Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீராம சமாஜம் மீது குண்டு வீச்சுசிலை உடைப்பு

Featured Replies

டிசம்பர் 09, 2006

சென்னை: சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம் (அயோத்தியா மண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் எதிரே காவல் நிலையம் அருகே முழு உருவப் பெரியார் சிலையை நிறுவ பீடம் அமைக்கப்பட்டு, சிலை மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு இரண்டு நாளுக்கு முன்பே விஷமிகள் சிலையின் கழுத்து பகுதி துண்டித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில் குதித்தன. மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து எரித்தும் தங்களது எதிர்ப்புகளைக் காட்டினார்.

இங்கு ஆரம்பித்த பிரச்சினை தற்போது தமிழகத்தின் வேறு சில பகுதிகளிக்கும் பரவி பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில், ஸ்ரீ ராம சமாஜம் என்ற பழம்பெரும் கோவில் உள்ளது. அயோத்தியா மண்டபம் என்று இது பக்தர்களால் அழைக்கப்படும். இங்கு ராமர் கோவில் உள்ளது. இதுதவிர முருகன், விநாயகர், கண்ணன் ஆகிய கடவுள்களுக்கும் இங்கு வழிபாடு நடத்தப்படும். 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இது.

ஆசிட் கும்பல்:

நேற்று மதியம் 3.30 மணியளவில் பூஜை முடிந்ததும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது. அப்போது 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து பூணூ<ல் போட்ட, நாமம் போட்ட யாரையும் விடாதே, அடித்து உதை என்று கூறி சத்தம் போட்டனர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பலைப் பார்த்து பீதியடைந்த மக்கள் அங்கிருந்து ஓடினர். அப்போது அந்தக் கும்பல், ஆசிட் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலை தூக்கி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம் மீது வீசியது. இதில் மண்டபத்தின் திரைச் சீலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை சில பக்தர்கள் நீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

பெட்ரோல் குண்டு:

அப்போது, இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் மண்டபம் முன்பு இருந்த சாமி சிலை மீது வீசி எறிந்தனர். பின்னர் திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து அவர்கள் கோபமாக கோஷமிட்டனர்.

தெருவிலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பீதியும், பதட்ட¬ம் நிலவியது. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அச்சாலையில், பெரும் நெரிசல் ஏற்பட்டது. பஸ் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் அந்தக் கும்பல் கோவில் வாசலில் பூணூ<ல், தர்ப்பைப் புல் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்யம் தண்டபாணி என்பவரை உருட்டுக் கட்டையால் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதேபோல பூக்கடையில் இருந்த முரளி என்பவரையும் அக்கும்பல் தாக்கியது. அவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த இந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர் அக்கும்பல் படு சாதாரனமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றது. அயோத்தியா மண்டபத்தில் நடந்த பயங்கர தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறை ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

பாஜக, இந்து முன்னணி போராட்டம்:

அயோத்தியா மண்டபம் முன்பு நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைப் பற்றி அறிந்துதம் அயோத்தியா மண்டபம் முன் நூற்றுக்கணக்கான பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் திரண்டு விட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் குதித்தனர். போலீஸார், குற்றவாளிகளை தனிப்படைகள் அமைத்துத் தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவர் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தமிழிசை தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

எஸ்.வி.சேகர் ஆறுதல்:

தாக்குதலில் காயமடைந்த தண்டபாணி, முரளி ஆகியோரை அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.வி.சேகர், வி.பி.கலைராஜன் ஆகியோர் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள அனைத்து முக்கியக் கோவில்கள் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நகரில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் பிற தலைவர்கள் சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலத்தில் உள்ள சங்கர மடத்திற்குள் புகுந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் மடத்தை சூறையாடி சாமி படங்கள், ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரின் படங்களை அடித்து நொறுக்கினர். அந்த ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் ராமர் சிலை உடைப்பு:

இதேபோல ஈரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலிலும் சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரோடு காரை வாய்க்கால் பகுதி அக்ரகார வீதியில் ராகவேந்திரர் பிருந்தாவன் கோவில் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.10 மணியளவில் பூசாரி வெங்கடரமணன் பூஜை செய்து கொண்டிருந்தார்.

அப்போது 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அங்கு வந்தது. கோவிலுக்குள் புகுந்த அவர்கள் தடுத்து நிறுத்திய பூசாரியை பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தள்ளி விட்டு கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது இன்னொரு பூசாரி நரசிம்மன் ஓடி வந்து அவர்களைத் தடுக்க முயன்றார். அவரையும் அக்கும்பல் அடித்துத் தள்ளியது. பின்னர் ராகவேந்திரர் சன்னதிக்குள் புகுந்து அங்கிருந்த பூஜை பொருட்களை வெளியே தூக்கி வீசினர்.

அதேபோல, பிரகலாதராயர் சிலையை தூக்கி வெளியே வீசினர். ராமர் சிலையை பீடத்திலிருந்து பெயர்த்து வெளியே கொண்டு வந்து சுத்தியலால் உடைத்து சிதைத்தனர். ஊஞ்சல் மேலும் அலங்கார வளைவுகளையும் சேதப்படுத்தினர்.

இதைப் பார்த்து ஓடி வந்த கோவிலுக்கு அருகே கடை வைத்துள்ள பத்ரிநாராயணனையும் அக்கும்பல் தாக்கியது. அவரது கடையையும் அக்கும்பல் சூறையாடியது.

ராமர் படத்துக்கு செருப்பு மாலை:

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராமர் படத்துக்கு நடு ரோட்டில் வைத்து செருப்பு மாலை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் காந்தி சிலை அருகே ராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு புதிய ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்தனர்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கோஷமிட்ட அவர்கள் ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். அதற்கு தீயும் இட்டு கொளுத்தினர்.

இத்தகவல் அறிந்ததும் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும் கூட்டமாக அங்கு வந்தனர். அவர்களுக்கும், ராமர் படத்தை அவமதித்தவர்களுக்கும் இடையே கடும வாக்குவாதம் நடந்தது.

இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் புதிய ராமர் படத்தை அவமதித்தவர்களில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

பின்னர் பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்கள் சாலை மறியலில் குதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதிய ஜனநாயக முன்னேற்றகழகம் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ், மூர்த்தி, ரவிச்சந்திரன், பரசுராமன் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஜிபி எச்சரிக்கை:

பெரியார் சிலை, வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த சிலை உடைப்புகள், வழிபாட்டு தல தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மாநிலம் ¬ழுவதும் 38 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அயோத்யா மண்டபம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, ஈரோட்டில் ராகவேந்திரா கோவிலில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அமைப்பாளர் குமரகுருபரன், இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம் மற்றும் ரஜினி சங்கர், அர்ச்சுனன், செல்லத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/09/chennai.html

  • தொடங்கியவர்

மசூதி முன் பெரியார் சிலை வைப்பீர்களா?பாஜக

டிசம்பர் 09, 2006

திருச்சி: பெரியார் சிலையை சர்ச், மசூதி முன் வைக்க கருணாநிதி அனுமதி தருவாரா என பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

பெரியார் தனது காலம் முழுவதும் தன்னுடைய சொல்லாலும், செயலாலும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். கடந்த 1957ல் விநாயகர் சிலை திராவிட கழகத்தினரால் உடைக்கப்பட்டது. பின், கருணாநிதி முதல்வராக இருந்தபோது ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நடத்தப்பட்டது.

எங்கு பெரியார் சிலையை பார்த்தாலும் இந்துக்களுக்கு அந்த நினைவு தான் வரும். அவருடைய சிலையை எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளட்டும். அதுபற்றி பாரதிய ஜனதாவுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஸ்ரீரங்கம் கோயில் முன் வைக்கக்கூடாது.

இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அந்த இடத்தில் சிலை வைக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி திருச்சி வந்தபோது அதிகாரிகளிடம், எப்படியாவது ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

அதனால் தான், திகவினர் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். சிலைகளை உடைக்கும் காலச்சாரத்தையே திகவும், திமுகவும் தான் முதலில் கொண்டு வந்தன.

விநாயகர் சிலை உடைப்பு மற்றும் ராமர் படத்துக்கு செருப்பு மாலை ஆகிய சம்பவங்களின் போது இந்துக்களின் மனது எப்படி வேதனைப்பட்டதோ, அதே வேதனையை தற்போது திக வீரமணியும், திமுக கருணாநிதியும் அனுபவிக்கின்றனர்.

கடந்த 1969ல் ராமர் படத்துக்கு செருப்பு மாலைபோட்டு போலீஸ் பாதுகாப்புடன் திகவினரை ஊர்வலம் செல்ல அனுமதித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, இன்று ஏன் சிலை உடைப்புக்கு வக்காலத்து வாங்குகிறார்?

திமுகவின் ஆட்சியில் இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு ஸ்ரீரங்கம் சம்பவம் எடுத்துக்காட்டு. இல்லாவிட்டால், சேலம், பெரம்பலுõர் உ<ள்ளிட்ட மாவட்டங்களில் இந்து கோயில்களை திகவினர் பூட்டியதையும், இந்துக்கள் தாக்கப்பட்டதையும் போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்திருக்குமா?

தமிழகத்தில் இந்து கோயில்களுக்கும், இந்து மக்களுக்கும் ஏற்படும் இழப்புகளுக்கு கருணாநிதி தான் பொறுப்பேற்க வேண்டும். இந்துக்கள், கோயில்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை காண்பிக்க உள்ளன.

ஸ்ரீரங்கத்தில் எங்கு வேண்டுமானாலும் பெரியார் சிலையை வைக்கட்டும். ஆனால், உலக பிரசித்தி பெற்ற கோயில் முன் வைக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

பெரியார் சிலையை சர்ச், மசூதி முன் வைக்க கருணாநிதி அனுமதி அளிப்பாரா? என்றார் ராஜா.

  • தொடங்கியவர்

கோவில்கள் மீதான தாக்குதல் ஒரு சதிகி.வீரமணி

டிசம்பர் 09, 2006

திருச்சி: ஸ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், சிலர் திட்டமிட்டு வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதசுவாமி கோவில் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. சென்னை அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடந்தது.

இந் நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தார். அங்கு ஏற்கனவே சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்குப் பதில் புதிதாக வைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார் சிலையை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஆட்சி மீது பழி போட நினைப்பவர்கள், திமுக ஆட்சி அமையக் கூடாது என கருதியவர்கள் பெரியார் சிலை விவகாரத்தை பயன்படுத்தி ஏதோ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சதிச் செயல் போலவே தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக அவர் விடுத்த அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்து அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்தால் கொதித்துப் போயுள்ள திராவிடர் கழகத்தினர் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்.

இந்த எதிர்ப்புகள் வன்முறையாக மாறியுள்ளது வருத்தம் தருகிறது. இதன் மூலம் திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட தி.க.வினர் முயலக் கூடாது.

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமி ஆலயம் முன்பாக திட்டமிட்டபடி அதே இடத்தில் 16ம் தேதி பெரியாரின் சிலை நிறுவப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும், வன்முறைக்கு இடம் தரக்கூடாது என்று கோரியுள்ளார்.

வைகோ கண்டனம்:

பெரியார் சிலை மீது நடந்த தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தன்மானத் தமிழர்களின் நெஞ்சில் விழுந்த சம்மட்டி அடி ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வருணாசிரமக் கொடுமைகளால் இழிவுற்று ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடிக்கணக்கான மக்களுக்கு விடியலாய் உதித்தவர்தான் தந்தை பெரியார்.

தன்மானம், சுயமரியாதை எனும் சொற்களுக்கு மறு பெயராகவும், இலக்கணமாகவும் திகழ்ந்தவர் அவர். பெரியார் சிலை மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்ட மாபாதகர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகை செயல்களுக்கு ஊக்கம் அளிப்போர், திரைமறைவில் இருந்து தூண்டி விடுவோர் யாராயினும், எவராயினும் நெருப்புடன் விளையாட வேண்டாம். இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கான வினையை அறுவடை செய்ய நேரிடும் , இனி பொறுப்பதற்கில்லை என மதிமுக சார்பில் எச்சரிப்பதாக தெரஹிவித்துள்ளார் வைகோ.

  • தொடங்கியவர்

காஞ்சி மட தாக்குதல்பிராமணர் சங்கம் கண்டனம்

டிசம்பர் 09, 2006

சேலம்: சேலத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான சுகவனம், வெங்கட்ராமன், ஸ்ரீராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த அம்மன் படங்களை உடைத்ததோடு, பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு வேதம் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிதாக்குதலை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மாபாதக செயலில் ஈடுபட்டவர்களையும், அச்சம்பவத்துக்கு துõண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது தமிழக அரசு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சேத மதிப்பபை கணக்கிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இல.கணேசன் கண்டனம்:

இந் நிலையில் நெல்லையில் பேசிய பாஜக தலைவர் இல.கணேசன்,

ஸ்ரீரங்கத்தில் கோயில் முன்பு பெரியார் சிலை அமைக்கப்பட்டபோதே எதிர்ப்பு கிளம்பியது. வாழ்நாள் முழுவதும் ஆத்தீகத்தை எதிர்த்த பெரியாரின் சிலையை கோயிலை நோக்கி வைக்கக்கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருந்தது. ஜனநாயக நாட்டில் யாருக்கும் சிலை வைக்கலாம். பெரியார் சிலையை வைப்பதில் தவறு இல்லை. ஆனால் கோயில் முன்பு வைக்கக்கூடாது என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந் நிலையில் சிலையை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து சங்கர மடத்தில் தாக்குதல், கள்ளக்குறிச்சியில் பிள்ளையார் சிலை உடைப்பு, பூணுõல் அறுப்பு, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு, இருவருக்கு அரிவாள் வெட்டு என அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

  • தொடங்கியவர்

காஞ்சி மட தாக்குதல்பிராமணர் சங்கம் கண்டனம்

டிசம்பர் 09, 2006

சேலம்: சேலத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான சுகவனம், வெங்கட்ராமன், ஸ்ரீராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த அம்மன் படங்களை உடைத்ததோடு, பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு வேதம் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிதாக்குதலை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மாபாதக செயலில் ஈடுபட்டவர்களையும், அச்சம்பவத்துக்கு துõண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது தமிழக அரசு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சேத மதிப்பபை கணக்கிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இல.கணேசன் கண்டனம்:

இந் நிலையில் நெல்லையில் பேசிய பாஜக தலைவர் இல.கணேசன்,

ஸ்ரீரங்கத்தில் கோயில் முன்பு பெரியார் சிலை அமைக்கப்பட்டபோதே எதிர்ப்பு கிளம்பியது. வாழ்நாள் முழுவதும் ஆத்தீகத்தை எதிர்த்த பெரியாரின் சிலையை கோயிலை நோக்கி வைக்கக்கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருந்தது. ஜனநாயக நாட்டில் யாருக்கும் சிலை வைக்கலாம். பெரியார் சிலையை வைப்பதில் தவறு இல்லை. ஆனால் கோயில் முன்பு வைக்கக்கூடாது என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந் நிலையில் சிலையை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து சங்கர மடத்தில் தாக்குதல், கள்ளக்குறிச்சியில் பிள்ளையார் சிலை உடைப்பு, பூணுõல் அறுப்பு, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு, இருவருக்கு அரிவாள் வெட்டு என அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

மேலுல்ள இணைப்புக்கள் தாற்ஸ் தமிழ்.கொம்மில் எடுக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் கழகத்தினர் வெறி பிடித்து அலைகின்றனர்..

அடியுங்கடா! ஓடுறாங்கள்! ஓடுறாங்கள்! விடாதீங்கடா! அடியுங்கடா!

  • கருத்துக்கள உறவுகள்

அடியுங்கடா! ஓடுறாங்கள்! ஓடுறாங்கள்! விடாதீங்கடா! அடியுங்கடா!

நல்லா முத்தி போச்சு.... :icon_idea::rolleyes:

திராவிடர் கழகத்தினர் வெறி பிடித்து அலைகின்றனர்..

இந்து மததினர் மட்டும் சும்மாவா? அவர்களுக்கு மதம்த்தோடு வேற ஒன்றும் பிடிச்சு இருக்கு :P

சரி நான் பிறகு வந்து எழுதுகிறேன் கோவிலுக்கு போகனும்........

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மததினர் மட்டும் சும்மாவா? அவர்களுக்கு மதம்த்தோடு வேற ஒன்றும் பிடிச்சு இருக்கு :P

சரி நான் பிறகு வந்து எழுதுகிறேன் கோவிலுக்கு போகனும்........

A good thing is happning in our father land, Tamilnaadu. However the people should not be allowed to misuse it for political advantage. The related events might distract the attention of our brothern in Tamilnaadu from Tamileelam issue.

A good thing is happning in our father land, Tamilnaadu. However the people should not be allowed to misuse it for political advantage. The related events might distract the attention of our brothern in Tamilnaadu from Tamileelam issue.

ஆம் மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதசப்பிளையில் அம்மணமானதை மூடிமறைக்க செய்யும் தந்திரம் தான் இது. அது தெரியாமல் களத்திலும் சிலர் அவர்களின் சதிக்கு பலியாகியமை வருந்தத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

டிஜிபி அவர்களே இங்கே களத்திலும் சிலர் இருக்கிறார்கள் வந்து கைதுசெய்யுங்கள்.

  • 2 weeks later...

அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க பிரச்சனை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.