Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13235243_1044307435617950_61568136810156

நடிகை சாயா சிங்கின் பிறந்தநாள் இன்று

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மா, பலா, வாழைனு முக்கனிகளாகத் தித்திக்கும் இளமையோடு நம்மை குதூகலப்படுத்தும் குல்ஃபி ஹீரோயின்கள் இவர்கள்...

மல்லுவுட் ஸ்வாதி நாராயணன்

p32.jpg

அறிமுகமான ‘சு சு சுதி வாத்மீகம்’ படத்திலேயே பட்டையைக் கிளப்பி இருக்கிறார் ஸ்வாதி நாராயணன். ஆயுர்வேதத்தில் மருத்துவம் படித்தவரின் சொந்த ஊர் கேரளத்தின் பெரும்பாவூர். திருச்சூரில் படித்து முடித்த கையோடு குச்சிப்புடி நடனம் மீது நாட்டம் வர, முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். டைரக்டர் ரஞ்சித் சங்கரின் அறிமுகம் கிடைக்க, நட்பு அடிப்படையில் கேட்டதும் நடிக்க ஓகே சொல்லி விட்டார். இப்போது எர்ணாகுளத்தில் வசிக்கும் டாக்டர் ஸ்வாதி பிஸியாக பல கதைகள் கேட்டு வருகிறார். ரெட் வெல்வெட் கேக்காட்டம் இருக்கீங்க ஸ்வாதி!

சாண்டல்வுட் மிலானா நாகராஜ்

p32a.jpg

கன்னடத்துப் பைங்கிளி பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில் உள்ள ஹசன் என்ற ஊரில். இன்ஜினீயரிங் படிக்க பெங்களூரு வந்தவருக்கு நீச்சல் பயிற்சி பிடித்துப்போக ஸ்டேட் லெவல் நீச்சல் வீராங்கனையாக ஜொலித்தார். தோழிகள், ‘செம ஸ்ட்ரெக்சர்டி!’ என உசுப்பேத்தி விட்டதால் அழகிப்போட்டியில் குதித்தவர் ‘மிஸ் கர்நாடகா’ அழகிப் போட்டியில் ‘மிஸ் பெஸ்ட் பெர்சனாலிட்டி’ விருது வாங்கினார். ‘நம் துனியா நம் ஸ்டைல்’, ‘பிருந்தாவனா’, ‘சார்லி’ என தர்ஷன், கிருஷ்ணா போன்ற ஸ்டார் படங்களில் நடிக்க இப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் மிலானா. செம கேர்ள்!

டோலிவுட் ஈஷா

p32b.jpg

எம்.பி.ஏ படித்துவிட்டு அப்படியே மாடலிங்கில் புகுந்த அழகு ராட்சஷி. ஆந்திர டி.வி விளம்பரங்களில் வந்தவரின் ஒரிஜினல் பெயரே ஈஷா தான். இயக்குநர் மோகன கிருஷ்ண இந்திரகாந்தியின் ஆடிஷனுக்குப் போனவருக்கு அடித்தது ஜாக்பாட். பார்த்தவுடனே பிடித்துவிட்டது ஈஷாவை. ‘அந்தாக முண்டு ஆ தர்வாதா’ படத்துக்கு புக் செய்துவிட்டார். படமும் சுமாராக ஓடியதால் இப்போது மாடலிங்கை மூட்டை கட்டிவிட்டு முழுநேர வாய்ப்பு வேட்டையாடி வருகிறார். ஆல் தி பெஸ்ட் ஈஷா!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்  ஆர் யு  ஓகே....! இந்தப் பக்கங்களில் மலர்களின் வாசனை தூக்கலாக இருக்கு..., வீடு முழுதும் வீசுது....ஜஸ்ட்  ஐ  லைக் இட்....!  tw_blush:

  • தொடங்கியவர்

13248524_1044313815617312_50521367048449

பிரபல ஹொலிவூட் நடிகர் பியேர்ஸ் ப்ரோஸ்னனின் பிறந்தநாள்.
ஜேம்ஸ் போண்டாக நடித்தும் புகழ் பெற்றவர் இவர்.

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

p221.jpg

வாக்குமூலம்

‘என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல’ எனக் கடிதம் எழுதி முடித்ததும், சுரேஷ் தூக்கில் தொங்கவிடப்பட்டான்.

- அஜித்


p222.jpg

கடன்... கல்லாகட்டும்!

இயங்கிவந்த அப்பாவின் மளிகைக்கடையை ஏற்று நடத்த முன்வந்த மகன், முதல் வேலையாக `கடன் அன்பை முறிக்கும்’ என்ற போர்டைக் கழற்றிவிட்டு `All credit cards are accepted here’ போர்டை மாட்டினான்.

- அஜித்


p223.jpg

ஞாபகம் வருதா... ஞாபகம் வருதா!

‘சொன்னீங்களே... செஞ்சீங்களா..?’ என்ற விளம்பரத்தை டி.வி-யில் பார்த்த மறுவிநாடி, கணவன் பக்கம் திரும்பி, `‘ஏங்க, `போனஸ் வந்ததும் பட்டுபுடவை வாங்கி தரேன்’னீங்களே... என்ன ஆச்சு?’’ எனக் கேட்டாள் மனைவி.

- பர்வீன் யூனுஸ்


p224.jpg

ஒழுங்கீனம்

``சில்லறை இல்லைன்னா பஸ்ல ஏறாதீங்க’’ எனக் கத்திக்கொண்டிருந்தார் சில்லறை இல்லாமல் பணிக்கு வந்த பஸ் கண்டக்டர்.

- பாலூர் பிரேம்பிரதாப்


p225.jpg

வரிசை

தேர்தல் நாள் அன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தான்... தட்கலில் ரயில் டிக்கெட் வாக்குவதற்காக.

- நந்த குமார்


p226.jpg

ரகசிய போலீஸ்

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தவனை, செல்போனில் படம்பிடித்து, அனுப்பவேண்டியவருக்கு அனுப்பினான் இன்னொருவன்.

- மல்லிகா குரு


p227.jpg

ஒரு தரம்... ஒரே தரம்

`அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்’ - பிரசாரத்தில் பேசிய அரசியல்வாதி, ``இந்த ஒரே ஒருமுறை மட்டும் வாய்ப்பு தாருங்கள்’’ எனக் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

- திருத்தணி கோ.பகவான்


p228.jpg

உழைப்பாளி

``இந்த வழியா மே தின ஊர்வலம் வருது. இங்கே எல்லாம் கீரை விற்கக் கூடாது. இடத்தைக் காலி பண்ணு கெழவி’’ என மிரட்டினார் கான்ஸ்டபிள்.

- சி.சாமிநாதன்


p229.jpg

ஸாரி... லேட்டா வந்துட்டீங்க!

``அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருந்தீங்கன்னா ட்ரெய்னைப் பிடிச்சிருக்கலாம்’’ என்றார் போர்ட்டர், டாக்டரிடம்.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p2210.jpg

லாரிகளும் லோடுகளும்

‘`இந்த கிரவுண்டோட கெப்பாசிட்டி என்ன?” - தலைவர் கேட்டார். ‘`தாராளமா 50 லாரி லோடு ஜனங்க உட்காரலாம் தலைவரே!’’ என்றார் உதவியாளர்.

- வீ.விஷ்ணுகுமார்

vikatan

  • தொடங்கியவர்

சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் குழந்தை பிறந்தது!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - பிரியங்கா சௌத்ரி தம்பதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெதர்லாந்து நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கிரேஸியா என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தையின் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் ரெய்னா.

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். நெதர்லாந்தில் வேலை செய்து வரும் பிரியங்கா கருவுற்றார். ஐபிஎல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ரெய்னா, மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக சிலநாட்களுக்கு முன் நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

ஐ.பி.எல். போட்டியில் கடந்த 8 சீசன்களில் ஒரு ஆட்டத்தைக்கூட தவறவிடாத ரெய்னா, இந்த சீசனில் முதல் முறையாக பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
Raina%20daughter1.jpg
Raina%20daughter2.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13221175_1044308658951161_41301987033376

பிரபல ஹொலிவூட் நடிகையும் பாடகியுமான ஜனெட் ஜக்சனின் பிறந்தநாள்.
இவர் பொப் கிங் மைக்கேல் ஜக்சனின் சகோதரியாவார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
2 hours ago, suvy said:

நவீனன்  ஆர் யு  ஓகே....! இந்தப் பக்கங்களில் மலர்களின் வாசனை தூக்கலாக இருக்கு..., வீடு முழுதும் வீசுது....ஜஸ்ட்  ஐ  லைக் இட்....!  tw_blush:

ஹஹா மலர்களின் வாசனை எப்போதும் நல்லதுதானே..:cool:

  • தொடங்கியவர்

யானைக்கு சொத்தை பல்
=======================

இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் உள்ள லூக்கா என்ற யானைக்கு சொத்தை பல் வலி இருந்ததாம். பல் மருத்துவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாம்.

  • தொடங்கியவர்

பார்ததால் பசி ஏறும்!

 

p78a.jpg

சாப்பிடுறதுனா உங்களுக்குப் பிடிக்குமா? ஊர் சுத்துறதுனா உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ இதை என்னானு பாருங்க. ‘கேர்ள் ஈட் வேர்ல்டு’ பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கம். இந்தப் பக்கம் முழுவதிலும் வெளிநாட்டு உணவுகளும், சுற்றுலாத் தலங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் ‘உச்’ கொட்ட வைக்கிறது, படத்தையே ஒரு கடி கடிக்கணும் போலத் தோன்றுகிறது.

p78b.jpg

p78c.jpg

‘கேர்ள் ஈட் வேர்ல்டு’ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ‘கேர்ள்’ மெல்லிசா ஹை கூறுகையில், “2013-ம் ஆண்டு முதல்முறையாக தனியாக ஐரோப்பா டூர் போனேன். ஜெர்மனி, செக் குடியரசு, ஆஸ்திரியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒவ்வொரு நாடுகளையும் சுற்றி வரும்போது பல சுவையான உணவுகளைச் சாப்பிட நேர்ந்தது. அப்போது அந்த உணவுகளை, அந்த ஊரை பேக் ட்ராப்பாக வைத்துப் புகைப்படங்கள் எடுத்தேன். இப்படி ஆரம்பித்ததுதான் ‘கேர்ள் ஈட் வேர்ல்டு’ கான்செஃப்ட். அதன் பிறகு பல நாடுகள் சுற்றி பல உணவுகளைப் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன்’’ என்கிறார் செம ஜாலியாக. சூப்பர் ஐடியாவா இருக்குல்ல பாஸ், நானும் மதுரைக்குக் கிளம்பிப் போய் மல்லிகைப் பூ இட்லி, மட்டன் சுக்கானு ஊரை பேக் ட்ராப்பா வெச்சு போட்டோ எடுக்கப் போறேன். நீங்களும் பயணங்களின்போது முயற்சி பண்ணிப் பாருங்க...

vikatan

  • தொடங்கியவர்

வாழ்வியல் தரிசனம்

article_1463457882-images.jpgதெருவில், பலத்த சப்தத்துடனும் எவரையோ ஏசியபடியும், கைகளை வீசியபடியும் நபரொருவர் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட சிலர், பைத்தியம் பிடித்தநபர் என மிரண்டும் போயிருக்கலாம்.

உண்மையில், அவரது காதுகளில் அலைபேசியின் கேள்பொறி செருகப்பட்டிருந்தது. அவர், அதனூடாக யாரோ ஒருவரிடம் பேசியபடி, அபிநயத்துடன் போய்க்கொண்டேயிருந்தார்.

இத்தகைய காட்சிகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய செயல்கள், எமக்கு நகைப்பூட்டுபனவாயும் வெறுப்பூட்டுபனவாயும் அமையலாம்.

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என சிலருக்குப் புரிவதில்லை. இது சுதந்திரபூமி எனவும் இத்தகைய சிலர் வாதாடலாம்.

எல்லோரும், அலைபேசியூடாகக் கத்தி, நடந்தால் இவர்கள் சத்தம் சஞ்சலத்தை ஏற்படுத்துமல்லவா? 

விஞ்ஞானக் கருவிகளால், மனிதனின் மெய்யுணர்வு மழுங்கலாகாது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 17
 

article_1431842378-p10feature.jpg1590: டென்மார்க்கை சேர்ந்த இளவரசி ஆன், ஸ்கொட்லாந்து மகாராணியாக முடிசூடப்பட்டார்.

1792: நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.

1914: நோர்வே மன்னராக டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் கிறிஸ்ரியன் பிரெட்ரிக், நோர்வே நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

1865: சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

1940: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1980: தென்கொரிய அரசாங்கம் ஜெனரல் சுன் டூ ஹ்வானின் கட்டுப்பாட்டில் வந்தது.

1983: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெறப்படுவது தொடர்பாக, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது.

1990: உளவியல் நோய்களின் பட்டியலிலிருந்து ஓரின சேர்க்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது.

1997: லோரன்ட் கபீலாவின் படைகள் ஸயர் நாட்டின் தலைநகர் கின்ஷசாவுக்குள் பிரவேசித்தன. அந்நாட்டிற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

2007: வட கொரியா, தென் கொரியாவுக்கிடையில் முதல் தடவையாக ரயில் சேவைகள் இடம்பெற்றன.

2014: வடக்கு லாவோஸில் இடம்பெற்ற விமான விபத்தில் 17 பேர் பலியாகினர்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13247759_1044831612232199_80922548116519

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் பிறந்தநாள்.
இவர் முன்பு தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

  • தொடங்கியவர்

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ; கன்னிப்பயணத்திற்கு தயார் நிலையில்

thumb_large_343324A500000578-3591482-ima

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது கன்னிப்பயணத்திற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி தனது கன்னிப்பயணத்தை ஆரம்பிப்பதற்காக இங்கிலாந்து நோக்கி இன்று  செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3416352600000578-3591482-The_vast_ship_w

 

WireAP_3ccc1b9781d843e6819fe4df917573e0_

3415B8D300000578-3587116-image-a-59_1463

34323C2C00000578-3591482-image-a-14_1463

virakesari

  • தொடங்கியவர்

கால்களை இழந்தாலும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும்10 வயது சிறுவனுக்கு 'பயோனிக் கிரிக்கெட்' கால்களை ஒரு நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த சிறுவனின் பெயர் ஹார்வி பாரி. ஒரு கொடிய நோய் தாக்கியதால் கால்களையும் வலது கை விரல்களையும் அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. செயற்கை கால்கள் மூலம் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுளான். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி சாதனை படைக்க வேண்டும் என்பதே இவனுடைய ஆசை.

13244646_721183447984200_564871208677210

13240631_721183487984196_528589333255630

  • தொடங்கியவர்

13243735_1044819932233367_22452202621385

தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் முன்னணி வலம் வரும் சார்மியின் பிறந்தநாள்
Happy Birthday Charmme Kaur

  • தொடங்கியவர்
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகத்தின் விநோத சீருடை
 

16686dresss.jpgஸ்பெய்­னி­லுள்ள கால்­பந்­தாட்டக் கழ­க­மொன்று தமது அணி­யி­ன­ருக்­கான சீரு­டையை, தோல் அகற்­றப்­பட்ட மனித உடற் தசைகள் தென்­ப­டு­வதைப் போன்று வடி­வ­மைத்­துள்­ளது.


டெபோர்ட்­டிவா பலோம்பீ எனும் இக் ­க­ழகம் வடி­வ­மைத்த இச்­ சீ­ருடை “இன்சைட் அவுட்” என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

 

இவ்­வ­ணியின் கோல் காப்­பா­ள­ருக்­கான சீருடை நீல நிறத்­திலும் ஏனை ய வீரர்­க­ளுக்­கான சீருடை உடற்­த­சை­களைப் போன்று சிவப்பு நிறத்­திலும் உள்­ளன.


“கெப்பா” எனும் இத்­தா­லிய விளை­யாட்­டுத்­துறை ஆடை வடி­வ­மைப்பு நிறுவனத்தினால் இச் சீருடை வடி வமைக்கப்பட்டுள்ளன.

 

16686dress.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்
=====================================
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் பிரிட்டன் வந்துள்ளது.

பிரான்ஸில் இந்த கப்பலை நிர்மாணிக்க 100 கோடி டாலர்கள் செலவிடப்பட்டதாம்.

இதில் 23 நீச்சல் குளங்கள், ஒரு நீர் சறுக்கு மற்றும் 11,000 செடிகளைக் கொண்ட பூங்கா ஆகியவை உள்ளன.

  • தொடங்கியவர்

'இந்தியன் ஆக ஆசை!’ டி வில்லியர்ஸ் கலாய் வீடியோ

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 6-வது வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து 5 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி களத்தில் இருந்தார். இந்த போட்டியின் போது கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த கேட்ச்சை டி வில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டி வில்லியர்சின் 14வது கேட்ச் இதுவாகும்.

இதன் மூலம் ஒரு சீசனில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களான டேவிட் மில்லர் (பஞ்சாப் அணிக்காக 2014ம்ஆண்டில் 14 கேட்ச்), வெய்ன் பிராவோ (சென்னை அணிக்காக 2013ம் ஆண்டில் 14 கேட்ச்)ஆகியோரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார். டிவில்லியர்ஸ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 538 ரன்களைக் குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதமும், ஒரு சதமும் அடக்கம்.


இந்த நிலையில் பெங்களூர் அணியைச் சேர்ந்த டிஜிட்டல் அணியின் உறுப்பினரான நாக்ஸ் என்பவர் டி வில்லியர்ஸிடம் பேசுகையில், நீங்கள் ஏன் பேசாமல் இந்தியக் குடியுரிமை வாங்கக் கூடாது? பெரும்பாலான நேரத்தை இந்தியாவில்தான் கழிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிரித்தபடி பதிலளித்த டி வில்லியர்ஸ், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பேசாமல் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து விட வேண்டியதுதான் என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

இது நடக்கணும்... நடந்தே ஆகணும்!

ஃபாயில் போடுறது எப்படினு சொல்லித்தர்றதுக்கு கூட ஆப் இருக்கானு கேட்குற உலகம் இது. அந்த அளவிற்கு இந்த கால இளசுகளும் ஆப்ஸுகளும் நகமும் சதையும் போல, ஜாமுனும் ஜீராவும் போல வாழ்ந்துட்டு இருக்காங்க. இந்த ஜென் z தலைமுறை பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளை தீர்க்க, இன்னும் பல ஆப்ஸ் தேவை மக்கா...! 

எனவே, பெண்களின் பொதுநலம் கருதி சில ஆப்ஸ்களுக்கு ஐடியா இங்கே...

Best-Acne-Face-Wash112.jpg

’மூஞ்சியை கழுவு’ ஆப் :

நாள் முழுக்க 720 டிகிரிக்கு சுத்தி சுத்தி செல்ஃபி எடுத்து போட்டாலும் ஃபேஸ்புக்கில் நானூறு லைக்குக்கு மேல் தாண்டமாட்டேங்குதா? உங்களுக்காகவே இந்த மூஞ்சியை கழுவு ஆப். நீங்கள் ஒருநாள் முழுக்க எடுக்கும் செல்ஃபிகளை இதில் அப்லோட் செய்தால் போதும். அதுவே அவற்றில் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்கும் போட்டோவை செலக்ட் செய்து கொடுத்துடும். கூடவே, இந்த போட்டோவுக்கு எத்தனை லைக் வரும்னு குத்துமதிப்பா கணிச்சு உங்களை குதூகலப்படுத்தும். உங்க செல்ஃபி எதுமே சரியில்லைனா ‘அழுக்கு மூட்டை மீனாட்சி, மூஞ்சியை கழுவு மீனாட்சி’ என உங்களை அலார்ட் செய்யும்.

0.jpg

’படிக்காதவள்’ ஆப் :

க்ளாஸில் எடுக்கும் பாடங்களை நோட்ஸ் எடுத்து எடுத்து உங்கள் விரல்கள் நோவுதா? இந்தாங்கோ ‘படிக்காதவள்’ ஆப். நீங்க க்ளாஸில் இனி நோட்ஸ்லாம் எடுக்க வேண்டாம், இந்த ஆப்பை ஆன் செய்து உங்க டேபிளுக்கு கீழ வெச்சால் போதும் ( நீங்க வெச்சால் மட்டும் போதும் ) அதுவே ரெக்கார்டு ஆகி நோட்ஸ் எடுத்து கொடுத்துடும். அப்படியே புரொஃபஸர்கள் கேள்விகேட்டால், உங்களுக்கு பதிலும் சொல்லி கொடுத்துடும். சூப்பர்ல... இனி நீங்க ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி க்ளாஸ்ல தூங்கினாலும், கேட்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லலாம்.

hqdefault.jpg

’வெள்ளைசாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ ஆப் :

நைட் முழுக்க நைட் வாட்ச்மேன் மாதிரி முழிச்சுருந்து வாட்ஸ் அப்பே கதினு கிடந்து, காலாங்காத்தால ஆறு மணிக்கு கொட்டாவி விடும் தாய்குலங்களே... இந்த ஆப் உங்களுக்குதான். நேரங்கெட்ட நேரத்துல உங்களுக்கு தூக்கம் வந்தால் இந்த ஆப் ஆட்டோமேட்டிக்கா ஆன் ஆகி ‘கல்பனா அக்கா’ பாடிய பாடல்களை ப்ளே பண்ண ஆரம்பிச்சுடும். நைட் ஆனதும் எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்றவர்களின் இசையால் உங்களை தாலாட்டி தூங்கவெச்சுடும். லாலாலலா...

maxresdefault.jpg

’ஓவரா இருக்கா’ ஆப் :-

பொண்ணுங்க ஒரு பங்க்ஷனுக்கு எவ்ளோதான் சிக்கிரம் கிளம்பினாலும் கடைசி நேரத்துல ”மேக்கப் கொஞ்சம் ஓவரா இருக்கோ?”னு மனசுகுள்ள ஒரு ஹைப்போதெட்டிக்கல் கொஸ்டின் உருவாகும். லிப்ஸ்டிக் அதிகமாகிடுச்சோ? மஸ்காரா வேற கலர்ல போட்டிருக்கலாமோ?னு நீங்க கன்ஃப்யூஸ் ஆகவே வேணாம். உங்க குழப்பத்தை தீர்க்கதான் இந்த ஆப் ஐடியா. மேக்-அப் போட்டு முடிச்சதும் அதை போட்டோ எடுத்து இதுல அப்லோட் பண்ணா போதும். அதுவே எங்கெங்க மேக்கப் ஓவரா இருக்குனு கட்டம் போட்டு காமிச்சுடும். நீங்களும் உங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட "ஓவரா இருக்கா... ஓவரா இருக்கா?"னு கேட்டு அவங்களை கொலைவெறி ஆக்கவேண்டியதில்லை.

wpid-article-1321888994718-0ee404e700000

’யாருயா இவரு’ ஆப் :

ஃபேஸ்புக்கில் புதுசா ஒரு ஃபிரெண்ட்ஸ் ரிக்வஸ்டோ, மெசேஜோ வருதா? அது யார்... அது ஒரிஜினில் ஐடியா? ஃபேக் ஐடியா? என எல்லாத்தையும் அந்த ஐடியின் எஸ்.டி.டி முதற்கொண்டு டீடெயில்லா சொல்லிடும். இன்னும் ஒரு படி மேலே போய், மொக்கை போடும் ஐடிகளை அதுவே ப்ளாக் பண்ணி விட்டுடும். இந்த ஆப்ஸ் உண்மையிலேயே வரணும், பெண்களின் வாழ்வில் ஒளியேற்றனும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஓவரா இருக்கா ' ஆப் :-    டை  அடிச்சது ஓவரா இருக்குதென்டு சொல்லிச்சுது என்டால் , கிழிஞ்சுது கிருஷ்னகிரி....!tw_blush:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மே 18
 
 

1498: போர்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்தை அடைந்தார்.

1756: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 7 ஆண்டு போர் தொடங்கியது.

1803: பிரான்ஸுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1804: நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸின் மன்னராக பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.

1917: அமெரிக்காவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

1927: மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில்பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45பேர் கொல்லப்பட்டனர்.

1944: கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1956: உலகின் 4ஆவது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.

1969: அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974: இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

1980: வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

1984: அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1990: பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3 கி.மீ/மணி) சென்றது.

1991: ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1991: வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.

2006: இந்து ராஜ்யமான நேபாளத்தில் முடியாட்சியை நீக்கவும் மதசார்பற்ற நாடாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த, நோய் எதிர்ப்பியலின் தந்தை என புகழப்படுகிற எட்வர்ட் ஜென்னர் சிறப்பு பகிர்வு

13226807_1138165806242208_24836788935077

பெரியம்மை உலகை பல நூற்றாண்டுகளாக உலுக்கி கொண்டிருந்தது . எகிப்திய மம்மிக்களின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கிறது என்பது எவ்வளவு காலமாக அது உலகை ஆட்டிப்படைத்து
இருக்கும் என்பதை புரிய வைக்கும் . எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு அந்நோய் வந்து சேர்ந்தது . உலகம் முழுக்க போர் மற்றும் வியாபாரம் செய்யப்போனவர்களின் உபயத்தில் நோய் பரவியது . ஒரு
வருடத்தில் மட்டும் நான்கு லட்சம் பேர் நோயால் இறப்பது வருடாந்திர நிகழ்வானது . பிழைத்தாலும் விடாது கருப்பு போல மூன்றில் ஒரு நபருக்கு கண்பார்வை காலி .

முகம் முழுக்க தழும்புகள் ; எண்ணற்ற மரணங்கள் என்று உலகம் பீதியில் உறைந்து போயிருந்தது . அம்ஹெர்ஸ்ட் எனும் ஆங்கிலேய தளபதி பெரியம்மை கிருமியை அமெரிக்க பழங்குடியின
மக்களுக்கு எதிராக பயன்படுத்த யோசனை எல்லாம் தெரிவித்தான் ; அம்மை குத்துதல் என்கிற முறை இந்தியா,சீனா,ஆப்ரிக்கா ஆகியவ்ற்றில் பிரபலமாக இருந்தது . பெரியம்மையால் பாதிக்கப்பட்டு
அதிலிருந்து விடுதலை பெற்ற நபரின் மருக்களில் பாலை எடுத்து இயல்பான மனிதர்களுக்கு குத்துவார்கள் . இதுதான் அம்மை குத்துதல் . ஏகப்பட்ட நபர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு அந்த
திரவம் கிடைக்காது . வீரியமும் ஒரே மாதிரி இல்லாமல் இருந்தது .

இப்பொழுது தான் ஜென்னர் காட்சிக்கு வருகிறார் . இளவயதில் மருத்துவம் பயின்றுவிட்டு ஊர் திரும்பியவர்,பிரபல ஜான் ஹன்டரை பார்த்தார் . அவரிடம் எண்ணற்ற விஷயங்களை அனுபவப்பூர்வமாக
கற்றுக்கொண்டார் . அவரின் வழிகாட்டுதலில் குயில்களை பற்றி ஆய்வு செய்தார் . அதில் குயில்கள் பிற பறவைகளின் கூடுகளை எடுத்துக்கொள்வதும்,வளர்ப்பு பறவையை ஏமாற்றுவதையும் சொன்னார்
.நடுவில் ஹைட்ரஜன் பலூனை சொந்தமாக தயாரித்து பறக்க விட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்

ஒரு பிரபலமான பழமொழி இங்கிலாந்தில் இருந்தது ,"பசு மேய்க்கும் பெண்களும் பளிச்சான முகம் பெரியம்மையால் போகாது !" என்பதே அது . பசுவை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு பெரியம்மை
வந்து பார்த்ததே இல்லை மக்கள் . இதை நகர்புற வாசிகள் முட்டாள்தனம் என்றனர் ஜென்னர் இதை கவனித்தார் . அப்பொழுது தான் பசு அம்மையால் பாதிக்கப்படும் பொழுது அதன் புண்களில் இருந்து
வரும் திரவம் இவர்களின் உடம்பில் செலுத்தப்படுவதால் நோய் எதிர்ப்பு உருவாவதை கண்டார் .

சாரா நெம்ப்ஸ் எனும் பெண்ணின் கைநகத்தில் இருந்து பசுவின் நோய்க்கிருமியை எடுத்து பிப்ஸ் எனும் எட்டு வயது பெரியம்மை பாதிக்கப்பட்ட சிறுவனின் உடம்பில் செலுத்தினார் / பையன்
பிழைத்துக்கொண்டான் . மதபீடங்கள் கடவுள் கொடுக்கும் தண்டனை இது என்று சொல்லிக்கொண்டு இருந்தது . இதை ஏற்க மறுத்தார்கள். ராயல் கழகத்தில் இன்னமும் நன்றாக ஆராய்ச்சி செய்து
ஆதாரத்தோடு வா என அனுப்பி விட்டார்கள் . போனார் தன் பதினோரு மாத பையன் உட்பட பல பேருக்கு அதே நோய்க்கிருமியை சுத்திகரித்து பயன்படுத்தினார் . எல்லாரும் பிழைத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஏகத்துக்கும் இந்த முப்பதாண்டு காலத்தில் எள்ளலுக்கு உள்ளானார் . ஒரு ஆங்கில பத்திரிக்கை,ஜென்னரின் தடுப்பு முறையை எடுத்துக்கொண்டவர்களுக்கு பசுவின் தலை முளைப்பதை போல
கார்டூன் தீட்டியது . ஆனாலும் முப்பதாண்டு காலத்தில் உலகம் முழுக்க இம்முறை பரவ ஆரம்பித்து வென்றது . ஜென்னர் இறுதி வரை காப்புரிமை பெறாமல் எல்லா மக்களும் பயன் பெறட்டும் என்று
விட்டுவிட்டார்

இங்கிலாந்தின் சில ராணுவ வீரர்கள் நெப்போலியன் படையால் கைது செய்யப்பட்ட பொழுது உதவசொல்லி ஜென்னர் ஜோசபின்னுக்கு கடிதம் எழுதினார் . அவரோ நெப்போலியனிடம் கேட்ட பொழுது
மனிதர் மறுத்து விட்டார். ஜென்னரின் கடிதம் என்று தெரிந்ததும் பதறியடித்து கொண்டு அனுமதி தந்தார் நெப்போலியன் . அந்த அளவுக்கு தெய்வத்துக்கு இணையாக அவர் கருதப்பட்டார் . உலகம்
முழுக்க [பெரியம்மை கடந்த நூற்றாண்டில் ஒழிக்கப்பட்டது . ஜென்னர் நோய் எதிர்ப்பியலின் தந்தை என புகழப்படுகிறார். சொந்த மகனை பணயம் வைத்து,பணத்தை முக்கியமாக கருதாமல்,எளிய
மக்களின் நம்பிக்கைகளை புறந்தள்ளாமல் வாழ்ந்த ஜென்னரிடம் நாம் கற்க எண்ணற்ற பாடங்கள் உண்டு .

vikatan

  • தொடங்கியவர்

இணையத்தில் வலம் வரும் “ Floodfie‬ ”

 

யுவதியொருவரின்  ‪“ ‎Floodfie‬ ” தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Floodfie4.jpg

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அதேவேளை பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

இந்நிலையில் யுவதியொருவர் வெள்ளத்தில் நின்றவாறு செல்பி எடுக்கும் காட்சியை மற்றுமொருவர் புகைப்படமொடுத்து அதனை முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.

 

குறித்த செல்பிக்கு ‎“ Floodfie” என பெயரிடப்பட்டு தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

virakesari

  • தொடங்கியவர்

பிரமிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் (வீடியோ)

Shipworldlong.jpg



ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் இங்கிலாந்தில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறது.

அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான Harmony Of The Seas என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் தான் தற்போது உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என பெயர் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினால் கடந்த 32 மாதங்களாக நடைபெற்று வந்த தயாரிப்புப் பணிகள் நேற்றோடு நிறைவடைந்து, இந்தக் கப்பல் நேற்று இங்கிலாந்தில் உள்ள Southampton துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 1,188 அடி, 215 அடி அகலம் மற்றும் 2,27,000 டன் எடை உடையதாகும். இந்த சொகுசு கப்பலில் 77 நாடுகளை சேர்ந்த 2,100 பணியாளர்கள் உள்ளிட்ட 8,880 பேர் பயணிக்கும் வகையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கப்பலை தரையில் நிறுத்தினால் பிரான்ஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான உயரம் கொண்டது. நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளும் இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ளன.


உலகையே வியக்க வைத்துள்ள இந்த சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிர்வரும் வரும் 22ம் தேதி முதன் முதலாக நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.