Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இதுவும் இந்தியாவில்தான் : ஆண்கள் கூடைப்பந்து அணிக்கு பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்!

 

ந்திய கூடைப்பந்து லீக்கில் பங்கேற்கும் ஹரியானா கோல்டு அணியின் பயிற்சியாளர் ஷிபா மேகன். 8 அணிகள் விளையாடும் இக்கூடைப்பந்து லீக்கின் இரு பெண் பயிற்சியாளர்களுள் இவரும் ஒருவர்

woma.jpg

அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.ஏ கூடைப்பந்துத் தொடரைப்போல இந்தியாவிலும் கடந்த ஆண்டு முதல் யு.பி.ஏ ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் பெங்களூரு பீஸ்ட் அணிக்கு பிரசன்னா ஜெயஷன்கர் பெங்களூரு பீஸ்ட் ஹரியானா கோல்டு அணிக்கு ஷிபா பேகன் என இருவர்
மட்டுமே பெண் பயிற்சியாளர்கள். இந்திய தேசிய அணியில் விளையாடியவரான ஷிபா தேசிய கூடைப்பந்து போட்டிகளில் சர்வீசஸ் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடி 7 தங்கம் மற்றும் 8 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய அணிக்காக காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த யு.பி.ஏ தொடரில் இதுவரை விளையாடியுள்ள அனைத்துப் போட்டிகளிலும் தோற்றுள்ள ஹரியானா
கோல்டு அணியை வெற்றிப்பாதைக்குத் திருப்புவதில் தற்போது அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

ஹரியான அணிக்கான தோல்விக்கான காரணங்களை ஷிபா கூறுகையில்,  ''அணியில் இளம் வீரர்களே அதிகமாக இருப்பதாலும், அவர்களுக்கு அனுபவம் குறைவாக இருப்பதாலும் நல்ல ஒருங்கிணைப்பு இல்லாமல் திக்ஷ்றி வருகிறது. “இந்தத் தோல்வியால் வீரர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதிலும் சீனியர் வீரர்கள் விரக்தியடைந்துள்ளனர். தமது தவறுகளால் வீழ்ந்துவிடுவோமோ என அஞ்சுகின்றனர். எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. எனக்கும் தான் பிரச்சனை உள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அணிக்காக போராட வேண்டும் என்று நான் கூறுவதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். நான் சிலமுறை கோபமாகப் பேசினாலும், என் அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

பெண்ணாக இருந்தாலும் ஆண்கள் அணிக்கு பயிற்சி அளிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஆண்களுக்கு ஈகோ அதிகமாகவே இருக்கும். அதைக் காயப்படுத்தினால் அவர்களால் தம்மை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். அதை மதித்து நான் அவர்களது ஈகோவைத் தொடுவதில்லை. எனவே என் வேலையை அது எளிதாக்கிவிடுகிறது. ஒரு வீரரிடம் 4 நிமிடம் மட்டுமே பந்து கையில் இருக்கும். மத்த 36 நிமிடங்களில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தான் திணறுகின்றனர். பந்தை கையாளும் விதத்தை  அவர்களுக்குச் சொல்லித் தருவதில் தான் நான் கவனம் செலுத்தி வருகின்றேன்'' என்றார்.

போட்டிகளின் டைம்-அவுட்களின் போது வீரர்களை ஆறுதல் படுத்துவதாகட்டும், தனது கோபத்தை வெளிப்படுத்து அவர்களது ஆற்றலைத் தூண்டுவதிலாகட்டும், தான் ஒரு பெண்ணென்று தன்னை ஒதுக்கிக்கொள்ளாமல், அணியின் ஒவ்வொரு வீரரோடும் தன்னை அந்நியோனியமாக்கிக்கொண்டு செயல்படுகிறார் ஷிபா. போட்டிகளில் தோற்பதால் விரக்தியோடு தனது கோபத்தை வீரர்களிடம் வெளிக்காட்டாமல், அடுத்த போட்டிக்கு ஊக்குவிப்பதை மட்டுமே அவரது பணியாய்க் கொண்டுள்ளார்.

ஹரியானா அணி வேண்டுமானால் போட்டிகளில் தோற்றிருக்கலாம், ஆனால் ஆண்கள் அணிக்கு ஒரு பெண்ணை பயிற்சியாளராக்கியதன் மூலம் ஸ்போர்ட்மேன்ஷிப்  வெற்றி பெற்றிருக்கிறது . பல்வேறு விளையாட்டுகளில் சாதித்த பெண்களும் ஓய்வுக்குப் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். விளையாட்டிற்கான அவர்களது பங்களிப்பு அதோடு முடிந்து விடுகிறது. அதையெல்லாம் தாண்டி ஷிபா போன்ற வெற்றி வீராங்கனைகள் பயிற்சியாளராவது மற்றவர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கிறார்.


 “மிகப்பெரிய யுத்தத்தை வெல்ல பல சிறு போர்களில் தோற்றுத்தான் ஆக வேண்டும்” எனத்  தங்கள் அணியின் தோல்வியையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் ஷிபா, இதே எனர்ஜியோடு செயல்பட்டு அடுத்த சுற்றுகளில்  வேற்றி பெற வாழ்த்துவோம்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12814059_1000887943293233_75582288477506

பிராண வாயு என்று நாம் தமிழில் அழைக்கும் ஒக்சிஜன் வாயுவைப் பிரித்தறிந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஜோசப் பிரீஸ்ட்லி அவர்களது ஜனன தினம்.

  • தொடங்கியவர்

பொண்ணு  ஒன்றும் கிடைக்கல

நகைச்சுவை குறும் நாடகம்

  • தொடங்கியவர்

980750_1000889756626385_5349865484627966

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட நட்சத்திரம் தினேஷ் ராம்டினின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

Shruthi, Samantha, Siddharth to campaign for EC

பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?

சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 

 

  • தொடங்கியவர்

உலகின் மிக வயதான ஓவியர்!

 
  • paint_2773006g.jpg
     
  • paint_3_2773010g.jpg
     
  • paint1_2773009g.jpg
     

உலகின் மிக வயதான பெண் ஓவியர் லூங்கூனன். ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த லூங்கூனனுக்கு வயது 105. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் இவரது ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஓவிய கண்காட்சியில் லூங்கூனனின் ஓவியங்கள் இடம்பெற்றன!

யார்?

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நிகினா பகுதியில் பிறந்தார் லூங்கூனன். 40 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் பாரம்பரியம் கொண்ட ஆண்டர்சன் மலைக்கு அருகில் உள்ள ஃபிட்ஸோரி நதிக்கரையில் வளர்ந்தார். இவருடைய பெற்றோர் கால்நடைப் பண்ணை வைத்திருந்தனர். கால்நடைகளை மேய்ப்பதும் சமைப்பதும் லூங்கூனனின் முக்கிய வேலைகள். சற்று வளர்ந்த பிறகு குதிரையேற்றம் கற்றுக்கொண்டார்.

“நாங்கள் வாழ்க்கையில் இருந்துதான் பாடங்கள் கற்றுக்கொண்டோம். எங்கள் கால்கள்தான் உலகை விசாலப்படுத்திக் காட்டின. காடுகளிலும் மேடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் தினமும் பல மைல் தூரம் நடந்தாலும் ஒருநாளும் சோம்பலோ, சலிப்போ வந்ததில்லை. எங்களுக்குத் தேவையான உணவு, கால்நடைகளுக்குத் தேவையான உணவு, மூலிகைச் செடிகளில் இருந்து மருந்துகள் எல்லாம் மைல் கணக்கில் நடந்து சென்றுதான் கொண்டு வருவோம். பழங்குடியினரின் வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் சுவாரசியமானது. இயற்கையோடு இணைந்தது’’ என்கிறார் லூங்கூனன்.

ஓவியராக மாறியது எப்போது?

95 வயதுக்குப் பிறகே லூங்கூனன் ஓவியராக மாறினார். அதற்குக் காரணம் அவரது சகோதரி. அவரும் பழங்குடியினரின் பாரம்பரிய ஓவியங்களைத் தீட்டி வந்தார். முதுமை லூங்கூனனின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை. ஒரு குழந்தைபோல மிகவும் ஆர்வத்துடன் ஓவியங்களைக் கற்றுக்கொண்டார். தன்னுடைய ஓவியக் கலையை மெருகேற்றிக்கொண்டார். 5 ஆண்டுகளில் 380 ஓவியங்களை வரைந்துவிட்டார். இன்று நிகினா மொழி பேசும் பழங்குடி மக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். பழங்குடி மக்களின் மொழி, கலை, கலாசாரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் லூங்கூனனின் ஓவியங்கள் மிக அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்றக் கட்டிடம், பல்வேறு பல்கலைக்கழங்களில் லூங்கூனனின் ஓவியக் கண்காட்சிகள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன. லூங்கூனனின் தனித்துவம் மிக்க ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வரவேற்பு இருக்கிறது. வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் லூங்கூனனின் புகழ் பரவிவிட்டது. கண்காட்சி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய தூதரகத்தில் ஓவியங்கள் வைக்கப்பட இருக்கின்றன.

திறமைக்கு வயது தடையில்லை…

“பழங்குடியினரின் வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள்தான். இன்றும் கூட நிலையாக ஒரு இடத்தில் வாழ முடியவில்லை. எங்கள் இனத்தின் அருமை பெருமைகளை என் ஓவியங்கள் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். என் ஓவியத்துக்குக் கிடைக்கும் பாராட்டை நான் மதிக்கிறேன். என் வயதையும் சேர்த்துச் சொல்லும்போது நான் அதிகம் மகிழ்வதில்லை. எனக்கொன்றும் அவ்வளவு வயது ஆகிவிடவில்லை. இன்றும் தனியாளாக நீண்ட தூரம் என்னால் நடந்து செல்ல முடியும். வயதுக்கும் திறமைக்கும் தொடர்பில்லை. நான் என் வயதைக் காரணம் காட்டி ஓவியம் தீட்டும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தால், இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஓவியராக இருந்திருக்க மாட்டேன். கங்காரு நாட்டில் இருந்து கழுகு நாடு வரை என் ஓவியங்கள் பறந்து சென்றுவிட்டன. என்னால்தான் அவ்வளவு தூரம் செல்ல முடியவில்லை. எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும் எங்களின் கலையைக் காப்பாற்றியதில் எனக்கும் சிறு பங்கு உண்டு என்ற திருப்தியே அதிக மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார் லூங்கூனன்.

பறவைக் கோணத்தில் அடர் வண்ணங்களில் புள்ளிகளால் வரையப்படும் நிகினா ஓவியங்களைப் போலவே லூங்கூனனும் ரொம்பவே வசீகரிக்கிறார்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

1934790_1142477429106421_461927788592751

எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது?
இன்றுடன் 20 ஆண்டுகள்.

  • தொடங்கியவர்

மின்காந்த அலைகள் என்றால் என்ன?

  • தொடங்கியவர்
1979 : சீன விமான விபத்தில் 200 பேர் பலி
 

வரலாற்றில் இன்று....

மார்ச் 14


684varalaru2.jpg313 : சீனாவின் ஸியாங்னு மாநில மன்னன் ஜின் ஹுய்டி கொல்லப்பட்டான்.

 

1489 : சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ, தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.

 

1794 : பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் “கொட்டன் ஜின்” என்ற இயந்திரத்துக்கான காப்புரிமையை எலீ விட்னி பெற்றார்.

 

1898 : டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

1926 : கொஸ்ட்டாரிக்காவில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

 

1939 : செக்கஸ்லோவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தன.

 

1939 : ஜேர்மனியின் வற்புறுத்தல் காரணமாக ஸ்லோவாக்கியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

 

1951 : கொரியப் போரில் இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியன.

 

1978 : இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.

 

1979 : சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

 

1980 : போலந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 87 பேர் உயிரிழந்தனர்.

 

1984 : வட அயர்லாந்தின் சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.

 

1995 : ரஷ்ய விண்வெளி ஓடம் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

 

1998 : தெற்கு ஈரானில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

 

2006 : ஆபிரிக்க நாடான “சாட்;”டில் இராணுவப் புரட்சி தோல்வியுற்றது.

 

2007 : மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

 

2008 : திபெத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் ஆரம்பமாகின. 

 

2012  : “ஸ்ரீலங்காஸ் கில்லிங் பீல்ட்: வோர் கிறைம் அன்பனிஸ்ட்” எனும் ஆவணப்படம் பிரித்தானிய சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பாகியது.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

”பாலிவுட்டின் தனி ஒருவன் “ அமீர்கான் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

 
  •  
  •  
  •  
 
 

யக்குநர் ஷங்கர் ஒரு படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்த சமயம், இந்திப் படம் ஒன்றைப் பார்க்கிறார். அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாத அவர், அந்தத் திரைப்படத்தை நிச்சயம் தமிழ்ரசிகர்களுக்காக மறுஆக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். எப்பொழுதுமே சொந்தக் கதையையே திரைப்படமாக்க நினைக்கும் ஷங்கரைப் புரட்டிப்போட்ட அந்தப் படம்.. அமீர்கான் நடித்த "3 இடியட்ஸ்".

 அமீர்கான். நான்கு தேசிய விருதுகள். ஏழு ஃப்லிம் ஃபேர் விருதுகள். பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் என்று எல்லாவற்றையும் கையில் ஏந்திக்கொண்டு இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை. தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு சேதி சொல்லும் ஆர்வமுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். 

collage1.jpg

 டிக்கெட் விலை 500 ரூபாயாக இருப்பினும், இவர் படமென்றால் முதல் நாள் முதல் காட்சி  களை கட்டும்.  அனேகமாக பல இளைஞர்களின் ஆதர்சமாக விளங்குபவர். பெண்களின் செல்லம். சமூக சேவைகளுக்கு பேர் போனவர். பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து கலெக்ஷன் கிங் என கூறும் அளவிற்கு திகழும் ஆமீர் கான், 14 மார்ச் 1965ல் பிறந்து - இன்றைக்கு அரை சதத்தை கடந்து 51 அகவையை எட்டுகிறார்.

மும்பையில் தயாரிப்பாளர் தாகிர் ஹுசெயின், சீனத் ஹுசெயின் தம்பதியினருக்கு பிறந்த இவர், இன்றைய தேதியில் பாலிவுட்டின்  மோஸ்ட் வாண்டட் நடிகர். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர்.  நான்கு குழந்தைகளுள் மூத்தவரான அமீர் தனது முதல் திரையுலக பிரவேசத்தை 1973ஆம் ஆண்டு தனது உறவினரும், இயக்குனருமான நாசிர் ஹுசைனின் "யாதோன் கி பாரத்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கினார். அதன் பிறகு 1988ல் இவர் நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்திய அளவில் மாஸ் ஹிட்டடித்த படம். அதில் பல விருதுகளை அள்ளி, தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்தார். பின், பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் தனக்கு ரசிகராக மாற்றியுள்ளார்.

ஒரு முழுமையான நடிகர் என கூறும் அளவிற்கு இவரது நடிப்பும், திரையில் இவரது செயல்பாடுகளும் அமைந்திருக்கும். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து போர் அடிக்காமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் ஆமீர்.

எழுபதுகளில் இருந்த இளம்பெண்கள் முதல் இந்தக் கால இளம்பெண்கள் வரை அனைவரின் கனவு நாயகனாகவும், ஆண் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும் , குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், திரைத்துறையிலேயே பலருக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் அவர் திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள்  57. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என பல முகங்களைக்  கொண்டுள்ளார் அவர்.
 

'அமீர் கான்' எனும் பெயரைக் கேட்ட உடன் பலரது மனதிற்கும் வரும் சில திரைப்படங்கள் "லகான், மங்கள் பாண்டே, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே"  ஒவ்வொன்றிலும் தனது நடிப்பால் பல கோடி ரசிகர்களையும், பல கோடிகளில் கலெக்ஷனையும் ஈர்த்தவர்.

collage.jpg 


இவர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம், இந்திய மாணவர் சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது அதன் பிறகு அநேகமாக பலர் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கத் துவங்கினர். பிகே படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.  மதம் என்ற பிடியில் நம் இந்தியா எப்படி குழம்பிப் போயுள்ளது என்பதை  தைரியமாகவே  சொன்னார். இப்படி சமூக சிந்தனைகளோடு கூடிய கமர்ஷியல் படங்களைக் கொடுப்பதில் அமீர்கான், எப்போதும் முன்னணியில் இருக்கிறார்.

தமிழில் தயாரான கஜினி படத்தை ஹிந்தியில் நடித்துக் கொடுத்த அமீரின் 3இடியட்ஸ் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியானது. இப்படி தமிழ்நாட்டிற்கும் அவருக்குமான தொடர்பு இருந்து கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் தமிழில் வெளியான  தனது தூம் 3 படத்தை புரமோட் செய்ய முதல்முதல் தமிழ் நாட்டுக்கு வந்த இந்தி நடிகர் அமீர்கானாகத் தான் இருப்பார். அவருக்குப் பிறகு ஹ்ருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என பலரும் இங்கே வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் அவர் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' எனும் தொடர் அவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்திராத, பெயரையும், புகழையும், எல்லாவற்றிற்கும் மேல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. சமூகத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அதை மாற்றும் வழிமுறைகளையும் காட்டிய அந்தத் தொடரால் உண்மையிலேயே பல மாறுதல்கள் ஏற்பட்டன.

எப்பொழுதும் புதிய கதாபாத்திரத்தை தேடிச் சென்று நடித்து அதனுடன் சேர்த்து சமூக சேவைகளையும் செய்யும் அமீர் கானுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துகள்.

vikatan


vikatan

  • தொடங்கியவர்
தெரியுமா சேதி?... கோஹ்லிக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருக்காங்களாம்.. பாகிஸ்தான் பெண்கள் அணியில்!!!
 
14-1457935251-sana-mir4566.jpg
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில், விராத் கோஹ்லிக்கு ஏகப்பட்ட ரசிகைககள் உள்ளனராம்.
 
இந்த ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார் கேப்டன் சனா மிர். தனக்கு கேப்டன் டோணியைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் கூட, விராத் கோஹ்லிக்குத்தான் அதிக அளவில் ரசிகைகள் உள்ளதாக சனா மிர் கூறியுள்ளார்.
14-1457935267-sana-mir.jpg
கோஹ்லி - டோணி இந்திய அணி குறித்து எங்களது அணியில் பேச்சு வந்தால் அதில் நிச்சயம் டோணி, கோஹ்லி குறித்து பேச்சு வராமல் இருக்கவே இருக்காது.
14-1457935332-virat-sana-mir34.jpg
கோஹ்லி ஸ்பெஷல் என்னதான் நான் டோணியைப் பாராட்டினாலும் எனது அணியில் கோஹ்லிக்குத்தான் ரசிகைகள் அதிகம். அவர் பலருக்கு ஸ்பெஷலும் கூட என்றார் சனா மிர்.

 

 
  • தொடங்கியவர்

12819196_1001475996567761_98591840874377

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்தநாள்.

இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஒளி மின் விளைவைக்கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு (சார்பியல்)இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1999 ல், புத்தாயிரமாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற கௌரவத்தை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

 

 

மார்ச் 14: இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் மூன்று வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்றே எண்ணினார்கள் , அவருக்கு அவரின் அப்பா கொடுத்த காம்பஸ் பெரிய ஈர்ப்பை உண்டு செய்தது . அது  எப்படி மிகச்சரியாக திசை காட்டுகிறது ஆரம்பித்தார் அவர் .

பள்ளியில் சொந்தமாகவே நுண்கணிதத்தை கற்றுத்தேறினார் . சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும்சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன்.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்குசென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். ‘உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது ‘என்கிற வாசகம் இன்றைக்கும் அலங்கரிக்கிறது .

ஐன்ஸ்டீனுக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அப்பொழுது எழுதி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தான் இயற்பியல் உலகின் புதிய ஏற்பாடு எனப்புகழப்படுகின்றன.

ionvc.jpg

 

அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்துக்கு உள்ளானது . இவரின் இந்த சிந்தனை தான் எத்தனை அளப்பரியமாற்றங்களை அறிவியல் உலகில் உண்டு செய்து இருக்கிறது என நினைக்கிற பொழுது சிலிர்க்கிறது நியூட்டன் எனும் மாமேதையின் கருத்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச பல பேர் பயந்த பொழுது ஐன்ஸ்டீன் மட்டும் மிக அழுத்தந்திருத்தமாக தன் கோட்பாடுகளை உலகின் முன் வைத்தார் !சார்பியல் தத்துவம் உதித்தது !

இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வகங்களில் மூழ்கிக்கிடந்தவர் இல்லை !பல இடங்களில் சார்பியலின்அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார்

அவர் ஒளி மாதிரி சில சங்கதிகள் தான் மாறாதவை .காலம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது என்றார் . எளிமையாக அதை ஐன்ஸ்டீன் இப்படி விளக்குவார் ,”ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது உட்கார்ந்து பாருங்கள் ஒரு நிமிடம் ஒரு மணிநேரமாக தோன்றும் ;அழகான ஒரு பெண்ணோடு உரையாடிக்கொண்டு இருங்கள் ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல தோன்றும் ” ஸ்டீவன் ஹாகிங் இதை “நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!”

சார்பியல் சார்ந்து உருவான E=mc 2 எனும் சூத்திரம் அதில் ஒன்று . இந்த சூத்திரத்தில் ஆற்றல் ஆனது நிறையோடு தொடர்புடையது என்றும் நிறையில் ஏற்படும் இழப்பு ஆற்றலாக வெளிப்படும் எனவும் வரையறுத்து சொன்னார்; இதன் மீது ஆரம்ப காலத்தில் ஏகத்துக்கும் விவாதங்கள் எழுந்தன ;அதனாலேயே நோபல் பரிசு இந்த ஆய்வுதாளுக்கு தராமல் ஒளிமின் விளைவுக்கு தரப்பட்டது.

எனினும், இந்த On the Electrodynamics of Moving Bodies ஆய்வுத்தாள் அடிப்படையாக கொண்டு அணுகுண்டு உருவானது சோகமான வரலாறு.ஏ பாம் ப்ராஜக்டை ஹெய்சன்பர்கை கொண்டு ஜெர்மனியில் ஹிட்லர் தொடங்கி இருப்பதை பற்றி கவலையோடு அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் ;அமெரிக்க அணுகுண்டு சார்ந்த ஆய்வில் இறங்கவேண்டும் என்ற அவரின் வார்த்தையை செயல்படுத்தி அணுகுண்டு தயாரித்தது அமெரிக்கா.

உலகை இறைவன் எப்படி படைத்தார் என கண்டறிந்து விட வேண்டும் என சொன்ன இவருக்கு சமயங்களில் பெயரே மறந்து விடும். வீட்டுக்கு வழிதெரியாமல் நின்ற கதைகள் உண்டு . டிஸ்லெக்சியா வேறு இருந்தது . பின் எப்படி இயற்பியல் உலகின் சாதனைகள் சாத்தியமானது என கேட்ட பொழுது “எனக்கொன்று தனித்திறமை எதவுமில்லை . எல்லையில்லா ஆர்வம் மற்றும் அறிவுக்கான தேடல் என்னை செலுத்துகிறது .சிக்கல்களோடு நான் கொஞ்சம் கூடுதலாக போராடுகிறேன் ” என்றார். இன்றைய கல்விமுறை மீன்களை மரமேறுவதன் மூலம் எடை போடுகிறது என்று விமர்சிக்கவும் செய்தார்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மிசிஸ் வேர்ல்ட் 2016 அழகுராணி போட்டிகளில்...
 

மிசிஸ் வேர்ல்ட் 2016 அழகுராணியாக தென்ஆபிரிக்காவின் கென்டிஸ் ஆப்ராஹாம்ஸ் தெரிவாகியுள்ளார்.

 

15509_Untitled-2.jpg

 

மிசிஸ் வேர்ல்ட் 2016 (Mrs World 2016) அழகுராணி போட்டிகள் சீனாவின் டோங்குவான் நகரில் நடைபெற்றன.

 

இப் போட்டிகளில் இலங்கையின் சார்பில் நர்மதா யாப்பா அபேவர்தன பங்குபற்றினார். 


15509_22.jpg

 

இப் போட்டிகளில் தென்ஆபிரிக்காவின் கென்டிஸ் ஆப்ரஹாம்ஸ் முதலிடத்தைப் பெற்றார். போலந்து அழகுராணி 2 ஆவது இடத்தையும் தென்கொரிய அழகுராணி 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.

 

1985 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மிசிஸ் வேர்ல்ட் அழகுராணி போட்டியில் இலங்கையின் ரோஸி சேனநாயக்க முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இம் முறை 27 ஆவது தடவையாக இப் போட்டி நடைபெற்றது.

 

15509_19.jpg

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

734688_1090294811029308_4311975723493681

 
 
ழகரம் தமிழின் சிறப்பாகும்!
  • தொடங்கியவர்

கட்டடங்களைக் கட்ட மரங்களை வேட்டுவதாலும், வாகனங்கள் அதிகரிப்பதாலும் பறவைகள் நகரத்தைவிட்டுச் சென்றுவிடுகின்றன. அதனால் நகரத்தில் பறவைகளில் இனிய ஓசையைக் கேட்க்கமுடிவதில்லை. இந்த் தடுக்க, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தாமஸ் டாம்போ (Thomas Dambo) என்பவர் கடந்த ஏழு வருடங்களாக பயன்படாத மரங்களைக் கொண்டு பறவைகளுக்கு நாம் வாழும் வீடுகளைப் போன்ற அமைப்பில் கூடுகளைச் (Birdhouses) செய்து, மரங்கள் மீதும், பார்க்குகளிலும், வீட்டுக் கூரைகள் மீதும் பொருத்திவருகிறார்.
இதுவரை 3500 பறவைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
இவருடைய சேவைக்கு 'ஹேட்ஸ் ஆப்'.

10420151_690446461057899_496635945967645

12821380_690446521057893_266964490702265

5796_690446524391226_2848518199576817909

1468751_690446537724558_1967922597706055

12661860_690446561057889_636892334301090

1620940_690446574391221_1595317624812957

vikatan

  • தொடங்கியவர்
93 வயதில் டிப்ளோமா பட்டம் பெற்ற பெண்; திருமணம் செய்ததால் 1942 ஆம் ஆண்டில் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டிருந்தது
 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் 93 ஆவது வயதில் டிப்ளோமா பட்டதாரியாகியுள்ளார். ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த டொரத்தி எல் லிகெட் எனும் இப் பெண், அக்ரோன் நகரின் வடக்கு உயர் பாடசாலையில் கல்வி கற்றவர். 1942 ஆம் ஆண்டு உயர்பாடசாலை டிப்ளோமா பட்டத்தை பெறவிருந்தார். 

 

1551293-yearl-old-woman.jpg

 

ஆனால், இவர் ஏற்கெனவே திருமணம் செய்திருந்தமை பட்டமளிப்பு விழாவுக்கு சில வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதால், அவருக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படவில்லை.  

 

திருமணம் செய்த மாணவர்களை பாடசாலையிலிருந்து நீக்கும் விதியின்படி டொரத்தி லெகெட்டுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது.

 

தற்போது 93 வயதான டொரத்தி லெகெட்டுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

 

அவர்களில் ஒருவரான ஜெனிஸ் லார்கின் தனது தாயார் குறித்து அக்ரோன் நகர கல்வி அதிகாரிகளுக்கு கடிதமொன்றை எழுதினார். 

 

1551293-yearl-old-woman2.jpg

 

அதையடுத்து, கடந்த வாரம் டொரத்தி லெகெட்டுக்கு டிப்ளோமா பட்டம் அளிக்கப்பட்டது. அக்ரோன் நகர பொதுப் பாடசாலைகள் அத்தியட்சகர் டேவிட் ஜேம்ஸ் இப் பட்டத்தை கையளித்தார். 


“இது தொடர்பாக டேவிட் ஜேம்ஸ் கூறுகையில்," “மேற்படி கடிதத்தை நான் வாசித்தபின், அது தொடர்பாக ஆராய்ந்தேன். லெகெட் நடத்தப்பட்ட விதம் குறித்து அறிந்து நான் கவலையடைந்தேன்.

 

13 வருட காலம் பாடசாலையில் கல்வி கற்று, ஒரு சிறந்த மாணவியாகவும் விளங்கிய நிலையில் அவருக்குரிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படாமை தவறானது” என்றார்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு தந்தை ஹீரோவான தருணம்!

டந்த வாரம் மொத்த இன்டெர்நெட்டிலும் வைரலானது ஒரு போட்டோ. இயற்கையோ, செயற்கையோ, அழகோ எதுவுமே இல்லாத அந்த போட்டோ வைரலாகக் காரணம் ஒரு தந்தையின் பாசம். தன் மகனின் முகத்தை நோக்கிப் பறந்து வந்த பேஸ்பால் பேட்டை,  தனது கையால் தடுத்ததை ஒரு போட்டோகிராஃபர் கிளிக்கிட,  ஓவர்நைட்டில் ஃபேமஸ் ஆகிவிட்டார் அந்த பாசக்கார டேடி!

fater_vc12.jpg

அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் நடைபெற்ற ஒரு பேஸ்பால் போட்டியைக்காண,  தனது மகன் லாண்டனை முதல் முறையாக ஸ்டேடியத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளார் ஷான் கன்னிங்ஹம். முதல்முறையாக மைதானத்திலிருந்த மகிழ்ச்சியில் தன்னைப் புகைப்படம் எடுத்து தனது தாய்க்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தான் சிறுவன் லாண்டோ. ஆட்டத்தைப் பார்க்காமல் லாண்டன் கீழே குனிந்து மெசேஜ் செய்துகொண்டிருக்க, பிட்ஸ்பர்க் பைரட்ஸ் அணியின் வீரர் டேனி ஒரிட்ஸ் கையிலிருந்து நழுவிய பேஸ்பால் பேட்,  லாண்டனை நோக்கிப் பாய்ந்தது. மகன் அதை கவனிக்கவில்லையென்றாலும் உஷாராக இருந்த ஷான் தனது மகனின் முகம் நோக்கி வந்த பேட்டை, தனது கைகளை நீட்டித் தடுத்துவிட்டார். ஒரு நொடிப்பொழுதில் யாரும் எதிர்பார்க்காமல் நடந்த இச்சம்பவத்தை மிகச்சிறப்பாக படம்பிடித்துவிட்டார் கிறிஸ்டோபர் ஹார்னர்.

fater_vc3.jpg


இந்தப் புகைப்படம் வெளியான நிமிடத்திலிருந்து ஹார்னருக்கும் ஷானுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. “இச்சம்பவத்தின் போது என் மகன் ஆட்டத்தைக் கவனிக்கவில்லை. ஆனாலும் நான் அவனை கவனிக்காமல் இருக்கவில்லை. மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரமாக என்னென்னமோ நடக்கிறது. பாராட்டித்தள்ளுகிறார்கள்” என்று பூரிக்கிறார் ஷான். ஆனால் இச்சம்பவம் குறித்து அறிந்த அவரது மனைவிக்குத்தான் அடிவயிறே கலங்கி விட்டதாம்.

இப்புகைப்படத்தை எடுத்த ஹார்னரோ மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார். இத்தாலியின் மிகப்பெரிய ஓவியரான டிடியனின் ஓவியத்தோடு இவரது புகைப்படத்தை ஒப்பிட்டால்? இதைவிட ஒரு கலைஞனுக்கு என்ன சன்மானம் கிடைத்திட வேண்டும். தனது மகன் ஐசக்கை ஆபிரஹாம் கொல்லப் போகும் அந்நொடியில், ஒரு தேவதை அவனைத் தடுக்கும் ‘ஆபிரஹாம் அன்ட் ஐசக்’ ஓவியத்தோடு ஒப்பிட்டு ஹார்னரைப் பாராட்டியுள்ளது பி.பி.சி.

“ ஒரு சாதாரண மனிதன் ஹீரோவான தருணத்தை படம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. பேட் அங்கு வந்ததற்கும் அவரது கை நீண்டதற்கும் மிகச்சிறிய இடைவெளியே இருந்தது. ஒருவேளை அவர் அப்படி செய்திருக்காவிட்டால், யாரும் பார்க்க விரும்பியிருக்காத தருணத்தையே நான் படம்பிடித்திருப்பேன்” என்று அந்தப் பதட்டமான சம்பவத்தைப் பற்றிக் கூறினார் ஹார்பர்.

fater_vc1.jpg


சொல்லப்போனால் இது வெறும் புகைப்படம் மட்டுமல்ல, தந்தைப் பாசத்திற்கான சான்று. இந்தத் தந்தை மட்டுமல்ல,  கோபத்தில் திட்டித் தீர்க்கும் எந்தத் தந்தையும் இப்படித்தான். ஆனால் அவர்களின் பாசத்திற்கான சான்றுகள்தான் ஏதுமில்லை. தங்கள் பிள்ளைக்கு கஷ்டம் வருகையில் சற்றும் தாமதிக்காமல் உதவும் ஒவ்வொறு தந்தைகளுக்கும் இப்புகைப்படைத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்
. ·
 
Vikatan EMagazines Foto.
 

மார்ச் 14: இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான நாள் இன்று (1931)

இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா" வெளியான நாள் இன்று. இது இந்தி மொழியில் வெளியானது இந்த படம் இளவரசன் ஒரு நாடோடிப் பெண்ணை காதலிப்பதாக இருந்தது. இப்படத்துக்கு படம் வெளியான அன்று கூட்டம் சமாளிக்க முடியாமல் போகவே போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு வாங்கப்பட்டது

  • தொடங்கியவர்

535126_1001476666567694_2271815747519629

பொதுவுடைமைக்கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்க்சின் நினைவு தினம்.

அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் விளங்கியிருந்தார்.

 

 

 

 

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!

karl%20marx%20250.jpgளும் வர்க்கத்துக்கும் அரசுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால்ம், பல நாடுகளில் இருந்தும் துரத்தப்பட்ட அந்த மாபெரும் சிந்தனையாளர், அப்போது லண்டனில் குடியிருந்தார். அவரது மனைவி வசதியான ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் காதலுக்குரியவரை மணந்தபோது வறுமையையும் தன் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள், கொன்று தின்னும் வறுமை என வாழ்ந்தாலும் அதற்கிடையிலும் காதலை வளர்க்கத் தவறவில்லை அந்த லட்சியத் தம்பதிகள்.

ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில்,  ஒரு குழந்தை இறந்தபோது, அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார். நம்மைப் பொறுத்தவரை கோட் என்பது ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் குளிர் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் கோட் அத்தியாவசியம். தனது கோட்டை விற்றுக் குழந்தையைப் புதைத்த அந்தத் துயரத்துக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்  காரல் மார்க்ஸ்!

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில்,  மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அவர் சிந்தித்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.

‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

karl%20marx%20600%201.jpg

‘’ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொருகாலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மிஞ்சியிருந்தது ‘உபரி மதிப்பு’ என்றும் இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம்’ ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார்.

இப்படியான ஆய்வு முடிவுகளை வந்தடைவதற்கு மார்க்ஸ் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு அவர் கொடுத்த விலைகளும் கொஞ்சமல்ல.

karl%20marx%20leftt.jpgஇந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம், மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.

மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.

உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து,  முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.

karl%20marx%20600%202.jpg

சோவியத் யூனியனின் அனுபவங்களில் இருந்து சற்றே வேறுபட்டு, உள்நாட்டு அனுபவங்களுடனும்,  படிப்பினைகளுடனும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் ஒன்றிணைத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ. வியட்நாம், கியூபா எனப் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் விரும்பியபடி ஒரு முழுமையான, வர்க்கபேதங்கள் அற்ற சமுதாயம் உருவானது என்று சொல்ல முடியாது. சோவியத் யூனியன் உடைவு என்பது உலகம் எங்கிலும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் 90களுக்குப் பிறகு உருவான உலகமயமாக்கலும் புதிய பொருளாதாரக் கொள்கையும் எந்த அற்புதங்களையும் விளைவிக்கவில்லை.

விவசாயிகளின் தற்கொலை, அந்நிய மூலதனங்கள் உள்ளூர்த் தொழிலாளர்களைச் சுரண்டுவது, முன்னேறிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொடூரமான நுகர்வுக் கலாசாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, ஏகாதிபத்தியத்தின் குழந்தையாய் வளர்ந்துள்ள மதத் தீவிரவாதம் ஆகியவை முதலாளித்துவத்தின்மீது கடுமையான விமர்சனங்களைத் தற்போது ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்கமுடியாது.

மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.

மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.

இன்று அவரது நினைவுநாள்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12828342_1001474426567918_67533964136502

ஹிந்தி திரையுலகின் முடிசூடா மன்னன் - தொடர்ந்தும் வித்தியாசமான திரைப்படங்கள் மூலமாக வெற்றிகளைக் குவித்துவரும் அற்புத நாயகன் அமீர் கானின் பிறந்தநாள்.

Happy Birthday Aamir Khan

  • தொடங்கியவர்

47469_1055709834488030_10461920395524851

ஆறு கிலோ எடை குறைத்த அஞ்சலி!

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

dot4%281%29.jpg ஆஸ்திரேலியாவில் ஹாலிடே கொண்டாடிய பரிணீதி சோப்ராதான், கடந்த வார வாட்ஸ்அப் வைரல். ஆஸ்திரேலியாவுக்கு டூர் போன பரிணீதி, பலூனில் பறந்தது, காட்டுக்குள் சாகசச் சவாரி செய்தது போன்ற உற்சாக ட்ரிப் போட்டோக்களை ஆன்லைனில் அப்லோட, ரசிகர்கள் எல்லோரும் `மேரி பியாரி பரிணீதி...' என வெறிபிடித்து அலைந்ததில் பேபி செம ஹேப்பி! ச்சோ ஸ்வீட்!

p58a.jpg

dot4%281%29.jpg  இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட், டென்னிஸ், மல்யுத்தம் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அதிகம் சம்பாதிப்பது எல்லாமே வெளிநாட்டு வீரர்கள்தான். 2015-ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களின் சம்பளப் பட்டியல்படி, இந்திய டென்னிஸ் லீகில் விளையாடுவதற்காக ரோஜர் ஃபெடரரும் ரஃபேல் நடாலும் 26 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார்கள். லீகுகள் மூலம் ஒரு நிமிடத்துக்கு அதிகபட்சமாக 1.65 லட்சம் ரூபாய் சம்பாதித்து இந்திய வீரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத். விராட் கோஹ்லி, தோனி எல்லாம் நிமிடத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் வாங்க, யுவராஜ் சிங் 1.01 லட்சம் ரூபாயோடு லீடிங்கில் இருக்கிறார். `தத்’னா கெத்து!

p58b.jpg

dot4%281%29.jpg  ஒரு கைக்கடிகாரத்தால் கர்நாடக முதலமைச்சரே கதிகலங்கியிருக்கிறார். காரணம், அந்தக் கடிகாரத்தின் விலை 70 லட்ச ரூபாய். வைரம் பதித்த அந்த ஹியூப்லோ கைக்கடிகாரத்தை அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்திருந்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. சட்டசபைக் கூட்டத்தில் அதையே விவாதப்பொருளாக மாற்றி `இந்த வாட்ச் எங்கு இருந்து வந்தது?’னு விசாரணை பண்ணணும்' என எதிர்க்கட்சிகள் குண்டு வீச, `நான்தான் கொடுத்தேன். நாங்க ரெண்டு பேரும் முப்பது வருஷ ஃப்ரெண்ட்ஸ்' என துபாயைச் சேர்ந்த கிரிஷ் பிள்ளை என்பவர் வான்டட்டாக வந்து வண்டியில் ஏற... `பிரச்னை வேண்டாம். இதை கர்நாடக அரசுக்கே கொடுத்துவிடுகிறேன்' என விவகாரத்துக்கு  ஃபுல்ஸ்டாப் வைத்திருக்கிறார் சித்தராமையா. நேரம் சரியில்லைனா இப்படித்தான்!

dot4%281%29.jpg  `முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு, உன்னைக் கேலிசெய்வார்கள். அடுத்து உன்னோடு சண்டையிடுவார்கள். முடிவில் நீயே வெல்வாய் - மகாத்மா காந்தி' - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலைத்தகவல் இது. இதைப் போட்ட அரை மணி நேரத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் ஹிலாரி அணி, `இதை, காந்தி சொல்லவே இல்லை' என நிரூபித்து ஹேஷ்டேக்கோடு கலாய்க்க, நாட் ரீச்சபிள் ஆனார் ட்ரம்ப். என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா! 

p58c.jpg

dot4%281%29.jpg  சுமார் ஒரு வருடமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த ஸ்காட் கெல்லி, பூமிக்கு வந்துவிட்டார். 340 நாட்களுக்கு முன்னர் விண்வெளிக்குக் கிளம்பிய நாசாவின் ஸ்காட் கெல்லி, விண்வெளியில் அதிக நாட்கள் இருப்பதால் உண்டாகும் உளவியல் பிரச்னைகள் பற்றி ஆய்வுசெய்திருக்கிறார். `இப்பவும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் ஒரு வருடம்கூட விண்வெளியிலேயே இருந்திருப்பேன். காட்டுக்குள்ளே கேம்ப்பிங் போனதுபோல்தான் இருந்தது. என்ன... ஜாலியாக ஷவரில் குளிக்க முடியவில்லை' என்கிறார் கெல்லி. # அடுத்த ட்ரிப் எப்போ?

p58d.jpg

dot4%281%29.jpg `வாட்டர் பவுல் சேலஞ்ச்' - த்ரிஷா தொடங்கிவைத்திருக்கும் இன்டர்நெட் ட்ரெண்ட் இது. சுட்டெரிக்கும் சம்மர் சீஸன் ஆரம்பித்திருப்பதால் பறவைகள், விலங்குகளின் தாகம் தீர்க்க வீட்டுவாசலில், பால்கனிகளில் தண்ணீர் பிடித்து வைத்து அதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவேண்டுமாம்! செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா..?

p58e.jpg

dot4%281%29.jpg  உலகப் புகழ்பெற்ற ஓவியரான வின்சென்ட் வான்காவின் வாழ்க்கை, திரைப்படம் ஆகிறது. `லவ்விங் வின்சென்ட்' என்ற இந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க ஓவியங்களால் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர், பார்த்தவர்களை மிரளவைத்திருக்கிறது. இந்தப் படத்துக்காக 100 ஓவியர்கள், தங்கள் கைகளாலேயே 57 ஆயிரம் ஃப்ரேம்களுக்கான ஓவியங்களை வரைந்துகொடுத்திருக்கிறார்கள். `வான்கா மாதிரியான ஓர் ஓவியனுக்கு இதுதான் சரியான மரியாதையாக இருக்கும்' என்கிறது படக் குழு. # மகா கலைஞனுக்கு மெகா மரியாதை!

dot4%281%29.jpg  பொருட்கள் விற்கும் ஃப்ளிப்கார்ட்டில் தன்னையே விற்ற இளைஞனின் ஐடியா ஆன்லைனில் தெறி ஹிட். ஐ.ஐ.டி கரக்பூரில் படித்த ஆகாஷ் மிட்டல், ஃப்ளிப்கார்ட்டில் தன் போட்டோவைப் போட்டு,
27 லட்ச ரூபாய் விலை குறிப்பிட்டு, `இந்தத் திறமையான, அறிவான, புதுமையான பையன் உங்களுக்கு வேண்டுமா?' என, தன் பயோடேட்டாவையும் இணைத்துவிட பத்திக்கிச்சு சோஷியல் மீடியா. விஷயம் வைரல் ஆச்சே தவிர, ஆகாஷுக்கு வேலை கிடைக்கவில்லை! ஸோ சேடு!

dot4%281%29.jpg  விளம்பரங்களில் இனி எந்த நடிகையுடனும் சேர்ந்து நடிப்பது இல்லை எனக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறார் ரன்பீர் கபூர். `நடிகைகளுடன் சேர்ந்து நடித்தால், மக்கள் ஜோடியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். பொருளைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேசுவது இல்லை. கூடவே இந்த ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு எல்லாமே ஏமாற்று வேலை. அதனால் அந்த விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன்' என்கிறார் ரன்பீர். எங்கேயோ ஹெவியா பாதிக்கப்பட்டிருக்காப்ல!

p58f.jpg

dot4%281%29.jpg  இந்த ஆண்டு ஆஸ்கரில், சில்வஸ்டர் ஸ்டாலோன்தான் சிறந்த துணை நடிகர் விருது பெறுவார் என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், `பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்'-ல் நடித்த மார்க் ரைலான்ஸுக்கு விருது கிடைத்துவிட, சில்வஸ்டர் ஸ்டாலோனின் சகோதரர் ஃப்ராங்க் ஸ்டாலோன் பொங்கி எழுந்துவிட்டார். `ஆஸ்கர் கமிட்டியே உனக்கு வெட்கமா இல்லையா... எங்க அண்ணனுக்கு அநீதி செய்துவிட்டீர்கள்' எனப் பொங்க... சில்வஸ்டர் உள்ளே புகுந்து சகோதரனை கூல் பண்ணியதோடு, தம்பியின் செயலுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பாசக்கார பிரதர்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

12814270_1057361444322869_58044065398853

தற்கொலை எண்ணம் வந்தால், தயவுசெய்து இந்தப்படம் பாருங்கள், மனம் மாறிவிடும்

உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதல் நம்ம ஊர் கனவுக் கன்னி சில்க் ஸ்மிதா வரைக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் தற்கொலைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

silk%20skl.jpg

வெள்ளித் திரையில் நம்முடைய கவலைகளை மறக்கடிக்கும் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் துயரம் நிறைந்ததாகவும், தனிமையானதாகவும் தான் இருக்கிறது. இன்றைக்கு சின்னத் திரை நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை திரை உலகை மட்டுமில்லாமல் சாதாரண மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வரும் காலத்தில் யாரும் தற்கொலை செய்து கொள்ளாத ஒரு உலகை உருவாக்க வேண்டும். தற்கொலை எவ்வளவு தவறானது என்பதைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு படம் தான் "இட்ஸ் எ வொன்டர்ஃபுல் லைஃப்" .

wounder%20full%20life%2011.jpg

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவன்  இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் தன் எண்ணத்தை மாற்றி வாழ்க்கையை நேசிக்கத் துவங்கிவிடுவான். படத்தின் கதையைப் பார்ப்போம்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் எல்லோருக்கும் உதவக் கூடியவன்.கனிந்த இதயமுடையவன். யாருக்கும் தீங்கு நினைக்காதவன். அவனது அப்பா மாரடைப்பால் இறந்த பிறகு, அவரது நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்குகிறான்.ஜார்ஜூக்குப் போட்டியாக உள்ள பார்ட்டர் எப்படியாவது ஜார்ஜை வீழ்த்தி மக்களிடையே கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். ஜார்ஜை பழிவாங்க பல சூழ்ச்சிகளைச் செய்கிறான். அப்படி ஒரு சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும் ஜார்ஜ் மக்களின் பணத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.

பார்ட்டரிடமே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பணம் தராமல் ஜார்ஜை அவமானப்படுத்தி வெளியேற்றிவிடுகிறான். ஜார்ஜ் 20,000 டாலருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதால் , தற்கொலை செய்துகொண்டால் கிடைக்கும் அந்தப் பணத்தை மக்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறான்.மனைவி, குழந்தைகளிடம் சணடை போட்டுவிட்டு , நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன் என்று கிளம்புகிறான். நன்றாகக் குடித்துவிட்டு பலரிடமும் சண்டை போடுகிறான்

கடைசியில் ஆற்றுப் பாலத்தில் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ள தயாராக நிற்கிறான் அப்போது யாரோ ஒருவர் ஆற்றுக்குள் குதித்து விடுகிறார். அதைப் பார்த்த ஜார்ஜ் ஆற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார். ஆற்றுக்குள் குதித்தவர் ஜார்ஜிடம் " நான் உன்னைக் காப்பாற்றவே ஆற்றில் குதித்தேன். நான் ஒரு தேவதூதன் " என்கிறான், ஜார்ஜ் நம்பவில்லை. உடனே தேவதூதன் தன் சக்தியைப் பயன்படுத்தி ஜார்ஜிடம் " நீ இந்த பூமியில் பிறக்காமல் இருந்திருந்தால் உன் குடும்பம், உன் மனைவி, மக்களெல்லாம் எப்படிக் கஷ்டப்படுவார்கள் பார்" என்று காட்டுகிறார்.

wounder%2012.jpg

ஜார்ஜுக்கு இப்போதுதான் தான் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையைப் பற்றி புரிய ஆரம்பிக்கிறது .தேவதூதன் மறைகிறான். வாழ்க்கை தனக்கு கிடைத்த அற்புதமான பரிசு என்று உணர்கிறான் ஜார்ஜ்.
தற்கொலையிலிருந்து மீண்ட ஜார்ஜ் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்ற போது , குடும்பத்தினர் வந்து ஆனந்தக் கண்ணீரில் தழுவிக்கொள்ள , நண்பர்கள் ஜார்ஜுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவுகின்றனர்.

இப்படித்தான் எல்லோரும், இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது . இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்தரமில்லை. அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஃப்ராங்க் காப்ரா.

vikatan

  • தொடங்கியவர்

சக்ரவர்த்தி அகஸ்டஸ் கால காசு கண்டெடுப்பு

  •  

இஸ்ரேலில் உள்ள பெண் ஒருவர், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய காசு ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.

140925172604_august_roman_empire_coin_64
 அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்ட இந்தக் நாணயம் மிக அரிதான ஒன்று என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.

லாரி ரிமோன் என்ற அந்தப் பெண்மணி கலிலீ பிராந்தியத்தில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, பளபளப்பான காசு ஒன்று அவரது கண்ணில் பட்டது.

கி.பி. நூற்றி ஏழாம் ஆண்டைச் சேர்ந்த அந்த நாணயத்தில், ரோம சாம்ராஜ்யத்தின் முதலாவது சக்ரவர்த்தியான அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இப்படியான நாணயம் கிடைப்பது இதுவே இரண்டாவது முறையென இஸ்ரேலின் அரும்பொருளக ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மற்றொரு நாணயம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

BBC

  • தொடங்கியவர்

கேப்டன் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளர்... இது கூட்டணி கலாட்டா!

டைசி நேரத்தில் கண்டிப்பாகக் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று ஊரே நம்பிக் கொண்டு இருக்க, ஐம்பது ஆண்டுகால தேர்தல் மற்றும் கூட்டணி அனுபவம்  கொண்ட கருணாநிதியே,  பழம் கண்டிப்பாக விழுந்துவிடும் என்று நம்பிக்கொண்டு இருந்த நிலையில், எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டார் கேப்டன்.
 

DMK%20poster%20.jpg

சமூக வலைத்தளங்கள் வந்தாலும் வந்தது, சுவர்களில் ஏதாவது எசகுபிசகாக எழுதி, அதை பின்னர் அழித்தாலும், மொபைல் கேமராவில் சிக்கி இருந்தால் அவ்வளவுதான், ஷேர் செய்து ஷேர் செய்தே ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

அப்படிதான் தேமுதிகவுடன் கூட்டணியே உருவாகாமல் காலியாகிவிட்ட நிலையில்,  அதற்கு முன்பே அவசரப்பட்டு அரியலூர் தொகுதியில்,  "கலைஞர், தளபதி, கேப்டன் ஆதரவு பெற்ற வேட்பாளர்" என்று சுவரிலேயே எழுதிவிட்டு இப்போது காமெடியாகி கிடக்கிறது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.