Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கோலியை மனதார காதலிக்கிறேன் ; பூனம் பாண்டே 

 

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை மனதார காதலிப்பதாக பொலிவுட் நடிகையும், மொடலுமான பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். 

poonam-pandey.jpg

பல சர்ச்சைகளைக் கிளப்பிய பூனம் பாண்டே, அண்மை காலமாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

 

 

நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பூனம் பாண்டயிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

 

இந்நிலையில் அவர்  ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

 

சர்ச்சையை கிளப்ப புதிய ஐடியாக்கள் கிடைக்கவில்லை. 

ஆனால் விரைவில் ஐடியா கிடைத்து சர்ச்சையை கிளப்புவேன். 

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை யார் தான் காதலிக்க மாட்டார்கள். நான் அவரை மனதார காதலிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

virakesari

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா... கோலிகூட கெய்ல்லும் இருக்காரே.... உங்கல் அலைவரிசையுடன் ஒத்துப்போகக் கூடியவர், ட்ரை பண்ணிப் பார்க்கலாமே....!  tw_blush:

  • தொடங்கியவர்

பிரபல ஹொலிவூட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் பிறந்த நாள் இன்று.
Happy Birthday Clint Eastwood - Legend

13335637_1053534394695254_72230565560599

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் ஒரு விநோத போட்டி
====================================
மலைகுன்றிலிருந்து உருட்டிவிடப்பட்ட சீஸ் உருண்டையை பிடிக்க போட்டியாளர்கள் ஓடுகிறார்கள்.

பிராக்வர்த் கிராமத்தில் நடந்த இந்த போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.

பதினேழு முறை இந்த போட்டியில் வென்ற கிரிஸ் ஆண்டர்சன் இம்முறையும் வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கலிங்கத்து பரணியின் பயணம்

 
wats_up1_2870811f.jpg
 

wats_up2_2870815a.jpg

wats_up_4_2870816a.jpg

wats_up_5_2870817a.jpg

wats_up_6_2870823a.jpg

wats_up_7_2870825a.jpg

wats_up_8_2870827a.jpg

wats_up_9_2870830a.jpg

wats_up_10_2870831a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜூன் 01
 
 

article_1433134713-birendra%20famely.jpg1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.

1485: ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.

1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.

1605: மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

1792: கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1796: டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.

1831: ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.

1855: அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.

1869: மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.

1879: பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ - சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.

1910: ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.

1941: ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946: ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1947: சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1959: நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.

1962: நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.

1964: சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.

1971: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1978: டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

1979: ஸிம்பாப்வேயில் வெள்ளையின ஆட்சி முடிவுக்கு வந்தது.

1980: சி.என்.என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.

1990: அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் இரசாயன ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2001: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா  மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர்  முடிக்குரிய இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.

2009: பிரேஸிலில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பிரெஞ்சு விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 228 பேரும் பலி.

2014: நைஜீரியா, முபீ கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதுலில் 40 பேர் பலியாகினர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13346267_1054176214631072_61787267686917

ஹொலிவூடின் நடிகைகளில் மறக்கமுடியாத சின்னங்களில் ஒருவராக விளங்கிவரும், மறைந்தாலும் மறையாத புகழ் கொண்ட மர்லின் மன்றோவின் பிறந்த தினம்.
Marilyn Monroe

  • தொடங்கியவர்

'தன்னைப் பற்றியே பெருமை பேசுவது அறியாமை'
 
 

article_1464750032-iykiguo.jpgஇந்தப் பரந்த உலகில், கோடான கோடி, பல்வகைப்பட்ட உயிரினங்கள் ஜீவிக்கின்றன. விலங்கினம், மீன் இனம், தாவர இனம், பறவைகள், பூச்சிகள் எனப் பலவாகும். கடலில் வாழும் உயிரினங்கள் பற்றிச் சொல்லிட முடியாது.

இந்த இனங்கள் ஒவ்வொன்றுக்குமே, அவை அவைக்கெனத் தனிஉலக வாழ்க்கை முறைகள் உண்டு. இவைகளில் ஓர் இனமே மனித இனமாகும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து இனங்களுமே, மனித இனத்துக்குக் குறைவானவையும் அல்ல. அவைகள் பார்வையில், நாங்களும் ஏதோவோர் இனம் தான்.

புலனறிவு, இயங்கும் திறன், அதீத மோப்ப சக்தி, உடல் வலு எனப் பலமான சக்திகளை, ஆண்டவன், அவைகளுக்கு அளித்துள்ளான்.

அவை வாழும் சூழலுக்கு ஏற்ப எம்மால் வாழ முடியாது. இது அதிசயமான வாழ்க்கை முறைதான். மனிதன், தன்னைப் பற்றியே பெருமை பேசுவதும் அறியாமைதான். நாங்கள், இயந்திரத்தின் உதவிமூலம் இயங்குகின்றோம். அவைகளுக்கோ, அவைகளின் உடம்பே இயந்திரம்தான்.

அவைகளால் முடிந்த காரியங்கள் எதனை எம்மால் செய்யமுடியும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
காற்சட்டையில் பூஞ்செடிகள்
 

லண்டனில் நடைபெறும் பூந்தோட்டக் கண்காட்சியொன்றில் பழைய காற் சட்டைகளில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

 

170056c10436676-01-02_31052016_R25_CMY.j

1700522222_31052016_R25_CMY.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
Vikatan EMagazines Foto.
 

ஹெலன் கெல்லர் நினைவு தினம் ஜூன் ஒன்று.

வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து துரத்தும் பொழுது நின்று,நிதானித்து அதை வெல்ல முடியும் என்று உடற்குறைபாடுகளை கடந்து சாதித்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை காட்டுகிறது.
இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது.

ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது. காய்ச்சல் போனதும் எல்லாம் சரியாகி விட்டது என்று பெரியவர்கள் நினைத்தார்கள். பேசும் திறனும்,பார்வையும் அந்த பிஞ்சுக்குழந்தைக்கு பறிபோனது.

இந்த குழந்தை அவ்வளவு தான் என்று எண்ணிய பொழுது வேலைக்காரர் ராபின் சார்ல்சின் மகள் மார்த்தாவின் நட்பு வரம் போல வந்து சேர்ந்தது. இடிக்காமல் ஓடவும்,கைகோர்த்து நடக்கும் அவரிடம் பழகினார் இளம்வயது ஹெலன். ஏழு வயதுக்குள் இந்த தோழிகள் இருவரும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அறுபது
வெவ்வேறு குறியீடுகளை உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அக ஒளியருக்கான பள்ளியில் அவரை சேர்க்க முயன்ற பொழுது கடுமையாக மறுத்தார் ஹெலன்.

அவருக்கான ஆசிரியரை பல்வேறு இடங்களில் தேடி இறுதியில் ஆன் மான்ஸ்பீல்ட் சுல்லிவன் வந்து சேர்ந்தார். ட்ரக்கொமா எனும் கொடிய கண் வியாதி ஏற்பட்டு கண் பார்வை பறிபோன ஆனி அக ஒளியர் பள்ளியில் சேர்ந்த அங்கே முதன்மையான மாணவி ஆனார். இருபது வயதை எட்டிய பொழுது தான் அவருக்கு அந்த முக்கியமான பணி வந்தது. ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்கும் பணி.

ஒவ்வொரு பொருளையும் உணர வைத்து தான் பாடம் நடத்துவார். DOLL என்று ஹெலனின் கையில் எழுதும் பொழுதே அவரை பொம்மையை தொட்டு உணர வைப்பார். வாட்டர் என்று ஒரு கையில் எழுதும் பொழுதே இன்னொரு கையில் நீரை ஓட விட்டு அதை உணர வைக்கிற அற்புதத்தை செய்தார்.

கல்லூரிக்கு ஹெலன் கெல்லர் போன பொழுது கூடவே ஆனியும் போவார். அவரின் கரங்களில் ஆசிரியர் பாடம் நடத்த நடத்த வார்த்தைகளை உடனடியாக ஆனி வரைந்து புரிய வைப்பார் என்றால் நீங்கள் எத்தகைய வேகம் அது என்று புரிந்து கொள்ளலாம். ஹெலன் கெல்லர் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றால் ஆனியோ ஆசிரியையாக சாதித்தார்

ஹெலன் கெல்லர் தன்னுடைய வாழ்க்கை கதையை என் கதை என்று இருபத்தி நான்கு வயதில் எழுதி வெளியிட்ட பொழுது அது பரவலான் கவனம் பெற்றது. நாற்பது வருடகாலம் ஹெலன் கெல்லருக்கு ஆணி ஆசிரியராக இருந்தார். ஹெலன் கெல்லர் பெண்களுக்கு வாக்குரிமை,அக ஒளியருக்கு உரிமைகள் என்று பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஐம்பத்தி நான்கு நூல்கள் எழுதி பரவலாக தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை விதைத்தார். அவர் எண்பத்தி எட்டு வயதில் மறைந்த பொழுது சாதிக்க உடலின் ஆற்றலை விட மனதின் முனைதலே முக்கியம் என்கிற வலுவான பாடத்தை உலகுக்கு தந்திருந்தார்.

vikatan

  • தொடங்கியவர்
சீஸ் உண்ண விரும்பாதவர், 17 ஆவது தடவையாக சீஸ் உருட்டும் போட்டியில் முதலிடம்
 

இங்­கி­லாந்தின் குளோ­செஸ்­ட­ஷ­யரில் நடை­பெறும் வரு­டாந்த சீஸ் உருட்டும் போட்டி உலகப் பிர­சித்தி பெற்­றது.

 

17010cheese2.jpg

 

மலைச்­ச­ரிவில் உருட்­டப்­படும் சீஸ் கட்­டியைத் தொடர்ந்து கீழ்­நோக்கி வேக­மாக ஓடி எல்­லைக்­கோட்டை அடை­வ­துதான் பல நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­று­வது வழக்கம்.


இவ்­ வ­ருடப் போட்டி நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. நூற்­றுக்­க­ணக்­கானோர் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றினர். வழக்கம் போலவே பலர் மலைச்­ச­ரிவில் வீழ்ந்து உருண்­டனர்.


17010cheese.jpg

 

ஆண்கள் பிரிவில் கிறிஸ் அண்­டர்சன் என்­ப­வரும் பெண்கள் பிரிவில் புளோரன்ஸ் என்­ப­வரும் சம்­பி­ய­னா­கினர். கிறிஸ் அண்­டர்சன் 17 ஆவது தட­வை­யாக இப்­ போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யுள்ளார்.

 

17010cheese1.jpg

 

ஆனால், அவ­ருக்கு சீஸ் உண்­பது பிடிக்­காதாம். 29 வய­தான கிறிஸ் அண்­டர்சன் பிரித்­தா­னிய இரா­ணுவச் சிப்­பா­யாக பணி­யாற்­று­கிறார்.

 

தன்­னுடன் கடந்த காலங்­களில் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றிய தனது நண்பர் இஸி ஜோன் அண்­மையில் இறந்­து­விட்­ட­தா­கவும் அவ­ருக்கு இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்வதாகவும் கிறிஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹொலிவூட் பிரபல நடிகர், பல விருதுகள் வென்ற மோர்கன் ஃப்ரீமனின் பிறந்தநாள் இன்று.

பலர் நெல்சன் மண்டேலா இறந்தபோது இவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய வேடிக்கையும் நடந்தது.

13315806_1054176647964362_71850178292570

  • தொடங்கியவர்

ரிலேவில் ஓடிய எம்.எல்.ஏக்கள்... கயிறு இழுத்த காமராஜர்!

தை தெரியுமா உங்களுக்கு...? தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்த காலம். ஒருமுறை, சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட நாட்கள் நடைபெற்றது. உறுப்பினர்களின் ஆரோக்யமான விவாதங்களும், பதில்களுமாக நீண்ட அந்தக் கூட்டத் தொடரின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, 'சட்டமன்ற உறுப்பினர் நாள்' என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து, அந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்தது அன்றைய தமிழக அரசு.

இந்தத் திட்டம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து உறுப்பினர்களும் இந்த விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார். 1957-ம் ஆண்டு, ராஜாஜி ஹாலின் வெளிப்புற இடத்தில், எம்.எல்.ஏக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

kam1.jpg

அந்த மைதானத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அமர்ந்து  விளையாட்டு போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில், சாமியானா பந்தல் முதற்கொண்டு பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 100 மீட்டர் ஓட்டம் , ரிலே ஓட்டம், கயிறு இழுத்தல் போட்டி, குண்டு எறிதல், சாக்குப்பை ஓட்டப்போட்டி போன்றவையும், பெண் உறுப்பினர்கள் பங்குபெறும் வகையில் மாறுவேடப் போட்டி, மியூசிக்கல் போட்டி போன்றவையும் அந்த நாளில் நடத்தப்பட்டன. சில போட்டிகள் மட்டும் குழு போட்டிகளாக நடைபெற்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அந்த மாவட்டத்தின் பெயரில் குழுவாகவும் விளையாட்டில் பங்கேற்றனர். குழுப் போட்டியில் வெற்றிபெறும் மாவட்டத்துக்கு சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. அந்த சுழற் கோப்பை, அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்தையா செட்டியார் சார்பில் “செட்டிநாட்டு அரசர் சுழற்கோப்பை” என்ற பெயரில், வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டன. பெண் உறுப்பினர்கள், ஆண் உறுப்பினர்களோடு சரிநிகராக மாறுவேடப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி போன்றவற்றில் பங்கெடுத்து அசத்தினார்கள். கயிறு இழுத்தல் போட்டியில் முதல் ஆளாக நின்று முதல்வராக இருந்த காமராஜரும் கயிறு இழுத்தார். அன்றைக்கு பிரபல அமைச்சரகள் பலரும் இந்த விளையாட்டுகளில் கலந்து கொண்டு அசத்தினார்கள்.

kam2.jpg

ஆண்டுதோறும் நடைபெற்ற இந்தப் போட்டியில், 1958 ம் ஆண்டு கோவை மாவட்ட எம்.எல்.ஏக்கள் அணியும், 1959 ம் ஆண்டு சென்னை மாவட்ட எம்.எல்.ஏக்கள் அணியும், 1960 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் அணியும் வெற்றி பெற்றன. 

1959 ம் ஆண்டு இந்த போட்டிகளோடு கிரிக்கெட் போட்டியும் கூடுதலாக சேர்க்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. கவர்னர் லெவன் அணி, முதல்வர் லெவன் அணி என இரண்டு அணிகளாக எம்.எல்.ஏக்கள் அணி பிரிக்கப்பட்டு,  சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல்வராக இருந்த காமராஜர், வேஷ்டி சட்டையோடு இந்த போட்டியில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பையை, அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொழில் அதிபர் என்.மகாலிங்கம் வழங்கினார்.

காலை முதல் மாலை வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற பிறகு, அன்று இரவு முதல்வர் சார்பில் அனைவருக்கும்  இரவு விருந்து வழங்கப்பட்டு, அந்த விருந்தில் வெற்றிவீரர்களாக இருந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. இந்த விளையாட்டுகள் அனைத்திலும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கலக்கினார்கள் என்பதுதான் ஹைலைட்.

இன்றைய சட்டமன்றம் படும் பாட்டை நினைக்கும் பொழுது, அன்றைய காலம் பொற்காலமாகத்தான் இருந்துள்ளது .

vikatan

  • தொடங்கியவர்

மர்லின் மன்றோ உடை எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா? #HBDMarilynmonroe

MarilynMonroeBasedOn.jpg

அமெரிக்காவின் டாப் மாடல், 5௦களில் புகழின் உச்சத்திற்கே சென்ற மார்லின் மன்றோ பிறந்த தினம் இன்று. ப்ளேபாய் பத்திரிக்கையின் முதல் பிரதி அட்டையை அலங்கரித்தவர் இவர். மர்லின் மன்றோ பற்றிய சில விஷயங்கள்...

1.       இவரது இயற்பெயர் நோமா ஜீன். சிறு வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், ஆதரவற்றோர் இல்லத்தில்தான் தனது குழந்தை பருவத்தை கழித்தார். கிட்டத்தட்ட 11 தம்பதியினர் இவரை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.

2.       ப்ளேபாய் பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு மாடலாக நின்ற மார்லினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 50 டாலர்களே!

3.       “ஒரு பெண்ணை சிரிக்கவைத்து விட்டால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்” என்கிற பிரபலமான வாக்கியத்திற்கு சொந்தக்காரர்.

4.       சருமம் வெள்ளையாகத் தெரிய ஹார்மோன் க்ரீம் பூசிக்கொண்டார். இதன் பக்கவிளைவாக இவரது முகத்தில் லேசாக தாடி வளர ஆரம்பித்தது. ஆனாலும் அதை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

seeall27whitesubwaydresssm.png


5.      1954ல் இவர் நடித்த ‘செவன் இயர்ஸ் இட்ச்’ படத்தில் இவரது வெள்ளை உடை சப்வே ஒன்றில் நிற்கும்போது காற்றில் பறக்க, அந்த ஸ்டில் மிகப் பிரபலமானது. பின்னர் ‘White Subway Dress" என்ற அந்த உடை 55.6 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது!


6.       இவர் ஒரு விளையாட்டு வீராங்கனையும் கூட. ஹோவார்ட் காரிங்க்டன் என்னும் ஒலிம்பிக் வீரரிடம் முறையாக பளு தூக்குதல் கற்றுக்கொண்டார்.

7.       DIAMONDS ARE GIRL’S BEST FRIENDS என்ற புகழ்பெற்ற பாடலுக்கு குரல் கொடுத்த இவருக்கு நகைகள், குறிப்பாக வைரங்கள் என்றாலே பிடிக்காதாம்.

8.       இவருடைய மரணம் தற்கொலையா கொலையா என்றே இன்னும் புரியாத புதிராக உள்ளது. இவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான விசிறிகள் பங்கேற்றனர். இவர் உடலுக்கு வந்த மலர்களை போட்டிப்போட்டுக்கொண்டு சூறையாடி ஒரு கலவரத்தையே ஏற்ப்படுத்தினர்.

9.       இவர் மரணத்திற்கு பிறகு நியூயார்க் நகரத்தில் ஒரு நாளுக்கு 12 பேர் விகிதம் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு விசிறி, “உலகின் மிக அழகான ஒன்றிற்கு இப்போது உயிர் இல்லாதபோது நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்?” என்று கடிதம் எழுதி தற்கொலை செய்துள்ளார்.

10.   இவருடைய மருத்துவக்குறிப்புகள் அனைத்தும் 25000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

11.   இவர் இறப்பதற்கு முன்னர் தன் கணவர் ஜோ டிமாகியோவிடம் ஒரு சத்தியம் வாங்கினார். அதன்படி, தான் சாகும் வரை சுமார் 20 வருடங்களுக்கு மார்லினின் கல்லறையை தினம் தினம் பூக்களால் அலங்கரித்தார் ஜோ!

12.   ஹாலிவுட் பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றால், ரசிகர்கள் ஏலத்தில் எடுக்க போட்டி போடுவார்கள். அதற்கு இந்தச் செய்தி  ஓர் உதாரணம். அதே போலவே,  River of No Return படத்தில் நடிக்கும்போது மர்லின் மன்றோ பயன்படுத்திய ஜீன்ஸை டாமி ஹில்ஃபிகர் 37000 டாலருக்கு ஏலத்தில் எடுத்தார்.  பின்னர் அவர் அதை, ப்ரிட்னி ஸ்பியர்ஸிற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டாராம். 

vikatan

  • தொடங்கியவர்

தெவிட்டும் அழகில் மனதை மயக்கும் தென்னிந்திய ஹீரோயின்கள் இவர்கள்...

டோலிவுட் கஷ்மீரா குல்கர்னி

p99a.jpg

ராத்தி மங்கை. கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்து மாடலிங்கில் கலக்கி பின் மராத்தி சினிமாவிலும் கலக்கியவர் இந்த கஷ்மீரா. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து சொந்தத் தம்பியையும் தொலைத்து என மிக மிக சோகமானப் பின்னணியைக் கொண்டவர். சின்ன வயதில் இருந்தே சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தவர் என்பதால், நடிப்பில் யதார்த்தம் தலை தூக்கும். ‘சார் திவாஸ்’ டி.வி சீரியலில் மகராஷ்டிரா முழுவதும் அறியப்பட்டவருக்கு ‘த்ருஷ்ய காவ்யம்’ என்ற தெலுங்குப் படத்தில் செம ரொமான்டிக் ரோல் கிடைக்க பொண்ணு இப்போது டோலிவுட்டில் பிஸி. பளபள வெல்வெட் கன்னத்தில் குழி விழும் அழகியை நிச்சயம் ஆந்திர மணவாடுகளுக்குப் பிடிக்கும் என்கிறது டோலிவுட் பட்சி. அழகான ராட்சஷி!

சாண்டல்வுட் க்ருத்திகா ஜெயக்குமார்

p99b.jpg

பெங்களூரில் அவதரித்த குல்மொஹர். ஏழு வயதில் நாட்டிய அரங்கேற்றம் செய்து கலக்கியவர். பத்திரிகை நிருபராய் ஆக வேண்டும் என்ற கனவில் க்ருத்திகா இப்போது பெங்களூரு மௌன்ட் கேரமல் காலேஜில் ஜர்னலிஸம் படித்துக் கொண்டிருக்கிறார். 2014-ல் மலையாள ‘த்ருஷ்யம்’, தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு மகளாக நடித்து ஆந்திர ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்போது தெலுங்கில் ‘வினவய்யா ராமய்யா’ என்ற படத்திலும், கன்னடத்தில் தனஞ்செய்க்கு ஜோடியாக ‘பாக்ஸர்’ என்ற படம் ரிலீஸுக்கு ரெடி. தெலுங்கா? கன்னடமா? இரண்டு படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்துதான் க்ருத்திகாவின் ரியாக்‌ஷன் இருக்கப்போகிறது. க்ருத்திகாவை சென்னை அன்புடன் வரவேற்கிறது!

மல்லுவுட்  மைதிலி

p99c.jpg

த்தனம்திட்டா பைங்கிளி. ‘பாலேரி மாணிக்யம்’ படத்தில், பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணிக்யம் ரோலில் மலையாள தேசத்தை மதி மயங்க வைத்தார். ரஞ்சித்தின் அந்தப் படம் கொடுத்த வரவேற்பில் ‘கேரளா கஃபே’, ‘ சட்டாம்பினாடு’, ‘நல்லவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, ‘ஞானும் என்ட ஃபேமிலுயும்’, ‘மாயமோகினி’, ‘பாப்பின்ஸ்’, ‘ஞான்’, ‘நாடோடி மன்னன்’, ‘மேட்னி’, ‘வெடிவழிபாடு’, ‘லோஹம்’, காட்ஸ் ஓன் கன்ட்ரி’ என நிறையப் படங்களில் நல்ல ரோல்கள். ‘லோஹம்’ படத்தில் இவர் பாடகியாக அவதாரம் எடுத்தும் சேட்டன்களின் மனதில் குடிபுகுந்தார். ‘கிளாமர் ரோலா? செகண்ட் ஹீரோயினா? கூப்பிடு மைதிலி’யை என்கிறது மல்லுவுட்! சூப்பர் மைது!

vikatan

  • தொடங்கியவர்

ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா...ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!

gorilla300.jpgந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி  அனுப்பியிருந்தேன்.

முகநூலில் 17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள்.  சென்ற வருடம் 'ஸ்வீட் ஸிக்டீன்' என்று 16 வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடிய புகைப்படங்களும் அந்த முகநூலில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். ஸ்வீட் ஸிக்டீனைக் கடந்து சென்ற  ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாதது அந்த நாள் என்பதால் ஹரம்பிக்கும் மறக்க முடியாத நாளாக அது இருந்திருக்கும்.

வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை நோக்கிய நகர்வு இங்கேதான் அனேகமானவர்களுக்கு ஆரம்பமாகின்றது.  ஏனோ முகநூலில் பார்த்த ஹரம்பியின் அந்த அப்பாவித் தனமான பார்வையில் ஏதோ ஒரு சோகம் குடியிருப்பதை அவதானிக்க முடிந்தது. ஒருவேளை ஹோம்சிக் என்று எல்லோரும் சொல்வது போல உறவுகளைப் பிரிந்து, இயற்கைச் சூழலை விட்டு இங்கே வந்த சோகமாகக்கூட அது இருக்கலாம்.

ஹரம்பியின் இந்த சிறை வாழ்க்கை எத்தனை வருடங்களாகத் தொடர்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறையில் அடைத்து வைக்குமளவிற்கு ஹரம்பி எந்த ஒரு குற்றமும் செய்திருக்க நியாயமில்லை என்பதைக் குழந்தைத் தனமான அந்த முகத்தைப் பார்த்த போதே நான் புரிந்து கொண்டேன். ரெக்ஸாசில் சுதந்திரமாய் திரிந்த ஹரம்பியை அந்தச் சிறைக்குக் கொண்டு வந்ததற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கலாம், ஒருவேளை அனாதையாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம்.

ஆனாலும் முதல் நாள் பார்த்த போதே எனக்குக் ஹரம்பியைப் பிடித்துப் போய்விட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயதுபோல, ஹரம்பிக்குப் பதினேழு வயதிலே தத்து என்று தலையில் எழுதப்பட்டிருக்கலாம். நான்கு வயதுதான் இருக்கும், யமதூதுவன் போல அந்தச் சிறுவன் பெற்றோருடன் அங்கு நுழைந்திருந்தான். செயற்கையாகப் போடப்பட்ட பாதுகாப்பு வேலிபோலப் பதினைந்தடி ஆழத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த அந்தக் காட்சிதான் அவன் கண்ணில் முதலில் பட்டது.

gorilla6002.jpg

தண்ணீரைக்கண்டதும் தானும் தண்ணீரில் விளையாடப் போவதாக அவன் அடம் பிடித்தான். தாயார் என்ன சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாகத் தாயாரின் கைகளை உதறிவிட்டு, அந்த இடத்திலே தரையில் உட்கார்ந்து கொண்டான். தாயார் சற்று விலகியதும் எழுந்து ஒரே ஓட்டமாக ஓடி மேலே போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் கடந்து திடீரெனக் கீழே குதித்தான்.

ஒரே நிமிடந்தான், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்வையாளர்கள் எல்லோரும் உறைந்து நின்றனர். கீழே விழுந்த சிறுவன் அடிபட்டதால் அப்படியே மயக்கமாகக் கிடந்தான். பதினைந்தடி ஆழமாகையால் கீழே விழுந்த போது சிறுவனின் உடம்பில் அடிபட்டிருக்கலாம், சில நிமிடங்கள் மயக்க நிலையில் அசையாமல் அப்படியே அவன் கிடந்தபோதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது, சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் கீழே இருந்த இரண்டு பெண் கொரிலாக்கள் அந்தச் சிறுவனை நோக்கி வேகமாக ஓடிவந்தன.

மேலே நின்ற கும்பல் ஓவென்று கூக்குரலிட, இதைக்கண்ட ஹரம்பி ஓடிச்சென்று அந்தக் கொரிலாக்களைத் தள்ளிவிட்டு கீழே மயங்கிக் கிடந்த அந்தச் சிறுவனைக் குனிந்து பார்த்தது. மற்றக் கொரிலாக்களால் ஆபத்து வரலாம் என்று நினைத்தோ என்னவோ, தனது காதலிகளான அந்த இரண்டு கொரிலாக்களையும் சற்றுத் தூரம் வரை விரட்டிவிட்டுப் பொறுப்புள்ள ஒரு தகப்பனைப் போல சிறுவனுக்கு அருகே வந்து பாதுகாப்பாக நின்று கொண்டது.

gorilla6001.jpg

மயக்கம் தெளிந்த சிறுவனின் கண்களில் எதிரே பூதாகரமாய் நின்ற ஹரம்பிதான் கண்ணில் படவே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத சிறுவன் ஓவென்று பலமாக அழத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டு வெளியே நின்ற மக்கள் கூட்டம் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்தில் மீண்டும் கூக்குரலிட்டது. அவர்கள் கும்பலாகக் கீழே வந்து அந்தச் சிறுவனைத் தாக்கி விடுவார்களோ என்ற பயம் ஹரம்பியைச் சட்டென்று பிடித்துக் கொண்டது.

மேலே நின்று கத்திக் கூக்குரலிடும் அந்தக் கும்பலின் சத்தம் மேலும் மேலும் அதிகரிக்கவே, அவர்கள் எந்த நேரமும் கீழே வந்து சிறுவனைத் தாக்கலாம் என்ற பயத்தில் ஹரம்பி மேலே அண்ணார்ந்து பார்த்தது.
சிறுவனை அந்தக் கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் இதற்கு ஒரே வழி அந்தச் சிறுவனை ஒதுக்குப் புறமாகக் கொண்டு சென்று கூக்குரலிடும் மக்களிடம் இருந்து பாதுகாப்பதே என்று அது நினைத்தது. ஐந்தறிவு படைத்த அந்த மிருகத்திற்கு அதைவிட வேறு எதுவம் யோசிக்கத் தோன்றவில்லை. தனது குட்டிகளை எப்படிப் பாதுகாக்குமோ அப்படித்தான் அது செய்ய நினைத்தது.

ஆனால் மிருகம் ஒன்று நினைக்க மனிதன் ஒன்று நினைத்தான். ஹரம்பியால் சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மிருக்காட்சிச் சாலைப் பணியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் ஹரம்பியோ எந்த ஒரு கட்டத்திலும் சிறுவனைத் தாக்கவோ, பயமுறுத்தவோ முற்படவில்லை, மாறாகச் சிறுவனைப் பாதுகாக்கவே நினைத்தது. எனவே சிறுவனைத் தூக்கித் தனது காலடியில் இருத்திவிட்டு அவனைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தது. பாதுகாப்பான ஒரு மூலையில் சிறுவனை உட்கார வைத்தால் மக்கள் கூட்டம் சிறுவனைத் தாக்க மாட்டார்கள் என ஹரம்பி நினைத்து, எங்கே சிறுவனைப் பாதுகாப்பாய் வைக்கலாம் என்று அக்கம் பக்கம் பார்த்தது.

gorilla60031.jpg

ஹரம்பி சுமார் 400 கிலோ எடை இருக்கலாம். நெட்டையான உருவம், சுமார் ஐந்தரையடி உயரமிருக்கலாம். நடக்கும் போது அசைந்து அசைந்து நடப்பதே அதற்குத் தனி அழகைக் கொடுத்தது. மேலே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் அந்தச் சிறுவனைத் தாக்க முனைந்ததால்தான், அவர்களிடம் இருந்து தப்புவதற்காகத்தான் சிறுவன் கீழே தண்ணீருக்குள் குதித்தான் என்று ஹரம்பி நினைத்ததிருக்கலாம். அந்தக் கும்பலிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்ற சட்டென்று தண்ணீருக்குள் இருந்த சிறுவனை அணைத்துத் தூக்கி நிற்க வைத்தது.

சிறுவனைத் தூக்கி நிற்க வைத்த ஹரம்பிக்குச் சிறுவனை இரண்டு கைகளாலும் அணைத்துத் தூக்கி தோளில் போடத் தெரியவில்லை. தனது குட்டியை எப்படிக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு செல்லுமோ அப்படித்தான் சிறுவனைப் பிடித்து கொண்டு சென்றது. கீழே விழுந்து முழங்காலில் அடிபட்டதால் சிறுவனால் நடக்க முடியாமலிருந்தது.

gorilla60041.jpg

மீண்டும் தண்ணீருக்குள் விழுந்த சிறுவனை என்ன செய்யலாம் என்று ஒரு கணம் யோசித்தது. ஐந்தறிவுதான் என்றாலும் புத்திசாலிக் ஹரம்பி சிறுவனை அப்படியே  தண்ணீரில் மிதக்க விட்டபடி அப்படியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்றது. இக்கட்டான அந்த சூழ்நிலையில் வேறெதுவும் செய்யக் கூடிய நிலையில் ஹரம்பி இருக்கவில்லை. குழந்தையைத் தண்ணீருக்குள்ளால் இழுத்துச் சென்று பாதுகாப்பாக மூலையில் உட்கார்ந்து கவனமாகத் தனது காலடியில் இருத்திவைத்திருந்தது.

கும்பலின் குரல் இப்போது இன்னும் அதிகரித்திருந்துது. ‘சூட் தட் நாஸ்டி அனிமல்’ கும்பலில் யாரோ கூக்குரலிட்டார்கள். அடுத்த கணம் அருகே நின்ற சிலரும் சேர்ந்து அவனோடு கோரஸ் பாடினார்கள். ‘சுடுவதா இல்லையா?’ துப்பாக்கியோடு ஹரம்பியைக் குறிவைத்தபடி நின்ற காவலாளியின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

gun250.jpgஎந்த ஒரு காரணமும் இல்லாமல் அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்படப் போகிறதே என்ற கவலைகூட இல்லாமல் ‘கொன்றுவிடு’ என்ற குரல்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியில் மனதில் வலுக் கட்டாயமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்பட்டன.

தற்செயலாகச் சிறுவனுக்கு ஏதாவது நடந்தால் தன் மீது பழியைப் போட்டு விடுவார்கள். அதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்போடு அவனது விரல் ட்ரிக்கரில் பதிந்தது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பார்கள். தன்னை சுடுவதற்கு இந்த ஆறறிவு படைத்தவர்கள் ஏன் குறி வைக்கிறார்கள் என்பது கூட அந்த ஐந்தறிவு படைந்த கொரிலாவிற்குப் புரிந்திருக்கவில்லை.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கி ரவை துளைத்து இரத்தம் பீறிட்ட போதும்கூடச் சிறுவனைத் தாக்க ஹரம்பி முனையவில்லை. உயிர் பிரியும் அந்தக் கடைசி நிமிடத்தில்கூட ‘உன்னை வெறிபிடித்த இந்த மனிதக் கூட்டத்தில் இருந்து பாதுகாக்க என்னால் முடியவில்லையே’ என்ற இயலாமையுடன் கண்களில் நீர்துளிர்க்க மௌனமாக அந்தச் சிறுவனைப் பார்த்தது ஹரம்பி.

அடுத்த விநாடியே விழி மூடக்கூட அவகாசம் இல்லாமல் அதன் உயிர்த் துடிப்பு மெல்ல அடங்கிப் போனது. வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் உயிரைப் பறித்து விட்ட மனநிறைவோடு வெளியே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் தங்கள் வெறி அடங்கியதும் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.
‘கட்டுக்கடங்காமல் போகலாம் என்பதால் ஹரம்பியைச் சுட்டுக் கொன்று விட்டோம்’ என்று பொறுப்பானவர்கள் அறிக்கையில் எழுதிவைத்து விட்டுப் போய் விட்டார்கள். ‘உங்களைவிட எங்களுக்குத்தான் கவலை அதிகம்’ என்று முகநூலில் பதிவு செய்து தங்களுக்குள் வேறு சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.

gorilla6005.jpg

தன்னைப் பலி கொடுத்ததன் மூலம் காலமெல்லாம் திட்டித் தீர்க்கவிருந்த மனித குலத்திடம் இருந்து ஹரம்பி விடுதலை பெற்றுக் கொண்டது.

அவரவருக்கு அவரவர் வாழ்க்கை முக்கியமானாலும், ஓன்று மட்டும் எனக்குப் புரியவில்லை, இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ஹரம்பியைச் சுட்டுக் கொல்வதற்கு? அனாதையாய் கூண்டுக்கள் அடைந்து கிடந்து இத்தனை காலமாய் வந்து போன பார்வையாளர்களை எல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருந்த ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!

vikatan

  • தொடங்கியவர்

13268428_1054160597965967_14223872284299

அலைபாயுதே முதல் அனைவரதும் இதயம் கவர்ந்த அழகிய நாயகன் மாதவனின் பிறந்தநாள்.
இறுதிச் சுற்று மூலமாக இப்போது மீண்டும் எழுந்து இன்னொரு சுற்று வருகிறார்.

தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கும் கதாநாயகன்.

Happy Birthday R Madhavan

மாதவனை ஏன் பெண்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDMadhavan

maxresdefault3.jpg

‘வயசானாலும் பரவாயில்ல, ஹி இஸ் ஸோ மேன்லி!’ என இன்றும் மாதவனைப் பார்த்து உருகாத பெண்கள் மிகக் குறைவு. இவருக்கு ஏன் இவ்வளவு கிரேஸ்?!

1. முதலும் முக்கியமுமாக பெண்களுக்கு ஆண்கள் மேன்லியான லுக்கில் இருந்தால் மிகவும் பிடிக்கும். அதில் 100% தகுதியுடன் என்றென்றும் புன்னகைக்கிறார் மேடி.

2. எதற்கும் அலட்டிக்காமல், பந்தா இல்லாமல் இருக்கும் லவ்வர் பாய்ஸுக்கு பெண்கள் எப்போதும் டிக் அடிப்பார்கள். அதில் மாதவனுக்கு டபுள் டிக்.

3. ‘நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு!’ என்று மணி சார் இவருக்கு எழுதிய டயலாக்கை இவர் டெலிவரி செய்த விதமும், ‘இப்படி ஒருத்தன் நம்மைச் சொல்ல மாட்டானா’ என்று ஏங்கவைத்த விதமும்... பெண்களின் மனசில் மேடிக்கு ஃபார்எவர் சிம்மாசனம் போட்டுவிட்டது.

4. கில்லிங் ஸ்மைல். பசங்க சத்தமா சிரிக்கிறதைவிட, ஸ்மார்ட்டா சிரிக்கும்போது ரொம்ப ஹேண்ட்ஸமா இருப்பாங்க. அந்த சாக்லெட் பாய் சிரிப்பில் மேடி, செம கேடி.

19CPmadhavan2jpg310879g1.jpg

5. தமிழ் சினிமாவின் கேர்ள்ஸ் சாய்ஸ் நடிகர்களான கமல், அஜித், அப்பாஸ், அரவிந்த்சாமியை எல்லாம் தன் பீக் பீரியடில் ஓரம்கட்டி தனக்கென தனி இடம்பிடித்த மாதவனை, பெண்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?

6. பிடித்த ஹீரோயினைப் பற்றிக் கேட்டா, ‘அவங்கள சொன்னா இவங்க கோபப்படுவாங்க, இவங்கள சொன்னா அவங்க கோபப்படுவாங்க’ என்று யோசிக்காமல், ‘இப்போ எனக்குப் பிடிச்ச நாயகி தீபிகா படுகோனே’ என, மனதில் பட்டதை எப்போதும் மறைக்காமல் பேசும் நடிகர்.

R-Madhavan-010612120601105053.jpg

7. ஹீரோவோ, வில்லனோ... கேரக்டரோட தரம் பார்த்து படத்தை டிக் அடிக்கும் மாதவன், கமலோட நடிச்ச ‘அன்பே சிவம்’ படத்தில், அந்த ஆளுமையின் வீச்சுக்கு நடுவிலும் தனக்கான ஸ்பேஸை திரையில் ஏற்படுத்திக்கிட்ட பெர்ஃபார்மர்.

8. எங்கும் எந்தப் பேட்டியிலும் தன் மனைவி, குழந்தை குறித்து தவறாமல் பேசிவிடுவது மாதவன் ஸ்பெஷல். டிரீம் பாயாக மட்டுமில்லாம, ‘இப்படி ஒரு கணவன் அமையணும்ப்பா’ என்ற ஏக்கம் தந்த நடிகர்.

9. சாதாரண சீரியல் நடிகரா இருந்து தமிழ்நாட்டின் டார்லிங் ஹீரோ ஆன அவரது கிராஃப், நீண்ட காத்திருப்புக்குப் பின் தயாரிப்பாளர், நடிகரா ‘இறுதிச்சுற்றி’ல் க்ளாஸ் வெற்றி பெற்ற நிதானம்... இப்படி அவரோட புரொஃபைலையும் சேர்த்தே ரசிக்கிறாங்க பெண்கள்.

landscape-1450532504-fullscreen-capture-

10. 15 வருடங்களுக்கு முன் ‘சிநேகிதனே’ என்று 80களில் பிறந்த பெண்களை ஹம்மவைத்த மேடி, இப்போது ‘ஏ சண்டக்காரா’ என 90களில் பிறந்த யூத் கேர்ள்ஸ் வரை ரசிக்கவைத்தால், பின் அவரோட 46வது பிறந்தநாளிலும் நாங்க ஏன் எழுதமாட்டோம் இப்படி ஒரு கட்டுரை?

ஹேப்பி பர்த்டே மேடி!

  • தொடங்கியவர்

13343154_1254072324611861_29549052175398

William Gilbert Grace

50 வயதில் 1899 இல் ஆஸ்திரேலியாவிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடிய இங்கிலாந்து வீரர்

  • தொடங்கியவர்
1953 : பிரிட்டன், இலங்கை முதலான நாடுகளின் அரசியாக 2ஆம் எலிஸபெத் முடிசூடினார்.
 

1615 : பிரெஞ்சு கத்­தோ­லிக்க மறை­ப­ரப்­பு­னர்­களின் முதற்­தொ­கு­தி­யினர் கன­டாவின் கியூபெக் நகரை அடைந்­தனர்.

 

1896 : இத்­தா­லிய விஞ்­ஞானி மார்க்­கோனி தான் புதி­தாகக் கண்­டு­பி­டித்த வானொ­லிக்­கான காப்­பு­ரி­மைக்கு விண்­ணப்­பித்தார்.

 

73889720217546011541ol6y2He8c.jpg1910 : ஆங்­கிலக் கால்­வாயை இரு தட­வைகள் விமா­னத்தின் மூலம் எங்கும் நிறுத்­தாமல் கடந்த முதல் மனிதர் எனும் சாத­னையை ரோல்ஸ் ரோய்ஸ் லிமிட்டெட் இணை ஸ்தாபகர் சார்ள்ஸ் ரோய்ஸ் படைத்தார்.

 

1924 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பிறந்த அனைத்து பழங்­கு­டி­க­ளுக்கும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை வழங்கும் சட்­ட­ மூலத்தை ஜனா­தி­பதி கால்வின் கூலிட்ஜ் அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

 

1946 : இத்­தா­லியில் முடி­யாட்­சியை குடி­ய­ர­சாக மாற்றும் முடி­வுக்கு மக்கள் பெரு­ம­ளவு ஆத­ரித்து வாக்­க­ளித்­தனர். இத்­தா­லியின் மன்னன் இரண்டாம் உம்­பேர்ட்டோ நாட்டை விட்டு வெளி­யே­றினார்.

 

1953 : இரண்டாம் எலி­ஸபெத் பிரிட்டன்,  கனடா, அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பிரித்­தா­னிய பொது­ந­ல­வாய நாடு­களின் அர­சி­யாக முடி­சூ­டினார். பிரித்­தா­னிய வர­லாற்றில்  முதற்­த­ட­வை­யாக அரச முடி­சூட்டும் விழா தொலைக்­காட்­சியில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­னது.

 

1955 : சோவியத் ஒன்­றியம், யுகோஸ்­லா­விய நாடு­க­ளுக்­கி­டையில் 1948 ஆம் ஆண்­டி­லி­ருந்து முறி­வுற்­றி­ருந்த உற­வு­களை சீர்­ப்ப­டுத்தும் வகையில் பெல்­கிரேட் பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டது.

 

738butthan.jpg1962 : சிலி, இத்­தாலி நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உலக கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­யின்­போது வீரர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோதல்கள் கார­ண­மாக பல தடவை பொலிஸார் தலை­யீடு செய்யும் நிலை ஏற்­பட்­டது.

 

1965 : வியட்நாம் போர்: முத­லா­வது தொகுதி அவுஸ்­தி­ரே­லிய துருப்­புகள் தெற்கு வியட்­நாமை அடைந்­தன.

 

1966 : நாசாவின் சேர்­வெயர் 1 விண்­கலம் சந்­தி­ரனில் இறங்­கி­யது. சந்­தி­ரனில் மெது­வாக தரை­யி­றக்க முறையில் இறங்­கிய முத­லா­வது அமெ­ரிக்க விண்­கலம் இது­வாகும்.

 

1994 : ஸ்கொட்­லாந்தில் ஹெலி­கொப்டர் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 29 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1999 : பூட்­டானில் முதற் தட­வை­யாக தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு ஆரம்­ப­மா­கி­யது.

 

2003 : வேறொரு கோளுக்­கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்­பிரஸ் என்ற தனது முத­லா­வது விண்­க­லத்தை ஐரோப்­பிய ஆய்வு மையம் ஈசா கச­கஸ்­தானில் இருந்து ஏவியது.

 

2012 : எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

2014 : தெலுங்கானா உத்தியோக பூர்வமாக இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகியது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆயிரம் படங்களை கடந்த அபூர்வ ஞானி! இளையராஜா பிறந்தநாள் சிறப்பு கட்டுரை!

மிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜாவும் ஒருவர்.

ஜூன் 2ம் தேதி 1943ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர், மற்றும் பவதாரிணி. சின்ன வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் கைதேர்ந்தவர். 1961ம் வருடம் முதல், 1968ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.

ILAYARAJA_913371g%20%281%29.jpg

ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர், ஆயிரம் படங்களைக் கடந்து இசையமைத்த மேதை. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் யாவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. சங்கீதக் கனவுகள், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை, மேலும் நாத வெளியினிலே என்னும் புத்தகத்தில், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பாக இது அமைந்தது, பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் மற்றும் இளையராஜாவின் சிந்தனைகள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது, டாக்டர் பட்டம், பத்ம பூஷன் விருது, என பல விருதுகளை பெற்றவர். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். ’பஞ்சமுகி’ என்ற கருநாடக இசை ராகம் இளையராஜாவால் உருவாக்காப்பட்டது.

இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. அதில் ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’ என்ற பாடலில் பார்வையில்லாதவருக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என சின்ன சர்ச்சைகள் எழுந்தது கூட ராஜாவின் பாடல்களுக்கே . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன் நான் என்றும் கவிதைக்கு ஏது உண்மை, பொய் என்றாகிப் போய் பாடல் இப்போது வரை ஹிட் ரகமாக மாறியது வேறு கதை.

இளையராஜாவின் சிறப்பே அவரது பாடல்களில் ஆலாபனை சேர்ப்பதுதான். அதிலும் ஆலாபனைக்கு யாரை வேண்டுமானாலும் பயன் படுத்தாமல் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பயன்படுத்துவார். எடுத்துக்காட்டு: ராஜபார்வை படத்தின் இந்த அந்திமழை பொழிகிறது பாடலை கூட பார்க்கலாமே, எஸ்.பி.பி , எஸ்.ஜானகியின் குரல்களுடன் ஒலிக்கும் ஒரு இனிய ஆலாபனை இளையராஜாவின் கர்நாடக சங்கீத குரு திரு டி.வி.கோபாலகிருஷ்ணனுடையது என்பதுதான் சிறப்பு. ராஜா மேல் கொண்ட அன்பினால் சில பாடல்களில் மட்டும் இவர் ஆலாபனை செய்திருப்பார்.

பெண் குரல்கள் ஒரு படத்திற்கு ஒரு பாடலே அரிதாக இருக்கும் 80களில் தைரியமாக ஒரு படத்தில் மூன்று பெண் குரல்களில் பாடல்கள் வைத்திருப்பார். 1988ம் ஆண்டு வெளியான ’அக்னி நட்சத்திரம்’ படத்தில் ஒரு பூங்காவனம், நின்னுக்கோரி, ரோஜாப்பூ என இம்மூன்றும் பெண் குரல்களில் மட்டுமே அமைந்தவை. கோடைகாலத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் பதிவின் போது ’தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பாடிய கே.ஜே.ஏசுதாசும், ஜானகியும் கேலியே செய்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் அமிர்தவர்ஷினி ராகமா, மழை வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல என கூறிவிட்டு பாடல் பதிவு முடிந்து வெளியேறிய போது இன்ப அதிர்ச்சியாக மழை கொட்டியுள்ளது. இதை எஸ்.ஜானகி ஒரு சந்திப்பில் கூறினார்.

Ilayaraja-Wallpaper.jpg

ஏதார்த்தமாக மழை பெய்தாலும் கூட ஏன் கோடை காலத்தில் எதிர்பாரா விதமாக இப்படி கொட்ட வேண்டும் என அனைவரும் வியந்தது வேறு கதை. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இளையராஜாவே. இளையராஜாவின் பாடலான முதல் மரியாதை பட பாடல் சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது. இன்னமும் இசையை பயிலும் மாணவர்கள் கூட இசை ஆய்விற்காக ராஜாவின் பாடல்களை எடுக்க சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் அவரது பாடல்கள் இன்னமும் இசை ஜாம்பான்களுக்கே புரியாத ரகமாய் உள்ளது.

அவருடைய இசை வலிமைக்கு சான்றாக சமீபத்தில் துவங்கப்பட்ட அவரது முகநூல் பக்கத்திற்கு 12 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துவருகின்றன. இத்தனை வருடங்கள் கழித்துதான் தனது இசைக்கு உரிமை கோரியுள்ளார். எனினும் இசைஞானியின் பாடல்களை நிராகரித்து விட்டு எந்த டிவிக்களோ, ரேடியோக்களோ தொடர்ந்து நடத்துவது என்பது மிக அரிது என்பதே இளையராவிற்கு கிடைத்திற்கும் மிகப்பெரிய வெற்றி எனலாம்.

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

13323783_1054766691238691_88326040505188

ராகவேந்தன், இசைஞானி, மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களது பிறந்தநாள் இன்று.

நேற்றைய பொற்காலப் புதனில் இசைஞானியின் இசை மழையில் நனைந்தது போல, இன்றைய நட்சத்திரமாக ஜொலிக்கும் ராஜாவின் பாடல்களைத் தெவிட்டாத மெட்டுக்களாகவும் நேற்றைய காற்றாகவும் கேட்டு ரசியுங்கள்

பல்லாயிரம் பாடல்கள் மூலம் பல லட்சம், பல கோடி இசை ரசிகர்களின் இதயம் வென்ற இசைஞானிக்கு இசையின் இனிய வானொலி சூரியனின் அன்பு வாழ்த்துக்கள்...

இன்றும் இசைஞானியின் இனிய கான மழையில் நனைந்திருங்கள்...

  • தொடங்கியவர்

ஸ்டீவ் வாக் கிரிக்கெட்டில் விடாமல் போராடும் குணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.. பிறந்தநாள் சிறப்பு பகிர்வு...

13322180_1148546105204178_31868065189513

 

ஆஸ்திரேலிய அணிக்குள் ஆலன் பார்டர் காலத்தில் நுழைந்த அவர் அணி உலககோப்பை வெல்வதை உறுதி செய்கிற வகையில் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிராகவும் கலக்கி எடுத்தா
ஸ்டீவ் வாக் தன்னுடைய ஆட்டம் தனக்கே புரியவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்த ஸ்டீவ் வாக் படிப்படியாக சறுக்கினார். அவரின் சகோதரர் மார்க் வாகிடம் அணியில் இடத்தை இழந்தார். மித
வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர் தீராத முதுகுவலியால் அதையும் விடுக்க வேண்டியதாக போயிற்று.

ஸ்டீவ் வாக் அவ்வளவு தான் என்று எல்லாரும் சொன்னார்கள். கனத்த மவுனத்தோடு மீண்டும் களம் புகுந்தார் ஸ்டீவ் வாக். பழைய அதிரடி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்திருந்தார். கச்சிதமாக ஆட
ஆரம்பித்து இருந்தார் அவர். மார்க் டைலருக்கு பின்னர் அணியின் தலைமைப் பொறுப்பு இவர் வசம் வந்தது. அடித்து நொறுக்கி விடுவது என்கிற குணத்தை ஆஸ்திரேலியா அணியிடம் உச்சத்துக்கு
கொண்டு சென்றது இவரின் தலைமை. தொடர்ந்து இவர் தலைமையில் பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வென்று அசத்தியது ஆஸ்திரேலியா.

உலகத்தின் எல்லா டெஸ்ட் ஆடும் அணிகளுக்கு எதிராகவும் முதன் முதலில் 150 ப்ளஸ் ஸ்கோர் அடித்த வீரர் இவரே.

உலகக்கோப்பை போட்டி 1999 ஆம் வருடம் நடைபெற்றது. ஒவ்வொரு வெற்றிக்கும் தீவிரமாக உழைத்தது அணி. ஸ்டீவ் வாக் பொறுப்போடு அணியை வழி நடத்தினார். அரையிறுதியில் தென் ஆப்ரிக்க
அணி ஸ்கோரை சேஸ் செய்யும் வகையில் இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து டை செய்திருந்த பொழுது ஒரு ரன் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் பழைய வெற்றிகளின் மூலம்
ஆஸ்திரேலியா அணி நுழைந்தது. பாகிஸ்தான் அணியை சந்தித்த ஸ்டீவ் வாக் துவம்சம் செய்கிற வகையில் வழி நடத்தினார். அணி உலக கோப்பையை தூக்கியது.

அதற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்து செயல்பட்ட அவர் இறுதிப்போட்டியில் எண்பது ரன்கள் அடித்து விடைபெற்றார். அவரின் நூலுக்கு முன்னுரை எழுதச்சொல்லி
கேட்டுக்கொண்டது இந்தியாவின் திராவிட் அவர்களைத்தான். கொல்கத்தாவில் டாட்டரஸ் ஆப் லேப்பர்ஸ் அமைப்பின் மூலம் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்துவருகிறார் அவர்.
அடித்து ஆடும் ஆட்டத்துக்கும், திருப்பி அடிப்பதற்கும் கச்சிதமான எடுத்துக்காட்டான அவரின் பிறந்தநாள் ஜூன் இரண்டு

 

13333011_1054769004571793_19459211450946

 
 
கிரிக்கெட் சரித்திரத்தில் எப்போதுமே மிகச் சிறந்த இரட்டையருக்கு இன்று பிறந்தநாள்.
Happy Birthday Steve & Mark Waugh
உலகின் மிகச் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவராக விளங்கிய சகலதுறை வீரர் ஸ்டீவ் வோ, மிக நேர்த்தியான துடுப்பாட்ட வீரர் மார்க் வோ ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வேறெந்தக் கிரிக்கெட் சகோதரர்களையும் விட அதிக ஓட்டங்களை சர்வதேச மட்டத்தில் குவித்த பெருமை வோ இரட்டையருக்கு உள்ளது.

 

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p33a.jpg

கெஸ்ட் தாத்தா!

``வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க..!'' - தோழியிடம் போனில் சொன்னாள் சரோ, கிராமத்திலிருந்து வந்திருந்த தன் தாத்தாவைப் பற்றி!

 - பாப்பனப்பட்டு வ.முருகன்


p33b.jpg

இறைவனிடம்...

எந்த வேண்டுதலுமின்றி அமர்ந்திருந்தான்... கோயில் வாசலில் பிச்சைக்காரன்!

- பெ.பாண்டியன்


p33c.jpg

துருவங்கள் சேரலாம்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே மேடையில், அருகருகே அமர்ந்து, சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தனர்... பள்ளிக் குழந்தைகள் மாறுவேடப் போட்டியில்.

- தி.செந்தில்குமார்


p33d.jpg

கடல் தண்ணி!

``குழம்புல உப்பே இல்லடா. கொஞ்சம் தண்ணி எடுத்து ஊத்து'' என்றான் கட்டுமரத்தில் இருந்த மீனவன்.

 - அஜித்


p33e.jpg

சீக்ரெட்... சீக்ரெட்!

 ``...........................................................................................!'' என்று, அவன் ரகசியம் சொல்ல, திடுக்கிட்டாள், நண்பனின் மனைவி!

- கி.ரவிக்குமார்


p33f.jpg

ஐ லைக் இட்!

காதலனின் கல்யாண ஆல்பத்துக்கு லைக்ஸிட்டாள் காதலி!

 - பெ.பாண்டியன்


p33g.jpg

`நோட்' தி பாயின்ட்

`ஏன் நோட்டாவுக்கு ஓட்டு போட்டீங்க?'' என நிருபர் கேட்க, முத்து கோபமாகச் சொன்னான்... ``ஒரு பயலும் ஒரு பைசா தரலை'' என்று.

- வீ.விஷ்ணு குமார்


p33k.jpg

அட்மிஷன்... ஓபன்

வேலை கேட்டு வந்த ஆசிரியர்களிடம் தாளாளர் கேட்டார், ``உங்களால நம்ம ஸ்கூலுக்கு எத்தனை ஸ்டூடன்ட்ஸ் பிடிச்சுத்தர முடியும்?''

- பெ.பாண்டியன்


p33m.jpg

பொறியாளன்

பொறியியல் பட்டதாரி மகனுக்கு, இன்ஜினீயர்களிடம் வேலை கேட்டு அலைந்தாள் சித்தாள் அம்மா!

- பெ.பாண்டியன்


p33n.jpg

மொக்கை படம்

``ஏங்க... நீங்க நடிச்ச படத்தை டி.வி-யில போடுறாங்க'' என்று மனைவி சொன்னதும், ``அது ஒரு மொக்கை படம். சேனலை மாத்து'' என்றார் நடிகர்.

- அபிசேக் மியாவ்.

vikatan

  • தொடங்கியவர்

13336042_1054772741238086_32738777178084

இலங்கையில் பிறந்து ஹிந்தித் திரையுலகில் கலக்கும் கனவுக்கன்னி ஜக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாள்.
Happy Birthday Jacqueline Fernandez

  • தொடங்கியவர்

ஆப்பிரிக்க காட்டில் யானையிடம் சிக்கிய அர்னால்ட் என்ன ஆனார்?(வீடியோ)

arnoldyanaione.jpg

டர்பன்: ஹாலிவுட் படங்களில் ஆக்ரோஷமாக பிரமாண்ட சண்டைக்காட்சிகளில் தூள்கிளப்பும் நடிகர் அர்னால்ட்,ஆப்பிரிக்காவில் காட்டு யானையிடம் சிக்கி மீண்டு உயிர்பிழைத்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

68 வயதான நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் அண்மையில் காட்டுப் பயணம் செய்துள்ளார்.அப்போது,மதம் கொண்ட ஆண் யானை ஒன்றால் வழிமறிக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார். அந்த திகில் வீடியோவை,' யானை துரத்தலை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது' என்ற தலைப்பில்  யூ டியூபில் பதிவேற்றியுள்ளார் அர்னால்ட்.

அந்த வீடியோ இங்கே....
 

      

vikatan

shadow-divider-full-width.png
  • தொடங்கியவர்

13346943_1054775174571176_24787043657101

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவரும் சிறந்த சகலதுறை வீரருமான அஞ்செலோ மத்தியூசின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Angelo Mathews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.