Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வார்த்திங்களே பாடல் - கலி

மலர் டீச்சரின் அடுத்த ரொமான்ஸ் - 'வார்திங்களே'
 

மலையாளத்தில் துல்கர் சல்மான், சாய் பல்லவி நடித்து வெளிவர இருக்கும் கலி படத்தின் வார்திங்களே பாடல் யூட்யூபில் வெளியிடப்பட்டது. கணவன் மனைவியாக வரும் துல்கர், சாய் ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பர். 'மலரே நின்னே' பாடலில் மலர் டீச்சர் காட்டிய ரொமான்ஸ் கொஞ்சமும் குறையவில்லை. நீங்கள் பார்த்து ரசிக்க மேலே பாடல் வீடியோ.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காட்டேரி அம்மன் திருவிழா

 

(க.கிஷாந்தன்)

 இந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.3eee792b-fcf6-4668-9b69-f08570ee07cb.jpg

இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு ஆகும்.3f1de91f-621d-4eef-add3-12097a323800.jpg

இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் நிறைவு, தோட்டத்திற்கு பாதுகாப்பு, பேய், பிசாசுகளிலிருந்து விடுதலை போன்றன கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

15a534d2-15e0-405d-832c-f6022c3bd818.jpg

இவ் விழாவை பார்வையிடவும் நேர்த்திக் கடன்களை தீர்க்கவும் பல மக்கள் கூட்டம் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை ஒரு விஷேட அம்சமாகும்.159469f0-601f-415f-a2de-f71ff032c601.jpged322c00-9f5f-49e1-ac1c-5c69c965dc9b.jpgf0ff3741-e986-434c-ada4-d55e719748f0.jpgf13a59dd-a543-4c95-8fcd-0e81abab4f35.jpg

virakesari

  • தொடங்கியவர்

தான் சம்பாரித்த பணத்தில் ‪#‎28கோடியில்‬ ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் ‪#‎ஷாகித்_அஃப்ரிடி‬..

முதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி...

12718133_509302945919279_478878661196242

மனிதநேயம் வளர்போம்

  • தொடங்கியவர்
பொலிவூட் சாதாரணமல்ல
 

article_1458637835-2.jpg

'பொலிவூட்டில் அறிமுகமாவது என்பது சாதாரண விடயம் அல்ல, சவாலானது. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வேன்'  என  ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திருடன் பொலிஸ், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்ததுடன் காக்கா முட்டை திரைப்படத்தில் குப்பத்து பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்காக தாயாக நடித்து புகழ்பெற்றார். 

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எவரெஸ்ட் சிகரம் தான் உலகின் உயர்ந்த மலை என்பது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

எவரெஸ்ட் சிகரம் தான் உலகின் உயர்ந்த மலை என்பது உண்மையா?

உப்புடி கனக்க நுணுக்கம் பார்க்க வெளிக்கிட்டால் கம்பர்மலைதான் பெரிசெண்டு நான் சொல்லுவன்  smilie_happy_318.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

எவரெஸ்ட் சிகரம் தான் உலகின் உயர்ந்த மலை என்பது உண்மையா?

நவீனன்.. எவரெஸ்ட் சிகரம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றது!

ஆசியத் தகடும், ஐரோப்பியத் தகட்டை நெருக்க... நெருக்க...ஐரோப்பியத் தகடும் தள்ளிப் போக மறுக்கிறது!

விளைவு... இமைய மலை வளர்கின்றது!

  • தொடங்கியவர்
1801 : ரஷ்ய மன்னர் முதலாம் பவுல் வெட்டிக்கொல்லப்பட்டார்.
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 23

 

691varalaru.jpg1801 : ரஷ்­யாவின் முதலாம் பவுல் மன்னர், வாள் ஒன்­றினால் வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார்.

 

1848 : நியூ­ஸி­லாந்தின் டுனெடின் நகரில் முத­லா­வது தொகுதி ஸ்கொட்­லாந்து குடி­யே­றிகள் தரை­யி­றங்­கினர்.

 

1868 : கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழகம் நிறு­வப்­பட்­டது.

 

1888 : உலகின் மிகப் பழை­மை­யான தொழில்சார் கால்­பந்­தாட்ட லீக்­கான இங்­கி­லாந்து கால்­பந்­தாட்ட லீக் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 

 

1903 : ரைட் சகோ­த­ரர்கள் தமது வெற்­றி­க­ர­மான முத­லா­வது விமா­னத்­துக்­கான காப்­பு­ரி­மையை பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்­தனர்.

 

1919 : இத்­தா­லியின் மிலான் நகரில் முசோ­லினி தனது பாசிச அர­சியல் இயக்­கத்தை ஆரம்­பித்தார்.

 

1931 : இந்­திய விடு­தலைப் போராட்ட வீரர்­க­ளான பகத்சிங், ராஜ்­குரு, சுகதேவ் ஆகியோர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

1933 : ஹிட்லர் ஜேர்­ம­னியின் சர்­வா­தி­கா­ரி­யா­னது ரெய்க்ஸ்­டாக்­கினால் சட்­ட­பூர்­வ­மாக்­கப்­பட்­டது.

 

1940 : இந்­தி­யாவை மத அடிப்­ப­டையில் பிரிக்கும்  கோரிக்­கையை இந்­திய  முஸ்லீம் லீக் வெளி­யிட்­டது.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் அந்­தமான் தீவு­களை ஜப்­பா­னியர் கைப்­பற்­றினர்.

 

1956 : பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்­லா­மியக் குடி­ய­ர­சா­கி­யது.

 

1965 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது இரு விண்­வெளி வீரர்­களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்­கலம் ஏவப்­பட்­டது.

 

1966 : தனது முதல் கரந்­தடி தாக்­கு­தலில் சே குவே­ராவின் அணி வெற்­றி­க­ர­மாக பொலி­விய இரா­ணு­வப்­பி­ரிவை தோற்­க­டித்­தது.

 

1982 : குவாத்­த­மா­லாவின் பெர்­னாண்டோ கார்­சியா தலை­மை­யி­லான அரசு இரா­ணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்­தது.

 

1994 : ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1994: அமெ­ரிக்­காவில் இரு விமா­னப்­படை விமா­னங்கள் ஒன்­று­ட­னொன்று மோதி­யதால் 24 சிப்­பாய்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1996 : தாய்­வானில் முதற்ற­ட­வை­யாக நேரடித் தேர்தல் இடம்­பெற்று லீ டெங்-ஹுய்,  ஜனா­தி­ப­தி­யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

 

1998 : டைட்டானிக் திரைப்படம் 11 ஒஸ்கார் விருதுகளை வென்றது.

 

2001 : ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பிஜியின் அருகில் தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்தது.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மார்ச் 23: எழுச்சி நாயகன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்

 

பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் பகத் சிங் ஒரு சகாப்தம். கோபக்கார இளைஞன் என்றே பலர் அவரை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரின் வாழ்க்கை மிகவும் ஆழமான,தீர்க்கமான புரிதல் கொண்ட தெளிவான ஆளுமை அவர் என்பதையே காட்டுகிறது .அவர் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் சிலிர்க்க வைப்பவை குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்ற அரசுக்கு எதிராக கூட்டம் ஒன்று ஊர் ஊராக பயணம் போயிருந்தது. அப்படியே அவரின் ஊருக்கும் வந்தது. யாருமே அந்தப்பக்கம் ஆங்கிலேய அரசுக்கு பயந்து போகவில்லை. “அவர்களை முன்னின்று வரவேற்பது நம்முடைய கடமையல்லவா ?” என்று பகத் சிங் முன்னின்று செயல்பட்டான். அப்பொழுது அவருக்கு வயது பதினான்கு லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழி தீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார் பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்று விட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது.

bakathsing.jpg



ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். புரட்சி ஓங்குக,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.


புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு கேட்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள்.

பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை. அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது...விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங் பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று
கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரைவரவைக்க கூடியது. "என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின்விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும்  !" என்று கூறி இருக்கிறார் சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,"மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !" என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.

அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்றுகேட்கிறீர்களா ? "சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் "என்றார் . "ஏன்?" என கேட்டதற்கு,"ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன்உடன்  பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!" என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான் .

vikatan

  • தொடங்கியவர்

டைனோசர்கள் பதித்த காலடித் தடங்கள்!

  • sediments_2785742g.jpg
     
  • dino_2785744g.jpg
     
  • foot_2785743g.jpg
     

நாம் வாழும் இந்த உலகில் ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆட்சி செய்து வந்தன. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை முழுவதும் அழிந்து போய்விட்டன.

உலகம் முழுவதுமே டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு. இங்குள்ள கொலராடோ மாகாணத்தில் ‘மோரிசன் டைனோசர்’ என்ற பாறை உச்சி மிகப் பிரபலமானது. 1877-ம் ஆண்டு ஆர்தர் லேக்ஸ் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.

இங்கே பல டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. நீண்ட கழுத்தும், நீண்ட வாலும், கூர்மையான முதுகும் கொண்ட ‘அபடோசாரஸ்’, நீண்ட கழுத்தும், நீண்ட வாலும், தட்டையான முதுகும் கொண்ட ‘டிப்லோடோகஸ்’, சின்னத் தலையும், குண்டு உடலும், முதுகில் தட்டையான முட்களும் கொண்ட ‘ஸ்டெகோசாரஸ்’, பெரிய தலை, கூர்மையான பற்கள், 2 சிறிய முன்னங்கைகள் கொண்ட ‘அல்லோசாரஸ்’ போன்றவை இங்கே முதலில் கண்டறியப்பட்டன.

ஸ்டெகோசாரஸ், அபடோசாரஸ் எலும்புகள் பாறைகளில் படிமங்களாக மாறியிருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன உயிரினங்களின் எலும்புகளை இன்றும்கூடத் தொட்டு உணர்ந்துகொள்ளலாம் என்பது ஆச்சரியமான விஷயம்!

இந்த இடத்தில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது. 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சாய்வான பாறைகளில் நூற்றுக்கணக்கான டைனோசர்களின் காலடித் தடங்கள் புதைபடிமங்களாக இருக்கின்றன. இவை தாவரங்களைச் சாப்பிட்டு வாழ்ந்த ‘இகுவானோடன்’ என்ற டைனோசரின் காலடித் தடங்கள். இந்தத் தடங்கள் நெருப்புக்கோழி அளவுக்கு உள்ளன. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வட பகுதிக்கும் தென் பகுதிக்கும் கடற்கரைகளில் அலைந்து திரிந்த டைனோசர் இது.

14.5 20.1 கோடி ஆண்டுகளுக்கு இடையில் இன்றைய கொலராடோ பகுதியில் மெதுவாக ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. மிகப் பெரிய டைனோசர்களில் ஒன்று சாரோபோட். நீண்ட கழுத்தும் நீண்ட வாலும் கொண்ட 200 அடி உயர டைனோசர். இவற்றின் எடை சுமார் 100 மெட்ரிக் டன்! தாவரங்களைச் சாப்பிட்டு வாழ்ந்தவை. சாரோபோட் டைனோசர்கள் இந்த ஆற்றிலேயே வாழ்ந்து, மடிந்தன. ஆற்றின் மண், மணல் பகுதிகளில் இவற்றின் எலும்புகள் புதை படிமங்களாக இருக்கின்றன.

பின்னர் கிரெடேசியஸ் காலத்தில் கிழக்கு கொலராடோ நதி கடலுக்குள் மூழ்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் ‘இகுவானோடன்’ டைனோசர்கள் இங்கே வசித்தன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடல் வற்றியது. லாராமைட் ஒரோஜெனி என்ற தட்டுகள் நகர்ந்தபோது, மலைகளைத் தோற்றுவித்தன. அந்த மலைகளின் பாறைப் பகுதிகள்தான் இந்த மோரிசன் பாறை உச்சிகள். மலைகள் தோன்றியபோது கடல் படுகையிலிருந்த புதைபடிமங்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டன.

பல்வேறு விதமான டைனோசர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி, வரலாற்று மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘மோரிசன் ஃபாசில் ஏரியா நேஷனல் லேண்ட்மார்க்’ என்ற இந்தப் பூங்காவைப் பார்வையிடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் வருகிறார்கள். இதுவரை ஓவியங்களில் பார்த்த டைனோசர்களை, நிஜ டைனோசர்களின் புதைப் படிமங்கள் மூலம் தொட்டும், உணர்ந்தும் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கே 1.5 மைல் தூரத்துக்கு 15 டைனோசர்களின் புதை படிமங்களைப் பார்வையிடலாம். டைனோசர்களின் கண்காட்சியையும் கண்டு ரசிக்கலாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல் வேண்டும் என யோசிக்கிரீர்களா... இதோ இந்த பாஸ்தா பாகெட்டுகளைப் பாருங்கள் உங்களுக்கே ஒரு ஐடியா வரும்.
பல்வேறு விதமான ஹேர் ஸ்டைல்களில் தெரியும் இந்த பாஸ்தா பாக்கெட் டிஸைன்களை ரஷ்யன் வடிவமைப்பு நிறுவனமான நிகிதா வடிவமைத்துள்ளது. இப்போது ரஷ்யக் கடைகளில் அனைவரின் பார்வை இந்த பாஸ்த பாக்கெட்டுகள் மீதுதான்.

10399881_694865960615949_387310081186837

1211_694865967282615_668490682518200620_

10409561_694865963949282_730360813738914

12107809_694865993949279_692350719310309

 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்து சித்தர்களில் மிக முக்கியமானவரான யோகர் சுவாமிகள் நினைவு தினம்.

"ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தெய்வம்" - யோகர் சுவாமி

1483347_1008353185880042_871390404398893

  • தொடங்கியவர்

உன்னதக் கலைஞன் அகிராகுரோசவாவின் மறக்கமுடியா படைப்பு - பிறந்த தின சிறப்புப் பகிர்வு

உலக திரைப்பட ஆர்வலர்கள்,ரசிகர்கள் முதற்கொண்டு நம்ம ஊர் மிஷ்கின் முதல் ஜூராசிக் பார்க் எடுத்த ஸ்பீல் பெர்க் வரை அனைத்து திரைப்பட முன்னோடிகளும் போற்றும் ஒரே இயக்குனர் அகிரா குரோசவா. அவரின் பிறந்த தினம் இன்று. அவரை நினைவு கூறும் வகையில் தெர்சு உசாலா என்ற காலத்தால் அழியாத திரைப்படக் காவியத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது சினிமா விகடன்.

" தெர்சு உசாலா" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவொண்ணா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது.

ders-uzula-02.jpg

ரஷ்யாவை சேர்ந்த இராணுவ தளபதி ஆர்சன்யேவின் வேலை புதிய புதிய பகுதிகளுக்கு பயணம் செய்து அங்குள்ள நதிகளை,மனிதர்களை,நிலப்பரப்பளவை பற்றி ஆய்வு செய்து தகவல்களை சேகரிப்பது ஆகும். ஆர்சன்யேவ் இதுவரைக்கும் அதிகமாக யாருமே பயணம் செய்யாத மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்த சைபீரிய காட்டிற்குள் இருக்கும் பகுதிகளை பற்றி ஆய்வு செய்ய தன் படைகளுடன் பயணம் செய்கிறார். அந்தப் பயணத்தின் போது அந்தக் காட்டிலேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தெர்சு உசாலா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மனிதனை சந்திக்கிறார்.தெர்சுவின் உன்னதனமான குணநலன்களும் ,மற்ற உயிர்களின் மீது தெர்சு காட்டும் அக்கறையும்.காட்டை பற்றிய கூர்மையான அறிவும் ,ஆர்சன்யேவ்விற்கு தெர்சுவின் மீது ஈர்ப்பையும் ,மரியாதையையும் கொடுக்கிறது .

விரைவிலேயே இருவரும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.ஆர்சன்யேவ்வின் பயணத்திற்கு தெர்சு வழிகாட்டியாக உதவி செய்கிறார் . அந்தப் பயணத்தின் போது தெர்சு இரண்டு முறை ஆர்சன்யேவ்வின் உயிரை காப்பாற்றுகிறார்.தெர்சுவுக்கு வயது ஆக ஆக பார்வை திறன் குறைந்து காட்டில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது . ஆர்சன்யேவ் தெர்சுவை நகரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்.தெர்சுவுக்கு நகரத்தில் வாழப் பிடிக்காமல் மீண்டும் காட்டிற்கே திரும்பி போகும் போது மர்மமான முறையில் இறந்து விடுவதோடு படம் நிறைவு பெறுகிறது. இருவேறு பின்புலங்களில் பிறந்து வாழ்ந்த ஆர்சென்யேவ்வும்,தெர்சுவும் அவர்களின் நட்பும் நம்மை வியக்க வைக்கிறது.நட்பிற்கு புதிய அர்த்தத்தையும்,வடிவத்தையும் வழங்குகிறது . காட்டின் இயல்புகளை,இயற்கையின் மகத்துவத்தை காட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த தெர்சுவின் பார்வையிலேயே சொல்லியிருப்பது மிக அற்புதமான ஒன்று . முதுமையின் வலியை,தனிமையை ,இயலாமையை தெர்சுவின் வாழ்க்கைப்பயணம் பார்வையாளனின் இதயத்திற்குள் மென்மையாக உணர்த்துகிறது. தெர்சு உசாலா என்ற மனிதனின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை பயணம் நம்முடைய மனசாட்சியை நிர்வாணப்படுத்தி அதற்குள் ஒளிந்து கிடக்கும் போலித்தனங்களையும்,மிருகத்தனங்களையும்,சுய நலங்களையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது .

dersu-uzala.jpg

குற்ற உணர்வு ஒரு கூர்மையான கத்தியை போல நம் இதயத்திற்குள் இறங்குகிறது இயந்திரங்களுடன் இணைந்த வாழ்க்கையால் இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்ற சிந்தனைகள் மனதுக்குள் மலருகிறது . காட்சி கவிதைகளாக வெளிப்படும் இப்படத்தின் திரைக்கதையும்,பின்னணியாக ஒலிக்கும் இசையும் தரும் அனுபவம் நெகிழ்வான ஒன்று.கண்களால் பார்த்து காதுகளால் கேட்டு ,ரசித்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய படமல்ல இது.நம் மனசாட்சியை திறந்து வைத்து இதயத்தால் உணரப்பட வேண்டிய மாபெரும் தரிசனம் தெர்சு உசாலா.மீண்டும் மீண்டும் இத்தரிசனத்தை பெரும் போது நவீன நாகரீக வாழ்க்கையால் இறுகி போயிருக்கும் நம் மனது தெர்சுவைப் போல தூய்மையான நதியாகிறது .இந்த உலகம் ,இந்த வாழ்க்கை எவ்வளவு கேடு கெட்டதாக இருந்தாலும் நாம் அதை ஒரு குழந்தையைப் போல புதியதாக பார்க்க ஆரம்பித்து விடுகிறோம் .

1902,1906,1907 ஆம் ஆண்டுகளில் சைபீரிய காடுகளில் தான் மேற்கொண்ட பயணத்தையும்,அந்தப் பயணத்தின் போது சந்தித்த கோல்டி இனத்தை சேர்ந்த தெர்சு உசாலாவையும் பற்றி விளாடிமிர் ஆர்சென்யேவ் என்ற ரஷ்ய ராணுவ அதிகாரி எழுதிய நினைவுக்குறிப்புகளை அடிப்படையாக கொண்டது இப்படம் .ரஷ்ய ஜப்பானிய கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்கியவர் மாபெரும் இயக்குனர் அகிரா குரோசவா .அகிராவின் முதல் வேற்று மொழித் திரைப்படம் கூட தெர்சு உசாலா தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது ... இயற்கையோடு நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற தெர்சு என்ற மனிதனைப் பற்றி இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

நாம் அனைவரும் இயற்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து இயற்கையுடன் ஒத்திசைந்து , இயற்கையிடம் பணிவுடன் வாழ வேண்டும் . இயற்கை அழிந்துவிட்டால் மனிதர்களாகிய நாமும் அழிந்து விடுவோம். அதனால் தெர்சுவிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்காகவே இந்தப் படத்தை எடுத்தேன் என்கிறார் அகிரா. ஜப்பானை சேர்ந்த அகிரா குரோசவா இரண்டு உலக மகா யுத்தங்களைப் பார்த்தவர். யுத்தத்தின் போது கோடிக்கணக்கில் மக்கள் பூச்சிகளைப் போல,புழுக்களைப் போல மடிவதைப் பார்த்தவர் . மக்களுடன் சேர்ந்து இயற்கையும் அழிந்துப் போவதை பார்த்தவர்.குறிப்பாக ஜப்பானில் இரண்டாம் மகா யுத்தத்தின் தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது..நவீன அணு ஆயுதங்கள் புல் பூண்டு முளைக்காத அளவிற்கு தன் வீச்சை ஜப்பானில் காட்டியது .

8f5b9e6e2a4c35968510204024f36979.jpg

இயற்கையில் இருந்து முற்றிலும் விலகி வந்து விட்ட நவீன அறிவியலும்,நவீன வாழ்க்கையும்,நாகரீகமும் மனித வாழ்கையை,இயற்கையை அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்லும் போது நம்மை காப்பாற்றிக்கொள்ள மீண்டும் இயற்கையிடம் திரும்பி சென்று இயற்கையின் கருணையை நாடுவதை விட வேறு வழியில்லை என்பதை தொடர்ந்து தன் படைப்புகளில் சொல்லிக் கொண்டே இருந்தார் அகிரா . அகிரா குரோசவா என்ற திரைப்படக் கலைஞன் இயற்கையின் மீதும்,சக மனிதர்களின் மீதும் கொண்டுள்ள நேசத்தின் எண்ணத்தின் வெளிப்பாடாக தான் தெர்சு உசாலாவை இன்று பார்க்க வேண்டியிருக்கிறது .

அகிரா தனக்கு இருக்கும் இயற்கையின் மீதும்,சக மனிதர்கள் மீதும் கொண்டுள்ள நேசத்தை தெர்சு உசாலா என்ற பழங்குடி மனிதன் வழியாக வெளிப்படுத்துகிறார்.அகிராவின் மற்ற படங்களிலும் அவர் இயற்கையின் மீது கொண்டுள்ள நேசத்தை நாம் .தரிசிக்கலாம் .தெர்சு உசாலாவிற்கு பின்வந்த ட்ரீம்ஸ் திரைப்படம் கூட இயற்கையோடு இணைந்த வாழ்வை அழுத்தமாக முன் நிறுத்தும் படைப்பு .அகிராவின் ஆரம்ப கால படமான ரஷோமானில் கூட இயற்கைக்கு முக்கியமான இடம் இருக்கும். மனிதனின் எல்லா பொய்களையும், உண்மைகளையும் இயற்கை கவனித்து கொண்டிருக்கிறது என்பதை காட்ட சூரியன் என்ற பெரிய மனிதனை அற்புதமாக காட்சிபடுத்தியிருப்பார் .

அகிராவிற்கு திரைப்படக் கலையின் மீதான நேசத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தெர்சு உசாலாவை அகிரா ஆரம்ப காலத்திலேயே படமாக்க விரும்பினார். கதை எந்த இடத்தில் நிகழ்ந்ததோ அந்த இடத்தில் படமாக்கினால் தான் உயிர்ப்போடு இருக்கும் என்று காத்து இருந்தார்.அதற்குள் வேறு ஒருவர் தெர்சு உசாலாவை இயக்கினார்.அந்தப்படம் பெரிதாக பேசப்படவில்லை. தெர்சு உசாலாவை கதை நடந்த இடத்திலேயே படமாக்க வாய்ப்பு தேடி வந்தது .

அதில் மாபெரும் வெற்றியும் அடைந்தார் அகிரா. 1975-இல் வெளியான தெர்சு உசாலா சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதையும் ,பல உயரிய விருதுகளையும் வென்றுள்ளது .அகிராவின் உயிரை காப்பாற்றிய படம் .இப்படத்திற்கு முந்தைய படம் கொடுத்த வணிக ரீதியான தோல்வியும் ,தன்னுடைய படைப்பாற்றல் மலிந்து விட்டது என்ற மனசோர்வும் தற்கொலையை நோக்கி அகிராவை இழுத்து சென்றது .தெர்சு உசாலா கொடுத்த வெற்றியும்,உந்துதலும் அகிராவை ககேமுஷா ,ரான்,ட்ரீம்ஸ் போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை படைக்க உதவியது . அகிரா என்ற உன்னத கலைஞன் இன்னும் திரைப்படத்தின் வழியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.

vikatan

  • தொடங்கியவர்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/s2048x2048/12247742_1008353432546684_3488059922950798436_o.jpg

அப்பாவியாக அடி வாங்கி, கோமாளியாக குழப்பம் செய்து, பாவமாக படு காமெடி செய்து, காலாகாலத்துக்கும் எங்களை கோலாகலமாக சிரிக்க வைத்து குதூகலம் தரும் நகைச்சுவை நடிகர் செந்திலின் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

பழைய ஜீன்ஸ்... ஃபேஷனபிள் ஹேண்ட் பேக்!

கிராஃப்ட்

 

‘‘நான் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறேன். கிராஃப்ட் மேல இருக்கிற ஆர்வத்தால கிடைக்கும் நேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்றதோட, கிராஃப்ட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். இப்போ உங்களுக்குக் கற்றுத்தரப்போவது, ஹேண்ட் பேக் மேட் ஆஃப் பழைய ஜீன்ஸ். அப்போ, இனி உங்க வார்ட்ரோப்ல இருக்கும் சைஸ்  சரியில்லாமல் போன... ஜிப், பட்டன் அறுந்து போன ஜீன்ஸுக்கு எல்லாம் புது வாழ்க்கை வந்தாச்சுதானே?!’’ என்று சிரிக்கும் சென்னையைச் சேர்ந்த சங்கீதா பிரகாஷ், பயிற்சி அளிப்பதில் மும்முரமாகிறார்...

p19a.jpg

தேவையான பொருட்கள்:

‘‘பழைய ஜீன்ஸ் பேன்ட் - 1, குண்டூசி - 10, சிறிய ஊசி - 1, நூல் (பேன்ட் கலரில்), இன்ச் டேப், நெக் டை (விரும்பும் வண்ணத்தில்), டெகரேட்டிவ் லேஸ் - தேவையான அளவு, கத்தரிக்கோல், ஃபெவிக்கால், சாக்பீஸ்.

செய்முறை:

படம் 1: பயன்படுத்தாத ஜீன்ஸ் பேன்ட்டின் இடுப்புப் பகுதியில் இருந்து கால் பகுதி ஆரம்பிக்கும் இடம் வரை இன்ச் டேப்பால் படத்தில் காட்டியுள்ளபடி அளக்கவும்.

p19c.jpg

படம் 2: அந்த உயரத்தை வலது, இடதுபுறங்களில் சாக்பீஸால் மார்க் செய்யவும்.

படம் 3: சாக்பீஸ் மார்க்கில் கத்தரிக்கோலால் வெட்டவும். மீதமுள்ள கால் பகுதியை எடுத்துவைக்கவும்.

படம் 4: அளவு சற்று மாறுபட்டு உயரம் சிறிதும் பெரிதுமாக இருந்தால், சமமாக வெட்டவும்.

படம் 5: ஜீன்ஸை உட்புறமாகத் திருப்பவும். 

p19d.jpg

படம் 6: வெட்டிவைத்துள்ள ஜீன்ஸின் அடிப்பகுதியில் அளவு மாறாமல் இருக்க, கீழிருந்து 1 செ.மீ இடம் விட்டு குண்டூசியால் படத்தில் காட்டியுள்ளபடி குத்தி வைக்கவும்.

படம் 7: ஜீன்ஸின் அடிப்பகுதியை ஊசியால் தைக்கவும்.

படம் 8: ஜீன்ஸை மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பினால், பேக்கின் `பேஸ்' ரெடி.

படம் 9: வெட்டிவைத்துள்ள கால் பகுதியில், படத்தில் காட்டியுள்ளபடி ஒரு துண்டினைக் கத்தரிக்கவும்.

படம் 10: அதை ஜடைபோல பின்னி அடிப்பகுதியில் முடிச்சுப்போடவும்.

படம் 11: அதேபோன்று மற்றொரு ஜடையும் பின்னிக்கொண்டால், பேக்கின் கைப்பிடி தயார்.

p19e.jpg

படம் 12: பேக்கின் பேஸில் இந்தக் கைப்பிடிகளைக் கோப்பதற்கு ஏதுவாக முன்புறம் இரண்டு துளைகள், பின்புறம் இரண்டு துளைகள் செய்துகொள்ளவும்.

படம் 13: துளைகளின் வழியாக கைப்பிடிகளைக் கோத்து எடுக்கவும்.

படம் 14: கைப்பிடியில் முடிச்சிட்டு மீதமிருக்கும் துணியைக் கட் செய்துவிடவும்.

p19.jpg

படம் 15: பேன்ட்டில் பெல்ட் கோக்கும் இடத்தில் நெக் டையினைக் கோக்க, அது டிரெண்டி லுக் தரும்.

படம் 16: விருப்பம்போல டெக்கரேட்டிவ் லேஸால் பேக்கை டிசைன் செய்யவும்.

படம் 17: ஃபேஷனபிள் ஹேண்ட் பேக் ரெடி. இதைக் கடையில் கொடுத்து `ஜிப்' வைத்து தைத்துவாங்கவும்.

``இனி எந்த ஓல்டு ஜீன்ஸும் வேஸ்ட் இல்லை, ஆர்ட்!’’ என்று கலகலப்பாக சொல்லி முடித்தார் சங்கீதா.

vikatan

  • தொடங்கியவர்

ஜப்பானில் பண்ணையிலிருந்து தப்பித்து ஓடிய வரிக்குதிரை : காணொளி
===============================================================

ஜப்பானில், டோகி என்ற நகருக்கு அருகே பண்ணை ஒன்றிலிருந்து தப்பி கோல்ப் மைதானத்துக்குள் ஓடிய வரிக்குதிரை ஒன்று சோகமான முடிவை சந்தித்துள்ளது.

அந்த வரிக்குதிரையை காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் துரத்தி பிடிக்க முயன்ற காட்சி ஜப்பானிய தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஆனால், மயக்கமருந்து ஊசியை செலுத்தி அந்த வரிக்குதிரையை பிடிக்கமுடிந்தாலும், அங்கிருந்த ஏரியில் விழுந்து அது உயிரிழந்துவிட்டது.

  • தொடங்கியவர்

சிம்பிள் எஃபெக்டிவ் வொர்க்அவுட்ஸ்

 
ஃபிட்னெஸ்

 

 

டல் எடை குறைய தீவிர உடற்பயிற்சி, சைக்கிளிங், ரன்னிங், வாலிபால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள், நடனம் போன்றவற்றை முயற்சிக்கிறோம். பயிற்சி, கடுமையாக இருப்பதால், சிலர் பயிற்சி செய்யவே சலித்துக்கொள்வார்கள்.  அவர்களுக்கானதே `லோ இம்பேக்ட் கார்டியோ வொர்க்அவுட்’. பெரும்பாலும், மேல் உடல், கீழ் உடல், கை, கால், கழுத்து, வயிறு, பின்புறம் எனத் தனித்தனியேதான் செய்கிறோம். ஆனால், லோ இம்பேக்ட் கார்டியோவில் ஓர் உடற்பயிற்சியிலேயே மேல் மற்றும் கீழ் உடல் இரண்டும் பலன் பெறும்.  இது இதயத் துடிப்பை அதிகப்படுத்தி உடலுக்குச் சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது; இதனால், உடலுக்கு நல்ல அமைப்பை ஏற்படுத்துகிறது; தசைகளை வலுப்படுத்துகிறது; ஒரு நாளில் 100 முதல் 200 கலோரிகளை எரிக்கிறது. கடுமையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் இதனைச் செய்யலாம்.

ஷோல்டர் பிரஸ் வித் டம்பெல் சைடு க்ரன்ச் (Shoulder press with dumbbell side crunch)

p12a%281%29.jpg

கால்களை சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பெல்லை தூக்க வேண்டும். கைகள் தோள்பட்டைக்கு நேராக இருக்கட்டும். இப்போது, இடது காலை பக்கவாட்டில் மடக்கியவாறே மேலே உயர்த்த வேண்டும். இடது காலின் முட்டி இடது கையின் மூட்டைத் தொட வேண்டும். பழையநிலைக்குத் திரும்பி, இதேபோன்று வலது புறமும் செய்ய வேண்டும்.

பலன்கள்: தோள்பட்டை, கை, மற்றும் இடுப்புப் பகுதிக்கான நல்ல பயிற்சி.

ஃபிங்கர் டிப் ஹேண்டு டு டோ டேப் (Fingertip hand to toe tap)

p13a.jpg

கால்களை அகட்டி, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி நேராக நிற்க வேண்டும். இப்போது, வலது காலின் பாதத்தை, இடது கால் மூட்டு அருகே கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில் கைகளைக் கீழே இறக்கி, வலது கையை வலது தொடையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இடது கையால், வலது பாதத்தைத் தொட வேண்டும். பின்னர், பழையநிலைக்குத் திரும்பி, இடது புறம் செய்ய வேண்டும். இது ஒரு செட். இதுபோல 8 - 10 முறை செய்ய வேண்டும். 

பலன்கள்: கை, தொடைப் பகுதியில் தசைகளை உறுதிப்படுத்தும்.

எல்போ பென்ட் டார்ஸோ ட்விஸ்ட் (Elbow bent torso twist)

p13b.jpg

காலை அகட்டி, கையை மடித்து, தோள்பட்டைக்கு நேராக வைக்க வேண்டும். கை விரல்களை மடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, வலது காலை மடக்கி இடது கையின் மூட்டைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், பழையநிலைக்குத் திரும்பி,  இதேபோல இடது பக்கம் செய்ய வேண்டும்.

பலன்கள்: கை மற்றும் தோள்பட்டை பலப்படும். இடுப்பின் பக்கவாட்டில் உள்ள தசைகளைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும். கால்கள் உறுதியாகும்.

ஸ்குவாட்ஸ் வித் ரொட்டேஷன் (Squats with rotation)

p13c.jpg

கால்களைச் சற்று அகட்டி நேராக நின்று, கைகளை முன்பக்கமாக, நேராக நீட்ட வேண்டும். இப்போது, கால் மூட்டை முன்புறம் கொண்டுவராமல், நாற்காலியில் அமர்வது போன்று உட்கார வேண்டும். பிறகு எழுந்து, உடலை இடதுபுறம் வளைத்து, இடது கையைப் பின்புறம் நீட்ட வேண்டும். கழுத்தையும் முதுகையும் நன்கு திருப்ப வேண்டும். பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதேபோல மறுபுறமும் செய்ய வேண்டும்.

பலன்கள்: இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்; தசைகளை உறுதிப்படுத்தும்; முதுகுத்தண்டு வலுப்பெறும்.

ஸ்குவாட்ஸ் அண்ட் வெர்டிக்கல் பஞ்ச் வித் டம்பெல்ஸ் (Squats and vertical punch with dumbbells)

p14a.jpg

கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். ஒவ்வொரு கையிலும் இரண்டு கிலோ டம்பெல்ஸைப் பிடித்தபடி, கைகளை மடக்கி மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, வலது கையை மட்டும் முன் நீட்டி, மடக்க வேண்டும். பிறகு, இதேபோல இடது கையை நீட்டி மடக்க வேண்டும். நின்றுகொண்டு செய்ததுபோலவே, நாற்காலியில் அமர்வதுபோல காலை மடித்து, இதைத் திரும்பச் செய்ய வேண்டும்.

பலன்கள்: தொடை மற்றும் பின்புறம் உள்ள தசைகளை உறுதியாக்கும். கைகளுக்கும் பலம் கொடுக்கும்.

லஞ்சு வித் டம்பெல்ஸ் ட்ரைசெப் கிக்பேக் (Lunge with dumbbells tricep kickback)

p14b.jpg

கால்களை அகட்டி நேராக நின்று, கைகளை முன்பக்கம் மடித்து, இரண்டு கைகளிலும் டம்பெல்லைப் பிடித்துக்கொள்ள வேண்டும். வலது காலை முன்னால் வைத்துச் சற்று மடக்கியவாறு இடது காலை பின்புறம் சற்று நீட்டியவாறு  வைக்க வேண்டும். இப்போது, கைகளை பின்நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். இரண்டு டம்பெல்ஸும் சேரும் வகையில் கொண்டுசென்று, பழையநிலைக்குத் திரும்ப வேண்டும்.

பலன்கள்: கைகள், கால்கள், தோள்பட்டை என உடல் முழுவதும் உள்ள தசைகளை இயக்குகிறது. இதனால், கொழுப்பு கரைந்து, தசைகள் உறுதிபெறும், ஃபிட் ஆகும்.

- பி.கமலா

படங்கள்: ஆர்.கே.ஷர்வின்

மாடல்: சுபிக்‌ஷா

ந்த ஆறு பயிற்சிகளும் ஒரு குழுவான பயிற்சிகள். இவற்றை 3 செட்டாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிற்சியையும் 15 வினாடிகள் செய்ய வேண்டும். ஒரு செட் முடித்ததும் 30 வினாடிகள் இடைவெளிவிட்டு அடுத்ததைச் செய்ய வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்
2015 : பயணிகள் விமானமொன்றை துணை விமானி அல்ப்ஸ் மலையில் மோதி நொறுங்கச் செய்ததால் 150 பேர் பலி
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 24

 

692Germanwings---varalaru.jpg1707 : பிரித்­தா­னிய, ஸ்கொட்­லாந்து இராச்­சி­யங்­களை இணைத்து பெரிய பிரித்­தா­னிய இராச்­சியம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1837 :  கன­டாவில் கறுப்­பின ஆண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

 

1878 : பிரித்­தா­னியக் கப்பல் எம்.எம்.எஸ். யூரிடைஸ் மூழ்­கி­யதில் 300 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1882 : காச­நோயை உரு­வாக்கும் நோய்க்­கி­ரு­மியைத் தாம் கண்­டு­பி­டித்­தி­ருப்­ப­தாக ரொபர்ட் கோக் அறி­வித்தார்.

 

1923 : கிறீஸ் குடி­ய­ர­சா­கி­யது.

 

1944 : ரோமில் 335 இத்­தா­லியப் பொதுமக்­களை ஜேர்­ம­னியப் படைகள்  படு­கொலை செய்­தன.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்­ம­னிய சிறையில் இருந்து 76 போர்க் கைதிகள் தப்­பித்­தனர்.

 

1947 : மவுண்ட்­பேட்டன் பிரபு இந்­தி­யாவின் பிரித்­தா­னிய ஆளு­ந­ரானார்.

 

1965 : டட்லி சேன­நா­யக்க -– செல்­வ­ நாயகம் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

692GreatBritain--varalaru.jpg1965 : நாசாவின் ரேஞ்சர் 9 விண்­கலம், சந்­தி­ரனில் மோதும் முன்னர் சந்­தி­ரனின் புகைப்­ப­டங்­களை வீடு­களில் உள்ள தொலைக்­காட்­சி­களில் பார்க்­கக்­கூ­டிய படங்­க­ளாக மாற்றி பூமிக்கு அனுப்­பி­யது.

 

1972 : வட அயர்­லாந்தில் ஐக்­கிய இராச்­சியம்  தனது நேரடி ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

 

1976 : ஆர்­ஜென்­டீ­னாவில் ஜனா­தி­பதி இஸபெல் பெரோனின் ஆட்சி இரா­ணு­வத்­தி­னரால் கவிழ்க்­கப்­பட்­டது.

 

1998 : இந்­தி­யாவில் டண்டான் பகு­தியில் இடம்­பெற்ற புயலில் 250 பேர் கொல்­லப்­பட்டு 3,000 அதி­க­மானோர்  காய­ம­டைந்­தனர்.

 

1999 : கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்­லா­வி­யாவில் வான் தாக்­கு­தலை நடத்­தின. இறை­மை­யுள்ள நாடொன்றில் நேட்டோ படைகள் தாக்­குதல் நடத்­தி­யமை அதுவே முதல் தட­வை­யாகும்.

 

1999 : பெல்­ஜி­யத்தில் மொண்ட் பிளாங்க் சுரங்­கத்தில் சுமை­யுந்து ஒன்றில் தீப் பிடித்­ததில் 39 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2003 : ஈராக்­கி­லி­ருந்து அமெ­ரிக்க, பிரித்­தா­னிய படை­களை உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்­டு­மென அரபு லீக் தீர்­மானம் நிறை­வேற்­றி­யது.

 

2008 : பூட்­டானில் முதல் தட­வை­யாக பொதுத்­தேர்தல் நடை­பெற்­றது.

 

2015 : ஸ்பெய்னின் பார்­ஸி­லோ­னா­வி­லி­ருந்து ஜேர்­ம­னியின்  டஸர்­டோர்வ நகரை நோக்கிப் புறப்­பட்ட ஜேர்­மன்விங்ஸ் நிறுவனத்தின் பிளைட் 4யு9525 அதன் துணை விமானி அன்றீஸ் லுபிட்ஸ் தற்கொலை நோக்கத்துடன் பிரான்ஸில் அல்ப்ஸ் மலையில் மோதி நொருங்கச் செய்ததால்  விமானத்திலிருந்த 150  பேரும் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12496008_1009270095788351_39933994512055

தமிழ்த் திரையிசையுலகின் முடிசூடா ராஜாவாகத் திகழும், கம்பீரகுரல் வேந்தன் T.M.சௌந்தர்ராஜன் அவர்களது பிறந்தநாள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் MGR இருவருக்கும் இவர் பாடிய மனதுமறக்காத பல பாடல்கள் என்றும் காலத்தால் அழியாதவை.

  • தொடங்கியவர்
அமெரிக்காவின் அதிபராகுமாறு கனேடிய பிரதமரிடம் மன்றாட்டம்

அமெரிக்காவின் அதிபராகுமாறு கனேடிய பிரதமரிடம் மன்றாட்டம்

 

அமெரிக்காவில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதால், அந்நாட்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுமாறு வாலிபர்கள் இருவர் கனேடிய பிரதமரிடம் கெஞ்சியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துக்கொண்டார்.

40633

அப்போது, நிகழ்ச்சியின் இறுதியில் இரண்டு அமெரிக்க வாலிபர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் மண்டியிட்டு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

அதில், ‘எங்கள் நாட்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவர் கூட தகுதியானவர்கள் இல்லை. அனைவரும் மோசமானவர்கள்…..பயங்கரமானவர்கள்.

இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற நீங்கள் (கனேடிய பிரதமர்) அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும்’. என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர். வாலிபர்களின் கோரிக்கையால் ஒரு கணம் அதிர்ந்துபோன பிரதமர் பின்னர் சிரித்துக்கொண்டு அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

‘நான் ஏற்கனவே கனடா நாட்டிற்கு பிரதமராக பணியாற்றி வருகிறேன் என்பது உங்கள் இருவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். எனக்கு அந்த பணியை மிகவும் பிடித்துள்ளது’ என கூறி வாலிபர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

http://onlineuthayan.com/lifestyle/?p=17784

 

  • தொடங்கியவர்

வாசித்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் : இப்படியும் ஒரு சேவையா?

 

maxresdefault.jpg

இன்றைய நவீன உலகில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஒரு நாட்டின் போக்குவரத்துறை எந்தளவுக்கு சிறப்பாக காணப்படுகின்றதோ அதனை வைத்து நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிட்டு கொள்ளலாம்.

போக்குவரத்து எவ்வளவுதான் சிறப்பாக காணப்படாலும் கூட தனி ஒரு நபருக்காக போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்ற விடயமாகும்.

3-1.jpg

எனினும், மாணவி ஒருவருக்காக மாத்திரம் ஜப்பானில் ரயில் சேவை ஒன்று இயங்கி வருகின்றது.

கல்லூரிக்குச் செல்லும் குறித்த மாணவியை கல்லூரிக்கு காலை 7.4 மணியளவில் செல்வதற்கும் பின்னர் அங்கிருந்து அவரை 5.8 மணியளவில் அழைத்து வருவதற்காகவும் அந்த ரயில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் வட பகுதியிலுள்ள தீவுகளில் ஒன்றான ஹொக்கைடொ (uokkaido) தீவிலுள்ள கமி-ஷிராட்டகி (Kami-Shirataki) ரயில் நிலையத்திலிருந்தே குறித்த ரயில் சேவை நடைமுறையில் உள்ளது.

1932 இல் ஆரம்பிக்கப்பட்ட 78.9 கிலோ மீற்றர் வரை இயங்கும் குறித்த ரயில் சேவையை ஆரம்பத்தில் பலர் பயன்படுத்தி வந்த போதிலும் பிரதேசம் மிகவும் பின்தங்கியதாகக் காணப்படுவதால் குறித்த ரயிலின் போக்குவரத்து பாதையில், பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்ததுள்ளது. 

இதனையடுத்து, ஜப்பானிய ரயில் திணைக்களத்தால், குறித்த ரயில் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆயினும், குறித்த ரயில் சேவையை கல்லூரி மாணவி ஒருவர் ஒருவர் பயன்படுத்துவது தெரியவந்தது.

எனவே, குறித்த ரயில் சேவையை, அவர் தனது பட்டத்தை முடிக்கும் வரை தொடர அந்நாட்டு ரயில் திணைக்களம் தீர்மானித்தது.

அத்துடன், குறித்த மாணவியின் கல்லூரி நேரத்திற்கு அமைய, சேவை நேரத்தையும் மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம் அவர் தனது பட்டப்படிப்பை முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த ரயில் சேவையை மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் CCTV யினால் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் குறித்த மாணவி பற்றிய தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கல்விக்காக இவ்வாறு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ள போதிலும், தனி நபர் ஒருவருக்காக இவ்வாறு பணத்தை விரயம் செய்வது ஏற்க முடியாது என பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

virakesari

  • தொடங்கியவர்

12901197_1009307562451271_12837803966857

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரும், முன்னாள் தலைவருமான ஷக்கிப் அல் ஹசனின் பிறந்தநாள்.
Happy Birthday Shakib Al Hasan

  • தொடங்கியவர்

100 குழந்தைகள் பெறும் முற்சியில் வைத்தியர்

 

Father of 35 children in Pakistan says 'target is 100'

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர்.

இவருக்கு கடந்த வாரம் தான் 2–ஆவது மற்றும் 3–ஆவது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் எனது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதனால் தற்போது எனது குழந்தைகள் எண்ணிக்கை 35 ஆகிவிட்டன.

இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4ஆவது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும் இலட்சியமும் ஆகும்.

எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் 1 இலட்சம் ரூபா வரை செலவாகிறது. நான் தரமான வைத்தியராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது’ என்றார்.

virakesari

  • தொடங்கியவர்

1463080_549850788514774_7230054229425358

உலக காச நோய் நாள் இன்று...
உலக காச நோய் நாள் மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்

தமிழ்த் திரைப்படப் பாடகரும், பக்திப் பாடல்கள் பல மூலம் மனதில் இடம்பிடித்தவருமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு தினம்.

12642638_1009274095787951_25229233473607

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.