Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

12698326_983956281653066_335718848385826

ஹிந்தித் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி ஷெர்லின் சோப்ராவின் பிறந்தநாள்.

இவர் கவர்ச்சிக் கன்னி என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இவரையும் விட்டுவைக்கலையா இளையராஜா?

 

தோ ஒரு பள்ளிக்கூட அறை. பிரம்பும், சாக்பீஸும், டஸ்டரும், நோட்டுப் புத்தகமும் இருக்கிறது.

இப்போது ஒருவர் நடந்து வருகிறார். வெளிநாட்டுக்காரர். 

உடைந்த தமிழில் பேசுகிறார்.

‘நமஸ்காரம்.. என் பேரு மத்தி..’ என்று ஆரம்பித்து தமிழிலேயே பேசுகிறார். அவர் எப்படித் தமிழ் பேசுகிறார் என்பதற்கு, பின்னால் போர்டில் குழந்தைக் கையெழுத்தில் இருக்கிற இரண்டு பாடல்களின் ஆரம்ப வரிகள் பதில் சொல்கிறது..

‘ஆகாய கங்கை’

‘மண்ணில் இந்தக’

ilaiyaraja-next-is-megha.jpg

இரண்டுமே இளையராஜாவின் பாடல்கள். கடல் கடந்தும், தமிழரல்லாத  ஒருவரை தமிழ் பேச வைத்தது இசையன்றி வேறு எதுவாக இருக்கும்?

‘இளையராஜா பிடிக்கிறது’ என்ற அவரது கூற்றே அதை உறுதிப்படுத்துகிறது. .தொடர்ந்து, 'ஆகாய கங்கை'  பாடலை ஒருவரி விடாமல் பாடுகிறார். முடிந்ததும் போர்டில் இருக்கிற ‘ஆகாய கங்கை’க்கு அருகில் OK போட்டுவிட்டு, ஒரும் மிடறு காஃபி குடித்துவிட்டு மண்ணில் இந்தக் காதலின்றி பாடுகிறார்.

இரண்டு பாடல் பாடி முடித்ததும், ஒரு தம்ஸ் அப் காட்டிவிட்டுப் போகிறார். அவரே போய் கேமராவை ஆஃப் செய்கிறார்.

இசை ஏதும் இல்லை. நம் ஜட்ஜ்கள் சொல்கிற சுருதி, லயம், தாளம், சங்கதி போன்ற சமாச்சாரங்கள் இல்லை. இருப்பதெல்லாம் அவருக்கு இசை மீதிருக்கிற காதல் மட்டுமே. ’என் தமிழ் நண்பனுக்கு இளையராஜா பிடிக்கும். அவர் மூலமாக நானும் ராஜா இசை கேட்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கும் இளையராஜா பிடிக்கும்’ என்றிருக்கிறார்.

கடல் கடந்து மொழிதெரியாத ஃபின்லாந்துக்காரரை  இளையராஜா கவர்ந்திழுக்க என்ன காரணம்?

ஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு ஊர்ல.. அல்லல்ல.. உலகத்துக்கே அவர்தான் ராஜா என்பதே அது! 

வீடியோ...

vikatan

4 hours ago, colomban said:

இவர் கவர்ச்சிக் கன்னி என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?

இப்படியெல்லாம் பொதுவெளியில கேட்கக்கூடாது.  

அந்தரங்கள் யாவுமே
சொல்வதென்றால் பாவமே:)

  • தொடங்கியவர்

கோவிலில் நின்று சன்னிலியோன் செய்த வேலையால் வந்த வினை

 

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் நடித்த படங்களினால் சர்ச்சையில் சிக்கி, போலீஸ் வழக்குகளையும் சந்தித்துவரும் சன்னிலியோன் மீண்டும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் துஷார் கபூர், வீர்தாஸ் ஆகியோருடன் இவர் நடித்து வெளியான  இந்தித் திரைப்படம் “மஜ்தி ஜாதே”. இப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவ்ரவ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Sunny-Leone-on-the-set-of-Ek-Paheli-Leel

மேலும் கோவிலில் நின்று சன்னிலியோனும், வீரதாஸூம் ஆணுறை விளம்பரம் செய்வது போன்ற காட்சியில் நடித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, சன்னிலியோனின் ஆபாசப் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவிவருவதாகவும், அதனைக் கண்டித்து மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்திய பண்பாட்டுக்கு எதிராக சன்னிலியோன் செயல்படுகிறார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு வழக்குகளையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

p36b.jpg

p36.jpg

 

சமீபத்தில் அமலா பால் கற்றுக்கொண்ட டான்ஸ், கங்ணம் ஸ்டைல்! தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காகத் தாய்லாந்து  காட்டுக்குள் சென்றுவந்திருக்கிறார் அமலா. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் நடந்த 'ராப்-அப்’ பார்ட்டியில் அனைவரும் கெட்ட ஆட்டம் போட, அமலா தன் பங்குக்கு கங்ணம் ஸ்டைல் ஆடி அசத்தியிருக்கிறாராம். அதைப் படத்துல சேருங்க பாஸ்!

 

 பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்காணிப்பதற்கு என்றே தனி அமைப்பை உருவாக்கியிருக்கிறார் கோவா மாநில முதல்வர் மனோஹர் பர்ரிகர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்காணித்து, அதை உடனடியாக மாநில அரசின்கவனத்துக்குக் கொண்டுசெல்லுமாம் இந்த அமைப்பு. 'உயர் நீதிமன்றத்திலும் பேசிவருகிறோம். பிரத்யேகமாக இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத் தின் நேரத்தை மாலையில் அதிக ரிக்கலாம் எனக் கேட்டுள்ளோம். அப்படி அதிகரிக்கப்படும் பட்சத்தில் நீதிபதிகளுக்கான கூடுதல் சம்பளத்தை அரசே ஏற்கும்!’ என்கிறார் மனோஹர். நாடு முழுக்க அமல்படுத்தலாமே!

 அமெரிக்க அரசாங்கத்தின் 'செகரெட்டரி ஆஃப் ஸ்டேட்’ பதவி யில் இருந்து ஹிலாரி கிளின்டன் விலகியதற்கு 'ஓய்வு தேவைப்படுகிறது’ என்பதைக் காரணமாகச் சொல்லி இருந்தார். ஆனால், தற்போது 'அடுத்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புப் பணிகளைச் செய்யவே அவர் ஓய்வுபெற்றார்’ என்று தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இனி, அதிபர் தேர்தலில் மட்டுமே ஹிலாரியின் முழுக் கவனமும் இருக்குமாம். ஆல் தி பெஸ்ட்!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இந்த வாரம்

  • தொடங்கியவர்

புயலில் சிக்கிய கப்பல்... அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி!

 

இங்கிலாந்தை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் வீடியோ பதிவு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.
 

England%20puyal%20ship.jpg

இங்கிலாந்தில் கடந்த மாதம் வீசிய ஜெர்ட்ரூட் (Gertrude) புயலால்,  கடலோரப்பகுதிகளில் மணிக்கு 144 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதேப்போன்று கடல் அலைகள் 60 அடிக்கு மேல் உயரத்தில் வந்து கரையை தாக்கியது மட்டுமின்றி, கரைப்பகுதியிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது.

இந்நிலையில் அந்த புயலில் சிக்கிய கப்பல் ஒன்றின் போராட்டத்தை,  அதன் ஊழியர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு பார்வையாளர்களை அச்சத்தில் தள்ளும் வகையில் உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.



 

இந்த கப்பலானது அவசர தேவைகளுக்கும், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொருட்டும் பயன்படுத்தப்படுவதாகும். கடலுக்குள் அமைந்துள்ள எண்ணெய்க்கிணறுகளில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணித்து உதவுவதே கப்பலின் முக்கிய பணியாகும்.

vikatan

  • தொடங்கியவர்
6 hours ago, colomban said:

இவர் கவர்ச்சிக் கன்னி என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?

உங்களிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்கவில்லை..<_<

பக்கத்தில்தானே டுபாய் அங்கு அடிக்கடி வருவார்கள் போய் கேட்டு பாருங்கள் சந்தர்பம் கிடைத்தால்.:cool:

நீங்கள் இங்கு இணைக்கும் செய்திகளை வைத்து ஒரு நல்ல அனுபவசாலி என்ற கணிப்பு இருந்தது..:grin:tw_yum:

  • தொடங்கியவர்

புகைபிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

5 minutes ago, நவீனன் said:

புகைபிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

இது எனக்கில்லை.

  • தொடங்கியவர்
2002 : யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி மீதான போர்க்குற்ற விசாரணை ஆரம்பம்
2016-02-12

வரலாற்றில் இன்று.....

பெப்ரவரி - 12

 

664vararu.jpg55 : ரோமின் முடிக்­கு­ரிய இள­வ­ரசன் டிபே­ரியஸ் கிளோ­டியஸ் சீசர் பிரிட்­டா­னிக்கஸ் மர்­ம­மான முறையில் இறந்தார், இவரின் மர­ண­மா­னது நீரோ மன்­ன­னாக வர வாய்ப்­ப­ளித்­தது.

 

1502 : இந்­தி­யா­வுக்­கான தனது இரண்­டா­வது கடற் பய­ணத்தை வாஸ்­கோட காமா லிஸ்­பனில் இருந்து ஆரம்­பித்தார்.

 

1593 : 30,000 பேர் கொண்ட ஜப்­பா­னிய படை யின் படை­யெ­டுப்பை சுமார் 3000 பேர் கொண்ட கொரிய படை வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்­தது.

 

1733 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜியா பிராந்­தியம், ஆங்­கிலக் குடி­யேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்­லிதோர்ப் என்­ப­வரால் அமைக்­கப்­பட்­டது.

 

1771 : சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெ­டெரிக் இறந்­ததை அடுத்து அவரின் மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

 

1818 : ஸ்பெயி­னிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக சிலி அறி­வித்­தது.

 

1832 : லண்­டனில் கொலரா பர­வி­யதில் 3000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1909 : நியூஸிலாந்தில் கப்­ப­லொன்று விபத்­து­குள்­ளா­னதால் 75 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

1912 : சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தார்.

 

1912 : சீனக் குடி­ய­ரசில் கிரெ­கோ­ரியன் நாட்­காட்டி அமு­லுக்கு வந்­தது.

 

1927 : முத­லா­வது பிரித்­தா­னியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரை அடைந்­தன.

 

1934 : ஆஸ்­தி­ரி­யாவில் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

 

1947 : சோவியத் யூனி­யனில் விண்­கல்­லொன்று” வீழ்ந்­ததால் பாரிய குழி­யொன்று ஏற்­பட்­டது. 

 

1961 : வெனேரா 1 விண்­க­லத்தை சோவியத் ஒன்­றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவி­யது.

 

1999 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் மீதான அந்­நாட்டு செனட் சபையின் குற்­றப்­பி­ரே­ரணை விசா­ர­ணையில் அவர் நிர­ப­ரா­தி­யாக அறி­விக்­கப்­பட்­டது.

 

2001 : நியர் ஷுமேக்கர் என்ற விண்­கலம் 433 ஈரோஸ் என்ற சிறு­கோளில் தரை­யி­றங்­கி­யது. சிறுகோள் ஒன்றில் தரை­யி­றங்­கிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

 

2002 : யூகோஸ்­லா­வி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி சிலொ­படான் மிலோ­செவிச் மீதான போர்க் குற்­றச்­சாட்­டுகள் குறித்து ஹேக் நக­ரி­லுள்ள  ஐநாவின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றில்  விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­யின.

 

2002 : ஈரானின் விமானம் ஒன்று கோர­மபாத் நகரில் வீழ்ந்­ததில் 119 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2004 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்கோ நக­ரத்தில் ஒரு­பா­லினத் தம்­ப­தி­களின் திரு­ம­ணத்­துக்கு திருமண பதிவுச்சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது. 

 

2009 : நியூயோர்க் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 49 பேரும் தரையிலிருந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

 
 New  0  0  0
- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=664#sthash.oG4X5Nwm.dpuf
  • தொடங்கியவர்
மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி
 

சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள வென்ஸியான் நகரில் தன் மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றிய சிலரை படங்களில் காணலாம்.

 

14826c.jpg

 

14826b.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=14826#sthash.r4QTmPaQ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிப்ரவரி 12: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் பிறந்த தின - சிறப்பு பகிர்வு...

12670854_1071414572917332_94866697515286

 

உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை "இது தவறு!" என அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது. சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருந்தார்.

தட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றைச் சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் "உனக்குப் படிக்கவே வரலை; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது!" எனத் தன் மகனைப் பார்த்து சொன்னார் அந்த அப்பா.

அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின், அங்கே சிறுவன் ஒருவன், கதறக்கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார். (அப்பொழுது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது, தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி 'இயற்கையியல் வல்லுநர்' ஆனார்.

தென்அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களைக் கண்டார். பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன. அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார். என்றாலும் இவற்றை அவரால் உடனே இணைத்துப் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களைத் திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளைக் கண்டார். ஒருதீவில் கடலையைக் கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கு மற்றொரு தீவிலும் இருப்பதைக் கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்' என்று சொன்னார்.

பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு; மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளைப் பெற்றிருந்தாலும் வாயைத் திறக்கவே இல்லை டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின், அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.

அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.

1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )
2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில்
உண்டாகும் மாறுபாடுகள் )

பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.

மதத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்" எனச் சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார். 'நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்' என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.

vikatan

12647255_983957131652981_901132682379229

உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை, கூர்ப்புக் கொள்கை, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றை ஆராய்ந்து புதிய கொள்கைகளை வெளியிட்ட ஆங்கிலேய இயற்கையியல் அறிஞரான சார்ல்ஸ் டார்வினின் பிறந்த தினம் இன்று.

இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

  • தொடங்கியவர்

12711022_984453011603393_749335755304865

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட நட்சத்திரமாக விளங்கிய குண்டப்பா விஸ்வநாத் பிறந்தநாள்.
இவர் உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் சுனில் கவாஸ்கரின் மைத்துனராவார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

உங்களிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்கவில்லை..<_<

பக்கத்தில்தானே டுபாய் அங்கு அடிக்கடி வருவார்கள் போய் கேட்டு பாருங்கள் சந்தர்பம் கிடைத்தால்.:cool:

நீங்கள் இங்கு இணைக்கும் செய்திகளை வைத்து ஒரு நல்ல அனுபவசாலி என்ற கணிப்பு இருந்தது..:grin:tw_yum:

நவீனன்! அம்மா ஆனையா போன சனிக்கிழமைதான் 2 நாள் பார்ட்டி முடித்து துபாயில் இருந்து வந்தன், ஹாவாய் நாட்டில் நடப்பதுபோல, கடற்கரையோரம், பெட்டைகள் எல்லாம் ஹவாயன் ட்ரெஸிலா, காத்து , தூக்கி, தூக்கி அடிகின்றதுடா, உடுப்பெல்லாம் பறக்கிறதுடப்பா, பொத்திப்பொத்தி அத பிடிக்கிறாடப்பா, அதப்பாத்தே எனக்கு ........... போய்ச்சிடப்பா, கையில பியரு, கடற்கரையில‌ பிகரு,தலையில ஹவாயன் தொப்பி  அட அதவிடு, இரவு மெஜிக் ஷோவில நடந்ததை கேட்டனியெனியேன்றால் என்றால்.. என்ற அம்மா சோறு என்னத்த சொல்ல, அடிடா சுந்த்ரலிங்கம்!!! 

:grin: :grin:

29521678.jpg

 

Web_pool-sunlounges-KempinskiPalm.jpg

 

 

  • தொடங்கியவர்

பிப்ரவரி 12: ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

 

ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் பிறந்த  நாள் பிப்ரவரி பன்னிரெண்டு . வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர் கடன் வாங்கி புத்தகங்களை படித்தார் ;அப்பாவிடம் இருந்து நேர்மையைகற்றிருந்தார் . எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார் . வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை

ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது;காரணம் அவரின் abrahailincon.jpgமுதல் காதலியின் மரணம் . இன்றும் "உறவினால் அல்ல பிரிவினால் லிங்கனை மணந்த ஆன் இங்கே உறங்குகிறாள் "என்கிற வரிகள் அவள் கல்லறையில் இருக்கின்றது . அவரின் மனைவி ஒரு நாள் ஹாயாக  சுடு சூப்பை முகத்தில் ஊற்ற துடைத்து விட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார் மனிதர் .

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர்,தற்கொலை எண்ணம் கொண்டிருந்தவராகவும் இருந்தார் , எண்ணற்ற உடல் உபாதைகள் அவரை வாட்டி எடுத்தன . அவரின் வலிகளை மறைத்துக்கொள்ள தன் அழுகையை மறைக்கவே அவர் சிரித்துக்கொண்டே இருந்தார் என்று அவரின் உதவியாளர் குறிக்கிற அளவுக்கு அவர் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்திருந்தது .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற பொழுது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார் ; ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து அதில்  ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர் தாடி வளர்த்துக்கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டு அப்படியே செய்தார்

ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர் ,"லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது !"என நக்கலாக சொல்ல ,"அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது .பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன் .அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும் ."என்றார் அமைதியாக .

அவர் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான்.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்தி கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார் ;கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன . போர்களங்கத்தில்  தன் பிள்ளையை இழந்தார் ;நாடே தத்தளித்தது .அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாகபோரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது .

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார் ;தேர்தல் வந்தது மீண்டும் வென்றார் . மக்களுக்காக முழுக்க உழைத்த அந்த மாமனிதர் அதை
பெருமிதமாக நினைக்கவில்லை .'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக்குறிப்பிட்டாலே போதும் என்றார் .

அவரை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் Our American Cousin  நாடகம் பார்த்த பொழுது சுட்டுக்கொன்றான் .அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது .மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்த தலைவன் .நான் வெல்வதை விட உண்மையாக இருக்கவே வேண்டும் "நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதை விட என் அகவெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன் .நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன் "என்ற அவரின் பிறந்த நாள் இன்று

vikatan

12670240_983957674986260_627648841677711

ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கனின் பிறந்தநாள்.

அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.
1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.

கொள்கைகளில் உறுதியாக இருந்த இவர் அமெரிக்க உள்நாட்டு யுத்தங்களை உறுதியாக எதிர்கொண்டவர்.
இவரது கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

  • தொடங்கியவர்

அகிலத்தின் அடுத்த பக்கம் என்ன? ஐன்ஸ்டின் சொன்ன புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு!

 

 புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.  கடந்த 1915-ம் ஆண்டு விஞ்ஞானி ஐன்ஸ்டின்,  தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்தார். அதைத்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.   வான்வெளியில் 'பிளாக் ஹோல்' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர்.

black.jpg

தற்போது, அதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா இல்லையா? என்பதை அறிய சர்வதேச விஞ்ஞானிகளுடன் இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு,  செப்டம்பர் 15-ம் தேதி,  அமெரிக்காவின்  லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் 'லிகோ டிடேக்டர்ஸ்'  என்ற கருவி  மூலம் புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இரு பிளாக் ஹோல்கள் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் மாற்றங்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அப்போது, நிகழும் சப்தத்தை இந்த குழு பதிவு செய்துள்ளது.

புவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய விஞ்ஞானிகள் இது குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவிக்கின்றனர். இந்த விழாவில் கஸ்துரி ரங்கன் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் ஆற்றிய இந்த சேவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'பிளாக் ஹோல்'  உள்ளதா இல்லையா? என்ற  கருத்து  பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. புவி ஈர்ப்பு அலைகள் இருந்தால் 'பிளாக் ஹோல்' பற்றிய மர்மமும் விலகும். திரைப்படங்களில் வரும்  ' டைம் மெஷின்' போன்ற கருவிகளின் பயன்பாடு பற்றியதன் விளக்கமும் ஏற்படும். மேலும் அகிலத்தின் அடுத்த பக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

vikatan

  • தொடங்கியவர்

12697023_984461934935834_695029037900458

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினய்குமாரின் பிறந்தநாள்.
Happy Birthday Vinay Kumar R

  • தொடங்கியவர்

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

 

காதலர் தினத்துல லவ்வர் பாய் யார்... ட்ரீம் கேர்ள் யார்னு தெரிஞ்சுக்காம இருந்தா எப்படி பாஸ்?

லவ்வர் பாய்

`லவ்வர் பாய், ட்ரீம் கேர்ள் சர்வே'னு சொன்னதும்  `நான், நீ'னு போட்டி போட்டுக்கிட்டு வர்ற பொண்ணுங்களையும் பையன்களையும் பார்க்கும் போது, `இவ்ளோ நாளா நீங்க எல்லாம் எங்கய்யா ஒளிஞ்சிருந்தீங்க?'னுதான்  கேட்கத் தோணுது. கடந்த வருடம் லவ்வர் பாய் ஆர்யா, ட்ரீம் கேர்ள்  ஸ்ரீதிவ்யா எனத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த வருடம் யார், யார்?

தமிழ்நாடு முழுக்க 3,601 கல்லூரி மாணவர்களிடமும், 3,688 கல்லூரி மாணவிகளிடமும் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் இவை. திருமணம் ஆன நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற முடியாததால் பல இளம் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இல்லை. 

முதலில் கல்லூரி மாணவிகளிடம், `` `லவ்வர் பாய்' செலெக்ட் பண்ணுங்க?'' என சர்வே ஷீட்டை நீட்டினோம். சிலர் கண்களை மூடிக்கொண்டு தங்கள் ஆதர்ச ஹீரோவை டிக் அடிக்க, பலர் கண்ணும் கருத்துமாக ஆலோசனை செய்தார்கள். சில மாணவிகள், `என்னங்க, ஒரே போரிங்கா இருக்கு!' என `போர்'க்கு சொன்ன லாஜிக்தான் முக்கியம். `ஹீரோயின் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசுப் புதுசா வர்றாங்க. ஆனா, ஹீரோக்கள் அதே பழைய முகங்களைக் காட்டி ஏமாத்துறீங்களே ப்ரோ' என ஹீரோ பஞ்சத்தைத் தீர்க்க, கோடம்பாக்கத்துக்குப் பெட்டிஷன் போட்டார்கள். இருந்தாலும் கொடுத்த சாய்ஸில் இளம் பெண்களின் மனம் கவர்ந்த காதல் மன்னனாக இடம்பிடித்தவர், அதர்வா. கடந்த ஆண்டு ‘லவ்வர் பாய்’ பட்டம் வென்ற ஆர்யாவை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துவிட்டார் அதர்வா.

p36d.jpg

`பரதேசி'-யில் `நியாயமாரே...' எனக் கதறித் துடித்துக் கதற விட்டவர், `சண்டிவீரன்', `ஈட்டி' என அடுத்தடுத்த படங்களில் செம ஃபிட், செம ஸ்டைலிஷ் ஆக மாறி, பெண்களின் ஃபேவரிட்டாக மாறிவிட்டார். ``ஹோம்லி ஹீரோ, செம ஸ்மார்ட், சிக்ஸ் பேக் வேற'' எனக் கண்ணடித்துச் சிரிக்கிறார்கள் அதர்வா ரசிக கோடிகள். ``அவர் கன்னத்துல குழி விழும் பாருங்க. செமயா இருக்கும். இப்ப இருக்கும் எந்த ஹீரோவுக்கும் இல்லாத ஸ்பெஷல் அது” என அதர்வா ஸ்பெஷல் சொல்கிறார் சென்னை மாணவி அபி. `` `அலுங்குறேன்... குலுங்குறேன்...' பாட்டு ஒண்ணு போதுங்க அவரை செலெக்ட் பண்ண. அந்தப் பாட்டுல வர்ற மாதிரி எங்களையும்  எங்க பாய் ஃப்ரெண்ட் தோள்ல தூக்கிட்டுப் போகணும்” எனக் குஷியாகிறார் மதுரை ப்ரியா. இப்படியாக, 34.16 சதவிகிதம் ஓட்டுகளைப் பெற்று சக்சஸ் கோட்டைத் தொட்டுவிட்டார் இந்தச் சண்டிவீரன்.

இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஆர்யாவின் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. “அவரை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கணும். எதையுமே ஜாலியா எடுத்துக்கிற பையனைத்தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்'' என்று சொல்லும் பல பெண்களுக்கு, ஆர்யா நடித்த `ராஜா ராணி', `மதராசபட்டினம்', `பாஸ் என்கிற பாஸ்கரன்'தான் ஃபேவரிட் படங்கள். சாக்லேட் பாய் இமேஜ் ஆர்யாவிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வாங்க பாஸு!

p36e%281%29.jpg

போன வருடம் இரண்டாம் இடத்தில் இருந்த ஜெய், இந்த வருடம் மூன்றாம் இடத்துக்குப் பின்னேறி இருக்கிறார். அப்பாவித்தனமான இவரது `ராஜா ராணி' நடிப்பை, பெண்கள் இன்னும் மறக்கவில்லை. “அவரோட வாய்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லி வாக்களித்த ரசிகைகளும் உண்டு.

பல முன்னணி நடிகர்களையே பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துவிட்டார் அசோக் செல்வன். `ஆரஞ்சு மிட்டாய்', `சவாலே சமாளி', `144' என, கடந்த ஆண்டு இவர் நடித்து ரிலீஸான மூன்று படங்கள், வசூலைக் குவித்ததோ இல்லையோ, இவருக்கு ரசிகைகளைக் குவித்திருக்கின்றன. `நம்ம ஏரியா பையன் லுக்' இவரது பலம். “ரொம்ப அமைதியான, நல்ல பையன் லுக்தான் அவர்கிட்டப் பிடிச்சது” என்கிறார்கள் திருச்சி பெண்கள்.

பல்வால் தேவனுக்கும் லவ்வர் பாய் இமேஜ் உண்டு என நிரூபித்துவிட்டார் ராணா. அஜித்துடன் `ஆரம்பம்' படத்தில் தமிழில் அறிமுகமானாலும் `பாகுபலி'யில் வீரவாள் சுழற்றி பெண்கள் மனதைக் கொள்ளைகொண்டிருக்கும் ராணா, ஐந்தாவது இடத்தைப் பிடிக்கிறார். பீப் சாங் பாடி, தனக்கு இருந்த இமேஜை டேமேஜ் செய்துகொண்டார் சிம்பு. சர்வே ஷீட்டில் சிம்பு பெயரைப் பார்த்ததுமே திட்டித்தீர்த்தனர் பல பெண்கள். ``இருந்தாலும் சிம்பு, சிம்புதான். நாங்க எப்பவும் அவருக்கு ஃபேன்தான்'' என்று சொன்ன பெண்களும் உண்டு.

p36f%281%29.jpg

“நானும் கறுப்பு அவரும் கறுப்பு. அதனால், என் ஓட்டு அவருக்குத்தான்” என்று ‘கறுப்புப் பேரழகன்’ பட்டத்தோடு 5.34 சதவிகித ஓட்டுகளைப் பெற்றுள்ளார் விஷால். கடந்த ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கெளதம் கார்த்திக், இந்த முறை எட்டாவது இடத்தில். ``இன்னமும் கொஞ்சம் நல்ல படங்களாக செலெக்ட் பண்ணுங்கஜி'' என நம்பிக்கை தருகிறார்கள் கெளதம் ரசிகைகள். `அட்டகத்தி' தினேஷ் கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டும் அதே இடம். `கிருமி' படத்தில் முரட்டு உடம்புடன் களம் இறங்கிய கதிர், பத்தாவது இடத்துடன், லவ்வர் பாய் வண்டியில் ஏறுகிறார். 

பட்டியலிலேயே இல்லாத துல்கர் சல்மான், நிவின் பாலி, சித்தார்த், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு... எனப் பல பெயர்களை தாங்களாகவே எழுதி டிக் அடித்துக் கொடுத்தது சர்வேயின் சைட் டிஷ் ஹிஸ்டரி.
 
ட்ரீம் கேர்ள்

``ஒருத்தரை மட்டும் எப்படி பாஸ் ட்ரீம் கேர்ளா சொல்ல முடியும்? கீர்த்தி சுரேஷின் க்யூட் சிரிப்புப் பிடிக்கும். `ஊதாக்கலர் ரிப்பன்' ஸ்ரீதிவ்யாவை இன்னும் மறக்க முடியலை. நயன்தாராவை எப்படி பாஸ் விட்டுக்கொடுக்க முடியும்?'' என்று பஞ்சாயத்து செய்தவர்கள் 26.6 சதவிகித வாக்குகளுடன் `ட்ரீம் கேர்ள்' பட்டத்தைக் கொடுத்தது,  நயன்தாராவுக்கு.

`தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே...' என உருகிமருகி நயனுக்கு ஓட்டு போடுகிறார்கள். `ராஜா ராணி' படத்தில் ரொமான்டிக் ஹீரோயின் ரூட் பிடித்து அப்டேட் வெர்ஷன் எடுத்தவர், `நானும் ரெளடிதான்' படத்தில் `காதும்மா'வாக லைக்ஸ் குவித்தார். சென்னையைச் சேர்ந்த சுரேஷ், ``நானும் ரெளடிதான்' படத்துக்காகவே நான் நயனுக்கு வாழ்நாள் ரசிகனாக இருப்பேன்'' என பாடிகார்டு முனீஸ்வரன் கோயில் வாசலில் வைத்து சத்தியம் செய்கிறார். ட்ரீம் கேர்ள் நயன்... ஆர் யூ ஓ.கே பேபி?

p36a.jpg

`ட்ரீம் கேர்ள்’ பட்டியலில் புது வரவான, கீர்த்தி சுரேஷ் இரண்டே படத்தில் நடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார். “பக்கத்து வீட்டுப் பொண்ணு லுக் அவங்ககிட்ட இருக்கு” என டிக் அடிக்கிறார்கள் இளைஞர்கள்.           ```ரஜினிமுருகன்' ரொமான்ஸ் சீன் ஹிட் அடிக்க காரணம், கீர்த்தியோட க்யூட்னஸ்தான்'' என்ற சேலம் சுரேஷ், சர்வே ஷீட்டின் பின் பக்கம் கீர்த்திக்காக ஒரு கவிதையும் எழுதித் தந்தார். 

மூன்றாவது இடத்துக்குக் கடும் போட்டி. ஸ்ரீதிவ்யா பெற்றது 11.86 சதவிகிதம் ஓட்டு. சமந்தா வாங்கியதோ 11.89 சதவிகிதம். 0.3 சதவிகிதம் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டார் சமந்தா. ``அவங்க சிரிப்பு எல்லாம் சான்ஸே இல்லை. செம க்யூட்ல'' என்று கமென்ட் கொடுக்கிறார் ஒரு சென்னை ட்யூட். ``பக்கா பல்லாவரம் பொண்ணு. அழகும் நடிப்பும் சேர்ந்த தேவதை அவங்க'' என்று பூரிக்கிறார்கள் சமந்தா ரசிகர்கள்.

போன வருடம் முதல் இடத்தில் இருந்து சரசரவெனச் சரிந்து நான்காவது இடத்துக்கு வந்துவிட்டார் ஸ்ரீதிவ்யா. ``உம்முனு இருந்தாக்கூட அழகா தெரியுது பொண்ணு” என்பது பையன்கள் தரும் கமென்ட்.  `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ஈட்டி' என கிராஃப் ஏறும் ஸ்ரீதிவ்யாவுக்கு ஏற்ற ஜோடி சிவகார்த்திகேயன் என்பது ரசிகர் சாய்ஸ்.

p36b.jpg

க்யூட் ஸ்மைலி கொடுத்தே ரசிகர்களை ம்யூட் செய்யும் ஹன்சிகா 6.8 சதவிகிதம் ஓட்டுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். `அவங்க எல்லா படங்கள்லயும் ஒரே மாதிரி நடிக்கலாம். ஆனா, ஹன்ஸிகாவைப் பிடிக்கிறது நடிப்புக்காக இல்லை; அவங்க சிரிப்புக்காக' எனக் கண்ணடித்துக்கொண்டு டிக் அடிக்கிறார் கோவை பிரசன்னா.
 
போன முறை பத்தாவது இடத்தைப் பிடித்த கேத்ரின் தெரசாவுக்கு, இந்த முறை கிடைத்திருப்பதோ ஆறாவது இடம். `மெட்ராஸ்', `கதகளி' என இரண்டே படங்களில் இவரது  காதல் சீன்களுக்காகவே டிக் அடித்திருக்கிறார்கள். ``தெரசா, கொஞ்சம் கெத்தா இருக்காங்க. பொண்ணுன்னா அப்படித்தான் இருக்கணும்'' என்கிறார் தூத்துக்குடி பாலு.

p36c.jpg

`லவ்லி மாடல், செம கலர்' என மெர்சல் செய்கிறார்கள் ஏமி ஜாக்சன் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் கிளாமர் ஏரியாவை குத்தகைக்கு எடுத்திருக்கும் ஏமிக்குக் கிடைத்திருப்பது ஏழாவது இடம். ``தமிழ்ப் படங்களுக்கு இந்த மாதிரி ஃபாரின் பொண்ணும் அவசியம் வேணுங்க'' என்கிறார்கள் ஏமி ஃபேன்ஸ்.
 
ஸ்ருதிஹாசன் எட்டாவது இடத்தைப் பிடிக்க, குண்டு கண்ணு லட்சுமி மேனனுக்குக் கிடைத்திருப்பது, ஒன்பதாவது இடம். `பாகுபலி'யில் கொஞ்சம் கிளாமர் + கொஞ்சம் வீரம் என கெத்து காட்டிய தமன்னா, 10-வது இடம் பிடித்து ட்ரீம் கேர்ள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

நிறைய இளைஞர்கள், ``என்ன த்ரிஷாவைக் காணோம்? எங்க செலின்? மலர் டீச்சர் எக்கட போய்? மதி, உங்க ஆப்ஷன்லயே இல்லையே? அனுஷ்காவை மறந்துட்டீங்களே பாஸு... `கயல்' ஆனந்திக்கு ரசிகர்கள் இல்லைன்னு நினைச்சுட்டீங் களா? காஜல் லிஸ்ட்டில் இல்லாத காரணம் என்ன?'' எனக் கொதித்து எழுந்தார்கள்.

p39a.jpg

p39.jpg

ஹீரோயினும் ஹீரோவும் புதிது புதிதாக கோலிவுட்டுக்கு வந்தாலும், இளம் மனதில் இடம்பிடிப்பது யார் என்பதுதான் இருப்பதிலேயே சவால். அந்தச் சவாலில் சக்சஸ் ஆகியிருக்கும், `லவ்வர் பாய்' அதர்வாவுக்கும், `ட்ரீம் கேர்ள்'  நயன்தாராவுக்கும் வாழ்த்துகள்! மற்றவர்கள், அடுத்த சீஸனில் ஹிட் அடிக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்! 

vikatan

  • தொடங்கியவர்

#‎சிம்பு‬ ‪#‎நயன்தாரா‬ நடிப்பில் ‪#‎இது_நம்ம_ஆளு‬ கலக்கல் ட்ரெய்லர்

  • தொடங்கியவர்

12719224_984461184935909_139983805984469

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனின் பிறந்தநாள்
Happy Birthday Kane Richardson

  • தொடங்கியவர்

யாக்கை - நீ பாடல் டீஸர்!

 

  • தொடங்கியவர்
8 hours ago, colomban said:

நவீனன்! அம்மா ஆனையா போன சனிக்கிழமைதான் 2 நாள் பார்ட்டி முடித்து துபாயில் இருந்து வந்தன், ஹாவாய் நாட்டில் நடப்பதுபோல, கடற்கரையோரம், பெட்டைகள் எல்லாம் ஹவாயன் ட்ரெஸிலா, காத்து , தூக்கி, தூக்கி அடிகின்றதுடா, உடுப்பெல்லாம் பறக்கிறதுடப்பா, பொத்திப்பொத்தி அத பிடிக்கிறாடப்பா, அதப்பாத்தே எனக்கு ........... போய்ச்சிடப்பா, கையில பியரு, கடற்கரையில‌ பிகரு,தலையில ஹவாயன் தொப்பி  அட அதவிடு, இரவு மெஜிக் ஷோவில நடந்ததை கேட்டனியெனியேன்றால் என்றால்.. என்ற அம்மா சோறு என்னத்த சொல்ல, அடிடா சுந்த்ரலிங்கம்!!! 

:grin: :grin:

29521678.jpg

 

Web_pool-sunlounges-KempinskiPalm.jpg

 

 

அந்தரங்கள் யாவுமே
சொல்வதென்றால் பாவமே..:grin:                   நன்றி ஜீவன்

colomban நானும் சில தடவை டுபாய் சென்று உள்ளேன்..tw_yum:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அந்த 7 நாட்கள்

 

 
valentine_2_2734245f.jpg
 

‘வேலன்டைன்ஸ் டே ஃபீவர்' அறிகுறிகள் இவை. மிகச் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னால் இந்த அறிகுறிகள் காதலர்களைத் தாக்கும் அபாயம் உள்ளவை. இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி உங்களுக்கு இருந்தால் ‘விஷ் யூ லவ்வர்ஸ்!'

காதலர் வாரத்தின் முதல் நாளாக ‘ரோஜா தினம்' பிப்ரவரி 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதல் துணைக்குப் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாகக் கொடுத்தாலும் ஒரு ரோஜா மலருக்கு இணையாகாது. இதற்கு இணை வேறு இல்லை!

பிப்ரவரி 8‍-ம் தேதி ‘பிரபோஸ் டே'. காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தும் தினம். தங்களுடைய 'வேலன்டைனை' மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் ஆச்சரியப் படுத்தும் வகையிலும் தங்களது காதலை வெளிப் படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 9-ம் தேதி ‘சாக்லெட் டே'. காதலன் காதலிக்கோ அல்லது காதலி காதலனுக்கோ விதவிதமான வடிவத்தில் உள்ள சாக்லெட்டுகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தும் தினம்.

பிப்ரவரி 10-ம் தேதி ‘டெடி டே'. முக்கியமாகப் பெண்களுக்காகவே கொண்டாடப்படும் தினம். பெண்களுக்கு ‘டெடி' பொம்மைகள் பிடிக்கும் என்பதால் ஆண்கள் தன் காதலிக்கு அழகிய காதல் சின்னம் பதித்த டெடியைப் பரிசாக வழங்கி மகிழ‌ வைத்து, மகிழ்வர்.

பிப்ரவரி 11-ம் தேதி ‘பிராமிஸ் டே'. இந்த நாளன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டும் வகையில் ‘கடைசி வரை உன்னுடன் இருப்பேன்' என்று சத்தியம் செய்து கொடுப்பர். இதனால் ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

பிப்ரவரி 12‍‍-ம் தேதி ‘ஹக் டே'. இந்த தினத்தன்று காதலனும் காதலியும் அல்லது நண்பர்கள் நண்பர்களையும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘நான் உன் மீது முழு அன்பும், அக்கறையும் கொண்டுள்ளேன்' என்பதை உணர்த்துவதற்காக இந்த ‘ஹக்'காம்!

பிப்ரவரி 13-ம் தேதி ‘கிஸ் டே'. காதலர் வாரத்தின் ஏழாம் நாள் முத்தத்தின் வாயிலாக அன்பைப் பரிமாறிக்கொள்ளும் தினம். காதலர்கள் தங்களுக்குக் கிடைத்த உன்னதமான தினமாகக் கருதி அந்த தினத்தை ‘ரொமாண்டிக்'காக கொண்டாடுகிறார்களாம். ‘முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை' என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் ஞாபகமிருக்கிறதுதானே?

பிப்ரவரி 14-ம் தேதி ‘வேலன்டைன்ஸ் டே'. இறுதியாகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் காதலர்களுக்காகவே கொண்டாடப்படும் தினம். இத்தினத்தில் காதலிக்கும் ஒவ்வொருவரும் வாழ்த்து தெரிவித்து பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அந்த நாளைச் செலவழிப்பார்கள். சாதி, மத, இன வேறுபாடின்றி உருவாகும் காதலுக்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

இன்று அன்று: 1999 பிப்ரவரி 12 - சிதைக்கும் பயிரை விளைவிக்காதே!

 
 
மரபணு மாற்றப்பட்டு இந்தியாவில் விளைவிக்கப்பட்ட பிடி கத்திரிக்காயை உடனடியாகத் தடை செய்யும்படி 2010-ல் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட போராட்டப் பேரணி.
மரபணு மாற்றப்பட்டு இந்தியாவில் விளைவிக்கப்பட்ட பிடி கத்திரிக்காயை உடனடியாகத் தடை செய்யும்படி 2010-ல் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட போராட்டப் பேரணி.

ராவட் மரபணு ஆய்வுக்கூடத்தில் வழக்கம் போல எலிகள் மீது சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அதன் உடலில் கூடுதல் மரபணு கண்டு அதிர்ந்தார் அர்பாட் புட்ஸாய். பயிர்களில் உள்ள நச்சுத் தன்மையை ஆராயும் நிபுணர் புட்ஸாய். மரபணு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கில் இருந்த லெக்டிக் என்னும் ரசாயனம் எலியின் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் எதிர்ப்புச் சக்தியையும் சிதைத்திருக்கிறது எனக் கண்டறிந்து, பிரிட்டன் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த நிறுவனம் அவருடைய ஆய்வறிக்கையை ஏற்க மறுத்து வேலையிலிருந்து விலக்கியது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களினால் விளையும் அபாயங்களைத் தன் சக விஞ்ஞானிகளிடம் மீண்டும் நிரூபித்தார். மரபணு மாற்றப்பட்ட காய், கனி, தானியங்களை உட்கொள்வதால் அபாயகரமான மரபணுச் சிதைவுகள் மனித உடலில் ஏற்படும் என்பதைச் சர்வதேச விஞ்ஞானிகள் பிப்ரவரி 12, 1999-ல் அறிவித்தனர்.

tamil.thehindu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.