Jump to content

நாட்டுக் கோழி குழம்பு


Recommended Posts

நாட்டுக் கோழி குழம்பு

10689968_1555104744718547_1010624893235275824_n
 

 

 

 

 

 

 

 

 

தேவையான பொருட்கள் :

நாட்டு கோழி – 1 கிலோ
சிறிய வெங்காயம் – 250 கிராம்
தேங்காய் – 1 மூடி
தக்காளி – 250 கிராம்
யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி
இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி
பெ.சீரகம் – 1 கரண்டி
சீரகத்தூள்- 2 கரண்டி
கடுகு – 1/2 கரண்டி
பெ.சீரகத்தூள் – 1 கரண்டி

ஏலக்காய் – 2
மஞ்சள்தூள்- 1/2 கரண்டி
பட்டை,கிராம்பு – 2
கறிவேப்பிலை-1 கொத்‌து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 250 கிராம்

 

 

செய்முறை

தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எடுத்து கொள்ளவும் .தக்காளி ,வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பெ.சீரகம் ,கடுகு,பட்டை,கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை
முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

இப்போது இஞ்சி , பூண்டு விழுது , தக்காளி, சீரகத்தூள் மஞ்சள்தூள் ,ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் . அதனுடன் சுத்தம் செய்து நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு வேகி வரும் போது பால் சேர்த்து வத்த விட்டு பெ.சீரகத்தூள் தூவி இறக்கவும். இப்போது சுவையான நாட்டு கோழி குழம்பு தயார்.

கைக்குத்தரிசி சோறுடன் சாப்பிடுங்க நல்லா இருக்கும் .

http://tamilcookery.com/?p=27

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி மீனா...நாட்டுக் கோழி என்டால் புரோலர் சிக்கனா

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி மீனா...நாட்டுக் கோழி என்டால் புரோலர் சிக்கனா

Broiler chickens இறைச்சிக்காக கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுபவை... நாட்டுக் கோழிகள் ஊர் எல்லாம் சுற்றி பூச்சி ,புழு எல்லாம் பொறுக்கி சாப்பிட்டு சுதந்திரமாக வாழ்பவை... யாராவது சொல்லுங்கப்பா சரியா என்று :)

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரதி :),  வருகைக்கும் பச்சைக்கும் நன்றி பெரியண்ணா சுவி :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி மீனா...நாட்டுக் கோழி என்டால் புரோலர் சிக்கனா

தங்கச்சி கோழி குருடாய் இருந்தாலும் நமக்கு குழம்பு தானே முக்கியம்   sad.png
ஒவ்வொண்டுக்கும் நதிமூலம் பாத்தால் மனிசன் வாழவே ஏலாது......
என்ன ஒண்டு நாட்டுக்கோழி அவிய நேரம் எடுக்கும்.....
புரோலர் கோழியெண்டால் பக்கெண்டு அவிக்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கிடைப்பதெல்லாம் நாட்டுக் கோழிகள் அல்ல, எல்லாம் பேட்டுக் கோழிகள், கூட்டுக் கோழிகள்....!  முட்டையிட்டு ஓய்ந்த கோழிகள், வாடி வதங்கிய கோழிகள், சேவல் காணாத கோழிகள், கூடி முயங்காத கோழிகள்....!!  :)

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

இங்கு கிடைப்பதெல்லாம் நாட்டுக் கோழிகள் அல்ல, எல்லாம் பேட்டுக் கோழிகள், கூட்டுக் கோழிகள்....!  முட்டையிட்டு ஓய்ந்த கோழிகள், வாடி வதங்கிய கோழிகள், சேவல் காணாத கோழிகள், கூடி முயங்காத கோழிகள்....!!  :)

விளக்கத்திற்கு நன்றி பெரியண்ணா சுவி!! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சகோதரி....!

Afficher l'image d'origine

இதுதான் நாட்டுக் கோழி (சேவல்)...! இதைப் பிடிக்கப் படும் பாட்டை சைவம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்....!

https://www.youtube.com/watch?v=0iang7fLS1E&feature=player_detailpage

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.