட் ரெல்ம். ஆவிகளுடன் கொண்ட தீரா அன்பினால் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். 

ஆவிகள் ஆலோசகர்  அமேதிஸ்ட் ரெல்ம்

Photo Credit- ITV

 

 

இங்கிலாந்து பிரிஸ்டலை நகரைச் சேர்ந்தவர் அமேதிஸ்ட் ரெல்ம். ஆவிகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஆலோசகராகத் தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது, `தான் ஆவிகளுடன் நல்லுறவைப் பேணி வருவதாகவும்; மனிதர்களை விடவும் ஆவிகள் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும்' கூறி அன்றைய தினத்தில் பரபரப்பைக் கிளப்பினார். 

 

 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரபல வார இதழான நியூ ஐடியா-வுக்கு அவர் அளித்துள்ள பேட்டி `இதுவும் சாத்தியமாகுமா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அமேதிஸ்ட் அளித்தப் பேட்டியில், `என்னால் ஆவிகளை நன்கு உணர முடியும். அதோடு ஆவிகளை வித்தியாசப்படுத்திக்கொள்ளவும் முடியும். செடி கொடிகள் சூழ்ந்த புதர் நடுவே நடந்து சென்றபோது, எனது முதல் ஆவிக் காதலனை சந்தித்தேன். அவருடன், ஏற்பட்ட அதீத அன்பால் உறவுகொண்டேன். இதை அறிந்த மற்றொரு ஆவி, என்னிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டது. இதனால், ஆவிகளுடனான உறவைப் பலப்படுத்த சீரியஸ் ஆக முயற்சி செய்து வருகிறேன்' என்றவரிடம், 

ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்வது சாத்தியமா; குழந்தை பெற்றெடுக்க முடியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அமேதிஸ்ட் ரெல்ம் கூறிய பதில் வியப்படையச் செய்திருக்கிறது. அதாவது, `ஆவிகளுடன் உறவுகொண்டு குழந்தை பெற தீவிரமாக இருக்கிறேன். ஆவிகளுடன் உறவு வைத்துக்கொள்ள முடியும். நீண்ட காலமாக ஒருவருடன் உறவில் இருக்கிறேன். இது முற்றிலும் கேள்விக்குறியானது என்று நான் நினைக்கவில்லை. இது சாத்தியமான ஒன்றுதான்' என்று கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

96 வயதில் தேர்வெழுதிய மூதாட்டி!- ஓரல் டெஸ்ட்டில் சதம் அடித்தார்


 

 

96-yr-old-woman-takes-literacy-exam-in-kerala

 

 

 

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை. இதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் 96 வயது மூதாட்டி ஒருவர்.

கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி. இவருக்கு வயது 96. கல்வி கற்பதில் ஆர்வம் கொண்ட இந்த மூதாட்டி முதியோர் கல்வித் திட்டத்தில் சேர்ந்து முயற்சி செய்து படித்து பரீட்சையும் எழுதியிருக்கிறார். அதைவிட சிறப்பான விஷயம் ஓரல் டெஸ்ட் என்ற வாசித்துக் காட்டுதலில் முழு மதிப்பெண்ணும் பெற்றிருக்கிறார் என்பதுதான். எழுத்து மற்றும் கணக்குத் தேர்வில் கார்த்தியாயினி பெற்ற மதிப்பெண் விடைத்தாள் திருத்திய பின்னர் தெரியவரும்.

 

இத்திட்டத்தில் இவர் சேர்ந்து 6 மாதங்கள் மட்டும்தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வயது தடையல்ல..
100% எழுத்தறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது கேரள அரசு. இதன் ஒரு பகுதியாக அக்சராலக்‌ஷணம் என்ற திட்டத்தின் கீழ் கேரள மாநில அரசு முதியவர்களுக்காக தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வில் 40,440 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 100 மதிப்பெண்கள். இவற்றில் வாசித்தலுக்கு 30 மதிப்பெண், கணக்கு பாடத்துக்கு 30 மதிப்பெண்கள் மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

சேப்பாடு அரசுப் பள்ளியில் கடந்த 5-ம் தேதி நடந்த தேர்வில் மூதாட்டி கார்த்தியாயினி கலந்து கொண்டார். ஓரல் டெஸ்டில் அவர் 30-க்கு 30 என்ற முழு மதிப்பெண்ணைப் பெற்றார். இந்தத் தேர்வை பல்வேறு சிறைகளில் பயின்ற 80 கைதிகளும் எதிர்கொண்டனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2420 பேரும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 946 பேரும் தேர்வை எழுதியுள்ளனர்.

இத்தனை பேரில் கார்த்தியாயின் அம்மா மட்டும்தான் 90 வயதைக் கடந்தவர். கல்வி கற்க வயது தடையில்லை என நிரூபித்த கார்த்தியாயின் அம்மா இணையத்தில் வைரலாகி வருகிறார்.

கேரள மாநில அரசு மேற்கொண்ட ஆய்வில் பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகமான அளவு கல்வியறிவின்மை இருப்பது தெரியவந்துள்ளது. பாலக்காட்டில் 10,348 பேரும் பத்தனம்திட்டாவில் 434 பேரும் கல்வியறிவு இல்லாதவர்கள் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

https://www.kamadenu.in

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

`உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்!’ - தாகூர் நினைவுதினப் பகிர்வு

 
 

கலைஞர்களை எப்போதும் மரணம் வென்றுவிட முடியாது. தாகூர் தன் படைப்பின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞன். 

`உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்!’ - தாகூர் நினைவுதினப் பகிர்வு
 

ருநாள் மதிய வேளையில் தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திக்கொண்டு வெளியே கவிஞர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அவரது வெளிநாட்டு விருந்தினர்களும் இருந்தனர். அவர் தபால் நிலையத்தைக் கடக்கும் போது, ஒருவர் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பெரிய செய்தி ஒன்றும் இருக்காது என்று தனது பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அருகில் இருந்தவர் கடிதத்தை படிக்கத் தூண்டியதும், உடனே தபாலை பிரித்துப் படித்தார். அதிலிருந்த செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை. அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய `கீதாஞ்சலி‘ படைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதியிருந்தது. அவர் வேறு யாருமல்ல நமது தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான்.

ரவீந்திரநாத் தாகூர்

சிந்தனையாளர்களுக்கே உரிய நீண்ட தாடி, ஆடம்பரமில்லாத ஒரு தோற்றம், தீர்க்கமான கண்கள் இவைதாm தாகூர். 1861- ம் ஆண்டில் மே மாதம் 7- ம் தேதி தனது குடும்பத்தின் கடைசி மகனாகப் பிறந்தவர். குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக இருந்ததால் கவிதை, நாவல், நாடகம், சிறுகதை எனப் பல துறைகளில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார். இருந்தாலும், பள்ளிக்கல்வி என்ற வடிவத்தின் மீது நம்பிக்கையற்றவராக இருந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டவர் தாகூர். திடீரென கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேறி இயற்கையின் எழில்களை ரசிக்க ஆரம்பிக்கிறார். தன் சிறு வயது முதல் தான் இறக்கும் தருவாய் வரையிலும் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பை அளித்துள்ளார். 

 

 

பல இலக்கியவாதிகளும் தாகூரின் சிறுகதைகளை வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும்போது, தாகூர் தன்னை கவிஞராக அழைப்பதையே விரும்பினார். காதல், கோபம், விடுதலை, இழப்பு, தனிமை, சமயம், குழந்தை இலக்கியம் என்று தனது எல்லா உணர்வுகளையும் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார். 

``இந்தியாவே விழிப்பாயிரு…

உன்னுடைய தலை(மை) பணிவுடையதாக இருக்கட்டும்

உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்"  

என்றும் தன் உணர்வைப் பாடியிருக்கிறார். தாகூர் சிறந்த சொற்பொழிவாளரும் கூட. இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு வரையிலும் சொற்பொழிவாற்றினார்.

தாகூர்

1912-ல் ஆங்கிலத்தில் 103 பாடல்களுடன் வெளியான தன்னுடைய கீதாஞ்சலி தொகுப்புக்கு 1913–ல் நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பாவைத் தவிர்த்து நோபல் பரிசு பெற்ற முதல் மனிதர். ஆசியாவிலும் முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும், இந்தியாவில் இதுவரையிலும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே மனிதர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

மனித நேயத்தைப் பெரிதும் மதித்த தாகூர் உலகளாவிய சகோதரத்துவம் சார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார். நம்முடைய தேசிய கீதம் மட்டுமல்லாது வங்க தேசத்தின் தேசிய கீதமும் இவர் எழுதியதுதான். ஆகவே, இவற்றின் குறியீடாகத்தான் இவரின் பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

சர்வதேசியவாதம் என்ற கருத்தின் ஒரு கூறாகவும், கல்வி முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடும்தான் இவர் தொடங்கிய `சாந்திநிகேதன்’ கல்வி நிலையம். இங்கு வெளிநாட்டவரும் கூட தங்கிப் படிக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தனது வருவாய் எல்லாவற்றையும் இதற்காகவே செலவழித்தார். தாய்மொழி வழிக்கல்வி இன்றியமையாததாகக் கருதிய தாகூர், ஆங்கிலத்தையும் ஆதரித்தார். குழந்தைகளின் கல்விக்கும், பெண்கல்விக்கும் அதிக முக்கியத்துவத்தை அன்றைய காலகட்டத்திலேயே வழங்கினார். குழந்தை மனப்பான்மையுடன் இருந்தால்தான் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்று நம்பினார். அதனாலேயே, சாந்திநிகேதன் கல்வி நிலையத்தின் மூத்த குழந்தையாகவே தன்னை பாவித்துக்கொண்டார். இந்த சாந்தி நிகேதன் கல்வி நிலையம்தான் தற்போது விஷ்வ பாரதியாக வளர்ந்து நிற்கின்றது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சாந்தி நிகேதனில் பிறந்தார். தாகூரின் கருத்துகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பிரபல இயக்குநர் சத்யஜித் ரே இருவரும் சாந்தி நிகேதனில் படித்தவர்கள். தாகூரின் எழுத்துகள் சத்யஜித்ரேவைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

தாகூர்

பெண்களை மைய கதாபாத்திரமாகக் கொண்ட தாகூரின் `THE BROKEN NEST’ என்ற குருநாவலை `சாருலதா’ என்ற பெயரில் திரைப்படமாக்கினார் ரே. தாகூர் எப்படி முதல் நோபல் பரிசை வென்றாரோ, அதேபோல அவரது கல்வி நிலைய மாணவனும் இந்தியாவின் முதல் ஆஸ்கரை வென்றார். தாகூரின் பல கதைகளை சத்யஜித் ரே திரைக்காவியமாக்கினார். தாகூரும் சத்யஜித் ரேவும் ஓவியர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாகூரின் பல சிறுகதைகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் காபுலி வாலா என்ற கதை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு கதை, குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கதை.

வங்கத்தில் மிகப்பெரிய எழுத்தாளரான  சரத் சந்திரர், தாகூரை `குருதேவ்’ என்றே அழைப்பார். ஒருமுறை வாசகர் ஒருவர், `நீங்கள் தாகூரை குருதேவ் என்று அழைக்கிறீர்கள். ஆனால், அவர் எழுதுவது எதுவும் புரியவில்லையே’ என்று கேட்க, சரத் சந்திரர், `நாங்கள் உங்களுக்காக எழுதுகிறோம். தாகூர் எங்களுக்காக எழுதுகிறார்’ என்றாராம்.

தாகூர்

இதேபோல, தன்னைவிட வயதில் மிக சிறியவரான புரட்சிகர கவிஞர் நஸ்ருலுக்குத் தன்னுடைய புத்தகத்தைச் சமர்ப்பித்தார். நஸ்ருல் சிறையிலிருந்தபோது அங்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். தாகூர் தொடர்ந்து கடிதம் எழுதியபின் அதை நிறுத்திக்கொண்டார். தமிழின் மகாகவி பாரதியாரும்கூட தாகூரை `கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போல கீர்த்தியடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. மொழி பெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி’ என்று புகழ்ந்துள்ளார்.

தாகூர்

நோபல் உட்பட பல விருதுகளை வென்ற தாகூருக்கு பிரிட்டிஷ் அரசும் அவர் புலமையைப் பாராட்டி `சர்’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன் `சர்’ பட்டத்தைத் திருப்பியளித்தார். விடுதலைக்கான தன் குரலையும், பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்துக்குத் தனது எதிர்ப்பையும் தொடர்ந்து தன் படைப்புகள் மூலம் தெரிவித்து வந்தார். விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய காந்தியோடு மிகுந்த நட்புணர்வு கொண்டிருந்தார்.

என்றும் கற்றுக்கொண்டிருக்கும் தாகூர் தன்னுடைய 60 வயதில்தான் ஓவியங்கள் வரையத் தொடங்குகிறார். சுமார் 5,000 ஓவியங்களை வரைந்துள்ள தாகூரின் ஓவியங்களுள் சில புகழ்பெற்றவை. 

சூரியன் மறையும் அந்திம நேரத்தில் தனிமையில் அமர்ந்து, மரத்தின் நிழற்தோற்றத்தை ரசித்த தாகூர் 1941 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். குழந்தைகளின் மனம், தெளிவான சிந்தனையுடன் சுதந்திரத்தையும் தனிமையையும் விரும்பி வாழ்ந்த தாகூர், இந்திய இலக்கியத்தில் மறுமலர்ச்சி செய்தவர். கலைஞர்களை எப்போதும் மரணம் வென்றுவிட முடியாது. தாகூர் தன் படைப்பின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கருப்பு வெள்ளை காலத்தை ஆண்ட கருணாநிதி (புகைப்படத் தொகுப்பு)

 

திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது வயதில் சென்னையில் காலமானார். அவரது இளம் வயது படங்களை சற்றே திரும்பிப் பார்க்கலாம்

1950களில் மு.கருணாநிதி மற்றும் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மு.கருணாநிதி

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மு.கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நல்ல நண்பர்களாவர். 1954ஆம் ஆண்டு, மார்ச் 3ஆம் தேதி சிவாஜி மற்றும் எஸ்.எஸ்.ஆர் நடித்து வெளியான மனோகரா திரைபடம் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு திரைக்கதை எழுதியவர் கருணாநிதி

Presentational grey line

1972ல் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் கருணாநிதி

சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கருணாநிதி

 

சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கருணாநிதி தந்தை பெரியாருடன் மு.கருணாநிதி

 

தந்தை பெரியாருடன் மு.கருணாநிதி

அண்ணா மற்றும் கருணாநிதி

 

அண்ணா மற்றும் கருணாநிதி

அண்ணா மற்றும் கருணாநிதி மு.கருணாநிதி

 

எம்.ஜி.ஆருடன் கருணாநிதி

பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணாவுடன் கருணாநிதி

 

பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணாவுடன் கருணாநிதி

மு.கருணாநிதி மு.கருணாநிதி

 

 

 

https://www.bbc.com

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலற்றில் இன்று : ஓகஸ்ட் 8
 

image_0c5ab1ba83.jpg1908 : வில்பர் ரைட் தனது முதலாவது வான் பயணத்தை பிரான்சில் 'லெ மான்ஸ்' என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942 : இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945 : இரண்டாம் உலகப் போர் -  சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945 : ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947 : பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கிகாரம் பெற்றது.

1963 : இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் ரயில் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.

1967 : ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1973 : தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய் - ஜுங் கடத்தப்பட்டார்.

1974 : வாட்டர்கேட் ஊழல் - ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

1988 : மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989 : ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து, நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990 : ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992 : யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000 : அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006 : திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 : நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன், அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை நாயகர்கள் - மாட்ரிக்: நிராகரிப்பில் உயிர்பெற்றவன்

 

 
footballjpg

உலகம் எப்போதுமே வெற்றி பெற்றவர்களையே பெரிதாகப் பேசும். விதிவிலக்காக, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டிவரை அதிரடியாக முன்னேறிய குரேஷியாவைப் பற்றி உலகம் பேசியிருக்கிறது. கோப்பை வென்ற ஃபிரான்ஸ் அணியின் இளம் வீரர் கிளியன் எம்பாப்பே ஆச்சரியத்துடன் கொண்டாடப்படுகிறார். அவருடன், சேர்த்துக் கொண்டாடப்பட வேண்டியது கோப்பையைப் பறிகொடுத்த குரேஷியாவின் கேப்டன் லூகா மாட்ரிக்கின் கதை.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற நட்சத்திர வீரர்களின் பெயர்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் நேரத்தில் மாட்ரிக் போன்றவர்களின் ஆட்டம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் வழக்கம். நல்ல வேளையாக, இந்த முறை அப்படி நடக்கவில்லை. இதுவரை கவனம் பெறாத மாட்ரிக்கின் மேதமை, இந்த உலகக் கோப்பையில் வெளிப்பட்டது. பதினைந்து ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

குரேஷியாவின் தூண்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் 10-ம் நம்பர் ஜெர்சி லேசுபட்டது அல்ல. எந்த அணியில் என்றாலும், 10-ம் நம்பர் ஜெர்சி நட்சத்திர வீரர்களுக்கே வழங்கப்படும். நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் உலகை வியக்கவைத்த குரேஷிய அணியில் 10-ம் நம்பர் ஜெர்சியைப் பெற்றிருந்தவர் மாட்ரிக். அதற்குக் காரணம் கால்பந்தை எளிமையாகவும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் அவர் ஆடியதுதான்.

கடந்த ஒரு மாதத்தில் வேறு எந்த குரேஷிய வீரரைவிட அதிகத் தொலைவுக்கு ஓடியவர் மாட்ரிக். அணியின் மற்ற வீரர்களைவிடப் பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும் அவர்தான். பந்தைக் கடத்துவதில் மட்டும் ஸ்பானியர்களைவிடச் சற்றே பின்தங்கியவராக அவர் இருந்தார். அதிகம் ஃபவுலுக்கு உள்ளான குரேஷிய வீரரும் அவரே.

இப்படித்தான் ஆட வேண்டும்

உலகக் கோப்பையில் மற்ற நட்சத்திர வீரர்களுக்கு நடந்ததுதான் மாட்ரிக்குக்கும் நிகழ்ந்தது. சொந்த மைதானத்தில் உற்சாகம் கரைபுரள ஆடிய ரஷ்யாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அதிகம் ‘ஃபவுல்' செய்யப்பட்ட வீரர் அவர்தான். இதனால் மாட்ரிக் பின்வாங்கிவிடவில்லை. ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் 48,000 ரசிகர்கள் முன்னிலையில் குரேஷிய அணியைக் காப்பாற்றினார்.

குரேஷியா கோல் அடிக்கக் காரணமானார். இந்தப் போட்டிக்குப் பிறகு, "இப்படித்தான் கால்பந்தை விளையாட வேண்டும். இப்படித்தான் கால்பந்தை உணர்ந்துகொள்ளவும் முடியும்" என்று அர்ஜென்டினாவின் பிரபலக் கால்பந்து எழுத்தாளர் ஜோர்ஜ் வால்டானோ, மாட்ரிக்கைப் பாராட்டி எழுதினார்.

ஊசலாடிய வாழ்க்கை

நீண்டகாலம் நிராகரிக்கப்பட்டு, ஏளனம் செய்யப்பட்ட பிறகு இப்போதுதான் ரசிகர்களாலும் அணியின் சக வீரர்களாலும் அவர் கொண்டாடப்பட ஆரம்பித்திருக்கிறார். இந்த இடத்தில்தான் மாட்ரிக் வளர்ந்த பின்னணியை அறிய வேண்டியது முக்கியமாகிறது. யூகோஸ்லாவியாவுக்கு எதிரான குரேஷிய விடுதலைப் போராட்டத்துக்கான போர் உச்சத்தில் இருந்த காலத்தில், தன் பள்ளிக் காலத்தைக் கழித்தவர் மாட்ரிக்.

அந்தப் போரில் மாட்ரிக்கின் தாத்தா செர்பியர்களால் மோசமான முறையில் கொல்லப்பட்டார். மாட்ரிக் வாழ்ந்த ஊர், வீட்டையும் அந்தப் போர் விட்டுவைக்கவில்லை. இதனால் மாட்ரிக் குடும்பத்தினர் வீடு, கிராமம், நண்பர்கள், உறவினர்களைத் துறந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் தன் ஒரே நண்பனைப் போல மாட்ரிக் கருதியது கால்பந்தை மட்டும்தான்.

ஒரு மாணவனாக அவருக்குக் கால்பந்துப் பயிற்சி அளித்த குரேஷிய கால்பந்து கிளப்பான 'ஃஸைடுக் ஸ்பிளிட்', தங்கள் இளைஞர் பயிற்சி மையத்தில் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தது. அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்பதே அதற்குக் கூறப்பட்ட காரணம். ஆனால், மாட்ரிக் இப்போதுவரை ஒல்லியாகத்தான் இருக்கிறார்.

அதேபோல, அவர் குட்டையாகவும் வலுவில்லாதவராகவும் இருப்பதாகக் கூறி புகழ்பெற்ற ஐரோப்பிய கால்பந்து 'கிளப்'களான அர்செனல், பார்சிலோனா, பாயெர்ன் மியூனிக் உள்ளிட்டவை நிராகரித்தன. கடும் போராட்டங்களுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணிக்கு 2012-ல் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

நிரூபணமான பொய்

"என் வாழ்க்கை முழுவதும் என் கால்பந்துத் திறமை பற்றி மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். என்னால் திறமையாக விளையாட முடியாது என்றார்கள். அப்போது பெரிதாகவும் வலுவாகவும் நல்ல உடல்நிலையுடன் நான் இருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதேநேரம் அந்தக் கேள்விகள் எனக்குக் கூடுதல் ஊக்கமளித்தன! அவர்களது கூற்றைப் பொய் என்று நிரூபிப்பதில் நான் உறுதிகொண்டேன்" என்கிறார் மாட்ரிக்.

அவர்களது கூற்று பொய் என்பதை, இந்த உலகக் கோப்பையில் அவர் நிரூபித்துவிட்டார். குரேஷிய அணி என்றாலும், 'கிளப்' என்றாலும் அந்த அணிகளை இயக்கும் இன்ஜினாக அவரே திகழ்கிறார். உலகக் கோப்பையில் 'தங்கப் பந்து' விருதைப் பெற்றிருக்கிறார். 'இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை' கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை விஞ்சி மாட்ரிக் பெறக்கூடும். இரண்டு மாதங்களுக்கு முன் 'சாம்பியன்ஸ் லீக்' போட்டித் தொடரில் ரியல் மாட்ரிட் அணி வெல்ல அவரே காரணமாக இருந்தார். இப்போது உலகக் கோப்பை இறுதிவரை குரேஷிய அணி முன்னேறியிருப்பது, அவரது திறமைக்கான இரண்டாவது சாட்சி.

தவறான முடிவு

அதேநேரம் வெறும் புள்ளிவிவரங்கள், கோல்களை மட்டும் வைத்துக்கொண்டு மாட்ரிக்கின் திறமையை ஒருவர் குறைத்து மதிப்பிடலாம். அப்படிச் செய்வது தவறாகவே முடியும். இந்த உலகக் கோப்பையில் அவர் அடித்தது இரண்டே கோல்கள்தான். ஆனால், கால்பந்து என்பது 100 சதவீதம் குழு விளையாட்டு. பலரது பங்களிப்பில்தான் ஒரு அணியின் வெற்றி சாத்தியம் என்பதற்கு மாட்ரிக் போன்றவர்கள் சிறந்த உதாரணமாகி இருக்கிறார்கள்.

மாட்ரிக் ஆடுவதைப் பார்க்கும்போது இவ்வளவு எளிதாக நாமும்கூட கால்பந்து ஆடிவிட முடியுமே என்றுதான் தோன்றும். ஆனால், உண்மையில் அப்படி ஆடுவது சாத்தியமல்ல. சிக்கலான அந்த எளிமைதான் மாட்ரிக்கின் தனித்துவம். 'மாட்ரிக் ஆடுவதைப் பார்ப்பது என்பது ஒரு மழைக்கால மாலை நேரத்தில் மெதுவாகக் கசிந்துவரும், மென்மையான இசையைப் போன்று எளிமை நிறைந்தது, ஆசுவாசம் அளிப்பது' என்று ஒரு விளையாட்டு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். மாட்ரிக் பெற்ற விருதுகளின் உச்சமாக இந்தப் பாராட்டைக் கருதலாம்

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கிரிக்கெட் போட்டியை மிகவும் விரும்பி பார்க்கும் இவரிடம் 2013 ஆம் ஆண்டு உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு கோப்பை வாங்கி கொடுத்த அப்போதைய அணித்தலைவர் கபில் தேவை பிடிக்கும். மேலும் எப்போதும் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தல டோனி என்று பதிலளித்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 9
 

image_110eddb4d1.jpg1902 : ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.

1902 : யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

1907 :  இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1942 :  “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் துவக்கியதற்காக, மகாத்மா காந்தி உட்பட பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய, “கொழுத்த மனிதன்” எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.

1965 : சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

1965 : ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில், 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1974 : வாட்டர்கேட் ஊழல் - அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

1991 : யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10 இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும், 2000 ஆம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

1992 : மயிலந்தனைப் படுகொலைகள் - இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

2006 :  திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது, விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.