Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை மேற்குலகத்தின் அடிமையாக்குவதற்கு முயற்சி

Featured Replies

இலங்கையை மேற்குலகத்தின் அடிமையாக்குவதற்கு முயற்சி
இலங்கையை மேற்குலகத்தின் அடிமையாக்குவதற்கு முயற்சி

இலங்கையையும், இந்த நாட்டு மக்களையும் மேற்குலகத்தின் அடிமைகளாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு முனைகின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகிந்த ஆதரவு அணியினர் கடந்த திங்கட்கிழமை விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைந் துள்ள தேசிய அரசு நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களில் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை நாட்டின் தேசி யப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலோ அல்லது நாட்டின் சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையிலோ செயற்பட வில்லை என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது-வாக்குறுதிகளுக்கு மாறாக மேற் கத்தேய நாடுகளின் கொள்கையை பரப்பும் வகையிலும், மேற்கு வாதி களின் அடிமைகளாக இந்த நாட் டையும் நாட்டு மக்களையும் மாற் றியமைக்கும் செயற்பாடுகளையுமே இந்த அரசு மேற்கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் வெளிவந்துள் ளது. அதில் ஐக்கிய நாடுகள் சபை யின் பரிந்துரையிலான விசா ரணைக் குழுவை நியமிக்க வேண் டும் என்று அவர்கள் எமக்கு அழுத் தம் கொடுத்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் குற்றங்கள் நடந்துள்ளன என சந்தேகம் இருக்கு மாயின் அதை உள்ளக விசாரணை கள் மூலம் தீர்க்க வேண்டும்.

இலங்கையில் புகழ்வாய்ந்த நிபுணத் துவம் மிக்க சிறந்த நீதிபதிகள் உள்ளனர். சிறந்த சட்டத்தரணிகள் உள்ளனர். ஆய்வாளர்கள் உள்ள னர். இவர்கள் இன்று சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்று விளங்கு கின்றனர்.

பல நாடுகள் தமது சட்டரீதியான செயற் பாடுகளில் இலங்கையின் சட்ட வல்லுநர்களின் உதவிகளை நாடு கின்றன. அவ்வாறான நிலையில் போர்க்குற்றச் சாட்டுகளில் இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட் டிருக்கும் குற்றச்சாட்டுகளை இலங் கையின் நீதிமன்றங்களின் மூலமாக கண்டறிய வேண்டும். எந்தக் காரணத் தைக் கொண்டும் இலங்கையின் பிரச்சினைகளை சர்வதேசம் கையாள இடமளிக்கக் கூடாது. சர்வதேசத்தின் தலையீடு உள்ள தெனின் உடனடியாக அதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையா கும். ஆனால் அதை அரசு செய்யாது. மேற்குலக சர்வாதிகாரிகளின் தலையீட்டில் இலங்கையில் தீர்வு காணவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.- என்றார்

http://onlineuthayan.com/news/1662

  • கருத்துக்கள உறவுகள்

 புலம் பெயர்ந்த முற்போக்கு சக்திகள் இவர்களுடன் கை கோர்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.